NMK-7
NMK-7
நின் முகைக் காதல்
7
தீட்சா ஆதவின் கையைப் பிடித்து வர, அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் ஆதவ் அப்படியே நின்றான்.
தீட்சா என்னவென்பது போலப் பார்க்க, அவனோ அவள் பிடித்திருந்த தன் கையைப் பார்த்தான். அதை உடனே உணர்ந்தவள் கையை விட்டு,
“உள்ள பார்த்தீங்களா?” கண்ணைக் காட்டினாள்.
“என்ன பார்த்தீங்களா?” புரியாதது போலக் கேட்க,
“ஐயோ, அந்தப் பொண்ணத் தான்.. நான் உங்க கைய பிடிச்சதும், உள்ள அவளுக்குப் பொசசிவ்.. கடு கடுன்னு ஆயிடுச்சு அவ முகம். அந்தப் பொண்ணு உங்கள ரொம்ப லவ் பண்றான்னு நினைக்கறேன்.” அவள் முடிக்க,
“வாட்….” கண்ணைக் குறுக்கி அவளை ஏறிட்டான்.
அவன் பார்வையிலேயே அந்தப் பெண்ணை அவனுக்குப் பிடிக்கவில்லை எனத் தோன்ற,
“இல்ல.. ஜஸ்ட் அப்படி தோனுச்சு.. அவளுக்குப் பிடிச்சா போதுமா உங்களுக்குப் பிடிக்க வேணாமா.. இல்ல? உங்களுக்கு அவள பிடிக்கல இல்ல.. விடுங்க..பாப்போம்.. நிறைய பொண்ணுங்க இருக்காங்களே! உங்களுக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கும். கண்டிப்பா செட் பண்றேன்…” தன் தோளைத் தட்டிக் கொண்டாள்.
“ஹா ஹா….வே பெட்டெர்”அவள் சொல்லிலும் செய்கையிலும் சிரித்தவன்,
“என்ன…?” தீட்சா புருவத்தைக் குறுக்கி அவனைக் கேட்க,
“இந்த வேலைக்கு என்ன பேர்ன்னு யோசிச்சேன்” அவன் அறைக்கு நடந்தான்.
அங்கேயே நின்று சற்று யோசித்துப் பார்க்க,
“ஐய..ச்சி…” தலையில் அடித்துக் கொண்டு பின்னோடு வந்தாள்.
அவள் உள்ளே வர, “என்ன சொன்னீங்க என்னை..!?” முறைத்துக் கொண்டே கேட்க வந்தவள், அவன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்து சற்று அமைதி காத்தாள்.
அவளைக் குழப்பமாகப் பார்த்தவன், போனில் பேசலானான்.
“மச்சான் நான் அவ கிட்டயும் கேட்டுட்டு போன் பண்றேன். ஒரு பத்து நிமிஷம் குடு” காலை கட் செய்தான்.
“என் ப்ரென்ட் பிரதாப் தெரியும்ல. நம்ம கல்யாணத்துல பார்த்திருப்ப..” அவளிடம் கேட்க,
“ம்ம்..”
“அவன் நம்மள அவங்க வீட்டுக்கு டின்னர்க்கு வர சொல்றான். நான் உன்னை கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். உனக்கு இந்த மாதிரி எல்லாம் என்கூட வர்றது கொஞ்சம் சங்கடமா இருக்கலாம். அதுனால தான் அப்படி சொல்லிட்டேன். உனக்கு விருப்பம் இல்லனா வேண்டாம்.” அவனாகவே வருவதாகக் கூடச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அவளின் பதில் அவனுக்கு அவசியமாக இருந்தது.
தீட்சாவிற்கும் அவளிடம் அவன் முடிவைக் கேட்பது பிடித்திருந்தது. ஏனெனில் அவளது தந்தை எதற்கும் அவளிடம் கேட்டதில்லை. திருமணம் கூட அவளைக் கேட்காமல் தானே செய்தார். அந்த ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவளுக்கு ஆதவ்வின் இந்த குணம் மிகவும் பிடித்தது.
ஆதவ் இப்போது கணவன் என்பதையும் தாண்டி அவளுக்கு ஒரு சுமூக உறவை ஏற்படுத்தி இருதான்.
அதற்காகவே ஒத்துக்கொள்ள முடிவு செய்தாள்.
“உங்களுக்குப் போகணும்னு இருக்கா?” முடிவு தன் கையில் என்பதால் சற்று ஆட்டம் காட்ட நினைத்து, மிடுக்காகவே கேட்டாள்.
அவளின் தோரணையில் லயித்து, “அவன் என்னோட க்ளோஸ் ப்ரென்ட். ஸ்கூல் லேந்தே ரெண்டு பேரும் ஒன்னா படிச்சோம். வி டோன்ட் ஹேவ் சீக்ரெட்ஸ். அந்த அளவு க்ளோஸ். அப்போ நான் என்ன நினைப்பேன்.?” அவளிடமே கேள்வியைத் திருப்ப,
“அப்போ நான் பர்மிஷன் குடுக்கலனா போக மாட்டீங்க. அப்டித் தானே?”
“ம்ம்ம் டின்னர்க்கு போக மாட்டேன். அவன வெளிய மீட் பண்ணிப்பேன்.” குரல் சற்று தழைந்தது.
“சரி அப்போ போகணும்னா.. வெளிய நீங்க என்னை என்ன சொன்னீங்களோ அதுக்கு சாரி சொல்லுங்க.. அப்போ தான் நான் வருவேன்.” கையைக் கட்டிக் கொண்டு நின்றாள்.
ஆதவ்வோ…’பெரிய டீச்சர் இவ போடி….’ மனதில் அவளை வச்சு செய்தான்.
“வெளிய நான் என்ன சொன்னேன்.?” புதிதாக யோசிப்பது போல நிற்க,
“ம்ம்ம்…நான் என்ன வேலை பாக்கறேன்னு நீங்க கேக்கல?” ஓரக்கண்ணால் முறைக்க,
“ஆமா கேட்டேன். ஆனா என்ன வேலைன்னு என் வாயால சொல்லலையே! உனக்கு என்ன தோணுச்சு?” அவள் வாயப் பிடுங்க,
“அது..ம..” சொல்ல வந்தவள், எதற்கு வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளனும் என்று மௌனமானாள்.
“என்ன சொல்லு..?” உதட்டோரம் சிரிப்பை அடக்கி ஆதவ் நிற்க,
“நான் சொல்லமாட்டேன்.”
“ஆனா அந்த வேலைய தான செய்யப் போற? ரைட்…!” சிரித்துக் கொண்டே அவன் லேப்டாப்பில் மூழ்க,
“ஓ அப்படியா.. சரி அப்போ விடுங்க.. உங்க ப்ரென்ட் வீட்டுக்கு நான் வரணும்னா..நீங்க ஒன்னு பண்ணனும்.” ஏதோ பெரிய ப்ளான் போல அவனைப் பார்க்க,
அவனோ டைப் செய்து கொண்டே, “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க..செஞ்சிடறேன்…” அழுத்தம் கொடுத்து முடித்தான்.
“நீங்க ஒரு பொண்ண செலக்ட் பண்ணனும். என்கிட்ட அவளைக் காட்டனும்.”
லேப்டாப்பில் கண்களைப் பதித்திருந்தவன், நிமிர்ந்து அவளைக் காண, அவன் முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை.
சில நொடிகளில் அனைத்தையும் தவிர்த்துச் சிரித்தவன்,
“ம்ம்..சரி சொல்றேன்.” அவளை நினைத்தே கூறினான்.
“நிஜமாவா…நிஜமாவா..!” ஆர்வத்தில் அவன் அருகில் ஓடி வர, அவன் தான் அவளின் அருகாமையில் தடுமாறினான்.
“நிஜமாத் தான். எனக்கு பிடிச்சா உனக்கும் சொல்றேன். அப்போ பிரதாப்க்கு போன் பண்ணிச் சொல்லிடவா..நாம வரோம்னு?”
“ம்ம் சொல்லிடுங்க..” மகிழ்ச்சியாகச் சொல்லி அவள் விலகி நிற்க,
மதியம் வரை அவனுடன் அதுவும் இதுவும் பேசிக் கழித்தாள். அவனும் பேசிக்கொண்டே தனது வேலைகளை முடித்து விட,
“இங்க கேண்டீன் இருக்கு. போய் சாப்பிடலாமா? இல்ல இங்க கொண்டு வர சொல்லட்டா?” அவளுக்குப் பசிக்கும் முன்பே அவன் கேட்டுவிட,
“போயே சாப்பிடலாம்.” அவனுடன் கிளம்பினாள்.
செல்லும் வழியில் அவளிடம் சத்யாவைப் பற்றிக் கேட்க நினைத்து,
“போன் பண்ணிட்டியா உன் ஆளுக்கு? என்ன சொல்றான்?” அவளைக் காணாமல் தவிர்த்துக் கேட்க,
தீட்சாவிற்கு இவன் போன் வாங்கிக் கொடுத்தது மறந்தே போனது.
“ஸ்ஸ்ஸ்… போன்-அ வீட்லயே மறந்துட்டேன்.” தலையில் கை வைத்துக் கொண்டாள்.
அவள் பேசி இருந்தாலும் அவனுக்கு பாதிப்பில்லை என்றாலும், அவள் பேசாமல் விட்டது ஆதவ் மனதிற்கு இதமளிக்கவே செய்தது.
இருவரும் சேர்ந்து உண்டு விட்டு, மாலை விரைவாகவே வீடு வந்து சேர்ந்தனர்.
அவர்களை எதிர் கொண்ட உமா,
“கம்பனி எல்லாம் பாத்தியா மா. எப்படி இருந்தது?” மருமகளிடம் விசாரிக்க,
“ரொம்ப ரொம்ப அழகா இன்டீரியர் டிசைன் பண்ணிருக்காங்க அத்தை. பாக்க ரொம்ப அழகா இருந்தது.” சிரித்த முகத்துடன் கூறினாள்.
“அம்மா, பிரதாப் அவன் வீட்டுக்கு டின்னர்க்கு வர சொல்லிருக்கான்.” ஆதவ் இடையே புகுந்து விஷயத்தைக் கூற,
“ஓ!! போயிட்டு வாங்க. அப்படியே அவனையும் அவனையும் மாதவியையும் ஒரு நாள் வீட்டுக்கு கூப்பிடு. ரொம்ப நாள் ஆச்சு அவன் வந்து” உமா கரிசனையுடன் கூறினார்.
“சொல்றேன் ம்மா..” அவன் அறைக்குள் சென்று விட,
“தீட்சா..உங்க அப்பா போன் பண்ணி இருந்தாருமா. உன்னை அப்பறமா பேசச் சொன்னாரு.” தகவல் கொடுத்தார் உமா.
அப்பா எனக் கேட்டதுமே தீட்சாவின் முகம் மாறிவிட்டது.
“சரி அத்தை. நான் பேசறேன்.” முகத்தை கஷ்டப் பட்டு நேர் படுத்தினாள்.
அவள் உள்ளே சென்றதும் அவளது துடிப்பு அடங்கி இருப்பதைக் கண்ட ஆதவ்,
“என்ன ஆச்சு?” எனக் கேட்க,
“அப்பா போன் பண்ணி இருந்தாராம். அத்தை என்னை பேச சொல்றாங்க.” அவளுக்கு விருப்பம் இல்லை என அவன் அறிவான்.
“சரி. பேசிட்டா போச்சு. நானும் உன்கூடத் தானே இருக்கேன். அவருக்கும் கொஞ்சம் நிம்மதி வேணுமே. பேசு.” தன் போனில் டயல் செய்து அதை ஸ்பீக்கரில் போட்டான்.
அவள் வேண்டாம் என்பதற்குள் ரிங் போய்க்கொண்டிருக்க,
“மாப்ள.. எப்படி இருக்கீங்க? தீட்சா எப்படி இருக்கா?” நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்தையின் குரல் கேட்க, அவளுக்குள் இருந்த அந்த பய உணர்வு எட்டிப் பார்த்தது. பேச நா வரவில்லை.
“நல்லா இருக்கோம் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க.” தீட்சாவைப் பார்த்துக் கொண்டே ஆதவ் பேசினான்.
“நான் ஏதோ இருக்கேன். இன்னும் வேலை பார்த்துட்டு இருக்கறதுனால என் வண்டி ஓடுது. தீட்சா வீட்டுல இல்லாம, வீடே களை இழந்து போச்சு. நீங்க ரெண்டு பேரும் வர ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு விருந்துக்கு வரணும்.” பாசத்துடன் அவர் கூற,
“கண்டிப்பா நாங்க வரோம். தீட்ச்சா கிட்ட பேசுங்க.” ஆதவ் கூறிவிட,
அவள் முடியாது என்பதாய் தலையசைத்தாள். கண்களால் பேசு என்பதாய் அவன் பதில் மொழி கூற, வேறு வழியின்றி,
“அப்பா..”என்றாள்.
“தீட்ச்சா..எப்படி டா இருக்க. அப்பா மேல கோபமா? எல்லாம் உன்னோட நல்லதுக்குத் தான் டா அப்படி நடந்துகிட்டேன். உனக்கு நல்ல வாழ்க்கை அமையனும், ஆனாலும் உன்கிட்ட நான் கொஞ்சம் ஓவர் கடுமையா நடந்துகிட்டேன். அப்பாவ மன்னிச்சிடு மா. வீட்டுக்கு வா. உனக்கு எல்லாம் சொல்றேன்.” உணர்ச்சிவசப்பட்டு அவர் பேசிக்கொண்டே போக,
தீட்சா அழகு காட்டிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டவனுக்குச் சிரிப்பு வர,
“பாவம்..ஓகே சொல்லு..” அவளுக்கு மட்டும் கேட்கும்படி வாய் அசைத்தான்.
அவனை மதித்து, “சரி வரோம்” ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள்.
பிறகு அவரும் வைத்துவிட,
“பாவம் அவர். அவரோட நிலைமைல இருந்தா தான் அந்தக் கஷ்டம் தெரியும். நீ தேவ இல்லாம அவர் மேல் கோவத்தை வளர்த்துக்கிட்டு இருக்க.”
“அவர் நிலைமைனா? அப்போ எனக்கு நிலைமை இல்லையா? ஒரு நாள் கூட என்ன வேணும், எப்படி இருக்கன்னு கேட்டது கிடையாது. எல்லாம் வேலைக்கார மீனாம்மா தான் செய்வாங்க. நான் எங்க போறது?” அவளுக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது.
பொறுக்க முடியாமல், “ஹே! எதுக்கு இப்போ அழற..நோ நோ..”அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
“நான் ஒன்னும் அழல.” கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“நீ இனிமே அழவே கூடாது. புரியுதா?” உரிமையாக அவன் வார்த்தைகள் வர,
அவளும் அந்த உரிமையைக் ஏற்றுக் கொண்டாள். அவளுக்கு அவனது உரிமை பழகியது.
சில நொடிகள் அப்படியே இருக்க,
இருவரும் தன்னிலை உணர்ந்த சமயமோ, சட்டென விலகிக் கொள்ள.. அந்த எண்ணத்தைக் கலைத்துக் கொள்ள விரும்பினான் ஆதவ்.
“சரி நீ ரெடி ஆகிட்டு வா. நான் கீழ இருக்கேன். பிரதாப் வீட்டுக்கு போகலாம்.” சாதரணமாக மொழிந்து விட்டுச் சென்றான்.
சூழ்நிலை சரியான போதும் இருவருக்கும் மூச்சு விடுவது சிரமமாகிப் போனது. முதல் நெருக்கம், முதல் அணைப்பு என இருவருக்கும் மட்டுமே ஆன ஒன்று நிகழ்ந்தது.
அவள் கீழே வந்த போதோ, தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன், மேலே சென்றான்.
இருவரும் கிளம்பி நிற்க,
“ஆதவ் இன்னிக்கு வீட்டுல பூ கம்மியா இருந்தது, அதுனால சாமிக்கு வெச்சுட்டேன். போற வழியில தீட்சாவுக்கு பூ வாங்கிக் குடு.” தன்னால் முடிந்த வரை இருவருக்கும் நெருக்கம் உண்டாக்க நினைத்தார் உமா.
சம்மதித்துத் தலையசைத்துச் சென்றான்.
இன்றும் அவளுடைய உடையைத் தான் அணிந்திருந்தாளே தவிற, ஆதவ் அவளுக்கென வாங்கி வைத்த ஒன்றையும் இன்னும் அவள் தொட்ட பாடில்லை.
அவனுக்கு இதில் சிறு வருத்தம் இருக்கவே செய்தது. ஆதவ் அதை நினைத்துக் கொண்டு இருக்கையில், தீட்சாவிற்கு வேறு சிந்தனை ஓடியது.
ஆதவ்வும் பிரதாப்பும் நெருங்கிய நண்பர்கள், ஒளிவு மறைவு இல்லாதவர்கள் என்று அவன் கூறியிருந்தது. நம் விஷயத்தைக் கூட அவனிடம் சொல்லி இருப்பானோ என்பதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் முகம் வாடி இருப்பதைக் கண்டவன், ஒரு வேளை சத்யாவிற்குப் போன் செய்துவிட்டாளோ எனவும் நினைக்க, ‘இல்லையே.. இவ போன் பேசி இருந்தா உடனே நமக்கு தகவல் வந்திருக்குமே’ எனவும் இருக்க , எதற்கும் கேட்டு வைத்தான்.
“என்ன டல்லா இருக்க? சத்யாவுக்கு போன் பண்ணியா?” மீண்டும் அவன் கேட்க, தீட்சா அதை மறந்தே இருந்தாள்.
“சாரி மறந்துட்டேன். இத்தனை நாள் போன் இல்லாம இருந்துட்டேனா, அதுனால அப்படி ஒன்னு என்கிட்ட இருக்கறதே மறந்து போச்சு.” அவளுக்கு சத்யாவின் நினைப்பை விட, இவனுக்கு பெண் பார்க்கும் விஷயம் தான் பெரிதாக இருந்தது.
மெல்லிதாக சிரித்தவன் “ஓ! பரவால்ல.. நோ ப்ராப்ளம். ஒரு வேளை அவன் ரொம்ப திங்க் பண்ணி ஒரு ஐடியா வோட உன்கிட்ட பேசுவான் போலிருக்கு”.
‘அப்படியும் இருக்குமோ!’ தீட்சாவின் அறிவுகெட்ட மூளை சிந்தித்தது.
இருவரும் பிரதாப்பின் வீட்டிற்கு வந்து இறங்கினர். பிரதாப்பும் மாதவியும் அவர்களை வாசலில் வந்து வரவேற்றனர்.
“என்ன மச்சான், எப்படி இருக்க? முன்னைக்கு இப்போ பெருத்த மாதிரி இருக்க?” கிண்டல் செய்தான்.
“ஆமா டா, நாலு நாள்ல நாப்பது கிலோ வெய்ட் போட்ருக்கேன். எப்படி மாது இன்னும் இவன வீட்ல வெச்சிருக்க?” அவளையும் துணைக்கு இழுக்க,
“என்ன பண்றது அண்ணா. ஏதோ ஷாப்பிங்க்கு காசு கிடைக்குதேன்னு வெச்சுட்டு இருக்கேன். இல்லனா எப்பயோ துரத்தி இருப்பேன்.” அவளும் கணவனை கிண்டல் செய்து கலகலக்க, இவர்களின் இந்த நட்பைக் கண்டு தீட்சாவும் முகம் மலர்ந்தாள்.
மூன்று அரை கொண்ட தனி வீடு அவர்களுடையது. விசாலமாக நன்றாகவே இருந்தது. மிகவும் அழகாக வைத்திருக்க தீட்சா அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வா தீட்சா, உனக்கு வீட்டைக் காட்றேன்.” மாதவி அழைத்துச் செல்ல,
நண்பர்கள் இருவரும் மனம்விட்டுப் பேசினார்.
“என்ன டா? எப்படி போகுது?” பிரதாப் ஆரம்பித்தான்.
“அத ஏன் டா கேட்கற, இவ அவனப் பத்தி ஒரு இன்பர்மேஷனா என்கிட்டே சொல்லுவான்னு பார்த்தா.. இன்னும் லவ் பண்றேன்னு சொல்றா. மச்சான், அந்தப் பொருக்கி பல பொண்ணுங்க கிட்ட பேசுறவன், இவ கிட்டயும் ட்ரை பண்ணிருக்கான். இவ என்னடானா…? ப்ச்…”அலுப்பாகத் தலையைக் கோதிக் கொள்ள,
“அவ கிட்ட அவனப் பத்தி சொல்ல வேண்டியது தான. ஏன் வெய்ட் பண்ற?”
“அப்படி இல்ல டா. அது லவ்வே இல்லன்னு அவ புரிஞ்சுக்கணும். சீக்கிரமே நடக்கும். மேக்சிமம் ரெண்டு வாரம் இல்ல மூணு வாரம்.அதுக்குள்ள புரிய வைக்கறேன்.” சுலபமாக அவன் கூறிவிட்டான்.
“அவன பத்தி புரிஞ்சுக்கறது இருக்கட்டும். நீ அவள மூணு வருஷமா தொடர்ந்துட்டு இருக்க, அவளோட கல்யாணமே ஒரு ப்ளான்னு தெரிஞ்சா அப்பறம் எப்படி இருப்பா? உன்னை என்ன நினைப்பா?” கவலையாகப் பிரதாப் கேட்க,
“ கொஞ்சம் கூடவா டா என் லவ் புரியாம போய்டும். அவ தான் வேணும்னு ப்ளான் பன்னவனுக்கு அவள தக்கவெச்சுக்கவும் தெரியும். அப்படி இல்லனா..” நாக்கைக் வாய்க்குள் துருத்திச் சிரித்தான்.
“இல்லனா?” கூர்மையாகப் பிரதாப் அவனைப் பார்க்க,
“அப்புறம் என்ன டா.. கெஞ்சிகிட்டா இருப்பேன். புருஷனுக்கு உள்ள உரிமைய காட்ட வேண்டியது தான். மேட்டர் பண்ணிட்டா முடிஞ்சுது. அப்பறம் பொறுமையா புரிஞ்சுக்கோ, மொதல்ல என் கொழந்தைக்கு அம்மாவா என்கூட இருன்னு சொல்லிடுவேன். அவள விட்டுட்டு எல்லாம் என்னால இருக்க முடியாது டா. சண்ட போட்டாலும் சரி, அடிச்சாலும் சரி என்னை அவ கொலையே பண்ணாலும் கூட இருன்னு சொல்லிடுவேன்.” பிரதாப்பின் தோளைத் தட்ட,
“டேய் மச்சான்.. நீ இருக்க பாரு. கேடிடா நீ. அவ தான் பாவம். தங்கச்சி…உனக்கு இந்த அண்ணன் சப்போர்ட் இருக்குமா..” மார்தட்டி குரல் கொடுத்தான்.
“போதும்டா உன் பாசம். சரி அவகிட்ட ஒரு பிட்ட போடு. அல்ரெடி எனக்கு ஒரு பொண்ண புடிக்கும்னு. மீதிய நான் டெவலப் பண்ணிகறேன்.” மாஸ்டர் ப்ளான் ஒன்றை உருவாக்கினான்.
அவனின் செயல் எண்ணம் அறிந்த பிரதாப் வேறு வழியின்றி சம்மதித்தான்.