odi7

ஓடி போகலாம் 7

ஸ்னோ வேர்ல்டு உள்ளே எடுத்த சண்டை காட்சியில், அடி சற்று பலம் தான் ஷியாங்கிற்கு. இதை அவன் எதிர்பார்த்து தான் தப்பிக்க நினைத்தது, ஆனால் அவளா விடுவாள் பிடித்து அவனை முடித்து கொடுக்க வைத்துவிட்டு தான் அடுத்த வேலையே பார்த்தாள் நிஷா.

ராட்சசி! இவளை எல்லாம் நல்லா தலை கீழா தொங்கட்டும் அப்படினு அந்த ரைடோட சேர்த்து தொங்க விட்டு இருக்கணும், என்னமா பிளான் பண்ணி எக்ஸிகுட் பண்ணி இருக்கா”.

முதல இவளை பேக் பண்ணி அனுப்பனும் ஊருக்கு, தொங்க விட்டே நம்மளை காமெடி பண்ணிகிட்டே இருக்கா குட்டி பிசாசுஎன்று பொருமிக் கொண்டு இருந்தான் ஷியாங்.

அவன் எண்ணம் அவளுக்கு சென்று அடைந்ததோ என்னவோ, அவளே இவனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அவள் புறப்பட்டு செல்ல போகிறாள் எனவும், முதலில் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

ஆனால் அவள் சென்ற ஒரு நாளிலே அவனால் அங்கு இருக்க முடியவில்லை. உடனே கார் எடுத்துக் கொண்டு கோலாலம்பூர் வந்து அடைந்தான்.

அட! அட! அதுக்குள்ள உன் வேலை எல்லாம் முடிந்ததா பேராண்டி! ஆச்சர்யமா இருக்கே!” என்று அவனின் தாத்தா அவன் வந்த உடனே கேலி பேசவும், இவன் காண்டானான்.

அவனின் முக பாவத்தை பார்த்த அவனின் தந்தை, என்ன புரிந்து கொண்டாரோ தன் தந்தையை அடக்கிவிட்டு அவனை உள்ளே அனுப்பினார். உள்ளே அவனின் அறைக்கு வந்தவன், அங்கே இருந்த மாற்றத்தை பார்த்து வியந்தான்.

நாம ரூம் மாறி வந்துட்டோம் போலயே! இல்லையே என்னோட ஃபேவரைட் ஃபோட்டோ இங்கே தான இருக்கு, வேற ரூம் இது கிடையாதே!” என்று யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான், அங்கே இருந்த குளியலறை கதவை திறந்து கொண்டு நிஷா வெளியே வந்தாள்.

அவளை சற்றும் அங்கே எதிர்பாராதவன், இன்ப அதிர்ச்சியில் திளைத்து கொண்டு இருந்தான். அவளோ, அவன் முன் நின்று அவனை பார்த்து சிரித்து வரவேற்றாள்.

நம்மளை பார்த்து தான் சிரிச்சாளா, இல்லை நம்ம பிரம்மையா?” என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே, அவள் அவனை பார்த்து இப்பொழுது முறைக்க தொடங்கினாள்.

அதானே! முறைச்சுகிட்டு இருக்கிறவளை போய் சிரிச்சா அப்படினு நினைக்கலமா டா நீஎன்று தன்னையே திட்டிக் கொண்டு அவளை பார்த்து என்னவென்று கேட்டான்.

என்னை பத்தி ரொம்ப நல்ல அபிப்ராயம் வச்சு இருக்கீங்க போலயே! இனி இருக்கு உங்களுக்கு, நாளைக்கு பெர்ஜயா ஸ்குயர் ஷுட்டிங், இந்த தடவை பிடிச்சு கீழே தள்ளி விட்ருவேன் ஜாக்கிரதை!” என்று மிரட்டிவிட்டு சென்றவளை விநோதமாக பார்த்தான் ஷியாங்.

நான் பாட்டுக்கு உள்ளே வந்து நிக்க தான் செய்றேன், இவ வந்த உடனே இப்படி முறைச்சிகிட்டு போறா, நாம எதும் தப்பா பேசிட்டோமா?” என்று சத்தமாக  முணுமுணுத்துக் கொண்டு இருந்தவனை பார்த்து சிரித்தது அவனது மனசாட்சி.

என்ன சிரிப்பு வேண்டி இருக்கு உனக்கு?” என்று இப்பொழுது அதனிடம் சிடுசிடுத்தான்.

இல்லை, நீ மைண்ட் வாய்ஸ் நினைச்சு கொஞ்சம் சத்தமா அவளை பத்தி சொன்னியா, அதான் எனக்கு செம சிரிப்பா வருதுஎன்று அது கூறவும் தான், அவள் எதற்காக முறைத்தாள் என்று புரிந்து போனது.

ஆஹா! நாமளே நம்ம வாயால கெட்டோம் போலயே! சரி இப்போ அவ கிட்ட போய் எப்படி இதை புரிய வைக்கிறது?” என்று யோசித்தவன் மூளையில் அவளது பாட்டி நியாபகம்.

ம்ம்.. ஐடியா கிடைச்சிடுச்சு, மை கேம் ஸ்டார்ட்ஸ் நௌ டார்லிங்என்று வில்லன் சிரிப்பு சிரித்தான்.

அதன் பிறகு குளித்து முடித்து வந்து சாப்பிட்டு முடித்துவிட்டு, ஆபிஸ் வேலைகளை பார்க்க தொடங்கினான். அதன் பிறகு காலையில் எடுத்த முடிவின் படி, அவளின் பாட்டிக்கு அழைத்து பேசினான்.

ஒரு ஒருமணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அவர் இங்கே வருவதாக கூறவும், அப்பொழுதே அவரின் வசதிக்கு எந்த தேதி சரி வரும் என்று கேட்டுக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் டிக்கெட் பதிவு செய்தான்.

இதை எதுவும் அறியாத நிஷாவோ, அடுத்து அவனுக்கு எவ்வாறு அவளை புரிய வைப்பது என்ற யோசனையில் இறங்கினாள்.

எவ்வளவு கிட்ட நெருங்கி போனாலும், அவனுக்கு என்னோட கோப முகம் தான் தோணுது. இதை எப்படி சரி செய்ய போறேன், ஆண்டவா! எதாவது ஒரு நல்ல வழி காட்டுங்களேன்என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.

இதை பத்தி பாட்டி கிட்ட பேசினா என்ன? ஆனா இப்படினு கேட்டா மூஞ்சியில் காரி துப்பாத குறையா திட்டி தீர்த்து வச்சிடும் கிழவி. நம்ம சாதாரணமா பேசி கேட்போம், முகத்தில் எதையும் காட்டாம இருக்கணும்என்று எண்ணிக் கொண்டு உடனே வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச தொடங்கினாள்.

வீடியோ காலில் பேத்தியின் அழைப்பு வரவும், அவர் புன்னகைத்து எடுத்து பேச தொடங்கினார். சிறிது நேரம் அவரிடம் பேசிய நிஷாவின் மனது சற்று லேசாகியது. ஆனால் அங்கே அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, பேத்தியின் குழப்பத்தை தீர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து மறுநாளே புறப்பட்டு விட்டார்.

மறுநாள் காலை அங்கே பெர்ஜயா ஸ்குயர் மாடியில், ஹெலிகாப்டர் மூலம் கம்பீரமாக இறங்கி வந்த ஷியாங்கை அழகாக படம் எடுத்துக் கொண்டு இருந்தாள் நிஷா.

அந்த படத்தின் முதல் சீன் அது தான், அவனின் கம்பீரம் குறையாமல் இருக்க வேண்டி, அவனின் உடை முதல் இறங்க வேண்டிதலை அலங்காரம் வரை எல்லாம் அவள் தான் பார்த்து பார்த்து செய்து இருந்தாள்.

இவளுக்கு என்ன ஆச்சு? இப்படி நம்மளோட ஒவ்வொரு விஷயத்திலும் இன்னைக்கு இம்புட்டு அக்கறை எடுத்துக்கிறா! என்ன விஷயமா இருக்கும்!” என்று யோசித்துக் கொண்டு இருந்தாலும், அவன் நடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் நன்றாகவே நடித்துக் கொடுத்தான்.

எல்லாம் முடித்துக் கொண்டு, அவன் கிளம்பும் பொழுது அங்கே ஒரு சைனா ரசிகை பெண் இவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கையோடு, உரசிக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து காதில் புகை வராத குறை தான் நிஷாவிர்க்கு.

அவள் உடனே அவன் அருகே சென்று, அவன் கையை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு, அந்த பெண்ணிடம் ஹி இஸ் மைன் என்று சொல்லாமல் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அந்த மாடியில் இருந்து கீழே லிஃப்ட் மூலம் இறங்கினாள்.

இவன் வருகையை அறிந்து, நிறைய அவனின் ரசிகைகள் அவன் கீழே இறங்கிய பின் அவனை சூழ்ந்து கொண்டனர், நிஷாவை இடித்து வெளியே தள்ளி விட்டு. அவனோ, அவளின் முக பாவனையை கவனித்து, அவளை பார்த்து சிரித்தான் ரகசியமாக.

வீட்டுக்கு தான வருவ டா, உன்னை அங்க தொங்க விடுறேன்என்று கருவிவிட்டு வீட்டுக்கு சென்றாள்.

நிஷா சென்றதை அறிந்து, அங்கு இருந்து உடனே கிளம்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்து, தன் பாடிகார்ட்ஸ்க்கு கண்ணை காட்ட, அவர்கள் அவனை பத்திரமாக அழைத்து சென்றனர்.

அங்கே பாட்டியை பார்த்த அதிர்ச்சியில் இருந்த நிஷாவை பார்த்து முறைதுவிட்டு, இவன் பாட்டியிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றான்.

நடந்ததை எண்ணி பார்த்த இருவரும், நித்ரா தேவி அழைக்க தூக்கத்தின் பிடிக்கு சென்றனர். மறுநாள் எழுந்து வந்த இருவரும் கண்டது, அங்கே இரு குடும்பங்களின் தகராரை தான்.

இப்போ என்ன பிரச்சினை? பெருசுங்களோட இதே வேலையா போச்சு, போய் என்ன பிரச்னை என்னனு கேட்போம்என்று எண்ணிக் கொண்டே சென்றவளுக்கு அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டதும், தலை சுற்ற தொடங்கியது.

பாவிகளா! நானே அவனுக்கு என்னை பிடிச்சு இருக்கு, அது தெரியாம இருக்கானே, கொஞ்சம் தெளிய வைக்க வேலை எல்லாம் பார்த்தா, இதுங்க மொத்ததுக்கு வேட்டு வைக்குறாங்கஎன்று பொருமிக் கொண்டு இருந்தாள் மனதிற்குள்.

அவள் ஷியாங்கை பார்க்க, அவனோ அங்கே வந்து இருந்த அவனின் அத்தை பெண் லுலியுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தான்.

இங்க இவ்வளவு பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு, இவன் அங்க அவ கூட அப்படி என்ன டிஸ்கஷன் இருக்கான்?” என்று எண்ணிக் கொண்டே அவர்கள் அருகே சென்றாள்.

அங்கே சீன மொழியில் பேசிக் கொண்டு இருந்த இருவரையும் கண்டு விழித்தாள். ஆனால், அவர்களின் உடல் மொழியில் அவள் கண்டது அவர்கள் பேசிக் கொண்டு இருப்பது இந்த திருமணம் குறித்து தான் என்று புரிந்து போனது.

இங்க என் பொலைப்பு சிரிப்பா சிரிக்குது, உங்களுக்கு என்ன இவளோட பேச்சு. இப்போ என் கூட வாங்க, நாம போய் அவங்களை சமாதானப்படுத்தலாம்என்று கூறி அவனை இழுத்துக் கொண்டு அங்கே சென்றாள்.

இங்க பாருங்க அப்பா, எனக்கு கல்யாணம் எல்லாம் ஒரு முறை தான். இவர் தான் என்னோட புருஷன், இதுல நீங்க ரெண்டு பேரும் தலையிடாதீங்க”.

தயவு செய்து இங்க இருந்து கிளம்புங்க எல்லோரும், எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துப்போம்என்று அழுத்தமாக அவள் கூறவும், அவர்கள் பேச்சை நிறுத்தினர்.

பின்பு ஷியாங்கின் தந்தை அவளை பார்த்து பேச தொடங்கினார்.

இது காண்ட்ராக்ட் கல்யாணம் நிஷா, அதுக்கு ஆயுசு கொஞ்ச நாளைக்கு மட்டும் தான். அதுவும் நேத்தோட முடிஞ்சது, இனி என் பையனுக்கு நான் பெரிய இடத்தில் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணலாம் நினைக்கிறேன்”.

அதனால பிரச்சினை பண்ணாம நீங்க விலகுறது தான் சரி, இதுக்கு என் பையன் சம்மதிச்ச பிறகு தான் நான் பேச வந்து இருக்கிறேன். சரி அவன் கூட இத்தனை நாள் இருந்தியே, என்னைக்காவது ஒரு நாள் அவன் பயமில்லாமல் இருந்து இருக்கானா உன் கூட”.

எப்போ நீ அவனை தொங்க விட்டு ஃபைட் சீன் வைப்பியோ அப்படினு ஒரு பயத்தில் தானே இத்தனை நாள் இருந்து இருக்கான். இதை மறுக்க முடியுமா உன்னால, இப்போ இதுக்கு பதில் பேசு மாஎனவும் அவள் கண்களில் கண்ணீர் விழுந்து விடுமோ என்ற பயத்தில், பல்லை கடித்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.

மனதில் முழுவதும், அவன் தன்னை பிரிய சரி என்று சொன்னது மட்டுமே உறுத்திக் கொண்டு இருந்தது. அவன் தந்தை கூறியது போல், ஒவ்வொரு நாளும் அவனை அப்படி ஒரு பயத்தில் வைத்தது நிஜம் தான், ஆனால் அது அவன் படம் சரியாக வர வேண்டும் என்பதற்காக அவள் எடுத்து இருந்த ஒரு சின்ன நடவடிக்கை அவ்வளவு தான்.

இன்று அதுவே அவளை விட்டு பிரிய அவன் எடுத்து இருந்த முடிவு, அவளை கலங்க வைத்தது. இன்று அவனிடம் காதலை, அன்பை எல்லாம் சொல்லி அவனோடு ஓடி போக துடித்துக் கொண்டு இருந்தது எல்லாம் இப்படி கானல் நீராக போகும் என்று கனவில் கூட அவள் நினைத்தது இல்லை.

ஒன்றும் பேசாமல், தன் பெட்டியை எடுத்துக் கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல் வெளியேறிவிட்டாள் நிஷா சிறிது அழுகையுடன்.

தொடரும்..