OVOV 10

OVOV 10

                                     OVOV-10

 

பிறக்கும் போதே டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு சிரிப்பது போல் சிரித்து கொண்டு பிறந்த குழந்தை ப்ரீத்தி .அவள் அழுது யாருமே பார்த்ததில்லை.அந்த அல்லி ராணி இப்படிபொது இடத்தில் அழுவது மதுவை திகைக்க வைத்து இருந்தது 

 

இங்கே பாரு ப்ரீத்தி ….ஒரு மாசம் முன்பு திடீர் என்று போன் செய்து உனக்கு நிச்சயம் என்றேஎன்ன ஏது என்ற விவரம் நமது நெருங்கிய நட்பு படை யாருக்குமே தெரியலை .நீயும் எதையும் சொல்லை .வந்தோம் ,நிச்சயமும் நல்லாவே நடந்தது .ஊரே வியக்கும் வண்ணம் தான் அப்பா எல்லாத்தையும் செய்தார் .” என்றாள் மதுரா .

(என்னது…..நிச்சயம் ஆகி போச்சா….ஹனி வேலை ஆரம்பித்து விட்டாயாபோச்சு போச்சு)

 

மேரேஜ் தேதி பிக்ஸ் செய்து சொல்லு எல்லோரும் வருகிறோம்’ என்று தான் லாஸ்ட் நம்ம எல்லோரும் மீட் செய்த போது சொன்னோம் .பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டிட்டு இப்போ என்ன ஆச்சுன்னு ஒப்பாரி வச்சிட்டு இருக்கே நீ ..” என்றாள்மேக்னா.

 

“வேர்ல்ட் டூர் முடிந்து வந்து இன்று மதியம் வந்து இறங்கினோம் . போன் செய்து ,”வேலை கிடைச்சி இருக்கு .பஞ்சாப் போறேன் .மூன்று வருட காண்ட்ராக்ட்.நைட் கிளம்பறேன்என்று சொல்றே! விளையாட்டு என்று நினைத்தால்,உன் அப்பா  போன் செய்து ,’மது !ப்ரீத்தி சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போய்ட்டாமா .உனக்கு அவ இருக்கும் இடம் தெரிந்தால் சொல்லுமான்னு சொல்லறாங்க”.கேட்ட எங்களுக்கே பக்குன்னு ஆகி போச்சு.என்றாள் மதுரா .

 

மது கேட்பதற்கு பதில் சொல்லுமா .என்ன பிரச்சனை? ஏன் உன் திருமணம் நின்றது ?எதற்கு இப்போ பஞ்சாபில் வேலைக்கு  போறே ?வேலை வேண்டும் என்றால் சொந்த தொழில் வைத்து கொடுக்கும் அளவிற்கு உனக்கு அண்ணன்க என்ற முறையில் நானும் ,சூர்யாவும் இல்லையா என்ன ?எதுக்கு நீ வெளி மாநிலம் போகணும் ?”என்றான் விஜய் 

 

அதானே எங்க யாரின் ஞாபகமும் உனக்கு வரலையா என்ன ?இப்போ எதுக்கு இந்த அழுகை ?அந்த மாப்பிளையை தான் திருமணம் செய்யணும் என்றால் சொல்லு ,கையை காலை கட்டி தூக்கி வந்து தாலி கட்ட வைக்கிறோம் .எதற்காக அவன் திருமணத்தை நிறுத்தினான் ?”என்றான் சூர்யா .

 

கோடீஸ்வரி கிடைக்கும் போது ,சொந்த வீடு கூட இல்லாத,நடுத்தெருவில் நிற்கும் குடும்பத்தின் பெண்ணை, எந்த நேரம் வேண்டும் என்றாலும் போலீஸ் வந்து பிடிக்கலாம் என்ற நிலையில் இருக்கும் தந்தையின் மகளை யார் தான் திருமணம் செய்ய முன் வருவார்கள் ?”என்றாள் ப்ரீத்தி மதுராவின் தோளில் இருந்து முகத்தை எடுக்காமல் 

 

என்னதுவாட் ?”நால்வரின் குரலும் ஏக காலத்தில் அலறியது .

 

அண்ணா நகரில் மெயின் ஏரியாவில்,பல கோடி விலை போகும் பங்களாவில் வாழ்ந்த குடும்பம் ,இன்று வீடு இல்லை என்ற நிலைமை ஒரே மாதத்தில் எப்படி வந்து இருக்க முடியும் ?தவிர food processing /உணவு பதப்படுத்தி  வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தொழிலின் பார்ட்னர் ப்ரீத்தியின் தந்தை ஜெகன்நாதன் . ரொம்ப அப்பாவி .அதிர்ந்து கூட பேச தெரியாத மனுஷன் .அவரை எதற்காக எதற்காக போலீஸ் பிடிக்க வேண்டும் ?

 

என்னடீ சொல்றே ?”என்று மதுரா ப்ரீத்தியை உலுக்க,நிமிர்ந்து அவளை பார்த்த அவள் முகத்தில் நிச்சயம் கண்ணீர் இல்லை ,புன்னகையே இருந்தது .

 

எருமைஅனகோண்டா ….மனுசனுக்கு பிபி ஏத்தி விட்டுட்டு ,கூல்லா சிரிச்சிட்டா இருக்கேஎல்லாமே உனக்கு ஜோக்கா ?ஒரு கணம் என்னவோ ஏதோ என்று பதறி போய்ட்டோம் .”என்று மதுராவும் ,மேக்னாவும் அவளை மொத்தி எடுத்தார்கள் .

(உங்களை மட்டுமா பதற வைத்தது இந்த பொண்ணு …. எங்களையும்  தான் )

 

என்ன ப்ரீத்தி இது ?எதில் விளையாடுவது என்று இல்லையா உனக்கு ?எங்கு இருந்து தான் எல்லா குரங்கு கூட்டமும் ஒன்றாய் சேர்ந்தீர்களோ! மனுஷங்களுக்கு பிபி ஏத்தி விடறதே வேலையா போச்சு உங்க கேங்குக்கு .என்றான் விஜய் கடுப்புடன்.

மதுரா பொது சேவை செய்வதை பற்றி ஏற்கனவே கேள்வி பட்டு இருப்போம் .மதுரா சேவை செய்யும் பெண்கள் குழுவில் இன்னொரு அங்கம் தான் இந்த ப்ரீத்தி.

அக்னி  தாரகைகள்  “என்ற பெண்கள் குழுவில் தான் மதுராவும் ,ப்ரீத்தியும் நட்பானது .அங்கு உள்ள அனைத்து பெண்களுமேசேவைஎன்ற ஒற்றை குறிக்கோலில் இணைந்து ,தவறு ,அநீதி எதிர்ப்பது என்று தமிழ்நாட்டில் சூறாவளியை ஏற்படுத்தி கொண்டு,”கன் பைட் காஞ்சனாகள்  ,ரிவோல்வர் ரீட்டாகள்  , ஹாட் மிர்ச்சிஸ்,ரசகுல்லாஸ் .களத்தில் இறங்கி வேலை செய்யும் நவீன ஜான்சி ராணிகள்

 

குடி ,கைம்பெண் மறுமணம் ,பாதிக்க பட்ட பெண்களுக்கான counselling ,மனித கடத்தல் ,பாலியல் தொழிலில் இருக்கும் பெண்களின் மறுவாழ்வு ,drug அடிக்ட் counselling என்று இவர்கள் இறங்கி வேலை செய்யும் லிஸ்ட் மட்டும் ஐம்பதினை தாண்டும் .

 

போலீஸ் ,வக்கீல் ,நீதிபதி ,எழுத்தாளர்கள் ,ஆர்ட்டிஸ்ட் ,டாக்டர் ,டீச்சர்,தொழிலதிபர்கள், இல்லத்தரசிகள் ,கல்லூரி பெண்கள் , ias ,ips பெண் அதிகாரிகள்  என்று பல்வேறு துறையில் தனக்கென முத்திரை பதித்ததோடு அல்லாமல் மக்களுக்காகவும் ,நாட்டிற்காகவும் போராடும் பெண்கள் அமைப்பு இது

 

மதுராவின் தோழி என்றதும் நாம கொஞ்சம் உஷாராய் தான் இருந்து இருக்கனும் .நமக்கு மத்தவங்களை படுத்தி எடுத்து தானே பழக்கம் .நாமலாவது அழறதாவது !

 

பின்ன என்ன கருணா !இங்கே ஒரு வாண்டு பந்தை கண்ணில் அடிச்சிடுச்சு .வலி தாங்க முடியாம நானே, கண்ணை கெர்சீப் வைத்து அழுத்தி கொடுத்து கொண்டு இருந்தேன் .வந்த உடனே இந்த மது குரங்கு ,”அழாதே ப்ரீத்தி எதுவாய் இருந்தாலும் நாங்க இருக்கோம் ….அந்த பையன் கிட்டே நாங்க பேசறோம்என்று கட்டி பிடிச்சி மலை பாம்பு கணக்காய்கட்டி பிடி வைத்தியம்” செய்து ,பக்கம் பக்கமாய் டயலொக் விட்டுட்டு இருக்கு .எதிராளியை பேச விட்டா தானே! அதான் கொஞ்சம் ஸீன் போட்டேன் .”என்ற ப்ரீத்தியை வெட்டவா,குத்தவா என்று முறைத்தாள் மதுரா .

 

ப்ரீத்தி ஏதோ சொல்வதற்குள்ப்ரீ….ப்ரீ….ப்ரீ…”என்று கத்தி கொண்டு ஒருவன் ஓடி வந்தான்.

 

(எவண்டா இவன்…..free free என்று ஏர்போர்ட்டில் எதை விற்க இந்த கத்து கத்தறான் ?)

 

((இந்த ஆப்பிரிக்கா கருங்குரங்கு எங்கே என்ன செய்யுது ?) என்று ஆஜர் ஆன மனசாட்சிக்கு ஒரு ஹை பைவ் கொடுத்தாள் ப்ரீத்தி .”எத்தனை முறை சொல்வதுஎன் பெயர் ப்ரீத்தி….ப்ரீத்தி ஜெகன்நாதன்…..ப்ரீ ப்ரீ என்று என்னை விற்க போறீங்களாஇல்லை வாங்க போறீங்களா சுஷாந்த் ?’என்று வெகு நக்கலாக கேட்டாள் ப்ரீத்தி.

 

அவன் முகம் விழுந்து போனது.இருந்தாலும் சமாளித்து கொண்டு,”உன்னை நான் செல்ல பெயர் வைத்து கூப்பிடுவேன் செல்லம்நமக்கு தான் நிச்சயம் ஆகி போச்சே…”என்றான் சுஷாந்த்.

 

(இவனும் இவன் மூஞ்சும்இவனா ப்ரீத்தி   குட்டிக்கு…..வாக்வாந்தி வருது எங்களுக்கு)

 

‘தண்ணி வண்டி .குடித்து குடித்து உடல் பெருத்து ,உருளை கிழங்கிற்கு பேண்ட் ஷர்ட் போட்டது போல் ஒரு உருவம். இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு எனக்கு தேர்ந்து எடுத்தார் பாரு என்ற நைனா அவரை கீழ்ப்பாக்கத்தில் தான் சேர்க்கணும் .உலக அழகி அளவுக்கு இல்லை என்றாலும் சும்மா கும்முனு இருக்கேன் ,ஒரு அர்ஜான் பாஜ்வா ,உத்தர்காஷ் சர்மா ,விஜய் தேவர்கொண்டா கிடைக்கலை என்றாலும் பரவாயில்லை ,”கூவம் ஆற்றில் முக்கின எருமை மாடு” இது தான் கிடைச்சுதா? செல்லமாம் இல்லே செல்லம் .வந்தேன் உன் கண்ணை சில்லி சாஸ் போட்டு fry செய்து காக்கைக்கு போட்டுடுவேன் .முழியை பாரு  ‘என்று கவுண்டர் கொடுத்த மனசாட்சியினால் வெளி வந்த சிரிப்பை முயன்று அடக்கினாள் ப்ரீத்தி.

 

அவனை அடித்து துவைத்து காய போட துடித்த மதுராவையும் ,மேக்னாவையும் விஜய் ,சூர்யா பிடித்து இழுத்து நிறுத்தினார்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு .

“mr.சுஷாந்த் நீங்க என் அத்தை பையன் தான் .காலேஜ் முதல் என்னை விடாமல் துரத்தி துரத்தி லவ் சொன்னது நீங்க.நான் இந்த நொடி வரை அதை அக்ஸ்செப்ட் செய்யலை.என்னை கேட்காமல்  உங்க அம்மா ,அப்பா,நம்ம சொந்த பந்தத்தை எல்லாம் கூட்டி வந்து என் பெற்றோர்களிடம் பேசி இந்த திருமணத்தை நிச்சயம் செய்தீர்கள்.என் பெற்றோரும் நீங்க கேட்ட 50 லட்சம் ரொக்கம்,5 லட்சம் நகை,கார்,திருமண செலவூ என்று எல்லாவற்றுக்கும் ஒத்து கொண்டார்கள்.ஆனால் உங்க அம்மாவே வந்து தான் ரெண்டு வாரத்திற்கு முன்,”இந்த திருமணம் நடக்கவே நடக்காதுஎன்று சொல்லி அந்த சில்க் சாரீ கடை ஓனர் மகளுடன் உங்களுக்கு திருமணம் நிச்சயம் செய்தார்கள்.இப்போ வந்து எதை வைத்து இப்படி உறவூ கொண்டாடறீங்க.?”என்றாள் ப்ரீத்தி அலட்டி கொள்ளாமல்.

(பாருடா ..இந்த ஹீரோக்கு இன்னொரு பொண்ணு கூட திருமணமாம் .ப்ரீத்தி கிரேட் எஸ்கேப் டார்லிங் நீ )

எங்க அம்மா ஏன் அப்படி செய்தாங்க?உன் டாடி தானே காரணம். படிச்சவன் தானே! அறிவூ வேண்டாம்.எத்தனை நியூஸ் வருது.லூசு மாதிரி நண்பனுக்கு ஸூரிட்டி அதுவும் 60 லட்சத்திற்கு எவன் போட சொன்னது?பணத்தை வாங்கி கொண்டு அவன் எஸ்ஸாகி விட்டான்.பணம் கொடுத்த ஹர்பிர் சார் சும்மா இருப்பாரா?அதான் உன் அப்பா நெத்தியில்  துப்பாக்கி வைக்காத குறையாய்,பணத்தை கொடுக்க சொன்னார்.இங்கே பாரு.உன்னை  நான் லவ் செய்யறேன்.என்ன செய்யறே,உங்க அப்பா வீடு அண்ணா நகரில் இருக்கு இல்லை,அதை உன் பெயரில் எழுதி வாங்கிக்கோ.என் அம்மாவை கன்வின்ஸ் செய்யறேன்.நம்ம திருமணம் நடக்கும்.”என்றான் சுஷாந்த்.

(இந்த கன்றாவி பேரு லவ்வாவிளங்கிடும்  )

ஓஹ்நல்ல பிளான்.அப்போ என் அப்பா,அம்மா.அவங்க எங்கே இருப்பாங்க சுஷாந்த்?என்றாள் ப்ரீத்தி. கண்களை அகல விரித்து இமைகளை கொட்டி வெகு அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு ,வந்த சிரிப்பை அடக்க மற்ற நால்வரும் பெரும் பாடு பட்டனர்.

 

பாரேன் இவ பண்ற லொள்ளை .”என்றாள் மேக்னா .

இருமேடம் இப்போ தான் ஆரம்பிச்சி இருக்காங்க .முடிக்கும் போது அவன் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவான் பாரு .”என்றாள் மதுரா

 

அவங்களை பத்தி நீ ஏன் கவலை படரே.தப்பு செஞ்சவங்க அவங்க.எங்கேயாவது போகட்டும், இல்லைன்னா செத்து தொலையட்டும் .இப்போ அவங்களா முக்கியம்?நீ வா அந்த வீட்டை முதலில் எழுதி வாங்கு.அதற்கு நான் எவ்வளவூ பிளான் போட்டு இருக்கேன் தெரியுமா ?. அண்ணா நகர் மெயின் ஏரியா என்றால் சும்மாவா ? வீட்டை இடிச்சுட்டு ஷாப்பிங் மால் கட்டினா சும்மா கூரையை பிச்சிட்டு கொட்டும் பணம்.”என்றான் கண்கள் மின்ன அவன்.

 

அய்யயோ சுஷாந்த்.இந்த மேட்டர் எனக்கு தெரியாம போச்சே.தெரியாம அப்பா ஹர்பிர் சார் கிட்டே,போன வாரமே  40 லட்சத்திற்கு அப்பா வித்துட்டாங்களே.இப்போ என்ன செய்வது ?”என்றாள் ப்ரீத்தி

 

வாட்கம் அகைன்இப்போ என்ன சொன்னே…”என்றான் சுஷாந்த் கேட்டதை நம்ப முடியாதவனாய்.

 

(ஹ்ம்ம் அனகோண்டா உன்னை மொத்தமாய் முழுங்கட்டும் என்று சொன்னேன் )’என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்த ப்ரீத்தி,”அப்பா போன வாரமே ஹர்பிர் சார் கிட்டே வீட்டை வித்துட்டாங்க சுஷாந்த்.இப்போ என்ன செய்யறது?”என்றாள் ப்ரீத்தி.

 

போய் நடு தெருவில் பிச்சை எடுங்க குடும்பத்தோடுபைத்தியமா உங்களுக்கு? பல கோடி ரூபாய் இடத்தை 40 லட்சத்த்திற்கு வித்து இருக்கானே,உங்க அப்பன்மடையன்மாங்கா மடையன்…..  நல்ல  வேளை உங்க லட்சணம் தெரிந்து தான் என் அம்மா அந்த ஷில்பா கூட எனக்கு மேரேஜ் ஏற்பாடு செய்து இருக்காங்க.  பிச்சைக்கார கூட்டம் .பார்க்க சும்மா கும்முனு இருக்கியே ,கூடவே கோடிக்கணக்கில் சொத்தும், ஒரே பெண் என்பதால் உனக்கே வரும் என்று தானே உன்னையே நாய் மாதிரி சுத்தி வந்தேன் .கர்மம் .என் வீட்டு வேலைக்காரியாக இருக்க கூட தகுதி இல்லாதவ நீ .கெட் லாஸ்ட்என்றவன் ஓட்டமும் நடையுமாக அங்கு இருந்து அகன்றான்.

என்ற பிராணாதாப்ரபோஹே சுவாமிஇந்த அபலை பெண்ணை கை விட்டுடாதீங்க சுவாமிதங்கள் திருவடி நிழல் கிடைத்தால் கூட என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து விடும்.  சுஷாந்த்சூஸ்சூ ..சூ ..சூஎன்று காக்காய் ஒட்டி நின்ற ப்ரீத்தி அந்த சுஷாந்த் பின்னங்கால் பிடறியில் படும் படி ஓடியதை கண்டு வாய்விட்டு சிரித்தவள் ,

 

ஆளுமா டோலுமா ..என் பிளான் சக்ஸஸ்மா 

உருண்டு ஓடுவது என் அத்தை பெத்த சொத்தை மா   “

என்று சத்தமாய் பாட மதுரா ,விஜய் ,சூர்யா ,மேக்னா விழித்தவாறு நின்றார்கள் .

 

ஆரம்பம் முதலே இவனை, இவன் குடும்பத்தை ப்ரீத்திக்கும் அவள் அம்மா மிருதுளாவிற்கும்  பிடிக்காது.மனிதர்களை இடை போடும் திறன் ப்ரீத்திக்கு ரொம்பவே உண்டு.நகை கடை மாதிரி வரும் இவன் அம்மா,ஷோ காட்டும் இவன்.பணத்திற்கு அலையும் பேய் கூட்டம்.

பெண்ணை பெண்ணிற்காக மணக்காமல் அவள்எவ்வளவூ கொண்டு வருவாள்” என்று நாக்கை தொங்க போட்டு,கணக்கு போடும் குள்ளநரிகள். ஜெகன்நாதனுக்கு சுஷாந்த் அம்மா ஒரு வகையில் தூரத்து சொந்தம் .

அது தூரமாய் இருந்த வரை பிரச்சனை எதுவும் இல்லை .நெருங்கி வந்தது ,”அண்ணாஎன்ற பாச மழை பொழியும் போதே ப்ரீத்தியும் மிருதுளாவும்  உஷார் ஆகி விட்டார்கள்.

உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போறோம் ?’என்பது இவள்அப்பா வாதம் .தெரியாத காட்டேரிக்கு தெரிந்த பேயே மேல் என்று அவர் அமர வைத்து கிளாஸ் எடுத்ததில் நொந்து போனார்கள் தாயும் ,மகளும் .கொஞ்சம் பணத்தாசை,யாருக்கு தான் இல்லை?என்று கேள்வி எழுப்பினார்.நிச்சயமும் ஆனது அதற்கே கோடிக்கணக்கில் முழுங்கினர் சுஷாந்த் குடும்பத்தினர்.

 

அப்போ தான் நெருங்கிய தோழன் மணிசேகருக்கு ஸூரிட்டி போட்டார் ப்ரீத்தியின் தந்தை ஜெகன்நாதன்.மணிக்கு என்ன பிரச்சனையோ பணத்துடன் ஊரை விட்டு ஓடி விட்டார்.மணி பணம் வாங்கியது ஜெகன்நாதனும்,ப்ரீத்தியும் பார்ட்னராக இருக்கும் ஹர்பிர் இடம். ஜெகனுக்கு நண்பர்,வழிகாட்டி.ப்ரீத்திக்கு இன்னொரு தந்தை போன்றவர்.

சுஷாந்த் சொன்னது போல் ஹர்பிர்  துப்பாக்கி எல்லாம்     தூக்கவில்லை.’உன்னால் முடியும் போது கொடு’ என்று தான் சொன்னார்.ஜெகனும் அந்த அளவிற்கு ஏழை எல்லாம் இல்லை.அப்போதைக்கு பணமுடை.அவர் கொடுத்து இருந்த பல இடங்களில் இருந்து பணம் வரவில்லை.இப்படி ஒரு நல்ல குடும்பம் தான் செய்யாத தவறுக்கு தலை குனிகிறதே என்ற கவலை தான் ஹர்பிர்ருக்கு. இந்த பிரச்னையை தங்களுக்கு சாதமாய் பயன் படுத்தி கொண்டாள் ப்ரீத்தி .

 

சுஷாந்த் என்ற எலிகப்பல் முழுக போகிறதுஎன்றதும் ப்ரீத்தி எதிர் பார்த்தபடியே தப்பி ஓடியது.அவன் தாய் அந்த திருமணத்தை நிறுத்தி விட்டு ஷில்பா உடன் மகனுக்கு நிச்சயம் செய்து விட்டார்.ஷில்பா பக்கம் அடித்த காத்து ப்ரீத்தி பக்கம் மீண்டும் திரும்ப காரணம் ஷில்பாவுக்கு நிறைய தோஸ்த் ,பார் ,பப் பழக்கம் .அதான்மீண்டும் கோகிலாமாதிரிமீண்டும் ப்ரீத்தி” என்று சுஷாந்த் நூல் விட்டு பார்த்தது.

 

அவர்கள் குறி கோடிக்கணக்கில் விலை போகும் ப்ரீத்தியின் வீடு.ப்ரீத்தி சொன்னது போலே அந்த வீட்டை  ஜெகன் விற்க எல்லாம் இல்லை.பணம் திரும்பும் வரைபிலேட்ஜ்” வைத்து இருந்தார்.இவர்களை வீட்டை விட்டு வெளியேற எல்லாம் அவர் சொல்லவே இல்லை.மனம் கேட்காமல் இவர்களாக தான் வீட்டை விட்டு வெளியேறி,ஜெகன் பெற்றோர் வசிக்கும் கிராமத்திற்கு மன மாறுதலுக்காக சென்றது.அங்கு உள்ள நிலம்,தோப்பு,துரவூ எல்லாம் காண்ட்ராக்ட் விட்டு,கிராமத்து வீட்டின் பெயரில் கடன் வாங்கவே இவர்கள் சென்றது.

 

அப்போது தான்மீண்டும்” சுஷாந்த் பத்தி தகவல் ஹர்பிற்கு வந்து சேர்ந்தது.ப்ரீத்தி மேல்மகள்” போன்ற பாசம் அவருக்கு உண்டு.தனக்கு ஒரு மகன் இருந்தால் நிச்சயம் ப்ரீத்தியை மருமகள் ஆக்கி இருப்பார்.அவளின் குணம்,அறிவூ அந்த அளவிற்கு அவருக்கு பிடிக்கும்.அவர் சுஷாந்த்ஷில்பா விஷயத்தை சொல்ல,அப்பொழுது தான் ப்ரீத்தி முடிவூ எடுத்தாள்.

 

அவள் சொன்னது படியே வீட்டை விலைக்கு வாங்கி கொண்டதாக ஹர்பிர் போலி பத்திரம் தயார் செய்து,விஷயத்தை மெல்ல வெளியே கசிய விட்டார்.அது உண்மை தானா என்று கண்டு அறிய தான் இப்பொழுது சுஷாந்த் காதல் பேசி கொண்டு வந்தது.இது போன்ற அட்டைப்பூச்சிகள் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்க விட கூடாது இல்லையா.அதான்வீடு விற்றாகி விட்டதுஎன்ற பொய் என்ற நெருப்பினை கொண்டு சுஷாந்த் என்ற அட்டையை ஓட ஓட விரட்டியது.

 

நடந்ததை ப்ரீத்தி சொல்லி முடிக்க ,”இதை முதலிலேயே சொல்லி இருந்தே அவனை உண்டு இல்லை என்று செஞ்சி நிச்சயம் நடக்காமல் நிறுத்தி இருப்போம் .இப்போ சொல்லு ப்ரீத்தி அவனையும் அவன் குடும்பத்தையும் தூக்கிடட்டுமா ?”என்றான் சூர்யா கோபத்துடன் .

 

வெயிட் லிப்ட்டிங் போட்டிக்கு போக போறியா என்ன சூரி அவனை தூக்கறேன் என்று சவுண்ட் பலமாய் வருது?அடங்குடா .இவன் எல்லாம் ஒர்த் இல்லை .இவனை தூக்கறதுனா அதை நானே செய்து இருக்க மாட்டேனா என்ன! .இவன் எல்லாம் அட்டை பூச்சி இனம் .எங்கே,எப்படி நெருப்பு வச்சா போவானுங்க என்று தெரியும் ரிலாக்ஸ்என்றாள் ப்ரீத்தி 

 

அப்போ நீ எதுக்கு பஞ்சாப் போகணும் .அவன் தான் போய்ட்டானே.இனி ஷில்பாவை விட்டு வர மாட்டான் .”என்றாள் மேக்னா .

 

தெய்வமே ! சின்ன வீடா வரியா என்று கூசாமல் வந்து கேட்டுட்டு நிப்பான் .இவன் எல்லாம் காலை சுத்தினா பாம்பு .தவிர இத்தனை நடந்த பிறகும் அந்த அண்டாவின் அம்மா குண்டான் வந்து கண்ணை கசக்குச்சு என்ற அப்பாநல்லவங்க ,வல்லவங்க” என்று பேசி பேசி காதில் ரத்தம் வரவச்சி அவங்க கூடவே அனுப்பி வச்சிடுவார் . மதுரா அப்பாவாது வெறும் பத்திரத்தில் சைன் தான் போட்டார் .என்ற நயினா என்னையே தூக்கி கொடுத்து தான் மறுவேலை பார்ப்பார் .அந்த அளவுக்கு அம்மாஞ்சி அவர் என்று தெரியாதா என்ன ?” என்றாள் ப்ரீத்தி .

 

ஹ்ம்ம் நல்லாவே தெரியும் .அதான் நீங்க போய் சுஷாந்த் வீட்டில் பேசுங்க என்று எங்க கிட்டேயே சொல்லிட்டு இருக்காரே .மனம் மாறி வருவாங்க ,நிச்சயம் என்றால் பாதி திருமணம் என்று டயலாக் எல்லாம் பலமாய் வருது .கிராமத்து மனிதர் .ஊர் உலகம் என்ன பேசும் என்று பயப்படறார் .”என்றான் விஜய் கண்களை உருட்டி .

“அதான் கருணா ,கொஞ்ச நாள் இந்த பங்கஸ்(fungus) இருக்கும் இடத்தில் இருந்து தூர இருப்பது தான் நல்லது ஷில்பாவை கட்டும் வரை. மாநிலத்தை விட்டு ஓடும் ஐடியா கொடுத்ததே என்னை பத்து மாதம் சுமந்த என் “தாயென்னும் கோயில் தான்” .ஹர்பிர் அங்கிள் கிட்டே பஞ்சாப் வேலை வாங்கி கொடுக்கும் படி பிளான் போட்டு கொடுத்ததே மிஸ்ஸஸ் ஜெகன்நாதன் தான் .தோ மேடம் கால்லிங் …நீயே பேசு மது .”என்ற ப்ரீத்தி தன் மொபைலினை அவளிடம் கொடுக்க ,”softy “கால்லிங் என்றது அந்த டிஸ்பிலே .

 

“அது என்னடி “softy “?”என்றாள் மேக்னா .

 

“அவங்க பேரு என்ன மிருதுளா …மிருது …soft …சோ softy “என்றாள் ப்ரீத்தி .

 

அதற்குள் அழைப்பை ஏற்று ஒலிபெருக்கியில் போட்ட  மது ,”ஹாய் அம்மா .நான் தான் மது .”என்றாள் .

 

“ஐயோ நீயா …யம்மா தேவதை  …என் பொண்ணு இப்போ மாரத்தான் ஓட போறா .அவ அப்பா பேச்சை கேட்டு அவளை திரும்ப இங்கே எல்லாம் கூட்டி வந்துடாதே பேபி .அந்த முட்டைகோஸ் மண்டையனை எல்லாம் என்னால் மாப்பிளை என்று கூப்பிட முடியாது .அதற்கு அவன் வாயில் விஷத்தை ஊத்திடுவேன் .”என்றவரின் பேச்சை கேட்ட மதுராவும் மற்றவர்களும் வாய் விட்டு சிரித்தனர் .

 

“உங்க பிளான் தானா இது …பிளான் எல்லாம் நல்லா தான் செய்யறீங்க.பொண்ணு ஓடி போறதிற்கு ,அம்மா ஹெல்பிங் ,எந்த வீட்டிலேயும் நடக்காது  .”என்று வடிவேல் வாய்ஸ் கொடுத்தாள் மதுரா .

 

“எங்க வீட்டில் நடக்கும் .ஊர் உலகத்திற்காக எல்லாம் என் மகளுக்கு திருமணம் செய்ய முடியாது .அவளுக்கு பிடிச்சி இருக்கணும் மது. அது மட்டும் தான் எனக்கு முக்கியம் .அவ அப்பா மேல் உள்ள மரியாதையில் நிச்சய மேடை ஏறினவள் என் மக .அந்த ஆப்பிரிக்கா கருங்குரங்கு கிட்டே கொடுப்பதற்கா ஸ்ட்ராவ்பெர்ரி ஐஸ் கிரீம் மாதிரி பெண்ணை பெத்து வச்சி இருக்கேன் ?” என்றார் மிருதுளா .

“கரெக்ட் தான் .அன்னைக்கே அவனை தூக்கி போட்டு நாலு மெதி  மெதிக்கணும் என்று தான் இருந்தது .முகத்திலேயே எழுதி ஒட்டி இருக்கு பக்கா அயோக்கியன் என்று .”என்றாள் மதுரா .

 

“நீயே நிச்சயத்தில் என்ன சொன்னே .”அம்மா உங்களுக்கு கண்ணு ஏதாவது அவிஞ்சி போச்சா ,இல்லை மூளை குழம்பி போச்சா? .நம்ம ப்ரீத்திக்கு இப்படி ஒருத்தன் மாப்பிள்ளையா? எங்க கிட்டே சொல்லி இருந்தா நல்லவனாய் ,ப்ரீத்திக்கு ஏற்றார் போல் மாப்பிளையை கொண்டு வந்து லைன் கட்டி நிறுத்தி இருப்போம் இல்லை !” என்று நீயே கேட்ட  போது ,அவளை பெத்தவமா நான் .அவ அவளும் குணத்தை மட்டுமே பார்ப்பவள் ,இவனுக்கு குணமும் இல்லை ,உருவமும் இல்லை .அதான் ஹர்பிர் அண்ணா மூலம் என் மகளை மாநிலம் கடத்தறேன் .இதுல உனக்கு என்ன பிரச்சனை டியர் ?”என்றார் softy அம்மா .

 

“ஒரு பிரச்னையும் இல்லை .ஆனா சொல்றதை ரெண்டு பெரும் எங்க கிட்டே சொல்லிட்டு செய்யுங்க .ஓடும் போது க்ளுகோஸ் கலக்கி தரணும் இல்லை .இப்படி திடீர் ஷாக் எல்லாம் தாங்க முடியாது.நீங்க தெய்வம் .நாங்க ஹ்ம்ம் ஹ்ம்ம் ….”என்றான் விஜய் .

“நீங்க கூட போகலையா அம்மா ?”என்றான் சூர்யா .

 

“இந்த மனுஷன் செய்து வைத்து இருக்கும் வேலைக்கு நானும் தான் ஓடி இருக்கணும் .கெட்டவராய் இருந்தால் இவளுடன் பஞ்சாப் சுத்தி பார்க்க கிளம்பி இருப்பேன் .ஆனா அவர் நல்லவர் .ரொம்பவே நல்லவர் .இவ இப்படி எழுதி வச்சி வேலைக்கு கிளம்பியதற்கே புலம்பி தள்ளிடார் .” என்றார் மிருதுளா கணவரை நினைத்து மனம் நொந்தவராய் 

 

“அதனால் தான் அத்தனை அவசரமாய் அவரை சென்னை விட்டு அகற்றினோம் .ஏதோ அப்பா வழி தாத்தா ,பாட்டி எங்க பிளான் தெரிந்து  ,”திருமணம் நின்ற கவலை குழந்தைக்கு மட்டும் இருக்காதா ?கொஞ்சம் மனம் வருத்தத்தில் இருப்பா .ரொம்ப போர்ஸ் செய்யாதே! நம்ம பெண்ணுக்கு என்ன குறைச்சல்? தங்க விக்ரஹம் மாதிரி இருக்கிறவளுக்கு போய் இப்படி ஒரு பையனா?அவளுக்குன்னு பிறந்தவன் நேரம் வரும் போது வருவான் . ‘என்று தடுத்து இருக்காங்க .” என்றாள் ப்ரீத்தி 

 

“நானும் கூட இல்லை என்றால் அந்த அனகோண்டா குடும்பம் இவரை முழுதாய் விழுங்கி விடும்.இவரும் மகளுக்கு நல்லது செய்யறேன் என்று அவங்க காலில் போய் விழுவார் .இவருக்கு லகான் தேவை .தவிர இந்த அல்லி ராணியை அடக்கும் அர்ஜுன மஹாராஜா எங்கே இருக்காரோ!.ஒரு வேலை இந்த அம்மாவுக்கு ஏத்தவன் பஞ்சாபில் தான் இருக்கானோ என்னவோ .”என்றார் மிருதுளா விளையாட்டாய் -அவர் சொன்னவுடன் வானத்தில் வளம் வந்து கொண்டு இருந்த தேவதைகள் “ததாஸ்து /அப்படியே நடக்கட்டும்” என்பதை வாழ்த்தியதை அறியாமல் .  

மேலும் சற்று நேரம் கலகலப்பாய் பேசிய மிருதுளா அழைப்பை துண்டிக்க ,

எனக்கு  வேற வாய் பேசாது ,கை பேசிடும் .அவனையும் அவன் அம்மாக்காரியையும் தூக்கி போட்டு மெதிச்சுட்டு ஜெயிலுக்கு போகணுமா என்று ஹர்பிர் அங்கிள் தான் என்னைய பேக் செய்கிறார் .தவிர எனக்கும் ஊர் சுத்தணும் என்று ஆசை . 

பஞ்சாபை சுத்தி பார்க்க போறேன்

அம்ரிஸ்டரில் கீர் குடிக்க போறேன்

வாகஹ் பார்டர் நிக்க போறேன் ,

அதுக்கு என் பெயரை வைக்க சொல்ல போறேன்’ .

என்று சினிமா பாடல் ஒன்றை கொலை செய்த ப்ரீத்தி ,”அதான் ஓடி போறேன் டார்லிங்.வரட்டா  .”என்ற அவர்களுக்கு ஒரு மிலிட்டரி சலூட் வைத்து விட்டு  தன் trolley பாக் ,ஹாண்ட் பாக் விதம் ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தாள் .

ஹிப் ஹிப் ஹுர்ரேய்என்று கூவிய மதுராவும் ,மேக்னாவும் ,”என் இனிய தமிழ் மக்களே உங்களுக்கு ஒரு இனிய செய்தி .நமக்கு இன்று தான் சுதந்திர தினம் .தமிழ்நாடு கிரேட் எஸ்கேப்பு ,பஞ்சாப்பு பாவங்ககப்பு ..”என்று ஹை பைவ் கொடுத்து கொண்டனர் .  

பாவம் எந்த பஞ்சாபி மாக்கான் இவ கிட்டே சிக்கி திக்கி திணறி நம்மபாவ பட்ட கணவர் சங்கத்தில்அடுத்த உறுப்பினரா ஆக போறானோ! …”என்றான் விஜய்.

என்னது ….பாவ பட்ட கணவர் சங்கமா ?”என்ற மதுரா காளி அவதாரம் எடுக்க ,சூர்யாவும் ,விஜய்யும் வந்து நின்ற காரில் பிள்ளைகளுடன் தாவி ஏறினார்கள் .அவர்களை கொத்து பரோட்டா போடும் பிளான் உடன் அவர்களின் இதய ராணிகள் நம்பியார் மாதிரி கையை பிசைய ஆரம்பித்தார்கள் .

 

வழக்கம் போல் பூரி கட்டை ,புத்தூர் கட்டுடன் ,பொங்கி வழியும் காதலுடன் இருந்து கொண்டே தான் இருக்கும்  இவர்கள் வாழ்க்கை  .வாங்க இனி பொங்க போகும் காதலை ரசிக்க ப்ரீதியுடன் கிளம்புவோம் பஞ்சாபிற்கு 

 

அர்ஜுன் /அமன் ….வெயிட் கரோ ஜி வந்துட்டே இருக்கோம்.

 

பயணம் தொடரும் ….

 

error: Content is protected !!