(ஒரு கோப்பு, செய்தி, படம் அல்லது வீடியோவை மற்றொரு கோப்பு, செய்தி, படம் அல்லது வீடியோவுக்குள் மறைத்து வைக்கும் நடைமுறையே ஸ்டிகனோகிராபி. ஸ்டீகனோகிராஃபி என்ற சொல் புதிய லத்தீன் ஸ்டீகனோகிராஃபியாவிலிருந்து வந்தது, இது கிரேக்க சொற்களான ஸ்டீகனஸ் , அதாவது “மூடப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட”, மற்றும் லத்தீன்-கிராஃபியா எழுதுதல்” என்று பொருள்படும் .இந்த வார்த்தையின் முதல் பதிவு செய்யப்பட்ட பயன்பாடு 1499 இல் ஜோகன்னஸ் ட்ரிதெமியஸ் தனது ஸ்டிகனோகிராஃபியாவில், கிரிப்டோகிராஃபி மற்றும் ஸ்டிகனோகிராஃபி பற்றிய ஒரு கட்டுரை, மந்திரம் குறித்த புத்தகமாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.)
ஐந்து நிமிடங்களுக்கு மேலாக ப்ரீத்தியையும்,ஜெஸ்ஸியையும் உதைத்து மிதித்த ரணீத், “உயிரை எடுத்துடு என்று நீங்க கதறணும்.கதற வைக்கிறேன்.உங்க சாவு அந்த அர்ஜூனுக்கும் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அந்த மக்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்கிறேன்.
பொண்ணுங்கனா வீட்டில் சமைச்சி போட்டுட்டு, பிள்ளைகளை பெத்து கொடுத்துட்டு அடிமையாய் இருக்கணும். அதை விட்டுட்டு நாங்க தான் ஜான்சி ராணி என்று துள்ளி எழுந்தால் விட்டு விடுவோமா?
சுத்தி பாரு முப்பது பேருக்கும் குறையாமா இருக்கானுங்க. அவனுங்க கையில் சிக்கி சின்னாபின்னமாகி எப்படி எல்லாம் வன்கொடுமைக்கு ஆளாக போறீங்க என்று மட்டும் பாருங்க… டேய் கேமராவை எடுத்து வாங்கடா…இன்னைக்கு உங்களுக்கு செம விருந்து. நீ சுடப்பட்டதை தானே நேரடி ஒளிபரப்பு செய்தானுங்க.
நான் நீங்கள் எப்படி எல்லாம் கதறி துடித்து இவனுங்க ஒவ்வொருத்தன் கையிலும் என்னவெல்லாம் கொடுமை அனுபவிக்கறீங்க என்று நேரடி ஒளிபரப்பு செய்கிறேன். என்ஜாய்.” என்றவன் ப்ரீத்தியின் ஆடை மேல் கையை வைக்க அடுத்த நொடி அங்கே எழுந்தது ஒரு அலறல்.
ப்ரீத்தியின் ஆடை களைய அவள் தோள் மேல் கை வாய்த்த ரணீத் ஜோகி அடுத்த கணம் தன் தோளை பிடித்து கொண்டு கீழே விழுந்தான்.அவன் தோளில் பாய்ந்திருந்தது ஒரு புல்லட்.
அந்த புல்லட்டை உமிழ்ந்த துப்பாக்கியுடன் அந்த கோடௌன் வாயிலில் நின்றது அந்த உருவம்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் துப்பாக்கி முழங்கி விட்ட சப்தம் அந்த கோடௌன் முழுவதும் எதிர் ஒலித்தது.
அந்த கோடௌனில் இருந்த காபோஸ் ஆட்களும்,சைத்தான் தீவிரவாத கூட்டமும் தங்கள் ஆட்டோமேட்டிக் துப்பாக்கியை வாயிலில் நின்றிருந்த அந்த ஆளின் மேல் குறி வைத்து பிடித்து இருக்க, “நோ டோன்ட் ஷூட்.”என்றான் ரணீத் ஜோகி.
நீட்ட பட்ட துப்பாக்கிகள் எந்த நேரத்திலும் தங்கள் தோட்டாக்களை முழங்கலாம் என்ற நிலையில்,அதை பற்றி சிறிதும் கவலை படாமல் துப்பாக்கியை பிடித்தப்படி மெல்ல நடந்து உள்ளே வந்தார் அவர்.
“சோ இந்த கலியுகத்தில் செத்த பிறகும் reincarnate போல் மீண்டும் பிறந்து வந்தது நீங்க ரெண்டு பேர் தான் இல்லையா ?” என்றார் அவர்.
தோளில் குண்டு பாய்ந்து இருக்க, மெல்ல எழுந்து அமர்ந்த ரணீத் அந்த இடத்தில் யாரை எதிர்பார்த்து இருந்தாலும், துப்பாக்கியுடன் நின்றிருந்த அந்த நபரை எதிர்பார்த்திருக்கவில்லை.
“நீயா?”என்றான் ரணீத் திகைப்புடன்.
“யெஸ் டாட் நானே தான். உங்க அன்பு மகள். ஆசை மகளான நானே தான்.” என்றாள் அங்கு துப்பாக்கியுடன் நின்றிருந்த டாலி.
“நீ எப்படி இங்கே?”என்றான் ரணீத் திகைப்புடன்.
“ஓஹ் …எப்படி உங்கள் மரணத்திற்கு வீட்டில் அழுது,புரண்டு கொண்டிருக்கவில்லை என்றாலும் பாரில் நல்லா குடிச்சிட்டு இல்லையென்றால், எவனுடனாவது இருந்திருக்க வேண்டிய நான் இங்கே இருக்கிறேன் என்று திகைக்க வேண்டாம்.
என் ஆசை அப்பா நீங்கள்.எவ்வளவு ட்ராமா செய்து செத்து பொய் இருக்கீங்க.உங்களை பார்த்து செத்ததற்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றால் எப்படிப்பா.?”என்றவளின் குரலில் இருந்தது நிச்சயம் நக்கல் தான்.
“நான் இங்கே இருப்பது உனக்கு எப்படி தெரியும்?”என்றான் ரணீத் திகைப்புடன்.
“நீ தான் இங்கே இருப்பதாய் சொன்னது.” என்றாள் டாலி விரக்தி முறுவலுடன்.
“நான் சொன்னேனா? உளறாதே. சந்தேகமே வராதா படி என்னை பற்றிய எல்லா id அழித்து விட்டு, ரத்த மாதிரி, உயரம் கூட ஒன்றாய் இருப்பவனை தான் நான் என்று உலகம் நம்ப வேண்டும் என்று எவிடென்ஸ் எல்லாம் தயார் செய்து போட்டு தள்ளினேன்.”என்றான் ரணீத் திகைப்புடன்.
“அங்கே தான் உன் கணக்கு மிஸ் ஆகி போச்சு. நீ போலி பாஸ்போர்ட் உடன் தப்பி செல்ல உனக்கு டைம் தேவைப்பட்டது. அந்த நேரம் கிடைக்க, நீ தான் icuவில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கே என்று செட் அப் எல்லாம் நல்லா தான் போட்டே. பட் இது தான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வது.
உன் வழிகளை அடைத்து கொண்டே வர பக்கா பிளான் போட்டாய் தான். ஆனால் என்ன ஒன்று ஆன் தி ஸ்பாட்டில் அவனை போட்டு தள்ளியிருந்திருக்க வேண்டும். குற்றுயிராக ஹாஸ்பிடல் கொண்டு செல்லும் வரை விட்டு அங்கே தான் தவறு செய்து விட்டாய்.” என்றாள் டாலி.
“புரியலை.”என்றான் ரணீத்.
‘பூல்ப்ரூப்/foolproof பிளான் அது. எப்படி மிஸ் ஆச்சு?இவளுக்கு தெரிந்து இருக்கிறது என்றால் வேறு யார் எல்லாம் அதை கண்டு பிடித்தது?’ என்ற குழப்பம் ரணீத் முகத்தில் மிக நன்றாகவே தெரிந்தது.
“ரொம்ப குழம்ப வேண்டாம்… மரணம் வரும் அந்த கடைசி நொடியில் கூட உடலை விட்டு உயிர் போகாமல் போராடுமாம். அதே தான் உன்னால் முகம் சிதைக்கப்பட்டு நீயாக போராடி கொண்டு இருந்தவனின் நிலையும். உயிர் போகும் அந்த கடைசி நொடியில் தன் பெயரை சொல்லி, தன் குழந்தைகளை பார்க்கவேண்டும் என்று சொல்லி தான் இறந்தான்.
சோ என் கையில் போன உயிர் என் அன்பு அப்பாவின் உயிர் இல்லையென்றால் என் அப்பா எங்கே? ஒருவேளை போலீஸ் தான் இவனை தவறாக நீ என்று அடையாளம் காட்டி விட்டார்களோ என்று தான் முதலில் யோசித்தேன். பின்னர் தான் புரிந்தது அவன் இறந்தது உன் காரில்.
போலீஸ்சுக்கு அழைத்து, ‘என்னை கொல்ல யாரோ தொடர்ந்து வருகிறார்கள்.’ என்று தகவல் கொடுத்திருந்தது நீயே தான் என்று. சோ ஏதோ ஒன்று மனதை போட்டு அரித்து கொண்டே இருந்தது. வீட்டில் சென்று எல்லாத்தையும் ஆராய்ந்தேன். அப்போ தான் நீ யாரு என்று தெரிய வந்தது.”என்றாள் டாலி.
“சான்ஸ் இல்லை.எல்லா ட்ரைவ் அழித்து விட்டேன்.என்னை பற்றி சிறு துப்பும் கிடைத்திருக்காது.”என்றான் ரணீத் கோபத்துடன்.
“லுக்…எல்லா குற்றவாளியும் தடுமாறும் ஒரு கணம் இருக்கும். அவர்களே தெரியாமல் ஏதாவது ஒரு தப்பை செய்து இருப்பார்கள். எவிடென்ஸ் விட்டு இருப்பார்கள்.அதுவும் கம்ப்யூட்டர் எல்லாம் எவ்வளவு தான் அழித்தாலும் அதில் டேட்டா அப்படியே தான் இருக்கும். அதுவும் என்னை போன்ற ஹேக்கர்ருக்கு எல்லாம் இது சுலபம்.
ஓஹ்! என்ன அப்படியொரு திகைப்பு? நான் எல்லாம் என்னத்தை படித்து இருப்பேன் என்று நினைத்து விட்டாய் போலிருக்கு. இந்தியாவில் டாப் பெண் ஹேக்கர்களில் நானும் ஒருத்தி. அதெல்லாம் பாசம் உள்ள அப்பாவாக இருந்தால் தெரிந்து இருக்கும், நான் என்ன படித்தேன், எங்கே என்ன செய்தேன் என்பதெல்லாம். அதற்கு முதலில் நீ மனிதனாய் இருந்திருக்க வேண்டும்.
உன் லேப்டாப் ஒன்று என்னிடம் இருந்தது. நீ தான் வருடத்திற்கு நான்கு வீடு மாற்றும் ஆள் ஆச்சே.எட்டாவது படித்து கொண்டிருந்தேன். அப்போ தான் வீடு மாற்றும் போது உன் பிஏ என்று அப்போ இருந்த ஒருவனிடம் உன் லேப்டாப் நெருப்பில் போட்டு அழிக்க சொல்லி கொடுத்தாய். அவனும் அழித்து விட்டதாய் தான் உன்னிடம் சொன்னான்.
ஆனால் அவன் சொன்னது பொய்.அந்த லேப்டாப் அழியவில்லை. அவன் அழிக்கும் முன்னே நான் எடுத்து வைத்திருந்தேன்.”என்றாள் டாலி.
“வாட்…உன்னிடம் என் லேப்டாப் இருக்கா?எதுக்கு எடுத்தே?” என்றான் கோபத்துடன் ரணீத்.
“பாசம் தான் காரணம் என்று சொன்னால் நீ நம்புவாயா?” என்றாள் டாலி வெறுப்புடன்.
“பாசமா?”என்றான் ரணீத் திகைப்புடன்.
“ஹ்ம்ம்…பாசம் தான்.அம்மா உயிரோடு இருந்த வரை உனக்கும் எனக்கும் நடுவே பாலமாய் இருந்தது அவங்க தான். நம்ம குடும்பமாய் இருந்ததும் அவங்க உயிரோடு இருக்கும் வரை தான். அந்த நினைவுகள் அந்த லேப்டாப்டில் தான் போட்டோவாய் இருந்தது. அம்மாவுடன் நான் சந்தோசமாய் இருந்த போட்டோ அது. மத்தவங்களை போல நாமும் குடும்பமாய் இருந்த காலம் அது. அம்மா தான் செத்துட்டாங்க. அவங்களுடன் அவர்கள் நினைவும் அழிவது எனக்கு உடன்பாடில்லை.
உடைந்தாலும் உடைந்த பொம்மையை எடுத்து பத்திரமாய் வைக்கும் குழந்தையின் மெண்டாலிட்டி தான் அன்று.எடுத்து ஒளித்து வைத்து கொண்டேன் உன் லேப்டாப். அன்று பாசமாய் நான் எடுத்து ஒளித்து வைத்தது இன்று எப்படி உன்னை அடையாளம் காட்டி இருக்கு பாரேன்.” என்றாள் டாலி.
ஒரு கணம் தன் தாயிற்காக ஏங்கும் ஒரு குழந்தையாக தான் தெரிந்தாள் டாலி ப்ரீத்தி, ஜெஸ்ஸி கண்களுக்கு.
“அதில் உன்னை காட்டி கொடுக்கும் வண்ணம் என்ன இருந்தது என்று ரொம்ப யோசிக்காதே. நீ எவ்வளவு தான் ஸ்டெகனோகிரபி தொழில்நுட்பம் கொண்டு உன் அரக்கத் தனத்தை எல்லாம் மறைத்து வைத்திருந்தாலும் எல்லாம் தெரிந்து போச்சு. அந்த லேப்டாப் முழுவதும் பூ, இயற்கை காட்சி படம் என்று பொதுவாய் பார்ப்பவர் கண்களுக்கு தெரியும்.ஆனால் அந்த படங்களின் பின் இருந்த ரகசியம் நான் கண்டு பிடித்து விட்டேன்.
முதல் படம் கிளி அதன் பின் இருந்தது.அர்ஜுன் பாட்டியை கொன்ற அன்று எடுக்க பட்ட போட்டோ. அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்த உன் ஆள் எடுத்த போட்டோ. ரெண்டாவது போட்டோ ஒரு அழகான நாய் குட்டியின் போட்டோ.அதன் பின் இருந்தது அர்ஜுன் அத்தையை கொன்ற அன்று, அவர்களை கொன்ற நீ கொஞ்சம் தள்ளி நின்று போட்டோ எடுத்திருக்க வேண்டும். உன் ரிப்ளெக்ஸன் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்திருக்கு. அதை கூட கவனிக்காமல் போட்டோ எடுத்திருக்கே. அடுத்து இருந்த போட்டோ ஒரு தாஜ்மஹால். அதன் பின் இருந்தது என் பர்த் செர்டிபிகேட் .”என்றாள் டாலி.
ரணீத் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் மாறி போனது.
“கோவா யூனியன் பிரேதேசம் கொடுத்த பர்த் செர்டிபிகேட் அது. அதாவது நான் பிறந்த ஐந்து வருடம் கழித்து இதுநாள் வரை நான் அம்மா என்று நினைத்து இருந்தவங்களை நீ மணந்து இருக்கே.
சோ அவங்க என் அம்மா இல்லை.சோ அவங்க மரணமும் அச்சிடேன்ட் இல்லை.சோ ஐந்து வருடம் முன்பு உன் இமேஜ் அதிகமாக, நீ கருணை வள்ளல் என்று மக்களை நம்ப வைக்க, கோவா சர்ச்சுக்கு சொந்தமான அனாதை இல்லத்தில் இருந்து என்னை தத்து எடுத்து இருக்கே. அதானே…என்ன பிளான் உன்னுடையது.வாவ்…அனாதையை தத்து எடுத்து உன் மகள் என்று சொல்லி வளர்த்து, உண்மை தெரிந்தவர்கள் உன்னை நல்லவன் என்று வாழ்த்த என்னவெல்லாம் செய்து இருக்கே.” என்றாள் டாலி.
“யெஸ் நீ அனாதை தான்.கோவா சர்ச்சில் இருந்து தான் உன்னை எடுத்தேன்.என் இமேஜ் பஞ்சாபில் அதிகமானும் என்று ஒரு இன்ஸ்டன்ட் குடும்பம் உருவாக்கினேன்.அதற்கு என்ன?”என்றான் ரணீத் அவன் குரலில் அத்தனை வன்மம் பொங்கி வழிந்தது.
கண்களில் கண்ணீர் வழிய அது நாள் வரை தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்தவனை வெறிக்க மட்டுமே முடிந்தது டாலியால். சிறு வயதில் தாயாய் வளர்த்த பெண்மணியை தந்தை என்ற நிலையில் இருந்தவனே கொன்று இருக்கிறான். அந்த பெண்மணி இறந்ததும் சரி எது,தவறு எது என்று சொல்லி கொடுக்க ஆள் இல்லாமல் கூடா நட்பால் கேடாய் மாறி போன தன் வாழ்க்கையை நினைத்து டாலிக்கு இதயம் வலித்தது.
‘இவன் வாழ்வில் வந்திருக்கவில்லை என்றால் அனாதை இல்லம் என்றாலும் அங்கு ஒழுங்காய் வளர்ந்திருப்பேனே.பாவி…எதுவுமே உண்மை இல்லை.இவன் ஆட்டத்தில் நான் வெறும் பலியாடு அவ்வளவு தான்.’என்ற நினைவை தடுக்க முடியாத டாலி உடைந்து போய் நின்றாள்.
அவளின் அந்த நிலை ரணீத்துக்கு அத்தனை மகிழ்சியை கொடுத்தது.
“அதுக்கு தான் டாலி சொல்றது.ஓவர்ராக ஆட கூடாது என்று… இப்போ பார் நீ அப்பா அம்மா பெயர் தெரியாத ஒரு அனாதை. பிளாட்பார்ம்…எத்தனை ஷோ காட்டிட்டு திமிராய் நீ இருந்த காலம் எல்லாம் நினைவுக்கு வருதா…அப்படியே கத்தியை விட்டு நெஞ்சை அறுப்பது போல் வலிக்குமே…இனி உலகத்தின் முன் எப்படி இந்த முகத்துடன் நடப்பாய் டாலி…சல்லி காசுக்கு யூஸ் இல்லை நீ…”என்றான் ரணீத் கொக்கரிப்பாக.
“அவங்களை…எனக்கு அம்மாவாய் இருந்தவங்களை எதுக்கு கொன்றே…என்னை சொந்த பெண் மாதிரி தானே வளர்த்தாங்க.”என்றாள் டாலி கண்களில் கண்ணீர் வழிய.
‘அவர்களாவது உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இந்த நிலைமை இல்லையே’என்று ஊமையாய் அழுதது மனம்.
தவறு செய்யும் போது தூங்க வைக்கப்படும் மனசாட்சி எழுந்து விட்டால்,இப்படி தானோ.உள் இருந்தே கொல்லாமல் கொன்று கொண்டிருக்கும்?’என்று தவித்தாள் டாலி.
“பின்னே என் வழிக்கு குறுக்கே வந்தால் அது அந்த கடவுளாய் இருந்தாலும் கொல்லாமல் விடமாட்டேன்.அந்த அனாதை நாய் என்னையே காட்டி கொடுக்க துணிந்தால் விட்டு விடுவேனா என்ன? எவ்வளவு பக்கா பிளான் போட்டேன் தெரியுமா?
கோவா சர்ச்சில் அனாதையான உன்னை தத்து எடுத்து, அங்கே இருந்த அனாதை பெண்ணை மணந்து எனக்கு எவ்வளவு பெரிய மனது என்று பஞ்சாபில் உள்ள அனைவரையும் நம்ப வைத்து, வெளியே தெரியாமல் என் வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.
பொண்டாட்டி என்றால் புருஷன் சம்பாதித்து வரும் காசை வாங்கி வச்சிட்டு அவனுக்கு சமைச்சி போட்டுட்டு, தேவைப்படும் போது xxx xxxx எல்லாம் கொடுத்துட்டு மூடிட்டு இருக்கணும்.அதை விட்டுட்டு பெரிய டிடெக்ட்டிவ் மாதிரி துப்பு துலக்கி,போலீஸ் கிட்டே போகிறேன் என்றால் விட்டு வைக்க நான் என்ன லூசா?அதான் போட்டு தள்ளிட்டேன்.
யு நோ அனாதையை மணந்தவன்,தத்து எடுத்தவன் என்ற பெயரை விட, பொண்டாட்டியை இழந்தவன் என்ற செண்டிமெண்ட் செமையா ஒர்க் ஆகுச்சு.தன்வி உன்னை வளர்க்கிறேன் என்று முன் வந்தது பஞ்சாப் அரசியலில் நான் நுழைய வழி காட்டியது.”என்றான் ரணீத்.
டாலி திகைத்து நிற்க, இடியென நகைத்தான் ரணீத் அவள் நிலைமையை கண்டு.
ரணீத் நகைத்து கொண்டு இருக்க, டாலி திகைப்பில் உறைந்து போய் நிற்க, “இட்ஸ் எ லை…பொய்”என்ற குரல் அந்த கோடௌனில் எதிரொலித்தது.
சிரித்து கொண்டு இருந்த ரணீத், திகைப்பில் உறைந்து போய் இருந்த டாலி இருவரும் திரும்பி பார்க்க அங்கே ப்ரீத்தி ஆழந்த சிந்தனையில் இருந்தாள்.
“வாட்…பொய்யா?எது பொய் ?”என்றான் ரணீத்.
“நான் ஒரு சின்ன கதை சொல்றேன்…அதை நன்றாக கேட்டுட்டு நீ சொன்னதில் எது பொய் என்று சொல்லு பார்ப்போம். மெக்ஸிகோ என்ற ஒரு நாடு.அங்கே போதை மருந்து எல்லாம் கார்டெல் என்பவர்களின் கையில்.எந்த பஞ்சமாபாதகத்திற்கும் அஞ்சாத கூட்டம்.அந்த கூட்டத்துடன் பதினைந்து வயது சிறுவனுக்கு நட்பு ஏற்பட்டது. போதை மருந்து விற்க ஆரம்பித்தவன் அந்த தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளை கறக்க ஆரம்பித்தான்.
அந்த சமயம் தான் அந்த நாட்டின் ப்ரெசிடெண்ட் போதை மருந்து கூட்டத்தின் ஆட்டத்தை அழிக்க மேஜர் அர்ஜான் என்பவரை ஸ்பெஷல் கமாண்டோவாக நியமித்தார்.அர்ஜான் யார்,என்ன என்று யாருக்குமே தெரியாது.தே ஆர் கோஸ்ட் ஆர்மி.
சோ இவங்க வேட்டை அந்த கூட்டத்திற்கு தலைவலியை கொடுக்க, திணறி கொண்டு இருந்த கூட்டத்திற்கு ரைட் வரும் தகவலை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான் அந்த சிறுவன்.அவன் காப்பாற்றி கொடுத்த ஷிப்மென்ட்டுக்கு பரிசாக ஸுல்பா என்ற அழகான சிறுமியை பரிசளித்தார்கள்.
அந்த சிறுமியின் அழகின் மேல் அந்த சிறுவனுக்கு அப்படி ஒரு obsession.வெறி என்று கூட சொல்லலாம்.நான்கு குழந்தைகள் பிறந்த பிறகும் கூட ஸுல்பா அவனுக்கு ஸ்பெஷல்.அது தெரியாத மேஜர் அர்ஜான் ரைட் வந்த வீட்டில் இருந்த ஸுல்பாவை காப்பாற்றி அழைத்து சென்றது அவனுக்கு வெறியேற்றி விட்டது.
யார் என்று தெரியாமல் பைத்தியம் பிடிக்காத குறையாய் சுற்றி கொண்டு இருந்தவனுக்கு ஒரு சண்டையின் மூலம் தடயம் கிடைத்தது.அது ஒரு கணவனுக்கும் மனைவிக்குமான சண்டை.அந்த புருஷனுக்கு பல பெண்களுடன் தொடர்ப்பு உண்டு என்பது மனைவியின் குற்றசாட்டு.
அது உண்மை என்று நம்பி பல வருடங்களுக்கு முன்பே அவர் மகள் இந்தியா சென்று விட்டு இருந்தார்.அந்த சண்டையில் அந்த மனைவி தன் தூரத்து உறவான அந்த பையனிடம் தன் கணவன் யாரோ ஒருத்தியை காப்பாற்றி வந்து தனி குடும்பம் வைத்திருக்கிறார் என்று புலம்பி இருக்கிறார்.அந்த பையன்னுக்கு அவர் தான் அந்த ஸ்பெஷல் கமாண்டோ என்பது புரிந்து போக, போதை மருந்து கூட்டத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறான்.
அதற்கு முன்னே ஸுல்பாவை அந்த நாட்டில் இருந்து வெளியேற்ற அர்ஜான் தனக்கு ட்ரைனிங் கொடுத்த உபிந்தர் காண்டாக்ட் செய்திருக்கிறார். அவர் வருவதற்குள் அந்த கிராமத்தையே கொளுத்தி இருக்கிறார்கள் போதை மருந்து கூட்டத்தினர்.
ஸுல்பா கண்ணுக்கு முன்னாடியே அவங்க குழந்தைகளை நீ கொன்றிருக்கிறாய். அவங்களையும் கொல்ல முயன்றதை அர்ஜான் தடுத்து காப்பாற்றி அர்ஜுன் தாத்தா கிட்டே ஒப்படைத்து விட்டு இறந்து விட்டார். அதில் ஸுல்பா முகம் சிதைந்து போய் இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது ராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தை கொன்று குவித்தால் சும்மா இருப்பார்களா அரசாங்கம்…அவங்க வலையில் இருந்து நீ தப்பி கோவாக்கு வந்துட்டே…சரியா?”என்றாள் ப்ரீத்தி.
“நூறு சதவீதம் உண்மை….ஆமா நான் தான் தன்வி அப்பா கொல்லபட காரணம். அது மட்டுமில்லை அந்த முப்பது ராணுவ வீரர்களையும் அவங்க குடும்பத்தினர்களையும் காட்டி கொடுத்தது நான் தான். அதற்காக பல கோடி ரூபாய் வாங்கி கொண்டேன் தான்…. என்னிடம் அடிமையாக இருந்த ஒருத்தியை மீட்டு கொண்டு போனால் சும்மா இருப்பேனா?
அதான் மீட்ட அர்ஜான்னையும் கொன்றேன்.எவ்வளவு தைரியம் இருந்தால் ஒருத்தன் வந்து மீட்கிறான் என்று அவன் கூட அந்த நாய் போகும்….அதான் அவள் கண் முன்னேரே அவள் மூன்று குழந்தைகளையும் கொன்றேன்….கதறி துடிச்சா பாரு… பார்க்கவே அவ்வளவு நன்றாக இருந்தது….அப்படி ஒரு சந்தோசம். அவளையும் போடுவதற்குள் அந்த அர்ஜான் நாய் குறுக்கா வந்து என் கையால் பரலோகம் போனான்….”என்றான் ரணீத் வெறியுடன்.
“காட் யு ரணீத்….நான் நீ சொல்வதாய் சொன்ன பொய்க்கு ஆதாரம் கொடுத்ததற்கு….இப்போ ஆல் கிளியர்.”என்றாள் ப்ரீத்தி நக்கலாக.
“வாட்?”என்றான் ரணீத் கோபத்துடன்.
“அந்த கதை அத்துடன் முடியலை ரணீத்.நீ ஸுல்பாவை கொல்வதற்குள் அங்கே ராணுவமும் அர்ஜுன் தாத்தாவும் வந்துட்டாங்க. அவங்க கிட்டே இருந்து தப்புவது என்றால் அத்தனை சுலபம் இல்லை.ஆனா நீ தப்பியிருக்கே…ரஞ்சித் மெக்ஸிகோ ராணுவத்துடன் பேசும் போது அவங்க சில டீடெயில்ஸ் கொடுத்தாங்க.
அதில் அர்ஜான் கொல்லப்பட்ட அன்று மெக்ஸிகோவில் இருந்து 350 பேர் பல்வேறு நாடுகளுக்கு போய் இருக்காங்க. இந்தியாவிற்கு பயணம் செய்தது நூற்றியம்பது பேர்.அதில் எழுபத்திஐந்து பேர் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். நாற்பத்தி ஐந்து பேர் பெண்கள்.எழுபது பேர் மெடிக்கல் எமெர்ஜென்சி என்று பயணித்தவர்கள். மீதம் உள்ள ஐந்து பேரில் இருபது வயதிற்குள், மெக்ஸிகோ சர்ச் மூலம் கோவாக்கு வந்த ஒரே ஆள் நீ தான் ரணீத்.”என்றாள் ப்ரீத்தி.
“சோ வாட்.?அதில் என்ன இருக்கு.ஆமா மெடிக்கல் எமெர்ஜென்சி என்று ட்ராமா ஆடி தான் மெக்ஸிகோ சர்ச் மூலம் கோவா சர்ச்சுக்கு வந்தேன்.இதில் என்ன இருக்கு?”என்றான் ரணீத் தோளை குலுக்கி.
“அதில் தான் எல்லாமே இருக்கு ரணீத். மெடிக்கல் எமெர்ஜென்சி உனக்கு என்று சொல்லியா பயணப்பட்டே?”என்றாள் ப்ரீத்தி புன்னகையுடன்.
அதுவரை இருந்த புன்னகை மறைய ரணீத் முகம் இருண்டு போனது.
“உபிந்தர் தாத்தா கிட்டே பேசும் போது அவர் சொன்னார், அத்தனை பலத்த காவலை மீறி அவன் எப்படி தப்பித்தான் என்று யாருக்குமே தெரியலை.உதவி இல்லையென்றால் தப்பித்தே இருக்க முடியாது.யார் அவனுக்கு உதவியது என்றே தெரியவில்லை என்று புலம்பிட்டு இருந்தார்.சோ எனக்குள் இந்த விஷயம் உறுத்திட்டே இருந்தது.எப்படி நீ எஸ்கேப் ஆனே என்று. நீ தப்ப உனக்கு உதவி செய்தது யார் என்று.அதற்கான விடை நீயே கொடுத்துட்டே…உனக்கு ஹெல்ப் செய்தது டாலி தான் என்று.”என்றாள் ப்ரீத்தி.
“வாட் நானா?”என்றாள் டாலி திகைப்புடன்.
“ஹ்ம்ம் நீயே தான் டாலி.உன்னை வைத்து தான் அவன் மெக்ஸிகோவில் இருந்து தப்பி வந்தான்.”என்ற ப்ரீத்தியின் பேச்சு அங்கிருந்தவர்களுக்கு திகைப்பை கொடுத்தது.
“இவன் மெக்ஸிகோவில் இருந்து தப்பிய சமயம் என்றால் நான் பிறந்து ஆறு மாதம் இருக்கலாம் ப்ரீத்தி.அப்போ நான் குழந்தை. நான் எப்படி இவனுக்கு உதவி இருக்க முடியும்?”என்றாள் டாலி குழப்பத்துடன்.
“குழந்தையாய் இருந்த உன்னை வைத்து தான் இவன் தப்பித்ததே…அவன் சொன்னதை நீ கவனிக்கவே இல்லையா? தன் மூன்று குழந்தைகளை கொன்றதாய் அவனே சொன்னான்.” என்றாள் ப்ரீத்தி.
“ஆமா அதற்கென்ன?”என்றாள் டாலி.
“அவனுக்கு ஸுல்பாவுடன் பிறந்தது மொத்தம் நான்கு குழந்தைங்க டாலி. அவன் கொன்றதாய் சொன்னது மூன்று. அப்போ அந்த இன்னொரு குழந்தை நீயாக தான் இருக்க முடியும். அங்கங்கே அனாதைகளை தத்து எடுத்து சொந்த குழந்தை என்பார்கள்.இவன் தான் அரக்கன் ஆச்சே.தன்னுடைய சொந்த குழந்தையை அனாதை என்று சொல்லி அதன் மூலமாய் சிம்பதி கிரியேட் செய்து, சொந்த மகளை அனாதை என்று சர்ச் மூலம் தத்து எடுத்திருக்கும் கிரிமினல் இவன்.”என்றாள் ப்ரீத்தி கோபத்துடன்.
ப்ரீத்தி சொன்னதை டைஜஸ்ட் செய்யவே டாலிக்கு முடியவில்லை.
“என்ன சொல்றே நீ?”என்றாள் ஸ்தம்பித்தவளாய்.
“யெஸ் அவ சொன்னது உண்மை தான்.ராணுவம் சுத்தி வளைத்த போது என் கண்ணில் நீ பட்ட.அப்போ தான் புரிந்தது உன்னை நான் இன்னும் கொல்லவில்லை என்பது.இன்னும் ஒரு அடி அதிகமாய் அடித்திருந்தால் அந்த இடத்தில் நீ க்ளோஸ்.அடுத்த அடி அடிப்பதற்குள் ராணுவம் வரும் சவுண்ட் கேட்டுச்சு.சோ உன் மேல் இருந்த ரத்தத்தை எல்லாம் எடுத்து என் மேல் பூசிட்டு உன்னை கையில் வைத்து அழுவது மாதிரி நடித்து கொண்டு இருந்தேன்.
ராணுவம் நானும் அந்த போதை மருந்து குழுவால் பாதிக்கப்பட்டவன் என்று நினைத்து மெக்ஸிகோ சர்ச் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமிற்கு அனுப்பினார்கள். அங்கு உனக்கு டிரீட்மென்ட் நடந்தது.நானும் ராணுவம் கண்ணில் சிக்காமல் இருந்தேன்.அங்கிருந்து கோவா ஹோச்பிடலுக்கு உன்னை மேலும் டிரீட்மென்ட் அனுப்ப போவதாய் அந்த பாதர் சொன்னார்.உன்னுடன் சுலபமாய் நானும் இந்தியா வந்துட்டேன்.
ஐந்து வருடம் ஒளிந்து மறைந்து அங்கே உன்னுடன் தான் இருந்தேன். அங்கேயே உன்னை தத்து எடுத்தேன்.அங்கே இருந்த அனாதை ஒருத்தியையும் மணந்தேன்.உங்களுடன் பஞ்சாப் திரும்பி அங்கே போதை மருந்து தொழிலை அமோகமாய் ஆரம்பித்தேன்.
சோ அன்று என் உயிரை காப்பாற்றியது என் ஆசை மகளே நீ தான்.உன்னை கொல்ல முயன்றது எனக்கு மிகவும் யூஸ் ஆனது.மெக்ஸிகோவில் இருந்து நான் தப்பிக்க உயிருக்கு போராடி கொண்டிருந்த நீ தான் காரணம்.ஆறு மாத குழந்தையாய் இருந்த போதே உன்னை வைத்து தான் நான் தப்பினேன். அதற்கு தேங்க்ஸ்.ஆனால் இப்போ என் எல்லா ரகசியங்களை தெரிந்து கொண்ட நீங்க மூவர் உயிரோடு இருக்க கூடாது. சோ பை பை.”என்றவன் கண் ஜாடை காட்ட அங்கே துப்பாக்கிகள் முழங்க ஆரம்பித்தது.
பயணம் தொடரும் …