யாஷ்வியை ஏற்றி கொண்டு அந்த ஆம்புலன்ஸ் பதிண்டாவை நோக்கி விரைந்தது. டாக்டர் யோஜித் முதல் உதவியை தொடர தேவையான ‘பிளட் பாக்’,சலைன்,செலுத்த வேண்டிய மருந்துகளை கொண்டு வந்திருக்க,அரசு மருத்துவமனை வரும் வரை வேறு எந்த அசம்பிவிதமும் நடக்கவில்லை.
ப்ரீத்தியின் சமயோஜிதம் அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றி இருப்பதாக யோஜித் பாராட்ட, வெறும் தலையசைப்பால் அதை ஏற்று கொண்டாள் ப்ரீத்தி.யோஜித் வந்த பிறகும் ப்ரீத்தியின் கவனம் அந்த சிறுமியின் மேல் மட்டுமே இருந்தது.
‘யு வில் பி ஒகே டா.உனக்கு ஒன்றும் ஆகாது.இதை வென்று நீ மீண்டு வருவேமா.பி வித் ஹோப்.”என்று அந்த சிறுமியின் காதில் ஆங்கிலத்தில் சொல்லி கொண்டே வந்தாள்.
“ப்ரீத்தி!… அந்த பொண்ணு மயக்கத்துல இருக்குடீ.இப்படி நான்- ஸ்டாப்பாக பேசி கொண்டே வந்தால் உன் வாய் தான் வலிக்க போகுது.அவ கண் விழித்த உடனே பேசு.”என்றாள் ஜெஸ்ஸி ப்ரீத்தியின் தொடர் பேச்சை கேட்டு கொண்டு இருந்தவள்.
அர்ஜூனுக்கும் அதே எண்ணம் தான்.
“எனப் ப்ரீத்தி.பெயின் வரும்.”என்றான் அக்கறையோடு.
“அது இல்லை ஜெஸ்ஸி , ஆபத்து காலத்தில் தனக்காக இன்னொரு உயிர் இருக்கிறது என்ற நினைவே சில சமயங்களில் உடல் நல குறைவில் இருப்பவர்களை மீட்டு கொண்டு வந்து விடும்.
நினைவு தப்பி கோமாவிற்கு சென்று விட்ட நபர்களின் அருகே அமர்ந்து மனம் விட்டு பேச சொல்வதும்,அவர்களுக்கு பிடித்த மெல்லிய இசையை ஒலிக்க விட சொல்வதும்,உடல் நலம் குன்றியவர்கள் அறையை வெளிச்சமாக,நல்ல காற்றோட்டம் இருக்க சொல்வதும் இதற்காக தான்.
நினைவு தப்பி இருந்தாலும் அதற்கு ஈடு கட்ட மற்ற ஐம்புலன்கள் விழிப்பாக தான் இருக்கும்.
சப்தத்திற்கு அத்தனை ஆற்றல் உண்டு.மூளையை தூண்டி விடுவதில் சப்தம்,பேச்சு,இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு சிலர் பேசினால், ஒரு சில இசையை கேட்டால் துக்கத்தில் இருந்தாலும் அதில் இருந்து மீண்டு விடுவோம்.இன்னும் இவர்கள் பேசி கொண்டே இருக்க மாட்டார்களா,இந்த இசையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை என்று நாம் சொல்வதன் அர்த்தம் இது தான்.
இன்னும் சிலர் பேச வைத்து ,ஒரு சில இசையை கேட்க வைத்து ஒருவருக்கு கோபம்,அழுகை,வீரம் வரவழைக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.”என்றாள் ப்ரீத்தி.
ஜெஸ்ஸி அதை மற்றவர்களுக்கு மொழி பெயர்க்க,யோஜித் “மிஸ் ப்ரீத்தி சொல்வது சரி தான்.
இதற்காக “மியூசிக் therapy “என்ற டிகிரி படிப்பே உண்டு.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசையால் psychiatric disorders, cognitive and developmental disabilities, speech and hearing impairments, physical disabilities, and neurological impairments/மனநல கோளாறுகள், அறிவாற்றல் மற்றும் வளர்ச்சி குறைபாடு, பேச்சு மற்றும் செவித்திறன்,உடல் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் என்று கணக்கில் அடங்கா நோய்களை குணப்படுத்த முடியும்.
தனிநபர்களின் உடல், உளவியல், அறிவாற்றல் மற்றும் சமூக தேவைகளை இசையால் நிவர்த்தி செய்ய முடியும்.நிறைய “சப்போர்ட் குரூப்ஸ்”பேச்சின் மூலம் ஒருவரின் மன அழுத்தத்தை,துயரத்தை வெளி கொண்டு வர துணை இருப்பது எல்லாம் வெளிநாடுகளில் சர்வ சாதாரணம்.”என்றான் யோஜித்.
“யெஸ் சார் கேள்வி பட்டு இருக்கோம்.மிகுந்த மன அழுத்தம் நிறைந்த துறைகள் -அதாவது போலீஸ், ஆர்மி, இன்டெலிஜென்ஸ்,தீ அணைப்பு துறை,பாரஸ்ட் அதிகாரிகள், மருத்துவர்கள் என்று அதி முக்கிய துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டாயம் “உளவியலாளர்/psychologitst” உடன் பேசுவது, சப்போர்ட் குரூப் செல்வது எல்லாம் அரசாங்க செலவில் கட்டாயம் உண்டு .
மனம் என்பது கண்ணாடி போன்றது.தினம் தினம் அதன் மீது சுமை ஏறும் போது அதுவும் இன்னொரு உயிரை காப்பதும், எடுப்பதும் மனதை பாதிக்கும்.உடல் தூய்மை போல் மன தூய்மை கூட மிக முக்கியம்.மனதில் அழுக்கு,பயம்,கசடு சேர்ந்து விட்டால் அதுவே மிக பெரிய விஷம் ஆகி விடும்.”என்றாள் ப்ரீத்தி.
“ப்ரீத்தி இப்போ செய்துட்டு இருப்பது மிக சரி தான்.எக்ஸ்ட்ரீம் நிலையில் தனக்கு என்று யாருமே இல்லை,தன்னை காக்க யாரும் இல்லை என்ற பயத்தில் தான் இந்த சிறுமி தற்கொலை எல்லாவற்றிக்கும் தீர்வு என்று முடிவெடுத்திருக்கிறாள்.
இந்த பயத்திற்கு மிக பெரிய சக்தி உண்டு.உடல் நலத்தை இன்னும் குன்ற வைத்து விடும்.’நமக்கு தான் யாரும் இல்லையே எதற்கு பிழைக்கணும்?’ என்று மீண்டு வரும் உடல் நிலையை கூட பின்னுக்கு தள்ளி விடும்.
பயத்திற்கு இதய துடிப்பை நிறுத்தும் ஆற்றல் கூட உண்டு .இது எல்லாம் கதை இல்லை.இதற்கான மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகள் நிறைய உண்டு.”என்றான் யோஜித்.
அதன் பின் ஹாஸ்பிடல் வரும் வரை அந்த வேனில் இருந்தவர்கள் அந்த சிறுமியிடம் பேசி கொண்டே வந்தார்கள்.
‘உனக்கு நான் இருக்கிறேன்’ இந்த வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி.
ஒருத்தரின் எண்ணம்,பேச்சு,சொல்,செயல் உலகத்தையே மாற்றும் வல்லமை பெற்றது.
*************************************************************************************
பதிண்டா அரசு மருத்துவமனை வளாகம் போலீஸ்,மீடியா ,பொது மக்களால் நிரம்பி வழிந்தது.கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் குவிக்க பட்டு இருந்த போலீஸ் திணறி கொண்டு இருந்தனர்.ஆம்புலன்ஸ் உள்ளே வர கூட வழியில்லை.
சில தள்ளு முள்ளுகள் நடந்து,போலீஸ்க்கு பிபி ஏத்தி,தடியடி நடக்கும் சூழல் உருவாகி அதன் பிறகே கதவு திறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளே நுழைந்தது.
ஆம்புலன்ஸ் உள்ளே நுழைந்த உடன் வெளி கேட் மூட பட்டது.இறக்குவதற்கு முன் மீண்டும் அந்த சிறுமியின் முகத்தை மறைத்த வண்ணம் துணி கொண்டு மூடியவாறு இவர்கள் வருகைக்காக காத்து இருந்த ஸ்ட்ரெட்ச்சேரில் யாஷ்வியை கிடத்தி, தள்ளி கொண்டு உள்ளே ஓடினார்கள் அவள் உயிரை காக்க.
இன்னும் ஆபத்தான கட்டத்தில் இருந்து சிறுமி தாண்டி விட்டதாக கூற முடியாது. எது வேண்டும் என்றாலும் நடக்க வாய்ப்பு உண்டு.
அவள் உயிரை காக்க அங்கே மீண்டும் ஒரு ஓட்டம் ஆரம்பமானது.
ஸ்ட்ரெச்சர் தள்ளும் வேகத்திற்கு ஈடு கொடுத்து, கை விரல் நழுவாத வண்ணம் அழுத்தம் கொடுத்தவாறு அர்ஜுன்,ஜெஸ்ஸி உடன் ஓடினார்கள்.
மருத்துவமனையில் எல்லாம் தயாராய் இருக்க, யாஷ்வி ICUவிற்குள் கொண்டு செல்லபட்டாள். உடன் உள்ளே ஓடினார்கள் அர்ஜுனும்,ஜெஸ்ஸியும்.
இன்னும் அந்த ரத்த நாளத்தில் இருந்து ரத்த பெருக்கு ஏற்படாமல் அர்ஜுன், ஜெஸ்ஸியின் விரல்கள் தான் தடுத்து கொண்டு இருந்தன.
ப்ரீத்தி காரிடோரில் நின்று விட்டு இருந்தாள்.
யோஜித் ஸ்ட்ரெச்சருடன் உள்ளே வர ஏற்கனவே சில டாக்டர்,நர்ஸ்கள் அறுவை சிகிச்சை அறையில் scrubs அணிந்து தயாராய் நின்றார்கள்.
யோஜித் தலை அசைக்க உடன் இருந்த ஆபரேஷன் theatre நர்ஸ் அவனுக்கு scrubs அணிவித்து விட்டார்.ஏற்கனவே அவன் கையில் இருந்த சர்ஜிக்கல் கிளவுஸ் ஆம்புலன்சில் செய்த முதல் உதவியால் ரத்தமாகி இருக்க ,அதை கழட்டி மருத்துவ கழிவுகள் போடப்படும் குப்பை தொட்டியில் போட்டவனுக்கு புது கிளவுஸ் மாட்டபட்டது.
இரு டாக்டரும் கையில் ரத்த பெருக்கை நிறுத்த clamp எடுத்து கொள்ள, இருவரின் சைகை புரிந்து கொண்ட நர்ஸுகள்,அர்ஜுன்,ஜெஸ்ஸி விரலை மெல்ல அந்த ரத்த நாளத்தின் மீது இருந்து எடுத்து விட்டு அவர்கள் கையை கழுவ ஒரு இடத்தை காட்டினார்கள்.
ஒரு கணம் அர்ஜுன்,ஜெஸ்ஸியின் முகம் வலியின் வேதனையை காட்ட, மரத்து போன நீட்டி, மடக்கி தங்களை தாங்களே சமாளித்து கொண்டார்கள்.
தங்களை சுத்தம் செய்து கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள்.
குழந்தையின் உயிரை காக்கும் டிரீட்மென்ட் ஆரம்பித்த பிறகே ப்ரீத்திக்கும்,அர்ஜூனுக்கும்,ஜெஸ்ஸிக்கும் மூச்சு சரியாய் வந்தது என்று சொன்னால் கூட மிகையல்ல தான்.
டிரீட்மென்ட் உள்ளே தொடர, வெளியே வந்த இருவருக்கும் கை வலி உயிர் போனது என்றாலும் அர்ஜுன்,ஜெஸ்ஸி மனதில் நிம்மதி இருந்தது.
ஆபரேஷன் தியேட்டர் விட்டு வெளியே வந்த அர்ஜுனை பாய்ந்து அணைத்து கொண்டாள் ப்ரீத்தி.
அதுவரை அடக்கி வைத்து இருந்த பயம்,பதட்டம் எல்லாம் வடிய ப்ரீத்தியின் கண்கள் அருவியாய் பொழிய தொடங்கியது.
அவள் மனநிலை அர்ஜூனுக்கும் புரிந்தே இருந்தது.
எதையும் பேசாதவனாய் ப்ரீத்தியை தன் மார்போடு சேர்த்து அணைத்தவாறு அவள் உச்சந்தலையில் தன் தலையை பதித்து ஹாஸ்பிடலின் காரிடோரில் அப்படியே நின்றான்.
எவ்வளவு நேரம் காற்று கூட புக முடியாத அணைப்பில் இருவரும் கட்டுண்டு நின்றார்களோ அவர்களுக்கே தெரியாது.
அர்ஜுனையும் மீறி அவன் உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்து மீளாமல் அங்கேயே நின்று விட்டது.
ஒரு குழந்தையை தேற்ற அன்னை கொடுக்கும் முத்தத்தை போல் இருந்தது அந்த இதழ் ஒற்றல். அதை அவர்களே உணரவில்லை.
உணரும் நிலையிலும் அவர்கள் இல்லை என்பது தான் உண்மை.
காதல்,காமம் இல்லா அணைப்பு அது.
நடந்தது ஏதோ கெட்ட கனவு போன்றும், எதையும் நம்ப முடியாத ஒரு அதிர்ச்சி அவர்களை ஆக்கிரமித்தது.
அந்த நொடிக்கு அந்த அணைப்பு அர்ஜூனுக்கும்,ப்ரீத்திக்கும் மிக தேவையாய் இருந்தது.
அவனும் ப்ரீத்தியின் நிலையில் தான் இருந்தான்.
ஏதோ ஒரு துணிவில்,சட்டென்று ரத்த நாளத்தில் தன் விரலை வைத்து அழுத்தி பிடித்து விட்டான் என்றாலும், அந்த சிறுமியின் உயிர் தன் கையில் ஊசலாடி கொண்டு இருக்கிறது என்ற எண்ணமே அவன் இதய துடிப்பை அதிகப்படுத்தி,அவனை வதைத்து கொண்டு இருந்தது.
ரத்த பெருக்கால் ஒரு உயிர் மரிக்காமல் இருக்க நடுவே தடையாய் இருப்பது அவர்கள் விரல் மட்டுமே.
கார் அதிகமாய் குலுங்கினாலோ,திடீர் என்று அவன் விரலே பிடியை விட்டாலும் அந்த குழந்தைக்கு ஆபத்து என்னும் போது அந்த சூழ்நிலை அவனை நிலைகுலைய வைத்து கொண்டு இருந்தது என்னவோ நிஜம்.
ப்ரீத்தியின் ‘இட்ஸ் ஒகே அர்ஜுன்!… யு கேன் டூ இட். ‘என்ற வாய் மொழி மட்டும் அந்த 40-45 நிமிடங்களுக்கு தொடர்ந்து இருக்கவில்லை என்றால், அவனால் இதை செய்து இருக்கவே முடியாது என்பது திண்ணம்.
ஜெஸ்ஸி துவண்டு போனவளாய் அருகே இருந்த சேரில் அமர்ந்து இருக்க,உள்ளே வந்த அமன்ஜீத் அவளை இழுத்து அணைத்து கொண்டான்.
வாழ்க்கையில் முதல் முறையாய், ‘இன்னொரு உயிருக்காக’ என்று அமன்ஜீத் அந்த நொடிகளில் வாழ்ந்து இருந்தான்.
‘தான்’ என்பதையும் மீறி, ‘இன்னொரு உயிர்க்குக்காக’ துடித்த அந்த நொடி அவனுக்கு புதிது.
‘மற்றவர்களுக்காக வாழும் நொடிகள் அழகானவை’ என்று அமன்ஜீத் உணர்ந்த தருணம் அது.
மனிதருக்கு மனநிறைவுஎன்பது அத்தனை சுலபமாய் கிடைத்து விடாது.
எந்த நொடி நாம் ‘வாழ்ந்தற்கான அர்த்தம் இது தான்’ என்று உணர வைக்கும் நொடிகளோ,செயல்களோ தான் நாம் முழுதாய் மன நிறைவோடு வாழ்ந்தோம் என்ற அர்த்தம் கொடுக்கும் கணங்கள்.அதை முழுவதுமாய் அந்த நால்வரும் உணர்ந்த நேரம் அது.
டீம் ஒர்க் .
ஒருவருக்கு ஒருவர் துணையாய் நின்று, இன்னொரு உயிருக்கு அரணாய் நின்ற அந்த நொடி அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது என்று சொன்னால் மிகையல்ல.
இமய மலையின் உச்சியை அடைந்து,ஆழ்கடலின் ஆழத்தை தொட்டு விட்ட ஒரு நிறைவு.
வார்த்தைகள் கொண்டு இவர்களின் உணர்வுகளை விளக்க முடியாது.
மற்றவர்களுக்கு உதவி விட்டு அதன் பிறகே உணர கூடிய பேரானந்தம்,நிறைவு,வாழ்க்கையின் முழுமை அது.
உணர்ச்சி பெருக்கால் ,மௌன அழுகையில் அங்கிருந்த நால்வரின் உடலும் குலுங்கி கொண்டு இருந்தது.
தகுந்த நேரத்தில் கண்கள் பொழியும் கண்ணீர் விலைமதிப்பு அற்றது.
அதுவும் அது மற்றவருக்காக சிந்த படுகிறது என்னும் போது அதற்கு ஈடாய் எதை தான் சொல்ல முடியும்?
அந்த நொடியில் அவர்கள் உறைந்து போய் கலங்கி கொண்டு இருந்தவர்கள் அறியவில்லை தாங்கள் கலங்கிய போது ஆறுதல் தேடி சரண்புகுந்த துணை எது என்று.
எல்லோரிடமும் நம் துக்கத்தில்,பதட்டத்தில் ஆறுதல் தேடுவதில்லை.
‘ஸ்பெஷல் person’,நெஞ்சில் நீங்க இடம் பிடித்துள்ளவரிடம் மட்டுமே வெளிப்படும் உரிமை கலந்த அன்னியோன்யம் அது.
அதை தான் ப்ரீத்தி அர்ஜுனிடமும், அமன்ஜீத் ஜெஸ்ஸி இடமும் செய்து கொண்டு இருந்தார்கள்.உள்ளே இருக்கும் ஆத்மா அறியாதா என்ன எது தன்னின் சரி பாதி என்பதை.
ஒரு தடவ இழுத்து
அணைச்சபடி உயிர் மூச்ச
நிறுத்து கண்மணியே!…
ஒம்முதுக தொலைச்சி
வெளியேற இன்னும் கொஞ்சம்
இறுக்கு என்னவனே!…
அத்தனை நெருக்கம் தேவையாய் தான் இருந்தது அவர்களுக்கு.பொது இடம் என்பதையும் மறந்து இவர்கள் தங்களின் சரி பாதியிடம் சரண் அடைந்து இருக்கலாம்.
ஆனால் அதற்கான சூழ்நிலை அது இல்லையே!…
வெளியே இந்தியா, குறிப்பாக பஞ்சாப் கொதித்து கொண்டு அல்லவா இருக்கிறது அந்த பிஞ்சுக்கு நியாயம் கேட்டு.
“சார்!… சார்!…” என்ற குரல் இவர்களை நினைவுலகத்திற்கு அழைத்து வந்தது.
“சார்!… யோஜித் சார்!… உங்களுக்கு இந்த காபி கொடுக்க சொன்னார் சார். ரத்தம் டோனட் செய்த யாருக்காவது மயக்கம் வரா மாதிரி இருந்தா சொல்ல சொன்னார்.” என்றான் வார்டு பாய்.
ஒரு அசட்டு சிரிப்பை நால்வரும் ஒருவரை பார்த்து ஒருவர் சிரித்து அந்த காரிடாரில் போடப்பட்டு இருந்த சேரில் அமர்ந்து யோஜித் கொடுத்து இருந்த காபி யை அருந்தினார்கள். அவர்களின் வறண்டு போன தொண்டைக்குள் தேவாமிர்தமாய் இறங்கியது அந்த காபி
அவர்கள் அதை குடித்து முடிக்கவும் ஒரு காக்கி சட்டை கூட்டமே கமிஷ்னர் தலைமையில் அங்கு வந்து சேர்வதற்கும் மிக சரியாய் இருந்தது.
வந்த கமிஷ்னர் ராஜேஷ் சவுத்திரி, வீரேந்தர் மூலம் அர்ஜுனுக்கு குடும்ப நண்பராய் இருந்தார்.
அவர் வருவதை கண்டு அர்ஜுன்,அமன் எழுந்து நிற்க,பேய் அறை ஒன்றை அர்ஜுன் முதுகில் கொடுத்து இழுத்து அணைத்து,
“வெல் டன் மை பாய்… கலக்கிட்டே போ .ஏற்கனவே அர்ஜுன் என்றால் கிரேஸ் உண்டு. உன் சாகசங்கள் தான் ஒட்டுமொத்த பஞ்சாபிற்கு அத்துப்படி ஆச்சே!.
இன்னைக்கு அதுக்கு ஹை லைட் ஆகி போச்சு.சமூக வலைத்தளம் அர்ஜுன், ப்ரீதின்னு தான் பைத்தியம் பிடிச்சு சுத்துது….”என்றார் ராஜேஷ்.
“அட போங்க அங்கிள் விளையாடிட்டு இருக்கீங்க.”என்றான் அர்ஜுன்.
“அடேய்!… எத்தனை லவ் ப்ரோபோசல்,மேரேஜ் போரபோசல் உங்க நாலு பேருக்கும் வந்து குவிந்து இருக்கு. எத்தனை லட்சம் லைக்ஸ் உங்க வீடியோக்கு கிடைத்து இருக்கு தெரியுமா?
ஒரே மணி நேரத்தில் பஞ்சாப் மட்டும் இல்லை இந்தியாவின் ‘ஹாட் டாக்’ நீங்க நால்வர் தான். முதலமைச்சர் உங்களுக்கு விருது கொடுக்கபடும் என்று அறிவிச்சி இருக்கார். உங்க நால்வரை கௌரவிக்க விருந்தும் ஏற்பாடு செய்து இருக்கார் அவர் வீட்டில்.” என்றார் அவர்.
“வெல் டன் மை கேர்ள். காட் பிளஸ் யு மை சைல்ட். எங்க ராணி மை பாகோ போல் உன் வீரம், சமயோஜித அறிவு எங்களை வியக்க வைக்கிறது. ரியலி ப்ரௌட் ஆப் யு. “என்றார் ப்ரீத்தி தலையில் கை வைத்து ஆசிர்வதிப்பது போல்.
ஜெஸ்ஸி அவர் பேசியதை ப்ரீத்திக்கு மொழி பெயர்க்க, “‘சார்! …
உங்க பிளெஸ்ஸிங்க்கு நன்றி சார். ஆனா நீங்கப் பாராட்டும் அளவுக்கு எல்லாம் எதையும் நான் செய்யலை.
சொல்றேனேன்னு டோன்ட் மிஸ்டேக் மீ சார். இதில் பாராட்ட பட எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் இந்த நிலையில் ஒரு சிறுமி இருப்பதை, அவளை காக்க இத்தனை பேர் போராட வேண்டிய நிலையில் இருக்கும் இந்த சமூகத்தை என்ன செய்வது என்று நம்மை நாமே சுய அலசலில் வைக்க வேண்டிய தருணம் இது.
பஞ்சாப் கமிஷ்னர் நீங்க. இந்த விஷத்தை உள்ளே வராமல் முற்றிலும் தடுக்க முடியாதா என்ன? அதை பற்றி பஞ்சாப் முதல் அமைச்சர் யோசித்தால் நன்றாய் இருக்கும் .
ஒரு பாராட்டு விழா, டின்னெர் கொடுக்கும் சமயத்தில் போலீஸ், இன்போர்மர்ஸ் கூட மீட்டிங் நடத்தினால், நாட்டில் இது போல் மேலும் ஒரு சோகம் நடக்காமல் தடுக்கலாம்.
பாராட்டு பெரும் அளவு நான் எதையும் செய்யவில்லை .இதை ஏற்க முடியாது. வருந்துகிறேன் என்று சொல்லி விடுங்கள்.சாரி. “என்றாள் ப்ரீத்தி கை கூப்பி.
அங்கு இருந்தவர்கள் அதிர்ந்து போய் விழித்தனர்.
அமர்நாத், தர்மேந்திராவின் தோழர் என்பதால் ப்ரீத்தியின் இந்த பேச்சை அவரால் ஏற்க முடியவில்லை.
“என்னமா நீ… தர்மா எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?… பகத் சிங் உடன் துணை நின்றவர்கள் அவன் குடும்பத்தினர். இந்தியா முழுவதும் தர்மா என்றால் தனி மரியாதையே உண்டு.
நீ என்ன அவன் தரும் விருதை வேண்டாம் என்று சொல்கிறாய்!… இது எல்லாம் நல்லா இல்லை ப்ரீத்தி. இது அவனை அவமரியாதை செய்வது போல் இருக்கு. இந்த விருதை நீ வாங்கியே ஆகணும்.”என்றார் அமர்நாத் கோபத்துடன்.
அவர் சொல்லியதையே அர்ஜுன்,அமன்,ஜெஸ்ஸி முகம் எதிரொலித்தது.
வீரத்திற்கான விருது வழங்கப்படும் என்று அறிவித்த உடன்,அறிவிக்க பட்ட விருதை வேண்டாம் என்றால் அது முதலமைச்சருக்கு அவமானம் தரும் செயல்.
அவர்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர்,எப்போ வேண்டும் என்றாலும் அப்பொய்ன்மெண்ட் கூட இல்லாமல் இவரை சந்திக்கும் அளவிற்கு நட்பு.
அதையும் தாண்டி சுதந்திர போராட்டதில்,ராணுவத்தில் பணி புரிந்த குடும்பம் என்ற மரியாதை. அவரை அவமதிப்பதா?
“அங்கிள்!… இந்த விருதை நாங்க அவர் கையால் வாங்கினால் தான் அது அவருக்கு பெரும் அவமானத்தை தரும்.
நாங்க ஒண்ணும் ரோடு அச்சிடேன்டில்,பிரசவ வலியில், நெருப்பில், திருடர்களிடம் சிக்கியிருந்த ,ஓடும் வெள்ளத்தில், ஆற்றில் இருந்து அந்த சிறுமியை காப்பாற்றவில்லை அங்கிள். அதை முதலில் நீங்க புரிஞ்சுக்கோங்க.
ஸ்கூலுக்குள் நுழைந்து ஒருவன், அதுவும் போதை மருந்து விற்கும் xxxx ஒருவன் அந்த பெண்ணை பாலியல் கொடுமை என் கண்ணுக்கு முன்னே செய்து,போதை பொருளை விற்க அந்த சிறுமியை கொடுமை செய்து இருக்கான்.
அவன் டார்ச்சர் தாங்க முடியாமல்,இந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல், எங்கே தன் மானத்தை சமூக வலைத்தளத்தில் வாங்கி விடுவானோ என்று பயந்து, அந்த குழந்தை தற்கொலைக்கு முயன்று இருக்கு அங்கிள்.
ஆதி காலம் முதலே பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நடந்த கொண்டு தான் இருக்கிறது. இப்போ ஒரு பத்து வருடமாய் தான் அதுவும் இத்தனை டிவிகள் வந்த பிறகு தான் இது எல்லாம் அதிக அளவில் எக்ஸ்போஸ் ஆகுது.
தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்லி நியாயம் கேட்பது வரவேற்க வேண்டிய ஒன்று தான் என்றாலும், இவர்கள் காட்டும் எஸ்க்க்ளுசிவ் ‘பிரைவசி’ என்பதே இல்லாமல் செய்து விடுகிறது.
அதை பற்றி எந்த அளவிற்கு பயந்து போய் இருந்தால், எத்தனை கொடுமை அனுபவித்து இருந்தால் இந்த முடிவை எடுக்கும் எண்ணம் ஒரு சிறுமிக்கு வந்து இருக்கும்.
எவ்வளவு ஆழம் தெரியுமா அவள் கையை அறுத்து கொண்டது?.. இது சும்மா பிலிம் காட்ட பேருக்கு மேலோட்டமாய் அறுத்து கொள்வது இல்லை அங்கிள்.
‘வாழ்வை விட சாவே மேல் என்று முடிவெடுத்து விட்ட ஒரு குழந்தையை காப்பாற்றி இருக்கிறோம்!…’ என்பது பெருமை இல்லை.
அவ அந்த நிலைமைக்கு வரும் அளவிற்கு போதை மருந்தினை உள்ளே வரவிட்டு இருக்கிறோம் என்பது அவமானம்.
ஒவ்வொரு இந்திய நாட்டு பிரஜைகளும் அவமானத்தோடு தலை குனியும் நேரம் இது அங்கிள்.
குழந்தை பருவம் என்பது பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்கும் நிலை.
சாவு, தற்கொலை என்றெல்லாம் போகும் வயசா இது அங்கிள் அந்த குழந்தைக்கு? குழந்தை பருவத்தையே குழந்தையிடம் இருந்து பறிக்கும் அளவிற்கு ஒரு அரக்க கூட்டத்தை உள்ளே விட்டது யார் தவறு அங்கிள்?
இந்த விருதை நாங்க வாங்கினால் அது முதலமைச்சர் போதைக்கு எதிரான அவர் பணியில் தோற்று விட்டார் என்று தான் அர்த்தம்.
‘ஆமாம் போதை மருந்து கூட்டத்தால் பாதிக்க பட்ட சிறுமி, அதில் இருந்து மீள வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள சென்றாள் .அதிலிருந்து அவளை காப்பாற்றினோம். இங்கே போதை மருந்து சாக்லேட் மாதிரி கிடைக்கிறது.’என்று ஊர் உலகத்தின் முன் நாமே ஒத்து கொள்வது மட்டும் இல்லை அதற்கான ஆதாரத்தை உலகத்தின் முன் நாமே வைக்கிறோம்.
எவனாவது ஒரு xxx ஒரு கொடூரத்தை செய்து விடுவான்.
உடனே ஒட்டுமொத்த உலகம் என் நாட்டை “ரேபிஸ்தான் -இந்தியாவிற்குள் வராதீங்க.’என்று என் இந்திய சகோதரர்கள், அப்பாக்கள் மேல் முத்திரை குத்துவார்கள்.
இந்த நாட்டின் உப்பை தின்று, இந்த நாட்டிலேயே இருந்து கொண்டு இதற்கும் ஜால்ரா தட்ட சில xxx இருப்பாங்க.
இது எல்லாம் தேவையா?
இதோ எங்கோ டெல்லியில் இருந்த ரஞ்சித் அண்ட் டீம் இங்கே வந்து பல வாரமாய் உயிரை பணயம் வைத்து இவங்களை வேட்டையாட காரணம் முதலமைச்சர் எடுத்த முடிவு தான்
இதற்கும் முன் நிச்சயம் வேறு ஏதாவது வழியில் வீரேந்தர் அங்கிள்,சரண் அண்ணா மூலம் வேறு வழியில் முயன்று கொண்டு தான் இருப்பாங்க.
பொது மக்களுக்கு தான் தெரியாது.உடன் இருந்து இதில் எல்லாம் பங்கு பெரும் நமக்குமா தெரியாது?
‘அவர் எடுக்கும் நடவடிக்கை பலன் ஸிரோ. அவர் இந்த மாநிலத்தை ஆளவே தகுதி இல்லாதவர் என்று எதிர் கட்சி வாய்க்கு அவல் கொடுக்க சொல்ரீங்களா அங்கிள்? அதுவும் எலெக்ஷன் வர போகும் இந்த சமயத்தில்?”என்ற ப்ரீத்தியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்களாய் நின்றார்கள் அங்கிருந்தவர்கள்.
ப்ரீத்தியின் மிக தெளிவான அந்த ஆங்கில உரையாடலை கேட்டு வியந்து நின்றது ஹாஸ்பிடல் காரிடாரில் நின்றவர்கள் மட்டும் இல்லை,கமிஷ்னர் விருதை பற்றி தெரிவித்த உடன் இவர்களுக்கு வாழ்த்து சொல்ல கான்பிரென்ஸ் காலில் இருந்த தர்மாவும், குருதேவும் கூட தான்.
‘நீ கொடுக்கும் விருது ,உன் முயற்சி,போதை மருந்துக்கு எதிரான உன் போராட்டம் தோல்வி என்பதை ஆதாரத்துடன் சொல்வது. இதை ஏற்று கொள்ள சொல்கிறாயா?’என்ற அவளின் சிந்தனை அவர்களை அசைத்து தான் பார்த்தது.
விருது என்பது பல சமயங்களில் பணம் கொடுத்தால் வாங்க கூடியது தான்.சில விருதுகள் விலைமதிப்பற்றவை தான் என்றாலும் எந்த காரணத்திற்க்காக கொடுக்க படுகிறது என்பதும் முக்கியம் இல்லையா?
ப்ரீத்தி சொன்ன ரோடு ஆக்ஸிடென்ட்,வெள்ளம்,பிரசவம் எல்லாம் இயல்பாய் நடப்பது.திருட வந்தவன்,வண்டி ஓட்டி கொண்டு வந்தவன்,அவர்கள் இருக்கும் ஊர்,குடும்பத்தோடு இவர்களோடு இந்த விஷயம் முடிந்து விடும்.
போதை மருந்து,பாலியல் வன்கொடுமை, ப்ரோனோக்ராபி, ஹியூமன் ட்ராபிக்கிங் எல்லாம் ஒரு நாட்டின் மக்களின் மீது உலக அளவில் குத்தப்படும் கரும்புள்ளி செம்புள்ளி.
செய்வது எவனோ ஒருவன் என்றாலும், ஒட்டுமொத்த இந்திய மக்களும் இந்த வன்கொடுமைக்கான சிலுவையை சுமந்து தான் ஆக வேண்டும் என்பது தான் நிதர்சனம் என்ற ப்ரீத்தியின் சிந்தனை அங்கு இருந்தவர்களை திகைப்பில் தான் ஆழ்த்தியது.
இவர்கள் இந்த மாதிரி angle யோசித்து பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
இது எல்லாம் விருது கொடுத்து பாராட்டும் நிகழ்வா என்ன?
ப்ரீத்தியின் பேச்சால் அங்கிருந்தவர்கள் திகைத்தவர்களாய் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் உறைந்து நின்றார்கள்.
அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளிவந்த யோஜித், திகைத்து நின்றவர்களிடம், “இனி கவலை இல்லை.இவங்க செய்த முதலுதவி அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றி விட்டது.மயக்கத்தில் இருக்கா.நினைவு வர ரெண்டு மூன்று மணி நேரம் ஆகலாம்.”என்று இவர்கள் வயிற்றில் பாலை வார்த்தார்.
விஷயத்தை உடனே அங்கே வந்து கொண்டு இருந்த குருதேவிற்கும்,தர்மாவிற்கும் தெரிய படுத்தினார் ராஜேஷ்.
முதலமைச்சர் உடனே பிரஸ் மீட் ஏற்பாடு செய்து, சிறுமியின் உயிர் காப்பாற்ற பட்டு விட்டதை அறிவிக்க, ஒட்டுமொத்த இந்திய மக்கள்அப்பொழுது தான் நன்றாகவே மூச்சு விட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் வீட்டு பெண்ணாய் நினைத்து பதைபதைத்து கொண்டு இருந்தார்கள் தானே!.
**************************************************************************************
சிறுமியின் பெற்றோர் பதறி அடித்து கொண்டு போலீஸ் காவலுடன் ஹாஸ்பிடல் பின்புறமாய் அழைத்து வர பட்டனர்.
அதான் முன்புற கேட்டில் நோயாளிகள் கூட உள்ளே வர விட முடியாத படி அனைத்து மீடியாவும் அங்கே குழுமி இருக்கிறதே.
‘யோவ்!… நான் அடிபட்டு வந்தவன்யா. எனக்கும் அந்த சிறுமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா.’என்று புலம்ப வைத்து கொண்டு இருந்தனர்.
யாஷ்வியின் பெற்றோர் அழுகையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
“ஐயா!… அது என் புள்ளையா இருக்காது அய்யா. அது தான் உண்டு படிப்பு உண்டுன்னு இருக்கும் பொண்ணு அய்யா. அதிர்ந்து கூட யாரிடமும் பேசாது.நீங்க தவறா எங்களை கூட்டிட்டு வந்து இருக்கீங்க அய்யா.”என்று ஆயிரம் முறையாவது புலம்பி விட்டு இருப்பார்கள் அந்த பெற்றோர்.
இங்கே ICUவில் இருந்த பிள்ளைகாக பெற்ற வயிறு துடித்து கதற, அங்கே அந்த பள்ளி வாயிலில் ஆயிரக்கணக்கான பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு என்னவோ ஏதோ என்று பதறி தவித்து கொண்டு நின்று இருந்தனர்.
யோஜித் அனுப்பிய டாக்டர் டீம் அந்த பள்ளி குழந்தைகள் முழுவதையும் மருத்துவ சோதனைக்கு ஆட்படுத்தி இருந்தனர்.எந்த பாதிப்பும் இல்லாத பிள்ளைகள் உடனே பெற்றோர்களுடன் அனுப்பி வைக்க பட்டனர்.அக்கம் பக்கத்து ஹாஸ்பிடல்,மருத்துவ கல்லுரி டாக்டர்,நர்ஸ் எல்லாம் வந்திருக்க இவர்களின் வேலை வெகு சுலபமாய் முடிந்தது.
“என்ன வீரேந்தர்!… என்ன ஆச்சு?”என்றார் தர்மா.
“யாஷ்வியுடன் சேர்த்து இன்னும் ஐந்து பிள்ளைகளை அந்த xxx கொடுமை செய்து உள்ளான்.யாஷ்வி உடன் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே சிறுமி.மற்ற எல்லா பிள்ளைகளும் 10,12 படிப்பவர்கள்.
இன்னொரு விஷயம் தர்மா… ஷாக்கிங் நியூஸ் தான். இந்த ஒரு பள்ளி மட்டும் பாதிக்கபட்டு இருக்கவில்லை.” என்றார் அவர் குரலில் ஒரு அழுத்தத்துடன்.
“என்னடா சொல்றே?’என்றார் தர்மா திகைப்புடன்.
“இன்னும் பல பள்ளி,கல்லுரிகள்,டாக்டர்ஸ்,பியூட்டி பார்லர்,ஜிம், டியூஷன் சென்டர்ஸ் இதில் சிக்கும்.
இந்த குழந்தைகளில் ஒன்று என்னிடம் சொன்னது.இவளுக்கு இதை பழக்கம் செய்தது அவள் அண்ணாவுடன் கல்லுரியில் படிக்கும் ஒருவனாம்.
இன்னொரு பெண் அவளுக்கு இதை சாப்பிட கொடுத்ததே அவங்க பேமிலி ‘டாக்டர் அங்கிள்’ என்கிறாள்.
இன்னொரு பெண் டியூஷன் சென்டர் பக்கம் கை காட்டுது.
ஒரு குழந்தை பேசியதை ரெகார்ட் செய்து இருக்கேன். கேளுங்க.’என்றவர் பிளே செய்ய,
“அம்மா பியூட்டி பார்லர் கூட்டி போவாங்க அங்கிள். அவங்களுக்கு எல்லாம் முடிக்க ரெண்டு, மூணு மணி நேரம் ஆகும். அங்கே விளையாட்டு அறை இருக்கு அங்கிள்.
அங்கே உள்ள ஒரு அக்கா போகும் போது எல்லாம் “complementary ஜூஸ் “கொடுப்பாங்க.அது குடித்தவுடன் தூக்கம் நல்லா வரும் அங்கிள்.ரெண்டு மூணு மணி நேரம் நல்லா தூங்கி எழுவேன் அங்கிள்.ஆனால் எழுந்து கொள்ளும் போது பறக்கிறது மாதிரி இருக்கும்,உடம்பு எல்லாம் வலிக்கும் அங்கிள்.அந்த ஜூஸ் இப்போ மாத்திரை மாதிரி வருதாம் அங்கிள்.
அதை தான் அம்மாவும்,நானும் சாப்பிடுறோம் அங்கிள். உங்க மம்மி கிட்டே கொடுக்கிறோம்.அதை அவங்களுக்கு தெரியாம ஒண்ணு எடுத்துக்கோ என்று சொன்னாங்க.எங்க மம்மிக்கு தெரியாம அவங்க சாப்பிட்டு தூங்கும் போது நானும் ஒண்ணு எடுத்துட்டு அவங்க கூடவே தூங்கிடுவேன்.”என்று பேரிடியை இறக்கியது அந்த பிஞ்சு.
அந்த குழந்தையின் வாக்குமூலத்தை கேட்ட முதலமைச்சரும், குருதேவும் நெஞ்சில் கை வைத்து கொண்டனர்.
இதய வலியே வந்து விடும் போல் இருந்தது.
நெஞ்சின் மேல் ஏறிய பாறாங்கல் அவர்கள் இருவரின் மூச்சினை நிறுத்த முயன்றது.
“என்னடா வீரேந்தர் இது எல்லாம்? நம்ம குருஜி வாழ்ந்த நம் பூமியிலா இப்படி?என்னடா குறை?.
வற்றாத ஐந்து ஜீவநதிகள்.வியர்வையை சிந்தினால் அதற்கு ஈடாய் அள்ளி அள்ளி கொடுக்கும் பூமி அன்னை.உழைப்பை போட்டால் ஒன்றுக்கு நான்காய் பலன் கொடுக்கும் தேசமாடா இது.வயிற்றுக்கு பிழைப்புக்கு லட்சம் வழி இருக்கேடா.
பிஞ்சுகளுக்கு நஞ்சை கொடுத்தா இவனுங்க வயத்தை கழுவணும்?பச்ச பிள்ளைங்க டா.அப்படி என்னடா சதை வெறி பிடிச்சு அலையறானுங்க.ஹே பகவான்.”என்று கலங்கியது அந்த மாநில மக்களை தன் பிள்ளைகளாய் கருதும் அந்த தந்தையின் இதயம்.
“தர்மா!… தேவை இல்லாமல் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக்காதே.இது இன்னமும் பரவ கூடாது.அதற்கு என்ன செய்யணும் என்று யோசி.அழுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.ரிலாக்ஸ்.வீரேந்தர் பார்த்துப்பான்.அவங்களுக்கு தேவையான எந்த உதவியை நீ செய்ய முடியும் என்று கேளு” என்றார் குரு பதட்டத்துடன் நண்பனின் உடல் நலனில் அக்கறை கொண்டவராக அவர் கவனத்தை அவருக்காக காத்து இருக்கும் பணிகளின் மேல் திருப்பியவராக.
“சொல்லு வீரேந்தர்..என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்யறேன்.இதை தடுக்க என்ன செய்ய போறே?”என்றார் தர்மா.
“ரஞ்சித்!… சொல்லு.CM ஆன் தி லைன்.”என்றார் வீரேந்தர் அதுவரை அந்த கான்பிரென்ஸ் காலில் அமைதியாய் இருந்த ரஞ்சித்தை பேச சொன்னார்.
“சார்!…. திஸ் ஸ்பெசல் ஆஃபீஸ்ர் ரஞ்சித் சாகர் சார்.இப்போ ப்ரீத்தி பிடித்து கொடுத்த ஆட்களை விசாரித்தோம் சார். அவங்க யாரிடம் எல்லாம் விற்றார்கள் என்று சொல்லி இருக்காங்க சார்.அட் அ டைம் அவங்க கொடுத்த எல்லா அட்ரெஸ் ரைட் போக போறோம் சார்.”என்றான் அவன்.
“எத்தனை பேர் வேண்டுமோ வீரேந்தர் இடம் சொல்லுங்க ரஞ்சித்.ஹி வில் மேக் இட் ஹப்பேன்.”என்றார் தர்மா.
“சாரி சார். இதில் சில அரசாங்க அதிகாரிகள்,அரசியல்வாதிகள் ஈடுபட்டு இருக்காங்க.கொஞ்சம் மேட்டர் வெளியே தெரிந்தாலும் உஷார் ஆகிடுவாங்க. இந்த டிவி நேரிடை ஒளிபரப்பே எத்தனை பேரை ஒளிய வைத்து இருக்குமோன்னு எங்களுக்கு பயமாய் இருக்கு சார்.”என்றான் ரஞ்சித்.
“அப்போ யாரை வைத்து ரைட் செய்ய போறீங்க ரஞ்சித்?”என்றார் குரு.
“சார் இங்கே பதிண்டா விமான தளத்தில், “ட்ரில் ஆபரேஷன் ” னுக்கு இந்தியன் ஆர்மி RECRUITS வந்து இருக்காங்க. தவிர பராமிலிட்டரி ஆட்கள் இருக்காங்க. NCC(NATIONAL CADET CORPS)இருக்காங்க.
சைனிக் காலேஜ் என்ற மிலிட்டரி ஸ்கூல்,காலேஜ் ஆட்களை மப்பிடியில் ரைட் அனுப்ப போகிறோம்.”என்றான் ரஞ்சித்.
“ரஞ்சித்!… இந்த நேரத்தில் இது தேவையா?… வேறு மாதிரி பிரச்னை வெடித்தால்… ஆட்சி!….”என்ற குருதேவை தடை செய்தது தர்மாவின் குரல்.
“யு கேரி ஆன் ரஞ்சித். ஆட்சியாவது மயி….நல்லது செய்ய எதுக்குடா கலங்கனும்? ரஞ்சித் உங்களுக்கு முழு அதிகாரம் தரேன். இது எப்படி முடிஞ்சது சொல்லுங்க அது போதும்.
யாருக்கும் எதற்கும் தயங்க வேண்டாம்.கோர்ட் ஆர்டர் வேண்டும் என்றாலும் சொல்லுங்க.ஹை கோர்ட் ஜட்ஜ் வில் ஹெல்ப் யு வித் லா.”என்றார் தர்மா
“சார் டோன்ட் ஒர்ரி.ரைட் நடப்பதே யாருக்கும் தெரியா வண்ணம் தான் செய்வோம்.இது வரை இது மாதிரி 100 இடங்களில் சில பல வாரங்களாலாகவே செய்து கொண்டு தான் வருகிறோம்.இது வரை எந்த நியூஸ் சேனல் இதை மோப்பம் பிடிக்கவில்லை.இனிமேலும் பிடிக்காது.
அந்த XXX …சாரி சார்… உங்க முன்னாடி இப்படி indecent பேசி இருக்க கூடாது சார். ஆனா மனசு ஆறலை சார்.சாரி சார்.”என்றான் ரஞ்சித் அந்த அரக்க ஜென்மங்களை பச்சை,பச்சையாய் பெயர் வைத்து,முதலமைச்சர் என்று கூட கவனத்தில் வராமல் பேசி விட்ட ரஞ்சித்.
“புரியுது ரஞ்சித்… ரிலாக்ஸ்.உங்க எமோஷன் புரியுது.நாங்களும் அதே நிலையில் தான் இருக்கிறோம்.”என்றார் முதலமைச்சர் ரஞ்சித் உணர்ச்சிகளை புரிந்து கொண்டவராய்.
“சாரி சார்.”என்று மீண்டும் மன்னிப்பு வேண்டிய ரஞ்சித்,
“ப்ரீத்தி அவங்களை பிடித்து கொடுத்த உடனே என் டீம் கிட்டே தகவல் கொடுத்துட்டேன் சார்.யார் எல்லாம் எங்கள் சந்தேக பட்டு எங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்து இருந்தோமோ, அவர்களை எல்லாம் கைது செய்ய ஆரம்பித்தாகி விட்டது.
இவர்களையும் கவனித்த விதத்தில் உண்மையை கக்க ஆரம்பித்து விட்டார்கள்.கடந்த அரை மணி நேரமாய் இவர்கள் கை காட்டிய ஆட்களை கைது செய்தும்,இடங்களை சீஸ் செய்து கொண்டு தான் இருக்கிறோம்.”என்றான் ரஞ்சித்.
“எப்படி இது பாசிபல் ரஞ்சித்?”என்றார் குரு நம்ப முடியாதவராய்.
“சார்!… நாங்க யாரும் சினிமாவில் காட்டுவது போல் பத்து கார்,இருபது பேட்ஜ் எடுத்து கொண்டு “வி ஆர் பிரம் நார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட்.” என்று செல்வதில்லை சார்.
மப்பிடியில் ஐந்து,ஆறு பேர் கடைக்குள் நுழைவோம்.ஓனர்ரை தனியாக அழைத்து சென்று கவனிப்போம். ‘அன்பாய்’ பேசினால் அவர்கள் கேட்டு கொள்வார்கள்.
கஸ்டமர்களை வெளியேற்ற சொல்வோம். அவர்கள் வெளியேறியதும் இவர்களை தோளில் கை போட்டு ஒரு நண்பனோடு செல்வது போல் காத்து இருக்கும் எங்கள் காரில் ஏற்றி கொள்வோம்.
கடையை மீதம் உள்ள ஆட்கள் சுத்தமாய் வழித்து எடுத்து பேக் செய்து அனுப்புவாங்க. “என்ற ரஞ்சித் ‘அன்பில்’ என்ற வார்த்தையால் அழுத்தம் கொடுக்க, அந்த அழுத்தமே சொல்லாமல் சொன்னது அது எது மாதிரியான அன்பு என்று.
“அவங்க பேமிலி இதை பெரிய இஸ்ஸு செய்யாமல் எப்படி விட்டாங்க?”என்றார் குருதேவ் ஆச்சரியத்துடன்.
“எவிடென்ஸ் உடன் பிடிக்கும் போது அதுவும் பக்காவாய் வீடியோ ஆதாரம் சிக்கும் போது பாதி பேர் அமைதியாகி விடுவார்கள் சார். இல்லைன்னா அவர்களும் குடும்பத்தினரும் உள்ளே வர வேண்டியது தான்.
தவிர ரொம்ப சத்தம் வந்தால்,’உங்களால் தான் இத்தனை பெரிய கன்சைன்மெண்ட் சிக்கியிருக்கிறது.அதற்கு அரசாங்கம் சன்மானம் வழங்கும்’என்று சொல்வோம். அரசாங்க சன்மானம் என்பது ரெகார்ட் ஆகும் ஒன்று. அதை வாங்குபவர், ‘உளவாளி’ என்று அரசாங்கமே பிரகடனப்படுத்துவது போன்றது.
அது ரெகார்ட் ஆனால், இவர்கள் உயிர்க்கு மட்டும் இல்லை ஒட்டுமொத்த குடும்பத்தின் உயிர்க்கும் விலை நிர்ணயிப்பார்கள். அதற்கு வெளியே தெரியாமல் எஸ்ஸாகி விடுவது மேல் இல்லையா?”என்றான் ரஞ்சித்.
“இப்படி குதிப்பவர்கள் தான் உண்மையை சொல்வதில்லையே ரஞ்சித்.”என்றார் குரு.
“சார்!… அவங்க உண்மையை சொல்லவில்லை என்பது நமக்கு மட்டும் தானே தெரியும். இவர்கள் தலைவனுக்கு தெரிய சந்தர்ப்பம் இல்லை தானே!..
எந்த குழுவின் தலைவனும், தன் ஆட்களை சந்தேகத்துடன் தான் பார்ப்பான். அது காபோஸ் போன்ற ஆட்களுக்கு இயற்கையாய் இருக்கும் மனநோய் சார்.
எவனை நம்புவது, எவன் முதுகில் குத்துவான்,எவன் போட்டு கொடுப்பான் என்று தெரியாமல் குழப்பத்தில்,பயத்தில் தான் இவனை போன்றோ இருப்பார்கள்.
நாம் வேறு ஆதாரத்துடன் போடுவதாக சொல்லும் போது இப்படி மாட்டும் அடி மட்ட ஆட்கள் வாயை திறக்கவேயில்லை என்றாலும் அவங்க அத்தோடு க்ளோஸ் அங்கிள்.
அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும் அங்கிள்.”என்றான் ரஞ்சித் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்யும் குழுக்களின் தலைவன் மனநிலையை அக்குவேறு ஆணிவேராக அலசினான்.
சாட்சியே இல்லாமல் நான்கு சுவற்றுக்குள் கூட குற்றம் செய்பவன் என்று யாருமே இருப்பதில்லை.
நம் எண்ணம்,செயல்களுக்கு கூட சாட்சியாய் இருப்பது மனசாட்சி.பல நேரங்களில் அதை அதன் பேச்சை நாம் கேட்பதில்லை என்றாலும் என்று அதன் ஆதிக்கம் அதிகமாகிறதோ அன்று குற்ற உணர்ச்சி நம்மை கொன்று விடும்.
மனசாட்சி என்ற தெய்வம் நின்று கொல்லும்.
‘இது தவறு,இது சரி’ என்று ஒவ்வொரு கணமும் சுட்டி காட்டி கொண்டே இருக்கும் இந்த தெய்வம் என்று ஓய்வு எடுக்கிறதோ அந்த நொடி முதல் பயம்,பதட்டம்,சந்தேகம் என்ற சைத்தான் கூட்டம் உள்ளே வந்து விடும்.
உடன் இருந்தே கொள்ளும் வியாதி இவை எல்லாம்.அதுவும் இருட்டு உலகில் தவறை மட்டுமே செய்யும் காபோஸ் போன்ற மனிதர்கள் என்றுமே நிம்மதியாய் உறங்குவது மட்டுமில்லை சுவாசிப்பதும் கூட இவர்களுக்கு கிரேஸ் டைம் தான்.
மனிதன் என்னும் வேடம் போட்டு
மிருகமாக வாழ்கிறோம்
தீர்ப்பு என்ற ஒன்று இருப்பதை மறந்து
தீமைகளை செய்கிறோம்
எத்தனை நிதர்சனமான வரிகள் !
தீயவற்றை செய்து கொண்டே இருந்தாலும் தண்டனை என்பதை அனைவரும் ஒரு நாள் சந்தித்து தானே ஆக வேண்டும்-அது மரணமாக கூட இருக்கலாம் . மரணத்தை விட கொடியதாய் வேறு ஏதாவதும் நடக்கலாம்.
“எத்தனை இடங்களில் ரெய்டு போக போறீங்க ரஞ்சித்?” என்றார் தர்மா.
அவன் ஒரு எண்ணிக்கையை சொல்ல, வீரேந்தரே ஒரு நொடி திகைத்து தான் போனார் என்றால் தர்மா,குருவின் நிலையை சொல்ல முடியாது.
“என்ன விளையாடுறியா ரஞ்சித்!… இத்தனை இடத்தில் எப்படி?” என்றார் வீரேந்தர்.
“விடிய விடிய கச்சேரி வைக்க வேண்டியது தான்.இன்னைக்கு சிவராத்திரி.” என்றான் ரஞ்சித்.
“முடியுமா?”என்றார் தர்மா.
“முடிக்கணும் சார்… முடிப்போம்.ஏற்கனவே இவங்க சொன்ன இடங்களில் எல்லாம் ஒரு மணி நேரமாய் ரெய்டு போய்ட்டு தான் இருக்கு. முடிந்த அளவிற்கு விஷயம் வெளியே வராது. பிடிபடும் பொருட்களும் யாகத்தில் அக்னிக்கு சமர்ப்பித்து விடுவோம்.”என்றான் ரஞ்சித் .
அதாவது விடிய விடிய பல்வேறு இடங்களில் இவர்கள் ரெய்டு செல்ல போகிறார்கள்.சிக்கும் போதை பொருட்கள் எல்லாத்தையும் அழிக்க போகிறார்கள்.
“இந்த பள்ளி குழந்தைங்க என்ன செய்வது?”என்றார் குரு நீண்ட யோசைனைக்கு பிறகு.
“சார்!… பாதிக்க பட்டு இருக்கும் அப்பாவிகளுக்கு அவங்க பெற்றோர்கள் உதவியுடன் டிரீட்மென்ட் ஆரம்பிக்க வேண்டும் சார். அவர்கள் கை காட்டும் இந்த XXX மாயமாய் மறைவார்கள் சார். அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் சார்.”என்றான் ரஞ்சித்.
“இது நடக்குமா ரஞ்சித்?… ஒரே நாளில் விற்கும் இடங்களையும் பிடிக்க வேண்டும், இவர்கள் சொல்லும் ஆட்களையும் விசாரிக்க வேண்டும்.”என்றார் தர்மா.
“அப்படி செய்யவில்லை என்றால் ஒரு ஆள் நான்கு பேரினை பாதிக்க வைப்பான், அந்த நான்கு பேர் நானுறு பேரை பாதிப்படைய வைப்பார்கள்.
நானுறு நாலாயிரம் ஆகும்.
இது செயின் ரியாக்ஷன் சார்.
அட் எ டைம் மாஸ் ரெய்டு தான் இதுக்கு வழி. “என்றான் ரஞ்சித்.
“ஆல் தி பெஸ்ட்.”என்றார்கள் தர்மாவும் குருவும்.
முதலமைச்சருடன் இவர்கள் அழைப்பு முடிந்து விட,அழைப்பை துண்டிக்க முயன்ற வீரேந்தரை தடுத்தான் ரஞ்சித்.
******************************************************************************************
“அங்கிள்!… உங்க வீட்டில் திருவிழா கோலாகலமாய் கொண்டாட ஏற்பாடு ஆகி இருக்காம்.”என்றான் ரஞ்சித்.
“உனக்கு எப்படி?…”என்ற வீரேந்தர் ஒரு நொடி ஸ்தம்பித்து போனார்.
“தெரியும் அங்கிள்… அப்போப்போ இங்கே இருந்து இன்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் எங்களுக்கு வந்துட்டு இருக்கும். இங்கே நார்த் பக்கம் இருந்து இயங்கும் தீவிரவாத ஸ்லீப்பர் செல் இருக்கு அங்கிள்.
அவங்களை மானிட்டர் செய்துட்டு இருக்காங்க RAW ஏஜென்சி.கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இந்த தகவல் என்னிடம் வந்து சேர்ந்தது.
இங்கே தலைமை பொறுப்பில் இருப்பவன் பக்கா ராட்சசன் என்று கேள்வி. இத்தனை வருட தகவல் சேகரிப்பில் கிடைத்த தகவல் அவன் பெயர் “டெவில்” என்பது மட்டும் தான். தீவிரவாதிகளே பயப்படும் தீவிரவாதி அவன்.உலகளவில் தேடப்படும் மிக கொடியவன்.
பாம் விட துப்பாக்கியால் சுட்டு கொள்வது தான் அவனுக்கு மிகவும் பிடிக்குமாம். அப்படி கொன்றவர்களின் காதை,விரலை அறுத்து அதை ஒரு “TROPHY/பரிசு ” மாதிரி சேகரித்து வைக்கும் சைக்கோ.
அவனிடம் தான் உங்க ஒட்டுமொத்த குடும்பத்தை அழிக்க காபோஸ் சொல்லி இருக்கானாம்.காபோஸ் இடம் இருப்பவன் அண்டர் கவர் ஏஜென்ட் என்று கேள்வி. நம் ஆள். ஏதாவது ஹெல்ப் வேண்டும் என்றால் சொல்லுங்க அங்கிள்.” என்றான் ரஞ்சித்.
“இதற்கு எல்லாம் ஏற்க்கனவே என் வீடு பெண்களை ட்ரெயின் அப் செய்து தான் இருக்கேன் ரஞ்சித்.”என்றார் வீரேந்தர்.
“ஒகே அங்கிள் இன்னொரு விஷயம்.நம்ம அமன்ஜீத் ஹோட்டலில் இறந்து போன அந்த ஆஃபீஸ்ர்…” என்றான் ரஞ்சித்.
“——–தானே. அவனை தான் ஒரு பெண்ணை வைத்து போட்டு தள்ளிட்டாங்களே!.” என்றார் வீரேந்தர்.
“யெஸ் அங்கிள் அவனே தான்.அவங்க எங்க வாட்ச் லிஸ்டில் இருப்பதை நான் உங்களிடம் மட்டும் தான் அங்கிள் சொன்னேன்.சொன்ன மறுநாள் காலை அவனை முடிச்சிட்டாங்க.” என்றான் ரஞ்சித்.
“ரஞ்சித் வாட் டூ யு மீன் பை திஸ் ரஞ்சித்?….
நான் அந்த காபோஸ் கைப்பாவை. அவன் போடும் எலும்பு துண்டுக்கு ஆசை பட்டு அவனுக்கு இந்த விஷயத்தை சொன்னேன் என்று சொல்றியா?”என்ற வீரேந்தர் குரல் உயர்ந்தது.
இத்தனை வருடம் கரை எதுவும் படியாமல்,காவல் துறைக்கு என்று தன்னை முழுதாய் அர்ப்பணித்து கொண்டவரை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை ரஞ்சித் சொல்லி இருந்தான்.
“அங்கிள்!… கூல்… உங்களை நான் சந்தேக படவில்லை.நீங்கி காபோஸ் கையால் என்று நான் சொல்லவேயில்லை அங்கிள்.உங்க நேர்மை பத்தி எல்லோருக்கும் தெரியும்.
போலீஸ் துறை மேல் மக்களுக்கு இன்னும் மரியாதை இருக்கிறது என்றால் அது உங்களை போன்ற அதிகாரிகளால் தான்.நான் சொல்ல வந்தது அது இல்லை.உங்களை அந்த காபோஸ் கண்காணித்து கொண்டு இருக்கிறான் என்பதை தான் சொல்கிறேன்.”என்றான் ரஞ்சித்.
“வாட்?.. “என்று அதிர்ந்தார் வீரேந்தர்.
“யெஸ் அங்கிள்… எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.எங்கே இருந்து பேசறீங்க என்று கேட்டேன். உங்க வீட்டில் இருக்கீங்க என்று நீங்க சொன்னது நியாபகம் இருக்கு அங்கிள்.ஒன்று உங்க வீட்டில் அவன் ஆள் இருக்கணும் இல்லையென்றால் உங்களை கண்காணிக்க மைக்ரோ கேமரா உங்க வீட்டில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் அங்கிள்.
இல்லையென்றால் அவனை நாங்க சஸ்பெக்ட் செய்வதை உங்களையும் என்னையும் இன்னும் ஒருவனையும் தாண்டி வேறு யாருக்கும் தெரியாது அங்கிள்.சோ நாம பேசியதை யாரோ ஒட்டு கேட்டிருக்க வேண்டும் இல்லை உங்களை அவன் தன் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் அங்கிள்.
அதற்கு தான் சொல்றேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க வீட்டு ஆட்களை ஏதாவது காரணம் சொல்லி அங்கிருந்து அகற்றிடுங்க அங்கிள்.அவன் ஆளோ இல்லை காமெராவோ இருந்தால் அவன் உஷாராகி விட கூடும் அங்கிள்.”என்று மின்னாமல் முழங்காமல் அவர் தலையில் இடியை இறக்கினான் ரஞ்சித்.
ஏற்க்கனவே வீட்டிற்குள் நுழைந்து அவர் தங்கையை கொன்று இருக்கிறான்.இதில் இன்னும் இது வேறா?
அவர் அதிர்ந்து நிற்க,அதே சமயம் காபோஸ்ஒரு அறையில் மானிட்டர் ஒன்றை பார்த்து கொண்டு இருந்தான்.
அந்த அறை முழுவதும் டிவி மானிட்டர் ஓடி கொண்டு இருக்க,அதை கவனிக்கும் பொறுப்பில் சிலர் இருந்தனர்.சந்தேக படும் படியாக ஏதாவது இருந்தால் அவரைகளை கண்காணிக்கும் ஒருவனிடம் அதை ரிப்போர்ட் செய்தார்கள்.அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அவன் ரிப்போர்ட் காபோஸ் இடம் கொடுத்தான்.
இப்படி பஞ்சாபின் பல்வேறு இடங்கள் இவன் கண்காணித்து கொண்டு இருந்தான்.
அதில் அர்ஜுன் வீட்டு ஹால் மிக நன்றாக தெரிந்தது.
வீட்டினர் அனைவரும் டிவியின் முன் குழுமி அந்த சிறுமியின் நியூஸ் பார்த்து கொண்டு இருந்தனர்.
இன்னொரு மானிட்டர் குருதேவ் வீட்டின் ஹால் காட்டியது. அங்கு தன்வி வேலையாட்களுடன் நியூஸ் தான் பார்த்து கொண்டு இருந்தார்.
surveillance/கண்காணிப்பு என்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமான ஒன்று
டிவி கேபிள், எலெக்ட்ரிசியன், இன்டர்நெட் கனெக்ஸ்ன்,லேப்டாப் சர்விஸ் என்று உள்ளே வரும் யாரையும் நம்ப முடியாது தான்.
டேட்டா பைரஸி மூலம் வாங்கி கணக்குகள்,ரகசிய குறியீடுகள் திருடப்படலாம்.
ஒருவரை கண்காணிக்க மைக்ரோ கருவிகள் எங்கு வேண்டும் என்றாலும் பொருத்தி விடலாம்.உங்கள் கணினி ஹாக் செய்து கேமரா ஆன் செய்தால் வீட்டில் நடக்கும் ஒளியும்,ஒலியும் இவர்களுக்கு விருந்தாகி போகும்.
உங்கள் வீட்டு படுக்கை அறையே உங்களுக்கு சொந்தம் இல்லை.உங்கள் வீட்டில் நீங்களே கைதி தான்.
no one is safe from anyone என்ற இன்ற காலகட்டத்தில்,நொடிக்கு ஒரு முறை தான் எங்கே இருக்கிறோம் என்பதையும்,செல்பி எடுத்து குடும்பத்துடன் பதிவிட்டு கொண்டாடிட்டு இருக்கும் நாம் “சைபர் குற்றவாளிகளை நம் படுக்கை அறைக்கே தான் பூரண கும்பத்துடன் வரவேற்கிறோம்.
இன்றைய திருடர்கள்,psycho எல்லாம் நேரில் வந்து நோட்டம் இடுவது இல்லை.அதற்கு தான் சுலபமாய் உங்கள் போன்,சமூக வலைத்தளம் இருக்கிறதே.
படுக்கை அறையில் கேமரா உள்ள போனோ,லேப்டாப்போ இருக்க கூடாது என்பது இதற்கு தான்.
பல பில்லியன் டாலர் புழங்கும் அமைப்பு என்னும் போது இவர்களின் எதிரிகளை கண்காணிக்க வேண்டியது இவர்களுக்கு அதி முக்கியம்.மக்களை விட டெக்னாலஜி மிக எளிது.நாட்டின் ஏதாவது மூலையில் இருந்து கூட இதை செய்து விடலாம்.
அதை அங்கே நிரூபித்து கொண்டு இருந்தான் காபோஸ். அவன் எதிரிகள் அவன் கண் பார்வையில்.
அர்ஜுன்,அமன் குடும்பம் இப்பொழுது “சைபர் கைதிகள்”.
இவர்கள் மீட்கபடுவார்களா?…
இல்லை அக்ஷர் தாம் படுகொலை போல் மீண்டும் ஒன்று அர்ஜுன் குடும்பத்தில் நடக்குமா?
பயணம் தொடரும்…