சர்கியூட் இல்லத்திற்கு அருகே குவிந்து இருந்த மீடியாவிற்கு இவர்கள் நால்வரை கண்டதும் TRP ஏற்ற வசதியாக போனது. முதலமைச்சர் இவர்களின் திருமண உறுதி விழா தன் தலைமையில் நடந்ததை அறிவிக்க, அது மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே தான் சொல்ல வேண்டும்.
அதுவே முதலமைச்சரை வேவு பார்த்து கொண்டு இருந்த ஆட்களுக்கு வசதியாக போய் விட, கபோஸிடம் அடி வாங்கியிருந்த அவன் தளபதி ஒருவனுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.
காபோசிடம் நல்ல பெயர் வாங்க என்று அடிவாங்கியிருந்த அந்த தளபதியும் தன் தலைவனின் அனுமதி இல்லாமல், காபோஸ் அதுவரை போட்டிருந்த திட்டம் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போகும் அளவிற்கு துப்பாக்கியுடன் வந்து இறங்கினான் அர்ஜுன்,அமன் உயிரை எடுக்க.
தர்மாவே மிருதுளாவிற்கும்,ஜெகநாதனிற்கும் SKYPE வீடியோ கான்பாரென்ஸ் அழைப்பு போட்டு அர்ஜுன் பற்றி புகழோ புகழ் என்று பாராட்டி தள்ளி இருக்க,முயற்சியே செய்யாமல் மாமனார்,மாமியார் அர்ஜுனின் ரசிகர் மன்ற மெம்பெர் ஆகி விட்டார்கள்.
“அங்கே நிலைமை சரியில்லை என்று டிவியில் பார்த்து நெஞ்சு பதறி அடிச்சு தான் நானே அங்கே வந்துட்டு இருக்கேன். அப்பா,அம்மா ஸ்தானத்தில் தான் நீங்க இருந்து எல்லாம் பார்த்து கொண்டீர்களே. பெரியவங்க மனசுக்கு நல்லதை செய்யணும் என்று ஏனோ தோன்றி இருக்கு. திருமணம் கூட உங்களை மாதிரி நல்லவர் தலைமையில் வெகு சிம்பிள்லாக கோயிலில் நடந்தால் கூட எங்களுக்கு மகிழ்ச்சி தான்.” என்று மிருதுளா சொல்ல, அதை வழி மொழிந்தார் ஜெகன்நாதன்.
ஏற்கனவே அவர்கள் குடும்ப நண்பர் ஹர்பிர் அர்ஜுன் பற்றியும்,அவன் குடும்பத்தை பற்றியும் சொல்லி இருந்தது இவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.எந்த பஞ்சாப் நியூஸ் சேனல் எடுத்தாலும் மணிக்கு ஒரு தடவை அர்ஜுன்,அமன் பற்றி டாக்குமெண்டரி அளவிற்கு கதை ஓடி கொண்டு இருந்ததே.
ப்ரீத்தியும் தான் அர்ஜுனை விரும்புவதாக சொல்லி விட,அதன் பிறகு அங்கு பேச்சு வார்த்தையே தேவையற்றதாகி தான் விட்டது.
தர்மா அவர் மனைவி கஷ்வி ஏற்பாட்டின் படி, உள்ளே ராஜஉபசாரமே அர்ஜுன்,ப்ரீத்தி,அமன்,ஜெஸ்ஸிக்கு நடந்தது.ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள் குடும்பம் வேறு.
முதலமைச்சர் மடியில் வளர்ந்த பிள்ளைகள் அர்ஜுனும், அமனும். தன் சொந்த மகன்களின் நிச்சயமே முடிந்தது போல் அகமகிழ்ந்து போனார்கள் தர்மாவும், கஷ்வியும்
ஆட்டம்,விருந்து என்று கலை கட்டியது அந்த சர்கியூட் இல்லம். மற்றவர்களுக்கு விருந்து அளித்தாலும் உடல் நிலை காரணமாக பத்திய உணவே எடுத்து கொண்ட தர்மா.அதையும் உண்ணாமல் கொறித்து கொண்டு தான் இருந்தார். அனைவரும் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டு இருக்க, மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டு கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி அவர் முகம் வாட்டத்தை தான் காட்டியது.
இதில் எதிலும் கலந்து கொள்ள முடியாதவராய் பழ சாலட் நிறைந்த கோப்பையுடன் அந்த இல்லத்தின் பின் இருந்த பூங்காவில் சென்று அமர்ந்தார்.
கையில் இருந்த ஸ்பூன் கிண்ணத்தை கிளறி கொண்டு இருந்தாலும் அவர் கவனம் அங்கே இல்லை என்பது, ப்ரீத்தி அவரை பலமுறை அழைத்தும் பதில் வராத நிலையில் புரிந்து போனது.
“அப்பா!” என்று ப்ரீத்தி மீண்டும் சத்தமாக அழைக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தார் தர்மா.
“ஹாய் ப்ரீத்தி!…நீயா!…கம் கம் சிட்.”என்றார் தன் பக்க இருக்கையை காட்டி.
பொற்கோயிலில் இருந்தே ப்ரீத்தியும், தர்மாவும் விடாமல் பேசிப்பேசி அப்பா,மகள் போல் மனதளவில் நெருங்கி இருந்தனர். யாரையும் உடனடியாக பேச்சில்,நடத்தையில் வசீகரிப்பது தான் ப்ரீத்திக்கு கை வந்த கலை ஆயிற்றே!
குழந்தை இல்லாத தர்மாவிற்கும் துரு துருவென்று, அறிவோடு,அழகாய், விவேகத்துடன்,வீரமும் கொண்டு வரலாறுகளில் மட்டுமே அவர் படித்து மலைத்து இருந்த வீர பெண்மணிகள்,போராளிகளின் சாயல் அவருக்கு ப்ரீத்தியிடம் தெரிந்தது. ப்ரீத்தியின் மேல் பாசம் ஏற்பட்டு இருக்க தன்னை, ‘அப்பா’ என்று அழைக்கும் படி கேட்டு இருந்தார்.
‘சிங்க மனிதன்’ என்று அரசியல் வட்டாரத்தில் பெயர் பெற்று இருந்த அந்த முதல்வர்,தங்களுக்கு சரி சமமாய் கிண்டல் அடித்து,காலை வாரி என்ற அவரின் இந்த, ‘பிள்ளை முகம்’ ப்ரீத்தக்கு மிகுந்த திகைப்பை கொடுத்தது என்றால் மிகையல்ல.
தர்மாவின் அன்பில்,பாசத்தில் தன் தந்தை ஜெகன்நாதனையே அங்கு கண்டாள் ப்ரீத்தி.
“என்னப்பா நானும் அப்போதில் இருந்து பார்த்துடே இருக்கேன். முகத்தில் இருக்கும் இந்த சிரிப்பு உங்கள் கண்களில் இல்லையே! சரியாய் சாப்பிடவும் இல்லை நீங்க. உங்க கவனமும் இங்கே இல்லை… முகத்தில் தெளிவும் இல்லை.என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்து டிரீட்மென்ட்டில் இருப்பதாய் அம்மா இப்போ தான் சொன்னாங்க. இப்படி கவலைப்பட்டே உடல் நலத்தை கெடுத்து கொள்வீர்கள் போல் இருக்கிறதேப்பா.”என்றாள் ப்ரீத்தி அவர் கையை பிடித்து கொண்டு.
இருவரும் ஆங்கிலத்தில் மிக சரளமாய் உரையாடி கொண்டு இருந்தனர். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் மூச்சு முட்டி போய் இருந்த தர்மாவிற்கு, ப்ரீத்தி வடிகாலாய் தோன்றினாள் அந்த நிமிடம். தன் மனக்குமுறலை கொட்டி தீர்த்தார் அந்த மாநிலத்தின் தந்தை.
“மனக்கஷ்டம் தான் மகளே…என் அப்பா காலத்திலும்,நான் அரசியலுக்கு வந்த புதிதிலும் இந்த, ‘சுயநல பேய்’ என் கட்சியை பிடிக்கவில்லை. மண்,பெண்,பொன்னுக்கு ஆசை பட்டு மற்றவர்களின் சவத்தின் மேல் வாழ கூட என் கட்சி ஆட்களே இன்று தயங்கவில்லை.இன்டெலிஜென்ஸ் அறிக்கை வந்தது. அதில் என் கட்சியில் இருந்து கொண்டே இந்த போதையை ஆதரித்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த முதலமைச்சர் என்ற முள் கிரீடம் என்னை கொல்லாமல் கொன்று கொண்டு இருக்கிறது. ‘இதை எடுத்து கொள்.எனக்கு விடுதலை கொடுங்கள்’ என்று குருதேவ்,வீரேந்தர் இடம் பலமுறை கெஞ்சி விட்டேன். ‘நீ இருக்கும் வரை தான் அரசியலில் நாங்களும் இருப்போம்’ என்று சொல்லி இப்போ தான் இவனுங்க நட்பு பயிரை வளக்கிறானுங்க.
நானும் பதவி இறங்கி விட்டால் இந்த மாநிலத்தை மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவையும் இங்கிருந்தே சுடுகாடு ஆக்கி விடுவானுங்க.
உங்க மாநிலத்தில் மாட்டிற்காக,தமிழர் கலாச்சாரம், ஒற்றுமை, தமிழனின் அடையாளம் அழிய கூடாது என்பதற்காக மெரினாவே ஒளிர்ந்தது. ஆந்த வீர ஒளியில் ஒட்டுமொத்த இந்தியாவும் தலை நிமிர்ந்தது தான்.ஆனால் அதே ஒற்றுமை, ‘சாராய ஆறுக்கு’ எதிராக வரவியில்லையே! தினம் தினம் லட்சக்கணக்காணக்கான பெண்கள் விதவைகள் ஆவதும், குடும்பங்கள் சிதைவதும் இருந்தும் இதை எதிர்த்து ஒருங்கே ஒரு குரல் மெரினா போல் உயரவில்லை.கண்ணுக்கு எதிராக இருக்கும் சாராய ஆறுகே இந்த நிலைமை என்றால் இங்கே அடிப்பது போதை என்னும் சுனாமி ப்ரீத்தி.
ஸ்கூல்,காலேஜ்,ஹோட்டல்,ஹாஸ்பிடல்,டியூஷன் சென்டர், பியூட்டி பார்லர்,பெட்டி கடை தொடங்கி எல்லா இடத்திலும் மக்களே விற்க முன் வருகிறார்கள்.
இதை தடுக்க போலீஸ்,அரசாங்கம்,கோர்ட் மட்டும் போதாது.இதில் பதவியில் உள்ளவர்களே பணத்தை வாங்கி கொண்டு கண்ணை மூடி கொள்கிறார்கள்.இந்த போதை பணம் கறுப்பு பணமாய்,தீவிரவாதம் செய்ய தேவைப்படும் பணத்தை கொடுப்பதாய்,பாலியல் தொழில், பெண்கள்,பிள்ளைகள் கடத்தல் என்று ஆக்டோபஸ் மாதிரி பல பக்கம் இதன் கிளை விரிகிறது.
என் மக்களை,என் மாநிலத்தை,என் தேசத்தை என்னால் காப்பாற்ற முடியவில்லை ப்ரீத்தி. இந்த சுயநல பேய்களிடம், அரக்கர்களிடம் தோற்று கொண்டு இருக்கிறேன் மகளே. அடுத்த ஹார்ட் அட்டாக் வந்தால் நிச்சயம் நான் பிழைக்கப் போவதில்லை. இந்த மக்களை காப்பாற்ற முடிய போவதில்லை. பொன் விளையும் மாநிலம்.வீரத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். இனி அழிய போகிறது உள் இருந்தே அழிக்கும் இந்த போதை என்னும் கேன்சரால்.”என்ற தர்மா அதற்கு மேல் முடியாதவராய் குலுங்கி அழுதார்.
“அப்பா!”என்ற ப்ரீத்தி அவரிடம் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எதையோ பேசினாள்.
இருவருக்கும் நீண்ட நேரம் காரசார விவாதம் நடந்தது என்று சொன்னால் கூட மிகையல்ல.அவர்கள் பேச்சின் முடிவில் தர்மா தெளிவுடன் நிமிர்ந்து அமர்ந்தவர் நீண்ட யோசனையில் ஆழ்ந்தார்.
“இது சரி வருமா மகளே?”என்றார் நீண்ட யோசனைக்கு பிறகு.
“கூட்டி கழிச்சி பாருங்க அப்பா கணக்கு சரியாக தான் வரும்.” என்றாள் ப்ரீத்தி புன்னகையுடன்.
காபோஸ் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த அடித்தளத்தையே தகர்க்கும் அணுகுண்டை, ப்ரீத்தி அந்த நொடி பற்ற வைத்து இருந்தாள்.அது ஐந்து மாதம் கழித்து வெடித்து சிதற, காபோஸ் சாம்ராஜ்ஜியம், அவன் திட்டங்கள் எல்லாம் தரைமட்டமானது.
அதுவரை இல்லாத தெளிவுடன்,திட்டத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார் தர்மா. அவர் கண்களில் பழைய ஒளி மீண்டு இருந்தது.தன் மாநிலத்தை காக்கும் வழி தெரிந்து விட, அவர் மனத்துணிவு மீண்டது.
விருந்து உபசாரம் முடிந்து,இளம் ஜோடிகளுக்கு பரிசு பொருட்களுடன், மன நிறைவுடன் வழி அனுப்பி வைத்தனர் முதல்வரும் அவர் துணைவியும்.
“என்னடீ !தர்மா அங்கிள் கிட்டே அவ்வளவு நேரம் பேசினே?நல்ல தெளிவாய் இருக்கார் அப்படி என்ன சொன்னே?”என்றாள் ஜெஸ்ஸி.
“உண்மையை சொன்னேன்.”என்று பாஷா பட மாடுலேஷனில் ப்ரீத்தி சொல்ல,அவளை குனிய வைத்து குத்தினாள் ஜெஸ்ஸி.
அதுவரை எல்லாமே நல்லவிதமாக தான் சென்றது.வந்த போன் அழைப்பை ஏற்க ரஞ்சித் நகரவும்,டெலஸ்கோப் லென்ஸில் சூரிய கதிர் பட்டு அது ஒளிசிதறலாக அது ப்ரீத்தி கண்ணில் பட்டு,அது துப்பாக்கி என்று உணர்ந்து, அதன் இலக்கில் இருந்து அர்ஜுன், அமன் இருவரையும் காக்க ஓடிய பிறகு எல்லாம் தலை கீழ் ஆனது.
அர்ஜுன், அமன் உயிரை குடிக்க முழங்கிய துப்பாக்கி ப்ரீத்தி உயிரை குடிக்கும் பாசக்கயிறாய் மாறி போனது.
அதன் பிறகு அங்கு ஏற்பட்ட துப்பாக்கி சண்டையின் நடுவே ப்ரீத்தி உயிரை காக்க அர்ஜுன்,அமன்,யோஜித் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஹாஸ்பிடலின் வெளிப்புறம் பஞ்சாப் மக்கள் சூழ ஆரம்பித்தார்கள். நேரில் வர முடியாதவர்கள் தங்கள் பூஜை அறையை, தங்கள் இறைவனை சரண் அடைந்தனர். உயிரை கையில் பிடித்து கொண்டு நின்றிருந்தனர் அர்ஜுனும் ,அமன்னும்.
இதற்கிடையில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய ப்ரீத்தியின் அம்மா மிருதுளா, செய்தியை பார்த்து,”ப்ரீத்தி” என்று அலறியவரே மயங்கி விழுந்தார்.
குண்டடிப்பட்டு அறுவை சிகிச்சை அறையில் ப்ரீத்தி அனுமதிக்கப்பட்ட நான்கு மணி நேரம் கழித்து வெளியே வந்தான் யோஜித்.
“யோஜித்! என்னடா…அவ எப்படி இருக்கா?”என்றான் அர்ஜுன் குரலே எழும்பாதவனாய்.
அர்ஜுன் கண்களை சந்திக்க முடியாதவனாய் தலை குனிந்த யோஜித், “சாரி டு சே திஸ் அர்ஜுன்.ஷி இஸ் நோ மோர்…வி ட்ரைட் அவர் லெவல் பெஸ்ட்.காப்பாத்த முடியலை.”என்றவனின் பேச்சை கேட்டு அதிர்ந்த அர்ஜுன் கேட்டதை நம்ப முடியாதவனாய் ஸ்தம்பித்து போக, அடுத்த நொடி அர்ஜுன், அமன் அலறல் அந்த காரிடோர் தாண்டி ஹாஸ்பிடல் வாயில் வரை கேட்டது.
“ஆழ்ந்த வருத்தத்துடன் இதை தெரிவித்து கொள்கிறோம் நேயர்களே. துப்பாக்கி குண்டு பாய்ந்த ப்ரீத்தி உயிர் பிழைக்கவில்லை.ப்ரீத்தி இஸ் நோ மோர்.”என்ற செய்தியை ஒளிபரப்பு செய்தது அனைத்து நியூஸ் சேனல்களும்.
தங்கள் வீட்டு பெண்ணொருத்தியே இறந்து போனதை போல் பஞ்சாப் இல்லங்கள் துக்கத்தை தத்து எடுத்தது.விஷயம் கேள்வி பட்டு பதறி அடித்து ஓடி வந்தார்கள் அர்ஜுன்,ப்ரீத்தி,அமன் குடும்பத்தினர்.
அவர்கள் அனைவரையும் மீள துயரில் ஆழ்த்தி விட்டு மண்ணுலகில் தன் பயணத்தை முடித்து கொண்ட ப்ரீத்தியின் உடல் அரசாங்க மரியாதையுடன் இருபத்தியோரு துப்பாக்கி குண்டுகள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊரு விட்டு ஊரு வந்த பெண்ணவளுக்கு கிடைத்தது அவள் சவபெட்டியின் மீது போர்த்தப்பட்ட இந்திய நாட்டின் தேசிய கொடி.
பிறந்தோம்,வளர்ந்தோம்,செத்தோம் என்று இருக்கும் பலருக்கு பதில் நாட்டிற்காக,நாட்டு மக்களுக்காக,மற்றவர்களின் உயிரை காக்க என்று போராடி வீரமரணம் அடைந்திருந்தாள் பெண்ணவள்.
அர்ஜுன்,அமன்,ப்ரீத்தி குடும்பம் அழுவதை கண் கொண்டு யாராலும் பார்க்க முடியவில்லை.பார்த்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் அடி வயிறோடு நெஞ்ச கூடே காலியாகி போனது.
ஐந்து மாதம் கழித்து.
எல்லா நியூஸ் சேனல் குழுமியிருந்தது ப்ரீத்தி சுடப்பட்ட அதே சர்கியூட் இல்லத்தின் வாயிலில் முன்பு.
“முதலமைச்சர் தர்மாவின் கட்சி வரலாறு காணாத வெற்றி.”
“இதோ இன்னும் சிறிது நேரத்தில் பஞ்சாப் கவர்னர் தலைமையில் புதிய அரசாங்கம் பதிவியேற்க போகிறது.இறந்து போன ப்ரீத்தியின் தியாகத்திற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலம் நியாயம் செய்து விட்டார்கள்.”
“எதிர் கட்சி ப்ரீத்தியின் சுடப்பட்ட உடலை வைத்து செய்த,’சவ அரசியல்’ எடுபடவில்லை.
“முதல் முறை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று மட்டும் சொல்லியே வோட்டு கேட்ட வேட்பாளர்கள்.”
“இந்த முறை எங்குமே காணாத புதிதாய் அந்தந்த துறையில் சிறந்தவர்களே அந்த துறை அமைச்சர்களாக பொறுப்பேற்கும் அதிசயம்.”
“வேட்புமனு தாக்கல் செய்யும் போதே தங்கள் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள்,உற்றம்,சுற்றம்,கார் டிரைவர்,லாயர்,வேலையாட்கள்,நண்பர்கள் உள்ளிட்ட தன்னை சார்ந்த அனைவரின் சொத்து பட்டியலை வெளியிட்ட கட்சியினர்.” என்பது மட்டுமே நியூஸாக இந்தியா முழுவதும் ஒளிபரப்பு ஆனது.
இவர்களை பற்றி தெரியாதவர்கள் கூட இவர்களை கூகிள் ஆண்டவர் உதவியுடன் தேடி பார்த்து இவர்களை பற்றி தெரிந்து கொண்டு, ‘வாழ்ந்தால் இவர்களை போல் வாழணுமய்யா.என்ன மனுஷங்க.’என்று பேசும் அளவிற்கு அதிகம் தேடப்பட்ட நபர்கள் என்ற இடம் பிடித்தார்கள்.
இது எப்படி சாத்தியம் ஆனது.அரசியல் விமசகர்கள்,எதிர் கட்சியினர் தலையை பிடித்து கொண்டார்கள். டெபாசிட் கூட வாங்க முடியாத அளவு தோல்வி.
முதலமைச்சர் தர்மா தங்கியிருந்த இல்லத்தின் அருகே அவரின் மகன்கள் போன்ற அர்ஜுன்,அமன் கொல்ல முயற்சி நடப்பதும், அதை தடுத்து ஒரு பெண் அதிலும் அன்று காலை தான் திருமண நிச்சயம் தர்மா தலைமையில் நடந்த பெண் உயிர் இறந்து இருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
சாலையில் கார் விபத்து ஏற்படுத்த பட்டு உயிர்க்கு போராடி கொண்டு இருந்த டாலி அப்பா ரணீத் ஜோகியும் உயிர் இழந்து இருக்க,இருமுனை கத்தியாய் இந்த இரு மரணங்கள் தர்மாவை குறி வைத்தது.
தர்மாவின் ஆட்சிக்கே உளை வைக்கும் மரணங்கள் அது. ‘உயிரை காக்க கூட முடியாத கையாலாகாத முதல்வர்’ என்று சொல்லி தான் எதிர் கட்சிகள் பிரசாரம் செய்தது. வெகு கேவலமான சவ அரசியல் அது.
ஏகப்பட்ட ஊழல்,போதை கூட்டத்துடன் தொடர்பு,வெளிநாட்டு தீவிரவாதிகளை உள்ளே அனுமதிப்பது,TERROR FINANCING, ஹவாலா என்று பணம் கிடைக்க,ஆட்சியை பிடிக்க எந்த கீழ்த்தரமான செயலையும் செய்ய தயங்காத எதிர்கட்சி அது. மிக பிரபலமான ஆட்களை வைத்து சமூக வலைத்தளத்தில் பொய் பிரச்சாரம் கணகச்சிதமாய் நடத்தி இருந்தனர்.
‘கேக்குறவன் கேணை என்றால் எருமை மாடு ஏரோபிளேன் ஒட்டுது’என்பதை கூட நம்ப வைக்க முடியும் என்ற தாரக மந்திரத்துடன் களம் இறங்கி பொய்யை காட்டு தீயாய் பரவ வைத்து கொண்டு இருந்தனர்.ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகவில்லை என்பது தான் ஹைலைட்.
ப்ரீத்தி மரணத்தை அரசியல் ஆக்கிய கட்சி தோல்வி அடைய, ப்ரீத்தி மரணத்திற்கு அர்த்தம் இருக்க வேண்டும் என்றால், அது போதை மருந்தை அழிப்பது ஒன்று தான் என்று என்று ப்ரீத்தி பெயரை சொல்லாமலே ஓட்டு கேட்ட தர்மா கட்சியினர் இமாலய வெற்றி பெற்று இருந்தனர்.
தர்மாவின் கட்சி வெற்றி பெற ப்ரீத்தியின் அம்மா மிருதுளா கொடுத்த பேட்டியும் ஒரு காரணம் என்று சொல்ல தான் வேண்டும்.
ப்ரீத்தி அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து பஞ்சாப் தேர்தல் களம் சூடு பிடிக்க,ப்ரீத்தியின் இறப்பை வைத்து எதிர்கட்சி ஓவர் ராக அந்த மாநிலத்தை மீம்ஸ், அனிமேஷன், ஜோக்ஸ்,பக்கம் பக்கமாய் வெகு உருகலான பதிவுகள் இட்டு, தர்மாவை பிச்சி எடுத்து கொண்டு இருந்தனர்.
சில மரணங்களில், யார் அதிக பெட்டி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு இறந்தவர் குடும்பத்தார் சப்போர்ட் செய்வது எல்லாம் வாடிக்கை.அங்கு மரணத்தை,பாசத்தை பணம் வென்று விடுகிறது.
‘போன உயிர் போயிடுச்சு.வரும் காசை ஏன் வேண்டாம் என்று சொல்வானேன்’ என்ற மைண்ட் செட் பலரிடம் உண்டு.
ஆனால் மிருதுளா அப்படிப்பட்டவர் இல்லையே! மகள் இறந்த துயரம் இருந்தாலும்,கம்பீரத்துடன் அவர் வந்து அமர்ந்த தோரணையே பார்ப்பவர் மனதில் ஒரு கணம் மரியாதையை வரவழைத்தது.
அந்த பெண் சிங்கம் கர்ஜித்து முடித்த போது பஞ்சாப் மக்களின் குழம்பி இருந்த மனம் தெளிவடைந்தது.
“அனைவர்க்கும் வணக்கம்.என் பெயர் மிருதுளா.துப்பாக்கியால் சுட்டு இறந்து போன ப்ரீத்தியின் அம்மா.வேலைக்கு என்று அனுப்பிய என் மகளை இங்குள்ள சில மக்களின் சுயநலம்,பணத்தாசை கொன்று விட்டது.அதற்கு காரணம் பஞ்சாப் முதலமைச்சர் என்ற கருத்து சமூக வலைத்தளத்தில் உலவி கொண்டு இருக்கிறது.என் மகள் இறப்பிற்கு அவர் காரணமா என்று தெரியாது.ஆனால் பஞ்சாப் மாநில மக்களான நீங்கள் ஒவ்வொருவருமே தான் காரணம்.
எங்கிருந்தோ வந்த என் மகள் இங்கு இருக்கும் போதை மருந்தை எதிர்த்து குரல் கொடுத்து தன் உயிரையும் இன்று இழந்து இருக்கிறாள். ஆனால் அதிலேயே ஊறி போய் சாக்கடையோடு சாக்கடையாக இருக்கும் நீங்கள் செய்ததது என்ன?
சமூக வலைத்தளத்தில் வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் பொய்யை மட்டுமே அரசியல் நோக்கத்திற்காக போடும் சில சுயநல பேய்களுக்கு சொம்பு தூக்கியதை தவிர வேறு என்ன செய்து இருக்கிறரீர்கள்?
உன் நாட்டை போதை மருந்தால் அடிமையாக்க வேற்று நாட்டுக்காரன் முயல்கிறான். ‘இன்விசிபிள் வார்/நிழல் உலக யுத்தம்’ நடத்துகிறான் என்றால் அதை எதிர்ப்பதை விட பணமா முக்கியம்? ‘வாயா என் நாட்டை சுடுகாடு ஆக்கு’ என்று வெற்றிலை பாக்கு கொடுத்து, இரத்தின கம்பளம் விரித்து உள்ளே அழைக்க உடல் கூசவில்லை?
நாடே சுடுகாடாய் போன பிறகு அந்த பணத்தை தின்னவா போகிறீர்கள்? நாட்டை விட கிடைக்கும் பேரும்,புகழும்,ஒரு மாத சம்பள போனஸ் தான் அதி முக்கியமாய் போய் விட்டதா உங்களுக்கு எல்லாம்?அப்படி என்ன சுயநலம்?மனசாட்சி எல்லாம் கொன்று விட்டு தான் வாழ்ந்து சவமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா? நாளை உங்கள் குடும்பம் மட்டும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாய் இருந்து விடும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
போதை மருந்து விற்கும் நாய் ஒன்று துப்பாக்கி எடுத்து சுட்டதற்கு, அதை தடுக்க முயலும் முதலமைச்சர் காரணம் என்று சொல்லும் நீங்களும் அதே அளவிற்கு தார்மீக பொறுப்பு உடையவர்கள் தான்.
துப்பாக்கி எடுத்து நீங்கள் சுடவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் சில கேடு கெட்ட ஜென்மங்களுக்கு ஒட்டு போட்டு,காசுக்கு விலை போகும், வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு ஓட்டு போட வெளியவே வராத நீங்கள் அனைவருமே இறந்து கொண்டு இருக்கும் உயிர்கள் போக காரணம். உங்கள் கைகளிலும் தான் அந்தரத்தக்கறை உள்ளது.
என் மகளின் உடலை வைத்து,’ சவ அரசியல்’ செய்யும் ஒவ்வொருவனும் தான் காரணம்.
எல்லையில் இருக்கும் ராணுவ வீரன்,நாட்டிற்குள் இருக்கும் போலீஸ் மட்டும் அல்ல,நம் நாட்டை காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனாக,குடிமகளாக நமக்கும் தான் இருக்கிறது. இந்த இந்திய திருநாட்டிற்காக ராணுவ வீரன் உயிர் போவது போல் என் மகளின் மரணத்தை ஒரு தியாகமாய் நான் எடுத்து கொள்கிறேன்.
நோய் வந்தோ,விபத்திலோ,புழு பூத்தோ,படுக்கையில் கிடந்தோ என் மகள் உயிர் போகவில்லை.இன்னொரு உயிரை காப்பாற்ற,இந்த தேசத்தை உள்ளியிருந்தே அரிக்கும் சுயநலம், போதை, பணத்தாசை, தீவிரவாதம் என்று எல்லாவற்றையும் எதிர்த்து ஒரு வீராங்கனையாக தான் இறந்திருக்கிறாள்.
இனிமேலாவது இன்னொரு உயிர் போகுவதற்கு முன் வெளியே வந்து உங்களுக்காக யார் உண்மையாக உழைக்கிறான்,யார் ஆதாயத்திற்காக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து ஓட்டு போடுங்கள்.நன்றி வணக்கம். ஜெய் ஹிந்த்”என்று மிருதுளா முழங்கி இருக்க,பஞ்சாப் அரசியல் தலைவிதியை ஒட்டுமொத்தமாய் மாறி தான் போனது.
மிருதுளா மக்கள் மனதை தட்டி எழுப்பி இருக்க, தங்கள் பதவிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று மட்டுமே பேசி தர்மா கட்சியினர் ஓட்டு கேட்க, இந்திய எலெக்ஷன் ரெகார்ட்டில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 98.95% ஓட்டுப்பதிவு நடந்து இருந்தது.
“இதோ நாம் அனைவரும் காத்து இருந்த பதிவியேற்பு விழா…இதோ கவர்னர்…இதோ நம் முதலமைச்சர்.”என்ற மீடியா நியூஸ் வெளியிட,பஞ்சாப் கவர்னர் பதவி ஏற்பு உறுதி மொழியை படிக்கச்,
“அர்ஜுன் ரப்தார் பாட்டியாவாகிய நான் சட்டப்படி அமைக்க பெற்ற, இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும்,மாற பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும்,ஒருமையும் நிலை நிறுத்துவேன் என்றும்,பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக உண்மையாகவும்,உள்ள சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும்,அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி,விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவர்க்கும் நேர்மையானதை செய்வேன் என்றும் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.” அர்ஜுன் பஞ்சாப் முதலமைச்சராக உறுதி மொழி ஏற்க ,ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தது.
‘A Young,Charming,Dynamic, and Visionary Chief Minister of Punjab.A Man of Action, Devotion,Dedication,Decision. our New young Chief Minister Mr.Arjun Rapthaar Bhatiya.’ என்று இந்தியாவின் எல்லா நியூஸ் சேனல்களும் 24 மணி நேரமும் இதையே தான் சொல்லி கொண்டு இருந்தது.
உள்துறை அமைச்சராக வீரேந்தர் பதவியேற்க,பொதுநலம் மற்றும் சுகாதார துறை அமைச்சராக யோஜித்,விளையாட்டு துறை அமைச்சராக அமன்ஜீத்,தொடர்பு துறை அமைச்சராக திலீப், வேலைவாய்ப்பு துறை அமைச்சராக சச்தீப்,பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சராக காஜல் பொறுப்பேற்றனர்.
போதை மருந்துக்கு எதிராக மிக பெரிய சதுரங்க ஆட்டமே ஆடப்பட்டு, ‘அல்டிமேட்ட செக்மேட்’ வைக்க பட்டு இருந்தது.அதிக புத்திசாலித்தனமான STRATEGIC GAME விளையாடப்பட்டு இருந்தது.
தர்மா என்ற அரசனுக்கு பதில் களத்தில் அர்ஜுன் என்ற அரசன் நிற்க,அவனுக்கு தளபதிகளாய் போதை மருந்தை எதிர்ப்பது ஒன்றே வாழ்வின் லட்சியமாய் கொண்டவர்கள்,நாட்டின் மீது அதீத தேசப்பற்று கொண்டவர்கள் துணை நிற்க, புதிய சதுரங்க களம் அது .
மீண்டும் ஒரு குருஷேத்ர யுத்தம்.இங்கு மக்களுக்கு போதை என்னும் அநீதி இழைக்கப்பட,அதை எதிர்த்து பாண்டவர்கள் போல் அர்ஜுனும் அவர்களை சேர்ந்தவர்களும் யுத்தகளத்தில் குதித்து இருந்தனர். இவர்களுக்கு குருவாய் தர்மா, குருதேவ், யதுவீர்,உபிந்தர் இருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் ரஸ்தோகி/சாரதியாய், வழிகாட்டியாய் ஒருவர். அந்த யுத்த கள அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணர் மாதிரி இங்கேயும் ஒரு சாரதி.ஒரு சாணக்கியன்.
அர்ஜுன்,அமன்,யோஜித் குருதேவ்,தர்மா,யதுவீர்,உபிந்தர் வீரேந்தர், திலீப்,சச்தீப் என்று இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சர்க்கிள், சமுதாயத்தில் தனி பெயர்,மக்கள் துணை இருந்தது.பிரிந்து கிடந்த இவர்களையும், இவர்கள் குழுக்களையும் ஒன்றாய் இணைத்ததில் சிதறி கிடந்த பஞ்சாப் ஒன்றாய் ஆனது.
புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே
நரிகள் வேஷம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே
புல்லை கண்டு நடுங்கும் மனிதன் இருக்கும் போதே சாகிறான்
புல்லை கத்தி ஆக்கும் மனிதன் இறந்த பிறகும் வாழ்கிறான்
தன்னை மட்டும் காத்து கொள்ளும் வாழ்வில் இல்லை நன்மையே
தன்னை போல பிறரை காக்கும் தர்மம் வெல்லும் உண்மையே
நீ இறுதிவரை போராடு
செங்குருதியிலும் நீராடு.
உன்னை ஒருவன் தாக்கும் போது ஊமை போல இருப்பதா?
கண்கள் ரெண்டை மூடி கொண்டு கல்லை போல கிடப்பதா?
தைரியம் உள்ள மனிதனுக்கு எல்லாம் சாவே இல்லை சொல்லடா
வருவதை பின்னால் பார்த்து கொள்வோம் எதிரியை சுட்டு தள்ளடா
ஆறில் தொடங்கி அறுபது வரை ஒவ்வொரு நொடியும் மரணமே
அது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்தால் உலகில் இல்லை கலகமே
உண்ணும் உணவில் இல்லை வீரம்,வீரம் உள்ளது நெஞ்சிலே
வெற்றி சங்கை ஊதும் வரைக்கும் தூக்கம் இல்லை கண்ணிலே
தவறும் கூட சரியாய் மாறும் செய்யும் செயலால் தானடா
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் உனக்கு நீயே ஏணிடா
உறவை காக்க எழுந்த பின்னால் உயிரும் உடலும் துச்சமே
அடியும்,வலியும் அறிந்த பின்னால் துளியும் இல்லை அச்சமே
துளியும் இல்லை அச்சமே.
https://www.youtube.com/watch?v=fqxRjSERnrU
பயணம் தொடரும்…