Oh kadhal kanmani 27

காதல் கண்மணி - final-38d191ed

ரோஹிப்னோல் (Rohypnol ) என்றால் என்ன ?

ரோஹிப்னோல் இது ” Date  Rape  drug  ” மற்றும்  ” Club  drugs ” என்னும்  பெயர்களில்   பரவலாக அழைக்க படுகின்றது …

இந்த மருந்துகள் பெருமளவு கால்நடை மருத்துவமனைகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் பாவையர்களை பாலியல் வன்புணர்வு செய்ய செந்நாய் கூட்டங்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

Rohypnol, உண்மையில் தூக்கத்திற்கான ஒரு சிறிய மாத்திரை.

தங்களின் இச்சையை தீர்த்துக்கொள்வதற்காக வெறிபிடித்த மிருகங்கள் தங்களை நம்பி வரும் பெண்களை தங்களின் வன்பசியை தீர்த்துக்கொள்வதற்காக தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் பெண்ணை சுயநினைவு இல்லாமல் போகச் செய்வதற்காக விருந்துகளில் இந்த Rohypnol மருந்தை உபயோகப்படுத்துகின்றனர். …

இந்த மாத்திரை கொடுக்கப்பட்ட நபரின் மூளை தற்காலிகமாக செயலிழக்கும். அதனால் அவருக்கு நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவுகூற முடியாது.

இந்த மருந்து மனித உடலுக்கு உள்ளே சென்றால் சுய நினைவை இழப்பதுடன், மருந்து உட்கொண்ட பிறகு 10 முதல் 12 மணி நேரத்திற்கு என்ன நடந்தது என்பது நினைவில் இருக்காது .

Rohypnol மாத்திரை பாலியல் பலாத்காரத்துக்குட்பட்ட நபர் கருத்தரிப்பதைத் தடுக்கிறது.

இதனால் பாலியல் பலாத்காரம் செய்பவர் பின்னாளில் ‘maternity test-லிருந்து தப்பிக்கவும் இது வழிவகை செய்கிறது.

இதன் மூலம் கற்பழிப்புக்கு உள்ளான பெண், தன்னைக் கற்பழித்தவரைக் காட்டிக் கொடுக்க முடியாது. மேலும், அந்த பெண் கருவுற்று, டிஎன்ஏ சோதனை செய்து அதன் மூலம் குற்றவாளியைப் பிடிக்கும் சாத்தியமும் இல்லாமல் செய்கிறது இந்த ரோஹிப்னோல் மருந்து.

Rohypnol மாத்திரையினால் இன்னும் பல மோசமான நிரந்தரமான பின் விளைவுகள் உள்ளன.

இந்த மருந்தை எளிதில் ஒரு பெண் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுக்கின்றனர்.

எளிதில் எந்த ஒரு பானத்திலும் விரைவில் கரையும் தன்மை உடையது.

தனி சுவையோ, நிறமோ கிடையாது என்பதால் பானத்தை அருந்தும் போது எந்த மாற்றமும் இருக்காது. அதனால் அந்த பானத்தைக் குடிப்பவருக்கு அவரது பானத்தில் மருந்து கலந்திருப்பதே தெரியாது.

இந்த மருந்தை அதிகமாக உட்கொண்டால் நிரந்தர மலட்டுத் தன்மையையே ஏற்படுத்தி விடும் அபாயமும் உள்ளது.

குள்ளநரிக்கூட்டங்கள் இந்த மருந்தை மருந்துத்துறையில் உள்ள யாரிடமிருந்தும் பெறலாம்.

அவ்வளவு எளிதாகக் கிடைக்கக்கூடியது. மேலும் சமூக வலைதளங்களில் இந்த மருந்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதற்கான தகவல் விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஹிப்னோல் (Rohypnol ) போன்று வேற மருந்தின் பெயர் பட்டியல்

1.gamma hydroxybutyrate (GHB)
2.ketamine
3.MDMA (Ecstasy)
4.methamphetamine

—————————————————————————————————————————————————————————————————————————

  காதல்  கண்மணி 27

–  நெமிரா

இதுவரை  …..

” என்னாச்சு  ?? ஏன் பேச மாட்டிக்கிறா  ?? ஏன் கண்ணு  முழிக்க மாட்டேங்கிறா… ” இறங்கிய குரலில் சலீமிடம் கேட்டான் . …. சிந்தனைகள் நிலைகொள்ளாமல்  அவனை வாட்டியது ..

” அதான் எனக்கும் தெரியல அர்ஜுன் … நேரம் கடத்தாம வர்ஷாவை அட்மிட் பண்ணின ஹாஸ்ப்பிட்டலுக்கே கொண்டு போகலாம் அது பக்கத்துல தான் இருக்கு… நீ தூக்கிட்டு வா … நான் வண்டிய ஸ்டார்ட் பண்றேன் ” –  அர்ஜுன் சலீம் இருவரும்  துரிதமாக செயல் பட … மோனிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் …

இனி ..

பாறாங்கல்லை   இறக்கியது போல நெஞ்சம் கனத்தது அர்ஜுனுக்கு … அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை … ஸ்பெஷல் வார்டுக்கு வெளியே கால் கடுக்க காத்துக்கொண்டு   இருந்தான் … நேரம் தான் ஓடியதே தவிர அவனது காத்திருப்புக்கு எந்த பலனும் கிடைக்காமல் போக … தன் பொறுமையை இழந்தவன் உள்ளே செல்ல எத்தனித்த பொழுது ,

” எங்க போற அர்ஜுன் ? டாக்டர்  ட்ரீட்மெண்ட்  குடுத்துட்டு இருக்காங்க  கொஞ்சம் ரிலாக்ஸா  இரு ” – தடுத்து நிறுத்தினாள் வர்ஷா ..

” எப்படி ரிலாக்ஸா  இருக்க முடியும் ?” – அழுத்தமாக ஒலித்த அவனது  கண்டிக்கும்  குரலில் அமைதியடைந்தாள்  வர்ஷா  …

” இப்போ எதுக்கு வர்ஷா கிட்ட கத்துற ?? … ” – கடுமையுடன் கேட்டான் சலீம்  …

”  உனக்கு லவ்வர் ஆகுறதுக்கு முன்னாடியே அவ எனக்கு ஃப்ரண்டு ” – நீ யாருடா இதெல்லாம் கேட்குறதுக்கு ? என்பதை மறைமுகமாய்   கூறினான் .

அர்ஜுனின் அலட்சிய பேச்சை கேட்டதும் சலீமின் முகத்தில்  கடுமை  பரவியது ,

 ” அவ்வளவு அக்கறை இருந்தா உன் லவ்வர நீ தான் பத்திரமா பாத்துக்கணும் ?? ” – இதற்கு முன்பு வர்ஷாவிடம் கிருஷ் தவறாய் நடக்க முற்பட்ட பொழுது வர்ஷாவை காப்பாற்றிய அர்ஜுன் சலீமிடம் ,” காதலின்னு  சொன்னா மட்டும் போதாது … நல்ல காதலனா நடந்துக்கவும் தெரியணும் ” என்று நக்கலாக கூறியதை … இன்று சலீம் அர்ஜுனுக்கு  கூறினான்   …

அவன் பேச பேச அர்ஜுனின் முகம் அக்கினி பிழம்பாய் தகித்தது  பார்வையாலே எரித்தவன் , தன்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த   சலீமிடம்

” ச..லி….ம்   கொலைவெறில இருக்கேன்  பார்த்து பேசு … மோனிஷாவை நீ காப்பாத்திருக்க  அதான் பொறுமையா இருக்கேன் ”  பற்களை கடித்து கோபத்தை அடக்கிக்கொண்டான் ..

சலீம் பதில் பேச முற்படவும் அவனை தடுத்தவள் ” ரெண்டு பேரும் கத்தாதீங்க எனக்கு மறுபடியும் மயக்கம் வருது ” என்று தலையை பிடிக்கவும் அவளை பிடித்து அமரவைத்த அர்ஜுனும்  சலீமும்  அவளிடம்  மன்னிப்பு கேட்க ..

 ” பொறுமையா இரு அர்ஜுன் அவளுக்கு ஒன்னும் ஆகாது ”  என்று நண்பனுக்கு ஆறுதல் கூறினாள் ..

அப்பொழுது ரோஹித்துடன் வந்த மோனிஷாவின் நண்பர்கள்  பதற்றத்துடன் மோனிஷாவை  பற்றி விசாரித்தனர்  … அவர்களுக்கு அர்ஜுன் பதில் கூற முடியாமல் அமைதியாக நிற்க  அப்பொழுது உள்ளே இருந்து வந்த மருத்துவர் அவர்களிடம்,

” இவங்கள இங்க அட்மிட் பண்ணினது யாரு ” – என்று கேட்டார்

” நாங்க தான் மோனிஷா நல்லா இருக்காள்ல” – பதற்றத்துடன் கேட்டான் அர்ஜுன்

” நீங்க அவங்களுக்கு யாரு “

” நாங்க எல்லாருமே ஃப்ரண்ட்ஸ் ” – அவர்களை குறுக்கிட்டபடி பதில் கூறினான் ரோஹித்

அவர்களை ஏற இறங்க பார்த்த மருத்துவர் ,” எனக்கு உங்க எல்லார் மேலையும் டவுட்டா இருக்கு பெரியவங்கள வர சொல்லுங்க … ” என்றார் ..

” எப்படி இருக்காங்க அத சொல்லுங்க ” – பதற்றம் குறையாமல் கேட்டான் அர்ஜுன்

” நீங்க முதல்ல என்ன பண்ணுனீங்கன்னு சொல்லுங்க …அந்த பொண்ணை என்ன பண்ணிவச்சிருக்கீங்க ” –  கோபத்துடன் கேட்ட மருத்துவர் மேலும் தொடர்ந்து

” மயக்க மருந்து சாப்ட்ருக்காங்க … இவங்க சாப்ட்ருக்க மருந்து எவ்வளவு மோசமானது தெரியுமா ?? … ” – ஆத்திரத்துடன் வினவினார்

” எங்களுக்கு எதுவும்  தெரியாது டாக்டர் ” என்றான் ரோஹித்

” மோனிஷா எப்படி இருக்கா ” – குரல் உடைந்து வலுவிழந்தது அர்ஜுனுக்கு …

” என்ன தெரியாதா ?? உங்கள பார்த்தாலே தெரியுது நீங்க தான் ஏதோ பண்ணிருக்கீங்க மயக்கம் போட்டவுடன் பயந்து அட்மிட் பண்ணிருக்கீங்க  … இந்த காலத்து பசங்கள பத்தி தெரியாதா ?? பார்ட்டி ட்ரின்க்ஸ்ன்னு ச்ச  … இந்த பொண்ணுங்களுக்கும்   அறிவு கிடையாது ??… வீட்ல இருந்து பெரியவங்கள கூட்டிட்டு வாங்க ” –கண்டிப்புடன் கூறினார்.

” அவங்க இங்க இல்லை … சத்தியமா நாங்க எதுவும் பண்ணல மேடம் “- பதற்றத்துடன் கூறினான் ரோஹித்

” அப்போ   போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டு  கம்ப்ளெயிண்ட் காபியோடு இங்க வாங்க “

” போலீஸா ” – அதிர்ச்சியுடன் கேட்டான் ரோஹித்

” உங்க மேல தப்பில்லன்னா கம்ப்ளெயிண்ட் குடுங்க … இல்லனா நான் உங்க மேல குடுக்க குடிக்க வேண்டி இருக்கும் .. இது எவ்வளவு பெரிய சீரியஸான  கேஸ் தெரியுமா.. உயிர் போகக்கூட சான்ஸ் இருக்கு  ?? “

” நிறுத்துங்க   ! ” மருத்துவரின் பேச்சு ஒவ்வொன்றும் அர்ஜுனின் தலையில் இடியாய் பாய … தன் தலையை அழுந்த பிடித்தவன் .. ஆழ மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ” தயவு செஞ்சு மோனிஷா எப்படி இருக்கான்னு கொஞ்சம் சொல்றீங்களா ப்ளீஸ் ” – பளபளக்கும்  கண்களுடன் கடுமையாக அவன் கூறியபோது , உடல் சில்லிட்டு நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது  மருத்துவருக்கு .

” அப்செர்வேஷன்ல இருக்காங்க கண்முழிச்சதுக்கு  அப்புறம் தான் சொல்ல முடியும் … நான் சொன்னதை செய்யுங்க இல்லைனா என்னால மேல ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது ஏதாவது ஆச்சுன்னா எனக்கு தான் ரிஸ்க் … ஹாஸ்பிடலுக்கு தான் கெட்ட பேரு ” – பொறுமையான குரலில்  நிறைந்திருந்த அலட்சிய வார்த்தைகள் அனைவரையும் சங்கடப்படுத்தியது…

கொதித்தெழுந்த  அர்ஜுன் ” ஹவ் டேர் யு … ஒரு உயிரை விட உங்க ஹாஸ்பிடல் உங்களுக்கு முக்கியமா போச்சா ??”  -. பளபளக்கும் விழிகளுடன் அடி குரலில் உறுமினான்.

” விருப்பம் இல்லனா வேற ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்க ” – கண்டிப்புடன் கூறினார்

” அதை இப்போ சொல்ற ” – ஆவேசம் ஆட்க்கொள்ள ஒருமையில் கத்தினான் அர்ஜுன் .

” மரியாதையா பேசுங்க  மிஸ்டர் …  இப்படி தான் சார்   …  இதுக்கு மேல கத்துனீங்கன்னா உங்க மேல கம்ப்ளெயிண்ட் குடுக்க வேண்டி இருக்கும் ” –   எச்சரித்தார் …

” உன்னை சும்மா விட மாட்டேன்  “- பல்கலைக் கடித்துக் கொண்டு தாறுமாறாய் எகிறினான்  அர்ஜுன் …

” இது ஹாஸ்ப்பிட்டல் … கொஞ்சம் அமைதியா இருங்க  அர்ஜுன் … மோனிஷாக்காக ப்ளீஸ் ” – அமைதி படுத்திய ரக்ஷிதா  டாக்டரிடம் ,” மேடம் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க ” தோழிக்காக கெஞ்சினாள்

” சாரி என் முடிவை நான் ஏற்கனவே சொல்லிட்டேன் ” என்றவர் அர்ஜுனை பார்த்து  முறைத்தபடி அங்கிருந்து சென்றார் …

அவர் சென்ற மறுநொடி மோனிஷாவை காண சென்றான் அர்ஜுன் …. கதுவு வரை ஆவேசமாய் சென்றவனால் அதற்கு மேல நுழைய முடியவில்லை கால்கள் இரண்டும்   செயல் இழந்தது  போல இடறியது  … மெதுவாக    அறைக்குள் நுழைந்த அர்ஜுனின் வதனம் பிடுங்கி வீசப்பட்ட கொடியில் உள்ள மலர்   தளர்ந்து , உலர்ந்து ,  உதிர்ந்து விழுந்து கிடப்பது போல மெத்தை மீது கிடந்த  மோனிஷாவை  கண்டு மிகவும் வருந்தியது  .

இளஞ்சிவப்பு நிற  வதனம்  வதங்கிய வாழைத்தண்டாக வெளிறி இருந்தது …  வலது கரத்தின் மணிக்கட்டில் சிறியதாய் ஒரு கெட்டு ….. இடது கரத்தில் ஸலைன் பாட்டிலுடன் பிணைக்கப்பட்டிருந்த  ஊசி  அதில் இருந்து  குளுக்கோஸ் நரம்பு வழியே நகர்ந்துகொண்டிருக்க  ..

வலது கரத்தின் மணிக்கட்டில் நகங்கள் பட்டு   காய்ந்திருந்த உதிரம்  அர்ஜுனின்  நெஞ்சை அதிரச்  செய்தது !

 இன்று தான் அவளை   உதாசீனப்படுத்தியதை எண்ணி மிகவும் வருந்தினான் !

முதல் சந்திப்பில் தொடங்கி ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்முன் வந்து  சென்றது … முதல் முத்தம் எண்ணும் பொழுதே எவ்வளவு இன்பம் …  மெதுவாக அவளது அருகில் வந்தவன் … அவளது சிகையை மெதுவாய் வருடியபடி,

” மோனிஷா … ஐயம் சாரி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்  … சீக்கிரமா கண்முழிச்சு பாரு பேபி டால் ” என்று சொல்லும் பொழுதே கண்களில் கண்ணீர் திரள  மேலும் அவளது நிலையை காண இயலாது வந்த வேகத்தில் வெளியே வந்தான் …

அறைக்கு வெளியில் ” வேற ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போகலாம் ” – என்றாள் ரக்ஷிதா

” எங்க போனாலும் நாம சொல்றத ஏத்துக்க மாட்டாங்க ” – மறுத்தாள் வர்ஷா

”  வீட்டுக்கு சொல்லிறலாமா ” – என்றான் லக்ஷ்

” நோ மோனிஷா வீட்ல சொன்னாலும் அவங்க வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும் ஸோ சரியா வாராது ” மறுத்தான் தர்ஷித் .

இப்படி ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்க அவர்கள் அருகே வந்த அர்ஜுன்,

“முடிவு பண்ணிட்டேன் வேற ஹாஸ்ப்பிட்டல்  கூட்டிட்டு போகலாம் ” – தீர்க்கமாய் கூறினான் …

” அர்ஜுன் எங்க கூட்டிட்டு போவ யாரா இருந்தாலும்   பிரச்சனை பண்ணுவாங்க ” –

” அப்போ இப்படியே விட சொல்றியா “- எரிந்து விழுந்தான்

” நீ கொஞ்சம் பொறுமையா இரு அர்ஜுன் ” என்று அர்ஜுனை சமாதானம் செய்த வர்ஷா ….. சலீமிடம் ”  சலீம்  உன்னால தான் ஹெல்ப் பண்ண முடியும் உன் அம்மாவை வர சொல்லு டா ! உன் அம்மா கொஞ்சம் புரிஞ்சிக்குவாங்க ஹெல்ப் பண்ணுவாங்க … என் வீட்டுலையும்  பேச முடியாது அர்ஜுன் வீட்லயும் பேச முடியாது “

வர்ஷாவின் குரல் அர்ஜூனுக்குள் ஆழமாய் இறங்க ” நெவெர் ” – உடனே மறுத்தான் விழிகள் கோபத்தில் உருண்டன  …

” வேண்டாமா அப்போ என்ன பண்ண போற ?” – கோபத்துடன் கேட்டாள் வர்ஷா

” எனக்கு போலீஸ்ல நிறைய கான்டக்ட்ஸ் இருக்கு “

” கான்டக்ட்ஸ் வச்சு , என்ன பண்ண போற? “- கடுப்புடன் கேட்டாள்

” சாரு தான் பெரிய ஆளாச்சே … சாருக்கு  பெரிய பெரிய போலீஸ் எல்லாம் தெரியும் … அவன் பார்த்துக்குவான் வர்ஷா ” – நக்கலாய் சிரித்தான் சலீம் .

” போலீஸ்ன்னு போனா பிரச்சனையாகும் ”  என்ற வர்ஷா … ” அர்ஜுன் வீண் பிடிவாதம் வேலைக்கு ஆகாது உனக்கு மோனிஷா முக்கியம்ன்னா  நீ நாங்க எடுக்குற முடிவுக்கு அக்செப்ட் பண்ணி தான் ஆகணும் … புரிஞ்சிக்குவன்னு நான் நம்புறேன் ….  ‘உன் ஈகோக்கு மோனிஷாவை பலியிட்டுறாத’ “-  நறுக்கென்று  கூறி அர்ஜுனின்  பதிலுக்காய்  காத்திருந்தாள் … ‘உன் ஈகோக்கு மோனிஷாவை பலியிட்டுறாத ‘ வர்ஷாவின் வார்த்தைகள் அவனது இதயத்தை சுருக்கென்று தைத்தது …

ஆழமாக யோசித்தவனின் கண்முன் அவனது தந்தை ரத்த வெள்ளத்தில் சடலமாய் கிடந்தது நினைவிற்கு வர விழிகளை அழுந்த மூடி மூச்செடுத்தவன் ” மோனிஷாக்காக ”  – ஒரே வார்த்தையில் தன் சம்மதத்தை தெரிவித்தான் …

” சலீம் மாம்ட்ட பேசு …. அவன் சரி சொல்லிட்டான் ” – சலீமை அவசரப்படுத்தினாள்

” பேசலாம் … அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசணும் ” – என்றவனின் மனம் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த  அர்ஜுனை கண்டு களித்தது..

தன்னிடம் பேசவந்த வர்ஷாவை தன் கரம் உயர்த்தி தடுத்தவன்  ” என்ன அர்ஜுன் ஒரு டீல் பேசலாமா ??”  – சலீமின் பரிகாச குரலில்..   அதிர்ச்சியுடன் நிமிர்ந்தான் அர்ஜுன் ….

” உனக்கு தெரியாதது ஏதும் இல்லை … இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கு …”

சலீமை குறுக்கிட்ட அர்ஜுன் ” இப்ச் என்ன வேணும்ன்னு மட்டும் சொல்லு ” –   பற்களை கடித்தான்

”  நீயே போஃன் பண்ணி ,” அம்மா அன்னைக்கு உங்கள ரொம்ப தப்பா பேசிட்டேன் என்னை மன்னிச்சிருங்க … எனக்கு உங்க உதவி வேணும் நீ வாங்கன்னு  ” சொல்லணும் அவ்ளோ தான் ” – என்றான் கூலாக … அர்ஜுனின் வதனம் கோபத்தில் சிவந்தது .

” ஆர் யு மட் ” – ரோஹித் வர்ஷா இருவரும் சலீமிடம் சண்டை இட்டனர்  …

” ஷட் அப் ” – அனைவரையும் அடக்கினான் …

” சலீம் இது பேசுற நேரமா ” – ஆதங்கப்பட்டாள் வர்ஷா …

” நீ தலையிடாத வர்ஷா ….இது தான் என் முடிவு “

” சலீம்  ஆர் யு அவுட் ஆஃப் யுவர் மைண்ட் ஒரு பெண்ணுடைய மானமும் உயிரும் இதுல சம்பந்தம் பட்டிருக்கு  ” –  ஆவேசப்பட்டாள் வர்ஷா

” என்னால என்ன பண்ண முடியுமோ நான் பண்ணிட்டேன் இனிமே அவன் தான் பண்ணனும் … அவளுடைய மானத்தை விட என் அம்மாவோட தன்மானம் எனக்கு முக்கியம் வர்ஷா …”

” ஹாஸ்பிடல்ல இருந்து கம்ப்ளெயிண்ட் குடுத்தாங்கன்னா ப்ராப்லம் ஆகும் சலீம் ” – தன்மையுடன் கூறினாள்

”  போலீஸ் கேஸுன்னு போனா  ஆகா தான் செய்யும் ..விஷயம் மீடியா வர போகும் …. நாலு பேர் நாலு விதமா  எழுதுவாங்க …சிலர் அப்பாவி பெண்ணுக்கு நடந்த கொடுமைன்னு எழுதினாலும் சிலர்  மோனிஷாவை   கேரக்டெர் லெஸ்ன்னு கூட சொல்லலாம் ” – நிறுத்தி நிதானமாய் அர்ஜுனை கூர்ந்து கவனித்தபடி சலீம் கூறிய மறு நொடி…

சீறி பாய்ந்த அர்ஜுன் சலீமின் சட்டையை இறுக்கமாய் பற்றினான் உடல் கோபத்தில் நடுங்க … பார்வை  உக்கிரமாய் இருந்தது  …

” கொன்னுடுவேன்டா …” – ஆள்காட்டிவிரலை உயர்த்தி பிடித்தபடி எச்சரித்த. அர்ஜுன் மேலும் தொடர்ந்து “என்னை பழிவாங்க உனக்கு இந்த சிட்டுவேஷன் தான் கிடைச்சிதா சலீம் ?? ” – வெறுமையாக புன்னகைத்தான் …

அர்ஜுனின் வெறுமையான புன்னகையும் அவனுடைய கேள்வியும் சலீம்  மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது  …  அதில் இருந்த உண்மை தீ அவனை பலமாய் சுட்டது …’  ஆம் உனது  இயலாமையை  நான் பயன்படுத்திக்கொண்டேன்  … தப்பு தான் ஆனாலும் எனக்கு வேற வழி இல்லை  !!’ மனதிற்குள் எண்ணியவன் … அர்ஜுனிடம்,

” கோபம் வருதா …  அதே மாதிரி தான் என் அம்மாவை நீ சொல்லும் போது எனக்கும் வந்துச்சு … மோனிஷா வேணும்ன்னா நீ … ”  என்று சலீம் முடிப்பதற்குள் எதுவும் பேசாமல் அர்ஜுன் அங்கிருந்து சென்றான்…

மோனிஷாவை அந்த நிலையில் கண்ட மறுகணமே அவனது ஈகோவெல்லாம் பறந்து  சென்றிருக்க … அவளது நலனை பற்றி மட்டுமே சிந்தித்தவன் சிறிதும் சிந்திக்காமல் அலைபேசியை கையில் எடுத்து வேகமாய் தன் தாயின் எண்ணை படபடவென டையல் செய்தான் …

பிடிக்காத தாய் என்று எவ்வளவு உரக்க கத்தினாலும் !!    அவளது நினைவுகள் தொடங்கி அலைபேசி எண் வரை அவளை சார்ந்த எதுவும் அவன் நினைவை விட்டு நீங்க வில்லை  என்னும் நிதர்சனமான உண்மைக்கு இதுவே சாட்சி !!  …

வேகமாய்  டையல் செய்துவிட்டான் ஆனால் ரிங் ஆக ஆக அவனது உள்ளம் தாறுமாய் அடித்துக்கொண்டது … மூச்சு முட்டுவது போல ஒரு உணர்வு … அன்று தவறாய் பேசி வார்த்தைகளை  தனலாய் கக்கும் பொழுது  தயங்காத நெஞ்சம் இன்று தயங்கியது !!

அவசரமாக எங்கோ சென்று  கொண்டிருந்தவள்  அலைபேசி அழைக்க   கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து  ,” ஹலோ நிஹரிகா ஹியர் … ”  – மென்மையாக கூறினாள் ..

அர்ஜுனின் பாறை நெஞ்சம் அந்த நொடி கனத்தது … பழைய நினைவுகள் நெஞ்சை பிசைந்தது … உள்ளுக்குள் சொல்ல முடியாத வலி … எப்பொழுதும்  சீறி பாய்ந்து வரும் வார்த்தைகள் அனைத்தும்   அந்த நொடி அடங்கி மறைந்து போயிருந்தன …மூச்சு முட்டியது  !! விழிகளை இறுக்கமாக மூடி ஆழமூச்செடுத்தான்  .

” ஹெலோ  யார் பேசுறது … ” – மீண்டும்  கேட்டாள் … அலைபேசியில் இருந்து வந்தது வெறும் குரல் மட்டும் தான் … ஆனாலும் அதை கேட்டதும் அவன்,   மனதிற்கு  ஏனோ அருகாமையில் இருந்து கேட்டது  போல  தோன்ற அமைதியாக நின்றான் …

எதிர் முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை … இருந்தும்  ஏனோ அழைப்பை துண்டிக்க மனம் இல்லாமல் … அவளும் அமைதியாய் இருந்தாள் … நெஞ்சுக்குழிக்குள் ஏதோ தோன்றியது . சற்றென்று திரும்பி பார்த்தாள் ஜன்னல் ஓரமாய் விழிகளை மூடியபடி நின்று கொண்டிருந்தான் அர்ஜுன்.

ஏதோ ஒருவித  உள்ளுணர்வு உந்தித்தள்ளியதில்  ‘ அர்ஜுன் தான் கால் பண்ணிருபானோ ? ‘ என்னும் எண்ணம் மனதில் தோன்ற …. கண்கள் தானாய் கலங்கியது.. ‘ வீணாக ஆசை கொள்ளாதே !! இத்தனை ஆண்டு உன்னை தேடாதவன் இன்று ஏன் தேட போகிறான் !’ என்று மனம் மீண்டும் எதிர்மறையாய் எச்சரிக்க  அமைதியாய் சிந்தித்தாள்…   சிந்தனை பெருகியதும் தயக்கமும் சந்தேகமும் போட்டிப்போட ஒருமானதாய் அவைகளை ஒதுக்கிவிட்டவள் … ‘ ஏன் அவனாக இருக்க கூடாது ?’  என்கின்ற நப்பாசையில்  

” அர்ஜுன் ” –  என்று அழைத்தாள் …  ஒரே ஒரு வார்த்தை இருவருக்கும் இடையே இருந்த மௌனத்தை தகர்த்தெறிந்தது  …

கார்மேகத்துக்குள்  பாயும் மின்னலை போன்று ஒருவித உணர்வு அவன் இதயத்தை தாக்கியது மூடியிருந்த விழிகளின் ஓரம் இரு துளி கண்ணீர் மணிகள் விழுந்து அவன் வதனத்தை நனைத்தது . மகன் அழுகிறான் துடைக்க கரங்கள் துடித்தது …

எப்படி தன்னை கண்டறிந்தார் என்று அவன் யோசிக்கவும் … விரைந்து சென்று அவன் முன்பு தோன்றினாள்  நிஹரிகா … அதிர்ச்சியுடன் நோக்கினான்…

” நீதான கால் பண்ணின …. என்னாச்சு அர்ஜுன் … ஏன் அழுதுட்டு இருக்க ” –  கவலையுடன் கேட்டார்

பதில் ஏதும் கூறாமல் ‘ ஆம்  ‘ என்பது போல தலையசைத்தவன் ” ஐ நீட் யு … ஐயம் சாரி ” –  பட்டென்று  கூறி … சற்றென்று  மண்டியிட்ட படி கீழே அமர்ந்து  முகத்தை மூடி அழுதான் … அர்ஜுன் அழுவதை பார்த்தவுடன் நிஹாவின் மனம்  மிகவும் வருந்தியது…

அவள் ஆறுதல் கூற முனைந்த நேரம் அங்கு வந்த சலீம்  நிஹாவை  வேகமாக அழைத்து செல்ல …  அர்ஜுன் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தான் .

” என்னாச்சு சலீம் என்னை ஏன் வர சொன்ன அர்ஜுன்?? ஏன் அழறான்… உனக்கு தெரியுமா அவன் எனக்கு கால் பண்ணிருந்தான் ” – வார்த்தைகள் சீராக இருப்பினும் வதனத்தில் கலவரம் குடிகொண்டது

” மாம் ரிலாக்ஸ் ஐ வில் எக்ஸ்ப்ளேன் … நீங்க வாங்க வர்ஷா அர்ஜுனை பார்த்துக்குவா நீங்க ப்ளீஸ் கேள்வி கேட்க்காம வாங்க பதில் சொல்ற நிலைமையில யாரும் இல்லை ” என்றவன் நிஹாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் …

மருத்துவரை சந்தித்த நிஹரிகா  தன்னை அறிமுகம் செய்துகொள்ள … நிஹாவின் பெயரை கேட்ட உடனே அவரை அடையாளம் கண்டுகொண்டவர் ..

” மேம் நீங்களா ??நாம இதுக்கு முன்னாடி மும்பைல மீட் பண்ணிருக்கோம் “

” ஓ… சாரி பட் எனக்கு உங்கள  நியாபகம் இல்லை “

” இட்ஸ் ஓகே மேம்”

” மோனிஷா  நிலைமை இப்போ எப்படி இருக்கு “

”  ஷீ இஸ் ஓகே மேம் … உங்களுக்கு இந்த பசங்க  பொண்ணை எல்லாம்  தெரியுமா ?” –  ஆச்சரியத்துடன் கேட்டார்

” ஆமா தெரியும் அதோ நிக்கிறான்ல அவன் தான் என்னுடைய மூத்த பையன்  சலீம்  …  தனியா நிக்கிறான்ல  அவன் அர்ஜுன் பக்கத்துல நிக்கிறது ரோஹித் மூணு பேரும் என் பசங்க தான் மத்த பசங்க எல்லாரும் என் பசங்களோட  ஃப்ரண்ட்ஸ் எனக்கு எல்லாரையுமே தெரியும் “

” ஓ சலீம் ரோஹித் ரொம்ப அமைதின்னு நினைக்கிறேன் “

” மூணு பசங்களுமே நல்ல பசங்க தான் … ” – என்று நிஹா சொல்லி முடிக்கவும் ,

” ரொம்ப முக்கியம் ! இதை தெரிஞ்சிக்க தான் இவ்வளவு ஸீன் போடீங்களா … கதையெல்லாம் அப்புறம் பேசுங்க முதல்ல ட்ரீட்மெண்ட் பண்ணுங்க மோனிஷாவுக்கு ஏதாவது ஆச்சு நீங்களும் இருக்க மாட்டிங்க உங்க ஹாஸ்ப்பிட்டலும் இருக்காது ” -அர்ஜுனின் சிவந்த விழிகள் எச்சரித்தன …

” அர்ஜுன் ” – நிஹாவின் அதட்டல் அர்ஜுனுடைய பேச்சில் குறுக்கிட்டது ..

” என்ன பேச்சு இதெல்லாம் ..நீ ஏன் இங்க வந்த “

” நானா பேசல அவங்க செயல் தான் என்னை பேச வைக்குது “

” சரி நான் பேசிக்கிறேன் நீ போ “

“நோ முடியாது இங்கையே தான் நான் நிப்பேன் என் முன்னாடியே கேளுங்க  ” –  பிடிவாதம் பிடித்தான்..

” மோனிஷா நல்லா இருக்கான்னு சொல்றீங்க அப்புறம் ஏன் பசங்க கிட்ட என்னலாமோ சொல்லிருக்கீங்க  “

” அது மேம் ” – தயங்கினார்

” சொல்லுங்க “

” அந்த பெண்ணுடைய பிளட் ட்ரேசஸ்ல ‘ரோஹிப்னோல் ‘ கலந்திருக்கிறது  தெரிய வந்துச்சு  … அப்புறம் கையில ரத்த காயமும் … யாரோ பலவந்தமா இறுக்கி புடிச்சிருந்த  தடமும் இருந்துச்சு அதான் ரேப் அட்டெம்ப்ட்டா இருக்குமான்னு  நினைச்சு செக் பண்ணினேன் … உடம்புல வேற எந்த தடமும் இல்லை … இருந்தாலும் பசங்கள பார்த்ததும் எனக்கு சந்தேகம் வந்திருச்சு உங்களுக்கே தெரியும் தினமும் இந்த மாதிரி எவ்வளவு கேஸஸ் பாக்குறோம் … இந்த பசங்க தான் ஏதும் பண்ணிருப்பாங்களோன்னு  நினைச்சு  பெரியவங்க வந்தா தான் ட்ரீட்மென்ட்  பண்ண முடியும்ன்னு பொய் சொன்னேன் … மத்தபடி நான் அப்பவே ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டேன் ஷீ இஸ் அவுட் ஆப்  டேஞ்சர் .. இந்த மருத்துடைய தாக்கம் பத்துல இருந்து பன்னிரென்று மணிநேரம் வர இருக்கும் …. அதனால கண்முழிக்க  நேரம் ஆகும் அவ்வளவு தான் … உங்க பசங்கன்னு தெரியாது மேம் “

“இட்ஸ் ஓகே ஒரு டாக்டரா நீங்க பொறுப்பா நடந்திருக்கீங்க … நானா இருந்தாலும் அப்படி தான் செய்வேன் … அர்ஜுன் இப்போ உனக்கு க்ளியர் ஆகிடுச்சா “

“ஆம்”  என்பதாய் தலையசைத்தவன் மருத்துவரிடம் மனதார மன்னிப்பு கேட்க … பதிலுக்கு புன்னகைத்தவர் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார் .

” மோனிஷா நல்லா இருக்கா பயப்பட தேவையில்லை ”  மகனின் மனநிலையை புரிந்து கொண்டு அவன் கேட்காமலே கூறினார் …

” ———————- ” – பதில் பேசாமல் அமைதியாய் நின்றான் ..

” சொல்றதுக்கு வேற  எதுவும் இல்லையா அர்ஜுன்? ” – ‘அம்மா ‘ என்றழைப்பானா !! பேதையின் உள்ளம் ஏங்கியது !! …

“இல்லை  தேங்க்ஸ்  ”  என்று மற்றும் கூறி  நிஹாவின் ஆசையில்   தீ வைத்துவிட்டு மோனிஷாவை காண  சென்றான்.

தன் ஆசை நடக்காமல் போனதில் நிஹா கலங்கி   நிற்க அவள் அருகில் வந்த சலீம் ” பேசுவானான்னு நினைச்சோம்  இப்போ  பேசிருக்கான் … கொஞ்சம் பொறுமையா இருங்க நம்மள  சீக்கிரமா  புரிஞ்சிக்குவான் … நீங்க கண்ணை துடைச்சிட்டு  வாங்க எல்லாரும் பதற்றமா இருக்காங்க ” என்றவன் தன் தாயை தேற்றினான் ” பதற்றமாய் இருந்த அவளது நண்பர்களிடம் அவர்கள் கேட்கும் முன்பே.

” மோனிஷா நல்லா இருக்கா அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்றார் … அந்த வார்த்தைகளை கேட்ட பிறகே அனைவரும் நிம்மதியுடன் காணப்பட்டனர் …

” எப்படி ஆன்ட்டி அர்ஜுன் சொன்ன உடனே வந்துட்டீங்க ” – ஆச்சரியத்துடன் கேட்டாள் வர்ஷா

” அர்ஜுன் சொல்லி வரல… சலீம் கால் பண்ணிருந்தான் … அப்போ நான் ஒரு முக்கியமான சர்ஜெரில இருந்தேன் அதான் முடிச்சிட்டு வர லேட் ஆகிடுச்சு  ”  என்று அவர் கூறவும் அனைவரின் பார்வையும் சலீம் மீது பதிந்தது ..

” கண்டிப்பா பெரியவங்கள வர சொல்லுவாங்கன்னு எனக்கு தெரியும் அதான் நான் இங்க வந்ததும் மாம் கிட்ட வர சொல்லிட்டேன் ” – சலீமின் இந்த செய்கை அவனது பொறுப்புணர்வையும்  அனுபவத்தையும் தெளிவாய் காட்டியது …  ஒரு பொறுப்புள்ள ஆண்மகனாய்  வென்று விட்டான் !  .. ஆனால்  ஒரு மகனாய் ??? அன்று தோற்றதை எண்ணியவனுக்கு அர்ஜுனின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்வதை   தவிர வேறு வழியில்லாமல் போக … அன்று  அர்ஜுனின்   வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்திற்கு    இன்று  அவனது   கண்ணீரையே மருந்தாக பூசிக்கொண்டு நிம்மதி அடைந்தான் …

 ” மோனிஷாக்கு எப்படி இப்படி  ஆச்சு ???” அனைவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தப்படி கேட்டார் நிஹா.

” அதான் பெரியம்மா எனக்கு தெரியல … மூணு பேரும்   சொல்ல மாட்டிக்கிறாங்க  ” – என்றான் ரோஹித் …

” உனக்கு தெரியுமா சலீம்?? “

” மாம் அதான் அவ நல்லா இருக்காள்ல விடுங்க  “

” என்ன அலட்சியமா  சொல்ற … அவ ப்ளட்ல கலந்திருக்க  மருந்து எவ்வளவு  மோசமானதுன்னு தெரியுமா ?? ”  என்று ஆர்ம்பித்தவர்  … அந்த மருந்தின் வீரியத்தையும் அதன் பயன்பாட்டையும் பற்றி கூறி முடிக்கும் பொழுது  … சலீம், வர்ஷா தவிர மற்ற நால்வரின் விழிகளும் பயம் கலந்த அதிர்ச்சியில் விரிந்திருந்தது  …

” இப்போ சொல்லுங்க என்ன பிரச்சனை?? …நான் ஹெல்ப் பண்றேன் … வேற யாரும் அவளை மிஸ்யூஸ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தாலும் சரி ஆள் யாருன்னு மட்டும் சொல்லுங்க நான் ஹெல்ப் பண்றேன் “

” ஆமா சலீம் யாருன்னு சொல்லு?? ” – என்றான் ரோஹித்

” மாம் அப்படி ஏதும்ன்னா நானே சொல்றேன் … இப்போ ப்ளீஸ் மா இதை இப்படியே ட்ராப் பண்ணிருங்க ப்ளீஸ் ” என்று கெஞ்ச …  “

” காலம் கடந்து பிரச்சனை  பெருசானத்துக்கு அப்புறம் பேசி  எந்த பயனும் இல்லை …நான் வற்புறுத்தல பட் கவனமா யோசிச்சு முடிவெடுங்க  ஹெல்ப் வேணும்ன்னா எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க … நான் வேணும்ன்னா ஸ்டே பண்ணட்டுமா “

” வேண்டாம் பெரியம்மா  நாங்க பார்த்துக்குறோம் ” – என்று ரோஹித் மறுக்க .. இதற்கு மேல் வற்புறுத்துவதில் பலன் இல்லை என்பதை உணர்ந்தவர் வர்ஷாவையும் ரக்ஷிதாவையும் மட்டும் தனியே அழைத்து ,

” நீங்க ரெண்டு பேரும் இங்கையே இருங்க … எல்லாரும் பசங்களா இருக்காங்க நல்ல பசங்க தான் … ஆனாலும் இப்போதைக்கு உங்க சப்போர்ட் தான் அவளுக்கு ரொம்ப முக்கியம் “

” கண்டிப்பா ஆன்ட்டி “

” எதுவும் தேவைப்பட்ட எனக்கு கால் பண்ணுங்க ”  என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் .

அனைவரும் மோனிஷாவை காண வந்தனர் …அசைவின்றி படுத்திருந்தாள் … மோனிஷாவின் நிலைக்கு தான் தான் காரணம் என்று மிகவும் வேதனைப்பட்டாள் …  சலீமை திட்டிய அனைவரும் அவனை பாராட்ட , தர்ஷித் சலீமிடம்

” தேவையே இல்லாம  அவன் எமோஷன்ஸ் கூட விளையாடிட்டு இப்போ எதுக்கு இந்த நல்லவன் வேஷம்  “- கோபத்துடன் வினவினான் .

” அப்போ அவன் மட்டும் விளையாடலாமா ??”

” நானா இல்லை நீங்களா ” – புருவம் உயர்த்திய  அர்ஜுன் மேலும் தொடர்ந்து “ஒருநாள் வந்துட்டா எல்லாம் சரியாகிருமா சலீம் … பட்ட காயம் பட்டது தான் ஒடஞ்சது ஒடஞ்சது தான் இனிமே ஒட்டாது … எப்படியோ உன் பழி  உணர்ச்சிய தீர்த்துக்கிட்ட பீ ஹப்பி   ” – விரக்தியுடன்  புன்னகைத்தான் …

எப்பொழும் அர்ஜுனின்  ஆக்ரோஷத்தையும்  ஆணவத்தையும்  மட்டுமே  பார்த்த சலீமிற்கு இப்பொழுது அவனது  அமைதியான பேசுச்சும்  விரக்தியான புன்னகையும்  ஒரு வித  சங்கடத்தை ஏற்படுத்த … ” எனக்கும் சொல்றதுக்கு நிறையா இருக்கு சலீம் … ஆனா நீ தான் கேட்க ரெடியா இல்லையே ” மனதிற்குள் கூறியவன் … மேலும் பேசி அவனை வேதனை படுத்த விரும்பாது அமைதியாய் நின்றான் …

” மோனிஷாக்கு என்னதான் ஆச்சு ” – அர்ஜுன் மீதிருந்த தன் பார்வையை விலக்காமல் கேட்டான் லக்ஷ்.

”  நத்திங் நல்லா தான் இருக்கா ” – சமாளித்தான்

சொல்லக்கூடாதென்று  ஏதும் இல்லை யாரும் அவளை தவறாய் பேசி விட கூடாது … மேலும் ஆறுதல் கூறுகின்றோம் என்கின்ற பெயரில் அவளை யாரும் சங்கட படுத்திவிட கூடாது என்கின்ற எண்ணத்தில் நடந்த எதையும் கூறாமல் அமைதி காத்தான் … இதை தவறாய் புரிந்து கொண்ட லக்ஷ்

” அர்ஜுன் அவ எங்களுடைய  ஃப்ரண்ட் தெரிஞ்சிக்கிற உரிமை எங்களுக்கும் இருக்கு சொல்ல இப்போ போறீங்களா இல்லையா … ” – குரலை உயர்த்தினான்  …

“நாங்க கேட்டுதான் சொல்லல இவங்களுக்கு மாட்டேன்னு சொல்ல முடியாதுல பதில் சொல்லு அர்ஜுன் ” – நிலைமை புரியாது லக்ஷ்க்கு துணையாக ரோஹித்தும் இணைந்து கொள்ள …. வேறு வழியில்லாமல் அனைத்தையும் கூறி முடிக்கவும் … மோனிஷாவின் இந்த  நிலைக்கு ஒருவிதத்தில் தான் காரணமாகிவிட்டோமே என்பதை எண்ணி  ரக்ஷிதா கதறி அழுதாள் …

” இப்போ அழுது என்ன யூஸ் … வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல உன் இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்ச இப்போ பார்த்தியா …மோனிஷாவோட இந்த நிலைமைக்கு  நீ மட்டும் தான் காரணம் ரக்ஷிதா ” – கோபத்தில் கத்தினான் லக்ஷ் …

அர்ஜுன் விஷயத்தில் மோனிஷா மீது கோபமாக இருக்கும் தர்ஷித் கூட அர்ஜுன் கூறியதை கேட்டதும் அவளுக்காக வேதனை பட்டான் ..

” நாம ஏன் அழணும் …ஒரு பொண்ணுகிட்ட இவ்வளவு மோசமா நடந்துகிட்ட அந்த கிருஷ் தான் வருத்தப்படணும் இன்னைக்கே இப்பவே நான் மாம் கிட்ட பேச போறேன் இனிமே அவன் நம்ம காலேஜ்ல இருக்கவே கூடாது ” – ஆவேசத்துடன் பொங்கி எழுந்தான் ரோஹித் …

இவ்வாறு அனைவரும் போட்ட சத்தம் பாதி … போதாக்குறைக்கு  மயக்க மருந்தின் வீரியம் வேறு சற்று தனிந்திருக்க … சிறு முணங்களுடன் படுக்கையில் இருந்து எழுந்திருக்க   மோனிஷா சிரமப்பட்டதை    கவனித்த அர்ஜுன் …

” ஏய்  மோனி நான் வரேன் ” – பதறியபடி அவள் அருகில் சென்றவன்  அவள் முதுக்கு ஒரு தலையணை கொடுத்து  அவளது மென்கரத்தை பிடித்து லேசாக தூக்கி அமரவைத்தான்…அவன் அமரவைத்த மறுகணமே வெடுக்கென்று  தன் கரத்தை அர்ஜுனின் பிடியில்  இருந்து விடுவித்தவளின் முகத்தில் ஒருவித இறுக்கம் குடியேற   … திகைத்தவன் !

அவளது  புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல்     நின்றான்   … அனைவரும் அவளை எதிர்கொள்ள முடியாமல் சங்கடத்துடன் நிற்க  … அப்பொழுது அங்க வந்த நர்ஸ் டாக்டர் ரவுண்ட்ஸ் வராங்க ப்ளீஸ் நீங்க வெளியில இருங்க … என்று அனைவரையும் வெளியே அனுப்ப … தனக்கு முகுகாட்டி எந்த வித அசைவும் இன்றி ஜடம் போல அமர்ந்திருந்த மோனிஷாவையே திரும்பி திரும்பி பார்த்தபடி அர்ஜுன் அங்கிருந்து  சென்றான் …

 நேரம் காற்றை போல வேகமாய் கடந்திருக்க மோனிஷாவை பரிசோனத்தை  செய்துவிட்டு வெளியே வந்த மருத்துவர் வெளியே வந்து ” இப்போ அவங்க கம்ப்ளீட்டா க்யூர் ஆகிட்டாங்க … ஆனாலும் கொஞ்சம் ரெஸ்ட் தேவை நீங்க நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க … ரொம்ப பேசி அவங்களை தொந்தரவு பண்ணாதீங்க  …. ஏதும் தேவைன்னா இன்டெர்க்காம்ல  கூப்பிடுங்க … நைட் ஸ்டேக்கு ரூம் வேணும்ன்னா ரிசெப்ஷன்ல பேசிக்கோங்க  ” கூறவேண்டியதை  கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் …

அர்ஜுன் மோனிஷாவின் விலகலை குறித்த கவலையில் மூழ்கி இருக்க அவன் அருகில் வந்து அமர்ந்த வர்ஷா ,

” உன் நிலமை புரியுது அர்ஜுன் …பட் கொஞ்சம் டைம் எடுக்கத்தான் செய்யும் பயங்கர டிப்ரெஷன்ல இருக்கா … நீ தான் அவளை அதுல இருந்து வெளியில கொண்டு வரணும் உன் கோபத்தையெல்லாம் ஒதுக்கி வை …  சலீம் குடுத்த அரவணைப்பும் அன்பும் தான் என்னால டிப்ரெஷன்ல  இருந்து சீக்கிரமா வர முடிஞ்சிது … ” – மோனிஷாவின் நிலையை எடுத்துக் கூறினாள்…

” ————- ” – பதில் பேசாமல் சரி என்பதாய் தன் தலையை மட்டும் அசைத்தான்.

” எல்லாரும் கம்ப்ளெயிண்ட்  குடுக்கணும்ன்னு பேசுறாங்க … கிருஷ் ரொம்ப மோசமானவன்  கம்ப்ளெயிண்ட் குடுக்குறோம்ன்னு தெரிஞ்சா ஏதாவது பண்ணுவான் நான் ஏன் குடுக்கலைன்னு உனக்கு நல்லா   தெரியும்  “

” நான் பார்த்துக்கறேன் …  வர்ஷா  நீ டென்ஷன் எடுத்துக்காத “

” மோனிஷா ரக்ஷிதாவ காணும்ன்னு காஸ்டல்ல தேட மாட்டாங்களா ?? “

” ம்ம்ம் தேடுவாங்க  …. நான் ஹாஸ்டல் வார்டன் கிட்ட பேசிக்கிறேன் ” என்றவன் … ரக்ஷிதாவின் மூலமாக வார்டன்  நம்பரை வாங்கி அவர்களுக்கு தொடர்பு கொள்ள இறுதி அழைப்பை ஏற்றார் .. தன்னை யார் என்று அறிமுகம் செய்த அர்ஜுன் … தான் அழைத்த காரணத்தை கூற முதலில் பயந்தவர் …

” என்ன தம்பி சொல்றீங்க ஆக்சிடெண்ட்டா “

” சின்ன காயம் தான் டாக்டர் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க “

” ஆனா தம்பி  மஹிமா மேம்க்கு தெரியாம எப்படி சொல்லலைன்னா என் வேலை போய்டும் “

” சொன்னாலும் போய்டும் ” – அழுத்தமாய் கூறினான் … உடனே பதறியவர் ” அச்சோ தம்பி “

” மேம் சித்திக்கு தெரிஞ்சாலும்  உங்க வேலைக்கு நான் பொறுப்பு  யார்கிட்டையும் ஷேர் பண்ண வேண்டாம் “

” அது இல்ல தம்பி ஏற்கனவே அந்த பொண்ணால பிரச்சனை “

” வாட்” – மோனிஷாவை பற்றி ஒரு வார்த்தை கூட  தவறாய் கேட்க விரும்பாதவன் , வார்டன் அவளை பற்றி எதோ கூற வரவும் அவனது குரல் சற்றென்று இறுகியது …

” அது வந்து ” – பயத்தில் உளறினாள் …

” என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க தேவை இல்லாததெல்லாம்  பேசாதீங்க … நாளைக்கு மார்னிங் அவங்க வருவாங்க  ” – தன் முடிவை கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அனைவரும் சாப்பிடுவதற்காக வெளியே சென்றிருக்க  அர்ஜுன் மட்டும் மோனிஷா இருக்கும் அறைக்கு வெளியே   அமர்ந்திருந்தான் … அவனது எண்ணம் முழுவதும் மோனியையே சுற்றி சுற்றி வந்தது … திடிரென்று அவன் மனதிற்குள்  சொல்ல முடியாத ஒரு வித உணர்வு  நுழைய … மோனிஷாவை காண உள்ளே சென்றவன் படுக்கையில் அவள் இல்லாததை கண்டு கலவரமடைந்தான் …

பிறகு குளியல் அறையில் இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டு ஆசுவாசமடைந்தவன் , சிறு தயக்கத்திற்கு பிறகு கதவை தட்டி

” மோனிஷா நீ நல்லா இருக்கல்ல ” – பயத்துடன் கேட்டான் … பலமுறை அவன் அழைத்தும் அவளிடம் இருந்து பதில் ஏதும் வராமல் போகவே கதவை வேகமாக தட்டினான் … அப்பொழுதும் அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வரமால் போக … பதறியவன் சிறிதும் யோசிக்காமல் கதவை தன் புஜத்தை கொண்டு திறக்க முயன்றான் … ஒரு சில முயற்ச்சிக்கு பிறகு தன் முயற்சியில் வெற்றி பெற்றவன்  …   வேகமாக உள்ளே நுழைந்து மோனிஷாவை கண்ட பிறகு மேலும் வேதனையில் தவித்தான்  … 

ஷவரில் இருந்து கொட்டும் தண்ணீருக்கு அடியில்  பிடுங்கி  எறிந்த கொடி   போல சுருண்டு கிடந்தாள் மோனிஷா … அவள் தேம்பி அழ அழ உடல் குலுங்கியது … அதை கண்டவனுக்கோ நெஞ்சுக்குழிக்குள் வலி … ” எப்படி உன்னை இதுல இருந்து வெளியே கொண்டு வர போறேன் மோனி ” – என்று தவித்தவன் .. மெல்ல அவளை நெருங்கினான் … அர்ஜுனை கண்டதும் சற்றென்று எழுந்தவள் அவனை விட்டு விலகி நிற்க …

அவளுடைய   விழிகளில்  கனலக்கூடிய அச்சத்தை கொட்டும் நீரின்  கீழ் இருந்தே அவனால்  உணர முடிந்தது .

” என்ன பண்ணிட்டு  இருக்க பா ” என்றபடி ஷவரை அணைத்தவன் … அவளையும் அழைக்க … வர மறுத்தவள் … அவனை அங்கிருந்து செல்லுமாறு கூற …அவளது கரங்களை தன் கரங்களுக்குள் சிறைபிடித்தான் அர்ஜுன் …

” என்னை விடு அர்ஜுன் “

” விட முடியாது மோனிஷா “

” எனக்கு என்னை நினைச்சாலே அசிங்கமா இருக்கு ப்ளீஸ் “- அழுதாள்

”  இதெல்லாம் ஒன்னும் இல்லை நான் இருக்கேன் “

” ப்ளீஸ் என்கிட்ட யாரும் வராதீங்க “- அவனது கரங்களை உதறியபடி அழுதாள்  …  ” எனக்கு அப்படியே அசிங்கமா என் மேல ச்ச  ” -வார்த்தைகள்  தடுமாறி இடம்மாற …  கிருஷ் தன் கரம் பற்றியது என்று அங்கு நடந்த அனைத்தையும் எண்ணிப்பார்த்து தேம்பி அழுதவள் … ஏதோ தன் மேல் புழு ஊர்வதை போலவும் … கரம்  முழுவதும் அசிங்கத்தை  பூசி கொண்டது போலவும் அருவருப்பு அடைந்தவள் … கிருஷின் கை பட்ட இடத்தை பிய்த்து எறிவது  போல  தன் விரல் நகத்தால் அழுந்த கீறினாள் … அதை பார்த்து பதறிய  அர்ஜுன் அவளை தடுக்க … விடாமல் அவள் அதே செய்கையை செய்ய … விடாப்பிடியாக அவளை தடுத்து தன் பிடிக்குள் கொண்டு  வந்தான் …

” விடு அர்ஜுன் ” – வான் பிளக்க கத்தினாள் …  

” ஷட் அப் ” –  கத்தியபடியே  மேலும் தன்னுடன் அவளை இணைத்து அணைத்துக்கொண்டவன் ….

அவளது மென் வதனத்தை தன் இருக்கரங்களிலும் ஏந்திக்கொண்டு ,

” நீ மட்டும் தனியா இல்லை பேபி டால் … நானும் உன் கூட இருக்கேன் …. ப்ளீஸ்  யு ஆர் மை ஃபைட்டர்  … ப்ளீஸ் ” – ஆசுவாசப்படுத்தினான் …

” முடியல அர்ஜுன் … அய்யோ….!” – என்று அலறப் போனவளின் வாயை தன்  கரம் கொண்டு மூடியவன்… மெல்ல ஷவரை திறந்து தானும் அவளுடன் நனைந்தான் … கொஞ்சம் கொஞ்சமாய் தன்னவளை நிதானப்படுத்தியவன் … தன்னவளின் மென் கரங்களை  மெதுவாய்   குளிர்ந்த நீரில் கழுவினான் … காயத்தில் தண்ணீர் பட்டதும் ” இஸ்ஸ்ஸ்ஸ் “-  உதட்டை கடித்து எரிச்சலை தாங்கிக்கொண்டாள் ….

விழிகள் விடாமல் கசிந்தது ,கொட்டும் நீரிலும்  அவளது விழிநீரை கண்டறிந்த கள்வன் … சட்டென்று அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு

” ஸ்ஸ் நோ  போதும் டா அழுதது…. இட்ஸ் ஓகே … இட்ஸ் ஓகே …. ரிலாக்ஸ் மா ! ” –  அவள் தலையை வருடிக்கொடுத்தான் … அவன் கொடுத்த அரவணைப்பு மோனிஷாவின் அழுகையை அதிகரித்தது … அவள் அனுபவிக்கும் வேதனையையும் வடிக்கும் கண்ணீரையும் பார்க்கும் பொழுது அர்ஜுனுக்கு சித்திரவதையாக இருந்தது  … பாதுகாப்பை தேடி தாயிடம் வரும் மகவை போல் அர்ஜுனின்  நெஞ்சில் சாய்ந்து புதைந்தபடி  கதறிக் கொண்டிருந்தாள் மோனிஷா …

– தொடரும்