NSOV 12

NSOV 12

ஸ்வேதா பி.ஈ படிப்பின் முதலாம் ஆண்டிலும், நந்தகுமார் மற்றும் பாலசரவணன் இருவரும் நான்காம் ஆண்டிலும்… அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர்…

அன்றும் அதே சரக்கொன்றை மரத்தின் கீழே உட்கார்ந்திருந்தனர், ஸ்வேதா… வர்ஷினி… பாலா… நந்தா… நால்வரும்

ஸ்வேததான் அவளது அண்ணனிடம் “அண்ணா ப்ளீஸ்டா… என்னையும் நாளைக்கு உன்னுடன் கூப்பிட்டு போடா அண்ணா…” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்…

“ஏய்… இப்படி மரியாதையே இல்லாமல் பேசுற இல்ல… அதனாலேயே உன்னை கூப்பிட்டு போகக் கூடாதுனு நினைக்கிறேன் ஸ்வேதா” என அவன் முறுக்கிக்கொள்ள…

“அண்ணாங்க! அண்ணாங்க! என்னை உங்க கூட கூப்பிட்டு போங்க அண்ணாங்க!” என்றவள்… “இந்த மரியாதை போதுமா அண்ணாங்க?” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கவும்… மற்ற மூவருமே சிரித்து விட்டனர் அவளது முக பாவனையைப் பார்த்து…”

அடுத்த நாள் நடக்கவிருந்த ஒரு இன்டர் காலேஜ் பெஸ்டிவலில், அவர்களது கல்லூரி சார்பில், நடன நிகழ்ச்சியில், நந்தா…அவர்கள் குழுவினருடன்… கலந்துகொள்ளவிருக்கிறான்…. அங்கே வேடிக்கை பார்க்கச் செல்வதற்காகத்தான்… ஸ்வேதா அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்…

வர்ஷினியும்… “ஆமாம் நந்தா அண்ணா எங்களையும் கூப்பிட்டு போங்க ப்ளீஸ்…” என நந்தாவிடம் சொன்னவள்…

பாலுவை நோக்கி… “பாலுண்ணா நீங்களாவது… கொஞ்சம் சொல்லுங்களேன்… இன்று நடந்த சிம்போஸியத்திற்கே நீங்கள் எங்களை அழைத்துப்போகவில்லை…” என பாலுவை துணைக்கு அழைக்க…

அதற்கு பாலு… “போனால் போகிறது நந்தா… இவர்களையும் அழைத்துப் போகலாம்டா… அதுதான் இவ்வளவு கெஞ்சறாங்க இல்ல?” என்க…

நந்தாவும் “நீ சொல்றதால ஒத்துக்கறேன்… நீதான் அதில் கலந்துக்கல இல்ல… அதனால நீதான் நிகழ்ச்சி முடியும் வரையிலும் இவர்களுக்கு பாடிகார்டு வேலை பார்க்கணும்… ஓகேவா?” எனக் கேட்க… பாலாவும் கட்டை விரலை தூக்கிக் காண்பித்து தனது ஒப்புதலைத் தெரிவித்தான்…

மறுநாள் அந்த கல்லூரிக்கு நான்குபேருமே சென்றனர்…

நந்தா நிகழ்ச்சிக்கு தயாராவதற்காகச் சென்றுவிட… மற்றவர் மூவரும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தனர்…

அங்கே பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து குவிந்திருந்ததால்… அந்த அரங்கமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது… அங்கேதான் ஸ்வேதா ஹரியை முதல் முதலில் பார்த்தது…

அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.ஈ. படித்துக் கொண்டிருந்தான் ஹரி… அங்கே அவனைத் தெரியாதவர்களே இல்லை எனும் அளவிற்குப் பிரபலமாக இருந்தான் அவன்…

அதுவும் முந்தைய தினம் அங்கே நடந்த சிம்போஸியதில்… அவன் முதல் பரிசும் பெற்றிருக்க… எங்கேயும் ஹரி! ஹரி! என்ற பெயரே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது…

ஸ்வேதா, வர்ஷினியை நோக்கி… “ஓவர் பில்டப்பா இருக்கு… யாருடி இந்த ஹரி?” எனக் கேட்க…

“எனக்கு மட்டும் அவனைத் தெரியுமா என்ன?” என வர்ஷினி பதில் கொடுக்க… அதே நேரம் நிகழ்ச்சிகளும் ஆரமிக்க…

அவளுடைய கேள்வியின் நாயகனே மேடையில் தோன்றினான்… அந்த விழாவின் ஒருங்கிணைப்பாளராக…

மிகத் தெளிவான ஆங்கிலத்தில், வசீகரத்துடன் அவன் வரவேற்புரையை வாசிக்கத் தொடங்கவும்…

ஹரி! ஹரி! ஹரி! என்ற மாணவர்களின் உற்சாகக் குரல் அந்த அரங்கமெங்கும் உயர்ந்து ஒலித்தது…

அவனைக் கண்ட அவளது விழிகள்… இமைக்க மறந்தது…

பிறகு வர்ஷினி அவளை அழைக்கவும்தான்… தன் நினைவிற்கு வந்தவள் நிகழ்ச்சிகளை கவனிக்கத் தொடங்கினாள்…

அவர்கள் கல்லூரியின் சார்பில் “மடை திறந்து ஆடும் நதி அலை நான்” ரீமிக்ஸ் பாடலுக்கு நந்தாவின் குழுவினர் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது…

நிகழ்ச்சியின் நிறைவாக ஒருபாடலை பாடுவதற்காக ஹரியை மேடைக்கு அழைத்தனர் …

அவனும் பாடத் தொடங்கினான்…

 

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னை கவலைகள் தின்ன தகாதென..

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னை சரணடைந்தேன்

ஸ்வேதாவிற்கு பாரதியின் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பம்… அதுவும் சில பாடல்கள்… அவளது உயிரினில் கலந்திருப்பது போல் தோன்றும். அப்படி ஒரு பாடல் தான் இது…

 

ஹரியின் குரலின் இனிமையிலும்… அந்தப் பாடலின் வரிகளிலும்… தன்னை மறந்து… சுற்றுப்புறம் மறந்து கரைந்துகொண்டிருந்தாள் ஸ்வேதா…

அந்தப் பாடலை அவன் பாடி முடிக்கவும்… அந்த அரங்கமே மாணவர்களின் கர ஒலியினால் அதிர்ந்தது… அப்பொழுதுதான் தான் இருக்கும் சூழலே நினைவில் வந்தது ஸ்வேதாவிற்கு…

அவனைப் ஏனோ பார்த்த உடனேயே பிடித்துப் போனது அவளுக்கு… அது ஒரு ஈர்ப்போ அல்லது காதலோ இல்லை ஆனால் அவனது அந்த ஆளுமை அவளை மிகவும் கவர்ந்திருந்தது… அவ்வளவே…

சொல்லிக்கொண்டே போனாள் ஸ்வேதா…

ஆச்சர்யத்துடன் அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹரி… “அப்படியா! என்னை அப்பொழுதே பார்த்திருக்கிறாயா?” என்றவன்…

“நான்தான் அன்றே உன்னைப் பார்க்காமல் விட்டுவிட்டேனா?” என அங்கலாய்க்க…

“அவ்வளவு பெரிய கூட்டத்தில்… உங்களால் எப்படி என்னைப் பார்த்திருக்க முடியும்” எனச் சொன்ன ஸ்வேதா… எதோ நினைவு வந்தவளாக…

“ஐயோ! நான் கிளம்பி வந்து அதிக நேரமாகிவிட்டதே… வீட்டில் இன்னும் சொல்லலையே” என்றவாறே தனது கைப்பேசியை தேட.. அதை அவளது ஹாண்ட்பாக்குடன் வீட்டிற்குள்ளேயே வைத்துவிட்டது அவளுக்கு நினைவில் வந்தது…

அதை எடுக்க வேண்டும் என அவள் உள்ளே செல்ல எத்தனிக்க… அவளைத் தடுத்த ஹரி… “எவ்ளோ சீக்கிரமா உனக்கு ஞாபகம் வந்துடுத்து ஸ்வேதா! “எனக் கிண்டல் குரலில் சொல்லிவிட்டு, பின்பு…

“உன் மொபைலில் இருந்து, நந்தாவிற்கு… நீ வரக் கொஞ்சம் நேரம் ஆகும் என்று மெசேஜ் செய்துவிட்டேன்… அத்துடன் ஸ்கூட்டியை விடப் போன என்னுடைய டிரைவர்… நீ என்னுடன் வந்திருப்பதைச் சொல்லியிருப்பார் எனச் சொல்லவும்…

“ஐயோ! எப்ப என் போனை எடுத்தீங்க…” என ஸ்வேதா கோபக் குரலில் கேட்கவும்…

“அது… நீ கார்ல உட்கார்ந்த உடனேயே…” என்ற ஹரி… “அதைக் கூட கவனிக்காம இருந்துட்டு… நீ இவளவு கோபப்படுவது ரொம்ப தப்பு ஸ்வீட்… டா…” எங்க…

அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிடவும்… “நீங்க பக்கத்துல இருந்தால் வேறு எதையுமே என்னால் கவனிக்க முடியலையே” என அவள் முணுமுணுப்பாகச் சொல்லவும்…

அவள் சொன்னது புரியாமல் “என்ன சொன்ன?” என ஹரி கேட்க…

 

“ம்… விடியற்காலையிலேயே கிளம்பி கோவிலுக்கு வந்தவளை… இங்கே கடத்திக் கொண்டு வந்துட்டு, இப்படி பட்டினி போடுறீங்களே” என அவள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும்…

“சாரிமா! எனக்கு இருந்த கோவத்தில் எல்லாமே மறந்துபோச்சு…” என்றவன் போனில் யாரையோ அழைத்துப் பேசிவிட்டு வந்தான்…

சிறிது நிமிடங்களிலேயே அவர்களுக்கான உணவை, அங்கேயே அவர்கள் சாப்பிடுவதற்கு ஏதுவாக ஒரு ட்ராலியில் வைத்து, அவனது பணியாளர் ஒருவர் கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றார்.

“அங்கே சில மர வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்… ஒரே தூசியாக இருக்கும்… இங்கேயே சாப்பிடலாம்” என அவன் சொல்லவும்…

“நம்ம காலேஜ்ல படிக்கும்பொழுது அங்கே லஞ்ச் சாப்பிடுவோமே அந்த ஞாபகம் வருது ஹரி…” என்றவாறே அங்கே வந்திருந்த உணவை அவனுக்கு ஸ்வேதா பரிமாற தொடங்க…

“நீதானே பசிக்குதுனு சொன்ன… அதனால நீ முதலில் உட்கார்” என்க… இருவரும் உண்ணத் தொடங்கினர்.

மிக எளிமையான சிற்றுண்டியும் கூடவே சில பழங்களும் அங்கே இருந்தன… அதில் இருந்த சிகப்பு நிற கொய்யப் பழத் துண்டுகளை அவளது தட்டில் வைத்த ஹரி… “உனக்கு கொய்யாப்பழம் என்றால் ரொம்ப பிடிக்கும் இல்ல…நம்ம தோட்டத்தில் விளைந்தது…” என்றுவிட்டு…

“இந்த இளநீரும், இங்கே இருக்கும் மரத்திலிருந்து இறக்கியதுதான் சாப்பிட்டுப் பார்… மிகவும் டேஸ்ட்டாக இருக்கும்” என்று ஒரு கண்ணாடிக் குவளையிலிருந்த இளநீரை அவளை நோக்கித் தள்ளிவிட்டுத் தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்…

அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது ஸ்வேதாவிற்கு…

சாப்பிட்டுக் கொண்டே… ஹரி… “இப்ப சொல்லு ஸ்வேதா இன்டர் காலேஜ் மீட்ல பார்த்ததற்குப் பிறகு நம்ம காலேஜ்லதான் நீ மறுபடியும் என்னைப் பார்த்தியா?’ என்று கேட்க…

“ம்ம்… ஆமாம்… ஆனால் அதற்கு முன்பு ஒருமுறை நான் பாரதியார் பாடல்களை யூடியூபில் தேடிக் கொண்டிருந்த பொழுது… நீங்கள் கல்லூரியில் பாடிய அந்த வீடியோவை… அதில் பதிவேற்றி இருந்தார்களே… அதைப் பார்த்தேன்… அன்றிலிருந்து தினமும் ஒருமுறை அதைப் பார்ப்பேன்…” என அவள் பதிலுரைக்கவும்…

அவனது பாடல் மீதான அவளது ரசனையில், அவன் மனம் நெகிழ்ந்துதான் போனது…

அதன் பின் அவளே தொடர்ந்தாள்… “ஹரி! ஹரி! என்று, பாலுண்ணா, தினமும் சொல்லிக்கொண்டிருந்த ஹரி நீங்கள்தான் என்று நான் கொஞ்சமும்… எதிர்பார்க்கவில்லை… ஆனால் அந்த வைரம் டீவியோட செலெக்ஷன்க்கு போன அன்றைக்குத்தான் முதன் முதலாக நம்ம கல்லூரியில் உங்களைச் சந்தித்தேன்… நீங்க இங்கேயே வந்து படிப்பீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை… அதுவும் நீங்க என் ஃப்ரெண்டாக ஆனது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி… தெரியுமா?” என்று அவள் கேட்க…

“ஓ… அதனாலதான்… புதிதாகப் பழகுவதுபோல் இல்லாமல் அன்று இயல்பாக என்னுடன் அங்கே வந்தாயா?” என அவன் கேட்கவும்…

“ம்ம்… ஆனால் பாலு அண்ணா சொன்னதும் ஒரு காரணம்…” என ஒத்துக்கொண்டாள் ஸ்வேதா…

“ஆனால்… நான் உன்னை அதற்கு முன்பே பார்த்துவிட்டேன்” என்ற ஹரி… அவளை முதன்முதலாகக் கல்லூரி வாகன நிறுத்தத்தில் பார்த்ததை அவளிடம் சொல்ல… விழி விரிய அவனைப் பார்த்த ஸ்வேதா… “ஓ” என அதிசயிக்க…

“இதுக்கே இப்படி இந்த முண்டக்கண்ணை விரித்துப் பார்த்தால்… நான் அன்றே உன்னை காதலிக்கத் தொடங்கிவிட்டேன்… என்றால்?” என்றவனின் கேள்வியில்… அவளது கண்கள் கலங்கிப்போனது…

“நான்தான் உங்களை சரியா புரிஞ்சுக்கல…” என வருத்தத்துடன் சொன்னாள் ஸ்வேதா…

“இல்லை ஸ்வேதா! நானும் ஒரு காரணம்தான்… உன் படிப்பு முடியும்வரை… உன் மனதைக் குழப்பக் கூடாது என நான் நினைத்ததால்தான்… எதையும் உன்னிடம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை…” என ஹரி கூறவும்…

 

தனது மீதான அவனுடைய அக்கறை… அவளது இதயம் முழுவதும் தித்திக்க… “அப்படியெல்லாம் சொல்லமுடியாது… சாரே… நீங்க சொல்லாமலேயே உங்கள் மனதில் இருந்ததை… நான் கண்டு பிடிச்சிட்டேன் தெரியுமா? என் பிறந்தநாள் அன்று…” என ஸ்வேதா சொல்லவும்…

“அப்பவே வா?” வியப்புடன் கேட்டான் ஹரி…

“அப்பவேதான்… நீங்கள் சொல்லாவிட்டாலும், உங்களுடைய மனதை… உங்களுடைய கண்களே என்னிடம் சொல்லிவிட்டதே” பெருமை பொங்கச் சொன்னாள் ஸ்வேதா…

அன்று எனக்காகவே நீ தந்த பரிசு…

அன்று என்னை… நீ பார்த்த பார்வை…

அன்று எனக்காகவே நீ அழகாக்கிய இந்த உலகம்…

அன்று எனக்காகவே நீ பாடிய பாடல்…

எனக்காவே நீ சிறப்பாக்கிய அந்த நாள்…எனக்கானவன் நீ என்று…

சொல்லாமல் சொன்னது!!!

எனக்குமட்டுமே நீ என்று…

இன்றுதான் நான் உணர்ந்தேன்!!!

உனக்கு மட்டுமே நான் என்றாகும்…

அன்னாளும் என்னாளோ???

எனக்காகவே நீ சொல்வாய்….

எனக்கே எனக்கான என்னவனே!!!

(ஸ்வேதா…)

error: Content is protected !!