ஓ காதல் கண்மணி 23
– நெமிரா
வணக்கம் நட்பூஸ் ,
விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .
ஓ காதல் கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …
படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …
இதுவரை …..
க்ளாசிக் அகாடெமி என்னும் பெயரை கேட்டதும் நிஹரிக்காவின் விழிகள் தானாய் கசிந்தது …
இனி……
நீல வானத்தில் இருந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப் பொலிந்து கொண்டிருந்தான் … பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதியுடன் உறங்கிக்கொண்டிருந்தது … ஆனால் மூவர் மட்டும் அமைதி இழந்து தவித்து கொண்டிருந்தனர் .
வாய் திறந்து நிற்கும் வறண்ட பாலைவனம் வான் துளிக்காக ஏங்குவது போல … மோனிஷாவின் வறட்சி அடைந்த இதயம் அர்ஜுனின் காதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்க …
மறுபுறமோ இருண்ட வானின் முகிலை கிழித்து வெண்ணிலா தன் ஒளிக்கற்றைப் பாய்த்து இருளில் இருந்து வானை மீட்பது போல … தன்னை இருளில் இருந்து மீட்க்க மோனிஷாவின் காதல் வராதா ? என்று மோனிஷாவை எண்ணி அர்ஜுன் வேதனை அடைந்திருக்க …
புல்நுனியில் துயில் கொள்ளும் பனித்துளியை விரட்டும் சூரியனை போல தன் தாயின் மனதில் நீங்காமல் துயில் கொண்டிருக்கும் துயரை எப்படி விரட்டுவது என்கின்ற கவலையில் சலீம் இருந்தான்.
பால்கனியில் நிலவை வெறித்து நோக்கியபடி நின்றுகொண்டிருந்த நிஹரிக்காவின் ஆழ்ந்த சிந்தனையை கலைக்கும் விதமாய் சலீம் ,
” சிந்தனை செய் மனமே ” என்று ராகம் போட்டபடிஅவளது அருகில் வர … புன்னகைத்தபடி அவன் பக்கம் திரும்பியவள் .
” பாட்டெல்லாம் பயங்கரமா இருக்கு “
” எல்லாம் தங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டது தான் தாயே ” – அழகாய் சிரித்தான் …
” பேசகத்துக்கிட்ட சலீம் “
” ஆஹான் … சிந்தனையெல்லாம் பயங்கரமா இருக்கு… பர்த்டே பேபி இப்படி சாப்பிடாம இருக்க கூடாது … எதுவா இருந்தாலும் சாப்டுட்டே யோசிங்க … ஏதோ நானே ட்ரை பண்ணிருக்கேன் ” என்ற படி உணவை பரிமாறினான் …
கேலியாக அவன் சொன்னாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அறிந்திருந்த நிஹரிக்காவின் வதனம் கவலையில் கூம்பியது …
” ஏன் மா இன்னும் அவங்களையே நினைச்சிட்டு இருக்கீங்க ? வொய் டோன்ட் யு ஃபர்கெட் தெம் ? ” வாடிய முகத்தை பார்த்தபடி கேட்டான் …
” எப்படி பா ” – இயலாமையுடன் கேட்டாள்
” எல்லாம் என்னால தானே ” – குற்றவுணர்வு விழியில் தெரிந்தது
” நோ சலீம் அப்படி இல்லை “
” என்னை விட்டு நீங்க போயிருக்கணும் மாம் “
” அப்போ அன்னைக்கு யாரும் இல்லாம அனாதை மாதிரி ரோட்ல நான் நின்னப்போ நீயும் என்னை கண்டுக்காம போயிருக்கலாமே ! ஏன் போகல? “
” முடியல மாம் “
” சலீம் பிரச்சனைக்கு காரணம் நீயோ ! இல்லை வேற யாரோ ! கிடையாது … நான் தான் …நான் பண்ணின ஒரு தப்பு எல்லாரையும் கஷ்டப்படுத்து எதுவும் இனிமே திரும்ப வர போறதில்லை … ” – விரக்தியுடன் கூறினார் .
” அந்த பொண்ண காலேஜ்ல பார்த்திருக்கியா ?”
” இல்ல மா நியூ அட்மிஷனா இருக்கும் …”
” உனக்கு எப்போ காலேஜ் “
” ப்ராஜெக்ட் கையில வந்துருச்சு மா … நாளையில இருந்து போக வேண்டியது தான் ”
” ம்ம்ம் “
” மாம் உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்லாம மறைச்சிட்டேன் ..
நீங்க எப்படி ரியாக்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியல ” – தயங்கியபடி கூறினான்
” என்ன விஷயம் பா? ” – பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
” சொல்லுவேன் ஆனா நீங்க டென்ஷன் ஆக கூடாது ” – கண்டிப்புடன் கூறினான் ..
” மாட்டேன் பா சொல்லு … “
” பார்கிங்ல நான் அர்ஜுனை பார்த்தேன் “
” உன்கிட்ட ஏதும் பேசினானா ” – ஆர்வத்துடன் கேட்டார் ..
” மாம் ஆர் யு சீரியஸ் … அவன் என்கிட்ட பேசிட்டாலும் ” – சலித்துக்கொண்டான்
” எப்படி பா இருந்தான் ? “
” அவன் நல்லா இல்லை மா ! … ஃபுள் பூஸ்ட்ல இருந்தான் மா … பத்தா குறைக்கு அழுதுட்டே கார்ல ஏறினான் ? அவன் மேல பயங்கரமா கோபம் வருது ஆனா அழும் போது கஷ்டமா இருக்கு !”
” குடிச்சிருந்தானா ?” – கவலையுடன் கேட்டார் .., ” ஏன் அழுதுருப்பான் ?” – விழிகள் கசிந்தன …
” தெரியல மா .. ஆனா எனக்கென்னவோ அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் ஏதோ ஒரு கனெக்ஷ்ன் இருக்குன்னு தோணுது … ஐ திங்க் லவ் ப்ராப்லமா கூட
இருக்கலாம் “
” லவ் பண்றானா என்ன ?” – முகம் மலர்ந்தது
” மா இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும் ” – இந்த முறை தயங்கினான் …
” சொல்லு பா என்னாச்சு ? இதுவும் அர்ஜுனை பத்தியா பா ?” – என்ன சொல்ல போகிறானோ என்னும் கலவரம் அப்பட்டமாய் நிஹரிக்காவின் முகத்தில்
தெரிந்தது …
” மா டென்ஷன் ஆக கூடாதுன்னு சொல்லி தானே சொன்னேன் போங்க நான் எதுவும் சொல்ல மாட்டேன் ” – அன்புடன் கோபித்தான் …
” சொல்லு பா ப்ளீஸ் ” – கெஞ்சினாள்
” இந்த விஷயத்தை உங்ககிட்ட இருந்து நான் மறைக்கிறது நியாயமா இருக்காது அதுனால தான் சொல்றேன் … அர்ஜுனை…… சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க மா ”
– குரலில் வருத்தம் தெரிந்தது ..
” என்ன ? ஏன் ? அவங்க எப்படி அப்படி பண்ணலாம் ?” – குரல் கரகரத்தது.
” எதுவும் எனக்கு தெரியாது மா … இதுவே பசங்க சொல்லி தான் தெரியும்”
” எனக்கு எதுவும் சரியா படல சலீம் “
” ஆனா மா நாம என்ன பண்றது “
” நாளைக்கு நான் அங்க போகப்போறேன் பா “
” அங்கையா நோ மா ” – திட்டமாக மறுத்தான் .
” தடுக்காத சலீம் “- உறுதியாக கூறினாள்.
பிடிவாதம் பிடித்தான் சலீம் ! தன் முடிவில் உறுதியாக இருந்தாள் நிஹரிக்க ..
தாயின் பாசத்திற்கு முன்பு சலீமின் பிடிவாதம் ஆதவன் முன்பு மறைந்து போகும் பனித்துளியை போல கரைந்து போக , இறுதியாக தானும் உடன் வருவதாக
கூறி தாயின் கூற்றை ஏற்றுக்கொண்டான் ….
மோனிஷா விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு செல்லாவிட்டாலும் தன் வேலைக்கு விடுப்பு கொடுக்காமல் தன் அறையில்
சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி மடிக்கணினியில் மூழ்கியிருந்தான் அர்ஜுன் …
” அர்ஜுன் சீக்கிரமா முழிச்சிட்டியா பா ” – என்றபடி அர்ஜுனின் அறைக்குள் நுழைந்தார் காயத்ரி , இயல்பாக பேசினாலும் முகத்தில் ஒருவித கலவரம்
அப்பட்டமாய் தெரிந்தது
” எப்போ தூங்கினேன் ? சீக்கிரமா முழிக்கிறதுக்கு ! ” – எரிச்சலுடன் பேசினான் .
” அப்போ ரெஸ்ட் எடுக்கலாமே “
” ம்ம்ம் எடுப்போம் ” – கத்தரித்து பேசினான்
” வேலையா இருக்கியா அர்ஜுன் “
” பார்த்தா தெரியல ” – சிடுசிடுத்தான்
” இல்லை உன்கிட்ட பேசணும் ” – தயங்கினார்
” ம்ம்ம் கேட்டுட்டு தானே இருக்கேன் கேரி ஆன் ” – முகம் கடுகடுவென இருந்தது
” அது வந்து “- சொல்ல முடியாமல் தவித்தார்
” பாட்டி ஆஸ்க் தெம் டூ கெட் அவுட் , அவங்க என் வீட்டு வாசல்ல கூட நிக்க கூடாது வெளிய அனுப்புங்க ” – கணினியை விட்டு விழியை அகற்றாது தீர்க்கமாய்
கூறினான் … முகம் இறுகி இருந்தது .
” உள்ள விட சொல்லு அர்ஜுன் என்னனு கேட்டுட்டு அனுப்பிறலாம்”
” —– ” – கணினியை விட்டு அகன்ற இரு விழிகளும் காயத்ரியை இறுக்கமாய் பார்த்து முறைத்தது.
” அவங்க உன் … ” – சொல்லிமுடிக்கவும்
” ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க ” – காதுகளை இறுக்கமாய் மூடியபடி கத்தினான் … மனிதன் மறைந்து மிருகமானான் … அவன் வீசிய வேகத்தில் மடிக்கணினி
டமார் என்று எங்கோ சென்று விழுந்தது …
” அர்ஜுன் ரிலாக்ஸ் ” – தோளை தொட்டவரை வெடுக்கென்று விரட்டியவன்
” ப்ளீஸ் நீங்க போங்க ” – கத்தினான் … நிலைமையை உணர்ந்த காயத்ரி வெளியே சென்றார் .
கேட் வாசலில் காரின் உள்ளே அமர்ந்தபடி ,
“கதவை திறங்க ” – செக்யூரிட்டி கார்டுக்கு கட்டளையிட்டான் சலீம் .
அவர்களை அடையாளம் கண்டுகொண்டதால் திறக்க மறுத்தான் செக்யூரிட்டி …
” ஹலோ இங்க வாங்க ” – அருகில் அழைத்தான் சலீம் .
தயங்கியபடி வந்த செக்யுரிட்டியிடம் சலீம் சண்டையிட , அவனை தடுத்த நிஹரிக்கா , செக்யுரிட்டியை பார்த்து,
” என்னை தெரியுதா அண்ணா “
” ஆமா அம்மா “
” கதவை திறங்க அண்ணா ” – அடக்கம் கலந்த ஆளுமையுடன் கேட்க .. நிஹரிகாவிடம் மறுத்து பேச முடியாத செக்யூரிட்டி கார்டு கதவை திறந்தார் .
கார் உள்ளே நுழைந்தது அழகான முறையில் பராமரிக்கப்பட்ட தோட்டமும் அதற்கேற்ப அமைந்திருந்த நீரூற்றும் … நிஹரிக்காவின் கடந்த கால நிகழ்வுகளை தூண்டிவிட்டது ..
கார் அந்த பிரம்மாண்டமான பங்களாவிற்கு முன்பு வந்து நின்றது … கதவு திறந்து தான் இருந்தது எனினும் நிஹரிக்காவல் உள்ளே நுழைய முடியவில்லை … விழிகள் கசிந்தன கால்கள் நடுங்கியது … இனிமையான நிகழ்வுகளை எண்ணி சிரிப்பதா ! இல்லை கசப்பான தருணங்களை எண்ணி அழுவதா ! ஒன்றும் புரியாமல் வாசலிலே நின்றாள் …
” மாம் உங்களுக்கு புடிக்கலைன்னா கிளம்பலாம் … நீங்க கஷ்டப்படாதீங்க ” – சலீமின் குரல் வருடியது .. விழிகளை துடைத்தவர் .. தயிரியத்தை வரவழைத்தபடி சலிமுடன் உள்ளே நுழைந்தார் .
சலீமும் ஒருவித இறுக்கமான மனநிலையில் தான் உள்ளே நுழைந்தான் .
வருடங்கள் உருண்டோடியதில் வீட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை பார்த்தவுடனே கண்டுகொண்டாள் … பெல்ஜியம் கட் டைமண்ட் கிளாஸ் ஒர்க் அலங்கார வேலைப்பாடுகள் எதோ கண்ணாடி மாளிகைக்குள் நுழைந்தது போல பளபளத்தது … கருப்பு வெள்ளை நிற அலங்கார பொருட்கள் … அதன் நடுவே ஆங்காங்கே எட்டிப்பார்த்த பழங்கால பொருட்கள் எல்லாம் நிஹரிக்காவை வெகுவாய் கவர அனைத்தும் அர்ஜுனின் ரசனைக்கேற்ப மாறிருப்பதை புரிந்து கொண்டாள்.
” அர்ஜுனோட கோட்டைக்குள்ள வந்த மாதிரி இருக்கு மாம் ” – சலீம் அவளது எண்ணவோட்டத்தை ஒரே வரியில் கூறினான் .
” ஆமா பா ” – என்றவள் … மாடிப்படியில் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க , கவலையும் கலவரமும் தொனித்த முகத்துடன் காயத்ரி மாடியில் இருந்து
இறங்கிக்கொண்டிருந்தார் .
வீட்டிற்குள் அவர்களை கண்ட மறுநிமிடமே காயத்ரியின் கலவரம் இரட்டிப்பானது …
” எப்படி உள்ள வந்தீங்க ? ” – குரல் கடுகடுத்தது …
” பேசணும் “
” என்ன சொல்லணுமோ சொல்லிட்டு கிளம்புங்க ” – அண்ணார்ந்து அர்ஜுனின் அறைக்கதவை பார்த்தபடியே கேட்டார் …
” அது வந்து —” – காயத்ரியின் பதற்றத்தை கண்டு தயங்கினாள் நிஹரிக்கா
” வாட் ” – எரிச்சலோடு கேட்டார் காயத்ரி.
” என்னாச்சு ஏன் கவலையா இருக்கீங்க ?”
” வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்ப சொல்லு சலீம் ” – சலீமின் முகத்தை பார்த்தபடி கூறினார்…
” அத்தை ” – மறுநிமிடமே காயத்ரியின் பார்வை நிஹரிக்காவை எரித்தது .. நிஹரிக்காவின் வதனம் கூம்பியது ..
இனி ஒரு நிமிடம் கூட காரணம் இன்றி அங்கே நிற்க கூடாது என்று நினைத்த நிஹரிக்க ” அர்ஜுனை ஏன் சஸ்பெண்ட் பண்ணுனீங்க ” – சற்றென்று கேட்க . காயத்ரி பதில் சொல்ல முடியாமல் விழிக்க ..
” தாய போல பிள்ளை , என்ன பண்றது ? இப்போ விட்டா பின்னாடி ரொம்ப கஷ்ட்டமா ஆகிட கூடாதே அதான் பனிஷ் பண்ண வேண்டியதா போகிடுச்சு ” – விஷமமாய் சிரித்தபடி வந்தாள் மஹிமா … அவளது இரு கருவிழிகளும் கருநாகத்தை விட அதிகமாய் விஷத்தை கக்கியது .
” மஹிமா மைண்ட் யுவர் வர்டஸ் ” – சீறினாள் நிஹரிக்கா.
” உன் ராஜியம் முடிஞ்சு போய் ரொம்ப நாள் ஆச்சு நிஹரிக்கா … எவ்வளவு வேணும்னாலும் கத்திக்கோ ஒன்னும் நடக்காது ..” – மனதிற்குள் எண்ணியவள் எள்ளி
நகைத்தாள் .
” நீங்க யார் என்ன சொன்னாலும் ஐ டோன்ட் கேர் … ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் .. என் பையனை நல்லா பாத்துக்குவீங்கன்னு தான் நான் இவ்வளவு நாள் தள்ளி இருந்தேன் … என் பையனுக்கு மட்டும் அநியாயம் நடக்குதுன்னு தெரிஞ்சா … என்னை பழைய நிஹரிக்காவா பார்க்க வேண்டி இருக்கும் ” – கடுமையாக எச்சரித்தாள் .
“குப்பை மாதிரி தெருவுல வீசியும் உங்க அகங்காரம் மட்டும் கொஞ்சமும் குறையல ” – வார்த்தைகள் தேளாய் கொட்டியது … மனம் துன்பமுற்றது .
காயத்ரி மௌனமாய் இருக்க … சலீம் தாய்க்காக கடுங்கோபத்தை உள்ளடக்கியபடி அமைதியாக இருந்தான் .
நிலைமை கைமீறுவதற்குள் அவர்களை அங்கிருந்து அனுப்ப சித்தம்கொண்ட காயத்ரி …
” பழசை ஏன் இப்போ பேசிட்டு இருக்க மஹிமா ” – மருமகளை அடக்கியவர்
” அர்ஜுன் வர்றதுக்கு முன்னாடி ப்ளீஸ் நீ இங்க இருந்து கிளம்பு நிஹரிகா”
” காரணம் தெரியாம என்னால இங்க இருந்து போக முடியாது “
” என்ன தான் உனக்கு வேணும் “
” அர்ஜுன ஏன் கஷ்டப்படுத்துறீங்க “
” அதை கேட்க நீங்க யாரு “- திடிரென்று வந்த அர்ஜுனின் கடுமையான குரல் அனைவரையும் திடுக்கிட செய்திருந்தது . காரிருளை கிழித்தெறியும் மின்னலை போல அவனது வார்த்தைகள் அவளது இருதயத்தை கிழித்தெறிந்தது…
” நான் … உன் அம்மா …டா ” – துயரம் தாக்கியதில் உள்ளத்தின் அணை உடைந்து கண்ணீர் வெள்ளைப் பெருக்காய் மாறியது …. வார்த்தைகள் தடுமாறியது ….கணவனை இழந்தபொழுதை விட இப்பொழுது அதிகமாய் கலங்கினாள் …..
“அம்மாவா … யு ப்ளடி வம்ப் ” – வீடே அதிரும் படி கத்தினான் … அவன் போட்ட சத்தத்தில் வேலையாட்கள் அனைவரும் எட்டியெட்டி பார்த்து முணுமுணுத்தனர் … அவமானத்தில் கூனிக்குறுகி நின்றாள் நிஹரிகா …
-தொடரும்