Oh kadhal Kanmani

metromasti_photos (1)

  காதல்  கண்மணி 19

–  நெமிரா

வணக்கம் நட்பூஸ் ,

விட்டு விட்டு கொடுத்தாலும் என்னை விட்டு கொடுக்காது நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி .

ஓ  காதல்  கண்மணியின் அடுத்த பதிவோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி …

படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் …

இதுவரை  …..

” அதை சொல்லி தான் என்னை நிரூபிக்கணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது  … என்றவன் ,

மஹிமாவை இறுக்கமாக பார்த்தபடி,

”  என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க … ஐ டோன்ட் கேர் … நோட்டீஸ்ல மோனிஷாவோட நேம் இருக்க கூடாது தட்ஸ் இட்” அதிகாரத்தோடு ஆணையிட்டான் …  

மஹிமாவின் புருவம் சுருங்கி விரிந்தது …

” மோனிஷா மேல ஏன் இந்த அக்கறை … ஏதோ சரி இல்லையே ” மனம் சிந்தனையில் மூழ்கியது … மூளை திட்டம் தீட்ட தயாரானது …

இனி…

அர்ஜுன் கதவை திறக்கவும் ரோஹித் உள்ளே வரவும் சரியாக இருந்தது .

 

” ரோஹித் எங்க போற வெளிய போய் பேசிக்கலாம் “- என்று அர்ஜுன் அவனை அழைக்க .

 

” நோ அர்ஜுன் பேசி தான் ஆகணும் ” – திட்டமாய் உரைத்தவன்  உள்ளே நுழைந்தான் .

 

” நான் அவ்வளவு சொல்லியும் நீங்க என்ன பண்ணிவச்சிருக்கீங்க மாம் ” – கோபத்தில் கத்தினான் … 

 

நிமிர்ந்து பார்த்தாள் ! அவனது முகத்தில்  விரவியிருந்த  உச்சகட்ட  கோபம் அவளுக்கு  சந்தேகமின்றி தெளிவாய் தெரிந்தது ! தெரிந்தும்  பேசாமல்  அவனை சீண்டி  அவனது சினத்தை தூண்டினாள் ! 

 

” ஸ்பீக் அவுட் மாம் ” – மீண்டும் கத்தினான் …

 

அதீத கோபத்தை உள்ளடக்கிக்கொண்டு  எப்பொழுது வேண்டுமானாலும்  வெடிக்கும் நிலையில் அமர்ந்திருந்தாள் மஹிமா .

 

” அப்படி என்ன அர்ஜுன் மேல உங்களுக்கு கோபம்  , நீங்க நினைச்சிருந்தா ஸ்டாப் பண்ணிருக்கலாம்  ” –  சீறினான் .

 

அதுவரை  இரும்பு பெண்மணியாக அமர்ந்திருந்தவள்  ‘ அப்படி என்ன அர்ஜுன் மேல் பொறாமை ‘ என்று ரோஹித் கேட்டதில் எரிச்சலடைந்தவள் !  ‘ பொறாமை அவன் மேல ஷீட் ‘ என்று எண்ணி  மௌனம் கலைத்தாள் .

 

” ஸ்டாப் யிட் ரோஹித் கம்ப்ளெயிண்ட் வரும் ஆக்ஷ்ன்  எடுக்காம எப்படி ?” –  பற்களை  கடித்தபடி கேட்டாள்.

 

” ஓ யாரு பண்ணினது “

 

” லுக் ரோஹித் அதெல்லாம் சொல்ல முடியாது , உன் அர்ஜுன் எந்த தப்பும் பண்ணலன்னு ஆதாரம்  கொண்டுவா  … பார்க்கலாம்  நவ் கெட் அவுட் ” – விழிகள்  கட்டளையிட்டது .

 

” உங்களுக்கு இப்போ ஆதாரம் வேணும் அப்படி தானே “

 

“ஆ… மா ” – வார்த்தைகளை கடித்து துப்பினாள் .

 

“யார்கிட்ட அர்ஜுன் தப்பா நடந்துகிட்டான்னு சொன்னீங்களோ …” என்று தொடர போனவனை இடை மறித்தவள் ,” நான் சொல்லல கம்ப்ளெயிண்ட்   குடுத்தவங்க தான் சொன்னாங்க ”  –  கோபத்துடன் திருத்தினாள்.

 

” ஓகே ஃபையின் … சொன்னாங்களோ  அவங்களே வந்து சொன்னா  நீங்க ஏத்துக்கிட்டு தான ஆகணும் ?” – விழிகளை விரித்தபடி கேட்டான் ..

 

” யஸ் ரோஹித் ” என்று காயத்ரி கூற , மஹிமாவின் விழிகள் கோபத்தை  கக்கியது ‘ நோ மஹிமா அப்படி ஏதும் நடக்க கூடாது … டூ சம்திங்  ” மூளை   சிந்திக்க தொடங்கியது …

 

” என்ன அவ்வளவு பேசுனீங்க இப்போ அமைதியா இருக்கீங்க !” – தன் தாயை பார்த்து புருவம் உயர்த்தினான் .

 

” ஹான் …. எனக்கென்ன அந்த பொண்ணு  வந்து  சொன்னா அர்ஜுன் மேல உள்ள சஸ்பென்ஷன்  ஆர்டர் கேன்செல் பண்ண சொல்றேன் ” – இயல்பாய்  இருப்பது போல நடித்தாள் …

 

தாயை பார்த்து இறுக்கமாய் முறைத்தவன் … பாட்டியிடம் விடைபெற்றுக்கொண்டு  அங்கிருந்து சென்றான் !

 

அர்ஜுனிடம் பேச வேண்டும் . ஆனால்  எப்படி ஆரம்பிப்பது  ! – யோசிக்கும் பொழுதே மோனிஷாவின் உள்ளம் பதறியது !  சற்று முன்பு தான் அவனது  மென்மையான  புன்னகையை  கண்டதினால் அவனது கோபத்தை மீண்டும் பார்க்க போவதை எண்ணி மிகவும் பயந்தாள் .

 

‘ எங்கே  இருப்பான் !’ – அத்தனை பெரிய கல்லூரியில் அவனை தேடி அலைந்தாள் ..

ஜிம்மில் மரம்போல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான்  அர்ஜுன் …

 

‘ அர்ஜுன் தப்பானவன் , வாய்ப்பு கிடைத்தால் பெண்களை மயக்கி அவர்களிடம் தவறாய்  நடந்துகொள்வான் ‘ என்று  அந்த  நோட்டீஸில் குறிப்பிட்டிருந்ததை  எண்ணி பார்த்தவனின் உள்ளம் வெகுவாய் கனத்தது … அசைவின்றி அமர்ந்திருந்தான் .

 

” அர்ஜுன்  இதை முதல்ல கிழிச்சி போடுடா …எவனோ வேண்டாதவன் பார்த்த வேலை கைல கிடைக்கட்டும்  பார்த்துக்கலாம் … மோனிஷாகிட்ட நானும் ரோஹித்தும் பேசிட்டோம் , அவளும் உண்மை தெரிஞ்சி வருத்தப்பட்டா  உனக்காக யார்கிட்ட வேணும்னாலும்  பேச ரெடியா இருக்கேன்னு சொல்லிட்டா   ” – என்ற தர்ஷித்திடம்  ..

 

” அவ பாவம் டா ! எவ்வளவு ஈஸியா அன்னைக்கு மோனிஷாவை பார்த்து தப்பானவன்னு  சொல்லிட்டேன் …  எவ்வளவு துடிச்சிருப்பா ?? நான் இப்போ கஷ்டப்படுற மாதிரி தானே அன்னைக்கு அவளும்  கஷ்டப்பட்டிருப்பா ” – வேதனையுடன் கூறினான் .

 

” சரி டா விடு எதோ கோபத்துல சொல்லிட்ட  விடு ” – ரோஹித் ஆறுதல் கூறினான் .

 

” இல்லை டா நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்  … இனிமே அவளுக்கு எந்த பிரச்சனையும்  வரக்கூடாது  !

 அவ யார்கிட்டையும்  வந்து எதுவும் பேச வேண்டாம் !

இது எனக்காக வச்ச ட்ரப் !  நானே சமாளிச்சிக்கிறேன்  ….” என்று உறுதியாக கூறினான் …  ரோஹித்தும் தர்ஷித்தும்  அவனை சமாதானம் செய்து கொண்டிருந்தனர் .

 

இவர்களின் உரையாடலை  வாசலில்  நின்ற படி கவனித்து கொண்டிருந்த   மோனிஷாவின் விழிகள் கசிந்தன .

 

அப்பொழுது அங்கே வந்த மாணவர்களுள்  ஒருவன் ,

“ஏய் இங்க பாருடா யாருன்னு “- என்று தன் நண்பர்களிடம்  மோனிஷாவை  சுட்டிக்காட்டியவன் , மோனிஷாவின்  அருகில் வந்து ,

 

” ஹலோ  இங்க என்ன பண்றீங்க ” – கேலியாக கேட்டான்

 

” இல்லை சும்மா தான் “- பதற்றத்துடன் கூறினாள்.

 

” அஹான் “- மேலும் கீழும் அவளை உற்று நோக்கினான் .

 

” நான் போகணும் வழிவிடுங்க “- அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவள் அங்கிருந்து செல்ல முயல , தன் கரம் நீட்டி தடுத்தவன் .

 

” நில்லுங்க  என்ன அவசரம்  அர்ஜுன் உங்ககிட்ட அப்படி என்ன த…ப்…பா  நடந்துக்கிட்டாருன்னு  கொஞ்சம் சொல்லிட்டு போங்க “- வேண்டும் என்றே  வம்பிழுத்தான் ..

 

அவன் கேட்ட கேள்வியில் மோனிஷாவுக்கு   சர்வமும்  அடங்கிவிட்டது  ! முகமெல்லாம்  சிவந்துவிட்டது  !

 

” தள்ளுங்க நா போகணும் ” – வெறுப்பில் முகத்தை சுளித்தபடி கூறினாள் .

 

” ஏன் அர்ஜுன் கிட்ட மட்டும் தான் சொல்லுவீங்களா “- மீண்டும் சீண்டினான் .

 

மோனிஷாவின் விழிகளில் கண்ணீர் திரண்டது !

 

” ஆமா  அர்ஜுன் உன் கைய எப்படி புடிச்சான்  ” – என்றபடி அவளது கரத்தை பிடித்தான் ..

 

” விடுங்க ப்ளீஸ்”-  கெஞ்சினாள் !

 

” ஏன்  அர்ஜுன் கூட மட்டும்  தான் நைட் ஸ்டே எல்லாம் பண்ணுவீங்களா  ? நானும் நல்லா கம்பெனி கொடுப்போம் மா … “

 

” விடுங்க  ஹெல்ப் … ” – கூச்சலிட்டாள் .

 

”  ஆமா சுமார் எத்தனை தடவ லிப் கிஸ் பண்ணிருப்பீங்க  ” – நண்பர்களுடன்  இணைந்து கொண்டு எக்காளமாய்  சிரித்த  மறுநொடி …

 

அவனது ஈறுகளில் இருந்து குருதி கசிந்தது …. மோனிஷாவை பிடித்திருந்த  அவனது கரங்களை  இறுக்கி வளைத்தவன் … இனி அவன் ஜென்மத்திற்கும்  சிரிக்க முடியாதபடிக்கு  அவனை புரட்டி எடுத்துவிட்டான்  அர்ஜுன் .

” எப்படி நைட் ஸ்டே பண்ணனுமா ! வாயேன் என்கூட , நைட் ஸ்டே எப்படி இருக்கும்ன்னு நான் காட்றேன் ! ” – கைமுஷ்ட்டி  இறுகி  இருக்க , நாசி விடைத்துக்கொண்டு  சீறினான் .

 

எதிர்முனையில்  இருந்தவனுக்கு  சர்வமும் அடங்கிவிட்டது … பயம் அப்பட்டமாய்  அவன் முகத்தில் தெரிந்தது .

 

” அப்புறம் என்ன சொன்ன எத்தனை லிப் கிஸ்ஸா ” – என்றபடி அவன் கொடுத்த ஒரு இறுக்கமான குத்தில் அவனது இதழ்கள் கிழிந்தன !

 

” அம்மா  ” – வலி தாங்காமல்  கத்தினான் ..

 

அர்ஜுன் மீண்டும் அடிக்க கை ஓங்கினான்  , அவனை தடுத்த மோனிஷா  வேண்டாம் என்பதாய்  கூற … ஓங்கிய கரங்களை   தளர்த்தியவன்  ,

 

” இது தான் லாஸ்ட் இனிமே எந்த பொண்ணுக்கிட்டயாவது இப்படி  நடந்துக்கிட்ட  … உயிர் மட்டும் தான் இருக்கும் ! போ …” – அடிவயிற்றில்  இருந்து கத்தியவன் அவர்களை விரட்டினான் .

மோனிஷாவின் பக்கம் திரும்பிய அர்ஜுன்   அவளை சமாதானம் செய்ய

 முனைந்த  பொழுது  , மோனிஷாவின்  வதனம்  அர்ஜுனுடைய இரும்பு  மார்பில் புதைந்திருக்க , மென் கரங்களோ   அர்ஜுனை இறுக்கமாக   கெட்டி அணைத்திருந்தது….

-தொடரும் 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!