Nenjathai Killathe 8

Untitled

பகுதி 8:

அன்பு என்றும் மாறாது

தங்கம் கூட புடமிடும் பொழுது தான் அதன் தன்மை மேன்மை அடைகின்றது ! அதை போல் தான் அன்புமும் பல சோதனைகளை கடக்கும் போது தான் அதன் உண்மையும் மகத்துவமும் மேன்மை படும்!

 

“உரசி பார்த்தாலும்

தீயில் குளித்தாலும்,

தங்கத்தின் தூய்மை மாசுப்படுவதில்லை .

அதுபோல் தான் அன்பின் தூய்மையும்,

சோதனைகளில் திளைத்தாலும்,

கண்ணீர் கடலில் மூழ்கினாலும்,

அது என்றும் மாறாது .”

 

அதிகாலையில் எப்பொழுதும் போல தன் பணிகளை முடித்துவிட்டு, தன் அகாடமிக்கு கிளம்பினான் அபி…

 போகும் வழியெல்லாம் எதோ யோசனையிலே மூழ்கிருந்தான், அகாடமிக்கு வந்த பிறகு trainer மனோவை அழைத்து,

 

அபிமன்யு,”ராஜேஷோட பைல உடனே என் டேபிள்க்கு கொண்டுவாங்க” என்றான்

 

trainer மனோ,”என்ன விஷயம் சார்”

 

அபிமன்யு,”ஏன் விஷயம் என்னன்னு சொன்னா தான் கொண்டு வருவீங்களோ”

 

trainer மனோ,”இல்ல சார் அப்படிலாம் ஒன்னும் இல்ல”

 

அபிமன்யு,”இல்லல, அப்போ போங்க, சீக்கரம்,கொண்டு வாங்க” – என்று அவரிடம் அபி கொஞ்சம் கோபமாக பேசிக்கொண்டிருந்த வேலையில், அங்கு ஸ்ருதி மிகவும் பதற்றத்தோடு அவனது அனுமதி பெறாமலே அறைக்குள் நுழைந்தாள்.

 

ஏற்கனவே ராஜேஷின் விஷயத்தில் குழப்பமாகவும்,பற்றாக்குறைக்கு trainer மனோவின் கேள்வியில் எரிச்சலோடும் இருந்த அபி, தனது மொத்த கடுப்பையும் ஸ்ருதி மீது காட்ட தொடங்கினான் .

 

” அறிவு இல்லை, மேனர்ஸ் இல்ல, எத்தன தடவ சொல்றது உள்ள வரும் போது permission கேட்டுட்டு வான்னு” என்று கடுகை போல் பொரிந்து தள்ளினான் .

 

இது எதற்கும் அசராத ஸ்ருதி வழக்கம் போல அவனை தன் பாணியில்,

“பாஸ் பாஸ், நெருப்புல சுட்டா ஆரிரும், வெறுப்புல திட்னா ஆராதுன்னு கண்ணதாசனே சொல்லிருக்காரு, ஹ்ம்ம் கண்ணதாசா,ஜேசுதாஸ, பாவம் அவரே confuse ஆய்ட்டாரு” என்று கூற, அங்கிருந்த trainer மனோவும், ஸ்ருதியும் சிரிக்க தொடங்கினர் .

 

கோபம் தலைக்கேறிய அபி, trainerரை பார்த்து,

“வாவ் மனோ, நல்லாவே சிரிக்கிறிங்க, இப்படியே சிரிச்சிட்டு இருங்க, உங்க பொழப்பும் சிரிப்பா சிரிச்சிரும் பரவால்லையா ” என்று கேட்க,

 

உடனே மனோ ,

” சாரி சார்” என்றார்

 

அபிமன்யு,”போங்க, போய் நான் சொன்னா வேலைய பாருங்க” என்றான்

 

trainer மனோ,”யஸ் சார்” என்று அங்கிருந்து சென்றார் .

 

அபி ஸ்ருதியை பார்த்து,

 

“என்ன குளிர் விட்டு போச்சா ஹ்ம்ம், உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ” – முறைத்துக்கொண்டே அவள் அருகில்  வர ….வர

 

 ஸ்ருதியோ பயந்து போய் பின்னாடி சென்று கொண்டே அபியிடம்,

” இங்க பாருங்க சார், நீங்க ரொம்ப, டென்ஷனா இருந்தீங்க உங்கள கூல் பண்ணலாமேன்னு தான் நான் அப்படி செஞ்சேன் …. ஆனா நான் வந்த காரணமே வேற ” – என்றவாரே கூறி கொண்டு பின்னே சென்றவளின் பின் தலை சுவற்றில் வேகமாக மோத ,

 

“அம்மா”என்றுகத்தினாள்.

பின் அவள் அருகில் வந்த அபி ” ஷ்ஷ் ஷ்ஷ் ” என்று தனது விரலை அவளது உதட்டில் வைத்து  அமைதியாய் இரு என்பதை போல செய்கை செய்தான்.

 

 

ஸ்ருதியும் ஆம் என்பதை போல தன் தலையை ஆட்டினாள். பிறகு அபி தன் வலது கரத்தால் ஸ்ருதியின் பின் தலையில் அடிபட்ட இடத்தை தடவினான் .

விழிகள் இரண்டும் மோதிக்கொள்ள அவளது கடல் போன்ற விழியில் சிறு மீனை போல தத்தளித்தான் அபி…

அபி வேகமாக தேய்க்க, வலியில் ஸ்ருதி மறுபடியும் “அம்மா” என்று கத்தினாள்…

அவளின் சத்தத்தில் தன் நினைவுக்கு வந்த அபி,உடனே தன் கையை அவளின் தலையில் இருந்து எடுத்து விட்டு, மறுபடியும் அவளிடம்,” ஹவ் டெர் யு ” என்று சீர

அவள் ஒரு குழந்தையை போல தன் முகத்தை வைத்துக்கொண்டு,அடி பட்ட தன் தலையை தடவிக்கொண்டிருந்தாள்…

இதை பார்த்த அபிக்கு ஏதோ தோன்ற, அவன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டு, தடுமாறிய குரலில்,”இங்க இருந்து வெளிய போ” என்றான் .

 

உடனே ஸ்ருதி “ஐயோ, நான் இங்க வந்ததே உங்ககிட்ட ஒன்னு கேட்குறதுக்கு தான்” அபி அவளின் புறம் திரும்பாமல்,டேபிள்லில் இருந்த ஒரு பைல்லை எடுத்துக்கொண்டு, அதை பார்ப்பது போல

 

“என்ன சீக்கரம் சொல்லு எனக்கு வேல இருக்கு “என்றான் .

 

ஸ்ருதியோ மீண்டு மீண்டும் அவன் முன்னே வந்து,

“இது ரொம்ப முக்கியமானது, எனக்கு உடனே ஒரு 2 lakhs வேணும் ஜோவோட ஹார்ட் ஆபரேஷனுக்காக, கடனா தான் ப்ளீஸ், என் சலரில இருந்து எடுத்துக்கோங்க…

 அவன் அன்னை தெரசா ஹோம் இருக்குல அங்க தான் இருக்கான், நான் கூட அங்க” என்று ஸ்ருதி சொல்லி முடிப்பதற்குள்  குறுக்கிட்ட அபி ,

தன் மனதை கல்லாக்கிக்கொண்டு, தன் கையில் இருந்த பைலை அவள் முன் எரிந்து விட்டு,

 

“என்னைய பார்த்தா என்ன கேன பையன் மாதிரி இருக்கா, உனக்கு இந்த ஆபீஸ்ல சம்பளம் குடுக்குறதே வெட்டி, இதுல இது வேறயா, சி ஐ Can’t டேக் திஸ் எனி மோர், அவுட் நான் எதாவது பண்றதுக்குள்ள நீயே என் ரூம்ம விட்டு வெளிய போயிரு, அவுட்ட்ட்” என்று கத்த,

 

 ஸ்ருதி “நீங்க ஹெல்ப் பண்ணுவிங்கன்னு நினச்சு உங்க கிட்ட வந்தது என் தப்பு தான்” என்று அபியை பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் ..

 

நடந்த அனைத்தையும் தன் தோழிகளிடம் ஸ்ருதி கூறினாள்..

 

அதற்கு அவர்கள் ஸ்ருதியிடம்,”நீ அபி சார் கிட்ட எந்த வம்பும் பண்ணாத, உனக்கு தெரிஞ்சவங்ககிட்ட கேளு, நாங்களும் எங்க ஆபீஸ்ல ட்ரை பண்றோம், இப்போதைக்கு நம்மளோட savings கொஞ்சம் இருக்குல அத குடுப்போம், மீதிக்கு யார்கிட்டயாவது கடன் வாங்கலாம்” என்றார்கள்.

 

ஸ்ருதி “பேங்க்கு யாரு போறது” என்று கேட்டாள்,

 

உடனே காவியா,”பேங்க்கு போறது, பணத்த எடுத்து மதர்கிட்ட குடுக்கறதெல்லாம் நா பாத்துக்கறேன்” என்றாள்,

 

ஸ்ருதி,”சரி டி அப்போ சீக்கரம் போ, hospital போனதும் அங்க என்ன நடக்குதுன்னு எனக்கும் சுவாதிக்கும் அப்பப்போ போன் பண்ணு,சரி அப்போ நான் போன வைக்கறேன்” என்று கூறி போனை வைத்துவிட்டு,தன் அறைக்கு திரும்பினாள் .

 

அபி தன் மனதிற்குள்,” ஐயம் சாரி ஸ்ருதி, நீ வந்த அப்புறம் எனக்குள்ள நிறைய மாற்றங்கள நான் உணர்றேன், அத என்னால ஏத்துக்க முடியல, முடிஞ்ச அளவுக்கு நம்ம ரெண்டு பேரும் விலகி இருக்குறது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது” வேதனை தளும்ப கூறினான் .

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த trainer மனோ அபியிடம் ராஜேஷின் பைலை கொடுத்தார் .

“தங்க் யு சார், நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்” என்று கூறி விட்டு … என்றவன் வருணை தன் அறைக்கு வருமாறு கூறினான் .

 

வருண், ராஜேஷ் பத்தி உங்கிட்ட discuss பண்ணனும், ஆனா அதுக்கு முன்னாடி, நான் ஒன்னு சொல்லணும், இன்னைக்கு ஸ்ருதிய” என்று ஆரம்பித்து, நடந்த அனைத்தையும் கூறிய அபி வருணிடம்,

 

”நீ நேரா அன்னை, தெரசா ஹோம்க்கு போய் எல்லா உதவியும் பண்ணு, ஆனா என் பேரு வெளிய வரக்கூடாது சரியா” என்றான்

 

“சரி சார் நான் அப்படியே பண்ணிறேன், அப்புறம் ராஜேஷ்” என்றவனை, அபி

 

“orphanage மேட்டர்அஹ முடிச்சிட்டு வா அப்றோம் ராஜேஷ் பத்தி பேசலாம்” என்றான்

“சரி சார், அங்க போய் நான் உங்களுக்கு போன் பண்ணறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் .

அபிமன்யுவின் இல்லத்தில், ஆர்த்தி,”ரொம்ப போர் அடிக்குதுமா ஷாப்பிங் போலாமா” என்று கேட்டாள், உடனே சகுந்தலா

“அப்போ சரி அபிக்கு இன்னைக்கு நாமளே சாப்பாடு கொண்டு போயிறலாம், ஷாப்பிங் போயிட்டு return வர்ற வழியில அவன பாத்துட்டு வரலாம்” என்றார்

ஆர்த்தி,”ஹ்ம்ம், அப்படியே அந்த பொண்ணையும் பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்

சகுந்தலா,”பரவாயில்லயே உன் மூளை கூட வேலை செய்யுது” என்று நக்கல் அடிக்க

ஆர்த்தி,” இது தான  வேண்டாம்ங்கறது, அப்போ போங்க நான் வரல” என்று சினுங்க

சகுந்தலா,”சும்மா சொன்னேன் மா, நீ தான் என் அறிவு குட்டியாசே, அவன் ரூம்ம கிளீன் பண்ணினேன் … ஒரே தூசியா ஆய்டுச்சு அதனால நான் போய் குளிச்சி ரெடியாகிட்டு, வர்ரேன், அது வரைக்கும் நீ டிவி பாரு” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார் .

சில மணி நேரம் கழித்து, அகாடமி வந்த வருண் அபியிடம்,

” ஜோ ஆபரேஷன்க்கு இனிமே எந்த பிரச்சனையும் இருக்காது, எல்லா மேட்டரையும் சால்வ் பண்ணிட்டேன், அப்புறம் டாக்டர்கிட்டயும் பேசிட்டேன், மதர் கிட்ட என் மொபைல் நம்பர் குடுத்திருக்கேன், பிரச்சன எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ண சொல்லிருக்கேன் “. என்றான் . அதற்கு அபி

,”போன் நம்பர் குடுத்து ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்க, சரி இப்போ ராஜேஷ் பத்தி உங்கிட்ட பேசனும்” என்றான்

வருண்,”சொல்லுங்க சார்”

அபிமன்யு,”ராஜேஷ் ரெகார்ட்ஸ் எல்லாம் பாத்தேன், எந்த ஒரு proper guidance இல்லாமலே, அவனோட ரெகார்ட்ஸ் எல்லாம் ஒகேன்னு சொல்ற மாதிரி இருக்கு…

 அவனுக்கு மட்டும் ஒழுங்கான training குடுத்தா, பாக்சிங்ல பெஸ்ட்டா வருவான்னு, எனக்கு தோணுது…

 அம்மா சொன்ன மாதிரியே நா ராஜேஷ் விஷயத்துல கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும், அவனுக்கு ஒரு சான்ஸ் குடுத்திருக்கனும், இப்போவும் ஒன்னும் கெட்டு போகல ஆனா”என்று இலுத்தவனை பார்த்து வருண்,

 

“உங்களுக்கு ஒரு மாதிரியா இருந்தா , நான் வேணும்ன்னா போய்” என்று ஆரம்பித்தவனை தடுத்த அபி .

அபிமன்யு,”நீ போனா அது சரியா இருக்காது வருண்,நான் தான் போனும் ஆனா, உங்கிட்ட சொல்றதுக்கென்ன, ஈகோ தடுக்குது, எல்லாத்துக்கும் மேல நெருடலா இருக்கு, ஹ்ம்ம் என்ன பண்ணலாம்” என்று யோசித்தவனை பார்த்து வருண்

“நீங்க நேர்ல போகத்தான தயங்கிரிங்க, போன் பண்ணி பேசுங்க, நேர்ல போறதுக்கு போன்ல பேசுறது கொஞ்சம் பெட்டெர் ஆஹ இருக்கும் என்றான்” இதைக்கேட்ட அபி

“நாட் ஸோ bad, பேசுறேன்” என்றவன்

அகாடமியின் நிர்வாகத்தை பற்றி வருணிடம் உரையாடிக்கொண்டிருந்தான்.

ஆர்த்தியும், சகுந்தலாவும் அகாடெமிக்கு வந்தனர், அகாடமியின் வாசலில் நுழையும் தருணத்தில் பார்த்து, ஆர்த்தியின் கைபேசி ஒலித்தது, உடனே ஆர்த்தி சகுந்தலாவிடம்,

“உங்க மருமகன் விக்ரம் தான் பேசுறாரு, அவருக்கே எப்போவாது ப்ரீ டைம் கடைக்கும், ஸோ மா நீங்க உள்ள போங்க நான் போய் பேசிட்டு வாரேன்” என்று கூறி அங்கிருந்து ஆர்வத்துடன்,

” சொல்லுங்க விக்ரம்,எப்படி இருக்கீங்க, இப்போ தான் என் நியாபகம் வந்துச்சா” என்று பேசிக்கொண்டே சென்றாள்.

 

இதை பார்த்து சகுந்தலா சிரித்துக்கொண்டே வந்ததில், எதிரில் போனில் காவியாவுடன் பேசிக்கொண்டே வந்த ஸ்ருதியை கவனிக்காமல் அவள் மீது மோதினார் . பிறகு 

 

ஸ்ருதி,”பார்த்து மா ஒன்னும் அடிபடலல” என்றாள்

 

சகுந்தலா,”இல்லமா, சாரி கவனிக்காம வந்துட்டேன்” என்று கூறி கொண்டே ஸ்ருதியை பார்த்தார் .

ஸ்ருதியை பார்த்த தருணத்திலேயே அடையாளம் கண்டுகொண்டார், பின் தன் மனதில்,”இந்த பொண்ணு தான நம்ம அபிய அறைஞ்சது, இந்த பொண்ணு இங்க என்ன பண்ணுது” என்று குழம்பியவர் ஸ்ருதியிடம் ஸ்ருதியிடம்

 

“நீ யாரு மா,இங்க என்ன பண்ற”

 

ஸ்ருதி,”என் பேரு ஸ்ருதி, நான் இங்க தான் வேலை பாக்றேன், அபிமன்யு சாரோட PA” என்றாள் . சகுந்தலாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது, அவர் தனக்குள்,”இது தான் விஷயமா” என்று ஸ்ருதியை பார்த்து சிரித்தார், ஏன் சிரிக்கிறார் என்று புரியாத ஸ்ருதி, பதிலுக்கு சகுந்தலாவை பார்த்து சிரித்துவிட்டு, அவரிடம்

 

ஸ்ருதி,”உங்களுக்கு யாரை பார்க்கணும்” என்றாள், அதற்கு

 

சகுந்தலா,”அதெல்லாம் நானே பார்த்துக்கறேன், உனக்கு எதுக்கு மா சிரமம்” என்றார், உடனே ஸ்ருதி

 

ஸ்ருதி,”இதுல என்ன மா சிரமம் இருக்கபோது, கையில வேற,bag வச்சிருக்கிங்க, பார்த்தா வெயிட்டா இருக்கற மாதிரி தெரியுது, குடுங்க நானே தூக்கிட்டு வாரேன், நீங்க என் கூட வாங்க” என்ற படி சகுந்தலாவை உள்ளே அழைத்துசென்றாள்.

 

ஸ்ருதியின் செய்கை சகுந்தலாவுக்கு பிடித்துபோகவே, அவளை பாத்துக்கொண்டே அவளுடன் நடந்தார் . ஸ்ருதியோ இவர்களிடம் பேசியதில், காவியாவை மறந்து விட்டோமே என்று, காவியாவிடம் மீண்டும் பேசினாள்,

காவியா,”என்ன டி பேசிட்டு இருக்கும் போது திடிருன்னு, சத்ததேயே காணோம்”

ஸ்ருதி,”அது ஒன்னும் இல்ல டி ஒரு அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன், சரி நீ சொல்லு அங்க எல்லாம் ஒகேவா” என்று கேக்க

 

காவியா,”எல்லாம் ஒகே டி, ஒருத்தர் வந்தாருடி, யாருன்னு பேரு தெரியலடி அவரே எல்லா செலவையும் ஏத்துக்கிட்டாருடி, பேரு என்னன்னு கேட்டேன், நாம உதவி செய்றது மத்தவங்களுக்கு தெரியமா செய்யனும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாருடி, அது யாருன்னு தெரியலடி” என்றாள் .

 

ஸ்ருதி,” அப்படியாடி சொல்ற, அவருக்கு உண்மையாவே நல்ல மனசுடி அவரு எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், சரி காவியா, சாயங்காலம் இத பத்தி விளக்கமா பேசுவோம்” என்று கூறி தனது போனை துண்டித்தாள்.

 

பின்பு சகுந்தலாவை பார்த்து, “மா நீங்க யார பாக்கணும்ன்னு சொல்லவே இல்லையே” என்றாள், சகுந்தலா பேச வாயெடுப்பதற்குள், வருண் ரூமை விட்டு வெளியே வந்த அபி, சகுந்தலாவை பார்த்து, “அம்மா” என்று சொல்லிக்கொண்டே அவர் அருகில் வந்தான் .

 

பிறகு சகுந்தலாவிடம்,”வாங்க மா ஏன் உள்ள வராம இங்கயே நிக்கிறீங்க” என்றான் .

 

இதை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதிக்கு அதிர்ச்சியாக இருந்தது,

 

“இவங்க தான் சாரோட அம்மாவா, நல்லவேளை ஏதும் உளறல, ஆ..மா இவங்க தான் இவன் அம்மானா நம்பவே முடியலயே, இவங்க எவ்வளவு அன்பா பேசறாங்க, இவரும் இருக்காரே எப்ப பாரு வெறப்பா” என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தவளை,

 

அபி சுடக்கு போட்டு” ஹலோ இந்த திங்க்ஸ என் ரூம்க்கு எடுத்துட்டு வா ” என்றான் .

ஸ்ருதியும் சரி என்பதை போல் தலையை ஆட்டினாள்.

“வாங்க மா உள்ள போலாம்” என்று அபி தன்னுடன் அழைத்துச்சென்றான் .

அபி தன் மனதிற்குள்,

“ஸ்ருதிய பார்த்தும் அம்மா என்கிட்ட ஒன்னும் கேக்கல கொஞ்சம் குழப்பமாவே இருக்கே ” என்று நினைக்க, சகுந்தலாவோ தனக்குள்,

” நா ஏண்டா கேக்கணும், நீயா சொல்ற வரைக்கும் நா கேக்க மாட்டேன் ” என்றார் .

உடனே அபி சகுந்தலாவிடம் நீங்க மட்டும் தான் வந்திருக்கிங்களா என்றான், அதற்கு, சகுந்தலா,

” இல்ல பா, ஆர்த்தி கீழ விக்ரம் கூட போன் பேசிட்டு இருக்கா, வந்திருவா ” என்றார் .

உள்ளே நுழைந்த ஸ்ருதியிடம் அபி சாப்பிட ஏதும் கொண்டு வரச்சொன்னான்

சகுந்தலா அபியிடம்,

“நானும் ஆர்த்தியும், ஷாப்பிங் முடிச்சிட்டு வர்ற வழியில அப்படியே உனக்கு லஞ்ச் குடுத்துட்டு போலாமேன்னு வந்தோம் ” என்றார் . கொஞ்ச நேரத்தில் ஆர்த்தியும் போன் பேசி முடித்து விட்டு, அபியின் அறைக்கு வந்தாள் . உடனே அபி ஆர்த்தியை பார்த்து,

“ஹாய் குண்டமா ஷாப்பிங் எல்லாம் நல்லா முடிஞ்சிதா” என்றான் .

ஆர்த்தி,” ஆமா dinosaurs,  எல்லாம் சூப்பர்ஆஹ் முடிஞ்சிச்சு” என்றாள், உடனே அபி

அபிமன்யு,” எது நா dinosaursஸா, நான் என்ன உன்ன மாதிரி குண்டவா இருக்கேன் ” என்றான்

ஆர்த்தி,” ச்ச உன்ன போய் யாரும் குண்டுன்னு சொல்வாங்களா, நா உன் மூஞ்ச பத்தி பேசுனேன், dinosaurs மாதிரி எப்போ யார கடிச்சு திங்கலான்னு மூஞ்ச வச்சிருக்கியே அத சொன்னேன் ” என்றாள்.

உடனே அபி அப்படியா என்று கூறி ஆர்த்தியின் கழுத்தில் மீது தன் கையை போட்டு,”இப்போ நான் உன்ன அந்த dinosaurs மாதிரி கடிக்க போறேன் ” என்று விளையாடிக்கொண்டிருந்தான்.

 இதை அனைத்தையும், அபியின் அறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வந்த ஸ்ருதி பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தாள்.

எப்போதும் அபியின் கோபத்தை மட்டும் பார்த்தவள் இன்று அபியின் சந்தோஷமான முகத்தை பார்த்தாள், பிறகு ஸ்ருதி,” மே ஐ கம் இன் சார் ” என்றாள் .

ஸ்ருதியை பார்த்த அபி,ஆர்த்தியின் கழுத்தில் இருந்த கையை எடுத்து விட்டு, “யஸ் கம் இன்” என்றான்.

யாரது என்று எட்டி பார்த்த ஆர்த்திக்கு, ஸ்ருதியை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருந்தது,

ஆர்த்தி ஸ்ருதியிடம் “நீ அந்த பொண்ணு தான, நீ  என் தம்பிய அடிச்ச பொண்ணு” என்றாள்

ஸ்ருதி என்ன கூறுவதென்று புரியாமல்,”ஆம்” என்று தலையை ஆட்டினாள் .

பிறகு சற்றும் யோசிக்காமல் ஆர்த்தி ஸ்ருதியை ஓங்கி அறைந்தாள்.

ஸ்ருதியின் கண்கள் இரண்டும் நீரால் நிறைந்திருந்தது, ஆர்த்தியின் இந்த திடீர் செய்கை, அபிக்கும், சகுந்தலாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது, அபிக்கு ஆர்த்தி மீது கோபம் வந்தாலும், அந்த இடத்தில் தன் அக்காவையும் விட்டுக்கொடுக்கமுடியாமல்,ஸ்ருதியின் கண்களில் வழியும் கண்ணீரையும் பார்க்க முடியாமல் தலை குனிந்து கையில் கிடைத்த பேப்பரை கசக்கிக்கொண்டிருந்தான் . அப்போது,ஆர்த்தி ஸ்ருதியிடம்

ஆர்த்தி,”நீ இங்க என்ன டி பண்ற” என்றாள்

ஸ்ருதி ஏங்கி ஏங்கி அழுததில் சரியாக பேச்சு வராமல், தடுமாறிய குரலில்,”நான் இங்க, சார் தான், அது வந்து, அன்னைக்கு, நா “என்று உளற,

 

ஆர்த்திக்கு மறுபடியும் கோபம் வந்து”என்ன டி அது வந்து போயின்னு, கத சொல்லிட்டு இருக்க” என்று மீண்டும், ஸ்ருதி மீது கை ஓங்க,

இந்த முறை சகுந்தலா ஆர்த்தியின் கையை பிடிக்க, அபி ஸ்ருதியை பார்த்து,”ஸ்ருதி உங்க காபின்க்கு போங்க” என்றான், ஸ்ருதியும் அங்கிருந்து அழுதுகொண்டே சென்று விட்டாள் .

 

பின் சகுந்தலா ஆர்த்தியிடம்

 

சகுந்தலா,”என்ன ஆர்த்தி இது, இப்படியா ஒரு பொண்ண அடிப்ப” என்றாள், அதற்கு ஆர்த்தி

 

“அவளுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க, அவ இந்த ஆபீஸ்ல என்ன மா பண்றா” என்றாள், அதற்கு

 

சகுந்தலா,”இந்த கேள்விய, நீ அவகிட்ட கேக்க கூடாது, உன் தம்பி கிட்ட கேளு, இது இவன் ஆபீஸ் தானே” என்றாள்.

 

ஆர்த்தி அபியை பார்த்து

 

“இவளுக்கு இங்க என்னடா வேல” அதட்டினாள்

 

இதுக்கு மேல் மறைச்சா பிரச்சனை என்று எண்ணியவன் தான்

‘ஏன், எப்படி ஸ்ருதியை இங்கு வேலைய்க்கு அமர்த்தினோம்’ என்று தொடங்கி எல்லா உண்மையையும் கூறினான் .

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சகுந்தலா ஆர்த்தியிடம்,

 

“பார்த்தியா உன் தம்பிய, சார் ஒரு பொண்ண பழிவாங்குற அளவுக்கு போயிட்டாரு, ஸோ நீ அறைய வேண்டியது ஸ்ருதிய இல்ல இவன தான்” என்று கூறினார் .

 

ஆர்த்தி,”இவன் பண்ணது தப்புதான் ஆனா, ஸ்ருதி என் தம்பிய அடிச்சிருக்கா, அத என்னால மன்னிக்க முடியாது மா, நான் கீழ வெயிட் பண்றேன், நீங்க வாங்க” என்று கூறி அபியை பார்த்து முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 

அபி தன் தாயிடம், “சாரி மா, அந்த நேரத்துல ஸ்ருதி மேல உள்ள கோவத்துல அப்படி பண்ணேன், ஆனா இப்போ நா அப்படியில்ல மா, ப்ளீஸ் மா என்னை மன்னிச்சிருங்க” என்றான் .

 

உடனே சாகுந்தலா தன் மனதிற்குள்,” நீ இப்போ அப்படியில்லன்னு தான் நல்லா தெரியுதே, அதான் மொத்தமா மாறி போய் மாறி போய்ட்டியே ” எண்ணி தன் உதட்டுக்கு  வலிக்காமல் புன்னகைத்தவர்.

 

சகுந்தலா,”நான் உன்னை மன்னிக்கனும்னா, நான் சொல்ற மாதிரி நீ ஸ்ருதி கிட்ட நடந்துக்கணும், அப்றோம் ஆர்த்தி சொல்றான்னு சொல்லி வேலைய விட்டுலாம் தூக்கக்கூடாது” என்றாள் இதை கேட்ட அபி ஒன்னும் விளங்காமல் முழித்தான் . உடனே

 

சகுந்தலா,”என்ன டா ஒன்னும் சொல்லமாட்டிக்க” என்று அதட்டினார், உடனே அபி,

 

அபிமன்யு,”சரி மா, நான் நீங்க சொல்ற மாதிரியே செய்றேன், ஆனா ஆர்த்தி” என்றான்.

 

சகுந்தலா,”ஆர்த்திய நான் பாத்துக்கறேன், முதல்ல ஸ்ருதிய இங்க வர சொல்லு” என்றாள்

 

அபிமன்யு,”இங்கயா எதுக்கு மா?”

 

சகுந்தலா,”என்னடா கேள்விலாம் கேட்டுட்டு இருக்க,போடா போய் வரச்சொல்லு” என்றாள், அவனும் சரி மா என்று அங்கிருந்து சென்றான் .

 

அபி தனக்குள் “என் அம்மாக்கு என்னதான் ஆச்சு ஒரு மாதிரியா பேசறாங்க, ஸ்ருதி விஷயத்துல என் மேல கோபப்பட்டு என்கிட்ட பேசவே மாட்டாங்கன்னு நினச்சேன் ஆனா, ஸ்ருதிய வேலைய விட்டு தூக்காதன்னு, சப்புன்னு முடிச்சிட்டாங்க, ஹ்ம்ம் என்ன சுத்தி என்னமோ நடக்குது,ஆனா ஒன்னுமே புரியல”

 

சகுந்தலா அபியின் டேபிள் அருகில் சென்று, அவன் கசக்கிய பேப்பரை தன் கையில் எடுத்து பார்த்து சிரித்து விட்டு,

 

“ஏன்டா உனக்கு அவ்வளவு கோபம் வருதா ஹ்ம்ம், அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு எப்பவும் பார்த்துகிட்டே இருக்கனும்ன்னு வேலையில சேத்துருக்க, அத விட்டுட்டு எதோ பழிவாங்கனும்ன்னு நினச்சராம், அக்ரீமெண்ட் போட்டாராம்.

 யார்கிட்ட டா கத விடுற, புடிச்சிருந்தா புடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியதுதானே!

 அத விட்டுட்டு என்னலாமோ சொல்லிட்டு இருக்கான், ஸ்ருதியும் நல்லா பொண்ண தான் தெரியறா, இவன்கிட்ட கேட்ருவோமா, வேண்டாம் வேண்டாம் அவனே சொல்லட்டும், அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையாவே இருப்போம்.

 ஆமா அவள கூட்டிட்டு வர்றதுக்கு இவர் தான் போணுமா என்ன, போன் பண்ணி கூப்பிட்டா அவளே வரப்போறா, அவள பார்த்து சாரி சொல்லணும், அதான் கூட்டிட்டு வாடான்னு சொன்னதும் வேகமா போய்ட்டான் ஹ்ம்ம்” சகுந்தலாவின் மனம் வேறு விதமாய் யோசிக்க ஆரம்பித்தது

 

ஸ்ருதியின் காபின்க்குள் வந்த அபி, ஸ்ருதியிடம் வந்து

“என் அக்கா திடிர்ன்னு அந்த மாதிரி பண்ணுவான்னு நான் நனைக்கல, தப்பு எங்க சைடு தான்,அயம் சாரி” என்று தயங்கி தயங்கி கூறினான்,

 

ஸ்ருதி,”இட்ஸ் ஒகே சார், அவங்க அவங்களோட தம்பிக்காக பேசறாங்க, அத தப்பு சொல்லமுடியாது,எனக்கு ஒன்னும் இல்ல சார், நீங்க போங்க” கண்ணீரை துடைத்தபடி கூறினாள்.

 

அபிமன்யு,”ஸ்ருதி நான் இங்க வந்ததுக்கு காரணம், அம்மா உங்ககிட்ட எதோ பேசணும்ன்னு சொல்றாங்க” என்றான்

ஸ்ருதி,”என்கிட்ட என்ன பேசபோறாங்க, என்னை வேலைய விட்டு தூக்கபோறிங்களா சார் ப்ளீஸ் அந்த மாதிரி மட்டும் பண்ணிறாதீங்க, இந்த வேல எனக்கு ரொம்ப முக்கியம்” என்றவளை, அபி

“ஸ்ருதி ஸ்ருதி ரிலாக்ஸ் உன்னை வேலைய விட்டுலாம் யாரும் தூக்கல ஸோ நீ டென்ஷன் ஆக வேண்டாம் சரியா”

ஸ்ருதி,”அப்போ என்கிட்ட என்ன பேச போறாங்க”

அபிமன்யு,”அதான் எனக்கே தெரியல, அதுக்கு நீ அங்க வரணும்” என்றான் .

ஸ்ருதி,”ஒகே சார், நான் வரேன்” என்று கூறிவிட்டு, இருவரும் சகுந்தலாவிடம் சென்றனர் .

சகுந்தலா ஸ்ருதியை பார்த்து,

சகுந்தலா,”நான் உன்னை ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன், ஆனா” என்றவுடன் ஸ்ருதி மீண்டும் அழ .

சகுந்தலா,”சாரி டா, ஆர்த்தி பண்ணினது தப்பு தான், நான் வேணும்ன்னா அவளுக்கு பதிலா உங்கிட்ட சாரி கேட்கிறேன் ” என்று கூற

 

ஸ்ருதி,”அச்சச்சோ மேடம் நீங்க வேற, நீங்க போய் என்கிட்ட சாரி கேட்டுக்கிட்டு, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், எனக்கு ஆர்த்தி மேடம் மேல எந்த கோபமும் இல்ல”என்றாள் .

 

சகுந்தலா,”நீ போய் சொல்ற உனக்கு இன்னும் எங்க மேல உள்ள கோபம் போகல”

 

ஸ்ருதி,”அச்சச்சோ, அதெல்லாம் ஒன்னும் இல்ல சத்தியமா, எனக்கு உங்க மேல கோபம் இல்ல”

 

சகுந்தலா,”அப்படியா நான் இத நம்பணும்னா, இனிமே நீ என்ன மேடம்ன்னு கூப்பிட கூடாது”

 

ஸ்ருதியும் அபியும் ஒருவரை ஒருவர் பார்க்க

 

சகுந்தலா,”முதல் முதலா என்ன பார்க்கும்போது கூப்படியே,’அம்மான்னு’, அப்படி தான் இனிமே கூப்பிடனும் சரியா” என்றாள்

 

ஸ்ருதியும்,”சரி மேடம், இல்ல இல்ல மா” என்றாள், உடனே ஸ்ருதியும், சகுந்தலாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் . அவர்களை பார்த்து அபியும் தன் உதட்டுக்கு வலிக்காமல் லேசாக சிரித்துக்கொண்டான் .

 

பிறகு சகுந்தலா,”ஸ்ருதி நீ சாப்பிட்டியா”

 

ஸ்ருதி,”இல்லமா, இனிமே தான் சாப்டனும்” என்றாள்,

 

உடனே சகுந்தலா சரி வா மா நான் அபிக்காக சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன், வா வந்து நீயும் சாப்டு,

 

“அச்சச்சோ ஒரு plate தான் இருக்கு, பரவாயில்ல ரெண்டு பேரும் சும்மா ஒரே plateலே ஷேர் பண்ணிக்கோங்க” என்றாள், அபிக்கு சகுந்தலாவின் செய்கை குழப்பம் அளித்தது..

 

“இல்லமா வேண்டாம்” உடனே மறுத்தாள் ஸ்ருதி

 

சகுந்தலா,”என்ன வேண்டாம், என்னடா அபி உன் கம்பெனில பாஸ்சோட அம்மாவுக்கு இவ்வளவு தான் மரியாதயா” என்றார் .

 

அபிமன்யு,”ஸ்ருதி, வாங்க வந்து உக்காருங்க” என்றான், ஸ்ருதியும் தயங்கி தயங்கி வந்தாள் .

 

சகுந்தலா அவர்களுக்கு plate எடுத்துவைத்து, பரிமாறும் பொழுது,

 

ஸ்ருதி,”ஆர்த்தி மேடம் எங்க” என்றாள்,

உடனே சகுந்தலா,

 

“அச்சச்சோ அவ கீழ வெயிட் பண்றேன்னு சொன்னா, லேட் ஆய்டுச்சே” என்று கூற, ஸ்ருதி,

 

“நீங்க போங்க மா” நாங்க சாப்பிட்டுக்கறோம் என்றாள்.

 

உடனே அபி

 

“ஆமா மா நாங்க சாப்பிட்டுக்கறோம்” என்றான் உடனே சகுந்தலா,

 

“நான் போறேன் ஆனா நீங்க மிச்சம் வைக்காம சாப்டனும் சரியா சரி அப்போ நான் கிளம்புறேன், போயிட்டு வரேன் டா, போயிட்டு வரேன் ஸ்ருதி மா”- என்று கூறி ஸ்ருதியின் கன்னத்தை லேசாக தட்டிவிட்டு சென்றார் .

 

சகுந்தலாவின் இந்த செய்கை அபிக்கு தெளிவில்லா குழப்பத்தை உண்டாக்கியது,

 

சகுந்தலா அங்கிருந்து சென்றவுடன், ஸ்ருதி அங்கிருந்து போகத் துணிந்தாள், உடனே அபி ஸ்ருதியின் கைகளை பற்றினான், ஸ்ருதி திரும்பி பார்க்க, இருவரும் ஒருவரின் ஒருவர் விழிகளில் மூழ்கிருந்தனர் .

 

அந்த நேரம் பார்த்து, தன் மொபைலை அபியின் அறையிலே வைத்து விட்டோம் என்று அதை எடுப்பதற்காக அங்கு வந்த சகுந்தலா, இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு . ஒன்றும் தெரியாததை போல் கதவை தட்டினார்.

 

சுயநினைவுக்கு வந்த அபி “என்ன மா” என்றான், உடனே சகுந்தலா இருவரையும் பார்த்து,

 

“மொபைல வச்சிட்டு போய்ட்டேன் டா, சாரி டா தெரியாம தொந்தரவு பண்ணிட்டேன் .நீங்க continue பண்ணுங்க,ஹ்ம்ம் சாப்பாட, பாருங்க சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு, சாப்ட்டுட்டு, மத்த வேலைய பாருங்க” என்று சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் .

அபிமன்யு,”ஒ god, அம்மா என்ன நினைச்சிருப்பாங்க, ஐ அம் sure கண்டிப்பா எதோ தப்பா நினச்சிருப்பாங்க” என்றான்

 

ஸ்ருதி,”நமகுள்ள என்ன சார் இருக்கு தப்பா நினைக்கற அளவுக்கு, நமக்குள்ள ஒன்னும் இல்ல சார்” என்றாள் .

 

ஸ்ருதியின் இந்த வார்த்தை அபியின் மனதிற்குள் எதோ ஒரு இனம் புரியாத வலியை ஏற்படுத்தியது ….,சிறிது நேரம் மௌனமாக அவளையே பார்த்தவன்

 

“யு ஆர் ரைட், தேர் இஸ் நத்திங் பிட்வீன் அஸ் ” என்று தாழ்ந்த குரலில் கூறினான் .

 

” நான் கிளம்புறேன் சார் ” என்றவள் அங்கிருந்து சென்றாள் .

 

அபியின் வீட்டில், சகுந்தலா ஆர்த்திக்கு எல்லாவற்றையும் கூறினார், பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக ஆர்த்தி இருமனதாக தன் தாயிடம்,

 

ஆர்த்தி,”இதெல்லாம் உனக்காகத்தான் மா,சரி இனிமே அந்த பொண்ணுகிட்ட சண்ட போடமாட்டேன், அதுக்காக என் தம்பிய அடிச்ச ஒருத்திக்கிட்ட என்னால சகஜமா பேசமுடியாது, சரியா” என்றாள் அதற்கு சகுந்தலா

 

சகுந்தலா,”சரி டி, நான் என்ன எனக்காகவா சொல்றேன், எல்லாம் அபிக்காக தான், அவனுக்கு பிடிச்சிருக்கே, அவன் சந்தோஷம் தான் டி நமக்கு முக்கியம்” என்றார், அதற்கு

 

ஆர்த்தி,”சரி” என்றாள்,

சகுந்தலா,”ஸ்ருதிய வீட்டுக்கு கூட்டிட்டு வரணும், அவ கிட்ட பேசனும், அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் ஆனா எப்படின்னு தான் தெரியல” என்றாள்.

 

உடனே ஆர்த்தி ,

 

ஆர்த்தி,”நாளை கழிச்சு சுமங்கலி பூஜ வருதுல, இந்த தடவ நமக்கு தெரிஞ்சவங்கலாம் கூப்பிட்டு அதை கொண்டாடினா என்ன, ஸ்ருதியும் கூப்ட மாதிரி இருக்கும், பூஜையும் பண்ணின மாதிரி இருக்கும்” என்றாள்

 

சகுந்தலா,”நல்லா ஐடியா தான் ஆனா அவ ஒத்துக்கணுமே”

 

ஆர்த்தி,”எல்லாம் ஒதுக்குவா, ஒத்துக்காம எங்க போக போறா, நீ எப்படியாவது convince பண்ணி வரவை” என்றாள்

 

சகுந்தலா,”சரி டி அப்படியே பண்றேன்” என்றார்

 

hostelலில் இன்று அகாடமில் நடந்த அணைத்து விஷயகளையும் ஸ்ருதி தன் தோழிகளிடம் கூறினாள், இதைக்கேட்ட சுவாதி கோபமுற்று,

 

சுவாதி,”அபி சாரோட அக்கா உன்னை அடிச்சாங்களா !

யார கேட்டு அடிச்சாங்க, கேக்றதுக்கு யாரும் இல்லன்னு,நினச்சிட்டாங்களா!

 நீ வேற அவர் கிட்ட வேலைய விட்டு தூகிராதிங்கன்னு கெஞ்சிருக்க, போதும் டி போதும் நீ நாளைக்கே வேலைய resign பண்ணிரு, இது சரியா வராது” என்றாள்

 

காவியா,”சுவாதி சொல்றது சரி தான் டி, இந்த வேலை நமக்கு வேண்டாம்” என்றாள்,உடனே ஸ்ருதி,

“வேலை வேண்டாம்னா, வேற எந்த வேலைக்கு போறது, சும்மா இங்கயே இருக்க சொல்றியா, இப்போலாம் ஒரு வேலை கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியும்ல, வேலையெல்லாம் விட முடியாது.

 நீங்களே பாருங்க நானும் வேலை பார்க்குறதால நம்ம செலவெல்லாம் போக மீதி எவ்வளவு பணத்த save பண்ண முடியுது, இதனால நம்ம எல்லாரோட futureரையும் secure பண்ண முடியுது, ஸோ வேலைய விடுறதெல்லாம் நடக்காத காரியம்”

 

சுவாதி,”சாரோட அக்கா உன்ன அடிச்சிருக்காங்க, இதுக்கு மேலயும் நீ அங்க வேலப்பாக்கனும்ன்னு சொல்ற”

 

ஸ்ருதி,”ஆமா .சாரோட அக்கா அடிச்சாங்க, ஆனா சாரூம், அவங்களோட அம்மாவும் என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்க, அதுக்கு என்ன சொல்ற.

இங்க பருங்க நீங்க ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு அன்பு வைச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அங்க என்ன யாரும் கொடும படுத்தல.

 நான் நல்லா தான் இருக்கேன், நீங்க எத பத்தியும் கவலைப்படாதீங்க சரியா,ஹ்ம்ம், தூக்கம் வருது, நாளைக்கு பேசிக்கலாம், குட் நைட்” என்று கூற, சுவாதி எதோ யோசனையில் மூழ்கி இருந்தாள், உடனே ஸ்ருதி,

 

ஸ்ருதி,”என்ன ஆச்சுடி” என்று கேட்டாள்

 

சுவாதி,”ஒன்னும் இல்ல மா, எல்லாரும் தூங்கலாம்” என்று கூறி மூவரும் நாளைய விடியலுக்காக நிம்மதியாக கண்மூடினர்.

நம் அபி மட்டும் ஸ்ருதியின் வாழக்கையில் கூட அப்படி தான், அவர்களும் அவர்களது அன்பும் பல சோதனைகளை கடக்க வேண்டிருக்கும், அப்பொழுது தான் அவர்களது, அன்பு மேன்மை பெரும்.

 

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!