ரௌத்திரமாய் வந்து நின்ற வெள்ளையனைக் கண்ட தாரிக்காவோ ஷாக் அடித்தது போல எழுந்து விட்டாள் ! சுதாகரன் முகத்திலோ ஈ ஆடவில்லை.
“இங்க என்ன நடக்கறது ? என்னை பார்த்தல் உனக்கு லூசு மாதிரி தெரியுதா ? ச்சே ! நீ இவளோ மோசமானவளா ? ” என்று மைக்கேல் தாரிக்காவை நோக்கி வேகமாக நெருங்க
சிவா அதிர்ச்சியாய் சுதாகரனை நோக்கி “என்னது மாப்பிள்ளையா ?”
கௌதமோ புருவங்கள் உயர்த்தி “மாமா உங்களுக்கு எத்தனை மாப்பிள்ளை ? “
சிவா இப்போது அவ்வெள்ளையனை “ நீங்க யார் சார் ? இவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு ? “ ஆங்கிலத்தில் கேட்க
வெள்ளைக்காரனோ கோவமாய் தரிக்காவையும் சுதாகரனையும் முறைத்தபடி “ அதை அந்த பொன்னும் அவ அப்பாவும் சொல்லுவார்கள் என்னை ஏன் கேக்குறீங்க ? “
“மைக்கேல் ! டார்லிங் ! தயவுசெய்து நான் சொல்றதை “ கண்கள் கலங்க தாரிக்கா அவனை நெருங்க
“என்ன டார்லிங்கா ! அப்போ நான் யார் ? “ சிவா முறைக்க
தாரிக்கா “சீ போடா ! இவர் யாரென்று தெரியுமா? நீயும் இவரும் ஒன்னா? “ என்றபடி மைக்கேலை நெருங்கி
“இவர் என் புருஷன் ! “ என்று பெருமையாய் சொல்ல
“முன்னாள் புருஷன் ! “ முடித்தான் மைக்கேல்
“மைக்கேல் என்ன சொல்றீங்க ? “
“அப்பனுக்கும் பெண்ணுக்கும் என்னைப் பார்த்தா லூசு மாதிரி தெரிகிறதா ? தொழில் காரணமாய் இந்தியா போறேன்னு பொய் சொல்லிட்டு இங்க வந்து கல்யாணம் செய்துக்க நிச்சயம் வரை போயாச்சா ? “ மைக்கேல் உறும
தாரிகாவோ நடுங்கிய குரலில் “இது எல்லாமே ட்ராமா டார்லிங் ! இதெல்லாமே எங்கப்பா போட்ட பிளான். வெறும் நிச்சயம் மட்டும் தான் நடந்து இருக்கும் ! இவர்கள் கம்பெனி கைக்கு வந்த நொடியே நான் கல்யாணத்தை நிறுத்திட்டு அமெரிக்கா வந்து இருப்பேன். என்னை நம்புங்கள் ! ” என்று கெஞ்சியவள் ” அப்பா ! மரியாதையா இங்க வந்து இவர்கிட்ட உண்மையை சொல்லுங்கள் ! ” என்று சுதாகரனை மிரட்ட .
” மாப்பிள்ளை ! அவ சொல்கிறது அனைத்தும் நிஜம். இது எல்லாமே ஒரு சின்ன நாடகம் . அவ ஒரு பாவமும் பண்ணாதவள். அவளை மன்னிச்சுடுங்க! ” என்று மைக்கேலின் காலில் விழாத குறையாய் கெஞ்ச.
தாரிகாவோ கெஞ்சுதலாய் “டார்லிங் ப்ளீஸ். நான் சொல்கிறதை கேளுங்கள் மைக்கேல் . ஐ லவ் யூ! “
மறுநொடியே ‘பளார்’ என்று அந்த இடமே அதிரும்படி அவளை அறைந்து தள்ளினான் மைக்கேல்
“உன் வாயாலே அந்த வார்த்தையை சொன்னே அவ்ளோதான் !” சொன்னவனின் கண்ணிலிருந்த ஆத்திரம் தாரிகாவை அச்சுறுத்தியது.
“நீ ஒரு இந்தியப் பெண். என்மேல் பாசமாக இருப்பாய். குடும்பத்தை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொள்ளுவாய் என்று நம்பித்தான் உன்னைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டேன்.ஆனால் நீ ஒரு ஏமாற்றுக்காரி ! “ மைக்கேல் கனலை காக்க.
“என்ன சொல்றீங்க தாரிக்கா உங்கள் மனைவியா ? “ சிவா அதிர்ச்சி அடைய
“ஆனால் தாரிக்கா நீ என்னை விரும்பலையா ? “ சிவா அப்பாவியாய் முகமெங்கும் சோகமாய் அவளைப் பார்க்க
அவன் காதருகே சென்றே கௌதம் “ டேய் என்னடா சிவாஜி செத்துட்டாரான்னு கேட்கிற மாதிரி கேட்குறே ? உனக்குத் தெரியாது இந்த மைக்கேல் யாரென்று? அவனை வரவழைத்ததே நீதானே ! நல்லாவே நடிக்கிறே டா நீ ! “.
சிரிப்பை வெளிக்காட்டாமல் முகத்தில் போலி ஏமாற்றத்தை ஒட்டவைத்த சிவா வோ
ஏமாற்றமடைந்த குரலில் “என் கம்பெனியை கூட உனக்கு விட்டுக் கொடுத்தேனே ! நீ என்னைக் காதலிக்கவே இல்லையா ? “
“ நான்சென்ஸ்! நானாவது உன்னையாவது விரும்பார்த்தாவது ? எல்லாமே நாடகம்.நீ எவளோ பெரிய ஏமாளி சிவா ! ஹா ஹா ! “ திமிராய் பதிலளித்தவள் சுதாகரனை நோக்கி “அப்பா அதான் நமக்கு வேண்டியது கிடைச்சாச்சுல வாங்கப் போவோம் ! இனி இந்த கூட்டத்துக்கிட்ட நமக்கு என்ன வேலை ! ” என்ற தாரிக்கா மைக்கேலை நோக்கி
“வாங்க மைக்கேல் டார்லிங் ! “ என்று மைக்கேல் கையை பற்ற முயல . அவனோ வெடுக்கென்று தன் கையை இழுத்துக்கொண்டு நகர்ந்தான்.
“என்னைத் தொட்டே கொன்னுடுவேன் ! ஒழுங்கா இந்த டைவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்துப் போடு இல்லை உன் மேல் மோசடி கேஸ் போடுவேன் ! “ மைக்கேல் உறுமினான்
“மைக்கேல் என்ன இது நான் சொல்லுவதைக் கேளுங்கள் எல்லாமே ட்ராமா இவர்கள் சொத்துக்களை வாங்கத்தான் நாங்கள் இப்படிச் செய்தோம் மற்றபடி நான் சிவாவை விரும்பவே இல்லை . என்னை விட்டு போகாதீர்கள் மைக்கேல் ! “ அவள் மன்றாட
“கையெழுத்து போடுறியா இல்லை உன் மேலே கேஸ் போட்டு உள்ள தள்ளவா ? “ மைக்கேல் மிரட்ட மிரண்டவள் விடுதலை பத்திரத்தில் வேண்டா வெறுப்பாய் மைக்கேல் காட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டுக் கொடுத்தாள்.
கோவமாய் அதை எடுத்துக்கொண்டவன் சிவா கௌதம் இருவரையும் நோக்கி
“ரொம்ப நன்றி நீங்க எனக்குத் தகவல் சொல்லவில்லை என்றால் எனக்கு இவளுடைய சுயரூபம் தெரிந்து இருக்காது. ரொம்ப நன்றி“ அவர்களுக்கு நன்றி சொல்லித் திரும்பிக் கூட பார்க்காமல் விறுவிறுவென சென்றுவிட்டான்.
மறுநொடியே ” கார்ட்ஸ் ! ” என்று சிவா கத்த அவர்களில் மெய்க் காப்பாளர்கள் சுதாகரனையும் தாரிகாவையும் சுற்றி வளைத்தனர்.
“ எல்லாம் நீ செஞ்ச வேலையா ? உன்னை சும்மா விடமாட்டேன் டா. துரோகி! “ சிவாவை அடிக்க நெருங்கினார் சுதாகரன்
சிவாவோ “துரோகி ? துரோகி ? ஹா ஹா ஹா “ அதுவரை அப்பாவியாய் இருந்த சிவாவின் முகம் வெறிகொண்ட வேங்கையாய் நொடிப்பொழுதில் மாறியது.
“ துரோகி ? யார் துரோகி ? உன் தவறை தட்டி கேட்டதுக்காக , தன் தங்கை போல வளர்த்த பெண்ணை உனக்குக் கல்யாணம் செய்து தரமாட்டேன்னு சொன்னதுக்காக உயிர்த் தோழனை குடும்பத்துடன் கொன்ற நீ துரோகியா ? நான் துரோகியா ? “ அவன் உக்கிரமாய் அவர் சட்டை காலராய் பற்ற நடுங்கிப் போனார் சுதாகரன்.
சிவா மேலும் “காதலித்த பெண் கிடைக்கவில்லையென்று அவர்களையும் அவர் கணவரையும் கார் ஏற்றிக் கொன்றுவிட்டு விபத்தென்று பொய்க் கதை கட்டி விட்ட நீ துரோகியா? நான் துரோகியா?“
சுதாகரனோ திமிராய் ” என்னடா மெரட்டுறீங்களா? பொடி பசங்களா! உன் அப்பனையே இல்லாமல் செஞ்சவண்டா நான் ! ” என்று உரும.
சிவா உக்கிரமாய் சுதாகரின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டான்.
“அப்பா !” என்று ஓடிவந்த தாரிக்கா
சிவாவின் “ பக்கத்தில் வந்தே அடுத்தவன் பொண்டாட்டியென்று பார்க்கமாட்டேன் அடிச்சு பல்லை உடைச்சுடுவேன் ! “ என்ற கர்ஜனையில் தாரிக்கா வியர்த்து நின்றுவிட்டாள்
சுதாகரனைச் சுவரோடு மோதி சிவா ரௌத்திரமாய் “ நண்பனைக் கொன்று காதலித்த பெண்ணைக் கொன்று அவள் கணவரைக் கொன்று..சீ உன்னை உயிரோடு விடுவது மகாப்பாவம் ! உன்னை என் கையாலேயே கொன்று போட்டா கூட என் ஆத்திரம் அடங்காது நீ மனுஷன் இல்லை விஷ…. விஷ ஐந்து ! “
கொஞ்சமும் திமிர் அடங்காத குரலில் “ டேய் என்னமோ ரொம்பதான் மிரட்டுறே ? நீ சொல்ற எதற்காவது ஆதாரம் இருக்கா ? என்னமோ பெரிசா ? ” சுதாகரன் கேட்க
கௌதமோ “ ஜப்பானில் ஜாக்கி சாண் கூப்டாகோ” என்ற ராகத்தில்
“ஏன் இல்லாமல் ? அந்த பைலட் லெட்டர் கொடுத்தாகோ ! உன் அடியாள் வாக்குமூலம் கொடுத்தாகோ ! நீயும் உன் பெண்ணும் எழுதி வாக்குமூலம் கொடுத்தீகோ ! “ என்று சொல்லிச் சிரித்தவன் மேலும் தொடர்ந்தான்.
” புரியலையா மிஸ்டர் சுதாகர் ? அந்த பத்திரம் அதான் நீயும் உன் பெண்ணும் கையெழுத்து போடீங்களே அது என்னான்னு தெரியுமா? முதல் பத்திரம் சிவா சொன்ன மாதிரி உங்கள் கம்பெனியை எங்களுக்கு எழுதிக் கொடுத்தது தான் , ஆனால் இரண்டாவது இருக்கே அதுதான் கொஞ்சம் மாறிப்போச்சு !
அது நான் சொன்ன மாதிரி என் பங்குகளை தாரிக்காவிற்கு விட்டுக் கொடுப்பது இல்லை ! நீயும் உன் பொன்னும் செஞ்ச எல்லா கொலையும் மற்ற தப்புகளையும் ஓத்துக்கிட்டு நீங்க மனது மாறி எழுதிக் கொடுத்த வாக்கு மூலம் வெண்ணெய்களா ! ” என்று கௌதம் சிரித்தபடி மேலும்
“நீங்கக் கண்ணை மூடி மந்திரம் சொன்ன போதே நாங்கள் பத்திரத்தை மாத்திட்டோம் ! “
தாரிக்கா கோவமாய் “உன்னை என்ன செய்கிறேன் பார் ? “ என்று கௌதமை நெருங்க
“ஒரு ஆடி முன்னாடி எடுத்து வெச்சே செத்தே ! அப்படியே தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன் ! “ ரௌத்திரமாய் தாரிக்காவிற்கும் கௌதமிற்கும் குறுக்கே வந்து நின்றாள் காயத்ரி!
தாரிகாவோ ஆவேசமாய் “உன்னை அன்றைக்கே திமிரை அடக்கிக் கொன்று தூக்கிப்போடச் சொன்னேன். கோட்டை விட்டான் பார் அறிவுகெட்ட முண்டம் ! “ கோவத்தில் வார்த்தையை விட்டவள் நாக்கை கடித்துக்கொண்டாள்.
காயத்ரியோ மறுநொடியே ‘பளார் பளார்’ என்று தாரிகாவை அறைய அதில் தாரிக்கா உறைந்து நிற்க, அந்த இடமே ஸ்தம்பித்து.
காயத்ரி முகம் சிவப்பேற “ என்ன திமிர் இருந்தால் ஒரு பெண்ணா இருந்துகிட்டு இப்படி ஒரு கீழ்த்தரமான வேலையைச் செய்ய ஆள் ஏற்பாடு செய்வே ? நீயெல்லாம் ஒரு பெண்ணா ? இல்லவே இல்லை நீ ஒரு கேடுகெட்ட பிறவி ! “ அவளை நெருப்பாய் முறைத்தாள்
எதிர்த்துப் பேச முடியாமல் வெட்கத்தில் தாரிக்கா தலையைக் குனிந்து கொள்ள . சுதாகரனோ ரௌத்திரமாய் “எவ்வளோ தைரியம் இருந்தால் என் பெண்ணை என் கண்ணு முன்னாடியே அடிப்பே ? திருப்பிடிச்ச அநாதை நா..” அவர் முடிக்கும் முன்பே சிவா சுதாகரனின் கழுத்தைப் பிடித்திருந்தான்
“நீயெல்லாம் திருந்தவே மாட்டேல்ல்ல? செய்த தவறை எண்ணி வருத்த மாட்டேல்ல்ல ? உன்னை என் கையாலேயே கொன்னுடனும்னு தான் தோணுது ஆனால் என்ன ? என் தாத்தா சொன்ன வார்த்தைக்காக உன்னை விடுறேன் . இனி உன் ஆயுள் முடியும் வரை என் கண்ணில் பட்டுவிடாதே ! அப்புறம் என் கையால் தான் உன் சாவு இருக்கும் எச்சரிக்கிறேன் ! ” அவன் பிடி இருக்கச் சுதாகரன் கண்கள் சொருகியது
“ஐயோ அவரை விட்டு விடுங்கள் உங்கள் பக்கமே வரமோட்டோம் வேணும்னா எழுதி கொடுத்துடறோம். ப்ளீஸ் ” சிவாவின் காலை பிடித்துக்கொண்டாள் தாரிக்கா
அவளை எட்டி தள்ளிய சிவா “இனி நீங்கச் செய்ய வேண்டியது ஒண்ணுதான்! போய் வாழ்க்கை முழுவதும் வருந்தி வருந்திக் கூனி குறுகி சாகுங்க ! “
சுதாகரை விடுவித்தவன் அவரையும் தாரிகாவையும் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்துடன் அங்கு வந்த போலீசிடம் ஒப்படைத்தனர்.
நண்பர்கள் இருவரும் ஆழ்ந்த மூச்சொன்றை விட்டு முகமெங்கும் வெற்றி புன்னகையுடன் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர்.
தோழிகளான உதயாவும் லக்ஷ்மியும் காயத்ரியைச் சூழ்ந்து கொண்டனர்.
உதயாவோ “ எங்கிருந்து காயு உனக்கு இவளோ வேகம் ? நாங்கள் எதிர் பார்க்கவே இல்லை தெரியுமா ? அதுவும் நெஜமாவே அடிச்சே பார் பிரமாதம் டீ ! “ என்றபடி குதிக்க
லக்ஷ்மியோ “ஆமாண்டி இந்த ஆழாக்குக்குள்ள ஒரு அந்நியன் இருக்கிறது எனக்குத் தெரியாமல் போச்சே !” அவள் கன்னங்களைக் கிள்ளி கொஞ்ச
காயத்ரியோ வருத்தமான குரலில் “ஹே சீ கோவத்தில் என்ன செய்றேன்னே தெரியலை. நான் செய்தது தப்பு.அவள் என்னதான் தப்பு செய்திருந்தாலும் ஒரு பெண்ணை சபையில் அடித்திருக்க கூடாதுல்ல! சாரி தாரிக்கா “ மானசீகமாய் தாரிக்காவிடம் மன்னிப்பை வேண்டினாள்.
“ வேண்டாம் அடிச்சு கிடிச்சு வெச்சுரப்போறேன் ! “ லட்சுமி காயத்ரியை முறைக்க
“ஆமா ! லூசு ! “ உதயாவும் முறைக்க
“சரி சரி ஐஸ்கிரீம் சாப்பிடப் போகலாமா ? லட்சுமி உங்கப்பா ஆர்டர் செய்றேன்னு சொன்னார் வாங்க! “ காயத்ரி பேச்சை மாற்ற.
“ எங்கப்பாவா ? இது எப்போது நடந்தது? “
“ஹி ஹி இங்க மைக்கேல் வந்தார்ல அப்போ தான் நாங்க பிளான் போட்டோம்! “ காயத்ரி பெருமையாய் சொல்ல.
உதயாவோ போலி கோவத்துடன் “அடியே இங்க என்ன சீரியஸ் ஸீன் நடந்துகிட்டு இருந்தது ? உனக்கு ஐஸ்கிரீம் தான் முக்கியமா போச்சா ? “
காயத்ரியோ ஈ என்று இளித்தபடி “ இல்லை டார்லிங்ஸ் ! எப்படியும் சிவாவும் கௌதம் அண்ணாவும் அவங்களை வச்சு செய்வாங்கன்னு தெரியும் அதான் கொண்டாடலாமேன்னு முன்கூட்டியே நாங்க பிளான் பண்ணோம் “ அவள் பெருமையாய் சொல்லி முடிக்க
அருகில் வந்த சிவாவோ சிரிப்புடன் “அதானே ஊரே இரண்டு பட்டாலும் என் செல்லத்துக்கு ஐஸ்கிரீம் இருந்தால் போதுமே! “ குறும்பாய் சொல்ல.
கௌதமோ “ஏன்டா என் தங்கையை ரொம்பதான் கிண்டல் செய்றே? ஒரு ஒரு கேர்ள் பிரெண்ட்ஸும் இத வாங்கிதா அதை வாங்கிதான்னு கேட்கும்பொழுது காயு ஐஸ்கிரீம் தானே கேக்குறா ? வாங்கித்தந்தா என்ன ? “ லக்ஷ்மியை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்ல
லக்ஷ்மியோ சிலிர்த்துக்கொண்டு “நான் அப்படி உங்களை என்ன பெருசா கேட்டேன்? ஒரு டிஜிட்டல் கேமரா கேட்டேன் அது தப்பா ? “
கௌதமோ தோப்புக்கரணம் போடுவதுபோலக் காதுகளைப் பற்றிக்கொண்டு “ அம்மா தாயே தெரியாமல் சொல்லிவிட்டேன் விட்டுவிடு! “ என்று மன்னிப்பு கேட்க
அங்கே இறுக்கமான சூழல் மறைந்து சிரிப்பலை குடியேறியது.
அன்று மாலை தங்கள் இல்லத்தில் கௌதம் “அப்பாசாமி ஒருவழியா இதுங்க தொல்லை முடிஞ்சது ஆமா சிவா உன்னை ஒன்னு கேட்கணும் ! ”
“ஒன்று என்ன எத்தனை வேணுன்னாலும் கேள் டா ! ” என்ற சிவா சோபாவில் சோம்பலை முறித்துக்கொண்டு உட்கார்ந்தான்.
கௌதம் ” நீ ஏன் அவங்க கம்பெனியை எழுதி வாங்கினே ? அதுவே லாபம் இல்லாமல் சுமாராய் ஓடும் நிறுவனம்! ” என்று வெகுநேரம் தனக்குள்ளே இருந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளக் கேட்டான்.
சிவாவோ “ என்ன பிஸ்னஸ் பார்ட்னர் டா நீ ? கம்பெனி வாங்கக் கையெழுத்தும் போட்டுக் கொடுத்துட்டு இப்போ வந்து காரணத்தைக் கேட்குறே ? ” என்று முகத்தில் புன்னகையுடன்
” நீ சொல்லும் பொழுது எப்படிடா மறுக்க முடியும் ? நீ எதுவும் யோசிக்காமல் செய்ய மாட்டேன்னு தான் நானும் உடனே பத்திரம் தயார் செய்தேன். சரி இப்போ சொல்லு என்ன கரணம் ? ” கௌதம் விடாமல் கேட்க
” நீ மண்டையைப் போட்டுக் குழப்பிக்குற அளவுக்குப் பெரிசா ஒன்னும் இல்லை. அவர்கள் இரண்டுபேரும் உள்ள போய்ட்டா கம்பெனி என்ன ஆகும் ? கம்பெனி என்றால் வெறும் கட்டிடம் இல்லையே அதுல வேலை பாக்குறவங்க தானே கம்பெனி ! “ அர்த்தமாய் பார்த்தவன் மேலும் தொடர்ந்தான்.
“அத்தனை ஊழியர்களும் அவங்க குடும்பங்களும் எதுக்கு டா இந்த முண்டங்களால் கஷ்ட படணும் ? அதான் நம்ம நிறுவதோட சேர்த்துக்கொண்டேன்.
நமக்கும் திறமையா ஆளுங்கள் கெடைப்பாங்க அவர்கள் குடும்பமும் டக்னு கஷ்டப் படாமல் இருக்கும். பாவம் யார் யாருக்கு என்ன என்ன கமிட்மெண்ட்ஸ் இருக்குமோ ?” என்று சிவா சொல்லி முடிக்கும் முன்பே கௌதம் அவனை நெருங்கிக் கட்டிக் கொள்ளத் தடுமாறி சிவாவின் மேலே விழ.
” டேய் ! என்னடா ! ” என்று சிவா அதிர
“சாரி! “ சிரித்தபடி எழுந்து சிவாவின் அருகினில் அமர்ந்தான் கௌதம்.
கௌதம் மேலும் ” இவளோ பிரச்சனைகளுக்கு மத்தியில் நீ ஊழியர்களுடைய நல்லதுக்கு யோசிச்சுருக்கே . நான் கூட இப்படியொரு கோணத்தில் யோசிக்கவில்லை டா. அவர்களை உள்ள தள்ள வேண்டுமென்று மட்டும் தான் என் மனசிலிருந்தது. உன்னை நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குடா ! ” என்று பூரிக்க.
சிவாவோ ” நீ வேற நான் இன்னிக்கி ஒரு ஒரு நிமிஷமும் எவளோ டென்ஷனா இருந்தேன் தெரியுமா? “
கரெக்டா அவர்கள் சுவாமி கும்பிட கண்ணை மூடி இருக்கும் நேரத்துக்குள்ள பத்திரத்தை மாற்ற வேண்டும் !
அந்த ஆள் மறுபடி பத்திரத்தைப் படிக்காமல் இருக்க வேண்டும் !
கரெக்ட் டைம்க்கு அந்த மைக்கேல் வரணும் !
இப்படி ஒன்னு ஒண்ணா !
இப்போ நெனச்சாலும் டென்ஷனாவும் உறுத்தலாகவும் இருக்கு !
ஏன்டா ஒரு சின்ன ஏமாற்று வேலை செய்யுறதுக்கே நமக்குக் கண்ணு முழி பிதுங்குதே அப்பனும் பொன்னும் எப்படி டா இப்படி அதையே தொழிலா செஞ்சுகிட்டு இருந்தார்கள்? ” என்று சிவா பெருமூச்சுடன் முடிக்க
” ஆமாம். இதற்கே ஒரு பக்கம் யாரையோ ஏமாத்திருக்கோம்னு மனசு அடிச்சுக்கிறது ! அவன் என்னடான்னா இத்தனை கொலை செய்து எப்படித்தான் இவளோ வருஷம் தூங்கினானோ ? எப்படி அவன் மனசு அவனை வாழ விட்டது ? ” என்று கௌதமும் கண்களை மூடி அலுத்துக் கொள்ள
“அது மனசு இருக்கிறவங்களுக்கு தானே அண்ணா ? இவர்கள் மிருகம் கூட இல்லையே , அதுங்க கூடப் பசிக்காமல் வேட்டை ஆடாதே ! இவர்களெல்லாம் வேற எதோ விஷ ஐந்து ! ” என்று சொல்லிக் கொண்டே அங்கே வந்தாள் காயத்ரி, கூடவே உதயாவும் கையில் ஐஸ்கிரீம் கிண்ணங்களுடன் .
“ஒரு நாளைக்கு எத்தனை ஐஸ்கிரீம்? சளி பிடிக்கும் காயுமா ! “ கௌதம் அக்கறையாய் கடிந்து கொள்ள .
கெஞ்சுதலாய் அவனைப் பார்த்த காயத்ரி “ இன்னிக்கி ஒருநாள் அண்ணா ப்ளீஸ்! “ கெஞ்ச.
தன் சிரிப்பையே சம்மதமாய் தந்தான் கௌதம்
ஐஸ் கிரீமை சுவைத்தபடியே காயத்ரி “ கப் முக்கியம் பாஸ்! விஜயே சொல்லி இருக்கிறார் தெரியுமா ? “
“என்ன ? “ சிவா புருவம் உயர்த்த
உதயாவோ ஆர்வமாய் “ஆமா பிகில் படத்தில் விஜய் சொல்லி இருக்கிறார் கப் முக்கியம் பாஸ்ன்னு ! “
தலையில் அடித்துக்கொண்ட கௌதமோ “ சினிமா பார்க்கிறதில் இருக்கிற ஆர்வம் படிப்பில் இருக்கா ? இதெல்லாம் நல்லா சொல்லு. பரீட்ஷைல மார்க் மட்டும் குறையட்டும் மவளே அப்போ இருக்கு சேதி ! “
காயத்ரியோ உதயாவிற்கு ஆதரவாய் “ இந்த வருஷம் எங்க படிப்பே படம் பாக்குறது தானே! “ சொல்லி உதயாவிற்கு ஹை பாய் கொடுக்க
“ மார்க் வரட்டும் அப்போ வச்சுகிறோம் ! “ சிவாவும் செல்லமாய் பெண்களை மிரட்ட
“அதெல்லாம் ஜமாய்ச்சுடுவோம் ! “ பெண்கள் கோரஸாக பதிலளித்தனர்.