Ponnoonjal-10

Ponnoonjal-10

ஊஞ்சல் – 10
நடுநிசியைத் தொடும் பின்னிரவுப் பொழுது… பனிக்காற்று உடலை துளைக்க அந்த மையிருட்டில் தன் வீட்டுப் பெரிய தோட்டத்தின் நீளசிமெண்ட் பெஞ்சில் அமைதியை தேடும் முயற்சியில் இருளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ரிஷபன் சீனிவாசன்.

அவன் மனதில் பல எண்ணங்கள் படை எடுத்து அவனைப் பந்தாடிக் கொண்டிருந்தன. தன்னைத்தானே அலசிப் பார்க்க வேண்டி இருந்தது. முதல் மனைவி மீது தான் கொண்ட நேசத்தை நினைத்துப் பார்க்கும்போது அது வெறும் பூஜ்ஜியம் என்ற அளவில் தெரிய, ஒரு பெண்ணை அறிந்து கொள்ள மட்டுமே அவளுடன்தான் வாழ்ந்து வந்ததை நினைத்து தன்னைத்தானே வெறுத்துக் கொண்டான்.

அதே ரீதியில் மகனையும் கண்டுகொள்ளாமல் இத்தனை நாட்கள் இருந்து விட்டாயா? என்று அவன் மீதான தவறை அவன் மனமே வெளிச்சமிட்டுக் காட்டிட, என்ன செய்து தன்மகனை தன்னுடன் சேர்த்து கொள்வது என்று அவனுக்கு விளங்கவில்லை.

பெரியவர்களின் நிழலில் எப்பொழுதும் இருந்தவள், கணவனின் தேவையை மட்டுமே பெரிதாக எண்ணி தன்னைத்தானே சுருக்கிக்கொண்டு வாழ்ந்த முதல் மனைவியின் தியாகத்தில் ரிஷபன் காணாமல் போய் இருந்தான்.

கடமையாக வாழ்ந்த முதல் வாழ்க்கையில் ஒருநாள் கூட அவன் மனம் மனைவியைத் தேடியதும் இல்லை, தள்ளி வைத்ததும் இல்லை… இத்தனை ஏன்? இதனைத்தான் தன் மனம் தேடுகிறது என்பதையும் அறிந்து கொள்ளாதவன் ரிஷபன்.

சமீபநாட்களாய் தாய் மகளின் மேல் உண்டான அக்கறையில் மட்டுமே மனதின் விருப்பு வெறுப்புகளை ஆராய்ந்து கொள்ளும் பக்குவநிலையை அடைந்திருக்கிறான்.

அவர்களின் பரிதாப நிலையில் எழுந்த பாசமான உணர்வே அவனை அவர்களோடு நெருங்க சொல்லியதை யார் செய்த தவறு என்று சொல்ல முடியும். தன் உள்ளத்து உணர்வுகளை இன்னதென்று தெளிந்து கொள்ள வழியில்லாமல் முகத்தில் சோகமும் சோர்வும் போட்டிபோட அமர்ந்திருந்தவனைத் தேடி அசலாட்சி வந்தாள்.

மலர்த் தோட்டத்தில் தன்நிலை மறந்து அமர்ந்து இருந்தவனுக்கு மனைவி சூடியிருந்த கொடிபிச்சி வாசம் நிகழ் காலத்திற்கு வரவழைத்தது.

“இந்த நேரத்துல இங்கே ஏன் வந்த சாலா? அம்மு தேடுவா கிளம்பு நீ?”

“அவ இன்னைக்கு ரொம்ப பெரிய பொண்ணாயிட்டா… அண்ணனை சமாதனபடுத்திறேன்னு அவன்கூட பேசிட்டே ரெண்டு பேரும் தாத்தா ரூம்ல தூங்கிட்டாங்க”

“ஹஹா.. பிடிச்சா விடமாட்டா போல!”

“நாளைக்கு அவன்கூட சண்டைபோடும் போது இதை சொல்லுங்க பாவா!” என்று இலகு குரலில் சொன்னவள்,

“இன்னும் கோபம் போகலையா பாவா?” மென்குரலில் கேட்க,

“அப்படி எல்லாம் இல்ல சாலா! என் கோபத்தை மதிக்க ஆள் இருக்கா என்ன?” உணர்ச்சி துடைத்த குரலில் பதில் அளித்தான்.

“கோபத்துல போனவர அப்படியே விட முடியுமா? நான் உங்களுக்கு ஃபோன் பண்ணி கூப்பிடலன்னா மாமா செஞ்சுருப்பாங்க… பெரியவங்களுக்கு மனகஷ்டம் வரவைக்கவா நாம இருக்கோம்?” என்று சற்று அழுத்தத்துடன் அசலாட்சி பேச,

“அப்போ என் மனசுல இருக்கிறத வெளிக்காட்டமா அமைதியாத் தான் இருக்கனுமா?” என்று ஆற்றாமையுடன் தன் மனதை வெளிபடுத்தினான் ரிஷபன்.

“இதென்ன பேச்சு பாவா? யார் அப்படி தவிக்கவிட்டது உங்கள?” முடிந்த அளவு தன்னாலான சமாதானத்தை அசலாவும் செய்தாலும் முகத்தை சுருக்கிக் கொண்டான் ரிஷபன்.

“பேரன் மேல இருக்கிற பாசத்தில பேசிட்டாங்க! மறந்துடுங்க பாவா!”

“கடைசி வரைக்கும் யாரையும் புரிஞ்சுக்காம நான் இப்படிதான் இருக்கப் போறேன் போல?”

“இதெல்லாம் உங்க மனக்குழப்பம்… கொஞ்சநேரம் அமைதியா இருங்க…” என்று வாஞ்சையாய் சொல்ல,

“என்னை நம்பி வந்த என் முதல் மனைவிய சரியா பார்த்துக்கல என்கிற குற்ற உணர்ச்சி எனக்கு நிறையவே இருக்கு சாலா! அதுபோக சின்னாவையும் சரியா கவனிச்சு வளர்க்கத் தெரியாத பொறுப்பில்லாதவன் நான்!” கழிவிரக்கத்தில் தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.

“எதுக்கு பாவா? உங்களை நீங்களே தாழ்த்தி பேசுறீங்க…”
“உண்மை அதுதான் சாலா! இருபது வயசுல ஊர் சுத்திட்டு இருந்தவன கல்யாணம் பண்ணி வச்சா, பொறுப்பா இருப்பான்னு நினைச்சு கங்காவ எனக்கு கட்டி வச்சாங்க. தனக்கு என்ன தேவைன்னு அவ இருந்தவரைக்கும் என்கிட்டே சொன்னதில்ல, நானும் அத்தனை அக்கறையா அவகூட பேசினதும் இல்ல.” – ரிஷபன்.
“ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சாங்க?” – சாலா.
“கிராமத்துல ரொம்ப சின்ன வயசுல கல்யாணம் முடிச்சு வச்சுடுவாங்க சாலா! பொண்ணு பெரியமனுஷி ஆனா போதும். அதுபோல ஆண்பிள்ளைகளுக்கு பதினெட்டு முடிஞ்சா போதும். எனக்கு இருபது அவளுக்கு பதினெட்டு வயசு கல்யாணத்தப்போ…” என்றவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“எல்லாம் கேட்காமலேயே கிடைச்சதாலோ என்னவோ, எனக்கு அவ மேல பாசமா இருக்கணும்னு தோணல! கிராமத்துல வளர்ந்த பழக்கவழக்கம், ஆண் பிள்ளைங்கிற திமிருலயே சுத்திட்டு இருந்தேன்.

என்கூட பேசுறதும், வாழ்றதுமே தன்னோட வாழ்க்கைய முழுமைபடுத்தும்னு நினைச்ச அப்பாவி அவ! ஆனா அவளுக்கு நான் கொடுத்தது எல்லாம் வலிகளோடு கூடிய மரணம் தான்.” – என்று சொன்னவனின் குரலில் அப்படி ஒரு வேதனை.

கணவனின் முன்னாள் வாழ்க்கையை அறிந்து கொள்ள எந்தநாளும் முயன்றதில்லை அசலாட்சி. ஆனால் தானாக முன்வந்து சொல்பவனை தடுக்கவும் மனம் வரவில்லை. மொத்தத்தில் தன்னை தாழ்த்திக்கொண்டு கணவன் பேசியது, அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் மனபாரத்தை அறிந்து கொள்ள பதில் பேசாமல் சொல்வதை கேட்டுக் கொண்டே இருந்தாள்.

“அவளை நான் அதிகமா தேடினதில்ல… என் தேவைக்கு மட்டுமே அவகூட நான் பேசி இருக்கேன்… நாள் முழுசும் வெளியே சுத்திட்டு வர்ற என்கிட்டே, தன்னோட கஷ்டத்தை அவளா வந்தும் சொன்னதில்ல சாலா!”

“——“

“சின்ன வயசுலயே கர்பப்பை கட்டி இருக்குனு சொல்லி, அஞ்சு வருஷம் பிள்ளைபேறு தள்ளிப் போச்சு. பிரசவத்துக்கு அப்புறம் தனக்கு வந்த கஷ்டத்தை வெளியே சொல்லாமலேயே ரெண்டு வருஷம் இருந்திருக்கா! ஒரு நாள் மயக்கமாகி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய் பார்க்கும் போதுதான் அவ எத்தன வலிகளை தாங்கிட்டு இருந்திருக்கான்னு தெரிஞ்சது!”

“அவங்களுக்கு என்ன ஆச்சு?”

“பெண்களுக்கு மாசாமாசம் ஐந்து நாள் மட்டுமே வர்ற பிரச்சனை, அவளுக்கு பதினைந்து நாள் வர ஆரம்பிச்சிருக்கு. கட்டின புருஷன் என்கிட்டே கூட சொல்லாம அவளோட கூச்ச சுபாவம் தடுத்ததுக்கு யார்மேல பழி போடமுடியும்? வீட்டுப் பெரியவங்களும் பிரசவத்துக்கு அப்புறம் இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லவும், எதையும் சொல்லாம மறைச்சுட்டா!”

“—–“

“உடம்புல ரத்தம் குறைஞ்சு ரொம்ப பலவீனமா இருந்தா! மருந்து கொடுத்து, அத எடுத்துக்க அவளோட உடல் ஒத்துழைக்கல… அதுவே அவளுக்கு எமனாப் போச்சு! அவகூட ஒருநாள் அக்கறையா பேசி இருந்தாலும் என்னால கண்டுபிடிச்சிருக்க முடியும் அதை செய்யாத பாவி நான்!” என்று சொன்னவனின் இதயம் ஏகத்திற்கும் துடிக்க ஆரம்பிக்க, மனஅழுத்தம் தாளாமல் மனைவியின் தோளில் சாய்ந்து விட்டான்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவன், கம்பீரமாக வலம் வருபவனின் நெஞ்சம் வேதனையில் தவிப்பதைப் அசலாட்சியால் பார்க்க முடியவில்லை. எங்கே இன்னும் இரண்டு வார்த்தைகள் பேசினால் உடைந்து விடுவானோ என்று அவள் நினைத்திட கணவனை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

“அவங்கவங்க போக்குல இருந்துட்டீங்க பாவா! விதி அப்படி நடக்கனும்னு இருந்தா மாற்ற முடியாது.”

“ரெண்டு வயசு சின்னா அம்மாவ தேடி அழுதத நினைச்சா இன்னும் வலிக்குது எனக்கு… யார் கையிலயும் இருக்க மாட்டான். வெளியே சுத்த வச்சு தான் சாப்பாடும் தூக்கமும் அவனுக்கு… அந்த மாதிரி நேரத்தில யாரவது ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கையில வச்சுக்கப் போய் என் பக்கம் வராமயே போயிட்டான்… தொழில், ஊர்க்காவல் கவனிச்ச எனக்கு இவன கவனிக்க நேரம் இல்லாம போயிடுச்சு” என்றவனின் குரலில் மகனின் பாசம் வெளிப்பட்டது.

“போதும் பாவா! மனச இவ்வளவு கஷ்டபடுத்திக்க வேணாம்”

“சின்னா என்னை நெருங்கவே பயப்படுறானே அதை நினைச்சா தான் என்னால தாங்க முடியல” என்று புலம்பியவண்ணமே இருக்க,

“அவனுக்கு உங்க மேல பயம் இல்ல பாவா! அவனுக்கு உங்ககூட நெருங்கிப் பழகுற வாய்புகள் இல்ல. என்னோட அப்பாதான் எனக்கு எப்பவும் பிடிக்கும்னு சொல்வான்” என்று இலகு குரலில் அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

“நிஜமாவா சொல்ற? என்னமோ எனக்கு நம்ப முடியல” என்று பெருமூச்செறிந்தவாறே சொன்னவன் அவள் மடியில் தலை சாய்த்தான். கணவனின் தவிப்பு நீங்கிட அவன் தலையை ஆதூரமாய் தடவி கொடுக்க, தன் மனதில் உள்ளதை தயங்காமல் சொல்லிக் கொண்டே வந்தான்.

“பொம்மி அப்பாவ தேடி அழும்போது எனக்கு சின்னா நினைப்புதான் வந்தது. உன்னோட அப்பாவா நான் இருக்கேன்ரான்னு தோள்ல போட்டு சொல்லத் தோணுச்சு.” என்றவனின் குரலில் விவரிக்க இயலாத ஆதங்கம் தென்பட்டது.

“என் பிள்ள மாதிரியே இந்த குழந்தையும் ஏங்குறாளேனு நிமிசத்துக்கு நிமிஷம் என்னை தவிக்க வைச்சுருச்சு சாலா! அவளோட சந்தோசத்துக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்னு துடிச்சிட்டு இருந்தேன்! நமக்கு கல்யாணம் நடக்கலன்னா கூட நான் அவள தத்தெடுத்து இருப்பேன்” என்று தன் பரிதவிப்புகளை எல்லாம் மொத்தமாக கொட்டிக் கொண்டிருந்தான் ரிஷபன்.

ஊரில் உள்ளவர்களை எல்லாம் மிரட்டிக் கொண்டும், அதிகாரம் பண்ணிக்கொண்டும் நாட்டாமை செய்யும் தன் கணவன், மென்மையான உள்ளம் படைத்த சிறு பிள்ளையாக அந்த நேரத்தில் அசலாட்சியின் கண்களுக்கு தெரிந்தான்.

மொத்தமாக தன் உள்ளத்தில் இருப்பதை இறக்கி வைத்தவனுக்கு, ஆறுதலாய் மனைவியின் அருகாமை அமைதியை கொடுக்க சற்று நேரம் கண்களை மூடி அனுபவித்தான்.

“பனி கொட்டுது பாவா! இப்படியே தூங்குற ஐடியா இருக்கா?” சிரித்த குரலில் கேட்க,

மனைவியின் மடியில் சௌகரியமாய் தலை வைத்துக் கொண்டிருந்தவன் அவளை பார்த்து சிரித்து,

“இன்னும் கொஞ்சநேரம் சாலா!” சங்கடங்கள் தீர்ந்த குரலில் சொன்னவன், அவள் கைகளில் தன் முத்திரையை கணக்கில்லாமல் பதிக்கத் தொடங்கினான்.

“ம்ஹூம்… இது சரியில்ல… நான் கிளம்புறேன்” என்று அவனை விட்டு விலகி வீட்டை அடைய அவளை பின் தொடர்ந்தே வந்து,

“சாலா என்ன அவசரம்? எதுக்கு இப்படி ஓடி வந்த?” என்று கேட்டவன் ஒரு கையால் கதவை மூடிக்கொண்டு மறுகையால் அவளை பின்னால் இருந்து அணைத்திருந்தான்.

முதுகோடு உரசிய அவனது மூச்சுகாற்று மனைவியை சிலிர்க்க வைத்திருக்க, அவள் விலக நினைத்தாலும் அவனை விலக்கிச் செல்லவில்லை.

“மடியில படுக்க வச்சு ஆசையா பேசிட்டு இப்படி ஓடி வந்தா என்ன அர்த்தம்?” என்று மனைவியின் பின்னக்கழுத்தில் தன் இதழ்களை உரசியபடியே கேட்க,

“பாவா தள்ளிப் போங்க!” என்று சொன்னவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. கணவனின் அருகாமை நொடிக்கு நொடி அவளை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது.

பாரங்களை இறக்கி வைத்த இளகிய மனநிலையில் இருந்தவன் உல்லாசத்துடன் அவளை தன்புறம் திருப்பி ஊடுருவிப் பார்க்க, அந்தப் பார்வை பல பாஷைகளை மட்டும் அல்ல கணவனின் ஆசைகளையும் பேசியது.

“நீங்… நீங்க… அடிக்கடி இப்படிப் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க!” சொல்லி சட்டென்று தலைதாழ்த்திக் கொண்டாள்.

“என் பொண்டாட்டிய நான் பார்க்குறேன். பார்க்குற எனக்கே தோணாத நினைப்பு எல்லாம் உனக்கு ஏன் வருது?” என்று கேட்டு அவளை நேருக்கு நேர் பார்க்க வைத்தான்.

“இன்னும் தள்ளிப் போயிட்டே தான் இருக்கணுமா?” என்று சொன்னவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்த அவன் முகத்தை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள்.

“இன்னைக்கு வேண்டாம் பாவா!” என்று மேலும் அவனை மார்பில் கைவைத்து தடை செய்து நிறுத்த,

“இன்னும் எத்தன நாள் இதையே சொல்லி என்னை விலக்கி வைக்க போற?” என்று கிறக்கமாக கேட்டுகொண்டே அவளை முத்தமிட்டான்.

“எனக்கு சின்னா பத்தின நினைப்பே மனசுல இருக்கு… இந்த சமயத்துல வேண்டாமே” என்றவளின் பேச்சு கணவனின் தாபங்களை நொடியில் தகர்த்தெறிந்திட,

“நீ சொல்லும் போதே நான் கவனிச்சிருந்தா இப்போ இந்த நிலைமை இல்ல…” என்றவன் அவளை விட்டு தள்ளிப்போக, அவளுக்கு கணவனின் நிலைமை பாவமாய் தோன்றியது.

சற்று முன்னர்தான் தன் மனபாரங்களை எல்லாம் கொட்டி தீர்த்தவன் மீண்டும் அதே மனநிலைக்கு சென்று விடுவானோ என்று அஞ்சியே,

“நான் அந்த அர்தத்ததுல சொல்லல பாவா! அவனோட பக்குவத்தை பார்த்த நீங்க அவனோட வயச பார்க்க மறந்துட்டீங்க! அதுதான் சொன்னேன்…” என்று சொல்லியபடியே அவன் அருகில் உட்கார்ந்து சமாதானம் செய்ய விழைய அது முடியாமல் போனது.

கணவனின் கூம்பிய முகம் அவனை சிறுவனாக நினைக்க வைக்க, வழக்கம் போல் அவனுக்கு பிடித்த லஞ்சத்தை கொடுக்க ஆரம்பித்தாள்.

மனைவியின் தொடுகையில் விலகிய மயக்கம் மீண்டும் வந்து தாக்க, உச்சியில் அவள் முத்தம் பதித்த நேரத்தில் அவள் இடையை வளைத்து பிடித்து தன் தாபத்தை அவளுக்கு தெரியபடுத்தினான்.

“என்ன பண்றீங்க பாவா?” என்று கேட்டவளின் பேச்சை தன் இதழால் தடை செய்தவன் அவள் தேகமெங்கும் தன் முத்திரைகளால் அர்சிக்க, பெண்ணவள் தாளாத மயக்கத்தில் அவன் வளையத்திற்குள் வந்து விழுந்தாள்.

அவனிடம் மயங்கிய போதையில், அவன் செய்த செயலுக்கெல்லாம் தானாகவே உடன்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவனுக்கும் அதேநிலை தான். மயங்கியவளுடன் அவனும் மயங்கியே காதலின் அடுத்த கட்டத்தை அரங்கேற்றம் செய்தான்.

அவனது வன்மையை தூர வைத்தே, அவள் மீதான தனது ஆசையை, சொல்லாமல் சொல்லி முடிக்க, எந்தவொரு இடையினங்களும் இடையிடா வண்ணம் பொங்கிய ஊற்றாய் இல்லறம் என்ற சொர்க்கவாசலில் காலடி எடுத்து வைத்தனர்.

கேட்டுக் கிடைத்தவைகளும் கேட்காமல் கிடைத்த வெகுமதிகளும் சேர்ந்து இருவரையும் ஒரு வகையான புரிதலில் இணைத்திருக்க, அந்த மாயாஜாலத்தை உண்டு பண்ணிய இரவிற்கு நன்றி சொல்லியே கொண்டாடிக் களித்தனர்.

மறுநாள் காலை அந்த வீட்டு இளவரசியின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.

“சீனிப்பா! தாத்தயா ரூம்ல எனக்கு ஒரு கட்டில் வேணும்… சின்னையா, அவன் பக்கத்துல எனக்கு இடம் குடுக்கல!” – பொம்மி.

“பொய் சொல்ற பொம்மி! என்மேல காலை தூக்கிப் போட்டு என்னை ஓரமா தள்ளி விட்டுட்டு நீதான் நல்லா தூங்கின” பதிலுக்கு பதில் பேசிய சின்னாவிற்கு முன்தினம் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பழைய கதையாகி இருந்தது.

அந்த அளவிற்கு பேசிப்பேசியே அவனை சகஜ நிலைக்கு திருப்பி இருந்தாள் அவனது செல்லத்தங்கை.

“நான் தாத்தாகிட்ட கதை கேக்கும் போது உன்னை யாரு என் பக்கத்துல வந்து படுக்க சொன்னா?” இருவரின் வாய்ச் சண்டையும் முடிந்த பாடில்லை.

இவர்களின் பேச்சில் அனைவரும் நன்றாகவே மனம்விட்டு சிரித்து விட்டனர். அசலாட்சியும் அந்த சமயத்தில் முன்தினம் பிள்ளைகளைப் பற்றித் தான் கணித்து கூறியதை கணவனுக்கு நினைவு படுத்தினாள்.

“நான் சொன்னது சரியா போச்சா? இப்போ யார் யாரை விட்டுக் கொடுக்காமா இருக்கான்னு எனக்கே தெரியல” என்று அசலா கேலிபேச்சு பேச,

“அம்மா இனிமே என்கூட இவ படுக்க வேணாம்… உங்ககூட வச்சுக்கோங்க” என்று சின்னா சண்டையை தொடர்ந்திட,

“போடா சின்னையா நான் தாத்தா கூடதான் படுப்பேன்… நீ இருக்காதே” தன் பங்கிற்கு பேச,

“பொம்மி அப்படி சொல்லக்கூடாது!” என்று அசலா கண்டிக்க,

“நாணா! எனக்கு தனி ரூம் குடுங்க! இவ கூட என்னால இருக்க முடியாது” என்று தந்தையுடன் சகஜமாக பேசிக்கொண்டே போட்டிபோட ஆரம்பித்தான். யாரும் யார் பேச்சையும் கேட்கும் மனநிலையில் அங்கே இல்லை.

ரிஷபனுக்கும் ஆச்சரியம்தான்… தன்னிடம் மகன் ஒதுங்கி இருக்கிறானே என்ற அவன் வருத்தத்தை தேவையில்லாத ஒன்றாக நினைக்க வைத்துக் கொண்டிருந்தான் சின்னா.

“பொம்மி பேசிபேசியே என் தூக்கத்தை கெடுத்துட்டா… கேள்வி கேட்டுகிட்டே இருக்கா… பதில் சொல்லி முடியல நாணா!” அலுப்புடன் சொல்ல,

“உனக்கு ஒன்னுமே தெரியல சின்னா! புவர்பாய் நீ” என்று அண்ணனை வாரிவிட்டாள் சுட்டிப்பெண்.

“அப்படி சொல்லக்கூடாது பங்காரம்! அவன் உனக்கு அண்ணா” – ரிஷபன்.

“நல்லா சொல்லுங்க நாணா! உங்க பக்கத்துலயே இவள வச்சுக்கோங்க” நக்கலடித்தான் சின்னா.

“சின்னா! அம்முகூட சண்டை போடறத குறைச்சுக்கனும்ரா!” இருவரையும் சமரசம் செய்யும் வேலையை மேற்கொண்டான் ரிஷபன்.

“நாணாவும் கதை சொல்லுவேன்ரா அம்மு… என் பக்கத்துல தூங்குரா! சின்னா பாவம்தானே?” என்று மகளை கொஞ்சிக் கொண்டே சொல்ல,

“நீ சீக்கிரம் வீட்டுக்கு வந்தா உன்கிட்ட நான் கதை கேக்குறேன் சீனிப்பா! உனக்கு லாலி பாட்டு பாடத் தெரியுமா?” என்று தந்தையை கேட்டவள்,

“அச்சும்மா! ராஜு தாத்தா(சுந்தரராஜுலு – அசலாவின் தந்தை) மாதிரியே ராமு தாத்தாவும்(வேங்கடராமைய்யா – ரிஷபனின் தந்தை) நேத்து லாலி பாடினாங்க… டெய்லி அவங்க கூட தூங்கினா பாட்டு சொல்லிக் குடுப்பாங்களாம்” என்ற குட்டிபெண் தனக்கு பாட்டு பாடுவதில் உள்ள ஆர்வத்தை வெளியிட்டாள்.

“எல்லாரையும் மரியாதை இல்லாம பேசிட்டே இருக்க பொம்மி! நாணாவ வாங்க போங்கனு கூப்பிட்டு பழகு!” என்று அசலா மகளின் பேச்சை தடை செய்ய,

“விடு சாலா! அவளுக்கு எப்படி தோணுதோ அப்படியே சொல்லட்டும். பாட்டு கிளாஸ் போறியா பங்காரம்?” என்று ரிஷபன் கேட்க, தாயும் மகளும் ‘வேண்டாம்’ என்று ஒருமித்த குரலில் மறுப்பு தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே சுற்றி வருவதை இன்னும் மாற்றிகொள்ளாமல் இருந்தனர் இருவரும்.

ஒரு வழியாக அண்ணன் தங்கை பஞ்சாயத்து ஒரு முடிவிற்கு வர சின்னாவிற்கு தனியாக கட்டிலும், பொம்மிக்கு தாத்தாவின் பக்கத்தில் தூங்க இடமும் கிடைத்தது.

அவ்வப்போது ரிஷபன் மகளுடன் பேசிக்கொண்டே இருவரும் சேர்ந்து உறங்குவதும் வழக்கமானது. நாளுக்குநாள் இழையோடிய அன்பின் இறுக்கத்தில் மிக சந்தோசமாக நாட்களும் நகர்ந்தது.

குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியும், மகளின் ஆரோக்கியமான நடமாட்டமும் அசலாட்சிக்கு மனநிறைவைத் தந்தது. அந்த பூரிப்பில் தன்னை அறியாமலேயே ஒருதவறை அவள் செய்யப்போக அதன் விளைவு மகளிடம் எதிரோலித்தது.

பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் பல புகார்கள் பொம்மி மீது வரத் தொடங்கியது. அவளது பிடிவாதத்தோடு மூர்க்கத்தனமும் கூடிட அனைவரையும் தாக்க ஆரம்பித்திருந்தாள். பள்ளியில் தன் வகுப்பு தோழிகள் மற்றும் ஆசிரியர் மட்டுமே அவளது உலகமாக இருந்தது.

அவளது பிடிவாதத்தை தடை செய்தவர்களை அடித்தும் கடித்தும் வைப்பது வழக்கமாகிப் போனது. அவளை கண்டிப்பதற்கும் ஆசிரியர்கள் பின்வாங்க ஆரம்பித்திருந்தனர். படிப்பு மற்றும் அவளது ஆட்டத்தை எல்லாம் வகுப்பறை என்ற அளவிலேயே வைத்திருந்தாள்.

வீட்டில் அனைவருடனும் நல்ல முறையில் பழகி வருவதாலும் எல்லோரும் அவளை தூக்கி வைத்து கொண்டாடுவதாலும் வெளியில் அவளுக்கு ஏற்பட்ட மாற்றம் வீட்டில் தெரிய வரவில்லை.

ரிஷபனிடம் மகளைப் பற்றிய புகார் தெரிவிக்கப்பட, கவனிக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தான். தாய் மகளின் மனவோட்டத்தை நன்றாக அறிந்தவன், இதனை எவ்வாறு சரிசெய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் மகள் மூர்ச்சையாகி விட்டாள் என்று பள்ளியில் இருந்து வந்த செய்தி, அனைவரையும் பதற வைத்தது.

error: Content is protected !!