OVOV 20

OVOV 20

“சே எப்படி எப்படி இவனுங்க மோப்பம் பிடிச்சானுங்க ?இத்தனை கமாண்டோஸ் எப்படி வந்தாங்க? நீ வருவது யாருக்கோ தெரிந்து இருக்கு.

யார் கிட்டே உளறி வச்சே? கை நிறைய பணம் வருதுன்னு யார் கிட்டேயாவது ஷோ காட்டிட்டு இருந்தியா?” என்று உடைந்த தமிழில் கேட்டவாறு, கொலைகாரன் சொர்ணக்காவை போட்டு உலுக்கி எடுத்து, அடித்த அடியில் அந்த மலை கீழே போய் விழுந்தது.

“நான் யார் கிட்டேயேயும் சொல்லலைங்க.சொல்லலை…என்ன பெத்த என் ஆத்தா சத்தியமா சொல்லலை.”என்று சொர்ணாக்கா கெஞ்சியும், கதறியும் அவன் நாலு மீதி மிதப்பதை நிறுத்தவே இல்லை.

காது கொடுத்து கேட்க முடியாத பல பச்சை வார்த்தைகள் பயன்படுத்தி அவளை திட்டி ,தன் ஆத்திரம் தீரும் வரை அடித்து ,துவைத்து காய போட்ட  பிறகு, தன் பாக் பாக்கில் இருந்து போன் ஒன்றை எடுத்தவன் யாருக்கோ டயல் செய்தான்.

டயல் செய்த அவன் கை நடுங்கி கொண்டு இருந்தது.முகம் மரண பயத்தில் வெளிறி போனது.

அழைப்பு ஏற்கப்பட காத்து இருந்தவன் முகத்தில் இருந்தது நிச்சயம் மரண பயமே.வேர்த்து ஒழுக,கை கால்கள் சல்சா டான்ஸ் ஆட, ஏதோ ‘சைத்தான்’ அரசவையில் தீர்ப்புக்காக நிற்பவன் போல்  அவன் நின்ற விதமே சொல்லாமல் சொல்லியது அவன் அழைப்பது “காபோஸ் /capos “என்ற அவன் தலைவனை.

கை உதறி கொண்டு இருந்தவன் விரல் அழைப்பு ஏற்கப்பட ,ஸ்பீக்கர் பட்டன் ஆன் செய்து இருந்தது.

“சொல்லு …கிப்ட் மேரேஜ் ஹால்லுக்கு வந்து சேர்ந்தாச்சா?(போதை மருந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டதா? பொம்மைங்க எப்படி இருக்கு ?(அந்த மூன்று பெண்கள் எப்படி இருக்காங்க )”

“சர் …சர்ஜி …”அவன் குரல் தந்தி அடிக்க ஆரம்பித்தது.

இவன் திணறலை கேட்ட எதிர்புறம் ஒரு நொடி அமைதி காத்து, “என்ன ஆச்சு? எங்கே மாட்டினே?” எந்த சுத்திவளைத்த பேச்சும் இல்லாமல், எரிமலையின் சீற்றத்தை உள் அடக்கிய குரலில் கேட்டான் அவன் ஆங்கிலத்தில்.

“ஜி …..”என்று இவன் திணற,

“சொல்லு எங்கே இருக்கே?”என்றது அந்த குரல்,எந்த உணர்ச்சியையும் காட்டாத பாவத்தில்.

“ஜி பதிண்டா ரயில்வே ஸ்டேஷன் ஜி. கமாண்டோஸ் சுத்தி வளைச்சிட்டாங்க.ஸ்டேஷன் மாஸ்டர் ரூமில் இருக்கோம்.”என்றான் இவன் ஒரு வழியாக.

ஒரு மிக பெரிய அதிர்ச்சியான,”வாட் …கம் அகைன் …கமாண்டோஸ் கிட்டே எப்படி மாட்டினீங்க?” என்றான் அவன் காபோஸ்.

“இவங்களை எதிர் பார்த்து காத்துட்டு இருந்தாங்கஜி. ரெண்டு பேரு தான் கண்ணில் பட்டாங்க என்று சுட ஆரம்பித்த பிறகு தான் அது ரயில்வே போலீஸ் இல்லை, கமாண்டோஸ் படையே இங்கு இருக்குன்னு தெரிய வந்தது. கரெக்டா ஸ்கெட்ச் போட்டு சுத்தி வலைச்சிட்டாங்க.”என்றான் இவன்.

ஓடி சென்று டிவியில் நியூஸ் சேனல் அனைத்தையும் மாற்றி மாற்றி  வைத்து பார்த்தும், அதில் இப்படி ரயில் நிலையத்தில் கமாண்டோஸ் மிஷன் நடக்கும் நியூஸ் வரவேயில்லை என்பதை கண்ட capos/தலைவனின் பிபி எக்குத்தப்பாய் எகிற ஆரம்பித்தது.

அடியில் வந்த scroll மைண்டெனன்ஸ்(maintanence) காரணமாய் பதிந்தாவிற்கு வந்த ரயில்கள் திருப்பி விட படுவதாக மட்டுமே ஓடியது.

அதாவது வெளி உலகத்திற்கு தெரியாமலே அந்த போதை மருந்து மிஷன் நடந்து கொண்டு இருக்கிறது. ரஞ்சித்,வீரேந்தர் வெகு அழகாய் வெளி உலகம்,சாதாரண மக்கள் அங்கு நடப்பதை அறியாத வண்ணம் அழகான மாயை ஒன்றை உருவாக்கி இருந்தனர்.

மத்திய அமைச்சர் குருதேவ் வருகையும்,அவர் மீட்டிங்,பாதுகாப்பு என்ற காரணத்தை ரஞ்சித் வெகு சமர்த்தியமாய் பயன்படுத்தி கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும். குருதேவ் செல்லும் இடத்திற்கும் இந்த ரயில் நிலையத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றாலும்,அந்த பகுதி முழுவதும் ஏற்படுத்த பட்டு இருந்த பாதுகாப்பிற்கு சொல்ல பட்ட காரணம் குருதேவ் என்பதே.

“லைன்னில் இரு.”என்றவன் இன்னொரு போன் எடுத்து ,அவனுக்கு துணை நிற்கும் அதிகாரி ஒருவனை அழைத்து விவரம் கேட்க ,அவனுக்கும் எதுவும் தெரியவில்லை என்றதும்,

“பணம் மட்டும் பொட்டி பொட்டியாய் வாங்க தெரியுது, பொண்ணுங்க மட்டும், அதுவும் ஸ்கூல் போகும் பிள்ளைகள் மட்டுமே வேண்டும் சொல்ல தெரியுது இல்லை.எதுக்கு கேட்கிறதை எல்லாம் செய்து தரேன்

இப்படி நீ இப்படி ஹோட்டலில் ஆட்டம் போட்டு கொண்டு குட்டி,புட்டி என்று இருக்க மட்டும் தானா ?அங்கே xxxxx நடக்குதுன்னு விவரம் மட்டும் தெரியாது….அப்புறம் எந்த xxxxxx ஆஃபீஸ்ர் என்று உட்கார்ந்து இருக்கே.”என்று அவன் இன்னொரு போனில் ஆங்கிலத்தில் கத்தியது இங்கே மிக தெளிவாய் கேட்டது.

பதிண்டாவின் மிக பெரிய ஹோட்டல் ஒன்றின் 5 ஸ்டார் அறையில் -இன்னும் சொல்ல போனால் அமன்ஜீத் franchise கொடுத்து இருந்த அவன் ஹோட்டல் அறை ஒன்றில் ,ஒரு பெண்ணுடன் சல்லாபித்து கொண்டு இருந்த அந்த அதிகாரிக்கு அந்த குளிர் அறையில் வேர்த்து கொட்ட ஆரம்பித்தது.

அதுவரை உல்லாச உலகில், ஜலஜா கூட ஜல்சா செய்து கொண்டு இருந்த அவன் நரகத்தின் நுழைவாயிலில் நுழைந்து விட்டதை உணர்ந்து விட, அவன் இதய  எக்குத்தப்பாய் எகிற ஆரம்பித்தது.

அள்ளி அள்ளி கொடுப்பதில் ‘அவனை’ எப்படி அடித்து கொள்ள முடியாதோ, அதே போல் தவறு செய்து விட்டால்,உயிரை எடுப்பதிலும் அவனை மிஞ்ச ஆள் கிடையாது.

அதே போல் ஒரு விஷயம் தவறாகி போனால்,அதை சரி செய்ய தன்ராஜ் போன்ற ஆட்களை விட்டு, தன் வேலைக்கு நடுவே வரும் தன் சீமா போன்ற அதிகாரிகளையோ, தங்கள் குழுவை காட்டி கொடுக்கும் பொது மக்களையோ போட்டு தள்ள தயங்கியதே இல்லை.

வேலை முடிந்த உடன் “loose ends ” என்று இவனை கை காட்ட தன்ராஜ் போன்ற  யாரும் மிஞ்சியதும் இல்லை.

“போனை உன் பக்கத்தில் இருக்கும் பொண்ணு கிட்டே கொடு.”என்றான் அவன்.

ஹோட்டலில் அந்த அதிகாரி கூட இருந்த பெண்ணிடம் போன் கை மாறியதும், ”சொல்லுங்க ஜி”.என்றாள்.

“பினிஷ் ஹிம்/finish him”என்றான் capos சற்றும் தயங்காமல்

அருகே இருந்த அதிகாரியை கண்டு வெகு நக்கலாய் புன்னகைத்தவாறே, “வித் ப்ளிஷர்/with pleasure.”என்றாள் அந்த பெண் போனில்.

அது வரை காமத்தின் சின்னமாய் இருந்த பெண், அடுத்த நொடி காலனாய் மாறி, அந்த அதிகாரி உயிரை பறித்து இருந்தாள். அதுவும் எந்த கத்தியால் அவருக்கு ஆப்பிள் நறுக்கி கொடுத்து ஊட்டி கொண்டு இருந்தாளோ அதே கத்தியை கொண்டு .

அவரின் அலறலை மொபைல் கணகச்சிதமாய் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் எதிரொலிக்க வைத்தது.அதை கேட்ட அந்த கொலையாளி மொபைலை நழுவ விட்டு,கீழே விழுவதற்குள் பிடித்து இருந்தான்.

ரைட் வரும் தகவலை சொல்லாத அதிகாரிக்கே அந்த நிலைமை என்றால்,காபோஸ்சுக்கு சொந்தமான போதை மருந்து மாட்டுவதற்கு காரணமாய் இருக்கும் தங்கள் நிலைமை என்ன என்று நினைத்து பார்க்கவே அடி வயறு கலங்கியது.

சொர்ணக்காவோ தெரியத்தனமாய் பணத்திற்கு ஆசை பட்டு தான் மாட்டி இருக்கும் அந்த கொலைகார கூட்டத்தை கண்டு மென்று விழுங்கினார்.

‘சொந்த ஊரிலேயே ஐஞ்சுக்கும் பத்துக்கும் வித்துட்டு நிம்மதியா இருந்து இருக்கலாமோ.லட்சத்திற்கும்,கோடிக்கும் ஆசைப்பட்டு நமக்கு கோடி துணி போர்த்திடுவானுங்க போல் இருக்கே ….மகமாயி என்னை காப்பாத்து ஆத்தா….அலகு குத்தி காவடி எடுக்கறேன்…..’என்று மனதில் கடவுளுக்கு விண்ணப்பம் போட்டு கெஞ்சி கொண்டு இருந்தார்.

“செத்துட்டானா? பல்ஸ் செக் செய்.”என்றான் அவன்.

“எஸ் பாஸ்.sir அவுட் ஆப் டூட்டி. 50 தடவை கத்தி சொருகி எடுத்துட்டேன்.”என்றாள் அவள் அலட்டி கொள்ளாமல்.

“கெட் அவுட் ஆப் தி ஸ்டேட்.கோவா போய்டு சின்.”என்றான் அவன்

“யெஸ் பாஸ்.” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு வெகு சாவகாசமாய் ஹோட்டல் படி வழியாக கீழே இறங்கி,ஹோட்டல் பின்புற வாயிலை திறந்து கொண்டு சென்றவள், அங்கு இருந்த ஒருவனிடம்  கொன்ற அதிகாரியின் மொபைல்,தன் மொபைல் கொடுத்து விட்டு  ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் வெளியேறுவதை கண்ட ஹோட்டல் சர்வர் ஒருவன் யாருக்கோ அழைப்பு விடுக்க,ஹோட்டல் தாண்டி நடந்து கொண்டு இருந்த அவள் மேல் மோதியது வேகமாய் வந்த லாரி அடுத்த பத்தாவது நிமிடம். அவள் உயிரை பறித்து விட்டு நிற்காமல் சென்று மறைந்தது அந்த லாரி .

சம்பவத்தை நேராக பார்த்த பொது மக்கள்,”அதிகமான வேகத்தால் ஏற்பட்ட ஆக்ஸிடென்ட்/விபத்து”என்று அங்கு வந்த காவல் துறையிடம் தகவல் சொன்னார்கள்.கொலை வெகு அழகாய் விபத்தாய் மாற்ற பட்டது.

இப்பொழுது இவளுக்கும் ஹோட்டல் அறையில் இருந்த அதிகாரிக்கும் உள்ள தொடர்பு வெளியே தெரியாமல் போனது.எப்படி மருந்து கடை தன்ராஜ் கொலை “அளவுக்கு அதிகமான குடியால் ரயில்வே ட்ராக் விபத்து” என்று மாற்ற பட்டதோ அவ்வாறு.

அழைப்பை துண்டித்த அவன்,கொலையாளிடம் அழைப்பில்,”கவலை படாதே.நம்ம பசங்க அங்கே தான் இருப்பாங்க.தீபாவளி கொண்டாடிடலாம்.”என்றான்.

“சரி பாஸ்.”என்றவன் அழைப்பில் காத்து இருக்க,அவன் யாரிடமோ போனில் பேசுவது கேட்டது.

“பதிண்டா ரயில் நிலையதின் அருகே தான் பாஸ் இருக்கிறோம்.”என்றது  தயாராய் இருந்த இன்னொரு குழு.

ஐந்து நிமிடத்தில் அவன் மீண்டும்,”வாட்.”என்று அலறுவது கேட்டது.

“நான் சொல்வது  உண்மை தான் ஜி.  இந்தியன் ஆர்மி, NIA,கமாண்டோஸ் எல்லாம் இறங்கி இருக்காங்கஜி. 10 தெரு முன்னாடியே டிராபிக் எல்லாம் டைவர்ட் செய்துட்டாங்க. மாட்டினா திரும்ப முடியாதுஜி. கேட்டா மத்திய அமைச்சர் வருகைன்னு சொல்றாங்க.”என்றான் இன்னொரு கொலையாளி

“அந்த குருதேவ் சனியன் இந்நேரம் அங்கே எந்த xxxxxx வரான்?” என்று தனக்கு தானே அவன் புலம்பி,

“கார் உடன் மெஷின் கன்,வெடிகுண்டு போட்டு சென்றால் கூட முடியாதா? எத்தனை பேரு செத்தாலும் கவலை இல்லை.”என்றான் காபோஸ்.

“முடிஞ்சா செய்து இருப்போமே ஜி. இந்த தடவை ஹெவி பாதுகாப்பு. கிட்டே நெருகுவதற்குள் கதை முடிஞ்சி போகும்.”என்றது இன்னொரு குழு.

“டாமிட்.”என்று கத்திய அவன் போனை உடைப்பது தெளிவாக கேட்டது.

“உங்களை எல்லாம் அந்த மருந்து கடை தன்ராஜ், சீமா, பர்வீன், டிசோசாவை போட்டு தள்ளியது போல் போட்டால் தான் சரி வரும்.இடியட்ஸ்…”என்று கர்ணகொடூரமாய்  கத்தினான் அவன் எதிர்முனையில் இருந்து.

“ஜி இப்போ என்ன செய்வது ?”என்றான் ரயில்வே நிலையத்தில் இருந்த அந்த கொலையாளி.

“ஹ்ம்ம் அங்கே கடைகள் இருக்கா?”என்றான் அவன் அமைதியாய்

“ஹ்ம்ம் இருக்கே ஜி. ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு வெளியே கூட இருக்கு.”என்றான் இவன் எதற்கு அந்த கேள்வி கேட்க படுது என்பதை அறியாதவனாய்

“அங்கே போய் சூடா பாவ் பாஜி  ஒரு பிளேட் ஆர்டர் கொடுத்து வாங்கி கொட்டிக்கோ.”என்றான் அவன்

“ஜி …..”என்று திகைத்தவனாய் இழுக்க,

“நீங்க எல்லாம் அதுக்கு தான் லாயக்கு.யூஸ்லெஸ் இடியட்ஸ்…….உங்களை எல்லாம் என் கையாலேயே கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்றால் கூட என் கோபம் போகாது.” என்றவன்  பச்சை பச்சையாய் 10 நிமிடத்திற்கு குறையாமல் அர்ச்சனை நடத்தினான்.

சிறிது நேரம் மௌனமாய் இருந்தவன்,

“பதிண்டா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் அறை என்றால், அவர் பாத்ரூம் மேல் ஸ்லாப் ஒன்று இருக்கும்.அதன் மீது நமது பொருளை தூக்கி போட்டுட்டு வா.இந்த ட்ராமா எல்லாம் முடிஞ்சதும் வேறு ஆளை கொண்டு நான் எடுத்துகிறேன்.

அங்கே இருக்கும் உங்கள் ஐந்து பேரில் யாராவது இவங்க கையில் சிக்காமல் வெளியே வந்துடுங்க.அப்போ தான் இந்த பையையை தப்பி போன நபர் தூக்கி போய் விட்டதாக போலீஸ்,கமாண்டோஸ் வெளியே தேடுவாங்க.புரிந்ததா?

இப்போ என்ன செய்யரே அந்த பையை முப்பதே செகண்டில் அந்த பாத்ரூம் பரண் மேல் தூக்கி போட்டுட்டு வந்து, “டன்”அப்படின்னு சொல்லணும். டீகே ?’என்றான் அவன்.

அவன் காஜல்,குழந்தைகள் இருந்த அறைக்குள் செல்ல,அதை கண்ட ப்ரீதிக்கோ இதயம் நின்றே விட்டது. உறைந்த நிலைக்கு சென்று விட்டாள் என்று சொல்ல வேண்டுமோ

எந்த நொடியும் அங்கு கேட்கும் துப்பாக்கியின் உறுமலை எதிர் பார்த்து காத்து இருந்தவளுக்கு,அவள் பயந்தது போல் எதுவும் நடக்காமல் போனது யார் செய்த புண்ணியமோ -காஜலும் குழந்தைகளும் உயிர் தப்பினார்கள்.

பாத்ரூம் அறையின் தரையில் நின்றேவாறே  பையை தூக்கி பரண் மேல் போட்டவன்,வெளியே வந்து விட்டான். அந்த பையும் காஜல் இருந்த இடத்திற்க்கு வெகு தூரம் என்பதால் அவர்கள் மேல் படாமல் போனது.அட்டை பெட்டிகளின் பின் மறைந்து அமர்ந்து இருந்ததால் உள்ளே வந்த அவன் கண்களுக்கு அவர்கள் தெரியாமல் போனார்கள்.

capos சொன்னது போலவே செய்து முடித்தவன்,”முடிச்சாச்சு ஜி.”என்றான் .

“குட்…உங்களில் யார் போலீஸ் டிஸ்ட்ராக்ட் செய்து, யார் சாவீங்களோ தெரியாது. ஆனா ஒருத்தர் உயிரோடு எஸ்கேப் ஆகணும்.புரிஞ்சுதா.”என்றவன் மேற்கொண்டு எதையும் பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

போன் வைக்கப்பட்டதும் அது வரை பிடித்து இருந்த மூச்சினை வெளி விட்ட அவன், தொப்பென்று அந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.தலையை இரு கைகளால் பிடித்த வண்ணம் தலை குனிந்து அமர்ந்து விட்டான்.

இது எல்லாவற்றையும் டேபிள் அடியில் இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தாள் ப்ரீத்தி.விடும் மூச்சு கூட மற்றவர்களுக்கு கேட்டு விட கூடாது என்று வாயினையும்,மூக்கினையும் கையால் மறைத்து, கை கால் குறுக்கி அமர்ந்து இருந்தவள் நடந்த,காதில் கேட்ட விஷயங்களின் ஆழம் கண்டு  திக்குமுக்காடி  போய் இருந்தாள்.

‘அடுத்து என்ன?’இந்த கேள்வி பூதகரமாய் ப்ரீத்தியின் முன்.

ரஞ்சித் ஆட்கள் எப்படியும் தன்னை மீட்டு விடுவார்கள் என்பதில் ப்ரீத்திக்கு துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த அறையில் அவள் மட்டுமே இல்லையே…அவள் அருகே இருக்கும் மூன்று அப்பாவி பிள்ளைகள்,பாத்ரூம் உள்ளே நான்கு ஜீவன்கள்.

‘யோசி ப்ரீத்தி ..திங்க் …திங்க்’என்று தனக்குள் பேசி கொண்டவள்,தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த தன் மொபைல் எடுத்து  முதலில் அதனை ‘சைலன்ட் மோட்’க்கு மாற்றினாள்.

இதை முதலிலேயே செய்யாத தன் மடத்தனத்தை நினைத்து நொந்து கொள்ள தான் முடிந்தது அவளால்.

சட்டென்று ஏதாவது அழைப்பு வந்து இருந்தாலோ,இல்லை மெஸேஜ் ஒலி எழுப்பி இருந்தாலோ தன் கதை என்னவாகி இருக்கும் என்று யோசித்து பார்த்தவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது.

‘சத்தியமா அந்த குண்டம்மா கிட்டே அடி வாங்கும் அளவிற்கு எல்லாம் நம்ம உடம்பு இல்லை.’என்று நினைத்து கொண்டவள்,இன்டர்நெட் டேட்டா பேக் ஆன் செய்து,வாட்ஸாப்ப் வீடியோ அழைப்பினில் ரஞ்சித்தை அழைத்தாள்.

“வீ ஆர் பிளைண்ட்”என்று சொல்லிய அவர்களுக்கு உள் இருந்து நடப்பதை காட்டும் கண்ணாகி  போனாள் ப்ரீத்தி.

யார் சொன்னது பறந்து பறந்து சண்டை போட்டு,நாலு பேரினை அடித்தால் தான் ஹீரோ,ஹீரோயின் என்று …நல்லது செய்ய போராடுபவர்களுக்கு  சிறு அணிலை போல் உதவினாலும் அது ஏற்படுத்தும் முடிவுகள் அசாதாரமானவையாக இருந்து விடும்.

ரெண்டு,மூன்று முறை அழைத்த பிறகே ரஞ்சித் அழைப்பை ஏற்க,அழைப்பது யார் என்று தெரிந்த உடன்,அவனும் சட்டென்று பேசி விடவில்லை.

இருவருமே கையை வாயாக மாற்றி இருந்தனர்.sign language.

கட்டை விரல் மட்டும் உயர்த்தி மற்ற விரல்களை மடக்கி,’எப்படி இருக்கே ?”என்றான் ரஞ்சித்.

‘எனக்கு ஒன்றும் இல்லை.ஐ ஆம் ஆல் ரைட்.’என்பது போல் ப்ரீத்தி சைகை காட்டிய உடன், தலையை தூக்கி கண்களை மூடிய ரஞ்சித் கடவுளுக்கு நன்றி சொல்வதை கண்டு ப்ரீத்தியின் புன்னகை விரிந்தது.

‘போதை மருந்து ஆசாமிகள் எங்கே?’என்று ரஞ்சித் சைகை செய்ய,ப்ரீத்தி தன் மொபைல் கேமராவை சிறிது சிறிதாய் டேபிள் திரை மறைவில் வைத்து காட்ட,அவர்கள் இருக்கும் பொசிஷன் ரஞ்சித் டீமிற்கு தெளிவாக தெரிந்தது.

அதுவரை அந்த அறையின் வரைபடத்தை வைத்து, எப்படி எல்லாம் உள்ளே நுழைய முடியும் என்று வீரேந்தருடன் விவாதித்து கொண்டு இருந்த அவர்களுக்கு இது மிகவும் உதவியாய் இருந்தது.

‘நான் திரும்ப அழைக்கிறேன்’என்று சைகை காட்டியவன்,அழைப்பை துண்டித்து விட்டுதன் டீமோடு விவாதம் செய்தான்.

அவனிடம் உள்ள மிக முக்கிய நல்ல பழக்கம் அது.நான் தான் டீம் லீடர் என்ற பந்தா இல்லாமல்,அனைவரின் கருத்தையும் கேட்டு அதில் உள்ள சாதகபாதக அம்சங்களை விவாதித்து ஏற்று கொள்ளும் பக்குவம்.

வெற்றி பெற்றால் யாரின் ஐடியா ஒர்க் அவுட் ஆனதோ, அவரின் பெயரை  உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்துவான். இழப்பு நேர்ந்தால் அதற்கு தான் மட்டுமே காரணம் என்று பின் விளைவுகளை, பனிஷ்மெண்ட்களை அவன் மட்டுமே ஏற்பான்.

“இல்லை…முன் வாசல் வழியாக உள்ளே போக முடியாது.ரூம் கதவை ப்ளாக் செய்து இருக்காங்க.இதை எல்லாம் கடந்து போவது சிரமம்.

அப்படியே உள்ளே போனாலும் நமக்கு நேரே அந்த பிள்ளைகளை நிறுத்த வாய்ப்பு உள்ளது.கிராஸ் பயர் ஆகி புல்லெட் ப்ரீத்தி மேல் படவும் வாய்ப்பு உண்டு.”என்றார் வீரேந்தர் தன் தாடையை தடவியவாறே.

“டோர் பிரேக்கர்(door breaker )யூஸ் செய்யலாமா?’என்றார் இன்னொரு துணை அதிகாரி.

“அந்த பிள்ளைங்க ஷீல்டு போல் பயன்படுத்தினா நம்ம உள்ளே சென்றும் யூஸ் இல்லை.அந்த பிள்ளைகளையும்,ப்ரீத்தியையும் முதலில் அப்புறப்படுத்தணும்.அதுவரை எது செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.”என்றான் ரஞ்சித்.

இவர்கள் பேசுவதை கேட்ட ஒருவனின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் துடித்து கொண்டு இருந்தது. அர்ஜுன் வேண்டாத தெய்வம் இல்லை என்று தான் சொல்ல வேண்டுமோ.

நவீன ஆயுதங்கள் கொண்ட கமாண்டோஸ் உள்ளே இருப்பவர்களின் உயிர்க்காக யோசித்து வெளியே நிற்கும் போது சாமானிய மனிதனான அவனால் என்ன செய்ய முடியும்?

‘தன்னால் என்ன செய்ய முடியும்?’அர்ஜுன் மனதில் எழுந்த பூதாகரமான கேள்வி அது தான்.

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே, மீண்டும் ப்ரீதியிடம் இருந்து அழைப்பு வர,மற்றவர்களை பேச வேண்டாம் என்று சைகை காட்டியவன்,அழைப்பை ஏற்றான்.

‘என்ன ஆச்சு? எவ்வளவு நேரம் தான் காபி,போண்டா ரமணா படத்தில் வருவது போல் சாப்பிட்டு மீட்டிங் போடுவீங்க?’ என்று பேப்பரில் எழுதி காட்டி கேட்க,ரஞ்சித்துக்கு சிரிப்பு வந்தது.

அப்பொழுது அவன் கையில் இருந்தது காபி கப் ஒன்று.

அவர்கள் என்ன செய்வது என்று பேசியதை ரஞ்சித்,’உள்ளே வந்தால் பிள்ளைகள் உயிருக்கு உத்திரவாதமோ,உன் மேல் குண்டு பாயாது என்று உறுதியாக சொல்ல முடியாது’ என்று எழுதி காட்டினான்.

சற்று நேரம் யோசித்த ப்ரீத்தி,முன்புறம் கதவை எட்டி பார்த்து,தனக்கு பின்னால் இருந்த ஜன்னலை பார்த்தவளின் கண்கள் ஒளிர ஆரம்பித்தது.

‘dont attack single point(ஒரு பக்கம் மட்டும் தாக்குதல் நடத்த வேண்டாம்).’

‘need to distract the gunman alone.(நமக்கு தேவை அந்த கொலையாளியின் கவன சிதறல் மட்டுமே)’

‘at a same time he cant shoot front and back.(ஒரே சமயத்தில் முன்புறமும்,பின்னாலும்  அவனால் சுட முடியாது.’

‘ before he can act,he can be neutralised (அவன் செயல் படுவதற்கு முன் அவனை வீழ்த்தி விட முடியும்)’ வெகு வேகமாய் ஆங்கிலத்தில் ப்ரீத்தி எழுதி காட்டினாள்.

‘பின் பக்கம் இருந்து நெருங்க முடியாது  கண்ணாடி இருக்கு. நாங்க வருவதை அவனால் பார்க்க முடியும்’என்று ரஞ்சித் எழுதி காட்ட

‘இனி மேல் நீங்க வந்தா தானே பார்க்க முடியும்!….ஏற்கனவே இங்கே இருந்தால்?’என்று கேள்வி எழுப்பினாள் ப்ரீத்தி.

‘புரியலை’என்று தோளை குலுக்கி,கையை ரஞ்சித் ஆட்ட,

‘அடிபட்ட கமாண்டோஸ்  கீழே தானே அமர்ந்து இருக்காங்க.ask them to fight one last டைம்.’என்று ப்ரீத்தி எழுதி காட்ட ,அங்கு இருந்தவர்களின் கண்கள் விரிந்தது.

முன்னால் இவர்கள்,பின்னால் இரு குண்டடி பட்ட கமாண்டோஸ்.கொலையாளியால் ஒரு பக்கம் மட்டுமே ஒரு தடவை சுட முடியும்.அவன் திரும்புவதற்குள் மற்றொரு பக்கத்தில் இருந்து அவனை சுட்டு விட முடியும்.

அதை விட்டால் இப்போதைக்கு வேறு பிளான் எதுவும் சரியாக வரும் என்று தோன்றவில்லை என்றதும்,அதையே செய்து பார்க்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

ரஞ்சித் ஜன்னல் பக்கம் குண்டடி பட்டு இருந்த கமாண்டோஸ் இடம் அவர்கள் கம்யூனிகேஷன் டிவைஸ்சில் பேச,அவர்களும் சரி என்றார்கள்.

அவர்கள் நம்பரை ப்ரீத்திக்கு அனுப்பி,  ரஞ்சித் எழுதி காட்டியதும்,’சரி’என்று தலை ஆட்டியவள்,அவன் சொன்ன நம்பர்ரை காண்டாக்ட் லிஸ்டில் இணைத்து வாட்ஸாப்ப் வீடியோ காலில் அழைப்பு விடுக்க,அழைப்பை ஏற்றவர்கள்,அந்த அறைக்குள் இருந்த நிலைமையை வெளியில் இருந்தவாறே பார்த்தனர்.

ஆனால் அங்கும் ஒரு பிரச்சனை. அந்த பெண் வீரரால் இடுப்பை அசைக்க முடியவில்லை. அசைத்தால் ரத்த பெருக்கு அதிகமாய் இருந்ததோடு மட்டும் இல்லாமல், தலை சுற்றி கண்கள் இருட்டி கொண்டு வந்தது.வித்யூத் காலில் குண்டு பாய்ந்து இருக்க, சப்போர்ட் இல்லாமல் எழுந்து நிற்க முடியாத நிலை.                                                                       .

ஜன்னல் உயரம் ஒரு வித்யூத்  கழுத்து வரை இருக்க, அமர்ந்த நிலையில் அதை பிடித்து எழும்பவும் அவனால் முடியாமல் போனது.

என்ன செய்வது என்று புரியாமல் ரெண்டு பக்கமும் குழம்பி தவிக்க, எதையோ யோசித்த ப்ரீத்தி அழைப்பை துண்டித்து விட்டு கூகிள் ஆண்டவரிடம் எதையோ கேட்டாள்.

அவள் கேள்விக்கான விடை படத்துடன் தெரிய அதை டவுன்லோட் செய்தவள்,அந்த புகைப்படத்தை வித்யூத்திற்கு அனுப்பி வைத்தாள்.

அது ஒரு யோகா போஸ்.படுத்தவாறே இரு கால்களையும் ஒன்றாய் மேலே தூக்கி சுவரில் சாய்ந்து இருப்பது போன்ற போஸ்.

அவள் சொல்ல வருவது அங்கு இருந்தவர்களுக்கு புரிந்து விட,சமயோஜிதமாய் யோசிக்கும் அவளின் அறிவு திறனை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

இடுப்பில் குண்டடி பட்டு இருந்த பெண் வீரர் சைகை காட்ட, அடிபடாத அவரின் காலினை பிடித்து இழுத்து சுவற்றினை மேல் பதிய வைத்தான் வித்யூத்.ஏற்பட்ட வலியினை அவர் பொறுக்கும் அளவிற்கு காத்து இருந்த வித்யூத்,அவர் “ஒகே” என்று கை அசைத்ததும் ,துப்பாக்கியினை தன் தோளில் மாட்டி கொண்டான்.

ஒரு கையால் அந்த பெண் வீரரின் காலை சப்போர்ட்டுக்கு பிடித்து கொண்டு ஒரு எம்பு எம்பி ஜன்னல் விளிம்பை பிடித்து கொண்டு எழுந்து நின்றான் வித்யூத் ஒற்றை காலில்.

அவன் சமாளித்து நிற்க,அவனுக்கு பின் இருந்து சப்போர்ட் கொடுக்கும் விதமாய் அடிபடாத இடுப்பின் பக்கம் இருந்த  காலின் பாதத்தை,வித்யூத் தண்டுவடத்தில் வைத்து சப்போர்ட் கொடுத்தார் அந்த பெண் வீரர்.

எப்படி போட்டோ ஸ்டாண்ட் நிற்க வைக்க பின்னால் ஒரு சப்போர்ட் இருக்குமோ அவ்வாறு.

இவர்கள் இங்கே தயாராய் நிற்க,ரஞ்சித், வீரேந்தர்,சரண்  டீம் உடன் முன்புறம் வந்து ரெடியாய் நின்றார்கள்  கையில் door breaker என்ற ஆயுதத்துடன்.

கான்பரென்ஸ் அழைப்பு ஆன் ஆகி இருக்க,அந்த அறையின் முன் வாசல் பக்கம்,பின்புற ஜன்னல் வழியாக கோ ஆர்டினேஷன் மிக சரியாக இருக்க,ரஞ்சித் கைகளால் 3,2,1 என்று சைகை காட்ட, 0 என்று மொத்த கையையும் அழுந்தி மூட அடுத்த நொடி போர்களமாகி போனது அந்த அறை.

பின்னால் இருந்து வித்யூத் சுட ,பாய்ந்து வந்த புல்லட் நேராக சென்று துளைத்தது அந்த கொலைகாரனின் தலையின் பின்புறத்தை.

கத்த கூட முடியாமல் அவன் உயிர் பிரிய,சொர்ணாக்கா அதிர்ந்து நிற்க,ரஞ்சித் கதவை உடைத்து கொண்டு உள்ளே வர பார்க்க,சொர்ணாக்கா தன் கையில் இருந்த துப்பாக்கியை வித்யூத் நோக்கி திருப்ப,அவள் முகத்தில் ப்ரீத்தி தூக்கி அடித்த போதை மருந்து பாக்கெட் மோதி வெடித்து சிதற,சின்ன பிள்ளைகளின் கதறல் அந்த அறை முழுவதும் எதிரொலிக்க என்று கண் இமைக்கும் நொடி என்று சொல்வார்களே அதற்குள் இவை  எல்லாம் நடந்து இருந்தது.

‘விஸ்வரூபம்’ படத்தில் கமல் துவா ஓதி முடித்து, ஒரு நீர் துளி சிந்தி முடித்து இன்னொரு நீர் துளி விழுவதற்குள் அனைவரையும் பந்தாடுவது போல் இங்கே ஒரு காட்சி அரங்கேறியது என்றால் மிகையல்ல.

அந்த கடத்தல் குழு ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் வரும் போதே, தூக்கி போட்ட போதை மருந்து பை கவிழ்ந்து அதில் இருந்து ஒரு பாக்கெட் நழுவி ப்ரீத்தி இருந்த டேபிள் அடிக்கு வந்து சேர்ந்து இருந்தது .

போதை மருந்து பாக்கெட்டை ஏற்கனவே ப்ரீத்தி கிழித்து இருந்ததால் முகத்தில் பட்ட உடன் அதன் துகள்கள் சுவாசக்குழாய்க்கு  இழுத்த காற்றோடு சொர்ணக்காவின் நுரையீரலுக்கு சென்று தன் வேலையை காட்ட ,அவரின் கண்கள் இருட்டி கொண்டு வர,அவரின் குறி தப்பி, அந்த பாக்கெட் வீசிறி எறிந்த ப்ரீத்தியின் பக்கம் தன் குண்டினை முழங்கி விட்டது .

‘யோவ் சித்து, எம்மி  ஒரு கிஸ் இல்லை…ஒரு ஹக் இல்லை …பிரின்ஸ் சார்மிங் என்று எவனுமே லவ் ப்ரொபோஸ் செய்யவில்லை .அதற்குள் என் ஜோலிய முடிசீங்க ….மேல வந்தேன் உங்க ரெண்டு பேரையும் எண்ணெய் கொப்பரையில் போட்டு 65 ஆக்காம விட மாட்டேன் …’என்று  எமதர்ம ராஜனுக்கும்,சித்ரகுப்தனுக்கும் வார்னிங் கொடுத்தவாறே தரையில் சரிந்தாள் ப்ரீத்தி.

‘அடியாத்தீ …துப்பாக்கி குண்டு பாய்ந்த நெல்லிக்காய்யில் அடித்தா மாதிரி வலிக்கும் என்று பார்த்தா இப்படி ஒரு பீரங்கி மேல வந்து விழுந்தா போலவா வலிக்கும்? ஐயோ வாயிலேயே சுட்டுட்டாளா அந்த குண்டோதரி….ஐயோ வாயை திறக்க முடியலையே …டேய் ரஞ்சித் எருமை சினிமாவில் காட்டுவது போலெ கடைசியா கூட வர மாட்டே போல் இருக்கே …கடன்காரா …..’என்று வாய் விட்டு புலம்ப முயன்றும் முடியாமல்,கண்களில் கார்ட்டூன்னில் வருவது போல் தலையை சுத்தி குருவிகள் பறக்க ,ஒருவித மயக்கத்தில் இருந்தாள் ப்ரீத்தி.

போதை மருந்து பாக்கெட் கிழித்து, தூக்கி விசிறி அடிக்கும் போதும்,சொர்ணக்காவின் மேல் பட்டு தெளித்ததும் என்று இவள் மேல் சற்று போதை மருந்து துகள் பட்டு இருந்தது. தவிர தரையில்  விழுந்ததில் வேறு என்று ஒரு வித மயக்கத்தில் தான் இருந்தாள்.

அந்த மயக்கத்தை இன்னும் கூட்டும் விதமாய் இருந்தது அவள் இதழை மூடி இருந்த இன்னொரு இதழ்கள்.

முத்தம் -இது

இதயங்களை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தமோ
காதல் என்ற யாத்திரையின் முதல் சங்கமமோ
காதல் என்ற கோட்பாட்டால் எழும் அழி அலை இதுவோ
ரெண்டு உள்ளங்களின் ஏக்கத்தின் கவிதைகளோ
காதல் என்ற பாட்டிற்கான வரிகள் இதுவோ
உதடுகளில் முத்த-கையெழுத்தின் (caligraphy )அடுக்குகள் இவையோ
ரெண்டு பூக்கள் தேனினை பரிமாறி கொள்ளும் மாயமோ
உதடுகளின் இந்த இனிமையான ஒன்றியம்
வருங்கால உறவுக்கான பாலமோ

பயணம் தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!