PNV-27

PNV-27

இதழ்-27

சட்டென தீபனிடமிருந்து பதறி விலகிய மித்ரா, “என்ன பண்றீங்க மிஸ்டர் தீபன்!” என உள்ளே போன குரலில் கேட்க, “என்ன பண்றீங்கன்னு கேட்கக்கூடாது மித்து!” என்றவாறு சற்றுமுன் தன்னை மறந்து அவனுடைய தோளைப் பற்றியிருந்த அவளது கை விரல்களை தன் விரல்களால் மென்மையாகப் பிடித்துக்கொண்டு, “மைக்கேல் மதன காமராஜன் படத்துல காமேஸ்வரன் கமலஹாசன் கிட்ட ஊர்வசி சொல்லுவாங்க இல்ல; அந்த மாதிரி, ‘என்ன கட்டிண்டு இருக்கோம்’னு சொல்லணும்!

உடனே, ‘ஆஆஆ! ஓஓஓ! சுன்னரி நீயும் சுன்னரன் ஞானும் சேர்ந்திருநாள் திருவோணம்’னு பேக் கிரௌண்ட்ல பாட்டெல்லாம் வரணும்!” என அவன் கிண்டலில் இறங்க,

மூண்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு லாவகமாகத் தனது கையை விடுவித்துக்கொண்டே, “பாட்டு வருதோ இல்லையோ; அந்த படத்துல வர மாதிரி உங்க அம்மா; அப்பா; சரிகாக்கா; முக்கியமா பாரதிம்மா! எல்லாரும் மொத்தமா இங்க வந்து நிக்க போறாங்க! அப்பறம் நம்ம கதை கந்தல்தான்!” என அவன் சொன்ன அதே வேகத்திலேயே மித்ரா பதில் கொடுக்க,

“நல்லதா போச்சு; அப்படி மட்டும் நடந்தால் எனக்கு வேலை மிச்சம்! நானே எப்படி எல்லாரையும் சரி கட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்; ” என்றவன், “நம்ம கல்யாணம் பிக்ஸ் ஆயிடும் !” என்று முடித்தான் அவன்.

‘கல்யாணம்’ என்ற வார்த்தையில் முகம் கறுத்துப்போக, “இல்ல மிஸ்டர் தீபன்! நமக்குள்ள கல்யாணமெல்லாம் ஒத்து வராது!

கல்யாணம் அப்படிங்கற பேச்சுக்கே என் வாழ்க்கைல இடமில்லைனு நான் முடிவு பண்ணி எட்டு வருஷம் ஆச்சு!” என்றாள் மித்ரா தீவிரமாக!

“கல்யாணம் வேண்டாம்னா! உன்னோட பாரதிம்மா கிட்ட தீபன்தான் வேணும்னு சொன்னதா சொன்னியே; அதுக்கு என்ன அர்த்தம்!

லிவிங் இன் ரிலேஷன்ஷிப்ல வேணா இருந்துக்கலாமா மித்ரா!” எகத்தாளமாக அவன் கேட்க, “என்ன பேசறீங்க நீங்க!” எனப் பற்களைக் கடித்தாள் மித்ரா கோபத்துடன்!

“பின்ன; பெரிய இவ மாதிரி பேசற!” என அவன் கடுகடுக்க, “ப்ச்! எனக்கு தீபன் வேணும்; ஒரு ஃப்ரெண்டா; எப்பவுமே!” என அவள் கொஞ்சம் இறங்கிய குரலில் சொல்ல,

“அப்படினா நீ என்னை லவ் பண்ணல! அப்படித்தானே மித்ரா!’ என அவளது அகழி போன்ற கண்களில் தனது கண்களை மூழ்கடித்தவாறு அவன் கேட்க, அவனது கூர்மையான பார்வையைச் சந்திக்க இயலாமல் சற்று தடுமாறியவள், “ப்ச்… மிஸ்டர் தீபன்! சொன்னா புரிஞ்சிக்கோங்க!

ஒரு வேளை உங்களுக்காக உங்க அம்மா அப்பா இதுக்கு சம்மதிச்சாலும்; அவங்களால என்னை முழு மனசோட ஏத்துக்க முடியாது!

முக்கியமா சரிகாக்காவை நான் எப்படி ஃபேஸ் பண்ணுவேன்!

நீங்களே என்னை எப்படி நம்பினீங்கன்னே எனக்கு இது வரைக்கும் புரியல!

அவங்க என்னை எப்படி நம்புவாங்க! நான் உங்களை மயக்கிட்டதா இல்ல நினைப்பாங்க!

அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துட்டு நம்ம ஆயுளுக்கும் வருத்தப்படக்கூடாது!” என்றாள் மித்ரா கண்களில் நீர் திரையிட!

‘யாரோ பெத்த பிள்ளைங்களுக்காக அந்த சுடுகாட்டுக்குள்ள நீ போன அப்பவே எனக்கு உன்னைப் பத்தி புரிஞ்சுபோச்சு மித்ரா!

ப்ராக்டிகலா நம்ம கல்யாணம் ஒத்துவராதுன்னு புரிஞ்சிருந்தும் அந்த திலீப்பை வேணாம்னு சொல்லிட்டு வந்திருக்கியே! இப்பதான் உன்னை ரொம்பவே பிடிக்குது!

உன்னைப் போய் நான் எப்படிச் சந்தேகப்படுவேன்!! என எண்ணியவன் அதைச் சொல்லாமல், “ஓ! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ ஆயுளுக்கும் வருத்தப் படுவியா மித்ரா?” என வேண்டுமென்றே அவளிடம் குத்தலாகக் கேட்டான் தீபன் அவள் மனதை அறிய.

“நான் என்ன சொன்னா; நீங்க என்ன பேசறீங்க! இது விதண்டா வாதம்” எனக் கலங்கிய மனநிலையுடன் அவள் சொல்லவும்,

“அப்படியே வெச்சுக்கோ! முதல்ல நான் கேட்டதுக்கு  நீ பதில் சொன்னியா சொல்லு!” அவன் கேட்க,

“என்ன கேட்டீங்க; புரியல!” என்றாள் மித்ரா!

“நீ என்னை லவ் பண்றியா இல்லையா!” என தீபன் நேரடியாகவே கேட்க,

‘தெரியல! என்னோட மனசில் இருக்கிற பீலிங்ஸ்க்கு எப்படி பேர் கொடுக்கறதுனே எனக்கு புரியல! கன்ஃபியூசிங்கா இருக்கு!” என மித்ரா சொல்ல, வாய் விட்டுச் சிரித்தவன், “இல்லனு தெளிவா உன்னால பதில் சொல்ல முடியல இல்ல! இந்த கன்ஃபியூசிங் ஸ்டேட்லேயே இரு! உன்னை எப்படி டீல் பண்ணனும்னு எனக்குத் தெரியும்!” என்றான் தீபன் கர்வமாக.

வசத்துடைய கைப்பேசியில் எடுக்கப்பட்ட காணொளியில் தீபன் வதை படுவதை ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறாள் மித்ரா.

அந்த நிலையிலும் அவனது கண்களிலும் அவனது வார்த்தைகளையும் தெரிந்த அந்த திமிர், அதே திமிர் இன்னும் அதிகமாக கூட்டிப்போய்; இன்றும் அவனது கண்களில்; வார்த்தையில் அப்படியே இருக்கவும் அதிர்ந்தவள், அவன் ஒரு முடிவுடன்தான் இருக்கிறான் என்பது விளங்க, “போதும் ப்ளீஸ்! இதைப் பத்தி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்!” என்றவள், “பாரதிம்மா பொறுப்பை எடுத்துட்டுதான் இன்னைக்கு இந்த பார்ட்டிக்கு அவங்க கூடவே என்னை கூட்டிட்டு வந்தாங்க!

எப்படியும் லேட் நைட் ஆகும்னு தெரியும்! அவங்க கூடவே அவங்க வீட்டுக்கு போய்ட்டு காலைல எங்க வீட்டுக்கு போலாம்னு இருந்தேன்!

நீங்க போய் ரெஸ்ட் எடுங்க: நான் ஓலா இல்லனா ஊபர்ல புக் பண்ணிட்டு ஹோட்டலுக்கு போறேன்! ப்ளீஸ்!” என சொல்லிவிட்டு, அவனைக் கடந்து அவள் வெளியேற,

அவளது கரம் பிடித்துத் தடுத்தவன், “ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு; நானும் வரேன்; பாரதி மேம் கிட்ட சொல்லாமலேயே வந்துட்டேன்!” என அவன் சொல்ல, “ஒண்ணும் வேணாம்!” என்றவள், அவனை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டே,”இந்த நிலைமையில நீங்க ட்ரைவ் பண்ண வேணாம்!” என மித்ரா சொல்ல, “ஏய்! என்னை என்ன குடிகாரன்னு முடிவே பண்ணிட்டியா! நான்சன்ஸ்!” என்றவன், “நீ போட்ட ஓவர் சீன்ல போதையெல்லாம் மொத்தமா தெளிஞ்சு போச்சு! இரு வரேன்!” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த அறைக்குள் சென்று முகம் கழுவி, ஒரு துவாலையால் துடைத்துக்கொண்டே வந்தவன், அதை ஓரமாக வீசிவிட்டு, வேகமாகச் சென்று அவனது வாகனத்தை உயிர்ப்பித்தான்.

மிதமாகப் பொழிந்துகொண்டிருந்த மழையைப் பார்த்துக்கொண்டே, அவனைப் பற்றிய சிந்தனையுடன் மித்ரா பிரமித்துப் போய் நிற்க, காரின் ஹாரனை ஒலிக்கச் செய்தவன், அவளை வந்து உட்காருமாறு ஜாடை செய்ய, அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான் மித்ரா.

வாகனம் வேகம் எடுக்கவும், சீட் பெல்ட்டை இழுக்க அவளுக்கு உதவுவதுபோல் வேண்டுமென்றே அவளை உரசுவதுபோல் அவள் புரம் அவன் சாயவும், அவனை முறைத்துக்கொண்டே அவள் அதை மாட்டிக்கொள்ள, “ப்பா… சரிகா சொன்ன மாதிரி இவ மயிலாப்பூர் அம்மனேதான்!” என முணுமுணுத்தவரே ‘ஆடியோ சிஸ்ட’த்தின் ஒலியைக் கூட்டினான் தீபன்!

புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

நனையாத நிழலை போலே…

ஏங்கும் ஏங்கும் காதல்..

 

புலரா காதலே

புணரும் காதலே

அலராய் காதலே

அலறும் காதலே

 

முத்தம் என்னும் கம்பளியை

ஏந்தி வந்தே

உன் இதழும் என் இதழும்

போர்த்தி விடும்

 

உள்ளுணர்வில் பேர் அமைதி

கனிந்து வரும்

நம் உடலில் பூதம் ஐந்தும்

கனிந்து விடும்

 

தீராமல் தூறுதே

காமத்தின் மேகங்கள்

 

மழைக்காடு பூக்குமே

நம்மோடு இனி இனி…

 

புலரா காதலே

புணரும் காதலே

அலராய் காதலே

அலறும் காதலே

 

புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

புலராத காலைதனிலே

நிலவோடு பேசும் மழையில்

கண்ணே கண்ணே கீச்சொலியே

கீச்சொலியே

நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே

உள்ளே உள்ளே பேரிசையாய்

கேட்குதே

ஒப்பனைகள் ஏதுமற்ற

உந்தன் இயல்பும்

கற்பனையில் ஆழ்த்துகின்ற

கள்ள சிரிப்பும்

இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்

குட்டி குறும்பும்

காலம் உள்ள காலம் வரை

நெஞ்சில் இனிக்கும்

பேசாத பாஷையாய்

பேசாத பாஷையாய்

உன் தீண்டல் ஆகுதே

உன் தீண்டல் ஆகுதே

தானாக பேசுமே

என் மௌனம் இனி இனி

(‘டியர் காம்ரேட்’ திரைப்பட பாடல்)

பாடல் முடியவும் அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்குள் அவர்களுடைய வாகனம் நுழையவும் சரியாக இருந்தது.

அந்த பாடல் வரிகளில் லயித்திருந்தவன், வாகனத்தை அப்படியே நிறுத்திவிட்டு, “நான் உன்னை எப்படி நம்பறேன்னு கேட்ட இல்ல! இப்ப நான் கேக்கறேன்; நீ என்னை முழுசா நம்பறியா மித்து! நான் ஃபுல்லா ட்ரிங் பண்ணிட்டு இப்படி இருக்கும்போது கூட என்னோட எப்படி தனியா உன்னால வர முடிஞ்சுது” என அவன் கேட்க,

ஏற்கனவே அந்த பாடலில் கலந்திருந்த அதிகப்படியான காதலும் அவனோடான அந்த தனிமையும் தந்த மயக்கத்தில் அவன் முகம் பார்க்க நாணி, தன்னை மறந்து வெளிப்புறம் பொழிந்துகொண்டிருந்த மழையோடு ஒன்றி இருந்தவள், ‘மித்து’ என்ற அழைப்பிலும் அவனுடைய குரலில் இருந்த மென்மையிலும் மனம் அவன் பக்கம் சாய என்ன பதில் சொல்வது எனப் புரியாமல், “ஏன் திடீர்னு இப்படி கேக்கறீங்க!” என்றாள் மித்ரா.

“இல்ல உங்க அண்ணனை பழிவாங்க உன்னை யூஸ் பண்ணிக்கறேன்னு நீ நினைக்கலாம் இல்லையா?” என அவன் கேட்க, “உங்களால மறந்தும் ஒரு பொண்ணுக்கு தீங்கு செய்ய முடியாதுன்னு உங்கமேல எனக்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை தீபன்! அது எனக்குள்ள வந்து ரொம்ப வருஷம் ஆச்சு!” என்று சொல்லி அவனை நெகிழ வைத்தாள் அவனுடைய மித்ரா.

அவளது புரிதல் தந்த மகிழ்ச்சியில் மின்னலென அவளுடைய கன்னத்தில் தன் இதழை அழுந்தப் பதித்துவிட்டு வேகமாக அவன் இறங்கிவிட, சில்லிட்டுப் போயிருந்த அவளது  கன்னத்தில் கைவைத்தவாறு அதிர்ந்துபோய் சுற்றும் முற்றும் பார்த்தாள் மித்ரா.

அந்த வாகனத்தை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார் அந்த விடுதியின் பணியிலிருக்கும் ஓட்டுநர்.

அங்கே அருகில் வேறு யாருமே இல்லை என்பது புரிய, காரிலிருந்து அவசரமாக அவள் இறங்கவும் அவளுடைய கையுடன் தனது கையை கோர்த்துக்கொண்டு அவன் உள்ளே செல்ல எத்தனிக்க, தனது கையை உருவிக்கொள்ள அவள் முயலவும், அவனுடைய பிடிவாதம் மேலும் இறுக, “ப்ச்… கையைத்தான் பிடிச்சிட்டு இருக்கேன்; ரொம்ப சீன் போட்ட” என்றவன், “பார்ட்டில பார்த்த இல்ல; கபுல்ஸ் எல்லாரும் எப்படி வராங்கன்னு; அப்படிப் போகவேண்டியதா இருக்கும்!

ஃபார்மலா ‘வித் யுவர் பெர்மிஷன்’ லாம் சொல்லிட்டு இருக்கமாட்டேன்!” என்றான் அவன் அவனது பாணியில்.

அவனது அந்த செய்கையில் கோபம் வருவதற்குப் பதிலாகச் சிரிப்புதான் வந்தது மிதரவுக்கு.

அவள் மிக முயன்று அதனை அடக்கவும், “சிரிச்ச முகமா, உள்ள போகலாம் தப்பில்ல! உன்னோட பராதிம்மா சந்தோஷ பாடுவாங்க” என்று சொல்லிக்கொண்டே அந்த ‘பார்ட்டி ஹால்’க்குள் நுழைந்தான் தீபன் மித்ராவுடன்.

அங்கே போடப்பட்டிருந்த மேடையில், சற்று நேரத்திற்கு முன் மித்ராவுடன் பேசிக்கொண்டிருந்த அலங்கார பதுமை போன்றே இருந்த அந்த பெண் திலீப்புடன் இணைந்து புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்க, அவர்களுடைய திருமண அறிவிப்பு முடிந்திருந்தது புரிந்ததது தீபனுக்கு.

“அவங்கதான் மாளவிகா! மிஸ்டர் திலீப்போட அத்தை பொண்ணு!” என மித்ரா சொல்ல, “ஓ!” என வியந்தான் தீபன்.

அவன் அவளை இதுவரை பார்த்ததில்லை. அழகாகத்தான் இருந்தாள் திலீப்பை மணக்கவிருக்கும் பெண்.

“அவங்க ரொம்ப நல்ல டைப்பா தெரியறாங்க; லண்டன்ல எம்.எஸ் அண்ட் பிஸினஸ் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்காங்க!” என மாளவிகாவை பற்றி மித்ரா புகழ்ந்துகொண்டிருக்க, “இவளைத்தானே கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலன்னு சொல்லிட்டு இருந்தான் இந்த திலீப்; இப்ப எப்படி சம்மதிச்சான்?” என அவன் மெல்லிய குரலில் முணுமுணுக்க, “சொல்றவங்க, சொல்ற விதத்துல சொன்னா; திலீப் மாதிரி ஆளுங்க மனச ஈஸியா மாத்திடலாம்” என அந்த கலையில் கைதேர்ந்தவனிடமே சொன்னாள் மித்ரா புன்னகையுடன்.

அதற்குள் அவர்களைப் பார்த்துவிட்டு பாரதி அங்கே வர, தனது கையை விடுவிக்கப் மித்ரா போராட, வேண்டுமென்றே அவர் வெகு அருகில் வந்த பிறகே அவளுடைய கையை விட்டவன், “சாரி மேம்! உங்க வசுந்தராவை நான் கொஞ்ச நேரம் கடத்திகிட்டு போயிட்டேன்” என்றான் தீபன் விஷமமாக!

“நீ செஞ்சாலும் செய்வ தீபன்! ஆச்சரியப்படுறதுக்கே இல்ல!” என்ற பாரதி, “சொல்லாம கொள்ளாம எங்க போன மித்ரா! நீ கொஞ்ச நாளா மந்திரிச்சு விட்ட மாதிரிதான் சுத்திட்டு இருக்க!

பொம்பள புள்ளைக்கு கொஞ்சமாவது மனசுல பயம் வேணாம்!” என அவர் அழுத்தமாக அவளிடம் சொல்லவும், அவள் பதில் பேச தயங்க, “கொஞ்சம் பேச வேண்டியதா இருந்தது; நான்தான் அவளை கார்ல ஒரு ட்ரைவ் கூட்டிட்டு போனேன்!’ என்றான் தீபன் அவளை முந்திக்கொண்டு.

“ஏன்? மேடம் பேச மாட்டாங்களா! இல்ல அவ என்ன பேசணும்னுகூட நீதான் டிசைட் பண்ணனுமா!” என்ற பாரதி, “நீ ஏதோ செஞ்சிருக்க; இல்லனா என்கிட்டயே வந்து, ‘எனக்கு தீபன்தான் வேணும்’னு சொல்லுவாளா அவ?” எனக்கேட்டார் பாரதி.

தீபனை பற்றிய பயமும் வசுமித்ராவை பற்றிய கவலையும் அவரது குரலில் விஞ்சி இருந்தது.

தீபனுடைய நல்ல மனதை உணர்ந்திருந்தாலும் அவனுடைய  கோபத்தையும், பழி தீர்க்க அவன் எந்த எல்லை வரையிலும் செல்வான் என்பதையும் நன்கு அறிந்தவர் என்பதால் வசந்த் செய்த குற்றத்திற்காக அவனைப் பழி வாங்க அல்லது அவனைப்பற்றி அறிந்துகொள்ள மித்ராவை தீபன் பயன்படுத்திக்கொள்கிறானோ என்ற எண்ணம் பாரதிக்குள் உழன்றுகொண்டிருப்பது நன்றாகவே புரிந்தது அவனுக்கு.

‘சாரி மேம்! நான் மித்ராவை சின்சியரா லவ் பண்றேன்! அவளை நல்லபடியா மேரேஜ் பண்ணிக்க ஆசை படறேன்னு வார்த்தையால சொல்லி உங்களை என்னால கன்வின்ஸ் பண்ண முடியவே முடியாது! போகப்போக நீங்களே புருஞ்சுப்பீங்க!’ என மனதிற்குள் எண்ணியவன், “அவ, ‘தீபன்தான் வேணும்’னு சொன்னா அதுக்கான காரணத்தை அவகிட்டத்தான் நீங்க கேக்கணும். எனக்கென்னவோ இது இப்ப புதுசா ஏற்பட்ட எண்ணம் மாதிரி தோணல!” என்றவன், “ஆமாம்! முன்ன எப்பவாவது நீங்க அபிஷியலா சேலம் வந்த சமயத்துல மிஸ்டர் செல்வராகவன் உங்களுக்கு அபிஷியல் ட்ரைவரா இருந்தாரா?” என நேரடியாகவே கேட்டான் தீபன்.

“எனக்கு நீங்க உதவி செய்ததுக்கும் ராகவன்தான் காரணமா?” என்ற மறைமுக கேள்வியும் அதில் அடங்கியிருப்பது அவனை நன்கு உணர்த்த திவ்யபாரதிக்கு நன்றாகவே புரிந்தது.

error: Content is protected !!