ஹாய் லட்டுஸ் , நான் அடுத்த எபியோட வந்துட்டேன் .போன எபிக்கு லைக்ஸ் அன்ட் கமண்ட்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி தங்கம்ஸ் …. அப்றம் இது குட்டியா இருந்தா spl ud அ மனசுல வச்சிக்கிட்டு இந்த சின்ன பிள்ளையை மன்னிச்சு…..
நினைவில் தத்தளிக்கும் நேசமது 8 :
கட்டிலில் கண் மூடி படித்திருப்பவளை கண்டு விஷ்வாவிடம் புலம்பிக்கொண்டிருந்தவன் அவளின் முனங்களில் அவள் புறம் வேகமாக திரும்பியவன் அவளின் அருகில் சென்று …மித்துமா என்னடி ஆச்சு உனக்கு, கண்ண திறந்து பாருடி ….என்னாலதான் எல்லாம் நான் மட்டும் அன்னிக்கு உன்ன தனியா விடாம இருந்திருந்தா இப்போ உனக்கு இப்படி ஆகிர்க்காது …என்னை மன்னிச்சுடு டி…
அவனின் இடைவிடாத புலம்பலை கேட்ட பின்பு அவளின் முனங்கல் நின்றது ஆயினும் அவளது இதழ்கள் அழுகையில் வெதும்பியது .
இதை கண்ட விஷ்வா, ஜீ என்ன இது நான் தான் சொன்னனே அவங்களுக்கு எதுவும் நியாபகம் இல்லைனு ….அவங்க இன்னிக்கு நடந்த விஷயத்துல அதிகமா யோசிச்சிருப்பாங்க அதான் மயங்கிட்டாங்க .
விஷ்வா பேசியதை அமைதியாக கேட்ட ஜிஷ்ணு அவனிடம் சொன்னான் , நான் மித்துவ கூட்டிட்டு போறேன் .
அய்யோ பைத்தியமாயா இவன்னு விஷ்வா ஒரு பார்வை பார்த்துட்டு ஜீ இப்போ தான சொன்னேன் அவங்களுக்கு எதுவும் நியாபகம் இல்லைனு ஆனாலும் அவங்கள இன்னும் ஹொஸ்பிடலயே இருக்க வைக்க முடியாது நம்ப போர்ஸ் பண்ணி எதையும் நியாபகப்படுத்தவும் கூடாது ஆனா அவங்க வெளில இருந்தா தானாவே நினைவு வர சான்செஸ் இருக்கு. அதனால நான் ஏஞ்சல என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு இருக்கேன் .
Shobbbbbba எம்மாம் பெருசா பேசிட்டோம் இப்போ மூச்சுவாங்குதே (வேற யாரு இம்புட்டு கேவலமா பேசுவா எல்லாம் விஷ்வாவோட மானம் கெட்ட மனசாட்சி தான் ) .
பேசிமுடிச்சி நிமிர்ந்தவன் கண்ணு முழி ரெண்டும் வெளியவருவது போல் முழித்தான் தன் முன் துப்பாக்கியை நீட்டியப்படி நின்றிருந்த ஜிஷ்ணுவை கண்டு
என்ன சொன்ன ஏஞ்சல் ஆ …மவனே எதுனா மனசுல இருந்தா இப்பவே அழிச்சிடு அவ என்னோட மித்து ….எதுனா ஏடாகூடமா பண்ண சுட்டுதள்ளிட்டு போய்ட்டே இருப்பேன் .
சொல்லியவன் துப்பாக்கியை இறக்கினான் …சிறிது நேரம் யோசித்தவன் , விஷ்வாவிடம் சரி உன் வீட்டுக்கே கூட்டிட்டு போ ஆனா ஜாக்கிரதை அவ என் உசுரு இப்பவும் அவளுக்காக மட்டும் தான் அவள உங்க வீட்டுக்கு அனுப்ப ஒதுக்குறேன் அங்க அவளுக்கு எதுனா ஆச்சி மவனே உன் உயிர் என் துப்பாக்கிலதாண்டா மிரட்டியவன் திரும்பி கட்டிலின் அருகில் சிறிது நேரம் இருந்துவிட்டு போகும் பொழுது விஷ்வாவிடம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனதுகப்றம் சொல்லு என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான் .
அவ்வளவு நேரம் மூச்சை இழுத்து பிடித்திருந்த விஷ்வா …அப்பாா ேய் விஷ்வா அது எப்படி டா உனக்கு வரதுலாம் இப்படியே இருக்கு என்னமா மிரட்டறான் ஹாஹா நான்லாம் என் அண்ணன் ஜித்தனுக்கே பயபடமாட்டேன் இவன் என்ன ஜுஜுபி .ஏஞ்சல்னு கூப்பிடகூடாதாமே நான் அப்படித்தான் கூப்புடுவேன் பாத்துடலாம் இவன் என்ன பண்ரான்னு வழக்கம் போல தனக்கு தானே பேசியவன் அப்பொழுதுதான் க்டிலில் இருந்தவளை கண்டான் . இன்னமும் அவள் உதடுகள் அழுகையில் ுடிப்பதை கண்டு செய்வதறியாமல் நின்றான் .
அச்சமயத்தில் சரியாக ஜித்தேந்தர் விஷ்வாவை தொலைபேசியில் அழைத்தான் .
என்னடா இவர் think of the devil ன்ற மாதிரி எப்போ இவரை பத்தி நினைச்சாலும் சரியா ஆஜர் ஆகிர்றாரு நம்பள சுத்தி கேமரா எதுனா வச்சிருக்காரோனு யோசிச்சிகிட்டே கால் அ அட்டென்ட் பண்ணி பேசுறான் .
Yahvi (யாஹ்வி)
ஏனோ ஜித்தேந்தர்க்கு இதயம் படபடத்தது . ஹாஸ்பிடலில் இருந்து கால் வந்த பொழுது எப்பவும் போல் அதை கண்டவன் மனம் சிறிது நேரத்தில்லெல்லாம் படபடப்பாகியது . அதை போக்க தனது தாயுடன் இருந்த மித்ரேந்தரிடம் சிறிது நேரம் விளையாடினான் . ஆயினும் படபடப்பு குறையாததால் தன் அறை வந்தவன் அவ்வறையில் இருந்த புகைப்படத்தின் முன் வந்து அதை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் .எத்தனை நிமிடங்கள் கடந்தனவோ ஏதோ தோன்ற விஷ்வாவிற்க்கு அழைத்திருந்தான் .
ஹலோ அண்ணா சொல்லுனா என்ன விஷயம் எப்பவும் ஹாஸ்பிடல்ல இருக்கும் போது கால் பண்ண மாட்டீங்களே ….
அது….ம்ம்க்கும் …இல்லை ரொம்ப டென்ஷன் ஆ போனியே அதான் என்னனு கேட்கலாம்னு கால் பண்ணேன் .
அது ஒண்ணுமில்லைனா னு நடந்ததெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டான் .
அந்தநேரம் சரியாய் ஒரு நர்ஸ் வந்து கதவை திறந்ததில் அதன் பக்கத்துல நின்றிருந்த விஷ்வா தடுமாறி கீழே விழ சென்று பின் சரியாக நின்றான் . அவன் தடுமாற்றத்தில் அவன் கையில் இருந்த மொபைல் எகிறி சென்று கட்டிலில் விழுந்தது . அப்பக்கம் இருந்து ஜித்தேந்தர் , சரி …நீ சாப்பிடாம போய்ட்டன்னு அம்மா சொன்னாங்க போய் சாப்பிட்டுட்டு வேலையை பாரு – னு சொல்லிட்டு இருந்தான்.
இத்தனை நேரம் அழுகையில் உதடு துடிக்க இருந்தவள் இவனது குரலில் எதை உணர்ந்தாலோ அவளின் இதழ்கள் சிறிது சிறிதாக புன்னகையில் விரிந்தது . ஏதேதோ எண்ணங்கள் அவளை சூழ்ந்து மாயவலையில் அவளை சிறைகொண்டது .
தன்னை சமாளித்து நின்ற விஷ்வா மொபைல் எடுக்க கட்டிலின் அருகே வந்தவன் , இவளின் புன்னைகையை கண்டு யோசனையுடன் அவளை கண்டான் .
அவளோ அதை அறியும் நிலையில் இல்லாததால் தன்னை சூழ்ந்த மாயவலையில் விரும்பியே கலந்தாள்.
அதில் அவளும் அவளவனும் மட்டுமே இருந்தனர் .
நினைவறியா நிலையில்
மாயசுழலில்
விரும்பி
சுழல்பவள்….
நினைவறிந்த பின்பு
மாயத்தின்
நிஜத்தை அறிவாளா ??
வெறும் மாயமென்று
கடந்து செல்வாளா ??
மாயவலை ….
உன்னால் உன்னால்
உன் நினைவால் ..
உலகில் இல்லை
நான்தானே …
உள்ளே கேட்க்கும்
ஓசையிலே…
உன்னை உன்னை கேட்டேனே…
உன்னோடு சேர்ந்து
நெடுந்தூரங்கள் …
காலார நடந்து
மிதந்தேனே…
உன்னிடம் தந்த
இதயத்தை தேடி
உன்னில் என்னை தொலைத்தேனே ….
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
எந்தன் விழி
ஓரங்கள் …
உன்இமையில் சாயுதே ..என் கண்களை மூடினால்..
உந்தன் முகம் தெரியுதே ..
என் பகல் உன் கண்ணில் …
நீ இல்லை என்றாலே
நான் ஏதும் இல்லை
இரவு தான் …
நான் உன்னை உனக்கே
தெரியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே…
பூமியில் உள்ள காதலையெல்லாம்
முன்னாள் வாழ்ந்தாய்
ரசித்தேனே…
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
இன்னும் இன்னும் கனவுகள்
உன்னை பற்றி வேண்டுமே …
என்னென்னமோ ஆசைகள் உன் நினைவை தூண்டுமே…
என் மழை காலங்கள்
என் வெயில் நேரங்கள்
எல்லாமே உன்னில்
தொடங்குதே….
ஒரேஒரு புன்னகை
போதும் அன்பே..
உனக்கென காத்து
கெடப்பேனே…
ஆயிரம்கோடி ஆண்டுகள் தாண்டி
உன்னில் வாழ துடிப்பேனே …
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
ஹாஆஆ ….ஹாஆஆ..
-கரைவாள்