Oh Kadhal Kanmani 21

31-isspyaarkokyanaamdoon2

Oh Kadhal Kanmani 21

  காதல்  கண்மணி 21

–  நெமிரா

வணக்கம் நட்பூஸ் ,

விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .

ஓ  காதல்  கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …

இதுவரை  …..

” மோனிஷா நான் உன்னை நம்புறேன் ! நீயும் என்னை நம்பனும்  எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லலாம் …பட் என்கிட்ட இருந்து எதையும் மறைக்காத  ” – என்றான் அர்ஜுன் .

” நம்பணும்ன்னு தான் நினைக்கிறன் அர்ஜுன் ஆனா  … ” – என்று எண்ணியவள்  மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்திருக்க …

ரோஹித்  காயத்ரி உள்ளே அழைப்பதாக  கூறி அர்ஜுன் மோனிஷா இருவரையும் அழைத்தான் ..

அர்ஜுனா ! ரக்ஷிதாவா !  என்கின்ற குழப்பத்துடன்  உள்ளே சென்றாள் மோனிஷா …

இனி …..

அர்ஜுனும்  மோனிஷாவும் அறைக்குள்  நுழைந்த பொழுது  மஹிமாவின்  வஞ்சக புன்னகை வஞ்சகத்துடன் அவர்களை வரவேற்றது …

‘ உனக்கு  நான் முக்கியமா ? இல்லை அந்த அர்ஜுனா ?

அர்ஜுன் இப்படி தான் ! அவன் ஒன்னும் நல்லவன் இல்லை …’ – ரக்ஷிதா  மற்றும் கிருஷின் குரல் அவளுடைய  செவிப்பறையில் வந்து மீண்டும் மீண்டும்  கேட்டுக்கொண்டே இருந்தது …

பூகம்பம்  வந்தது போல அவளது உடல் அதிர்ந்து நடுங்கியது ! உள்ளம் வலித்தது … மனதிற்குள்ளே நடந்த அணைத்து கலவரங்களும்  மோனிஷாவின்  முகத்தில் பிரதிபலிக்க … அவளது பதற்றத்தை  கண்ட  அர்ஜுன் மோனிஷாவின் கரங்களை இறுக்கமாக  பற்றி கொண்டு ,

” டோன்ட்  வொரி … நான் இருக்கேன்  உண்மை எதுவோ அதை மட்டும்  சொல்லு … உன் மனசு சொல்றத  கேளு ”  .- தன் பார்வையை  மோனிஷாவின் கலவரம்  கொண்ட வதனத்தில்  இருந்து அகற்றாமல் கூறினான் .

ஆனால் அவன் பேசியது எதுவும்  அவளது  காதில்  விழவே வில்லை !

அவளது மனதில் ஆழிப்பேரலை  விடாமல் அடித்துக்கொண்டிருந்தது!

குழப்பத்துடன் அர்ஜுனை நோக்கினாள் … புதிதாய்  தெரிந்தான்  அர்ஜுனை இதற்கு முன்பு அவள் அப்படி பார்த்ததில்லை …  என்றும் விட இன்று அதுவும்  இப்பொழுது  மோனிஷாவின் விழிகளுக்கு அவன் மிகவும்  அழகாக  தெரிந்தான் ….அந்த இக்கட்டான  நேரத்திலும் அவனது விழிகள் அவளை வசீகரித்தது …

இதுவரை  போதையில் மிதந்த  ,  கோபத்தில் கொதித்த  , வேதனையில்  வாடிய விழிகள்  இன்று வேறொன்றை  காட்டியது ! அவனுக்குள்  இருக்கும்   மென்மையான  காதலை  காட்டியது  ! இந்த கம்பீரமான  ஆண்மைக்குள்  இத்தனை  மென்மையா !

எண்ணும்பொழுதே மோனிஷாவின் கண்கள் ஆச்சரியத்தில்  விரிந்தது ! ஒரு மனிதனுக்குள்  சில மணி நேரத்திற்குள்  இத்தனை பெரிய மாற்றமா ? கண் இமைக்காமல்  அவனை ரசித்தாள் .. அவன் விழிகளில்  தெரிந்த அப்பட்டமான  நம்பிக்கை அவளை  கலங்கடித்து  …

செய்யப்போகும்  தவறை எண்ணி தலை கவிழ்ந்து நின்றாள் மோனிஷா… தன் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளது கரங்களை  இறுக்கமாக பற்றியபடியே  நின்றான் அர்ஜுன் !.

அர்ஜுன் மோனிஷாவின்  இணக்கத்தை காயத்ரியின் விழிகள் கவனிக்க தவறவில்லை … அர்ஜுனின் நிதானமா  வதனம்  காயத்ரியை மேலும்  கலவரப்படுத்தியது … ‘ அர்ஜுன் முன்பு போல இல்லை … மாறிவிட்டான் ‘ ஆனால்,   காயத்திரியோ மகிழவில்லை ! அதற்கு பதிலாக  அதீத  ஐயம்  கொண்டார் …

காரணம்  அர்ஜுனது   தந்தையின் மரணத்தை   ஒட்டி நடந்த பல கசப்பான சம்பவங்களுக்கு  பிறகு அர்ஜுனை ஓரளவு தேற்றி கொண்டுவந்துள்ளார்  காயத்ரி  … மேலும் அர்ஜுன் மனம் வேதனை படுவது  போன்ற சம்பவங்கள் ஏதும்  நடந்து விடுமோ ? என்று எண்ணி கவலை அடைந்தார் !.

மஹிமாவோ அவர்களை தன் பார்வையாலே  எரித்துக்கொண்டிருந்தாள் அர்ஜுன் மோனிஷா மீது காட்டும் அக்கறை நெருக்கம் ! அவளை நன்றாக  எரிச்சல்படுத்தியது  … ‘ அர்ஜுன் லவ் பண்றானா என்ன ? நோ நோ நோ ‘ எண்ணும் பொழுதே ஆத்திரம்  வந்தது …

ஆனால் அர்ஜுன் மட்டும்  வேறு ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தான் … ‘தனக்கென்று  யாரும் இல்லை  ! எந்த துணையும் தனக்கு தேவை இல்லை ! ‘ என்று அவன் பலமுறை கூறி இருந்தாலும் …  தனிமை தீயில் துவண்ட  போதெல்லாம்  அவன் மனம் அந்த துணைக்காக ஏங்காத நாட்கள் இல்லை …

அந்த ஏக்கம் எல்லாம் இன்று மோனிஷாவின் ரூபத்தில்,   இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போவதை எண்ணி ஆனந்த களிப்பில் மிதந்தான்  !

இதுநாள்  வரை அனுபவித்திராத  இன்ப உணர்ச்சி  அவன் உள்ளத்தில் தோன்றியது ! அந்த உள்ளக் களிப்பு பொங்கித் ததும்பி  அவன் மனம் முழுவதும்  பரவியது ! வாழ்க்கை  இவ்வளவு  ஆனந்த மயமாக இருக்கக்கூடும்  என்று அர்ஜுன் அன்று வரை கனவிலும்  கருதியதில்லை  .

அவளை தன் பக்கம் இழுத்து முத்தமிட்ட தருணத்தை எண்ணினான்   … தன் சுயம்  தொலைந்த  அந்த நிமிடங்களை , மறக்க முடியமா ? எண்ணும் பொழுதே  அவனது உள்ளம் நெகிழ்ந்தது ! இதழ்  தானாய் மலர்ந்தது ! 

மோனிஷா மீது காரணம் இன்றி அதீத நம்பிக்கை வைத்திருந்தவன்.

இப்பொழுது நடக்க இருக்கும் எதை பற்றியும்  சிந்திக்காமல்.    இன்று  சாயங்காலம்  மோனிஷாவிடம் எப்படி தன் காதலை சொல்ல போகிறோம் என்பதை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தான்.

” ஆதாரம் இருக்கான்னு  கேட்டிங்க இப்போ பேசாம இருக்கீங்க “-  நிலவிய  மௌனத்தை உடைத்தபடி வந்த  ரோஹித்தின்  வார்த்தைகளில்  அனைவரும்  தங்களின் சுயத்தை  அடைய … அர்ஜுனின்  விழிகள்  மட்டும் மோனிஷாவின்  வதனத்தை  காதலோடு  வருடிக்கொண்டிருந்தது  …

மகனை இறுக்கமாக முறைத்தவள் காயத்திரியிடம் ,

” நீங்களே கேளுங்க  அத்தை ” – காயத்ரியை கைகாட்டிவிட்டு அமர்ந்திருந்தாள் .

” டெல் மீ மோனிஷா …சொல்ல வந்ததை தயக்கம் இல்லாம சொல்லுங்க “

” ———————-” – மௌனித்தாள்.

” அர்ஜுன் மேல கொடுக்கப்பட்ட  கம்ப்ளயிண்ட்  உண்மையா ? பொய்யா ” –  ‘ உண்மையா ‘ அழுத்தம் கொடுத்தபடி  கேட்டாள் மஹிமா !

“——————-” – கைகளை  பிசைந்தபடி மெளனமாக நின்றாள் .

” லவ் யு பேபி டால் ” – அவளுக்கு மட்டும் கேட்டும்படி கூறினான் அர்ஜுன்  , நிமிர்ந்து  பார்த்தவளின்  விழிகள் கசிய …

” பதில் சொல்லுங்க மோனிஷா ” – மஹிமாவின்  கணீர்  குரலில் திடுக்கிட்ட  மோனிஷா …

ஆம் என்பதாய் தலையசைத்தாள் ! … விழிகளில் இருந்து கண்ணீர்  தாரைதாரையாய் இறங்கியது  …  அனைவரின் பார்வையும்  மாற … அர்ஜுன் மட்டும் சலனம் இன்றி நின்றுகொண்டிருந்தான் ..

” உண்மையா “- பதிலை அறியும் அவளில் மஹிமா வினவினாள் .

” உண்மைதான் ” – என்றாள் மோனிஷா ,  மஹிமாவின் இதழ் வெற்றியில்  இசைத்தது …

காயத்ரி   கவலையுடன்    அமர்ந்திருந்தாள் … தர்ஷித்தின் பார்வை மோனிஷாவை எரிக்க … ரோஹித் குழப்பத்துடன்  அவளை எதிர்நோக்க …  அர்ஜுன் நிலைகுலைந்து  நின்றிருந்தான் ..  அவளது கரத்தை பற்றிருந்த  அவனது பிடி தானாய் தளர்ந்தது  ..  சற்றென்று அவனை எதிர்நோக்கியவள் !

” இல்லை நோ … அர்ஜுன் அப்படி பண்ணல …. இல்லவே இல்லை  ”  –   குற்ற உணர்வில் மோனிஷா  கதறினாள் …

” என்ன மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கீங்க எங்களை பார்த்தா எப்படி தெரியுது … ப்ளீஸ் கெட் அவுட் ” – மஹிமா கத்தினாள் …

” மேம்  ப்ளீஸ் “- மோனிஷா கெஞ்சினாள் .

” அவுட் ” என்றாள் .

‘ உண்மைதான் ‘ – ஒற்றை வார்தை தான் அர்ஜுனை மீண்டும் இருளில் தள்ளியது …

தடுமாற்றத்துடன்  வெளியே சென்றான் …  நண்பர்களும் அவனுடன் செல்ல … மோனிஷா அழுது கொண்டே அவன் பின்னால் சென்றாள் !

” அர்ஜுன் அர்ஜுன் ப்ளீஸ் ஐயம் சாரி ” என்றபடி அர்ஜுனின் எதிரே நின்று மன்றாடினாள் …

அசைவின்றி நின்றான் …  கோபம் ஆக்ரோஷம்  என்று எந்தவித உணர்வுமின்றி நின்றான் .

” ப்ளீஸ் அர்ஜுன் ” – கெஞ்சினாள் …

” யு ஜஸ்ட் ஷட் அப் ” –  கோபத்தில்  வெகுண்ட தர்ஷித் தன் நிலை தவறி மோனிஷா மீது கை ஒங்க … இருவருக்கும் இடையில் வந்த அர்ஜுன்

‘ நெவெர்  எவர் ‘ – என்னைக்கும் இப்படி பண்ணனும்ன்னு  நினைச்சி கூட பார்க்காத …  என்பதை இரெண்டே வார்த்தையில் கூறி … பதில் பேசாமல் அங்கிருந்து சென்றான் .

” இப்போ கூட அர்ஜுன் அவளுக்காக  என்கிட்ட  கோபப்படுறான் ” – ஆதங்கத்துடன்  தர்ஷித் கேட்க

” மோனிஷாவை  அவ்வளவு லவ் பண்ணிட்டு இருக்கான் டா ” – தர்ஷித்தை  சமாதானம் செய்தான் ரோஹித் .

விடுதியில் மோனிஷா தான் செய்த தவறை எண்ணி மிகவும் வருந்தினாள். ரக்ஷிதா  எவ்வளவோ  முயன்றும் மோனிஷாவை சமாதானம் செய்யவே  முடியவில்லை .

” தப்பு பண்ணிட்டேன் , அந்த நிலைமையில கூட எனக்காக அவன் ப்ரண்ட் கிட்ட கோபப்பட்டான்  தப்பு பண்ணிட்டேன் ரக்ஷு ” – கதறி அழுதாள் .

” மோனிஷா ப்ளீஸ் “

” அவனையும் புரிஞ்சிக்கல அவன் காதலையும்  புரிஞ்சிக்கல “

” வாட் காதலா ” – ரக்ஷு புரியாமல் பார்த்தாள் ” அவன் உன்னை லவ் பண்றானா  “

” ஆமா “

“நீ “

” ம்ம்ம் ” – மோனிஷாவின்  பதில் ரக்ஷிதாவுக்கு  அதிர்ச்சியை கொடுத்தது

” ஏன் சொல்லல “

” அப்போ  புரியல … இப்போ தான் முழுசா உணர்றேன் “

“ச்ச ” – நெற்றியை நீவினாள் ரக்ஷிதா …

” நான் அர்ஜுன பார்க்கணும் “

” இந்த நிலைமையில நோ நான் விடமாட்டேன் “

” நான் பார்க்கணும் அவன் என்னை வர சொல்லிருக்கான் “

” அப்போ சொன்னான் , ஆனா இப்போ அவன் கண்டிப்பா வர மாட்டான் “

” வருவான் நான் போகணும் ” – பிடிவாதம் பிடித்தாள்.

விடுதியில்  இருந்து ஐந்து மணிக்கெல்லாம்  ஆட்டோவில்  கிளம்பியவள்  சென்னை  ட்ராபிக்கில் சிக்குண்டு  ஏழு மணிக்கு  தான்  ஹோட்டல் பாரடைஸை அடைந்தாள் .. ‘ அவன் வந்திருப்பானோ ! லேட் ஆகிடுச்சே கோபப்படுவானோ !’ என்று எண்ணியபடி ஆட்டோவில் இருந்து இறங்கினாள்.

ஹோட்டல் பாரடைஸ்  சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர  ஹோட்டலில்  முதன்மையானது  , இதுவரை இப்படி  ஒரு பெரிய ஹோட்டலை   மோனிஷா இதற்கு முன்பு கண்டதில்லை  வெளிப்புறமே அவ்வளவு  பிரம்மாண்டமாய்  இருந்தது . சிறு  தயக்கத்துடன்  முன்னேறினாள் … மோனிஷா  உள்ளே நுழைந்ததும்   அவளது அருகில்  வந்த சீருடை அணிந்த  பணிப்பெண்  அவளிடம் விசாரிக்க … மோனிஷா தன் பெயரை சொன்னதும்  அந்த  பெண்  மோனிஷாவை  அழைத்து  சென்று  மொட்டை  மாடியில் காத்திருக்கும்  படி   கூறி  அங்கிருந்து  கிளம்ப … அவளை தடுத்த மோனிஷா

” யாருமே இல்லையே “

” யஸ் மேம் மொத்த  ஹாலையும்  மிஸ்டர்  அர்ஜுன் புக் பண்ணிருக்காங்க ” – ஆச்சரியத்தில்  மோனிஷாவின் விழிகள் விரிந்தது

“எனி திங்க் எல்ஸ் மேம் “

“நோ …நத்திங்.. தேங்க யு  ” என்றவள் … பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தாள் .

அழகிய நிலவொளியில் ஓபன் டாப்  ஹால் மிகவும் ரம்மியமாக   காட்சியளித்தது  … அழகிய மேசையுடன்  கூடியே இரெண்டே நாற்காலி .. மேசையின் மத்தியில் சிவப்பு நிற மெழுகுவர்த்தி …  ஆங்காங்கே விட்டுவிட்டு மிளிரும்   விளக்குகள் …   நடக்கும் பாதையில்    சிவப்பு  ரோஜாவின்    அலங்காரம்…. காற்றில் வீசிய ரோஜா மலரின் நறுமணம்  … மேசையில் மூடிவைக்கப்பட்டிருந்த  உணவு ,  அதன் அருகில்  பனிக்கட்டிகளுக்குள் சேம்பையின்  பாட்டில்  …  என்று எல்லாம் மோனிஷாவுக்கென்று  சிறப்பாக  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது… கண்டவளின் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும்  அர்ஜுனின் மனநிலையை குறித்த  கவலை அவளை அச்சுறுத்தியது …  அணைத்து ஏற்பாடுகளும்  நன்றாகத்தான்  இருக்கிறது ,  ஆனால் அர்ஜுன் எங்கே ? உள்ளத்தில்  ஒரு வித  பதட்டம் இருந்தாலும் அதற்கு  மிஞ்சிய   எதிர்பார்ப்பும் இருக்க .. அவனை காணவில்லை என்றதும் பாவையின் பார்வை சுணங்கியது .

ஆனால் தக்க சமயத்தில் வந்த  குழைவான இசை அவளது செவியை வருட … வீசிய தென்றல் காற்றில்  தேகம் தளிர்த்தவள் . விழிகளை மூடியபடி இசை மழையில் நனைந்து  கொண்டிருந்தாள் .

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!