OVOV13

OVOV13

                                     
  ஊரு விட்டு ஊரு வந்து  13

 

               வேலைக்கு செல்லும்  பல திருமதிகளின் பிம்பமாய் இருந்தாள் காஜல் அப்பொழுது .கண்கள் கலங்கி இருக்க ,தன்னை அவள் சமாளித்து கொள்ள பெரிதும் போராடுவது கண்டு ப்ரீத்தி அவள் கரத்தின் மேல் தன் கரத்தினை ஆறுதலாய் வைத்து அழுத்தினாள் .சில சமயம் இது போன்ற கனிவு ,அன்பு ,ஆதரவு கிடைத்து விடாதா என்று ஏங்கி தான் போகிறது மனித மனம் .

 

“என் பெற்றோரின் பூர்வீகம் பதிண்டா  .நான் பிறந்து ,வளர்ந்து ,படித்து ,வேலைக்கு சென்றது எல்லாம் சென்னையில் தான். 20 வருடமாய் ( மல்டி நேஷனல் கம்பெனி பெயரை சொல்லி )அங்கு தான் HR வேலை. மாசம் 60,000 வரை சம்பளம் .எந்த கவலையும் இல்லை. எல்லா வீட்டு வேலையும் அம்மா பார்த்துப்பாங்க. அண்ணா நகரில் தான் வீடு .கம்பெனி ECRரில் இருக்கு .ஷார்ப்பா 9 மணிக்கு ஆஃபீஸ்ச்சில் இருக்கணும்.மீட்டிங் அது இது என்றால் நைட் 11 மணி வரை கூட ஆகும் வீடு  திரும்ப.சில சமயம் மீட்டிங் கோவா ,பெங்களூரு என்று மூன்று ,நான்கு நாள் வைப்பாங்க .டெலிகேட்ஸ் ரிஸீவ் செய்ய வேண்டி வரும் . பலருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டம் .எனக்கு அது மாதிரி எதுவும் இல்லை .பிடித்தே சென்ற வேலை .” “என்றாள் காஜல் .

“வேலை பிடிச்சி இருந்தது தானே. ஏன் விட்டிங்க ?’என்றாள் ப்ரீத்தி

.”உடனே வேலை விடலை. இதோ இந்த ரெண்டாவது பேபி பிறந்த பின்னும் போய்ட்டு தான் இருந்தேன் .அவர் பெயர் ஜெகஜீத் சந்து. டாடி  கொண்டு வந்த ப்ரோபோசல் தான். வேலைக்கு போகணும்,வேலை விட கூடாது என்ற கண்டிஷன் -பெண் பார்க்க வரும் போதே  சொல்லி தான் பெண் கேட்டாங்க .திருமணமும் நடந்தது. என் லைப் டோட்டல் தலை கீழ். அதுவரை ஏழு மணிக்கு எழுந்து அம்மா செய்து வைத்ததை சாப்பிட்டு ,லஞ்ச் கட்டி கொடுத்தா எடுத்துட்டு போனா நைட் தான் வருவேன். இப்போ தனி வீடு ,மொத்த வீட்டு வேலையும் நான் 5 மணிக்கே எழுந்து செய்யணும். சோராஜி ,சாஸ்ஜி (மாமனார் /மாமியார் ) எனக்கும் அவருக்கும் டிபன் ,மதியம் லஞ்ச், செஞ்சி வச்சிட்டு தான் ஆபீஸ் கிளம்பனும். நைட் ஒன்பது ,பத்து மணிக்கு திரும்ப வந்தாலும் நான் தான் செய்யணும் .”என்றாள் காஜல்

“ஏன் உங்க மாமி ஏதவாது நோயால் பாதிக்க பட்டு BEDRIDDEN டைப்பா?”என்றாள் ப்ரீத்தி .

“யாரு என் மாமியா? பியூட்டி பார்லர் ,ஜிம் ,வுமன் கிளப் எல்லாம் போய் எனக்கு அக்காவா என்று கேக்கும் வகையில் நல்லா கும்முன்னு உப்பின பூரி மாதிரி தான் இருக்காங்க.டிபன் ,சாப்பாடு சாப்பிட தட்டையோ, செய்து வைத்த உணவினையோ சமையல் அறையில் இருந்து டைனிங் டேபிள் வரை கூட எடுத்து வந்து என் சாஸ்ஜி கூட வைக்க மாட்டாங்க. சாப்பிட்டு முடித்த பிறகும் கூட தட்டு அப்படியே தான் காய்ந்து கிடைக்கும். துணி மெஷின் தான் துவைக்குது என்றாலும் அதில் போடுவது ,ட்ரை செய்வது, ஐயன் செய்வது எல்லாம் நான் தான் .நோ லீவு .சனி ,ஞாயிறு என்றால் அவங்க ரிலேஷன் 30 பேர் வந்து இறங்குவாங்க. அன்றும் என் பணி தொடரும்.”என்றாள் காஜல்

“வீடு வேளைக்கு ஆள் இல்லையா ?’என்றாள் ப்ரீத்தி வியப்புடன் .

“ஹ்ம்ம் இருக்கே .அந்த அம்மா ஒரு நாள் வரும் ,ஒன்பது நாள் உடம்பு சரியில்லைன்னு லீவு போட்டுடும் .ஒரு பாத்திரத்தை ஒரு மணி நேரம் துலக்கி ,ஒரு டேங்க் தண்ணீர் காலி செய்யும் .தூசு போகாம ஒரு பெருக்கல்,அழுக்கு போகாம ஒரு துடைத்தல் எல்லாம் நடக்கும். நாளைக்கு ரிலேஷன் வராங்க என்றால், என் வீட்டில் வேலை செய்யும் அந்த அம்மாவிற்கு இஸ்டண்ட் ஜுரம் ,காலரா ,டைபாய்டு எல்லாம் வந்துடும் .வந்தவங்க கிளம்பி போகும் வரை இந்த அம்மா வரவே வராது .”.”என்றாள் காஜல் வறண்ட சிரிப்புடன்

 

“அப்போ குழந்தைங்களை எப்படி மேனேஜ் செய்தீங்க?” என்றாள் ப்ரீத்தி அதிர்ந்தவளாய் .

 

“இதுல ஒரு காமெடி தெரியுமா ,டெலிவரி தேதி முன்னாள்  ,முதல் வலி வரும் வரை நான் ஆபீஸ்சில தான் இருந்தேன். லீவு கொடுக்கலை. அங்கேயே வலி வந்து ஆம்புலன்ஸ் ஏத்தி அனுப்பினாங்க. யஸ்வந்த் பிறந்தான். மூன்று மாதம் லீவு கொடுத்தாங்க. க்ரெட்ச் இருந்ததால் இவனையும் தூக்கிட்டு தான் போனேன். இப்போ தான் ஒரு வருஷம் வித் சம்பளம் என்று புது சட்டம் எல்லாம் வந்து இருக்கு. நாலு வருஷத்திற்கு முன் அப்படி எல்லாம் இல்லை. என்ன இந்த குட்டீஸ் பார்த்து கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டது” என்றாள் காஜல்

 

“உங்க அம்மா ,அப்பா ஹெல்ப் செய்யலையா ?’என்றாள் ப்ரீத்தி

“அம்மா மிக பெரிய ஹெல்ப். அவங்க என் அப்பாவுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தாங்க .சின்ன மெஷின் பார்ட்ஸ் உருவாக்கும் கம்பெனி அது. என் கஷ்டம் அறிந்து ,அந்த வேலையை விட்டுட்டு இவனை அவங்க பார்த்து கொண்டாங்க. நான் மீண்டும் வேலைக்கு ஓடினேன். அடுத்து இந்த குட்டி பிறந்தா நான்கு வருடம் கழித்து இப்பொழுது தான்.  .”என்றாள் காஜல் .

“எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு. ஹர்பிர் அங்கிள் அவரும் பஞ்சாபி தான். அவரை,அவர் ரிலேஷன்ஸ் பழுகும் விதம் பார்த்து பஞ்சாபிஸ் எவ்வளவூ கேரிங் என்று சந்தோசபட்டேன். நீங்க சொல்வதை பார்த்தால் …”என்றாள் ப்ரீத்தி

 

“எக்ஸ்செப்ஸின்(exception) எல்லாத்துக்கும் உண்டு. என் புகுந்த வீடு அந்த டைப். மருமகள் சம்பாதிக்கும் பணம் வேண்டும் ,அதை  வைத்து வீடு வாங்குவாங்க. டூர் போவாங்க. கார் வாங்குவாங்க. ஆனா ஹெல்ப் எதையும் செய்ய மாட்டாங்க. இதுல நான் என் ப்ரெண்ட்ஸ் வீட்டில் அதிக நேரம் இருக்கிறேனாம், குழந்தைகள் ரெண்டையும் அவங்க கிட்டேயே விடறேனாம், இவங்க கிட்டே விடவே மாட்டேன் என்கிறேனோம். என் குழந்தைகளை பார்த்து கொள்ள வேலையை விட்டு நின்றது என் அம்மா. வளர்த்தது அவங்க. PLAY ஸ்கூல் கொண்டு போய் விட்டு, மீண்டும் அழைத்து வந்து ,உணவு கொடுத்து, LULLABY பாடி தூங்க வைத்தது  என் அம்மா பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டு பேபீஸ் கிட்டே வரலைன்னு அழுதா,கூட பேசி ,விளையாடி னா கிட்டே வருவாங்க.என்னவோ தூரத்து உறவு மாதிரி, தூரமா இருந்து  குட் மோர்னிங் ,குட் நைட் சொன்னா என் அம்மா தான் குழந்தைகளை கெடுத்து வச்சி இருக்காங்க என்று சண்டை போட்டுட்டாங்க. இனி தமிழ்நாட்டில் இவங்க கூடவே இருக்க கூடாதாம். அதான் பதிண்டாவுக்கு மாத்தியாச்சு .”என்றாள் காஜல்

“உங்க HUBBY எதுவும் சொல்லலையா ?’என்றாள் ப்ரீத்தி .

“ஹ்ம்ம் சொன்னாரே…அம்மா பதிண்டா போகணும் என்று சொல்ராங்க. அங்கே எனக்கு வேலை ரெடி .வீடு பார்த்தாச்சு .அம்மா அப்பாவோடு நான் முன்னால் போறேன் .பக்கர்ஸ் அண்ட் MOVERS கிட்டே சொல்.பொருட்களை ஷிபிட் செய்துடுவாங்க .நீ ரிசைன் செய்துட்டு வந்து சேரு என்று நல்லாவே சொன்னாரே .”என்றாள் காஜல் .

“நீங்க எதுவும் சொல்லையா காஜல் ?”என்றாள் ப்ரீத்தி .

“திருமணம் ஆன பெண்களுக்கு ஆப்ஷன் ரொம்ப கம்மி ப்ரீத்தி. நாம எவ்வளவு தான் சம்பாதிச்சாலும் ,சில வீட்டில் தான் தங்க தட்டில் தாங்குவது எல்லாம் நடக்கும். நிறைய வீட்டில் வெளியே வேலைக்கு போய்ட்டு வீட்டிலும் வந்து வேலை செய்வது என்பது தினமும் நடக்கும் ஒன்று.எல்லாத்தையும் குடிக்கும் தண்ணீரோடு சேர்ந்து முழுங்க பழகி கொள்ள வேண்டியது தான் .  உடல் சரி இல்லை என்றால் கூட 30 சப்பாத்தி செய்து விட்டு தான் ரெஸ்ட் எடுக்க முடியும் .மீட்டிங் இருக்கு என்றால் கூட அது எல்லாம் கண்துடைப்பு என்று பேச்சு வரும்.பழகி போச்சு.SACRIFICE மேல் SACRIFICE செய்து செய்து என் சுயம் என்ற ஒன்றை இழந்து நிற்பது தான் மிச்சம். “என்றாள் ப்ரீத்தி கண்களில் இருந்து கண்ணீர் வழிய

 

“என்ன காஜல் இப்படி எல்லாம் பேசறீங்க !”என்றாள் ப்ரீத்தி திகைப்புடன் .

“இதுவரை பேச முடியாமல் ,யாரிடமும் ஷேர் செய்ய முடியாமல் மூச்சு முட்டி போய் இருந்தேன் ப்ரீத்தி .அது தான் உண்மை . பிரெஸ்டிஜ் இஸ்ஸு ஆச்சே .உள்ளே எவ்வளவு ரணம் இருந்தாலும் வெளியே போலியாய் சிரித்து தானே ஆகணும் .இல்லைனா என் ப்ரெண்ட்ஸ் வருத்த படுவாங்க .கூட இருக்கும் உறவு ஆறுதல் சொல்லிட்டு பின்னால் போய் ,”எனக்கு அப்பவே தெரியும் இவளாவது புருஷனோடு வாழ்வதாவது .டைவோர்ஸ் நிச்சயம் .”என்று புரளி கிளப்பி விடுவாங்க. அதுக்கு வாய் மூடி ஊமையாய் இருப்பதே மேல். எங்கேயோ படித்தேன் ப்ரீத்தி “இல்லறத்தில் இருந்து கொண்டே மனதளவில் துறவறம் பெற்று விட்ட பெண்கள் தான் ஏராளம்” என்று, அது தான் என் நிலைமையும் .”என்றாள் காஜல்

“அண்ணா கிட்டே ஐ மீன் உங்க ஹஸ்பண்ட் கிட்டே மனம் விட்டு பேசி பாருங்க காஜல். பேசினாலே பாதி பிரச்சனை சால்வ் ஆகிடும். ஈகோ பார்க்காதீங்க காஜல்.”என்றாள் ப்ரீத்தி காஜல் உள்ளங்கையை தன் இரு கரத்தால் பற்றி கொண்டு .

 “இந்த வாழ்க்கையில் உனக்கு இஷ்டம் இருந்தா வா, இல்லை என்றால் உன் அம்மா வீட்டுக்கு போய்டு என்பவரிடம் எதை பேச சொல்றீங்க ப்ரீத்தி. இதுக்கு தான், இந்த வார்த்தைகளை கேட்க தான் என் பெற்றோர் அவ்வளவு கிராண்ட்டா திருமணம் செய்தார்கள் பாரு. மனசாட்சி என்ற ஒன்றை இவர்களுக்கு எல்லா அந்த கடவுள் வைத்து இருக்கிறானா என்பது சந்தேகமே .இதே வார்த்தை இவர்களுக்கு ஒரு தங்கை இருந்து அவளை அவள் கணவன் சொல்லி இருந்தால் இவர்கள் பொங்காமல் இருப்பார்களா? இதோ அவர்கள் ஆட்டும் படி ஆடும் பொம்மை போல் இத்தனை வருடம் இருந்த ஊரை விட்டு கிளம்பறேன் ப்ரீத்தி .”என்றாள் காஜல் கண்ணீரை புன்னகையால் மறைத்து .

 “அப்போ அங்கே போய் குழந்தைகளை யாரு பார்த்துப்பா காஜல் ?”என்றாள் ப்ரீத்தி.

“நான் தான் .இப்போதைக்கு இவங்க வளரும் வரை வேலைக்கு போக போவதில்லைன்னு சொல்லிட்டேன். முழு நேர மருமகள், சமையல்காரி, பணிப்பெண், மனைவி,ஹோஸ்டஸ் எல்லாம் நானே .”என்றாள் காஜல் .

 

“இருபது வருட எஸ்பிரியன்ஸ்.60,000 ரூபாய் சம்பளம் வாங்கியது எல்லாம்.”என்றாள் ப்ரீத்தி.

“ஓகையா …இட்ஸ் கோன்.போயிந்தே. பார்க்கலாம் எதிர்காலம் என்ன வச்சி இருக்குன்னு.”என்ற ப்ரீத்தி சற்று கண்ணயர அவள் குழந்தையை பார்த்து கொண்டாள் ப்ரீத்தி .

நல்லவேளையாக அந்த விமானமே டெல்லி டு அமிர்தசரஸ் விமானமாய் இருக்க, இவர்கள் கீழ் இறங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை .காஜல் கை குழந்தையுடன் படுத்து கொள்ள ,ப்ரீத்தி யஷ்வந்த் உடன் படுத்து கொண்டாள் .  இரவு படுத்தவர்கள் அம்ரித்சர்ஸ் விமான நிலையம் வரும்  குழந்தைகள் எழுந்து கொள்ளாமல் இருக்கவே ,இவர்களும் நன்கு உறங்கி எழ முடிந்தது .

திருமணம் ஆனா பெண்களின் அதுவும் தாய்மார்களின் உறக்கம் என்பது கூட குழந்தைகளின் தேவையை பொறுத்தது தானே !

டெல்லியில் இருந்து கிளம்ப ரெண்டு மணி நேரம் தாமதம் என்பதால் காலை பதினோரு மணிக்கு தான் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்து சேர்ந்தது அவர்கள் விமானம் .

அவர்களை அழைத்து போக கார் வருவதாக அர்ஜுன் மெசேஜ் அனுப்பி இருந்தான் .

“நான் தான் சொன்னேன் இல்லை  எங்க அர்ஜுன் பத்தி .எங்கேயோ இருந்துட்டு நாம கஷ்ட பட்டு வர கூடாதுன்னு இருந்த இடத்தில் இருந்தே நமக்கான சௌகரியம் எல்லாம் ஏற்பாடு செய்துடுவான் அந்த கேடி .”என்றாள் காஜல் அவள் முகத்தில் தம்பியை நினைத்து அத்தனை கர்வம் மிளிர்ந்தது .

அர்ஜுன்னின் நண்பர்களில் ஒருவனான, ரூபேஷ் பத்வா பெண்களோடு குழந்தைகளையும் ஏர்போர்ட்டில் இருந்து, அழைத்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்து செல்ல,அங்கு இருவரும் குளித்து ,உடை மாற்றி ,காலை உணவினை உண்டு , குழந்தைகளையும்  தயார் செய்தனர் .

ரூபேஷ் அவர்களை அவன் வீட்டின் அருகிலேயே இருந்த அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு அழைத்து செல்ல ,வைசாகி முடிந்த மறுதினம் என்பதால் அந்த அளவிற்கு கூட்டம் இல்லை .இவர்களும் பொறுமையாக பிராத்தனை செய்து,லங்கார் எனப்படும் அன்னதான கூடத்தில் சிறிது நேரம் உணவினை தயாரிக்க உதவினார்கள் .

பின் அவர்களை ஜாலியன்வாளா பாக்கில் ஜெனரல் டயர் என்பவரால் அப்பாவி பொதுமக்கள் வைசாகி அன்று படுகொலை செய்ய பட்ட இடத்தில் எழுப்பபட்டு இருக்கும் நினைவு சின்னத்திற்கும் அழைத்து சென்றான் ரூபேஷ். அங்கு மலர்வளையம் வைத்து இந்தியாவின் சுதந்திரத்திக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி கிளம்பினார்கள் .

“ரொம்ப கொடுமை இல்லை இது?அர்ஜுன் எங்களை எல்லாம் திருமணத்திற்கு முன் மாதம் ஒருமுறை இங்கே அழைச்சிட்டு வந்து இதே போல் அஞ்சலி செலுத்த வைப்பான் . “என்றாள் காஜல் கண்கள் கலங்க

“போர் என்றாலே அதில் இருப்பது கொடூரங்களும் ,மரணமும் தானே .ஆனால் இது ரொம்ப வார்த்தைகள் சொல்ல முடியாத பயங்கரம் தான் காஜல் .வைசாகி கொண்டாட மைதானத்தில் குவிந்த மக்களை, ஊரடங்கு இருப்பது தெரியாமல் வந்து விட்ட மக்களை ,குறுகலான வாயில் மட்டுமே உள்ள இந்த இடத்தில் 1650 துப்பாக்கி குண்டுகள் வெடித்து 1000 பேருக்கு மேல் இறந்து ,1100க்கு மேல் காயம் அடைந்து,பயத்தில் பாதி பேர் அங்கிருந்த கிணற்றில் குதிக்க, மக்களை பலி வாங்கியது இந்திய சரித்திரத்தில் கருப்பு பக்கம் தான் .”என்றாள் ப்ரீத்தி வேதனையுடன் .

“ஹேய் உனக்கு இதை பற்றி எல்லாம் எப்படி தெரியும்?’’ என்றாள் காஜல் வியப்புடன் -இந்த இடத்தை பத்தி பேசும் போது எல்லாம் அர்ஜுன் குரலில் தென்படும் அதே தேசப்பற்று இவள் குரலிலும் தெரிய .

“இங்கே வேலைக்கு வரேன் இல்லை அதான் கொஞ்சம் கூகிள் ஆண்டவர் உதவியை நாடினேன் .”என்றாள் ப்ரீத்தி .

“வேலைக்கு வருகிறாய் என்பதாலா இல்லை இந்த மாநிலத்திற்கு மருமகளா வர போவதாலா ப்ரீத்தி ?”என்ற காஜல் அவளை பார்த்து கண் அடிக்க ப்ரீத்தி வாய் விட்டு நகைத்தாள் .

 

என்ன என்று விசாரித்த ரூபேஷ்க்கு காஜல் அவள் சொல்லியது, அர்ஜுனுக்கு அவள் என்ன என்று சொல்லி முடிக்க அது வரை  பெரிதாய் ப்ரீத்தியை  எண்ணாத, காஜலின் தோழி என்றே  பார்த்த  ரூபேஷ் அவளை மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தான் .அர்ஜுன்னின் வருங்கால மனைவி ஆயிற்றே !

 

“எங்க அர்ஜுன் கொடுத்து வைத்தவங்க. அவனை மாதிரியே சிந்திக்கும் ஒருத்தங்க அவனுக்கு துணைவியாய் வருவது மிக்க மகிழ்ச்சி.” என்றவன் ப்ரீத்தியை கை கூப்பி வணங்க ப்ரீத்திக்கு தான் தர்ம சங்கடமாய் போனது .

 

“ஹே லூசு காஜல் .இப்படி ஊரு பூரா தண்டோரா போடாத குறையாய் எதுக்கு  சொல்றே!”என்றாள் ப்ரீத்தி தன் விளையாட்டை காஜல் வினை ஆக்கி கொண்டு  இருப்பதை கண்டு நொந்து .

 

“ச்சூ சும்மா இரு…உன்னை மாதிரி caring , போல்ட் பொண்ணு எங்க அர்ஜுன் கிட்டே வேலைக்கு சேர்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம் .தவிர பார்த்து இருக்கும் மாப்பிளை கூடவே வேலை செய்யும் சான்ஸ் எத்தனை பேருக்கு கிடைக்கும் .சூப் கரோ .”என்றவள் பேச்சை கேட்டு பேய் விழி விழித்தாள் ப்ரீத்தி .

 

ப்ரீத்தி அறியாதது இன்னொன்று .இந்நேரம் பாதி பஞ்சாபிற்கு அர்ஜுன் மனைவி அவள் தான் என்ற செய்தியை போட்டோ உடன் ஏற்கனவே காஜல் அறிவித்து இருந்தாள் என்பதும், அதை மீதம் உள்ளவர்களுக்கும் பரப்பி கொண்டு இருந்தான் ரூபேஷ் என்பதும் .

அர்ஜுனின் அக்கா காஜல் என்பதோடு ,அர்ஜுனின் வருங்கால மனைவி ப்ரீத்தி என்பதும் சேர்ந்து கொள்ள ரூபேஷ் வீட்டில் விருந்து அதகள படுத்தபட்டது .சாதாரணமாகவே ஐந்து வகை உணவு இருக்கும் .கேட்கவும் வேண்டுமோ இப்பொழுது !

அதை நன்றாக சாப்பிட்டு ,உண்ட மயக்கத்தில் பெண்கள் இருவரும் உறங்கி எழுந்து ரெடி ஆகி வெளியே வந்து திகைத்து நின்றார்கள் . ஜனசமுத்திரம்  ஒன்று உருவாகி இருந்தது. அர்ஜுன் விஷயம் கேள்வி பட்டு அங்கு இருந்த ரூபேஷ் சொந்தம் பந்தம் எல்லாம் கிப்ட் பொருட்களுடன் குவிந்து இருந்தனர். ப்ரீத்திக்கு, பெண் மலைப்பாம்பு கூட்டத்தில் சிக்கிய பீல். அத்தனை பெண்களும் அவளை இழுத்து, இழுத்து அணைத்து கன்னத்தில் வைத்த முத்தத்தில் ப்ரீத்தியின் இரு கன்னங்களும் சிவந்து தான் விட்டது .

 

இரு பெண்களையும் அமர வைத்து கொண்டு வந்த ஆடைகளை கடை பரப்பியவர்கள், இருவரின் கைகளிலும் மெஹந்தி, வளையல் போட்டு விட்டனர் .மங்கலத்திற்கு அடையாளமாய் ,வளமாய் இருக்க வேண்டும் என்று வாழ்த்துவது இந்த முறை .

 

ப்ரீத்தி அது தனக்கான வாழ்த்து என்று உணராதவளாய், காஜலுக்கு அவர்கள் காட்டும் அன்பு தனக்கும் கிடைக்கிறது,’நெல்லுக்கு பாயும் தண்ணீர் கூட வந்த புல்லான தனக்கும் கிடைக்கிறது’  என்று நெக்குருகி இருந்தாள் .

இது எல்லாமே லைவ் ரிலே வாக ஒருத்தன் பார்த்து கொண்டு இருப்பதையோ ,இவள் முகத்தில் இருக்கும் அதிர்ச்சி ,திகைப்பு ,குழப்பம் ,சந்தோசம் எல்லா உணர்ச்சிகளையும் கண்டு ஒருவன் பைத்தியமாகி கொண்டு இருப்பதை ப்ரீத்தி அறியவில்லை .

இந்த சடங்கு ,சம்பிரதாயம் எல்லாம் ப்ரீத்திக்கு புதிதாய் இருந்தது . எதற்கு செய்கிறார்கள், என்ன இது எல்லாம் புரியாமல் அமர்ந்து இருந்தாள். வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவிற்குள் வந்தால் மாலையிட்டு வரவேற்றால், போட்ட மாலையை இரவு வரை கழற்ற மாட்டார்களாம். அது மரியாதை குறைவான செயல் என்பது அவர்கள் கருத்து

 

அதே போல் தெரியாத சடங்கினை ஏற்று கொள்ள வேண்டும்,அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும்  என்று அமர்ந்து இருந்த அவளுக்கு தெரியவில்லை, இவளின் இதே செயலை அமர்நாத் ஆப்பு ஆக வருங்காலத்தில் மாற்ற போகிறார் என்று .

லட்டு ,ஜிலேபி ,சமோசா ,கீர் ,கேசரி ,டோக்ளா என்று மாற்றி மாற்றி அவர்கள் ஊட்டி விட ,தன் வயறு வெடித்து விடுமோ என்று பயந்தே விட்டாள் ப்ரீத்தி .

இவர்கள் கிளம்பும் நேரத்தை ரூபேஷ் நினைவு படுத்திய பின்னரே அந்த அன்பு வெள்ளம் ப்ரீத்தியை விட்டது.கிளம்பும் அவர்களுக்கு இரவு உணவாக ஹாட் பாக்ஸ்சில் ஒரு உணவு மலை கூடவே கிளம்பியது .கிப்ட் பாக்ஸ் என்று ரெண்டு பெட்டி நிறைய ஆடை ,வளையல் ,சாக்லேட் ,ரம் ,பெர்பியும் என்று ரூபேஷ் காரில் ஏற்றப்பட்டது . 

 

அந்த சின்ன ஊர் ,கிராமம் என்று சொல்லும் அளவிற்கு குவிந்து இருந்த மக்கள்  கார் கண்ணுக்கு மறையும் டாடா காட்டிய படி நின்றார்கள் .

 

‘பாசக்கார பயபுள்ளைங்க ஊரா இருக்கு .இவங்க இழுத்து இழுத்து அணைத்ததில் எனக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது .யம்மா ‘என்று முனகிய ப்ரீத்தி ,”ஏம்மா இவ்வளவு தானா இல்லை இன்னும் ஏதாவது இருக்கா ?மலை பார்த்து இருக்கேன் .இது என்ன உணவு மலையே செஞ்சி வைக்கிறாங்க ,கட்டி தராங்க .”என்றாள் ப்ரீத்தி சாப்பிட்ட உணவின் மலைப்பில் .

வாய் விட்டு சிரித்த காஜல் ,என்னவென்று பஞ்சாபியில் கேட்ட ரூபேஷ்க்கு விளக்கம் கொடுக்க ,

 

“பென் /தங்கை .அர்ஜுன் உறவு நீங்க .”உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போறோம் ?” என்றவனை ஏதோ ஜந்து போல் பார்த்த ப்ரீத்தி ,மனதிற்குள் ,’யாரு நானு உங்க அர்ஜுனன் மகாராஜாவுக்கு நான் உறவு .விளங்கிடும் . எதை சொன்னாலும் என்ன ஏது என்று விசாரிக்க கூட இல்லாமல் நம்புறாங்களே மை லார்ட் சேவ் மீ யார் .”.’என்றாள்

 

“இது எல்லாம்  அர்ஜுன் எங்களுக்கு செய்து இருப்பதற்கு அருகே கூட வரமுடியாது .பணம் கட்டாததால்  என்னை போல் நிறைய பேர் காலேஜ் விட்டு நிறுத்த பட்டார்கள்.அத்தனை பேரின் படிப்பு செலவையும் அவன் குடும்பம்தான் ஏற்றது .இது வரை அதற்காக என்று அவன் எதையும் எங்களிடம் எதையும் கேட்டது இல்லை .பணம் திருப்பி கொடுத்தாலும் ,”பணம் கட்ட முடியாத பிள்ளைகள் இருப்பார்கள் .அவர்களுக்கு இந்த பணம் கட்டு “என்று சொல்லி திருப்பி கொடுத்து விட்டான்  .இந்த வேலையும் அவனால் கிடைத்தது தான் . இன்று சமுதாயத்தில் நான் நல்ல நிலைமையில் இருப்பதற்கு காரணமே எங்க அர்ஜுன் தான் .” “என்று ரூபேஷ் அர்ஜுன் புகழ் பாட ,காஜல் புன்னகையுடன் அதை மொழி மாற்றம் செய்தாள்.

ப்ரீத்தி மனதிற்குள் ,”நீ ரொம்ப நல்லவனா இருக்கியே சிங்கு. எல்லா இடத்திலும்  உன் கோ.பா .செ தான் இருக்குங்க. அந்தளவுக்காடா  நீயி நல்லவன்.’என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள்.

அவன் ஊர் உலகத்திற்கு தான் நல்லவன், அவள் என்று வரும் போது அர்ஜுன் என்பவன் பக்கா கேடி ,கிரிமினல் என்பதை பாவம் அந்த அப்பாவி  பெண் உணரவில்லை .ஒருவேளை அவன் “all is fair in love and war “என்ற வகை சார்ந்த காதல் தீவிரவாதி என்று இப்பொழுதே தெரிந்து இருந்தால் u -turn போட்டு இருப்பாளோ!

காதல் எல்லா கிறுக்கு தனங்களையும் செய்ய தூண்டும் பயங்கரமான ஆயுதம். இதனால் போன உயிர்கள் எத்தனை ,மண்ணோடு மண்ணாய் மறைந்த சாம்ராஜ்யங்கள் எத்தனை ,மாறி போன வாழ்க்கை பாதைகள் ,குடும்பங்கள் எத்தனை ! அமிர்தமும் இது தான்,உயிரை கொள்ளும் அலகாலமும் இதே காதல் தான் .

இது பற்றி எதையும் அறியாத ப்ரீத்தி , தன் வாழ்க்கை பாதையை மாற்ற போகும் அர்ஜுனை சந்திக்க அமிர்ஸ்டெர் ரயில்வே ஜுங்க்ஷனில் வந்து இறங்கினாள். பதினான்கு கிலோமீட்டர் தாண்டி இருந்த ரயில்நிலையத்தை அடைந்து அவர்கள் செல்ல வேண்டிய ட்ரெயின் ஏறி தங்கள் இருக்கையில் அமர்ந்து ட்ரெயின் கிளம்பும் வரை ரூபேஷ் அங்கிருந்து நகரவேயில்லை.

“நாங்க பார்த்துக்கறோம்.”என்று பலமுறை ப்ரீத்தி ,காஜல் சொல்லியும் ட்ரெயின் கிளம்பும் வரை அவன் நகரவேயில்லை .

 

இதற்கும் அவனின் ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டே இருந்தது .அவன் பேச்சை வைத்தே அது கோடிக்கணக்கான ரூபாய் டீல் என்பதும் புரிந்தது .அப்படி இருந்தும் நண்பனின் குடும்பம் முக்கியம் என்று அங்கேயே ரூபேஷ் நின்ற விதம் சொல்லாமல் சொல்லியது அர்ஜுன் என்ற மனிதனின் மேல் அவனுக்கு இருக்கும் அன்பை .அந்த மனிதனுக்கு அங்கு இருந்த மரியாதையின் அளவை .

 

மதிப்பு என்பது பணம் ,படிப்பால் வருவதில்லை .நம் மனதை ,நடத்தையை ,உதவும் மனப்பான்மையை வைத்து வருவது. சும்மாவா அவனை “சர்தார் “என்று அழைக்கிறார்கள் .ஒரு லீடர் ,தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாய் டயலாக் பேசாமல், தன் உழைப்பால் நிரூபித்து கொண்டு இருக்கும் உண்மையான சக்ரவர்த்தி அவன்.

 

காஜலுடன் முதல் AC ஒரே கம்பார்ட்மெண்டில் கிடைத்து விட இருவருக்குமே நிம்மதி. அவர்களை சுமந்த ட்ரெயின் கிளம்பி விட ,அது கண்ணை விட்டு மறையும் வரை அங்கேயே நின்ற ரூபேஷ் ,அர்ஜுனுக்கு அழைத்து அவர்கள் கிளம்பி விட்ட தகவலை சொல்லி விட்டு கிளம்பினான் . .

 இவர்கள் சொகுசாய் பயணித்து வர ,ஜெஸ்ஸி – அர்ஜுன் வீட்டுக்கு செல்ல வேண்டிய உண்மையான ப்ரீத்தி ஜாஸ்மிந்தேர், காலை முதல் ரயில் நிலையத்தில் காத்து இருந்து ,நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தாள். காஞ்சு போன சப்பாத்தியும் ,சப்ஜியும் மட்டுமே கிடைத்தது. காத்திருப்பு அறையில் ரயில் வர காத்து இருந்தது அதை விட கொடுமையாக இருந்தது.         ரப்தார் பாட்டியா குடும்பத்தை கடிச்சி குதறும் வெறியில் இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டுமோ !

 

ட்ரைனிலும் 3ர்ட் கிளாஸ் ac தான் புக் செய்து இருந்தார்கள். இதுவாது செய்தார்களே என்ற நிலையில் தான் இருந்தாள் ஜெஸ்ஸி .காலையிலும் ,மதியமும் சாப்பிட உணவு ஒற்றுக்கொள்ளாமல் போக ,தலைவலியும் ,வாந்தியுமாக தவித்து போனாள் .

ப்ரீத்தியும் ,காஜலும் முதல் வகுப்பு AC தனி கூபேயில் பயணம் செல்ல ,பலரின் விதியை மாற்ற போகும் ப்ரீத்தியின் வேலைக்கு அங்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது உள்ளே வந்த நால்வரால் .வாழ்க்கை என்பதே பயணம் தான் .

 பயணத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் பலரின் வாழ்வை அடியோடு மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது என்றால் மிகையல்ல. அமன் இடம் செல்ல வேண்டிய ப்ரீத்தி, அர்ஜுன் இடம் செல்வதும், டிக்கெட் மாறியதும்,காஜலின் தோழமை கிடைத்ததும், இருவரும் ஒன்றாய் முதல் வகுப்பில் ஏறியதும் ,அவர்கள் கூபேவிற்கு அந்த நால்வர் வந்ததும் விதியின் விளையாட்டின் ஒரு பகுதி தான் .

யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தான் நடக்கும் ஒரு நிகழ்ச்சியின் முடிவினை மாற்றும்.அது அங்கே நடக்க ஆரம்பித்தது . 

  அப்பொழுது தான் இவர்கள் இருந்த கம்பார்ட்மென்டுக்கு அந்த பெண்மணியும் அவருடன் மூன்று பெண்களும் ஏறினார்கள். காஜலின் கவனம் தன் குழந்தைகளிடம் இருக்க, உள்ளே யார் வருகிறார்கள் என்று பார்த்து கொண்டு இருந்த ப்ரீத்தியின் கண்களுக்கு ஏதோ தவறாய் பட்டது .

அந்த பெண்மணிக்கு ஐம்பது வயது இருக்கலாம். பார்க்க சாசாத்  விக்ரமின் “தூள்” பட “சொர்ணாக்கா “மாதிரி தான் இருந்தார் அவர்.  கூட  இருந்த பெண்கள் அனைவரும் 15-16குள் இருந்தனர்.  அவர்கள் நால்வரும்  தூக்க முடியாமல் நான்கு பையினை தூக்கி வந்தார்கள்.

வந்தவர்களின் மேல் இருந்த தன் கண்ணை ப்ரீத்தி எடுக்கவே இல்லை. பலமுறை காஜல் அழைத்தும் பதில் வராது போகவே ,அவளை உலுக்கிய காஜல் ,”என்னடி அவங்களை அவ்வளவு பாசமா வைத்த கண் எடுக்காமல் பார்த்துட்டு இருக்கே ?தெரிஞ்சவங்களா என்ன ?”என்றாள் ப்ரீத்தியின் காது அருகே

 

“இல்லை பா தெரிஞ்சுக்க வேண்டியவங்க” என்ற ப்ரீத்தியின் வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது. அந்த வார்த்தையில், குரலில் இருந்த ஏதோ ஒன்று காஜலின் நெற்றியை சுருங்க வைக்க ,அவளும் அந்த நால்வரை உற்று பார்க்க ஆரம்பித்தாள் அவர்கள் அறியாமல் .

 

பயணம் தொடரும் …

 

 

error: Content is protected !!