Nenjathai KIllathe

Picture3

நெஞ்சத்தை கிள்ளாதே 

பகுதி 6:

புது புது உணர்வுகள்

சில நேரங்களில் நாம் என்ன ஆகிறோம் என்று நமக்கே தெரிவதில்லை, புதிதாக ஒரு நபர் வந்த பிறகு நம் வாழ்வே மாறி போய் விடுகின்றது, நமக்குள் புது புது உணர்வுகள் தோன்றுகிறது, இது நாம் தானா என்ற சந்தேகம் நமக்கே வரும் அளவிற்கு நாம் மாறி விடுகின்றோம் . இது எதனால் என்ற கேள்வி நம் மூளைக்குள் சுற்றி சுற்றி வந்தாலும், அதற்கான பதிலை சில நேரங்களில் அடைய முடியாமலே போய் விடுகின்றோம் காரணம்,

‘நாம் நம் மனதைக்கொண்டு அல்ல நம் மூளையை கொண்டு யோசிப்பதால்’ ஆம் சில நேரங்களில் சில கேள்விகளுக்கான பதிலை நம் மனதைக்கொண்டு தான் யோசிக்க வேண்டும் நம் மூளையை கொண்டல்ல . அதைப்போல சில மாற்றங்களை உணர்ந்து விட்டு,நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும், அது ஏன் என்று ஆராய்ந்தால், நாம் நம் நிம்மதியை இழந்து விடுவோம் .

                       “பெண்ணே நீ என் அருகில் வர வர

என்னுள் ஆயிரம் மாற்றங்களை நான் உணர்கிறேன்

உன் உடம்பில் உள்ள அணுக்கள் அனைத்தும்

என்னுடன் யுத்தம் செய்கின்றன

இது எனக்கு சுகமான சுமையாகவே தெரிகின்றன

ஏனோ இப்பொழுதெல்லாம் நான் நானாக இருப்பதில்லை”

சரி இப்பொழுது கதைக்குள் செல்லலாம்…

விடியற்காலை ஒரு 5:30 AM மணியளவில், ஸ்ருதியின் போன் அதன் பாணியில் ஒலிக்க, அவள் பாதி தூக்கத்தில் சென்று போனை அட்டெண்ட் செய்தாள்,

ஸ்ருதி,”ஹலோ யாருங்க பேசுறது”

அபிமன்யு,”போன்ன எடுக்க எவ்வளவு நேரம், அபிமன்யு பேசுறேன்”

ஸ்ருதி தன் மனதிற்குள் “இவனா, காலங்காத்தாலே வா”

அபிமன்யு,”என்ன சத்தத்தையே காணோம்”

ஸ்ருதி,”யஸ் சார்”

அபிமன்யு,”குட், நீ என்ன பண்ற, இன்னும் அரைமணிநேரத்துல, அதாவது சரியா ஆறு மணிக்கு மரினா பீச்க்கு வந்திர்ற” என்றான்.

ஸ்ருதி,”சார், எனக்கு தூக்கமா வருது, நான் வேணும்னா சாயிங்காலம் ஆறு மணிக்கு வரட்டா” என்று கேட்க, கடுப்பான அபி

அபிமன்யு,”நான் என்ன உன் லவர்ஆஹ உன் இஷ்டத்துக்கு டைம் பிக்ஸ் பண்ற, நான் உன்னோட பாஸ் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு கேள்வி கேக்காம வரணும் புரியுதா”

ஸ்ருதி,”ஆமா அப்டியே இவர லவ் பண்ணிட்டாலும் தான், சரியான சாமியாரு, டேய் பேசாம நீ boxing பண்றதெல்லாம் விட்டுட்டு இமய மலைக்கு போய் தவம் பண்ணு உன் மூஞ்சி அதுக்கு தான் சூட் ஆகும்” என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டாள், பின்பு அபியிடம்

ஸ்ருதி,”யஸ் சார், இதோ சீக்கரமா வந்துரேன்” என்று கூறிவிட்டு, ‘கடவுளே இது என்ன பா புது சோதன’, என்று புலபினாள், பிறகு தன் தோழிகளிடம் விஷயத்தை கூறிவிட்டு, வேகமாக மரினா கடற்கரைக்கு வந்தடைந்தாள் . ஆனால் அவள் வந்த நேரம் ஆறு மணி அல்ல 6:30 AM, சுற்று முற்றும் பார்த்த பொழுது சற்று தொலைவில் அபி கையில் நாயோடு தன்னையே முறைத்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தவள், தனக்குள்,’ என்ன செய்ய போறனோ” என்று கூறி விட்டு அவன் அருகில் சென்றாள்,அவனோ அவளை பார்த்து,

அபிமன்யு,”நான் எப்போம் வர சொன்னேன் நீ எப்போ வந்திருக்க, அப்போம் ஏன் வார்த்தைக்கு மரியாத இல்ல அப்டித்தான”

ஸ்ருதி,”யஸ் சார், நோ சார், சாரி சார்”

அபிமன்யு,”என்ன நக்கலா”

ஸ்ருதி,”நோ சார், இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிருங்க”

அபிமன்யு,”நோ யு ஆர் லேட்”

ஸ்ருதி,”ப்ளீஸ் சார்”

அபிமன்யு,”ஒகே இது தான் லாஸ்ட், சரியா, நான் என் வொர்கௌட் முடிக்குறதுக்குள்ள,நீ போய் என் ஹெக்டர வாக்கிங் கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வா” என்று கூறினான், ஹெக்டர் வேற யாரும் இல்ல, நம் அபியின் செல்ல நாய் குட்டி, ஹெக்டர் பார்ப்பதற்கு, நல்லா அழகா புஸ்புஸ்ன்னு இருக்கும் . ஸ்ருதிக்கு கோபம் வந்து, அபியை பார்த்து

ஸ்ருதி,”வாட் டூ யு மின், நான் நாயை கூட்டிட்டு வாக்கிங் போகணும்மா” என்று கேக்க ஹெக்டர் ஸ்ருதியை பார்த்து குளைக்க ஆரம்பித்தது

அபிமன்யு,”உனக்கு எவ்வளவு தயிரியம் இருந்தா, என் செல்லத்த பாத்து நாயின்னு சொல்லுவ, பாரு அதுக்கு கோபம் வருது, வா வந்து உடனே மன்னிப்பு கேளு, கம் ஆன் சீக்கரம் வந்து மன்னிப்பு கேளு”

ஸ்ருதி,”நாய நாயின்னு சொல்லாம வேற எப்டி சொல்லுவாங்க”

அபிமன்யு,”நீ மறுபடி மறுபடி என் ஹெக்டர நாயின்னு சொல்ற, அதுக்கு கோபம் வந்துச்சு, அப்புறம் உன்னை என்ன பண்ணும்னே தெரியாது” என்று கூறினான்

ஸ்ருதி,”சார் இதெல்லாம் ரொம்ப டூ மச், என்னாலா இதெல்லாம் பண்ண முடியாது, நீங்க வேணும்னே, என்ன பழிவாங்குற மாதிரி தெரியுது, இப்டி ஒரு வேல எனக்கு வேண்டாம் சார், நான் வேலைய விட்டு போயிர்ரேன்” என்றாள்

அபிமன்யு,”ஒகே அப்போம் 10 lakhs செட்டில் பண்ணிட்டு, வேலைய விட்டு நின்னுக்கோங்க, எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல”

ஸ்ருதி,”ஏன் நான் உங்களுக்கு 10 lakhs குடுக்கணும்”

அபிமன்யு,”நீங்க contract அஹ சரியா படிக்கலையா”

ஸ்ருதி,” ontractல என்ன இருந்துச்சி”

அபிமன்யு,”BSc கோல்ட் மெடலிஸ்ட்க்கு ஒரு contract பேப்பர படிச்சி பார்த்து சய்ன் பண்ணனும் இங்கர பேசிக் knowledge கூட இல்லையேன்னு நினைக்கும் போது ரொம்ப வேடிக்கையா இருக்குங்க”

ஸ்ருதி,”என்ன உளர்றீங்க நான் இதெல்லாம் நம்பமாட்டேன்” என்று கூறிய ஸ்ருதியை பார்த்து அபி,

அபிமன்யு,”நீங்க நம்பமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், அதான் கையோட contract பேப்பரையும் கொண்டு வந்திருக்கேன், இந்தாங்க ஹ்ம்ம் வேண்டாம், நீங்க கஷ்ட படுவீங்க, நானே இதுல என்ன இருக்குன்னு வாசிச்சிர்ரேன் என்று” ஸ்ருதியாகிய நான் sharthi அகாடமியில் 2 வர்ஷம் வேலை பார்பதற்கு சம்மதிக்கிறேன், ஒருவேளை இந்த 2 வர்ஷத்துக்குள் நான் இந்த வேலையை விட்டு விலக நினைத்தாலோ, இல்லை நான் ஏதும் தவறு செய்து கம்பெனி என்னை பணி நீக்கம் செய்தாலோ, கம்பெனிக்கு நஷ்ட ஈடாக ருபாய் 10 லக்க்ஷம் வழங்குகிறேன் என்றும், ஒரு வேளை பணம் குடுக்கவில்லை என்றால் கம்பெனி என் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளலாம், இதில் யாரின் வற்புறுத்தலும் இல்லை, நானே என் முழு மனதோடு சம்மதிக்கிறேன் என்று இந்த contract பேப்பரில் என்னுடைய கையப்பம் இடுகிறேன், இப்படிக்கு எ.ஸ்ருதி” என்று வாசித்து முடித்தான்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ருதி, வெடுக்கென அவன் கையில் இருந்த பேப்பரை வாங்கி, படித்து பார்த்து தான் செய்த முட்டாள்தனத்தை தெரிந்து கொண்டாள் .என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த ஸ்ருதியை பார்த்து அபி,

அபிமன்யு,”உங்கள பாத்தாலும் எனக்கு பாவமா தான் இருக்கு, இப்போம் என்ன பண்ணலாம், சரி நான் உனக்கு மூணு option தரேன், ஒன்னு நீ நான் சொல்றதெல்லாம் கேட்டுட்டு என்கிட்ட 2 வர்ஷம் வேல பாரு, ரெண்டாவது, வேலை பார்க்க இஷ்டமில்லனா அக்ரீமெண்ட் படி 10 லக்க்ஷம் பணத்த குடு, இந்த ரெண்டுமே முடியாதுனா, மூணாவதா ஒன்னு இருக்கு, மீடியா முன்னாடி என்கிட்ட கால்ல விழுந்து மன்னிப்பு கேளு” ஸ்ருதி உடனே

ஸ்ருதி,”இப்போ என்ன சார் நான் நம்ம ஹெக்டர வாக்கிங் கூட்டிகிட்டு போகணும் அப்படி தான, நீங்க நிம்மதியா போய் exercise பண்ணுங்க, நான் ஹெக்டர பார்த்துக்கறேன், ஹெக்டர் வா வா வாடா செல்லம் நாம வாக்கிங் போலாம்” என்று கூறி விட்டு தன் மனதிற்குள் ‘இப்படி பண்ணிட்டியே டா, எனக்கு மட்டும் ஷக்தி இருந்துச்சி உன்னை நான் அப்டியே கடல்ல தூக்கி போட்ருவேன்’ என்று புலம்பிக்கொண்டாள்.

அபிமன்யு,”ஸ்ருதி பார்த்து போங்க, ஹெக்டர் பத்றோம், அவனுக்கு அடிபட்றபோது சரியா” என்று கூறி சிரிக்க

ஸ்ருதி,”தன் மனதிற்குள் சிரிக்க வா செய்ற, இரு டா இரு உன்ன உன் வழியிலே மடக்குரேன்”என்று கூறி விட்டு நாய், இல்லை இல்லை நம் ஹெக்டரின் பின்னால் சென்றாள், இல்லை ஓடினாள்.

ஸ்ருதியின் நிலையை பார்க்க அபிக்கு சிரிப்பாக இருந்தது, ஒருவழியாக ஸ்ருதி வாக்கிங் முடித்துவிட்டு, ஹெக்டரை இல்லை ஹெக்டர் தான் ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வந்தது, ஏன் என்றால் ஸ்ருதி அந்த அளவுக்கு சோர்ந்து போய் இருந்தாள், பத்தா குறைக்கு, ஆதவன் தன் வேலையை காட்ட, வெயிலின் சூடு தாங்காமல் தலை சுற்றி கீழே விழப்போனவளை, அபி தன் கைகளால் தாங்கிக்கொண்டான் .

பிறகு அபி,

அபிமன்யு,”ஏ ஸ்ருதி ஆர் யு ஒகே என்று தட்டினான்”, சில நொடிகளில் ஸ்ருதி கண் விழித்தாள், அப்றோம் அபி

அபிமன்யு,”என்ன ஸ்ருதி இதுக்கே இப்படி சோர்ந்துட்ட இன்னும் எவ்வளவு இருக்கு” என்று அவளை பார்த்து கண்ணடித்து விட்டு அப்பப்பா எவ்வளவு வெயில் என்று கூறிவிட்டு, தனது வலது கரத்தால் அவளை தாங்கிக்கொண்டு, இடது கரத்தால் தனது கூலிங் கிளாஸ்ஐ அணிந்து கொண்டான்,பிறகு ஸ்ருதியை பார்த்து புன்னகைத்துகொண்டே,

அபிமன்யு,”நான் உன்ன இப்படி பிடிச்சிருக்குறது, உனக்கு அப்படியே தொட்டில்ல தூங்கற மாதிரி இருக்கா என்ன, நான் வேணும்னா இப்டியே உன்ன தாலாட்டி தூங்க வைக்கட்டா” என்று கேட்க, ஸ்ருதி தன்னை அவன் கிண்டல் செய்வது புரியாமல் முழிக்க, அதற்கு அபி,

அபிமன்யு,”என்ன அப்பிடி பார்க்குற எழுந்திரிடி” என்று அதட்டினான் உடனே,கோபம் தலைக்கேறிய ஸ்ருதி அபியை பார்த்து,

ஸ்ருதி,”ஹலோ Mr அபிமன்யு நான் ஒன்னும் என்ன தாங்கி பிடிங்கன்னு சொல்லல, நீங்களா பிடிச்சிட்டு, இப்போ என்னை திட்றீங்களா” என்று கேட்க, அபிக்கு கோபம் வந்து ஸ்ருதியை பார்த்து,

அபிமன்யு,”உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று கூறி”

அவள் எதிர்பாக்காத நேரத்தில் அவளை தொப்பென்று கீழே போட்டான், பிறகு ஸ்ருதி அபியை திட்டிக்கொண்டே, கஷ்டப்பட்டு எழும்பி, அபியை, தாமரை மொட்டு போன்ற தனது பெரிய கண்கள்,இதழ் விரிந்தது போல நன்கு விரித்து, முறைத்து பார்த்தாள், அபி சற்று நேரம் அவளது பார்வையிலே மூழ்கிருந்தான்.

ஸ்ருதி தனக்குள் ‘இவனுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி பார்க்குறான்’ சரி கூப்பிட்டு தான் பார்ப்போம் என்று,அபியிடம் அதே பார்வையோடு

ஸ்ருதி,”சார்” என்று கூறி முடிப்பதற்குள், அபி ஸ்ருதியின் அருகில் வந்து தனது ஆள்காட்டி விரலை, பட்டை விட மென்மையான அவளது இதழ் மீது வைத்தான்.

அவனது செய்கை ஒன்றும் விளங்காமல் ஸ்ருதி முழிக்க, அவளிடம் அபி,

அபிமன்யு,”இப்படி பெரிய பெரிய கண்ணவச்சு, உருட்டி உருட்டி பார்த்தா நான் அப்படியே நடுங்கிருவேன்னா என்ன ஹ்ம்ம், தலையில மண்ணு ஒட்டிருக்கு தொடச்சிட்டு சீக்கரமா வீட்டுக்கு போயிட்டு கரெக்ட் டைம்க்கு ஆபீஸ் வந்து சேரு போ” என்று கூறிவிட்டு, ஸ்ருதி தன்னை கோபமாக பார்க்கிறாள் என்பதை தெரிந்துகொண்டு, ஓர கண்ணால் அவளை பார்த்து லேசாக சிரித்து விட்டு, ஹெக்டரை தன்னோடு அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் .

ஸ்ருதி,”சரியான pshyco கிட்ட வந்து இப்டி மாட்டிகிட்டேன்னே, எப்போ கத்துவான், எப்போ சிரிப்பான்னே தெரியலயே, ஆண்டவா என்ன காப்பாத்து பா” என்றாள்,பிறகு ரூமிற்கு வந்து தான் செய்த முட்டாள்தனத்தை தன் தோழிகளிடம் கூறினாள்.

காவியா,”ஒரு பேப்பர்ல சய்ன் பண்றதுக்கு முன்னாடி வாசிக்கணும்ன்ற புத்தி கூடவா இல்ல” என்று கோபப்பட

ஸ்ருதி,”தப்பு நடந்து போச்சு, இனிமே என்ன பண்ண முடியும், ரெண்டு வர்ஷம் தான சமாளிச்சரலாம்”

சுவாதி,”எனக்கு ஒன்னு தோணுது”

ஸ்ருதி,”என்ன”

சுவாதி,”பேசாம சார் கிட்ட மன்னிப்பு கேட்டுறேன், எல்லாம் ப்ராப்ளமும் முடிஞ்சிரும்”

ஸ்ருதி,”எனக்கு அது தெரியாதா, தப்பு பண்ணாம என்னால சாரி சொல்ல முடியாது, பேப்பர வாசிக்காம சய்ன் பண்ணினது என் தப்பு ஸோ, இதுக்கான தண்டணைய நான் அனுபவிச்சு தான் ஆகணும், இதுலாம் எனக்கு சப்ப மேட்டர் நீங்க கவலபடாதிங்க” என்று கூற,ஆனால் இருவரும் சோகமாக இருக்க,

ஸ்ருதி,”ப்ளீஸ் டி இப்படிலாம் பார்க்காதிங்க, இப்போ நீங்க மட்டும் சிரிக்கல, அப்புறம் நான் உங்ககிட்ட பேசமாட்டேன்” என்று கூற அனைவரும் இயல்பு நிலைக்கு மாறினர், பிறகு ஸ்ருதி,”நான் சீக்கிரம் போகணும் இல்லனா அதுக்கும் எதாவது சொல்லுவான்” என்று கூறிவிட்டு தயாராகி, அகாடமி வந்தடைந்தாள் …

ஸ்ருதி எல்லா எடுபுடி வேலையையும் ஒரு வழியாக முடித்துவிட்டு, அயர்ந்து போய் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அப்பொழுது தான் கண்மூடினாள், அதற்குள் அபிக்கு தன் மூக்கில் வேர்க்க, அவளை தேடி கொண்டு அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான், அவன் வந்தது கூட தெரியாமல் ஸ்ருதி உறங்கிக் கொண்டிருந்தாள், அபியை கேட்கவா வேணும், உடனே அவன்,”தூங்கவா செய்யற, இப்போ பாரு” என்று கூறிவிட்டு தனது லீலையை தூடங்கினான், அவளது அருகில் வந்து, அவளது முடியை வைத்து அவளது கழுத்தில் கிச்சு கிச்சு மூட்டினான், தன் மேல் எதோ ஊறுவதை போல் இருப்பதாக உணர்ந்த ஸ்ருதி தூக்கத்தில் இருந்து எழும்பி அம்மா அப்பா என்று கத்தினாள், உடனே அபி,”கரப்பான் பூச்சி” என்று சொல்லி முடிப்பதற்குள், ஸ்ருதி,”என்ன கரப்பான் பூச்சியா எங்க எங்க”, என்று மறுபடியும் கத்தினாள், அபி,”மாதிரி இருந்திச்சு, ஆனா இல்லா” என்று casual ஆக கூறினான், ஸ்ருதி அபியை பார்த்து முறைக்க, அபிமன்யு,”தூங்னது போதும் போய் எனக்கு ஜில்லுனு மில்க் ஷேக் கொண்டுவா” என்றான், ஸ்ருதி தனக்குள்,”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானடா நல்லா கொட்டிக்கிட்ட, மறுபடியும் கேட்குற” என்றாள், உடனே அபி,”மசமசன்னு நிற்காத போ சீக்கரம் கொண்டுவா நா மொட்ட மாடில தான் இருப்பேன், அங்கயே கொண்டு வந்திரு” என்றான் .

ஸ்ருதி,”சரி சார்” என்று கூற, அபி ஸ்ருதியை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் .

ஸ்ருதி அவனுக்காக மில்க் ஷேகை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள், அப்பொழுது அபி அங்கே நிம்மதியாக நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன் கண்ணை மூடி பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான், இந்த முறை ஸ்ருதிக்கு சாதகமாக அமைய, ஸ்ருதி தனக்குள்,”ஏன் தூக்கத்த கலச்ச உனக்கு மில்க் ஷேக் கேக்குதா, இப்போ பாரு டா” என்று கூறி அவன் அருகில் வந்து வேண்டும் என்றே அவன் காலில் தட்டி விழுவதை போல நடித்து, மில்க் ஷேகை கீழ போட்டாள்,

அது சிதறியதில் அவனது கருப்பு நிற ஷு, வெள்ளை நிறமாக மாறியது, அந்த நிகழ்வுக்கு பின் கண்விழித்த அபி ஸ்ருதியை பார்க்க, ஸ்ருதியோ எதுவும் தெரியாததை போல அவனிடம்,”அச்சச்சோ சாரி சார் கவனிக்காம வந்ததுல உங்க கால் தட்டி, மில்க் ஷேக்க கீழ போட்டுட்டேன்” என்று அப்பாவி போல கூறினாள்.

இதெல்லாம் நம்ம அபி கிட்ட நடக்குமா என்ன, அபி தனக்குள்,”ஒ மேடம் பழிவாங்கரிங்களோ” என்று கூறிவிட்டு, ஸ்ருதியிடம்,”இட்ஸ் ஒகே, ஷு வ clean பண்ணுங்க என்றான்” என்றான்

ஸ்ருதி,”நானா” என்றாள்

அபிமன்யு,”நீதானே என் ஷுவ அழுக்காக்கின, அப்போ நீ தான் clean பண்ணனும்” என்றான்

ஸ்ருதி,”முடியாது” என்றாள்

அபிமன்யு .”excuse மீ நா உன்கிட்ட முடியுமா முடியாதான்னு கேட்கல சரியா” என்றான்

ஸ்ருதி,”என்னால முடியாது,நீ சொல்றத கேட்க முடியாது, இப்போ என்ன பண்ணுவ, என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ உன்ன பார்த்தா எனக்கு ஒன்னும் பயம் இல்ல” என்றாள்

அபி தன் நாற்காலியில் இருந்து எழும்பி ஸ்ருதியை பார்த்து,”ஸோ உனக்கு என்ன பார்த்தா பயம் இல்ல அப்படித்தான” என்று கூறிக்கொண்டே அவள் அருகில் வந்தான், அவளோ அவன் தன் அருகில் வர வர பின்னால் சென்றுக்கொண்டே அவனிடம்,”ஆமா பயம் இல்ல” என்றாள், மீண்டும் அவன் அவளை நெருங்கிக்கொண்டே அவளிடம்,”நிஜமா பயம் இல்ல” என்றான் .

அவளும் பின்னால் பார்க்காமலே மாடியின் விளிம்பின் வரை சென்று “ஆமா எனக்கு நிஜமாவே உன் மேல பயம் இல்ல போதுமா” என்றாள், உடனே அபி,”ஒகே அப்போ சரி” என்று கூறி பாதி திரும்பிவிட்டு, பிறகு மீண்டும் ஸ்ருதியின் பக்கம் பார்த்து அவள் எதிர்பாக்காத நேரத்தில், மிக அருகில் அவள்முன் வந்து,”பூம்” என்று பயம் முறுத்தினான், அவளோ எதிர்பாக்காத அந்த நிகழ்வினால், பயந்து போய் தன் நிலை தடுமாறி கீழே விழப்போனாள், ஆனால் தக்க நேரத்தில் அவள் கீழே விழாமல் அபி அவளது கரங்களை பற்றினான், இருந்தும் ஸ்ருதியின் கால்களோ விளிம்பில் அப்பவோ இப்பவோ என்பதை போல தொடுத்துக்கொண்டு இருந்தது, ஸ்ருதி அதிர்ந்து போய் தன் கண்களை இருக்க மூடிக்கொண்டாள், அபி அவளிடம்,”ஸோ இப்பவும் உனக்கு என் மேல பயமா இல்லையா” என்று கேட்டான் . அதற்கு அவள் தடுமாறிய குரலில், “இல்ல” என்றாள்.அபி,”வாட் இப்போ நான் நினச்சா உன்ன என்ன வேணும்னாலும் பண்ண முடியும், இப்போ நான் உன் கைய விட்டா உன் நிலைமை என்னனு உனக்கு தெரிஞ்சும், உனக்கு என்ன பார்த்தா பயமா இல்லையா” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் .

அதுவரை தன் கண்களை மூடி இருந்த ஸ்ருதி,தனது மலர் போன்ற விழிகளை திறந்து, அபியின் கண்களை நேருக்கு நேராக பார்த்து

ஸ்ருதி,”இல்ல உன்னால அப்படி பண்ண முடியாது” என்றாள் .

ஸ்ருதியின் இந்த பதிலை சற்றும் எதிர்பாக்காத அபி அவளது கண்களில் தன் மீதுள்ள நம்பிக்கையை அறிந்தவனாய், சில நொடிகள் அவளையே பார்த்துவிட்டு, அவளை தன் பக்கமாக இழுத்தான், அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள், பின்பு இருவரும் தங்கள் நிலைக்கு வந்தனர், ஆனால் ஸ்ருதி சற்று பயத்துடனே காணப்பட்டாள், அப்போது அபி அவளிடம்,”உனக்கு எப்படி தெரியும் நான் உன்ன கீழ விழ விட மாட்டேன்னு” எனக்கேட்டான்

ஸ்ருதி எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, அபிக்கு கோபம் வந்து அவளது இரு கைகளை பற்றிக்கொண்டு,”உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்” என்று அழுத்தமான குரலில் கேட்டான், ஸ்ருதி அழுதுகொண்டே அவனிடம் .”because ஐ trust யு, யு hate மீ பட் யு CAN’T hurt மீ” என்றாள் .

ஸ்ருதியின் இந்த பதில் அபிக்குள் ஒருவித உணர்வை ஏற்படுத்தியது, அபி எதுவும் கூறாமல் அமைதியாக நின்றான், அப்போது ஸ்ருதி,”இப்போ என்ன நான் இந்த ஷுவ துடைக்கணும், அப்படி தான,பண்றேன்” என்று கீழே குனிந்தவளை தன் கரங்கள் கொண்டு எழுப்பி,”போ கீழ போய் வேற வேல இருந்தா பாரு” என்றான், ஸ்ருதி எதுவோ பேச வர அபி,”நான் உன்னை போன்னு சொன்னேன் சரியா” என்றான், உடனே ஸ்ருதியும் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் போவதையே பார்த்துகொண்டிருந்த அபி, தன் கன்னத்தில் படிந்துள்ள அவளது கண்ணீர் துளியை தன் விரலில் ஏந்திக்கொண்டு, அதை பார்த்து புன்னகைத்தான் ……

மறுநாள் அபி என்றும் இல்லாது சற்று உற்சாகமாக, தன் இதழின் ஓரம் சின்ன புன்னகையையும் ஏந்தி கொண்டு அகாடமிக்கு கிளம்பினான், அபியின் இந்த மாற்றம் சகுந்தலாவிற்கும், ஆர்த்திக்கும் மகிழ்ச்சியை அளித்தது ..

அங்கே அகாடமியில் அஜய் ஸ்ருதியிடம் வந்து,

அஜய்,”ஹாய், குட் மார்னிங்” என்றான்

ஸ்ருதி,”ஹாய்  குட் மார்னிங்” என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க துடங்கினாள், மீண்டும்

அஜய்,”ஸ்ருதி நீங்க ரொம்ப tiredஆஹ தெரியறீங்க, இந்தாங்க இந்த ஜூஸ்அஹ குடிங்க” என்று தனது கையில் இருந்த ஜூஸ் டின்னை கொடுத்தான்,முதலில் தயங்கிய ஸ்ருதி பிறகு, வாங்கினாள்.

பிறகு அஜய் ஸ்ருதியிடம்,

அஜய்,”ஸ்ருதி உங்க விரல்ல போட்ருக்க ரிங் ரொம்ப சிம்பிள்லா உங்கள மாதிரியே அழகா இருக்கு” என்று கூறினான், அதற்கு ஸ்ருதி லேசாக புன்னகைத்துவிட்டு,அஜயிடம்

ஸ்ருதி,”இது ஏன் அப்பா அம்மா நியாபகமா வச்சிருக்கேன், இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆன ரிங்”என்று கூறி சோகமானாள். உடனே அஜய் ஸ்ருதியை சிரிக்க வைக்க, காமெடி வீடியோ ஒன்றை காட்ட, அஜய்யும், ஸ்ருதியும் விழுந்து விழுந்து சிரித்தனர், இதை அனைத்தையும் ஸ்ருதியின் அருகில் நின்று கவனித்து கொண்டிருந்த அபியின் இதழில் இருந்த சிரிப்பு போய், கண்கள் அனலாய் கொதித்தது,

தன் அருகில் அபி இருப்பதை அறியாமல் ஸ்ருதி தன் கையில் இருந்த ஜூஸ் டின்னை திறக்க முயற்சிக்கும் பொழுது,தவறுதலாக அது அபியின் முகத்தின் மீது பட, அனைவரும் அபி என்ன செய்ய போகிறான் என்ற அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்தனர், ஸ்ருதி அபியிடம்

ஸ்ருதி,”சாரி தெரியாம இல்ல கவனிக்காம பண்ணிட்டேன்” என்று கூறி முடிப்பதற்குள், கோபத்தோடு அபி ஸ்ருதியின் அருகில் வந்து, அவளது துப்பட்டாவை கொண்டு தன் முகத்தை துடைத்துவிட்டு,ஸ்ருதியிடம்

அபிமன்யு,”சாரி தெரியாம இல்ல கவனிக்காம பண்ணிட்டேன்” என்றான் பிறகு ப்யூன்னிடம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினான், அவர் தண்ணீரை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார், அதை பெற்றுக்கொண்ட அபி, ஸ்ருதியை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துக்கொண்டே தண்ணீரை அருந்தினான், கோபத்தில் இருந்த ஸ்ருதி அபியை பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள், யாரும் எதிர்பாராத நேரத்தில் அபி தண்ணீரை ஸ்ருதி தலையின் மீது அபிஷேகம் செய்தான் அதிர்ச்சியில் ஸ்ருதி அபியை பார்த்து முறைக்க, அபி கண்ணடித்துவிட்டு தன் கையில் இருந்த கிளாசை கீழே போட்டு உடைத்தான்,

பின்பு அஜயை பார்த்து,”அச்சச்சோ, அஜய் நீங்க என்ன பண்றீங்க இதை இப்பவே கிளீன் பண்றீங்க சரியா” என்றான் .

அஜய்,”வாட் நான் இதை களின் பண்ணனும், நெவர்” என்றான்

அபி,”அப்போம் இங்க இருந்து கிளம்பு” என்று கோபமாக கூறினான்

அஜய்,அபியை பார்த்து முறைக்க

அபி,”நான் சொன்னத செஞ்சா நீ இங்க இருக்கலாம்,இல்லனா போய்ட்டே இரு” என்று தன் புருவத்தை உயர்த்தி கூறினான்

அஜய்,”இதோ இப்போ கிளீன் பண்ணிர்ரேன்” என்றான்

அபி,”தட்’ஸ் sounds பெட்டெர்” என்று கூறிவிட்டு, கோபமாக தன் அறைக்குச்சென்றான்,ஸ்ருதி உடனே அபியின் அறைக்கு சென்று,

ஸ்ருதி,”ஏன் இப்படி பண்ணிங்க, நா தான் சாரி சொன்னேன்ல” என்று கூற . அபிக்கு கோபம் வந்து,அவளது இரு கரங்களையும் பற்றிக்கொண்டு, நான் நீ வேலை பார்க்குறதுக்கு தான் சம்பளம் தரேன், சும்மா யார்கிட்டயும் நின்னு பல்லக்காட்டுரதுக்கில்ல என்ன புரியுதா, அப்றோம் இது என்னோட ஆபீஸ் நான் என்ன வேணும்னாலும் செய்வேன், ஏன் செஞ்ச எதுக்கு செஞ்சன்னு இனிமே கேள்வி கேளு அப்றோம், கேள்வி கேட்க வாய் இல்லாம பண்ணிருவேன், போ இங்கிருந்து .என்று கத்தினான்.

தனக்கே தெரியாமல் அபி காதலின் அடுத்த படியான பொறாமை என்னும் சிறையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றான் . தவிப்பு கூட ஒருவகையான சுகம் தானே

பயந்து போன ஸ்ருதி பதற்றத்தில் திரும்ப, தனது வலது புறத்தில் இருந்த, அலெக்சாண்டர் வாள் ஏந்தி கம்பீரமாக நிர்ப்பது போல உள்ள சிலையை தவறுதலாக தட்டிவிட அது தலைவேறு கால்வேறானது ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அபியின் கோபம் மறுபடியும் உச்சத்தில் ஏற, ஸ்ருதி

ஸ்ருதி,”தெரியாம பண்ணிட்டேன், சாரி,நான் நாளைக்கு ஆபீஸ் வரும் போது புதுசா வாங்கிட்டு வந்திரேன்” என்று கூறினாள்.

அதற்கு அபி,

அபிமன்யு,”ஒ அப்படியா, எங்க போய் வாங்குவீங்க”

ஸ்ருதி,”அதான் நம்ம அண்ணாச்சி கட இருக்குல அங்க எல்லாமே கடைக்கும், நான் ரெகுலர் கஸ்டமர்ஆஹா எனக்கு discount கூட குடுப்பாங்க”

அபிமன்யு,”வாவ், பிரில்லியன்ட், பட் ஸ்ருதி, பார் யுவர் கைண்ட் information, இது உங்க அண்ணாச்சி கடைய்லலாம் கடைக்காது”

ஸ்ருதி,”அப்போ எங்க கடைக்கும்ன்னு சொல்லுங்க, நான் நாளைக்கு வரும் போது வாங்கிட்டு வந்திரேன்”

அபிமன்யு,”அப்படியா”

ஸ்ருதி,”ஆமா சார்”

அபிமன்யு,”ஸ்ருதி இது எங்க கிடைக்கும் இங்கறது இருக்கட்டும், இதோட விலை என்னனு தெரியும்மா” என்று கேட்க, ஸ்ருதி தெரியாது என்பதை போல் தலையை ஆட்ட

அபிமன்யு,”1,30,000″

ஸ்ருதி,”என்ன சார் சொல்றீங்க, யாரோ உங்கள நல்ல ஏமாத்திருக்கங்கனு நினைக்கிறேன்”

அபிமன்யு,”சட் அப்” என்று உரக்க கத்தினான்,

ஸ்ருதி,”நான் கொஞ்சம் கொஞ்சமா உங்க பணத்தை தந்திடுறேன்” என்று பயத்தோடு கூறினாள்

அபிமன்யு,”பணமா, யு, இதோட value என்னன்னு உனக்கு தெரியுமா, அது சரி இதெல்லாம் உன்ன மாதிரி ஒரு முட்டாள் கிட்ட எதிர்பாக்குறது ரொம்ப தப்பு “என்று கூற ஸ்ருதியின் கண்கள் நீரால் நிரம்பியது, பிறகு அபி இந்த பணத்த என்னால ஒரு மணி நேரத்துல சம்பாதிக்க முடியும், இத மாதிரி ஆயிரம் statueவ என்னால வாங்க முடியும் ஆனா இது கோடி ரூபா குடுத்தாலும் கடைக்காது, இதோட value உனக்கு தெரியுமா, நான் பிரஸ்ட் டைம் ஸ்கூல் லெவல் boxingல பிரஸ்ட்ஆஹ் வந்ததுக்கு, என் அப்பா எனக்காக ஸ்பெஷல்லா இன்டர்நேஷனல் ஆர்ட் exhibitionல இருந்து வாங்கிட்டு வந்தாரு, இத என்கிட்டே குடுக்கும் போது அவர் என்ன சொன்னாருன்னு தெரியுமா, நானும் அலெக்சாண்டர் தி கிரேட் மாதிரி என் லைப் முழுக்க ஜெயிச்சிட்டே இருக்கணும் சொன்னாரு, அவரு வேனும்னா இப்போம் என் கூட இல்லாம இருக்கலாம், ஆனா அவர் சொன்ன வர்த்த இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு, இது என் அப்பா எனக்காக கடைசியா வாங்கி கொடுத்தது, அவர் எங்கள விட்டு போனப்பறம் எல்லாமே எங்கள விட்டு போய்டுச்சு, எவ்வளவோ கஷ்ட பட்டோம், ஆனா அப்போம் கூட இத நான் யாருக்கும் விட்டு குடுக்கல, அவ்வளவு பத்ரமா நான் இத பாத்துகிட்டு வந்தேன் அதபோய் இப்டி பண்ணிட்டியே,இந்த தடவ நா உன்ன மண்ணிகறதா இல்ல, நமக்கு புடிச்சவங்க நமக்காக விட்டுட்டு போன பொருள் நம்ம கண்ணு முன்னாடியே இல்லாம போனா அதோட வலி எப்டி இருக்கும்ங்கரத நா இப்போம் உனக்கு புரிய வைக்கறேன், நீ அந்த அஜய் கிட்ட என்ன சொலிட்டு இருந்த உன் விரல்ல இருக்குற மோதரம் உன் அப்பா அம்மா நியாபகமா போட்ருக்கேன்னு சொன்னல, ஹ்ம்ம்”

அபிமன்யு,”remove இட், remove இட் ரைட் நவ்” என்று கத்தினான்,

ஸ்ருதி,”ப்ளீஸ் சார், நா தெரியாம பண்ணிட்டேன், மோதரம் மட்டும் கேட்காதிங்க சார் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் ஸ்ருதி

அபி எதையும் தன் காதில் வாங்காமல், பலவந்தமாக ஸ்ருதியின் விரலில் இருந்த மோதிரத்தை உருவினான், பிறகு வருணனை அழைத்து,”இந்தா வருண், இத கொண்டு போய் எங்கயாவது வித்துரு” என்று கூறி அதை அவனிடம் ஒப்படைத்தான்,அவனும் சரி என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றான், ஸ்ருதி எவ்வளவோ தடுக்க முயற்சித்தும், அவளால் முடியவில்லை, பிறகு, ஸ்ருதி அழுதுகொண்டே அபியை பார்க்க

அபிமன்யு,”கெட் அவுட் ரைட் நவ்” என்றான், ஸ்ருதியும் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள்.

அபி உடைந்து போன துண்டுகளை தன் கையில் ஏந்தி கொண்டு, சாரிபா என்னால உங்களையும் காப்பாத்த முடியல, நீங்க எனக்காக விட்டுட்டு போனதயும் காப்பத்தமுடியல, என்று தன் தந்தையை நினைத்து அழுதான் . அதன்பின் அபி உடைந்து போன துண்டுகளை எல்லாம் ஒரு டப்பாவில் எடுத்து வைத்தான் பிறகு, ப்யூன்னை வரச்சொல்லி, டப்பாவை பத்திரமாக தன் கார்ரில் வைக்க சொன்னான் . இங்கே அபியின் நிலைமை இதுவென்றாள், ஸ்ருதியின் நிலைமை படு மோசமாக இருந்தது, அழுது அழுது அவள் முகமே சிவந்து போய் இருந்தது . ஸ்ருதியிடம் அவ்வாறு நடந்து கொண்டானே தவிர, அவனால் ஒரு நிமிடம் கூட தன் அறையில் இருக்க முடியவில்லை, அவளை பற்றி அறிந்துகொள்வதற்காக, அவளை தேடி சென்றான், சற்று தொலைவில் இருந்து அவள் தேம்பி தேம்பி அழுது கொண்டிருப்பதை கண்டு அவன் முகம் வாடியது . இதை கவனித்த வருண் அபியின் அருகில் வந்து,

வருண்,”சார், எனக்கெனவோ அவ வேணும்னே செஞ்ச மாதிரி தெரியல சார்,பாக்குறதுக்கே பாவமா இருக்கு” என்றான்

அபிமன்யு,”ஹ்ம்ம், அந்த ரிங் வித்துடியா”

வருண்,”இல்ல சார், இந்தாங்க, நீங்க எப்டியும் மனசு மாறி கேப்பிங்கனு தெரியும்” என்றான்

அபிமன்யு,”அப்றோம் ஏன் வேடிக்க பாக்குற, போ போய் குடுத்துட்டு வா அத அவங்க அப்பா அம்மா நியாபகமா வைச்சிருக்கேன்னு சொன்னா” என்றான்

வருண்,”நானா நீங்களே போய் குடுங்களேன், அப்போம் உங்க மேல ஒரு நல்ல அபிப்பராயம் வரும்” என்றான்,அதற்கு அபி,

அபிமன்யு,”நான் குடுத்தா ஏன் மேல இருக்குற கொஞ்ச பயமும் போயிரும், முதல்ல எனக்கு ஒன்னு சொல்லு நான் எதுக்கு என்ன அவகிட்ட நல்லவனா காட்டிக்கணும், அது ஒன்னும் என் வேல இல்ல, நான் குடுத்தேன்னு தெரியவே கூடாது சரியா, போ நீயா எனக்கு தெரியாம குடுக்கற மாதிரி குடுத்துட்டு வா” என்றான்,

வருண் ஸ்ருதியிடம் சென்று,

வருண்,”கண்ண துடச்சிக்கோங்க, உங்க மோதிரம் எங்கயும் போகல” என்று மோதரத்தை எடுத்து ஸ்ருதியிடம் கொடுத்தான்

ஸ்ருதி சந்தோஷத்துடன், அதை வாங்கி தன் விரலில் போட்டுக்கொண்டாள்,பிறகு வருணை பார்த்து,

ஸ்ருதி,”சாரா தந்தாங்க” என்று கேட்டாள்

வருண்,”இல்லங்க உங்கள பாத்தா பாவமா இருந்துச்சு, அதான் நா சார்க்கு தெரியாம குடுத்தேன், நீங்களும் அவருக்கு தெரியாம பாத்துக்கோங்க” என்றான்

ஸ்ருதி தன் மோதிரத்தை கழற்றி வருணிடம் குடுத்து,

ஸ்ருதி,”இந்தாங்க, சார் சொன்ன மாதிரியே பண்ணிருங்க”

வருண்,”மோதிரத்துக்காக இவ்வளவு நேரமா அழுதிங்க, இப்போ வேண்டாம்ன்னு சொல்றீங்க”

ஸ்ருதி,”ஆமா நான் அழுதேன் தான், ஆனா எனக்காக மட்டும் அழல, சார்க்காகவும் தான், சாரோட கண்ணல அவங்க அப்பாவா பிரிஞ்ச வலிய பாத்தேன், என் மோதிரத்தை சார் விற்க சொல்லும் போது எனக்கு எவ்வளவு வலிச்சு, அத மாதிரி தான் நான் அந்த statue உடைச்ச போது சாருக்கும் இருந்துருக்கும்,எல்லாத்துக்கும் மேல, சார் உங்க மேல உள்ள நம்பிக்கையில பண்ண சொன்ன ஒரு விஷயத்த, எனக்காக நீங்க பண்ணாமா விட்டுடிங்கனா அது சாருக்கு நீங்க துரோகம் பண்ற மாதிரி ஆகிறதா, அவர் நம்பிகைய உடைக்கிற மாதிரி ஆகிறாதா, என்னால உங்களுக்கு அப்டி ஒரு situation வேண்டாம் வருண் சார்” என்றாள்

வருண்,”அப்போம் உங்க அப்பா அம்மா”

ஸ்ருதி,”அப்பா அம்மாவோட பாசத்தயும், அவங்க நியாபகத்தையும் ஒரு சின்ன மோதிரத்துல வைக்க முடியுமா சார், அவங்க எப்பவும் என்கூட தான் இருக்காங்க, அவங்க நியாபகம் எப்பவும் என் மனச விட்டு போகாது, ஸோ மோதிரத்தை சார் சொன்னா மாதிரி பண்ணிருங்க பின்பு அவனிடம் சீக்கரமா அந்த statueவ சரி பண்றதுக்கு முயற்ச்சி பண்ணுங்க, சார் ரொம்ப மனசொடஞ்சு போய் இருக்காங்க” என்றாள், இதை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அபி லேசாக தன் இதழ் ஓரம் சிரித்து விட்டு, தன் அறைக்கு சென்றான் .பிறகு அங்கு வந்த வருண் அபியிடம் மோதரத்தை, குடுக்க, அபி அதை கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, தன் பான்ட் பாக்கெட்க்குள் வைத்தான், வருண் அபியை பார்த்து கவல படாதிங்க சார், நாம அந்த statueவ எப்டியாது சரி பண்ணிரலாம் என்று ஆறுதல் கூறினான், அபியும்,”ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டினான் .

அபியும் வருணும் அகாடமியை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்

அப்போது அங்கே ஸ்ருதி அவசர அவசரமாக அபியின் காபின்குள் நுழைந்தாள், அபி ஸ்ருதியை பார்த்து,

அபிமன்யு,”உனக்கு மனர்ஸ் இல்ல இப்டிதான், permission கேட்காம உள்ள வருவீயா” என்றான்

ஸ்ருதி,”இல்ல சார் ரொம்ப அவசரம், அதான்” என்று கூற, அவன் அது எதையும் கேக்காமல்

அபிமன்யு,”அவுட், வெளிய போ, ஒழுங்கா permission கேட்டுட்டு வா” என்றான், ஸ்ருதி அவ்வாறே வெளியில் சென்று மறுபடியும்,

ஸ்ருதி,”மே ஐ கம் இன் சார்” என்றாள்

அபிமன்யு,”கேக்கல”

ஸ்ருதி கொஞ்சம் சத்தமா,”மே ஐ கம் இன் சார்” என்றாள்

அபிமன்யு,”louder ப்ளீஸ்” என்றான்

ஸ்ருதி தன் மனதிற்குள் இவன் வேற நேரம் காலம் தெரியாம

ஸ்ருதி,”மே ஐ கம் இன் சார்” என்று கத்தினாள்

அபிமன்யு வருணை பார்த்து சிரித்துகொண்டே,ஸ்ருதியிடம்,

அபிமன்யு,”ஸ்ருதி உங்க ஸ்ருதிய கொஞ்சம் ஏத்துங்க” என்று நக்கலாக கூறினான்

ஸ்ருதி,”மே ஐ கம் இன் சார்” என்று தன்னால் முடிந்த அளவுக்கு உரக்க கத்தினான், அபி போன போகட்டும் என்று

அபிமன்யு,”யஸ் கம் இன்” என்றான்

ஸ்ருதி அபியை பார்த்து முறைக்க, அபி வருண் ஸ்ருதி மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க தொடங்கினர், அபியின் மனசாட்சி அபியை பார்த்து,”என்னடா இளிப்பு” என்று நக்கலாய் கேட்க, அபி உடனே தன் முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொண்டு . வருணுக்கும் செய்கை செய்துவிட்டு, ஸ்ருதியை பார்த்து”என்ன சிரிப்பு,எதுக்கு வந்தனு சொல்லிட்டு கெளம்பு” என்றான்

ஸ்ருதி தன் மனதிற்குள், இது அகாடமியா இல்ல மெண்டல் hospitalலானு தெரியலயே, எல்லாம் மெண்டலா சுத்துதே என்றாள் .பிறகு, அபியிடம்

ஸ்ருதி,”சார், கீழ அஜய்க்கும் trainer சார்க்கும் பிரச்சனையா இருக்கு” என்றாள்

அபிமன்யு,”சரி நீ போ” என்றான்

பிறகு, அபி வருணிடம், ‘இந்த அஜய்யோட ப்ராப்ளம் தான் என்ன’ என்றான்

வருண்,”நீங்க இருங்க சார், நான் போய் கீழே என்ன பிரச்சனன்னு,பாத்துட்டு வரேன்”

என்றான், அபி சரி என்னன்னு எனக்கு இன்பார்ம் பண்ணுங்க என்றான் .வருண் கீழே சென்று என்ன பிரச்சனை என்று ட்ரைனரிடம் கேட்க, அதற்கு அவர்

TRAINER,”சார், அஜய் பேசிக் classes ஏதும் அட்டெண்ட் பண்ண மாட்டேன்னு சொல்றாரு, டைரக்ட் ஆஹா fight பண்ணுவேன்னு சொல்றாரு அவர்கிட்ட எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டிக்காரு”

அபி “இந்த வருண எனக்கு போன் பண்ணி இன்பார்ம் பண்ணுனு சொன்னா ஏதும் சொல்லமா இருந்துட்டான்,சரி கீழ போய் பாப்போம்” என்று தனக்குள் கூறி விட்டு, கீழே வந்தான்

வருண்,”நான் பாத்துக்குறேன்” என்று கூறி விட்டு அஜயிடம் சென்று,

வருண்,”அஜய், பிடிவாதம் பிடிக்காம, கிளாஸ் அட்டெண்ட் பண்ணுங்க” என்றான்

அஜய்,”எனக்கு தெரியும், நீ ஒன்னும் எனக்கு சொல்ல வேண்டாம் சரியா” என்றான், சில நொடியில் அந்த அரங்கமே அதரும் அளவிற்கு சத்தமாக,அஜய் என்று ஒரு குரல் கேட்டது, அனைவரும் அங்கே திரும்பி பார்த்தனர், அங்கே அபி கோபத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தான் …

இப்பொழுது நம் அபி, ஸ்ருதி கூட அப்படிதான் தங்களுக்குள் ஏற்பட்டிற்கும் மாற்றத்துக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிக்கின்றனர், ஏன் என்றால் தங்களின் கேள்விக்கான பதிலை மனதைக்கொண்டு அல்ல, தங்களின் மூளையை கொண்டு யோசிப்பதால் . கவலை வேண்டாம் தங்களின் கேள்விக்கான பதில் ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை, மிக அருகில் தான் உள்ளது . என்ன அது தங்களுக்கு கிடைக்கும் பொழுது, இருவரும் ம

இப்பொழுது நம் அபி, ஸ்ருதி கூட அப்படிதான் தங்களுக்குள் ஏற்பட்டிற்கும் மாற்றத்துக்கான காரணத்தை அறிய முடியாமல் தவிக்கின்றனர், ஏன் என்றால் தங்களின் கேள்விக்கான பதிலை மனதைக்கொண்டு அல்ல, தங்களின் மூளையை கொண்டு யோசிப்பதால் . கவலை வேண்டாம் தங்களின் கேள்விக்கான பதில் ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை, மிக அருகில் தான் உள்ளது . என்ன அது தங்களுக்கு கிடைக்கும் பொழுது, இருவரும் மறுக்காமல் ஏற்று கொண்டால் அதுவே இவர்களின் வாழ்கையின் வசந்த காலமாகிவிடும் .

றுக்காமல் ஏற்று கொண்டால் அதுவே இவர்களின் வாழ்கையின் வசந்த காலமாகிவிடும் .