OVOV 38

அமைதியை தத்து எடுத்து இருந்த அந்த நண்பகல் வேளையின் இனிமையை கலைக்கும் விதமாய் எழுந்தது அர்ஜுன் வீட்டில் இருந்து பல அலறல்.

“ஹே குரு …”என்று பல குரல்கள் கடவுளின் கிருபையை அழுகையுடன் வேண்டி கொண்டு இருந்தது.

உயிர் ஊசலாடும் போது நம் கடைசி சரணாகதி நம்மை படைத்தவனிடம்  தானே.

நடந்து கொண்டு இருப்பதை யாராலும் நம்ப தான் முடியவில்லை. கண் சிமிட்டும் அந்த நொடிக்குள் எல்லாம் நடந்து முடிந்து இருந்தது.

வந்தது தெரியும்

போவது எங்கே வாசல்

நமக்கே தெரியாது

 வந்தவரெல்லாம்

தங்கிவிட்டால் இந்த

மண்ணில் நமக்கே

இடமேது?

 வாழ்க்கை என்பது

வியாபாரம் வரும் ஜனனம்

என்பது வரவாகும் அதில்

மரணம் என்பது செலவாகும்.

இரவல் தந்தவன்

கேட்கின்றான் அதை இல்லை

என்றால் அவன் விடுவானா?

உறவைச் சொல்லி

அழுவதனாலே உயிரை

மீண்டும் தருவானா?

 கூக்குரலாலே

கிடைக்காது இது

கோர்ட்டுக்கு போனால்

ஜெய்க்காது அந்தக்

கோட்டையில் நுழைந்தால்

திரும்பாது.என்ற சூழ்நிலை அது.

மரண தேவன் தன் கடமையை செய்ய தயாராய் நின்று இருந்தான்.

யார் தான் எதிர் பார்த்து இருப்பார்கள் இதை ?நன்றாக சிரித்து பேசி,டிவி நியூஸில் அர்ஜுன்,ப்ரீத்தியை பார்த்தவாறு அர்ஜுன் வீட்டினரும், அவர்களிடம் வேலை பார்த்து கொண்டு இருந்த அனைவரும் அந்த ஹாலில் தான் குழுமி இருந்தனர்.

வயல் வெளிகளில்,பசு தொழுவத்தில்,காய்,கனி ஏற்றுமதி என்று பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு இருந்த,அர்ஜுன் வீட்டு வேலையாட்கள் போட்டதை போட்ட படி விட்டு விட்டு, அந்த மாபெரும் ஹாலில் தான் டிவியின் முன் அமர்ந்து இருந்தனர்.

அவர்கள் வீட்டு பிள்ளைகள் அர்ஜுனும்,ப்ரீத்தியும் ஒரு உயிரை காக்க போராடுகிறார்கள் என்றால் அதை கவனிப்பதை விட வேறு எது பெரிய வேலை இருந்து விட போகிறது?

ஒரு பக்கம் அர்ஜுன்,ப்ரீத்தி புகழ் பரப்பு  கூட்டமாகவும், இன்னொரு பக்கம் போதை மருந்து எப்படி எல்லாம் அந்த மாநிலத்தை அழிக்கிறது  என்று நினைத்து குமுறும் கூட்டமாகவும், இன்னொரு பக்கம் யாஷ்வி பிழைக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யும் கூட்டமாகவும் அந்த ஹாலில் இருந்தவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டு இருந்தனர்.

எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது.யாஷ்வி ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு,அவள் பிழைத்து விட்டாள் என்று பஞ்சாப் முதலமைச்சர் பேட்டி கொடுத்தவுடன் “குதாவிற்கு ” நன்றி செலுத்தி விட்டு சிறுக, சிறுக அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்று கொண்டு இருக்கும் அந்த வேளையில் தான் அது நடந்தது.

வந்த அனைவர்க்கும் பருக தேவையானதை பார்த்து பார்த்து கொடுத்து கொண்டு இருந்த ராஷ்மி -அர்ஜுன் அம்மா இதயத்தை பிடித்து கொண்டு கீழே விழ,அதை பார்த்து குடும்பத்தினர் அலற ஆரம்பித்தார்கள்.

கீழே விழுந்த அவரை அவர் மருமகள் ஜோனகிஷா தாங்கி பிடிக்க,யதுவீர் “டாக்டர் அழைத்து வாங்க “என்று கத்த,பெரியவர்களின் பயத்தை பார்த்து குழந்தைகள் அனைத்தும் அழ ஆரம்பிக்க என்று அந்த இடமே மினி போர்க்களமாக இருந்தது.

கூச்சல்,குழப்பம்,அலறல்,அழுகை என்று உள்ளே நுழைபவர்களுக்கு நிச்சயம் ஒன்றும் புரியாது.

பக்கத்து தெருவில் கிளினிக் வைத்து நடத்தும் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து காட்ட,ராஷ்மியை சோதித்த டாக்டர் அது “massive ஹார்ட் அட்டாக்,பிழைப்பது கடினம்” என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தார்.

அவர் அப்படி சொன்னதும் மேலும் அழுகை,அலறல் என்று அந்த இடம் அதிர்ந்தது.

“வயசு ஆயிடுச்சு.போதிய அளவிற்கு உடற் பயிற்சி இல்லை.நம் உடலை காக்க பெண்கள் தனி டைம் ஒதுக்கியே ஆகணும். அதுவும் பிள்ளைகள் பிறந்த பிறகு நிச்சயம் உடலை கவனிக்க வேண்டும்.

சொன்னா கேட்டா தானே.இப்படி மோசமான நிலைக்கு உடலை கொண்டு வந்துட்டு ‘என் மனைவியை காப்பாற்றி கொடுங்க என்று அழுதால் மட்டும் டாக்டரால் மட்டும் என்ன செய்ய முடியும்?

அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா?பெரிய ஹாஸ்பிடலுக்கு தூக்கி போங்க.அங்கே ஏதவாது டிரீட்மென்ட் செய்தால் பிழைக்க வாய்ப்பு உண்டு.”என்றார் அந்த டாக்டர் அதட்டலாக.

அடுத்த நொடி ராஷ்மியை தூக்கி கொண்டு ஓடினார்கள் காருக்கு.அவர் உயிரை காக்க அசுர வேகத்தில் பதிண்டா அரசு மருத்துவமனையை நோக்கி சென்ற காரின் பின் மேலும் ரெண்டு கார்கள் சென்றன.

முதல் சென்ற காரினை யதுவீர் ஓட்ட,அந்த காரில் ராஷ்மியை மடி தாங்கி இருந்தார் விர்து.உடன் அர்ஜுன் தாத்தா தரஞ்சீத் பாட்டியா.

பின் வந்த கார்கள் ரெண்டினை வீரேந்தர் மகன்கள் இருவரும் ஆளுக்கு ஒன்றாய் ஓட்ட,அந்த ரெண்டு கார்களிலும் அர்ஜுன் குடும்பம் மொத்தமும் ரெண்டாய் பிரிக்க பட்டு மருத்துவமனையை நோக்கி சென்ற யதுவீர் காரை பின் தொடர்ந்து சென்றது.

இந்த மூன்று காரினை வெளியில் இருந்து நோட்டம் விட காபோஸ் அனுப்பிய ஆள் வேவு பார்த்து அங்கு நடப்பதை சில பல மணிநேரமாகவே கபோஸிற்கும்,’டெவில்’ என்று அழைக்க படும் தீவிரவாத குழுவின் தளபதிக்கும் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் அனுப்பி வைத்து கொண்டு இருந்தான்.

அருகில் இருந்த வேன் ஒன்றில்  AK 47 தாங்கிய ஐந்து பேர் சிக்னலுக்காக  தயாராய் இருந்தார்கள்.அவர்களுக்கு தேவை ‘டெவில்/சைத்தான்’ என்று அழைக்கப்பட்ட அவர்கள் குழுவின் தளபதியின் உத்தரவு மட்டுமே.

அவர்கள்  பைகளில் SPARE துப்பாக்கி ரவைகள்.எப்படியும் குறைந்தது ஐநூறு பேரை கொள்ள போதுமான குண்டுகள்  இருந்தன.

குழந்தைகள்,வயதானவர்கள்,அத்தனை பெண்கள்  அந்த வீட்டில்  இருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. மனசாட்சி,இரக்கம்,கருணை என்பதையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு,மனித வடிவில் மிருகமாய் மற்றவர்கள் உயிரை எடுத்து கொண்டு இருப்பவர்கள்.

எத்தனை உயிர் போகிறதோ அத்தனை பணம் இவர்கள் குடும்பத்திற்கு, வங்கி கணக்கிற்கு வரும் போது யார் உயிர் போனால் என்ன?

இவர்கள் பிளானுக்கு  தடையாய் இருந்தது டிவி ஒளிபரப்பு. ‘அர்ஜுன் ப்ரீத்தி டிவியில் வராங்க’ என்று விஷயம் காட்டு தீயாய் பரவ,அக்கம் எல்லாம் அர்ஜுன் வீட்டில் குழும தொடங்கியது என்னவோ அவர்கள் வீட்டில் டிவியே இல்லாத மாதிரி.

தங்கள் வீடுகளில் டிவி இருந்தாலும் இப்படி ஒரு ஊரே ,ஒரு வீட்டில் குழுமி டீவியை ஹை பிட்சில் வைத்து பார்ப்பது எல்லாம் பஞ்சாபி குடும்பங்களில் மிக சாதாரணம்.அவர்கள் தான் காரணமே இல்லாமல் இப்படி ஒரு வீட்டில் தினம் தினம் கூடுவார்களே ஆட்டம்,பாட்டம் என்று.

இன்று அவர்கள் ஹீரோ,அவர்கள் வீட்டு பிள்ளைகள் அர்ஜுன்,ப்ரீத்தி சாகசம் என்றால் கேட்கவும் வேண்டுமா?

இந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தி,தாண்டி அர்ஜுன் குடும்பத்தை  நெருங்க வே  முடியாது என்று வெளியே காத்து இருந்தவர்களுக்கு தெரிந்து விட்டது.

இவர்களை எல்லாம் சுட்டு விட்டே நெருங்கினாலும் அதற்குள் அர்ஜுன் குடும்பம் தப்பித்து விட்டால்,காவல் துறை உஷாராகி விடும்.எனவே நள்ளிரவு வரை அவர்களை காத்து இருக்க சொன்னான் அவர்கள் தலைவன்.

அவன் சொல்வது தான் சரி என்று கபோஸிற்கும் புரிந்தது.கிட்டத்தட்ட 100 பேர் அந்த பிரமாண்டமான ஹாலில் இருந்தார்கள்.இந்த நூறு பேரையும் எப்படி கொல்வது என்று அவர்கள் தயங்கவில்லை,இவர்களை கொல்லும் போது அர்ஜுன் குடும்பத்தினர் தப்பி விட கூடாதே என்ற உயர்ந்த எண்ணம் தான்.

அர்ஜுன் குடும்பத்திற்கு ஒன்று என்றால் உயிரை எடுக்கவோ, கொடுக்கவோ தயங்காத காட்டு கூட்டம் அது.

அர்ஜுனை ஒருத்தன் எதிர்த்து பேசினான் என்றதும் 100 கதிர் அறுக்கும் SICKLE ஒருவனின் தொண்டை குழியினை அறுக்க நீண்டது எல்லாம் நடந்து உள்ளது.அர்ஜுன் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் இந்நேரம் அவன் உயிர் பிரிந்து இருக்கும்.

இப்பட்டி ஒரு பாசக்கார கூட்டம் அந்த வீட்டில் குவிந்து இருக்க கபோஸிற்கும், தீவிரவாத குழு லீடர் சொல்வதே  சரி என்று பட்டது.இதுவரை அவன் போட்ட திட்டம்,கொலைகள் எல்லாம் சரியாக நடக்க காரணம் அவனிடம் இருந்த நிதானம்,பொறுமை.

ஒருவனுக்கு கட்டம் கட்டி, ஸ்கெட்ச் போட்டு விட்டால்  இவன் மேல் பழி வராத வண்ணம் ஐந்து வருடம் காத்து இருந்தாலாவது  எதிரியை போட்டு தள்ளுவதில் காபோஸ் கில்லாடி.அந்த பொறுமை தான் இத்தனை வருடமாய் அவனை காப்பாற்றி கொண்டு இருந்தது.

இவன் மேல் புகார்,இவன் போதை மருந்தை பிடிக்க உதவி என்று தெரிந்து உடனே retaliation செய்தால்,இவன் என்று தெரிய வாய்ப்பு உண்டு.தன் ஆள் பிடிபட்டு சிறை சென்றாலும்,என்கவுண்டர் செய்யப்பட்டாலும் அதற்கு யார் காரணமோ அவர்களை முடிக்க தக்க சமயம் பார்த்து காத்து இருப்பதே இவன் வழி.

இந்த வழியை கபோஸ் கற்றது ‘டெவில்’ குழுவின் தலைமையிடம் இருந்து.சில அரசியல் கொலைகள் செய்யும் போது இவர்கள் பதறவே மாட்டார்கள்.ஐந்து பத்து வருடம் காத்து இருந்து தக்க சமயம் பார்த்து யாருமே எதிர் பார்க்காத போது  அடிப்பது தான் இந்த தீவிரவாத குழுவின் இவர்கள் M.O /MODE OF OPERATION.

‘எங்க கூட்டத்தை உளவு பார்க்கிறாயா?

எங்களை பற்றி அவதூறாக பேசுகிறாயா?

எங்கள் ஆட்களை பிடிக்கிறாயா?

நீ அவ்வளவு தான்’ என்று வார்னிங் எதுவும் கொடுக்காமல்,பல வருடம் காத்து இருந்து கதை முடித்து விடுவார்கள்.

இது மாதிரியான பழி வாங்கும் கொடூரம் அதிகம் தீவிரவாதிகளிடமும், மெக்ஸிகோ  போதை மருந்து கார்டெல் இடமும் காண முடியும்

இவர்களை பிடிக்க நார்க்கோட்டிஸ் துறையில்  “டெத் SQUAD/கோஸ்ட் SQUAD  “என்று அழைக்கப்படும் கமாண்டோஸ் பிரிவின் அதிகாரிகள் முகத்தை மாஸ்க் கொண்டு மூடியே இருப்பார்கள்.இவர்கள் யார் என்ற அடையாளம் யாருக்குமே தெரிய கூடாது என்று.

கைகளில் உள்ள மச்சம் கூட தெரிந்து விட கூடாது என்று உடல் முழுவதையும் கவர் செய்யும் உடைகள் தான் இந்த கமாண்டோஸ் அணிவார்கள்.

கடமைக்காக உயிர் இழப்பதே பெரிய விஷயம் தான் போலீஸ்,ராணுவ துறைக்கு.அதனால் தான் அது தியாகம் எனப்படுகிறது.இதில் ஒட்டுமொத்த குடும்பமும் அழிக்கப்படும் என்றால்?

இவர்கள் கொல்ல நினைத்து விட்ட நபர்களுக்கு முகநூலில் யாராவது ‘ஹாய்’ சொல்லி ‘ friend request ‘ கொடுத்து இருந்தாலும் அவர்களையும் கூட விட மாட்டார்கள்.

படிக்கச் ஏதோ சிரிப்பு ஏற்படுத்தும் கதை போல் தோன்றினாலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 200 பேர் எல்லாம் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் கொலை செய்வது இது மாதிரி மாபியா கும்பலுக்கு சர்வ சாதாரணம்.

அதற்காக இவர்களை போன்று நாட்டை அழிக்கும் விஷ ஜந்துக்களை எல்லாம் வளர விட முடியுமா என்ன?அதனால் யாராலும் பார்க்க முடியாத கோஸ்ட்/பேய் போல்  தலை முதல் கால் வரை மூட பட்டு இருப்பதால்  கமாண்டோஸ்சுக்கு இந்த பெயர்.

இப்படி ஒரு குழுவால் இன்னும் சொல்லப்போனால் காபோஸ் அடியாளாக இருந்த குழுவால் தான் தன்வி தந்தை மேஜர் அர்ஜான்,தன்வி குடும்பம்,ரணீத்,டாலியின் குடும்பம் அழிக்கப்பட்டது.அவர்களை காட்டி கொடுத்து ரெண்டு குடும்பத்தையும் அழிக்க காரணமாய் இருந்ததும் காபோஸ் தான்.

அதற்காக அந்த குழுவின் தலைவன் கொட்டி கொடுத்த பணத்தின் மீது இல்லை பிணங்களின் மீது தான் இன்று அவன் கோட்டை கட்டப்பட்டு இருக்கிறது.

மெக்ஸிகோவில் ஒரு ராணுவ மேஜர்ரை,இன்னும் பல DEA (DRUG ENFORCEMENT AGENCY) ஆட்களையும் அவர்கள் குடும்பத்தையும் கொன்ற வழக்கில் அந்த அரசாங்கம் “காபோஸ்”  தலைக்கு 10 மில்லியன் டாலோர் சன்மானம் அறிவித்து இருக்கிறது.இன்னும் அந்த சன்மானம் அப்படியே தான் இருக்கிறது.

அன்று அடியாளாக இருந்தவன் இன்று ஒரு மாநிலத்தையே அழித்து கொண்டு இருக்கும் போதை மருந்து சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.

அவனுக்கு ராஷ்மியின் நிலைமையும்,அவர்கள் மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருப்பதையும் தகவல் சொல்லி கொண்டு இருந்தான் அவர்களை பின்னால் தொடர்ந்து கொண்டு இருந்தவன்.

அதை அவன் தீவிரவாத கூட்ட தலைவனுக்கு தெரிவித்து,” அவங்களுக்கு ஆயிசு கெட்டி தான் போல் இருக்கு.இதுவும் நலத்திற்கு தான். அந்த யாஷ்வி காப்பாத்தியதற்கு பாராட்ட என்று யாராவது அர்ஜுன் வீட்டுக்கு வந்துட்டு இருப்பாங்க. இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்.”என்றான் காபோஸ்.

“எதுக்கு?”என்ற “டெவில்” கேள்வி காபோஸ்சையே உலுக்கி தான் விட்டது.

“எதுக்கா?விளையாடுறியா? இப்போ என்ன செய்ய முடியும்? டிரீட்மென்ட் காக தான் அவங்களை பதிண்டா அரசு மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போய்ட்டு இருக்காங்களே.”என்றான் காபோஸ் அவன் சொல்ல வருவது புரியாமல்.

“பதிண்டா மருத்துவமனையை தரைமட்டமாகி விட்டால் போகிறது.” என்றான் டெவில்.என்னவோ பொம்மையை உடைக்கலாம் என்பது போல் சர்வசாதாரணமாய்.

“வாட்?”என்றான் காபோஸ் கேட்டதை நம்ப முடியாதவனாய்.

கொடூரங்களுக்கு பெயர் பெற்ற அந்த போதை மருந்து கூட்ட தலைவனையே திகைக்க வைத்த பெருமை தீவிரவாத கூட்ட தலைவனுக்கு தான் சேரும்.

ஆயிரகணக்கானவர்களின் உயிர் என்பது என்ன விளையாட்டு பொருளா?

“ஆர் யு ஜோக்கிங்?”என்றான் காபோஸ் இன்னும் அவன் வார்த்தை கொடுத்த திகைப்பில் இருந்து மீள முடியாதவனாய்.

“எங்களுடன் அரசு விளையாடி தான் பார்க்கிறது.எங்கள் கைகளை கட்ட பார்த்தால் சும்மா இருப்போமா?”என்றான் அவன்

“புரியலை.”என்றான் காபோஸ்-ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று காலம் கடந்த பின் அவன் யோசனை ஓடியது.

இது புலி வாலை பிடித்த கதை தான்.போதை மருந்து இவன் கூட்டம் தான் இந்தியர்விற்குள் கொண்டு வருவது.ஏறக்குறைய  80%  Amphetamines. Meth, Ice, Crystal Meth, Shards, Speed, Dexies. Cannabis. Mull,  Pot, Dope, Weed, Gunja, Marijuana,Ecstasy. Pingers, E’s, Pills, Xtc, Eccies, Bickies,Heroin. Hammer, H, Smack, Horse, Gear, Dope, Harry,Cocaine. Coke, Crack, Rock, C, Charlie, Snow, White Lady,Steroids.New Psychoactive Substances, Hallucinogens என்று இத்தனை கபோஸின் தேவையை நிறைவேற்றுவது இவன் கூட்டம் தான்.

பொருள் ஆர்டர் கொடுக்கும் போது 30% முன் பணம்,பொருள் கை மாறும் போது 30% பணம்,மீதம் உள்ளதை மாத தவணையையாய் கொடுக்கலாம் என்று அமேசான் ரேஞ்சுக்கு ஆபர் கொடுக்கும் நல்லவங்க.

இது இவனுக்கு சாதகம் என்றாலும் ஹவாலா,அரசியல் கொலை, தீவிரவாத தாக்குதல்,தீவிரவாத செல்லுக்கு தேவையானதை கவனிப்பது, ஆயுதங்களை இவன் கோடௌனில் மறைத்து வைப்பது என்று இன்னும் பல உதவி, சில வருடங்களாய்,இவர்களிடம் இருந்து பொருளை வாங்க ஆரம்பித்த பிறகு  காபோஸ் அவன் கூட்டத்திற்கு  செய்து கொண்டு இருந்தான்.

‘உதவி செய் என்று இவர்கள் REQUEST செய்யவில்லை,இதை  செய்து தான் ஆக வேண்டும் என்று கட்டளையே இட்டு இருந்தார்கள்.

ஆரம்பித்திலேயே ‘எங்களுடன் கை கோர்த்தால் இதில் இருந்து விலக துணிந்தால் போவது உன் உயிராக மட்டுமே இருக்கும்’ என்ற வார்னிங் வேறு கொடுத்த பிறகு தான் காபோஸிற்கு பொருளே கொடுக்க ஆரம்பித்தார்கள்.

மெக்ஸிகோ அரசாங்கம் தன் கட்டுப்பாட்டை அதிகப்படுத்திய பிறகு அங்கிருக்கு வரும் சப்லை குறைந்து விட, இவனுக்கு கை கொடுத்த கை இந்த தீவிரவாத குழு தான்.இவர்களை பகைத்து கொண்டால் இவன் சாம்ராஜ்யத்தை தரைமட்டம் ஆக்கி விடுவார்கள்.

“ஒரு நாட்டில் மத கலவரம் தூண்ட,கல் தூக்கி எரிய,துப்பாக்கி சூடு நடத்த ஆள்,ஆயுதம் வாங்க பணம் தேவை.உன் குடும்பத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்ற நம்பிக்கை, பணம் கொடுத்தால் தான் எவனுமே ஆயுதம் தாங்கி உயிர் துறக்கவோ,ஜெயிலுக்கு போகவோ முன் வருவான்.

அதற்காக தான் போலி NGO,சமூக சேவை நிறுவனம் என்று ஆரம்பிப்போம். அதில் வந்து குவியும் பணத்தை கொண்டு தான் உயிர்களை எடுப்போம்.

மக்கள் போடும் பணத்தை வைத்து,வெளிநாடுகளில் இருந்து  வரும் பணத்தை வைத்து அந்த நாட்டினையே காலி செய்வோம்.தவிர முதியோர் இல்லம்,ஆதரவற்றோர் இல்லம் என்று ஆரம்பித்து “ஆர்கன் கடத்தல் ” எல்லாம் நடக்கும்.பில்லியன் கணக்கில் பணம் புழங்கும் தொழில்.

இப்போ புது சட்டம் இது மாதிரி சமூக சேவை,NGO எல்லாம் ரெஜிஸ்டர் செய்து,உள்ளே வரும் பணத்திற்கும்,செலவு செய்யும் பணத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும் என்று போட்டு இருக்கிறார்கள்.

இத்தனை மெஷின் gun, வெடிகுண்டு,ராக்கெட் லாஞ்சேர் வாங்க போகிறேன்,ராணுவத்தை கொல்ல வெளிநாட்டு ஆட்களை உள்ளே கொண்டு வர பணம் வேண்டும் என்று கணக்கா காட்ட முடியும்?

இந்தியாவின் மீது பொய் பிரசாரம் செய்தால் தான் ‘சிம்பதி மணி/SYMPATHY MONEY’ உள்ளே வரும்.மீடியா,முகநூல் எல்லாவற்றிலும் நடப்பதை சந்தேகம் வராத வண்ணம் போலி ஐடி உருவாக்கி பொய்யாய் திரித்து கூற வேண்டும்.அதை இந்த நாட்டில் இருபவனுங்களே நம்பும் அளவிற்கு சொல்ல வேண்டும்.

பணம் மட்டுமே கடவுள்,ஆடம்பரம்,பேர்,புகழ்,பதவி வெறி பிடித்த ஆட்களை பார்த்து அவர்களை பணத்தால் அடித்து எங்களின் பப்பட்/PUPPET ஆக்க வேண்டும்.

எந்த துறையயையும் விட்டு வைக்கவில்லை.பள்ளிகளில் ஆரம்பித்து பொழுதுப்போக்கு சார்ந்த எல்லா துறைகளிலும் இப்படி இந்த நாட்டில் இருந்து கொண்டே இந்த நாட்டை பற்றி அவதூறாக பேச ஆட்களை வைத்து இருக்கோம். இதற்கு எல்லாம் பணம் மரத்திலா காய்க்கும்?

இன்னொரு அதி முக்கிய வருமானம் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மக்கள் மூலம் உள்ளே கொண்டு வரும் தங்க SMUGGLING.இப்படி உள்ளே வரும் பொருட்களை வைத்து தான் எங்கள் இயக்கத்தின் வருமானமே இருக்கிறது.

அந்த தங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும்,வீட்டில் உள்ள தங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதின் பின்னணி சாதாரண பொது மக்கள் அறியாமல் இருக்கலாம்.ஆனால் முதலமைச்சர் அது எங்களுக்கு வைக்கும் செக் என்பது கூடவா தெரியாது?

“அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டாமா? “என்ற அவன் பேச்சு மக்கள் அறியா தீவிரவாத குழுக்களின் பண வரவு வழிகளை பக்கவாய் விளக்கி  கூறியது.

தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டு உயிரி இழப்புகள் ஏற்பட கூடாது என்றால் அண்டர் வேர்ல்ட் குழுக்களை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களின் பண SOURCE அழிக்கப்பட வேண்டும்.

கணக்கில் காட்ட படாத இது போன்ற NGO,சமூக சேவை என்ற முகமூடி அணிந்து ஹவாலா,TERROR பைனன்சிங் ஈடுபட்டுள்ள குழுக்கள் ஒடுக்க பட வேண்டும்.

தீவிரவாதிகளை பொறுத்த வரை மதம் என்பது ஒரு பாதுகாப்பு கவசம் மட்டுமே.எல்லா மதமும் சக உயிர்களை தன் உயிராய் தான் பார்க்க சொல்கிறது.மதத்திற்கு மதம் பிடிக்க வைத்த மிருகம் மட்டுமே ஒவ்வொரு மதத்தையும் இழிவுபடுத்தி கொண்டு இருக்கிறது.

இவர்களின் உண்மையான கடவுள் பணம் மட்டுமே.அந்த பண வரவினை தடுத்து கொண்டு இருந்தார் முதலமைச்சர்.

“உன் ஆள் அங்கே ஹாஸ்பிடலில் யாராவது இருக்கானா?” என்றான் சைத்தான் என்று காரண பெயர் சூட்டப்பட்ட அந்த குழுவின் தளபதி.

“ஹ்ம்ம் …வார்டு பாய் ஒருத்தன் இருக்கான்.”என்ற காபோஸ் குரல் மெலிந்து ஒலித்தது.தான் துணை போக போகும் செயல் அவன் திட மனதையும் அசைத்து பார்த்து கொண்டு இருந்ததால்.

“அவன் நம்பகமானவன் தானா?ஏன் கேட்கிறேன் என்று உனக்கே தெரியும்.கடந்த சில வருடங்களாய் உனக்கு கொடுக்கும் பொருட்களை எல்லாம் கஸ்டம்ஸ்,நார்க்கோடிக்ஸ் துறை எப்படியோ மோப்பம் பிடிச்சி கைப்பற்றி விடுகிறார்கள்.

உலக மதிப்பில் பல கோடி ரூபாய் பொருள் அது.நீ இதை விற்று பணம் கொடுத்தால் தான் எங்கள் குழு எங்கள் நாச வேலையை செய்ய முடியும்.

உன் ஆட்களையும் ஜெயிலில் உட்கார வைத்து மூணு வேலையும் பிரியாணி எல்லாம் போடுவது இல்லை.ஷூட் அட் ஸ்பாட், என்கவுண்டர் என்று போலீஸ், ராணுவம் புகுந்து விளையாடுது. நாங்களும் உன் கூட்டத்தில் யாரோ ஒரு உளவாளி இருக்கான் என்று பல முறை எச்சரிக்கை கொடுத்துட்டோம்.அதை நீ கண்டு கொள்வதாகவே தெரியலை.

எங்க பக்கம் இருந்து எவனும் இதை செய்யவில்லை. ஒவ்வொருத்தனையும்  தீவிர கண்காணிப்பில் வைத்து கொண்டு இருக்கிறேன்.என்னை மீற நினைத்தால் அவன் உயிர் அவனுடையது இல்லை என்பது என் ஆட்களுக்கு நன்றாய் தெரியும்.

உன் பக்கம் தான் ஏதோ ஒரு நாய் போலீசுக்கு வாலாட்டுது. உடனே அதை கவனி.இல்லை உன்னை நாங்க கவனிக்க வேண்டி வரும்.

உனக்கு தான் நாங்க அதி முக்கியம் இதயம் போல்,நீ எங்களுக்கு இருக்கும் பல பார்ட்னர்களில் ஒருவன் எங்கள் தலை முடியை போல்…இந்த காபோஸ் போனால் டோபாஸ்ன்னு இன்னொருவன் கிடைப்பான்.மேலிடம் உன் மேல் கடும் அதிருப்தியில் இருக்காங்க.பார்த்து கவனமாய் நடந்துக்கோ.

அவன் கிட்டே இன்பார்ம் செய்துடு.என் ஆள் அவன் கிட்டே ஐந்து பாக் தருவான்.ஹாஸ்பிடல் முழுக்க அதை ஒளித்து வைக்க சொல்.அவன் போன் நம்பர் வாட்ஸாப்ப் செய்துடு.என் ஆள் அவனை காண்டாக்ட் செய்வான்.இன்று பஞ்சாப் மக்களுக்கு நல்ல நாள் இல்லை.”என்றான் அவன்.

இவன் அனுப்பிய ஆள் ஐந்து பாக் வெடிகுண்டுடன் ஹாஸ்பிடல் நோக்கி செல்ல,ராஷ்மியுடன் இன்னும் மூன்று கார்,அதனை தொடர்ந்து சென்று கொண்டு இருந்த கார் எல்லாவற்றின் இலக்கு பதிண்டா அரசு பொது மருத்துவமனை.

தங்களை எதிர் நோக்கி வரும் ஆபத்தினை அறியா பொது மக்கள், நோயாளிகள்,காவல் துறை,டாக்ட ர்கள், உதவியாளர்கள்,மீடியா, அர்ஜுன்,ப்ரீத்தி,அமன்,ஜெஸ்ஸி,தீப் என்று பலரும் அங்கே தங்கள் வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

“சாரி சார்.என்னால் இதை செய்ய முடியாது சார்.”என்று கமிஷ்னரிடம் வாதிட்டு கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

“லுக் ப்ரீத்தி…இது இங்கேயே முடியணுமா இல்லை நீ போகும் எல்லா இடத்திற்கும் தொடரணுமா என்று யோசித்து கொள்.உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க அது மட்டும் உறுதி.”என்றார் ராஜேஷ்.

“யெஸ் ப்ரீத்தி அங்கிள் சொல்வது தான் கரெக்ட்.இங்கேயே இதை முடிச்சிடலாம்.”என்றான் அர்ஜுன்.

அர்ஜுன்,ப்ரீத்தி,அமன்,ஜெஸ்ஸியை பேட்டி எடுத்தே ஆக வேண்டும் என்று மீடியா,மக்கள் குரல் அதிகமாகி கொண்டு இருந்தது.இவர்கள் விருது வாங்குவது “பிரைவேட் விழாவாய் முதலமைச்சர் இல்லத்தில் நடக்கும்.விருது கொடுப்பதை கவர் செய்ய  அனுமதி இல்லை என்ற தகவல் தெரிய வந்ததும் இப்படி பேட்டி என்ற கோரிக்கை ஆரம்பமானது.

விருதை ப்ரீத்தி தக்க காரண காரியத்துடன் நிராகரித்து விட,அவள் வாதத்தை முதலமைச்சரும் ஏற்று கொண்டார். ஆனால் ஒரு கெட் டுகெதர் இருக்கும் என்றும்,விருந்து கொடுக்க படும் என்றும் அதை மறுக்க கூடாது என்று அன்பு கட்டளை விடுத்தார் முதல்வர்.

தவிர வெளி உலகத்திற்கு விருது கொடுப்பதை அறிவித்த பிறகு மாற்ற முடியாது என்பதால் அது ‘பிரைவேட் விழாவாக”நடக்கும் என்று அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.இந்த விஷயம் தெரிவிக்க பட்ட உடன் மக்களால் அதை ஏற்க முடியவில்லை. தங்கள் வீட்டு பிள்ளைகளின் விருது விழா என்று ஆவலாக இருந்தவர்கள் ஆயிற்றே.

அதை திசை திருப்ப திலீப் ‘இவர்கள் பிரஸ் கான்பரன்ஸ் வேண்டும்’ என்று நேரலையில் கேட்க,விஷயம் மெல்ல திசை திரும்பியது.தவிர அர்ஜுன் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட போகிறார் என்ற செய்தியும் இந்த விருது பற்றிய நியூஸ் மேல் மக்கள் கவனம் செல்லாமல் திசை திருப்பியது.

இந்த பேட்டி இவர்கள் நால்வரும் கொடுக்க வேண்டும் என்பதை தான் ராஜேஷ் ப்ரீதியுடன் விவாதித்து கொண்டு இருந்தார்.

இவர்கள் ராஷ்மியை பார்க்க செல்ல வேண்டி இருப்பதால் ஐந்து நிமிடம் மட்டுமே பேட்டி என்று அறிவிக்க பட,ஹாஸ்பிடல் வாயிலில் பிரஸ் கான்பரென்ஸ் ஆரம்பமானது.

“மிஸ் ப்ரீத்தி.தமிழ்நாட்டில் இருந்து வந்து, இங்கே முதல் அமைச்சர் உங்கள் வீரத்திற்காக விருது அறிவித்து உள்ளதை கேட்டு நீங்க எப்படி பீல் செய்யறீங்க?”என்றான் திலீப்.

‘அடேய்…பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்பவளை கட்டாயப்படுத்தி பேட்டி கொடுக்க வச்சிட்டு எப்படி பீல்னா கேள்வி கேக்கறீங்க ?’ கேள்வி கேட்ட திலீப் மீது ப்ரீத்தி லேசர் பார்வையை செலுத்த,அவன் ஈ என்று இளித்து வைத்தான்.

“மிகவும் சந்தோசமாக இருக்கிறது.எவ்வளவு உயர்ந்த மனிதர் முதல்வர்.ஆர்மியில் பணியாற்றியவர்,அவர் குடும்பமே பகத்சிங் உடன் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் ஈடு பட்டவர்கள். மாநில மக்களை தன் சொந்த குழந்தைகளாய் பாவிக்கும் முதல்வர் எத்தனை மாநிலத்திற்கு கிடைத்து இருக்கு?

இது பெரிய கெளரவம்.விருது வாங்கும் அளவிற்கு ஏதாவது செய்தேனா என்றெல்லாம் தெரியாது.ஆனால் இந்த அரசாங்கத்திற்கும், முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.” என்ற ப்ரீத்தி புன்னகையுடன் கை குவித்து தன் நன்றியை தெரிவிக்க அதை பார்த்து கொண்டு இருந்த மக்கள் நெக்குருகி போனார்கள்.

“இந்த சிறுமி தற்கொலை செய்ய முயன்று இருப்பது முதல்வர் போதைக்கு எதிரான தன் பணியில் தோற்று விட்டார் என்று நிரூபிக்கிறது என்ற பேச்சு எழுந்து இருக்கிறது.அதை பற்றி உங்கள் கருத்து ப்ரீத்தி?”என்றான் திலீப்.

“ஆம் தோல்வி தான்.”என்ற ப்ரீத்தியின் பேச்சு மிகுந்த பரபரப்பையும்,சலசலப்பையும் அங்கே மட்டும் இல்லை ஒட்டுமொத்த பஞ்சாபில் ஏற்ப்டுத்தியது.

“மிஸ் ப்ரீத்தி கேன்யு ரிப்பீட் வாட் யு ஜஸ்ட் செய்ட்?”என்றார்கள் மற்ற நிருபர்.

உடன் இருந்த அர்ஜுன்,அமன்,ஜெஸ்ஸி,கமிஷ்னர் டென்ஷன் ஆகி ப்ரீத்தி கையை பிடித்து அழுத்தி அவளை பேச வேண்டாம் என்று சைகை செய்தனர்.

இதற்கு எல்லாம் அடங்கும் ஆளா ப்ரீத்தி?

இதுக்கு இவளை பேட்டி கொடுக்க வைக்காமலே இருந்து இருக்கலாம் போலிருக்கே என்று நொந்து போயினர் அங்கு இருந்தவர்கள்.நேரடி ஒளிபரப்பில் இவர்களால் எதையும் செய்யவும் முடியவில்லை.

மைக் பிடித்த அரசியல்வாதி, தீர்த்தம் அருந்தி விட்டு மேடையில் மைக்கை விட மாட்டேன்,அறுத்தே தீருவேன் என்று அடம் பிடிப்பது போல் இருந்தது ப்ரீத்தி செய்கை

கமிஷ்னர் அர்ஜுனுக்கு சைகை காட்ட அவன் ப்ரீத்தி இடையை பிடித்து அழுத்தோ அழுத்துனு அழுத்தியும்,ஜெஸ்ஸி அவள் கையை பிடித்து சுரண்டியும் கூட ஒரு லுக் மட்டுமே விட்ட  ப்ரீத்தியை நிறுத்த முடியாமல் திணறி போனார்கள்.

“யெஸ் தோல்வி தான்.”என்ற ப்ரீத்தியின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்த,

“ஒரு நிமிடம் தோல்வி என்று தான் சொன்னேன்.ஆனால் அந்த தோல்வி யாருக்கு என்று சொல்லவில்லையே….இங்கு தோற்று கொண்டு இருப்பது நாம் தான்.முதல்வர் இல்லை,அவரின் போதைக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லை.

மக்கள் தான் இங்கு தோற்று கொண்டு இருக்கிறார்கள். குடும்பங்கள் தான் இங்கு தோற்று கொண்டு இருக்கிறது.

நம் தோல்விக்கான விலையை முதல்வர்,அரசாங்கம்,காவல்,நீதி துறை சுமந்து கொண்டு இருக்கிறது.

ஒரு குடும்பம் குழந்தையை சரி வர வளர்க்க தவறும் போது தான், அதற்கான விலையை ஒட்டுமொத்த சமுதாயம்  இது போல் கொடுக்க வேண்டி வருகிறது.

நாம் அறிந்தவர் தவறான பாதையில் செல்கிறார் என்பதற்கான ஆதாரம் அவர் ஒரு குற்றத்தை செய்வதற்கு பல நாட்கள், வாரங்கள், வருடங்களாகவே வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கும்.

இந்த சிறுமி வாழ்வை விட மரணம் மேல் என்று போகும் வரை அவள் நடவடிக்கைகளை காணாமல் இருந்த யார் பொறுப்பு?அவள் குடும்பமா,அவள் உறவுகளா,அவள் தோழமைகளா?

இல்லை வாழ்க்கை என்பதே

“மார்க் எடுப்பது மட்டும் தான்.”

“மார்க் தான் ஒரு குழந்தையின் திறனை நிர்ணயிக்கிறது”

“அதற்கு portion முடிக்க வேண்டும்”

என்று குழந்தையின் மனநிலையை சரிவர கவனிக்காத இன்றைய கல்வி கொள்கைகளா?

நான் சிறுமியாய் இருந்த போது உணவு இடை வேளை முடிந்து டீச்சர் உள்ளே வந்தாலும்,”போய் சாப்பிட்டு வா மா,உணவு வேஸ்ட் செய்யாதே என்று தான் சொல்வார்கள்.கிளாஸ் நடந்தாலும் நான் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் என்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இன்று உள்ளே வந்ததும் ,’டைம்ஸ் அப்,க்ளோஸ் தி லஞ்ச் பாக்ஸ்.’என்று சொல்லும் ஆசிரியர்கள்,அவர்களை அப்படி சொல்ல விட்டு வேடிக்கை பார்க்கும் கல்வி நிர்வாகம்,பள்ளி கல்வி துறை எதை இவர்களுக்கு போதிக்கிறது?

கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் விவாசியியின் மேல்,வீட்டில் நெருப்பின் முன் நின்று வெந்து உணவை தயாரிக்கும் அன்னையர்கள் மேல்,அந்த உணவை வாங்க உழைக்கும் பெற்றோர்கள் மேல்,சமுதாயத்தில் இந்த ஒருவேளை உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடும் மற்ற உயிர்களின் மேல் எப்படி மதிப்பு வரும்?சொல்லுங்கள்?

பாதி குடும்பங்களில் வேலைக்கு செல்வதால் “அப்சென்ட் parents.”.வயதான தாத்தா பாட்டிகளை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு, ‘ ரெண்டு வயது குழந்தையை பார்த்து கொள்ள ஆள் வேண்டும்’ என்று விளம்பரம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

க்ரெட்ச் எல்லாம் நிரம்பி வழிகிறது.வேலை வேலை என்று ஓடிவிட்டு குழந்தை எதை செய்கிறாள்,யாருடன் பழகுகிறாள்,அவள்  நடவடிக்கை என்ன என்று கண்டு கொள்வதில்லை.

பள்ளியில்,குழந்தையை சுற்றி என்ன நடக்கிறது என்றுஅவளிடம் பேசி தெரிந்து கொள்ளாத போது,இது போல் ஒரு நிலை என்றால் குழந்தைகள் தற்கொலை வரை  செல்வதை எப்படி தடுக்க முடியும்?

ஓபன் டே-எக்ஸாம் முடிந்த உடன் மார்க் பற்றி பேச வகுப்பு ஆசிரியருக்கும்,பெற்றோர்களுக்கும் நடக்கும் மீட்டிங்.அப்படி ஒரு மீட்டிங்   நடக்கும் போது  மார்க் குறைவு என்றதும் மாடியில் இருந்து குதித்து விட்ட குழந்தையை அந்த விளிம்பிற்கு தள்ளியது யார்?

மார்க்கை விட மனிதநேயம் முக்கியம்.

குழந்தைக்கு ‘நாங்க  இருக்குகிறோம்’  என்ற நம்பிக்கை மனதில் பதிய வைப்பது முக்கியம்.

எந்த பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள குடும்பம்,உறவு,சுற்றம் இருக்கிறது என்ற மனபலம் முக்கியம்.

இந்த திடத்தை,மன பலத்தை,வைராக்கியத்தை,நம்பிக்கையை கொடுக்காமல் பல பிஞ்சுகள் கருக காரணமாய் இருப்பது யார்?

தூங்கி எழும் போது  ‘இன்னைக்கு போய் இந்த தப்பை செய்ய போகிறேன்.’என்று சாதாரண மனிதன் யாரும் முடிவெடுப்பதில்லை தவறு செய்ய தூண்டும் சூழ்நிலை வந்தாலும் RESTRAIN வெளிப்படுத்தும் மனிதனை உருவாக்குவது தான் ஒரு குடும்பத்தின் தலையாய கடமை. அதையே நீங்க இங்கே செய்வதில்லையே.

சில பல சமயங்களில் நம் அலட்சியம்,வேறு யாராவது பார்த்துப்பாங்க என்ற நம் எண்ணம் பல உயிர்களை காவு வாங்கி தான் விடுகிறது.

மனம் என்பது ஏற்பட போகும் ஆபத்தை முன் கூட்டியே அனுமானிக்கும் திறன் கொண்டது.’ஸ்ப்ளிட் செகண்ட் டெசிஷன் ‘எடுக்கும் வண்ணம் நம் மூளை அத்தனை வேகமாக தான் செயல் பட கூடியது.ஆனால் நாம் செய்வது இல்லை.

இந்த ட்ரைனேஜ் திறந்து இருக்கே..

இங்கே குழி இருக்கே ..

இங்கே கரண்ட் வயர் அறுந்து விழுந்து இருக்கே

இந்த ஸ்கூல் வேன்,பஸ் ஓட்டை மாதிரி இருக்கே.

இந்த பெண்,பையன் என்ன ஓவர் ரா போன்,இன்டர்நெட் கூடவே இருக்கான்.படிப்பில் கவனம் குறையுதே.

இந்த வயசில் இந்த பைக் எல்லாம் தேவை தானா?

இந்த வயசில் போன் இருந்தால் படிப்பேன் என்று  மனதின்னம் எங்கிருந்து வந்தது ?

இந்த வயதில் எதற்கு பிள்ளைகளுக்கு “freedom?”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று பின்னர் புலம்புவதற்காகவா?

இந்த ஆட்டோவில் இத்தனை பேர் ஏற்றி கொண்டு போகும் டிரைவர் தவறு செய்கிறார்.

ஓவர் ஸ்பீட் டாக இந்த பஸ்,லாரி,பைக் போகிறது.         

இது போல் எண்ணற்ற அபாய அறிவிப்புகளை கண் பார்த்து மூளைக்கு ஆபத்து என்ற தகவல் பரிமாற பட்டாலும்  ‘ஒரு அலட்சியம்,என் பிள்ளை அப்படி எல்லாம் கிடையாது’ என்று ஓவர் கான்பிடென்ஸ்,’நமக்கு என்ன வந்தது?’ என்ற எண்ணம் நமக்கு மட்டும் அல்ல நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் ஆபத்தை தான் ஏற்படுத்தும்.

அது தான் இங்கே நடந்து இருக்கு.

டிவி ஷோகளில்,சினிமாவில் இப்பொழுது எல்லாம் விரசம் அளவுக்கு அதிகமாய் காட்ட படுகிறது.படுக்கை அறை காட்சி எல்லாம் சர்வ சாதாரணம். பாடல்களில் ஹீரோயின் முதல் கொண்டு பின்னால் ஆடும் பெண்கள் வரை பணம் அதிகம் கொட்டி கொடுத்தால் உடையை குறைக்க தயங்குவதே இல்லை.இதை எல்லாம் பார்த்து விட்டு இது தவறு என்று ஒரு குரல் உயர்ந்தாலும் அதற்கு சப்போர்ட் கிடைப்பதில்லை.

முதல் நாள் முதல் ஷோ என்று போகும் மக்கள், எதற்காக குறைந்த ஆடையுடன், karchief ஒன்றை அணிந்து பாடல்களில் பெண்கள் ஆடுகிறார்கள்? இந்த படத்தை மட்டும் அல்ல இது போல் உடை அணிந்து பாடல் எடுத்தால் அந்த படத்தையே நாங்கள் பார்க்க போவதில்லை, negativity உள்ள எந்த டிவி தொடரையும் நாங்க பார்க்க போவதில்லை  என்று யாருமே ஏன் முடிவெடுப்பதில்லை?

‘i quit திஸ் movie,i quit திஸ் டிவி ஷோ,i quit திஸ் writer’என்று எந்த ஸ்டேட்மென்ட் வருவதில்லை.நம் மன வக்கிரங்களை இவற்றால் மேலும் பெருக்கி கொள்கிறோம்.

ஒரு பாட்டு தானே,அது சினிமா அப்படி தான் இருக்கும்,கதை பச்சை பச்சையாய் எழுதுவேன் அது என் ரைட்ஸ்,என்று இதை எல்லாம் ஏற்க பழகி விட்டோம்.

ஒன்றிற்கு பத்து டிவி ஷோ இவன் குடும்பத்தை எப்படி கெடுப்பது, affair,பெண் கடத்தல் என்று எல்லா extreme செல்லும் போது அதை பார்க்கும் மனது இதை செய்து பார்த்தால் தான் என்ன என்று துணிய யார் காரணம்?

இந்த சாக்கடை எல்லாம் உள்ளே வர  விட்ட குடும்பத்தின் தவறா,இல்லை தனி மனித அலட்சியமா,இல்லை நாம் செய்யும் குற்றத்திற்கு பரிகாரம் செய்து கொண்டு இருக்கும் அரசாங்கமா யார் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்.

முதல்வர் சில பல வருடமாய் போதை மருந்தினை தடுக்க பல வழிமுறைகளை கையாண்டு கொண்டு தான் இருக்கிறார். அவரும் அவர் அரசாங்கமும் செய்து கொண்டு இருக்கும் நடவடிக்கைகளுக்கு நார்க்கோடிக்ஸ் டிபார்ட்மென்ட் இடம் இருக்கும் அறிக்கைகளே போதும்.

போலீஸ் தன் பணியில் தவறி விட்டது என்று நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டு ஸ்டேட்மென்ட் போடுவது, மைக்கை நீட்டுவது எல்லாம் பெருசு இல்லை.

உயிரை பணயம் வைத்து,குண்டடி பட்டு அவர்கள் தங்கள் கடமைகளை சரி வர செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எத்தனை அதிகாரிகள் இந்த போதை மருந்து கும்பல் கையால் மாண்டு இருக்கிறார்கள் என்ற அறிக்கை போதும் அவர்கள் நடவடிக்கை சரியான திசையில் தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்.

தனி மனிதன்,ஒரு குடும்பம் தோற்று விட்டு முதல்வர் தோற்று விட்டாரா என்று கேட்பது வடிகட்டின முட்டாள் தனம்.“  என்று ப்ரீத்தி பொரிந்து தள்ள அடுத்து என்ன கேள்வி கேட்பது என்று கூட தெரியாமல் அங்கிருந்தவர்கள் உறைந்த நிலையில் இருந்தார்கள்.

‘உன் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் விட்டுட்டு எல்லாத்துக்கும் இன்ஸ்டன்ட் சொலுஷன் அரசாங்கம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால்?

ஒரு குழந்தை தவறுகிறது என்றால்,ஒரு psycho உருவாகிறான் என்றால் அதற்கு யார் காரணம்?

வெகு சுலபமாய் கேட்டு விட்டாள் ப்ரீத்தி.ஆனால் இதற்கான பதில் ‘எல்லோரும் தான் காரணம்’ என்பதே சரியான பதில்.

‘man is a social animal’என்று தான் சொல்வார்கள்.மற்றவர்கள் தான் நாம் யார் என்பதை நிர்ணயிக்கிறார்கள்.நம்  எண்ணம்,சொல்,செயல் எல்லாம் யாரோ ஒருத்தரின் ஏற்படுத்திய பாதிப்பு தான் என்பது நிதர்சனம்.

இந்த பாதிப்பை/எபெக்ட் எப்படி கையாள வேண்டும் என்று சொல்லி கொடுக்க,குடும்பம் தவறும் போது தான் யாஷ்விகளும்,காபோஸ்களும் உருவாகிறார்கள்.

சிலர் வேட்டையாடும் விலங்காகிறார்கள்,சிலர் இந்த மிருகங்கள் வேட்டையாடும் prey/இரையாகிறார்கள்.

ப்ரீத்தி பேட்டியில் அனைவரையும் சுய பரிசீலனை செய்ய வைத்து கொண்டு இருக்க,ஹாஸ்பிடலின் அருகிலேயே இருந்த தீவிரவாத குழுவின் ஆள் ஒருவன்,காபோஸ் சொன்ன வார்ட்பாயிடம் ஐந்து பொட்டலங்களை கொடுத்து,அதை எங்கெங்கே மறைத்து வைக்க வேண்டும் என்ற குறிப்பையும் கொடுத்து விட்டு சென்றான்.

கட்டளை வந்த படியே அவனும் சொல்ல பட்ட இடங்களில் எல்லாம் வெடிகுண்டை தான் வைக்கிறோம் என்று தெரியாமலேயே மறைத்து வைத்து கொண்டு இருந்தான்.வெறும் முப்பதே நிமிடங்கள் என்று செட் செய்ய பட்டு இருந்த அந்த டைமெர் ஓட ஆரம்பித்தது பல உயிர்களை காவு வாங்க.

இது போன்ற கடை நிலை ஆட்கள் அறிவதில்லை தான் செய்வது எத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை. நூறுக்கும்,ஆயிரத்திற்கும் ஆசை பட்டு உள்ளே விட படும் பெட்டிகளில் துப்பாக்கிகளுக்கு இருக்கலாம்,வெடிகுண்டுகளை இருக்கலாம்.

அவன் சொல்ல பட்ட அறைகளில் எல்லாம் வெடிகுண்டினை மறைத்து வைக்க,அந்த நான்கு அறைக்குள்ளும் ஆட்கள் சிலர் உள்ளே சென்று வெளி வந்த வண்ணம் இருந்தனர்.கடைசியாக ஐந்தாவது வெடிகுண்டு பையை அவன் வைக்க வேண்டிய இடம் mortuary,பிணவறை.

அன்றைய தினம் பிண கிடங்கின் அருகே எந்த மருத்துவரோ, வாட்ச்மென் இல்லை என்பது இவனுக்கு சாதகமாய் இருக்க, கள்ள சாவி கொண்டு திறந்து குளிரூட்டப்பட்ட அந்த சவ கிடங்கிற்குள் நுழைந்தான்.அந்த கட்டடத்திற்கு சாவி எல்லாம் தேவையே இல்லை தான். ஒரு தட்டு தட்டினால் சுவரோடு சேர்ந்து விழும் நிலையில் இருந்தது வாயிற் கதவு.

டாக்டர் யோஜித் அந்த ஹாஸ்பிடலின் டீன் ஆன பிறகே பிரேத பரிசோதனை எல்லாம் டாக்டர்கள்,லேப் டீம் என்று செய்ய ஆரம்பித்தார்கள்.அதற்கு முன் அங்கு பெருக்கி துடைக்கும் துப்புரவு பணியாளன் ஒருவன் தான் பிரேத பரிசோதனை எல்லாம் செய்தது.இது அந்த ஹாஸ்பிடலில் மட்டும் அல்ல,நாட்டின் பல அரசாங்க மருத்துவ மனைகளில் நடக்கும் அத்துமீறல் தான்.

அருவருப்பான நிலை” என்று உயர்நீதிமன்றமே சொல்லும் அளவிற்கு இந்த நாட்டின் பிணக்கிடங்குகள் இறந்தவருக்கான கண்ணியதை கூட கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.அழுகிய சடலங்கள், துருப்பிடித்த மற்றும் காலாவதியான பிரேத பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாதது பெரும்பாலான சவக்கிடங்குகளில் சர்வசாதாரணம்.

பல குறைபாடுகளில் குளிரூட்டும் அறைகளின் மோசமான நிலை, உடல்கள் சரியாக மூடப்படாமல் இருப்பது, சடலங்கள்  அட்டவணையில் குறிக்க படாமல் அப்படியே போட்டு வைத்திருக்கப்படும். பிரேதங்களை பாதுகாக்க தகுந்த ரசாயனம்,உப்பு போன்றவை கூட பயன்படுத்தப்படுவதில்லை.

ஐம்பதிற்கும் மேல் அடையாளம் காண படாத சடலங்கள் 20-30 நாட்கள் வரை அழுகி கொண்டு இருக்கும் அவல நிலை எல்லாம் பார்க்க முடியும்.

கிரிமினல் வழக்குகளில் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் உள்ளுறுப்பு மாதிரிகள் கூட, பாலிதீன் பைகளில் வைக்கப்பட்டு  திறந்த பெட்டிகளில் கவனிக்கப்படாமல் கிடப்பதைக் காண முடியும்.யார் வேண்டும் என்றாலும் உள்ளே வந்து ஜஸ்ட் லைக் தட் என்று ஆதாரங்களை எடுத்து சென்று விடலாம்.

 

தவிர இறந்தவரின் உடல் உறுப்புக்கள் இத்தனை மணி நேரத்திற்குள் மற்றவருக்கு பொறுத்த வேண்டும் என்பது மருத்துவ ஸ்டாண்டர்ட்.ஆனால் illegal ஆர்கன் smuggling குழுக்கள் இது போன்ற பிணவறை ஹெல்பர்களுக்கு பணம் கொடுத்து இறந்து பல நாட்கள் ஆன பிரேதங்களில் இருந்து கூட உறுப்புக்கள் எடுத்து கள்ள மார்க்கெட்டில் விற்பது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படி கிடைக்கும் உறுப்பு மருத்துவ துறை சொல்லும் தரம் உடையதா என்றால் அதற்கான பதில் அதை பொருந்தியவர்கள் மரணம் சொல்லும்.

ஒரு பக்கம் பிரேதங்களில் இருந்து உடல் உறுப்பு திருடுதல், இன்னொரு பக்கம் அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களில் இருக்கும் யாரும் அற்றோரை கொன்று திருடப்படும் இந்த ட்ராபிக்கிங் கூட பல பில்லியன் டாலோர் புழங்கும் தொழில்.

அந்த கொடூரங்களுக்கு கட்டியம் கூறும் விதமாய் இருந்த அந்த பிரேத பரிசோதனை அறைக்குள் வெடிகுண்டுடன் அவன் நுழைய அழுகிய உடல்களின் நாற்றம் அவன் அடி வயிற்றை புரட்டியது.உடல்கள் இருந்த நிலை அவன் மனதில் பயத்தை ஏற்படுத்தியது.

ஒரு மறைவான இடத்தில் கடைசி வெடிகுண்டை வைக்க அவன் குனிய,அவனுக்கு பின்னால் ஸ்ட்ரெச்சரில் வெள்ளை துணி மூடியிருந்த பிரேதம் ஒன்று எழுந்து அமர்ந்தது.

(அடங்கொக்கமக்க உயிரோடு இருக்கானா இல்லை செத்துட்டானா என்று கூடவா பார்க்காம இங்கே எடுத்து வந்து போட்டுட்டாங்க?)

பயணம் தொடரும்…