ஓ காதல் கண்மணி 20
– நெமிரா
வணக்கம் நட்பூஸ் ,
விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .
ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …
இதுவரை …..
மோனிஷாவின் வதனம் அர்ஜுனுடைய இரும்பு மார்பில் புதைந்திருக்க , மென் கரங்களோ அர்ஜுனை இறுக்கமாக கெட்டி அணைத்திருந்தது….
இனி …..
மோனிஷாவின் மூச்சுக்காற்றின் வெப்பம் அவனது மார்பை உரச , அர்ஜுனை மதிமயக்க செய்தது ! அணைக்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் பெரும் உணர்ச்சி குவியலில் சிக்குண்டு தவித்தான் !
அவளை அள்ளி அணைத்து தனதாக்கிக்கொள்ள துடித்த தன் கரங்களை மிகச் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினான் ! இதயம் வேறு தன் பங்கிற்கு எக்குத்தப்பாக துடிக்க விழிகளை இறுக்கமாக மூடிக் கொண்டான் .. கட்டுப்பாட்டை இழந்த இரும்புக் கரங்கள் அவளது சிகையை மென்மையாக வருடியது !
மேலும் விசும்பினாள் !அவள் அழுகிறாள் மூளை எச்சரித்தது ஏனோ அவனால் தாங்க முடியவில்லை மனதிற்குள் வலித்தது !
” கமான் மோனிஷா காம் டவுன் ! ஒன்னும் இல்ல ,எல்லாம் சரியாயிடும்”
” நான் இருக்கேன்ல ப்ளீஸ் அழாத “
” இப்ச் சொல்றேன்ல ப்ளீஸ் ” – அவன் சொல்ல சொல்ல அதிகமாக அழுதாள் !
என்ன செய்வதென்று புரியாமல் தன் அருகில் இருந்த தன் நண்பர்களை பார்த்து ‘ என்ன பண்றது அழுதுட்டே இருக்கா ‘ என்று முகபாவனையோடு கூற …
மகிழ்ச்சி கலந்த விஷமத்துடன் புன்னகைத்தவர்கள் ,’ ஆள் தி பெஸ்ட் ‘ என்பதை போல அர்ஜுனை கேலி பார்வை பார்த்தபடி மெல்ல அங்கிருந்து செல்ல…
‘ விட்டுட்டு போகாதீங்க டா’ என்பதைப்போல் நண்பர்களை பார்த்து முறைத்தான் அர்ஜுன் .
மோனிஷா அழுவதை தாங்கி கொள்ளாத அர்ஜுன் அவளை மெல்ல தன் மீதிருந்த பிரித்து … ஜிமிற்குள் அழைத்து சென்று அமரவைத்து .. அவள் முன்பு மண்டியிட்டபடி .
” ரிலாக்ஸ் மோனிஷா ப்ளீஸ் அழாத ” – கரங்களை பற்றியபடி கூறினான் .
வேதனையுடன் உதட்டை கடித்துக்கொண்டு தலை கவிழ்ந்த படி அமர்ந்திருந்தாள் .
” மோனிஷா ” – அமைதியாக இருந்தாள்.
“மோ …னி…ஷா “- மீண்டும் அழைத்தான் .
” பதில் சொல்லு பா “
” ——- ” – அழுதாள் .
” எனக்காக ” – கெஞ்சினான்
நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளுக்கு அவனது காயப்பட்ட கரம் தெரிய , பதறியவள் !
” என்னாச்சு இவ்வளவு ரத்தம் “- கரங்களை பிடித்தபடி அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன .
” நத்திங் ” – அப்பொழுது தான் வலியை உணர்ந்தவன் முகத்தை சுளித்தான்.
” எப்படி ஆச்சு அர்ஜுன் ” – தவிப்புடன் கேட்டாள் .
தன்னை எண்ணி வருந்துகிறாள் ! எண்ணும் பொழுதே மனம் மகிழ்ச்சியில் கூச்சலிட்டது !
” சொல்லுங்க அர்ஜுன் ” – வற்புறுத்தினாள் ! நடந்ததை கூறினான் !
” என்னால தான் எல்லாம் “- விழிகள் மீண்டும் சிவந்தன .
” ஏய் நீ என்ன பண்ணுவ “
” சாரி அர்ஜுன் ” – விழிகள் கசிந்தன
” அழாத மோனிஷா “
“————–” – உடைந்து அழுதாள் .
” சொல்றத கேளு பா ” – கெஞ்சினான் .
பதில் ஏதும் கூறாதவள் அழுதபடியே அவனது கரத்தில் இருந்த ரத்த கரையை தன் துப்பட்டாவால் துடைத்தவள் ,
பின்பு தன் கைக்கொட்டை கொண்டு அடிபட்ட இடத்தை மென்மையாக கெட்டினாள் .
” சீக்கிரமா ஃப்ர்ஸ்ட் ஏய்ட் பண்ணுங்க அர்ஜுன் ” – அக்கறையுடன் கூறினாள் .
மெய்மறந்து ரசித்தவனுக்கு தன் பாட்டி ‘ ஒருநாள் உன்னை மட்டும் நேசிக்கிற ஒரு பெண் வருவாள் ‘ என்று கூறியது நின்னைவிற்கு வர இதழ் தானாக மலர்ந்தது .
ஆனாலும் மோனிஷாவின் அழுகை மட்டும் குறைந்தபாடில்லை . எவ்வளவோ அர்ஜுன் சமாதானம் கூறியும் மோனிஷா அழுது கொண்டே இருக்க ,
இதற்கு மேல் பொறுத்து கொள்ளாதவன் , அவளது மென் வதனத்தை தன் கரங்களில் ஏந்தினான் ! இருவிழிகளும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டன.
” அழாத ப்ளீஸ் எனக்காக ” – அவனுக்குள் ஒளிந்திருந்த மென்மை எட்டிப்பார்த்தது .
“ம்ம்ம் ” – தலையை அசைத்தாள் . கலங்கிருந்த விழிநீர் கீழே விழுவதற்கு காத்துக்கொண்டிருந்தது .
நாசி சிவந்திருக்க …. மென் அதரம் துடித்தது ! கண்டதும் பித்தம் கொண்டான் !
செவ்விதழ் அழைத்த விருந்தில் தஞ்சம் கொண்டவன் , வஞ்சமின்றி பருகி சுவைத்தான் !
துடித்த இதழ்களை தன் இதழோடு பிணைத்துக்கொண்டான் !
அவளும் விலக்கவில்லை !அவனும் விலகவில்லை !
திடிரென்று உதிக்கும் எரிநட்சச்திரம் போல பட்டென்று அவன் கொடுத்த முத்தம் அவளது உயிர்வரை சென்று தீமூட்ட … புரியாமல் பதறியவளின் உடல் நடுங்கியது ..
உணர்ந்துகொண்டவனின் மனம் எச்சரிக்க தன் தவறை உணர்ந்தவன் சற்றென்று அவளை விட்டு தள்ளி நிற்க , குற்றம் புரிந்த வேந்தனை போல் அவள் முன்பு தலை தாழ்த்தி நின்றான் ..
அவளது விழிகளில் இருந்து கண்ணீர் தாறுமாறாய் இறங்கியது உடல் நடுங்கியது தேம்பி தேம்பி அழுதாள் ..
அர்ஜுனோ கலங்கி தவித்தான் .
இருந்தும் என்னவோ அவளிடம் மன்னிப்பு கேட்கவோ , இந்த நிகழ்விற்கு விளக்கம் கொடுக்கவோ அவன் மனம் விரும்பவில்லை !
ஆனாலும் ஒருவித சங்கடம் மனதிற்குள் குடிகொண்டது !
அர்ஜுன் மோனிஷாவை விட எத்தனையோ அழகிய பெண்களை தன் வாழ்நாளில் சந்தித்திருக்கிறான் . ஆனால் ஒரு பொழுதும் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்தது இல்லை !
அப்படி இருக்க இவளிடம் மட்டும் ஏன் ? தனக்கு தானே கேட்டுக்கொண்டான் …
” ஏன் என்றால் இவள் உனக்கானவள் ?”- பட்டென்று அவனது மனம் உண்மையை போட்டு உடைத்தது !
மறு நொடியே ,
” உன்னை போலவே அவளும் என்ன வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லையே !
அவள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருந்தால் என்ன செய்ய போகிறாய் அர்ஜுன் ? அவள் நிச்சயம் உன்னை பற்றி தவறாய் எண்ணியிருக்க வாய்ப்பு உள்ளது !
ஆயிரம் காரணம் நீ கூறினாலும் அடைக்கலம் நாடி வந்தவளிடம் உன் உணர்ச்சிகளை காட்டியது மன்னிக்க முடியாத குற்றம் அர்ஜுன் ! என்ன செய்ய போகிறாய் ?” – என்று அவனது மனசாட்சி சாட்டையால் அடித்தது ! அதீதமான படபடப்பு அவனை தொற்றிக்கொண்டது
தன்னை விட்டு சில தூரம் தான் தள்ளி நிற்கிறாள் ! உள்ளம் ஏனோ கனத்தது !
அர்ஜுனுக்கு அவளிடம் பேசவே தயக்கமாக இருந்தது . சங்கடத்துடன் அவளது முகத்தை பார்த்தான் !
அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தலை குனிந்த படி நின்றாள் மோனிஷா.
முதல் முறையாக அவள் தன்னை பற்றி தவறாக நினைத்திருப்பாளோ என்று எண்ணியவனுக்கு உள்ளுக்குள் எதோ ஒரு படபடப்பு !
புதிதாய் இருந்தது ! அவனுக்கு புதிராய் ஆனது ! புரியாமல் தவித்தான் !
அவளது அழுகையும் நின்றபாடில்லை …
” புடிக்கலையா ” – இரு பொருள் பட கேட்டான் … நிலவிய மௌனத்தை கலைத்தது !
“————-” – மௌனமாய் நின்றாள்
” புடிச்சிருக்கா ” – ப்ளீஸ் நோ சொல்லிடாத மனதிற்குள் அவளிடம் பலமுறை மன்றாடினான் .
” ம்ம்ம் , தெரியல ! பயமா இருக்கு ! “- குரல் நடுங்கியது .
” ஏன் ” – புரியாமல் கேட்டான் .
” ரொம்ப புடிச்சிருக்கு அதான் ” – குழப்பத்துடன் கூறினாள்.
” என் மேல கோபம் வரல “
” ம்ஹும் ” – தலையை குறுக்கே ஆட்டினாள்.
” திட்டணும்ன்னு தோணலை “
” ம்ஹும் ”
“உனக்குள்ளையே கேளு மோனிஷா உனக்கு பதில் கிடைக்கும் ! உன்னை நான் கம்பெல் பண்ண மாட்டேன் …
இன்னைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு ஹோட்டல் பரடைஸ்ல உனக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன் .
நீ என்ன முடிவு வேணும்னாலும் எடுக்கலாம் … உன்னுடைய விருப்பம் … என்னை நீ தண்டிக்கணும்ன்னு நினைச்சாலும் ஐயம் ஓகே ” – என்றான் .
மோனிஷா பதில் கூறுவதற்குள் உள்ளே நுழைந்த ரோஹித் மற்றும் தர்ஷித் ” பேசி முடிச்சிட்டீங்கன்னா மேம் பார்க்க போகலாமா ” என்று கேட்கவும்
மோனிஷாவின் அழைப்பேசி தன் இருப்பிடத்தை காட்டவும் சரியாக இருந்தது , அழைப்பை ஏற்றவள் சில நிமிடங்கள் கழித்து .
” சின்ன விஷயம் இப்போ வந்திர்றேன் அர்ஜுன் ” என்றாள் முகத்தில் சிறு பதற்றம் தென்பட்டது
” எல்லாம் ஓகே தான “
” ஆமா இப்போ வந்துருவேன் ” என்றவள் அங்கிருந்து கிளம்பவும் ரோஹித்
” சரி மோனிஷா நீ நேர மேம் ரூம் பக்கம் வந்திரு ” என்று சொல்லி சரி என்பதாய் தலையசைத்தவள் அர்ஜுனை பார்த்தபடி அங்கிருந்து சென்றாள் .
லக்ஷ் ,கிருஷ் இருவரும் அழுது கொண்டிருக்கும் ரக்ஷித்தாவை சமாதானம் செய்து கொண்டிருக்க பதற்றத்துடன் அவர்களிடம் வந்த மோனிஷா
” ஏன் ரக்ஷிதா அழுதுட்டு இருக்க என்னாச்சு ? நீ அழுததும் நான் பதறிட்டேன் ” தோழியின் அருகில் வந்து அமர்ந்தபடி கேட்டாள் மோனிஷா
” நீ மேம் கிட்ட பேச தான் போறியா “
” ஆமா ரக்ஷு “
” வேண்டாம் மோனி “
” அர்ஜுன் பாவம் “
” வேண்டாம் மோனி ப்ளீஸ் “
” தப்பே பண்ணாம அவன் தண்டனை அனுபவிக்கிறான் “
” இப்போ நீ சொன்னா நானும் தண்டனை அனுபவிக்கனும் உனக்கு ஓகே வா “
” ரக்ஷு உன் பேரு வராது உன்னை காட்டி குடுக்க மாட்டேன் “
” அர்ஜுனுக்கு எப்படியும் நான் தான் கம்ப்ளயிண்ட் குடுத்தேன்னு தெரிஞ்சிரும் “
” நீ கவலை படாத அர்ஜுன் கிட்ட நான் பேசிக்கிறேன்… நீ தான்னு தெரிஞ்சாலும் உன்னை எதுவும் பண்ண மாட்டான் ..நீ என்னை நம்பு “
” அவன் ரொம்ப மோசமானவன் மோனிஷா “
” இல்லை அவன் ரொம்ப நல்லவன் … நீ ஏன் அவசரப்பட்டு கம்ப்ளயிண்ட் குடுத்த ?”
” உனக்காக தான் பண்ணினேன் .. ஆனா நீ அர்ஜுன் நல்லவன்னு சொல்ற அப்போ என்னை பத்தி உனக்கு கவலை இல்லையா ” – கோபத்துடன் கேட்டாள் ரக்ஷிதா
” அப்படி சொல்லாத ரக்ஷு நீ எனக்கு முக்கியம் “
” அப்போ மேம் கிட்ட நீ எதுவும் சொல்ல கூடாது ” – கண்டிப்புடன் கேட்டாள்
” ரக்ஷு ப்ளீஸ் “
” அவன் க்ளாஸ்ல எல்லார் முன்னாடியும் எவ்வளவு மோசமா நடந்துக்கிட்டான் நீ அவன் நல்லவன்னு சொல்ற .. உனக்கு என்னாச்சு மோனிஷா “
” நீ கம்ப்ளயிண்ட் பண்ணின மாதிரி அவன் என்கிட்ட நடந்துக்கவே இல்லை அப்படி இருக்கும் போது அவன் பாவம் தானே ரக்ஷு,
அவன் கேரக்டர எல்லாரும் கேள்வி கேட்குற மாதிரி இருக்கு …
தப்பு ரக்ஷு! செய்யாத தப்புக்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ! வேண்டாம் !
உன் பேரு வராது ! அர்ஜுன் உன்னை ஒன்னும் பண்ண மாட்டான் “
” மோனிஷா சொல்றது சரின்னு தோணுது ரக்ஷு ” என்று லக்ஷ் கூற , அவனை இறுக்கமாக முறைத்த ரக்ஷிதா
” அப்போ என்னை பத்தி உங்களுக்கு கவலையே இல்லல ” – விரக்தியுடன் கேட்டாள் .
” அப்படி இல்லை ரக்ஷு புரிஞ்சிக்கோ ” – புரியவைக்க முயன்றாள் மோனிஷா ..
” நீ முதல்ல புரிஞ்சிக்கோ மோனிஷா , அர்ஜுன் ரொம்ப மோசமானவன் . என் மேல நம்பிக்கை இல்லனா கிருஷ் சார் கிட்ட கேளு . சார் அவனை பத்தி எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாரு ” – கிருஷை கை காட்டினாள் .
” ஆமா மோனிஷா அர்ஜுன் ரொம்ப டேஞ்சர் ஆனவன் … இதுக்கு முன்னாடியும் ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்திருக்கான் ..
தட்டி கேட்க போன என்னை அடிச்சி … அதெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு அவன் என்னை பண்ணிருக்கான் ..
பணக்காரன் அவனை நாம ஒன்னும் பண்ண முடியாது …. நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் நல்லவன் இல்லை …
அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி அவன் வலையில விழ வைக்கிறது அவனுக்கு ஒன்னும் புதுசு இல்லை ” – ரக்ஷிதாவின் மனதை கலைத்தது போல மோனிஷாவின் மனதையும் அர்ஜுனுக்கு எதிராய் மாற்ற முடிந்தளவு முயன்றான் கிருஷ் .
” சார் நீங்க எல்லாரும் அர்ஜுனை தப்பா நினைக்கிறீங்க அவன் அப்படி இல்லை ” – – திடமாக கூறினாள்
” சார் சொல்றாரு , நான் சொல்றேன், நீ அவனுக்கே சப்போர்ட் பண்ற உனக்கு என்ன ஆச்சு மோனிஷா “- படபடத்தாள்
” ரக்ஷிதா தான் அவன் மேல கம்ப்ளயிண்ட் குடுத்துன்னு தெரிஞ்சா அவன் ரக்ஷிதாவை என்ன வேணும்னாலும் பண்ணலாம் …
உன் ஃப்ரண்ட காப்பாத்துறது உன் கையில தான் இருக்கு .. யார் முக்கியம்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ …
என்ன சொல்லணுமோ நான் சொல்லிட்டேன் இனிமேல் உன் இஷ்டம் ” – ரக்ஷிதாவை காரணம் காட்டி மோனிஷாவை மேலும் சிந்திக்க விடாமல் தடுத்தான் கிருஷ் .
” நான் உனக்கு முக்கியமா ! முக்கியமில்லையா !” – ரக்ஷிதா கேட்க
” இது என்ன கேள்வி முக்கியம் தான் “
“அப்போ நீ அர்ஜுனுக்கு சப்போர்ட் பண்ண கூடாது “
“அவன் பாவம் இல்லையா “
” இது அவன் காலேஜ் அவன் நினைச்சா வரலாம் , நினைச்சா போகலாம், யாரு கேட்ப்பாங்க .
அவனுக்காக பேச நிறைய பேர் இருக்காங்க .
ஆனா எனக்கு ஒன்னு நடந்தா யார் இருக்காங்க … கண்டிப்பா அவன் என்னை எதாவது பண்ணுவான் !
அப்போ தான் உனக்கு அவனை பத்தி புரியும் ” – அழுதுகொண்டே ரக்ஷு அங்கிருந்து செல்ல … லக்ஷ் அவள் பின்னாலே செல்ல ….
” ரக்ஷிதாக்கு ஏதும் ஆக கூடாதுன்னா அது உன் கையில தான் இருக்கு மோனிஷா ” – உணர்ச்சிப்பூர்வமான அச்சுறுத்தலை விடுத்தபடி கிருஷ் அங்கிருந்து கிளம்பினான் …
மோனிஷா பெரும் மனப்போராட்டத்தில் மாட்டிக்கொண்டு தத்தளித்தாள்.
காயத்ரியின் அறைக்கு வெளியே ஒருவித தடுமாற்றத்துடன் காணப்பட்ட மோனிஷாவை தனியே அழைத்த அர்ஜுன் ,
” எல்லாம் ஓகே தான பா “
” ஹான் … ஆமா அர்ஜுன் ” – பதற்றம் அப்பட்டமாய் தெரிந்தது
” மோனிஷா என்னவா இருந்தாலும் சொல்லு நான் சால்வ் பண்றேன் “
” இல்லை அர்ஜுன் நல்லா இருக்கேன் ” – குழப்பத்தை மறைத்தபடி கூறினாள் .
” இப்போ கூட உனக்கு விருப்பம் இல்லனா நீ மேம் கிட்ட பேச வேண்டாம் , யாரும் எதுவும் உன்னை சொல்லமாட்டாங்க ” – தன்மையுடன் கூறினான் .
ஒரு மனிதனுக்குள் இவ்வளவு பெரிய மாற்றமா !
இன்று மதியம் நாம் பார்த்த அர்ஜூனுக்கும் இப்பொழுது நாம் பார்க்கும் அர்ஜூனுக்கும் எவ்வளவு வேற்றுமை !
ஒரு மனிதனால் எப்படி சற்றென்று தன் இயல்பில் இருந்து மாற இயலும் ? ஒருவேளை அவர்கள் அர்ஜுனை பற்றி கூறியது அனைத்தும் உண்மையா என்ன ?
ஆனால் அவன் விழிகள் வேறொன்றை கூறியதே !
நம் மீது காட்டும் அக்கறை , சற்று நேரம் முன்பு அவன் நம்மிடம் நடந்து கொண்டது ! ஒட்டி உறவாடிய அந்த அழகிய தருணம் அதுவும் நடிப்பா ? – கடிவாளம் இடாத மனம் கட்டுப்பாடு இன்றி ஓடியது … கிருஷ் விதைத்த சந்தேகம் என்னும் விதை இப்பொழுது துளிர்க்க ஆரம்பித்தது .
” மோனிஷா நான் உன்னை நம்புறேன் ! நீயும் என்னை நம்பனும் எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லலாம் …
பட் என்கிட்ட இருந்து எதையும் மறைக்காத ” – என்றான் அர்ஜுன் .
” நம்பணும்ன்னு தான் நினைக்கிறன் அர்ஜுன் ஆனா … ” – என்று எண்ணியவள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்க …
ரோஹித் காயத்ரி உள்ளே அழைப்பதாக கூறி அர்ஜுன் மோனிஷா இருவரையும் அழைத்தான் ..
அர்ஜுனா ! ரக்ஷிதாவா ! என்கின்ற குழப்பத்துடன் உள்ளே சென்றாள் மோனிஷா …
காதலில் சந்தேகம் ஓர் அர்த்தமற்ற உறவுக்கான அறைகூவலாகும் ! அது ஒரு கொடிய நோய் ! மகிழ்ச்சியின் ஜென்ம எதிரி …
மோனிஷா மஹிமா கிருஷின் வஞ்சக வலையில் வீழ்வாளா ! வெல்வாளா !…
– தொடரும்