odi-sandhyafull

ஓடிப்போலாமா..?

  • சந்தியா ஸ்ரீ

அத்தியாயம் – 1

நீலநிற கடல் மங்கை அவளோ சிவப்பு நிற சேலை உடுத்திக்கொண்டு பொற்பாவை கோலத்தில் இருந்தாள்.. சூடும் சூரியன் குளிரும் செந்நிலவாக மாறி மேற்கில் மறைய, அந்தி மாலைபொழுது அழகாக மயங்கிக் கொண்டிருந்தது..

கன்னியாகுமரி கடற்கரை அழகை வர்ணிக்க இது மட்டும் போதுமா..? திருவள்ளுவர் சிலை சூரியனின் வெளிச்சத்தில் பொன்னிறமாக மாறிட, விவேகானந்தர் மண்டபம் பொற்கோவில் போன்ற பிரமையை உருவாக்கியது..

அந்த மாலைபொழுதின் அழகை எல்லாம் ரசித்த வண்ணம் பஸில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் முகத்தில் வந்து மோதியது இளமாலைத் தென்றல்.. அது அவளின் கூந்தலைக் கலைத்துவிட்டது..

முகத்தை மறைக்கும் முடியைக் காதோரம் ஒதுக்கிய நித்திலா மாலை ஆபீஸ் வேலை முடிந்து, ‘இன்னைக்கு அம்மா என்ன செஞ்சி வெச்சிருப்பாங்க..?’ என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தாள்..

அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்துவிட பஸில் இருந்து இறங்கியவள் வீட்டை நோக்கி நடந்தாள்.. அவள் வீட்டிற்குள் நுழைய கேட்டைத் திறக்கும் நேரத்தின் வீட்டின் உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது..

“இந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்.. உங்க மகளோட அழகிற்கும், அறிவிற்கும் ஏற்ற குடும்பம்.. வேண்டாம் என்று சொல்லாதீங்க..” என்ற தரகரின் குரல் தெள்ள தெளிவாக வீட்டின் வாசல் வரை கேட்டது..

‘இது தரகரின் குரல்ல’ என்று உணர்ந்தவளின் முகம் சிவந்துவிட, ‘நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுகிறேன் என்று இவரிடம் எப்பொழுது சொன்னேன்..’ என்று மனதிற்குள் தீவிரமாக சிந்தித்தாள்..

அதற்குள், “என்னோட பொண்ணேதான் அந்த பையனுக்கு வேண்டும் என்றால் ஒரு மாசம் முடியும் வரையில் அவங்களை காத்திருக்க சொல்லுங்க தரகரே..” என்று நித்திலாவின் தாய் சுமித்ராவின் குரல் கேட்டது..

‘நல்ல வேலை நித்தி அம்மா இடையில் புகுந்து ஆட்டையை கலச்சிட்டாங்க..’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளின் காதில் மீண்டும் தரகரின் குரல் கேட்க, ‘இந்தாளு எதுக்கு இப்பொழுது வந்தான்..?’ என்று எரிச்சலுடன் பல்லைக் கடித்தாள் நித்திலா..

“ஒரு மாதம் அவங்க எப்படி காத்திருப்பாங்க..” அவர் தயக்கத்துடன் இழுக்க,  “அதுக்காக நான் என் பிள்ளை பிடித்து கட்டாயப்படுத்தி திருமணம் பண்ணிவைக்க முடியுமா..?” சுமித்ராவின் குரலில் மெல்லிய எரிச்சல்..

“என்னம்மா பிடிகொடுக்காமல் பேசறீங்க..” என்று தாழ்ந்து வந்தது தரகரின் குரல்..

“இல்லண்ணா காபி குடிக்க கொடுத்துவிட்டுதான் சொல்றேன்..” சுமித்ராவின் குரலில் குறும்பு வெளிப்பட, ‘இந்த அம்மா இருக்காங்களே..’ என்று நினைத்த நித்திலாவின் முகம் பளிச்சென்று மலர்ந்தது..

“என்னம்மா இதிலும் விளையாட்டா..? சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க..” என்றவர் கிளம்பும் ஆராவாரம் கேட்டு,  எதுவும் அறியாத பிள்ளை போல வீட்டின் கேட்டைத் திறந்தாள் நித்திலா..

அவரை வழியனுப்ப வாசல் வரையில் வந்த சுமித்ரா, “வா நித்திலா..” என்றவர் பார்வை மகளின் மீது கேள்வியாக படித்தது.. அவளோ கோபமாக இருப்பது போல சடாரென்று வீட்டிற்குள் சென்றுவிட்டாள்..

அதனாலோ என்னவோ அவருக்கு மகளின் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.. அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிய சுமித்ரா மீண்டும் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது,

“ஓடோ ஓடோ ஓடோடி போறேன்.. காதல் பாதை தேடோடி போறேன்..” என்ற பாட்டை போட்டுகொண்டு தன்னுடைய அறைக்குள் செல்லும் மகளைப் பார்த்தவருக்கு விஷயம் புரிந்துவிட, அவரின் உதட்டில் குறும்புப் புன்னகை அரும்பென்று மலர்ந்தது..

‘மகளே ஓடியா போக போறே.. நீ எப்படி ஓடுகிறாய் என்று நானும் பார்க்கிறேன்..’ என்று சமையலறைக்குள் நுழைந்தார் சுமித்ரா.. அவரின் திட்டம் அறியாத மகளோ அறையின் உள்ளே ஓடிப்போவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள்..

அழகான வட்ட முகம், வில்லென புருவம், மீன் போன்று இரு விழிகள், நேரான மூக்கு அதன் வலதுபுறம் மின்னும் வெள்ளை மூக்குத்தி, சிவந்த ரோஜாப்பூ போல இதழ்கள்.. காதோடு கதை பேசும் ஜிமிக்கி..!

அளவான உடல்வாக்கை உடைய சந்தன நிறத்தில் வடித்தெடுத்த செப்பு சிலையழகி..! வயது இருபத்தி மூன்று.. படிப்பை முடித்துவிட்டு பிரைவேட் நிறுவனம் ஒன்றில் பி.ஏ.வாக வேலை செய்கிறாள்..

அவளின் அம்மா ஒரு கவர்மென்ட் ஸ்டாப்.. நித்திலாவின் அப்பா தாசில்தார் வேலையில் இருக்கும் பொழுது இறந்துவிட அவரின் வேலை மனைவியான சுமித்ராவிற்கு கிடைத்தது..

இப்பொழுது அவர் ரிட்டயர்டு ஆக இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது.. ஒரு மகன் கலையரசன். அவனுக்கு திருமணம் முடிந்துவிட்டது.. அவர்கள் நால்வரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருக்கின்றனர்..

இப்பொழுது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் சுமித்ரா. அவரின் விருப்பத்திற்கு அடிபணிய மனம் நினைத்தாலும் அவளின் சின்ன சின்ன ஆசைகள் அவளை அடிபணிய விடவில்லை.. ஆசை யாரை விட்டது?! இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே!

அத்தியாயம் – 2

இரவு உணவை முடித்துவிட்டு எல்லோரும் அவரவர் அறைகளுக்கு செல்ல, அதையெல்லாம் கவனித்தவண்ணம் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் நித்திலா!

நேரம் பதினோரு மணியைத் தாண்டிச்செல்ல, ‘இன்னும் ஒரு மணிநேரம் கிளம்பிவிடலாம்..’ என்று  கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே அறையின் குறுக்கும் நெடுக்கும் நடைபயின்று கொண்டிருந்தாள்..

தன்னுடைய பேக்கில் உடைகளை எல்லாம் எடுத்து வைத்தவள், ‘எதற்கும் தேவைப்படும்..’ என்று அவளுக்கென அவளின் தந்தை  கடைசியாக விட்டுசென்ற மோதிரத்தையும் எடுத்துக் கொண்டாள்..

மீண்டும் கடிக்காரத்தைப் பார்த்துவிட்டு, ‘எல்லோரும் தூங்கிட்டாங்க.. நம்ம கிளம்பலாம்..’ அவள் அறையைத் திறந்து வெளியே வந்தாள்.. காலில் அணித்திருக்கும் கொலுசு கூட தன்னைக் காட்டிக் கொடுக்கும் என்று கொலுசை கூட கலட்டி பேக்கில் இருந்த துணிக்குள் போட்டுவிட்டாள்..

அவள் ஹாலில் நின்று அண்ணனின் அறையையும், அம்மாவின் அறையையும் நோக்கியவள் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, ‘நல்ல தூங்கறாங்க.. நித்தி எஸ்கேப்..’ என்று பின் வாசலை நோக்கிச் சென்றாள் நித்திலா..

அங்கே தலைக்கு கர்சீப் கட்டிக்கொண்டு தன்னுடைய உடல்வாகிற்கு ஏற்றார் போல இருக்கும் சுடிதாரை அணிந்துகொண்டு கன்னிக்கு பிளாக் கலர் கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக அமர்ந்திருந்த தாயை பார்த்து “அம்மா..” என்று அதிர்ந்து இரண்டடி பின் வாங்கினாள்..

அவளின் குரல்கேட்டு திரும்பிய சுமித்ரா, “ஏய் ஏண்டி சத்தம் போட்டு ஊரைக் கூட்டுகிறாய்.. மூச்சு..” என்று வாய்மீது விரல் வைத்து ஒரே வார்த்தையில் மகளை அடக்கினார்..

“அம்மா இங்கே என்ன பண்றீங்க..?” அவள் மெல்லிய குரலில்.. “நான் ஓடிப்போக போறேன் நித்தி..” என்று குதுகலத்துடன் கூறினார்..

“அம்மா என்னோட மானத்தை வாங்காதீங்க.. உங்களுக்கு ஓடிபோகும் வயசா..?” என்றவள் எரிச்சலுடன்

“நீயே ஓடிபோகும் பொழுது நான் ஓடிப்போகக்கூடாதா..? நான் என்றும் பதினாறு தெரியுமோ நோக்கு..”

தாய் கூறியதைக் கேட்ட நித்தி, ‘ஐயோ ஐயோ எனக்கு இப்படியொரு அம்மா..’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

“எப்படியும் ஓடிபோறது என்று ஆகிருச்சு.. வாங்க சேர்ந்தே ஓடிபோவோம்..” என்றவள் அவரின் கையில் இருந்த பேக்கைப் பார்த்து, “அம்மா இது எதுக்கு..” விசாரிக்க, “அதெல்லாம் உனக்கு எதுக்கு.. வா போகலாம்..” என்றார் சுமித்ரா..

‘தனியாக ஓடிபோலாம் என்று நினைச்சா இந்த அம்மா என்னோட ஓடிவரேன் என்று கிளம்பீட்டாங்களே..’ மனதிற்குள் நொந்து போனாள் நித்தி..

அவள் பின் வாசல் கேட் அருகில் செல்ல, “அடியேய் அங்கே எதுக்கு போறே..” என்று மகளின் கையைபிடித்து இழுத்தார் சுமித்ரா..

“என்னம்மா வெளியே போக வேண்டாமா..”

“வா சுவர் ஏறிக்குதிக்கலாம்..” என்றார் சுமித்ரா..

“அம்மா..” என்று கடுப்புடன் தாயை முறைத்தாள்..

“என்ன உனக்கு ரூல்சே தெரியல.. ஓடிபோகும் பொழுது சுவர் ஏறித்தான் குதிக்கணும்..” என்று மகளை முறைத்தார் சுமித்ரா..

“உங்களால் முடியாத ஒன்றை எதுக்கு முயற்சிக்க நினைக்கிறீங்க..”

“யாரைப் பார்த்து என்ன சொன்னா.. நான் அப்பவே ஹை ஜப்பில் செம்பியன்..” என்றவர் கையில் இருந்த பேக்கை மகளிடம் கொடுத்துவிட்டு சுவரில் ஏறி மறுக்கம் குதித்தார்..

அவர் குதித்ததும், “அம்மா..” என்று பயத்துடன் அழைத்தாள் நித்திலா.. “கையில் இருக்கும் பேக்கை கொடு..” என்று மறுபக்கமிருந்து பேக்கை வாங்கிக் கொண்டவர், “நீ சீக்கிரம் ஏறி குதி..” என்றார்..

“அம்மா நான் போயி ஏணி எடுத்துட்டு வரேன்..” அசடுவழிந்த மகளைப் பார்த்தவர், “ஒரு சுவரு எறிக் குதிக்க முடியாதவளை பிள்ளையாக பெத்து வெச்சிருக்கேனே..” என்று புலம்புவதற்குள் ஏணி எடுத்து வந்தாள் நித்தி..

“அம்மா ஏணி கிடைச்சிருச்சு..” என்று சிரித்துக்கொண்டே

“கருமம் கருமம் சீக்கிரம் ஏறிவா..” என்றார் சுமித்ரா.. மறுப்பக்கம் தாவிக்குதித்த நித்திலா, “ஹப்பாடா அடியேதும் படல..” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

“ரொம்ப முக்கியம் வா வந்து டாக்சியில் ஏறு..” என்றதும்  அவள் திருதிருவென விழிக்க, “ஏய் என்னடி பேய் முழிமுழிக்கிற..” மகளை அவர்திட்டித் தீர்க்க அவளோ தன் முன்னே நின்ற டாக்சியைப் பார்த்தாள்..

“இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் வந்துவிடும்..” என்று அவளை இழுத்துக்கொண்டு காரில் ஏறியது கார் ரயில் நிலையம் நோக்கிச் சென்றது..

அவரின் ஒவ்வொரு செயலையும் கவனித்த நித்திலா, “அம்மா இது எல்லாம்…” என்று இழுத்தாள்..

“ஓடிபோகும் மூஞ்சியைப் பாரு.. நான்தான் பிளான் பண்ணினேன்..” என்றார் கர்வமாக.. “நல்ல அம்மா..” என்றாள் மகள் குறுஞ்சிரிப்புடன்..

“எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே..” என்றவர் வடிவேல் பாணியில்

“ஹா ஹா ஹா..”  வாய்விட்டு சிரித்தவள், “நீங்க செம ஷார்ப் அம்மா..” என்றாள்

“ஏய் அம்மா சொல்லாதே.. சுமி இல்ல மேடம் என்று சொல்லு.. நான் ஊர் சுற்ற போறேன்.. சோ நீயும் நானும் சரிசமம்..” என்றார் கறாராக… “சரி சுமித்ரா..” என்று குறுப்புடன் கண்சிமிட்டினாள்..

அதற்குள் ரயில் நிலையம் வந்துவிட காரில் இருந்து இறங்கியவர் டாக்ஸி டிரைவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தார்..

அவர்கள் செல்ல வேண்டிய ரயில் தயார் நிலையில் நின்றிருக்க, “ஏய் சீக்கிரம் ஏறு.. நான் போய் சீட் பிடிக்கிறேன்..” என்றவர் வேகமாக ரயிலில் ஏறினார்..

தாயின் வேகத்தைப் பார்த்த நித்தி, ‘அம்மா அம்மா..’ என்று அவரைப் பின் தொடர்ந்தாள்.. அவர் போய் மகளுக்கு ஜன்னலோரம் இடம்பிடித்தார்..

அவரின் பின்னோடு கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தவள், “சுமி வர அவசரத்தில் இரண்டு விஷயத்தை செய்ய மறந்தே போயிட்டேன்..” என்றாள் வருத்ததுடன்..

“இன்னும் என்னடி மறந்து தொலைச்ச..?” என்று கடுப்புடன் கேட்டார்..

“ஒரு சிம்கார்டு வாங்க மறந்துட்டேன்.. அப்புறம் அண்ணாவுக்கு ஒரு லெட்டர் எழுதிவைக்க .மறந்துட்டேன்..” தயக்கத்துடன் இழுத்தாள்..

“நான் ஓடிபோறேன் என்று எழுதி வெச்சிட்டு வந்துட்டேன்..” என்றவர் பேக்கை திறந்து எதையோ தேடியேடுத்தார்.. “இந்த சிம்கார்ட்.. பதினைந்து நாளுக்கு யூஸ் பண்ணிக்கோ..” என்று அவளின் கையில் கொடுத்தார்..

“நீ சரியான கேடிதான்..” சிரித்தாள் நித்திலா

“தேங்க்ஸ் நித்தி..” என்றவர் சொல்ல ரயில் மெல்ல கிளம்பி வேகமெடுத்தது.. அவர் முகத்தில் குளிர் தென்றல் வந்து மோதியது..

மாளிகை சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே

சுதந்திரம் இல்லையே விடுதலை கிடைத்தது

வாசலும் திறந்தது பறந்ததே கிள்ளையே..!” அவர் மனம்விட்டு பாடினார் சுமித்ரா.. தாயின் முகம் பார்த்த நித்திலா மனதிற்குள் தன் தாயின் மன உணர்வுகளைப் புரிந்தவண்ணம் அந்த பாடலை ரசித்தாள்..

தாயும், மகளும் தங்களின் பயணத்தை இனிதே தொடங்கினர்.. கூண்டுக்குள் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டும் சிறகு விரித்து பறந்தது.. பயணம் எவ்வாறு அமையும்?

அத்தியாயம் – 3

அந்த தனியறைக்குள் அமர்ந்து நேரம் செல்வதை அறியாமல் பைலைப் பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.. அவன் வேலையை முடித்துவிட்டு நிமிரும் பொழுது நேரம் பத்து மணியைக் கடந்திருந்தது..

அவன் சோர்வாக சீட்டில் சாய்ந்து விழி மூட, ‘தரகரிடம் உன்னோட போட்டோ கொடுத்தும் கூட உனக்கு நல்ல இடத்தில் ஒரு பொண்ணு கிடைக்கல..’ என்று தாயின் புலம்பல் அவனின் காதில் ஒலித்தது..

‘இந்த அம்மாவுக்கு இதே வேலையாக போச்சு..’ என்று நினைத்தவன் காரின் சாவியை எடுத்துகொண்டு தன்னுடைய அறையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்..

அவன் காரில் ஏறியதும் அவனின் மனம் மாறிவிட, ‘இந்த பிரச்சனை எல்லாம் மறந்து கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்கணும்..’ என்ற முடிவுடன் காரை எடுக்க,  இரவு நேரத்து நிசப்தத்தை கலைத்து சீறிப்பாய்ந்து நிரஞ்சனின் கார்..

இரவு வெகுநேரம் சென்றபிறகும் மகன் வீட்டிற்கு வாராமல் இருப்பதை கவனித்த மனோகரியின் மனதில் நெருடல் ஏற்பட்டது..

‘எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டிற்கு வந்துவிடுவானே? இன்று என்ன மணி பன்னிரண்டை கடந்த பின்னரும் வீட்டிற்கு வராமல் இன்னும் அலுவலகத்தில் என்ன செய்கிறான்..?’ என்ற சிந்தனையுடன் வாசலை நோக்கிச் சென்றார்..

அந்தநேரம் மனோகரியின் கைபேசி சிணுங்க, ‘அவனாகத்தான் இருக்கும்..’ என்ற எண்ணத்துடன் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று போனை எடுத்தார்..

“அம்மா..” என்றவனின் குரல்கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட மனோகரி, “ரஞ்சன் எங்கடா இருக்கிற..” என்று தவிப்புடன் கேட்டார்..

“அதை நான் அப்புறம் சொல்கிறேன்.. நீங்க சாப்பிட்டீங்களா..” தாயை விசாரித்தான் செல்லமகன் நிரஞ்சன்..

“நான் எல்லாம் சாப்பிட்டேன்.. உன்னிடம் முக்கியமான விஷயம் பேசணும்டா..” என்றவரிடம் “சொல்லுங்கம்மா..” என்றவன் காரில் ரயில்வே ஸ்டேஷன் சென்று கொண்டிருந்தான்..

“அந்தப்பொண்ணு வீட்டில் ஒரு மாசம் டைம் கேட்டிருக்காங்க ரஞ்சன்..” என்று சொல்ல, ‘அவங்க டைம் கேட்டது நல்லதா போச்சு..’ மனதிற்குள் நினைத்தவன்,

“டைம் கேட்டங்களா? இந்த ஒரு மாசத்தை மட்டும் வைத்து என்ன பண்ண போறாங்க?” சிந்தனையுடன் ஒலித்தது நிரஞ்சனின் குரல்..

“உன்னைப்பற்றி விசாரிப்பாங்க என்று நினைக்கிறேன்..” என்ற தாயிடம், “நல்ல விசாரிக்கட்டும்.. யார் வேண்டாம் என்று சொன்னது..” என்றவனின் கார் ரயில் நிலையத்தில் நின்றது..

“சரிடா உனக்கு அந்த பெண்ணைப் பிடிச்சிருக்கா.. அவங்க இன்னும் உன்னோட போட்டோ கூட பார்க்கல..” என்றவரின் குரல் தவிப்புடன் ஒலித்தது..

“நானும் இன்னும் அந்த பொண்ணோட போட்டோ பார்க்கல..”  பிடிகொடுக்காமல் பேசினான்..

“டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா..” தன் மகனை மிரட்டிட “சொல்வதெல்லாம் பதிலாக தெரியலையாம்மா..” என்றவன் சலிப்புடன்

“சரிடா நீ எப்பொழுது வீட்டிற்கு வருவாய்..? வேலை எல்லாம் முடிந்ததா இல்லையா..?” என்று பேச்சை அவர் திசைதிருப்பிவிட, “வேலை முடிஞ்சதும்மா.. வீட்டிற்கு வரமாட்டேன்ம்மா..” என்றவன் டிக்கெட்டை எடுத்தான்..

“என்னடா சொல்ற ஒண்ணுமே புரியல..” என்றவரின் குரல் பயத்துடன் ஒலிக்க, “உங்களுக்கு புரியாதது நல்லதா போச்சு.. உங்களோட தொல்லை தாங்க முடியாமல் ஓடிபோறேன்.. ஆளை விடுங்க சாமி..” என்று அவரின் தலையில் குண்டை தூக்கி போட்டான் நிரஞ்சன்..

“டேய் ரஞ்சன் என்னடா சொல்ற..? பொண்ணு யாருடா..? நீ ஓடி எல்லாம் போகவேண்டாம்.. நீ விரும்பும் பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் திரும்ப வந்துவிடுடா..”என்று கவலையுடன்  அவரின் குரல் ஒலிக்க அவனின் கோபம் தலைக்கேறியது..

“அம்மா நான் தனியாக ஓடிப்போறேன்.. எந்த பெண்ணையும் கூட்டிட்டு ஓடல.. என்னோட மானத்தை வாங்காமல் விடமாட்டீங்க போல..” என்று தலையில் அடித்துகொண்டான் மகன்..

அவன் சொன்னதைக் கேட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட மனோகரி, “இப்பொழுதுதான் மகனே போன உயிர் திரும்ப வந்திருக்கிறது.. ஆமா நீ எப்பொழுது திரும்பி வருவாய்..” மகனிடம் விசாரித்தார்..

“எனக்கே வீட்டிற்கு போலாம் என்று தோன்றும் பொழுது வருவேன்..” அதற்குள் ரயில் வந்துவிட தோளில் ஒரு பேக்கை மாட்டிகொண்ட நிரஞ்சன் அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்துவிட்டு ரயிலில் ஏறினான்..

‘தானாக கட்டாகிவிட்டது..’ என்று நினைத்த மனோகரி மீண்டும் அழைக்க, ‘நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரின் நம்பர் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது..’ என்று வரவே,

“இனிமேல் இவன் வரும் வரைக்கும் இவங்க அப்பாவை சாமாளிக்கணுமே..” என்று புலம்பியவர் தூங்க சென்றார்..

நிரஞ்சன் பெரிய செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ரவிவர்மா – மனோகரி அவனின் பெற்றோர். உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை..

ஆறடி உயரமும், அடர்ந்த புருவம், அடுத்தவரின் மனதினைப் படிக்கும் கூர்மையான கண்கள், நேரான மூக்கு, அதன் கீழே அளவான மீசை, சிகரெட் கரை படியாத உதடுகள் கட்டுகொப்பான உடல் தோற்றத்தை உடையவன்..!

பணத்திற்கு பஞ்சம் இல்லை.. குணத்திற்கு குறை இல்லை.. கைக்குள் அடக்கிவிட முடியாத திறமை..! பணத்திலோ இல்லை படிப்பிலோ அவனுக்கு எந்த குறையும் இல்லை.. ஆனால் நிறத்தில் மட்டும் பேரும் பிழை செய்தான் இறைவன்..!

கருமை நிறமுடைய கண்ணன் அவன்.. ஆனால் அவனின் நிறம் பிடிக்காத பெண்கள் அவனை ஒதுக்கினர்.. இருபத்தி ஏழு வருடம் ஆன அவனுக்கு இன்னும் பெண் மட்டும் அமையவில்லை..

அவனுக்கு பிடித்த பெண்களுக்கு அவனை பிடிப்பதில்லை.. ஏனோ வர வர பெண்களை சுத்தமாக வெறுத்துவிட்டான் நிரஞ்சன்.. அவனின் மனதில் எந்த பெண் இடம் பிடிக்க காத்திருக்கிறாளோ!

*****

இரவு பொழுது மெல்ல நகர்ந்து செல்ல அதுவரை நடந்த பிரச்சனையை மறக்க நினைத்த அனிதா தந்தையின் தோளில் சாய்ந்திருந்திருந்தாள்.. அவர்களின் குடும்பம் கூட்டு குடும்பம்..!

அனிதா வீட்டின் செல்லம்.. இப்பொழுது கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.. தினமும் வீட்டில் எழும் ஏதோவொரு பிரச்சனை ஏற்பட அதில் மனம் பாதிக்கப்பட்டாள்..

திடீரென நிமிர்ந்து தந்தையின் முகம் பார்த்தவள், “அப்பா நான் ஓடிப்போறேன்..” என்றதும் “அனிதா என்னம்மா சொல்ற..” திடுக்கிட்டார் கணேசன்..

“அப்பா ப்ளீஸ்.. இந்த ஒரு வாரம் நான் எங்காவது ஓடிப்போகிறேனே..” என்றவள் மெல்லியகுரலில்..

“என்ன பேசி பழகற.. பல்லை தட்டிவிடுவேன்..” மகளை மிரட்டினார்..

“நீங்க என்ன சொன்னாலும் சரி நான் ஓடி போகத்தான் போறேன்..” என்றவள் பிடிவாதமாக

“பாப்பா என்னடா குழந்தை மாதிரி அடம்பிடிக்கிற..” என்றவர் கறாராகப் பேச “…………..” அவள் மெளனமாக இருந்தாள்

“எங்களோட இருக்க உனக்கு பிடிக்கலையா..?” என்று தவிப்புடன் ஒலித்தது அவரின் குரல்..

“அதெல்லாம் இல்லப்பா..” என்றவள் மெல்லியகுரலில் சொல்ல, “அப்புறம்..” காரணம் கேட்க, “…………..” அவள் மீண்டும் மௌனம் சாதித்தாள்..

“இங்கே பாரு பாப்பா.. நீ நினைக்கிற மாதிரி இந்த உலகம் இல்ல..” என்றவர் எடுத்து சொல்ல, “புரியுதுப்பா.. ஒரு கூட்டுக்குள் அடைஞ்ச மாதிரி ஒரு ஃபீல்..” என்றாள் அவள்

“சரிடா அப்போ நீ போய் பாரு.. நம்ம குடும்பத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோம் என்று தெரியும்..” என்றவர் அவள் செல்ல அனுமதித்தார்.

“தேங்க்ஸ்பா..” என்றவள் எழுந்து கிளம்ப அந்த நடுராத்திரி நேரத்தில் அவளை வழியனுப்ப ரயில் நிலையம் வந்தார்.. ரயில் வந்த பின்னரும் அவளின் தோழிகள் வராமல் இருக்க, “பாப்பா நீ தனியாக போக போறீயா..” என்று கேட்டார்.

“ஐயோ இல்லப்பா பிரிண்ட்ஸ் எல்லாம் கம்பார்ட்மெண்டில் ஏறிட்டாங்க அப்பா..” என்றவள் புன்னகைக்க, “என்னிடம் பொய் சொல்றீயா..” என்றவர் அவளை சந்தேகமாக பார்த்தார்.

அவர் அசடுவழிய சிரித்திட அவளின் தலையைக் கலைத்துவிட்டு சிரித்த கணேசன், “ம்ம் என்னிடம் அனுமதி வாங்க இவ்வளவு போய் சொல்லிருக்கிற” என்று இடது புருவம் உயர்த்தினார்..

“ஸாரிப்பா..” என்றாள் மகள் சன்னக்குரலில்..

“சரிடா பார்த்து பத்திரமாக ஊரைச்சுற்றி பார்த்துவிட்டு வா..” என்றவர் அவளிடம் வேறு எதுவும் கேட்கவே இல்லை..

அவர் அவளின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்க, ‘அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்..’ என்று நினைத்தவளின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திட அவரின் முகம் மலர்ந்தது..

“வீட்டில் உனக்கு என்ன பிரச்சனை என்று தெரியல பாப்பா.. ஆனால் நீ திரும்பி வருவதற்குள் அப்பா எல்லாம் சரி பண்ணி வைக்கிறேன்..” என்றவர் உறுதியுடன்

“வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லப்பா..” என்றாள் மகளின் முகம் பார்த்தவர், “அப்புறம் எதுக்கு இப்பொழுது ஓடிப்போகிறாய்..” என்று கேட்டார்..

“காதலிச்சு ஓடி போகும் பொழுது போக வழி தெரியாமல் திணறக்கூடாது இல்ல அதுக்கான ஒரு ஒத்திகை..” குறும்புடன் கண்சிமிட்டினாள்..

“ஓ அதுக்குதான் மேடம் ஓடி போறீங்களோ..?” அவள் பதில் சொல்லவில்லை.. “சரிம்மா நீ ஓடிப்போ.. நான் தேடி வந்து உன்னை உதைக்கிறேன்..” என்றவரும் கேலியாக..

“ஓ தேடி வந்து உதைக்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்துருச்சா..?” என்று தந்தையை மிரட்டினாள் மகள்..

அவள் இடையில் கையூன்றி நின்ற தோரணையைப் பார்த்தவர், “ஏன் எனக்கு தைரியம் இல்லையா என்ன..?” என்று கேட்டார் கணேசன்..

“அது நிறைய இருக்கு என்ன மண்டையில களிமண் மட்டும் கொஞ்சம் கம்மிய இருக்கு போல..” தனியாக அவள் புலம்ப, “என்னது..?!” அதிர்ந்தார்

“ஆமாப்பா.. இல்லாட்டி ஓடிப்போறேன் என்று சொல்லும் மகளை ரயில் ஏற்றிவிட இங்கே வந்து நிற்கும் பொழுதே தெரியல உங்களுக்கு நட்டு கொஞ்சம் லூசு ஆகிருச்சு என்று தெரியலையப்பா..” என்றவள் குறும்புன்னகையுடன் ..

“எனக்கு மெண்டல் ஆகிருச்சா.. நீ ஊருக்கு போயிட்டு வா.. அந்த பட்டிக்காட்டான்னு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..” என்று மிரட்டினார்..

“அப்பா பட்டிகாட்டான் எல்லாம் வேண்டாம்..” சினுங்கினாள் மகள்

“அவன் வேண்டாமா அப்போ யார் வேண்டும்..?” என்று அவர் யோசிக்க, “மகேஷ் பாபு மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்து வைங்கப்பா..” என்று தன்னுடைய கனவை சந்தடி சாக்கில் கூறிய மகளை முறைத்தார் கணேசன்..

“ஹி.. ஹி.. ஹி.. அப்பா மை ட்ரிம் பாய்ப்பா.. அவனோட ஒரே ஒரு டூயட் மட்டும் ஆடினால் போதும்..” என்றவளின் விழிகள் கனவில் மிதப்பதைக் கண்டவர், “அதெல்லாம் கனவில் மட்டும்தான் நடக்கும்..” என்றவளை நக்கல் செய்ய, “நிஜத்தில் நடக்காதா..” என்று விளக்கம் கேட்டாள் மகள்..

அவர் பதில் சொல்லாமல் அவளை முறைக்க, “அனிதா உனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதானா..?” என்று புலம்பிய மகளை பார்த்தார்..

“அடியேய் உன்னை நல்ல பெத்து பொன்னின்னு பெயர் வெச்சேன்.. இப்படி அரலூசா ஆகும்முன்னு தெரியாம போச்சே..”  என்றவர் தனியாக புலம்பிட, “அப்பா நான் லூசு என்று முடிவே பண்ணீட்டீங்களா..?” என்று கேட்டாள்

“இதில் என்ன சந்தேகம் இதெல்லாம் கீழ்ப்பக்கம் போக வேண்டிய கேஸுன்னு தெரிஞ்சிருச்சு.,.” என்றவர் திடீரென எதையோ யோசித்தார்..

அவர் திடீரென தீவிரமாக யோசிக்க, “அப்பா என்ன யோசிக்கிறீங்க..” அவரின் கவனத்தைக் கலைக்க, “கீழ்பாக்கம் ஹவுஸ்புல் என்று நேற்றுதான் பேப்பரில் படித்தேன்..” அவர் சீரியஸாக சொல்ல, “அப்பா..” என்று கத்தினாள் அனிதா..

“என்னம்மா..” அக்கறையுடன் கேட்க, “யெப்பா கணேசா என்னை ஆளைவிடு..” என்று கையெடுத்து கும்பிட அவர் வாய்விட்டு சிரித்தார்..  “நான் ஒருவாரம் ஊர் சுற்றிவிட்டு வந்து உன்னை காமாட்சி கிட்ட மாட்டிவிடல..” என்றவள் சபதம் எடுத்தாள்..

“என்னிடமே சபதமா..? அதை நானும் பார்க்கிறேன்..” என்றவரின் குரல் கம்பீரமாக ஒலித்தது.. அதற்குள் ரயில் வந்துவிட, ‘நல்ல பெத்து பொன்னின்னு பெயர் வெச்சாராம்.. நான் என்ன பெயரை மாத்தியா வெச்சிகிட்டேன்..’ அவள் மனதிற்குள் புலம்பினாள்..

அவள் ரயில் ஏறும் வரையில் மகளைப் பார்த்துக்கொண்டே இருந்தவர், “போன் பண்ணுமா..” என்றார்.. “சரிப்பா..” என்றவள் புன்னகைக்க ரயில் மெல்ல வேகமெடுத்தது.. அவரும் வீட்டை நோக்கிச் சென்றார்..

இந்த பயணத்தில் யார் யாரோடு கைகோர்க்க போறாங்களோ..?!

அத்தியாயம் – 3

இரவுநேரத்தில் குளிர்தென்றல் இதமாக உடலைத் தழுவிச்சென்றது.. கம்பார்ட்மெண்டில் யாரும் அதிகமாக இல்லாததால் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது..

நிரஞ்சன் அந்த கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழையும் பொழுது சுமிம்மா மனம்விட்டுப் பாடிகொண்டிருந்தார்.. அவரின் பாடலைக் கேட்டதுமே அவனின் கடுகடுப்பு எல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது..

“சூப்பராக பாடுறீங்க.. உயிரே உனக்காக மூவி சாங்.. நதியா மேடமின் ஹைலைட் சாங்..” என்றவனின் குரல்கேட்டு நிமிர்ந்த சுமிம்மா, “தேங்க்ஸ் தம்பி..” என்றார்..

அவன் தோளில் பேக்குடன் நிற்பதைக் கவனித்தவர், “வாப்பா வந்து இங்கே உட்காரு..” என்றவர் நகர்ந்து உட்கார்ந்தார்..

நித்தி நிமிர்ந்து அவனின் முகம் பார்த்துவிட்டு தன்னுடைய ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிகொண்டு பாடலைக் கேட்க தொடங்கினாள்..

அவளின் பார்வையில் இருந்த அலட்சியம் அவனின் பார்வைக்கு தப்பவில்லை.. அவனும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..

அவர் நகர்ந்து உட்கார்ந்தது தான் தாமதம், “அண்ணா கொஞ்சம் வழி விடுங்க..” என்று சொல்லிவிட்டு ஓடிவந்து நித்திலாவின் அருகில் அமர்ந்தாள் அனிதா..

அவளின் வேகத்தை கவனித்த நித்திலா, ‘இவ்வளவு வேகமாக இங்கே வந்து உட்கார்ந்துவிட்டாள்..’ என்று நினைத்து அவனை நிமிர்ந்து நோக்கியவளின் விழிகளில் குறும்பு மின்னி மறைந்தது..

‘இவ்வளவு வேகம் தேவையா..?’ என்று திகைப்புடன் அனிதாவைப் பார்த்துகொண்டே நின்றான் நிரஞ்சன்

அவளை முறைத்த சுமிம்மா, “அந்த பையனை தள்ளிவிட்டு வருகிறாய்.. அப்படி என்ன அவசரம்..” அவளிடம் சண்டைக்கு போனார்..

அதற்கு எல்லாம் பயப்படும் ஆளா நம்ம அனிதா, “இல்லாட்டி உட்கார இடம் கிடைக்காது..” என்றாள் வேகமாக..

அவளின் புத்திசாலித்தனம் அவரின் மனதை கவர வாய்விட்டு சிரித்த சுமிம்மா, “சமத்து.. இந்த மாதிரிதான் இருக்கணும் செல்லம்..” என்றார்..

“தேங்க்ஸ்.. உங்களோட சுடிதார் நல்ல இருக்கு..” என்றவள் கூசாமல் ஐஸ் வைப்பதைக் கவனித்த நிரஞ்சனின் முகத்தில் புன்னகை அரும்பியது..

அவனின் கம்பீரத்திற்கு கீரிடமாக அமைந்த புன்னகையை இமைக்காமல் பார்த்த நித்திலாவின் மனதில் சின்ன சலனம்..!

“தேங்க்ஸ் குட்டிமா.. ஆமா உன்னோட பெயர்..” என்றவர் விசாரிக்க, “அனிதா..” என்றாள்..

“உங்களோட நேம்..” என்றவள் கேட்டதும், “சுமித்ரா..” என்றார்

“நான் உங்களை எப்படி கூப்பிட..” என்றவள் சிந்திக்க, “சுமிம்மான்னு கூப்பிடு அனிகுட்டி..” என்றார்

இருவரின் பேச்சையும் கவனித்த நிரஞ்சன், “இந்த வாலுக்கு சரியான ஜோடி நீங்கதான் சுமிம்மா..” என்றவரின் அருகில் அமர்ந்தான்..

இருவரும் பேசுவதைக் கவனித்த நித்திலாவின் பார்வை தனி சீட்டில் அந்த பெண்ணின் மீது கேள்வியாக படிந்தது.. அந்த பெண்ணோ புத்தகத்தைப் படித்துக்கொண்டே அனிதாவை முறைத்தார்..

“அண்ணா உங்களோட நேம்..” என்றவள் நிரஞ்சனின் பக்கம் திரும்பிவிட்டாள்..

“அவங்களைவிட்டு என்னிடம் வந்துவிட்டாயா..?” என்று சிரிப்புடன் கேட்க, “சொல்லுங்க அண்ணா..” அவள் அடம்பிடிக்க, “நிரஞ்சன்..” என்றான்..

“நேம் நல்ல இருக்கு..” என்று சொல்லிவிட்டு நித்யாவின் பக்கம் திரும்பிய அனி, “அக்கா நீங்க பெயர் சொல்லுங்க..” என்றாள்..

தன்னுடைய காதில் இருந்து ஹெட்செட்டை எடுத்துவிட்டு, “நித்திலா..” என்றவள் புன்னகையுடன்..

“என்னம்மா எல்லோரின் பெயரும் தெரிஞ்சிதா..?” அவன் அவளைக் கிண்டல் செய்ய, “அதையெல்லாம் விடுங்க அண்ணா.. இங்கே பாருங்க நம்ம எவ்வளவு பேசிட்டு இருக்கிறோம்.. இவங்க ரொம்ப மும்பரமாக புத்தகம் படிக்கிறாங்க..” என்று அவளின் அருகில் அமர்ந்திருந்தவளை கிண்டலடித்தாள்..

“ஏய் வாயை மூடு..” என்றவளின் வாயை மூடிய நித்தியின் கையைத் தட்டிவிட்டவள், “அக்கா ஏன் என்னோட வாயை அடைக்கிறீங்க..” என்றவள் காரணம் கேட்டாள்..

“ஏற்கனவே அவங்க உன்னை முறைச்சாங்க..” என்றவள் குறுஞ்சிரிப்புடன்.. அவளோடு சேர்ந்து அவளின் விழிகளும் புன்னகைக்க அவனின் மனதில் சலனம் ஏற்பட, ‘என்னது..’ என்று முகத்தை திருப்பிவிட்டான்..

‘அவள் வேண்டும் என்றே செய்கிறாள்..’ என்று உணர்ந்த சுமிம்மா, ‘ஐயோ யாரு பெத்த பிள்ளையோ தெரியல..’ அவர் மனதிற்குள் புன்னகைத்தார்..

“பாப்பா இவளோட பேச்சை கேட்காதே..” என்று எச்சரிக்கை செய்ய, “அட இருங்க சுமிம்மா..” என்று அந்த பெண்ணின் அருகில் செல்ல, “விடுங்கம்மா.. அவள் வம்பு வளர்க்காமல் விடமாட்டா..” என்றான் நிரஞ்சன் புன்னகையுடன்..

“அக்கா அப்படி என்ன படிக்கிறீங்க..” என்று அவளின் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தவள், “அண்ணா கதை புத்தகம்..” அவள் வாய்விட்டுச் சிரித்தாள்..

“இதுக்குதான் இவ்வளவு பில்ட்டப்பா..” என்றவள் வயிறைப் பிடித்துகொண்டு சிரிக்க, “இந்த அர்த்த ராத்தியில் கதை படிக்க விடாமல் என்னோட உயிரை வாங்காதே அனிதா..” என்றாள் அந்தப்பெண்..

“என்னோட பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றவள் அதிர்வுடன் கேட்க, “நீ என்ன மெதுவாகவா சொன்ன..” என்று குறும்புடன் கேட்டார் சுமிம்மா.. மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர்..

அவள் திரும்பி இருவரையும் முறைத்திட சிரிப்பைக் கட்டுபடுத்த இருவரும் வெகுவாக போராடிட, “அக்கா உங்களோட நேம் என்ன..?” என்று கேட்டாள்..

“வித்யா..” என்றதும், “உங்களை வீட்டில் யாரும் கதை படிக்க விடல என்று வீட்டில் இருந்து ஓடி வந்துடீங்களா..?” என்று சந்தேகமாகவே இழுத்தாள்.

“அது எப்படி உனக்கு தெரியும்..?” அவள் மீண்டும் அதிர்வுடன் கேட்க, “நீயும் வீட்டில் இருந்து ஓடிவந்துட்டியா..?” என்று அதிர்ச்சியுடன் கேட்டது வேறு யாரும் அல்ல நம்ம சுமிம்மா தான்..

“என்னது நீங்களும் ஓடி வந்தீங்களா..? அதுவும் இந்த வயசில் தனியாக ஓடி வந்திட்டீங்களா..?” – அதிர்ச்சியுடன் வித்யா..

“ஏனம்மா நான் ஓடி வர கூடாதா..?” என்றவர் அவளிடமே விளக்கம் கேட்க, “உங்களுக்கு என்னம்மா பிரச்சனை..?” – அனிதா

“எனக்கு என்ன பிரச்சனை.. ஒன்னும் இல்லையே..” என்றவர் தொடர்ந்து, “மனசில் சின்ன சின்ன ஆசை அதிகமாக இருக்கு அதையெல்லாம் நிறைவேற்றிக்க நினைச்சேன் ஓடி வந்துட்டேன்..” என்றார் சாதாரணமாக..

அவரின் மனம் அறிந்திருந்த நித்திலா அமைதியாக இருப்பதைக் கவனித்த அனிதா, “நித்திக்கா நீங்க இவங்களோட மகளா..?” என்று சந்தேகம் கேட்டாள்..

அவளின் கேள்வியில் நித்தியின் பார்வை நொடியில் தாயின் மீது படிந்து மீண்டது.. அவளோடு விளையாட நினைத்த மனமோ, “யாரு யாரோட மகள்..? இந்தம்மா யாருன்னே எனக்கு தெரியாது..” என்றவள் சொல்ல, “அட்ராசக்கை..” என்றார் சுமிம்மா சிரிப்புடன்

“அதுசரி ஆனால் முகஜாடை ஒரே மாதிரி இருக்கே..” என்றவள் மீண்டும் சந்தேகமாக இழுக்க, ‘ஆமா அவள் சொல்ற மாதிரி முகஜாடை ஒரே மாதிரி இருக்கிறதே..’ என்ற நிரஞ்சனின் பார்வையோ நித்தியின் மீது கேள்வியாக படிந்தது..

அப்பொழுது விசும்பல் ஒலிகேட்ட அனிதாவிற்கு பயம் ஏற்பட, “யாரோ அழறாங்க..” என்றவள் பயத்துடன் தொடங்க, “இந்த நேரத்தில் பேய்தான் அழுகும்..” என்று அவளை பயமுறுத்தினாள்

“இல்ல இந்த சத்தம் மேல இருந்து வருது..” – நிரஞ்சன்

“ரஞ்சன் எழுந்து யாருன்னு பாருப்பா..” என்றவர் திடீரென, “நீ வேண்டாம் இரு நானே பார்க்கிறேன் என்று எழுந்து அந்த சீட்டின் அருகில் சென்றார்.. அவர் எழுந்து பர்த் சீட்டைப் பார்க்க கிட்டதட்ட பதினேழு வயதை உடைய பெண்ணொருத்தி வாய்விட்டு அழுது கொண்டிருந்தாள்..

அந்த குட்டிப்பெண் சுருண்டு படுத்திருக்க, “நானே வருவேன்..” என்று சுமிம்மா திகிலோடு பேய் பாட்டு பாட, “வேண்டாம்..” என்று கத்தியவண்ணம் எழுந்தமர்ந்தாள்..

அவள் கண்ணைத் திறந்து பார்க்க, “ஏய் பாப்பா பயந்துட்டியா..? வா கீழிறங்கு..” என்று அவளை கீழிறங்கி வர வைத்தவர், “யாரும்மா நீ..? உன்னோட வீட்டில் இருந்து யாராவது வந்திருக்காங்களா..?” அந்த பெண்ணை விசாரித்தார் சுமிம்மா..

அவள் மெளனமாக இருக்க, “ஏய் பதில் சொல்லுடா.. எங்களை கண்டு நீ பயப்படாதே..” என்றான் நிரஞ்சன் அக்கறையுடன்.. அது அவளின் மௌனத்தைக் கலைக்க போதுமானதாக இருந்தது..

“அடுத்தவாரம் பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வருது.. அதுக்கு பயந்துட்டு வீட்டைவிட்டு வந்துட்டேன்..” என்றவள் மெல்லிய குரலில்..

“அப்போ நீயும் எங்க ஆளு..” என்றாள் அனிதா குஷியாக..

“நீ வாயை மூடவே மாட்டீயா..” என்றவள் எரிச்சலோடு தொடங்கினாள் வித்யா

“அதெல்லாம் மூட முடியாது வித்திக்கா..” என்றவள் சொல்ல, “அவளைத் திருத்த முடியாது விடு வித்யா..” என்றான் நிரஞ்சன்..

அவள் அவனை முறைக்க, “அம்மா தாயே நான் உனக்கு அண்ணன் மாதிரி தப்பாக நினைக்காதே..” என்றவன் கையெடுத்து கும்பிட வாய்விட்டு குட்டிப்பெண்.

அவள் சிரிப்பதைப் பார்த்து, “நல்ல சிரிக்கிறடா கண்ணம்மா.. உன்னோட பேரு என்ன..?” என்று கேட்ட சுமிம்மா அவளின் அருகில் அமர,, “சங்கரி..” என்றாள்..

“வீட்டில் சொல்லாமல் வந்தது தப்பில்லையா..?” அவளை அதட்டிட அவள் தலைக்குனிந்திட, “வீட்டில் எல்லோரும் தேடுவாங்க இல்ல..” என்றார் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டார்..

“அங்கே இருக்க முடியலம்மா.. எல்லோரும் எக்ஸாம் எப்படி எழுதி இருக்கிற? என்ன மார்க் வாருன்னு கேட்கிறாங்க..” சங்கரி வருத்ததுடன் சொல்லவே, “எக்ஸாம் எப்படி  எழுதியிருக்கிற..” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டான் நிரஞ்சன்.

“மெரிட்டில் பாஸ் பண்ற அளவுக்கு எழுதியிருக்கேன்..” அவள் புன்னகையுடன்..

“உன்னோட ஊரு..” என்று நித்திலா கேட்க, “கன்னியாகுமரி..”  என்று சங்கரி சொல்ல, “நாங்க எல்லோருமே கன்னியாகுமரிதான்..” என்றனர் எல்லோருமே கோரஸாக..

இங்கே இத்தனை நடக்க வித்யாவின் எதிர் ஷீட்டில் ஒருவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.. அவனின் பார்வையோ வேறு எங்கோ நிலைத்து நின்றது..

அவனைக் கவனித்த நித்திலா, “சார் நீங்க மட்டும் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்..?” என்று அவனையும் தங்களின் பேச்சிற்குள் இழுத்தாள்..

அவன் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அமைதியாக இருக்க, “ஏன் இப்படி இருக்கிறாரு..” என்று வித்யாவிடம் சந்தேகம் கேட்டாள் அனிதா..

“ஆமா என்னிடம் கேளு.. அவரோட பயோடேட்டா என்னிடம் தான் இருக்கு பாரு..” என்றாள் வித்யா கடுப்புடன்

“உங்களிடம் தான் இருக்கா.. அப்போ இவரு உங்களோட ரிலேடிவ்..” என்றவள் வேகமாக சொல்ல அவளின் தலையில் நெருக்கென்று கொட்டினாள் வித்யா..

“அதிகமாக பேசினே.. அவ்வளவுதான்..” என்று மிரட்டிட, “சுமிம்மா..” என்று அவரின் தோளில் போய் சாய்ந்து கொண்டாள்..

அவளின் தலையை வருடிவிட்ட சுமிம்மா, “மாமன் அடிச்சாரோ மல்லிப்பூ செண்டல.” இல்லையென அவள் தலையசைக்க, “அத்தை அடிச்சாளோ அல்லிபூ செண்டாலா..” என்று பாடினார்..

நிரஞ்சன் சுமிம்மாவைப் புன்னகையுடன் பார்க்க நித்திலாவோ அன்னையின் குறும்புத்தனம் அறிந்தவள், ‘பாவம் அனிம்மா நீ..’ என்று வந்த சிரிப்பை கட்டுபடுத்த முயன்றாள்..

அதை வித்யாவும், சங்கரியும் கவனிக்க, “யாரடிச்சா சொல்லியழு.. நீரடிச்சா நீர் விலகும்..” என்றவர் பாட, “இந்த வித்யா பேய் அடிச்சிருச்சு சுமிம்மா..” என்று அழுதாள் அனிதா..

“அப்படியாடி செல்லம்..” என்றவர் அனிதாவின் முகம் பார்த்தார்.. அவளோ பாவமாக முகத்தை வைத்திருக்க, “வித்யா நீ கொடுத்த அடி வலிக்கல போல இன்னும் இரண்டு போடு..” என்றார் வம்படியாக..

“சுமிம்மா..” என்றவள் காத்திட, “உஸ்ஸ்..” என்றவன் எழுந்து சென்றுவிட அவனை மற்றவர்கள் வினோதமாக பார்க்க, “அவருக்கு கூச்ச சுபாவம் போல தெரியுது..” என்ற வித்யாவின் பார்வை அவனின் மீது நிலைத்தது.

“சரி விடு வித்யா” என்றவர் தொடர்ந்து, “எல்லோரும் படுத்து தூங்குங்க.. காலையில் எழுந்து எதுவாக இருந்தாலும் பேசலாம்..” என்றார் சுமிம்மா..

“அனிக்குட்டி சங்கரி இரு இங்கே வந்து படுத்து தூங்குங்க..” என்று சொல்ல எழுந்தவள் மீள் ஏறி படுத்துக்கொண்டாள்.. மறுபுறம் ஏறி படுத்துகொண்டாள் வித்யா..

நிரஞ்சன் எழுந்து கதவருகில் சென்றுவிட, சுமிம்மா சங்கரியை தன்னுடைய மடியில் படுக்க வைத்து தட்டிகொடுக்க விழி மூடி தூங்கினாள் அவள்..

அவரின் முகம் பார்த்தவள், ‘அம்மாவை வீட்டைவிட்டு வெளியே போக சொல்லிட்டானே..’ என்று மனதிற்குள் கறுவினாள்.. மெல்ல விழிமூடி உறங்கினாள் நித்திலா..

அத்தியாயம் – 5

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட கீழ்வானம் மெல்ல சிவக்க துவங்கியது.. கதிரவன் தன்னுடைய பயணத்தைக் கிழக்கில் தொடங்கி வெகுநேரம் ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தான் கலையரசன்..

அவனோடு சேர்ந்து அவனின் மாலதியும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, “கூ..கூ..கூ..” எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தத்தில் கண்விழித்தான்..

அவன் எழுந்ததும் கடிகாரத்தைப் பார்க்க அது ஏழு என்று காட்டியது.. பாவம் அது ஓடாத கடிகாரம் என்று அறியாத கலையரசன் எழுந்து குளித்துவிட்டு வெளியே வரும் வரையில் கூட அவனின் மனைவி படுக்கையை விட்டு எழுந்திரிக்கவில்லை..

“அம்மா காபி..” என்று சமையறையை நோக்கி செல்ல டைனிங் டேபிள் மேலிருந்த ஃபிளாஸ்க் அண்ட் அதன்கீழே இருந்த பேப்பரை பார்த்தவன் சிந்தனையுடன் இடது புருவம் உயர்த்தினான்.

அதில் “நான் ஓடிப்போறேன்..” என்று எழுதியிருக்க, ‘ஊருக்கு போறேன்னு எழுதாமல் ஓடிப்போறேன்னு எழுதியிருக்காங்க பாரு.. இத்தனை வயசு ஆகியும் இதுக்கு இன்னமும் கொழுப்பு குறையல..’ என்று தலையில் அடித்துக் கொண்டான்..

ஆனாலும் மீண்டும் எதுவோ ஒன்று மனதை உறுத்த, “நித்தி..” மாடியை நோக்கிக் குரல் கொடுத்தான்.. அங்கு அவள் இருக்கும் அறிகுறியே இல்லை.. அவனுக்குள் என்னவோ செய்ய, ‘நேற்று இவளோட பேச்சைக் கேட்டு அம்மாவை ரொம்ப பேசிட்டோமோ..’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது..

அப்பொழுதுதான் மெல்ல எழுந்து வந்த மனைவியின் முகம் பார்த்தவன் சிலையென நின்றிருக்க, “அத்த காபி..” அரைத்தூக்கத்தில் வந்து நின்றாள் மாலதி..

“இந்தா..” என்று பிளாஸ்கில் இருந்த டீயை ஊற்றி கொடுத்தவனின் விழிகளில் அந்த கடிதம் விழுந்தது.. அவன் அந்த கடிதத்தை கையில் எடுக்கும் பொழுதே அவனின் கைகள் இரண்டும் நடுங்கியது..

“ஹாய் மகனே.. நான் உன்னோட அம்மாடா.. ஞாபகம் இருக்கா..? சரி அதைவிடு.. உன்னோட மனைவிக்கு பரிந்து பேசியது தவறில்ல.. ஆனால் அவளின் எண்ணம் என்னவென்று நான் சொல்ல மாட்டேன்..  நீயே தெரிஞ்சிக்கோ..

உன்னோட மனையாளை திருத்த வேண்டியது நீதான் நான் இல்ல.. எனக்கு இந்த குடும்ப ஒற்றுமை முக்கியம்.. என்னோட மகளின் திருமணம் முக்கியம்.. நித்தியை தேடாதே அவள்கூட நான் இருக்கிறாள்.. நாங்க எங்கே போனாலும் அந்த இடத்தில் தானாக ஒரு பட்டாளம் உருவாகிவிடும்..

நீ இப்பொழுது மட்டும் இல்ல எப்பொழுதும் தனிமரம்தான்.. நான் இதைச் சொல்ல காரணம், நீ அறியாத ஒரு விஷயத்திற்கு தவறான முடிவு எடுக்கிற உன்னோட மழுங்கி போன புத்தியை சொன்னேன்..

இனிமேலாவது கொஞ்சம் புத்தியை தீட்டு.. எனக்காக இல்ல உன்னோட நல்ல வாழ்க்கைக்காக.. இல்லாட்டி நீயும் இப்போ இருக்கிற பிள்ளைகள் மாதிரி கோர்ட், கேஸ் என்று அலையும் சூழ்நிலை வரலாம்..” என்று எச்சரித்து கடிதத்தை முடித்திருந்தார்..

அதன் பின்னணியை கண்டுபிடிக்க நினைத்த கலையரசனின் பார்வை மாலதியின் மீது கேள்வியாக படிந்தது.. அவளோ அவனைக் கவனிக்காமல் காபி குடிப்பதில் ரொம்ப கவனமாக இருந்தாள்..

“மாலதி.. நீ சமையல் வேலையை கவனி..” என்றவன் அதட்டவே,“ஏன் உங்க அம்மா என்ன பண்றாங்க..” அவளிடமிருந்து கேள்வி வந்தது..

“என்னோட அம்மா ஊருக்கு போயிருக்காங்க..” என்றதும் அவனை ஏறயிறங்க பார்த்த மாலதி, “உங்களோட தங்கச்சி என்ன பண்றா..” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்..

“அவளும் அம்மா கூட ஊருக்கு போயிட்டா..” என்றதும் அவளுக்கு கோபம் வந்துவிட, “அப்போ இங்கே வேலை எல்லாம் யார் பார்க்கிறது..?” என்றவள் அதிகாரத்துடன் கேட்டதும், ‘அம்மா காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க..’ என்ற சிந்தனையுடன் மனைவியின் மீது படிந்தது அவனின் பார்வை..

“ஏன் உங்க வீடாக இருந்தால் யார் இந்த வேலையை செய்வார்..” என்றவன் கோபத்தில் கேட்கவே, “எங்க வீட்டில் நான் செய்வேன்..” அவள் வேகமாக பதில் வந்தது அவளிடமிருந்து..

“அதுதான் ஏன்..?” என்றவன் கேட்டதும், “அது என்னோட வீடு.. அவங்க என்னோட அப்பா, அம்மா..” என்றாள் சாதாரணமாக.

“அப்போ என்னோட அம்மா, தங்கச்சி பற்றிய கவலை உனக்கில்லை..?” என்றவன் கேட்டதுதான் தாமதம், “அவங்களைப் பற்றி நமக்கு என்ன..?” என்றவள் அப்பொழுதும் சாதாரணமாகவே..

“ஊப்..” என்று பெருமூச்சை வெளியிட்ட கலையரசன், ‘அம்மா தவறு இங்கே இருக்கு.. நான் உங்களை தவறாக நினைச்சிட்டேன்..’ அவன் மனம் வருந்தினான்..

“சரி மாலு.. நீ சமையல் வேலையைக் கவனி.. நான் ஆபிஸ் கிளம்பறேன்..” என்றவன் அறைக்குள் செல்ல மாலதி சமையறைக்குள் சென்றாள்..

கிட்டதட்ட ஒரு மணிநேரம் கழித்து டைனிங் ஹாலிற்கு வந்த கணவனுக்கு இட்லியும், தேங்காய் சட்டினியும் சுட சுட பரிமாறினாள்.. அவன் இட்லியைப் பிட்டால் அதிலிருந்து மாவு ஆறு தட்டில் ஓடி சட்டினியுடன் கலந்தது..

அதைப் பார்த்த கலையரசன், ‘எனக்கு இது நல்ல வேணும்..’ என்று நினைத்துகொண்டு அவன் மீண்டும் ஒரு இட்லியை பிட்டு சட்டினி தொட்டு வாயில் வைத்தான்..

உப்பு குறைவாகவும், காரம் ஊரே தூக்கும் அளவிற்கு அதிகமாக இருக்க, “என்னங்க இட்லி நல்ல இருக்கா..?” என்று ஆர்வமாகக் கேட்டவளைப் பார்த்ததும் கலையரசனின் பொறுமை காற்றில் பறந்தது..

“இதை நீயே சாப்பிடு மாலதி.. மத்தியானம் நல்ல சாப்பாடாக செய்து வை..” என்றவன் அவனின் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டே கூறினான்..

‘சமையல் செய்யும் மூஞ்சியைப் பாரு.. நல்ல வேலை எங்கம்மா புண்ணியத்தில் நான் தப்பிச்சேன்.. இல்லாட்டி..?’ என்று நினைத்தான்.. ஒருநொடி அவனுக்கு மூச்சு நின்றுபோகவே, ‘முதல்ல நல்ல ஹோட்டலாக போய் சாப்பிடனும்..’ அவன் வேலைக்கு சென்றுவிட்டான்..

கணவன் தன்னை திட்டிவிட்டு சென்றதும் கோபத்தில் சொல்லும் அவனை முறைத்த மாலதி, “நான் செய்த இட்லி அவ்வளவு மோசமாகவா இருக்கு..” என்று அவளும் சாப்பிட அமர்ந்தாள்..

அவள் செய்த சமையலை அவள் ஆர்வத்துடன் சுவைக்க, “உவ்வே.. நானா இவ்வளவு கேவலமாக சமையல் செய்திருக்கிறேன்..” என்று தட்டைத் தூக்கி சிங்கிள் போட்டுவிட்டு பாலைக் காய்ச்சி குடித்துவிட்டு அமர்ந்தாள்..

அப்பொழுதுதான் கணவன் மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவேன் என்று சொன்னது அவளின் நினைவிற்கு வர, “ஐயோ மதியம் நல்ல சமையல் பண்ணி வைக்க வேண்டும்..” என்ற கவலையுடன் தாய்க்கு போன் போட்டாள் மாலதி..

அதன்பிறகு அங்கே பிரச்சனை ஆரம்பமானது..

******

காலைபொழுது அழகாக விடிந்திட பொள்ளாச்சியில் ரயில் நின்றிருந்தது.. மெல்ல கண்விழித்த சுமிம்மாவைச் சுற்றிலும் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.. மடியில் தூங்கிக் கொண்டிருந்த சங்கரியின் தலையைக் கலைத்து விட்டவர், ‘இவங்க வீட்டில் இவளை தேடுவாங்களே.. சரி இதுக்கு ஒரு வழி செய்யலாம்..’ மனதிற்குள் நினைத்தார்..

அப்பொழுது கண்விழித்த அனிதா, “குட் மார்னிங் சுமிம்மா..” என்றாள் உற்சாகமாக.. “குட் மார்னிங்..” என்றவர் எழுந்து செல்ல எல்லோரும் எழுந்து கொண்டனர்..

“ஆமா இது எந்த ஊரு..” என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்த வித்யாவிடம், “யாருக்கு தெரியும்..” என்று எழுந்தமர்ந்தாள் நித்திலா

“நான் போய் முகம் கழுவிட்டு வரேன்..” என்று எழுந்த அனிதா எதிரே வந்தவனின் மீது மோதிக் கொள்ள, அவனோ அசையாமல் நின்றிருந்தாள்..

அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் பளபளத்தது.. அவன் வடநாட்டு பையன் போலவே இருக்க, “ஏய் மைதா மாவு கொஞ்சம் வழிவிடு..” வழக்கமான குறும்புடன்..

“பாரு காலையில் யாரிடமோ வம்பு வளர்க்கிற..” என்று திட்டிக்கொண்டே எழுந்த வித்யாவின் கையைப்பிடித்த நித்திலா, “வேண்டாம் விடு வித்யா.. உங்களைவிட சின்ன பொண்ணுதானே..” என்று புன்னகைத்தாள் நித்திலா..

அவன் வழிவிட்டு நிற்க, “இனிமேல் கொஞ்சம் கவனமாக இருங்க..” என்று அவனை மிரட்டிவிட்டு அவள் நகர. “அனிக்கா இருங்க நானும் வரேன்..” அவளின் பின்னோடு ஓடினாள் சங்கரி..

“ஸாரிங்க அவள் ரொம்ப சின்ன பொண்ணு தெரியாமல் பேசிட்டா..” என்றவனிடம் மன்னிப்பு கேட்க, “பரவல்ல விடுங்க..” என்றான் அவன் சாதாரணமாகவே..

“நான் நித்திலா..” என்றவள் தன்னை அறிமுகம் செய்ய, “நான் மகேஷ்..” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள, “நீங்க எங்கே போறீங்க..” என்றவள் கேட்க, “நான் இன்னும் எதுவும் பிளான் பண்ணல..” என்றவன் புன்புருவல் பூத்தான்..

“எங்களை மாதிரியே..” என்று வாய்விட்டு சிரித்தவள், “வாங்க நீங்களும் எங்களோட டீமில் சேர்ந்துகோங்க..” என்றவள் வித்யா முதலில் அமர்ந்திருந்த சீட்டைக் காட்டினாள்

“நீங்க என்ன ரீசன்ல வீட்டைவிட்டு வந்தீங்க..” என்று நித்தி அவனிடம் விசாரிக்க “கொஞ்சநாள் ஊர் சுற்றலாம் என்ற மைண்ட்ல கிளம்பி வந்துவிட்டேன்..” என்றான் மகேஷ்..

அவர்களை எல்லாம் புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த அவனின் மீது வித்யாவின் பார்வை திரும்பியது..

“நைட் ஏன் ஸார் பேசாமல் எழுந்து போனீங்க..” என்று கேட்க, அவனோ, “நீங்க எல்லாம் ஓடி வந்ததாக சொன்னீங்க..” என்றவன் தன் மௌனத்தைக் கலைத்த வண்ணம்..

“ஆமா நாங்க எல்லாம் ஓடிதான் வந்தோம்..” என்றாள் நித்திலா..

“நீங்களுமா..? அப்போ சுமிம்மா உங்களோட ரிலேட்டிவ் இல்லையா..” என்று கேட்டான் அவன்..

“அவங்களை ரயிலில்தான் சந்திச்சேன்..” அவள் நெஞ்சறிந்து பொய் சொல்ல அப்பொழுது கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தான் நிரஞ்சனின் பார்வை அவள் மீது கேள்வியாக படிந்தது.. அவன் பார்வை தன் மீது படிவதை உணர்ந்தும் அவள் நிமிரவில்லை..

அவனும் அமைதியாக இருக்க, “என்னை எங்க வீட்டில் துரத்தி விட்டுடாங்க..” என்றான்..

“நல்ல விஷயம் பண்ணிருக்காங்க..” என்று வித்யா சிரிக்க, “என்ன தப்பு செஞ்சீங்க..?” என்று கேட்டாள்..

“எனக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம்.. யாரிடமும் பேசமாட்டேன்.. அதன் அப்பா போடா என்று துரத்தி விட்டுவிட்டார்..” என்றவன் குறுஞ்சிரிப்புடன் முடிக்க, “அப்போ என்னோட கணிப்பு சரிதான்..” என்று வாய்விட்டுச் சிரித்த வித்தியுடன் இணைந்துகொண்டாள் நித்திலா

“என்னோட நல்லாதானே பேசறீங்க..” என்று வித்யா அவனை கேலி செய்ய, அப்பொழுதே அவனின் மாற்றம் அவனுக்கு புரிந்தது..

“நீங்க எல்லோரும் எங்கிருந்தோ வந்து இங்கே இவ்வளவு கலகலப்பாக இருக்கீங்க.. நான் பேசாமல் இருந்தால் நல்ல இருக்காது..” என்றவன் தயக்கமாகவே.

“இந்த தயக்கம் எல்லாம் வேண்டாம்..” என்றவள் தொடர்ந்து, “உங்க பெயர்..” என்று கேட்டாள் நித்திலா..

“சசிதரன்..” என்று சொல்ல, “சூப்பர் நேம்..” என்றாள் வித்யா.. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வெளியே யாரோ சண்டையிடும் குரல்கேட்டு எல்லோருமே ரயிலைவிட்டு இறங்கிச் சென்றனர்..

அவர்களின் சத்தம்கேட்டு எல்லோரும் அங்கே கூடிவிட ரயிலில் பெண்ணின் துப்பட்டாவைப்பிடித்து இழுத்த ஒருவனைப் புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார் சுமிம்மா..

அவரைப் முதலில் பார்த்த நிரஞ்சன், “ஓ மை காட்..” என்று அவரின் அருகில் சென்று, “சுமிம்மா வேண்டாம்..” என்று அவரை தடுத்தான்..

“யார் மீது கை வைக்கிற.. என்னோட பிள்ளை மேல கை வைக்கிற நாயே..” என்று அவனை புரட்டியெடுத்து போலீசில் ஒப்படைத்தார்..

அவர்கள் அவனை இழுத்துச் செல்ல, “என்னாச்சு அம்மா..” என்று எல்லோரும் விசாரிக்க, “அனிதா துப்பட்டாவை பிடித்து இழுத்தான்.. அதன் அடி வெளுத்து அனுப்பினேன்.. நான் சுமித்ரா.. என்னிடமே அவனோட வேலையை காட்டுகிறான்..” என்று அனிதாவின் பக்கம் திரும்பினார்..

அவள் ஓடிவந்து சுமிம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, “நாங்க ஒழுங்காக இருந்தாலும் இந்த உலகம் நம்மள தனித்து மட்டும் பயணிக்க விடாது சுமிம்மா..” என்றாள்..

அவர் அவளை அணைத்துக்கொண்டு, “உங்க எல்லோருக்கும் பாதுகாப்பாக நான் இருக்கேன்.. இனியும் இருப்பேன்..” என்றவர் தொடர்ந்து, “பயந்துவிட்டாயா..?” என்று கேட்டார்..

“நான் யாரு அனிதா சுமிம்மா.. என்னை பயப்பட வைக்க இன்னொருவன் பிறந்து வரணும்.. விட்ட ஒரு அடிக்கு அவன் திருமணம் பற்றி நினைக்க கூட மாட்டான்..” என்று வாய்விட்டு சிரித்தாள்..

அவள் சொன்ன வேகத்தில் எல்லோரின் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது..  யாருக்கும் ரயிலில் செல்ல விருப்பம் இல்லாமல் போய்விட பொள்ளாச்சியில் இறங்கிவிட்டனர்..

அவரவர் கொண்டு வந்தவை அவரவர் கைகளில் இருக்க ரயில் மெல்ல கிளம்பியது.. அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் எல்லோரும் நின்றிருந்தனர்..?!

அத்தியாயம் – 6

எல்லோரும் இறங்கி நிற்பதைக் கண்ட சுமிம்மாவின் மனம் கனத்து போகவே, “என்னப்பா எல்லோரும் இறங்கிட்டீங்க..?” என்றவரின் பார்வை அந்த புதியவனின் மீது படிந்தது..

அவரின் பார்வையின் பொருளறிந்த நிரஞ்சனோ, “அவரும் நம்மை மாதிரிதான் அம்மா..” என்றவன் விளக்கம் கொடுக்க அவரின் முகத்தில் ஒரு தெளிவு வந்தது..

“அம்மா இங்கே பாருங்க.. நம்ம எல்லோரும் ஒரே நேரத்தில் ஊரில் இருந்து வந்திருக்கோம்.. நம்ம எல்லோருமே ஒவ்வொரு காரணத்திற்காக வீட்டைவிட்டு வந்திருந்தாலும் இவங்களுக்கு நம்ம தான் பாதுக்காப்பு..” நிரஞ்சன் புரிதலுடன் பதில் கொடுத்தான்..

அவனைப் பார்த்து புன்னகைத்த சுமிம்மா, “சரிப்பா இப்போ என்ன செய்யலாம்..” என்று அவர்களிடமே கேட்டார்..

“அதை நீங்கதான் அம்மா சொல்லணும்..” என்றாள் அனிதா..

“இல்லம்மா அவங்க பசங்க.. எங்கே சுற்றி பார்க்க வந்திருக்காங்களோ..” என்றவர் ஏதோ சொல்ல வருவதற்கு முன்னே கைநீட்டித் தடுத்தான் நிரஞ்சன்,

“முதலில் எல்லாருமே தனி.. இப்போ எல்லோரும் ஒன்றிணைந்து இருக்கிறோம்.. அப்போ அதோட தலைமை பொறுப்பை நீங்கதானே ஏற்றுக்கொள்ள வேண்டும்..” என்றான்..

பெண்கள் ஐவரும் அவனின் பேச்சிற்கு செவிசாய்த்து அமைதியாக நின்றிருக்க, ‘மொத்தம் ஐந்து பொண்ணுங்களைப் பாதுக்காப்பாக பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு..” என்றவருக்கும் அவன் சொல்வது சரியென தோன்றியது..

“சரி இப்போ நம்ம ஹோட்டலில் ரூம் போடலாம்.. நீங்க பசங்க தனியாக ரூம் எடுத்துகோங்க.. நாங்க லேடிஸ் தனியாக ரூம் எடுத்துத் தங்கிக் கொள்கிறோம்..” என்றவர்,

“இங்கே எந்த இடம் ரொம்ப பேமஸ் தம்பி..” என்றவர் நிரஞ்சனிடம் கேட்க, “இங்கே திருமூர்த்தி மலை, ஆழியார் டேம் அப்புறம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில்..” என்றான்..

“அப்போ நம்ம கோவிலுக்கு போலாம் அம்மா..” என்ற வித்யாவை எல்லோரும் சேர்ந்து முறைக்க, “நான் என்ன இப்போ தப்பாக பேசிட்டேன்..” அவள் பாவமாகக் கேட்டாள்..

“வித்யா இன்னும் கொஞ்சநாளில் நானே காசி ராமேஸ்வரம் போகணும் என்ற முடிவில் இருக்கேன்.. அப்போ வந்து இந்த கோவிலைப் பார்த்துக் கொள்கிறேன்.. என்னை ஆளைவிடு..” என்றவர் அவளைவிட பாவமாக..

அவர் சொன்ன விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு வந்துவிட, “சரிம்மா இப்போ எங்கே போகலாம்..” – நித்திலா

“முதலில் ரூமிற்கு போய் குளிப்போம்.. அப்புறம் ஆழியார் டேம்.. திருமூர்த்திமலை போக லேட் ஆகும்..” என்றவர் வரிசையாக பட்டியலிட்டார்..

பிறகு அவர் நிரஞ்சனின் பக்கம் திரும்பி, “நீதான் இனிமேல் பொருளாளர்.. நம்ம சுற்றிப்பார்க்கும் இடத்தில் எல்லாம் ஆகும் செலவை கணக்கு எழுதி வை.. நம்ம லாஸ்ட் நாள் கணக்கு பார்த்துக்கலாம்..” என்றவர் திட்டம் தீட்டினார்..

‘அம்மா ஒரு பக்க பிசினஸ்மேனிடம் இப்படியொரு வேலையை ஒப்படைக்கிறீங்களே..’ அவன் மனதிற்குள் புலம்பினான்..

“என்னப்பா ரொம்ப அமைதியாக இருக்கிற..” என்று சுமிம்மா அவனிடம் கேட்க, “அண்ணா எனக்காக ஓகே சொல்லுங்க.. ப்ளீஸ்..” சங்கரி சிணுங்க, “சரிம்மா..” என்றான் நிரஞ்சன்..

“நீங்க மூவரும் தனி ரூம் எடுத்து தங்கிக்கோங்க.. நாங்க எல்லோரும் ஒரு ரூமில் தங்கிக்கொள்கிறோம்..”  என்றார் சுமிம்மா எல்லோரும் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.. எல்லோருக்கும் சேர்த்து இரண்டு ரூம் எடுத்தான் நிரஞ்சன்..

அவன் கொண்டுவந்து சாவியைக் கொடுக்க, அந்த அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்ற நித்தி அறையில் இருந்த ஜன்னல் மற்றும் பாத்ரூம் எல்லாம் சுற்றி பார்த்தாள்.. அது மட்டும் இன்றி ஜன்னல் திரையை நன்றாக உதறிவிட்டு நீக்கி வைத்தாள்..

அவளின் செயலைக் கவனித்த அனிதா, “என்ன தேடுறீங்க..” என்று கேட்க, “கேமரா..” என்ற நித்தி தொடர்ந்து, “பொண்ணுங்க நல்ல எல்லோரும் இங்கே இருக்க போறோம்.. நமக்கு நம்மதான் பாதுக்காப்பு.. அதன் அறையில் ஏதாவது கேமரா இருக்கான்னு பார்த்தேன்..” என்றாள்..

அவளின் செயல் மற்றவருக்கு ஆச்சர்யத்தை தந்தாலும் கூட சுமிம்மாவின் முகம் மலரவே செய்தது..

“நான் முதலில் போய் குளிக்கிறேன்..” என்று சுமிம்மா குளிக்க செல்ல, “ம்ம் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சுமிம்மா..” என்றாள் வித்யா..

ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்த அனிதா செல்லை கையில் எடுத்துகொள்ள, இன்னொருத்தி புக் என்று புரட்டிகொண்டிருந்தனர். சங்கரி படுக்கையில் படுத்துக்கொள்ள ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்தாள் நித்தி.

லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. லவ் பேட்ஸ்.. தக்கத்திமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா..” என்ற பாடல் ஒலிகேட்க மற்றவர்களின் பார்வை சுமிம்மாவின் மீது திரும்பியது..

அவரோ அவர்களை கவனிக்காமல், “காதில் மெல்ல காதல் சொல்ல.. காதில் மெல்ல காதல் சொல்ல..” என்று சரோஜாதேவி மாதிரியே அவரும் டான்ஸ் ஆடிக்கொண்டே பாத்ரூமில் இருந்து வெளியே வந்தார்..

நித்தியைத் தவிர மற்ற மூவரும் அவரை வியப்புடன் பார்க்க, “மூவரும் என்னை ஏன் இப்படி பார்க்கிறீங்க.. நான் பாட்டு பாடக்கூடாதா?” என்ற கேள்வியுடன் உடையை மாற்ற சென்றார்..

அவர் உடை மாற்ற செல்ல, “அம்மா செம..” என்ற சங்கரியின் குரல் ஓங்கி ஒலிக்க, “இன்னும் அம்மாவிடம் என்ன என்ன திறமை எல்லாம் இருக்கோ யார் கண்டா..” என்ற வித்யா, “அம்மா சூப்பர் சாங்.. செம ஷாக்..” என்று புன்னகையுடன் குளிக்க சென்றாள்..

“தேங்க்ஸ் சங்கரி அண்ட் வித்யா..” என்ற சுமிம்மாவின் கைபேசி சிணுங்க போனை எடுத்துகொண்டு தனியாக சென்றார்.. அவர் போன் பேசுவதைப் பார்த்துவிட்டு தன் வேலைகளில் கவனம் செலுத்தினாள் நித்திலா..

தனக்கு வந்த போனை பேசிவிட்டு வைத்த சுமிம்மா, ‘எல்லாம் நல்லதாகவே நடக்கும்..’ என்று நினைத்துக் கொண்டார்..

அவரின் ஒவ்வொரு செயலும் அவளின் மனதைக் கனக்க வைக்க, ‘எல்லாம் மாறும்..’ என்ற எண்ணத்துடன் மனதைத் தேற்றிக் கொண்டாள் நித்திலா..

“நான் மகேஷ் கூட டுயட் பாடும் பொழுது அம்மா மட்டும் ஓல்டு சாங் பாடினால், அனிதா நீ க்ளூஸ்..” என்று வித்யா குளித்துவிட்டு வந்தும் குளிக்க சென்றார்..

அதேபோல நிரஞ்சன் கதவை திறந்து உள்ளே சென்றது அவனின் செல் அடித்தது.. அவன் செல்லின் திரையைப் பார்த்துவிட்டு போனை எடுத்து,  “ஹலோ” என்றவன் சொல்ல, “ரஞ்சன் நான் அம்மாடா..” என்றார் மனோகரி…

“என்னம்மா விஷயம்..” என்றவன் பதட்டத்துடன் கேட்க, “நிரஞ்சன் இப்பொழுதுதான் பொண்ணு வீட்டில் இருந்து அந்த பொண்ணோட அண்ணன் வந்துவிட்டு போனார்..” என்றவர் திருமணப் பேச்சை எடுத்தார்..

“அம்மா..” என்றவன் பல்லைக் கடிக்க மற்ற இருவரும் அவனைக் கேள்வியாக பார்க்க, “நீங்க போய் குளிங்க.. நான் அம்மாவிடம் பேசிவிட்டு வருகிறேன்..” என்றவன் புன்னகையுடன்..

சசிதரன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு குளிக்க செல்ல, “என்னம்மா இங்கே நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தால் நீங்க அதுக்கும் விட மாட்டீங்களா..” என்றவன் கடுப்புடன்

“அதெல்லாம் எடுக்கு தெரியாது.. பொண்ணு ரொம்ப அழகாக இருக்கிற..” என்றவர் தொடர, “அப்போ நீயே அவளைக் கட்டிக்கோ..” என்றவன் போனைக் கட் செய்தான்..

அவன் போனை வைத்த மறுநொடியே நிரஞ்சனின் வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது.. அதிலிருந்த போட்டோவைப் பார்த்தவனின் முகம் செந்தணலாக மாறியது..

அவனின் அருகில் அமர்ந்திருந்த மகேஷ், “அண்ணா நீங்க முதலில் போட்டோ பாருங்க.. ஏதாவது தீர்வு கிடக்கும்..” என்றவன் சொல்லிவிட்டு நகர்ந்தான்..

தாயின் தொந்தரவு தாங்க முடியாமல் போட்டோவை டவுன்லோட் செய்து பார்த்தவனின் விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.. அந்த போட்டோவில் இருந்த பெண் நித்திலா..!

‘இவள் இப்போ இங்கேதானே இருக்கிற..’ என்றவன் உடனே தாய்க்கு போன் செய்தவன், “அம்மா இந்த பொண்ணு..” என்றவன் இழுத்தான்..

“தாசில்தாரின் மகள் பெயர் நித்திலா. வயசு 23. இப்பொழுது பிரைவேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறாள்..” என்றவர் விவரத்தை ஒப்பித்தார்.

“அம்மா எனக்கு இந்த பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.. இவங்க வீட்டில் பேசி முடித்துவிடுங்கள்..” என்றவன் தாய்க்கு கட்டளையிட்டான்..

“நானும் அதே முடிவில் தான் இருந்தேன்.. ஆனால் அவங்க அம்மாவும், பொண்ணும் வெளியூர் போயிருப்பதாக சொன்னாங்க..” என்றார் மனோகரி..

“சரிம்மா நான் அப்புறம் பேசுகிறேன்..” என்று போனை வைத்துவிட்டு, ‘இவள் இங்கே இருக்கிற.. அப்போ இவளோட அம்மா யாராக இருக்கும்? ஒரு வேலை சுமிம்மாவாக இருக்குமோ?’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது..

அதன்பிறகு எல்லோரும் குளித்துவிட்டு ஆழியார் டேம் சுற்றிப்பார்க்க கிளம்பினர்.. ஹோட்டலை விட்டு வழியில் ஒரு பெண்ணின் முடியைப் பார்த்த சங்கரி, “அம்மா..” என்றழைக்க, “என்ன சங்கரி..” என்று அவளின் பக்கம் திரும்பினார்..

“அந்த அக்காவைப் பாருங்க..” என்றாள் சங்கரி.. அந்த ஹோட்டலின் பூங்காவில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிற்கு கூந்தல் நீளமாக இருந்தது..

“அந்த பெண்ணிற்கு முடி அதிகமாக இருக்கும்மா..” என்று அந்த திசையைப் பார்த்துக்கொண்டே கூறினாள் வித்யா..

“எனக்கும் முடி அதிகமாக கொட்டுது.. வா நம்ம போய் அவளிடம் டிப்ஸ் கேட்டுவிட்டு வருவோம்..” என்றவர் சங்கரியை உடன் அழைத்துச் சென்றார்..

அதெல்லாம் பார்த்த அனிதா, “இந்த அம்மாவுக்கு முடி கொட்டுதாம்..” என்றவள் வாய்விட்டுச் சிரித்தாள்..

வித்யா முறைத்த முறையில், ‘இந்த அக்கா என்னை ரொம்ப முறைக்குது.. அப்படி நான் என்ன பண்ணினேன்..’ அவளின் சிரிப்பு உதட்டில் உறைந்தது..

சசிதரன், மகேஷ் இருவரும் அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க நித்திலாவோ சுவாரசியமாக அவர்கள் இவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்..

நிரஞ்சனின் பார்வை தன்னவள் என்ற உரிமையுடன் அவளைத் தழுவியது.. நீலநிற சுடிதாரில் கடல் தேவதை போல நின்றவளின் உதட்டில் மலர்ந்திருந்த புன்னகையில் அவனின் உள்ளம் அவளிடம் பறிபோனது..

“ஏன் நீ அவங்களுடன் போகல..” என்றவனின் குரல் வெகு அருகில் கேட்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவளின் அருகில் நின்றிருந்தான் நிரஞ்சன்..

ஆனால் எல்லோரின் கண்களுக்கும் அவன் இடைவெளி விட்டு நிற்பது போலவே தெரியும்..  ‘என்ன..’ என்பது போல அவன் இடதுபுருவம் உயர்த்திட, “எனக்கு எந்த டிப்ஸும் தேவையில்ல..” என்றவள் வெட்டும் பார்வையுடன்..

“நீ கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிற..” என்றவனின் பார்வை அவளின் மீது ரசனையுடன் படிய, “நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன? நீங்க உங்களோட வேலையோ மட்டும் பாருங்க..” என்றவள் பொரிந்து தள்ளிவிட்டு அவனைவிட்டு விலகி நின்றாள்..

“இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றவன் அவளை சீண்டிவிட, “உனக்கு என்னடா ஆச்சு..” என்றவள் கடுப்புடன் கேட்க, “அண்ணாவை யாரோ நல்ல மந்திரிச்சு விட்டுடாங்க..” என்ற மகேஷ் குறும்புடன் புன்னகைத்தான்..

அவன் இயல்பாக சொல்ல நிரஞ்சனின் பார்வையோ அவளின் மீது விசமத்துடன் படிய அவளுக்கு அப்படியே பற்றிகொண்டு வந்தது..   “கொன்றுவிடுவேன்.. சக்கிரத்தை..” என்றவள் அவனைவிட்டு விலகிச் சென்றாள்..

நித்திலாவைப் பார்த்தும் அவனின் மனதில் ஏற்பட்ட சலனத்தின் அர்த்தம் அவனுக்கு புரிந்துவிட, ‘நல்லாவே பேசற நிதி டார்லிங்..’ என்று மனதிற்குள் புன்னகைத்தான்..

அந்த பெண்ணின் அருகில் சென்ற சுமிம்மா, “ஒரு நிமிஷம் டா செல்லம்.. ஒரிஜினல் முடியா என்று ஜேக் பண்ணிக்கலாம்..” என்றவர் அவளின் முடியைப் பிடித்து இழுத்தார்..

“ஐயோ அம்மா..” என்று அலறியவள் நிமிர்ந்து பார்க்க, “ஸாரிம்மா.. நிஜமுடியா என்ற சந்தேகம் அதன் இழுத்து பார்த்தேன்..” என்று  புன்னகைத்தார் சுமிம்மா..

“நிஜமான முடித்தான்.. ஜவுரி முடி என்று நினைச்சீங்களோ..” என்றவள் கையில் இருந்த பேக்கைப் பார்த்துவிட்டு, “ஊர் சுத்தி பார்க்க வந்திருக்கிறாயாம்மா..” என்று கனிவுடன் கேட்க, “சும்மா டிப்ஸ் சொல்ல சொல்லுங்க அம்மா..” என்று அடம்பிடித்தாள் சங்கரி..

“நான் ஊர் சுத்திப்பார்க்க வரல அம்மா..” என்றவள் தொடர்ந்து, “இப்பொழுது பசிக்குது.. சாப்பிட பிரியாணி கடைக்கு போகிறேன்..” என்றாள்..

“நீ மட்டுமா..?” என்றவர் சந்தேகம் கேட்க, “வேற யார் வரணும்..” என்று அவரிடமே கேட்டாள் அந்தப்பெண்

“அப்போ நீங்களும் வீட்டைவிட்டு ஓடிவந்துட்டீங்களா” என்று குஷியுடன் கேட்டாள் சங்கரி..

“ம்ம் ஆமா..” என்றவளின் முகம் மலர, “அப்போ நானும் உங்களோட சேர்த்துக்கலாமா..?” என்று தயக்கம் இல்லாமல் கேட்டாள்..

“அதுக்கு நீங்க முதலில் உங்களோட பெயரை சொல்லணும்..” என்றவளின் அருகில் வந்த அனிதா..

“நான் கார்த்திகா.. காலேஜ் முதல் வருடம் படிக்கிறேன்..” என்றவள் புன்னகையுடன்..

அவளின் கையிலிருந்த பையைப் பார்த்த வித்யா, “ஆமா இந்த பை எதுக்கு கார்த்திகா..” புரியாமல் கேட்டாள் வித்யா..

“பழனி பஞ்சாமிர்தம், இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு எல்லாம் இருக்கு..” என்றவள் வேகமாக பட்டியலிட, “அப்போ நீ சரியான சாப்பாட்டு ராமிதான்..” அவளைக் கிண்டலடித்தாள் அனிதா

“அதெல்லாம் இல்ல.. ஒவ்வொரு ஊரில் இருக்கும் பேமஸ் உணவு சாப்பிட பிடிக்கும்..” என்றவள் சொல்ல, “அப்போ அதுக்குதான் ஓடி வந்தாயா..” என்று கேட்டாள் நித்திலா

“இல்ல என்னோட பாட்டி இறந்துட்டாங்க.. அவங்க இல்லாமல் வீட்டில் இருக்கவே பிடிக்கல.. அதன் வீட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன்..” என்றவள் வருத்ததுடன் கூறினாள்..

“ஸாரி கார்த்தி..” என்று அனிதா மன்னிப்பு கேட்க, “ஆனால் எனக்கு ஊர் சுற்ற ரொம்ப பிடிக்கும்..” என்றவள் புன்னகையுடன்..

“இது எல்லாம் நீங்க சாப்பிட வாங்கிட்டு வந்ததுதானே..” என்றவளிடம் சங்கரி சந்தேகம் கேட்க, “இல்லடா நான் எல்லாம் சாப்பிடுவேன்.. ஆனால் அதில் ஒரு லிமிட் எப்பொழுதும் வெச்சிருப்பேன்.. இது என்னோட பாலிசி..” என்றவள் புன்னகைத்தாள்..

அவள் இப்படி கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி சுமிம்மாவின் மனதில் சீக்கிரம் இடம்பிடிக்க, “சரி இனிமேல் நீயும் எங்களில் ஒருத்தி..” என்றவர் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தார்..

அதன்பிறகு எல்லோரும் ஆழியாரை சுற்றிப்பார்க்க சென்றனர்.. அவர்கள் சென்ற நேரமோ என்னவோ ஆழியாரில் தண்ணியே இல்லை.. அங்கிருந்து வரும் பொழுது சுமிம்மா செய்த வேலையில் எல்லோருமே வாய்விட்டுச் சிரித்தனர்.. அப்படி என்ன செய்தார்?

அத்தியாயம் – 7

மதியம் கணவன் திரும்பி வருவதற்குள் தாயுடன் சண்டை போட்டுவிட்டு நிமிர்ந்த மாலதி, “இந்த அம்மாவால் வீடே இரண்டாக போச்சு.. எங்க அத்தை இருந்தால் என்னை எப்படி எல்லாம் பார்த்துப்பாங்க..” என்றவளுக்கு அப்பொழுதுதான் அத்தையின் நினைவு வந்தது..

காலையில் இருந்து சாப்பிடாமல் இருப்பதால் பசி வயிற்றைக் கிள்ள, “இப்போ என்ன செய்வது..?” என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தாள்..

பிறகு பசி தாங்க முடியாமல் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்த மாலதி பிரிட்ஜ் திறந்து ப்ரட் டை கையில் எடுக்க அதன் உள்ளிருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது..

‘இது என்ன பேப்பர்..’ என்று அவள் சந்தேகத்துடன் அவள் கையில் எடுத்து பார்க்க, “மருமகளே.. என்னம்மா பசி வயிற்றை கிள்ளுகிறதா..?” என்ற சுமிம்மாவின் வரிகளைப் படித்தவள், ‘அத்தை எழுதிய லெட்டர்..’ என்று மீண்டும் படிக்க தொடங்கினாள்..

‘உனக்கு சமையல் செய்ய வராது என்று தெரியும்.. ஆனால் பிறந்த வீடு விட்டு புகுந்த வீடு வந்தால் சில பழக்க வழக்கங்களை மறக்க வேண்டும்.. என்னோட மகன் மட்டும் போதும் என்று நினைத்தால் எப்படிம்மா..

உனக்கு தேவையான சமையல் குறிப்பு எல்லாம் எழுதி அங்கிருக்கும் டிராவில் வைத்திருக்கிறேன்.. அதை படித்துவிட்டு நன்றாக சமைத்து சாப்பிடு.. மற்றது நான் ஊருக்கு வந்த பிறகு பேசலாம்..’ என்று எழுதியிருந்தார்..

அவரின் கரிசனம் அவளின் மனதை தொட, “அத்தை.. அத்தை..” என்றவளின் விழிகள் எதையோ நினைத்து கலங்க அதன்பிறகு குறிப்புகளை தேடி எடுக்க இரண்டு நோட் முழுக்க சைவம், அசைவம், பொரியல், கூட்டு என்று விதவிதமாக குறிப்புகளைப் பார்த்து வியந்தாள் மாலதி..

அதன்பிறகு அவள் சேலையை இழுத்து சொருகிக்கொண்டு வேலையைக் கவனித்தாள்.. அதன்பிறகு அவள் வீட்டில் அனைத்து வேலைகளை சரியாக செய்ய தொடங்கினாள்..

சூரியனோ மேற்கு நோக்கிப் பயணிக்க கீழ்வானம் சிவக்க தொடங்கியது.. வெண்ணிற மேகங்கள் எல்லாம் பொன்னிறமாக மாறியது.. மாலைநேரத்தில் தென்றல் இதமாக வீசிக்கொண்டிருந்தது..

ஆழியார் பஸ்ஸ்டாப் வந்து பஸ்ஸிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.. அதன் அருகில் இருந்த டெய்லர் கடை ஒன்று காலி செய்துக் கொண்டிருந்தனர்..

அப்பொழுது அங்கே வந்த டெய்லர் கடைகாரர், “அம்மா இது எல்லாம் உங்களோட பொண்ணுங்களா..?” என்று கேட்க, அவரை புரியாத பார்வைப் பார்த்த சுமிம்மா, “ம்ம் என்னோட பொண்ணுங்கதான்..” என்றார்..

மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க, “நான் கடை காலி செய்கிறேன்..” என்றவர் சொல்ல, “அதுக்கு நான் என்ன செய்யறது..” என்று கேட்டார் சுமிம்மா..

“இல்லம்மா இந்த பெண் போடும் அளவிற்கு ஒரு பாவாடை சட்டை இருக்கிறது வாங்கிக்கோங்க..” அவர் தயக்கமாகக் கேட்டார்.. எல்லோரும் சுமிம்மாவைக் கேள்வியாக பார்க்க, “என்ன விலை என்று சொல்லுங்க.. நான் வாங்கிக் கொள்கிறேன்..” என்றார்..

அதைக் கவனித்த அனிதா, “நம்ம யாரும் பாவாடை, சட்டை போட மாட்டோமே அப்புறம் எதற்கு அதை காசு கொடுத்து வாங்கறாங்க..” சந்தேகமாகக் கேட்க, “எனக்கும் அதுதான் புரியல..” உதட்டைப் பிதுக்கினாள் வித்யா..

“அப்பா இன்னைக்குதான் ஒரு கேள்விக்கு முறைக்காமல் பதில் சொல்றாங்க.. பெரிய அதிசயம்..” குறும்புடன் கூறினாள் அனிதா

மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க நித்திலா மெளனமாக புன்னகைக்க கண்டுகொண்ட நிரஞ்சனின் பார்வையில் சுவாரசியம் அதிகரித்தது..

அவரிடம் பாவாடை, சட்டையை விலைபேசி வாங்கிய சுமிம்மா, “நான் இந்த துணியைப் போட்டுப் பார்க்கணுமே” என்றவரைத் திகைக்க வைத்தார் சுமிம்மா..

“என்னது..” என்று எல்லோரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து நிற்க “இதுக்கே அதிர்ச்சியானால் எப்படி..?” என்றவர் துணியுடன் சென்றார்..

அவரை திகைப்புடன் பார்த்த அந்த டெய்லர், “இதுக்குப் பின்னாடி வீடு இருக்கு போய் மாற்றிவிட்டு வாங்க..” என்றவருக்கு வழி சொன்னார்..

“இந்த அம்மாவிற்கு எவ்வளவு ஆசை பாரு..” – கார்த்திகா..

“அவங்க வயசில் இதெல்லாம் நடந்திருக்காது..” – வித்யா

“இந்த வயசில் இவ்வளவு துணிச்சலாக இதை செய்யறாங்க இல்ல அதை நம்ம பாராட்டனும்..” – சங்கரி

சசிதரன் எப்பொழுதும் போலவே மெளனமாக இருக்க மகேஷ் ரோட்டை வேடிக்கைப் பார்த்தான்.. நித்திலா எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருக்க நிரஞ்சனின் பார்வை அவள்மீது படிந்தது..

அந்த வீட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி சிரிப்புடன், “அந்த அம்மா உங்களை கூப்பிடறாங்க..” என்றார்..

இவர்கள் எல்லோரும் சென்று பார்க்க நீலநிறத்தில் பாவாடை சட்டை அணிந்து இரட்டை ஜடை பின்னலிட்டு மடித்து கட்டியிருந்தார்.. தோளில் மெரூன் கலர் துப்பட்டா போட்டு பின் பண்ணியிருந்தார்.. எந்த விதமாக விஷமமும் இன்றி கள்ளம்கபடம் இல்லாத புன்னகையுடன் அவர்கள் முன்னே வந்து நின்றார் சுமிம்மா..

“நான் நல்ல இருக்கிறேனா..?” என்று ஆர்வத்துடன் கேட்க, அவரைப் பார்த்த நிரஞ்சன், “உங்களுக்கென்ன சுமிம்மா சூப்பரா இருக்கீங்க..” என்றவன் புன்னகையுடன்..

அவரோ, “அடபோப்பா.. எனக்கு வெக்கம் வெக்கமா வருது..” என்றவர் முகத்தை மூடிக்கொள்ள, “பாருடா சுமிம்மாவுக்கு வெக்கமெல்லாம் வருது..” அவரைக் கலாய்த்தாள் அனிதா..

“சுமிம்மா உங்களுக்கு பாவாடை, சட்டை சூப்பராக இருக்கு..” என்று அவரைக் கட்டிகொண்டாள் சங்கரி..

“நிஜமாவா..” என்றவர் தயக்கத்துடன் கேட்க, “சத்தியமா நாங்க எல்லோரும் பொய் சொல்வோமா..” கேட்டாள் வித்யா..

ஆளுக்கு ஒரு விஷயம் சொல்ல அதையெல்லாம் ரசித்து சிரித்த சுமிம்மாவைப் பார்த்த நித்திலாவின் கண்கள் எதையோ நினைத்து கலங்கியது.. அனால் நொடிபொழுதில் தன் மீட்டெடுத்தாள்..

“சுமிம்மா ஒரு செல்பி..” என்ற நித்திலாவுடன் எல்லோரும் சேர்த்து நிற்க அங்கே செல்பி மூமெண்ட் சூப்பராக இருந்தது..  அவரைப் பாவாடை சட்டையில் பார்த்த சங்கரி மட்டும் அன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தாள்..

அங்கே குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த சுமிம்மா, “எனக்கு அந்த பம்பரம் வேண்டும்..” என்று அடம்பிடிக்க விழி பிதுங்கி நின்றனர் ஆண்கள்..!

சசிதரன் அருகில் இருந்த பெட்டிக்கடையில் சென்று பம்பரம் வாங்கிவர, “எனக்கு இது வேண்டாம்.. எனக்கு அந்த பம்பரம்தான் வேணும்..” என்றார்..

“சுமிம்மா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியல..” அனிதா கேட்க, “எனக்கு ஓவராக தெரியல..” என்றவர் அவர்களின் அருகில் சென்று “டேய் எனக்கு அந்த  பம்பரம் வேணும் கொடுங்கடா..” என்றார்..

“அதெல்லாம் முடியாது.. பம்பரம் கொடுத்தால் என்ன திரும்ப தருவீங்க..” என்று பேரம் பேசினார் பிள்ளைகள்..

“பம்பரம் தந்தால் உங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றேன்” என்றாவர் சொல்ல, “இதில் உங்களுக்கு என்ன கலர் வேண்டும்..” என்ற பிள்ளைகள் அவரின் முன்னே பம்பரத்தை நீட்டினர்..

“எனக்கு பிங்க் கலர் பம்பரம்தான் வேணும்..” என்றவர் அந்த கலரில் இருந்த மரபம்பரத்தை தேடி எடுத்தார்..

அவர் பம்பரம் வாங்கிவிட்டு திரும்பும் பொழுது ஒருவனின் கையில் இருந்த பட்டத்தைப் பார்த்தவர், “எனக்கு அந்த பட்டம் வேணும்..” என்று குழந்தை போல அடம்பிடித்தார்..

“என்னம்மா இப்படி அடம்பிடிக்கிறீங்க..” என்று நிரஞ்சன் அவரிடம் கேட்க, “எனக்கு அந்த பட்டம் வேணும்..” என்றவர் சொல்ல, “சரி அதையும் வாங்கிட்டு வாங்க..” என்றவன் சிரித்துக்கொண்டே.

அவரின் செயல்கள் மற்றவரின் கண்களுக்கு வித்தியாசமான தெரிந்தாலும் யாரும் அவரை தொல்லை என்று நினைக்கவில்லை.. மாறாக அவரின் செயல்களை ரசிக்கவே செய்தனர்..

“நாங்க போய் இவங்களுக்கு எல்லாம் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருகிறோம்..” என்றவன் நித்திலாவின் பக்கம் திரும்பினான்..

அவனின் பார்வையின் பொருளை உணர்ந்த நித்திலா, “வாங்க..” என்று முன்னே நடக்க, நிரஞ்சனோ குறுஞ்சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்தான்..

அதற்குள் கார்த்திகா அங்கிருந்த பெட்டிகடைக்கு கடைக்கு சென்றாள்..  இளநீர் கடையைப் பார்த்த சசிதரன், ‘ஒரு இளநீர் குடிக்கலாம்..’ என்று சென்றான்..

மகேஷ் அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைய அனிதாவும், வித்யாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.. அவன் இளநீர் குடித்துக் கொண்டிருக்க நிரஞ்சனும், நித்திலாவும் தனியே செல்வதைக் கவனித்துவிட்டு, ‘இவங்க எங்கே போறாங்க..’ என்று அவர்களைத் தொடர்ந்து வந்தாள் வித்யா..

அவர்கள் சென்ற திசையறியாமல் நின்ற வித்யா அங்கிருந்த சசிதரனைப் பார்த்து, “எங்க நிரஞ்சனும், நித்தியும் எங்கே போனாங்க..” என்று கேட்க, அவனோ கையில் இருந்த இளநீரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளைப் பார்த்து திருதிருவென விழித்தான்..

“ஏன் இந்த முழி முழிக்கிறீங்க.. அவங்க எங்கே போனாங்க..” என்றவள் பொறுமையுடன்

அவனோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மறுபடியும் கையிலிருந்த இளநீரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் வித்யாவை ஒரு பார்வை பார்த்தான்.. ஆனால் அவளின் கேள்விக்கு மட்டும் அவன் பதில் சொல்லவே இல்லை!

“டேய் எதுக்குடா இந்த முழி முழிக்கிற..” என்றவள் பொறுமையை இழுத்து பிடித்தவண்ணம்!

அவன் அதற்கும் அதே மாதிரி பார்வையை சுழற்றிட, “என்னை கொலைகாரி ஆக்காதே.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா..” என்றவள் கடுப்புடன்..

அப்பொழுதும் அவன் அமைதியாக நின்றிருக்க, “அண்ணா அந்த அருவாளை கொஞ்சம் கொடுங்க..” என்று இளநீர் வெட்டுபவரிடம் இருந்து அருவாளை வாங்கினாள் வித்யா..

“பதில் சொல்லுடா..” என்றவள் கேட்க அவன் அப்பொழுதும் அதே பார்வை பார்க்க, “சுமிம்மா..” என்று கத்தினாள் வித்யா..

அவளின் குரல்கேட்டு எல்லோரும் வந்துவிட, “இவ என்ன அருவாளுடன் நின்றிருக்கிற..” என்று ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்த நிரஞ்சன் அதிர்ச்சியுடன் கேட்டுகொண்டே அவளின் அருகில் சென்றான்..

அதற்குள் எல்லோரும் ஒன்று கூடிவிட கூட்டத்தை விளக்கி உள்ளே நுழைந்த சுமிம்மா, “வித்யா அருவாளை கொடு.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..” என்றார்..

“இவன் பேசவே மாட்டேங்கிறான்.. இவனை தீர்த்துட்டு அப்புறம் பேசலாம் சுமிம்மா..” என்றாள் வித்யா பிடிவாதமாகவே

“உங்களுக்கு இவ்வளவு கோபம் வரும்ன்னு எனக்கு தெரியாது..” என்று அனிதா பயத்துடன் சொல்ல,“எனக்கும்..” என்றனர் கார்த்திகாவும், சங்கரியும் நடுக்கத்துடன்..

“வித்யா அந்த அருவாளை கொடுங்க.. இந்தாங்க உங்களுக்கு ஐஸ்கிரீம்..” என்று அவளின் கையிலிருந்து அருவாளை வாங்க முயற்சி செய்தாள் நித்தி..

யாராலும் அவளின் கையிலிருந்து அருவாளை வாங்க முடியாமல் போக, “டேய் வாய்திறந்து பேசு..” என்றவள் அவனை மிரட்டிட, “என்னிடம் திடீரென வந்து பேசினால் எனக்கு கூச்சமாக இருக்காதா..?” என்றான்..

“என்ன கூச்சம்.. இனிமேல் நீ கூச்சம் அது இதுன்னு பதில் பேசாமல் இருந்த நான் மனிஷியாக இருக்க மாட்டேன்..” என்றவள் கொலைவெறியுடன்

“அப்படிபோடு..” என்ற மகேஷ் வாய்விட்டுச் சிரிக்க, “உன்னையெல்லாம் இப்படி மிரட்டினால்தான் சரிவரும்..” என்றார் சுமிம்மா சிரித்துக்கொண்டே..

சசிதரன் பாவமாக வித்யாவைப் பார்க்க, அவர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரிக்க வித்யாவும் சேர்ந்து சிரித்தாள்.. அப்பொழுது அவர்களின் அருகில் வந்த ஒருவன், “ஹாய் மேடம்..” என்றான்..

அவர்கள் அவனை விநோதமாகப் பார்க்க, “உலகத்திலேயே கோபம் எனக்கு மட்டும்தான் அதிகமாக வருது என்று வீட்டில் இருந்து ஓடிவந்தேன்.. இங்கே வந்து பார்த்தால் தான் தெரியுது.. என்னைவிட கோபக்காரங்க நிறைய பேர் இருக்கான்னு..” என்றவன் புன்னகையுடன்..

“வித்திக்கா உங்க புகழ் உலகம் முழுவதும் பரவும் போலவே..” என்று சிரித்தாள் அனிதா..

“அப்போ நீங்களும் ஓடிவந்த கேஸா..?” என்று கேட்ட சங்கரி, “நிரஞ்சன் அண்ணா இவரோட பெயரை கேட்டு லிஸ்டில் எழுதுங்க..” என்று ஆர்டர் போட்டாள்..

“என்னோட நேம் கௌசிக்..” என்றவன் புன்னகைக்க, “நீங்க எல்லோரும் இப்பொழுது எங்கே போறீங்க..” என்று கேட்டான்..

“நாங்க எல்லோரும் அடுத்து ஊட்டி போறோம்..” என்றாள் நித்தி புன்னகையுடன்..

“எதுக்கு செல்லம் ஹனிமூன் போவதை எல்லோரிடம் சொல்ற..” என்றவன் மெல்லிய குரலில்..

அவனை நிமிர்ந்து முறைத்த நித்தி, “ஏண்டா நல்லாதானே இருந்த.. ஏன் இப்போ எல்லாம் இப்படி பேசற..” என்றவள் எரிச்சலுடன்..

“உன்னைப் பார்த்ததான் இப்படியெல்லாம் பேச தோணுதுடி.. மற்றவங்க யாரிடமும் நான் இப்படி பேசியதே இல்ல..” என்றவன் குறும்புடன் கண்சிமிட்டினான்.. அவளோ அவனை முறைத்தாள்..

அதற்குள் வானம் இருட்டிவிட, “வாங்க பஸ் வந்துவிட்டது..” என்ற சசிதரன் முன்னே சென்றான்..

“இவனை இரண்டு வார்த்தை பேச வைப்பதற்குள் என்னை இப்படியொரு அவதாரம் எடுக்க வெச்சிட்டான்..” என்ற வித்யா அவனின் பின்னோடு சென்றாள்.. மற்றவர்கள் எல்லோரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்..

அன்று இரவு எல்லோரும் ரூமைக் காலி செய்துவிட்டு பொள்ளாச்சியிலிருந்து ஊட்டி பஸில் சென்றனர்.. இங்கேயே இந்த கூத்து.. இனி அங்கே என்ன என்ன அக்கப்போர் எல்லாம் நடக்க போகுதோ?

அத்தியாயம் – 8

சிலுசிலுவென தென்றல் காற்று உடலைத் தழுவிட ஜன்னலை மூடிவிட்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்தாள் நித்திலா.. அவளுக்கு நேர் பின்னாடி நிரஞ்சன் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தான்.. அவர்களுக்கென தனியாக ஒரு டூரிஸ்ட் பஸ் பிடித்து அதில் ஊட்டி சென்று கொண்டிருந்தனர்..

பஸ் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க யாருக்கும் தூக்கம் வராமல் இருக்க “உங்க யாருக்கும் எந்த ஆசைகளும் இல்லையா..? சுமிம்மா மாதிரி..” அனிதாதான் முதலில் பேச்சைத் தொடங்கினாள்..

அவளின் பேச்சில்  எல்லோரின் கவனமும் அவளின் பக்கம் திருப்பிட, “நான் பண்ற சேட்டை எல்லாம் உங்களுக்கு லூசுத்தனமாக இருக்கா..?” என்று வருத்ததுடன் கேட்டார் சுமிம்மா..

“நிஜமாவே உங்களைப் பார்த்தால் ரொம்ப பெருமையாக இருக்கும்மா.. இந்த வயதில் யாரும் இப்படி இருக்கவும் மாட்டாங்க.. இனிமேல் இருக்கவும் மாட்டாங்க..” என்றாள் வித்யா..

“இப்பொழுது ஒரு சின்ன இன்டர்வியூ எடுக்கலாம்..” என்று எல்லோருக்கும் நினைவு படுத்திய அனிதா, “என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க..” தன் கையை மைக்காக மாற்றி, “நீ முதலில் பதில் சொல்லு..” என்று சங்கரியின் முன்னே மைக்கை நீட்டினாள்..

“எனக்கு மெரிட்டில் பாஸ் பண்ணி நிறைய படிக்கணும்..” அவளிடமிருந்து வேகமாக பதில் வரவே, “அதெல்லாம் நல்ல மார்க் எடுப்ப கவலையே படாதே..” என்றாள் அனிதா புன்னகையுடன்

வித்யாவின் முன்னே அவள் மைக்கை நீட்ட, “எனக்கு கதை புத்தகம் படிக்க பிடிக்கும்.. அதுவும் மழை நாளில் டிராவல் டைமில் ஜன்னலின் அருகே அமர்ந்து படிக்கணும்.. அடுத்து என்னோட பாட்டி மடியில் படுத்து கதை கேட்கணும்.. இது என்னோட ஆசை..” என்றதும் நிரஞ்சனின் பார்வை அவள் மீது படிந்து மீண்டது..

“இது கண்டிப்பா நடக்கும்..” என்றவள் மைக்கை இப்பொழுது கார்த்திகாவின் முன்னே மைக்கை நீட்டப்படவே, “நெதர்லாந்தில் இருக்கும் ரோஜாபூ தோட்டம் உள்ள இடம் இருக்காம்.. அதை போய் பார்க்கணும்..” என்றாள்..

“இருப்பதிலே நீதான் உருப்படியாக பதில் சொல்லிருக்க..” என்றவள் சொல்ல மற்றவர்கள் இன்டர்வியூவை கவனிக்க இப்பொழுது அவள் மகேஷ் நோக்கி நீட்டிட, “எனக்கு காதலித்து கல்யாணம் பண்ணனும்..” என்றவன் குறுஞ்சிரிப்புடன்..

“அதெல்லாம் நிறைய நடக்குது.. உனக்கு நடக்காதா..?” என்றவள் அவனை நக்கலடிக்க எல்லோருமே சிரித்தனர்.. சுமிம்மா அனைத்தையும் மெளனமாக கவனித்தார்

“அடுத்து நம்ம கௌசிக்..” என்று அவரின் முன்னே மைக் நீட்டப்பட்ட, “என்னோட கோபத்தை குறைக்கணும்.. இதுதான் என்னோட ஆசை..” என்றவன் சொல்ல, “அது இப்பொழுது நடக்காது.. நெக்ஸ்ட்..” என்றாள்..

சசிதரன் முன்னே அவள் மைக்கை நீட்ட,“எனக்கு என்னோட கூச்ச சுபாவத்தை விட்டுவிட்டு எல்லோரிடமும் இயல்பாக பேசி சிரிக்கணும்..” என்றான்..

“அதுதான் அக்கா அருவாளைத் தூக்கியதில் இருந்து நடக்கிறதே..” என்றவள் மைக்கை நிரஞ்சனின் முன்னே நீட்டினாள்..

அவன் நித்திலாவைப் பார்த்துவிட்டு, “எனக்கு வரபோகும் மனைவியை நான் உயிருக்கு உயிராக காதலிக்கணும்.. அவளோட ஆசைகளை நிறைவேற்றி வைக்கணும்..” என்றவன் புன்னகைத்தான்..

நித்திலா வேகமாக திரும்பி நிரஞ்சனைப் பார்க்க, அவனோ இடதுபுருவம் உயர்த்தி, ‘என்ன’ என்பது போல பார்த்தான்.. அவள் மெளனமாக தலையைக்குனிந்தாள்..

அவளின் அந்த மௌனம் கூட அவனின் மனத்தைக் கவர, ‘சோ கியூட்..’ என்று மனதிற்குள் நினைத்தான்.. அனிதா எல்லோரின் ஆசைகளையும் கேட்டு விட்டு திரும்ப அவளின் முன்னே மைக்கை நீட்டினாள் சங்கரி..

“உங்களோட ஆசை சொல்லுங்க..” என்றவள் சிரிப்புடன் கேட்க, “எனக்கு இளையராஜா சாங் கேட்டுகிட்டே லாங்  டிராவல் ஒன்னு போகணும்..” என்றவள் தொடர்ந்து,

“அடுத்து மைதா மாவு மாதிரி இருக்கும் ஒருவனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்..” என்றவள் கண்ணில் கற்பனையுடன்.. அவளின் பேச்சில் மகேஷ் முகத்தில் மின்னல் வெட்டியது..

அதிலிருந்த அனைவரின் ஆசைகளையும் கேட்ட பின்னரும் கூட நித்திலா அமைதியாக வர, “நித்தியிடம் நீ இண்டர்வியூ எடுக்க மறந்துட்ட..” என்றவளை மாட்டிவிட்டு நித்திலாவிடம் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டான் நிரஞ்சன்..

“அட நீங்க மட்டும் சொல்லவே இல்ல..” என்றவள் அவளின் முன்னே மைக்கை நீட்டிட, ‘அவள் என்ன சொல்ல போகிறாள்..’ என்று ஆவலுடன் பார்த்தனர்..

“எனக்கு ஒரு முறை வேடந்தாங்கல் போகணும்.. வரலாற்றில் ரொம்ப பிடித்த இடம் மகாபலிபுரம் கோவில் சிற்பங்கள் அதைப் பார்க்கணும்.. அப்புறம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வாங்கணும்..” என்றவள் ரசனையுடன் ஆசைகளைப் பட்டியலிட்டாள்..

“அது ஏன் நித்திக்கா தலையாட்டி பொம்மை வாங்கணும் என்று சொல்றீங்க..” என்று விளக்கம் கேட்டாள் சங்கரி..

“எனோட மனசில் இருப்பதெல்லாம் நான் அதுக்கிட்ட சொல்லிட்டே இருப்பேன்.. அந்த பொம்மையும் நான் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டிடே இருக்கும்..” என்றவள் தொடர்ந்து,

“உயிர் இருந்தும் பொம்மையாக இருக்கும் மனிதர்களைவிட உயிரில்லாத அந்த தலையாட்டி பொம்மைகளுடன் பேசுவதில் எந்த தவறும் இல்ல..” என்றவளின் இதழில் புன்னகை அரும்பியது..

அவள் சொன்ன விஷயம் யாருக்கும் புரியாவிட்டாலும் கூட அவளின் மனம் காயப்பட்டு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் நிரஞ்சன்..

“நான் என்ன சொன்னாலும் தலையாட்டும்.. என்னோட ஆசைகள், விருப்பங்கள் எல்லாம் கேட்டு தலையாட்டும்..” என்றவள் சொல்ல,

“நாளைக்கு வருகிற கணவனும் தலையாட்டி பொம்மையாக இருக்கணுமா..?” என்று கேட்டான் நிரஞ்சன்..

அவனின் கேள்வியில் எல்லோரும் திரும்பி அவனைப் பார்க்க அவனோ இயல்பான முகத்துடன் நித்திலாவைப் பார்த்தான்..

“எல்லாவற்றிற்கும் அர்த்தம் புரியாமல் தலையாட்டும் தலையாட்டி பொம்மை போல ஒரு கணவன் எனக்கு வேண்டாம்.. அதுக்கு நான் இப்படியே இருந்துகொள்கிறேன்..” என்றவள் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தாள்..

சுமிம்மா அவள் பேசுவதை எல்லாம் கேட்டுகொண்டே கண்மூடி அமர்ந்திருக்க அவரின் மனதில் ஆயிரம் நினைவுகள் அணிவகுத்து நின்றது..

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட குளிர்ந்த காற்று முகத்தில் மோதியது.. வெண்பஞ்சு மேகங்கள் வானில் ஊர்வலம் போக விடியலுக்கான அறிகுறி இல்லாமல் காணப்பட்டது வானம்!

வழியெங்கும் அணிவகுத்து நின்ற ரம்பர் மரங்களும் பலாபழம் மரங்களும், கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த தேயிலைத் தோட்டங்களும் பார்க்க பார்க்க தெவிட்டாத இயற்கை அழகு!

மலையின் முகட்டை தொட்டு சென்ற மேகங்களை கையில் பிடித்துவிட தூண்டும் இயற்கைகாட்சி.. திரும்பும் இடமெங்கும் கொட்டிகிட அழகை பார்க்க கண்ணிரண்டும் போதவில்லை..

எல்லோரும் ஸ்வெட்டருடன் வண்டியைவிட்டு கீழிறங்கி நிற்க நிரஞ்சனும், சசிதரனும் சென்று ரிசார்ட் புக் பண்ணிவிட்டு வந்தனர்.. அங்கே சென்று அலுப்பு தீர குளித்துவிட்டு கிளப்பியவர்கள் முதலில்  மலர் கண்காட்சிக்கு சென்றனர்..

சுமிம்மா அங்கிருந்த மலர்களை எல்லாம் பார்த்துவிட்டு குழந்தை போல அந்த மலர்களின் அருகில் சென்று நிற்பது, மலர்களை மெல்ல தீண்டுவதுமாக இருந்தார்..

மலரில் செய்யப்பட்ட பெரிய டேபியரின் அருகில் நின்று எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டனர்.. சுமிம்மா செய்யும் சேட்டையெல்லாம் கவனித்த நித்தி மௌனமாக நின்றிருந்தாள்..

எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று இடத்தை சுற்றிப்பார்க்க, நிரஞ்சனின் பார்வை அவளின் மீதே இருந்தது.. நித்தி அதை கவனித்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..

அவர்களுடன் வந்தவர்கள் யாரும் இல்லாத நேரத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட நிரஞ்சன் அவளின் அருகில் சென்றான்.. அவளோ அவனைவிட்டு விலகி நடந்தாள்..

“நிதி உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றவன் சொல்ல அவளோ நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க, “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னைத் திருமணம் செஞ்சிக்க ஆசைபடுகிறேன்..” என்றவன் சொல்லிக் கொண்டிருந்தான்..

அதற்குள் அங்கே வந்தவர், “ஹாய் எல்லோரும் ஊட்டியை சுற்றிப்பார்க்க வந்திருக்கீங்க.. இங்கே கோடை திருவிழாவில் சில போட்டி வைக்கிறோம்..” என்றவர் அறிவித்தார்..

“என்ன போட்டி.. யாருக்கு போட்டி.. என்ன ரூல்ஸ்.. யார் எல்லாம் கலந்துக்கணும்..” முதலாக சுமிம்மா கேட்க, “இதில் இளமை பட்டாளம் கலந்துக்கலாமா..?” என்று கேட்டான் மகேஷ்..

“இல்லங்க.. இந்தமுறை முதுமைக்கு முதலிடம் கொடுக்க நினைக்கிறோம்..” என்றவர் தொடர்ந்தவர், “ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம்.. ஒரு பாட்டு போட்டி ஒரு டான்ஸ் போட்டியில் கலந்துட்டு வின் பண்ணனும்..” என்றார்..

“முதலில் என்ன ரூல்ஸ்..? என்ன பரிசு அதை சொல்லுங்க” என்றார் சுமிம்மா.. “பாட்டு, டான்ஸ் இரண்டிற்கும் நீங்களே பாட்டு செலக்ட் பண்ணிக்கலாம்.. ஆனால் உங்களோட இளமை வயதில் இந்த பாடலுக்கு நீங்க எப்படி ஆடியிருப்பீங்களோ அதே மாதிர் ஆடனும்.. உடை உங்களோட சாய்ஸ்..” என்றவர் சொல்ல,

“இதெல்லாம் எனக்கு கைவந்த கலை.. பரிசு பற்றி சொல்லுங்க..” என்றவர் சொல்ல, “ஒரு லட்சம் பரிசு..” என்றவர் அறிவிக்க அங்கே வந்திருந்த எல்லோரும் பெயர் கொடுக்க சுமிம்மாவும் பெயர் கொடுத்தார்..

எல்லோரும் பாடல் பாடிமுடித்த பின்னர் மேடை ஏறினார் சுமிம்மா.. அவர்கள் எல்லோரும் அவர் என்ன பாடல் பாட போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்..

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா

ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்

அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்

கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்

ஆஹ் அஹ் ஆரிரரோ..” என்றவர் பாடிய பாடலைக் கேட்ட எல்லோரின் மனதிலும், ‘இவர் ஏன் இந்த பாடல் பாடினார்..?’ என்ற கேள்வியெழுந்தது.. சுமிம்மா எந்த கவலையும் இல்லாமல் பாடிக்கொண்டிருக்க நித்திலாவின் மனதில் பாரம் ஏறியது..

வெள்ளி நிலவே உன்னை மேகம் மறைத்தால்

தங்க மலரே உன்னை தரையில் எறிந்தால்

உண்மை என்ற ஒன்றே போதும் நன்மை காணலாம்

ஹும் ஹும் ஆரிரரோ..” என்றவர் பாட நித்திலாவினால் தன்னுடைய அழுகையை கட்டுத்த முடியாமல் யாரின் கவனத்தையும் கலைக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.. அவள் ஓடுவதைக் கவனித்த நிரஞ்சனும் அவளின் பின்னோடு ஓடினான்..

இவர்கள் சென்றதை அறியாத எல்லோரும் நின்று சுமிம்மாவின் பாடலைக் கேட்க அவரோ அந்த பாட்டுடன் ஒன்றிப் போயிருந்தார்..

ராமன் இருப்பான் இங்கே சீதை இருப்பாள்

கண்ணன் இருப்பான் இங்கே ராதை இருப்பாள்

பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம் கோயில் கொள்ளலாம்

பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா..

தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லயம்மா..” அவர் பாடலைப் பாடிமுடித்து கீழிறங்கி வந்தார்.. அந்த பாடலுக்கும் சுமிம்மாவிற்கும் என்ன தொடர்பு..? நித்திலாவின் மனதில் என்ன இருக்கிறது..?

அத்தியாயம் – 9

சுமிம்மா பாடலைப் பாடிவிட்டு மேடைவிட்டு கீழிறங்கி வர அவரின் அருகில் ஓடிச்சென்ற சங்கரி மற்றும் அனிதா இருவருமே, “சுமிம்மா பாட்டு சூப்பர்..” என்று அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டனர்..

“உங்களுக்கு பாட்டு பிடிச்சிருக்கா..” என்றவர் ஆர்வமாக கேட்க, “எங்களுக்கு எல்லாம் உங்களோட பாட்டு ரொம்ப பிடித்தது சுமிம்மா..”  என்றான் மகேஷ்..

“ஆனால் ஏன் அந்த பாட்டு எடுத்தீங்க என்று புரியல..” என்றான் கௌசிக் சிந்தனையுடன்.. அவனின் முகம் பார்த்த சுமிம்மா புன்னகைக்க, அவரின் புன்னகை அவர்களுக்கு எல்லாம் புதிர் போட்டது…

“நீங்க எல்லோரும் என்னோட இருக்கீங்க இல்ல.. அதனால்தான் இந்த பாட்டு பாடினேன்..” என்றவரின் செல் சிணுங்கியது.. அதன் திரையைப் பார்த்தவர், “ஒரு நிமிஷம்” என்றவர் நகர்ந்து நின்று போனைப் பேசினார்..

அதைக் கவனித்த சசிதரன், “இந்த இரண்டு நாளில் அம்மாவுக்கு அடிக்கடி போன் வருது..” என்று சொல்ல, “ம்ம் ஆமா சசி அண்ணா நானும் கவனித்தேன்” என்றாள் கார்த்திகா..

அதற்கான காரணம் என்னவென்று யாரும் அறியாமல் இருந்தனர்.. அவர் போனைப் பேசிமுடித்துவிட்டு அப்படியே உடையை மாற்ற அறைக்கு சென்றார்.. அவர்களின் கவனம் எல்லாம் சுமிம்மா மீதே இருந்ததால் நிரஞ்சன், நித்திலா இருவரையும் அவர்கள் யாரும் தேடவில்லை..

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர்களின் நினைவே அவர்களுக்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லோரின் கவனமும் சுமிம்மாவின் மீதே இருந்தது..

சிறிதுநேரத்தில் அவர் புடவையுடன் வருவதைப் பார்த்த வித்யா, “சுமிம்மா உங்களுக்கு எந்த ட்ரஸ் போட்டாலும் அழகாக இருக்கும்மா..” என்றவள் சொல்ல அவளின் குரல்கேட்டு மற்றவர்களும் திரும்பி அவர் வந்த திசை பார்த்து நின்றனர்..

அதற்குள் அடுத்த போட்டிக்கான அறிவிப்புகள் வரவே, “இப்பொழுது டான்ஸ் போட்டி நடக்குது.. இதை முடித்துவிட்டு வருகிறேன்..” என்றவர் முன்னே சென்றார்..

“அம்மா என்ன பாட்டு என்று சொல்லாமல் போறீங்க..” என்று கார்த்திகா ஆர்வத்துடன் கேட்க, “வெயிட் அண்ட் வாட்ச்..” என்றவர் புன்னகையுடன் முன்னே சென்றார்..

எல்லோரும் ஜோடி பாடலுக்கு ஆடி முடிந்ததும் சுமிம்மா ஆடுவதைப் பார்க்க எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.. அவர் எடுத்த பாடல் அவர்கள் எல்லோரின் மனதையும் கொள்ளையடித்து சென்றது..

தேர் ஓடும் வீதியெங்கும்  பூமாலை ஊர்வலங்கள்

வலிப நெஞ்சம் எல்லாம் வாருங்களே

வண்ணத்தின் கோலங்கள் பாருங்களே..

புது வண்ணத்தின் கோலங்கள் பாருங்களே..” என்று சுமிம்மா அந்த பாடலில் ஆடும் பூர்ணிமா பாக்யராஜிற்கு சரிசமமாக ஆடினார்.. இளமை பட்டாளம் தாளத்துடன் கை தட்டிக் கொண்டிருந்தனர்..

விண்ணில் வந்து ஆடும் ஒளி மின்னல்களும் வாடும்..

பெண்மை தாகத்தாலே அது போதையாடி ஆடும்..

புதுப்பாடல் பாடி ஒரு பொன்மாலை சூடி

அன்போடு கூடி நம் ஆனந்தம் தேடி

துன்பங்கள் மறந்திங்கே துணையாகலாம்..

தென்றல் மங்கைபோலே எங்கும் வாழ்வோமே

என்றும் ஆண்மை நெஞ்சங்களை ஆள்வோமே

….”  என்றவர் தன்னை மறந்து அந்த பாடலுக்கு தகுந்த முக பாவனைகளை வெளிபடுத்திய வண்ணம் துள்ளிக்குதித்து ஆடினார்.. அங்கிருந்த முதுமை பட்டாளத்தின் பார்வை எல்லாம் அவரின் மீதே இருந்தது..

கோடை நிலா வானில் ஒளி ஓவியங்கள் போடும்

மங்கை என்னும் பேரால் நம் எண்ணங்களில் ஆடும்

சொந்தங்களாக புது சந்தங்கள் ஆகி 

பொன்னுஞ்சல் ஆடி நம் போவேமே நாளும்

எல்லோரும் ஒன்றாகி கலந்தாடுவோம்..

காலம் எல்லாம் மகிழ்தாடி இணைவோமே.

கள்ளம் இல்ல உள்ளத்தோடு வாழ்வோமே..” என்றவர் பாடிய பாடலின் வரிகளைக்கேட்டு  இளநெஞ்சங்கள் தங்களை மறந்து நின்றனர்.. அந்த பாடலின் வரிகள் சொன்ன செய்தியில் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கிட அவர்கள் எல்லோரும் சிலையென நின்றனர்..

அவர் ஆடிமுடித்து வந்ததுமே, “சுமிம்மா இன்று என்னவோ உங்களோட பாட்டு, டான்ஸ் எல்லாமே சூப்பராக இருக்கு..” என்றவர்கள் எல்லோருமே அவரை சுற்றி ஆடினார்..

“எல்லோரும் என்னை நடுவில் நிற்க வைத்து கும்மி அடிக்கிறீங்களா..” என்றவர் அவர்களை மிரட்டினாலும் அவர்களின் முகம் மலர்ந்து மகிழ்ச்சியில் பொங்கியது..

அந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவரும் வந்து சுமிம்மாவை பாராட்டவே செய்தனர்.. அதற்குள் போட்டியின் முடிவு பற்றி அறிவிப்புடன் வந்தனர் கமிட்டி மெம்பர்ஸ்..

“இந்த போட்டி கலந்துகொண்ட அனைவருமே திறமைசாலிகள் என்றாலும் பரிசை பெற போகும அந்த அதிர்ஷ்டசாலி சுமித்ரா..” என்று அறிவித்தனர்..

அதுமட்டுமின்றி, “சுமித்ரா அம்மா அவங்களோட வயதையோ இல்லை யாராவது நம்மை பற்றி தவறாக பேசுவாங்களோ என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் இயல்பாக ஆடி பாடியதே அவர் இந்த பரிசை பெற தகுதியானவர் என்று நாங்கள் முடிவு செய்தோம்..” அவரைத் தேர்ந்து எடுத்தற்கான காரணத்தையும் கூறினார்..

“முதுமை என்பது உடலுக்கு மட்டுமே தவிர மனதிற்கு இல்லை என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு சுமித்ரா அம்மாதான்..” என்று அங்கிருந்த கமிட்டி மெம்பர்கள் கூறினார்..

அடுத்த நொடியே கைதட்டல் சத்தம் அந்த மலைகளில் பட்டு எதிரொலித்தது..

அதற்குள் நிரஞ்சனும், நித்திலாவும் வந்துவிட, “நீங்க இருவரும் எங்கே போனீங்க..” என்று அனிதா சந்தேகம் கேட்க, “நான் கடைக்கு போயிருந்தேன் அனிதா..” என்றான் நிரஞ்சன்..

“இங்கே நடக்கும் போட்டியை கவனிக்காமல் கடைக்கு எதுக்கு அண்ணா போனீங்க..” என்று குழப்பத்துடன் சங்கரி கேட்க, “இருங்க இருங்க நானே சொல்றேன்..” என்றவன் சுமிம்மாவின் முன்னே ஒரு பார்சலை நீட்டினான்..

அவரின் முகத்தில் மலரும் புன்னகையைப் பார்க்கவே நித்தி நின்றிருக்க அவளின் விழியிரண்டும் கலங்கிச் சிவந்திருந்தது.. ஆனாலும் அதையும் மீறி அவளின் முகத்தில் ஒரு தெளிவு இருப்பதை கண்டுகொண்டார் சுமிம்மா..

அதேபோல நிரஞ்சனின் முகத்தில் ஆண் என்ற கம்பீரத்தை தாண்டிய ஒரு வசீகரமான புன்னகை அவனின் இதழில் தவழ்ந்ததைக் குறித்துக் கொண்டார்..

அவர் அந்த பார்சலை வாங்கி பிரித்து பார்க்க அதில் பச்சை நிறத்தில் பட்டுப்புடவை இருப்பதைப் பார்த்த சுமிம்மா, “எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் தம்பி..” என்றவரின் கைகள் தானாகவே அந்த புடவையை வருடியது..

“விலை ரொம்ப அதிகம் போல தெரியுது..” என்று சசிதரன் சொல்லவே, “அதெல்லாம் இல்ல..” என்றவன் சுமிம்மாவின் மீது பார்வையைத் திருப்பினான்..

“சுமிம்மா உங்களுக்கு இந்த புடவை பிடிச்சிருக்கா..” என்றவன் எதிர்பார்ப்புடன் கேட்க, “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தம்பி..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..

“சுமிம்மா நீங்கதான் வின் பண்ணுவீங்க என்று தெரிந்தே நான் போய் பட்டுப்புடவை  எடுத்துட்டு வந்தேன்.. இந்த புடவை கட்டிட்டு போய்தான் நீங்க பரிசு வாங்கணும்..” என்ற நிரஞ்சனின் பார்வை நித்தியின் பக்கம திரும்பியது..

அதைக் கவனித்த கௌசிக், “இவங்க இருவருக்குள் ஏதே இருக்கிற மாதிரியே இருக்குங்க..” என்றவன் கார்த்திகாவிடம் சொல்ல, “அது என்னவோ இருக்கட்டும்.. நீ உன்னோட வேலையைப் பாரு..” என்றாள்..

“சுமிம்மா உங்களுக்கு மடிசார் கட்டிபார்க்கணும்..” என்ற வித்யா அவரை அழைத்துச்சென்று மடிசார் கட்டிவிட்டு சுமிம்மாவை மாமியாக்கிவிட்டாள்..

அவரை மடிசாரில் பார்த்த எல்லோருமே, “ஐயர் வீட்டு பொம்மனாட்டிகள் எல்லோரும் தோத்தாங்க போகங்க..” என்று சொல்ல, “மாமிக்கு எந்த ஊரு..” என்று கேட்டான் நிரஞ்சன்..

“சித்தரகுளம்டா அம்பி..” என்றவர் கெத்தாக பதில் சொல்ல, “சுமிம்மா இப்போ சூப்பர் மாமி ஆகிட்டாங்கோ..” என்று அனிதா குறும்புடன் கண்சிமிட்டினாள்..

“அடியே அனிதா என்னிடம் நீ நல்ல வாங்க போற..” என்றவர் சொல்ல, “சுமிம்மா நிஜமாவே நீங்க ஐயர் ஆத்து பொண்ணுன்னா நம்பிருவாங்க..” என்றாள் வித்யா.. ஆளுக்கு ஒரு கமெண்ட்ஸ் கொடுக்க சுமிம்மாவின் முகம் பூ போல மலர்ந்தது..

சுமிம்மாவின் மகிழ்ச்சியை ஒரு புன்னகையுடன் பார்த்தவள், “எல்லோரும் மனதிற்குள் ஆயிரம் கவலையை வெச்சிட்டு பொம்மை மாறி இருக்காங்க.. நீங்கதான்மா புன்னகையை மட்டும் மனசில் வெச்சிட்டு கவலையைக் காற்றில் பறக்கவிட்ட ஒரே ஆள்..” என்று நினைத்தாள் நித்திலா..

அவளின் முகம் கண்ணாடி போல அவள் மனதில் நினைத்ததை நிரஞ்சனுக்கு படம்பிடித்து காட்டிட, “அவங்க அப்படித்தான் நிதி..” என்றவன் புன்னகைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா..

அவளின் பார்வையில் வெளிப்பட்ட காதலை உணர்ந்தவன், “அடியேய் உன்னோட பார்வை சரியில்ல.. நம்ம வந்திருக்கும் ஊரின் க்ளைமேட்டும் சரியில்ல..” என்றவன் அவளிடம் எச்சரித்தான்..

அவள் உடனே தன்னுடைய பார்வையை மாற்றிக்கொள்ள, “ம்ம் இப்போ நீ ரொம்ப குட் கேர்ள்..” என்றவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.. இருவரின் இடையே காதல் மெல்ல மெல்ல மலர்ந்தாலும் அதில் ஒரு புரிதல் இருப்பதை இருவரும் உணர்ந்தே இருந்தனர்..

மேடை ஏறி பரிசை வாங்கிவிட்டு வந்த சுமிம்மா, “காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது.. வாசக்கதவ ராஜலட்சுமி தடுக்கிற வேலை இது..” என்றவர் குதுகலத்துடன் பாடிட, “அம்மாவிற்கு பாட்டை பாரு..” என்ற சிறியவர்கள் கண்களில் பொறமை இல்லை..

“டேய் பசங்களா.. கையில் ஒரு லட்சம் இருக்கு.. வாங்க நம்ம வேற ஊருக்கு போலாம்..” என்றவர் சொல்ல, “ஊர் சுத்திப் பார்க்கணும்..” என்ற சங்கரியைப் பார்த்தவர், “இன்னைக்கு முழுக்க சுத்திப் பார்க்கலாம்..” என்றார்..

“எங்களுக்கு பார்ட்டி..” என்று கேட்ட மகேஷ் முகம் பார்த்தவர், “திருச்சியில் போய் பெரிய பார்ட்டி தருகிறேன் குட்டி பையா..” என்றார்.. எல்லோரும் அன்று முழுவதும் ஊரைச் சுற்றிவிட்டு இரவு தங்களின் பயணத்தைத் தொடங்கினர்..

அந்த இரவு நேரத்தில் எல்லோரும் களைப்பில் உறங்கிவிட அனிதா மட்டும் வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டே வருவதைக் கவனித்த மகேஷ், “அனிதா..” என்று மெல்லிய குரலில் அழைத்தான்..

அவள் வேகமாகத் திரும்பிப் பார்க்க, “இதில் இளையராஜா சாங்ஸ் இருக்கு.. நீ ஹெட்செட் மாட்டே கேளு..” என்றவன் அவனின் செல்லை அவளிடம் கொடுத்தான்..

அவளோ அவனைப் புரியாத பார்வை பார்க்க, “நீதானே நேற்று உன்னோட ஆசையை சொன்ன..” என்றவன் புன்னகைக்க, “தேங்க்ஸ் மகி..” என்றவள் அவனின் கையில் இருந்த செல்லை வாங்கி அனிதா ஹெட்செட்டை மாட்டி பாடலை ஒலிக்கவிட்டாள்..

“தில் தில் தில் மனதில் ஒரு தல் தல் தல் காதல்..

சில் சில் இளநெஞ்சில் சல் சல் சல் ஒரு ஊஞ்சல்..” என்ற இளையராஜாயின் பாடலைக் கேட்ட அனிதா திரும்பி மகேஷ் முகம் பார்க்க அவனோ குறும்புடன் கண்சிமிட்டு சிரித்தான்..

அந்த புன்னகை அவளுக்குள் மற்றதை விதைக்க அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு அந்த பாடலில் மூழ்கிவிட அந்த பயணம் அவளுக்கு மறக்க முடியாத பயணமாக மாறியது.. அதேபோல மகேஷ் மனமும் நிறைந்தது..

அடுத்த நாள் காலைபொழுது திருச்சியில் அழகாக விடிந்தது.. அடுத்து திருச்சி என்ன ஆக போகுதோ..??

அத்தியாயம் – 1௦

விடியற்காலை பொழுதில் வானம் செவ்வானமாக மாறிக்கொண்டிருந்தது.. குளிர்ந்த காற்று அவளின் முகத்தில் வந்து மோதி அவளின் கூந்தலைக் கலைத்துச் சென்றது..

அவளின் முகத்தை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.. தன்னை யாரோ பார்ப்பது போல உணர்ந்த நித்திலா மெல்ல விழிதிறந்து பார்க்க, “குட் மார்னிங்..” என்றான் நிரஞ்சன்.

அவள் முகத்தில் புன்னகை அரும்பிட, “நான் இப்போ இங்கிருந்து கிளம்ப போறேன்..” என்றவன் சொல்ல, “நீ மட்டும் இப்போ எங்கே போற.. திருச்சி வந்துவிட்டதா..?” என்று கேட்டாள் நித்திலா..

“அதெல்லாம் வந்து சொல்றேன்.. ஹோட்டல் ரூம் எல்லாம் போட்டாச்சு..” என்றவன் ரூம் கீயை அவளிடம் கொடுக்க ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள் நித்திலா.. பஸ் ஒரு பெரிய ஹோட்டல் முன்னே நின்றிருந்தது..

அவள் திரும்பி அவனின் முகத்தைக் கேள்வியாக பார்க்க, “நான் ஒரு வேலையாக வெளியே போறேன்.. நான் வரும் வரையில் நீ இவங்களை எல்லாம் பார்த்துக்கோ நித்தி..” என்றவன் எழுந்து பஸின் படிக்கட்டு வரையில் சென்றவன் நின்று அவளின் முகம் பார்த்தான்..

“நிதி நான் போயிட்டு வர்றேன்..” என்றவன் சொல்ல, சரியென தலையசைத்தாள் நித்திலா.. அவன் சென்ற சிலநொடியில் எல்லோரும் கண்விழித்துவிட, “வாங்க நம்ம ஹோட்டல் ரூமிற்கு போகலாம்..” என்றவள் எல்லோரையும் அழைத்துச் சென்றாள்..

எப்பொழுதும் போலவே ஆண்களுக்கு தனியறை பெண்களுக்கு தனியறை என்று புக் பண்ணியிருந்தான் நிரஞ்சன்.. எல்லோரும் விடியும் வரையில் தூங்கி எழுந்து குளித்துவிட்டு மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தனர்..

எல்லோரும் மலைக்கோட்டைக்கு செல்லும் நேரத்தில் வந்து சேர்ந்த நிரஞ்சனை பார்த்த சசிதரன், “என்ன நிரஞ்சன் எங்கே போயிருந்தீங்க..” என்று கேட்க, “அதெல்லாம் அப்புறம் சொல்றேன்..” என்றவன் கையில் இருந்த பார்சலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு குளிக்க சென்றான்..

அவனின் செயல்கள் சசிக்கு விநோதமாக தெரிந்தாலும் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் குளித்துவிட்டு வந்து மலைக்கோட்டையை சுற்றிப்பார்க்க கிளம்ப, நித்திலாவின் பார்வை நிரஞ்சனைத தேடியது..

அப்பொழுது அவன் எதிரே வருவதைக் கவனித்தவளின் முகத்தில் நிம்மதி பரவுவதை உணர்ந்த நிரஞ்சனின் மனமும் நிறைந்தது.. சுமிம்மா எப்பொழுதும் போலவே படு சுட்டித்தனமாக பர்மா பஜார் உள்ளே நுழைந்தார்..

அவர் அதிலிருக்கும் கடைக்குள் எல்லாம் நுழைந்து பொருளை விலை பேசி வாங்குவதைக் கவனித்த அனிதா, “சுமிம்மா எதுக்கு இதெல்லாம் வாங்கறீங்க..” என்று சந்தேகமாகவே கேட்டாள்..

“அதெல்லாம் சொல்றேன் வாங்க போய் முதலில் துணி எடுப்போம்..” என்றவர் அவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு துணிக்கடையின் உள்ளே நுழைந்தனர்..

எல்லோரையும் துணி செலக்ட் செய்ய சொன்னதும் சங்கரி ஓடிவந்து, “சுமிம்மா எனக்கு நீங்க எடுத்துக்கொடுங்க..” என்று அவரின் கையைப்பிடித்து இழுத்தாள்

“ஏன் செல்லம்..” என்றவர் அவளிடம் காரணம் கேட்க, “நாளைக்கு என்னோட ரிசல்ட் சுமிம்மா.. வீட்டில் எல்லோரும் என்னைத் தேடுவாங்க..” என்றவளின் முகம் கசங்கிட, “என்னோட செல்லத்துக்கு நான் வந்து எடுத்து தருகிறேன்..” என்றவர் எல்லோருக்கும் துணி எடுத்து பில் போட கொடுத்தார்..

அதன்பிறகு உச்சி பிள்ளையாரைப் பார்க்க மலை ஏறிய சுமிம்மாவின் வேகத்தைக் கண்ட வித்யா, “என்ன சுமிம்மா இவ்வளவு வேகமாக போறாங்க.. என்னால மலை ஏறவே முடியல..” என்றவள் நின்று மூச்சிரைத்தாள்..

“நீங்க ஆசைப்பட்ட விஷயம் அக்கா..” என்ற கார்த்திகா அவளை கிண்டல் செய்ய, “நான் இனிமேல் ஆசையே படமாட்டேன்..” என்றவள் மெல்ல படியேறினாள்.. ஆண்கள் ஓவ்வொரு விஷயம் பேசியபடியே படியேறிச் சென்றனர்..

அவர்களிடம் இருந்து பின்தங்கி நின்ற நிரஞ்சனைப் பார்த்த நித்தி, “ஏன் இங்கே நிற்கிறீங்க..” என்று கேட்டவண்ணம் படிக்கட்டில் இருந்து இறங்கி வந்தவளின் கேள்விக்கு பதில் சொல்லாத நிரஞ்சன் அவளின் முன்னே ஒரு பார்சலை நீட்டினான் நிரஞ்சன்..

“என்னது இது..” என்றவள் கேள்வியுடன் அவளின் கையிலிருந்த பார்சலை வாங்கிப் பிரித்து பார்த்த நித்தியின் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி.. அவளின் முகம் சந்தோஷத்தில் மலர்வதை ரசித்தவன், “உனக்கு பிடிச்சிருக்கா..”என்று கேட்டான்..

“ரொம்ப..” என்றவளின் விழியிரண்டும் கலங்கிட, “ஏய் அழுக்காதே..” அவளை நிரஞ்சன் அதட்டினான்.. அந்த பார்சலில் தலையாட்டி பொம்மை இருந்தது.. அதை பார்த்துதான் நித்தியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்..!

“எனக்காக போய் வாங்கிட்டு வந்திங்களா..” என்றவளின் முகம் புன்னகை அரும்பிட தலையை சரித்தவள், “தேங்க்ஸ்..” என்றவள் தன்னுடைய பேக்கைத் திறந்து எதையோ தேடி எடுத்தாள்..

“நீ கை நீட்டு..” என்றவளின் முன்னே அவன் கையை நீட்ட அவனின் கையில் மோதிரத்தைக் கொடுத்தவள், “நீயே வெச்சுக்கோ.. என்னோட அப்பா எனக்காக கடைசியாக கொடுத்தது..” என்றவனின் கையில் கொடுத்துவிட்டு சென்றாள்..

உலகத்தில் இல்லாத ஒருவர் விட்டுச் சென்ற பொருளை இவ்வளவு பத்திரமாக வைத்திருந்த நித்திலா அவனின் கையில் மோதிரத்தை கொடுத்துவிட்டு சென்ற வேகத்திலேயே அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்டான் நிரஞ்சன்..

தனக்கு முன்னே சென்ற சசியின் அருகில் சென்ற வித்யா, “சசி..” என்று அழைக்க, “என்ன என்று கேளுங்க..” என்ற இருவரும் முன்னே படியேறிச் சென்றனர்.. அனிதாவும், கார்த்திகாவும் பேசியபடியே வந்தனர்..

“என்ன வித்யா..” என்றவன் இயல்பாக கேட்க, “ம்ம் இப்பொழுது கூச்ச சுபாவம் போயிருச்சா..?” என்றவள் குறும்புப் புன்னகையுடன் கேட்ட வித்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் சசிதரன்..

அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன், “வித்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. நான் ஊருக்கு போனதும் அப்பாவிடம் பேசிட்டு உங்க வீட்டு வந்து உன்னை முறையாக பெண் கேட்கிறேன்..” என்றவன் தடுமாற்றம் இல்லாமல் பேச வாயடைத்துப்போய் நின்றாள் வித்யா..

அவள் சிலையென நின்றிருக்க, “ஒரு ஆண் தன்னை ஆணாக உணரனும்.. உன்னோட தைரியம் என்னை எனக்கே அடையாளம் காட்டியிருக்கு.. உன்னைவிட எனக்கு தகுந்த ஜோடி வேற யாரும் இல்ல..” என்றவன் அவளின் கையைப் பிடித்தான்..

அந்த தொடுதலில் உயிர்பெற்ற வித்யா, “சசி..” என்றவளின் குரல் வெளிவரவில்லை..

வெறும் காற்று மட்டுமே வர தன்னுடைய செல்லை எடுத்து யாருக்கோ போன் செய்தவன், “இந்த பேசு..” என்றான்..

அவள் மறுபேச்சு இல்லாமல் போனை வாங்கி, “ஹலோ..” என்றாள்..

“கண்ணு நான் பாட்டி பேசறேன்டா.. நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று சசி சொன்னான்.. நீ எங்க வீட்டுக்கே வந்திரும்மா.. நான் உன்னைப் பத்திரமாக பார்த்து கொள்கிறேன்..” என்றவரின் குரல்கேட்டு வித்யாவின் விழிகள் கலங்கியது..

அதன்பிறகு அவரிடம் பேசிவிட்டு போனை வைத்த வித்யா, “என்னோட ஆசை..” என்றவள் வாய்திறக்க, “எங்க பாட்டி உன்னை நல்ல பார்த்துப்பாங்க வித்யா.. நீ தினமும் அவங்க மடியில் படுத்து கதை கேட்கலாம்..” என்றவன் புன்னகைத்தான்..

“அதுக்காக உங்களை நான் கல்யாணம் பண்ணணுமா..” என்றவள் கேட்க, “கட்டாயம் இல்ல.. என்னோட விருப்பத்தை சொல்லிட்டேன் முடிவு உன் கையில்” என்றவன் சொல்லி முடிக்கும் முன்னே, “எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு..” என்ற வித்யா வேகமாக மலை ஏறிவிட்டாள்..

சசிதரன் புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்து செல்ல இரு மனங்கள் இங்கே தங்களின் காதலை வெளிபடுத்தியது.. சுமிம்மா மற்றும் சங்கரி இருவரும் அவர்கள் மலையேறி வருவதற்குள் சாமி கும்பிட்டுவிட்டு கீழிறங்கி வந்தனர்..

மற்றவர்கள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு கீழிறங்கி வரும் பொழுது நிரஞ்சன் – நித்திலா, சசிதரன் – வித்யா, மகேஷ் – அனிதா மூன்று ஜோடிகளின் மனமும் நிறைந்து இருந்தது

அவர்கள் எல்லோரும் சாப்பிட ஹோட்டலின் உள்ளே நுழைந்து எல்லோரும் ஒரே டேபிளில் அமர்ந்தனர்.. அப்பொழுது வெளியே ஜூஸ் கடையைப் பார்த்தவள் வேகமாக கடைக்குள் புகுந்தாள்..

அவள் தனியே செல்வதைக் கவனித்த சுமிம்மா, “கார்த்திகா வெளியே நின்றுவிட்டால் போல.. நீ போய் அவளைக் கூட்டிட்டு வா..” என்றவர் கௌசிக்கை அனுப்பி வைத்தார்..

அவள் ஜூஸை ரசித்து ருசித்து குடிப்பதைக் கவனித்தவன், “சீக்கிரம் வா கார்த்திகா..” என்றழைக்க, “இரு கௌசிக்..” என்றவள் மெதுவாக ஜூஸைகே குடிக்க அவனின் கோபம் அதிகரித்தது..

“என்ன இன்னும் குடிக்காமல் என்ன பண்ற..” என்றவன் எரிந்துவிழ புன்னகைத்த கார்த்திகா, “வயிறு பசித்தால் இப்படித்தான் அடுத்தவங்க மேல எரிந்துவிழ தோன்றும்..” என்றவள் மற்றோரு பாதம் பாலை வாங்கி அவனின் கையில் திணித்தாள்..

அவனோ அவளை முறைக்க, “எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..” என்றவள் தன்னுடைய பணியைத் தொடர அவனும் பாதம் பாலைக் குடித்தான்.. கொஞ்சநேரம் முன்னே இருந்த கோபம் எல்லாம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது..

அவன் அமைதியாக நிற்பதைக் கவனித்த கார்த்திகா, “சிம்பிள் லாஜிக்.. இதுக்கு வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிற.. என்னைக்கும் நம்ம கடுப்பாக கூடாது..” என்றவள் முன்னே சென்றாள்..

“பசியறிந்து சாப்பாடு போட தாயில்ல கார்த்திகா.. நீதான் என்னோட முகம் பார்த்து என் பசியறிந்து எல்லாம் செய்யற.. நீ எனக்கு மனைவியாக வரணும் என்று ஆசைபடுகிறேன்.. என்னோட ஆசை நிறைவேறுமா..?” என்று கேட்டான்..

அவனின் பேச்சில் நின்று அவனின் முகம் பார்த்தவள், “நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்..” என்றவள் வேகமாக ஹோட்டலின் உள்ளே நுழைந்துவிட்டாள்.. அவள் சொன்ன விசயத்தின் அர்த்தம் புரியாது நின்ற கௌசிக் புரிந்த பிறகோ சந்தோஷத்தில் திளைத்தான்..

எல்லோரும் சென்று சாப்பிட அமர, “இன்னைக்கு என்னோட டிரீட்..” என்ற சுமிம்மா, “எல்லோரும் உங்களுக்கு விருப்பமானதை ஆர்டர் பண்ணுங்க..” என்றார்.. எல்லோரும் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்..

அப்பொழுது நித்திலாவிற்கு வயிற்றை பிரட்டிவிட, “அம்மா காலையில் குடித்த காபி சேராமல் வயிற்றை பிரட்டுதும்மா..” என்றவள் சொல்ல, “வாமிட் வர மாதிரி இருந்தால் சீக்கிரம் எழுந்து போ நித்தி..” என்றவரின் போன் அடித்தது..

அவரும் போனை எடுத்து பேசிவிட்டு ஒரு தெளிவான முடிவுடன் அதை மற்றவர்களிடம் பகிர்ந்த சுமிம்மாவின் மனதில் பாரம் ஏறியது..

அவள் வேகமாக எழுந்து சென்றவள் அங்கிருந்த வாஸ்பேசனில் வாமிட்டேடுக்க கையைக் கழுவிவிட்டு திரும்பிய நிரஞ்சன், “ஐயோ என்னாச்சு..” என்று அவளின் அருகில் வந்தான்..

“காலையில் குடித்த காபி சேரல..” என்றவள் மீண்டும் வாந்தியேடுக்க, “வா முதலில் ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணலாம்..” என்றவன் குறும்புடன் கண்சிமிட்ட அவளோ புரியாத பார்வை பார்த்தாள்..

“டேய் நீ என்ன சொல்லிட்டு இருக்கிற..” என்றவள் அவனிடம் விளக்கம் கேட்க, “இது அந்த வாந்திதானே..” என்றவன் வேண்டுமென்ற அவளைக் கிண்டல் செய்ய அவனை முறைத்தாள் நித்திலா..

“என்னடா மனசில் நினைச்சிட்டு இருக்கிற..” என்றவள் இடையில் கையூன்றி அவனை மிரட்ட, “எனக்கு பொண்ணு என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால் முதலில் பொண்ணுதான் என்று நினைக்கிறேன்.,.” என்றவன் ரசனையுடன் பதில் கொடுத்தான்..

அவனை திட்ட நினைத்தாலும் அவளால் அது முடியாமல் போகவே, “ச்சீ போடா..” என்று திரும்பிய நித்தியின் மனமோ அவன் சொன்னது போல ஒரு பெண் குழந்தை கற்பனை செய்து பார்க்க, “அப்போ பொண்ணுதான்..” என்று அவளின் காதோரம் கிசுகிசுத்தான்..

“ஆனாலும் கருப்பா உனக்கு ரொம்ப கொழுப்பு அதிகம்டா..” என்றவள் அவனிடம் இயல்பாக பேச அவளின் முகத்தைப் பார்த்தவன், “சும்மா சொன்னேன்.. திருமணம் ஆகும் வரை என்னோட விரல்நுனி கூட உன்மேல் படாது நிதி..” என்றவன் முன்னே சென்றான். அவனின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த நிதி அவனைப் பின் தொடர்ந்தாள்..

சுமிம்மாவின் மனதில் என்ன இருக்கிறது? அவரின் திட்டம் என்ன? அவர் அடுத்து என்ன செய்ய போகிறார்?

அத்தியாயம் – 11

எல்லோரும் இணைந்து ஒன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டு கிளம்பும் நேரத்தில், “எல்லோரும் சீக்கிரம் கிளம்புங்க.. நம்ம இன்னைக்கு கன்னியாகுமரி போகணும்..” என்றார் சுமிம்மா..

“என்ன சுமிம்மா அதுக்குள் ஊருக்கு போகணுமா?”  என்று அனிதா சிணுங்க, “எனக்கு ஊருக்குப் போற ஐடியாவே இல்ல..” என்றாள் கார்த்திகா..

“எல்லோரும் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோங்க.. நாளைக்கு நம்ம சங்கரிக்கு ரிசல்ட்.. பாவம் அவங்க வீட்டில் எல்லாம் தேடுவாங்க.. அதனால் எல்லோரும் இன்னைக்கு நைட் கிளம்பறோம்..” என்றனர்

அவரின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த கௌசிக், “அம்மா நான் சென்னை.. அதனால் உங்களோட வர முடியாது..” என்றவன் வருத்ததுடன் சொல்ல, “நான் தருமபுரி மா..” என்றாள் கார்த்திகா..

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்களும் எங்களோட கன்னியாகுமரி வாங்க.. என்னோட பொண்ணுக்கு திருமண ஏற்பாடு பண்ணிருக்கேன்.. திருமணம் முடிந்ததும் எல்லோரும் கிளம்புங்க..” என்றார் சுமிம்மா..

அன்று முழுவதும் கல்லணை, ஸ்ரீரங்கம் கோவில் எல்லாம் சுற்றிவிட்டு இரவு ரயிலுக்கு எல்லோரும் கன்னியாகுமரி ரயிலில் கிளம்பினர்..

யாருக்கும் யாரையும் விட்டு பிரியமனம் வராமல் எல்லோரும் ஏதோவொரு சிந்தனையில் அமைதியாக வர அதையெல்லாம் கவனித்த நித்திலாவின் பார்வை நிரஞ்சனின் மீது படிந்தது.. அவளும் அவளையே பார்க்க அவனின் நினைவுகள் அன்றைய நாளை நோக்கி பயணித்தது..

சுமிம்மாவின் பாடலை கேட்ட நித்திலா தன்னுடைய அழுகையை அடக்க முடியாமல் ஓட அவளின் பின்னாடி சென்ற நிரஞ்சன், “நிதி எங்கே போற.. ஏய் ஓடாதே நில்லு நித்தி..” என்றவன் அவளை துரத்திக்கொண்டு ஓடினான்..

அவளோ அழுகையை அடைக்க முடியாமல் அங்கிருந்த மரத்தின் மீது முகம் புதைத்து நின்று அழுக அவளின் பின்னோடு ஓடிவந்த நிரஞ்சன், “நித்தி எதுக்கு இப்பொழுது ஓடிவந்த..” என்று கேட்க அவளோ அழுதுகொண்டே இருந்தாள்..

“நித்தி உன்னைத்தான் கேட்கிறேன்.. அந்த பாட்டைக் கேட்டதும் நீ ஏன் ஓடிவந்த.. அந்த பாட்டுக்கும் உனக்கு என்ன சம்மந்தம் சொல்லுடி..” என்றவன் அவளை தன்பக்கம் திருப்பினான்..

அவள் கதறி அழுக, “ஏய் நிதி அழுகாதே..” என்றவன் கத்த அவளின் அழுகை நின்றுவிட திருதிருவென விழித்தவளை பார்த்து அவனுக்கு பாவமாக இருந்தாலும் கூட, “முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி..” என்றான்..

“அவங்க.. அவங்க..” என்றவளுக்கு அதற்கு மேல் சொல்ல முடியாமல் போக, “சுமிம்மா உன்னோட அம்மாதானே?” என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க இல்லையே தலையசைத்த நித்திலா, “என்னோட அம்மா அவங்க இல்ல..” என்றாள்..

அவள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்த நிரஞ்சன், “என்னடி சொல்ற..?” என்றவன் கேட்க, “நான் அவங்களோட வளர்ப்பு மகள்..” என்றாள் நித்திலா அழுகையூடே..

“நிதி பிளீஸ் அழுகாதே..” என்றவன் அவளை அணைத்துக்கொள்ள, “அப்பா இறந்தும் என்னை ஆசரமத்தில் சேர்த்துட்டாங்க.. அங்கிருந்து என்னை வீடுக்கு கூட்டிட்டு போனாங்க.. என்னை படிக்க வெச்சாங்க..” என்றவள் அவனின் மார்பில் சாய்த்து அழுதாள்..

இந்த மாதிரி ஒரு பாரம் அவளின் மனதில் இருக்குமென்று அவன் நினைக்கவே இல்லை.. அவள் கதறி அழுகவும் துடித்துப் போனான் நிரஞ்சன்.. அவளை எந்தவிதமான துன்பமும் இனி தீண்டாது என்னும் அளவிற்கு அவளை தோளோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் நிரஞ்சன்..

“உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சிருக்கு நிதி.. அப்புறம் எதற்கு அழுகிற..” என்றவனுக்கு அந்த சந்தேகம் எழுந்ததும், “அப்புறம் எதற்கு நீங்க ஓடிவந்தீங்க..” என்று கேட்க அன்று வீட்டில் நடந்த விஷயத்தை அவனிடம் கூறினாள்..

காலைபொழுதில் வீடு அமைதியாக இருப்பதற்கு பதிலாக கலையரசன் ஊரே கேட்கும் அளவிற்கு கத்திக் கொண்டிருந்த சத்தம்கேட்டு அவள் ஹாலுக்கு வந்து பார்க்கும் பொழுது மாலதி, சுமித்ரா இருவரும் ஹாலில் நின்றிருந்தனர்..

அண்ணியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷமாக இருக்க சுமிம்மா இறுகிப்போய் நின்றிருக்க, “நாங்க தனிக்குடித்தனம் போக வேண்டாம் என்று சொல்ல நீங்க யாரு..?” என்றவன் கேட்ட அண்ணனை விநோதமாக நித்தி விநோதமாகப் பார்த்தாள்..

“நான் தனிக்குடித்தனம் போகவேண்டாம் என்று சொல்லல.. இப்பொழுது தனிக்குடித்தனம் எதுக்கு என்றுதான் கேட்கிறேன்..” என்றவர் பேச்சைத் தொடங்கும் முன்னே இடைமறித்தாள் மாலதி..

“நான் என்னோட வீட்டில் இருக்கும் யாரிடமும் பேசக்கூடாது.. நான் இவங்க சொன்ன வேலை எல்லாம் செய்துவிட்டு அப்படியே பெட்டி பாம்பாக அமைதியாக இருக்கணுமா..?” என்று எகிறினாள்..

“உன்னோட அம்மா நல்லது சொல்லிக் கொடுக்காமல் உன்னை வளர்த்தி வெச்சிருக்காங்க.. அது உனக்கு புரியல.. இந்த இலட்சனத்தில் தனிக்குடித்தனம் போகணுமோ..” என்றவர் மகனின் பக்கம் திரும்பி, “டேய் அவள் சுயநலமாக இருக்கிற..” என்றவர் மகனுக்கு உண்மையை உணர்த்த நினைத்தார்..

“அம்மா போதும் நிறுத்துங்க.. அவள் சுயநலமாக இருப்பது எனக்கு தவறாக தெரியல.. அப்போ அவளோட குடும்பத்தை யார் பார்த்துக்குவாங்க.. அதனால் நாங்க இவங்க அம்மா வீட்டிற்கு பக்கத்தில் வீடு பார்த்து தனி குடித்தனம் போறோம்..” என்றான் மகன்..

“அவளோட குணம் தெரியாமல் நீ என்னடா பேசற.. அவளை கெடுப்பதே அவளோட அம்மாதான்.. அவளுக்கு எந்த வேலையும் செய்ய தெரியாது.. உனக்கு ஒருநாள் சமையல் செய்து போட கூட அவளால் முடியாது..” என்றவர் மருமகளை பற்றி சொல்ல,

“பாருங்க உங்க அம்மா என்னை எப்படி மட்டம் தட்றாங்க.. ஏன் நான் சமைத்து நீங்க சாப்பிடவே இல்ல.. நான்தான் இங்கே மூன்று நேரமும் சமைக்கிறேன்.. உங்கம்மா என்னை வேலை வாங்கிட்டு எப்படி பேசறாங்க பாருங்க..” என்றவள் கலையரசனை ஏற்றிவிட்டாள்..

“உங்களுக்கு இஷ்டம் என்றால் நீங்க இங்கே இருங்கம்மா இல்ல வீட்டைவிட்டு வெளியே போங்க.. இவளை வீணாக தொல்லை செய்யாதீங்க..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்..

அவன் பேசியதை எல்லாம் கேட்ட சுமிம்மா சிலையென நின்றிருக்க நித்திலா அவரின் அருகில் சென்று, “அம்மா..” என்று தோளைத் தொட்டாள்..

“நித்தி என்னைப் பார்த்து உங்க அண்ணா என்ன சொல்றான் பாரு.. நான் வீட்டைவிட்டு வெளியே போகணுமாம்.. மூன்று நேரமும் யாருக்கு என்ன வேண்டும் என்று அடுப்படியில் எல்லா வேலையும் முடித்து வைத்துவிட்டு டைமிற்கு ஆபீஸ் போறேன்..” என்ற குரல் கரகரப்புடன் ஒலித்தது..

“சும்மா உட்கார்ந்து சாப்பாடு போட்டு தின்றுவிட்டு வெட்டியாக அவங்க அம்மாகூட பேசிட்டு இருக்கும் இவளை நான் வேலை வாங்கிறேன் என்று உங்க அண்ணா தனிக்குடித்தனம் போகிறானாம்.. நல்லதுக்கு காலமே இல்ல..” என்றவர் தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றார்..

அப்பொழுதுதான் நித்தி, ‘அம்மாவோட மனசில் எத்தனை ஆசை இருக்கும்..? அதையெல்லாம் நம்ம நிறைவேற்றி வைக்கணும்..’ என்று நினைத்த நித்தி அதற்கு மறுநாள் வீட்டைவிட்டு ஓடிச்செல்ல நினைத்தாள்..

அந்த நேரத்தில் மனதளவில் கயப்பட்டிருந்த சுமிம்மா அவளுடன் வீட்டைவிட்டு கிளம்பினார்.. இருவரும் வீட்டைவிட்டு ஓடிவர தாய் செய்யும் ஒவ்வொரு சேட்டையை ரசித்து மகிழ்ந்தாள் மகள்..!

தாய் ஒரு குழந்தையாக மாறிவிட தன்னுடைய அன்னைக்கு தானே தாயாக மாறினாள் நித்திலா.. தன்னுடைய தாயின் ஆசைகளை நிறைவேற்ற நினைத்த நித்தியின் உண்மையான ஆசைகள் இந்த பயணத்தில் நிறைவேறியது என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை..!

அவள் சொல்லி முடித்ததும், “உங்க அண்ணா என்ன லூசா..?” என்று கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, “எனக்கே அந்த சந்தேகம் இருக்கு..” அவள் சொல்லி முடிக்க, “இந்நேரம் வரை அழுதது நீதானா..?” என்றவன் அவளின் நெற்றியில் முட்டி சிரித்தான்..

“உன்னோட அம்மா மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க.. யார் உண்மை சொன்னாங்க யார் ஏமாத்திட்டு இருந்தாங்க என்று உன்னோட அண்ணனுக்கு இந்நேரம் உண்மை புரிந்திருக்கும்” என்றவன் சொல்ல நித்தி அமைதியாக இருந்தாள்..

“நிதி..” என்றவன் அழைக்க அவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்க்க, “உனக்கு நான் இருக்கேன்.. சுமிம்மா இருக்காங்க.. மற்ற விஷயம் எதுப்பற்றியும் நீ இனிமேல் யோசிக்காதே..” என்று அவளை சமாதானம் செய்தான்..

அவள் நிமிர்ந்து நிரஞ்சனின் முகம் பார்த்தவள், “என்னோட அம்மா இப்படி செய்வது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா..?” என்று கேட்க, “எனக்கு அவங்க மேல கோபம் இல்ல.. நிஜத்தை சொல்லணும் என்றால் நானும் இதையெல்லாம் ரசித்தேன்..” என்றான்..

அவள் அவனையே இமைக்காமல் பார்க்க, “பேபி என்னோட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லல..” என்றவன் அவளின் கன்னத்தை வருட, “எனக்கு அம்மா ஆல்ரெடி மாப்பிள்ளை பார்த்துட்டாங்க..” என்றவள் தலையைக்குனிந்து கொண்டாள்..

“மாப்பிள்ளை நல்ல இருக்கிறேனா..?” என்றவன் குறும்புடன் கண்சிமிட்ட, “நீங்க என்ன சொல்றீங்க..” அவள் புரியாமல் கேட்க, “நான்தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை.. ஊருக்குப் போனதும் என்னோட அம்மா, அப்பா வந்து உன்னோட வீட்டில் சம்மந்தம் பேசுவாங்க..” என்றவன் புன்னகைத்தான்..

“நிஜமாவா..” என்றவள் நம்பாமல் கேட்க, “நிஜமா வா போலாம்.. நம்மள எல்லோரும் தேடுவாங்க..” என்று அவளை அழைத்துச் சென்றான்.. அந்த நினைவில் இருந்து நித்திலா வெளியே வர சுமிம்மாவின் செல் அடித்தது..

“ஹலோ..” என்று சுமிம்மா சொல்ல, “அம்மா நான் கலையரசன் பேசறேன்..” என்றவன் சொல்ல, “நீ எதுக்கு போன் பண்ணின..” என்றவர் கேட்க மற்றவர்களின் கவனம் எல்லாம் அவரின் பக்கம் திரும்பியது..

“அம்மா நான் பேசியது தவறுதான்.. அதற்காக என்னை மன்னிச்சிருங்க.. நீங்க எங்கிருந்தாலும் வீட்டிற்கு வந்திருங்க அம்மா..” என்றவன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, “நான் அங்கேதான் வருகிறேன்..” என்றார் சுமிம்மா..

“அம்மா நான் மாப்பிள்ளை வீட்டில் பேசிட்டேன்.. அவங்களுக்கு நம்ம நித்தியை ரொம்ப பிடிச்சிருக்காம்..” என்றவன் சொல்ல, “ம்ம் தெரியும்..” என்றவர் சொல்ல, “அம்மா என்னோட பேசுங்க அம்மா..” என்றவன் குரல் தாழ்ந்து வந்தது..

“நான் உன்னோட பழைய அம்மா சுமித்ரா இல்லப்பா.. நான் சுமித்ரா.. இப்பொழுது நான் வர காரணமே என்னோட மகளின் திருமணம் மட்டும்தான்.. அது முடிந்தும் நான் அங்கிருந்து கிளம்பிருவேன்.. என்னை தடுக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல..” என்றவர் அவனின் பதிலை எதிர்ப்பார்க்காமல் போனை வைத்தார்..

அவர்கள் பேசுவதைக் கவனித்த சசிதரன், “அம்மா நீங்க ஏன் வீட்டைவிட்டு வந்தீங்க.. உங்களோட மகள் எங்கே இருக்காங்க..?” என்று கேட்டான்..

சுமிம்மா அமைதியாக இருக்க, “அம்மா பிளீஸ் நீங்க சிரித்துதான் நாங்க பார்த்திருக்கோம்.. இப்போ ஏதோ சரியில்லாத மாதிரி தெரியுது..” என்றாள் வித்யா..

“விளையாட வேண்டிய வயதில வேலையைத் தேடி ஓடினேன்.. வாழ வேண்டிய வயதில கட்டிய கணவனை இழந்து விதவையாக நின்றேன்..” என்றவர் தன்னுடைய மனதில் மறைந்திருந்த சோகத்தை கூறினார்..

அதைகேட்ட எல்லோரின் மனமும் கனக்க, “எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும்.. என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று இரண்டு குழந்தையைத் தத்துகேடுத்து வளர்த்தேன்..” என்றவர் வருத்ததுடன் கூறினார்..

“அம்மா அண்ணாவும் உங்களோட மகன் இல்லையா..?” என்று அதிர்ச்சியுடன் நித்திலா கேட்க, “என்னக்கா இதுக்கு எல்லாம் அதிர்ச்சி ஆகறீங்க..?” என்று கேட்டாள் அனிதா..

அவளை அணைத்துக்கொண்ட சுமிம்மா, “உன்னை மாதிரியே அவனையும் ஒரு ஆசரமத்தில் தத்துக்கு எடுத்தேன் நித்தி..” என்றவர் சொல்ல, “என்னது நித்திலா உங்களோட மகளா..?” மற்றவர்கள் அதிர நிரஞ்சன் மட்டும் மெளனமாக புன்னகைத்தான்..

அத்தியாயம் – 12

அவர்களை அதிர வைத்த சுமிம்மா அடுத்த நொடியே, “ஏன் நித்தியைப் பார்த்தால் என்னோட மகள் மாதிரி தெரியலையா..?” என்றவர் சிரித்துக்கொண்டே கேட்க, “நிஜமாவே தெரியல சுமிம்மா..” என்றாள் அனிதா பாவமாக..!

அவளின் பேச்சில் அவருக்கு சிரிப்பு வந்துவிட, “நித்தி எனக்காக அமைதியாக இருந்தா.. அவளோட வாலுத்தனம் எல்லாம் வீட்டிற்குள் தான்..” என்ற சுமிம்மா மகளைத் தோளோடு அணைத்துக் கொண்டார்..

“சுமிம்மா உங்களோட இடத்தில் வேற யார் இருந்தாலும் இப்படி இருக்க மாட்டாங்க..” என்றவன் சொல்ல, “யார் எப்படியோ எனக்கு தெரியாது நான் இப்படித்தான்.” என்றவர் புன்னகையுடன்..

“உங்களுக்கு குழந்தை இல்லை என்றுதானே அந்த பாட்டு பாடி இருக்கீங்க..” என்று மகேஷ் கேட்க, “எனக்கு குழந்தை இல்லை என்று யார் சொன்னாது.. எனக்கு மொத்தம் பத்து பிள்ளைகள்..” என்றவர் குறும்புடன் விழிகளை சுழற்றினார்..

அதிலேயே அவர்களுக்கு அர்த்தம் புரிந்துவிட, “நாங்களும் உங்க பிள்ளைகளா சுமிம்மா..” என்று எல்லோரும் சேர்ந்து கேட்க, “ஆமா.. என்னோட பிள்ளைகள்தான்..” என்றவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்..

“நீங்க விவரம் தெரியாத வயசில் எங்களோட விரல் பிடிச்சு நடக்க கற்றுக்கொடுக்கிறோம்.. அதே மாதிரி வயதான காலத்தில் நீங்க எங்களோட ஆசையை புரிந்து அதுக்கு ஏற்ற மாதிரி நடக்கக்கூடாதா..?” என்றவர் கேட்ட மற்றவர்கள் அமைதியாக இருந்தனர்..

“ஆனால் என்னோட பிள்ளைகள் ஒரு இடத்தில் கூட என்னை கேலியோ கிண்டலோ செய்யாம என்னோட கைகோர்த்து சிரித்து பேசி விளையாடி என்னால இந்த நாளை மறக்கவே முடியாது..” என்றவர் மகிழ்ச்சியுடன் கூறினார்..

“அதெல்லாம் சரிம்மா மாப்பிள்ளை யாரு என்று நீங்க சொல்லவே இல்ல..” என்று சசிதரன் கேட்க, “நானே இன்னும் என்னோட மருமகனைப் பார்க்கல..” என்றவர் புன்னகையுடன் கூறினார்..

“உங்களோட மகள் பார்த்துடாங்களா..?” என்று கார்த்திகா நித்தியைக் கிண்டல் செய்ய, “அம்மா எனக்கு போட்டோ காட்டவே இல்ல..” என்றவள் புன்னகைக்க, ‘போட்டோ வேணுமா..?’ என்றவன் சைகை செய்தான்..

அவள் தலையைக் குனிந்து கொள்ள, “இன்னும் ஒரு நிமிஷம் தான் இருக்கு..” என்று சங்கரி சொல்ல, “ஆமா நானே மறந்துட்டேன் பாரு..” என்ற அனிதா தன்னுடைய பையில் இருந்து எதையோ எடுக்க குனிந்தாள்..

“இருவரும் என்னவோ சொல்றீங்க.. ஆனால் என்ன சொல்றீங்க என்று புரியல..” என்று மகேஷ் புலம்பிட, “ஒரு நிமிஷம் பொறுங்க பாஸ் எல்லாம் புரியும்..” என்றாள் கார்த்திகா..

அனிதா கவரில் இருந்து கேக்கை எடுத்து சீட்டில் வைக்க சங்கரி மெழுகுவர்த்தி வைக்க கார்த்திகாவும், வித்யாவும் சேர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றினார்..

ஆண்கள் நால்வரும் கேள்வியுடன் அவர்களைப் பார்க்க சுமிம்மாவோ, “என்ன நடக்குது இங்கே..?” என்று கேட்க, “ஹப்பாடா பழைய சுமிம்மா திரும்ப வந்துட்டாங்க..” என்றாள் கார்த்திகா..

“அதை நான் சொல்றேன்..” என்ற சங்கரி நிரஞ்சனின் காதில் ஏதோ சொல்ல அவன் அதை மற்றவர்களிடம் கூறினான்.. சுமிம்மாவை தவிர மற்ற எல்லோருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது..

“மணி பன்னிரண்டு..” என்ற சங்கரியின் குரல்கேட்டு ஒருவன் திரும்பிப் பார்த்தான்..  அவனையெல்லாம் அவள் கவனிக்கவே இல்லை..

“சுமிம்மா கேக் கட் பண்ணுங்க” என்றவள் கத்தியை அவரிடம் கொடுக்க, “எதுக்கு என்று எல்லோரும் முதலில் சொல்லுங்க” என்றவர் ஆர்வமாக கேட்டார்..

“ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீ..” என்று அனிதா குஷியாக சொல்ல, “ஹாப்பி மதர்ஸ் டே சுமிம்மா..” என்று எல்லோரும் கோரஸாக சொல்ல, “இன்னைக்கு மதர்ஸ் டேவா..” என்றவர் கேக் கட் பண்ணி முதலில் சங்கரிக்கு ஊட்டினார்..

இவர்களின் சத்தம்கேட்டு பக்கத்து கம்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் கூட வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றனர்.. அடுத்து வரிசையாக எல்லோருக்கும் கேக்கை ஊட்டினார் சுமிம்மா..

“நானும் எல்லோருக்கும் ஒவ்வொரு பொருள் வாங்கியிருக்கேன்..” என்றவர் தன்னுடைய பேக்கை திறந்து பார்சலை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தார்.. எல்லோரும் ஒரே நேரத்தில் ஆர்வத்துடன் பார்சலைப் பிரித்துப் பார்த்தனர்..

பெண்களுக்கு பட்டுபுடவை ஒரே மாதிரி, ஆண்களுக்கு பட்டுவேட்டி சட்டை.. அதுபோக வித்யாவிற்கு நாவல்கள், அனிதாவிற்கு ஒரு செல், கார்த்திகாவிற்கு அழகான ரோஜா பூச்செடி, அதேபோல சசிதரனுக்கு ஒரு பேனா, மகேஷ்க்கு ஒரு மேமரிகார்ட், கௌசிக் ஒரு பெயிண்டிங் எல்லாம் இருந்தது..

“என்னம்மா இதெல்லாம்..” என்றவர்கள் கேட்க, “உனக்கு நாவல் படிக்க பிடிக்கும் என்று நாவல் வாங்கினேன்.. ஆனால் அதை எழுத ஒரு ஆள் வேணும் என்று சசிக்கு பேனா..” என்றவர் புன்னகைக்க, ‘ஐயோ மாட்டிகிட்டோமே..’ என்று இருவரும் நாக்கைக் கடித்தனர்..

“அனிதா உனக்கு சாங் கேட்க பிடிக்கும் என்று செல்வாங்கிக் கொடுத்தேன்.. மகேஷ் நீ உன்னோட மெமரியை அனிக்கிட்ட கொடுத்துவிட்டதாக ஒரு தகவல்.. அதனால உனக்கு மேமரிகார்ட் வாங்கினேன்..” என்றவர் சொல்ல இருவரும் தலையைக் குனிந்து கொண்டனர்..

“கார்த்திகா நீ நெதர்லாந்து போய் அந்த ரோஜாவைப் பார்க்கும் வரை இந்த ரோஜா செடியை வளர்க்க பாரு.. அப்போதான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மனசில் இருந்துட்டே இருக்கும்..” என்றவர் கௌசிக் பக்கம் திரும்ப, “அம்மா இது உங்களோட பெயிண்டிங்.. என்னோட அம்மாவைப் பார்த்த மாதிரியே இருக்கு..” என்றவன் சந்தோஷத்தில் கூறினான்..

“சுமிம்மா கண்ணில் மண்ணைத் தூவ யாரால் முடியும்..?” என்றவர் சுடிதாரின் காலரைத் தூக்கிவிட நிரஞ்சனும், நித்திலாவும் சிரிக்க, “சங்கரிக்கு என்னம்மா கிப்ட்..” என்று கேட்க, “அவளுக்கு நாளை தருகிறேன்..” என்றார்..

“நிரஞ்சனுக்கும் – நித்திக்கும் நீங்க எந்த கிப்ட்யும் கொடுக்கல..” என்றவர்கள் எல்லோரும் கேட்க, “ரஞ்சன் தம்பி உங்களுக்கு கிபிட் கிடையாதுங்க..” என்றவர் தொடர்ந்து, “உனக்கும் கிப்ட் கிடையாது..” என்று மகளிடம் கூறியவர் மெளனமாக புன்னகைத்தார்..

“அதெல்லாம் முடியாது.. இவங்களோட கிபிட் காட்டுங்க..” என்று அனிதா அவரிடம் அடம்பிடிக்க, “நாளைக்கு ஒரு நாள் மட்டும் பொறுத்துக்கோ குட்டிமா..” என்றார் சுமிம்மா..

அவர்களும் சரியென தலையசைக்க எல்லோரும் உறங்க செல்ல சங்கரி மட்டும் உறங்காமல் விடியும் வரை விழித்திருந்தாள்.. அவளின் பயமரிந்த சுமிம்மா அவளின் அருகில் இருக்க மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது..

அவன் எழுந்ததும் முதலில் பார்த்தது சங்கரியின் முகத்தை மட்டுமே.. அன்று ரயில் ரொம்பவே தாமதமாகவே செல்ல மணி பத்து ஆனதும் எல்லோரும் சங்கரியிடம் இருந்து நம்பரை வாங்கி ரிசல்ட் பார்த்தனர்.. சங்கரியின் பயம் அதிகரிக்க அவளோ பதட்டத்துடன் அமர்ந்திருந்தாள்..

யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் டவர் கிடைக்காமல் போக, “என்ன டவர் கிடைக்கவே இல்ல..ரிசல்ட் வேற பார்க்கணும்..” என்று எல்லோரும் புலம்ப, “அவங்க தான் இந்தமுறை ஸ்டேட் பர்ஸ்ட்..!” என்றான் அவன்..

“நிஜமாவா..?” என்று சங்கரி துள்ளிக்குதிக்க, “மார்க் என்னப்பா..” என்று சுமிம்மா கேட்க, “1197” என்றான் அவன்..[நான் இப்பொழுது சிஸ்டம் படி சொல்லல.. யாரும் என்னிடம் சண்டைக்கு வரப்பிடாது..]

அவளின் மார்க்கேட்டு எல்லோரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல, “இந்த உனக்கான பரிசு..” என்று சுமிம்மா அவளின் கையில் பாஸ்புக்கை கொடுக்க, “இது எதுக்கும்மா..” என்று கேட்டாள் சங்கரி..

“உன்னோட படிப்பிற்கு என்று 5௦,௦௦௦ ரூபாய் பேங்கில் டெபாசிட் பண்ணிருக்கேன்..” என்றவர் சொல்லி மற்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திட, “அம்மா நான் இதை எதிர்பார்க்கல..” என்று திகைப்புடன் கோரசாக கூறினார்..

அவரிடம் இருந்து யாருமே இப்படியொரு செயலை எதிர்பார்க்கவில்லை.. நீ என்ன மற்றவருக்கு தருகிறாயோ அது உனக்கே திரும்ப கிடக்கும் அதைவிட இரட்டிப்பாக..! அதற்கு சிறந்த உதாரணம் சுமிம்மா..!

அவர்கள் பாசத்தை வாரி வழங்கிட, தன்னுடைய பிள்ளைக்கு என்ன செய்வாரோ அதை அவர்களுக்கும் சேர்த்து செய்தார்.. அதிலிருந்தே அவரின் பாசம் எத்தகையது என்று மற்றவர்கள் உணர்ந்தனர்..

அதற்குள் ரயில் கன்னியாகுமரி வந்துவிட எல்லோரும் வண்டியைவிட்டு கீழிறங்க செல்ல, “ஒரு நிமிஷம்..”என்றவன் அவளை வழிமறிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் சங்கரி.. இப்பொழுதுதான் காலேஜ் முடித்துவிட்டு வந்தவன் போல இருந்தது அவனின் தோற்றம்..!

அவனின் தோற்றம் வைத்தே வயதை அவள் கணக்கிட்ட அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தவன், “என்னோட பெயர் பிரவீன்.. எனக்கு உன்னோட துருதுருப்பு ரொம்ப பிடிச்சிருக்கு.. சீக்கிரமே உன்னைத் தேடி வருவேன்..” என்றவன் இமைக்கும் நொடியில் அவனின் மனதை சொல்லிவிட்டான்..

அவள் திகைத்து நிற்க, “உன்னை எல்லோரும் வெளியே எதிர்பார்த்துட்டு இருக்கிறாங்க..” என்றவன் சொல்ல அவளும் மெல்ல ரயிலைவிட்டு கீழிறங்கிச் செல்ல, ‘அவன் அவளை மீண்டும் சந்திக்க வாய்ப்பு இருக்குமா..?’ அவளுக்கு தெரியவில்லை.. ஆனாலும் மனதில் ஒரு படப்படப்பு..!

அத்தியாயம் – 13

அதன்பிறகு தன்னுடைய குடும்பத்தினரைப் பார்த்தவள் அவனை மறந்துவிட, சுமிம்மா எல்லோரின் வீட்டிலும் பேசி அவர்களை எல்லாம் சமாதானம் செய்து வைத்திருந்ததால் அவர்களின் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை..!

அவர்கள் எல்லோருமே அவரவர் குடும்பத்தை அறிமுகப்படுத்த நிரஞ்சன், “அம்மா நான் கிளம்புகிறேன்..” என்று அவர்களிடமிருந்து விடை பெற்றவன் காதலியிடம் கண்ணசைவில் விடைபெற்று காரில் கிளம்பினான்..

அவன் வாசலில் கார் நிறுத்தும் பொழுதே, “ஓஹோ அனைத்து ஏற்பாடுகளும் ரெடியாக இருக்கு போலவே..” என்று ஆர்வத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்..

வீட்டின் வாசலில் நிழலாட கண்ட ரவிவர்மா, “வாப்பா ரஞ்சன்.. என்ன ஊர் உலகம் எல்லாம் சுத்திட்டு வந்துவிட்டாயா..?” என்று குறும்புடன் கேட்க தாயை முறைத்தான் மகன்..

அவனின் பார்வை சென்ற திசையைக் கவனித்தவர், “உங்க அம்மா ஒண்ணும் சொல்லல..” என்று சொல்ல, “ஸாரிப்பா..” என்றவன் முணுமுணுத்தார்..

“எங்களுக்கு பிடிச்ச பெண்ணாக பார்த்து அனைத்து ஏற்பாடுகளும் முடித்துவிட்டோம்.. உனக்கு திருமணத்தில் சம்மதம்தானே” அவர் அவனின் விருப்பம் கேட்க மீண்டும் தாயைப் பார்த்தான் மகன்..

‘அந்த பொண்ணுதான்..’ என்றவர் சைகையில் சொல்ல, “அதுதானே நானும் சொல்கிறேன்.. நீ என்ன தனியாக அவனுக்கு சைகையில் சொல்லிட்டு இருக்கிற..” என்றவர் மனைவியை அதட்டினார்..

அனைத்தையும் கவனித்த மகனோ, “எனக்கு டபிள் ஓகே அப்பா..” என்றவன் அறைக்கு சென்றுவிட்டான்.. அடுத்தடுத்த வேலைகள் மும்பரமாக நடந்தது..

கார்த்திகா, கௌசிக் நித்தி மூவரை அழைத்துக்கொண்டு சுமிம்மா வீட்டிற்கு சென்றார்..அவர் வீட்டிற்கு செல்லும் கலையரசன் வெளியே சென்றிருக்க வீடே அமைதியாக இருந்தது..

“என்ன வீட்டில் யாரையும் காணோம்..” என்ற சுமிம்மா வீட்டின் உள்ளே செல்ல மாலதி சமையறையின் உள்ளிருந்து பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றார் சுமிம்மா..

“அம்மா போதும் நிறுத்து.. பொண்ணுங்க புகுந்த வீட்டில் கணவனோட சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைக்கும் தாயைப் பார்த்திருக்கிறேன்.. நீயெல்லாம் என்ன ஜென்மம்.. உன்னோட மகன் மட்டும் சந்தோஷமாக இருக்கணும்..” என்றவள் தாயுடன் பேசிகொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த சுமிம்மாவை அவள் கவனிக்க மறந்தாள்..

“எனக்கு என்னோட குடும்பம் முக்கியம்.. எனக்கு எங்க அத்தையும், என்னோட புருஷன் மட்டும் போதும்.. காதலிச்சு கல்யாணம் பண்ணிய உன்னோட பொண்ணு இறந்துட்டான்னு நினைச்சுக்கோ.. இனிமேல் எனக்கு போன் பண்ணாதே.. முதலில் போனை வை.. அவருக்கு நான் சாப்பாடு பண்ணனும்..” என்றவள் போனை வைத்துவிட்டு நிமிர்ந்தவள் அதிர்ந்தாள்..

அவளின் எதிரே சுமிம்மா நின்றிருக்க அவளின் பின்னோடு கார்த்திகா, நித்திலா, கௌசிக் மூவரும் நின்றிருக்க, “அத்தை வாங்க..” என்றவள் புன்னகையுடன் வரவேற்க, “யாரும்மா உன்னோட அம்மாவா..?” என்று கேட்டார் சுமிம்மா..

“அமாங்க அத்த.. அவங்களுக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. அவங்க மகன் நல்ல வாழ என்னை வாழாவெட்டியாக்க பார்த்தாங்க.. அதன் அவங்களே வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டேன்..” என்றாள் மருமகள் எரிச்சலுடன் சொல்ல, “எனக்கு புரியல மாலதி..” என்றவர் அவளை புரியாத பார்வை பார்த்தார்..

“என்னோட அண்ணியோட அண்ணாவுக்கு என்னை கட்டிவைக்க எங்கம்மா போட்ட பிளான் அத்தை இது.. நான் உங்களைவிட்டு பிரிஞ்சி போயிட்டா.. அப்புறம் நான் அவங்களோட பேச்சை கேட்டுதானே ஆகணும்.. அதனால அவங்க சொல்றது எல்லாம் கேட்டு நான் அவரை டைவர்ஸ் பண்ணிட்டு அவங்க கைகாட்டு மாப்பிள்ளையை கட்டிக்கொள்வேன் என்று எதிர்பார்த்திருக்காங்க..” என்று  உண்மையை எல்லாம் சொல்விட்டாள் மாலதி..

“நான்தான் அத்தை உங்களை புரிஞ்சிக்கவே இல்ல.. நீங்க இல்லாட்டி ஒண்ணுமே பண்ண முடியாது என்று இந்த பத்து நாளில் நான் நல்ல உணர்ந்துவிட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க அத்தை..” என்றவள் அவரிடம் மன்னிப்பு கேட்டாள்..

ஒரு புன்னகையுடன் அவளின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சுமிம்மா, “மாமியார் எல்லாம் மருமகள் என்ற நிலையைத் தாண்டிதான் வருகிறோம்.. ஆனால் சிலர் அதை மறந்துவிட்டு இருக்கிறாங்க.. நான் அப்படி இல்ல.. என்னோட அத்தை என்னை ரொம்ப நல்ல பார்த்துகிட்டாங்க.. அதனால் நான் உன்னை நல்ல பார்த்துக்கொள்வேன்..” என்றவர் அவளை மன்னித்தார்..

இது அனைத்து நடந்து முடிந்த பிறகு அனைவரும் அவரவர் வேலைகளை கவனித்தனர்.. அதன்பிறகு அந்த வீடே கல்யாண பரபரப்புடன் செயல்பட நித்தியோ நிரஞ்சன் வாங்கித்தந்த தலையாட்டி பொம்மையுடன் அமர்ந்திருந்தாள்..

அவளின் அறைக்குள் நுழைந்த சுமிம்மா, “என்னடி நித்தி உனக்கு ஏற்பாடு எல்லாம் பிடிச்சிருக்கா..” என்று அவளின் விருப்பத்தைக் கேட்டார்..

“அம்மா எப்பொழுது இதெல்லாம் பிளான் பண்ணீங்க..” என்றவள் புன்னகையுடன் கேட்க, “நான் உன்னோட அம்மா.. அது ஞாபகம் இருக்கா உனக்கு..” என்றவர் குறும்புடன் கேட்டார்..

“நீ அம்மா இல்ல.. சரியான கேடி பயப்புள்ள.. என்னவோ பிளான் பண்ணிருக்கிற.. அது என்னவென்று தான் தெரியல..” என்றவளும் விளையாட்டாகவே

“யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..” என்றவர் பாடிக்கொண்டே அவளின் அறையைவிட்டு வெளியே சென்றார்..

அடுத்த நாளே பட்டாளம் எல்லாம் ஒன்று கூடிவிட, “நித்தி அக்காவிற்கு யார் மாப்பிள்ளை என்று இந்த அம்மா சொல்லவே மாட்டேங்கிறாங்க..” என்று சினுங்கினாள் சங்கரி..

“அதெல்லாம் அவர் வரும் பொழுது நீயே பார்த்து தெரிந்துகொள்..” என்றாள் வித்யா..

“அதெல்லாம் என்னால் முடியாது..” என்று அனிதா அடம்பிடிக்க, “அனிதா எனக்கு கோபம் வராது..” என்று அவள் புன்னகையுடன் சொல்ல அவளும் அமைதியாகிவிட்டாள்..

வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, “மாப்பிள்ளை  வீட்டில் இருந்து வந்துடாங்க அம்மா..” என்ற கலையரசன் வாசலை நோக்கிச் சென்றான்..அவனை பின் தொடந்தது பெரிய பட்டாளம்..

நிரஞ்சன் நித்திலாவைப் பெண்கேட்டு வந்ததைப் பார்த்து, “நீங்களா மாப்பிள்ளை..” என்று அதிர்ச்சியுடன் கேட்ட அனிதா, “சுமிம்மா..” என்று வீடே அதிரும் வண்ணம் கத்திவிட்டாள்..

அவளின் குரல்கேட்டு சுமிம்மா அமைதியின் மறுஉருவமாக வந்து நிற்க, “சத்தியமா நீங்க கொடுக்கும் ஒவ்வொரு ஷாக்கையும் என்னால தாங்க முடியல சுமிம்மா..” என்றவளை புரியாத பார்வை பார்த்தனர் மற்றவர்கள்..

“மாப்பிள்ளை முன்னாடி டேன்ஸ் வேற..” என்று சுமிம்மாவைக் கலாய்த்தாள் வித்யா..

“ஐயோ சொல்லாதடி எனக்கு வெக்க வெக்கமாக வருது..” என்றவர் புன்னகையுடன்

“செய்யறது எல்லாம் கிரிமினல் வேலை.. இதில் உங்களுக்கு வெக்கம் வேற வருதோ..” என்று கேட்டான் சசிதரன்..

“நான் டேன்ஸ் ஆடும் பொழுது நிரஞ்சன் அங்கே இல்ல..” என்றவர் சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்..

நிச்சயதார்த்தம் முடிந்த பதினைந்து நாளில் கன்னியாகுமரியில் இருக்கும் பெரிய மண்டபத்தில் நிரஞ்சன் – நித்திலாவின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது..

குறிப்பிட்ட நல்லநாளில் ஊரறிய நித்திலாவின் கழுத்தில் தாலி கட்டி அவளை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டான் நிரஞ்சன்..!

அவர்களின் திருமணத்தை மனநிறைவுடன் பார்த்தார் சுமிம்மா.. மகன் – மருமகளின் மனம் மாற்றம், நித்தியின் திருமணம் எல்லாம் அவருக்கு ஒரு நிறைவைத் தந்துவிட ஆனந்தத்தில் அவரின் கண்கள் இரண்டும் கலங்கியது..

திருமணம் முடிந்து அவர்களின் பட்டாளம் எல்லாம் பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பிச் செல்ல மண்டபத்தின் வாசலுக்கு செல்ல மணமக்களும் வாசல்வரை சென்றனர்..

அப்பொழுது கார் வந்து நிற்க, “இந்த கார் எதற்கு..?” என்று மகேஷ் புரியாமல் கேட்க, “எல்லோரும் நகருங்க நகருங்க..” என்று வேகமாக தன்னுடைய பேக்குடன் வெளியே வந்தார் சுமிம்மா..

அவர் சுடிதாரில் தலையில் ஒரு தொப்பியுடன் வந்து நிற்பதைப் பார்த்து, “அத்தை எங்க கிளம்பீட்டிங்க..” என்று நிரஞ்சன் அவரைக் கேள்வி கேட்டான்..

“நிரஞ்சன் உனக்கு ஒரு பரிசாக என்னோட மகளை கொடுத்துவிட்டேன்..” என்றவர் மகளின் பக்கம் திரும்பினார்..

“உன்னோட காதலுக்கு இவர்தான் பரிசு.. இவரோட நீ நிறைய நாள் வாழனும்..” என்று மகளிடம் அவர் சொல்ல, “அம்மா நீங்க எங்களோட இருங்க..” என்றான் கலையரசன்..

“உனக்கு அந்த தகுதி இல்ல..” என்று ஒரு வரியில் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைக்க, “அத்தை நீங்க எங்கேயும் போக வேண்டாம்..” என்று நிரஞ்சன் அவரைத்தடுத்தான்..

“மாப்பிள்ளை நீங்க நல்லவர்.. முதலில் உங்களோட வாழ்க்கையை வாழ பாருங்க.. என்னோட கடமை எல்லாம் முடிந்தது.. நான் கிளம்பறேன்…” என்றார் சுமிம்மா..

“நான் இங்கிருந்து கிளம்புகிறேன்.. இந்த அம்மாவை யாராவது பார்க்கணும் என்றால் தேடி வாங்க..” என்றவர் தன்னுடைய பேக்கை எல்லாம் எடுத்து காரில் வைத்தார்..

அவரிடம் இருந்து இப்படியொரு அதிர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. அனைவரும் திகைத்து நிற்க, “அம்மா நீங்க போக வேண்டாம்..” என்று நித்தி அவரைத்தடுக்க நினைத்தாள்..

கங்கைகேது கட்டுப்பாடு..

மங்கை நானும் கங்கை என்று பாட்டுப்பாடு..

காற்றுக்கேது கடிவாளம்..

கன்னிப்பொண்ணும் காற்றே என்று ஆட்டம் போடு..”  என்றவர் நிரஞ்சன் – நித்திலா, சசிதரன் – வித்யா, மகேஷ் – அனிதா,  கௌசிக் – கார்த்திகா, கடைக்குட்டி சங்கரி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காரில் ஏறியமர கார் மெல்ல கிளம்பியது..

‘அவர் எங்கே செல்கிறார்..’ என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்துடன் நின்றிருக்க, “நான் மீண்டும் வருவேன்..” என்றவர் அவர்களுக்கு நிம்மதியை பரிசாக கொடுத்துவிட்டு, “பாய் பிள்ளைகளா..” என்று அவர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார்..