Puthu kavithai 18

Puthu kavithai 18

அத்தியாயம் 18

வள் அவனிடம் கத்துவதை கேட்டுக் கொண்டே அவளை அறைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்திருந்தான். எதையும் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவனை எரிச்சலாக பார்த்தவள்,

“சஞ்சு ப்ளீஸ்… டோன்ட் ப்ளே வித் மீ… என்னோட செல்லை கொடு… நான் கிளம்பனும்…” வேறு வழியில்லாமல் எரிச்சல் தொனியை கைவிட்டவள், கெஞ்சும் நிலைக்கு வந்திருந்தாள்.

அதுவரை மௌனமாகவே இருந்தவன், கண்களில் வலியோடு, “உன்னோட சஞ்சுவை நீ அவ்வளவு ஈசியா நினைச்சுட்டியா மது?” என்று கேட்க, அவளுக்கு குழப்பமாக இருந்தது.

“என்ன உளர்ற?” கோபமாக அவள் கேட்க,

“என்னை விட்டுட்டு போக முடிவு பண்ணிட்ட இல்லையா?” அவனுக்கு தொண்டையை விட்டு வார்த்தைகள் வெளிவர அழுச்சாட்டியம் செய்தது. துக்கம் பந்தாக தொண்டையை அடைத்தது என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர, அன்று தான் அதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தான்.

மது தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற பயம் வந்து அவனை ஆக்கிரமித்தது.

“என்னை போக வெச்சது நீதானே சஞ்சு?” உணர்வே இல்லாமல் அவள் கேட்ட கேள்வியில் புரியாத பார்வை பார்த்தான் சஞ்சய். வாழ்க்கை குறித்தான அவனது மதிப்பீடுகளும் , புரிதலும் வேறு.

“நான் என்ன பண்ணேன்?” என்று ஒன்றும் புரியாதவன் போல கேட்டவனை, அலட்சியமாக பார்த்தவள்,

“நீ என்ன பண்ணன்னு நான் தான் சொல்லனுமா? என்று ஏளனமாக கேட்க,

“சொன்னாதானே தெரியும் மது?”

“சொல்லிப் புரிய வைக்க இது ஒன்னும் சைன்ஸ் ப்ராஜக்ட் இல்ல… லைப்… அதுல பேசிக் வால்யுஸ் கூட உனக்கு தெரியலன்னா… அதோட சீரியஸ்னஸ் கூட உனக்கு புரியலைன்னா, நான் லெசன் எடுக்க முடியாது சஞ்சு…”

“நீ இன்னும் காரணத்தை சொல்லவே இல்லையே….” என்று அவன் அதிலேயே நிற்க, அவள் பல்லைக் கடித்துக் கொண்டாள். வெளிப்படையாக வாய்விட்டு சொல்வதற்கு அவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது? சொல்லித்தானேயாக வேண்டும்?

“மிஸ் சென்னை போட்டில, ஷிவானி எப்படி வின் பண்ணா?” அவனை கூர்மையாகப் பார்த்தவள் , சற்று எரிச்சலாக கேட்க, அவளது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் கடுப்பாக இருந்தது.

‘இவளுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்ப்படுதாமல் இப்போது சொல்லி என்ன உபயோகம்?’

“உனக்கு தான் மது முதல்ல ஆப்பர்சுனிட்டி வந்ததது… நீ வேண்டாம்ன்னு சொல்லவும் தான் ஷிவானியை ரதீஷ் சூஸ் பண்ணான்…” என்று அவளுக்கு விளக்குவதாக நினைத்துக் கொண்டு கூற, அவள் முறைத்தாள்.

“எனக்கு அந்த ஆப்பர்சுனிட்டியே தேவையில்லை…” என்று கோபமாக கூறியவள், “எதுக்காக ரதீஷ் ஷிவானியை சூஸ் பண்ணான்?”

“ஷிவானி சொல்றதை கேட்டுக்குவா… அதான் ரீசன்…”

“சொல்றதை கேட்டுக்குவான்னா? அதுக்கு என்ன அர்த்தம்? எனக்கு என்ன கண்டிஷன் வெச்சீங்க?”

“ம்ம்… என்ன? என்று யோசிப்பது போல பாவனை செய்தவன், “ம்ம்… ஒன் இயர் காண்ட்ராக்ட்டை பத்தி சொல்றியா?” என்று அவளிடம் கேட்டவன், “அது எல்லா இடத்திலுமே இருக்கறதுதானே? இது உனக்கு தெரியாதா? இல்ல தெரியாமத்தான் வந்தியா?” சரமாரியாக கேட்க,

“தெரிஞ்சு வந்தேனோ தெரியாம வந்தேனோ?! உனக்கு என்ன சஞ்சு? இதுக்கு நீ ஓகே சொன்னியா?” கூர்மையாக அவனை பார்த்தபடி கேட்க,

“அப்கோர்ஸ் மது… இதுல தப்பென்ன இருக்கு? உன்னோட கேரீர் கிராப் ஜிவ்வுன்னு ஏறி இருக்கும்… அதை கெடுத்துட்டு வந்து இப்ப என்னையும் தப்பு சொல்லிட்டு இருக்க…”

அவன் பேசியதை கேட்டவளுக்கு அருவருப்பாக இருந்தது. என்னதான் இந்த இடத்திலிருக்கும் அழுக்குகள் புரிந்தாலும், அதிலிருந்து தன்னை காப்பான் என்றெண்ணியிருந்த சஞ்சய் பொய்த்து போனதோடு, அவனது தவறு புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறானே என்ற எரிச்சல் வேறு. உள்ளிருந்து ஏதோவொன்று தொண்டையை அடைத்தது.

“வேணா சஞ்சு. உன்னோட பிலாசபியை உன்னோட வெச்சுக்க. எனக்கு இந்த பீல்ட் பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். பேஷன் ஐக்கானா இருக்கனும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கான விலையா என்னை நானே கொடுக்க நான் முட்டாள் இல்ல. பெட்டர் லீவ் மீ சஞ்சு…” உணர்வுகளை துடைத்துக் கொண்ட முகத்துடன் நகர பார்க்க,

“அப்படியே விட்டுட்டு போனா பார்த்துட்டு இருக்க நான் ஒன்னும் இளிச்சவாயன் கிடையாதுடி…” அவனது கோபத்தை எல்லாம் தேக்கியபடி சுரீரென்று கூற, இனியும் இங்கே இருப்பது சரியல்ல என்று தோன்றி இருந்தது. அவனது முகத்தில் என்றுமே பார்த்திராத வெறி. அது என்ன வகையான வெறி என்று அவளால் பகுத்தறிய முடியவில்லை.

செல்பேசியை அவனிடமிருந்து எப்படி வாங்குவது என்று யோசனை தோன்றினாலும், இப்போது அது முக்கியமல்ல என்று முடிவு செய்தவள்,

அவனை வெறித்துப் பார்த்து, “ஜஸ்ட் கோ டூ ஹெல்…” என்றபடி திரும்பினாள்.

“நீ வான்னு சொன்னா வர்றதுக்கும், போன்னு சொன்னா போறதுக்கும் வேற எவனாவது கிடைப்பான் மது…” என்றவன், அவளது கையை இறுக்கமாக பிணைத்துப் பிடித்திருந்தான்.

அந்த தொடுதலில் அதிர்ந்தவள், அவனை பார்த்து, “கையை விடு சஞ்சு…” கோபமாக கூற,

“முடியாது… என்னடி பண்ணுவ?” என்று ஆத்திரத்தோடு கேட்டான். கோபம் அவனது கண்களை மறைக்கத் துவங்கியிருந்து. அதோடு பார்வையும் மாற துவங்கி இருந்தது.

“வேணா… நீ பண்றது நல்லால்ல… கையை விடு…” பல்லைக் கடித்தபடி அவள் கூற,

“நல்லா இருக்குமா இருக்காதான்னு இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு சொல்லு டார்லிங்…” என்றபடி அவளை பார்வையால் மேய்ந்தான்.

மதுவுக்கு கூசிப் போனது.

குடித்திருப்பான் போல… கண்கள் சிவந்து, லேசான தடுமாற்றம் இருந்தது!

“சஞ்சு… நீ இப்ப கண்ட்ரோல்ல இல்ல… நாம நாளைக்கு பேசலாம்…”

“நாளைக்கென்ன? இப்பவே பேசு… என்ன வேண்ணா பேசு…” என்றவன், அவளது இடையை இழுத்து தன்னுடைய கைவளைவில் வைத்துக் கொண்டான். மதுவுக்கு நெருப்பு பட்டார் போல இருந்தது. அவனது பார்வை பயணிக்கும் திக்கும், அவனது கைகளும் அவளை குன்ற செய்து கொண்டிருந்தது.

“வேணா சஞ்சு… என்னை விடு… எனக்கும் உனக்கும் செட்டாகாது…” அவனை தள்ளி விட முயன்றபடி கூற, சஞ்சய் சட்டென அவளது கழுத்தை பிடித்தான்.

“தெரியும்டி… நீ இப்படித்தான் என்னை கழட்டி விட்டுட்டு போவன்னு தெரியும்…” என்றபடி அவளது கழுத்தை இறுக்க, அவள் மூச்சுக்கு திண்டாடி, தவிக்கத் துவங்கினாள்.

“லீவ் மீ சஞ்சு… ஏன் இப்படி பிஹேவ் பண்ற? டீசன்ட்டாவாச்சும் நடந்துக்க…” அவனது கையை விலக்க போராடியபடி அவள் கேட்க,

“டீசன்ட்டா நடந்துக்க தான் பார்த்தேன் மது… ஆனா நீ என்னை அப்படியே விட மாட்டேங்கிறியே… நீ ஒத்துகிட்டா இப்பவும் நான் ஹீரோ தான்… ஆனா ஒத்துக்கலைன்னா கண்டிப்பா உனக்கு நான் வில்லன்தான்டி…” என்று அவளை சுழற்றி தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைக்க முயல, அதுவரை மது கையாண்டு வந்த மென்மையான போக்கையும் கெஞ்சலையும் கைவிட்டாள்.

“சஞ்சு… இது தான் லாஸ்ட் வார்னிங்… ஒழுங்கா இப்ப விடறியா இல்லையா?” மிரட்டலாக கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது.

“என்ன மிரட்டறியா?” என்றபடி அவளது கழுத்து வளைவில் உதட்டை பதிக்க முயல, மது மூச்சை இழுத்துப் பிடித்தபடி முழங்கையால் பின்பக்கமாக நின்றிருந்த அவனை நங்கென்று ஓங்கி குத்த, அது அவனது விலா எலும்பை சரியாக சென்று தாக்கியது.

அந்த தாக்குதலில் நிலைகுலைந்து வயிற்றை பிடித்தவனை திரும்பி பார்த்தவள், அவனை கண்டுக் கொள்ளாமல் செல்பேசியை எடுக்கப் போக, சட்டென ஒரு கரம் அவளை இறுக்கமாக இழுத்துப் பிடித்தது.

அது சஞ்சய் அல்ல!

அதிர்ந்த மது, திரும்பிப் பார்க்க, அங்கே இறுக்கமான முகத்தோடு நின்றிருந்தது ரதீஷ்.

மதுவுக்கு உள்ளுக்குள் பயம் கவ்வி தடதடத்தது. ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை. அவனை முறைத்தபடி அவனது கையை விடுவிக்க முயல, அவனது பிடி இன்னும் இறுகியது.

“ராஷ்… என்னை விடு”

கோபமாக கூறியவளை உறுத்துப் பார்த்தான். அது அவளை உரிக்க நினைக்கும் பார்வை. காத்திருந்த ஓநாயின் வேட்டைப் பார்வை.

அவன் பதில் பேசாமல் அவளது கையை இன்னுமே இறுக்க, மதுவால் வலி தாள முடியவில்லை.

அதற்குள் சுதாரித்து இருந்த சஞ்சய், அவளை சமீபத்து இருந்தான்.

அவளுக்கு முன் வந்து நின்றவன்,

“கடைசியா கேக்கறேன் மது… என்ன சொல்ற நீ?” கடினமாக அவன் கேட்க, ரதீஷின் பிடியிலிருந்து தள்ளி நிற்க முயன்றவளின் முயற்சிகளை வெகு சுலபமாக முறியடித்தவன், அவளது இன்னொரு கையையும் முறுக்கியபடி பிடித்து இருந்தான்.

இருவரின் அந்த நிலையும், ரதீஷின் செயல்பாடுகளும் அவளுடைய மனதுக்குள் கிலியை பரவச் செய்தது.

“இப்படி பிஹேவ் பண்ற உன்னை போயா லவ் பண்ணேன்? ஐ பீல் அஷேம்ட்…” வெறுப்பாக சொன்னவளின் கையை இன்னும் கொஞ்சம் முறுக்கினான் ரதீஷ்.

வலியில் அவளது முகம் சுருங்க, தைரியத்தை திரட்டிக் கொண்டவள் ஒரே மூச்சில் ரதீஷை தள்ளிவிட முயல, அது அவ்வளவு சுலபமாக இல்லை. அவன் சஞ்சய்யை காட்டிலும் பலம் வாய்ந்த மிருகம் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.

“நீ என்ன வேண்ணா சொல்லிக்க மது… எனக்கு நீ வேணும்…” என்றவன், சற்று நிறுத்தி நிதானித்தவன், “என்ன… இப்ப ராஷ் கூட உன்னை ஷேர் பண்ணிக்க போறேன்… அவ்வளவுதான்…” என்று சற்றும் அலுங்காமல் குண்டெறிய, மதுவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“விளையாடாதடா…” மதுவின் குரலில் நடுக்கம் வந்திருந்தது.

“இனிமே தான் விளையாட போறோம்…” என்றது சஞ்சய் அல்ல… ரதீஷ்!

“வேணாம் ராஷ்… இதுக்கான பின்விளைவை நீங்க ரெண்டு பேரும் சந்திச்சே ஆகணும்…” சற்று மிரட்டலாக மது கூற,

“ஐ டோன்ட் கேர்…” என்றவன், அவனது வேலையை ஆரம்பித்து இருந்தான்.

“டேய்… நீ லவ் பண்ண பொண்ணை இன்னொருத்தன் கிட்ட கொடுக்கறியே, உனக்கு வெட்கமா இல்லையா?” சஞ்சய்யை பார்த்து ஆத்திரம் தாங்க முடியாமல் கேட்க,

“ராஷ் என்னோட பார்ட்னர் பேபி… ஐ மீன் இன் எவ்ரிதிங்…” என்று கோணலாக சிரித்தான்.

“பார்த்தி மாமாக்கு மட்டும் இது தெரிஞ்சா உங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவார் டா…” என்றவளை இன்னுமே கோணலாக பார்த்தனர்.

“வந்துதான் பாக்கட்டுமே… அன்னைக்கு என் மேல கை வெச்சதுக்கும் சேர்த்து அவனுக்கு திருப்பிக் கொடுக்கறேன்…” என்று ரதீஷ் கருவ, தன்னுடைய பலத்தை எல்லாம் சேர்த்து தன்னை விடுவித்துக் கொண்டவள், செல்பேசியை எடுத்துக் கொண்டு சஞ்சய்யை தள்ளி விட்டபடி, “ஹெல்ப் ஹெல்ப்…” என்று கத்தியவாறு ஓட முயன்றாள்.

ஆம்… முயன்றாள்… முயல மட்டுமே முடிந்தது. அதை ரதீஷ் வெற்றிகரமாக முறியடித்து இருந்தான்.

“நீ எத்தனை கத்தினாலும் எதுவும் வெளிய கேட்காது… கேட்டாலும் யாரும் இங்க வர மாட்டாங்க… ஏன்னா இது என்னோட கோட்டைடி…” என்றபடி ரதீஷ் அவளை இறுக்கினான், கைகளில் ரத்தம் கன்றும் வரை!

வெறி கொண்ட ஓநாய்களிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள, தீவிரமாக போராட துவங்கி இருந்தாள். தனக்கு தெரிந்த கராத்தேவை உபயோகப்படுத்தி என்ன பலன்? ரதீஷ் அத்தனையையும் வெகு சுலபமாக முறியடித்து அவளை படுக்கையையில் தூக்கி எறிய, சஞ்சய் அவளை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

தன்னை நோக்கி குனிந்த சஞ்சய்யை, அவனிடம் போராடி பிரிந்தவள், பளாரென கன்னத்தில் அறைய, அவனது வெறி இன்னும் கூடியது. கொத்தாக அவளது தலை முடியை பிடித்தவன், அவளது கன்னத்தில் மாற்றி மாற்றி அறைய, மதுவுக்கு கண்ணுக்குள் பூச்சி பறந்தது.

இனி அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டாள். அவளது உடல் இருவரிடமும் போராடியதில் புண்பட்டு இருந்தது. இப்போது வரை தன்னை காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இதற்கும் மேல் போராட உடல் பலம் இல்லை என்று தோன்றி விட்டிருந்தது.

ஒருவனாக இருந்தால் எப்படியும் அவளால் சமாளித்திருக்க முடியும். இருவர், அதிலும் கட்டுபாட்டில் இல்லாத வெறி பிடித்த இரண்டு மிருகங்களையும் சமாளிக்க முடியாமல் சோர்ந்து விழுந்தாள்.

யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்கினாள். மனதுக்குள் பார்த்திபனை நினைத்து ஜெபித்துக் கொண்டே இருந்தாள்.

‘மாமா… எப்படியாவது வாங்க மாமா… ப்ளீஸ் மாமா… எனக்கு பயமா இருக்கு… வந்துருங்க மாமா… இனிமே நீங்க சொல்றதை கேக்கறேன்… எதுவுமே எனக்கு வேணாம்… இவனுங்க கிட்டருந்து எப்படியாவது காப்பாத்துங்க மாமா… ’ என்பதுதான் அவளது வேண்டுதலாக இருந்தது. அந்த நேரத்தில் தாயையோ தந்தையையோ அவளால் நினைக்க முடியவில்லை. பார்த்திபனால் மட்டுமே தன்னை காக்க முடியும் என்று எந்த வகையில் உறுதியாக நம்பினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் பார்த்திபன் ஜெபம் மட்டுமே அவளது மனதுக்குள்!

கண்களில் கண்ணீரோடு சோர்வாக நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.

நின்று கொண்டிருந்த ரதீஷ், அவனது கையிலிருந்த கேமராவை ஸ்டாண்டில் நிறுத்தி வியூ பார்த்துக் கொண்டிருக்க, தன்னுடைய பலத்தை எல்லாம் திரட்டியவள், சஞ்சய்யை தள்ளிவிட்டு எழ,

“என்ன மது? ஷாக் ஆகிட்ட?” என்று அவன் கேலியாக சிரிக்க,

“பாஸ்டர்ட்… யூ ஆர் எ மான்ஸ்டர்…” என்று ஆங்கிலத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லி கத்த, அவளது கத்தலை எல்லாம் சற்றும் கண்டுக்கொள்ளவில்லை இருவரும்!

“எஸ்… அஃப்கோர்ஸ்…” அலட்டிக் கொள்ளாமல் ரதீஷ் இன்னமும் சிரித்தான்.

“எங்க ரெண்டு பேர் மேலயும் கை வெச்சான்ல உன் மாமா… அவனுக்கு ஒரு லெசன் டீச் பண்ண வேணாம்?” சஞ்சய் அலுங்காமல் கூற,

“என்னடா பண்ண போறீங்க?” குரலில் நடுக்கத்தோடு கேட்டாள் மது!

“இப்ப நடக்க போறதை ஷூட் பண்ணி அவனுக்கு அனுப்ப போறோம் பேபி…” என்றபடி அவனது மேலாடையை களைய, அந்த சூழ்நிலையின் முழு தாக்கமும் அவளை தாக்கியது.

எத்தகைய நிலையில் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டவளுக்கு எங்கிருந்து தான் அத்தனை பலம் வந்து சேர்ந்ததோ, பார்த்திபனை மனக் கண் முன் கொண்டு வந்தவள், மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு காலால் சஞ்சய்யின் உயிர்நிலையை எட்டி உதைத்தாள்.

அதை எதிர்பார்க்காதவன், உயிர் போகும் வலியில் மடங்கி சாய, ரதீஷ் கோபமாக அவளை நோக்கி வந்தவன், அவளது தலை முடியை பிடித்து உலுக்கினான்.

“ஹவ் டேர் யூ ப்ளடி பிட்ச்… உன்னை விட்டு வைக்கவே கூடாது…” என்றவன், அவளை அப்படியே முடியை இறுக்கமாக பற்றியபடியே எழ செய்து கன்னம் கன்னமாக அறைய துவங்கினான். அறைவதோடு நில்லாமல், மேலும் தாக்க துவங்க, ஆங்காங்கே ரத்த காயங்களோடு மது மடங்க துவங்க, அதை உபயோகப்படுத்திக் கொண்டவன், அவளது ஆடைகளை களைய முயன்றான்.

மதுவால் முடிந்தவரை அவனை தடுக்க போராடினாள். நகங்களால் பிராண்டினாள்.

அவளது பலவீனமான எதிர்ப்பை சுலபமாக முறியடித்தவன், தன் காரியத்தில் கண்ணாக இருக்க, மதுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது!

‘மாமா… வந்துருங்க மாமா… செத்துடுவேன் போல இருக்கே…’ என்று உள்ளுக்குள் கதறியவளுக்கு அருகில் இருந்த வெண்கல பூச்சாடி கண்களில் பட்டது.

சற்றும் தயங்காமல் அதை கையிலெடுத்துக் கொண்டவள், சற்று அலட்சியமாக இருந்தவனை பின் மண்டையில் தாக்க, அவன் மண்டையை பிடித்துக் கொண்டு இன்னும் வெறி கொண்ட வேங்கையானான்!

சுற்றிலும் பார்த்தவளுக்கு பூட்டியிருந்த குளியலறை தெரிய, அவனிடமிருந்து தப்பி, குளியலறைக்குள் ஓட முயல, ரதீஷ் அவளை தடுக்க முயல, அவனை தள்ளி விட்டு, ஒரே மூச்சில் குளியலறைக்குள் ஓடியவள், அவசரமாக தாளிட்டு கொள்ள, அவளை துரத்தி வந்தவன் குளியலறை கதவை, “மது… வெளிய வந்துடு…” என்று கத்தியபடி உடைக்க முயன்றான்.

அவள் தன்னுடைய நெஞ்சில் கைவைத்து மேலாடையை இறுக்கமாக பிடித்தபடி கண்களில் நீர் வழிய பதற்றத்தோடு நின்றிருந்தாள்.

கதவை உடைத்துக் கொண்டு வந்தானென்றால் தான் அவ்வளவுதான் என்று புரிந்தது. தான் இங்கு வந்த மடத்தனத்தை என்ன சொல்லி நோக?

‘அனுபவபட்டு, கஷ்டப்பட்டு கற்று கொள்ள வேண்டுமா மது?’ என்று திரும்ப திரும்ப பார்த்தி கேட்பது போலிருந்தது!

அவன் சொன்னதை எல்லாம் கேட்காத தன்னுடைய அடங்காப்பிடாரித்தனத்தை வேதனையாக நினைத்துப் பார்த்தாள்!

‘கடவுளே… இந்த ஒரு தடவை எப்படியாவது என்னை காப்பாத்திடேன்…’

வெளியில் ரதீஷ் கத்தினான். “வெளிய வந்துருடி… நான் வந்தன்னா நீ செத்த…”

முடியாது… வெளியே போக முடியாது. அப்படி அவன் உள்ளே வர முயன்றால் தன்னை அழித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தோன்றியது!

அவன் மிரட்டலை நிராகரித்துவிட்டு, கண்களில் நீரோடு கண்ணாடியை பார்த்தாள்!

பளிங்கு போன்ற முகத்தில் அத்தனை பிறாண்டல்கள். அணிந்திருந்த கிராப்ட் டாப் அலங்கோலமாக கிழிந்து கிடந்தது. தோள்களிலும் வயிற்றிலும் ரத்த காயங்கள். உதட்டோரத்தில் வேறு ரத்தம் வழிந்தது!

கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. முகத்தை மூடியபடி அழுதாள்!

வெளியே என்னவோ சத்தம் கேட்க, உன்னிப்பாக கேட்டாள்.

யாரோ கூட்டமாக உள்ளே நுழைவது போல தோன்றியது. தடதடவென பூட்ஸ் சப்தம் வேறு!

“டேய்… எங்கடா மது?”

பார்த்திபன்… ஆம் பார்த்திபனே தான்!

கடவுளின் குரலைக் கேட்டது போல இருந்தது மதுவுக்கு!

“சொல்லுடா நாயே…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்திபன் கேட்பது கேட்க, மதுவுக்கு போன உயிர் திரும்ப வந்தது போலிருந்தது.

“மாமா…” அழுகுரலோடு குளியலறைக்குள் இருந்து மது கத்தினாள்!

“மது…” பார்த்திபன் தவிப்பாக குளியலறைக்கு வெளியே நின்று கத்துவது கேட்க, கொஞ்சமாக கதவை திறந்து பார்த்தாள்.

ஆம்… பார்த்திபன் தான் நின்று கொண்டிருந்தான், ரவுத்திர மூர்த்தியாக!

கதறியபடி அறையின் கதவை திறந்தவள், யாரையும் பார்க்காமல், வில்லிலிருந்து பாய்ந்த அம்பாக போய் பார்த்திபனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்!

அவளது அலங்கோலமான நிலையை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவன், மதுவை யாருடைய பார்வைக்கும் விருந்தாக்க கூடாதென, கோழி, தன் குஞ்சை நெஞ்சினில் புதைத்துக் கொள்வது போல, மதுவை தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்!

error: Content is protected !!