ஊரு விட்டு ஊரு வந்து —12
காஜலுக்கு வயது நாற்பத்திற்குள் இருக்கலாம் .ஆனால் முப்பது என்று மட்டுமே சொல்ல தோன்றும் உருவ அமைப்பு. ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா என்றால் நம்ப முடியாத உடல் அமைப்பு அவளுடையது .ஒரு elegance அவளிடம் இருந்தது.
காஜலின் நான்கு வயது சிறுவன் yashwanth-இவன் தான் ப்ரீத்தி மேல், ஏர்போர்ட்டுக்கு வெளியே பால் அடித்த வாண்டு .அடுத்து கை குழந்தை,பெண் harpreet . உணவு தயார் செய்வதற்க்கு கூட விடாமல் இருவரும் காஜலை படுத்தி எடுத்து கொண்டு இருந்தனர் .ரெண்டின் அழுகையும் அதிகமாக அங்கே இருந்தவர்கள் டென்ஷன் ஆக ஆரம்பித்தார்கள் .
“மேடம் !ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் சில்ட்ரன் “என்றார் விமான பணிப்பெண் .
பொறுத்து பார்த்த ப்ரீத்தி,காஜலின் கஷ்டம் அறிந்து ,கத்தி கொண்டு இருந்த யஷ்வந்த்தை, அலேக்கா தூக்கி தன் இடத்திற்கு கொண்டு சென்றாள் .அவனுக்கு மேஜிக் செய்து அவன் கவனத்தை திசை திரும்பியவள் ,காஜலுக்கு கை காட்ட கை குழந்தையின் பசியினை ஆற்ற ஆரம்பித்தாள் .
அதற்குள் விமான பணிப்பெண்ணிடம் சிறுவனுக்கு கேக் ,ஜூஸ் ,நூடுல்ஸ் எடுத்து வர சொன்ன ப்ரீத்தி அவனுடன் கதை பேசி கொண்டே அவனுக்கு ஊட்டி விட,பசியில் இருந்தவன் அமைதியாய் சாப்பிட்டு விட்டு சற்று நேரம் டிவியில் ஓடிய கார்ட்டூன் பார்த்து விட்டு,ப்ரீத்தி நெஞ்சினில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தான் .
அதற்குள் காஜலும் தன் பெண்ணிற்கு பசியாற்றி இருக்க,அந்த குழந்தையும் உறங்க ஆரம்பித்து இருந்தது . காஜலின் மகனை தன் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்த ப்ரீத்தி, கை குழந்தையை பெற்று கொண்டாள் .
“கோ ரிலாக்ஸ்.ட்ரிங்க் சம்திங் பர்ஸ்ட்.”என்றாள்.
“தேங்க்ஸ்”என்ற காஜல், ரெஸ்ட்ரூமிற்கு ஓடாத குறையாய் செல்ல, அவளுக்கு ஆப்பிள் ஜூஸ் வரவழைத்தாள் .
முகம்,கை கால் அலம்பி வந்த காஜலிடம் ஜூஸினை நீட்ட ,அதை வேகமாக அவள் பருகிய விதமே அவள் எத்தனை பசியில் இருக்கிறாள் என்பதை கண்டு கொண்ட ப்ரீத்தி ,மேலும் உணவினை வரவழைத்து தர, அதை ஆர்டர் செய்யும் அளவிற்கு கூட உடம்பில் தெம்பு இல்லாது இருந்த அவள் நன்றி பார்வை ஒன்றினை செலுத்தி விட்டு வெகு வேகமாக உண்டு முடித்தாள் .
உண்ட களைப்பில் கண் மூடி சற்று நேரம் அமர்ந்து இருந்தாள் காஜல் .காஜலின் கை குழந்தை ப்ரீத்தி தோளில் உறங்கி கொண்டு இருந்தது .காஜல் வாயை திறக்கும் வரை ப்ரீதியாய் சென்று எதையும் பேசவில்லை.
தன்னை சமாளித்து கொண்ட அவள்,”ரொம்ப தேங்க்ஸ்.நீங்க இல்லை என்றால் ,நான் கத்திட்டே இருப்பேன்.” என்றாள் உடைந்த தமிழில் .
“ஓஹ்! உங்களுக்கு தமிழ் தெரியுமா? பார்க்க வடநாட்டுக்காரங்க மாதிரி இருக்கீங்களே என்று பார்த்தேன் .”என்றாள் ப்ரீத்தி .
“கரெக்ட் டா தான் கெஸ் செய்து இருக்கீங்க .நான் பஞ்சாபி தான் .குடும்பம் தமிழ்நாட்டிற்கு எப்பவோ வந்துட்டோம் .நான் வளர்ந்தது எல்லாம் இங்கே தான் .தமிழ் வரும் .என் பெயர் காஜல் ரப்தார் பாட்டியா .”என்றாள் அவள் .
(என்னது ரப்தார் பாட்டியவா? கிழிஞ்சுது …நீ யாருக்கு தூரத்து சொந்தம் அர்ஜுனுக்கா இல்லை அமனுக்கா ?)
“ஹாய் ஐ ஆம் ப்ரீத்தி ஜெகன்நாதன்.”என்றாள் ப்ரீத்தி.
“எங்கே போறீங்க டெல்லிக்கா?”என்றாள் காஜல் .
“இல்லை பஞ்சாபில் பதிண்டா நகரத்திற்குஅங்கு தான் வேலை கிடைத்து இருக்கு.”என்றாள் ப்ரீத்தி.
“ஏய்!… அது என் ஊரு தான். எல்லா ரிலேட்டிவ்ஸ் அங்கே தான் இருக்கு…அங்கே எல்லோரையும் எனக்கு தெரியும்…அங்கே யார் கிட்டே வேலைக்கு சேர்ந்து இருக்கீங்க”?என்றாள் காஜல்.
“ரப்தார் பாட்டியா….விவசாயம்,export செய்யறாங்களே, ஹோட்டல் கூட இருக்காம்.”என்று ப்ரீத்தி முழு விவரம் சொல்வதற்குள்,”ஹை அப்போ நீங்க எங்க அர்ஜு னை தான் பார்க்க போறீங்களா ?”என்ற காஜல் அதற்கு பிறகு அர்ஜுன் புகழை பாடியதில்,தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட அர்ஜுன் பற்றி ஒப்பிக்கும் நிலையில் இருந்தாள் ப்ரீத்தி.
மீண்டும் விதி தன் விளையாட்டை காஜல் மூலம் ஆடி இருந்தது.எங்கே போகிறோம் என்று தெரியாமல் வந்து கொண்டு இருந்த ப்ரீத்திக்கு,அவள் செல்ல வேண்டிய இடம் என்று தவறாய் “அர்ஜுன் “பக்கம் கை காட்டி இருந்தாள் காஜல் -அதாவது அமன் வீட்டுக்கு செல்ல வேண்டியவளை அர்ஜுன் பக்கம் தள்ளி இருந்தது விதி.
(போச்சு டிக்கெட் மாறியது போதாது என்று யாரிடம் செல்ல வேண்டுமோ அந்த இடமும் மாறி போச்சு அமன் ஜோடி அர்ஜுனுக்கு ,அர்ஜுன் ஜோடி அமன்னுக்கு .)
தன் தம்பியிடம் வேலைக்கு செல்லும் பெண்,உற்ற சமயத்தில் உதவிய ப்ரீத்தியின் குணம் காஜலை பெரிதாக கவர்ந்து விட ,பிலைட் கிளம்பியதில் இருந்து பேசி பேசி இருவரும் தோழிகளாகி இருந்தனர் .
ப்ரீத்தி பப்ளி கேர்ள்.அவள் இருக்கும் இடமே சந்தோஷத்தால் நிரம்பி இருக்கும்.இரு பாலரையும் கவர்ந்து விடுவதில் ப்ரீத்தி ஒரு யக்ஷினி.ஆழ்ந்த நட்பும் ,குபீர் சிரிப்புகளும் அந்த பெண்களின் பயணத்தை இனிமையாக்கி கொண்டு இருந்தது.இது போன்ற தோழமை ஏற்படுவது ஒரு வரம் என்றால் மிகையல்ல .
“அர்ஜு னை எந்த விஷயமா பார்க்க போறீங்க ப்ரீத்தி?” என்றாள் காஜல் தன் தம்பியின் குணம் நன்கு அறிந்ததால் ,வெளி மாநிலத்தில் இருந்து எல்லாம் அவன் வேலைக்கு எடுத்தது இல்லை, அதுவும் அழகான இளம் பெண்ணை .
“ நம்ம ஊரிலேயே வேலை இல்லாமல் இருக்காங்க .அவங்க பசியினை முதலில் போக்குவோம் .தொழில் மற்ற மாநிலங்களில் ஆரம்பித்தால் அங்கு உள்ளவர்களுக்கும் வேலை கொடுப்போம். இங்கே வயிறு வாடாமல் இருக்கட்டும். பின்னர் விரிவாக்கத்தை பற்றி யோசிப்போம்”’என்று அவளிடமே சொன்னவன் இப்பொழுது காரியதரிசியாக தமிழ்நாட்டில் இருந்து ஒரு பெண்ணை எதற்காக தேர்ந்து எடுக்க வேண்டும்?
ஏற்கனவே வேலை விஷயம் என்று சொல்லி விம்,சபீனா போட்டு விளக்கியும் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்த காஜலை கண்ட ப்ரீத்தியின் முகம் குறும்பால் ஒளிர ஆரம்பித்தது .
“காஜல்!”என்று மெல்லிய குரலில் அழைத்த ப்ரீத்தி, சுற்றும் முற்றும் பார்க்க ,அவள் ஏதோ ரகசியம் சொல்ல வருகிறாள் என்றதும் காஜலின் ஆர்வம் அதிகமானது .”எனக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை உங்க அர்ஜுன் தான்.அவர் யாரு ,எப்படி ,அவங்க குடும்பம் எப்படி,பின்புலம் எப்படி,வேலை எல்லாம் எப்படி போகுது என்பதை அவரே அறியாமல் தெரிந்து கொள்ள தான் மேனஜர் போஸ்டுக்கு ஹர்பிர் அங்கிள் ஏற்பாடு செய்து இருக்கார்.வேலைக்கு வேலையும் ஆச்சு ,உங்க அண்ணாவை அவங்க குடும்பத்தை பத்தி தெரிந்து கொண்டது போல் ஆனது .எப்படி என் ஐடியா ?மேரா அர்ஜுன்! main raaste par hoon/உங்களை தேடி வந்துட்டே இருக்கேன் “என்று ஆங்கிலத்தில்,ஹிந்தியில் உருகிய ப்ரீத்தியை திறந்த வாய் மூடாமல் பார்த்தாள் காஜல் .
யஷ்வந்த் சிணுங்க குழந்தை ஹர்ப்ரீத்தை காஜலிடம் கொடுத்து விட்டு அவனை சமாதானம் செய்ய ப்ரீத்தி எழுந்து சென்றாள் .கையில் வைத்து இருந்த போனை கையில் எடுத்த காஜல்,கை பட்டு தவறுதலாய் அவர்கள் பேச்சு ரெகார்ட் ஆகி இருந்த இருப்பதை கண்டு புன்னகைத்தாள். விதியும் தன் வேலையை நினைத்து சிரித்து கொண்டு இருந்தது .
“டேய் அர்ஜுன்! வசமா சிக்கிட்டே.”என்று வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்பி வைத்தாள் காஜல்.
“ஏய் குரங்கே! விமானம் கிளம்பிடுச்சா ?”என்ற பதில் வந்தது அர்ஜுனிடம் இருந்து.
“போ உன் கூட பேச மாட்டேன் .”
“யப்பா கிரேட் எஸ்கேப் .என் காது தப்பிச்சது காஜல். நீ கார்வ சவுத் விரதத்தோடு(வடநாட்டு சுமங்கலி பூஜை ) இன்னொரு விரதமும் இனி இரு.அது தான் மௌன விரதம். உலகத்திற்கே நல்லது .”என்றான் அர்ஜுன் பதிலில் .
“இனி என் பேச்சு எல்லாம் எப்படி கேட்க பிடிக்கும் ப்ரோ உனக்கு ? என்ன உலகம் அழிய போகுதா ப்ரோ? இந்நேரம் பத்து ஊருக்கு சத்தம் கேட்கும் அளவு குறட்டை விட்டு தூங்கிட்டு இருப்பே. அணுகுண்டு வெடிச்சா கூட தூக்கம் முக்கியம் என்று சவுண்ட் விடுவே. ராத்திரி ரெண்டு மணிக்கு முழிச்சி full போரம்ல இருக்கே. கியா வூ ஹா /என்ன விஷயம் ப்ரோ ?”என்றாள் காஜல் .
தன் அறையில் ஜன்னல் அருகே நின்று வெண்ணிலவை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அர்ஜுன் ,தன் தலையை கோதியவாறு புன்னகையுடன் , “தூக்கம் வரலை .” என்று மெசேஜ் தட்டி விட்டான்.
“எப்படி வரும்? வெள்ளை டிரஸ் தேவதை பத்தி நினைச்சிட்டு இருந்தா தூக்கம் எப்படி வரும்? அதுவும் ஜீன்ஸ் போட்ட தேவதை…பெஹன் வேலை விட்டு வர்றேன் .பெத்த கோடீஸ்வரன் என்று பெயர். ஒரு வேலை ரெடி செய்வோம் என்று இல்லாம நச்சுன்னு ஒரு பிகர் வந்த உடன் என்னை மறந்துட்டே இல்லை.போடா போடா…இந்த முறை ராக்கி உனக்கு எதுவும் கிடையாது .துரோகி துரோகி .”என்றாள் காஜல்
“பிகரா !யார் அது ?’என்றான் அர்ஜுன் யோசிப்பது போல் ஸ்மைலி அமைத்து மெசேஜ் அனுப்பியவன் ,அடுத்த நொடி காஜலை அழைத்து இருந்தான் .
“பெஹன்ஜி !எப்படி இருக்கே !”என்றான் குரலில் பாசம் பொங்க
“கெட் லாஸ்ட் மங்கூஸ்.அக்கா கூட பேச கூட இவ்வளவு நாள் உனக்கு டைம் இல்லை. இப்போ ஒரு பிகர் பத்தி சொன்னதும் கால் வருது .”என்றாள் காஜல் போலி கோபத்துடன் .
” உங்க மாமனார் வீட்டு ஆளுங்களுக்கு அந்த அமன் தான் குரு ,தெய்வம் ,குதா எல்லாம். என் கூட பேசினே உன்னை தான் ஓட விட்டு அடிப்பாங்க. இப்போ தான் குடும்பத்தில் ஒரு பெரியசண்டை வந்து , தமிழ்நாடு விட்டு இங்கே வந்து இருக்கே! திரும்பவும் வேண்டுமா? உன் கூட பேசவில்லை என்றால் பாசம் இல்லை என்று ஆகி விடுமா பெஹன் ?என்றான் அர்ஜுன்.
“ஆமா நான் வந்துட்டாலும்…இனி உனக்கு என்னை எல்லாம் கண்ணுக்கு தெரியுமா? அதான் ரம்மில் ஊற வச்ச ஸ்ட்ராபெர்ரி மாதிரி கும்முன்னு இருக்கும் ஆளை செட் செய்துட்டியே .என்னை எல்லாம் யார் என்று தெரியாது தான் .”என்றாள் காஜல்.
“ச்சே இம்சை .விஷயத்தை சொல்லு .யாரு அந்த ரம் பார்ட்டி .”என்றான் அர்ஜுன் .
“ஜொள்ளு அதிகமா இருக்கு…சரி பொழைச்சி போ…உன்னை தேடி வந்து கொண்டு இருக்கும் உன் ப்ரீத்தி தான். ஆள் பார்க்க செமையா இருக்காங்க.இப்போ தான் அவங்க பிளான் சொன்னாங்க .நீ கூட சொல்லலை இல்லே .உனக்கு பெண் பார்த்து இருப்பதை .”என்றாள் காஜல் .
“பெஹன் அதெல்லாம் இல்லை…அமர் மாமா இப்போ தான் சொன்னாங்க.அவங்க ஏதோ திருமணத்திற்கு வந்துட்டு இருக்காங்க. அப்படியே பார்த்து பேச சொன்னாங்க.முடிஞ்சா உன் கிட்டே சொல்லாமலா இருக்க போறேன்? .என்றான் அர்ஜுன் .
‘என் பாசக்கார அக்காவுடன் தான் வந்துட்டு இருக்கியா ப்ரீத்தி. என் அக்கா அவ்வளவூ சீக்கிரத்தில் யாரையும் புகழ மாட்டாளே! அவளையே பிளாட் ஆகிட்டே போல் இருக்கே மை லட்டு .’மனம் அதன் பாட்டிற்கு துள்ளி குதிக்க,முகம் சிரிப்பால் பிரகாசிக்க ,தலையை ஆட்டி கொண்ட அர்ஜுன்,தலைமுடியை கோதி விட்டான் .அது அவன் மேனரிசம் .
“அதானே பார்த்தேன். ஆனா உன்னை விட இவ ரொம்ப பாஸ்ட். உன் கிட்டே வேலைக்கு வர போறாளாம். அப்போ தான் உன்னை,நம்ம வீட்டை பத்தி தெரிஞ்சுக்க முடியுமாம் .உனக்கு PA போஸ்ட் பத்தி கேள்வி பட்டு இருக்கா போல் இருக்கு.அதான் உன்னை பத்தி தெரிஞ்சுக்க இப்படி பிளான் .”என்றாள் காஜல் .
“என்னது ….வேலைக்கா?விளையாடாதே?”என்றான் அர்ஜுன் நெஞ்சில் கையை வைத்து கொண்டு
“சின்ன பசங்க பாரு நாம, ஓடி பிடிச்சி விளையாட…டேய் அவ பேசினது ரெகார்ட் ஆகி இருக்கு.அனுப்பறேன்,கேட்டு பாரு.”என்றவள் அவர்கள் பேச்சை அனுப்பி வைக்க, இவன் பேச்சு குரல் கேட்டு அவன் அறையில் உறங்கி கொண்டு இருந்த தீப் ,அமர்நாத் எழுந்து அமர்ந்தனர்.
ஆங்கிலம் புரியாமல் அர்ஜுன் விழிக்க ,தீப் அதனை மொழி பெயர்க்க ,”என்ன மாமா இது ?”என்றான் அர்ஜுன்
“ஹி ஹி ஹி “என்று டன் கணக்கில் அசடு வழிந்த அமர்நாத், “பொண்ணு ரொம்ப போர்ஸ் பண்றது போல் பீல் செய்யறா. இப்படி ஒரு ஏற்பாடு இயல்பாய் இருக்க விடாதுன்னு பொண்ணு நினைக்குது .நாங்க வர நான்கு மாசம் ஆகும். இங்கே மருமகளுக்கு முடியலை. தனியா இருந்து ப்ரீத்திக்கு பழக்கம் இல்லை. ஹர்பிர் அண்ணா உங்க குடும்பத்தை பத்தி ரொம்பவும் சொன்னார் .ஒரு வகையில் இது அவ பாட்டி வீடு. உங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை என்றால் அவ உங்க வீட்டிலேயே தங்கலாமா? MBA முடிச்சி இருக்கா .வேலைக்கு போகணும் என்று ஆசை படறா. அர்ஜுன் தம்பி கிட்டேயே வேலை செய்யட்டும். அவ பாதுகாப்பு பத்தி நாங்க கவலை படாமல் இங்கே மருமகளை பார்த்துக்க முடியும்.”என்று அவங்க அம்மா போன் செய்து சொன்னாங்க அர்ஜுன் .உங்க அம்மா கிட்டே வேற மாதிரி சொல்லி வச்சி இருக்கேன். அவங்க தான் உனக்கு திருமணமே முடிவாகிட்டா மாதிரி வானத்தில் பறக்கறாங்களே!”என்றார் அமர்நாத்.
“என்ன சொல்லி வச்சீங்க மாமா ?”என்றான் தீப்
“அவங்க மருமகளுக்கு முடியாததால் அவ ப்ரெண்ட்ஸ் உடனே வர முடியாதாம். அதுவரை எந்த ஹோட்டலில் தங்க வைப்பது என்று கேட்டேன்.சும்மா இருக்க அந்த பொண்ணுக்கு விருப்பம் இல்லை என்று சொன்னேன் “என்றார் அமர்நாத்.
“உடனே அம்மா ஹோட்டல் எதுக்கு, கடல் போல் இந்த வீடு இல்லையா? இங்கேயே தங்கட்டும்.என் மருமக வெளியே தங்குவதா? எத்தனை மாசம் ஆனாலும் இங்கே தான் தங்கணும்.வேலை தானே! அர்ஜுன் கூடவே அவன் வேலையை பார்த்துக்கட்டும் . நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்க போகும் தொழில் தானே .அது மட்டும் இல்லாமல் ஒன்றாய் இருந்தா தானே ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சுக்க முடியும் ? இதானே சொன்னாங்க ?’என்றான் அர்ஜுன் அமர்நாத்தை முறைத்தவாறு.
“ஹி ஹி ஹி .நான் என்னடா செய்ய முடியும் ? நம்ம சொந்தக்கார பொண்ணு .ஆறு மாசம் ஹோட்டலில் தங்க வைக்க முடியுமா என்ன ?ஊரு உலகம் ஏதாவ்து பேசாது ? அதுக்கு இந்த பொண்ணு பார்க்கறது எல்லாம் பிடிக்கலை .ஆறு மாசம் ஒன்றாய் வேலை செய்து ,வெளியே அது இதுன்னு போய் வரும் போது ரெண்டு பெரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும் இல்லை .பாஷை வேற ப்ரோப்லேம் .நீ பேசும் பஞ்சாபி,ஹிந்தி அவளுக்கு புரியாது .அவள் பேசும் தமிழ் ,இங்கிலிஷ் உனக்கு புரியாது .ரெண்டு பேரும் நாலு பாஷைக்கு நடுவிலே மீட் செய்தா தானே !இல்லைன்னா காலம் முழுக்க நாங்க கூட இருந்து SUBTITILE ஓட்டிட்டு இருக்க முடியுமா என்ன ? என்றார் அமர்நாத் .
(அதானே இல்லைனா மதராசபட்டணம் ஆர்யா -எமி ஜாக்சன் நடுவில் ஒரு ஆளை கட்டி போட்டு பேசுவங்களே அது போல் அமர் மாமாவையும் தீப்பையும் கட்டி வைக்க வேண்டி வருமே!)
“”உன் லவ் போட்டோ,வீடியோ அனுப்பி வச்சி இருக்கேன் .என்ஜோய் “என்றது காஜலின் மெசேஜ் .
அடுத்து அடுத்து போட்டோவும் ,விடீயோக்களும் மலை போல் குவிய ஆரம்பித்தது. யஷ்வந்த்தை கொஞ்சும் ப்ரீத்தி ,அவனுடன் சேட்டை செய்யும் ப்ரீத்தி ,அவனுக்கு கதை சொல்வது ,ஊட்டி விடுவது ,ஹார்ப்ரீத் தாயின் வாஞ்சையோடு அணைத்து கொண்டு இருப்பது ,ஒரு கண் மூடி உதட்டை சுழித்து கிண்டல் செய்வது ,மனம் விட்டு சிரிப்பது ,யஷ்வந்த்தை பாடி தூங்க வைப்பது என்று எதிலும் ப்ரீத்தி ,எங்கும் ப்ரீத்தி .
நேரே வராமலே அர்ஜுன் என்ற விக்கெட் மட்டும் இல்லை ,அமர்நாத் ,தீப் என்ற மூன்று விக்கெட் கிளீன் போல்ட் ஆனது ப்ரீத்தியின் போட்டோவை பார்த்தே .நிழலாக இருந்தே அந்த நிஜங்களை புரட்டி போட்டு இருந்தாள் அந்த குறும்புக்காரி.
அந்த காலத்தில் ஏதோ ஒரு இளவரசி ,தலைவனின் வரைபடத்தை பார்த்தே காதல் கொண்டாளாம் .இங்கு அது போல் உருகி நின்றான் அர்ஜுன் .
“வீர்ஜி !சான்ஸே இல்லை .மேட் போர் ஈச் அதர் ப்ரோ .மாமா நீங்க செய்த வேலையில் உருப்படியான வேலை இது ஒன்று மட்டும் தான் .”என்றான் தீப் .
தீப்பை விதம் விதமாய் ,ரகம் ரகமாய் முறைத்த அமர்நாத் ,”அர்ஜுன் !நீ இத்தனை நாள் வெயிட் செய்தததற்கான பலன் இந்த தேவதை பெண் தான் .உனக்கு எல்லா வகையிலும் ஏற்ற பெண் கண்ணா .”என்றவர் அவனை அணைத்து கொண்டார் .
புன்னகை மன்னனாய் போனினை எடுத்து கொண்டு தன் அறையினை விட்டு வெளியே பால்கனிக்கு வந்தவன்,அங்கு இருந்த ஹாம்மக்கில் படுத்து விட்டான்.அருகில் இருந்த நீச்சல் குளத்தின் தண்ணீரில் மோதி வந்த காற்று ,அங்கு இருந்த தோட்டத்தின் குளுமை ,தனிமை அந்த நேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையானதாக இருந்தது .
அருகில் இருந்த கிடார் எடுத்தவன் ,அதை சுருதி மீட்டி இசை அமைத்தவாறே,பாட ஆரம்பித்தான்.
Tum paas aaye, yun muskuraaye நீ என் அருகில் வந்து புன்னகைத்தாய்
Tumne na jaane kya sapne dikhaaye புதிய கனவுகளை கொடுத்து விட்டதை நீயே அறியவில்லை
Ab to mera dil jaage na sota hai உன்னை கண்ட பிறகு என் இதயம் உறக்கத்திலும் இல்லை ,விழிப்பிலும் இல்லை (உன்னை கண்ட மயக்கம் தெளியவில்லை )
Kya karoon haaye, kuch kuch hota hai இப்பொழுது நான் என்ன செய்வது அன்பே .எனக்குள் ஏதோ ஆகிறதே
Na jaane kaisa ehsaas hai இது என்ன விதமான அனுபவம் என்று புரியவில்லை
Bujhti nahin hai kya pyaas hai உனக்கான இந்த தாகம் தணிவது போல் தெரியவில்லை
Kya nasha is pyaar ka இந்த புது விதமான போதை என்னுள் பரவுகிறதே என்னுயிரே
Mujhpe sanam chhaane laga,Koi na jaane kyoon chain khota hai
No one seems to knows why, Peace is there no more யாருக்கும் தெரியவில்லை என்னுள் இருந்த அமைதி எங்கே என்று
Kya karoon haaye, kuch kuch hota hai இப்பொழுது நான் என்ன செய்வது அன்பே .எனக்கு ஏதோ ஆகிறதே
Kya rang laayi meri dua என்னுடைய பிராத்தனைகள் வண்ணமயமான உன்னை என்னிடம் சேர்த்து இருக்கிறது
Yeh ishq jaane kaise hua இந்த காதல் எப்படி என்னுள் நுழைந்தது என்று எனக்கே தெரியவில்லை
Bechainiyon mein chain என்னுள் எரிமலையின் பூகம்பம் ,துறவிகளின் அமைதி எப்படி
Na jaane kyoon aane laga யாருக்கும் இந்த மாற்றத்திற்கான காரணம் நீ மட்டும் தான் என்று புரியவில்லை
Tanhaai mein dil yaadein sanjota hai தனிமையில் உன் நினைவுகளே துணை
Kya karoon haaye, kuch kuch hota hai உன்னால் எனக்குள் ஏதோ ஆகிறதே ”
என்று அர்ஜுன் ஹிந்தி பாடலை பாட அதை கேட்டு புன்னகையுடன் நின்றார்கள் அமர்நாத்தும் ,தீப்பும் .
“படிஜா !இவ்வளவூ சந்தோசமாய் இருந்து நான் பார்த்ததே இல்லை தீப் “என்றார் அமர்நாத் .
“உண்மை தான் மாமா .பாடுவார் என்று தெரியும் .ஆனா இப்படி உருகி எல்லாம் பாடி நான் பார்த்ததே இல்லை .முகத்தில் 1000 வாட்ஸ் பல்பு எரியுது .இந்த சந்தோசம் அவருக்கு என்றுமே நிலைத்து இருக்கணும் மாமா .”என்றான் தீப் .
“நிச்சயமா தீப்.ப்ரீத்தி போட்டோ பார்த்ததற்கே இந்த அளவு சந்தோச என் மருமகனுக்கு கிடைக்குது என்றால் அந்த பெண்ணே தான் இவன் மனைவியாக வரணும் .அதற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் .இவன் சந்தோசம் எனக்கு முக்கியம் .ப்ரீத்தி தான் இவன் மனைவி .”என்றார் அமர்நாத் .
(நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருந்தாலே எல்லாம் ஒழுங்காய் நடக்கும் .பிளான் வேற போடறீங்க .போச்சு .)
” Pi’ārē miṭhē supanē pi’ārē /குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் டியர் “என்று ப்ரீத்தி போட்டோவை பார்த்து அர்ஜுன் இங்கு சொல்ல ,வானத்தில் பறந்து கொண்டு இருந்த ப்ரீத்திக்கு புரை ஏறியது.
அவள் முதுகில் தட்டிய காஜல் ,”யாரோ உன்னை நினைக்கறாங்க “என்றவள் கண் அடிக்க .
காஜலை பார்த்து கண் அடித்த ப்ரீத்தி ,””வேறு யாரு எல்லாம் உங்க தம்பி தான் .”என்றாள் புன்னகையுடன் . அது தான் நிஜம் என்பதை அறியாமல் .
“ஆமா தம்பி, தங்க கம்பி என்று இப்படி உருகறீங்க,அந்த கம்பி உங்களை அழைத்து போக வரலையா? குழந்தைகளுடன் தனியா எப்படி காஜல் ? என்றாள் ப்ரீத்தி .
“உதை வாங்க போறே. அர்ஜுனை என்ன நினைச்சிட்டே! இப்படி தனியா வருவது மட்டும் தெரிந்து இருந்தால் ஒரு வாரம் முன்னே வந்து எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்து இருப்பான். அமன் என்று ஒரு ஜீவன் இருக்கு. எங்க மாமியார் ,மாமனார்அந்த குரங்குக்கு தான் ஜால்ரா அடிப்பாங்க. அர்ஜுனையோ, அவன் குடும்பத்தை பத்தியோ பேச்சு எடுத்தாலே எரிந்து விழுவாங்க. இவனும் எதுக்கு தன்னால் என் குடும்பத்தில் பிரச்சனை என்று விலகி நிற்பான். ஆனா பின்னால் இருந்து செய்துட்டே தான் இருப்பான்.பஞ்சாபில் இருந்துட்டே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ஏற்பாடு செய்து அதை மேனேஜ் செய்ய அவன் நண்பர்களை அனுப்பி, மூன்று நாளும் நல்ல ஹோட்டல் சாப்பாடு வாங்கி கொடுத்து என்று செய்தது எல்லாம் அர்ஜுன் தான் .”என்றாள் காஜல் .
“உங்க ஹஸ்பண்ட் ,மாமனார் ,மாமியார் எல்லாம் ஒண்ணும் சொல்லலையா,அவங்க ஹெல்ப் எதுவும் செய்யலையா?உங்க கூட வராம என்ன செய்யறாங்க ?”என்றாள் ப்ரீத்தி
” கர்வாலா ஐ மீன் என் ஹஸ்பேண்ட் நேத்தே சோராஜி ,சாஸ்ஜி கூட்டிட்டு பதிண்டா போய்ட்டார். நேத்து தான் என்னை ஆபீஸ்சில் இருந்து ரிலீவ் செய்தாங்க.வேலை விட்டாச்சு.இதோ குட்டிஸ் கூட்டிட்டு நான் போறேன் .”என்றாள் டன் கணக்கில் சோகம் குரலில் வழிய .
“என்ன ஏதாவது பிரச்சனையா காஜல்?இப்படி உங்களை தனியே விட்டுட்டு போய் இருக்காங்க.எல்லோரும் சேர்ந்தே போய் இருக்கலாமே! கை குழந்தையை வச்சிட்டு இப்படி கஷ்ட பட வேண்டியது இல்லையே !”என்றாள் ப்ரீத்தி அவள் வருந்துவது பொறுக்க முடியாமல் .
மீண்டும் பேச ஆரம்பித்த அவள் குரலில் அத்தனை வருத்தம்,தவிப்பு ,புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் நன்றாய் உணர முடிந்தது .
“பிரச்சனை தான் ப்ரீத்தி .திருமணம் என்ற பிரச்சனை .என் டாடி பிரின்சஸ் ஆக இருந்த வரை இந்த குடும்ப பாலிடிக்ஸ் எல்லாம் தெரியலை .இப்போ மூச்சு விட கூட மத்தவங்க பெர்மிஸ்ஸின் வாங்க வேண்டி இருக்கு .திருமணம் ஆன நிறைய பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் ப்ரீத்தி .”என்று வெறுத்து போய் சொன்னவள் தன் எண்ணத்தில் முழுகி ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நீல நிற வானத்தை வெறிக்க ஆரம்பித்தாள் .
மீண்டும் பேச ஆரம்பித்த அவள் குரலில் அத்தனை வருத்தம்,தவிப்பு ,புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் நன்றாய் உணர முடிந்தது . பல இல்லத்தரசிகளின் ப்ரதிபிம்பமாய் அந்த நேரம் இருந்தாள் காஜல் .
பயணம் தொடரும் …