பலநாள் எதிர்பார்த்த அமுதம், இன்று தன் கண்முன்னே பெண்ணாய் நின்றிருக்க,ஆசையாய் தன் விழிகளில் நிரப்பிகொண்டான் கிரிதரன்.

மேலிருந்து கீழிறங்கிய பார்வை சில இடங்களில் அதிகமாய் தேங்கி நிற்க, அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியாமல், சிவந்த முகத்தில் கூச்சத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்த மனைவியின் அழகில் நெகிழ்ந்து மனதை தன் வசம் இழந்தான்.

அவளின் குழந்தைத்தனமான அழகில் சொக்கியவன், நெற்றியில் முதல் அச்சாரத்தை பதித்தபடியே,“நான் உன் மேல வச்சுருக்குற அன்பும் ஆசையும் இன்னும் வளர்ந்துகிட்டே இருக்குறதுக்கு காரணம், உன்னோட குழந்தைதனமான பேச்சும் அழகும் தான் ரமி”

“அப்போ நான் குழந்தையா கிரி உனக்கு?” காதலுடன் சொன்ன மனைவியின் கரம் பற்றி முத்தமிட்டவன்

“சந்தேகமே வேணாம்… நீ எனக்கு குழந்தையே தான்” அவளின் உள்குத்தை அறியாமல் பதில் சொல்லி பரவசப்பட்டான்.

“அப்போ ஒரு குழந்தைய எப்படி பார்த்துபீங்களோ, அப்படியே எல்லா விஷயத்துலயும் என்னை பார்த்துக்கோங்க கிரி, இப்போ இந்த குழந்தைக்கு தூக்கம் வருது… நான் போய் தூங்குறேன்”

“நான் சொல்ல வர்றதை நீ முழுசா புரிஞ்சுக்காம பேசுறேயே செல்லம். எல்லா நேரத்தையும் விட இந்த நேரத்துல, இப்போ நீ ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு.ஒரு குழந்தைக்கு எப்படி சொல்லி குடுக்கணுமோ, அப்படி மெதுவா சொல்லி குடுத்து உன்னை என்னோட அக்மார்க் பொண்டாட்டியா மாத்துறது தான் என்னோட முக்கிய வேலையே” என்று சொன்னவன் அவன் சேர்த்து வைத்திருந்த அத்தனை ஆசையையும், முத்தத்தில் மெதுவாய் ஆரம்பித்து வைக்க, வேகம் கூடிய அவன் இதழ்கள் ரங்க ராட்டினமாய் சுற்றி, அவளின் அரை வட்ட சந்திரனை சென்றடைந்தன.

மூச்சுக்கு தவித்தவளை சற்றே ஆசுவாசப்படுத்தி வாஞ்சையாய் அணைத்து கொண்டான்.

உடல் சிலிர்த்திருந்தவளை படுக்கையில் தவழ விட்டவன் “நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா?” போதையில் பிதற்றுபவனைபோல் கைகளால் அவளை அளந்துகொண்டே,அவள் மேனியின் ஒவ்வொரு அழகையும் சொல்லி கொண்டிருந்தவனின் பேச்சை கேட்க கூச்சப்பட்டு, அவன் வாயை அடைக்கும் முயற்சியாய் சட்டென்று அவன் கன்னத்தில் ரம்யா முத்தத்தை வைக்க, கிரிதரனின் கைகள் செய்யும் செயலை,இதழால் தொடங்கி விட்டாலும் பேச்சை விடவில்லை அவன்.

“இப்படியே பேசிட்டு இருந்தா நான் தூங்கிருவேன் கிரி, அப்பறம் காலையில என்னை திட்டக்கூடாது…”

“சரி என்ன செய்யணும்னு நீயே சொல்லு செஞ்சிருவோம்” கள்ளத்தனமாய் கண்ணடித்தவனின் தலையில் கொட்டியவள், “எனக்கு தெரியாது… போடா” என்று சிவந்த முகத்தை அவன் மார்பில் புதைக்க,

“நான் சொல்லி தரேன் நல்ல பிள்ளையா கத்துக்கோ” என சொன்னவன் பாடத்தை சிரத்தையாய் நடத்த, சம்சார சாகரத்தின் கற்றலும், கேட்டலும் அற்புதமாய் அரங்கேறியது.

காதலனாய் அன்பை அமைதியாய் காட்டியவன், கணவனாய் அணைப்பில் அதிரடியை காட்டினான்… உறவாய் வந்தவன் புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்த…முதலில் பாவையவள் பயந்தாலும் கணவனின் அருகாமையும், பேச்சும் அவளுக்கு நம்பிக்கை தர, இறுதியில் நாணத்தை உடைத்தெறிந்து கணவனுடன் கை கோர்க்க…இருவரும் சேர்ந்தே காதலின் கரை கடந்தனர்.

ரம்யாவின் நளபாக சாகசங்களும் பிரமாதமாய் ஆரம்பமாக, ஒரு நல்ல நாளில் கைபேசியில் தன் அன்னையிடம் செய்முறையை கேட்டுகொண்டே அலப்பறை செய்து கொண்டிருந்தாள்.

முதல் சமையலை இனிப்போடு ஆரம்பிக்க, தடபுடலாக செய்ய ஆரம்பித்தாள்,துணைக்கு வந்த கணவனையும் வேண்டாம் என ஒதுக்கி விட்டு, அனைத்தையும் தன் போக்கில் செய்து அசத்தி விட, உணவு மேஜையில் அட்டக்காசமாய் சிரித்து வைத்தது அவளின் நளபாகம்.

பசியோடு வந்தவனை அமர வைத்து கேசரி பரிமாற எத்தனிக்க, அந்த கரண்டியும்,இனிப்பு பாத்திரமும் ஓட்டிப் பிறந்த உடன்பிறப்பாய் பிரிய மாட்டேன் என சதி செய்தது.

“என்னடி செஞ்ச… இப்படி ஒட்டிட்டு இருக்கு? நாமா ரெண்டு பேர் கூட இப்படி இருந்ததில்லையே ரமி? என்ன மேஜிக் செஞ்சே சொல்லு? நானும் ட்ரை பண்ணறேன்,இப்படி ஒட்டிட்டு இருக்க…” என கிண்டலுடன் கண்ணடித்து சொன்னவனை முறைத்து கொண்டே

“புத்தி போகுது பாரு… நானே இத எப்படி எடுக்குறதுனு முழிச்சுட்டு இருக்கேன், உனக்கு இப்பவும் ரோமான்ஸ் கேக்குதாடா? கடுப்பேத்தாத கிரி…எப்படியாவது இத பிரிக்க பாரு”

“என்னத்த போட்டு கேசரி செஞ்சே செல்லம்?”

“ரவை தான் போட்டது… கிராஸ் கொஸ்டீன் கேக்காதே?”

“ரவை எங்கே இருந்து எடுத்தே?”

“ரொம்ப ஓட்டாதடா! அங்கே வெள்ளை கலர்ல இருக்குறத தான் போட்டேன்,அம்மாகிட்டே கேட்டு தான் செஞ்சேன்…”

“என்னனு கேட்டு செஞ்சே?”

“ரவை எப்படி இருக்கும்னு கேட்டேன்”

“எப்படி இருக்கும்னு அவங்க கிட்ட கேட்டே சரி, எங்கே இருக்குனு எங்கிட்ட கேக்க மாட்டியாடி பச்சமிளகா?”

“நீ சொன்ன இடத்துல, நான் மைதாவும் கோதுமையும் தானே வச்சுருக்கேன்…எனக்கே குழப்புதுனு ரவை கீழே வச்சுருக்கேன்டி…”

“அப்போ நான் செஞ்சது மைதா கேசரியா கிரி?”

“ஆமா ரமி செல்லம்… முதல் நாள் சமையல்ல ஒரு புது அயிட்டம் கண்டுபிடிச்ச கிச்சன் கில்லாடி நீதாண்டி…”

“ரவையோ, மைதாவோ இனிப்பு தானே, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுவோம் கிரி ப்ளீஸ்…” கொஞ்சலாய் கேட்க

“ம்ம்ம்… விதி யாரை விட்டது… கொஞ்சம் இரு, பிரிச்சு சாப்பிடுவோம்” என உள்ளே சென்றவன் கத்தியையும், சுத்தியையும் உணவு மேஜைக்கு கொண்டு வந்தான்.

“என்னடா பண்ற? எங்கேயும் சண்டைக்கு போறியா என்ன? இதெல்லாம் கொண்டு வந்துருக்கே”

“எல்லாம் உன் கேசரி உடைச்சு சாப்பிட தான்டி, நீ சொன்ன பிறகு அத நான் கேக்கமா இருப்பேனா?”

“கற்களும் கற்கண்டாய் இனிக்கும், என் ஆசை கண்மணி கை பட்டா” என்று பாட்டாய் பாடிகொண்டே பிரிக்கும் வேலையை ஆரம்பிக்க அதுவோ வருவேனா என்று அடம்பிடித்தது.

“விடு கிரி சாதம் சாப்பிடுவோம், இது போகட்டும்” என்று பெரிய மனதுடன் இனிப்பை விட்டுக்கொடுக்க, மற்ற வகைகளும் அவளை பார்த்து “நாங்களும் நீ செய்த இனிப்பின் உடன்பிறப்புகளே” என்று இளித்தது.

“என்ன ரம்யா இது? சாதம் சின்ன பிள்ள வாந்தி எடுத்த மாதிரி குழைஞ்சு போய் இருக்கு?”

“குக்கர் ஆப் பண்ண மறந்துட்டேன் கிரி”

“சாம்பார்ல எல்லாம் தனித்தனியா தெரியுதுடி!!! தண்ணி தனியா, பருப்பு தனியா, காய் தனியா மிதக்குது, இதுக்கு வேற புது பேர் தான் வைக்கணும், சாம்பார் கேட்டகிரில வாராதுடி”

“பாட்டு கேட்டுகிட்டே ஒரு டம்ளர் தண்ணி அதிகமா ஊத்திட்டேன், வேற ஒண்ணும் இல்ல கிரி…” பல்லை கடித்துக்கொண்டு கூற, அவளை பார்த்து பெருமூச்சு
விட்டவாறே

“இதென்ன கூட்டு மாதிரி இருக்கு? ஆனா கருப்பா தெரியுது!! அப்பறம் பொரியல்… இதுவும் அப்படியே ரெட் கலர்!!! என்னடி நினைச்சுகிட்டு இருக்க?மனுஷன் சாப்பிட்டு ஒரேடியா போய் சேர பிளான் போட்டியா என்ன?”

“வாய கழுவுடா மடையா!!! கூட்டுல ஊத்த வேண்டிய தண்ணிய தான் சாம்பார்ல ஊத்திட்டேன், அப்பறம் பொரியல் கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணிச்சு, அதான் கொஞ்சமே கொஞ்சம் கேசரி பவுடர் சேர்த்தேன்… என்னமோ விஷத்தை போட்டு சமைச்ச மாதிரி அலராதே!!!”

“என்னாது? நானாடி அலர்றேன்? நீதாண்டி என்னை அழ வைக்கிற… ஹாச்டல்ல கொஞ்சநாள் நானா சமைச்சு சாப்பிட்டவன்டி, எனக்கே நீ கிளாஸ் எடுக்குரியா? போதும் தாயே போதும்…எங்க அம்மாக்கு இருக்குற ஒரேஒரு மூத்த பிள்ளையும் நான்தான், என் மாமனாருக்கு இருக்குற ஒரேஒரு இளிச்சவாய் மாப்பிள்ளையும் நான்தான்…இனிமே நான் சொல்லறத மட்டும் நீ செய், அதுக்கு மேல மூச்சு விடக்கூடாது”
கடிக்காத குறையாய் சொல்லிவிட்டு, வெளியே சென்று தான் மனைவியின் நளபாகத்தை கொண்டாடினான்.

சின்னச்சின்ன சீண்டல்களுடனும், தீண்டல்களுடனும் புலரும் காலைப் பொழுதை இருவரும் இணைந்தே வரவேற்று, வேலைகள் அனைத்தையும் ரசித்து, சேர்ந்தே செய்தனர். வராத சமையலையும் மிக சீக்கிரமே மனைவிக்கு கற்றுக் கொடுத்தான் அவளின் மணவாளன்.

“நான் காபி போடறேன்… நீ காய் கட் பண்ணிடு ரமி…”

“வேணாம் கிரி… நீ இங்கேருந்து போனாலே எனக்கு நிமிசத்துல
முடிஞ்சுரும்… நீ ஆபீஸ் போக ரெடியாகு செல்லம்..” என அவனை விரட்டி விடுபவளின் இடையை அணைத்து தன்முன்னே திருப்பி…

“இது தான் நல்லதுக்கு காலம் இல்லன்னு சொல்லறது, அப்படியென்ன டிஸ்டர்ப் பண்றேனாம் நான் சொல்லு…” என்றே இறுக்கி அணைக்க ஆரம்பித்தான்.

“இதுதான் வேணாம்னு சொல்லறேன்… தள்ளு… வேலை செய்ய விடுடா, லேட் ஆகுது…”

“அடிப்பாவி புருஷன் ஆசையா பக்கத்துல வந்தா தள்ளியா விடறே… உன்ன பார்த்தாலே கிக் ஏறுது ரம்… இந்த கிரி கிறுகிறுத்துத் தான் போறேன்டி,உன்ன பார்த்தா என்னோட கையும், வாயும் என் பேச்சை கேக்க மாட்டேங்குது ரம்…”

“ஆமாடா… இப்படி ரம், பீர், ஒயின்னு எல்லா அயிட்டத்தையும்  சொல்லிகிட்டே திரி… யாராவது கேட்டா என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாக்குறீயா?”

“ஏன் ரம்? யார் இருக்கா இப்ப கேக்கறதுக்கு? அப்படி கேட்டாதான் என்ன? நான் என்னோட பொண்டாட்டிய செல்லமா கூப்பிட்றேன், மத்தவங்களுக்கு அத செய்ய முடியலன்னு பொறமை செல்லம்…“

“வெறுப்பேத்தாதடா… ரெண்டு நாளைக்கு முன்னாடி இப்படி தான், நீ ரம்… ரம்னு உளறிகிட்டே வந்தத கேட்டுட்டு எங்க அப்பா என்னம்மா!!! மாப்பிளைக்கு தண்ணியடிக்கிற பழக்கம் இருக்கா? அப்படி இருந்தா கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்க சொல்லு… உடம்புக்கு நல்லதில்லனு அட்வைஸ் பண்ணிட்டு
போறாரு…” என அலுத்துக்கொண்டவள்

“நீ என்னை செல்லப்பேர் வச்சு கூப்பிடறேன்னு என்னால தண்டோரா போட முடியாது, கன்றாவியா இருக்கு, அப்படி நீ கூப்பிட்றத கேக்க சகிக்கல… இருக்குறஎன்னோட சின்ன பேர சின்னாபின்னாமாக்காம ஒழுங்கா கூப்பிட கத்துக்கோ…”
கொஞ்சலும் கெஞ்சலுமாய் கூறி முடித்தாள்…

“முடியாது ரம்… என் பொண்டாட்டி பேர எப்படினாலும் சுருக்கி கூப்பிடஎனக்கு ரைட்ஸ் இருக்கு… நீ யாரு அத கேக்க?”

“அடேய்… நீ இருக்கியே… திருத்த முடியாதுடா உன்னை…”

“சரி கோவிச்சுக்காதே… இப்படி வேணா கூப்பிடவா… ரம்மியாவ்வ்வ்வ்…குட்டி… எப்படி இருக்கு?” பூனை ஓசையுடன் கூறி முடித்தவனை துரத்த ஆரம்பித்ததாள்.

“இன்னைக்கு என் கைல சிக்கினே… கைமா  பண்ணிடுவேன்டா…” என்று துரத்தியவளின் கைகளில் விரும்பியே அகப்பட்டு, சோபாவில் அவளுடன் சரிந்தான்.

“ஏண்டி… பேர்ல என்ன வரபோகுது, இப்படி ஹாங்கரி பேர்ட் மாதிரி சிலிர்த்துக்குரே…” சொல்லியபடியே அவளை இறுக்கி அணைத்தவனிடம்

“நீ ஏன் சொல்லமாட்ட! இப்படி நேரத்துக்கு ஒரு பேச்சு பேசியே ஆளைக் கவுத்துடு…” என்றே தன் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தினில் கோர்த்தாள்.

“ரமிசெல்லம்… இன்னைக்கு ஆபிஷ்க்கு லீவ் சொல்லவாடா? ரெண்டு பேரும் சேர்ந்து வேற நல்ல பேர் உனக்கு கண்டுபிடிப்போம்”

“யாரு நீ தானே? செஞ்சாலும் செய்வடா… இன்னைக்கு சுனாமியே வந்தாலும் நான் ஆபீஸ் போயே ஆகணும். நேத்து வேலை முடிக்காம வச்சுட்டு வந்திருக்கேன்,சும்மாவே அந்த டீம் லீடர் முறைச்சு பார்க்கும் முள்ளம்பன்றி… லீவ் எடுத்தேன்னு தெரிஞ்சா என்னை காலி பண்ணிடும்…”

“உன்னைய யாருடி பெண்டிங் வைக்க சொன்னது? முடிச்சிட்டு வர வேண்டியது தானே“

“நானா பெண்டிங் வச்சேன்? உன்னோட போன் கால் தான் அத செய்ய வச்சது. வரவர உனக்கு பொறுமை பேருக்கு கூட இல்லாம போகுது. நீ வந்து நின்னவுடனே நான் வந்துரனுமா?

“சார் கொஞ்சம் வெயிட் பண்ண மாட்டிங்களோ? போன் அடிச்சிகிட்டே இருக்குறது…கவனிக்காம இருந்தா, செக்யூரிட்டி கிட்ட சொல்லி அனுப்பி விடறது…  இந்த தொல்லை தாங்க முடியாம தான் நேத்து என்னை விட்டுச்சு அந்த முள்ளம் பன்றி,
இல்லேன்னா எப்படி நான் சீக்கிரம் வர்றது?”

“கொஞ்சமாச்சும் மூளைய யூஸ் பண்ண கத்துக்கோடி, அப்போதான் சீக்கிரம் வேலைய முடிக்க முடியும்…”

“ஒஹ்ஹ்! அப்படிங்களா சார்… அப்போ என்னோட வொர்க் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்துர்றேன், மூளை உள்ள நீங்க எனக்கு முடிச்சு குடுங்க” என்று கடுப்பத்தபடி அவனின் தலையை கலைத்து வைத்தாள்.

“நீ இப்படியே ஒட்டிட்டு இருக்கேன்னு சொல்லு, ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுல வேலை பாப்போம்” என கூறி கண் சிமிட்டியவனைபார்த்து

“கேடி… கேடி… உன் புத்தி தெரியாம நானும் உன்கிட்டே வாய குடுத்து மாட்டிக்கிறேன் பாரு, என்னைச் சொல்லணும். நீ இப்படியே இரு, நான் கிளம்புறேன்” என்று பேச்சை முடித்து வைத்தாள்.

Written by

அன்புள்ள சகோதர/ சகோதரி, உங்கள் நட்பு கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள். என் பெயர் அனிதா ராஜ்குமார்.கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழ் கதாசிரியராக இருக்கிறேன். அமேசான் கிண்டல், sm tamilnovels தளத்தில் என் எழுத்துக்களை நீங்கள் படிக்கலாம். எனக்குத் திருமணம் ஆகி விட்டது.கணவர் MR. B. ARUN KUMAR BALAKRISHNAN superintendent, INTELLIGENCE WING, MINISTRY OF FINANCE/ uniformed officer ஆக மத்திய சர்காரில் பணி புரிகிறார். அதங்கோ மத்திய அரசாங்கத்தின் காவல் துறை என்று கூடச் சொல்லலாம். சொந்த ஊர் காஞ்சிபுரம். என் முதல் நாவல் 'என்ன தவம் செய்தேன் ' ஹியூமன் டிராபிக் பற்றியது, என் நான்காவது நாவல், ஆசிட் அட்டாக் victim பற்றியது 'சமர்ப்பணம்' ரெண்டிற்கும் சிறந்த தமிழ் நாவல் ஆசிரியர் என்ற விருதாய், துருவ நட்சத்திரம் என்ற விருது ஆன்லைன்னில் வழங்கப் பட்டது. இது வரை ஐந்து நாவல்கள் எழுதி உள்ளேன். 1.என்ன தவம் செய்தேன் 2. காஞ்சி தலைவன் 3.ஊரு விட்டு ஊரு வந்து 4.சமர்ப்பணம் 5.உயிரோடு விளையாடு -முத்த பாகம் 6.உயிரோடு சதிராடு - விரைவில் ஆரம்பிக்கப் படும். இதுவரை அமேசானில் 3 நாவல் ebook வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் மூன்று நாவல் விரைவில் வெளியிடப்படும். நீங்கள் நீட்டிய நட்புக்கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதர/ சகோதரி. https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5?ref=sr_ntt_srch_lnk_1&qid=1634620509&sr=8-1 அன்புடன் உங்கள் சகோதரி Mrs.அனிதா ராஜ்குமார். (tamil novelist-amazon kindle and smtamilnovels.com)

error: Content is protected !!