NMK-8

முகைக் காதல்-8485a7e3

NMK-8

நின் முகைக் காதல்
8

வகை வகையாக இல்லாமல், நான், குருமா, ப்ரைட் ரைஸ் , பேபி காரன் ஃப்ரை ஒரு ஸ்வீட் என சிம்பிள்ளாக உணவை பரிமாறினாள் மாதவி.
“அண்ணா, நாளைக்கு லீவ் தான. சனிக்கிழமை. இன்னிக்கு இங்கயே ஸ்டே பண்ணிடுங்க. நாளைக்கு காலைல போகலாம். நைட் நாம ஒரு மூவி பாத்துட்டு கொஞ்சம் பேசிட்டு இருந்துட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு போகலாமே” ஐடியா கொடுத்தாள்.
ஆதவ் தீட்ச்சாவைக் காண, அவள் இவனின் பதிலை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அன்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும் மாதவியைப் பிடித்திருந்தது.
“இல்ல மாது. அம்மா கிட்டலாம் சொல்லல.” இழுத்தான்.
“என்ன அண்ணா, சின்ன பையன் மாதிரி காரணம் சொல்ல ஆரம்பிச்சுடீங்க. ஆன்ட்டி கிட்ட நான் பேசறேன்.” என தன் போனை எடுக்கப் போனவளை,
“மாது, கூல். அவன் இன்னொரு நாள் ப்ரீயா வருவான். இப்போ விட்டுடு” மறைமுகமாக மனைவிக்கு ஜாடை காட்ட, அவளும் ஏதோ சரியில்லை என உணர்ந்து கொண்டாள்.
“சரி இப்போ விடறேன். ஆனா, இன்னொரு நாள் கண்டிப்பா தங்கணும்..” பாசமான கண்டிப்பு அவளது குரலில் தெரிந்தது.
பாதி சாப்பாடு கலகலப்பாக சென்று கொண்டிருக்க, மெல்ல நண்பனின் பிளானை ஆரம்பித்தான் பிரதாப்.
“தீட்சா, உனக்குத் தெரியுமா, உங்க கல்யாணத்துக்கு முன்னாடி ஆதவ்வ ஒரு பொண்ணு விழுந்து விழுந்து லவ் பண்ணா. ஆனா இவன் தான் அவள திரும்பி கூட பாக்கல” லேசாக தூண்டில் போடா, மீன் தன்னால் வந்து விழுந்தது.
“என்ன சொல்றீங்க அண்ணா…” கண்களை விரித்து ஆதவ்வை ஓரக் கண்ணால் பார்த்தவள், பிரதாப்பிடம் விவரம் கேட்கலானாள்.
“என்ன இது புது நியூஸ் ஆ இருக்கே?” மாதவியும் அறியாமல் கேட்க,
“டேய் சும்மா இரு டா..” சரியாக நடித்தான் ஆதவ்.
“அட நீ என்னை உண்மைய சொல்லவிடு” நண்பனுக்கு ஏற்ற துணை நடிகனாக பிரதாப் அவனை உதாசீனம் செய்ய,
“அந்த பொண்ணு இவன காலேஜ் லேந்தே லவ் பண்றேன்னு பின்னாடி சுத்துனா. கல்யாணம் பண்ணா ஆதவ் தான்னு இவன இம்பிரஸ் பண்ண நெறைய முயற்சி பண்ணா. இவன் இல்லனா செத்துருவேன்னு கூட சொல்லிப்பாத்தா.. ஆனா இவன் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டான். ஏன் இவன் கல்யாணத்துக்கு கூட அவ வந்தா.” எக்கச்செக்க பிட்டுகளை சரமாரியாக அள்ளித் தெளித்தான்.
“என்ன? கல்யாணத்துக்கு வந்தாளா? யாரு அவங்க? பேர் என்ன?” தீட்சா ஆர்வமாக,
“ஹான்..” சற்று திரு திரு வென விழித்தவன், சுற்றும் முற்றும் பார்க்க,
‘ஐயையோ மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டானே!’ ஆதவ் தலையில் அடித்துக் கொண்டான்.
பிரதாப்பிற்கு பேரை எங்கு தேடுவது எனத் தெரியாமல் டேபிளில் இருந்தவற்றைப் பார்க்க அங்கே ப்ரைட்ரைஸ்க்கு வைத்த சாஸ் இருக்க..
“ம்ம் அவ பேர் சாஸ்” என்றான்.
மாதவி நேரம் பார்த்து, “தக்காளி சாஸா?” மானசீகமாக மண்டையில் கொட்ட,
“ச்ச ச்ச.. எல்லாரும் அப்படி கூப்பிடுவாங்க.. அவ பேர் சாஷா..” ‘ஈஈ’ என சமாளித்து இளித்தான் பிரதாப்.
ஆதவ் ‘நல்ல வேளை அவ்வை சண்முகி ன்னு சொல்லாம போனியே’ மனதுக்குள் அவனை வஞ்சினான்.
“என்ன பேரு இது?… சா நாவும் வரல ஷா நாவும் வரல.. பேரு மட்டும் சுப்ரமணிய பாரதின்னு சொல்றாப்பல இருக்கு. சாஷா வாம். வாஷ் பேசின் மாதிரி இருக்கு.” மாதவி அசால்ட்டாக சொல்லிவிட,
ஆதவிற்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அடக்க முயன்று முடியாமல் சத்தமாக சிரித்து விட, அவனுக்குப் புரை ஏறியது. இரும ஆரம்பித்தது விட,
தீட்சா பதறிப் போய் அவன் தலையைத் தட்டினாள்.
“தண்ணி குடிங்க” க்ளாசை எடுத்து அவன் வாயில் வைக்க, தன்னை அறியாமல் அவன் நெஞ்சில் கை வைத்து தடவி விட்டாள்.
மாதவியும் பிரதாப்பும் கண் ஜாடையில் சிரித்துக் கொள்ள, சற்று நேரம் கழித்தே சரியாகியது ஆதவ்விற்கு.
“எல்லாம் முடிஞ்சுதா?” நக்கல் செய்தான் பிரதாப். ஆதவ் சிரிப்பை அடக்கி அவனைப் பார்க்க,
“இன்னுமா டா ஸ்கூல் பையன் மாதிரி அவ தொட்டதும் அவளையே பார்ப்ப?” அவனுக்கு மட்டும் கேட்கும் படி கிண்டல் செய்தான் பிரதாப்.
“என் லவ் டா அவ..” உணர்ந்து கூறினான்.
“அண்ணா, அந்தப் பொண்ண பத்தி சொல்லுங்க..” தீட்சா இடையில் புகுந்தாள்.
‘உன் லவ்வு உனக்கு ஆள் தேடுது’ கிசுகிசுத்தான்.
“அவ என்னம்மா.. இன்னும் எனக்கு போன் பண்ணி இவனப் பத்தி விசாரிப்பா..” வரப் போகும் விளைவு தெரியாமல் சாதாரணம் போலச் சொல்லிவிட்டான்.
தீட்சா மனதிற்குள் பல திட்டங்களை நொடிப் பொழுதில் போட்டு முடித்தாள்.
“தீட்சா… நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத.. அண்ணனை உன்கிட்ட இருந்து யாரும் பிரிக்க மாட்டாங்க.” மாதவி சொல்லிச் சிரிக்க,
அசடு வழிந்தாள் தீட்சண்யா.
சாப்பாட்டுக் கடை முடிந்ததும், “இன்னொரு நாள் கண்டிப்பா நீங்க வரணும், சரியா தீட்சா..?” மாதவி கோரிக்கை வைக்க,
அதை ஏற்றுக் கொண்டு கிளம்பினர். கிளம்பிய போதே நேரம் ஆகிவிட,
“மச்சான், நேரம் ஆகிடுச்சே. தங்கிட்டு போறீங்களா?” பிரதாப் மீண்டும் கேட்க,
“இல்ல பரவால்ல டா.. கிளம்பறோம்” விடைபெற்றான் ஆதவ்.
வரும் வழியிலேயே ஆரம்பித்தாள் தீட்சா. “ நீங்க ஏன் அந்த சாஷாவ புடிக்கலன்னு சொன்னீங்க?”
ஆதவ் எதிர்ப்பார்த்தது போலவே ஆடு வந்து தலையை நீட்டியது.
“நான் எப்போ அவள புடிக்கலன்னு சொன்னேன்? அவ கேட்டப்ப எனக்கு அதுல இன்டெரெஸ்ட் இல்லன்னு சொன்னேன்.” பிடிகொடுக்காமல் பேசினான்.
“அப்போ அவள உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” கண்களில் வழி கிடைத்துவிட்ட குஷி தெரிய,
“எனக்கு அவ விஷயத்துல பிடிக்கும் பிடிக்காதுன்னு இல்ல. அவ்வளவா அவளைப் பத்தி நான் தெரிஞ்சுக்கல.”
“இப்போ தெரிஞ்சுக்க ஆச படறீங்களா?” ஆர்வத்துடன் அவன் முன் இருந்தாள்.
“இப்போ உனக்கு என்ன வேணும்?” சிரித்தபடியே கேட்க,
“ஒண்ணுமில்ல…உங்களுக்கும் அவள பிடிச்சிருந்தா..” இழுத்தாள்.
“சரி உனக்காக அவ கிட்ட பேசறேன். போதுமா? எனக்கும் என்னைப் பிடிச்ச ஒரு பொண்ணு மனைவியா கிடச்சா நல்லது தான..” சிறு குத்தல் அவன் பேச்சில் இருந்தது.
அது அவளுக்கும் உணர்ந்ததோ என்னவோ.. மனம் அவன் சொன்ன வார்த்தைகளில் காயப் பட்டது போன்ற உணர்வு! இருந்தாலும் தனக்கு எதற்கு வருத்தம்? அவனுக்கு ஒரு துணை ஏற்படத் தானே தானும் விழைகிறோம் என்ற நினைப்பும் மாறிமாறித் தோன்றக், குழம்பிப் போனாள். அதற்குப் பிறகு அவளும் அமைதியானாள்.
வீட்டிற்கு வந்ததும் இருவரும் எப்போதும் போல இடையில் தலையணை வைத்துப் படுத்துக் கொள்ள, இருவரின் உறக்கமும் அவர்களை ஆக்கிரமித்தது.
காலையில் சற்று நேரம் கழித்து எழுந்தாலும், தீட்சாவே முதலில் எழுந்தாள். ஆதவ்வின் உறக்கம் கலையாமல் எழுந்து சென்றவள், ஒரு காபியை எடுத்துக் கொண்டு மீண்டும் அறைக்கு வந்தாள்.
ஆதவின் உறக்கத்தை கவனித்தாள். அவனது வலிய தோள்கள் அவளது கண்களுக்கு விருந்தானது. நடுவில் இருந்த தலையணை அவன் கையில்லாத பனியன் போட்டு, அருகில் இருந்த தலையணையை இறுக்கி கைகளுக்குள் சிறைப்படுத்தி இருந்தான். அவன் இதயத்தை அணைத்துக் கொண்டு இருந்தது அந்த இலவம்பஞ்சு. அவனது கலைந்த தலைமுடியும் காற்றில் ஆட, அதைக் கண்டவளின் மனதில் சிறு சறுக்கல்!
‘தூங்கும் போது கூட எவ்வளோ அழகா இருக்கான்.’ மனதின் கற்பனை, வயதின் கோளாறு என தலையணைக்கு பதிலாக அவளைக் கற்பனை செய்ய வைத்தது.
உடனே உடல் சிலிர்த்துவிட, கண்ணை மூடி ‘ச்சை’ என தலையில் அடித்துக் கொண்டவள், அவன் வாங்கிக் கொடுத்த செல்போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு ஓடினாள்.
காபியை அருந்திக் கொண்டே, அந்தப் போனில் இருந்து சத்யாவிற்கு டயல் செய்தாள். இரண்டு ரிங்கில் எடுத்தவன்,
“உன் வீட்டுக்கு போயிட்டியா?” எடுத்த எடுப்பிலேயே அதைத் தான் கேட்டான்.
“என் வீட்டுக்குப் போறதா? என்ன சத்யா நான் தான் சொன்னேனே என் நிலமைய, அப்பறம் ஏன் இப்படி கேட்கறீங்க?” தீட்சாவிற்கு எரிச்சலாக இருந்தது.
“அப்பறம் இன்னும் எத்தனை நாள் அவன் கூட குடும்பம் நடத்திட்டு வரலாம்னு இருக்க..?” சத்யாவின் வார்த்தைகள் எல்லை மீற ஆரம்பித்தது.
“என்ன பேசறீங்க? ஆதவ் ஜென்டில் மேன்.” கடுகடுத்தாள்.
“ஆமா, இத நான் நம்பனும். அவன் கூட ஒரே ரூம்ல ஒன்னா இருந்துட்டு அப்பறம் என்கிட்டே எதுக்கு வரணும்? என்னை என்ன இளிச்சவாய்ன்னு நெனச்சியா?” இவளை ஒரு பொருட்டாகக் கூட அவன் மதிக்கவில்லை.
“ஹே! என்ன பேசற நீ. உன்னை எல்லாம் மதிச்சு லவ் பண்ணேன் பாரு. என்னை சொல்லணும். ச்ச ச்ச..” வார்த்தையிலே அவன் மீது அருவருப்பைக் காட்டினாள்.
“ஐயோ..இவ அப்படியே லவ் பண்ணி, என் கூட பார்க் பீச் ன்னு சுத்தி கிழிச்சுட்டா.. கேண்டீன்ல கூட நின்னு டீ குடிச்சா லவ்வா டி. அப்படி பாத்தா நான் நூறு பேர லவ் பண்ணனும். ஏதோ நல்லா இருக்கியே ட்ரை பண்ணலான்னு பாத்தேன். அதுக்குள்ள எனக்கு இந்த ஆஸ்ட்ரேலியா ஆபர் வந்துச்சு. இங்க வந்தா ஏகப் பட்ட பீஸ் இருக்கும். உன்ன ட்ரை பண்ண நான் என் கரீயர வேஸ்ட் பண்ணிட்டு இருக்கனுமா?
சரி இந்தியா வந்தாலாவது உன்னை மீண்டும் ட்ரை பண்ணலான்னா, உனக்கு கல்யாணம் வேற ஆயிடுச்சு. அடுத்தவன் தொட்டதெல்லாம் நான் தொட மாட்டேன். சரியா, இனிமே என்கூட வந்துடறேன்னு பேசாதா. உன்னை வச்சுக்கலாம். ஆனா தாலி கட்டி வாழ முடியாது. உனக்கு தான் அல்ரெடி தாலி கட்டிடானே ஒருத்தன். அப்பறம் என்ன. போ. அவன் கூடயே வேணாலும் இரு, இல்ல வேற யார வேணாலும் பாத்துட்டு போ. எனக்கு போன் பண்ணி தொந்தரவு பண்ணாத.
ச்ச மொதல்ல போன் நம்பர மாத்தணும். குட் பை!” வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டு போனை வைத்து விட்டான்.
தன்னுடைய இத்தனை நாள் வாழ்வில் இப்படிப் பட்ட வார்த்தைகளையும் வசவுகளையும் அவள் கேட்டதே இல்லை. தன்னை ஒருவன் எத்தனை கீழ்த்தரமாகப் பேசிவிட்டான். ‘நூறு பேர் கூட டீ குடித்ததும் தன்னையும் ஒன்றாகக் கூரிவிட்டானே! அப்போ நான் தான் லவ் னு சொல்லி அவனை பிடித்துக் கொண்டு இருந்தேனா? எவ்வளவு மோசமான ஆள் இவன்! இவனை நம்பி நான் போயிருந்தால்?!’ நினைத்தாலே குலை நடுங்கியது.
தன் தந்தை கூட மெதுவாக அதட்டுவார். அதுவும் வெளியே போகக் கூடாது. நிறைய பேருடன் பழகக் கூடாது. இப்படித் தான் இருக்கும். மற்ற படி அவளுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ அவளுக்குத் தேவையான அனைத்தும் வீட்டில் இருக்கும். பாசம் என்ற ஒன்றைக் காட்டாமல் கண்டிப்பு காட்டினரே தவிற, வேற எதுவும் இல்லை.
அதையே நான் பிடிக்காமல் அவரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருக்கும்போது, இவன் யார் என்னை இப்படி எல்லாம் பேச? அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அவன் கூறியது போல, அவனுடன் நின்று கேண்டீன் டீ மட்டுமே அவள் குடித்திருக்கிறாள். மற்றபடி வெளியே எங்கும் அவள் சென்றது கிடையாது. டீ குடிக்கும் அந்தப் பத்து நிமிடத்தில் கூட பெரிதாக அவனிடம் ஒன்றும் அவள் பேசி விடவில்லை.
‘இதற்குப் பேர் காதல்னு நான் நினச்சுட்டு இருக்கேனா?!’தன்னுடைய அறியாமையை நினைத்து அவளுக்கே கோபம் வந்தது.
தன்னுடைய தந்தை தனக்கு எப்படி ஒரு வாழ்வை அமைத்துக் கொடுத்திருக்கிறார்! ஆதவ் கிருஷ்ணா எவ்வளவு நல்லவர். முதலிரவில் தான் இன்னொருத்தனை காதலிப்பதாக சொல்லியும் அவர் கோவப் படாமல் தன்னை புரிந்து கொண்டு எவ்வளது மரியாதையாக என்னை நடத்தினார்? அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னிடம் எப்படிப் பழகுகிறார்கள்?
இந்த படுபாவிக்காகவா அவரிடம் நான் இப்படி பேசினேன்? இனி என்ன செய்வது?
ஆதவிடம் சென்று என்ன சொல்வது? அவன் என்னை கழட்டி விட்டுட்டான், நீங்க என்னை ஏத்துக்கோங்கன்னா? ச்ச அது அசிங்கம்.. அவன் இல்லன்னு சொன்னதும் நானான்னு கேட்கமாட்டாரா?
ஆனாலும் ஒரு நாள் கூட சத்யாவைப் பற்றிக் கனவு கண்டதில்லை. இப்போது சற்று நேரத்திற்கு முன் கூட ஆதவின் கைகளில் தன்னை நினைத்துப் பார்த்தாளே! அப்படிக் கூட ஒரு நாளும் மற்றவரோடு தன்னை சேர்த்துப் பார்த்ததில்லை. அப்படீனா எனக்கு ஆதவ் தான் புடிச்சிருக்கா?
சத்யாவின் பக்கத்தில் இன்று டீ குடிக்கும் போது கூட மனதில் ஒரு துடிப்போ சஞ்சலமோ இல்லை! ஆனால் அன்று ஆதவ் குளித்துவிட்டு தன் பின்னால் வந்து நின்று போது இதயமே படபடத்தது. அது காதலாலா? அவர் மேல் தனக்கு இருக்கும் ஈர்ப்பா?
தன் விருப்பத்தைக் கேட்பதிலும், தந்தைக்காக தன்னிடம் பேசும்போதும், ஆதவ்வை அவளுக்கு மிகவும் பிடித்தது. தன்னை தோளோடு அனைத்து ஆறுதல் சொன்ன போது கூட, அவனுடைய அணைப்பு இன்னும் சற்று நேரம் இருக்கக் கூடாதா என்று கூட அவளுக்குத் தோன்றியது.
இப்போது என்ன செய்வது? ஆதவிற்கு வேறு பெண்ணை பார்ப்பதா? சொன்ன படி அவர் நடந்து கொண்டார். என்னை சத்யாவுடன் அனுப்ப அவர் ஒத்துக் கொண்டது போல, நானும் சொன்னபடி அவருக்கு ஏற்ற ஒரு பெண்ணை அவருக்குப் பார்ப்பது தானே முறை.
‘இனி எப்படிப் பட்ட வாழ்வு தன்னுடையது?’ மனதில் குழப்பங்கள் அதிகமானது.
இனி என்னுடைய ஒரே வேலை ஆதவிற்கு அந்த சாஷாவை கட்டி வைப்பது தான் என்று முடிவு செய்தாள். அதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் அவள் ஆதவ்விடம் சறுக்கி விழப் போவது தெரியாமல் ஏதேதோ முடிவு செய்தாள்.
அவர்களை ஒன்று சேர்த்து விட்டு, தன் தந்தையிடமே செல்ல வேண்டியது தான் என்றும் நினைத்தாள். இவனது பேச்சுக்கு முன், தந்தையின் கண்டிப்பு ஒன்றுமே இல்ல. அதுவும் பாசம் தான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!