நின் முகைக் காதல்
5

தீட்சாவே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்க வேண்டுமென ஆதவ் உந்திக் கொண்டிருந்தான்.
“என் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருமே யூஜி (UG) படிக்கறப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்போலாம் இது மாதிரி எதுவும் தெரியாம இருந்தேன்.”
(அப்போ மட்டும் தானா) ஆதவ் சிரித்தான்.
“ஏன் சிரிக்கறீங்க..?” முகம் சுளித்தாள் தீட்சா.
“இல்ல ல்ல.. நீ கன்டினியூ பண்ணு”
“அவங்க ஸ்டோரி எல்லாம் என்கிட்டே வந்து சொல்லுவாங்க. யூஜி முடிச்சா அவங்க வீட்ல கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்கன்னு அவங்க பிஜி படிக்க முடிவு செஞ்சாங்க. நானும் அப்பா கிட்ட கேட்டு அவங்க கூடவே ஜாயின் பண்ணேனா… அப்போ தான் என்னை ரொம்ப கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. எனக்கு லவ்னா என்னனு தெரியாது, இன்னும் இன்னொசென்ட்டா இருக்கேன்னு. எனக்கு முதல்ல எரிச்சலா வந்தாலும், அப்பறம் தோனுச்சு நான் ஏன் லவ் பண்ணல்லன்னு. அப்படியே ஒரு வருஷம் போக, செகண்ட் இயர் ல தான் நான் ப்ராஜெக்ட் பண்ண வெளிய போனப்ப, சத்யா வ பார்த்தேன். அப்பறம் அவரே வந்து ப்ரொபோஸ் பண்ணாரு. நானும் அக்செப்ட் பண்ணேன்.” என்று கூற,
“அப்போ நீ அவன புடிச்சு , அவன் கேரெக்டர் எல்லாம் பாத்து இம்ப்ரெஸ்ஆகி லவ் பண்ணல. லவ் பண்ணனும்னு உன் ப்ரெண்ட்ஸ பாத்து பண்ணிட்ட? அவன பத்தி எதுவுமே அந்த டைம்ல அவனும் ப்ரொபோஸ் பண்ணதும் ஓகே சொல்லிட்ட அப்படித் தான?” தன்னுடைய கேள்வியால் அவளை முதன்முதலில் யோசிக்க வைத்தான்.
“இல்ல.இல்ல..அப்படி இல்ல..” அவளது வாய் சொன்னாலும், அவள் மனது இவன் சொல்வது உண்மையோ என சிந்திக்க ஆரம்பித்தை அவளது கண்களின் மூலம் அவனறிந்தான்.
முதல் படி எடுத்து வைத்த திருப்தி அவனிடம்!
“அவன் தான் ஆஸ்திரேலியா போயிட்டான். அவன் குடும்பம் இங்க தான இருக்கும். அவங்க கிட்ட நீ பேசிருக்கலாமே!?”
“அவன் குடும்பமா…?!” அதைப் பற்றி அவள் யோசிக்கவும் இல்லை, சத்யாவும் அதைப் பற்றிப் பேசவுமில்லை என்பதை வெளிப்படையாக கூற,
“இப்படி அவன் பேர்த் தவிற உனக்கு ஒண்ணுமே தெரியல..ஆனா அவன் கூட போக மட்டும் ரெடி ஆயிட்ட..!?” ஆதவின் குரல் சற்று எரிச்சல் மண்டியே வெளி வந்தது.
தீட்சா டீச்சரிடம் திட்டு வாங்குவது போல தலை குனிந்து அமர்ந்துவிட்டாள்.
முதன்முதலாக தன் தவறை உணர்ந்தாள்.
ஆதவ் அவள் மனதை தெரிந்தே வருத்தினான்.
“இது என்னமோ அமரகாவியம் மாதிரி என்கிட்ட ஹெல்ப் வேற..”
“நீங்க என்ன சொல்ல வரீங்க?” முகத்தை சுருக்கி அவள் கேட்க,
“ஒன்னும்மில்ல..மா. உங்க லவ்வர் காக வெய்ட் பண்ணுங்கனு சொன்னேன்.” எவ்வளவு முயன்றும் கடுகடுப்பு வெளிவந்தது.
அவள் சிறிது நேரம் அமைதியாக,
“இங்க பீச் இருக்கு பாக்கறியா?” அவள் மூடை மாற்ற நினைத்தான்.
“ஒன்னும் வேணாம். நான் இங்கயே இருக்கேன். இல்லனா வீட்டுக்கு போலாம்.” முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள்.
“வீட்டுக்கு இப்போ போனா எல்லாரும் தப்பா நினைப்பாங்க. நமக்குள்ள பிரச்சனையோனு தான் முதல்ல யோசிப்பாங்க.” அமைதியானான்.
“நான் போறேன்.” அவன் கிளம்பிவிட்டான்.
“நானும் வரேன்” பின்னாலே சென்றாள்.
அவனிடம் ஏனோ கோபம் வர மறுத்தது. தனக்காகத் தானே சொல்கிறான் என்ற உணர்வோ என்னவோ!
“இப்போ உனக்கு எந்தத் தடையும்
“எங்கப்பா என்னை பீச்க்கு எல்லாம் கூட்டிட்டு போனதில்ல. ப்ரெண்ட்ஸ் கூட போனதோட சரி. அதுவும் பயந்துகிட்டே.”
‘குழந்தை போல மீண்டும் தன்னிடம் ஒட்டிக்கொள்ளும் உன்னை எவ்வாறு விட்டுவிடுவேன்.’
“உனக்கு இப்போ எந்தத் தடையும் இல்ல.” கைகளை விரித்து அவன் சொல்ல, அவளுக்கும் பிடித்திருந்தது.
அவனுடன் சென்று கடற்கரை மணலில் பாதம் புதைய நடந்தாள். சூரியன் கடலுக்குள் சென்று மறையும் காட்சியை வாழ்வில் முதன் முறையாக நேருக்குநேர் பார்த்து பூரித்துப் போனாள்.
“வாவ்.. இது ரொம்ப அழகான ஒரு விஷயமில்ல.” ஆதவை கருத்துக் கேட்க,
அவளைத் தன் மனைவியாக பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்தக் கடலையும் அந்தச் சூரியனையும் ரசிக்க அவனுக்குக் கசக்குமா…வெகுவாக அவனது மனம் இன்பத்தில் திளைத்திருக்க,
“சிம்ப்ளி வொண்டர்ஃபுல்” உணர்ந்து கூறினான்.
அவளோ போதும் போதும் என்ற அளவிற்கு அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.
அவன் அந்த யாருமற்ற மணல் பரப்பில் அமர்ந்து தன் துணையை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான். இதைவிட அவன் மனது ஆனந்தம் கொள்ள வேறு ஏதும் இல்லை என்பது போல, அப்படியே மல்லாக்க வானத்தைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டான். அப்படியே கண்களை மூட, காற்று, கடலில் சத்தம், கூடவே அவனது மனையாளின் சிரிப்பொலி என தனி சொர்க்கத்தில் இருந்தான்.
இருட்டிவிட்டது. அவளும் களைத்து அவன் அருகில் வந்து அவனைத் தொட்டு எழுப்பப் போனாள். ஒரு நொடி தயங்கி, பின் அவனை எப்படி அழைப்பது என்பது வேற குழப்பத்தைத் தர,
“போலாமா?” மொட்டையாக அழைத்தாள்.
அவளுக்கு அதிக சங்கடத்தைக் கொடுக்காமல், அவன் கண்களைத் திறந்தான்.
“போலாம்.” எழுந்து கொண்டான்.
“ரூம்க்கு போய் கொஞ்சம் வாஷ் பண்ணிட்டு டிரஸ் மாத்திட்டு சாப்பிட்டு அப்பறம் வீட்டுக்குக் கிளம்பலாம”.
தலையாட்டி அவனுடன் நடந்தாள். உள்ளே நுழைந்ததும் அவர்களது செருப்பு, பேன்ட் என மண் கொட்டியது. அறையின் கதவை மூடிய பிறகு அங்கேயே அனைத்தையும் உதறிவிட்டு உள்ளே சென்றாள் தீட்சண்யா.
ஆதவ்வும் அதையே செய்ய ஓரளவு மண் உதிர்ந்துவிட, அவனும் உள்ளே சென்றான்.
“நீங்க குளிக்க போறீங்களா?” மென்மையாகக் கேட்டாள்.
“இல்ல, நீ வேணும்னா குளிச்சுட்டு வா. நான் வெய்ட் பண்றேன். டிரஸ் தான் ஒரு செட் எடுத்து வந்தோமே..” எப்போதும் போல சோஃபாவில் அமர்ந்தான்.
சரியென உள்ளே சென்று குளித்து அங்கேயே உடை மாற்றி வந்தவள், சோஃபாவில் திரும்பி அமர்ந்திருந்த ஆதவை அப்போது தான் கண்டாள்.
அவனது பின்னந்தலை முழுதும், மணல் ஒட்டி இருந்தது. அதைத் தட்டி விட அவளது கை தானாக நீண்டுவிட்டது.
அவள் தொடுவாள் என சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆதவ், அவள் தலையைத் தொட்டதும் சட்டென திரும்ப, அவள் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல கையை மடகிக் கொண்டாள்.
“சாரி, உங்க தலையில மண் இருந்தது. அதான் தட்டி விடலானு.. நான் சொல்லிருக்கணும். சாரி” மீண்டும் மன்னிப்புக் கேட்க,
“ஹே.. இல்ல இல்ல..பரவால்ல, நீ திடீர்னு தொட்டதும் ஜெர்க் ஆயிட்டேன். அவ்ளோ தான். தேங்க்ஸ் எனிவே.” தானே தலையைத் தட்டிக் கொண்டு, கண்ணாடி முன் நின்று கலைந்த தலையை அவன் சீவிக் கொள்ள,
தீட்சாவிற்கு அவன் எத்தனை நல்லவன் என தோன்றியது. கை பட்டதும் அதை தனக்குக் சாதகமாக எடுத்துக் கொள்ளாமல், எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறான். அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘இப்படி நடந்து கொள்வானா சத்யா?’ அவளுக்கு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.
கண்ணாடியில் தெரிந்த அவன் தோற்றத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அருகில் வந்தது தெரியாமல் நின்றிருக்க, ஆதவிற்கு தான் தன் எண்ணம் நிறைவேறிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
“என்ன கனவா? சத்யா கூடவா?” வேண்டுமென்றே அவளைத் தூண்டிவிட்டான்.
‘என்ன அவனுடன் கனவா? அப்படி இது வரை தான் நினைத்ததே இல்லையே எனத் தோன்றியது.’
“ஹல்லோ..என்னமா?” ஆதவ் அவள் முன் கையை ஆட்ட,
“ஆங்… என்..என்ன சொன்னீங்க?” தடுமாறினாள்.
“சரியா போச்சு.. சாப்பிடப் போலாமா?”
“ம்ம் சரி..”
இருவரும் சாப்பிட்டு காரில் சென்று கொண்டிருக்க, அவனைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
அவள் மனதும் மூளையும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை அறிந்தவன்,
“என்ன என்னையே பார்க்கற?” தூண்டில் போட்டான்.
அவளுக்குக் இதை சொல்லாமல் இருக்க முடியாது.
“நீங்க ரொம்ப நல்லவங்க..”
“ஹா ஹா ….” சத்தமாகச் சிரித்தான்.
“நிஜமாத் தான் சொல்றேன். எனக்கு ஹெல்ப் பண்றீங்கன்னு நான் இத சொல்லல..” முகம் சிணுங்க,
“வந்தது லேந்து இத ரெண்டு மூணு தடவ சொல்லிட்ட…” என்றான்.
“ஆமா, நீங்க அப்படி இருக்கீங்க. அதுனால சொல்றேன்.”
“அப்போ நீ இல்லையா?” அவளிடமே கேட்க,
“நான் நல்லவ இல்ல, நல்லவளா இருந்தா உங்க கிட்டேயே வந்து அப்படிக் கேட்டிருப்பேனா?” தான் செய்தது தவறு என்ற உணர்வு அவளுக்கு உறுத்திக் கொண்டு தான் இருந்தது.
“நீ நல்லவ தான். அதுனால தான் என்கிட்ட உண்மைய சொல்லிருக்க. என்கிட்டே சொல்லமா நீ போயிருந்தா அது இன்னும் தப்பில்லையா?” புருவத்தை உயர்த்தி அவன் கேட்க,
“அப்படி நான் செஞ்சிருக்க மாட்டேன். எனக்கு அவ்வளோ தைரியம் எல்லாம் இல்ல.” பயந்த அவளது குரலைக் கேட்க,
மீண்டும் அழகாகச் சிரித்தான்.
தீட்சன்யாவிற்கு அவன் சிரிப்பும் அழகாகத் தெரிய, ஆனால் இதை அவனிடம் சொல்ல வாய் வரவில்லை. ஏன் என உணரும் சிந்தையும் அவளுக்கில்லை.
ஆனால் இத்தனை நல்லவனான அவனுக்குத் தான் எதாவது செய்ய வேண்டுமென யோசித்தாள்.
வீட்டிற்குள் வந்ததும், அனைவரும் உறங்கச் சென்றிருக்க, உமா தான் விழித்திருந்து கதவைத் திறந்தார்.
“எப்படி இருந்தது மா இடமெல்லாம்?” கரிசனையாகக் கேட்க,
“ரொம்ப நல்லா இருந்தது அத்தை. பீச் எல்லாம் பார்த்தேன்.” கண்கள் மின்னக் கூறினாள்.
ஆதவிற்கு அவளது முகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தது.
எப்போதும் போல தலையணை நடுவில் வைத்து அவள் படுத்துக் கொள்ள, சிறிது நேரத்தில் குழந்தை போல் குப்புறப் படுத்திருந்தவளை பார்த்த வண்ணம் விழித்திருந்தான் ஆதவ்.
“உனக்கு எப்போ என்னை உணரவெச்சு எப்போ டி நீ என்னை லவ் பண்ண ஆரம்பிக்கப் போற, உன்கூட மனசு விட்டு சிரிச்சு விளையாடி கொஞ்சி வாழ்க்கை நடத்தர காலத்துக்காக நான் ஏங்கறேன். சீக்கிரம் என்னைப் புரிஞ்சுக்க. ப்ளீஸ் டி..” மென்மையாக வாய் விட்டே புலம்பினான்.
வழக்கம் போல நெற்றியில் முத்தம் வைக்க நினைத்தவன், அவளோடு நாள் முழுதும் இருந்த உணர்வு அவனது காதலைக் கூட்டி இருக்க, கன்னத்தில் முத்தம் வைக்க அவள் கன்னம் நோக்கிப் போக, அதே நேரம் அவளும் புரண்டு படுக்க, அது பட்டும் படாமல் அவளது உதட்டில் வந்து நின்றது.
ஓவியம் போன்ற அவளது உதட்டை முத்தமிட்டுவிட்டான். உள்ளுக்குள் ஆனத்ததில் மிதக்க ஆரம்பித்தான்.
அவள் எழுந்து கொள்வாளோ என தன் இடத்தில் வந்து படுத்து விட, அவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த தைரியத்தில் மீண்டும் அவளது உதட்டை நாட மனம் ஆணை பிறப்பிக்க,
நொடியும் தாமதிக்காமல் அவளது மெல்லிய உதட்டின் மேல் பூப் போல முத்தமிட்டான்.
சிறு பிள்ளை போல் ஆனந்தப் பட்டு பின் உறக்கத்தை தழுவினான்.
மறு நாள் காலை எழுந்தவள் குளித்துவிட்டு, அவனுக்காக காபியும் எடுத்து வந்து அறையிலேயே கொடுத்தாள்.
“என்ன காபி எல்லாம் நீ எடுத்துட்டு வர? நானே கீழ வருவேனே!” அதை வாங்கிப் பருகிய படியே அவள் முகம் பார்க்க,
“இல்ல நீங்க குளிக்கனுமே..அதான் நானே கொண்டு வந்தேன்..” அங்கேயே நிற்க,
குடித்து விட்டு கப்பை கீழே வைக்கப் போக ,
“என்கிட்டே குடுங்க” வாங்கிக் கொண்டு சென்றாள்.
‘ஏன் இப்படி செய்கிறாள். ஒரு வேளை நமக்கு எதாவது செய்யணும்னு இதை செய்யறாளோ. அவனோட சேத்து வைக்க போறதுக்கு நன்றிக் கடனா..அடிப் பாவி.. வேணாம் டி.. உன்னை வெட்டிவிட்டதே நான் தான். உண்மை தெரிஞ்சா என்ன செய்வ.’ உள்ளே புலம்பிக் கொண்டே அன்று தான் அணிய வேண்டிய சட்டையை எடுத்து பெட்டில் வைத்து விட்டு குளிக்கச் சென்றான்.
அவன் திரும்பி வரும் போது அவள் அவனது சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தாள்.
“ஹே..என்ன இது நீ எதுக்கு இதெல்லாம் செய்யற. நான் பார்த்துப்பேன்.” அவள் அருகில் வந்தான்.
“நீங்க போங்க நான் பண்றேன்..” அவனைத் திரும்பிப் பார்க்காமல் அவன் மீது கை வைத்துத் தள்ள, அவன் வெறும் டவல் சுற்றிக் கொண்டு வெற்று உடம்புடன் நிற்கிறான் என்பதை சில்லென்ற அவனது மார்பு சொன்னது.
அவனோ உறைந்து நிற்க, அவள் உடல் சிலிர்த்தது. அவள் முதுகை தீண்டியது அவன் உடல். இதயத் துடிப்பு அதிகமாக கையில் இருந்த அயர்ன் பாக்ஸை அவள் விடப் போக, அவன் அதைக் கவனித்துப் பிடிக்க அவளது உடலைச் சுற்றி இருந்தது ஆதவ்வின் கை.
“பாத்து.. சுட்டுக்கப் போற.” மௌனத்தைக் கலைக்க, அவனும் அவளை கை வளைவில் வைத்திருப்பதை மறந்து நின்றான். அவளுக்கு உடல் கூசி கன்னங்கள் சிவந்து விட, அவளது வாசத்தை அருகில் சுவாசித்தவன், சட்டென நகர்ந்தான்.
“சாரி.. கவனிக்கல. அயர்ன் பாக்சை பிடிக்க வந்து..” ஆதவ் சற்று தடுமாறினான் அவளது இறுக்கம் தந்த மயக்கத்தில்.
“ம்ம் சரி” என்றவள் உடனே வெளியேறி விட்டாள்.
அவள் சென்றதும் அந்தச் சட்டையைக் கையில் எடுத்தவன், “என் செல்லம் உன்னை இன்னிக்கு அயர்ன் பண்ணாளா..? ம்ம்ம்” அந்தச் சட்டைக்கு ஒரு முத்தம் வைத்து அணிந்து கொண்டான்.
அன்று முழுதும் அவனுக்கு அவள் நினைவு தான்.
கம்பனியில் இருக்கும்போது அவள் என்ன செய்கிறாள் என்று நினைக்க, ஆனால் அன்று போல வீட்டுக்குப் போன் செய்து அம்மாவிடம் பல்பு வாங்க சங்கடப் பட்டவன், அவளுக்கென்று ஒரு செல்போன் வாங்கித்தர நினைத்தான்.
உடனே தாமதிக்காமல், கடைக்குச் சென்று ஒரு புதிய மாடல் போன் ஒன்றை வாங்கி எடுத்துக் கொண்டு இரவு வீட்டிற்குச் சென்றான்.
இரவின் தனிமையில் தீட்சாவைக் கண்டவன், தன்னுடைய பையிலிருந்து புதிய போனை எடுத்து, அவளிடம் நீட்ட,
அவளோ அவனது மனதை நோகடித்தாள்.
“ஒ! நான் சத்யா கூட பேச வாங்கி வந்தீங்களா…?” ஒற்றை வரியில் அவனுக்கு அமிலத்தை அபிஷேகம் செய்தாள்.
கையை மடக்கி தன் காலிலேயே குத்திக் கொண்டான்.
‘பிசாசு ..குட்டி பிசாசு.. என் பொண்டாட்டிக்கூட நான் பேச வாங்குனது டி.. கண்ட பக்கி கூட நீ ஜொள்ளு விட நான் ஏன் டி தேடிக் கண்டு புடிச்சு போன வாங்கணும்.’ நினைத்தை வெளியில் சொல்ல முடியாமல்,
“ஆமா, நாளைக்கு பேசு. இன்னும் சிம் ஆக்டிவேட் ஆகல” கூறிவிட்டு வந்த கோவத்தில் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டான்.
“தேங்க்ஸ்” என்றவளிடம் பதில் கூறாமல் உறங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!