OVOV 16

OVOV 16

தன்னை சமாளித்து கொண்ட தன்வி ,கணவர் வருந்தி கொண்டு இருப்பதை கண்டு அவரிடம்,”என் ராஜா முகம் ஏன் வாடி இருக்கு ?”என்றார் கணவனின் தலை முடியில் கை வைத்து அதை கலைத்தவராய்.

சட்டென்று கண்ணீர் வழிய மனைவியின் இடையைஅணைத்து அதில் தன் முகத்தை பதித்த குருதேவ் குலுங்கி அழ  ஆரம்பித்தார்.தன் வயிற்றில் கணவனின் கண்ணீரை உணர்ந்த ஜெஸ்ஸிகா தன்வி,”என்ன இது எதுக்கு இப்படி சின்ன பிள்ளை மாதிரி அழறீங்க”என்றார்.

தன்வி வயிற்றில் இருந்து முகத்தை எடுக்காத குருதேவ்,”சாரி என்னை மன்னிச்சுடு.என்னால் தானே உனக்கு இத்தனை அவ பெயர்.என்னால் தானே இப்படி இங்கேயே சிறை பட்டு இருக்கே. என்னால் தானே நம்ம மகனும் இப்படி கஷ்ட படறான்.என்னை திருமணம் செய்ததால் தானே உன்னை அப்படி எல்லாம் பேசினாங்க.எவ்வளவூ உன்னதமானவள் நீ.உன்னை இப்படி பேசும் பொருளாய் நிற்க வைத்தது என் அவசரம் தானே.

ஐயோ ஒரு புருஷன் மனைவிக்கு சமூகத்தில் வாங்கி தர வேண்டிய நல்ல பெயரை கூட வாங்கி தர முடியாமல் இருக்கும் நான் எல்லாம் என்ன மனிதன்?என்னை கொன்று விடு பியாரி.நீ படும் துயரத்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை .”என்று அவர் குலுங்கி அழ அவரை அணைத்தவாறே நின்று ஜெஸ்ஸிகா தன்வி கண்களிலும் கண்ணீர்.

எவ்வளவூ நேரம் அப்படியே இருந்தார்களோ கதவை தட்டி “டாட்,மாம் “என்ற அமன் குரல் கேட்க, இருவரும் சட்டென்று வாஷ் பேசின் அருகே சென்று முகத்தை அலம்பி, குருதேவ் பைல் பார்ப்பது போல் அமர்ந்து கொள்ள, ஜெஸ்ஸிகா ஸ்வெட்டர் பின்னுவது போல் அமர்ந்து கொண்டார் .

மகனுக்கு தங்களின் வருத்தம், சோகம் தெரிய கூடாது என்று பெற்றோர்கள் நினைக்க, அவர்கள் பேசியதை எல்லாம் மகன் கேட்டு கொண்டு தான் நின்றான் என்பதோ, அவர்கள் வருத்தத்தை போக்க முடியவில்லையே என்று தன்னை தானே அவன் நொந்து கொண்டான் என்பதோ பாவம் அவர்களுக்கு தெரியவில்லை .

“எஸ் கம் இன் “என்றார் குருதேவ் .

“டாட். நைட் ஏதோ பேசணும் என்று நியாபக படுத்த சொன்னீர்கள்.”என்றான் அமன்ஜீத் .

“எஸ்,மறந்துட்டேன்.அர்ஜுன் மேல் கம்பளைண்ட் கொடுக்க சரணை அழைத்து போனாய் போல் இருக்கே.”என்றார் .

இந்த விஷயம் ஜெஸ்ஸிகாவிற்கு புதிது என்பதால்,”அமன் வாட் இஸ் திஸ்?’என்றார் கோபத்துடன்.

“மாம் “என்று இழுத்தான் அமன்.

“பேசாதே அமன். எப்போ பார்த்தாலும் சில்லி ரீசன்னுக்கு எல்லாம் அந்த பிள்ளையை உள்ளே தூக்கி போடுவதே உனக்கு வேலையா போச்சு. உங்க அப்பா மத்திய அமைச்சர் என்றால் அது அவரோடு.இப்படி அந்த பிள்ளை வருந்தி தான் எனக்கு நியாயம் கிடைக்கணும் என்றால் அது எனக்கு தேவையில்லை. நான் இப்பொழுதே உங்க அப்பா கூட அம்ரிஸ்டர் கிளம்பறேன். அவனும் என் மகன் தான்.”என்றார் ஜெஸ்ஸிகா .

“மாம்!ப்ளீஸ் நானே குழம்பி போய் இருக்கேன்.நீங்க வேற  செமினார் எடுக்காதீங்க.”என்றான் அமன்.

“என்ன அமன் என்ன பிரச்சனை.வாட்ஸ் ஈட்டிங் யு(what is eating you?)?”என்றார் குருதேவ் மகனின் குழப்பம் நிறைந்த முகத்தை கண்டவர் .

“டாட் யு நோ மை பெட் ஷாப் பிசினஸ்.அர்ஜுன் எல்லா அனிமல்ஸ்,பேர்ட்ஸ் எல்லாம் ஜூவில் விட்டு இருக்கான்.பட் ஒரு லயன்,கிராக்,ஒரு மலைப்பாம்பு அவனிடம் இருக்கு.”என்றான் அமன்

“ஏய்! என்னடா நினைச்சிட்டு இருக்கான் அர்ஜுன்.அது எல்லாம் கிரிமினல் குற்றம். 3 முதல் 7 வருடம் கடுங்காவல் தண்டனை அதற்கு உண்டு.பைத்தியமா அவன் .”என்றார் குருதேவ் பதற்றத்துடன்

“நோ டாட் அவனை பொறுத்த வரை,அவன் சொல்படி அது எல்லாம் என் ஷாப்பில் இருந்து இருக்கு. பட் அது மாதிரி எந்த அனிமல் நான் நேரிடையாக வாங்கலை.தவிர எனக்கு தெரியாமல் கடையில் வேற யாரும் இதை வாங்கியதற்கான ரெசிப்ட் இல்லை.cctv கேமரா ஒர்க் ஆகவில்லை.செக்யூரிட்டி ஆட்கள் அங்கே இல்லவே இல்லையாம். தவிர 300 மேற்பட்டா கம்ப்யூட்டர் பெட்டிகள் மட்டுமே உள்ளே இருந்ததாகவும் கியான்தீப் என்னிடம் காலை தான் சொன்னான்.”என்றான் அமன்.

“300 கம்ப்யூட்டர் எதற்கு வாங்கினாய் அமன்?என்னிடம் சொல்லவே இல்லை.கம்ப்யூட்டர் கிளாஸ் போட போறியா இல்லை கம்ப்யூட்டர் சேல்ஸ் பிசினஸ் ஆரம்பித்து இருக்கியா?” ?என்றார் தன்வி வியப்புடன்

“ஆனால் 300 கம்ப்யூட்டர்ஸ் நான் வாங்கவே இல்லை டாட்,மாம்.அது எப்படி வந்தது என்று யாருக்குமே தெரியலை.நம்ம கோடௌன் காவலை அப்புறப்படுத்தி சட்டவிரோதமாய் யாரோ எதையோ செய்துட்டு இருக்காங்க.கோடௌன் பக்கம் நாம யாருமே போவது இல்லையே.எது வேண்டும் என்றாலும் ஆட்களை விட்டு தானே எடுத்து வருவோம்.”என்றான் அமன் .

“அப்போ கோடௌன் அர்ஜுன் கொளுத்தவில்லையா ?”என்றார் குருதேவ் யோசனையுடன் .

“”டாட்! அர்ஜுன் பத்தி உங்களுக்கு தெரியாதா?அர்ஜுன் எதையும் நேர்மையாக செய்வான்.’ஆமாம் நான் தான் செய்தேன்’ என்று சொல்லும் கட்ஸ் அவனுக்கு உண்டு.இது மாதிரி எரிப்பது,அழிப்பது எல்லாம் அவன் ஸ்டைல் இல்லை.ஏதோ இங்கே நடக்க கூடாதது நடக்குது.அதுவும் நமக்கு முன்னாலேயே.ஆனால் யார் அதை செய்வது,என்ன செய்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

நானும் அர்ஜுனும் அடித்து கொள்வதில் எவன் பயன் அடைகிறான் என்று புரியவில்லை.கோடௌன் எறிந்த சமயம் அங்கு இருந்து சிறிது நேர இடைவெளியில் ரெண்டு லாரி வெவேறு திசையில் கிளம்பியதாக சொல்ராங்க அர்ஜுன் லார்ரி தான் முதலில் கிளம்பி இருக்கு.கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு பேக்டரி cctv கேமரா மூலம் அது உறுதி ஆச்சு.ஒரு லார்ரி அர்ஜுன் என்று வைத்து கொண்டாலும், இன்னொரு லாரி யாருடையது?எதற்காக கோடௌன் கொளுத்த பட்டது?” என்றான் அமன் யோசனையுடன்.

அதை கேட்ட குருதேவ்,தன்வி யோசனை ஆனார்கள். இவர்களை சுற்றி எவனோ ஒருத்தன் வலை விரித்து இருப்பது மட்டும் புரிந்தது.எதற்காக? தங்கள் மகனை பற்றி அவர்களுக்கு தெரியும்.அதே போல் அர்ஜுன் மேல்,அவன் நாட்டு பற்று மேல் அவர்களுக்கு சந்தேகம் இல்லை.சொந்த மகனாய் தான் அவர்கள் அர்ஜுனை நினைப்பது.அவன் இது மாதிரி ஒரு கோடௌன் அழிய காரணமாய் இருந்தான் என்பதை எல்லாம் நம்ப தயாராய் இல்லை.

“பார்த்து நட அமன் .சம்திங் பிஸிஸி .சம்திங் நோட் அட் ஆல் ரைட்.எதுக்கும் ஜாக்கிரதையா இரு.நாம் செக்யூரிட்டி டீம் கிட்டே சொல்லி அர்ஜூனுக்கும் அவன் குடும்பத்திற்கும் கூட பாதுகாப்பு ஏற்பாடு செய்துடு.வெளியே தெரிய வேண்டாம் நாம தான் அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பது.நானும் இன்டெலிஜென்ஸ் கிட்டே பேசறேன் அமன்.”என்றார் குருதேவ்

“கரெக்ட் அமன் டூ இட் பாஸ்ட்.அர்ஜுன் சும்மா இருக்க மாட்டான். தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிறதே அவனுக்கு வேலையா போச்சு.”என்றார் தன்வி பெருமூச்சு விட்டவாறே .

“ஏய்! உன் மகன் ஊருக்கு உழைப்பவன்டீ.அதை பார்த்து பெருமை படு.”என்றார் குருதேவ் அர்ஜுன் பற்றிய பெருமையோடு.

வாய் விட்டு சிரித்த அமன் பார்த்து மற்ற இருவரும் விழித்தனர். “சும்மா சொல்ல கூடாது டாட் மாம்,அவன் என்ன என்றால் உங்க அப்பா மேல் அவ்வளவு லவ்ஸ் இருக்குன்னு சொல்லறான்.நீங்க ரெண்டு பேரும் அவனுக்காக உருக்கறீங்க.பார்த்து ஓவர் ரா உருகி வழிஞ்சுட போகுது.”என்றான்.

புரிந்து கொள்ள முடியாத பாசம் அது.அவர்கள் வீட்டு பெண் விஷயத்தில் ஒன்று என்பதற்க்காக இவர்களை தள்ளி வைத்து இருப்பதும் அர்ஜுன் குடும்பம் தான்இவர்களுக்கு ஒன்று என்றால் பதறி அது நடக்காமல் தடுப்பதும் அதே குடும்பம் தான்.இருக்கு ஆனா இல்லை என்ற வகை பாசம் உறவு.

“என் மகன் அப்படி தாண்டா பேசுவான்.எதையும் என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் செய்யாதே அமன்.அர்ஜுன் ஏதாவது கோபப்பட்டாலும் நீ கொஞ்ச காலத்திற்கு தணிந்து போ.” என்றார் குருதேவ் யோசனையுடன் .

“யெஸ் டாட்.புரியுது.இது மட்டும் இல்லை.இன்னும் நிறைய எங்களை சுத்தி நடந்து இருக்கு.லெட் மீ வெரிபை.ஒகே டாட். நான் கிளம்பறேன்.”என்றான் அமன்.

“அமன்! ப்ரீத்தியை மறந்துட போறே கண்ணா.”என்றார் தன்வி.

“மறக்க மாட்டேன்.ஒகே.ஐ வில் பிக் ஹேர் பை மா”என்றவன் தன்வியையும்,குருதேவையும் அணைத்து முத்தமிட்டு கிளம்பினான்.

‘சே மாம் வர வர என்னை டிரைவர் ரேஞ்சுக்கு ஆகிட்டாங்க’ என்று மனதிற்குள் நொந்தவன்,’இவளுக்கு எல்லாம் கால் செய்து அழைப்பது தான் குறை.ஒரு மெசேஜ் தட்டி விடுடா அமன் ‘என்று நினைத்து கொண்டு,அந்த நம்பருக்கு தன் மொபைலில் ஆட் செய்து வாட்ஸாப்ப் மெஸ்ஜ் அனுப்பினான்.

“ஹாய் திஸ் இஸ் அமன்.ஜெஸ்ஸிகா ரப்தார் பாட்டியாவின்   சன்.பிலைட் எப்போ வருகிறது?என்று மெசேஜ் அனுப்பினான்.

அந்த மெசேஜ் சென்று அடைந்த நம்பர், அம்ரிஸ்டர் ரயில் நிலைய வைட்டிங் ஹாலில் இருந்த ப்ரீத்தி ஜஸ்மிந்தேர் நம்பருக்கு.போன் நம்பர்ரும் மாற்றி அனுப்பபட்டு இருந்தது.

கோபத்தில்,உடல் நல குறைவால் தவித்து கொண்டு இருந்த ஜாஸ்,கோபத்துடன் அழைத்து நான்கு கேள்வி கேட்க தான் நினைத்தாள்.ஆனால் அதற்கு கூட அப்பொழுதைக்கு தெம்பு அவளிடம் இல்லை என்பதே உண்மை.கடுமையாக பதில் சொல்லவும் அவளை ஏதோ ஒன்று தடுத்தது.

“ரீச்சுடு அம்ரிஸ்டர்.வைட்டிங் போர் பதிண்டா ட்ரெயின்.வில் ரீச் 8.00PM”என்று ரிப்ளை கொடுத்து விட்டு தலைவலியும், வாந்தியுமாக தவித்தவள்,ட்ரெயின் வந்ததும் தனக்கு புக் செய்த சீட்டுக்கு சென்று கண் மூடி உறங்க ஆரம்பித்தாள்.

இதற்குள் தான் ப்ரீத்தி ஜெகநாதன் அதே ட்ரெயின்னில் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு துப்பு துலக்கி,காஜலை திகில் படம் பார்க்கும் நிலையில் வைத்து,ராஜியிடம் இருந்து வரும் அழைப்பிற்கு காத்து இருக்க,UNKNOWN நம்பர் ஒன்றில் இருந்து விடாமல் அழைப்பு வர,அந்த கம்பார்ட்மெண்ட் விட்டு வெளியே வந்து ,தள்ளி நின்ற ப்ரீத்தி அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ இஸ் திஸ் ப்ரீத்தி ஜெகன்நாதன்? அம் ACP வித்யூத்.CHIEF மினிஸ்டர்ரின் அசிஸ்டன்ட் கமாண்டிங் ஆஃபீஸ்ர் ஆன்டி DRUG TASK FORCE.” என்றது எதிர்முனை ஆங்கிலத்தில்.

“ஓஹ் அப்படியா சார்.அப்போ நான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் சார்”என்றாள் ப்ரீத்தி நக்கலாக .

“வாட்!”என்று அலறியது எதிர்முனை.

“லுக் மிஸ்டர் .ஐ டோன்ட் நோ வூ யு ஆர்.(I don’t know who your are!)ப்ளீஸ் சென்ட் யுவர் பாட்ஜ் போட்டோ சார்.யார் வேண்டும் என்றாலும் கால் ஒட்டு கேட்க முடியும்.எனக்கு அரேபிய பெருங்கடலின் ஆழத்தை பார்க்க எல்லாம் இஷ்டம் இல்லை அதுவும் காலில் கல்லை கட்டி கொண்டு.என் நெற்றியை துப்பாக்கி குண்டு அலங்கரிக்கவும் விரும்பவில்லை.சோ உங்க ID அனுப்புங்க.நான் அதை VERIFY செய்துட்டு தான் மேற்கொண்டு தகவல் தர முடியும்.சாரி.”என்றவள் அழைப்பை துண்டித்து விட்டாள் .

(போலீஸ்கே தண்ணீர் காட்டுவது என்றால் இது தானா !)

ஐந்து நிமிடத்தில் வாட்ஸாப்ப் வித்யூத் ID தாங்கிய போட்டோ வர அதை ராஜிக்கு போர்வேர்ட் செய்தவள்,”செக் திஸ் FELLOW”என்று அனுப்பியவள் தன் இடத்திற்கு வந்து அமர்ந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்திற்கு எந்த தகவலும் இல்லை.யார் வேண்டும் என்றாலும்  ஒரு போலீஸ் அதிகாரி பற்றி தகவல் அறிந்து கொள்ள முடியாது இல்லையா? அதுவும் டாஸ்க் போர்ஸ் ஆஃபீஸ்ர் பற்றி.அதற்கென்று உள்ள வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்.தகவல் கேட்ட ராஜியின் பின்புலமே பஞ்சாப் கமிஷனரால் அலசபட்டது என்றால் ப்ரீத்தி சாதாரண பிரஜை .

“ப்ரீத்திக்கு நான் guarntee “என்று ராஜி சொன்ன பிறகே ACP வித்யூத் தகவல் உண்மை என்று சொல்ல பட்டது.அந்த விஷயத்தை ராஜி மெசேஜ் அனுப்பவும்,வித்யூத்திடம் இருந்து மீண்டும் அழைப்பு வரவும் சரியாய் இருந்தது.

வெளியே எழுந்து செல்ல முயன்ற ப்ரீத்தி கையை பிடித்து கொண்ட காஜல், அவளை வெளியே போகவிடவில்லை.அந்த குண்டோதரியிடம் இரு குழந்தைகளை வைத்து கொண்டு தனியாய் இருக்க  கஜாலால் முடியவில்லை.

“ஹாய் ஸ்வீட் ஹார்ட்.உங்களை பத்தி ராஜேஸ்வரி அக்கா  சொன்னாங்க”என்றாள் ப்ரீத்தி ஆங்கிலத்தில்.

(என்னது ஸ்வீட் ஹார்ட்டா !)

“நீங்க பேச முடியாத இடத்தில் இருக்கீங்களா?’என்றான் வித்யூத் நிலைமையை சட்டென்று புரிந்து கொண்டு.

“யெஸ் டியர்.உங்க சிஸ்டர்,ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு இருக்கா. journery நினைத்து பயப்படுறா.வெளியே போக விடமாட்டேங்கிறா.”என்றாள் ப்ரீத்தி.

(அதாவது என்னுடன் பயணம் செய்யும் இன்னொரு பெண் அவள் குழந்தைகளுக்காக பயப்படுகிறாள். என்னை அவள் வெளியே விடவில்லை.எதிரில் அந்த பெண்மணி இருக்கிறாள்.)

“யு மீன் mrs.காஜல் ரப்தார் பாட்டியா அண்ட் ஹேர் டூ கிட்ஸ்.”என்றான் வித் யூத்

“எஸ் டியர்.அத்தை போட்டோ அனுப்பினேனே பார்த்தீங்களா? அத்தையையும் அவங்க பெண்களையும் உங்களுக்கு பிடிச்சி இருக்கா! “என்றாள் ப்ரீத்தி -என்னவோ காதலனை கொஞ்சுவது போன்ற தொனியில்.

(எதிரே இருக்கும் அந்த சொர்ணா அக்கா தான் அத்தை,அந்த 3 பெண்களும் தான் அவள் பெண்கள்.அவர்கள் போதை மருந்து கடத்துகிறார்கள் என்று நான் சந்தேக பட்டது சரியா?)

“யெஸ் மிஸ் ப்ரீத்தி.ஷி இஸ் “drug mule “.courrier என்று அழைப்போம்.நீங்க சஸ்பெக்ட் செய்தது சரி தான்.உடம்பில் போதை மருந்து பாக்கெட் வைத்து தான் கடத்தறாங்க. மாலை 6 மணிக்கு உங்கள் ட்ரெயின் firozpur கண்டோன்மெண்ட் ஜங்ஷன் அருகே வந்து நிற்கும். அப்பொழுது நான் ஏறிடுவேன். பதிந்தாவில் எல்லா ஏற்பாடும் எங்க ஆஃபீஸ்ர் செய்ய ஆரம்பிச்சுட்டார்.நீங்களோ உங்க தோழியோ கவலை பட வேண்டாம்.உங்க பாதுகாப்பிற்க்கு நான் பொறுப்பு.நீங்க வேற ஏதாவது சொல்லணுமா?”என்றான் வித்யூத்.

“மெசேஜ் அனுப்பறேன்.சீ யு சூன்.”என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு காஜலிடம் விஷயத்தை சொன்னாள்.

அந்த கோரியர் சந்திக்க போகும் நபர் அடையாளத்தை மெசேஜ் அனுப்பிவள்,அதற்கு மேல் எதிரே இருந்தவர்களின் மேல் ஒரு கண்ணும்,அடிக்கடி அவர்களின் புகைப்படத்தை வித்யூத்திற்கு அனுப்பி கொண்டு இருந்தாள்.

அதே சமயம் பதிண்டா போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ்சில் “வார் ரூம் /war ரூம் “எனப்படும் “ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்” அறையில் அவன் வெகு வேகமாக கட்டளைகளை பிறப்பித்து கொண்டு இருந்தான்.அவன் கீழ் எத்தனை காவலாளர்கள் பணி புரிகிறார்கள் என்று அவனுக்கும் கமிஷனர்,முதல் அமைச்சருக்கு மட்டுமே தெரியும்.இந்திய அளவில் “சிறந்தவர்கள்”என்று அவன் குறித்து வைத்த சிலர் மட்டுமே அவன் டீம் .அதில் வித்யுத்தும் ஒருவன்.

அந்த டாஸ்க் போர்ஸ் டீம் லீடர் ஆன”அவன்”கட்டளை படி கட்டளை படி பதிண்டா ரயில் நிலையம் “அவன்” கண்காணிப்பு வளையத்திற்கு, யாருக்கும் சந்தேகம் எழாத வண்ணம் கொண்டு வர பட்டது.உள்ளூர் போலீஸ் யாருக்கும் எவ்வித தகவலும் சொல்ல படவில்லை.அங்கு இருந்து வெளியே போகும் எல்லா ரூட்டிலும் அவன் டீம் சார்ந்த பெண் போலீஸ் மப்டியில் நிறுத்த பட்டார்கள்.

“வெல்!திஸ் ஐஸ் பிக் ஓபன் போர் அஸ்.இதுவரை எந்த விதத்தில் எல்லாம் போதை மருந்து கடத்த படுகிறது என்று clue அதிகளவில் கிடைக்கவில்லை.இப்பொழுது தான் இன்னொரு வழி தெரிந்து உள்ளது.சின்ன பிள்ளைகளின் உடம்பில் கட்டி கடத்துகிறார்கள்.யார் உயிருக்கும் சேதம் வராமல் இதை முடிக்க வேண்டும்.நம் டீம் தவிர வேறு யாருக்கும் தகவல் போக கூடாது கேர்ரிஆன்.”என்று சிங்கத்தின் உறுமலுக்கு இணையாக பேசிய அவன் நின்ற தோரணை அலாதியாய் இருந்தது .

(யாரு ஹனி இந்த சிங்கம் சூர்யா ?வேட்டையாடு விளையாடு ராகவன் ?மூன்று முகம் ரஜினி ?)

இவன் எல்லாம் போலீஸ் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.அந்த அளவிற்கு லவர் பாய் முகம் கொண்டவன் அவன்.”டோன்ட் ஜட்ஜ் புக் பை இட்ஸ் கவர்/don’t judge book by its cover” என்பது போல் இவனை அவ்வளவு சுலபமாய் நினைத்து விட முடியாது.ஆர்மியில் நான்கு வருடம் பணி புரிந்தவன்.உலக அளவில் நடக்கும் பல”வார் கேம்ஸ்/WAR GAMES “கலந்து கொண்டவன்.

ஸ்பெஷல் டாக்டிகல்  ட்ரைனிங்(மொசார்ட்/mozzard எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு படையிடம்  பெற்றவன். உலகத்தில் இவர்களின் இன்டெலிஜென்ஸ்க்கு இணை வேறு யாரும் இல்லை என்றளவிற்கு ஒப்பற்ற உளவாளிகள் குழு mossard.அதில் ஹியூமன் ட்ராபிக்கிங்,நார்க்கோ பிரிவில் ஆறு வருடம் பணி புரிந்தவன்.என்கவுண்டர்,interrogation specialist.

பஞ்சாப் முதல்அமைச்சர் வேண்டுகோலுக்கு இணங்க,மத்திய உள்துறை அமைச்சகம் இவனை இந்த டாஸ்க் போர்ஸ் தலைவனாய் பஞ்சாபிற்கு அனுப்பி உள்ளது.இவன் டீம் தான் அந்த 2700 கோடி மதிப்பிலான போதை மருந்தினை பிடித்தது ஆனால் வெளியே இவர்கள் யாரென்று தெரிய கூடாது என்று கஸ்டம்ஸ் அதிகாரிகள் பிடித்ததாய் நியூஸ் பரப்பப்பட்டது. வந்த உடனே இவன் அதிரடியால் அங்கே நிறுவ பட்டு இருந்த “drug cartel ring “ஆட்டம் காண ஆரம்பித்து இருந்தது.

அடுத்து என்ன என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போது தான் ட்ரெயினில் சிறு பிள்ளைகளின் உடம்பில் கஞ்சா கடத்தப்படுவதாக, தகவல் வந்துள்ளதாக அழைத்து சொல்ல ,வந்த போட்டோவை பார்த்ததும் அது உண்மை என்று விளங்கி விட்டது .

துப்பு கொடுத்த பெண்ணுடன் வித்யூத் பேச,அவள் ‘முன்னெச்சரிக்கை முனியத்தாவா’ இருக்க இவன் பல்லை கடிக்க வேண்டியதாய் இருந்தது.அவள் கேட்ட ப்ரூப் அனுப்பி,அதை சென்னை ACP சரி பார்த்து இவளுடன் மீண்டும் பேசி ,FIROZPUR ஸ்டேஷனுக்கு வித்யூத் அனுப்பி வைத்து விட்டு பின்னால் மப்டியில் கிளம்பினான் ANTI DRUG TRAFFICKING டாஸ்க் போர்ஸ் கமாண்டோவான அவன்.

பயணிகள் போல அந்த டாஸ்க் போர்ஸ் ஆட்கள் அந்த ரயில் ஜங்ஷன் முழுவதும் நின்றார்கள்.வெளியே டாக்ஸி ,ஆட்டோ ஸ்டாண்ட்,ஜூஸ் கடை,பேப்பர் ஷாப்,ஸ்டடி பூத் அருகே ,பிளாட் போரம் கூலியாக எல்லாமே போலீஸ் ஆட்கள்.

மாலை ஆறு மணிக்கு FIROZPUR ஸ்டேஷன் ரயில் நிற்க,தாடியும் ,டர்பன் அணிந்து,கண்களில் கூலர்ஸ் உடன் ஏறினான் பையுடன் அந்த சர்தார்ஜி.

(எவண்டா இவன்.புதருக்குள் இருந்து எட்டி பார்ப்பது போல் இருக்கான் !)

உள்ளே வந்தவன் முதலில் அமர்ந்து இருந்த இவளை பார்த்து ஜெர்க் ஆகி நின்றான்.கண்களில் இருந்த கூலர்ஸ் கழட்டியவன் கண்கள் குறும்பில் மிளிர,தாடிக்குள் மறைந்து இருந்த உதடுகளில் புன்னகை எட்டி பார்த்தது.

‘ஏய் ! வைட் லகான் கோழி …பஸேன்ஜர் லிஸ்ட்டில் பெயரை பார்த்ததுமே டவுட் பட்டேன்,அதிலும் ID கேட்ட விதமே  அலாதியா இருக்கும் போதே இப்படி இம்சை செய்யும்,இம்சை அரசி யாருன்னு யோசிச்சேன்.கோழி! உன்னை கொத்து பாராட்டோ போடாமல் விட மாட்டேன்டீ.என்னையா என் அண்ணன் கிட்டே மாட்டி வச்சே.இருடீ உனக்கு இருக்கு ‘என்று போலி சர்தார்ஜி மனதிற்குள் அவளை எப்படி எல்லாம் படுத்தி எடுக்கலாம் என்று பிளான் போட்டவன்,

“ஹாய் டார்லிங் !”என்று சத்தமாய் அழைத்து,அதிர்ந்து திரும்பிய  ப்ரீத்தியை அணைத்து விட்டான்.

(அடப்பாவி …ஹீரோ செய்ய வேண்டிய வேலை எல்லாம் இவன் செய்யறானே )

அவன் செயலால் எரிச்சலான ப்ரீத்தி அவனை முறைக்க,”சாரி டார்லிங்.கொஞ்சம் லேட் ஆகிடுச்சு,இதுக்கு எல்லாம் கோவிச்சுக்கலாமா?”என்று ஆங்கிலத்தில் கொஞ்ச கண்களால் அவனை எரித்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி .

“என்ன பேபி.மாமா இவ்வளவு நாள் கழிச்சி உன்னை பார்க்க வரேன்.ஒரு ஹூக் ,ஒரு கிச் எதுவுமே இல்லையே”என்று டன் கணக்கில் சோகத்துடன் அவன் சொல்ல காஜல் சிரித்து விட்டாள்.அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள் ப்ரீத்தி.

“குரங்கே!அவனே ஓவர் ரா போறான்இதுல அவனை ஏத்தி வேற விடறியா நீயி?’என்றாள் ப்ரீத்தி கடுப்போடு.

“கர்மா மா கர்மா…எத்தனை பேரை கதற வைத்து இருக்கே,நீ செய்தது உனக்கே திரும்பி வருது.என்ஜோய்”என்றாள் காஜல்

“பேபி!”என்றவன் கையில் நறுக்கென்று கிள்ளிய ப்ரீத்தி போலீஸ்ன்னு கூட பார்க்க மாட்டேன் ரயிலில் இருந்து கீழே தள்ளிட்டு,குடிச்சிட்டு விழுந்துட்டேன்னு சொல்லிடுவேன் …”என்றவளின் மிரட்டலை கேட்டு அவன் புருவம் உச்சிமேட்டுக்கே சென்றது .

“தைரியம் தான் பெண்ணே உனக்கு.இந்த மாமாவை அப்படி எல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது.இந்த மாமா தான் உன்னை ஏதாவது செய்யணும்.என்ன செய்வது? இந்த அழகான கன்னத்தில் ஒரு இச்சு ஸ்டார்டர்ரா வைக்கலாமா.”என்றவனை வெட்டவா,குத்தவா என்று முறைத்த ப்ரீத்தி,கைகளை அவன் கழுத்தில் வைத்து நெறிக்க முயல,என்னவோ அவ மசாஜ் செய்வது போல் ஒரு பாவனை அவன் காட்ட தலையில் அடித்து கொண்டாள் ப்ரீத்தி .

“வழிஞ்சான் கேஸு .நயாகரா வாட்டர் பால்ஸ் கொரில்லா .”என்று அவன் காது கேட்கவே முணுமுணுக்க  அவனுக்கு அவளை வெறுப்பேற்றி பார்ப்பதில் அத்தனை ஆனந்தம்.

“பெஹன்!இவ பின்னாடி லவ் சொல்ல எப்படி எல்லாம் அலைஞ்சு இருக்கேன் தெரியுமா ?’என்று அவன் கேட்டதில் ப்ரீத்திக்கு புரையேறி விட்டது .

“வாட்”என்று அவள் அலறிய அலறல் ட்ரெயின் விசில் சப்தத்தையும் மீறி ஒலித்தது .

“சென்னை மெரினா பீச்சில் இவளுக்கு சுண்டல் வாங்கி கொடுத்தே என் பர்ஸ் காலி.சுண்டல் வித்தவன் வீடே கட்டிட்டானா பார்த்துகோங்கோ.எந்த அளவிற்கு இவ மொக்கி இருக்கா என்று.”என்றவன் பேச்சை கேட்டு ரெண்டு பெண்களுமே குழம்பி தான் விட்டார்கள் .

“ஹே ப்ரீத்தி இவனை லவ் செய்யறீயா என்ன ?”என்றாள் காஜல் சந்தேகத்துடன்.

“ஏன்பாஇந்த சர்தார்ஜியை முதல் முறையா இப்போ தான் பார்க்கிறேன்.அதற்குள்”காதல் கோட்டை எழுப்பறே நீயி .”என்றாள் ப்ரீத்தி எரிச்சலுடன்.

“பேபி !”என்றவன் பையில் இருந்து கிட்டார் எடுத்து,

“Tujhe dekha toh yeh jaana sanam      Sweetheart, on seeing you I learnt that

அன்பே உன்னை கண்ட பிறகு தான் அறிந்தேன்

(நான் என்ன கோனார் நோட்ஸ் சா வைத்து இருக்கேன் .அறிந்தேன் சொறிஞ்சேன்ன்னு )

Pyar hota hai deewana sanam   Love is crazy, sweetheart

காதல் என்பது கிறுக்குத்தனம்  அன்பே

(ஆமா பா சொன்னாங்க பிபிசில )

Tujhe dekha toh yeh jaana sanam        Sweetheart, on seeing you I learnt that

Pyar hota hai deewana sanam   Love is crazy, sweetheart

Ab yahan se kahan jaaye hum   Now where should I go from her

இப்போது நான் இங்கிருந்து எங்கு செல்ல வேண்டும்

(ஹ்ம்ம் கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹோச்பிடலுக்கு )

Teri baahon mein mar jaaye hum         I’ll die in your arms

நான் உங்கள் கைகளில் இறப்பேன்

(எதுக்கு போலீஸ் என்னை போலி போடுறதுக்கா ?)

Tujhe dekha toh yeh jaana sanam” என்று மண்டியிட்டு பாட

,ப்ரீத்திக்கு தலை சுத்தி போனது .

‘என்னடா எனக்கு வந்த சோதனை.போலீஸ் அனுப்பி வைக்க சொன்னா கீழ்ப்பாக்கம் காதல் வெறியனை அனுப்பி வைத்து இருக்காங்க.’என்று மனதிற்குள் புலம்பினாள் ப்ரீத்தி .

“ப்ரீத்தி !சொல்லுமா நிச்சயமா இவனை லவ் செய்யலையா நீ.” “என்றாள் காஜல் தன் தம்பி arjun வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டவளாய் .

இரும்மா எங்களுக்கும்  அதே கவலை தான் .)

“காஜல் ! ப்ளீஸ் இவர் கிட்டே ID கேக்கும் போது “நான் ஐஸ்வர்யா ராய் “வழக்கம் போல் போலீஸ் என்று பார்க்காமல் வாயை விட்டேன் பா.அதற்காக தான் இந்த பேய் இப்படி எல்லாம் படுத்துது.நீயே பாரு பாதி டர்பன் முகத்தை மூடி இருக்கு,தாடி மீசை வேற,இதில் குலெர்ஸ்  என்று முகமே சுத்தமா தெரியலை.ஒரிஜினல் சர்தார்ஜீயை இப்போ தான் யா பார்க்கிறேன்.”என்ற ப்ரீத்தி முகம் போன போக்கை பார்க்க அந்த சர்தார்ஜிக்கு அவ்வளவு சந்தோசமாய் இருந்தது .

“சார் எதுக்கு வந்தீங்களோ அந்த வேலையை பாருங்க .”என்றாள் ப்ரீத்தி கடித்த பற்களுக்கு இடையே வார்த்தைகளை மென்று துப்பி .

 

“அந்த வேலை எப்பவுமே இருக்கு மை பியூட்டி.உன்னை ரசிப்பதே இந்த ராஜாவின் முதல் வேலை என் ராணியே. வாவ் ஹொவ் கார்ஜியுஸ் யு ஆர் .கோபபடும் போது அப்படியே காஷ்மீர் ஆப்பிள் மாதிரி சிவக்கும் உன் கன்னம் என்னை அழைக்கும் வண்ணம்,கண்டு நான் தினம் ஆனேன் உன் தஞ்சம் ஓஹ் மகாராணியே இந்த அடிமையை ஏற்று கொள்ளுங்கள் தேவி.”என்று ஆங்கிலத்தில் காதல் கிறுக்கனாய் உளறி அவனை கண்டு ப்ரீத்தி ஆடி தான் போனாள் .

உற்று பார்த்தால் ஒழிய அவன் அணிந்து இருப்பது போலி வேஷம் என்று தெரியாது.அவன் மிக அருகில் இருந்த ப்ரீத்தி அதை சட்டென்று கண்டு கொள்ள, ஏற்பட்ட கோபத்திற்கு அவன் கண்ணாடியை,தாடியை ,தலை பாகையை அவிழ்த்து உள்ளே இருக்கும் அந்த “காதல் கிறுக்கன் “யார் என்று அறிய வேண்டும் என்று தோன்றினாலும் அவர்கள் இருந்த சூழ்நிலை அதற்கு இடம் கொடாததால் அமைதியாகவே அவன் தொல்லையை தாங்க வேண்டி இருந்தது ப்ரீத்திக்கு .

அவளை மிக நன்றாக அறிந்தவன் தான் அவன் என்பது அவளுக்கு விளங்கி விட்டது .இந்த அளவுக்கு வைத்து அவளை செய்கிறான் என்றால் அவள் நட்பு நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவனாக தான் அவன் இருக்க வேண்டும் .ஆனால் யார் அவன் .அவளின் எந்த நண்பன் காவல் துறையில் இருக்கிறான் .எவ்வளவு யோசித்து பார்த்தும் விடை தெரியவில்லை ப்ரீத்திக்கு

“Every night in my dreams

I see you, I feel you

That is how I know you go on

Far across the distance

And spaces between us

You have come to show you go on

Near, far, wherever you are

I believe that the heart does go on

Once more you open the door

And you’re here in my heart

And my heart will go on and on”

என்று டைட்டானிக் தீம் ஆல்பத்தை அவன் அடுத்து உளையிட ,ப்ரீத்தியின் காதில் ரத்தம் வராத குறை .

அடுத்து ரெண்டு மணி நேரம் எப்படி போனது என்று ப்ரீத்தியை கேட்டு இருந்தோம் என்றால்,இருக்கும் கடுப்பில் நம்மை கடித்து குதறி எடுத்து இருப்பாள் .

WILL SHE COME AND SING LULLABY FOR ME

WILL I  GET THE CHANCE TO REST ON HER FLOWERY BED

WILL SHE COME TOWARDS ME LIKE GOLDEN CHARIOT

WILL SHE GIVE ME DISAPPOINTMENT

MY HEART IS CHURNING BEACUSE OF HER

WHEN WILL THE INNOCENT MAID COME TOWARDS ME

WILL I GET THE KISS FROM HER PETAL LIKE LIPS

HEY MY HEART JUST WAIT I AM HEARING HER ANKLETS

என்று ஆங்கில கவிதை ஒன்றை அவன் சொல்ல ,காஜல் தன் நெஞ்சின் மேல் கை வைத்து கொண்டு,”ஹௌ ஸ்வீட் …என்னமா பீல் செய்து கவிதை எழுதி சொல்லறார்.சூப்பர் .”என்ற காஜலை முறைத்த ப்ரீத்தி ,

“இது உனக்கு ஹௌ ஸ்வீட்டா?”என்றாள் கடுப்போடு.

“இல்லை என்கிறாயா என்ன.என்னமா உருகி கவிதை படைச்சி இருக்கார்.ரசிக்க தெரியலையே.”என்றாள் காஜல் .

“”ஹே குரங்கே .அவனே தமிழ் படம் ஆக்டர் விஜய் நடித்த “காதலுக்கு மரியாதை”படத்தில் வரும் “என்னை தாலாட்ட வருவாளா”என்ற பாடலை அப்படியே இங்கிலிஷ்ல ட்ரான்ஸ்லேட் செய்து கவிதை மாதிரி ஒப்பிச்சிட்டு இருக்கான்.அது உனக்கு வாவ்வா?கடுப்பை கிளப்பாதே.”என்றாள்.

“என்னது ?”என்று அலறிய காஜலுக்கு அந்த பாட்டினை youtubeபில் ஹெட் செட் வைத்து போட்டு காட்ட கடுப்பாகி போனாள் காஜல் .

அவள் கண்டு கொண்டதை கண்ட அவன் முகத்தில் ஒரு அழகான சிரிப்பு உண்டானது .

“என்ன தான் சொல்லு பேபி .இந்த மாமாவின் கவிதை எதுன்னு புரிஞ்சுக்க உன்னை விட்டா யாரு இருக்கா ?’என்றான் அவன்

“உன்னை ஒண்ணு விட்டேன் உன் வாயில் பல்லு மட்டும் இல்லை உயிரும் இருக்காது.போலீஸ் மாதிரி நடங்க மிஸ்டர் வித்யூத் .”என்று அவன் காதருகில் வார்த்தைகளை கடித்து துப்ப மீசையை முறுக்கி கொண்ட அவன் உடல் மௌன சிரிப்பில் அதிர்ந்தது.

“பீ சீரியஸ் மிஸ்டர் “என்றாள் ப்ரீத்தி

“உன்னை பார்த்த நொடியில் இருந்து காதலில் விழுந்த நான் சீரியஸ் சா தான் இப்போவோ அப்பாவோ என்று இருக்கேன் .உன் இதழ் என்ற அமுதத்தை கொடுத்து என்னை பிழைக்க தான் வையென் என் டார்லிங்.”என்றான் அவன்

“ஐ வில் கில் யு “என்றாள் ப்ரீத்தி .

“ஐ வில் டை இன் யுவர் லாப் (உன் மடியில் உயிர் துறப்பேன் ).அதை விட வேறு என்ன பாக்கியம் இருக்க முடியும் ?”என்றவனை கண்டு தலையில் அடித்து கொண்ட ப்ரீத்தி ,”காட் சேவு மீ “என்றாள் .

“சாரி டார்லிங் அவர் பிஸி.உன்னை காக்க இந்த ராஜகுமாரன் ,உன் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் அடிமை இருக்கும் போது எங்கோ இருக்கும் அவரை ஏன் டிஸ்டர்ப் செய்யரே ?”என்றவனின் பேச்சை கேட்ட ப்ரீத்தி பொறுமை காற்றில் பறக்க ,எழுந்தே விட்டாள்.

“காஜல் கொஞ்சம் இப்படி வா .நான் அங்கே அமர்ந்து கொள்கிறேன்.”என்றவள் அந்த போலி சர்தார்ஜியை விட்டு தள்ளி அமர,”பெஹன் உங்களுக்கு சென்டர் சீட் வாந்தி வரும் .நீங்க பிரீயா இங்கே உட்காருங்க.”என்றவன் காஜலை சீட்டின் ஒரு முனைக்கு நகர வைத்து ,ப்ரீத்தியை இடித்து கொண்டு அமர்ந்தான்.

“என்னை விட்டு ஓடி போக முடியுமா

இனி முடியுமா ?

நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா “

என்று சுத்த தமிழில் ப்ரீத்தி காதருகே அவன் பாட அதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே அவனுடன்  பேசி கொண்டு இருந்த ப்ரீத்தி அவன் தமிழ் உச்சரிப்பை கேட்டு திகைத்து அவனை பார்த்தாள் .

“இப்படி எல்லாம் லவ் பார்வை பாக்காதே ப்ரீத்தி செல்லம் .மாமனுக்கு வெக்க வெக்கமாய் வருது இல்ல.”என்றவன் தான் குலர்ஸ் கழற்றி விட்டு அவளை பார்த்து கண் அடிக்க அதிர்ந்து போனாள் ப்ரீத்தி .

அவளை அந்த போலி சர்தார்ஜி இடம் இருந்து காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக பதிண்டா ரயில் நிலையம் வந்து சேர்ந்தது அந்த இரவு பொழுதில் எப்பொழுதும் இருக்கும் ஜனநடமாட்டத்தை விட மிக குறைவாகவே இருந்தது.

ட்ரெயின் ஸ்டேஷன் வருவதற்கு முன்னே ப்ரீத்தியையும் ,காஜலையும் கிளப்பி கொண்டு கதவின் அருகே நின்றவன் ,ட்ரெயின் நின்றதும் அவர்களையும் அவர்கள் இருவரின் தோளில் உறங்கி கொண்டு இருந்த பிள்ளைகளையும்  அவசர அவசரமாய் கீழ் இறக்கி ,கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் தள்ளி சென்றான்.

உள்ளே அவர்களை பாதுகாப்பாய் மப்டியில் இருந்த பெண் போலீசிடம் ஒப்படைத்தவன், தன் டர்பனுக்குள் இருந்த ப்ளூடூத் அழைப்பை ஏற்று,”ஹ்ம்ம் ப்ரீத்தி,காஜல்,கிட்ஸ் ஆர் SAFE.கேர்ரி ஆன்.வெயிட் போர் மை கமாண்ட்.”என்றவன் அந்த அறையில் இருந்த இன்னொரு பையில் இருந்து புல்லட் ப்ரூஃப் வெஸ்ட் அணிந்தவன்,தான் கொண்டு வந்த பையினுள் இருந்து மூன்று நான்கு பிஸ்டல்களை எடுத்து கை,கால் ,இடுப்பு,முதுகு என்று அனைத்தையும் சேப்டி லாக் செக் செய்து விட்டு வைத்தான் .

“இங்கேயே இருங்க, திரும்ப நான் வந்து அழைக்கும் வரை வெளியே வர வேண்டாம் .மேடம் கதவை உள்புறம் லாக் செய்துக்கோங்க” என்று தூய தமிழில் பேசியவன்,தன் தலையில் இருந்த டர்பன்,தாடி ,மீசை,குலர்ஸ் எடுக்க,அதன் உள் இருந்து வெளி பட்டவனை சத்தியமாய் அங்கு ப்ரீத்தி எதிர் பார்த்து இருக்கவில்லை .

 

பயணம் தொடரும் ….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!