Poovai vandu kollaiyadithaal 2

கொள்ளை 2

என் புது சிறகே நீ ஏன் முளைத்தாய்

கேட்காமல் என்னை

ஹே என் மனச் சிறையே நீ ஏன் திறந்தாய்

கேட்காமல் என்னை

ஒற்றைப் பின்னல் அவனுக்காக

நெற்றிப் பொட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே

இதழின் ஈரம் அவனுக்காக

மனதின் பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே

என் கூடு மாறப்போறேன்
என் வானம் மாத்தப்போறேன்

ஓடோ ஓடோ ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி போறேன்

நா. முத்துகுமார் வரிகளில் வித்யாசகரின் இசையில் காதலைச் தேடிச் செல்லும் பெண்களுக்காக எழுதப்பட்ட பாடல். இயற்கையை  காட்டிச் செல்லும் இப்பாடல்,

மனதிற்கு பிடித்த  பாடல்களில் இதுவும் ஒன்று…

***

தடக் தடக் தடக் என்று ரயில் நிலையத்திலிருந்து கடந்த சில நிமிடங்கள் இரவின் நிசப்தத்தில் இரயிலின் சத்தம் இதுவாக தான் இருக்கும் சாளரத்தின் வழியே  சிறு வெளிச்சம் கொண்ட அவ்விரவும் அழகாக தெரிந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை கண்ணில் நிரப்பிக்கொண்டவள், தன் பெட்டியை இழுத்து நடுவே வைத்து கொண்டவளுக்கு அப்பொழுதான் அந்த சந்தேகம் எழுந்தது…

மூச்சிறைக்க ஓடிவந்தவள், அவனது உதவியால் இரயிலின் உள்ளே நுழைந்தவள், இதயத்தின் அதீத துடிப்பை மட்டு படுத்தவே அவன் நெஞ்சினில் சாய்ந்து நின்றாள்..

இருப்பினும் அவளை அணைக்காது அப்படியே நின்றவன், அவளை நினைவுக்கு கொண்டு வர அவள் பெயரை சொல்லி அழைக்கவே அவனிடமிருந்து பிரிந்தாள்..

“சாரி, ரொம்ப மூச்சு வாங்குச்சு, அதான் சாஞ்சுடேன். ரொம்ப ரொம்ப சாரி.. அண்ட் தாங்க்ஸ் எனக்கு உதவி செஞ்சதுக்கு…” என்றவள் உள்ளே சென்று தன் சீட்டை தேடி அலைய அதுவோ ஒருவர் அமரும் சீட்டாக இருந்தது.

தன் இருக்கையை சரிபார்த்து அமர, எதிரே வந்து அவனும் அமர்ந்தான்… தன் பெட்டியை நடுவே வைத்தவளுக்கு அந்த சந்தேகம் எழுந்தது., ” ஆமா, என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? ” தன்னெதிரே இருப்பவனிடம் கேட்க,

அவனுதடுகள் மென்மையாய் புன்முறுவல் செய்தது,  ” வெளிய கம்பார்ட்மெண்ட்ல நேம் லிஸ்ட்ல  பார்த்தேன். எனக்கு அடுத்த சீட் உங்க பெயர் தான் இருந்தது.. நம்ம  கம்பார்ட்மெண்ட்ல  எல்லாரும் வந்துடாங்க அதான் சின்ன கெஸ்..”  என்றான்..

அவன் பேச அவனையே அளவெடுத்தது கண்கள், சாதாரண டீசர்ட் பேண்ட் சகிதம் அணிந்திருந்தான். ஆனால் ஆளோ பரோட்டா மாவை போல வெண்ணெய்யை போலவே இருந்தான்.  முகமோ வடநாட்டை தென் பகுதியை கலந்த கலவையில் தான் இருந்தது.. அடர்ந்த மீசை இல்லை டீரிம் செய்திருந்தான். காற்றில் அவனது கேசங்கள் அவனுக்கு அடங்காமல் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. கண்களிலும் பேசி சிரிப்பதிலும் அனஸ்தீஸ்யா வைத்திருப்பான் போலும் எளிதில் மயக்க கூடியவன், அழகிலும் யாவிலும்.. அவனை ஆராயந்தவள் அவன் தன்னை பாரத்ததும் முகத்தை சாளரத்தின் பக்கம் திருப்பிக்கொண்டாள்…

“தண்ணீர்? ” என அவன் வைத்திருந்த பாட்டிலை நீட்டினான்… அவனை மீண்டும் தன் கண்களால் ஸ்கேன் செய்தாள். ”  என்னங்க என்ன பார்த்தா, திருடன் மாதிரி தெரியுதா? உங்களுக்கு தண்ணீல மயக்கம் மருந்து கலந்து உங்க பெட்டியை அடிச்சிட்டு போறது மாதிரி தெரியுதா?”  என்று சற்றுமுன் அவள் சிந்தித்ததை படித்தவன் போல கூற, தலையை வடது இடது  மேல் கீழாக ஆட்டிவைத்தாள்..  அதற்கும் அனஸ்தீஸ்யா சிரிப்பை கொடுத்தவன், பாட்டிலை திறந்து மடக்கென்று குடித்து தன்னோடு வைத்துக்கொண்டான்..

இப்போது அவளுக்கு தாகமெடுக்க, ஓடிவந்த அவசரத்தில் தண்ணீர் பாட்டிலை வாங்க மறந்திருந்தாள்.., ” தண்ணீர்? ” எனவும் சிரித்துக்கொண்டே கொடுக்க வாங்கி பருகினாள்…

“பை தி வே  நான் மயூரன், ஜனர்லிஸ்ட் இருக்கேன். இங்க ப்ரண்ட் கல்யாணத்துக்காக வந்தேன்.. இப்ப நான் மும்பை போறேன் நீங்க? ” என்றான்.

“நான் விஷ்ணு பிரியா, நானும் எம்.ஏ ஜனர்லிசம் தான் முடிச்சிருக்கேன்.  மும்பைக்கு தான் போறேன் ” என்றாள்.

“வாவ்! வேலை கிடைச்சிருக்கா? அதுக்கு தான் போறீங்களா? ” என்றவன் இயல்பாக பேச்சுக்கொடுத்தான்…

முதலில் தயங்கியவள் பின் அவனிடம், ” அக்சுவலா, நான் வீட்டை வீட்டு ஒடிவந்துடேன்.. எங்க வீட்டுல என்னைய அந்த கெடாவுக்கு கட்டிவைக்க முடிவு பண்ணிட்டாங்க. இன்னும் இரண்டு நாள்ல எனக்கு கல்யாணம். எனக்கு அதுல இஷ்டமில்லை… நான் வருணை காதலிக்கிறேன். அவனோடு வாழத்தான் மும்பைக்கு போறேன்…  ” என்றாள்..

“காங்கிராட்ஸ்ங்க! சரி நீங்க வர்ற போறத உங்க லவ்வர் கிட்ட சொல்லுடீங்களா? அவர் ஏர்போட்டுக்கு வர்றேன் சொல்லிட்டாரா? ” என்றவன் அக்கறை அதே சமயம் ஆர்வத்திலும் கேட்க, சுற்றும் முற்றும் பார்த்த தயங்கியவள், “அவனக்கு ஒருவாரமா டரைப் பண்றேன் நாட் ரீசப்பில் தான் வருது… ஒருவாரத்துக்கு முன்னாடியே போனை பண்ணி  எல்லாம் விசயத்தையும் சொன்னேன், அவன் தான் மும்பைக்கு வர்ற சொன்னான். இப்ப போன் பண்ணா எடுக்கல… மும்பை போனதும் அவனை தேடணும்.. ” என்றாள்.

“வாட் தேடணுமா?  இட்ஸ் ஒ.கே அவர் அட்ரஸ் தெரியுமா?  ” என்க.

“தெரியாது ” என்றாள் தலையாட்டியவாறு… ” ஹேய், எந்த தைரியத்தில் நீ உங்க ஊரவிட்டு வந்த, மும்பை என்ன உங்க ஊரு வாடிப்பட்டின்னு நினைச்சீயா, ஆயிரம் ஆண்கள் இருக்க ஊருன்னு நினைச்சீயா  லட்சக்கணக்கல ஆண்கள் வாழ்ற ஊர்மா அது., அங்க எப்படி உன் வருணை  தேடுவ ? ” என்றதும் கண்கள் சிரிது கலங்க ஆரம்பித்தது..

“அவன் காலுக்காக நான் வெய்ட் பண்ணா, அந்த கெடாவுக்கு நான் பலிகெடாவா ஆயிடுவேன். அதான் குருட்டு தைரீயத்தில் கிளம்பி வந்துட்டேன்  ” என்றாள் கண்ணைத்துடைத்தவாறு…

“ஹேய் ரிலாக்ஸ் இட்ஸ் ஒ.கே கண்ணை தொட பர்ஸ்ட் . மும்பைக்கு எதுல போற நீ டரைன்லையா? ப்ளைட்ல யா?  ” என அவன் கேட்க,

“ப்ளேட் தான் ” என்றாள்….

“ஒ.கே ஸ்டேசன் வர்ற, இன்னும்  டைம் ஆகும், நீ ரெஸ்ட் எடு. நானும் மும்பைக்கு ப்ளைட் தான் போறேன் சேர்ந்தே போலாம்.. நீ கீழ படுத்துக்கோ நான் மேல படுத்துக்கிறேன்.. ” என்றவன் தனது பேக்கோடு மேலே ஏறினான்.

ஏனோ அவனை கண்டதும் பயம் விலகி நம்பிக்கை துளிர, கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தாள்.

மதுரை இரயில் நிலையும் வந்தது, மக்கள் இறங்கும் அரவம் கெட்டு கண்விழிக்க, சரியாக அலைபேசி அழைத்தது. மொத்தமாக கண்விழித்து எழுந்து அமர்ந்தவள், தன் மொபைலை பார்க்க, அது நான்கு மணியை காட்டியது..

மயூரனோ போனில் காதில் வைத்தவாறு இறங்கினான்.. ” என்னம்மா தூங்கமா இந்த நேரத்தில போன் பண்ணிருக்க? ”

அங்கு என்ன சொல்ல பட்டதோ  “நான் நல்லா தான்மா இருக்கேன். நீ கவலை படாத.. நான் சீக்கிரம வீட்டுக்கு  வந்திடுறேன்.. ” என்றான் பேச்சுக்கள் தொடர, திடிரேன  ” வாட் ” என்றான் அதிர்ச்சியில்.. பிறகு அங்கே பேச, அவன் முகம் கலவரமானது.., ” சரிசரி நான் பார்த்துகிறேன் நீங்க  நிம்மதியா தூங்குங்க.., நான் போனை வைக்கிறேன்.. ” என்று வைத்தான்..

முகத்தை துடைத்தவள், அவன் எதிரே அமர்ந்து, ” என்னாச்சு மிஷ்டர் மயூரன் எதுவும் ப்ராபளமா? ” என கேட்க, ஆமாம் என்று தலையாட்டியவன்  ” சரி வா போலாம்  ” என்றான்..

இரயிலிருந்து இறங்கியவர்கள், ப்ளாட்பார்மில் நடந்தனர்., இன்னும் வானம் கருமையை சூடித்தான் இருந்தது.

நிலையத்தில் உள்ள விளக்குகளின் வெளிச்சத்தில்  சில பயணாளிகள் நடக்கவும் காத்திருக்கவும் உறங்கவும் என இருந்தனர்..

மதுரை ஜங்சனலிருந்து வெளியை வர்ற  அந்த விடியாத இரவுலும் மீத மிருக்கும் குளிரும் அவர்களை ஆட்கொள்ள..,” காபி குடிச்சிட்டு போவோமா? ” என கேட்க தலையாட்டினாள்.

தூங்கா நகரத்திற்கு சொல்லவா வேண்டும் எந்த நேரத்திலும் பசியாற்றும் நகரமல்லவா அது…  காலைக்குளிரோடு சூடான காபி, விடிகின்ற அந்நாளையே சுறுசுறுப்பாக்கிடும்…

இருவரும் ஒருஹோட்டலுக்குள் நுழைந்தனர்.. முகம் அலம்பி வந்தவர்கள் சுடசுட ஆவிப்பரக்க காபியே வரவேற்க அதை மிடறியவாறு அவனை ஆராய்ந்தாள்… குழப்ப ரேகைகள் படர்ந்ததிருந்தது அவனது முகத்தில்…

“என்னாச்சு மயூரன்? எனி ப்ராபளம் ” என அவள் கேட்க, ” எஸ் விஷ்ணு, உன்னை போல எனக்கும் அதே ப்ராபளம் தான் ” என்றான்..

“யூ மீன், உங்களையும் ஒரு கெடாவுக்கு பலிகெடாவா ஆக்க பார்க்கிறாங்களா? ” என்றதும்.”  எக்ஜாக்லி… என் அத்தைப் பொண்ணை தான் கட்டிக்கணும் தாத்தா வீட்டுல பேசி சத்தம் போட்டு இருக்காராறாம்… “என்றான் கவலை தொய்ந்த முகமானது.

“ஆல் தாத்தாஸ் இப்படி தான் போல, அவங்க ஜெனரேசன் பேச்சை கேட்காம கழுத்தை நீட்டிட்டு , இப்ப அவங்க அந்த ஸ்டேஜ் வந்துட்டு நம்மலையும் அதே போல நினைக்கிறாங்க.. காலம் மாறிடுச்சுன்னு தெட் வில்லேஜ் பிப்புளுக்கு புரியவே மாட்டிகிது… ” என்றவள் புலம்ப..

“நான் வீட்டுக்கு போனா, கண்டிப்பா மாலை போட்டு… ” என்றவன் வெட்டுவது போல சைகை செய்ய பெண்ணவள் குரலிருந்து சிரிப்பொலி வந்தது..

“சரி போலாம் ப்ளைட்க்கு நேரமாச்சு.. ” என்றான், தனது உடைமைளை எடுத்துகொண்டு கிளம்பினார்கள் ஏர்போட்டுக்கு கேட்டு ஆட்டோவில் பயணம் செய்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய் கருமை நீங்க வெளுக்கா ஆரமித்தது வானம்.. ஆங்காங்கே வாகனங்களின் இறைச்சலுக்கு இணையாக பறவைகளின் இறைச்சலும் இருந்தது.. இருவரும்  விமான நிலையத்தை அடைந்தனர். ப்ளைட்டீற்காக காத்திருந்தனர்..

அவளோ கட்டத்ததை அளவெடுக்க, அவனோ இன்னும் குழப்பத்தின் பிடியில்  தான் இருந்தான்… நகங்களை கடித்து துப்பிக்கொண்டிருந்தான்…

“பார்த்து மிஸ்டர் மயூரன், டென்சன்ல உங்க விரலை கடிச்சு துப்பிட போறீங்க…  நான் ரீலாக்ஸ் இருக்கேன். நீங்க ஓவரா டென்சனாகுறீங்களே! ” எனவும் புன்முறுவலித்தவன், ” ஒரே டென்சனா இருக்கு விஷ்ணு,  எங்க பேமிலிஜாயின்ட் பேமிலி, வேணாம்,  மாட்டேன், முடியாதுன்னு சொன்னா… கண்டிப்பா எல்லாருடைய மனசு கஷ்டபடும்., அதுக்காக என் வாழ்க்கை அடகுவைக்க முடியாதுல… அதுக்குதான் என்ன பண்ணலாம் யோசிக்கிறேன்? ” எனவும்

“யூர் ரைட், என்ன தான் செண்டிமெண்ட்ஸ் சுத்தி இருந்தாலும் வாழ போறது நாம, நமக்கு பிடிச்சு மாதிரி இருக்கணும் நினைக்கிறதுல தப்பில்லையே! அதை ஏன் அண்டர்ஸ்டான் பண்ண மாட்டிக்கிறாங்க புரிய மாட்டிங்கிது.. ரிலாக்ஸ் மயூரன்  எதாவது ஐடியா கிடைக்கும்  ” என்றாள்..

ப்ளைட்டும் வர்ற இருவரும் மும்பைக்கு பயணம் செய்தனர்..

“ஐயோ! பாதகத்தி இப்படி பண்ணிட்டு போயிட்டாளே! !மானத்த வாங்கிட்டு போயிட்டாளே! ”  என ருக்குவின் அலறலில் அனைவரும் ஒன்றுக்கூடினார்கள் விஷ்ணுவின் அறையில்…

ஒரு கடிதம் அசைவின்றி இருக்க, அதை படித்த தாத்தாவிற்கோ கண்கள் கனலாயின…, ” எப்படி டா எப்படி இத்தனை பேரு இருந்தும் அவ ஓடிபோயிருக்க முடியும்.. எதுக்குடா நீங்க காவலுக்கு இருக்கீங்க? ” என கர்ஜிக்க, ” ஐயா! நாங்க நைட் முழுக்க தூங்காம தான்யா இருந்தோம். முன்வாசல் வழியா போற வாய்ப்பே இல்லை, தோட்டம்  வழியா தான்யா போயிருக்கணும்… ” என்றான் ஒரு தடியன்..

“அங்க யாரும் காவலுக்கு நிக்கலையா? ”  மீண்டும் கத்த, ” ஐயா மாரிமுத்துக்கு மனைவிக்கு பிரவசம் ஆயிருக்குன்னு வர்றலங்கயா, பாண்டிக்கு ஏதோ கடிச்சிருச்சு ஹாஸ்பிட்டல் இருக்கான்யா, நான் கேட்டது நீங்க தான் வேணான்னு சொன்னீங்க  ” என்றவன் அமைதியானான் அவரது முறைப்பில்..

“எனக்கு நீங்க என்ன பண்ணுவீங்களோ ? ஏதுப்பண்ணுவீங்களோ தெரியாது.. அந்த கழுத இங்க வந்தாகணும்.. என் தங்கச்சி பையன் தான் அவளுக்கு மாப்பிள்ளை,.. ” என்று கத்தினார்.

தனது மூளைக்கு எட்டிய திட்டம் ஒன்று கிடைக்க, அதை அவளிடம், ” பேசாம, நாம ஏன் புருசன் பொண்டாட்டியா போய் நிக்க கூடாது ? ” என்றவளை பார்த்து மயூரன் கேட்க, அவனது வென்மை நிரம்பிய  கன்னம் அவளால் சிவந்து பழுத்திருந்தது.,

கொள்ளை தொடரும்

மக்களே உங்க பொண்ணா கருத்தை பகிருங்க நிறை குறை எதுனாலும் சொல்லுங்க. முக்கியமா கமெண்ட்,பண்ண மறந்திடாதீங்க..

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!