Oh Papa Laali–Epilogue

எபிலாக்

 

வான்மதிக்கு இன்னும் ஓசிடியின் தாக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சூர்யா அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவளோடு கவுண்சலிங் போய் வருவான். மருந்து உட்கொள்கிறாளா என கவனித்துக் கொள்வான். முன்பு மாதிரி அடுப்பு அணைத்திருக்கிறதா என செக் செய்ய எழுபவளை இறுக்கி அணைத்து அவள் எண்ணத்தைத் திசை திருப்ப பயின்றிருந்தான்.

வான்மதிக்கு குடும்ப சூழ்நிலை நல்லது என அக்கா மாமாவிடம் அவள் நிலைப் பற்றி விளக்கி, அடிக்கடி அங்கே அழைத்துப் போவான். குடும்பமாக அவுட்டிங் போய் கும்மியடித்து விட்டு வருவார்கள் இரு குடும்பமும்.

எங்கே தனக்கு பிறக்கும் பிள்ளையும் தன்னைப் போலவே இருக்குமோ என இவள் பயப்பட, அவளை சமாதானப்படுத்தி ஒரு குட்டி வான்மதியையும் வரமாய் பெற்றிருந்தார்கள் இருவரும். அழகாய் அவளுக்கு மலர்மதி என பெயரிட்டு ஆசையாய், பாசமாய் வளர்த்து வருகிறார்கள் இருவரும். மலர்மதிக்கும் லேசாக ஓசிடி இருப்பதை அறிந்துக் கொண்டாலும், அவளை சரியான முறையில் வளர்க்க வேண்டும் என திட்டமிட்டு இருவரும் செயல்படுகிறார்கள்.

“ஹலோ”

“என்னம்மா குட்டி மதி?”

புதன் இரவு பீர் அண்ட் பர்கர் நைட்டுக்கு வந்திருந்தவனுக்குத்தான் மகளிடம் இருந்து போன் வந்திருந்தது.

“யார்டா குண்டா? நீ பெத்த அண்டாவா?” என கேட்டான் சிவா.

“என் மகள அண்டான்னு சொன்ன உன்னை துண்டா ஆக்கிடுவேன்டா என் வெண்ட்ரு” என நண்பனை மெல்லிய குரலில் எச்சரித்தவன் மகளிடம்,

“சொல்லுடா ராஜாத்தி! என்ன வேணும்?” என கொஞ்சினான்.

“மம்மிக்குத் தூக்கம் வரலியாம்”

“சரி ரூமுக்குப் போய் மம்மி பக்கத்துல படுங்க! போனை லவுட்ஸ்பீக்கர்ல வைங்கடா குட்டி”

“என்னவாம்? எப்பொழுதும் போல பாடனுமா? ஏன்டா இங்க வந்து முழு நேரமும் போன்லயே தொங்கறதுக்கு நீ பேசாம வீட்டுலயே இருந்துருக்கலாம்! சும்மா ங்கொய்ன்னு கத்துவான், இவன போய் வித்துவான் ரேஞ்சுக்கு அம்மாவும் மகளும் பில்டப் குடுத்து வச்சிருக்குங்க”

“நீங்க ஷட் அப் பண்ணுங்க” என நண்பனை கடிந்தவன், மகள் மனைவிக்காக பாட ஆரம்பித்தான்.

“மை டியர் மதிஸ்

பாட்டு கேட்டுட்டு சமத்தா தூங்கனும் ரெண்டு பேரும். நான் சீக்கிரமா வந்துடுவேன். சரியா?”

“சரி, வீ லவ் யூ!” என கோரசாக அந்தப் பக்கம் சத்தம் கேட்டது.

இவன் புன்னகையுடன் பாட ஆரம்பித்தான்.

“ஒ பாப்பா லாலி

கண்மணி லாலி

பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
ஒ பாப்பா லாலி

கண்மணி லாலி

பொன்மணி லாலி
பாடினேன் கேளடி
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ?
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ?
இதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே”

இவன் முழு பாடலையும் பாடி முடிக்க அந்த பக்கம் சத்தமே இல்லை. சிரிப்புடன் போனை ஆப் செய்ய, பிஸ்ட்ரோவில் இருந்த வெளிநாட்டினார் எல்லோரும் இவன் பாடிய பாடலுக்குக் கைத்தட்டினர். புன்னகையுடன் தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டான் சூர்யவர்மன்.

“மச்சி”

“என்னடா?”.

“சொல்லு மச்சி சொல்லு! அவளுக்கு, என் வான்மதிக்கு என்னை ஏன் இவ்வளவு புடிக்குதுன்னு சொல்லு மச்சி!”

“அடேய்! மறுபடியும் முதல்ல இருந்தா! ஆளை விடுடா சாமி!”

“அதெல்லாம் முடியாதுடா! விட முடியாது! என் ரெண்டு மதியும் என் ரெண்டு கண்ணுடா! மை ஐஸ்! ஐ லவ் தெம் சோ சோ சோ சோ மச்டா! நான் தான் இந்த உலத்துலயே சந்தோசமான ஆளுடா” என கத்தி சொன்னான் சூர்யவர்மன்.

அவன் சொன்னது தான் நிஜம் என்பது போல வானத்து நிலவு கண் சிமிட்டி சிரித்தது.

முற்றும்….