NKV – டீசர்

PicsArt_11-02-01.45.35-7baf4278

நெருங்காதே காதல் வேடனே…🖤

காதல் வேடன் 🖤 – டீசர்

சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்த அவளின் உடலோ ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருக்க, தலையில் இருந்து வழிந்துக் கொண்டு இருந்த குருதி அவள் முகத்தை மொத்தமும் ரத்தத்தால் நினைத்திருந்தது.

சிறிது சிறிதாக நினைவு இழக்க போகிறவளின் முன்பு படர்ந்தது ஓர் நிழல். அந்த நிலையிலும் அதனை உணர்ந்தவள் இமை தட்டி தன் முன் நின்றுக் கொண்டு இருப்பவனை காண முயல, அவனின் பிம்பம் மட்டுமே மங்கலாய் தெரிந்தது அன்றி அவன் முகம் தெரியாது தான் போனது.

அவளின் முயற்சி அனைத்தையும் இறுகிய முகத்தோடு கண்டு களித்தவன், அவளை தன் கரங்களில் ஏந்தியபடி தூக்கி செல்ல, அவன் தொடு உணர்வில் அரை குறையாக விழி திறந்தவளுக்கு அவனின் விழிகள் மட்டுமே காட்சி கொடுத்தது.

மீண்டும் விழி மூடிக் கொண்டவளின் இமைகளில் கோர்த்திருந்த குருதி துளிகள் சொட்டு சொட்டாக அவன் கரம் மீது விழ, அதை அலட்சியமாக பார்த்தபடியே வாயில் இருக்கும் சுவிங் கம்மை மென்றவன், அவளை தன் காரின் பின் பக்க சீட்டில் படுக்க வைத்துவிட்டு அவள் முகத்தையே உற்று நோக்கியபடி இருந்தான் அவன் கர்ணன்… அபிஜித் கர்ணன்!

••••••••••••••

“ஜீ என்ன சொல்றிங்க…” என்று எச்சிலை விழுங்கியவாரே கர்ணன் முகத்தையே பயத்தோடு பார்த்தான் அச்சுதன்.

அவனோ கூலான பீரை வாயில் சரித்தபடி, “நீ கெஸ் பண்றது ரைட் தான் அச்சு… வெற்றியை அடையனும்னா இந்த கர்ணன் என்ன வேண்டுமானாலும் பண்ணுவான்” என்றபடி வெடித்து சிரித்தவன், குழம்பிய அவன்‌‌ முகத்தை பார்த்தபடி,

“யூ நோ வன் திங் எவிரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார்(Everything is fair in love and war) ஆனால் இங்க லவ் கிடையாது ஒன்லி வார் மட்டும் தான்…” என்றவன் இன்னொரு பெக்கை அடித்தபடி,

“வாழ்க்கையே ஒரு வார் தான். இதுல தோக்குறவனை எவனும் விரும்பமாட்டான். சக்ஸஸ் மட்டும் தான் இங்கே ஒருத்தனை அடையாளபடுத்தும், அதை எப்படியாவது அடைஞ்சே தீருவான் இந்த கர்ணன்… அதுக்கு இடையல யார் வந்தாலும்…” என்று தன் பேச்சை நிறுத்தியவன் கையில் வைத்திருந்த கண்ணாடி டம்பளரை தூக்கி எறிய சுவற்றில் மோதி சுக்கு சுக்காக உடைந்த கண்ணாடி துண்டுகள் பறை சாற்றியது அவனின் வெற்றி மோகத்தை.

வருவான் காதல் வேடன்…🖤