O Crazy Minnal(Epilogue)

FB_IMG_1654192785915-7b6360ef

Epilogue

 பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை படர்ந்திருக்கப் பாறையொன்றின்மேல் கால் ஒற்றியவனாக ஒவ்வொரு பாறையாய் தாவிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.

 

இவன் இங்குச் சந்தோஷச் சாரலில் நனைந்து கொண்டிருக்க இவனுக்கு நேர்மாறாய் அங்கு ஒருத்தி படபடப்பும் குழப்பமுமாக.

 

பிரச்சனைகள் சற்று மட்டுக்கு வரவும் அடுத்த  நாளே அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கட்டுசோறு கட்டிக்கொண்டு ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர்.

 

அங்கு அந்த பறவைகளின் பாடல்களும், நீரின் சலசலப்பும் பின்னணியாக, நீரின் நடுவில் பாறைகளின்மேல் அமர்ந்து கொண்டு, ஆற்றுநீரில் கால் நனைத்தவாறு கொண்டு வந்திருந்தவையை உண்பது அவர்கள் வழக்கம்.

 

அதுபோல் தான் அன்று அவர்களும் வந்திருந்தனர்.  பெரியவர்கள் ஒருபுறம் கதையடித்துக் கொண்டிருக்கச் சிறியவர்கள் இன்னொருபுறம் அங்குமிங்கும் அலைந்தவாறு இருக்க

 

இங்கு இவனோ சிறுபிள்ளையாய்.

 

ஒரு பாறையின்மேல் நின்றவன்  அடுத்ததில் தாவ எண்ணி காலை உயர்த்த அவனை பிடித்து இழுத்தது ஒரு கரம்.

 

நின்றவன், இப்பொழுது  பாறைகளின் இடையில். மறைவில்.

 

பிடித்திழுக்கப்பட்டதில் ஓர் நொடி அதிர்ந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தான். பின் தன்னை பற்றி இழுத்தவளைப் பார்க்க, அங்கு அவளோ இவனது பதற்றத்தை இரசித்தவாறு இதழ்களில் சிரிப்பு ஊற நின்றிருந்தாள்.

 

“அடிப்பாவீ! ஒரு நிமிஷம் க்ளோஸ் பண்ண பாத்தீயே!” என்றவன் கத்த அவளோ

 

“அடேங்கப்பா! உங்க வீரமெல்லாம் இவ்ளோதானா!” என்றாள் நக்கலாக.

 

பின் நொடிப்பொழுதில் பாவனையை மாற்றியவளின் முகத்தில் சந்தேகத்தின் ரேகை.

 

அவள் முகம் கண்டவனோ “என்னாச்சுடா?” என்றான் பரிவாக

 

சிந்தனை ரேகைகள் புருவம் சுளிக்க வைக்க அவளோ,”இல்ல.. எல்லாம் சொல்லிட்ட, ஆனா முக்கியமான ஒன்ன நீ இன்னும் சொல்லலியே…” என்றவள் இழுக்க அது என்னவென்று புரிந்தும் அவன் அமைதி காத்தான்.

 

இதுசரிபட்டு வராது என்று முடிவெடுத்தவள் வாய்விட்டே கேட்டுவிட்டாள்.

 

“சொல்லு நரி! அப்பூ அத்தனை வருஷம் யாருக்கும் தெரியாம வச்சிருந்தது, உனக்குமட்டும் எப்படி தெரிஞ்சுது?” என்றவளின் கண்களில் கூர்மை!

 

சற்று தயங்கியவன் பின்,”அது.. அது.. எனக்கு மொதல்ல, மாமான்னு சந்தேகம் வந்தொடனே என் ஃப்ரெண்ட் கிட்ட சொல்லி விசாரிக்க சொன்னேன்…” என்றவனை இடைமறித்தவள்

 

“ஃப்ரெண்ட் விசாரிச்சா வெளியே வந்துருக்காதே?”  என்றவளின் கேள்வியில்

 

“ஃப்ரெண்ட் டிடக்டிவ்!” என்றான் ஒற்றை வரியில்

 

முதலில் ஒரு ஓ உடன் சிந்தனையில் ஆழ்ந்தவள் பின்,” அப்போ அப்பாவ சந்தேகப்பட்டிருக்க நீ!” என்றாள் நிலவரத்தைக் கலவரம் ஆக்கவென்று அவனோ அவளைப் புரியாமல் பார்க்க

 

“இப்படி சந்தேகபடரவன்கூட எப்படி வாழ முடியும்!” என்றவள் மூக்கை உறிஞ்ச அவனுக்கோ ‘என்னது!’ என்ற அதிர்ச்சி

 

“நான் எப்படா சந்தேகப்பட்டேன்?”

 

“அப்புறம் ஏன் இன்வெஸ்டிகேட் பண்ணே?”

 

“அது மாமாதான்னு கன்ஃபர்ம் பண்ணவேணாமா?” என்க அவளுக்குப் புரிந்திருந்தும்

 

“அதெப்படி நீ பண்ணலாம்!” என்று அவன் சட்டையைப் பிடிக்காத குறையாக நின்றாள்.

 

அங்கு அவர்களைத் தேடிவந்த அஷ்மியும் ரேவதியும் இவர்களைக் கண்டு அருகில் வர ரேவதியோ இவர்கள் சண்டையிடுவதை கண்டு பதறியவளாக வந்தாள்

 

“ஏ! ஏ! ஏன் அடிச்சிக்கறீங்க?” என்றவள் கேள்வியெழுப்ப அங்கிருவரும் அதை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

 

“போடா நரி!”

 

“நீ போடி சொர்ணாக்கா!” என்றிருக்க இங்கிவளுக்கோ பதறியது

 

நேத்துதானேடா சேர்ந்தீங்க! என்று தடுக்க முயன்றவள் அமைதியாய் நின்று வேடிக்கை பார்க்கும் அஷ்மியை வினோதமாய் பார்த்துவைத்தாள்.

 

“என்ன அஷ்மி? வேடிக்க பார்க்கற!” என்றவளின் கேள்விக்கு அவள் தோளில் கைபோட்ட அஷ்மிதா

 

“யாரு? இவங்க சண்டை போட்டுக்கறாங்க. அத நாம நம்பி சமாதானப்படுத்தனுமா? என்ன ரேவதி இன்னும் பச்ச மண்ணாவே இருக்க!” என ரேவதியோ புரியாமல் விழித்தாள்.

 

அவள் தாடையைப் பிடித்துத் திருப்பினாள் அஷ்மி

 

அங்கிருவரும் என்னவோ அவர்களைத்தவிர ஒற்றுமையான ஜோடி வேறில்லை என்பதாய் ஒருவர் தோளின்மேல் மற்றவர் கைபோடாத கதையாய் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

 

அதைக் கண்ட ரேவதியோ கண்கள் விரிய அஷ்மியிடம் திரும்பினாள்.

 

“நான்தான் சொன்னேன்ல, எத்தன தடவ பல்பு வாங்கிருப்போம்!” என்றவளின் வார்த்தையில்

 

அப்போ நான்தான் அவுட்டா! என்று திருதிருவென விழித்தாள் ரேவதி.

 

அவள் விழித்த அழகில் அஷ்மி மட்டுமின்றி நரேனும் குறிஞ்சியும்கூட சிரித்துவிட, அந்த இடம் முழுக்க நிறைந்து வழிந்தது அவர்களது சிரிப்புச் சத்தம்.

 

பிள்ளைகளா! வாங்க என்றபடி அங்கு வந்தார் விமலா.

 

சிரிப்பைக் கட்டுக்குள் வைக்க முயன்றவர்களாக அவர்கள் சென்றனர்.

 

பூஞ்சோலையின் வசந்தகாலம் இனிதே தொடங்கியது.