காயத்ரி மருத்துவ மனையிலிருந்து மாலை வீடுதிரும்பினாள். அவளை கண்டதும் ஓடிவந்து கட்டிக் கொண்ட உதயா “சாரி காயு நான் இன்னும் கவனமா உன் கூடவே இருந்திருக்கனும். என்னை மன்னிச்சுடுடி. இப்படியெல்லாம் நடக்குமென்று நான் கனவில் கூட நெனச்சு பார்க்கலை ” என்று கேவி கேவி அழ

தோழியின் மன உளைச்சலைக் காண தாங்கமுடியாமல் காயத்ரி “ ஹே நீ ஏண்டி இப்படி எல்லாத்தையும் உன் தலையில் போட்டுக்கிறே ? “ போலி சிரிப்புடன் தொடர்ந்தாள்.

“அவன் லூசா இருப்பான் சமந்தா சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருந்தான் தெரியுமா அந்த லூசு பன்றி ? “ காயத்ரி பேச்சின் தீவிரத்தை மாற்ற

“என்னடி சொல்றே ? “ உதயாவின் குரலில் பதட்டம் குறையவில்லை

காயத்ரியோ “ஆமாண்டி அவன் லூசே தான் பின்ன என்னைப் போய் தூக்கிருக்கிறான் பாரு “ சொல்லி சிரித்தாள்.

“ஹே லூசு “ உதயா கடிந்துகொள்ள

“ சரி சரி கோவப்படாதே. அவன் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா ? “ அவள் கேட்க

“என்ன சொன்னான் அந்த **** ன் “ கண்கள் சிவக்க வந்து நின்றான் சிவா.

“ யாரையோ நெனச்சு என்னை தூக்கிருப்பான் போல. அவன் சொல்றான் உன் ஆளு கற்புக்கு விளக்கம் கொடுக்கிறானாமே? பெண்ணை தொட்டால் ஆணின் கற்பு கெடுமாமே ? அப்படியா ? அப்டினு இப்படின்னு லூசுதனமா கேட்டான் .“ சிரித்தவள்

“ இதுல உனக்கென்ன டவுட்?” சிந்தனையாய் சிவா புருவங்கள் முடிச்சிட்டு முறைதான்

“பின்ன நீங்க இதெல்லாம் அந்த லூசுகிட்ட பேச வேண்டிய அவசியமென்ன ? “ காயத்ரி அவனைப் பதில் கேள்வி கேட்க

‘உப்ப்ப்’ என்று பெருமூச்சு விட்டவன் “ இதை நான் வேற லூசுகிட்ட சொன்னேன் “ என்றவன் அன்று டிஸ்கோவிற்கு சென்றபொழுது நடந்ததைப் பெண்களுக்குச் சொல்ல.

காயத்ரி “ அப்போ சிவா நீங்களும் கிட்டதட்ட அவக்கிட்டேந்து எஸ்கேப் ஆகி இருக்கேங்க போல

“ஏ வாலு பிச்சுடுவேன் பிச்சு ! “ பொய்யாய் கடிந்து கொண்டவன்.

“ இதுல கண்டிப்பா மைதாமாவோ இல்லை அவ அப்பனோ சமந்த பட்டிருப்பான்னு எனக்கு தோணுது. பின்ன எப்படி சிவா சொன்னது அந்த ஈன பிறவி செல்வான்? “ என்றபடி வந்து சேர்ந்தான் கௌதம்

“ஆமா டா எனக்கும் தோணுது . சரி உனக்கு அவன் கிட்டேந்து தகவல் ஏதேனும் கெடச்சுதா ? “ சிவா கேட்க

கௌதமோ ‘வெளியில் வா’ என்பதுபோல் கண்சாடை காட்ட

அதைக் கண்டு கொண்ட காயத்ரி “அண்ணா உங்ககிட்ட ரகசியம் பேசணுமாம் போங்க “

தலையில் அடித்துக்கொண்ட உதயா “ டேய் கௌதம் உனக்கு கண்ஜாடை காட்ட கூட தெரியலையே நீ ஒரு பட்டர் அண்ணா “ சற்று மனநிலை மாறியவள் சொல்ல

“பட்டர் ? “ கௌதம் முழிக்கச் சிவாவோ சிரிப்பை அடக்க முடியாமல் “உன்னை வெண்ணைன்னு சொல்லுறாடா வெண்ணை “ என்று மேலும் சிரிக்க

“ஏண்டி நான் வெண்ணையா ? “ கௌதம் உதயாவை தலையில் குட்ட

காயத்ரியோ “இல்லை அண்ணா நீங்க தாடி மீசை இல்லாம கொரியன் நடிகர் மாதிரி இருக்கீங்கன்னு உங்க அழகை அவ பாராட்டுறா ! “ நமுட்டு சிரிப்பு சிரிக்க

கௌதமோ கன்னத்தைத் தடவிக்கொண்டு “ அப்படியா சொல்றே ? ” உதயாவை மெச்சுதலாய் பார்க்க

இப்போது உரக்கச் சிரித்த உதயா “நீ நெஜமாவே பட்டர் தாண்டா “

சிவாவோ அவளுக்கு ‘ஹை பாய்வ்’ கொடுத்து சிரித்தபடியே ” வா டா போவோம். நீங்க பேசிட்டு இருங்க பேபீஸ்”

வெளியேறிய நண்பர்கள் சில நொடி அமைதிக்குப் பின்பு

“சொல்லுடா கெளதம் யாராம் அந்த *** “

“ அவனை அனுப்பினது அந்த சுதாகரன் தாண்டா. “ கண்களை இருக்க மூடி கோவத்தைக் கட்டுப்படுத்த திணறினான் கௌதம்

“வாட் ! தாரிகா இல்லையா ? “ சிவாவும் இதை எதிர்பார்க்கவில்லை

“இல்லைடா அந்த ஆளு அப்படிதான் சொல்லி இருக்கான் போலீஸ் கிட்ட. நம்ம காயுவ அவன் தான்… “ மேலும் சொல்ல முடியாமல் அருகிலிருந்த பூந்தொட்டியை எட்டி உதைத்தான் கௌதம்

வெறிபிடித்தவன் போல.. “ஆ!” என்று அலறிய சிவா அருகில் இருந்த பொருட்களை கண்டபடி உடைத்தெறிய

“டேய் ! நாம அவனை சும்மா விடக்கூடாது. அவன் செய்த இத்தனை அநியாயத்திற்க்கும் அவன் தண்டனையை அனுபவித்தே ஆகணும் டா ! “

சிவாவோ “ ஆமா டா . ஒரு பெண்ணுடைய மனமும் மானமும் அவளோ கிள்ளுக் கீரையா போச்சா? காயத்ரி நமக்காக சிரிக்கிறா அவ உள்ள எவ்ளோ பயந்து இருக்கா உனக்கு தெரியலையா ? ஏதான ஆகி இருந்தா அவ மனசு சாதாரணமாக எவ்ளோ கஷ்ட பட்டிருக்கும் ? நெனச்சு பார்க்கவே பயமா இருக்குடா “ கோவம் குறையாமல் கத்த

“ தெரியும் டா ! எனக்கு அது கூட புரியாதா என்ன ? நான் இன்ஸ்பெக்டர் கிட்ட டைம் கேட்ருக்கேன் நிச்சயதார்தம் வரை பொறுங்க இன்னும் அவனை பற்றின ஆதாரங்களைத் திரட்டி தரேன்னு சொல்லிருக்கேன்! “

சிவா ஆத்திரம் அடங்காமல் “ என்னமோ போ. ஆனால் ஒன்று அவனைச் சட்டம் தண்டிக்கும் முன்னர் என்கையால் தாண்டிச்செ ஆகணும் “

அவர்கள் யாருமே சகஜ மனநிலைக்கு வரச் சற்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.

காயத்ரி மற்ற மூவரின் மனநிம்மதிக்காக சாதனரமாய் இருப்பதுபோல் நடித்தாலும் வீட்டிலிருந்தவர்களுக்கும் அவள் மன சுமை தெரிந்துதான் இருந்தது. ஆயினும் ஒருவருக்காக ஒருவர் போலிப் புன்னகையுடன் வலம் வந்தனர்.

ஒருமுனையில் உதயாவின் திருமணத்திற்கான பத்திரிக்கை அடிப்பது மண்டபம் தேடுவது என்று நாட்கள் வெகு விரைவாய் நகர்ந்தது.

மறுமுனையில் சிவா தாரிக்கா நிச்சயதார்த்த விழாவிற்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடுகள் செய்ய பட்டது. நிச்சத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் பொழுது.

அவர்கள் வீட்டு மாடி ஹாலில் சிவா தீவிரமான முகத்துடன் ” சரி நான் சொன்னது நினைவு இருக்கட்டும் ! கொஞ்சம் மிஸ் ஆனாலும் அப்புறம் மொத்த திட்டமும் பணால் தான் ! ” என்று எச்சரிக்கை விடுக்க

கௌதமோ பொறுமையிழந்து ” பேசி பேசி வாய் வலிக்கிறது எவ்ளோ தான் இதையே ஒத்திகை பாக்குறது ! ஞாபகம் இருக்கு டா ப்ளீஸ் தூங்க விடு ” என்று கெஞ்ச.

பெண்களும் அவர்களது நிலைமையும் அதுவே என்பது போல் தலை அசைத்தார்

” சரி சரி.குட் நைட் . நல்ல தூங்குங்கள்! ” என்று சொல்லி ஒருவழியாக ஒத்திகைக்குப் பின் சிவா அவர்களை விடுவித்தான்

நிச்சயதார்த்த நாளும் வந்தது . சந்தேகம் வராமல் இருக்க நால்வரும் மிக நேர்த்தியாக அலங்காரம் செய்து கொண்டு நிச்சயம் நடக்கும் ஹோட்டலிற்கு சென்றனர்.

லட்சுமியின் பெற்றோர்களும் ஸ்ரீவட்சனின் பெற்றோர்களும் வந்த விருந்தினர்களைக் கவனித்துக் கொள்ள. காயத்ரி உதயா லட்சுமி மூவரும் வரவேற்பில் மும்முரமாக இருந்தனர்.

கௌதம் சிவாவின் காதருகில் “ டேய் நம்ம ஆளுங்க இன்னிக்கி ஏகத்துக்கும் அழகா இருக்காங்க! இன்னிக்கி முகூர்த்த நாள். பக்கத்தில் பெரியவர்களும் இருக்காங்க. பேசாம இன்றைக்கே தாலி கட்டிடுவோமா ? “ என்று ஆர்வமாய் கிசுகிசுக்க

“டேய் நான் வேற பிளான் போட்டா நீ என்னடா ரொமான்ஸ் மூட்ல இருக்கே ? இந்த சீனுக்கு நீ நியாயமா கோவப்படணும். ஜொள்ளு விட கூடாது “ நண்பனைக் கிண்டல் செய்து சிவா சிரித்துக் கொண்டிருக்கையில்.

“ மாப்பிள்ளை ! “ என்ற சுதாகரனின் குரலில் சிவா தன் முகத்திலிருந்த சிரிப்பைத் தொலைத்து கண்களை மூடி தன்னை கட்டுப்படுத்தக் கொள்ளப் பாடுபட்டான்.

‘ என்ன திமிறு இருந்தால் என் காயு மேல் கைய வைக்க ஆளு ஏற்பாடு செய்வே ? இருடா உன்மேல என் கைய கால எல்லாத்தையும் வைக்கிறேன் ! ‘ மனதில் பொங்கியவன் வெளியில் போலி புன்னகையை அப்பிக்கொண்டான்

“மாமா வாங்க ! வா தாரிகா ! “ புன்னகைத்தபடி படி அவர்களை வரவேற்றான் சிவா

மயக்கும் அழகில் ஷர்வானி உடையில் நண்பர்கள் இருவரும் கம்பீரமாய் நிற்க அதை பார்த்துப் பார்த்து காயத்ரியும் தோழிகளும் பூரித்துக் கொண்டிருந்தனர் ஆனால் இருஜோடி கண்களுக்கு மட்டும் அந்த காட்சி ரத்த கொதிப்பை ஏற்றிக்கொண்டிருந்தது

“எப்போது பார்த்தாலும் இந்த கௌதம் ஓட்டிக்கொண்டே இருக்கானே” மகளிடம் கிசுகிசுத்தார் சுதாகரன்.

“ம்ம் ஆமாம் பெவிகால் போட்டு ஒட்டிவிட்டு இருப்பாங்க போல ! “ தயாரிக்கவும் சத்தம் வராமல் பதிலளித்தாள்

பின்பு புன்னகையுடன் சிவாவை நோக்கி ஓடிவந்த தாரிகா ” டார்லிங் ! இந்த ஷெர்வானில நீங்க பாக்க ஹீரோ மாதிரி இருக்கீங்க ! நான் எப்படி இருக்கேன் ? ” என்று ஆர்வமாய் கேட்டபடி சுற்றி சுற்றி தன்னை காட்ட

‘ திருஷ்டி பொம்மை மாதிரி இருக்கே ! ‘ என்று மனதில் எண்ணியவன் ” உனக்கென்ன நீ அழகாத்தான் இருக்கே ! யு லுக் கார்ஜியஸ் ஏஸ் ஆல்வேஸ் ! ” என்று வெளியில் புன்னகைத்தவாறே சொன்னான்.

தாரிகா முகத்திலோ பெருமை தாங்கவில்லை. அருகிலிருந்த காயத்ரி உதயா லட்சுமி ஆகியவரைத் திமிராய் ஒரு பார்வை பார்த்து சிவாவின் புறம் மீண்டும் பார்வையை வெடுக்கென்று திருப்பினாள்.

” அம்மாடி பார்த்து கழுத்து சுளிக்கிக்க போகுது ! “ லட்சுமி மெல்லிய குரலில் சொல்ல.

உதயாவோ “ பேடா சும்மாவே நாலு இன்ச் மேக்கப்பில் ஒளிந்துகொண்டு இருப்பா. இன்னிக்கி இன்னும் பல லேயர் மேக்கப் போட்டு இருக்கா பாரேன் ! இந்த பச்சை புடவையில் பார்க்கத் திருஷ்டி பூசனிக்காய் மாறி இருக்கா ” என்று உதயா காயத்ரி காதை கடிக்க .

எப்பொழுதும் போல் காயத்ரி சிரிப்பை அடக்கத் திணறினாள்

” என்ன ? ” என்பது போல் தாரிக்கா உதயாவையும் காயத்ரியையும் திரும்பி பார்க்க

” நீங்க சும்மாவே அழகு இன்னிக்கி செம்மையா இருக்கீங்கன்னு சொல்லிட்டு இருந்தா ! ” என்று சொல்லி சமாளித்தாள் லட்சுமி

” எதோ திருஷ்டி பூசணிக்காய்னு சொன்ன மாதிரி இருக்கே ” என்று சந்தேகமாய் அவள் விடாமல் கேட்க

“அது திருஷ்டி சுத்த பூசனிக்காய் ரெடி பண்ணனும்னு சொல்லிண்டு இருந்தேன் ” என்று சமாளிப்பது உதயாவின் முறையானது.

சிவா “ நல்ல நேரம் வர இன்னும் சில நிமிஷங்கள் இருக்கு அதுவரை பேசிக்கொண்டு இருப்போமோ? “

சுதாகரன் ” நீங்க பேசிட்டு இருங்க நான் சாஸ்திரிகள் கிட்ட பேசிட்டு வரேன் “என்று விடைபெற மற்ற அனைவரும் அமர்ந்து பேச துவங்கினர்.

கௌதம் ஆர்வமாய் தாரிகாவிடம் “ தாரிகா நீங்க ஏன் அமெரிக்கா விட்டு இந்தியாவில் தொழில் துவங்கி இருக்கீங்க ? “

“ எனக்கு நம்ம நாட்டுமேல பற்று அதிகம் அதான்” புன்னகைத்தாள்

‘ நாட்டுமேலயா காசு மேலையா ? ‘ மனதில் கேட்டவன் வெளியே மெச்சுதலாய் “ சூப்பர் தாரிகா. வெரி குட் ! “ என்று பாராட்ட

உதயா “ தாரிக்கா ஒன்னு கேட்கணும்னு நெனச்சேன் தப்பா எடுத்துக்காதீங்க “ என்று இழுக்க

“ம்ம் கேளு “ என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் தாரிகா

“உங்க வெயிட் என்ன இவ்ளோ ? ஸ்லிம்மா இருக்கீங்க ! “ என்று உதயா கேட்க

“ஜஸ்ட் 50 கேஜிஸ்” பெருமையாய் அவள் சொல்ல

போலியாய் வியந்த உதயா புன்னகையுடன் “ வாவ் அப்போ இந்த மேக்கப் இல்லாம எவ்ளோ ? “

திகைத்த தாரிகா “நான்சென்ஸ் இது என்ன அசட்டுத்தனமான கேள்வி ? “ என்று கோவப்பட

“சாரி ! நான் அதை சொல்லல தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க கட்டி இருக்கும் புடவை இந்த நகை எல்லாம் கழிச்சா என்ன வெயிட்ன்னு கேட்டேன் “ உதயா சமாளிக்க

“ஹ்ம்ம் 50 தான் “

“ சூப்பருங்க ! எப்படி மெயின்டெயின் செயிரீங்க வாவ் “ உதயா போலியாய் பாராட்ட

தரிக்காவிற்கு இவர்கள் வேண்டுமென்றே தன்னை கிண்டல் செய்வதுபோல் தோன்றச் சிவாவிடம் பேச்சைத் திருப்பினாள்.

“டார்லிங் ! நம்ம நிச்சயதார்த்த மோதிரம் சர்ப்ரைஸ்ன்னு சொன்னீர்களே எங்க ? “ ஆர்வமாய் கேட்க

“அது மேடையில் சாஸ்திரிகளிடம் பூஜையில் இருக்கு “

“ஓஹ் அது நான் கேட்டபடி வைரம் தானே ?“

“ஹ்ம்ம் “ சிவா வேண்டவிருப்பாய் பதில்தர

“பிளாட்டினமா தங்கமா? “ தாரிகா கண்கள் விரிய கேட்க

மெல்லிய குரலில் உதயாவோ “ம்ம் தகரம் “ என்று பதிலளித்தாள்

லக்ஷ்மியும் காயத்ரியின் காதில் “ ஓவராத் தான் அண்ணாவிடம் வழியுறா பேடா “

உதயாவோ காயத்ரியின் மறுபக்கம் “அடிச்சு வாய உடச்சுடவா ? எப்போது பார்த்தாலும் சிவா அண்ணாவைப் பார்த்து என்ன ஈஈன்னு இளிப்பு இந்த வெள்ளை பன்றிக்கு ? “

லக்ஷ்மியோ “ ஆமாண்டி அப்படியே வர கோவத்துக்கு அவ தலைலயே நாலு கொட்டு கொட்டணும் போல இருக்கு ! “

காயத்ரியோ “பொருங்கடி முடியல சிரித்துத் தொலைக்க போகிறேன் ! “ சிரிப்பை அடக்க திணற

அங்கே வந்த லக்ஷ்மியின் அம்மா “ லட்சுமி உதயா ! அங்க வரவங்களுக்கு வேண்டியதைக் கொஞ்சம் கவனிக்க உதவி செயுங்க ! நீ வேண்டாம் காயத்ரி நீ ரெஸ்ட் எடு “

தோழிகள் இருவரும் சென்ற சில நிமிடங்களில் கௌதமும் சிவாவும் யாரையோ வரவேற்க எழுந்து செல்ல.

தாரிகாவும் காயத்ரியும் தனியே இருக்க வேண்டிய நிலை வந்ததது.

தாரிகாவோ கண்களால் எரிப்பது போன்ற பார்வையுடன்
“ஆமா நீ எதுக்கு சிவா கூடவே தங்கி இருக்கே ? நீ அனாதைன்னு சொன்னார் அப்படி இருந்தால் அஞ்சோ பத்தோ வாங்கிட்டு வெளியில் ஹாஸ்டல்ல போயி தங்க வேண்டியதுதானே ? ஒட்டுண்ணி மாதிரி கூடவே இருக்கனுமா ? “ வார்த்தைகள் கனலாய் வந்து விழ

“நான் ஒன்றும் அனாதை இல்லை! “ தீர்க்கமாய் ஒலித்தது காயத்ரியின் குரல் “ எனக்கு சிவா இருக்கார் . கௌதம் அண்ணா இருக்கிறார் உதயா இருக்கா இதோ கொஞ்ச நாளுல லட்சுமி எனக்கு மண்ணியா வரப்போறா ! “

பொறுமை இழந்த தாரிகா “சிவா ! சிவா ! எப்போப்பாத்தாலும் அவரை பிடிச்சிக்கிட்டு சுத்துறே ! வெட்கமா இல்லை ? இப்படி கல்யாணம் ஆகாத ஆம்பிளைகள் இருக்கிற வீட்டில் தங்கி இருக்கியே . பாக்க நல்லவா இருக்கு ? நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆனா நீ அங்கேயே இருந்தால் நான் சிவா வோட நிம்மதியா வாழ முடியுமா? “

“நீங்க வாழறதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் ? “ புருவம் சுருக்கி காயத்ரி கேட்க

“பின்ன இப்போதே எப்போப் பார்த்தாலும் உன் ஜெபம் . தாலி எனக்கு கட்டிட்டு உன்கூட குடித்தனம் நடத்த போறாரா என்ன ? “ வெடுக்கென வார்த்தைகள் விழ

தன்னுடன் சிவா குடித்தனம் நடத்துவதைக் காதால் கெட்டவளுக்கோ மனம் சிறகடிக்க மெல்லிதாய் புன்னகைத்த காயத்ரியை பார்த்து பொறுமை இழந்தாள் தாரிகா

“என்னடி வெட்கமே இல்லையா ? சிரிக்கிறே ? “ கையை ஓங்கியபடி அவள் எழ

“தாரிகா ! “ என்ற சிவாவின் குரலில் நடுங்கி நின்றுவிட்டாள்

“சிவா அது அது..” அவள் திணற

“இங்க வா ! உங்கப்பா உன்னை கூப்பிடறார் “ புருவங்கள் சுருங்க சிவா அழைக்க

“கெளம்பு காத்துவரட்டும் ! “ நக்கலாய் சிரித்த படியே அனுப்பிவைத்தான் காயத்ரி.

சிவாவின் எதிரில் ஒன்றும் செய்ய முடியாமல் அவள் செல்ல. பின்னாடியே சென்ற சிவா காயத்ரியை பார்த்து கண்ணடித்து விட்டு புன்னகைத்த படியே தாரிகாவை பின் தொடர்ந்தான்.

“ போ போ இன்னிக்கி உன்னை பொங்க வைக்க போறாங்க “ முணுமுணுத்துச் சிரித்து கொண்டாள் காயத்ரி.

அங்கே மேடையின் அருகே இருந்த அறையில் சுதாகரனுடன் கௌதம் அமர்ந்திருந்தான்.

தாரிகா கேள்வியாய் தந்தையை நெருங்க பின்னாலேயே வந்த சிவா அறையின் கதவை சாத்திவிட்டு வந்தான்.

“மாப்பிளை உனக்கு ஒரு பரிசு கொடுக்க விருப்ப படுறார் “ முகமெங்கும் ஆனந்தத்துடன் சுதாகரன் சொல்ல

காதுவரை நீண்ட புன்னகைத்த தாரிகா “என்ன டார்லிங் ? என்ன சர்ப்ரைஸ் ? “ ஆவலாய் சிவாவை பார்க்க

“ நீ என் பிசினெஸ் பார்ட்னர் ஆகப்போரே! கௌதம் நம்ம கல்யாண பரிசா அவன் பங்குகளை உனக்கு தாரான் ! “ சிவா சொல்ல

சந்தேகமாய் கௌதமை பார்த்தாள் தாரிகா “ ஏன் அப்புறம் அவர் என்ன செய்வாராம் ? “

கௌதம் “ லக்ஷ்மிக்கு வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்கவேண்டுமென்று ஆசை அங்கேயே செட்டில் ஆகா விருப்ப படுறா ! அப்படி இருக்கும் பொழுது என்னால் தனியா இருக்கவும் முடியாது. போயிடு போயிடு வரவும் முடியாது அதான் என் ஷேர்ஸ் உனக்கு கொடுத்துட்டு நான் சிவா கிட்ட பணமா வாங்கிக்க போறேன் “ அவளோதான் என்பதுபோல் சொல்லி முடிக்க

சிவா வோ ஆர்வமாய் “அதுமட்டும் இல்லை டார்லிங் ! நம்ம இரண்டு பேர் கம்பெனியும் இணைத்து சீதா குரூப்ஸ்ன்னு ஒரே நிறுவனமா வைக்கலாமென்று நினைக்கிறேன் . பெயர் தேர்ந்தெடுத்தது உங்கப்பாதான் ! “

“ஆமாம் சிவா ல சி தாரிகா ல தா . சீதா “ பெருமையாய் சொல்லிக்கொண்டார் சுதாகரன்.

“அப்போ கையெழுத்து போட்டிடலாமா ? “ சிவா பரபரக்க

தாரிக்காவிற்கேனோ நடப்பது சரியாக படவில்லை “ எதுக்கு இவ்ளோ அவசரம் பொறுமையா..” சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே

“இல்லை டார்லிங் இது நான் உனக்கு தரும் என்…. இல்லை இல்லை நம் நிச்சயதார்த்த பரிசு ! அதான் “ என்று தனது அகமார்க் புன்னகையுடன் தன் நீல விழிகளில் மயக்கும் பார்வையுடன் சொன்னான் சிவா.

மறுக்க முடியாமல் “ அப்பா நீங்க படிச்சு பார்த்தீர்களா? ஓகே வா ? “ தந்தையை எச்சரிக்கை பார்வை பார்த்து கேட்டுக்கொண்டாள்

“எல்லாம் படிச்சு பார்த்துட்டேன் . எல்லாம் சரியா இருக்கு ! “ சுதாகரன் தீர்க்கமாய் சொல்ல

கௌதம் பேனாவை எடுத்து சுதாகரன் கையில் கொடுக்க

“இருங்க மாமா ! நல்ல நேரம் ஆரம்பிக்க போது. பேசாம பத்திரத்தை ஸ்வாமியிடம் வைத்து வேண்டிண்டு கையெழுத்துப் போடலாமே ! என்ன சொல்கிறீர்கள்? “ அதே மயக்கும் குரல் மாறாமல் சிவா கேட்க

“தாராளமா மாப்பிள்ளை ! “ புன்னகைத்தபடி சுதாகரன் பதிலளிக்க

நால்வரும் மேடையிலிருந்த கடவுளின் படத்திற்கு முன்னே பத்திரங்களை வைத்து நமஸ்கரிக்க.

சாஸ்திரிகளோ “ எல்லாரும் நான் சொல்ற மந்திரத்தைக் கண்ணை மூடி சொல்லிவிட்டு பின்னாடி கையெழுத்து போடுங்கோ .எல்லாம் அமோகமா நடக்கும் ! “

அவர் சொன்னபடியே அவர் சொன்ன மந்திரங்களை அனைவரும் சொல்லிஅங்கேயே நால்வரும் கையெழுத்திட்டனர் .

முகமெங்கும் வெற்றி புன்னகையுடன் தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள

நண்பர்களோ ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர் .

“நேரம் ஆச்சு அப்போது ஆரம்பிப்போமா ? “ சுதாகரன் கேட்க

“ நல்லா ஆரம்பிக்க எனக்குப் பதில் சொல்லிவிட்டு “ ஆங்கிலத்தில் உறுமியபடி ஆஜானுபாகுவாய் அங்கு வந்து நின்ற வெள்ளைக்காரனைப் பார்த்த தாரிகா விக்கித்து நின்றாள்.

“மாப்பிள்ளை ! “ அதிர்ந்தார் சுதாகரன்.

error: Content is protected !!