Oh kadhal kanmani 26

காதல் கண்மணி - final

  காதல்  கண்மணி 26

–  நெமிரா

இதுவரை  …..

ஒரு புறம்  மயக்க நிலையில் தன்  காதலி வர்ஷா  … மறுபுறம்  கயவனின்  வலையில் சிக்க போகும் அப்பாவி மோனிஷா … செய்வதறியாது திணறினான் சலீம் .

இனி….

அலுவலகத்தில் அர்ஜுன் மாறனிடம் ,

 

” கிளையின்ட் என்ன சொல்றாங்க “

 

” வழக்கம் போல நம்மளையே டெசிஷன் எடுக்க சொல்லிட்டாங்க தம்பி “

 

” ஓகே தென் உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?? “

 

” இது சாக்லேட் அட் வழக்கம் போல நம்ம பீமேல் மாடல் ஷில்பாவையே புக் பண்ணிடலாம் “

 

” நோ அங்கிள் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்யாசமா ட்ரை பண்ணலாமே …. இந்த முறை மாடல்ஸ்லாம்  வேண்டாம் … கொஞ்சம் இயற்கையா!!!  ம்ம்ம் … ஏன் காமன் பீப்பிள்ஸ் வச்சு பண்ண கூடாது ?”

 

” ம்ம்ம் பட் இது வொர்க் அவுட் ஆகுமா பா “

 

“கம் ஆன் அங்கிள் இட் வில் …. நான் முடிவு பண்ணிட்டேன் நீங்க நம்மளுடைய கிரியேட்டிவ் டீம் மெம்பெர்ஸ  கான்ஃபரென்ஸ்  ரூம்ல அசெம்பிள் பண்ண ” – என்று அர்ஜுன் மாறனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்     பொழுதே   ,” மோனிஷாவ எங்க டா ” என்றபடியே ரோஹித் தடாலடியாக  உள்ளே நுழைய … கோபத்தை சிரமப்பட்டு உள்ளடக்கியவன் ..

 

” வாட் இஸ் திஸ்  ரோஹித் காண்ட் யு ஸீ இட் … நான் பிஸியா இருக்கேன் வெளியில வெயிட் பண்ணு ” – பற்களை கடித்தபடி கூறினான் …

 

” நீ ஏண்டா இப்படி இருக்க ” – நிலைமை புரியாமல் கத்தினான் ரோஹித் .

 

அர்ஜுன் தர்மசங்கடத்தில்  மாறனை பார்க்க , புரிந்து கொண்டவர்

 

” மீட்டிங் நாளைக்கு பார்த்துக்கலாம் தம்பி ” என்று மட்டும் கூறிவிட்டு நாசுக்காக அவர் வெளியேறிய மறுநொடி …

 

” என்னடா நினைச்சிட்டு இருக்க …நான் உன்கிட்ட என்னையும் மோனிஷாவையும் சேர்த்து வைன்னு கேட்டனா …எதுக்கு அவளை ஆபிஸ்கெல்லாம் அனுப்பி வைக்கிற ? யு ஜஸ்ட் ஸ்பீட் அவுட் டாமிட்”  – தாறுமாறாய் ரோஹித்திடம் கத்தினான் அர்ஜுன்  .

 

” கத்தாத அர்ஜுன் … கத்தி இப்போ எதை நிரூபிக்க நினைக்கிற … உண்மைய சொல்லு மோனிஷாவ நீ விரும்பல , இத்தனை நாளா ஒரு தடவ கூட நீ அவளை நினைக்கவே இல்லை … சொல்லு டா ” – அதட்டினான்

 

” ———————- ” – பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றான் அர்ஜுன் .

 

” ஏன் டா உன்னை நீயே ஏமாத்திக்கிற …”

 

” தெரியாம நினைச்சிட்டேன் இப்போ மறக்கணும்ன்னு நினைக்கிறன் … ஆனா யாரும் மறக்க விடமாடிக்கீங்க ” – சிடு சிடுத்தான் .

 

” மறக்கணும்ன்னு நினைக்கிறவன் வேண்டாம்ன்னு சொல்லி அனுப்ப வேண்டியது தான் … எந்த உரிமையில்லை டா  அவளை திட்டுன ” – புருவத்தை உயர்த்தினான் ரோஹித்.

 

” அப்பா சாமி தெரியாம திட்டிட்டேன் போதுமா ” – எரிச்சலுடன் கத்தினான்

 

” போதுமாவா … ஈஸியா சொல்ற நீ திட்டுன சோகத்துல அவ இன்னும் ஹாஸ்டல் போகல … போஃன் பண்ணினா நாட் ரீச்சபிள்ன்னு வருது… லக்ஷ் ரக்ஷிதா ரொம்ப பயந்து போய்  இருக்காங்க  ” – ரோஹித்தின் குரலில் தெரிந்த பதற்றம்  அர்ஜு னை  கலங்கடிக்க …

 

” என்ன சொல்ற இன்னும் போகலையா … ” – தவிப்புடன் கேட்டான் …

 

” யஸ் அர்ஜுன் … ரக்ஷிதாவும்  லக்ஷும்  வெளியில வெயிட் பண்றாங்க தர்ஷித் அவங்க கூட தான் இருக்கான் ..அவங்களுக்கு என்னடா பதில் சொல்ல ” – பதற்றத்தில் ரோஹித்தின் வதனம் வியர்த்து கொட்டியது  .

 

தமயனுக்கு  ஆறுதல் அளித்த அர்ஜுன்  ” பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்  எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் தேடலாம்  ரொம்ப தூரம் போயிருக்க முடியாது … கண்டுபுடிச்சிரலாம் லக்ஷ் ரோஹித் நீங்க ஒரு பக்கம் போங்க தர்ஷித் நீ ரக்ஷிதா கூட போ … ஸ்டே கனெக்டெட்  … யாருக்கு தகவல் கிடைச்சாலும் எனக்கு உடனே சொல்லிருங்க … குயிக்  ” – தன் பதற்றத்தை மறைத்து அனைவரையும் துரிதப்படுத்தியவன் … மோனிஷாவை எண்ணி உள்ளுக்குள்  மிகவும் கலங்கினான் .

 

” மோனிஷா ப்ளீஸ் எங்க இருக்க கண்ணு முன்னாடி வந்திரு ப்ளீஸ் ” – உதடுகள் தானாய் முணுமுணுக்க …  அப்பொழுது சலீமிடம் இருந்து அழைப்பு வரவும் எரிச்சலுடன்  அழைப்பை துண்டிக்க … விடாமல் அவனிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கவும் மெலிதாய் பதறியவன் அட்டென்ட் செய்து , சலீமிடம்,

 

” என்னடா வேணும் ” – கடுமையாக கத்தினான் .

 

” மோனிஷா இஸ் நாட் சேஃப் ” – சலீம் கூறிய  நான்கே வார்த்தைகள் அர்ஜுனை நிலை  குலைய வைத்தது …  இருந்தும்  தன்னை தயிரியப்படுத்தியவன்…

 

” நீ சொன்னா நான் உடனே நம்பணுமா ??” – நம்பிக்கை இன்றி சந்தேகத்துடன் கேட்டான்.

 

” அர்ஜுன்  அவ கிருஷ் கூட போறத பார்த்தேன் ” – கிருஷின் பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்திருந்த அர்ஜுன் அமைதியாகவே இருக்க

 

” அர்ஜுன் அர்ஜுன் இருக்கியா ” – என்று சலீம் பலமுறை அழைக்கவும் தன்னிலைக்கு வந்த அர்ஜுன்

 

“சலீம் டோன்ட் பிளே வித் மை எமோஷன்ஸ் ” – வார்த்தைகள் தடுமாற கேட்டான் …

 

” அர்ஜுன் நானும் வர்ஷாவும் தான் பார்த்தோம் … வர்ஷாக்கு கிருஷ  பார்த்ததும் பனிக் அட்டாக் வந்துருச்சு … ஸீ பேசிட்டு இருக்க நேரம் இல்லை என்னை நம்புறத தவிர உனக்கு வேற வழியில்லை .. நான் அங்க தான் போறேன் சீக்கிரம் வா …  ” – அழைப்பை துண்டித்தான் ..

 

” கிருஷ் ஐ வில் கில் யு ப்ளாடி …. ” – கர்ஜித்த அர்ஜுன் ஆத்திரத்தில் புயலை விட  வேகமாக தன் காரை கிருஷின் இல்லத்தை நோக்கி செலுத்தினான்  …

 

” இல்ல சார் ஹாஸ்டல்ல ரக்ஷிதா தேடுவா …

 

நான் இன்னொரு நாள் உங்க வீட்டுக்கு வரேன் சார்… நான், ரக்ஷிதா ,லக்ஷ் எல்லாரும் வரோம் .” – தயக்கத்துடன் கூறினாள்

 

” என்னமா இவ்வளவு தூரம் வந்துட்ட ஏன் தயங்குற என் வைஃப் உன்னை பார்த்தா ரொம்ப சந்தோசம் படுவா “

 

” ஆனா  சார் தனியா வர ஒரு மாதிரியா இருக்கு,  நீங்க இங்கையே டிராப் பண்ணிருங்க நான் ஆட்டோல போயிருவேன் “

 

” என்னமா நீ என்னை போய் சந்தேகப்படுறியா “

 

” அச்சோ சார் அப்படி இல்லை “

 

” உனக்கு  நம்பிக்கை  இல்லனா வேண்டாம் மா நானே உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிறேன் “

 

” அப்படி இல்லை சார் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி நான் நம்புறேன் சார்  …. வீட்டுக்கு வரேன்  ” – முழுமனதுடன்  சம்மதித்தாள் …

 

 ‘ நீங்க எனக்கு அண்ணன் மாதிரி ‘ – அப்பாவியாக மோனிஷா கூறியதை கேட்ட அப் பாவியின் வஞ்சம் கொண்ட நெஞ்சம்    ‘ நான் யாருன்னு இன்னைக்கு உனக்கு காட்டுறேன் மோனிஷா … அர்ஜுன் என்னையா இன்சல்ட் பண்ற உன்னை கதறவைக்கிறேன் டா ‘ – என்று  நஞ்சை கக்கியது … உள்ளத்தில் பரவியிருந்த கபடம் விழியில் தெளிவாய் தெரிந்திருந்தும். அர்ஜுனை எண்ணி மனவேதனையில்  இருந்த மோனிஷாவால் கிருஷின் சூழ்ச்சியை கண்டறிய முடியவில்லை.

 

 கதவை தட்டாமல் கிருஷே சாவி பயன்படுத்தி திறப்பதை பார்த்த மோனிஷாவின் உள்ளத்தில் சந்தேகம் எழ சிறிதும் தாமதிக்காதவள்

 

” சார் மேடம் இருப்பாங்கன்னு சொன்னீங்க ஆனா வீட்ல யாருமே இருக்கிற மாதிரியே தெரியலை ” – மறைக்காமல் கேட்டுவிட  .

 

” அது நாம வர்றது தெரியாதுல அவ கோவிலுக்கு போயிருக்கா மா எனக்கு மெசேஜ் பண்ணிருக்கா … இப்போ வந்திருவாளாம் … உன்னை வெயிட் பண்ண சொல்லிருக்கா   உக்காருமா ” – வழக்கம் போல  சமாளித்தவன் …..

 

தன் காம வெறிக்கு மோனிஷாவை பலிகொடுப்பதற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற தொடங்கினான்…

 

மோனிஷா வேண்டாம் என்று மறுத்தும் வற்புறுத்தி  ரோஹிப்னோல்(Rohypnol) என்கின்ற மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை பருக செய்தான் …

தான் மிகவும் மதிக்கும் கிருஷ் ஒரு நயவஞ்சகன் என்பதை அறியாதவள் … அவன் வற்புறுத்தவும் மறுக்காமல் வாங்கி பருகினாள்…

வகுத்த திட்டம்  கச்சிதமாய் நிறைவேற  ‘ இனிமேல் நீ என் பிடியை விட்டுத் தப்பிப் போக முடியாது  மோ…னி..ஷா  ’ என்று தனக்குள் மகிழ்ந்தவன்  வஞ்சகமாய்    சிரித்தான்.  தனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக எண்ணி மனதிற்குள் துள்ளிக் குதித்தான்.

 

‘இன்னும் கொஞ்சம் நேரம் தான் மோனிஷா அப்புறம் நீ என் அடிமை … உன்னை என் ஆசை தீர  அனுபவிக்க போறேன் ‘  என்று எண்ணியவன் …  தன் கையில் இருந்த மதுபானத்தை தன் வாயில் சரித்தபடி  மோனிஷாவை இமை தட்டாமல் நோக்கினான் …  பார்வையில் தெரிந்த வக்கிரம் மோனிஷாவுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும் அதை தவறாய் எண்ணாதவள்  வெகுளியாய் ” வீடு ரொம்ப நல்லா இருக்கு சார் ” என்று கூறி லேசாய்  புன்னகைத்தாள் …

 

” ஆஹான்” என்றவன்  அவள் அருகில் சென்று அவளை ஒட்டி உரசியபடி நெருக்கமாக அமர … அவனது இந்த திடீர் செய்கையில் திடுக்கிட்டவளின்  உள்ளத்தில் ஏதோ தவறாய் தெரிய , சற்றென்று எழுந்தவள் ….

 

” மேடம் வர லேட் ஆகுற மாதிரி இருக்கு நான் கிளம்புறேன் சார் ” – என்று கூறி அங்கிருந்து கிளம்ப …

 

” ஏன் அர்ஜுன் தொட்டா மட்டும் தான் புடிக்குமா மோ…னி…ஷா ” –  வக்கிரமாய் புன்னகைத்தவன்  அவளது கரங்களை முரட்டு பிடியாக  இறுக்கி பிடித்து அவளை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்தான் … அவன் கேட்ட கேள்வி நடந்து கொள்ளும் விதம் மோனிஷாவுக்கு அதிரிச்சியளிக்க பேயறைந்தாற் போல் நின்றவள் … அவளை சுற்றி நடந்த சூழ்ச்சியை எண்ணி மிகவும் வருந்தினாள் …

 

அந்த  வஞ்சக நரி  விரித்த  வலையில் தான் மாட்டிக் கொண்டதை  எண்ணி வருந்தி தவித்தவள் .  இவன் பேச்சை கேட்டு அர்ஜுனுக்கு தான் இழைத்த துரோகத்தை நினைத்து மிகவும் கலங்கினாள் … அந்த நயவஞ்சகனை  பார்த்து   இறுக்கமாக  முறைத்தவள் …தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவன் மார்பில் கைவைத்து அவனை கீழே தள்ளியவள் , கீழே விழுந்து கிடந்த அந்த காமுகனிடம் ,

” ச்சீய் பொறுக்கி … உன் வாயால  அர்ஜுன் பெயரை சொல்லாத .. உன் பேச்சை கேட்டு அர்ஜுனை பத்தி தப்பா சொல்லிட்டேனே ச்ச … என்கிட்ட இப்படி நடந்துக்க உனக்கு கூசலை ” – முகத்தை சுளித்தவள் …

” உன்னை சும்மா விடமாட்டேன் டா ” என்றவள் அங்கிருந்து வேகமாக செல்லவும் , ஓடி வந்து தடுத்து நிறுத்தியவன் ” என்கிட்டயே திமிரா பேசுற உன்னை என்கிட்ட இருந்து யாரு காப்பாத்துறாங்கன்னு  பாரு  ” என்று உட்சபட்ச கோபத்தில் கத்தியபடி கிருஷ் அவளை நெருங்கிவர … இப்பொழுது மோனிஷாவுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது  …

 

 ” என்னை விட்டுருங்க சார் ”  – பயத்தில் நடுங்கியவள் தப்பித்தால் போதும் என்று தன் இரண்டு கைகளையும் கூப்பி கெஞ்சினாள்.

 

அதே  வஞ்சகப்புன்னகையுடன் அவளை  நோக்கி நகர்ந்தான் … அவன் பார்வையில் இருந்த குரூரம் மோனியை மிரள செய்தது. மெல்ல  மெல்ல பின்வாங்கினாள்.

 

“சார் ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. நீங்க தப்பு பண்றீங்க …  சார் எனக்கு பயமா இருக்கு.. தயவு செஞ்சு என்னை வெளில போக விடுங்க..!!” – கண்ணீர் மல்க கெஞ்சினாள் ..

 

“வெளில போகனுமா..?? சரி.. ” – நான் சொல்றத செய் …. நானே உன்னை ஹாஸ்டல்ல  ட்ராப் பண்றேன்..!!” கிருஷ்  சற்றே கிண்டலான குரலில் சொல்ல..

 

“எ..என்ன..?” மோனிஷா  மிரட்சியாக கேட்டாள்.

 

“அர்ஜுன் கூட அன்னைக்கு  நைட் என்ன பண்ணுனியோ அதை என் கூடவும் பண்ணு .. சிம்பிள் …  ரொம்பலாம் வேணாம்.. ஒரு.. ஒரே ஒரு மணி நேரம்.. போதும் …  என்கூட  ஸ்பென்ட் பண்ணிட்டு போ..!!” கிருஷ்  சொல்லி முடிக்கும் முன்பே,

 

“ச்சீய்…!!!” என்று மோனிஷா  வெறுப்பாக கத்தினாள். கிருஷோ   எரிச்சலானான்.

 

“என்னடி கத்துற … ஏன் அர்ஜுன்  கூட மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களோ ?? லுக் உனக்கு புடிக்குதோ புடிக்கலையோ.. இன்னைக்கு உனக்கு நான் தான் … நீ எவ்வளவு கூச்சல் போட்டாலும் அர்ஜுன் வரமாட்டான் … உன்னை கஷ்ட படுத்தாம ஒரு பூ மாதிரி பாத்துக்கணும்ன்னு நினைக்கிறன்…. எனக்கு வெறி ஏத்தாத   வா..!!”   ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து மோனியை  எட்டி பிடித்தான்  அந்த மூர்க்கன்.. அவன் முரட்டுத்தனமாய்  இறுக்கி பிடிக்கவும்    பதறிப் போன மோனிஷா அலறினாள்.

 

“சார் … வேணாம்.. ப்ளீஸ்.. விடுங்க … யாரவது வாங்க !!”

 

“ஹாஹா.. வேணாமா..?? பிடிக்கலையா உனக்கு..?? ஆனா எனக்கு பிடிச்சிருக்கே..?? அர்ஜுனை பழிவாங்க இதை விட நல்ல சான்ஸ் எனக்கு கிடைக்காது மோனிஷா …

 

எத்தனை நாளைக்கு தான்   நானும் நீ போற இடத்துக்கெல்லாம் உன்னை ஃபாலோ  பண்றது ” – வக்கிரமாக இளித்தான்

 

“உ..உங்களை கெஞ்சிக் கேக்குறேன்.. என்னை விட்ருங்க சார் “- அழுதாள்

 

கிருஷ் எந்த அளவுக்கு ஒரு கொடிய மிருகம் என்பதை உணர்ந்து கொண்டவள்  ” அர்ஜுன் என்னை  இந்த மிருகத்துக்கிட்ட  இருந்து  காப்பாத்து பா ” – வாய்விட்டு கதறினாள் … அர்ஜுனின் பெயரை கேட்ட மறுநொடி ஆத்திரம் கொண்ட கிருஷ் மோனிஷாவை இறுக்கமாக பிடிக்க … இந்த கொடியவனிடம் இருந்து தப்பித்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்ட மோனி ….  உடனே தன்னை இறுக்கியிருந்த கிருஷின்  புஜத்தை வாயால் கவ்வி  தன் பற்களை  கொண்டு கடித்தாள்.

“ஆஆஆஆஆ…!!!” இப்போது கிருஷ்  வலி தாளாமல் அலறியவன் ஆவேசத்தில் அவளை அப்படியே பிடித்து பின்னால் தள்ளிவிட்டான். தடுமாறியவள் பின்னந்தலை அடிபட பின்புறமாக பொத்தென்று விழுந்தாள் .

 

கிருஷ்  இப்போது உச்சபட்ச ஆத்திரத்தில் இருந்தான். பற்களை கடித்து கத்தினான். “எவ்வளவு திமிரு டி   உனக்கு..?? என்கிட்டயே உன் வீரத்தை  காட்டுறியா..? இப்போ நான் என் ஆம்பளை வீரத்தை காட்டுறேன்.. என்ன செய்யிறன்னு   நானும் பாக்குறேன் ” கொக்கரித்த கிருஷ்  வெறியுடன் மோனிஷாவை நெருங்கினான் ..

 

அவன் கலந்து  கொடுத்த மயக்க மருந்து தன் வேலையை செய்ய ஆரம்பித்தது … 

 

உடல் கொஞ்சம் கொஞ்சமாய் மறத்து போவதை  உணர்ந்தவள் “அர்ஜுன் வா” என்று தன்னவனை எண்ணி அழுதபடி அரை குறை மயக்கத்தில் வலுவற்று தரையில் கிடந்தாள் .

 

கிருஷ் மோனிஷாவை நெருங்கிய  மறுநொடி தடாலடியாக கதவை திறந்தபடி உள்ளே நுழைந்த சலீம் … கிருஷை கீழே தள்ளிவிட்டு  நொடி கூட தாமதிக்காமல் அவன் கன்னத்தில் அடியை இடியென இறக்கினான் .

சலீமை கண்ட கிருஷ் அதிர்ச்சியில் ,” இங்க என்ன டா பண்ற ” கத்தினான் .

 

” பழைய கடனை திருப்பி குடுக்கலாம்ன்னு வந்தேன் … ” என்றவன் சரமாரியாக தாக்கினான் .

 

” அன்னைக்கு அர்ஜுன் கிட்ட வாங்கினது பத்தல … உன்னால வர்ஷா இன்னும் கஷ்டப்பட்டுட்டு இருக்கா … திருந்தவே மாட்டியாடா  ” –  வெறியுடன் மீண்டும் தாக்கினான் … தெம்பற்று சுருண்டு கீழே விழுந்தான் கிருஷ் … தன் ஆத்திரம் தீரும்வரை தாக்கிய சலீம் … அரை மயக்கத்தில் கிடந்த மோனிஷாவின் அருகில் வந்து அவளை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருக்க  …

 

” கிருஷ் ” – கண்கள் ரத்தமென சிவந்திருக்க உட்சபட்ச ஆவேசத்தில் சத்தம் போட்டவாறே உள்ளே நுழைந்த அர்ஜுன் ஒரே பாய்ச்சலில் கிருஷின்  அருகில் சென்று மல்லார்ந்து கிடந்தவனின் நெஞ்சில் தன் காலால் ஒரு உதைவிட … ஏற்கனவே சலீம் தாக்கியதில்  சுருண்டு கிடந்த கிருஷ்  … அர்ஜுன் கொடுத்த ஒரே உதையில்  ” ஆஆ….” வலியில் துடித்தான் .

 

விடவில்லை அர்ஜுன் … அக்கொடிய  காமுகனின்  தலை முடியை கொத்தாக  பற்றி தூக்கி தாடையில் ஓங்கி ஒரு குத்துவிட , அவன் கடைவாய்ப்  பல்   உடைந்து  அவனது வாயிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது …

 

” தப்பு பண்ற அர்ஜுன் ” – எச்சரித்தான் கிருஷ்

 

” அஹான்…  தப்பு பண்றதுன்னா எனக்கு ரொம்ப புடிக்கும் ” – பற்களை கடித்தவன் … அவனது இரு கரங்களையும் பிய்த்து எடுப்பது போல பின்னால் வைத்து திருகி …

 

” வர்ஷா கிட்ட தப்பா நடக்க பார்த்தியே … அப்பவே உன்னை  நான் கொன்னுருக்கணும் டா !!

 

 மோனிஷா  கிட்ட தப்பா நடக்கணும்ன்னு நீ எப்படி டா நினைப்ப ?” –  இரக்கமற்ற இராட்சசனாய் மாறியிருந்த அர்ஜுன் பளபளக்கும் கண்களுடன் அடிக்குரலில் இருந்து உறுமினான்… அடங்கா ஆத்திரம்  ஆட்க்கொள்ள ரௌத்திரம் கொண்ட அர்ஜுன் தன் முட்டை மடக்கி அவனுடைய  தொடையிடுக்கில் ஓங்கி உதைக்க   துடி துடித்த கிருஷ் பாதி உயிராய் கீழே சரிந்தான் …

 

” அர்ஜுன் அவனை விடு, மோனிஷாவை பாரு …. ஷீ இஸ் நாட் ரெஸ்பான்சிங் ” –  சலீமின் சத்தத்தில் திரும்பிய அர்ஜுன் பிடுங்கி எறியப்பட்ட மலர் போல துவண்டு கிடந்தவளை கண்டு கலங்கினான்  … ஆத்திரம் மீண்டும் தலைதூக்க ” என்னடா பண்ணின ” வெறித்தனமாக கத்தியபடி  கிருஷை  சரமாரியாக தாக்கினான் அர்ஜுன்  …

 

அவனை தடுத்த சலீம் ,

 

” புரிஞ்சிக்கோ அர்ஜுன் காம் டவுன் மோனிஷாவை பாரு  கண்முழிக்க மாட்டிக்கிறா … இவனை எப்போ வேணும்னாலும் அடிச்சிக்கலாம்   ” – இதற்கு மேல்  கிருஷை தாக்குவது செத்த பாம்பை அடிப்பதற்கு  சமம் என்பதை எடுத்துரைத்த சலீம் அர்ஜுனை நிதானப்படுத்தி  மோனிஷாவின் நிலையை எடுத்துரைத்தான் …

 

மோனிஷாவை  அந்த நிலையில் பார்க்க இயலாமல் தவித்த அர்ஜுனின்  கால்கள்  தானாக நடுங்கியது …

 

மெதுவாக சென்று அவளது தலையை தன் மடியில் வைத்தவன் ” ப்ளீஸ் பாரு மோனி ஐயம் சாரி ப்ளீஸ் ” – மனம் துக்கத்தில் பாறையை விழுங்கியது போல கனத்தது ….. அவளது பார்வைக்காக ஏங்கினான் ….. சில நொடிகளுக்கு பிறகு மிகச்சிரமப்பட்டு தன் விழிகளை திறந்தவள் …

 

” நீ வருவன்னு எனக்கு தெரியும் அர்ஜுன் … ஐயம் ரியலி சாரி ….  ” குரல் உடைந்து விழிகளில் நீர் திரண்டது … தடுமாறி வந்த வார்த்தைகளை அர்ஜுன் கிரகித்த மறுநொடி  மீண்டும்  மயக்க நிலையை  அடைந்தாள்  மோனிஷா …

 

இதை கண்டதும் அர்ஜுனின் இதயம் படபடவென்று துடித்தது …கண்களில் கண்ணீர் மடைதிறந்தது..

 

” மோ..னி…ஷா  … மோனி  ப்ளீஸ் – தேகம் நடுங்க  நாகுழறியது… தந்தையின் மறைவு கண்முன்பு வந்து அவனை அச்சுறுத்தியது …

 

” என்னாச்சு  ??ஏன் பேச மாட்டிக்கிறா  ?? ஏன் கண்ணு  முழிக்க மாட்டேங்கிறா… ” இறங்கிய குரலில் சலீமிடம் கேட்டான் . …. சிந்தனைகள் நிலைகொள்ளாமல்  அவனை வாட்டியது ..

 

” அதான் எனக்கும் தெரியல அர்ஜுன் … நேரம் கடத்தாம வர்ஷாவை அட்மிட் பண்ணின ஹாஸ்ப்பிட்டலுக்கே கொண்டு போகலாம் அது பக்கத்துல தான் இருக்கு… நீ தூக்கிட்டு வா … நான் வண்டிய ஸ்டார்ட் பண்றேன் ” –  அர்ஜுன் சலீம் இருவரும்  துரிதமாக செயல் பட … மோனிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் …

– தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!