NIRAL MOZHI -15.3

bitcoin

முரளி இடத்தில்நேரம் 3:30

முதலில், தமிழ்நாடு ஸ்டேட் கோ-ஆர்டினேட்டரை கைப்பேசியில் அழைத்தார்.

முறைகேடான வழியில் பணப் பரிவர்த்தனை பற்றிய விசாரணைகள் வேண்டாம் என்று ‘பரோடா சைபர் கிரைம் யூனிட்டிற்கு’ சொல்லிவிடும்படி சொன்னார்.

பரோடாவில் விசாரணையில் கிடைத்த, டார்க் வெப் ஏஜென்ட் புகைப்படத்தை…  ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறை மேலதிகாரிகளிடம் கொடுத்து, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அனுப்பி… அவனைத் தேடச் சொல்ல வேண்டும். 

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தகவல்கள் பறந்தன!

இதை தமிழ்நாட்டின் ஆணையர் உதவியுடன் செய்து முடித்தார்.

இதற்கிடையில் மும்பையிலிருந்து அழைப்பு வந்தது!!

அங்கேயும் இதே போல்தான்! மூன்றாவதாக ஒரு நபரை வைத்து பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. அந்த நபரைப் பிடித்து விசாரிக்கையில், போட்டி நிறுவனத்தின் ‘ப்ராஜெக்ட் மேனேஜர்’ பெயரைச் சொல்லிவிட்டான்.

அவரை விசாரித்ததில்… அவரும் நல் கேரை தொடர்பு கொண்டது, ஒரு ஏஜென்ட் வழியாகத்தான்!

அந்த ஏஜென்ட் பற்றிய முழு விவரங்களையும், மும்பை ‘சைபர் கிரைம் யூனிட்’ ஆட்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அடுத்து!!

மும்பையில் சொல்லப்பட்ட  ஏஜென்டின் விவரங்கள், பரோடாவில் சொல்லப்பட்ட ஏஜென்ட் விவரங்களுடன்  ஒத்துப் போகிறதா? என்று பார்த்தார்.

ஆம்! ஒத்துப்போனது!!

அப்படியென்றால், ஒரே ஏஜென்ட் வழியாகத்தான்… அனைத்து நிறுவனங்களும், நல் கேருடன் தொடர்பு கொண்டிருக்கின்றன என்ற முடிவிற்கு வந்தார்.

இருந்தும், டெல்லியில் இருந்து வரும் செய்திக்காகக்  காத்திருந்தார்.

நேரம் 4:20

நேரம் கடந்து கொண்டே சென்றது!

காத்துக்கொண்டே இருந்தார்.

ஒருபுறம், எல்லா மாநிலங்களிலும் ‘டார்க் வெப் ஏஜென்ட்’ தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருந்தது. வேலை நேரத்தை தாண்டி, அனைவரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

காலையில், ஏதோ சாதாரண வழக்கு என்று ஆரம்பித்தது… இக்கணம், தேடுதல் வேட்டையில் இருக்கும் மாநில காவலர்கள் மற்றும் சைபர் கிரைம் யூனிட் ஆட்களுக்கு வழக்கின் வீரியம் புரிந்தது.

எனவே, அனைவரும் துரிதமாகச் செயல்பட்டனர்!

ஆனால், யாரும் வெளியே எந்த ஒரு விடயத்தையும் கசிய விடவில்லை.

அப்படியொரு ஒத்துழைப்பு!

நேரம் 5:55

இந்த நேரத்தில், டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விவரங்கள் சொன்னார்கள்.

முரளி நினைத்தது சரிதான்! எல்லா இடங்களிலும் ஒரே ஏஜென்ட்தான்!

‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்தார்.

அக்கணம் மீண்டும் ஓர் அழைப்பு வந்தது! ஆந்திரப் பிரதேசத்திலிருந்து!

எதற்கு?

அவரே எதிர்பார்க்காத ஒன்று நடந்திருந்தது!!

அது என்ன?

அந்த ‘டார்க் வெப் ஏஜென்ட்’ ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருந்தான்.

முரளிக்கு, ‘அதற்குள் கைதி செய்யப்பட்டுவிட்டனா?’ என்ற ஆச்சரியம்!

‘மால்வேர் அட்டாக் நடக்காத மாநிலமான ஆந்திராவில் எப்படி? என்ற கேள்வி!

‘அடுத்து எப்படி வழக்கை எடுத்துச் செல்ல?’ என்ற யோசனை!

அதற்கு மேல், அவர் தாமதிக்கவில்லை! நிகிலைச் சந்திக்க கிளம்பிவிட்டார்!!

மருத்துவமனை, நேரம் 7:05

நிகில் படுத்திருந்தான்.

படாரென்று கதவு திறக்கும் ஓசை கேட்டு, எழுந்தான்.

“முரளி… நீங்க இப்போ?” என்று கேள்வியாகக் கேட்டான்.

“நிகில்… அந்த ஏஜன்ட்டை பிடிச்சாச்சு. ஆந்திராவுல அரெஸ்ட் பண்ணிட்டாங்க” என்று சொல்லிக் கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

“ஆந்திரா?” என்றான் ஆச்சரியக் கேள்வியாக!

“யெஸ் ஆந்திரா! அங்க இருக்கிற சிமென்ட் பிளான்ட்-தான் நெக்ஸ்ட் மால்வேர் அட்டாக் ஸ்பாட். அவனை விசாரிச்சதுல தெரிஞ்சது”

“ஓ!” என்று சொல்லி, நிகில் யோசித்தான்.

“ஆனா, நல் கேர் இருக்கிற இடத்தைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்றான். மெயில் கான்டக்ட் மட்டும்-தானாம்”

“ஓ!” என்று சொல்லி, மீண்டும் நிகில் யோசித்தான்.

“அன்ட் நல் கேர் யூஸ் பண்றது எல்லாம் டார்க் வெப் பிரௌஸ்ர்ஸ்-ன்னு (TOR Browser) சொன்னான். ஸோ, அவோனோட சிஸ்டம் ஐபி அட்ரஸ் வச்சோ… மெயில் ஐடி வச்சோ… கண்டுபிடிக்கிறது கஷ்டம்”

“ஓ!” என்று சொல்லும் போது, நிகில் யோசித்து முடித்திருந்தான்.

“இன்னும் அவனை நல்லா அடிச்சு… துவைச்சு… விசாரிச்சுப் பார்க்கவா?”

“எதுக்கு முரளி?” என்றான் நிகில் அமைதியாக!

“நல் கேர் பத்தி…” என்று முரளி ஆரம்பிக்கும் பொழுதே,

“முரளி, இதுவரைக்கும் இந்த மால்வேர் அட்டாக்-ல சம்பந்தப்பட்ட எல்லாரும் அரெஸ்ட் ஆன மாதிரித்தான்” என்றான் நிகில் பொறுமையாக!

“எக்ஸப்ட் நல் கேர்!!” என்றார்.

“ம்ம்” என்றவன், “இப்போ, நல் கேர் தப்பான வழியில சம்பாதிச்ச பணத்தை சீஸ் பண்ணப் போறோம்” என்றான் நிகில் எளிதாக!

‘என்ன?’ என்பது போல் முரளி பார்த்தார்.

முரளி இதை எதிர்பார்க்கவில்லை! எதிர்பார்க்கவேயில்லை!!

“பணம் இருந்தா, தப்பிச்சு போகனும்னு தோணும். பணம் இல்லைன்னு தெரிஞ்சா, கண்டிப்பா தப்பிக்க மாட்டான்! அன்ட், நான்தான் எடுத்திருப்பேன்னு தெரியும்!! ஸோ, கண்டிப்பா எனக்கு ஃபோன் பண்ணுவான்” என்றான் பதற்றமே இல்லாமல்!

“பணம் பிட்காயினா இருக்கு நிகில். அதை எப்படி சீஸ் பண்ண முடியும்? எவ்வளவு செக்கியூர்! அன்ட்… அவனோட பிட்காயின் பிரைவேட் கீ தெரியாம, நாம ஒண்ணுமே பண்ண முடியாது?” என்று முரளி படபடத்தார்.

“பிரைவேட் கீ தெரிஞ்சிட்டா? அப்போ மணி சீஸ் பண்ண முடியும்! கரெக்ட்டா?” என்றான் நிகில் சாதாரணமாக!

“கரெக்ட்” என்று தயங்கிச் சொன்னவர், “பட், பிரைவேட் கீ எப்படி?” என்று கேள்வி கேட்டார்.

“முரளி! கண்டிப்பா பிட்காயின் கீ-யை சிஸ்டம்-ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்க மாட்டான்”

“ஆமா, யாரும் ஹேக் பண்ணிருவாங்கனு”

“ஆனா, அவன்… தன்னோட அத்தியாவசியத் தேவைக்கு, வெளி உலகத்துக்கு வர்றதே இல்லை. அப்போ, தேவைப்படுற எல்லாத்தையும், ஆன்லைன்-ல பர்ச்சேஸ் பண்றான்னு அர்த்தம்.

அப்படி பர்ச்சேஸ் பண்ணா, பே(Pay) பண்றதுக்கு… நெட் பேங்கிங் யூஸ் பண்ணனும். கண்டிப்பா, அவன்கிட்ட பேங்க் அக்கௌன்ட் இருக்காது. ஏன்னா, அது வழியா அவனை யாரும் கண்டுபிடிச்சிருவாங்க-ன்னு பயம் இருக்கும்.

அப்போ எப்படி பே பண்ணுவான்? பிட்காயினா பே பண்ணுவான். கரெக்டா?” என்றான் படபடவென்று!

“கரெக்ட் நிகில்! பட்…” என்று இழுத்தார்.

“வெயிட் முரளி! நான் சொல்லி முடிச்சிக்கிறேன்” என்றவன், “அவனோட அடுத்த ஆன்லைன் பர்ச்சேஸ்… பிட்காயின் ஸ்பென்ட் பண்ணற டைம்தான் நம்ம டார்கெட்!!” என்றான் நிகில் அதிரடியாக!

“புரியலை நிகில்” என்று முரளி வெளிப்டையாகச் சொன்னார்.

“முரளி! பிட்காயின் வாலட்-லருந்து பிட்காயின் ஸ்பென்ட் பண்ணனும்னா, பிரைவேட் கீ வேணும்”

“ம்ம்ம்”

“பிரைவேட் கீ டைப் பண்ணறது கஷ்டம். ரீசன் அதோட லென்த்!! ஸோ, காப்பி(Copy) அன்ட் பேஸ்ட்(Paste) பண்ணுவாங்க”

“ஓகே!”

“எந்த ஒரு வேர்டும் காப்பி அன்ட் பேஸ்ட் பண்ணும்போது… ஒரு டுவென்ட்டி மினிட்ஸ் சிஸ்டம் கிளிப்போர்டு-ல (System Clipboard) இருக்கும்”

“ஆமா!!”

“அந்த கிளிப்போர்டு-ல இருக்கிற கீயை நாம எடுத்திட்டா?” என்று நிகில் அசராமல் கேள்வி கேட்டான்!

“அதெப்படி நிகில்?”

“எத்திகல் ஹேக்கிங்!” என்றவன், “முரளி!! என்கிட்ட கிளிப்போர்டு ஸ்டீலர் (Clipboard Stealer Software) சாப்ட்வேர் இருக்கு” என்றான்.

“கிளிப்போர்டு ஸ்டீலர்??”

“ஆமா! இந்த சாப்ட்வேர் எந்த சிஸ்டம்-ல ரன்-ஆகுதோ… அந்த சிஸ்டம் கிளிப்போர்டு டேட்டா-வை எடுத்து, எனக்கு மெயில் அனுப்பிடும்”

“ஓ!”

“அதை, நல் கேர் சிஸ்டம்-ல ரன் பண்ண வைக்கணும்”

“அதெப்படி முடியும் நிகில்?!”

“அதுக்குத்தான் அந்த ஏஜென்ட் இருக்கான்-ல. அவன்கிட்ட… நல் கேருக்கு, அடுத்த மால்வேர் அட்டாக் டீடெயில்ஸ் பத்தின லிங்க்-அ மெயில் அனுப்பப் சொல்லுங்க”

“ஓகே”

“டீடெயில்ஸ் பத்தின லிங்க, நீங்க ப்ரீப்பேர் பண்ணுங்க. அந்த லிங்க எப்போ நல் கேர் கிளிக் பண்றானோ… அப்போ ஆட்டோமேட்டிக்கா இந்த சாப்ட்வேர் ரன் ஆகிற மாதிரி, நான் செட் பண்றேன்”

“ஓகே” என்று சொல்வதைத் தவிர, முரளிக்கு வேறு வழியில்லை.

“பட், ஒன்திங்க்! டீடெயில்ஸ் உண்மையா இருக்கனும். ஸோ, அந்த ஏஜென்ட் இப்போ ஆந்திர சிமெண்ட் பிளான்ட் டீடெயில்ஸ்-தான கலெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தான்??”

“ஆமா”

“அவன்கிட்டயிருந்தே டீடெயில்ஸ் வாங்கி, ஒரு பைல்(file) ப்ரீப்பேர் பண்ணுங்க”

“ஒகே”

“அந்த பைலுக்கு பேக்ரவுண்டு-ல கிளிப்போர்டு ஸ்டீலர் சாப்ட்வேர் ரன் பண்ண வைக்க வேண்டியது என் வேலை!!”

“ஓகே”

“இதை ஒரு லிங்கா மாத்தி, நல் கேருக்கு மெயில் சென்ட் பண்ணனும்”

“அது, அந்த ஏஜென்ட் பண்ணப்போறான்”

“யெஸ்!” என்றவன், “முரளி இன்னொன்னு! அந்த ஏஜென்ட் அவனோட  சிஸ்டம்-லருந்து மெயில் அனுப்பப் சொல்லுங்க” என்றான்.

“புரியுது நிகில்! நல் கேர்… ஏஜென்ட் சிஸ்டம் ஐபி அட்ரஸ் செக் பண்ணிப் பார்த்தா, டவுட் வரக் கூடாது! அதுக்குத்தான?”

‘யெஸ்’ என்று அழுந்தத் தலை அசைத்தான்.

நேரம் 8:45

ஆந்திராவிலுள்ள ‘சைபர் கிரைம் யூனிட்டை’ முரளி தொடர்பு கொண்டார். அந்த ஏஜென்டிடம், அடுத்த மால்வேர் அட்டாக் பற்றிய விவரங்களை வாங்கித் தரச் சொன்னார்.

ஒரு அரைமணி நேரம், காத்திருக்க வேண்டியது இருந்தது.

காத்திருந்தார்கள்!!

நேரம் 9:15

முரளியின் மின்னஞ்சல் முகவரிக்கு, ஆந்திராவிலிருந்து அந்த ஏஜென்ட் கொடுத்த சிமென்ட் பிளான்ட் மால்வேர் அட்டாக் பற்றிய விவரங்கள் அடங்கிய மின்னஞ்சல் வந்தது.

உடனே, அந்த விவரங்கள் கொண்டு… முரளி ஒரு கோப்பு தயாரித்தார்.

அதன் பின்னணியில், ‘கிளிப்போர்டு ஸ்டீலர்’ மென்பொருள் ரன் ஆகும் வண்ணம், நிகில் செய்தான்.

இவை இரண்டும் சேர்ந்து ஒரு லிங்காக மாற்றப்பட்டது!!

அடுத்து!!

அந்த லிங்க்.. ஆந்திர மாநில ‘சைபர் கிரைம் யூனிட்டிற்கு’ அனுப்பப்பட்டது. அவர்கள், அதை ஏஜென்டிடம் கொடுத்து நல் கேர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பச் சொன்னார்கள்.

அவனுக்கு வேறு வழியில்லை! அவர்கள் சொன்னபடி செய்தான்!!

மின்னஞ்சல் அனுப்பியாயிற்று!

மருத்துவமனை, நேரம் 10:00

முரளி சென்றுவிட்டார்.

நிகில், காத்துக் கொண்டிருந்தான்! உறக்கம் துளியும் வரவில்லை. முதலில் உறங்கக் கூடாது!!

அதற்காக, வலி நிவாரிணிகளைத் தவிர்த்துவிட்டான்.

மருந்தின் வீரியத்தில் உறங்கிவிட்டால்? கிடைத்த வாய்ப்பு நழுவிப் போய்விடும்!!

நிகில்…  நல் கேரின், அந்த ஒரு நிமிட முட்டாள் தனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்.

எதற்காகவாது, நல் கேர் பணம் செலவழிக்க வேண்டும்!

காத்திருந்த நேரத்தில், நிகிலிற்கு ஒரு சந்தேகம் இருந்தது!

அது!

ஷில்பா வேலை செய்த நிறுவனம் சைபர் கிரைம் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தது! அது, நல் கேருக்கு எப்படியும் தெரிந்திருக்கும்.

இந்த மாதிரி நேரத்தில், ஒரு புது மால்வேர் அட்டாக் வேலையை எடுப்பானா?? என்ற சந்தேகம்தான்!!

கொஞ்சம் கவனமா இருப்பான் அல்லவா??

இருக்கட்டும்!

அந்த மால்வேர் அட்டாக் வேலையை செய்வதும்… செய்யாததும் அவன் முடிவு!

ஆனால், அந்த லிங்க்-கை கிளிக் செய்து, விவரத்தை அறிந்தால் மட்டும் போதும்!

போதும்! நிகிலிற்கு அது மட்டும் போதும்!!

உறங்காமல் காத்திருந்தான்!!

இரவு, நேரம் 11:20

படுக்கவில்லை. கட்டிலில் கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு, அமர்ந்திருந்தான்.

அடிக்கடி எழுந்து நின்றான்! பின் அமர்வான்! பின் நடப்பான்!

இந்தத் திட்டம் சரியாக செயல்பட வேண்டும்!

இது சரியாக நடக்கவில்லை என்றால், அடியாட்களைக் கண்டுபிடிக்கும் வரைக் காத்திருக்க வேண்டும்!

முடியாது! அது முடியவே முடியாது!!

மிலா,ஜெர்ரியைப் பிரிந்து… முழுதாய் இரண்டு நாட்கள் ஆகப் போகிறது.

இதற்கு மேல் பிரிந்திருக்க முடியாது!!

இப்படியே யோசைனையிலும்… நடையிலும்… அமர்ந்திருப்பதிலும் …நேரம் கழிந்தன.

இரவு, நேரம் 1:00

கைப்பேசியைக் கையில் வைத்துக் கொண்டு, நிகில் காத்திருந்தான்.

மருத்துவமனை அமைதியாகிவிட்டது. நிசப்தம் நிலவியது.

அக்கணம், அந்த நிசப்த்தத்தை கலைக்கும் வண்ணம் ஒரு மின்னஞ்சல்!

அது! நல் கேர் கணினியின் கிளிப்போர்டு தரவுகளைக் கொண்டு வந்திருக்கும் ஓர் மின்னஞ்சல்!!

அப்படியென்றால்??

ஆம்! நல் கேர், அந்த லிங்கைக்  கிளிக் செய்திருக்கிறான்.

மேலும், ஏதோ ஒரு ஆன்லைன் பர்ச்சேஸ்… ஏதோ ஒரு பிட்காயின் பரிவர்த்தனை… நல் கேர் கணினியில் நடந்திருக்கிறது.

உடனே, அவனது கணினியின் ஐபி அட்ரஸ்-ஸை கண்டுபிடிக்க முடியுமா?  என்ற ஆர்வத்தில் சிறிது நேரம்

அதில் செலவிட்டான்.

ஐபி அட்ரஸ் தெரிந்தால், நல் கேர் இருக்கும் இடம் தெரிந்து கொள்ள முடியுமல்லவா? எனவே இந்த ஆர்வம்!!

ஆனால், டார்க் வெப் அல்லவா! ஒன்றும் செய்ய இயலவில்லை!!

விட்டுவிட்டான்!

அடுத்து!!

ஒரு ஒன்றரை மணி நேரம் கழித்து…

நல் கேர்-ன் பிரைவேட் கீயை வைத்து, அவனது பிட்காயின் வாலட்டில் உள்ள அனைத்து பிட்காயின்களையும்… வேறு ஒரு பிட்காயின் வாலட்டிற்கு… நிகில் பரிமாற்றம் செய்துவிட்டான்.

Now, Null Char. Bitcoin Wallet Balance is NILL!

அமைதியாக… பொறுமையாக… அசராமல்… கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து… அதுவும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே… நிகில், தன் பக்கமாக ஆட்டத்தைத் திருப்பிக் கொண்டான்.

Simply,

நான் Cyber Criminal என்று ஆர்ப்பாட்டமாய் சொன்னவனை, நிகில் Cipher(0) ஆக்கிவிட்டான்.

அடுத்து!! நேரம் 2:30

????

Note- out of story

  • பரோடா சைபர் கிரைம் என்று பயன்படுத்தப் பட்டிருக்கும். சின்ன நகர்களில் தனியாக சைபர் கிரைம் யூனிட் இருக்காது. அது குஜ்ராத் மாநிலத்தின் சைபர் கிரைம் யூனிட்டைக் குறிக்கும். நாம் புரிந்து கொள்ள எளிதாக இருக்கவே… இப்படி!
  • ஒரு பிட்காயின் பரிவர்த்தனை நடக்க, 10 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்கும். சில நேரங்களில், ஒரு வாரம் கூட எடுக்கும். கதையின் நேரக் கணக்கில், குறைவான நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
  • எப்படி ஒருவர் பல வங்கி கணக்கு வைத்துக் கொள்ளலாமோ, அதேபோல், பல பிட்காயின் பணப்பை வைத்துக் கொள்ளலாம். அப்படியென்றால், பல பிட்காயின் பிரைவேட் கீ!!
  • இங்கே, நல் கேர்-க்கு ஒரு பிட்காயின் பணப்பை(Bitcoin Wallet) மட்டுமே! காரணம், கதையின் முடிவில் சொல்கிறேன்.
  • 1 bitcoin = 7,70,065 Indian Rupee (ஒவ்வொரு நாளும் இது மாறும்)
  • About Clipboard and Dark web… in next episode, out of story section.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!