Oh kadhal kanmani 25

download

Oh kadhal kanmani 25

வணக்கம் நட்பூஸ் ,

அனைவரும் என் மேல மிகுந்த வருத்தத்துடன் இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் … நான் என்ன சொன்னாலும் அது ஒரு காரணம் சொல்வது போல தான் இருக்கும் … என்னால உங்க மனநிலைமைய புரிஞ்சிக்க முடியுது ..

ஒவ்வொரு தடவையும் உங்ககிட்ட ஒரு காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்க எனக்கு ஒருவித குற்ற உணர்ச்சியா இருக்கு பா .. அதான் இந்த முறை அடுத்த அத்தியாயத்தை உங்கிட்ட மன்னிப்பு கேட்க வந்திருக்கேன் ..

கீழே விழுந்து ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் பா … ரைட் ஹண்ட்ல செம வலி … ஒன் வீக்காவது ஸ்ட்ரேன் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அதான் அப்டேட் குடுக்க முடியல … சாரி டீயர்ஸ் …

விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி . விட்டு கொடுக்க மாட்டிங்கன்னு நம்பி “ஓ காதல் கண்மணி”யின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …

  காதல்  கண்மணி 25

–  நெமிரா

இதுவரை  …..

விருட்டென்று அறையின் கதவு திறக்கப்பட்டதில் திடுக்கிட்டவள்  வாசலில்  அர்ஜுனை கண்டதும்  மகிழ்ச்சியில் உடம்பெல்லாம் சிலிர்க்கநொடி கூட தாமதிக்காது விரைந்து சென்றுநீ என்னை ஏத்துக்குவன்னு எனக்கு தெரியும்என்றபடி , அர்ஜுன் பின்னால் இருக்கும் மாறனை கவனிக்காது அவனது மார்பில் தன் முகத்தை புதைத்த படி  தன் மென் கரங்களால் அர்ஜுனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்

இனி….

” மோனிஷா “- ஓங்கி ஒலித்த அவனது குரலில் லேசாய் துணுக்குற்றவள்  அர்ஜுனிடம் இருந்து விலகாது விழித்திருந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஜிவு ஜிவுவென்று சிவந்திருந்த அவனது முகம் அவனது கோபத்தின் உக்கிரத்தை காட்டியது ….

‘ இவன் தான நம்மளை வரச் சொல்லி லெட்டர் அனுப்பியிருந்தான் அப்புறம் ஏன் கோபமா இருக்கான் !’ – ஒன்றுமே புரியவில்லை மோனிக்கு . குழப்பம் பாதி பயம் பாதி ஆட்கொள்ள .  தன் அணைப்பின் இறுக்கத்தை தளர்த்தியவள் …

” என்னாச்சு அர்ஜுன் ” – அவனது கரங்களை மெல்ல பிடித்தபடி  கேட்டாள் … அவளது இதயம் படபடவென அடித்துக்கொண்டது …

” ஷட் அப் ” – பற்களை நறநறத்தபடி கத்தியவன் …  வெந்நீர் பட்டது போல வெடுக்கென்று அவளது கையை உதறி  அவளை விட்டு விலகி நிற்க …

பொள்ளெனப் அவன் போட்ட சத்தத்தில் திடுக்குற்றவள் துண்ணெனத் தன் நெஞ்சம் துடிக்க கலங்கி நின்றாள். … ஆனால் இது எதையுமே கவனிக்காதது போல தன் கையில் இருந்த கோப்பை புரட்டிக்கொண்டிருந்த மாறன் ,

” நான் சொல்ற வரைக்கும் என் கபீன்க்கு யாரும் வர கூடாது ” என்ற அர்ஜுனின் உத்தரவை  ஏற்று கொண்டு வெளியே சென்றார் …

அர்ஜுனின் கோபத்தின் காரணத்தை புரிந்து கொண்டவள் தன் விழிநீரை துடைத்தபடி ,

” சாரி அர்ஜுன் நான் அவரை கவனிக்கலை உன்னை பார்த்த சந்தோஷத்துல ….” ,

” இங்க என்ன பண்ற ” – மோனிஷா முடிப்பதற்குள் அவளை இடைவெட்டியபடி கேட்டான் … விழிகள் கனலை கக்கியது .

” நீ தானே அர்ஜுன் என்னை வரச்சொன்ன ” – பயம் தொண்டையை அடைத்துக்கொள்ள … தடதடவென்று உடலும் இதயமும் அடித்துக்கொள்ள … பயத்துடன் கூறினாள்…

” நான் … உன்னை … வாவ்  …இது என்ன புது  ட்ராமா   ??” – நக்கலுடன் கேட்டான் …

” ——– ” – அவமானத்தில் தலை குனிந்தபடி அமைதியாக நின்றாள் .

” சொல்லு ” – குரலில் தெரிந்த உச்சம் அவனது கோபத்தின் அளவை தெளிவாய் காட்டியது …

” ஆர்….ஜூ…ன் ” – துயரம் நெஞ்சை அடைக்க … உலர்ந்த நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள  … சீராக பேசமுடியாமல் தடுமாறினாள் … கண்ணீர் தாரை தாரையாக விழியில் இருந்து இறங்கியது …

” ஸ்டாப் அக்ட்டிங் மோனிஷா … இப்படி அழுது அழுது என்னை எவ்வளவு தான் ஏமாத்த போற ” –  டேபிள் மேல் இருந்த குளிர்பானத்தை தரையில் தட்டிவிட்டபடி கேட்டான் …  அது சுக்குநூறாக  உடைந்து சிதறியது …

” ஆ … ” –  பயத்தில் கத்தினாள் .. கண்ணீர் வெள்ளப்பெருக்காய் கரைபுரண்டது …

” அழாத ” – அன்று தன் உயிரை குடித்த அந்த அகன்ற  உருண்டை விழிகள் இன்று  கண்ணீர் சிந்துவதை காண இயலாதவன் …. கோபத்தை அடக்கியபடி கூறினான் …

” நான் உன்னை ஏமாத்தணும்ன்னு  என்னைக்கும் நினைச்சது இல்லை அர்ஜுன் … நீ வர சொன்னதுனால  தான் நான் வந்தேன் ” – அவன் மறுவார்த்தை பேசுவதற்குள்  காகிதத்தை எடுத்து நீட்டினாள்.

‘ மை டியர் ஹனி ‘  காகிதத்தில் உள்ள முதல் வரியை கண்ட  மறுநொடியே அர்ஜுனுக்கு அனைத்தும் தெளிவாய் விளங்க … தன் தவறை எண்ணி மனம் வேதனை அடைந்தவன் … விடாமல் அழுது கொண்டிருக்கும் மோனியை சமாதானம் செய்ய முனைந்த நேரம் …

” சாரி அர்ஜுன் உன்னை  ஹர்ட் பண்ணிருந்தா என்னை மன்னிச்சிரு …

உன்னை இப்போலாம் ரொம்ப ரொம்ப புடிக்குது … உன்னை எனக்கு தேடுது …

உன்னை பார்த்ததும் சந்தோஷத்துல கெட்டி புடிச்சிட்டேன் அவங்கள நான் சத்தியமா பாக்கல …

உன்னை ஏமாத்தணும்ன்னு நான் என்னைக்கும் நினைச்சது இல்லை அர்ஜுன் …

என் அப்பாக்கு அப்புறம் நான் பாதுகாப்பா இருக்கிறது உன்கிட்ட தான் …

ஐ லவ் யு அர்ஜுன் …இனிமே உன்னை கஷ்ட படுத்த மாட்டேன் நான் போறேன் .” – அவனது முகத்தை கூட காணாது  கனத்த மனதுடன்  அங்கிருந்து கிளம்பினாள் .

மனதில் இருந்து அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனது மனதை பிசைந்தது … அவள் செல்கிறாள் அர்ஜுன் … நிறுத்து ! தடுத்து நிறுத்து ! உள்ளம் கூச்சலிட்டது …  ஆனால் ஏதோ ஒருவித தயக்கம் ஆட்க்கொள்ள …  அமைதியாய் நின்றான் .

—————-

ரிச்சி காஃபி ஷாப்  வழக்கம் போல மின்னும்  வண்ண விளக்குகள் … இழையும் இசை என்று வருபவரை மதி மயக்கிக் கொண்டிருக்க … வர்ஷா மற்றும்  இது எதற்கும் மயங்காமல்  , தன் முன்னே இருக்கும் எஸ்பிரெசோ காஃபியையும்  சுவைக்காமல் தன் அலைபேசியையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

சென்னை சாலை நெரிசலுக்கு இடையே  விர்ரென்று வழுக்கிக் கொண்டு அந்த  ரிச்சி  காஃபி ஷாப்பின்  வளாகத்தினுள் நுழைந்த சிவப்பு நிற டஸ்ட்டர் காரிலிருந்து கம்பீரமாக இறங்கினான் சலீம் .ஆறடி உயரம், சிவந்த நிறம்,உயரத்திற்கேற்ற உடல் பருமன் என யாரையும் ஈர்க்கும் வசீகரமான,ஆரோக்கியமான இளைஞன்.

நினைத்ததை சாதித்துக்காட்டும் குணம் கொண்டவன் . எந்த ஒரு கடினமான காரியத்தையும் முயன்று,  அயராமல் உழைத்து அதில் கிடைக்கும் வெற்றியை விரும்புபவன் .

எவ்வளவு தோல்வியை சந்தித்திருந்தாலும்  அயராமல்  வெற்றிக்காக போராடுபவன் .  ஈன்றவளை இழந்திருந்தாலும்  ஈன்றவளுக்கு இணையாக தன்னை அன்போடு வளர்த்துவரும் தன் வளர்ப்பு தாய் நிஹரிகா என்றால் அவனுக்கு உயிர் என்றே சொல்லலாம் … தன் தாய் நிஹாக்கு பிறகு அவன் அதிகம் நேசம் கொண்டது என்றால் அது அவனது காதலி வர்ஷா தான் .

சில ஆண்டுக்கு முன்பு , சலீமிற்கு அப்பொழுது ஒரு பதினேழு  வயது இருக்கும்  பன்னிரெண்டாம் தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு  . பட்டபடிப்புக்கான நுழைவு தேர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தான் …

அப்பொழுது அர்ஜுன்  ஏழாம் வகுப்பு முடித்திருந்தான் … இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும்  பெரிதாக ஒட்டி உறவாடியது இல்லை … அதற்கு முக்கிய காரணம் அர்ஜுனின் தந்தை கார்த்திக்  தான் … சிறு வயதில் இருந்தே தந்தை மீது அதீத பாசம் வைத்திருந்த அர்ஜூனால் கார்த்திக்கின் பேச்சை மீறி சலீமிடம் நெருங்க முடியாமல் போகவே தந்தைக்கு பிடிக்காத  சலீமை விட்டு ஒதுங்கியே இருந்தான் அர்ஜுன்  .

 ஆனாலும் வெளியில் இருவரும்   ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை. கார்த்திக் சலீமை அதிகமாய் வெறுத்ததால்  நிஹரிகா  அவனை அரவணைத்து  தாய் ஸ்தானத்தில்  இருந்து அன்பு செலுத்தி வந்தார் .

இது முதலில் காயத்ரி கார்த்திக் இருவருக்கும் பிடிக்காமல் போனாலும் … காலப்போக்கில் காயத்ரி சலீமின் நல்ல குணங்களை பார்த்து அவனை புரிந்து  ஏற்றுக்கொண்டார்  … ஆனால் கார்த்திகால் சலீமை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை … 

” அது எப்படி பெத்தபுள்ளையையும் அனாதையையும் ஒரே மாதிரி  பாக்க முடியும் … சலீம் சலீம்ன்னு நீ அர்ஜுனை ஒழுங்காவே பாத்துக்க மாட்டிக்கிற ” – என்று தவறாய் புரிந்துக்கொண்டு  கார்த்திக் பலமுறை நிஹரிகாவிடம் சண்டை போட்டிருக்கிறார் … ஆனாலும் நிஹரிகா அர்ஜுன், சலீம் இருவரையும் வேற்றுமையில்லா அன்புடனே வளர்த்து வந்தார் .

ஒரு பக்கம் கார்த்திக் நிஹரிகா இடையே உள்ள விரிசல் வளர்ந்துகொண்டே போக , மறுபக்கம் ஏற்கனவே நிஹரிகா மீது பொறாமை கொண்டிருந்த மஹிமா இந்த பிரச்சனையை தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டு சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம்  கார்த்திக் மனதில் நிஹரிகாவுக்கு  எதிராய் நஞ்சை விதைத்துக்  கொண்டே இருந்தாள் .

இப்படி இருக்க  சலீமின் எண்ட்ரன்ஸ் எக்ஸாமும் அர்ஜுனின் பிறந்தநாளும் ஒரே தினம் வர… வேறு வழியின்றி  நிஹா  சலீமை  அழைத்துக்கொண்டு  கல்லுரிக்கு சென்று  விட்டு தேர்வை முடித்துவிட்டு அர்ஜுனின் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கெடுப்பதற்காக சீக்கிரமாக திரும்பி வந்துக்கொண்டிருக்கும் வழியில் கார் பழுதாகி போக  அதை  சரி செய்துவிட்டு இருவரும் நேரம்  கடந்து வீட்டுக்கு வந்தனர்.

ஏற்கனவே நிஹா தன் பேச்சை மீறி சலீமுடன் சென்றததால் கோபத்தில்  இருந்த கார்த்திக் , அவர்கள் நேரத்திற்கு வராமல் போகவே … கடுமையான  ஆத்திரம் கொண்டார் .. அதை தனக்கு சாதகமாய் ஆகிக்கொள்ள எண்ணிய மஹிமா கார்த்திக்கிடம் ,

” அத்தான் நீங்க அக்காக்கு ரொம்ப இடம் குடுத்துடீங்க …. அக்காக்கு அர்ஜுன விட சலீம் தான் முக்கியம் …

பாருங்க சின்ன பையன் தன்னுடைய பிறந்தநாளுக்கு தான் அம்மா வரலைன்னு ரொம்ப ஏங்கி போய்ட்டான்  …

சலீம் மேல காட்டுற அக்கறைய கொஞ்சம் அர்ஜுன் மேலையும் காட்டலாம் …  அத்தான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்காதீங்க ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் …

சலீம் நிஜமாவே அனாதை தானா? இல்லை , அவங்க சலீம் மேல இவ்வளவு அன்பா இருக்கிறத பார்த்தா அவன்  தான் அவங்களோட சொந்த பையன் மாதிரி தெரியுது …

ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா யார்கிட்டயும் தப்பா .. இல்லை  அதாவது யாரும் அக்காவை ஏமாத்தி அப்படி பொறந்த பையனா இருப்பானோ  ! இருக்கவும் வாய்ப்பு இருக்குல்ல… ” –  என்று எரியும் நெருப்பில்  எண்ணையை வாரி ஊற்றுவது போல கார்த்திக்கின் கோபத்தை தூண்டிவிட்டதுடன் சந்தேகத்தையும் சேர்த்து விதைக்க  ஏற்கனவே சந்தேகம் புத்திகொண்ட  கார்த்திக் மஹிமா கூறியது  போல் ஏன் இருக்க கூடாது  என்று தன் மனைவியை பற்றி  தவறாய் சிந்திக்க தொடங்கினார்…

மஹிமா விதைத்த சந்தேகம் என்னும் நச்சு கார்த்திக் மனதில்  விருட்சமாய்  வளர்ந்தது  … கோபம் சந்தேகமாய் மாற … கார்த்திக் நிஹரிகாவின்  இடையே அது ஒரு பெரிய பிரளையத்தையே  உருவாக்கியது … 

சந்தேகம் ஒரு புற்று நோய்  ஒரு முறை வந்துவிட்டால் அதை மீண்டும் அழிக்க முடியாது …  அன்று மஹிமாவால் தொடங்கிய   பிரச்சனை கார்த்திக் நிஹா இருவரது வாழ்க்கையையும் நரகம் ஆக்கியது … 

இது சலீமிற்கு பெரிய  வேதனையை அளித்தது …  இதற்கு முன்பும் கார்த்திக் தன்னை காரணம் காட்டி நிஹாவை திட்டியுள்ளார்.

 ஆனால் ஒருநாளும் அவர் நிஹாவின் நடத்தையை பற்றி தவறாய் கூறியது இல்லை …ஆனால் இந்த முறை  கார்த்திக்   நிஹாவிடம்  வரம்பு மீறி நடந்துகொள்ள மிகுந்த வேதனை அடைந்தவன் .. தன்னால் நிஹரிகாவின் வாழ்க்கையில் பிரச்சனை வருவதை விரும்பாது அவரை விட்டு பிரிய எண்ணி  தன்னை தேடவேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டு வீட்டில் இருந்து  வெளியேறினான் .

வீட்டை விட்டு சொல்லாமல் வந்ததால் படிப்பு பாதியில் தடைபட ஒரு பாரில் வெயிட்டராய் பணிபுரிந்தான்.

ஐந்து வருடம் சலீமை காணாமல் சொல்ல முடியா துயரம் அடைந்தார் நிஹா.. அவனை தேடாத இடம் இல்லை … அவன் எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே மிகுந்த வேதனையில் தவித்தார் … ஆனாலும் அவர் அவனை தேடும் பணியை கைவிடாமல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார் …

அப்படி  இருக்கும் பொழுது தான் கார்த்திக்கின் மரண செய்தி சலீமுக்கு தெரிய வர … நிஹாவை காண வந்தவன் … யாருமில்லாமல் அவர் நிர்கதியாய் நின்றதை பார்த்து வேதனை அடைந்து மீண்டும் தன் தாயுடன் இணைந்து கொண்டான் …

பிறகு தாயின் வற்புதலில் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி  க்ளாசிக்  அகடெமியில் BCA படித்து  முடித்து மேற்படிப்பான MCA வையும்  அங்கேயே தொடர்ந்து  கொண்டிருக்கிறான். 

மின்னாமலும் முழங்காமலும் பூமிக்கு வரும் மழை போல சலீமின் வாழ்க்கையில்  அவன் அழைக்காமல் தேடாமல் வந்த புது வசந்தமே வர்ஷா .. சலீமுக்கு வர்ஷாவை BCA  படிக்கும் பொழுதே தெரியும் இருவரும் ஒரே வகுப்பில் தான் பயின்றனர் …முதலாம் ஆண்டில் இருந்தே  நட்பாய் வளர்ந்த இருவரது உறவும் படிப்படியாய் காலாய் மலர்ந்தது …

அர்ஜுன் வர்ஷா இருவரும் பள்ளிப்பருவ நண்பர்கள் … தந்தையின் திடீர் மரணத்தால்  கடுமையான மனஉளைச்சலில் இருந்த அர்ஜுன் பன்னிரெண்டாம்  வகுப்பு இறுதி தேர்வை முடிக்காமல் போக ஒரு ஆண்டு கழித்து தன் கல்லூரி படிப்பை தொடர்ந்தான் …

வர்ஷா சலீமின் காதல் அர்ஜுனையும் … அர்ஜுன்  வர்ஷாவின் நட்பு சலிமையும்  ஆரம்பத்தில் வெகுவாய் பாதித்தாலும் … வர்ஷா இருவரையும்  பக்குவமாய்   கையாண்டததால் … இன்று வரை அவளது நட்பும் காதலும் எந்தவித சிக்கலும்  இன்றி  இருக்கின்றது.

கூர்மையான நேர் நாசி கோபத்தில் சிவந்திருக்க லேசாக சிரித்த சலீம்  தன் பார்வையை வர்ஷா மீது பதித்தவாறே அவளை நோக்கி  நடந்துவர … அவன் வருவதை கண்ட வர்ஷா முறைத்தபடி முகத்தை திருப்பிக்கொள்ள .அதை கவனித்தபடியே அவளுக்கு எதிரே வந்து அமர்ந்தவன் …

“என்ன இவ நம்மளை பார்க்கவே மாட்றா ” என்று எண்ணியபடி சலீம் வர்ஷாவையே பார்க்க … அவனது பார்வையை சந்தித்தவள் , அவனை முறைத்தவாறே காஃபியை சுவைக்க  தொடங்கினாள் .

” ஏய்  இன்னும் எவ்வளவு நேரம் தான் கோபமா இருக்க போற “

” எப்போ வரேன்னு சொன்ன எப்போ வந்திருக்க “

” சாரி போதுமா … ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷன் புரிஞ்சிக்கோ “

” சரி அம்மா கிட்ட  பேசுனியா “

” வர்ஷா என்ன பேச சொல்ற “

” புரிஞ்சிக்கோ சலீம் .. உங்க அம்மாவை என் வீட்டுக்கு வந்து பேச சொல்லு  “

” பேசி அப்புறம் என்ன பண்றது “

” கல்யாணம் பண்ணிக்கோ சலீம் “

” வர்ஷா ஆர் யு சீரியஸ் … வேலை இல்லாம எப்படி கல்யாணம் பண்றது .

 கூட படிக்கிற எல்லாரும் கேம்பஸ்ல செலெக்ட் ஆகிட்டாங்க …

என்னை யாரும் இன்டெர்வியுவ்க்கு  கூட கூப்பிட மாட்டிக்கிறாங்க …

அப்படியே கூப்பிட்டாலும் ஏன் இவ்வளவு லேட்டா டிகிரி முடிசீங்கன்னு கேக்கறாங்க …

அவன்கிட்ட போய் நான் என்ன சொல்ல … ஏன் தான் படிச்சேன்னு இருக்கு ” – கவலையுடன்  கூறினான் .

” அம்மா கிட்ட சொல்லு அவங்க ரெபரென்ஸ்ல  ஏதாவது க்ளிக் ஆகும் “

” எத்தனை நாளைக்கு  அவங்ககிட்டயே எதிர்பார்க்கிறது … போட்டு இருக்கிற  டிரஸ் , சாப்பிடற சாப்பாடு , ஓட்டுற காரு ,படிக்கிற படிப்பு எல்லாம் அவங்க தந்தது தான் …  

வேலையாவது  நான் தேடிக்கணும் வர்ஷா … என் வயசு என்ன ? இந்நேரத்துக்கு நான்   செட்டில் ஆகிருக்கணும் … நான் தான் அவங்களுக்கு பண்ணனும்  “

” ஆனா சலீம் என் வீட்ல ரொம்ப ப்ரஷர் பண்ணிட்டே இருக்காங்க “

” சரி … அழாத  பொறுமையா இரு முதல்ல டிகிரி முடிக்கிறேன் அப்புறம் ஒரு சின்ன வேலையாவது கிடைக்கட்டும் நான் அம்மா கிட்ட பேசுறேன் உன்னை விட்ர மாட்டேன் டா “

” எனக்கு தெரியும் “சலீம் சீக்கிரமா ஏதாவது பண்ணு “

” சரி அப்புறம் சொல்லு “

” அர்ஜுன்  காலேஜ்க்கு வந்துட்டானா?  எப்படி இருக்கான் ?”

” வர்ஷா அவனை பத்தியெல்லாம் என்கிட்ட பேசாத … எனக்கு பயங்கரமா கோபம் வரும் “

” அர்ஜுன திட்டாத சலீம் …. அவன் பாவம் “

” வர்ஷா ப்ளீஸ் நம்மள பத்தி மட்டும் பேசுவோம் ” – திட்டமாய் கூறினான்…

மறுத்து பேசி அவன் மனநிலையை கெடுக்க விரும்பாதவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள் . அவர்களது சம்பாஷணை தொடர்ந்து கொண்டிருக்க …

சாலையில் இலக்கில்லாமல்  அர்ஜுனை நினைத்துக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த  மோனிஷாவை இரு விழிகள்  தொடக்கம் முதலே  பின் தொடர்ந்து வந்து   கொண்டிருக்க … அதை கவனிக்காதவள் சாலையை கடக்க முயற்சித்த அப்பொழுது அவளை பின்தொடர்ந்து வந்த அந்த நபர் … தன் காரை விட்டு இறங்கி அவளிடம் சென்று பேசினார் …

இதை காஃபி ஷாப்பில் இருந்து வெளியே வந்த வர்ஷா ஒரு வித பயத்துடன் பார்க்க சலீமோ 

” இவ இவன் கூட என்ன பண்ணிட்டு இருக்கா ”  – அதிர்ச்சியுடன் வினவினான்  …

” உனக்கு இந்த பொண்ண தெரியுமா சலீம் “

” ம்ம் அர்ஜுன் லவ் பண்ற பொண்ணு இவ தான் மோனிஷா “

” நோ சலீம் இது நடக்க கூடாது .. அர்ஜுன் தாங்க மாட்டான்.. ஏதாவது பண்ணு சலீம் ” – பயம் கலந்த பதற்றத்துடன் சலீமிடம் மன்றாடியவள்  திடிரென்று  மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைய …

மறுபுறம் மோனிஷா சலீம் தடுப்பதற்குள் அந்த நபருடன் காரில் ஏறி புறப்பட்டாள் … ஒரு புறம்  மயக்க நிலையில் தன்  காதலி வர்ஷா  … மறுபுறம்  கயவனின்  வலையில் சிக்க போகும் அப்பாவி மோனிஷா … செய்வதறியாது திணறினான் சலீம் .

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!