R U Ok Baby?!

R U Ok Baby?!

நிலா-முகிலன் 1

சிலுசிலுவென வீசும் மார்கழிமாத குளிர் காற்றில் நிலமங்கை சில்லிட்டுப்போயிருக்க, அவளது தோழியான அழகு நிலா முகில்களுக்குள் மறைந்திருந்து அவளுடன் கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள்.

இந்த அழகான சூழலில் தன்னை நிலைநிருத்தி,  இருபது தளங்களைத் தொட்டு வளர்ந்திருந்தது, சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு.

அந்த குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து பார்க்க, தொலைவில் தெரிந்த குன்றுகள், நிலமடந்தை வாரி வழங்கிக் கொண்டிருந்த கடுங் குளிரைத் தாங்காமல் பச்சை போர்வையால் தம்மை முழுவதுமாக போர்த்திக்கொண்டிருந்தன.

ஆனால் இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல், ஏரெடுத்தும் பாராமல், ரசிக்கவும் மனமின்றி கண்களை இறுக  மூடிக்கொண்டு, இருபதாம் தளத்தில் அமைந்திருந்த அந்த மொட்டைமாடியின் கைப்பிடி சுவரின் மேல், தன் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் அந்த நிலவினை போன்ற அழகி! நம் நாயகி நிலவழகி.

ஒவ்வொரு விரலாய் நீட்டி எண்ணியவாறே, அவள் மனதிற்குள், ‘த்ரீ! டூ! ஒன்! ஃபால்!’ எனச் சொல்லிக்கொண்ட அடுத்த நொடி தடால் என்ற சத்தத்துடனும் ‘ஆஆஆஆ!’ என்ற அலறலுடனும் கீழே விழுந்திருந்தாள் அவள்.

அடுத்த விநாடியே, ‘உயிர் போற அளவுக்கு வலிக்கும்னு நினைச்சோம்!

அட! அவ்வளவா வலிக்கலையே!

ஈவன் ஹார்ட் சர்போஸ்ல விழுந்த மாதிரிகூட தெரியல!

மெத்துமெத்துன்னு சாஃப்டா இல்ல இருக்கு!

நாம உண்மையிலேயே செத்துட்டோமா? இல்ல உயிரோட இருக்கோமா?’ எனப் பல விதமான ஐயங்கள் மனதைக் குழப்ப, பயத்தில் கண்களையும் திறக்காமல், அப்படியே   விழுந்த நிலையிலேயே அவள் கிடக்கவும், தன்னை சமாளித்துக் கொண்டு, தன்னுடன் சேர்த்து அவளையும் தூக்கி நிறுத்தியவாறு, அவனும் எழுந்து நின்றான் கார்முகிலன் என்ற பெயர் கொண்ட வசீகர இளைஞன் நமது நாயகன்.

நிலவொளியில் அவளது முகம் பொன்னென ஜொலிக்க, அவனுக்கு மிக அருகில் கண் மூடி அவள் நின்றிருந்த தோற்றம், கல்லில் செதுக்கிய சிற்பமாக அவன் மனதில் பதிந்தது. ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்லுவாங்களே; இவளைப் பார்த்த உடனே அப்படி ஒரு பீல் வந்துதே எப்படி?’ என்ற யோசனையில் அவன் நிற்க, முதலில் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள், எதிரில் நின்று கொண்டிருந்த நெடியவனை கண்டதும், விழிகளை முழுவதுமாக விரித்து, பயத்தில் அரள மிரள நிற்கவும், அவளது அந்த தோற்றத்தைக் கண்டு எழுந்த சிரிப்பை அடக்கியவனாக, அவன் அவளைப் பார்த்துக் கேட்டான், “ஆர் யூ ஓகே பெய்பி?!”

அவள் வெளிப்புறமாகக் கீழே விழுவதற்குப் பதிலாக, உட்புறமாக, அதுவும் அவன் மேலே விழுந்திருந்தது புரியவும், அதுவும் அவளை அவன்தான் இழுத்துத் தள்ளியிருக்கிறான் என்பது சர்வ நிச்சயமாக அவளுக்கு விளங்கவும், தான் இன்னும் சாகவில்லை; உயிருடன்தான் இருக்கிறோம் என்கிற மமதையில், “அறிவில்ல! மேனர்ஸ் இல்ல! ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு சாக ட்ரை பண்ணா, இப்படித்தான் வந்து உயிரை வாங்குவீங்களா! யாரு சார் நீங்க! இந்த உலகத்தையே காக்க வந்த மார்வல் அவெஞ்சர்னு உங்களுக்கு நினைப்பா?!” எனக் குஷி பட ஜோதிகா பாணியில் அவனிடம் அந்த நிலா முகத்து அழகி பொரிந்து தள்ளவும்,

“எனக்கு புரிஞ்சு போச்சு; யூ ஆர் நாட் அட் ஆல் ஓகே! யூ ஆர் மேட்! கம்ளீட்லி மேட்! அண்ட் அஃப்கோர்ஸ் அ லவ்வபுல், பியூட்டிஃபுல் மெஸ்மரைசிங் மேட்! ஐ லைக் யூ பெய்பி!” என்று சொல்லிக்கொண்டே, அதுவரை மிக முயன்று அடக்கி வைத்திருந்த சிரிப்பெல்லாம் பீரிட்டுக் கிளம்ப, சத்தமாகச் சிரிக்கத்தொடங்கினான் முகிலன்.

“யாரைப் பார்த்து பைத்தியம்னு சொன்னீங்க? ஸ்டாப்! இப்ப சிரிப்பை நிறுத்த போறீங்களா இல்லையா?” என அவள் எகிறவும்,

குளிரில் அவளது தொண்டை கட்டிக்கொண்டு, அவளுடைய குரல் வேறு கீச் கீச்சென்று ஒலிக்கவும், “வேற யாரை! உன்னை பார்த்துத்தான் சொன்னேன் பெய்பி!” என்றவனின் சிரிப்பு, அவளுக்கும் அடங்காமல், அவனுக்கும் அடங்காமல் தொடர்ந்தது.

அந்த நேரம் பார்த்து, அரை இருளில் ஒரு உருவம், சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்துக்கொண்டே, திருட்டுத்தனமாக அவர்கள் இருவரும் இருக்கும் திசை நோக்கி வந்து கொண்டிருந்தது.

முதலில் அது யார் என்பது புரியாவிட்டாலும், அருகில் நெருங்க; நெருங்க; அவர் யார் என்பது இருவருக்கும் புரிந்து போனது.

“ஐயோ! கோபாலன் மாமா!” என நிலாவும்,

“செத்தோம்!” என முகிலனும் ஒரே குரலில் கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட, ஓசை கேட்டு ஒரு நொடி திடுக்கிட்டவர், பின்பு தன்னை சுதாரித்துக்கொண்டு, அவர்களை நெருங்கி வந்தார்.

அதற்குள் நிலாவை அங்கே புதர் போல் வளர்ந்திருந்த நித்திய மல்லிகை கொடிக்குப் பின்பாக மறையும்படி தள்ளிய முகிலன், “என்ன மாம்ஸ்! இந்த நேரத்துல இங்க வந்திருக்கீங்க? உங்க கிட்ட ஏதோ திருட்டுத் தனம் தெரியுதே!” என கிண்டலுடன் கேட்கவும்,

“அட பாவி! என்னைப் பார்த்தா உனக்குத் திருட்டுத்தனம் பண்றவன் மாதிரியா தெரியர்து? இந்த கெழவிகூட சேர்ந்தது நீயும் ரொம்ப கெட்டு போயிட்ட்டா பையா!” எனக் கோபாலன் மாமா அங்கலாய்க்கவும்,

“ஹா! ஹா! நான் கெட்டு போயிட்டானா? நல்ல காமடி! எங்க நீங்க கொஞ்சம் திரும்புங்க பார்க்கலாம்!” என சொல்லிக்கொண்டே அவரது பின் புறமாக அவன் எட்டிப் பார்க்கவும், ஒரு சிறிய தோள் பையை பின் புறமாக அவர் மறைத்திருந்தது அவனுக்குத் தெரிந்தது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

அதை அவரிடமிருந்து கை பற்றி அவன் திறக்கவும், அதில் ‘கிராண்ட் ஸ்வீட்ஸ்’ கடையிலிருந்து வாங்கி வரப்பட்டிருந்த பலவகை இனிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்று அவனை பார்த்து இனித்தது.

“இதை என் ஃபிரெண்டுக்காக கொண்டு வந்தேன்! நான் சாப்பிடரத்துக்கு இல்ல; தெரிஞ்சுக்கோ!'” என்றவர், “ஆமாம், நான் இங்க நுழையும் போது நீ யார்கிட்ட பேசிண்டு இருந்த. ஏதோ பொண்ணு குரல் மாதிரி இருந்துதே!

பெருசா நல்லவன் மாதிரி அந்த கெழவி கிட்ட சீன போட்டு வெச்சிருக்க இல்ல?

இரு! இரு! நீ இங்க ஒரு பொண்ணு கூட ரொமான்ஸ் பண்ணிண்டு இருக்கற விஷயத்தை அவ கிட்ட போட்டு குடுக்கறேன்!” என அவர் காண்டாகப் பேச,

“முதல்ல அதை செய்ங்க மாம்ஸ்! சுசீ மாமி, எங்க அம்மா கூட சேர்ந்துட்டு எனக்கு பொண்ணு பாக்கறேன், பச்சை மண்ணு பாக்கறேன்னு ஒரு கூத்தே அடிச்சிட்டு இருக்காங்க. அதுக்கு ஒரு முடிவு வரும்!” என அவன் தீவிரமாகச் சொல்லவும், அதுவரை பொறுமையை இழுத்துப்பிடித்து மறைவாக நின்றிருந்த நிலா, அதைக் கைவிட்டவளாக, “ஐயோ! அப்படி எதையாவது செஞ்சுடாதீங்க யங் மேன்! ரொமான்ஸும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல! எனச் சொல்லிக்கொண்டே வெளியில் வந்தாள்.

“ஐயோ! அழகி நீயா! நான் உன் கிட்ட இருந்து இதை எதிர்பாராகவே இல்ல!

இங்க; இந்த நேரத்துல; தனியா; அதுவும் என் ஜென்ம விரோதிகூட பேசிட்டு இருக்க!

இவன் அடிக்கடி, ‘இந்த நாய், மாடு இது கூடல்லாம் ஃப்ரண்டா இருக்கற அந்த பொண்ணு யாரு’ன்னு கேட்ட அப்பவே நான் புரிஞ்சிண்டு இருந்திருக்கணும்! எதார்த்தமா எடுத்துண்டது தப்பா போச்சு!” என அவர் கோபத்துடன் அடுக்கிக்கொண்டே போகவும்,

அவரது வார்த்தைகளில் கலவரமானவள், “ஓ மை காட்! ஜீ.கே மாமா! தப்பா இங்க எதுவும் நடக்கல. நீங்க பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்காதீங்க! இதுக்கு முன்னால இவரை நான் பார்த்ததுகூட கிடையாது!” எனச் சொல்ல,

“அப்படினா, இங்க என்ன பண்ணிண்டு இருக்க?” என அவர் தொடரவும், அவள் என்ன பதில் சொல்வது என குழம்பித் தவிக்க, அது புரியவே, ‘எதையும் சொல்லி வைக்காதே!’ என முகிலன் ஜாடை செய்தான்.

அதை அவள் கொஞ்சமும் கவனிக்காமல் போக, எரிச்சலில் தலையில் அடித்துக்கொண்டான் அவன்.

அதற்குள்ளாகவே, “நான் இந்த இடத்துல இருந்து குதிச்சு சூசைட் பண்ணிக்கலாம்னு பார்த்தேன். உங்க எனிமிதான் என்னைத் தடுத்து, கீழ தள்ளி விட்டுட்டார்!” என்றாள் நிலா சிறிதும் யோசனை இன்றி.

“ஐயோ! என்ன ஆச்சு கண்ணா? மாடில இருந்து குதிக்க பார்த்தியா! கடவுளே!” என அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, அருகிலிருந்த கல் மேடையில் தொப்பென உட்காரவும், பதறியவன்,

நிலவை நோக்கி, “உண்மையிலேயே நீ லூஸுதாண்டி!” என பற்களை கடித்தவன், மாமாவிடம் திரும்பி, “மாமா! அவ சும்மா விளையாட்டுக்கு சொல்றா! உங்களை பார்க்கத்தான் அவ இங்கே வந்ததே!” என்னை இங்க பார்த்து பயந்துட்டா! அவ்வளவுதான்!” என்றான் முகிலன்.

பின்பு நிலாவை நோக்கி, “நீயே சொல்லு!” என்றான் முகம் கடுகடுக்க.

“ஆமாம் யங் மேன்! அவர் சொன்னதுதான் உண்மை!” என்றாள் நிலா, மாமாவின் மனநிலையை உணர்ந்துகொண்டு.

அப்படியும் அவர் தெளிவடையாமல் இருக்கவே, அவர் மனதைத் திசை திருப்பும் பொருட்டு விஷமக் குரலில், “மாம்ஸ்! இவதான் உங்க பார்ட்னர் இந்த கிரைமா! இந்த ஸ்வீட்சை இவ கூட ஷேர் பண்ணி சாப்பிடத்தானே இங்க திருட்டுத்தனமா வந்தீங்க? இருங்க சுசீ மாமி கிட்ட இப்பவே சொல்றேன்” என்ற முகிலன் கைப்பேசியை எடுத்து, எண்களை அழுத்தி, “பியூட்டி!” என்று சொல்லவும், வேகமாக அவனிடமிருந்து அந்த கைப்பேசியைப் பறித்து, அழைப்பைத் துண்டித்த கோபாலகிருஷ்ணன் மாமா,

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“இதுல பாதிதான் உண்மை! நான் அழகிக்குதான் இந்த ஸ்வீட்சை கொடுக்க எடுத்துண்டு வந்தேன். நான் சாப்பிட இல்ல. தெரிஞ்சிக்கோ!” என்றார் கெத்தாக.

“மாம்ஸ்! எழுபத்து அஞ்சு வயசாகுது உங்களுக்கு! இந்த வயசுலயும் பொண்டாட்டிக்கு இப்படி பயப்படுறீங்க பாருங்க; யூ ஆர் கிரேட்!” என்றான் முகிலன் நக்கல் குரலில்.

“யாரு நானா! போடா போய் உருப்படியா வேற வேலை இருந்தால் பாரு!” என்றவர், நிலாவிடம் திரும்பி, “இவனைப் பத்தி உனக்குத் தெரியாது கண்ணா! ‘நான் தான் மேன் ஆஃப் ப்ரின்ஸிபல்; தம் அடிக்க மாட்டேன்; தண்ணி அடிக்க மாட்டேன்; பொண்ணுங்கள தப்பா பார்க்கவே மாட்டேன்னு’ இல்லாத சீனெல்லாம் போட்டு எங்காத்து கிழவியை கைக்குள்ள போட்டுண்டு அவளை எனக்கு எதிரா திருப்பி விட்டுட்டான்.

எதுக்கும் நீ இவன் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு! எதையாவது பேசி உன்னையும் குழப்பி நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை பிரேக் அப் பண்ணிட போறான்.” என அவளை எச்சரிக்கும் விதமாகச் சொன்னார் ஜீ.கே மாமா.

‘கெட்டது குடி! நாம இவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு பார்த்தால், லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணறதுக்கு முன்னாடியே இந்த ஓல்ட் மேன் பிரேக் அப் பண்ணிவிட்டுடுவார் போல இருக்கே’ என எண்ணி நொந்தே போனான் முகிலன்.

“போனால் போகுது; இந்த சுவீட்ல எல்லாம் கொஞ்சம் சாம்பிள் உங்களுக்கு கொடுக்கலாம்னு நினைச்சேன். என்னை பத்தி இந்த பொண்ணுகிட்ட தப்புத்தப்பா சொல்லிடீங்க இல்ல. ஐடியா டிராப்ட்!” என அவன் மிரட்டலில் இறங்கவும்,

“அப்படிலாம் நான் எதுவுமே சொல்லலடா!” என்றவர், நிலாவிடம், “அழகிம்மா கேட்டுக்கோ! இவன் நல்லவன்! நல்லவனுக்கெல்லாம் நல்லவன்! கெட்டவனுக்கெல்லாம் கூட நல்லவன்தான்! ஆனா எனக்கு மட்டும் கெட்டவனோ கெட்டவன்!” என்று கொஞ்சமும் சிரிக்காமல், ஆனால் கிண்டலுடன் சொல்ல, மற்ற இருவருமே மனம் விட்டுச் சிரித்தனர்.

பின்பு மூவருமாக அந்த இனிப்புகளைச் சாப்பிட்டு முடிக்க, “ம்ப்ச்! மாம்ஸ்! சின்ன குழந்தை மாதிரி இப்படி பண்றீங்களே! சுகர் எகிறிப்போச்சுன்னா எவ்வளவு கஷ்டம்? மாமி ரொம்பவே கவலை படறாங்க!” என்றான் முகிலன் உண்மையான அக்கரையில்.

“பரவாயில்ல விடுங்க…” என அவன் பெயர் தெரியாமல் நிலா இழுக்கவும், “கார்முகிலன்! ஷார்ட்டா முகிலன். அதுதான் என் பேர் அழகி!” என்றான் முகிலன்.

“டேய் அவ பெரு நிலவழகி! எல்லாருக்கும் நிலா! நீயும் நிலான்னே கூப்பிடு! ஏன்னா அவ எனக்கு மட்டும்தான் அழகி!” என அதற்கும் அவனிடம் சண்டைக்கு வந்தார் ஜீ.கே மாமா!

“ஓகே! டன்!” என அவரிடம் சரணடைந்தான் முகிலன்.

“ஐயோ! விட்டா சண்டை போட அரமிச்சுடறீங்க! நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன்!” என்றவள், “யங் மேன்! இன்னைக்கு ஸ்வீட் சாப்பிடீங்க இல்ல! இன்னும் ஒன் மந்துக்கு நோ ஸ்வீட்ஸ்! அப்பறம் மாமி கிட்ட சொல்லி, தண்ணில வெண்டைக்காய் போட்டு மார்னிங் வெறும் வயத்துல சாப்பிடறீங்க!

நாளையில இருந்து மார்னிங் என் கூட வாக்கிங் வரீங்க. பனியா இருக்கறதால செவென்க்கு கிளம்பலாம். டாட்!’ என முடித்தாள் நிலா.

அவளுடைய முகத்தைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், கைப்பிடி சுவரில், குதிப்பதற்காக அவள் ஏறி நின்றிருந்த இடத்தை பார்த்து, அவளை நோக்கி தலை அசைத்தான் முகிலன். தான் செய்த தவறை எண்ணி அவளுடைய கண்கள் கீழ் நோக்கித் தாழ்ந்தது.

அதை கவனிக்காதவன் போன்று, “நிலா! நீ மாமாவை அவரோட வீட்டுல விட்டுட்டு, உன் வீட்டுக்கு போ!” என அவன் கட்டளையாகச் சொல்ல, “நீங்க என்ன எனக்கு ஆர்டர் போடுறது. நீங்க சொல்லலன்னாலும் நான் அதைத்தான் செய்திருப்பேன்!” என நொடிந்துகொண்டு, மாமாவுடன் அங்கிருந்து கிளம்பினாள் நிலா.

“யாரு யங் மேன் அவர்! உங்களையே இந்த பாடு படுத்தறாரு?” என அவனை பற்றி அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்டாள் நிலா.

“இவன் எங்க ஊர் பையன்தான்மா! நான் கும்பகோணத்துல காலேஜ் லெக்ச்சரரா இருந்த அப்ப, இவனோட அப்பா என்னோட ஃபேவரைட்  ஸ்டூடன்ட். அவன் கோஸ்ட் கார்ட்ல பெரிய போஸ்டிங்க இருந்து ரிட்டையர் ஆகிட்டு இப்ப விவசாயம் பார்த்துண்டு ஊரோட  செட்டில் ஆகிட்டான்.

இந்த பையனுக்கு இங்கேதான் வேலை. எங்காத்து பக்கத்துல இருக்கும் என் பொண்ணோட பிளாட்ல குடிவெச்சிருக்கோம்.

அவன் மாமியோட பெட்!

அருந்த வாலு! நல்ல பையன்தான்! ஆனா எனக்கு மட்டும் ஆப்பு வெச்சுடுவான்.

சுகருக்குனு ஊருல இருந்து ஒரு கஷாயம் மிக்ஸ் வாங்கிண்டு வந்திருக்கான் கண்ணா இவன்.


கசப்புன்னா கசப்பு, விஷ கசப்பா இருக்கும்.

இப்ப கூட பாரு; வீட்டுக்கு போன உடனே, அந்த கஷாயம் ரெடியா இருக்கும். ஸ்வீட் சாப்பிட்டு இருக்கேன் இல்ல!” என்று முடித்தார் பெரியவர்.

பேசிக்கொண்டே, மொட்டை மாடியிலிருந்து படிகளில் இறங்கி, மின்தூக்கியில் பயணம் செய்து, மூன்றாம் தளத்தில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குள் வந்திருந்தனர் இருவரும்.

முழங்காலில் ஏதோ தைலத்தைத் தேய்த்துக்கொண்டே, அவர்கள் வீடு வரவேற்பறை இருக்கையில் உட்கார்ந்திருந்தார் சுசீலா மாமி.

அவர்கள் இருவரையும் பார்த்தவுடன், “வாம்மா நிலா!” என அவளை வரவேற்றவர், அங்கே இருந்த டீபாயை மாமாவிற்கு சுட்டிக்காட்டினார்.

அதில் இருந்த வெள்ளி குவளையில், கருப்பு நிறத்திலிருந்த அந்த கஷாயம், மாமாவைப் பார்த்து கசந்தது.

நிலாவின் கையை சுரண்டி, அதை அவளுக்குக் காண்பித்தவர், புருவத்தை உயர்த்தி, ‘எப்புடி’ என்பது போல் கேட்டார்.

“செம்ம; யங் மேன்!” என்றாள் நிலா.

“என்னடி பொண்ணே இங்க செமையா இருக்கு!” என்று மாமி கேட்க,

நிலா பதில்சொல்வதற்கு முன்பாக, “பாப்பா! டின்னர் சாப்பிடத்துக்கு அப்பறம் ஸ்வீட்டா எதாவது டெஸர்ட் இல்லனா ஐஸ் க்ரீம் சாப்பிடுவா! நீ ஏண்டி இப்படி விஷத்தை வெச்சிருக்க?” என மாமா கேட்கவும்,

“உங்களைப் பொறுத்த வரைக்கும் ஸ்வீட்தான்னா விஷம்! இந்த விஷம் தான் அமிர்தம்! அதனால பேசாம சாப்பிடுங்கோ! இல்லனா இப்பவே போன் பண்ணி உங்க பேத்தி கிட்ட கொடுத்துடுவேன்!” என்றார் மாமி மிரட்டலாக.

“என் நேரம் பத்து வயசு நண்டு சிண்டுக்கெல்லாம் பயப்பட வேண்டியதா இருக்கு!” எனப் புலம்பிக்கொண்டே அந்த கஷாயத்தை அருந்தி முடித்தார் மாமா!

அனைத்தையும் பார்த்துச் சிரித்தவண்ணம் மாமிக்கு அருகில் உட்கார்ந்திருந்த நிலா, நேரம் ஆவதை உணர்ந்து, “குட் நைட் மாமா! குட் நைட் மாமி! பை! நான் போயிட்டு வரேன்!” என்று கிளம்ப எத்தனிக்க, “எங்கடி போற பொண்ணே! இன்னைக்கு ராத்திரி இங்கேயே படுத்துக்கோ! எனக்கு முட்டி வலி அதிகமா இருக்கு! நடக்கவே முடியல! நீ இருந்தால் கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்! நீயும் தனியான தங்கி இருக்க!” என அவர் இறைஞ்சலாகச் சொல்லவும் மறுக்க மனம் இன்றி அதற்கு ஒப்புக்கொண்டாள் நிலா.

அவர்கள் மாடியிலிருந்து கிளப்பியதும், மாமியைக் கைப்பேசியில் அழைத்து, “பியூட்டி! மாமாவுக்கு கஷாயம் போட்டு குடுத்துடுங்க!

அந்த நிலா பொண்ணு அங்க வருவா! அவளை இன்னைக்கு உங்க வீட்டிலேயே தங்க வெச்சுக்கோங்க!

எந்த காரணம் கொண்டும் போக விட்டுடாதீங்க! என்னனு நான் காலைல நேரில் சொல்றேன்!” என முகிலன் மாமியிடம் சொல்லியிருந்தது நிலவழகிக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே!

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

நிலா-முகிலன் 2

முகிலன், அவனுடைய அப்பாவை முன் மாதிரியாகக் கொண்டே வளர்ந்தவன். அவருடைய கம்பீரமும், அதை அதீதமாகக் காட்டிய அவர் வகித்த பதவிகளும் சிறுக சிறுக அவன் சிந்தைக்குள் புகுந்து, உச்சபட்ச போதையை அவனுக்குள் ஏற்றி இருந்தது.

அதுவே அவனை வெறியுடன் ஐ.பி.எஸ் தேர்வில் முதன்மையாக வெற்றிபெற வைத்து, ‘ரா’ ஏஜன்சியில் முக்கிய பொறுப்பில் அமரவும் வைத்தது.

எப்பொழுதுமே சவாலான வேலைகளையே எதிர் நோக்கி காத்திருக்கும் அவனது துடிப்பான இளமைக்கு, அவனுடைய இந்த வேலை பெரும் தீனி அளித்தது என்றால் மிகையில்லை.

அவனுடைய இந்த முப்பது வயதிற்குள், பல சிக்கலான வேலைகளில் ஈடுபட்டு, அதை திறம்பட முடித்துக் கொடுத்திருக்கிறான் முகிலன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட, சீன ராணுவத்திடம் சிக்கி இருந்த அவனுடைய சக உளவாளி ஒருவனின் இருப்பிடம் பற்றிய தகவல்களை, அங்கேயே சென்று கண்டுபிடித்து, அவன் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தி, ஒரு வழியாக அவனைக் குற்றுயிரும் கொலை உயிருமாக மீட்டுவந்து, உயிர் பிழைக்க வைத்திருந்தான் அவன்.

மேலிடத்திலிருந்து இதுபோன்ற குறிப்பிட்ட வேலைகளுக்கென்று அவனுக்கு அழைப்பு வரும்.

அது முடிந்த பிறகு, அடுத்த தேவை ஏற்படும்வரை பெயருக்கென்று எதாவது ஒரு பதவியில் குறிப்பிட்ட சில மாதங்கள் இருக்க நேரும்.

அப்படிப் பட்ட சமயங்களில், சென்னையைத் தேர்ந்தெடுத்து இங்கேயே வந்துவிடுவான் அவன். மொத்தத்தில் விக்கிரமாதித்த மகாராஜா போன்று, காடாறு மாதம்; நாடாறு மாதம் என்பதுதான் அவனது நிலை.

அவனுடைய வேலையைப் பற்றி, அவனுடைய அப்பா, அம்மாவைத் தவிர, இன்னும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே தெரியும்.

சொன்னாலும் ஆபத்தில் போய் முடியலாம் என்பதினால் அதைப் பற்றி வேறு யாரிடமும் அவன் சொன்னதில்லை; சொல்ல வேண்டிய அவசியமும் அதுவரை அவனுக்கு ஏற்படவில்லை.

‘ராஜ் கேசல்’ என்ற பெயர் கொண்ட அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், மூன்றாவது தளத்தில் மாமாவின் மகன், மகள் இருவரும் அடுத்தடுத்தாற்போன்ற பிளாட்களை வாங்கி இருந்தனர்.

ஜீ.கே மாமா, சுசீ மாமி இருவரும் மகனுடன்  கூட்டுக்குடும்பமாக இருக்க, வெளிநாட்டில் இருக்கும் அவர்களுடைய மகளுக்குச் சொந்தமான இரட்டை படுக்கை அறை கொண்ட பிளாட்டை, அவன் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப் படுத்த ஏதுவாக, நிரந்தரமாக வாடகைக்கு எடுத்திருக்கிறான் முகிலன்.

அவனுடைய அபாயகரமான பணியின் காரணமாக, திருமணம் என்னும் விஷயத்தையே முற்றுமாக தவிர்த்து வந்தவன், பெண்களுடனான பழக்கத்தை நட்பு எனுமே ஒரு எல்லை வரை மட்டுமே அனுமதித்தவன்,  நிலாவைப் பார்த்தது முதல் தன வசம் இழந்திருந்தான் அவன்.

சில தினங்களுக்கு முன், பனி மூட்டம் நிறைந்த மார்கழி காலையில், அவனது இரவுப்பணி முடிந்து, அவனது பைக்கை ஓட்டி வந்து, முகிலன் அந்த குடியிருப்பின் வாயிலை அடைந்த சமயம், மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட பசு மாடு ஒன்றை வழியை மறித்து நிற்க, ஒரு பெண் அதைப் பார்த்து மிரண்டு போய் நிறுப்பதைக் கண்டான் அவன்.

பின்புதான் புரிந்தது, அதை பார்த்து மிரண்டு போய் நிற்க வில்லை, அந்த மாட்டுடன் அவள் ஏதோ பேசிக்கொண்டிருகிறாள் என்பது.

மாடு அவனுக்கு நேராக அதன் உருவம் முற்றுமாகத் தெரியும்படி நிற்க, அந்த பெண் திரும்பி நின்றிருக்க, அவளது பின்புறத் தோற்றத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.

அவள் கைப்பையை மாட்டியவாறு, எங்கோ வெளியில் செல்வதற்குத் தயாராகி வந்திருப்பாள் போலும்.

எளிமையாக ஒரு சல்வார் அணிந்திருந்தாள் நிலா! அதன் நிறமோ மற்றதோ அவனது கவனத்தில் பதியவில்லை.

அவள் தலையை ஆட்டி ஆட்டி சங்கீதமாக அந்த மாட்டிடம் பேசிக்கொண்டிருக்க, அதற்கேற்ப அவளது காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் இரண்டும், ஒரே  ஜதியில் ரசனையாக ஆடிக்கொண்டிருந்தன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“ப்ச்! டெய்லி ஈவினிங்தான வருவ? இன்னைக்கு ஏன் இப்படி மார்னிங்கே வந்து என் கிட்ட வம்பு பண்ற; ம்!? பாரு என் கையில பழமெல்லாம் இல்ல!” என்று சொல்லிக்கொண்டே அவள் வலது கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டே, கைகளைத் தட்டுவது போல் செய்யவும், அவளுடைய கையில் உண்ணும் படியாக எதுவும் இல்லை என்பது புரியவும், அந்த மாடு தலையை ஆட்டி, ‘வட போச்சே’ என்ற ரீதியில் அவளைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆடி அசங்கியவாறு அங்கிருந்து சென்றது.

பிறகு திரும்பியவள், தலைக்கவசம் அணிந்தபடி பைக்குடன் நின்றிருந்த   முகிலனைக் கடந்து வீதியை நோக்கிச் சென்றாள் நிலா.

அந்த மாட்டிற்குச் சாப்பிட ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிய வருத்தம் அவளுடைய முகத்தில் தெரிந்தது. ஆனால் அடுத்த நொடியே அவளுடைய முகம் ஒளிர்ந்தது. அதைக் கண்ட முகிலனின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு சேர பறந்தன.

பயம், காதல் இந்த இரண்டையுமே இதுவரை கண்டிருக்காத அவனது மூளையின் ‘டெம்போரல் லோப்’ பகுதிக்குள் அமைந்திருக்கும் ‘அமிக்டாலா’ முதன்முதலாகக் காதல் என்ற உணர்வை அவனுக்குள் புகுத்தி இருந்தது. அப்படியே உறைந்துபோய் பைக்கிலிருந்து கால்களை ஊன்றியவாறு பார்வையால் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தான் கார்முகிலன்.

அப்பொழுது தள்ளு வண்டியில் ஒருவன் கீரை வகைகளை விற்றுக்கொண்டு வரவும், அவனை நோக்கிச் சென்ற நிலா, அவசரமாகச் சென்று சில கீரைக்கட்டுகளை வாங்கிக்கொண்டு, அந்த மாட்டை நோக்கிப் போனாள்.

முகிலனின் மனமும் காதலுடன் அவள் பின்னாலேயே சென்றது!

பிறகு அவள் அங்கிருந்தது சென்று விட, ‘வட போச்சே’ என்ற பரிதாப பார்வை பார்ப்பது இப்பொழுது முகிலனின் முறையாக ஆகிப்போனது.

அதன் பிறகு வந்த நாட்களில், அவள் ஜீ.கே மாமா குடும்பத்தில் மிகவும் நெருங்கிப் பழகுவது அவனுக்கு தெரிய வரவும், மாமியிடம் அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜை டேமேஜ்’ ஆகாமல் காக்கும் பொருட்டு அவரிடம் கேட்கத்தயங்கி, மாமாவிடம் மறைமுகமாக அவளைப் பற்றி விசாரித்தான் முகிலன்.

“டாய்! நீ எதாவது தப்பு தாண்டா செஞ்சு மாட்டிட்டேன்னா, உங்கப்பனுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. உருப்படியா எதாவது வேலை இருந்தால் போய் பாரு!” என்று சொல்லிவிட்டார் அவர். அதற்குமேல் அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை அவனால்!

அன்றைய தினம் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தினூடே, சில தினங்களுக்கு முன்பாக நிலாவை முதன்முதலில் பார்த்த நிகழ்வைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான் முகிலன்.

‘பயம் என்ற ஒன்றையே அறியாதவனையே ஒருநொடி பயத்தில் மரணிக்கச் செய்துவிட்டாளே பாவி! சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட முற்றுமாக அவளை இழந்திருக்கக்கூடுமே!’ என எண்ணிக்கொண்டு, அவளுடைய இந்த செயலுக்குக் காரணத்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற தீவிர சிந்தனையில் தூக்கம் கூட வரவில்லை முகிலனுக்கு.

***

நிலா; மாமாவிடம், ‘காலை ஏழு மணிக்கு வாக்கிங் போகலாம்’ என்று சொன்ன காரணத்தினால், இதைச் சாக்காக வைத்து நிலாவுடன் சிறிது நேரம் செலவிடலாம் என்ற திட்டத்துடன், அவர்கள் இருவரையும் எதிர்நோக்கி, அவர்கள் வசிக்கும் குடியிருப்பின்  நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் பூங்காவிலேயே முகிலன் காத்திருக்க, அவனது எண்ணத்தைப் பொய்யாக்கியிருந்தனர் இருவரும்.

மணி ஏழரையை கடந்தும் அவர்கள் அங்கே வந்தபாடில்லை. அதில் பொறுமை இழந்தவனாக அவன் மாமாவை அழைக்க, “சொல்லுடா நல்லவனே!” என கேட்டுகொண்டே அவனுக்கு அருகில் வந்து நின்றார் மாமா.

அவரை அங்கே பார்த்ததும் அழைப்பைத் துண்டித்தவன், “எங்க மாமா உங்க அழகி?” என்று கேட்க, அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் படித்தவராக, “டாய்! அப்படி சொல்லாதேன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” என்று அவர் மிரட்டும் தொனியில் கேட்கவும்,  ‘நான் என்ன என் அழகின்னா சொன்னேன்! உங்க அழகின்னுதானே சொன்னேன்!” என்றான் அவன் கிண்டலுடன்.

“எங்க, அப்படி சொல்லித்தான் பாரேன்! அப்பறம் தெரியும் சங்கதி!” என்று சொல்லிவிட்டு, இடி இடி என சிரித்தவர்; தொடர்ந்து,

“படவா! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது. உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குத்தானே?” என அவர் கேட்கவும், என்ன பதில் சொல்வது எனப் புரியாமல், அவனது முகத்தில் மெல்லிய வெட்கம் படர, சங்கோஜத்துடன் நெளிந்தான் முகிலன்.

“வழியறது! துடைச்சுக்கோ!” என்றார் மாமா நக்கலாக.

“ம்ம்! என்ன? என்ன?” என அவன் பதற, “டேய்! ஜொள்ளைத்தாண்டா சொன்னேன்!” என்றார் அவர் அவனை விடாமல்.

“ஐயோ! தெய்வமே என்னை விட்டுடுங்க மீ பாவம்?” என அவன் கெஞ்சவும், “அது!” எனக் கெத்தாகச் சொன்னவர், “உன் வேலையை என் கிட்டேயே காட்டினா, நான் சும்மா இருப்பேனா?” என சொல்லிவிட்டு, “ஒழிஞ்சு போ!” என முடித்தார் மாமா.

பின்பு அங்கேயே இருந்த ‘கேஃப்டீரியா’வில் போய் தனக்கு ஒரு காஃபியும் மாமாவுக்குச் சர்க்கரை போடாத பாலும் வாங்கி வந்தவன், அதை அவரிடம் கொடுத்துவிட்டு, காஃபியை ஒரு மிடறு அருந்தியவனாக, “யாரு மாமா அந்த நிலா! அவளை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டான் முகிலன், தீவிரமாக.

அதற்கு எந்த ஒரு தயக்கமுமின்றி அவளைப் பற்றி அவனிடம் சொல்லத்தொடங்கினார் மாமா.

இரண்டு மாதங்களுக்கு முன் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இதே  பூங்காவில்தான் நிலாவை முதன்முதலில் சந்தித்தார் மாமா.

அன்று மாமா ‘லோ சுகர்’ காரணமாக மூச்சுப் பேச்சின்றி அங்கே விழுந்துவிட, உடனே அவருக்கு முதல் உதவி செய்து அவரை கண் திறக்க வைத்தாள் நிலவழகி.

மாமா பதினைந்து வயதாக இருக்கும்போதே இறந்து போன அவருடைய அம்மாவே வந்து அன்று அவரை காப்பாற்றியதாகத் தோன்றியதாம் மாமாவிற்கு.

அதுவும் அவளுடைய பெயர் நிலவழகி என்பது தெரியவரவும், அவருடைய அம்மாவின் பெயர் சுந்தரி என்பதினால், அதே பொருள் கொண்டு அழகி என்றே நிலாவை அழைக்கத் தொடங்கினார் மாமா.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

அன்றுமுதல்தான் அவளுடன் நட்பாகி இருந்தார் அவர்.

அதன் பின் அங்கே அவளுக்கு யாருடனும் அதிகம் பழக்கம் இல்லாத காரணத்தால், சமையல் குறிப்புகள் கேட்கவென ஒருமுறை மாமியைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வந்தவள், அதன் பிறகு, மாமி, மாமாவின் மகன், மருமகள் பேத்தி என அனைவருடனும் நெருங்கிவிட்டாள்.

அந்த குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் ஒரு வீட்டில் தனியாகத் தங்கி இருக்கிறாள் நிலா.

அவளுடைய தந்தை புது தில்லியில், மத்திய அரசுப்பணியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவளுடைய அம்மாவும் அங்கேயே பள்ளி ஆசிரியராக இருக்கிறார். ஒரு தம்பி வெளிநாட்டில் எம்.எஸ் படித்துக்கொண்டிருக்கிறான்.

அவளுடைய அப்பாவின் பணி ஓய்விற்குப் பிறகு இங்கேயே வந்து குடியேறிவிடும் எண்ணத்தில், அந்த வீட்டை அவர்கள் வாங்கியிருப்பதாகவும்; அவளுக்கு இங்கே ஒரு மென்பொருள் நிருவனத்தில் வேலை கிடைத்துவிட, அந்த வீட்டிலேயே அவள் குடியிருப்பதாகவும், நிலா கூறியதாக அவளைப் பற்றி முகிலனிடம் சொன்னார் மாமா. அதைத் தவிர அவளைப் பற்றிய தகவல்கள் எதுவும் அவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

பேசிக்கொண்டே மாமாவை ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து பின்பு வீட்டிற்கு அழைத்து வந்தான் முகிலன்.

நிலா அங்கேதான் இருப்பாள் என அவன் நினைத்திருக்க, அவள் காலை ஆறு மணிக்கே அங்கிருந்து சென்று விட்டாள் என்று சொன்னார் மாமி

இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. திக் என்று ஆனது முகிலனுக்கு.

தனித்து விட்டால் மறுபடியும் எக்குத்தப்பாக அவள் ஏதாவது செய்து வைப்பாளோ என்ற பயத்தில்தான் அவளை மாமா வீட்டில் அவன் தங்க வைத்ததே.

‘மாமியிடம் முன்னமே காரணத்தைச் சொல்லி இருக்க வேண்டுமோ?’ என தன் அதிபுத்திசாலித்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன், முயன்று முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து கிளம்பி நேரே நிலாவின் வீட்டை நோக்கிச் சென்றான் அவன்.

வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது.

மென்மையாக அவன் கதவைத் தட்டிப் பார்த்தும் எந்த பதிலும் இல்லை.

அந்த தளம் முழுவதிலும் பார்வையைச் சுழலவிட்டவன் அங்கே ஆள் அரவமே இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான்.

அங்கே ஒரு சில வீடுகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கப் பெரும்பான்மையானவை மக்கள் குடிவராமல் பூட்டப்பட்டே கிடந்தது. அது அவனுக்கு வசதியாகப் போனது.

பின்பு, அங்கே இருக்கும் கண்காணிப்பு கேமராவின் கடமையைத் தடை செய்ய, கைப்பேசியில் ஏதோ செய்தவன், பின்பு அவன் வீட்டுச் சாவியைக் கொண்டே ஓரிரு நிமிடங்களில் அந்த பூட்டைத் திறந்துவிட்டான் முகிலன்.

பல ரகசிய அறைகளையும், திறக்கவே முடியாத நவீன ரக  லாக்கர்களையுமே சர்வ சாதாரணமாகத் திறப்பவனுக்கு இந்த தானியங்கி பூட்டு ஒன்றும் பெரிய விஷயமேயில்லை.

‘மத்தவங்க வீட்டுக்குள்ள இப்படி திருடன் மாதிரி நுழையறியே வெக்கமா இல்ல?’ என அவனது மனசாட்சி அவனை நக்கலாக கேள்வி கேட்க,

‘என்னோட மாமனார் வீடுதான இது. உரிமையா திறந்துட்டு உள்ள போறேன். யார் என்னைக் கேள்வி கேப்பாங்க? என அதற்கு  தானே கெத்தாக ஒரு  பதிலையும் சொல்லிக்கொண்டு, கவனமாக வலது காலை எடுத்து வைத்து  வீட்டின் உள்ளே சென்றான் முகிலன்.

எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டு மின் விளக்குகள் கூட ஒளிராமல் இருள் சூழ்ந்திருந்தது அந்த வீடு.

அங்கே இருந்த ஒற்றை சோஃபாவில் உடலைக் குறுக்கி உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.

அங்கே இருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்க்க,கள்ளம் கபடமற்ற சிறு குழந்தையைப் போன்று அவனுக்குத் தோன்றினாள் அவள்.

மெல்லிய குரலில் “நெஜமாவே குட்டி பேபி மாதிரிதாண்டி இருக்க நீ” எனக் கொஞ்சலுடன் சொல்லியவாறு அவளை கைகளில் ஏந்தியவன், அருகிலிருந்த பெரிய சோஃபாவில் அவளை வசதியாகப் படுக்க வைத்தான்.

அதுவரையிலும் சிறு அசைவு கூட தெரியவில்லை அவளிடம்.

அது அவனது மனதில் கிலியைக் கிளப்ப, அவளைக் கூர்ந்து கவனித்தவன் அவள் நல்ல உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டான். ‘ஒரே நாளில் என்னைச் சரியான பயந்தான்கொள்ளி ஆகிட்டடீ நீ! குட்டி பிசாசே!’ என மனதிற்குள்ளேயே அவளைத் திட்டித் தீர்த்தான் முகிலன்.

மணியை பார்க்க, அது ஒன்பதைக் கடந்திருந்தது.

அவள் எதுவும் சாப்பிடாமல் உறங்கிக் கொண்டிருப்பது வேறு அவனுக்கு மனதை வருத்தியது.

சமையற்கட்டிற்குள் சென்று பார்க்க,  சமையல் செய்வதற்குத் தேவையான எல்லா பொருட்களும் இருந்தது. அந்த இடத்தை  நேர்த்தியாகவும் அழகாகவும் வைத்திருந்தாள் நிலா. மனதிற்குள்ளே அவளை மெச்சியவாறு, குளிர் சாதன பெட்டியைத் திறந்து பார்க்க, இட்லி மாவும் தயாராக இருந்தது.

சில நிமிடங்களில் இட்லியும், சட்டினியும் தயார் செய்து முடித்தவன், மறுபடியும் அவளை வந்து பார்க்க, சிறு அசைவு கூட இல்லாமல், அவன் விட்டுச்சென்ற அதே நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.

‘இவளிடம் நிச்சயமாக ஏதோ சரியில்லை!’ என அவனது உளவாளி புத்தி அவனுக்கு எச்சரிக்கை செய்ய, ‘எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்!’ என அவனுடைய மனம் தெளிந்தது.

“ஏய்! நிலா! ஏய்! அழகி! எழுந்திறுடீ!” என சத்தமாக அழைத்தும், பட்! பட்! என அவளது கன்னங்களில் தட்டி அவளை எழுப்ப முயன்றும் அவளிடம் துளியும் அசைவில்லாமல் போகவே,

பொறுமை இழந்தவனாக, சமையல் அறை குழாயிலிருந்து, ஒரு குவளையில் தண்ணீரைப் பிடித்து வந்து, அதை மொத்தமாக அவள் முகத்தில் கவிழ்த்தான் அவன்.

மார்கழி மாத குளிரில், அந்த தண்ணீர் உரை நிலை அளவில் குளிர்ந்து போய் இருக்கவும், அலறி அடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து, மிரள மிரள விழித்தாள் நிலா.

அவளுடைய முகத்திற்கு நேராகக் குனிந்து, “ஹாய்!” என்று சொல்லி அவன் புன்னகை செய்ய,

அவளது உறக்கம் கலையாமல், “வந்துடீங்களா பேபி?!” என்றவாறு அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “நீங்க எங்க வராமலேயே போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன் தெரியுமா?” என உளறலாகச் சொன்னாள் நிலா.

‘என்ன சொல்றா இவ?’ என அரண்டு போன முகிலன் அவளைப் பார்த்துக் கேட்டான், “ஆர் யூ ஓகே பெய்பி!”

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

நிலா-முகிலன் 3

அவனுடைய குரலில் தூக்கம் நன்றாகக் கலைய, அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், “ஆஆஆஆ!” என்று சத்தமாகக் கத்தவும்,

“ஷு! எதுக்கு இப்படிக் கத்தி எனர்ஜிய வேஸ்ட் பண்ற! வாய மூடு!” என அவன் அதட்டலாகச் சொல்ல,

“பூட்டி இருக்கும் வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க?

ஏன் வந்தீங்க?

ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது, இப்படிச் செய்ய உங்களுக்கு எவ்ளோ தெனாவெட்டு இருக்கணும்?” என அவள் எகிறத் தொடங்கினாள் நிலா.

“இதே மாதிரி கத்தி, கலாட்டா பண்ணிட்டு இருந்த வை, இங்கயே ஒரு சிறப்பான, தரமான சம்பவத்தை நீ பார்க்க வேண்டியதா இருக்கும்! பிறகு உன் இஷ்டம்!” என அவன் விஷமமாகச் சொல்ல, அதில் அதிர்ந்தாள் நிலா. மேலும் அந்த தனிமை வேறு அவளை மிரட்டவும், “என்ன! என்ன! என்ன செய்வீங்க?” என உள்ளே போன குரலில் அவள் கேட்க,

‘உன்னை வெச்சிட்டு, இப்ப ரொமான்ஸா பண்ண முடியும்?!’ எனக் கடுப்புடன் மனதிற்குள் நினைத்தவன்,

“ஒரே அறை! அவ்வளவுதான்” என்றவன், “தெரியுமா? ரெண்டு மாசத்துக்கு முன்னால, ஏழு அடில ஒருத்தன், பக்கா ட்ரைண்ட் ஆர்மி ஆளூ,  என் வேலைய முடிக்க விடாம டிஸ்டர்ப் பண்ணான், இந்த கையால ஒரே ஒரு அடிதான்…” என வலது கையை தூக்கிக் காண்பித்தவன், “அப்படியே சுருண்டு விழுந்தவன், அதோட நான் சென்னை வர வரைக்கும் கூட எழுந்திருக்கலன்னு கேள்வி பட்டேன்; எப்படி வசதி? நான் சொல்றத எதிர்த்து பேசாம கேட்ப இல்ல?” என மிரட்டலாகவே சொல்லிவிட்டு,

“டென் மினிட்ஸ் டைம் தரேன்; அதுக்குள்ள ரெப்ரஷ் ஆகிட்டு வா! நோ மோர் ஆர்க்யூமென்ட்!” என முடிக்க, அவள் முகத்தில் பீதியின் சாயல் நன்றாகவே தெரிந்தது.

அவனுக்கே அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருத்தது.

‘ஆனாலும் உன்னை கரக்ட் பண்ண இந்த மாதிரி சர்ஜிகல் அட்டாக்ஸ் எல்லாம் தேவைதான் போடி!’ என எண்ணிக்கொண்டான் முகிலன்.

அவனுடைய மிரட்டல் கொஞ்சம் வேலை செய்ய, எதோ முணுமுணுத்துக்கொண்டே அவளது அறைக்குள் நுழைந்து, கதவை தாழிட்டுக்கொண்டாள் நிலா.

அவன் சொன்னது போல் சரியாக பத்து நிமிடத்தில், குளித்து, ஒரு ஷார்ட் டாப், லாங் ஸ்கர்ட், அணிந்து, மொத்த கூந்தலையும் தூக்கி கொண்டையாகப் போட்டவாறு, நெற்றியில் சிறிய பொட்டு வைத்து, முத்து முத்தாகத் தண்ணீர் முகத்தில் சொட்ட, அங்கே வந்த நிலா, தோரணையாகக் கால் மேல் கால் போட்டு, கைப்பேசியை குடைந்தவாறு, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த முகிலனை, கண்களாலேயே எரித்தவாறு, சமையல் அரை நோக்கிப் போனாள்.

எளிமையான அவளுடைய அழகில் சில நொடிகள் தன்னை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், பின்பு அவளை பின் தொடர்ந்து போனான் முகிலன்.

அங்கே தயாராக இருந்த காலை உணவைப் பார்த்து விழி விரித்தவள், “நீங்களா செஞ்சீங்க!” என வியப்புடன் முகிலனைப் பார்த்துக் கேட்கவும், “பின்ன! உன்னை மாதிரி தூங்கு மூஞ்சியை கட்டிக்கப்போறவனுக்கு இது கூடச் செய்ய தெரியலன்னா அவனோட கதி என்ன ஆகும்!” என அவன் கேட்க, அதில் முகம் கசங்கியவள், “மரியாதையா வெளியில போயிடுங்க! இப்படியெல்லாம் பேசினா எனக்குப் பிடிக்காது!” என அவள் கட்டமாகச் சொல்லவும்,

“ஓகே! சும்மாதான் சொன்னேன்! வா சாப்பிடலாம்!” என அவன் சொல்ல, காஃபீ மேக்கரில், பொடியைப் போட்டு, தண்ணீர் ஊற்றியவள், “எனக்கு டிபன் சாப்பிட்டா உடனே காஃபீ வேணும்!” என்று சொல்லிக்கொண்டே, இட்லியைத் தட்டிலிருந்து பிரித்தெடுக்க, காஃபி மேக்கரின் ஸ்விட்சை போட்டவன், “பவுடர் போட்டு தண்ணி ஊற்றினால் மட்டும் போறாது, ஸ்விட்ச்சையும் போடணும்!” என்றான் நக்கலாக.

அதை கவனிக்கவைத்தவள் போல, அனைத்தையும் உணவு மேசை மேசை மேல் எடுத்து வைத்தவள், அவனுக்கும் சேர்த்து ஒரு தட்டை மேசை மீது வைத்து விட்டு, அவனைப் பார்த்து, “சாப்பிலாமா! எனக்கு ரொம்ப பசிக்குது!” என்று சொல்ல, புன்னகையுடன் அவளுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான் முகிலன்.

அவள் சாப்பிடத் தொடங்கியதும், “சிம்பிளா அழகா இருக்க! வேலைக்கு போனாலும் கூட வீட்டை நீட்டா மெயின்டைன் பண்ற, தனியாதான் இருக்கோம்னு, ஏனோ தானோன்னு எல்லாம் இல்லாம, ரசனையா குக் பண்ற? பின்ன ஏன் இந்த திடீர் தற்கொலை முடிவு; ம்!” என்று தீவிரமாக கேட்டவன், அந்த உரையாடலை இலகுவாக தொடங்கும் பொருட்டு, “சாகப்போறவ எதுக்கு இட்லி மாவெல்லாம் அரைச்சு வெச்சிருக்க? என சிரித்துக்கொண்டே கேட்டான்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

முகத்தில் குழப்ப ரேகைகள் தெரிய, “தெரியல! ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னு இது வரைக்கும் புரியல!

கொஞ்ச நாளா, நான் நானாகவே இல்லை! சமயத்துல என் பேரே எனக்கு குழம்பி போகுது!” என்றவள், “உங்களுக்கு பிரபாவை தெரியுமா?” என்று கேட்டாள் நிலா.

“அது யாரு பிரபா; உன்னோட ஃப்ரெண்டா?” என்று கேட்டான் முகிலன் புரியாமல்.

“நிலாவோட ஹஸ்பண்ட்!” என்றாள் நிலா தெளிவாக.

“உன்னோட ஹஸ்பெண்டா?” என முகிலன் அதிர்ச்சி அடைய, “நான் நிலாதானே! அப்ப என்னோட ஹஸ்பண்ட் தான?” எனக் கேட்டு அவனைத் தெளிவாகக் குழம்பினாள் நிலா.

அவள் சொன்னதைக் கேட்டு, ‘ஆர்ட்டெரி, வென்ட்ரிகிள், எண்டோகார்டியம், மயோகார்டியம், எபி கார்டியம்’ என அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு பகுதியாக, பட் பட்டென வெடித்து ரத்தம் கசிவது போல், நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் முகிலன்.

பின்பு அவன் நிதானமாக யோசிக்க, அவன் அவளுடைய வீட்டை பார்த்த வரையில், அங்கே ஒரு ஆண் வசிப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

நிலா அங்கே தனியாகத்தான் தங்கி இருக்கிறாள் என்பதும் திண்ணம்.

அந்த வீட்டின் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில், அவள் அவளுடைய அம்மா, அப்பா மற்றும் தம்பி எனச் சேர்ந்து எடுத்துக்கொண்ட பெரிய அளவிலான புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. மற்றபடி அவள் கணவருடனான படம் எதுவும் இல்லை.

அவளைப் பார்க்கும்பொழுதும் கூட, திருமணம் ஆனவள் என்றே அவனால் நினைக்க இயலவில்லை.

ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பினான் முகிலன்.

அவன் குழம்பிய நிலையில் இருக்க, அவளே தொடர்ந்து பேசத் தொடங்கினாள்.

“எங்க ஊர் மதுரை. அப்பா பேங்க் எம்பிளாயீ; அம்மா ஹோம் மேக்கர்; ஒரு சிஸ்டர் இருக்கா; நான் ஐ.ஐ.டீ புவனேஸ்வர்ல ஃபைனல் இயர் படிக்கும்போது அங்கதான் பிரபாவை மீட் பண்ணேன்.

அவர் சிவில் சர்வீஸ் எக்ஸாம்ஸ்ல டாப்பர். ஒரு கெஸ்ட் லக்ச்சர் கொடுக்க எங்க காலேஜுக்கு வந்திருந்தார். அவரும் தமிழ்தான். அதனால அறிமுகமாகி, அப்படியே பிரெண்டாகிட்டோம்.

அது எப்படியோ லவ்வா டெவலப் ஆயிடுச்சு. அவருக்கு அம்மா அப்பா கிடையாது.

என்னோட அப்பா அம்மா கல்யாணத்து சம்மதிக்காததால, அவங்களை எதிர்த்துகிட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டோம்.

எனக்கும் சென்னையிலேயே நல்ல வேலை கிடைச்சுது. ரெண்டு பேருக்குமே நல்ல சம்பளம்.

லைஃப் ரொம்ப ஹாப்பியா போச்சு.  அம்மா, அப்பா, சிஸ்டர் இவங்க எல்லாரையும் விட்டு வந்த கவலையைத் தவிர, எனக்கு வேற எந்த குறையும் இல்லாம என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு.

அவருக்கு எந்த டிபார்ட்மெண்ட்ல வேலைனெல்லாம் எனக்கு சரியா தெரியல. அடிக்கடி டூர்ல இருப்பார்.

ஒன்ஸ் போனால் டூ, த்ரீ மந்த்ஸ் ஆகும் அவர் திரும்ப வர.

ஆறு மாசத்துக்கு முன்னாடி, கடைசியா டூர் போன சமயம், முதலில் கொஞ்ச நாள் வரைக்கும், தினம் ஒரு தடவ போன்ல பேசிடுவார்! பட் சில நாட்கள்ல அதுவும் நின்னு போச்சு.

அதுக்கு பிறகு, அவர் கிட்ட இருந்து எனக்கு போனே வரல.

அவரோட டிபாட்மெண்ட்ல விசாரிச்சா, அவரை பத்தி எந்த தகவலும் கிடைக்கல.

அவர் எங்க இருக்காருன்னே தெரியல.

எங்க ஃபர்ஸ்ட் அன்னிவெர்சரிக்கு அவருக்கு கிப்ட் கொடுக்க, ஒரு லக்ஸுரி பிளாட் வாங்கினேன்.

நாங்க அந்த வீட்டுக்கு குடி போகவே இல்லை.”

அவளது பார்வை, எல்லை இல்லாமல் எங்கோ வெறித்துக்கொண்டிருக்க, அவன் இதை எல்லாம் கேட்கிறானா என்பதைக் கூட கவனிக்காமல், சொல்லிக்கொண்டே போனாள் நிலா!

அவள் சொல்வது எதையுமே நம்பமுடியாமல் தவித்தவன், “மாமா உன்னை பத்தி வேற மாதிரி சொன்னாங்களே! உன்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் டெல்லில இருகாங்க இல்ல?” என அவன் கேட்க,

“அப்படியா சொன்னாரு? இல்லையே” என்று சொல்லிவிட்டு, இடது கையால் தலையை பிடித்துகொண்டாள் நிலா! அவளது கண்கள் கலங்கி இருந்தது.

“பிரபா காணாமல் போன பிறகு, தனிமையில் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி, த்ரீ மந்த்ஸ் முன்னால அம்மா அப்பாவை பார்க்க, காப் புக் பண்ணிட்டு, மதுரை போனேன். அவங்க என்னை வீட்டுக்குள்ளேயே விடல.

ஓரளவுக்கு மேல அவங்க கிட்ட கெஞ்ச முடியாமல், திரும்பிட்டேன்.

திரும்ப வரும்போது, அந்த கார் ஒரு ட்ராக் மேல மோதி, அந்த ஆக்சிடெண்ட்ல எனக்கு தலையில மேஜர் இஞ்சூரி ஆகி இருந்தது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

அங்கேயே கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல என்னை அட்மிட் பண்ணாங்க.

ஸ்கல் ஓபன் பண்ணி ஒரு சர்ஜரி கூட நடந்தது.

அதுக்கு பிறகு நடந்த எதுவும் எனக்கு சரியா ஞாபகத்துல இல்ல.

நான் இங்கே வந்ததுக்கு பிறகு வேலைக்கு கூட போகல.

என் அக்கௌண்ட்ல நிறைய பணம் இருக்கு. ஸோ பிரச்சனை இல்ல.

இந்த வீட்டுக்கு எப்படி குடி வந்தேன்னு கூட தெரியல.

நேத்து ஏனோ திடீர்னு சகனும்னு தோணிச்சு!

எனக்கு சரியா தூக்கம் கூட வர மாட்டேங்குது அதனால கூட இருக்கலாம்” என்றவள், ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லிவிட்டு, “இந்த மாத்திரையைப் போட்டால் தான், என்னை மறந்து தூங்குவேன்!

நேத்து மாமி வீட்டுல தூக்கமே வரல, அதனாலதான் இங்க வந்து மாத்திரை போட்டு தூங்கினேன்!” என்றாள் நிலா.

அவள் சுயநினைவை இழந்து, அப்படி தூங்கியதன் காரணம் புரிந்தது முகிலனுக்கு.

அந்த தூக்க மாத்திரையின் வேகம் இன்னும் கூட குறையவில்லை என்பதும் புரிந்தது அவனுக்கு.

அவளது நிலை கண்டு மனம் நொந்துபோனான் அவன்.

தொடர்ந்து, “எனக்கு பிரபாவை கண்டுபிடிச்சு தரீங்களா? ப்ளீஸ்!” என்று முகிலனிடம் கெஞ்சலாக, ‘ஒரு பேனாவை கண்டு பிடித்துக்கொடு’ என்பது போல் கேட்டாள் நிலா.

ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, “பிரபாவோட ஃபுல் நேம் என்ன?” என்று கேட்க, “சரியா ஞாபகம் இல்லை!” என்றாள் நிலா.

“சிஸ்டர்ன்னு சொன்னியே; அக்காவா இல்ல தங்கையா?” என அவன் கேட்க, நெற்றியை தேய்த்துக்கொண்டே, விழிகளை விரித்து அவனைப் பார்த்தவள், “அக்கான்னுதான் நினைக்கறேன்! தங்கையான்னும் தெரியலையே” என்றாள் அவள் குழப்பமாக,

அதில் பொறுமை இழந்து மேசையை ஓங்கித் தட்டியவன், “உண்மையிலேயே ப்ரபான்னு ஒருத்தன் இருந்திருந்தான்னா, அதுவும் உன்னை கல்யாணம் மட்டும் பண்ணியிருந்தான்னா, சத்தியமா செத்தே போயிருப்பான்!” என்றான் முகிலன் கோபத்துடன்.

அதற்கும் அவள் கண் கலங்கவே, தலையைக் கோதிக்கொண்டு, அவனது கோபத்தை அடக்கியவன், “நீ எந்த கம்பெனில வேலை செஞ்ச?” என்று கேட்க, அதற்கும் “ஞாபகம் இல்லை!” என்றவளை ஊடுருவிய பார்வை பார்த்தவன், “இவ்ளோ லாங்கா ஹேர் வெச்சிருக்கியே, எப்படி மைண்டைன் பண்ற? சின்னதா கட் பண்ணிட்டா ஈசியா இருக்கும் இல்ல?” என அவன் கேட்க, “இப்ப இது தேவையா?” என்றாள் நிலா நக்கலாக.

“இல்ல இதுக்காவது உருப்படியா பதில் சொல்றியான்னு பாக்கலாமேன்னுதான்!” என்றான் அவன் அதை விட நக்கலாக.

“ம்! எங்க அம்மா என்னை கொன்னுடுவாங்க! சான்ஸே இல்ல! இந்த பதில் போதுமா?” என்றாள் நிலா சலிப்புடன்.

“ஓகே! சில்!” என்றவன், “மதுரை அட்ரஸ் ஞாபகம் இருக்கா?” என அவன் கேட்க, “ம்ம்! ஞாபகம் இருக்கு. சொல்லவா?” என்றவளை, “வேண்டாம்! வாட்சப் பண்ணு!” என்று சொல்லிவிட்டு, மேசை மீதி இருந்த அவளது கைப்பேசியை எடுத்து  அவனது எண்னை அதில் பதிவு செய்து கொடுத்தான் முகிலன்.

அதன் பின்பு காஃபியை கலந்து இருவருமாக அருந்திவிட்டு, “நீ இப்படி தற்கொலை முயற்சியெல்லாம் செய்யக்கூடாது ரைட்!

இனிமேல் உனக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன் ஓகே!” என்று சொல்லிவிட்டு,

“என் பேர் கார்முகிலன், ஷார்ட்டா முகிலன்! ஃப்ரண்ட்ஸ் முகில்னு கூட கூப்பிடுவாங்க! இப்போதைக்கு  நான் ஒரு வெட்டி ஆபீசர்! லெட் அஸ் ஃப்ரண்ட்ஸ்!” என்றவாறு நட்புடன் அவன் கை நீட்டவும், தலையை ஆட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு, அவனது கையை பற்றிக் குலுக்கினாள் நிலா!

“இப்படி சோபால உக்காந்துட்டு தூங்காம, பெட்ல போய் படுத்துட்டு கம்ஃபர்டபிளா தூங்கு ஓகே!” எனக் குழந்தைக்குச் சொல்வது போல் சொல்லிவிட்டு, வீட்டைப் பூட்டிக்கொள்ளுமாறு அவளைப் பணித்துவிட்டு அங்கிருந்து சென்றான் முகிலன்.

***

அவனது அலுவலகம் வரை சென்று, மாலை ஐந்து மணி வாக்கில் வீடு திரும்பியவன் மாமாவை அழைத்துக்கொண்டு அவர்கள் குடியிருப்பின் பூங்காவிற்கு வந்தான்.

மாலை வேளை ஆனதால் சிறுவர்கள் நிறையப் பேர் அங்கே விளையாடிக் கொண்டிருந்தால் அந்த பூங்காவே பரபரப்பாக இருந்தது.

அங்கே இருந்த கல் மேடையில் இருவரும் உட்கார, நிலாவைப் பற்றிய   அனைத்தையும் மெல்லிய குரலில் மாமாவிடம் சொல்லி முடித்தான் முகிலனா.

அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையுடன் கேட்டு முடித்தவர், “இந்த சீனியர் சிட்டிசனோட பாவம் உன்னை விடுமா?

என்னை உளவு பார்த்து கிழவி கிட்டப் போட்டு குடுக்கற இல்ல?” எனச் சொல்லி மாமா சிரிக்க,

“மாமா! ப்ளீஸ் பீ சீரியஸ்!” என்றான் முகிலன் தீவிரமாக.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“ஓகே; சீரியஸ்!” என்றவர், “அந்த வீடு யார் பேர்ல இருக்குன்னு வேணா விசாரித்துப் பார்க்கலாமா. இந்த பில்டர் கிட்ட கேட்டால் கிடைக்கும்!” என்றார் மாமா.

“அதெல்லாம் பார்த்துட்டேன்.  பிரபஞ்சன்ங்கற பேர்ல இருக்கு.

இவளோட ஆதார் டீடெய்ல்ஸ்லாமும் எடுத்துட்டேன்.

அதுல பேர் நிலான்னு இருக்கு.

போட்டோல இப்ப இருக்கறத விட கொஞ்சம் குண்டா இருக்கற மாதிரி இருக்கா!

கைரேகை மட்டும் மேட்ச் பண்ணி பாக்கல!” என்றவன்,

“அவ பேசறதுலயே ஒண்ணோட ஒண்ணு சம்பந்தம் இல்லாம இருக்கு மாம்ஸ். ஸ்கல் ஓபன் பண்ணி சர்ஜரி செய்திருந்தால், அவளோட ஹேர் எப்படி இவ்வளவு லாங்கா இருக்கும்? சம்திங் பிஷ்ஷி!

எதுக்கும் நாளைக்கு அவளை மதுரைக்கு அழைச்சிட்டு போகலாமான்னு யோசிக்கறேன்!” என்றான் முகிலன் தீவிரமாக.

அவனை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்த ஜீகே மாமா, “இப்பவே ஒரு தடவை உன்னை நன்னா பார்த்துக்கறேன்டா. திரும்ப வரும்போது இப்படியே வரியோ இல்ல சட்டையை கிழிச்சிண்டு முழு பைத்தியமா வரியோ!” என்று சொல்லிவிட்டு, “எப்படியோ அந்த பொண்ணுக்கு நல்லது நடந்தால் சரி!” என்று முடித்தார் மாமா.

“என்னைப் பார்த்தால் உங்களுக்கு அவ்வளவு நக்கலா இருக்கு இல்ல? எல்லாம் பொறாமை!” என்றான் முகிலன் சிரித்தவாறே.

அதே நேரம் கையில் ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட்டுடன் அங்கே வந்த நிலா, அவர்களைப் பார்த்ததும், மாமாவின் அருகினில் வந்து உட்கார்ந்துகொண்டாள்.

“வாம்மா மின்னல்” என்றார் மாமா கிண்டலாக. “நான் ஒண்ணும் மின்னல் இல்ல, நிலா!” எனப் பதில் கொடுத்தாள் அவள்.

“கரெக்ட்டுதான் நிலா வெளிச்சத்துல தொடர்ந்து படுத்து தூங்கினால் பைத்தியம் பிடிக்குமாம்! அவங்க அப்பா சரியாதான் பேரு வெச்சிருக்காரு!” என்றான் முகிலன் ஆற்றாமையுடன்.

அவள் ஏதோ பேச எத்தனிக்கவும், அதற்குள் அவளை நோக்கி ஓடி வந்தது கறுப்பு நிற நாய் ஒன்று. அது வாலை ஆட்டிக்கொண்டு அவளுடைய காலில் வந்து உரசவும், கையில் வைத்திருந்த பிஸ்கட்டில் சிலதை அதற்கு போட்டாள் நிலா. அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக, குட்டியும் பெரிதுமாக நாய்கள் அவளைச் சூழ்ந்து கொள்ளவும், கையில் வைத்திருந்த பிஸ்கட் அனைத்தையும் அவற்றிற்குப் போடத்தொடங்கினாள் அவள். அவளைப் பார்ப்பதற்கே வேடிக்கையாய் இருந்தது இருவருக்கும்.

காலை அணிந்திருந்த அதே உடையில்தான் இருந்தாள் அவள். கூந்தலை அழகா பின்னலிட்டிருந்தாள். காதில் பெரிய வளையம் அணிந்திருந்தாள். நெற்றியில் சிறிய பொட்டு. அழகிய தேவதை போல இருந்தவளை, ரசிக்க மனம் ஒப்பவில்லை முகிலனுக்கு. ‘பிறன் மனை நோக்கா!’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டான் அவன்.

அவனது முகத்தை உற்றுப்பார்த்தார் மாமா! அன்று காலை அவன் கண்களில் நிறைந்திருந்த குதூகலம் முற்றிலுமாக வடிந்திருந்து, மொத்தமாக அங்கே வலி நிறைந்திருந்தது.

அவனை அப்படிக் கண்டதில் வருந்தியவராக, மாமா அவனைப் பார்த்து, “ஆர் யூ ஓகே பேபி!” என அவர் கேட்கவும், “ஏன் மாமா, இந்த வளையலை பொண்ணுங்க கைலதான போட்டுப்பாங்க, இவ ஏன் காதில தொங்க விட்டிருக்கா?” என்ற அதி முக்கியமான கேள்வியை முகிலன் மாமாவை நோக்கி கேட்கவும், “அடங்கவே மாட்டடா நீ!” என்று சொல்லிக்கொண்டே அவனுடைய முதுகில் தட்டினார் மாமா சிரித்துக்கொண்டே.

நிலா-முகிலன் 4

முகிலன் என்னதான் சிரித்து பேசுகிக்கொண்டிருந்தாலும், மனதிற்குள் வருந்துகிறானோ என்ற எண்ணம் தோன்றவும், “யாருக்கு யாருன்னு அந்த சர்வேஸ்வரன் எழுதி வெச்ச எழுத்தை யாராலும் மத்த முடியாது கண்ணப்பா! ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு போயிட்டே இருக்கணும்!” என மாமா இலகுவாகச் சொல்ல, அதற்குப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்த முகிலன், நிலாவைக் காண்பித்து ஜாடை செய்யவும், அது புரிந்தவராக, “ம்மா அழகி! நாளைக்கு மதுரைக்குப் போய் உங்க அம்மா அப்பாவை பார்த்துட்டு வாரலாமான்னு கேட்கறேன் இவன்?!” என்று கேட்டார் மாமா நிலாவிடம்.

அவரது அந்த கேள்வியில் முகம் இருண்டு போக, “வேண்டாம் யங் மேன்! அந்த அம்மாவாவது பரவாயில்லை, ஆனால் அவரு ரொம்பவே அடமன்ட்! ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு அங்கே போயிருந்தேன் இல்ல, அப்ப நான் எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா? கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணல! எனக்கு என்னவோ பிடிக்கல!” என்றால் நிலா கண்களில் வெறுமையுடன்.

“இல்ல! நாளைக்கு நாம மதுரைக்கு போறோம் டாட்! மார்னிங் அஞ்சு மணிக்கு, ஒரு செட் ட்ரெஸ்ஸ பாக் பண்ணிட்டு  நீ ரெடியா கீழ வந்திருக்கணும்! நைட்டு மாமா வீட்டிலேயே படுத்துக்கோ! நீ தூங்கினாலும் சரி! இல்லாம போனாலும் பரவாயில்லை! இட்ஸ் அன் ஆர்டர்!” என்றான் முகிலன் திட்டவட்டமாக.

அதில் சுறு சுறுவென கோபம் ஏற, “நீங்க யாரு மிஸ்டர் எனக்கு ஆர்டர் போட! என்னால வர முடியாது!” என அவள் பட்டென்று பதில் சொல்ல,

“உனக்கு பிரபாவைக் கண்டு பிடிக்கணும்னா நான் சொல்றத நீ கேட்டே ஆகணும்! அப்பறம் உன் இஷ்டம்!” என இலகுவாகச் சொல்லிவிட்டு, அவளது பதிலையும் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான் முகிலன்.

சென்னையில் இருக்கும் நாட்களில், விளையாட்டுத் தனத்துடன் வெகு இயல்பாக நடந்துகொள்ளும் முகிலனின் இந்த பிடிவாதமும் அழுத்தமும் மாமாவுக்கு புதியதாக இருக்கவும், அப்படியே அதிர்ந்துபோய் நின்றார் ஜீ.கே மாமா.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

***

இருள் மறையாத அதிகாலை, முகிலன் தன்னுடைய நீல நிற ‘ஓக்ஸ் வேகன் ஜெட்டா’வை வாகன நிறுத்தத்திலிருந்து கிளப்பிவந்து, அந்த குடியிருப்பின் வாயிலை அடைய,  குழப்பம், பயம் என அத்தனை உணர்ச்சிகளும் முகத்தில் நிறைந்திருக்க, அங்கே நின்றுகொண்டிருந்தாள் நிலா.

மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அவர்களை வழி அனுப்பவென அங்கே அவளுடன் நின்றுகொண்டிருந்தனர் ஜீ.கே மாமாவும், மாமியும்.

கையில் வைத்திருந்த சிறிய பயணப்பையுடன் காரின் பின் புற இருக்கையை நோக்கி நிலா போகவும், முன் புற கதவைத் திறந்தவாறே, “ஹேய்! உனக்கு என்ன மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பா?  என்னை உன்னோட ட்ரைவர்னு நினைச்சியா! ஒழுங்கா முன்னால வந்து உட்காரு!” என அவன் அதட்டலாகச் சொல்ல, “முகிலா! பாவம்டா அவ. இப்படி மிரட்றதா இருந்தா, நீ மட்டும் போய்ட்டு வா!” என்றார் மாமி கண்டணக் குரலில்.

அனைத்தையும் மாமா முந்தைய இரவிலேயே மாமியிடம் சொல்லியிருக்க அவருக்கும் ஓரளவிற்கு நிலாவின் நிலைமை புரிந்திருந்தது.

“வாங்க மேடம்! வந்து முன்னால உட்காருங்க மேடம்!” என மிகப் பணிவுடன் சொன்னவன், மாமியிடம், “இது போதுமா பியூட்டி!” என்றான் மேலும் பணிவான குரலில்.

“உன்னோட இந்த துஷ்ட தனத்துக்கு, என் கிட்ட அடிதான் வாங்க போற பாரு! ஒழுங்கா கிளம்பு! குழந்தையைப் பத்திரமா கூட்டிண்டு போ! அவ அப்பா அம்மா அவளை ஏத்துண்டன்னா, அங்கேயே விட்டுட்டு வா! இல்லனா நாம பார்த்துக்கலாம்” என்றார் மாமி மிகவும் கரிசனத்துடன்.

அதற்குள் நிலா முன் பக்க இருக்கையில் வந்து அமர்ந்திருக்க, ‘பியூட்டி! அவங்க இந்த குழந்தையோட அப்பா அம்மாவா இருக்க வாய்ப்பே இல்ல! அங்கே போனால் என்னென்ன காமெடியெல்லாம் நடக்க போகுதோ; ஓ மை கடவுளே!’ என மனதில் எண்ணியவன்,

“நீங்க சொல்லிட்டீங்க இல்ல அப்படியே செஞ்சிடலாம் பியூட்டி! பை!” என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் விடை பெற்று காரை கிளப்பினான் முகிலன்.

அதே நேரம், அங்கே வந்து நின்ற கால் டாக்ஸியிலிருந்து இறங்கி, “ஸ்டாப்! ஸ்டாப்!” என்றவாறே பயணப் பெட்டியை இழுத்துக்கொண்டு, முகிலனின் வாகனத்தை நோக்கி ஓடிவந்தான் ஒரு நெடியவன்.

அவனைப் பார்த்ததும் இன்ஜினை அணைத்துவிட்டு, “கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல!” என முணுமுணுத்தவாறு தலையில் கையை வைத்துக்கொண்டான் முகிலன்.

அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி ஒரு புரியாத பார்வை பார்த்தாள் நிலா!

“ஹேய்! கதிர்! வாடா வா! எப்படி இருக்க?” என மாமா மிகவும் குதூகலமாக அவனை வரவேற்க, அவர்கள் அறியாமல் வாயை மூடிக்கொண்டு நக்கலாகச் சிரித்தவாறே மாமி, முகிலனுக்கு அருகில் வர, கண்ணாடியை இறக்கினான் முகிலன்.

அவனிடம் குனிந்து, “உன்னை வெறுப்பேத்தறாராம் மாமா! நீ கண்டுக்காத, இவனை நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு! என்றார் மாமி.

அதற்குள் மாமாவால் கதிர் என அழைக்கப்பட்டவன், யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல், அவனுடைய பயண பெட்டியின் நீண்டிருந்த பிடியைச் சுருக்கி,  டிக்கியை திறந்து அதில் திணித்து விட்டு, காரின் பின் கதவைத் திறந்து, “ஹை! பிரின்சஸ்! அது என்னை மாதிரி அடிமைகள் உட்காரும் சீட், நீங்க இங்க வந்து உட்காருங்க!” என சொல்லிக்கொண்டே முன் புற கதவைத் திறக்க,

“டேஏஏஏய்! இப்ப மேனர்ஸ் இல்ல! அது இல்ல; இது இல்லன்னு குஷி ஜோ அக்கா மாதிரி ஆரம்பிச்சான்னா, மதுரை போய் சேரும் வரைக்கும் அவ நிறுத்த மாட்டா…டா. இவன் வேற சும்மா இருக்கற சிங்கத்தை சீண்டி பாக்கறான்!” என முகிலன் கடிந்துகொள்ள,

குதூகலத்துடன், “அண்ணா! நாம மதுரை போறோமா!” எனக் கேட்டான் கதிர்.

“நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் போறோம்! நீ ஏன் உன்னையும் கூட சேர்த்துக்கற?” என முகிலன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதிர் முன் புற இருக்கையில் அமர்ந்திருந்தான். பின்புறமாக இடம் மாறியிருந்த நிலா, அவனை முறைத்துக்கொண்டு உர்ர்! என உட்கார்ந்திருந்தாள்.

நொந்தே போனவனாக, தலையில் அடித்துக்கொண்டான் முகிலன்.

அதைப் பார்த்து, “டேய் இது வெறும் டீசர்தான்! இனிமேல்தான் இருக்கு ஃபுல் என்டர்டைன்மென்டே!” என்றார் மாமா கிண்டல் ததும்பி வழியும் குரலில்.

முழங்கையால் மாமாவின் விலாவில் இடித்தவாறே, “ஏன்னா நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா? பாவம்னா அவன்! ஏற்கனவே அவ அவனை ஒரு வழி பண்ணிண்டு இருக்கா! போறாக்குறைக்கு இவன் வேற சேந்துண்டான்னா அவ்ளோதான்” என்றார் மாமி காட்டமாக.

“கவலையே படாதடீ! அவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்! ஏன்னா உன் அபிமான புத்ரன் ரொம்போ நல்லவன்!” என மாமாவின் கிண்டல் தொடர,

“கர்மம்! கர்மம்! உங்க பேத்தி கூட சேர்ந்துண்டு, எப்ப பாரு டிக் பண்றேன் டொக் பன்றேன்னு,  வடிவேலு டயலாக்கலாம் பேசிண்டு, ரொம்ப கெட்டு போய் இருக்கீங்கோ! ஆத்துக்கு வாங்கோ, உங்களுக்கு இருக்கு!” என்று நொடிந்துகொண்டு, “கண்ணப்பா! ஜாகர்த்தையா போயிட்டு வாடா! பத்திரம்!” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றார் மாமி!

“ஜோக்ஸ் அபார்ட் முகிலா! பத்திரமா போயிட்டு வா!” என்றார் மாமாவும் முழு அக்கறையுடன்.

குழப்பமும் குதூகலமுமாகத் தொடங்கியது அவர்களுடைய அந்த பயணம்.

***

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“என்னடா இந்த நேரத்துல இங்க வந்து குதிச்சிருக்க?” என முகிலன் கேட்க, “நேத்து நைட், உங்களை பார்க்கணும்னு மனசுல ஒரு கிங்பிஷர் வந்து கூவிச்சு! உடனே ஸ்பைஸ் ஜெட்ட பிடிடுச்சு இங்கே வந்துட்டேன்!” என்றான் கதிர் கொட்டாவியுடன்.

“டேய் பாவி! என் பக்கத்துல உட்கார்ந்து தூங்கித் தொலைக்காத!அப்பறம் மதுரைக்கு போகாமபோட்டோம் நேரா பரலோகம்தான்!” என்ற முகிலன் தொடர்ந்து, “எல்லாருக்கும்  மனசுல குயில்தான் கூவும், உனக்கு மட்டும் எப்படிடா கிங்பிஷர் கூவுது!” என நக்கலாக கேட்க, “அது மனசுல ஃபிகர நினைச்சா குயில் கூவும், உங்கள மாதிரி முரட்டு சிங்கிள நினைச்சா கிங்பிஷர்தான கூவும்” என்றான் கதிர் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

கதிர் வளவளத்துக்கொண்டே வர, நிலா ஒரு வார்த்தை கூட பேசாமல் உட்கார்ந்திருக்கவும், “நானே மிங்கிள் ஆகணும்னு நினைச்சாலும், அது நடக்கவே நடக்காது போல இருக்கே! எல்லாமே கால கொடுமைடா கதிரவா!” என்றவாறு ‘ரியர் வ்யூ’ கண்ணடியைச் சரி செய்வது போல அவளுடைய முகத்தைப் பார்த்தான் முகிலன்.

எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டாமல்,  அமைதியாக உட்கார்ந்திருந்தாள் அவள்.

அவனுடைய செய்கையைக் கவனித்த கதிர் மட்டும், தொண்டையை செருமிக்கொண்டு, “நடக்கட்டும்! நடக்கட்டும்!” என்றான் விஷமமாக.

அதில் பொறுமை இழந்த முகிலன், “ஜிம்முக்கு போய் பாடியை மட்டும் நல்லா வளர்த்து வெச்சிருக்க, மூளை கொஞ்சம் கூட வளரல.

அதனாலதான் மூணு அட்டம்ட் அடிச்சும் உன்னால இன்னும் யூபிஎஸ்சி கிளியர் பண்ண முடியல.

எப்ப பாரு கேர்ள் ஃப்ரண்ட்ஸ் பப்; டிஸ்கோ தே..ன்னு ஊரை சுத்திட்டு, டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.

இதுல என்னையே ஓட்டுறயா நீ!

வெளுத்துடுவேன் பாத்துக்கோ!” என எறிந்து விழ, ஒரு பெண்ணின் எதிரில் அவன் இப்படிப் பேசவும் தர்ம சங்கடமாகப் போனது கதிருக்கு.

அந்த எண்ணத்தில் அனிச்சை செயலாக அவன் பின்புறம் திரும்ப, மிகவும் முயன்று நிலா சிரிப்பை அடக்குவது புரிந்தது. அதை உணர்ந்ததும் அவனுடைய முகம் தொங்கிப் போனது.

அவனைப் பார்க்க முகிலனுக்கே பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் கதிரை சமாதானம் செய்யும் விதமாக அவன் எதாவது பேசினால், அவனுடைய அட்டகாசம் எல்லை மீறும் என்பதை நன்கு அறிந்திருக்கவும், அப்படியே விட்டுவிட்டான் அவன்.

வண்டி செங்கல்பட்டைக் கடக்கவும்,அதன் வேகம் நூற்றிநாற்பதை தாண்டி பறந்தது. சற்று நேரம் அங்கே இறுக்கமான மௌனமே குடிகொண்டிருக்க, “பசிக்குது, எதாவது சாப்பிட்டுட்டு போகலாமா?” எனக் கேட்டு அந்த மௌனத்தைக் கலைத்தாள் நிலா.

சில நிமிடங்கள் பயணித்து, ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்தினான் முகிலன். மணி காலை எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த உணவகத்தின் உள்ளே நுழைந்ததும், வேண்டிய உணவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்க, “மூன் மேடம்! உங்களுக்குப் பேசவே தெரியாதா? நானும் கார்ல ஏறினதுல இருந்து பார்த்துட்டே இருக்கேன், சைலன்ட் மோட்லேயே வந்துட்டு இருக்கீங்க! எங்க கிளவுட் அண்ணா வேற பயங்கர வைப்ரஷன் மோட்ல இருக்காரு!” என்று கேட்டு அதுவரை கொஞ்சம் அடங்கி இருந்த கதிர், மறுபடியும் அவனுடைய சேட்டையை ஆரம்பித்தான்.

அதற்கு முகிலன் அவனைப் பார்த்து முறைக்கவும், “அண்ணா முக்கியமா எதையாவது டார்கெட் பண்ணிட்டு இருக்கீங்களா? ஒய் திஸ் மச் சீரியஸ் என்றவன்,

அங்க அப்பா செம்ம திட்டு. உங்களையும் அண்ணாவையும் கம்பேர் பண்ணி கொல்றாரு.

அவரு பெரிய ஆபீஸரா இருந்தாருன்னா, என்னை ஏன் பரேட் எடுக்கணும்.

நான் என்ன வெச்சுட்டா வஞ்சனை பண்றேன்!

அண்ணா அவனோட படிப்பு,கேரியர், பொண்டட்டி புள்ளகுட்டின்னு வெளி நாட்டுல போய் செட்டில் ஆகிட்டான். நீங்க பாட்டுக்கு திடீர் திடீர்னு மாயமா மறைஞ்சுடுவீங்க.

நான் இங்க வந்ததே நீங்க இப்ப இங்க இருக்கறதாலதான். உங்க கூட இருந்தால் ஜூன் எக்ஸாம்க்கு ரிலாக்ஸ்டா பிரிப்பர் பண்ண முடியும்னுதான்.

அவர்தான் அப்படி பண்றாருன்னா, நீங்களுமா?” என கதிர் புலம்பலில் இறங்க, “ரிலாக்ஸ் கதிர்! நீ இங்க வரப்போறத என் கிட்ட முன்னாடியே இன்பார்ம் பண்ணி இருக்கலாம் இல்ல? நான் உனக்கு எதாவது அரேன்ஞ் பண்ணி இருப்பேனே; என் கூட சேர்ந்து இப்படி அலைய வேண்டாமே!” என்றான் முகிலன்.

“இல்லணா! ஐ என்ஜாய் திஸ் லாங் ட்ரைவ்!” எனக் கதிர் சொல்ல, “நாங்க என்ன ஜாலி டூரா போறோம் என்ஜாய் பண்ண! நானே கடுப்புல இருக்கேன்!” என்றான் முகிலன் நிலாவைப் பார்த்துக்கொண்டே.

அவள் அதைக் கண்டு கொள்ளாமல், உணவிலேயே கவனமாய் இருக்க, “அந்த பொண்ணுக்கு காது கேக்காதா?” என்று கதிர் முகிலனிடம் கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட, “எனக்குக் காது நல்லாவே கேட்கும். உனக்குத்தான் வாய் கொஞ்ச நேரம் கூட சும்மாவே இருக்காது போல இருக்கு.

நீ இதே மாதிரி லொட லொடன்னு பேசிட்டே வந்தேன்னு வை! லோக்கல் அனஸ்தீசியாவே கொடுக்காமல் வாய்ல அப்படியே ஸ்வீச்சர்ஸ் போட்டுடுவேன். ஜாக்கிரதை!” என அவள் மிரட்டலாகச் சொல்ல, “மேடம்க்கு பெரிய எண்ட்டு சார்ஜன்னு மனசுல நினைப்பா?” என அவன் பதிலுக்கு எகிற, “என்ன எண்ட்டா!” என அவள் கேட்கவும், “அமாம் காது மூக்கு டாக்டரைத்தான் சொன்னேன். நீ கமல் படமெல்லாம் பார்த்தது இல்லையா?” என அவளை விடாமல் வாரினான் கதிர், அவர்கள் சண்டையில் தலையைப் பிடித்துக்கொண்டான் முகிலன். அதைப் பார்த்ததும்தான் அடங்கினர் இருவரும்.

அவர்கள் உணவு உண்டு முடித்து, பிறகு அவர்களுடைய பயணத்துடன் சேர்ந்து, இருவரின் சண்டையும் தொடர்ந்தது.

நிலா அவளுடைய பெற்றோருடைய முகவரி  எனக் கொடுத்திருந்த மதுரை திருமங்கலத்தில் இருக்கும்,அந்த வீட்டிற்கு ஒரு வழியாக மதியம் ஒன்றரை மணி வாக்கில் வந்து சேர்ந்தனர் மூவரும்.

ஓரளவிற்கு அந்த இடத்தை அடைய அவளே சரியாக வழியும் காண்பித்தாள்.

ஆனாலும் அவர்கள் அந்த வீட்டை அடைந்ததும், வீட்டிற்குள் வர அவள் முற்றிலும் மறுத்துவிட, அவளை காரிலேயே விட்டுவிட்டு, முகிலனும் கதிரும் அந்த வீட்டிற்குள் சென்றனர்.

சிறிய தோட்டத்தின் நடுவில், அழகாக அமைந்திருந்தது குட்டி பங்களா போன்றிருந்த அந்த தனி வீடு.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவைக் கொஞ்சமாகத் திறந்து எட்டிப் பார்த்தார்.

“இங்க நிலாவோட அம்மா?” என முகிலன் கேட்க, அவனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த அந்த பெண்மணி சற்றே தயக்கத்துடன், “நான்தான்; நீங்க யாரு?” எனக் கேட்க,

நாங்க சென்னைல இருந்து வரோம்மா! அங்க நிலா இருக்கும் பிளாட்லதான் நானும் குடி இருக்கேன்!” என அவன் சொல்ல, அதே சமயம், ஓட்டி வந்த புல்லட்டை ஓரமாக நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி வந்தார் ஐம்பதைக் கடந்த வயதில் இருக்கும் ஒருவர்.

அவர் வந்த உடனேயே, கதவை நன்றாகத் திறந்து, அவருக்கு வழி விட்டு விலகி நின்றார் அந்த பெண்மணி. அவருடைய அந்த உடல் மொழியிலேயே தெரிந்து போனது அப்பா என நிலா குறிப்பிட்ட அந்த நபர் அவர்தான் என்று.

அந்த பெண்மணி முகிலன் கூறியவற்றை அவரிடம் சொல்ல, “செத்துப்போனவள பத்தி கேட்டுகிட்டு, எதுக்காக இங்குட்டு வந்திருக்கானுங்களாம்!” என அவர் கேட்கவும்,

முகிலனுக்கு கோபம் சுள்ளென்று ஏறினாலும், அதை அடக்கியவனாக, “அவங்க உங்களுக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டது தப்புதான். அதுக்காக நீங்க இப்படி பேசக்கூடாது.  உங்க பொண்ணு மேண்டலி ரொம்ப டிஸ்டர்ப்டா இருகாங்க. உங்க கூட இருந்தால்தான் அவங்க நார்மல் ஆவாங்க!” என அவன் அடுக்கிக்கொண்டே போக, ‘முகிலன் அண்ணாவா இவ்ளோ பொறுமையா பேசறாங்க?!’ எனக் கதிர் வை பிளந்து நின்றான்.

“டேய் என்னடா பெருசா பேச வந்துட்ட! எதாவது இப்படி செஞ்சு பணம் பார்க்கலாம்னு கிளப்பி இருக்கீங்களா! செத்தவளை எப்படிடா நாங்க கூட வெச்சுக்க முடியம்?” என அவர் மரியாதையைக் கைவிட்டவராக ஏக வசனத்தில் பேசவும்,

“யோவ் பெரிய மனுஷனா தெரியரியே! பாங்க்ல வேலை செய்யரையே கொஞ்சமாவது மரியாதையை தெரிஞ்சிருக்கும்னு பார்த்தேன்! இவ்ளோ கேவலமா நடந்துக்கற! உயிரோட இருக்கற பெத்த பொண்ணையே செத்துட்டான்னு பேசற! அப்படி என்ன உனக்கு ஜாதி வெறி?” என முகிலன் பதிலுக்குக் கோபத்துடன் பாயவும், குறுக்கே வந்த அந்த பெண்மணி, “தம்பி என் பொண்ண பறிகொடுத்துட்டு, இன்னும் கூட அந்த துக்கம் எங்களுக்கு போகலப்பா! எங்க விருப்பம் இல்லாம யாரையோ கட்டிக்கிட்டு போனதால அவளைத் தலை முழுகி விட்டுட்டோம், ஜாதி வெறில அவளை கொல்லணும்னு எல்லாம் நாங்க நினைக்கல! ஜாதி ஜனம் மத்தியில அசிங்க பட்டு நொந்து போயிருக்கோம் தம்பி. எங்களை தயவு செஞ்சு விட்டுடுங்க!” என கண்ணீர் வடிக்கத்தொடங்கினார் அவர்.

அவருடைய கண்ணீரைக் கண்டு கொஞ்சம் இளகியவன், “உங்க பெண்ணை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா!” என அவன் கேட்க, அவர் கணவரின் முகத்தைப் பார்க்கவும், “நான் ஒரு போலீஸ் ஆபிசர்! தயங்காம சொல்லுங்க!” என அவன் சொல்ல,

“என் மக பேரு நிலமங்கை!” என்றார் அந்த பெண்மணி.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

நிலா-முகிலன் 5

முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. “நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ஸ் எல்லாரும்  நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல.

ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ ஒருத்தனை காதலிக்கறேன்னு வந்து நின்னுச்சு.

சாதி மாறி, அதுவும் பெத்தவங்க கூட இல்லாத ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க நாங்க சம்மதிக்கல.

எங்களுக்கு தெரியாம அவனையே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு வந்து  எங்க சனங்க முகத்துல  முழிக்க முடியாம செஞ்சுடிச்சு பாவி மக. அதோட அவளைத் தலை முழுகி விலக்கி வெச்சுட்டோம்.

எங்க மூத்த மகள இங்கனையே பக்கத்து ஊருல கட்டி கொடுத்திருக்கோம். இவ செஞ்ச வேலையால அவ குடும்பத்து ஆளுங்க அவளை எங்க வீட்டுக்கே வர விடல.

மூணு மாசத்துக்கு முன்னாடி, இங்க ஒரு நாள் புயலும் மழையுமா இருந்துச்சே, அன்னைக்கு மங்கை இங்கே வந்துச்சு! என் புருஷனை கொஞ்ச நாளா காணும்! மனசு கஷ்டத்துல இருக்கேன்! உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணிச்சு! அதுதான் இங்க வந்திருக்கேன்னு!’ செல்லிச்சு.

உங்க ஆசிர்வாதம் இல்லாம கல்யாணம் செஞ்சுகிட்டதாலதான இப்படி கஷ்ட ரபடுறேன்.

எங்களை மன்னிச்சிடுங்கன்னு கதறிச்சு.

அவங்க அப்பா அவளை வீட்டுக்குள்ளேயே நுழைய விடல.

‘அவனோட சோலி முடிஞ்சதும் உன்னை கை கழுவி விட்டுட்டான். இனிமேல் திரும்ப வர மாட்டான்.

உன்னால போன மானம் மரியாதைய மீட்டெடுக்க போராடிட்டு இருக்கோம். பெரியவ வீட்டுல இப்பதான் கொஞ்சம் இறங்கி வராங்க. உன்னை மறுபடியும் சேர்த்துக்கிட்டா உங்க அக்கா நெலம மோசமா போகும்.

உனக்கு நல்ல படிப்பு வேலை எல்லாமே அமைஞ்சிருக்கு. எப்படியோ பிழைச்சு போ.

இங்க வந்து எங்க நிம்மதியைக் கெடுக்காத’ன்னு ஆத்திரமா பேசி கதவை அடைச்சிட்டாங்க.. அவங்களுக்குப் பயந்துகிட்டு நானும் அப்படியே இருந்துட்டேன்.

ஒரு லெவலுக்குமேல் கெஞ்சிகிட்டு இருக்க அவ விரும்பல போல, முகத்தை துடைச்சிகிட்டு அதே கார்லயே திரும்பி போயிடிச்சு என் மக. அப்ப மணி ராத்திரி ஏழு இருக்கும்.

பத்து மணி வாக்குல கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்து ஒருத்தங்க போன் பண்ணி மங்கைக்கு ஆக்சிடண்ட் ஆயிடிச்சு, தலையில அடி பட்டிருக்கு. உடனே ஆப்பரேஷன் செய்யணும். அதுக்கு முன்னால உஙகளை ஒரு முறை பார்க்கணும்னு உங்க மக ஆசை படறாங்க. தயவு செஞ்சு வந்து பாருங்கன்னு’ சொன்னாங்க.

ஆனால் அவளை போய் பார்க்க அவங்க அப்பா விருப்பப்படல.

என்னையும் போக அனுமதிக்கல” என்று சொல்லிவிட்டு, முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினார் அந்த பெண்மணி.

அவரது கணவரின் முகம் அவமானத்திலும் வேதனையிலும் இறுகிப் போய் இருந்தது.

முகத்தில் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான் முகிலன்.

தொண்டர்ந்தார் அந்த பெண்மணி.

“அடுத்த நாள் காலையில, இவங்க வேலைக்கு கிளம்பிட்டு இருக்கும் போது இங்க ஒரு பொண்ணு வந்துச்சு.

அத பார்க்கும் போது ராவெல்லாம் தூங்காத மாதிரி கண்ணெல்லாம் செவந்து போய் இருந்துது.

‘நீங்கதான் நிலாவோட அம்மாவா’ன்னு கேட்டுது அந்த பொண்ணு.

அதுக்குள்ளே இவங்க, ‘நிலானு யாரையும் எங்களுக்குத் தெரியாது. நீங்க போகலா’ம்னு கோவமா சொன்னாங்கஃ.

‘நீங்க அப்படியெல்லாம் சொல்ல கூடாது. ரொம்ப பெரிய ஆபத்துல இருந்து பிழைச்சிருக்காங்க உங்க மக. அவங்களுக்கு ரொம்ப பெரிய ஆபரேஷன் நடந்து முடிஞ்சிருக்கு. எப்படியும் மதியத்துக்கு மேல கண்ணை முழிச்சிடுவாங்க நிலா; அந்த நேரத்துல நீங்க அவங்களுக்கு முன்னால நின்னா, அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்.’ அப்படினு பொறுமையா அந்த பொண்ணு சொல்லிச்சு.

ஆனா அதுக்கு, ‘அதுதான் ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சு போச்சு இல்ல! உயிருக்கு ஆபத்து இல்லைதானே.  இப்ப நீங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க மங்கையோட அப்பா.

அதுக்கு பொறவும் கெஞ்சி பார்த்துட்டு, இவங்களை சம்மதிக்க வைக்க முடியாம, ‘நீங்களாவது கொஞ்சம் சொல்லி, அவரை அங்க அழைச்சிட்டு வாங்கம்மா’ன்னு சொல்லிட்டு போயிடிச்சு தம்பி அந்த பொண்ணு.

பொறவு, அழுது புலம்பி கெஞ்சி இவங்களை சம்மதிக்க வெச்சு அங்க ஹாஸ்பிடலுக்கு போனேன்.

ஆனா அங்க, என் மகளுக்கு பிட்ஸ் வந்து இறந்துடிச்சுன்னு சொன்னாங்க.

மொத நா உசுரோட, ஓவியமா பார்த்த எங்க மகளை, உயிரில்லாத பிணமா வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தோம் தம்பி!” என்று சொல்லி தேம்பினார் அந்த பெண்மணி.

அதன் பின் வீட்டிற்குள் அழைத்துச்சென்று நிலமங்கையுடைய புகைப் படத்தையும் முகிலனுக்குக் காண்பித்தார் அவர்.

அதைத் தன கைப்பேசியில் பதிய வைத்துக்கொண்டு, நிலமங்கையுடைய தாய், தந்தை இருவரையும் வீட்டின் வெளிப்புறம் அழைத்து வந்த முகிலன், காரிலேயே சரிந்து உறங்கிய நிலையிலிருந்த நிலாவை அவர்களிடம் காண்பித்து, “இந்த பொண்ணை உங்களுக்கு தெரியமா?” என்று கேட்டான்.

அவளைப் பார்த்ததும் அதிர்ந்தனர் இருவரும். “ஐயோ தம்பி! இந்த பொண்ணுதான் தம்பி, மங்கை இறந்துபோன அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்துச்சு! இந்த பொண்ணுதான் அன்னைக்கு என் மகளுக்காக அவ்வளவு கெஞ்சிட்டு போச்சு!” என்றார் அதிர்ச்சி விலகாமல்.

“இந்த பொண்ணை பத்தின விவரம் எதாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான் முகிலன்.

“ஐயோ! அன்னைக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் இவளை நாங்க பார்த்திருக்கோம் தம்பி. மத்தபடி இந்த பொண்ணு யாருன்னே எங்களுக்கு தெரியாது.

இந்த பொண்ணுக்கு எதாவது மேலுக்கு சரி இல்லையா? இல்ல வேற ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார் அந்த பெண்மணி அக்கறையுடன்.

அதுவரை அடங்கி அமைதியை கடைபிடித்தவனாக இருந்த  கதிர் “பிரச்சினை இந்த பொண்ணுக்கு இல்ல! எங்க அண்ணாவுக்குத்தான்” என்றான் தீவிரமாக.

“ஏன்?” என்று அந்த பெண்மணி கேட்க, “போன மாசம்தான் இந்த பொண்ணுக்கும், எங்க அண்ணாவுக்கும் கல்யாணம் ஆச்சு.

பிறகுதான் தெரிஞ்சுது,அவங்களுக்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு! அதாவது சந்திரமுகி படத்துல ஜோதிகா வருவாங்க இல்ல, அந்த மாதிரி!

எப்ப கங்காவா இருப்பாங்க; எப்ப சந்ரமுகியா மாறுவாங்கன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது! எங்க அண்ணாவை வெச்சு செய்யறாங்க!” என்று அவன் கொஞ்சமும் சிரிக்காமல் சொல்லவும், அதை உண்மை என்றே நம்பி,

“அடப்பாவமே நல்ல டாக்டரா காமிங்க! இல்லன்னா பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு வேண்டிக்கோங்க; சரியாபோயிரும்” என்று அவர் உருக்கமாகச் சொல்ல, “ஆமாங்க! அப்படியே பேய் ஓட்டற பூசாரி யாராவது தெரிஞ்சா சொல்லுங்க; அவரையும் பார்த்துடலாம்” என்று கதிர் அலட்டிக் கொள்ளாமல்  சொல்ல, அந்த பெண்மணி முகிலனை ஒரு பரிதாப பார்வை பார்த்து வைத்தார்.

அதை உணர்ந்து, “ஷட் அப் கதிர்!” என ஒரு முறைப்புடன் அவனை அடக்கிய முகிலன், “ஒண்ணும் இல்லமா! ஷி இஸ் ஃபைன்! உங்க மகளை நினச்சு ரொம்ப பீல் பன்றாங்க! அவ்வளவுதான்!” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்துட்டேன்! மன்னிச்சிடுங்க!” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டு, காரில் ஏறி அமர்ந்துகொண்டான் முகிலன்.

கதிர் அவனுக்கு அருகில் வந்து உட்கார, அப்பொழுதுதான் நினைவு வந்தவனாக, “மிஸர்ஸ் மங்கையோட ஹஸ்பண்ட் நேம் என்ன?” என்று அவன் கேட்க, அந்த பெண்மணி தயக்கத்துடன் கணவரின் முகம் பார்க்கவும், “பிரபஞ்சன்!” என்றார் அவர் வெறுப்புடன்.

அந்த நொடி முகிலனின் கண்களில் ஒரு மின்னல் வெட்டி மறைய, அதை நன்றாகக் கவனித்தான் கதிர்.

பின்பு அவர்களிடம் விடைபெற்று காரை உயிர்ப்பித்தவாறே, “அவ தூங்கற தைரியத்துலதான இந்த ஆட்டம் ஆடுற! நீ பேசினத மட்டும் அவ கேட்டிருந்தா வைய்யி, ஒரே லக லக லக தான் தெரிஞ்சுக்கோ!” என்றான் முகிலன் கடுப்புடன்..

பின் புறம் திரும்பி நிலாவைப் பார்த்தவாறு கதிர், “சுத்தி இவ்ளோ நடக்குது, இவ என்னடான்னா பொம்பள கும்பகர்ணன் மாதிரி இப்படி தூங்கிட்டு இருக்கா? எனக்கு மண்டையே வெடிச்சிரும் போல இருக்கு. இப்பவாவது சொல்லுங்க அண்ணா! யாருன்னா இவ!” என மூச்சே விடாமல் பேசியவாறு, கேட்க,

“இவதான் உன்னோட வருங்கால அண்ணி! அவ இவனென்று சொல்றதையெல்லாம் இதோட நிறுத்திக்கோ! என்ன புரியுதா!” என்றான் முகிலன் உறுதியான குரலில்.

“ஓஓஓஓ ஹோஓஓ! அவளுக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் சொல்லியும், நீங்க சும்மா இருக்கும் போதே நினைச்சேன்!

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

எலி ஏன் ஏரோபிளேன் ஓட்டுதுன்னு இப்போ நல்லாவே புரியதுங்கண்ணா! புரியுது! நீங்க நடத்துங்கண்ணா நல்லா நடத்துங்க!” என அவன் முகிலனை ஓட்ட தொடங்கவும், அவன் புறம் திரும்பி அவனை முறைத்தவன், “அடங்குடா! இல்லன்னா போட்டு தள்ளிடுவேன் ஜாக்கிரதை!” என்றவாறு கைப்பேசியுடன் இணைக்கப்பட்டிருந்த ‘கார் கிட் ப்ளூ டூத்’ மூலம் ஒரு தொடர்பு என்னை அழுத்த, எதிர் முனையில் “டேய் மாமூ! உயிரோடதான் இருக்கியா! என்னையெல்லாம் ஞாபகம் வெச்சி போன் பண்ணியிருக்க!” என மகிழ்ச்சியும் நக்கலுமாக ஒலித்த குரலில், “அடங்குடா எரும!” என்றான் முகிலன் அதே உற்சாகத்துடன்.

நிலா-முகிலன் 6

கதிர் கேள்வியுடன் முகிலனை ஏறிட, “ஜெய்! என்னோட பேட்ச் மேட்!” என உதட்டசைவில் அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, “டேய் மச்சி எங்கடா இருக்க?” என்று கேட்க, “ஆஃபீஸ்லதாண்டா மாப்பிள! ஏண்டா! எதாவது முக்கியமான விஷயமா?” என்று அந்த ஜெய் கேட்கவும்,

“உன் ஆபிஸ் வசல்லதான் இருக்கேன்டா மச்சி!” என்றான் முகிலன். அப்பொழுதுதான் கவனித்தான் கதிர், அவர்கள் வந்த வாகனம், அந்த அலுவலகத்தின் வளாகத்தினுள் நுழைந்துகொண்டிருந்தது.

வண்டியை ‘பார்க்கிங்’ பகுதிக்குள் ஓட்டி சென்று நிறுத்திவிட்டு, “உங்கண்ணன் கேசவன் மாதிரியே, ஜெய் என்னோட பெஸ்ட் ஃப்ரென்ட். என்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சவன். இப்ப இங்கதான் போஸ்டிங்ல இருக்கான்” என்றவாறே,  முகிலன் காரிலிருந்து இறங்க, மறுபுறம் கதிரும் கீழே இறங்கினான். அதற்குள் அங்கேயே வந்துவிட்டான் ஜெய்.

முகிலனைக் கண்டதும் நட்புடன் அவனை அணைத்துக்கொண்டு,”அம்மா, அப்பா, அக்கா, மாம்ஸ், குட்டீஸ், எல்லாரும் எப்படி இருக்காங்க?” என ஒரே மூச்சில் விசாரிக்க, “நல்லா இருக்காங்கடா! உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருகாங்க? உன் ஜுனியர் எப்படி இருக்கான்?” எனக் கேட்டான் முகிலன்.

“சூப்பரா இருக்கான்! ஒய்ஃபும் பையனும் அம்மா அப்பா கூட ஊருல இருகாங்க. எல்லாரும் இங்க வந்து இருந்துட்டு டூ டேஸ் முன்னாலதான்டா ஊருக்கு போனாங்க!” என்றான் ஜெய் பெருமையுடன்.

உடனே, “மீட் கதிரவன். கேசவன் தெரியும் இல்ல, அவனோட சொந்த தம்பி! எனக்குத் தத்து தம்பி! பித்து தம்பி எல்லாம்!” என அவனுக்குக் கதிரை அறிமுகம் செய்து வைத்தான் முகிலன்

“அண்ணா” எனச் சலுகையாய் கோபப்பட்ட கதிருடன், “ஹாய் சாம்ப்!” என கை குலுக்கிய ஜெய், “கேசவன் உன்னோட ஃப்ரெண்ட் இல்ல; உங்க அப்பாவோட கோ ஆபீசர் நந்தா அங்கிள் சன் தான! ஞாபகம் இருக்கு” என்றவன், “நீதான் திரிலோக சஞ்சாரி ஆச்சே! காரணம் இல்லாம உன் காத்து இந்த பக்கம் வீசாதே!” என்றான் முகிலனை நன்றாக அறிந்தவனாக.

“எக்ஸாக்ட்லீ மச்சி! அனால் காரணம் எதையும் இப்ப கேட்காதே! சின்ன பிரச்சனைதான். எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு நானே உன்னிடம் சொல்றேன்!”  என்றவன், “காரை சுட்டிக்காட்டி! என் கூட ஒரு பொண்ணு வந்திருக்காடா! ஹோட்டலுக்கு எல்லாம் போக முடியாது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, உடனே சென்னை கிளம்பனும் மச்சி! சேஃபா ஒரு இடம் சொல்லுடா!” எனக் கேட்டான் உரிமையாக.

அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், “என்னடா உனக்கு மனசுல பெரிய அப்பாடக்கர்னு நினைப்பா. போலீஸ்காரன்தானடா நீயும். என்னோட குவாட்டர்ஸ்க்கெல்லாம் வர மாடீங்களோ! அந்த இடம் சேஃபா இருக்காதா உனக்கு?” என அவன் முறுக்கிக்கொள்ள,

“ஐயோ தெரியாம சொல்லிட்டேன் தெய்வமே! என்னை விட்டுடு!” என்ற முகிலன், “உனக்கு ஹெல்பர் அப்பாயிண்ட் பண்ணி இருக்காங்க இல்ல? எதாவது லைட்டா குக் பண்ண சொல்லுடா! செம்ம பசியா இருக்கு!” என்று சொன்னான் முகிலன்.

“வெஜ் சொல்லவா? இல்ல நான்வெஜ்ஜாடா?” என ஜெய் கேட்க, “டேய்! வேட்டைல இருக்கும்போது கிடைப்பதெல்லாம் சாப்பிடுவேன்! ஆனா ஹோம் டவுன்ல இருந்தால் ஒன்லி வெஜ்!” என்ற முகிலன் கதிரை பார்க்க,,

“பசிக்கு எதுவா இருந்தாலும் மேயலாம் அண்ணா நோ பிரப்லம்! அதுக்காக புல்லை வெச்சுடாதீங்க” என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

அதற்குள்ளாகவே அங்கே நின்றுகொண்டிருந்த ஜெய்யை, வினோதமாக பார்த்தவண்ணம், சல்யூட் செய்துவிட்டு சென்றனர் அவனுக்கு கீழே வேலை செய்யும் சில காவலர்கள்.

அதைக் கவனித்தவனாக, “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, முடிசிட்டு வரேன், நீங்க வீட்டுக்கு போங்க!” என்று சொல்லிவிட்டு, அவனது வாகன ஓட்டியை அழைத்து முகிலனுடைய காரை செலுத்த சொன்னான் ஜெய்.

முகிலன் ஜாடை செய்ததில், கதிர் முன்புறம் உட்கார்ந்துகொள்ள, பின்புறமாகச் சென்று நிலாவின் அருகில் உட்கார்ந்துகொண்ட முகிலனை, ‘இது இவனோட டிசயன்லேயே கிடையாதே!’ என்ற எண்ணம் தோன்ற, வியப்புடன் அவனைப் பார்த்தான் ஜெய்.

கார் ஜெய்யின் காவலர் குடியிருப்பு வீட்டை அடைந்ததும், சில்லென்ற நீர்த்துளிகள் முகத்தில் தெறிக்க, பதறியவாறு தூக்கத்திலிருந்து விழித்தாள் நிலா. அந்த சூழலை உணர அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.

“கீழ இறங்குங்க மேடம்! கொஞ்சம் ரெப்பிரேஷ் பண்ணிட்டு கிளம்பலாம்!” என்று முகிலன் சொல்ல, கைகளால் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, வாகனத்திலிருந்து இறங்கினாள் நிலா!

அவள் அந்த வீட்டைக் கண்டு மிரளவும், “என் ஃப்ரெண்ட்டோட வீடுதான் பயப்படாம வா!” என்றான் முகிலன்.

கார் டிக்கியை திறந்து, தனக்கு ஒரு மாற்று உடையையும், தனது லேப்டாப் பேக்கையும் எடுத்துக்கொண்டு முகிலனை நெருங்கிவந்த கதிர், “யோவ் அண்ணா! என்னையெல்லாம் பார்த்தால் ஒரு மனுஷனாவே தெரியலையா?’ என்று கேட்க, “உன்னைப் பார்த்தால் மனுஷன்னு யாராவது நினைப்பாங்களா? மரத்துல இருந்து குதிச்சு வந்த மங்கீன்னு நினைப்பாங்க! ஒரே ஒருநாள் இங்க இருந்தால் போதும். ஜெய்யை கேட்டல் கூட அதையேதான் சொல்லுவான்!” என அவனை வாரினான் முகிலன்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

ஜெய்யின் உதவியாளர், அவர்களை வரவேற்று உபசரிக்க, அதற்குள் அவனுடைய ஓட்டுநர் அவர்களுடைய பயண பைகளை வீட்டின் உள்ளே ஒரு அறையில் கொண்டு வந்து, வைத்துவிட்டு, “இது கெஸ்ட் ரூம் சார்! டேக் ரெஸ்ட்!” என மரியாதையுடன் சொல்லிவிட்டுச் சென்றார்.

“நிலா நீ ரெப்பிரெஷ் செய்துட்டு சாப்பிட வா! நாங்க பக்கத்து ரூம்ல இருக்கோம்! என்று அவளிடம் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றான் முகிலன்.

அதன் பின் குளித்து உடை மாற்றி முகிலனும், கதிரும் வரவேற்பறைக்கு வர, ஜெய் அங்கே வந்து அவர்களுக்காகக் காத்திருந்தான்.

சில நிமிடங்கள் காத்திருந்தும் நிலா வராமல் போகவே, “கதிர், கதவைத் தட்டி அவளைச் சாப்பிட கூப்பிடு!” என்றான் முகிலன். ‘என்னா வில்லத்தனம்!’ என முனகியபடி, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் கதிர்.

அதைக் கவனித்த ஜெய், “முகிலா! என்னடா நடக்குது இங்க! என்ன இந்த பையன் அந்த பொண்ணை லவ் பண்றானா? நீ அவங்களை சேர்த்துவைக்க ஹெல்ப் பண்றியா! இல்ல இடைஞ்சல் எதாவது செய்யறியா? அவன் இந்த லுக் விடுறான்?” என மெல்லிய குரலில் கேட்க,

அதற்கு, ” டேய் கதையையே மத்தாதடா!” என்ற முகிலன், “ஏன்டா நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுவேன்னு கற்பனைல கூட யோசிக்க மாட்டியா நீ?” என்று கேட்க,

“என்ன! நீ! அந்த பொண்ணை …லவ்… பண்றயா?!” என்று அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான் ஜெய்.

அதைக் கவனித்தவாறே அங்கே வந்த கதிர், “என்னன்னு சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல?” என்று சொல்ல, “இல்லப்பா! உன் அண்ணன் இருக்கானே! யாராவது பொண்ணுங்க கொஞ்சம் இன்ட்ரெஸ்ட்டா அவனைப் பார்த்தால் கூட, அவங்களை கூப்பிட்டு, அட்வைஸ் பண்ணி கொன்னுருவான்.

அந்த பொண்ணுங்க அதுக்குப் பிறகு அவனைப் பார்த்தாலே தெறிச்சு ஓடுவாங்க! அவன் போய் ஒரு பொண்ணை லவ் பண்றானாம்!” என்று சொல்லி மேலும் சிரிக்க, “காலைல இருந்து அதே டவுட்டுதான் அண்ணா எனக்கும்!” என்று ஜெய்யுடன் சேர்ந்துகொண்டான் கதிர்.

பொறுமை எல்லையைக் கடக்க, “தேவை இல்லாம வெப்பனை எடுக்கவேணாம்னு பார்க்கறேன்!” என்றான் முகிலன் கொஞ்சம் காரமான குரலில்.

“டேய்! வெப்பன் வெசிருக்கியா என்ன?!” என்று வியந்தது போல் கேட்டான் ஜெய்.

“எனக்கு எப்பவுமே அலவ்ட்! உனக்கு தெரியாதா?” என்றான் முகிலன் கெத்தாக. அதே நேரம் நிலா அங்கே வரவும், அமைதியானார்கள் மூவரும்.

பின்பு, உணவு உண்டு, சிறிது ஓய்விற்குப் பிறகு, மெல்லியதாக இருள் பரவத்தொடங்கும் நேரம், அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும்.

இரவு அங்கேயே தங்கிவிட்டு, அதிகாலை கிளம்பலாம் என்ற நண்பனிடம், முக்கிய வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றான் முகிலன். முகிலன்.

வேறு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் கூட அங்கே தங்கி இருப்பான். நிலாவைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்ளும் எண்ணம் அவன் மனம் எங்கும் ஆக்கிரமித்திருக்க, நேரம் கடத்த விரும்பவில்லை அவன்.

“மூணு வருஷம் ஆச்சுடா மாமா, நாம மீட் பண்ணி! மறுபடியும் எப்பவோ?” என்று ஜெய் உண்மையான வருத்தத்துடன் கேட்க,

“நம்ம வேலை அப்படி! என்ன செய்ய முடியும் சொல்லு! இப்படி சான்ஸ் கிடைத்தால்தான் உண்டு. ஆனாலும் சென்னைல சொந்தமா பிளாட் வாங்கற ஐடியால இருக்கேன், அதுவும் பிஃப்த் ஃப்லோர்ல!” என்று நிலாவைப் பார்த்துக்கொண்டே சொன்னவன், “நான் சென்னைல இருக்கும்போது நீ லீவ் எடுத்துட்டு உன் மனைவி மக்களோட அங்க வந்துரு!” என்றான் உற்சாகத்துடன்.

“நிச்சயமா!” என்றவன், “உன்னை இப்படி பார்க்க! ஹாப்பியா இருக்குடா மாமா! சீக்கிரமா பேமிலி மேன் ஆயிடு!” என்றவாறு நண்பனை அணைத்துக்கொண்டான் ஜெய்.

“பை டா!” என்றவாறு நண்பனிடம் விடைபெற்று காரில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துகொண்டான் முகிலன். கதிர் அவனுக்கு அருகில் உட்கார, பின் இருக்கையில் போய் உட்கார்ந்த நிலாவை, கண்டுகொள்ளாமல் காரை கிளப்பினான் அவன்.

ஜெய்யின் முன்னிலையில் அவளிடம் ஏதும் பேசி வம்பை வளர்க்க அவன் முற்படவில்லை அவ்வளவே!

கார் அங்கிருந்து கிளம்பியதும், ப்ளூ டூத் மூலம், ஒரு பாடலை வழியவிட்டான் கதிர்.

ஒய்யா!

புது ரூட்டுலத்தான்!

ஒய்யா!

நல்ல ரோட்டுலத்தான்!

நின்றாடும் வெள்ளிநிலவு!

ஒய்யா ஒய்யா ஒய்யா!

இந்த ராத்திரியில்

ஒய்யா!

ஒரு யாத்திரையில்

பூவோடு காத்தும் வருது!

ஒய்யா ஒய்யா!

நிலவு எங்கே சென்றாலும்!

நிழல் பின்னால் வராதா!

நீ வேண்டாமென்றாலும்!

அது வட்டமிடாதா ஹொய்!

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

நிலாவைச் சீண்டவே அந்த பாடலை போட்டான் கதிர். ஆனாலும் அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு அந்த பாடல் இனிமையைப் பரப்ப, அதில் கரைந்தே போனான் முகிலன்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி, அவனது வாகனம், கொஞ்சம் நிதானமாக செல்ல, ரியர் வ்யூ கண்ணாடி மூலமாக அந்த இதமான மனநிலையில் முகிலன் நிலாவை பார்க்க, ஏதோ காரணத்தால் அவள் பதட்டம் அடைவதுபோல் தோன்றியது அவனுக்கு.

அவனது எண்ணத்தை மெய்ப்பிப்பதுபோல், அவசர கதியில் அவளது கைப்பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து, “கதிர் வாட்டர் பாட்டிலை எடுத்து குடுங்க!” என்று தண்ணீரை கேட்டு வாங்கி, அந்த மாத்திரையை வாயில் போட்டு, தண்ணீரை பருகினாள் அவள்.

அது அவள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் தூக்க மாத்திரை என்பது புரிய, அவளை பற்றிய யோசனையுடனே வாகனத்தை செலுத்தினான் முகிலன்.

பிறகு அவனது வாகனம் வேகம் எடுக்க, மக்கள் பரபரப்பு குறைவாக இருக்கும் பகுதி ஒன்றில் காரை நிறுத்தியவன், “கதிர் நீ பின்னால போய் உட்கார். மேடம் இங்க உட்காரட்டும்!” என்று சொல்ல, பதில் பேசாமல் கதிர் இறங்க எத்தனிக்கவும்,

“நான் அங்க உட்கார மாட்டேன்! அது அடிமைங்க சீட்டுன்னு இவன்தானே சொன்னான்!” என்று அவள் கொஞ்சம் உளறல் குரலில் சொல்ல, மாத்திரை வேலை செய்ய தொடங்கி இருப்பது புரிந்தது அவனுக்கு.

“இனிமேல் நான் கார் டிரைவ் பண்ணும்போது மட்டும் நீ இங்க உட்காரலாம். என்னா இது கிங் சீட். பக்கத்துல அது குவீன் சீட்!” என்றான் முகிலன் வெளிப்படையாக.

காலையில் அவன் முகத்தில் இருந்த இறுக்கம், இப்பொழுது சுத்தமாக தளர்ந்திருப்பது கதிருக்கு நன்றாகவே புரிந்தது.

ஆனால் நிலா கொஞ்சமும் அசராமல் அப்படியே உட்கார்ந்திருக்கவும், “நீயே வரியா! இல்ல நான் வந்து உன்னை தூக்கவா?” என்று அவன் கேட்கவும், பக்கென்று சிரித்தான் கதிர்.

வேறு வழி தெரியாமல், அவனை முறைத்தவாறே முன் இருக்கையில் வந்து உட்கார்ந்தாள் நிலா.

தொடர்ச்சியாக, ‘தங்கமே ஒன்னதான் தேடி வந்தேன் நானே!

வைரமே ஒரு நாள் ஒன்ன தூக்குவேனே!’ பாடலை அவன் ஒலிக்கவிடவும்,

 

“அடங்கவே மாட்டியாடா?” என்றுகேட்டு தலையில் அடித்துக்கொண்டான் முகிலன்.

 

சில நிமிடங்களில் வாகனம் சென்னையை நோக்கி பயணிக்க,  தன்னை மறந்த உறக்கத்தில் இருந்தாள் நிலா.

 

அதற்காகவே காத்திருந்தவனாக, “டேய் மங்கி! அவ ஹாண்ட் பேக்ல ஒரு மாத்திரை இருக்கு. அதை எடுத்து, அதோட காம்பினேஷன் என்னனு பாரு!

நெட்டுல பார்த்து அது என்ன மாத்திரைனு சொல்லு!” என்று முகிலன் சொல்ல, “அண்ணா! மங்கீன்னு சொன்னா, நீங்க சொல்றத நான் செய்ய மாட்டேன்!” என முறுக்கிக்கொண்டான் கதிர்.

“ஓவர் சீன போட்ட; இங்கேயே இறக்கி தள்ளிட்டு போயிட்டே இருப்பேன் மங்கி! சொன்னதை செய்!” என்று கெத்து குறையாமல் முகிலன் சொல்லவும், வடிவேலு பாணியில், “அவ்!” என்று முகத்தைச் சுளித்தவாறு அவன் சொன்னதைச் செய்தவன், “அண்ணா! நியூரோ ட்ராமா பேஷண்ட்ஸ்கு கொடுக்கிற செடேஷன் ட்ரக் அண்ணா இது!


அதுவும் இது கொஞ்சம் ஓவர் டோஸ்!

இதை இப்படி கன்ஸ்யூம் பண்றது ரொம்ப டேஞ்சரஸ்!” என்றவன், “இது யூஷுவலா யாருக்கும் கிடைக்காது! ஏன்னா இதை இன் பேஷண்ட்ஸ்க்கு மட்டும்தான் யூஸ் பண்ணுவாங்க.

இவ எப்படி வாங்கறான்னு தெரியலியே!

அண்ணா இதைத் தொடர்ந்து யூஸ் பண்ணா உயிருக்கே ஆபத்துனு போட்டிருக்கு!

தேங்க் காட்! நாம கொஞ்சம் எர்லியா கண்டுபிடிச்சுட்டோம் அண்ணா!” என்றான் கதிர்.

வலது கை கார் ஸ்டியரிங்கை பிடித்திருக்க, இடதுகையால் மார்பைத் தேய்த்து விட்டவாறு, கதிரிடம் தண்ணீரை எடுத்து தரச்சொல்லி, அதைப் பருகிய முகிலன் பின்பு, “நிலா ஒரு டாக்டரா?” என்று கதிரை பார்த்துக் கேட்டான்.

முகிலன் உச்சபட்ச அதிர்ச்சியில் இருக்க, எந்த வித சலனமும் இன்றி, மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் நிலவழகி தன்னை மறந்த நிலையில்!

நிலா-முகிலன் 7

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“என்ன இவ டாக்டரா?

இருந்தாலும் இருக்கலாம் அண்ணா!” என்ற கதிர், “அப்படின்னா தெரிஞ்சுதான் இந்த டேப்லெட்டை கன்ஸ்யூம் பண்றா போல இருக்குண்ணா” என்று சொல்ல,

“அவ இவன்னு சொல்லாதன்னு சொன்னேன் இல்ல கதிர். எனக்கு கொடுக்கற ரெஸ்பெக்ட்ட நீ என் வைஃபா வரபோறவளுக்கும் கொடுக்கணும்; இட்ஸ் அன் ஆர்டர்!” என்றான் முகிலன் கொஞ்சம் கடினம் ஏறிய குரலில்.

முகிலன் நிலாவிடம்  இவ்வளவு தீவிரம் காண்பிக்கவும், அது ஆச்சரியமாக இருந்தது கதிருக்கு.

“ஆர் யூ டேக்கிங் திஸ் ரிலேஷன்ஷிப் வெரி சீரியஸ் அண்ணா!?” கேட்டான் கதிர்.

கதிருக்கு முகிலனின் வேலையைப் பற்றித் தெரியும்.

அதில் அவன் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.

அது போன்ற வேலைக்கு அவனே கூட சற்று தயங்குவான். ஆனால் முகிலன் அதை மனம் விரும்பி செய்கிறான்.

சென்னையில் இருக்கும் நாட்கள் அவனுக்கு ஒரு சிறு ஓய்வு போலத்தான். அதுவும் இதை அவன் ரசித்து அனுபவிப்பான்.

அந்த நேரத்திலும் யாரோ ஒருத்திக்காக அவன் இப்படி ஓடிக்கொண்டிருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை கதிருக்கு.

அதனால்தான் தன் மனதில் இருப்பதை மறைக்காமல், “இவ பார்க்க அழகா இருந்தாலும், கேரக்டர் பத்தி யோசிச்சா; நாட் அப் டு த மார்க்; ஐ திங்க் ஷீ இஸ் நத்திங் பட் அ ட்ரக் அடிக்ட்” என்றான் கதிர் விளையாட்டை எல்லாம் கைவிட்டவனாக.

“போதும் கதிர்! இதுக்கு மேல எதுவும் பேசிடாத. அது நம்ம ரெண்டு பேரையுமே அஃபக்ட் பண்ணும்” என்றான் முகிலன்.

“அண்ணா ப்ளீஸ்! எனக்கு யாரோ ஒரு பெண்ணை விட நீங்க ரொம்ப முக்கியம். ஸோ! ஐ கான்ட் அலவ் திஸ்!” மிகத் தீவிரமாகச் சொன்னான் கதிர்.

“நீ யார் என்னை அலவ் பண்ணன்னு கேட்டுடாதீங்க? நான் உடைஞ்சிடுவேன்” என்றான் தொடர்ச்சியாக.

“லூசு மாதிரி உளராத கதிர்.  எனக்கு உன்னைத் தெரியும். எனக்கு அவ வேணும்தான். அதே போல நீயும் எனக்கு முக்கியம் டா!”” என்றவன்,

” இதுக்கு பதில் சொல்லு? உன் வாழ்க்கைல வந்த முதல் பெண் யாரு?” எனக்கேட்டான் முகிலன்.

“ஸ்கூல்ல காலேஜ்ல இப்படி நிறையபேரை க்ராஸ் பண்ணி வந்திருப்போம் இல்ல?   பர்டிகுலரா யாரை கேக்கறீங்க?” என்றான் கதிர்.

“உன் லைப்ல வந்த; நீ உணர்ந்த முதல் பெண்!” என்றான் முகிலன்.

“ஆப்வியஸ்லி அம்மாதான!” என்றான் கதிர்.

“எக்ஸாக்ட்லி, பட் அம்மாவை விட உனக்கு பிடிச்ச ஒருத்தங்கள சொல்லு!” என முகிலன் கேட்க, பட்டென்று பதில் சொன்னான் கதிர், “ஸ்ரீமணி ஆன்ட்டி! உங்க அம்மா!” என்று.

“ஏன்” முகிலன் கேட்க, “ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்ன? அவங்க ஒரு பர்ஃபெக்ட் அம்மா பிகர்; எங்கம்மாவுக்கு, அவங்க ஃப்ரண்ஸ், பார்ட்டீஸ், அவங்களோட சோஷியல் ஸ்டேட்டஸ், பந்தா இதெல்லாம்தான ப்ரிஃபரன்ஸ்.

நாங்க செகண்டரிதான.

பட் ஸ்ரீ ஆன்ட்டி அப்படி இல்லையே.

லவ் அண்ட் கேரிங்.

உங்களோட சேர்த்து அவங்களோட அன்பு எங்களுக்கும் கிடைச்சுதே.

அதை எப்படி நினைக்காம இருக்க முடியும்?” என நெகிழ்ந்தான் கதிர்.

“அதேதான்டா இதுவும்! நிலாவ பார்க்கும்போது எங்க அம்மா மாதிரி ஒரு பொண்ணுங்கற ஃபீல்தான் வருது.

நான் அனுபவிச்ச ப்ரிவிலேஜ் என் பிள்ளைகளுக்கு அவளால மட்டும்தான் கொடுக்கமுடியும்னு எனக்கு ஒரு உள்ளுணர்வு.

சாரி டு சே திஸ்;  உங்க அம்மா மாதிரி மைண்ட் செட் இருக்கற பொன்னுங்களதான நாம நிறைய பார்த்துட்டு இருக்கோம்!

அது அவங்கள பொறுத்தவரைக்கும் சரியாகக் கூட இருக்கலாம். பட் நம்ம மனசு எங்க அம்மா மாதிரி ஒருத்தியதான எதிர்பார்த்து ஏங்குது.

முதல் முறை அவளை நான் பார்த்த போதே இந்த பீல் எனக்கு வந்துடுச்சு கதிர். எந்த காரணத்துக்காகவும் என்னால இதை மாத்திக்க முடியாது” விளக்கினான் முகிலன்.

மனம் கொஞ்சம் தெளிவது போல் தோன்றியது கதிருக்கு.

“பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா! பிக்ஸ் ஆகிட்டிங்களா அண்ணா! அப்பறம் பொறாமைல இந்த முனியம்மா; குப்பம்மா இவங்கல்லாம் நிலா அண்ணீஈஈஈ கிட்ட சண்டைக்கு கிளம்பினா என்ன ஆகும்?” எனத் தனது வழக்கமான பாணியில் கிண்டலுடன் முகிலனைக் கேட்டான் கதிர்.

“எல்லாருக்கும் உன்னோட மும்பை அட்ரஸ் கொடுத்து, அங்க அனுப்பி வெச்சுடறேன், நீ கவலைப் படாத!” எனப் பதில் கொடுத்தவன், “ஏய் அரட்டை! நீ ஒரு ஹாக்கர்தான? எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா!” எனக்கேட்டான் முகிலன்.

“அண்ணா ஹாக்கர்ன்னு சொல்லாதீங்க; ஏத்திக்கல் ஹாக்கர்னு சொல்லுங்க! ஆல் லீகல் ஆக்டிவிடீஸ் ஒன்லி!” என்றான் கதிர்.

“என் கிட்டயே சும்மா படம் காமிக்காத!” என்றவன், “இவளோட கை ரேகை வெச்சு, ஆதார் டீடெயில்ஸ் எடுத்து குடுடா! இப்பவே!

ப்ரொசீஜரா போனா கொஞ்சம் டைம் எடுக்கும். எனக்கு பொறுமை இல்ல!” என்றான் முகிலன்.

வெகு தீவிரமாக சொல்லும் பாவனையில், “கேக்கறது நீங்கங்கறதனால செய்யறேன்; பட் நான் அவன் இல்லை!” என்றான் கதிர் சிரித்துக்கொண்டே.

அதன் பிறகு, அவனுடைய அதி நவீன தொடு திரை மடிக்கணினியை உயிர்ப்பித்தவன், மயக்க நிலையிலிருந்த நிலாவுடைய கையை பற்றி, விறல் ரேகையைத் திரையில் பதியவைத்து, சில நிமிடங்களுக்குள்ளாகவே அவளுடைய ஆதார் தகவல்களை எடுத்துவிட்டான்.

அவள் ஜீ.கே மாமாவிடம் சொல்லியிருந்தது போல், அவளுடைய நிரந்தர முகவரி, புது தில்லியில் இருந்தது. அவளுடைய தந்தையின் பெயர், ‘சிவராமகிருஷ்ணன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்பு, ப்ளூ டூத் இணைப்பு மூலம் கைப்பேசியில் பேசியவாறே வாகனத்தைச் செலுத்தினான் முகிலன்.

ஜெய் வீட்டிலிருந்து  கொண்டுவந்திருந்த இரவு உணவைக் கதிரை வற்புறுத்திச் சாப்பிட வைத்தவனுக்கு, நிலாவின் நிலையை எண்ணிப் பசி கூட பின்னுக்குச் சென்றிருந்தது.

***

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் அவர்களது குடியிருப்புக்குள் நுழைந்தது முகிலனின் வாகனம்.

அது வரையிலும் கூட அவளது மயக்கம் தெளிந்தபாடில்லை.அவளது கன்னத்தில் தட்டி எழுப்பியும் கூட கண்விழிக்கவில்லை நிலா.

நிலாவின் கைப்பையிலிருந்து அவள் வீட்டு சாவியை எடுத்து, விரலில் மாட்டிக்கொண்டவன், “கதிர் நீ காரை பார்க் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு போ. லக்கேஜ் எல்லாம் காலையில் எடுத்துக்கலாம்!” என்று சொல்லி, வீட்டின் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் நிலாவை கைகளில் அள்ளிக்கொண்டு, மின் தூக்கியை நோக்கிப் போக, குளறலாக, உளறலாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.

வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் மிதந்து கொண்டிருக்க, அவள் என்ன சொல்கிறாள் என யோசித்தவாறு அந்த வார்த்தைகளைக் கோர்க்க முயன்றுகொண்டிருந்தான் அவன்.

ஐந்தாவது தளத்தில் அவளுடைய வீடு வந்து சேரும் வரையிலும் அதுவே தொடர்ந்தது. அதற்குள்ளாகவே, ‘முசூரி; டேராடூன்’ என்று மூன்று நான்குமுறை சொல்லியிருந்தாள் அவள்.

அவளுடைய வீட்டை அடைந்து, அவளை ஏந்தி இருந்த கையாலேயே ஒருவராக முயன்று கதவையும் திறந்தான் முகிலன்.

பின்பு அவளை அவளுடைய அறைக்குள், கட்டிலில் படுக்கவைத்தவன், போர்வையால் போர்த்திவிட்டு அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, “நான் உங்களை எதிர்பார்த்து தேடிட்டு இருக்கும்போதெல்லாம் வராம, இப்ப வந்து எதுக்காக என்னை கொல்றீங்க?” கோர்வையாக பிதற்றினாள் நிலா.

அதுவும், அந்த வார்த்தைகள் அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்படியும் இருக்கவும், ‘என்ன சொல்றா இவ!

யாரை சொல்றா! என்னைத்தானா?

முசூரில ‘ஃபௌண்டேஷன் ட்ரைனிங்ல இருந்த போதே இவளை நாம பார்த்திருக்கோமா?’ என அவன் மனதைத் துளைத்து கேள்விகள் முளைக்க, விதிர்விதிர்த்துதான் போனான் முகிலன்.

எவ்வளவு யோசித்தும் அவளை அதற்கு முன்பே பார்த்தது போன்ற நினைவு அவனுக்கு எழவில்லை.

அதுவும் ஐ.பி.எஸ் பயிற்சியின் ஆரம்ப நிலையிலிருந்த சமயம், எந்த ஒரு விஷயத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், இன்று இருக்கும் அளவிற்கெல்லாம் அவனுக்கு இருந்ததில்லை.

ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த முகத்தை நினைவில் வைப்பது, குரல்களை ஆராய்வது, பிறர் பேசும் வார்த்தைகளை, வார்த்தைகளுக்கு இடைப்பட்ட மௌனங்களை, அந்த மௌனம் நீடிக்கும் நொடிகளைப் படிக்கும் வல்லமை, அன்று அவனுக்கு இருந்ததில்லை.

அவளுடைய உளறல்களை உணர முயன்றவாறு, குழப்பத்துடன் அவளுடைய வீட்டின் கதவைப் பூட்ட, அதே நேரம் அவனுடைய கைப்பேசி ஒலிக்கவும், அழைப்பை ஏற்று, “சொல்லுடா மச்சான்!” என்றவாறு, தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்றான் முகிலன்.

எடுத்த எடுப்பில், “நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டாடா!” என்றான் ஜெய் கோபக்குரலில்.

“பாதி ராத்திரி போன் பண்ணி, கேக்கறான் பாரு கேள்வி! சரக்கடிச்சிருக்கியா எரும!” எனக்கேட்டான் முகிலன், நக்கலுடன்.

“டேய்! எட்டு, ஒம்போது வருஷமா எப்படிடா மாமா உன்னால இதை என் கிட்ட இருந்து மறைக்க முடிஞ்சுது?

இன்னைக்கு கூட நீ ஓப்பனா எதையும் சொல்லலையேடா!” என்றான் ஜெய் வருத்தத்துடன்.

“டேய்! சாத்தியமா முடிலடா மச்சான்! ஏற்கனவே கடுப்புல இருக்கேன். இதே மாதிரி பேசிட்டே போனேன்னு வை! மறுபடியும் மதுரைக்கே வந்து, தூக்கிப்போட்டு மிதிப்பேன் ஜாக்கிரதை!” என எக்கச்சக்க எரிச்சலுடன் முகிலன் கொதிக்க,

“அந்த நிலா பொண்ணு! அதுதாண்டா உன் ஆளு! அவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு காலைல இருந்து யோசிச்சிட்டே இருந்தேன்டா மாமா.

அவங்க நம்ம கூட லால் பகதூர் சாஸ்த்ரி அகாடமில ட்ரைனிங் எடுத்தவங்கதான? அங்க வெச்சு பார்த்த மாதிரிதாண்டா ஞாபகம்!

ஐ.ஏ.எஸ் டி.ஓவா (ட்ரைனி ஆபீசர்) இல்ல ஐ.எஃப்.எஸ் ஆ டா?” எனக் கேட்ட ஜெய், “அப்ப இருந்தே உங்களுக்குள்ள சம்திங் ஸம்திங்தான?” என முடித்தான்.

“கொலையே செஞ்சிருவேன் பார்த்துக்கோ! நான் அவளைப் பார்த்து, முழுசா இன்னும் பத்து நாள் கூட ஆகல மச்சான்! உன் மாமியார் மேல சத்தியமா சொல்றேண்டா!” என்றான் முகிலன், அழுதுவிடுபவன் போல.

“ஏய் சீ! சத்தியம் பண்றான் பாரு; அதுவும் என் மாமியார் மேல! என் பொண்டாட்டி மட்டும் கேட்டா; நம்ம ரெண்டுபேரையுமே போட்டு தள்ளிருவா!” என்றவன், “அப்ப உண்மையாத்தான் சொல்றியா! நான்தான் குழம்பிட்டேனா?” என ஜெய் கேட்க, “அடங்குடா எரும! நாளைக்கு பேசறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் முகிலன்.

அதற்குள் கதிர் வீட்டைத் திறந்து, அங்கே காத்திருக்கவும், பயண களைப்பு தீர வெதுவெதுப்பான நீரில் குளித்து, அவசரகதியில் உடை மாற்றி, அவளுடைய வீட்டிற்கே மறுபடியும் வந்தான் முகிலன்.

அங்கே வரவேற்பறை சோபாவில் உடலைக் குறுக்கிப் படுத்தவன், உறங்கியே போனான்.

அடுத்த நாள் காலை, ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த சூரியன் தன் கிரணங்களால் சுளீரெனச் சுட்டுக்கொண்டிருப்பதைக் கூட உணராமல், உறங்கிக்கொண்டிருந்தவனை, வீட்டின் அழைப்பு மணியின் ஒலி எழுப்பியது.

மிகவும் முயன்று அவன் இமைகளைப் பிரிக்க, கதவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாள் நிலா.

அதிகாலையிலேயே கண்விழித்துவிட்டாள் போலும். குளித்து, உடை மாற்றி, அவள் கொஞ்சம் தெளிவாகவே இருப்பது போல் தோன்றியது முகிலனுக்கு.

அவனது கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்க்க, மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்து.

அவள் சென்று கதவைத் திறக்கவும், எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காண்பிக்காமல், மௌனமாக அவளைக் கடந்து உள்ளே நுழைந்தவரை பார்த்து உறைந்துபோய் நின்றாள் நிலா.

நேராக முகிலனை நோக்கி வந்த அந்த மனிதர், “என்ன லவ்வா! கல்யாணமே செய்துக்கிட்டிங்களா? ஒரே வீட்டுல ஒண்ணா இருக்கீங்க!” என கேட்டர் அதிர்ச்சியுடன்.

“அப்படி செய்துட்டு இருந்தால் என்ன தப்பு மிஸ்டர் சிவராமகிருஷ்ணன்?” என்றான் முகிலன் கடினமான குரலில்.

“உங்க பொண்ணு! எங்க இருக்கா! என்ன மாதிரி நிலைமையில இருக்கா! எதையும் கவனிக்காம, நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பார்த்துட்டு இருக்கீங்க!” என அவரிடம் காய்ந்தவன், “நான் மட்டும் இல்லனா, உங்க பொண்ணு செத்து ரெண்டு நாள் ஆகியிருக்கும். அதுவும் அவ செத்த செய்தி கூட உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும்!” என்றான் உச்சபட்ச கோபத்துடன்.

அதைக் கேட்டதும், அதிர்ச்சியுடன் தொப்பென்று சோஃபாவில் சரிந்தார் அவர். அவரை பார்க்க அவனுக்கே கொஞ்சம் பரிதாபமாகிப்போனது.

***

நிலாவின் தில்லி முகவரியைக் கண்டுபிடித்தவுடன், அவளுடைய அப்பாவின் கைப்பேசி எண்ணையும் எளிதாக எடுத்துக்கொடுத்துவிட்டான் கதிர்.

நொடியும் தாமதிக்காமல் அவரை அழைத்தவன், தன பெயரை மட்டும் சொல்லிவிட்டு, “உங்க பொண்ணு இப்ப என் கூடத்தான் இருக்கா!

அவளை உருப்படியா பார்க்கணும் என்கிற எண்ணம் இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கிளம்பி இங்கே வாங்க!

அட்ரஸ் நான் மெசேஜ் பண்றேன்!” என்றான் முகிலன்.

அவளது உடல்நிலையைப் பற்றிச் சொல்வதாக எண்ணிக்கொண்டு அவன் அப்படிச் சொல்ல, எதிர் முனையிலிருந்தவருக்கோ, அவன் அவளைக் கடத்திவைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற புரிதல் உண்டானது.

“ஐயோ! நீங்க அவளை ஒண்ணும் செஞ்சுடாதீங்க; நான் சீக்கிரம் அங்கே வரேன்!” என்று பதறி, சிவராமன்  அழைப்பைத் துண்டிக்க, ‘நான் அவளை என்ன செய்ய போறேன்! அவதான் என்னை வெச்சு செஞ்சிட்டு இருக்கா’ என மனதில் எண்ணிக்கொண்டான் முகிலன், அவர் என்ன மனநிலையில் இருந்து சொல்கிறார் என்பது புரியாமல்.

அந்த நள்ளிரவு நேரத்தில், யாரைத் தொடர்பு கொள்ளுவது என்பது புரியாமல், காவல்துறைக்கும் செல்ல துணிவின்றி அடுத்த விமானத்திலேயே சென்னைக்கு வந்துவிட்டார் சிவராமகிருஷ்ணன்.

வெகு இயல்பாக நிலாவை அங்கே காணவும், அதுவும் ஒரே வீட்டிற்குள் அவளுடன் முகிலனும் இருக்கவும், அதுவரை இருந்த மனநிலை மாறி, வேறுவிதமாக எண்ணிக்கொண்டார் அவர். அவனிடம் அவ்வாறு கேட்கவும் செய்தார்.

மகளை இந்த நிலையில் இப்படி விட்டுவிட்டாரே என்ற மனத்தாங்கலில் பதிலுக்கு அவனும் அப்படி பேசிவிட்டான்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

பின்பு நிலை உணர்ந்து, தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவனாக, அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்த நிலாவிடம், “காஃபீ எடுத்துட்டு வா!” என மிரட்டலாகச் சொன்னவன், அவள் அடுக்களைக்குள் சென்றதும், முழுவதும் சொல்லாமல், அவள் மாத்திரை எடுப்பதை மட்டும் சொன்னவன், அவள் தற்கொலைக்கு முயன்றதையும் சொல்லி முடித்தான் முகிலன்.

அதனை கேட்ட பிறகு, பேச நாவே எழவில்லை நிலாவின் தந்தைக்கு. நிலா காஃபியை கொண்டு வரவும், அந்த நேரத்தில் அவருக்கு அது தேவையாக இருக்கவும், மௌனமாக வாங்கி அதைப் பருகத்தொடங்கினார்.

தானும் ஒரு கோப்பையை எடுத்து, ஒரு மிடறு காஃபியை பருகியவாறு, “இவர் யாருன்னாவது உனக்கு தெரியுதா! இல்ல அதுவும் இல்லையா?” என அவன் கேட்க, மௌனமாகத் தலையை ஆட்டினாள் நிலா.

“அப்படினா சொல்லு! இந்த வீட்டுல உனக்கு என்ன வேலை?” என அவன் அடுத்த கேள்விக்குத் தாவ, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மணிகள் உருண்டன. அவசரமாக அவளுடைய கைப்பையைத் தேடியவள், அது அங்கே இல்லை என்பது புரிய, அவளுடைய படுக்கை அறை நோக்கிச் செல்ல, அவளை முந்திக்கொண்டு போய், கதவைத் திறக்க விடாமல் அவளைத் தடுத்தவன், “என்ன மாத்திரை போட்டுக்க போறியா! கொன்னுடுவேன் கொன்னு!” என அவளை மிரட்டினான்.

“ப்ளீஸ்! ப்ளீஸ்! என்னால மாத்திரை போடாம இருக்கவே முடியாது! ப்ளீஸ்!” என கெஞ்சத்தொடங்கினாள் நிலா!

அவனே ஒரு மாத்திரையை எடுத்து, பாதியாக உடைத்து, அவளுக்குக் கொடுத்தவன், வற்புறுத்தி மாமி அனுப்பிய உணவை சாப்பிடவைத்தான்.

முடித்ததும், அவளுடைய அறையில் போய் படுத்துக்கொண்டாள் நிலா.

மகளின் அந்த நிலையைப் பார்த்து மனம் வெதும்பினார் சிவராமன்.

***

புது தில்லி ஜனாதிபதி மாளிகையில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் சிவராமகிருஷ்ணன். அவரது மனைவி உமா அங்கேயே ஒரு பிரபல தனியார்ப் பள்ளியில் வேலை செய்கிறார்.

அவர்களுடைய மூத்த மகள் நிலவழகி. அவளுக்கு அடுத்து ஒரு மகன், மதி அழகன்.

அவன் இப்பொழுது வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கிறான்.

நிலா, மருத்துவம் படிக்க வேண்டும் என்பதைத் தீவிர லட்சியமாகக் கொண்டிருக்கவும், டேராடூனில் இடம் கிடைக்க, எம்.பி.பி.எஸ் படித்து முடித்தாள்.

அதன் பின் வீட்டில் அவர்கள் திருமண பேச்சை எடுக்கவும், முற்றிலுமாக அதை மறுத்துவிட்டு, பிடிவாதம் பிடித்து, எம்.எஸ் ஜெனரல் சர்ஜரியும் முடித்தாள்.

அவள் எம்.எஸ் முடித்ததுமே திருமணம் செய்து விடும் எண்ணத்தில், சிவராமன் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் இறங்கினார். ஆனால் மேற்கொண்டு நியூரோ சர்ஜரியில் சிறப்பு மேற்படிப்பை முடித்தபின்தான் திருமணம் என்பதில் தீவிரமாக இருந்த நிலா, மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பிஹெச் படிப்பிற்கு இடம் கிடைக்கவும், பிடிவாதம் பிடித்து அதில் சேர்ந்திருந்தாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல்களால், தலைநகர் முழுதும் பரபரப்பாக இருந்த நிலையில் சிவராமன் வீட்டிற்குக் கூட செல்ல முடியாமல், வேலையில் மூழ்கி இருந்த சமயம், ஏதோ காரணத்திற்காக நிலா அவரை கைப்பேசியில் தொடர்புகொள்ளத் தொடர்ந்து முயன்றிருக்க, அவளிடம் பேசவே இயலாமல் போனது அவருக்கு.

மூன்று தினங்களுக்குப் பிறகு நிலைமை சீரானவுடன், மகளைக் கைப்பேசியில் அழைத்து அவர் காரணத்தைக் கேட்கவும், ‘பெரிதாக ஒன்றும் இல்லை’ என்று சொல்லிவிட்டாள் அவள்.

அதன் பின் எப்பொழுதும் போல, தினமும் இரவில் அவரிடமும், அவளுடைய அம்மாவிடமும், வெளிநாட்டில் இருக்கும் அவளுடைய தம்பியிடமும் பேசிக்கொண்டிருந்தவள், கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக அவள், தானாகத் தொடர்பு கொள்ளவே இல்லை.

அவர்களாக அழைத்தாலும், ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக்கொள்வாள்.

பரீட்சை சமயங்களில் சில நேரம் அதுபோல் நடப்பது உண்டு என்பதினால் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இருந்தாலும் மகளை நேரில் வந்து பார்க்கவேண்டும் என அவர்கள் எண்ணியிருக்க, முகிலன் அழைத்து இப்படிச் சொல்லவும், அவளுடைய அம்மா வேறு பயந்த சுபாவம் என்பதினால், அவருக்குத் தெரிந்தால் கலவரம் ஆவர் என்ற காரணத்தினால், அவர் மட்டும் கிளம்பி வந்திருந்தார் சிவராமகிருஷ்ணன்.

அனைத்தையும் முகிலனிடம் சொல்லி முடித்தவர், “அவ ரொம்ப போல்ட் ஆன பொண்ணு தம்பி. ரொம்ப டிசிப்ளின்ட் கூட. அவ போய் இப்படி ட்ரக் அடிக்ட் ஆகி இருக்கான்னா, அவளை ஏதோ பெருசா பாதிச்சிருக்கு.” என்றார் அவர்.

‘ஒரு ஆக்சிடென்ட்டல் டெத்; ஒரு மேச்யூர்ட் டாக்டரை கூட இப்படி பர்சனலா பாதிக்குமா?’ என்று எண்ணினான் முகிலன்.

எப்படி இருந்தாலும் அவள் தன்னுடைய நிலா. அவளைச் சரி செய்ய வேண்டியது தன்னுடைய பொறுப்பு என எண்ணியவன், “உங்க மகளை, இன்னைக்கே சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகலாம்னு நினைக்கறேன்! நீங்க என்ன சொல்றீங்க?” என அவன் கேட்கவும், “இல்ல தம்பி! நீங்க இந்த அளவுக்கு மெனக்கெட்டதே போதும்! நான் அவளை டெல்லிக்கே கூட்டிட்டு போறேன் தம்பி!” என அவர் சொல்ல, “இல்ல! இல்ல! நானே பார்த்துக்கறேன்!” என முகிலன் அதிர்ந்துபோய் சொல்ல, அவனை விசித்திரமாகப் பார்த்தார் சிவராமன்.

அதை உணர்ந்துகொண்டவனாக, “இல்ல! நான் நேரடியாவே சொல்றேன்! நிலாவை எனக்கு கொடுத்துடுங்க! அவளை நான் நல்லாவே பார்த்துப்பேன்! நாளைக்கே எங்க அம்மா அப்பாவை வந்து பேச சொல்றேன்!

நான் சென்ட்ரல் கவர்மெண்ட்ல உங்களை விட ஹயர் ரேங்க்ல வேலை செய்யறேன். சோ கவலை படாதீங்க.” என்றான் முகிலன் நிலாவை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே. அவன் சொன்னவற்றைக் கேட்டதும் அவளுடைய முகத்தில் தோன்றிய கலவையான உணர்வுகளைப் படிக்க முயன்றுகொண்டே!

 

நிலா-முகிலன் 8

முகிலன் பாதியாக உடைத்துக் கொடுத்த மாத்திரையில் திருப்தி ஏற்படாமல் தவித்தவள், மீதத்தையும் அவனிடம் கேட்கவென அறையிலிருந்து வரவும், அவன் அவளுடைய அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது நிலாவிற்கு.

அவன் நேரடியாகத் திருமணத்திற்குக் கேட்கவும், அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை.

மனம் கட்டுப்பாடின்றி எதை எதையோ சிந்திக்கத் தொடங்கியது.

கண்களை அகற்றாமல் அவளுடைய முகத்தையே முகிலன் பார்த்துக்கொண்டிருப்பது புரியவும், அந்த மாத்திரையைக் கூட மறந்தவளாக அறைக்குள் சென்று கதவை தாளிட்டாள் நிலா.

“நிலா! ரூமை லாக் பண்ணாத!” என அவன் கட்டளையாகச் சொல்லவும், அடுத்த நொடி, ‘க்ளிக்’ என தாழ்பாள் திறக்கப்படும் ஒலி கேட்டது.

புன்னகைத்துக்கொண்டான் முகிலன்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

அனைத்தையும் கவனித்தவராக; அதுவும் அவரது முன்னிலையிலேயே முகிலன் நிலாவை மிரட்டவும், அவளும் கூட அதற்கு கீழ்ப்படியவும், கொஞ்சம் திடுக்கிட்டவராக; நிலா தெளிவான மனநிலையில் இருக்கும்போது அவளுடைய சம்மதத்தைக் கேட்கவேண்டும்; மேலும் அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன், “வேண்டாம் தம்பி! அவரசரப்படாதிங்க; இப்ப இவ இருக்கற நிலைமையில் எதையும் முடிவு செய்ய முடியாது.

முதல்ல அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துடலாம். பிறகு மத்ததை முடிவு பண்ணிக்கலாம்!

எல்லாம் ஒத்து வந்தால் உங்க எண்ணத்துக்கு குறுக்க நிக்க மாட்டோம்! புரிஞ்சிக்கோங்க!” என அவர் மென்மையாகவே திருமணத்திற்கு மறுக்கவும், அதற்கு ஒப்புக்கொண்டு கொஞ்சம் இறங்கிவந்தான் முகிலன்.

ஆனால் அவளுக்கான மருத்துவம் சென்னையிலேயே பார்க்கப்படவேண்டும் என்பதில்மட்டும் தீர்மானமாய் இருந்தான்.

சிவராமன் அங்கே வந்திருப்பதை அறிந்து, கதிரும் ஜீ.கே மாமாவும் அங்கே வர, பரஸ்பரம் அறிமுகப்படுத்திவைத்தான் அவன்.

சிவராமன் மாமாவிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க, முகிலன் குடும்பம் பற்றி அவர்மூலம் தெரிந்துகொண்ட தகவல்களால்,  அவனைப் பற்றிய அவருடைய தயக்கம் கூட கொஞ்சம் விலகித்தான் போனது.

***

முந்தைய இரவில் யார் மீது சத்தியம் செய்தானோ அவருக்கு முன்பாக, அதாவது ஜெய்யின் மாமியாருக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான் முகிலன் தான் வருங்கால மாமனாருடனும் அவருடைய ஒரே மகளுடனும்.

ஜெய்யின் மாமியார் அகிலா ஸ்ரீதரன், ஒரு பிரபல மனநல மருத்துவர். சென்னையிலேயே புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றின் மனநல மருத்துவ சிறப்புப் பிரிவில், தினமும் மாலை நேரங்களில் அவர் நோயாளிகளைச் சந்திப்பதால், முன் அனுமதி பெற்று, நிலாவை அங்கே அழைத்துவந்திருந்தான் அவன்.

ஐம்பது வயது மதிக்கத்தக்கத் தோற்றத்தில்,  பருத்திப் புடவை அணிந்து மிகவும் எளிமையாகவும், மென்மையுடனும், மருத்துவருக்கே உரியக் கம்பீரத்துடன் இருந்தார் அகிலா.

அவர்களைப் பார்த்ததும் சிநேகத்துடன் புன்னகைத்தவர், “ஹை! முகிலன் எப்படி இருக்கீங்க?” என சகஜமாக விசாரிக்கவும், “நல்லா இருக்கேன் ஆண்ட்டி! ஹவ் இஸ் அங்கிள்?” என்று அவனும் இயல்பாக கேட்க, சிவராமனுக்கு முகிலன் அவ்வளவு வற்புறுத்தியதன் காரணம் புரிந்தது. மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.

அவரை சந்திப்பதற்கு முன்பே, அவருடைய உதவி மருத்துவர் நிலாவுடனும் மற்றவருடனும் பேசி, அவளைப் பற்றிய குறிப்புகளை எடுத்திருக்கவே. அந்த அறிக்கைகளைப் படித்தவர், மற்ற இருவரையும் வெளியில் அனுப்பிவிட்டு, பின்பு சிறிதுநேரம் நிலாவிடம் பேசினார்.

அதன் பிறகு நிலாவைச் செவிலியருடன் தனியே அனுப்பிவிட்டு, அவர்களைச் சந்தித்தவர், “இது பெரிய பிரச்சினையா தெரியலியே மிஸ்டர்.சிவராமன்.

ஸ்ட்ரெஸ்; டிப்ரஷன்; அதாவது சாதாரண மன அழுத்தம் அவ்வளவுதான்.

இந்த மாதிரி நேரத்துல, மூட் ஸ்விங்ஸ் இருக்கத்தான் செய்யும்.

ஒரு சமயம் நல்லா உற்சாகமா இருப்பாங்க; ஒரு சமயம் ரொம்ப சிடுசிடுப்பா இருப்பாங்க; அடிக்கடி டயர்டா ஓய்ந்து போயிடுவாங்க.

தனிமையை அதிகம் நாடுவாங்க. கில்ட்டி கான்ஷியஸ்னால தன்னையே துன்புறுத்திப்பாங்க.

தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்க நினைச்சு எக்குத்தப்பா எதையாவது செஞ்சுவைப்பாங்க!

ட்ரக் அடிக்ஷன் கூட இவங்களை பொறுத்தவரைக்கும் சகஜம்தான்.

தற்கொலை எண்ணமும் ஏற்படும்தான்.

அவ்வளவு சுலபமா சட்டுனு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது.

இவங்கள பொறுத்தவரைக்கும், மனசுல எதையோ வெச்சு குழப்பிக்கிட்டு இருகாங்க. அதை கண்டுபிடிச்சு வெளியில கொண்டுவரனும்.

நான் புரிஞ்சிட்ட வரைக்கும், ஒரு டென் டு ஃபிப்டீன் டேஸாதான் இவங்க டிப்ரஷன் பீக்ல இருந்திருக்கு.

நாமதான் கவனிச்சிட்டோமே, ஸோ பயப்பட வேண்டாம்.

கொஞ்சம் சிம்ப்பிள் மெடிகேஷன் அண்ட் கௌன்சிலிங் போதும்; மேக்ஸிமம் டென் டேஸ்ல நார்மலுக்கு கொண்டுவந்துடலாம்.

அவங்கள எப்பவும் எங்கேஜ்டா வெச்சுக்கோங்க, தனியா விடாதீங்க; அவ்வளவுதான்” நம்பிக்கை கொடுக்கும்விதமாக விளக்கி முடித்தார் அந்த மனநல மருத்துவர்.

கௌன்சிலிங் கொடுக்கவென தினமும் நிலாவை அங்கே அழைத்துவரச்சொன்னார் அவர்.

***

சிவராமனுக்கு அதிகம் விடுப்பு எடுக்க இயலாத காரணத்தால், மகளை முகிலனுடைய காவலில், மாமா மற்றும் மாமியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அடுத்த நாளே டெல்லிக்குக் கிளம்பினார் அவர்.

நிலமங்கை அவளது கணவர் பிரபஞ்சனுக்குப் பரிசளிக்கவென வாங்கியிருந்த வீட்டில்தான் இப்பொழுது நிலா இருக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது முகிலனுக்கு.

தொடர்ந்து அவள் அந்த வீட்டில் இருப்பது அவன் மனதிற்கு உவப்பாக இல்லாமல் போனதால், அதே தளத்திலேயே வேறு பிளாட்டை வாடகைக்கு எடுத்தவன், நிலாவை அங்கே தங்கவைத்தான்.

ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, நிலாவின் அம்மா உமாவும், முகிலனின் அம்மா ஸ்ரீமணியும் அங்கே வரவழைக்கப்பட்டனர் நிலாவைக் கவனித்துக்கொள்ள.

நேரில் பார்ப்பதற்கு முன்பாகவே முகிலனின் மீது அபரிமிதமான நம்பிக்கையும் அன்பும் மரியாதையும்  உண்டாகிப்போனது உமாவிற்கு. நேரில் பார்த்தபிறகோ அந்த எண்ணம் பன்மடங்காகப் பெருகித்தான் போனது.

கதிர் சென்னையில் கால் பாதித்தது முதல், நடந்த ஒவ்வொன்றையும் அவனது அபிமான ஸ்ரீமணி ஆண்ட்டிக்கு உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பாகச் சொல்லியிருக்க, திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மகன், காதல் கல்யாணம் என்று பொங்குவதைக் கேள்விப்படவும் நம்பவே முடியவில்லை அவரால்.

நிலாவின் படிப்பைப் பற்றி முன்பே அறிந்திருக்கவும், அனைத்தையும் மீறிய ஒரு நல் அபிப்ராயம் அவளிடம் உண்டானாலும், அவளுடைய நிலவரம் அவரை கலவரம் செய்தது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

ஏற்கனவே ஸ்ரீமணி அவளை நேரில் பார்க்கவேண்டும் என எண்ணிக்கொண்டிருக்க, மகன் வேறு அங்கே வருமாறு அழைக்கவும் அங்கே பறந்து வந்துவிட்டார் அவர்.

நிலாவை நேரில் பார்த்ததும் அவளது அடக்கமான அழகு அவரை கரைத்துவிட, அவளை மகளாகவே ஏற்றுக்கொண்டார் அந்த அன்பான பெண்மணி.

தினமும் மாலை, நிலாவை மருத்துவமனைக்கு ஆழைத்துச்செல்வான் முகிலன். உமாவும் ஸ்ரீமணியும் அவளுக்குத் துணையாகக் கூடவே கிளம்பவும், மறுக்காமல் அவர்களையும் உடன் இணைத்துக்கொள்வான்.

தேவை இல்லாத கேள்விகள் எதையும் கேட்டு அவளைக் குழப்ப வேண்டாம் என டாக்டர் அகிலா எச்சரிக்கை செய்திருக்க, யாருமே  அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் போதை கலந்த மாத்திரையை உட்கொள்வதை, மிக முயன்று நிலா தானாகவே தவிர்க்க, அதுவே மிகப்பெரிய உதவியாய் இருந்தது மருத்துவருக்கு.

நேரத்தில் உறக்கம், சத்துள்ள உணவுகள் என இருவரின் அன்னையரும் நிலாவைப் போட்டிப் போட்டுக் கொண்டு கவனிக்க, கவுன்சிலிங்கும் சேர்ந்து கொள்ள, நான்கு ஐந்து தினங்களிலேயே  கவனிக்கும்படியான மாற்றங்கள் தெரிந்தது நிலாவிடம்.

கலகலப்பாக இல்லாவிடிலும் எல்லோரிடமும் கொஞ்சம் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தாள் அவள்.

இடையில் ஒரு நாள் நிலாவை கவுன்சிலிங்கிற்காக அழைத்துச்சென்றிருந்த சமயம் முகிலனைத் தனியே அழைத்த அகிலா, “சாத்தியமா முடியலப்பா முகிலா! நானும் எவ்வளவோ கேஸை பார்த்திருக்கேன். டாக்டர்ஸ், என்ஜினியர்ஸ், பலதரப்பட்டவங்களுக்கும் ட்ரீட்மெண்ட் பண்ணி இருக்கேன். அட்வான்ஸ் ஸ்டேஜ் பேஷண்ட்ஸ் கூட என்னை இவ்வளவு படுத்தினது இல்ல.

முதல் ரெண்டு நாள்தான் அமைதியா இருந்தா.

அதுக்கு பிறகு மெடிக்கலா நிறைய கேள்வி கேக்கறா! எந்த மாத்திரை சஜஸ்ட் பண்ணாலும், அதோட காம்பினேஷனை பார்த்துட்டு, அதை யூஸ்  பண்ணாம அவாய்ட் பண்ண, ஆயிரம் காரணம் சொல்றா.

அவ மைண்ட் ரீட் பண்ண கேள்வி கேட்டால், அதோட ரீசனை கண்டுபிடிச்சு கோ ஆபரேட் பண்ண மாட்டேங்கறா.

நீயே அவகிட்ட கொஞ்சம் சொல்லு” என நிலாவைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தார் அவர்.

மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவளைத் தனியாக இருக்கவிடாமல், ஸ்ரீமணி, உமா, மாமா, மாமி, கதிர் என எப்பொழுதும் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர், நிலவுடன் இருத்து கொண்டே இருக்கவும், தள்ளி இருந்து அவளைப் பார்க்க மட்டுமே முடிந்தது முகிலனால்.

அதையும் தாண்டி சில நேரங்களில்  முகிலனை நேருக்கு நேர் பார்க்க நேரும் போதெல்லாம் தலையைக் குனிந்து கொண்டு சென்றுவிடுவாள் அவள்.

ஆனாலும் அந்த கணத்தில் சிவத்து மலரும் அவளுடைய முகம் அவளுடைய உள்ளத்தை அவனுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல, புன்னகைத்தவாறே சென்று விடுவான் முகிலன்.

அதற்குமேல் அவளிடம் ஏதும் பேசும் சந்தர்ப்பம் அவனுக்கு அமையவே இல்லை.

அன்று மருத்துவர் இவ்வாறு சொல்லவும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட கோபத்துடன், “நீ ட்ரீட்மென்டுக்கு கோ ஆபரேட் பண்ணலேன்னா, எக்கேடோ கேட்டு போன்னு விட்டுட்டு, இப்பவே வேற எதாவது ஸ்டேட்ல ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, வீட்டை காலி பண்ணிட்டு, போயிட்டே இருப்பேன்!

அது மட்டும் இல்ல! எங்க அம்மா பார்த்து ஒரு குப்பம்மா, முனியம்மா யாரை காமிச்சாலும், தாலி கட்டி, ஹனிமூனுக்கு மசூரி கூட்டிட்டு போயிடுவேன்! ஜாக்கிரதை!

என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு!” எனக் கடுமையாக அவளை மிரட்டியவன், அன்னையை நோக்கி, “அம்மா! நீங்களே ஒரு பொண்ணை பார்த்து முடிவு பண்ணிடுங்க! ஓகே வா?” என்று அவன் கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல், எல்லா பக்கத்திலும் தலையை ஆட்டிவைத்தார் அவர்.

அவரது செயலை பார்த்ததும் எழுந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறு, “பார்த்த இல்ல! வசதி எப்படி! வேற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” என அவன் கேட்க, முகமெல்லாம் இறுகிப்போய், கண்களில் கலவரம் தெரிய, அவசரமாக  வேண்டாம் என்று தலையை ஆட்டினாள் நிலா.

“அப்படினா அகிலாம்மா சொல்றத ஒழுங்கா கேக்கறியா?” என்று அதட்டலாக அவன் கேட்கவும், கண்களில் நீர் கோர்க்க, அதற்கும் அவள் தலை ஆட்டவும், “சரி போய் ரெப்பிரேஷ் பண்ணிட்டு சாப்பிடு!” என்று சற்று தகைந்த குரலில் சொல்லிவிட்டு அவனுடைய இருப்பிடத்திற்குச் செய்வதற்காக அவன் திரும்ப, கலவரத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் உமா.

“சும்மா!” என்று உதட்டசைவில் சொல்லிவிட்டு, கண் சிமிட்டியவாறு அவன் அவரை கடந்து சென்றுவிட, மேலும் கலவரமாகிப்போனார் அவர்.

***

இதற்கிடையில் மகளுடைய விடுமுறையை முன்னிட்டு பிறந்தவீடு சென்றிருந்த சுசீலா மாமியின் மருமகள் ஜெயந்தி, ஊரிலிருந்து திரும்பியிருந்தாள்.

அப்பொழுது அவர்கள் வீட்டிற்கு வந்தான் கதிர்.

அங்கே வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த ஜெயந்தியின் எதிரில் போடப்பற்றிருந்த இருக்கையில் அமர்ந்தவன், ” எப்படி இருக்கீங்க அக்கா? எப்ப ஊருல இருந்து வந்தீங்க?” என நலம் விசாரிக்க,

“எனக்கு என்ன நான் நன்னா இருக்கேன்? நேத்து நைட் வந்தேண்டா! நீ எப்படி இருக்க? எக்ஸாம் எழுதினியே என்ன ஆச்சு?” என எதார்த்தமாகக் கேட்க, பரிட்சையைப் பற்றிக் கேட்கவும் அதில் கடுப்பானவன், அதில் தோல்வி அடைந்ததை பற்றிச் சொல்லப் பிடிக்காமல், பேச்சை மாற்றும் பொருட்டு,  ” என்னை பத்தின விஷயமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்,  உங்க ஃப்ரண்ட் நிலா இல்ல நிலா! அவங்க கிட்ட கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்கோங்க!” என கதிர் எச்சரிக்கும் குரலில் சொல்ல,

“அட நிலாவைத் தெரியுமா உனக்கு?’ எனக் கேட்டவள், “அவளுக்கு என்ன? அவ ரொம்ப நல்ல பொண்ணாச்சே!” என்றாள் ஜெயந்தி.

“நல்ல பொண்ணுதான்; ஆனா அந்த நல்ல பொண்ணுக்குத்தான் பயங்கரமான பேய் பிடிச்சிருக்கு!” என்றான் கதிர் கிசுகிசுப்பான குரலில்.

“லூசாடா நீ! இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னு பேசிண்டு!” என அவள் அலட்சியமாக பதில் கொடுக்க,

“எதோ உங்க கிட்ட சொல்லி அலர்ட் பண்ணனும்னு சொன்னேன்! அப்பறம் உங்க இஷ்டம்!” என அவன் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும், “கதிரவா! நிஜமாவாடா சொல்ற! இப்படிலாம் கூட நடக்குமா?” என அவள் அவனுடைய வலையில் வந்து சிக்கவும், “ஆமாம் ஜெயாக்கா! அதுவும் அவங்களை பிடிச்சிருப்பது சாதாரண பேய் இல்ல! மோஓஓஓஓகினி பேய்!

அது நம்ம முகில் அண்ணாவையே மயக்கிடுச்சுனா பார்த்துக்கோங்களேன்!” என்றான் கதிர் உண்மைபோல.

“ஐயோ முகிலனையா! பாவம்டா அந்த பையன்!” என்றாள் ஜெயந்தி பதறியவளாக.

“நீங்க வேணா பாருங்கக்கா, முகில் அண்ணா அவ கிட்ட எப்படி உருகி கரையறாருன்னு!

நிலா அம்மாவும், ஸ்ரீமணி ஆண்ட்டியும் இப்ப இங்க வந்திருக்கிங்களே ஏன்னு தெரியுமா?” என்று கதிர் தொடரவும், “ஏண்டா! தெரியலியே! அதையும் நீயே சொல்லிடு!” என அவள் பயத்துடன் கேட்க,

“சைதாபேட்டைல ஒரு குறி சொல்ற ஆன்ட்டி இருக்காங்களாம்; அவங்க பேயெல்லாம் ஓட்டுவாங்களாம்; டெய்லி சாயங்காலம், சாயங்காலம் அங்கே போய் ரெண்டுபேருக்கும் வேப்பிலை அடிச்சு கூட்டிட்டு வராங்க!

நிலா சாதாரணமா இருக்கற மாதிரித்தான் இருப்பாங்க. நீங்க அவங்க எதிரே போனீங்கன்னா, திடீர்னு நிலவழகி டிராகுலா அழகியா மாறி, உங்க பிளட் மொத்தத்தையும் குடிச்சிடுவாங்க! ஜாக்கிரதை!” என்று சொல்லிவிட்டு, அவளை மேலும் மேலும் கலவரப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றான் கதிர்.

அவன் சொன்னவற்றை நம்பலாமா வேண்டாமா எனக் குழம்பியவளாக, மாமியாரைத் தேடிப் போன ஜெயந்தி, “அம்மா! இந்த கதிர் பையன் நம்ம நிலாவைப் பத்தி என்னென்னமோ சொல்றானே! உண்மையா?” எனக் கேட்க,

“அம்மாம்மா ஜெயா! பாவம் அந்த பொண்ணு!” என்று சொன்ன சுசீலா மாமி,

“நாமளும் ரெண்டு மூணு மாசமா அவளை பார்த்துண்டேதான இருக்கோம்! ஆனா எதுவுமே தெரியல பாரேன்!

நீ ஊருக்கு போனதுக்கு அப்பறம் என்னென்னமோ நடந்துபோச்சு.

பதினஞ்சு நாளா அவளுக்கு ரொம்பவே முத்தி போச்சு!

அவளோட சேர்ந்துண்டு இப்ப இந்த முகிலனும் படாத பாடு பட்டுண்டிருக்கான் பாவம்” என்று முடித்தார் அவளுடைய உண்மை நிலையைக் குறிப்பிட்டு.

பயத்தில் அரண்டே போனாள் ஜெயந்தி.

நிலாவை தனிமையில் சந்திப்பதை முடிந்த வரையிலும் தவிர்க்க ஆரம்பித்தாள் அவள்.

நிலாவிற்கு ஏதும் வித்தியாசமாகத் தெரியாமல் இருக்குமாறு, எல்லோரும் இருக்கும்போது, பொதுவாக எதாவது பேசிவிட்டு, வீட்டிற்கு வந்துவிடுவாள் அவள்.

அதுபோன்ற சமயங்களில், முகிலன் அவளிடம் எடுத்துக்கொள்ளும் அக்கறையைப் பார்த்து, அவன் மோகினிப் பிசாசிடம் மயங்கிப்போய்த்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்றே எண்ணிக்கொண்டாள். ஜெயந்தி, கதிர் சொன்ன அனைத்தையும் உண்மைதான் என திட்டவட்டமாக நம்பினாள்!

***

முகிலன் அங்கிருந்து சென்ற பிறகு, அவன் சொன்னது போலவே குளித்து, இரவு உடைக்கு மாறியவள், அவளுடைய அம்மாவும் வரும்கால மாமியாரும் பார்த்துப் பார்த்து பரிமாற, உணவை உண்டு முடித்தாள் நிலா.

பின்பு முகிலன் கோபத்துடன் சென்றதையே எண்ணியவாறு யோசனையுடன் அவள் வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்திருக்க, அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்த கதிர், “மூன் அண்ணி! ஒய் சோ அப்செட்!” என்று கேட்க, ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினாள் நிலா.

“அப்படினா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?” என அவன் கேட்க, யோசனையுடன், ‘என்ன?’ என்பதுபோல் அவள் அவனை ஏறிட, “என் ஃப்ரண்டோட குழந்தைக்கு ஒரு சின்ன சர்ஜரி! ஒரு யூனிட் ஓ நெகடிவ் பிளட் வேணும்” என அவன் சொல்ல,  “ஐயோ என்னோடது பீ பாசிட்டிவ் ஆச்சே!” என்றாள் நிலா பரிதாபமாக.

அவனுக்கே அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது, ஆனாலும் எப்பொழுதுமே எதாவது ஒன்றை முகிலனிடம் போட்டுக்கொடுத்து,அவனிடம் திட்டு வாங்க வைக்கும் ஜெயந்தியின் முகம் நினைவுக்கு வரவும், தலையைக் குலுக்கி, அந்த எண்ணத்தை விரட்டியவன், “அது இல்ல அண்ணி! நம்ம ஜெயந்தி அக்கா இருகாங்க இல்ல? அவங்களோட பிளட் க்ரூப் ஓ நெகடிவ்தான்; நான் போய் அவங்க கிட்ட கேட்டால், பயந்துட்டு பிளட் குடுக்க ஒத்துக்க மாட்டாங்க!

நீங்கதான் டாக்டர் ஆச்சே! நீங்க அதைப் பத்தி விளக்கமா சொன்னால் ஒத்துப்பாங்க! ப்ளீஸ் நாளைக்கு காலைல போய் கேட்டு பாக்கறீங்களா?” என அவன் கேட்க, அதற்கு ஒப்புக்கொண்டாள் நிலா, கதிரின் திருவிளையாடல் பற்றித் தெரியாமல்.

***

அடுத்த நாள் மாமா, மாமி இருவரும் கோவிலுக்கு சென்றிருக்க, ஜெயந்தியின் மகள் பள்ளிக்கும், அவளுடைய கணவர் அலுவலகத்திற்கும் சென்றுவிட, அவள் தனிமையில் இருப்பதை அறிந்து நிலாவை அங்கே அழைத்து வந்தான் கதிர்.

அவளைப் பார்த்ததும், உடல் நடுங்கத்தொடங்கியது ஜெயந்திக்கு. அவள் பயத்துடன் நிலாவுக்குப் பின்பாக நின்றுகொண்டிருந்த கதிரின் முகத்தைப் பார்க்க,  நாக்கை நீட்டி தலையைச் சாய்த்து, ‘பத்திரம்’ என்பது போல் ஜாடை செய்தான் அவன்.

அதில் கலவரமானவள், குரல் நடுங்க, “வா நிலா! எதாவது சாபிடறியா?” என ஜெயந்தி கேட்க, “சாப்பிட எதுவும் வேண்டாம்கா, உங்க பிளட் ஓ நெகடிவாமே, எனக்கு உங்க பிளட்தான் வேணும்!” என்றாள் நிலா தெளிவாக.

அதைக் கேட்டதும் ‘இவ நெஜமாவே நம்ம ரத்தத்தை குடிச்சிடுவாளோ!’ என மனதிற்குள் பயந்துகொண்டே, புடவை தலைப்பை இழுத்து கழுத்தை நன்றாக மூடிக்கொண்டவள், “என் பிளட் எல்லாம் கெட்டுப்போச்சு! டேஸ்ட் நன்னா இருக்காது! அதனால என்னை நீ கேக்காத!” என அவள் சொல்லவும், அடக்கப்பட்ட சிரிப்புடன் ஜெயந்தியை பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“பிளட் கெட்டெல்லாம் போகாது. டெஸ்ட் ரிசல்ட் சரியாதான் இருக்கும். தாராளமா நீங்க பிளட் குடுக்கலாம். பயப்படாதீங்க, கதிர் பார்த்துப்பான்!” என நிலா சொல்ல, பயத்தில் அழுகையே வந்துவிட்டது ஜெயந்திக்கு. அவள் எதிரில் அழுதுவைத்தால், அவள் மேலும் வெறி கொள்வாளோ எனப் பயந்து, மிகவும் முயன்று அழுகையைக் கட்டுப்படுத்தினாள் அவள்.

அதை உணராமல், “நீங்க சம்மதிச்சா கூட, ரொம்ப எல்லாம் பிளட் எடுக்கமாட்டோம் அக்கா! ஒரு ஃபோர் பிஃப்டி எம்.எல் அவ்ளோதான்!” என நிலா சொல்ல, “என்ன அவ்ளோ பிளட்டா!” என ஜெயந்தி அதிர, “அது அதிகமெல்லாம் இல்ல கா! அதுவும் எடுக்கும்போது வலிக்கவே வலிக்காது! சும்மா எறும்பு கடிக்கிற மாதிரி இருக்கும் அவ்ளோதான்” என நிலா விளக்கமாகச் சொல்ல, தன் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் ஜெயந்தி.

சிரிப்பை அடக்க முடியாமல், கைப்பேசியில் பேசுவதுபோல் வெளியே சென்று குலுங்கக் குலுங்க த.வி.புசித்துவிட்டு, அதாவது தரையில் விழுந்து புரண்டு சிரித்துவிட்டு, மறுபடியும் அங்கே கதிர் வர, சத்தமாகக் கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவளைப் புரியாத ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.

அப்பொழுது அங்கே வந்த கதிர், “நீங்க போங்க மூன் அண்ணி! அந்த பாப்பாவுக்கு பிளட் கிடைச்சிடிச்சு!” என்று சொல்ல, ‘உப்’ என ஒரு நிம்மதி பெருமூச்சுடன் முகம் பிரகாசிக்க அங்கிருந்து அவள் சென்றுவிட, துணிவு வரப்பெற்றவளாக ஜெயந்தி ஓவென அழத் தொடங்கவும், அவனுடைய விளையாட்டு விபரீதமானதை உணர்ந்து நொந்தவாறு, “ஐயோ அக்கா! முதல்ல அழுகையை நிறுத்துங்க; நான் சும்மா நிலாவை வெச்சு பிராங்க் பண்ணேன் அவ்வளவுதான்! அவங்களுக்கு பேயும் பிடிக்கல; பிசாசும் பிடிக்கல” என்றான் கதிர் வெகு சாதாரணமாக.

நடந்த அனைத்தையும் சொன்னவன், நிலாவின் உண்மை நிலையையும் சொல்லி முடிதான் கதிர். அதன்பின் அழுகையை நிறுத்தியவள், “அடப்பாவி! நான் உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன்! என்னை இப்படி பயமுறுத்திட்டியே பாவி!” என அவனைக் கடிந்துகொள்ள,

“எப்ப பார்த்தாலும் எக்ஸாம், மார்க்கு இதை பத்தியே பேசிட்டு இருந்தா, எனக்கு மட்டும் எரிச்சல் வராதா? ஏதாவது சொல்லி முகில் அண்ணாவையும் எனக்கு எதிரா திருப்பி விடறீங்க இல்ல அந்த கடுப்பும்தான்! இனிமேல் என் விஷயத்துல தலையிட மாட்டீங்க இல்ல? ” மனதில் இருப்பதை மறைக்காமல் கதிர் கிண்டலுடன் கேட்க, உக்கிரத்துடன் காளி அவதாரம் எடுத்தவளாக, ஜெயந்தி அனைத்தையும் முகிலனிடம் போட்டுக்கொடுக்க, ஜெயந்தியுடன் சேர்த்து நிலாவையும் வம்பில் மாட்டி விட்டதால் அவனைக் கதறவைத்து பின்புதான் ஓய்ந்தான் முகிலன்.

***

ஒருவாறு குழப்பமும் குதூகலமுமாக நாட்கள் ஓட, அவளுடைய கவுன்சிலிங் முடிவடையும் நாளும் வந்தது.

நிலாவுடன் சேர்த்து முகிலனையும் அழைத்த அகிலா, “ஷி இஸ் பர்பெக்ட்லி ஓகே முகில்! என்னோட பார்ட்ட நான் முடிச்சிட்டேன். இனிமேல் எல்லாமே அவ கைலயும், உன் கைலயும்தான் இருக்கு!” என்றார் தெளிவாக.

“இவ ஏன் இப்படி ஆனாள்! என்ன நடந்தது; எதுவுமே எனக்குத் தெரியாதே! ஆனாலும் என் பார்ட்ல இருந்து  நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க ஆன்ட்டி; கண்டிப்பா செய்யறேன்!” என முகிலன் சொல்ல,

“அவளோட இந்த நிலைமைக்கு, நீ மட்டுமே காரணம் இல்ல! ஆனாலும் நீயும் ஒரு விதத்தில் காரணம் முகில்!” என அவனைத் தெளிவாகக் குழம்பினார் அவர்.

“ஐயோ! நானா? நான் என்ன செஞ்சேன்?” என அவன் கேட்க, “இதை நான் சொல்றத விட நிலாவே உன்கிட்ட சொன்னால் பெட்டரா இருக்கும்; ஃப்ரீயா அவ கிட்டேயே கேட்டு தெரிஞ்சிக்கோ!” என அவர் நிலாவைப் பார்க்க, உதட்டில் மலர்ந்த புன்னகையை அவனிடம் காண்பிக்க நாணி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிலா!

அவனுக்கு ஏதோ புரிவதுபோல் இருக்கவும், “ஆண்ட்டி! நான் காரணம்னா, அதைச் சரி செய்ய நான் என்ன பண்ணனும்?” என்று முகிலன் விஷம புன்னகையுடன் கேட்க, “அவளை உடனே கல்யாணம் பண்ணிக்கோ!” என்றார் அகிலா புன்னகையுடனே.

நிலா-முகிலன் 9

 

மூன்று மாதங்களுக்கு முன்:-

நரம்பியல் அறுவைசிகிச்சை சம்பந்தமான மேற்படிப்பில் ஒன்றரை ஆண்டு கடந்திருந்த நிலையில்…

இடியும் மின்னலும் கோலாகலப் படுத்திக் கொண்டிருந்த ஒரு மழை நாளில், முன்னிரவு எட்டு மணி வாக்கில், தூரலில் நனைந்து உடல் சிலிர்த்தவாறு, மருத்துவர்களுக்கான ஓய்வறைக்குள் நுழைந்தவள், அவள் எடுத்து வந்திருந்த கைப்பையை அங்கே இருந்த அலமாரியில் வைத்துவிட்டு, துப்பட்டாவால் முகம், கைகள் எனத் துடைத்துக் கொண்டு, வெண்ணிற ‘கோட்’டை எடுத்து அணிந்து கொண்டாள் நிலா.

சானிடைஸரை வலது உள்ளங்கையில் ஊற்றி இரண்டு கைகளிலும் தேய்த்து சுகாதாரப் படுத்திக் கொண்டு, அவளது ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் சூட்டிக்கொள்ள, அங்கே வந்த அவளது தோழி; சக மாணவி சரண்யா, அவசரமாக  அவளுடைய கையை பிடித்து இழுத்துச் சென்றவாறே, “வா! வா! தல நம்ம ரெண்டு பேரையும் அர்ஜென்டா கூப்பிடறாங்க!” என்றவாறு ஒட்டமும் நடையுமாகச் செல்ல, அவளுடைய இழுப்பிற்குச் சென்றாள் நிலா.

அவர்களுடைய அகராதியில் ‘அர்ஜன்ட்’ என்ற சொல் மட்டுமே உண்டு. அதன் எதிர்ப்பதம் புழக்கத்திலேயே கிடையாது. அதுவும் மழைக்கால இரவுப்பணி என்றால் அந்த அவசரத்தின் பொருள் பன் மடங்கு கூடிப்போகும்.

நரம்பியல் அறுவை சிகிச்சை பகுதியை அடைந்தவர்கள், அங்கே இருக்கும் மருத்துவர்கள் பணி அறையை நோக்கிச் செல்ல, உள்ளே உட்கார்ந்திருந்தார் டாக்டர்.சத்யபாமா; கைதேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்; அவர்களுடைய ஆசான். அவர்களுடைய ஹீரோ! முன்மாதிரி! எல்லாமும்!

அங்கே அனைவருக்குமே அவரிடம் ஒரு பயம் கலந்த மரியாதையை இருக்கும். அவருடைய தகுதியும் தோற்றமும் அப்படி.

தனியார் மருத்துவமனையால் கைவிடப்பட்ட நோயாளிகளைக் கூட, பிழைப்பதற்குக் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பிருந்தாலும் அதைப் பயன் படுத்தி உயிர்ப்பிக்கச் செய்யும் மாயத்தை தன் கைகளில் கொண்டிருக்கும் திறமைசாலி.

வெள்ளை வெளேர் என்றிருந்த அவரது கைகளைப் பார்க்கும் போதே தெரிந்தது, ஏதோ அறுவை சிகிச்சை முடிந்து கை உறைகளை அப்பொழுதுதான் கழற்றி இருக்கிறார் என்று.

“பொண்ணே, எமர்ஜன்சில… ப்ரெயின் இஞ்சுரி கேஸ் ஒண்ணு வந்திருக்காம். உடனே வரச் சொன்னாங்க; போய் அட்டண்ட் பண்ணுடா!” என அவர் பொதுவாகக் கட்டளை பிறப்பிக்க, செல்ல எத்தனித்த சரண்யாவைத் தடுத்து, “இரு பொண்ணே! நேத்து சர்ஜரிஸ்ல நீதான என் கூட இருந்த. அந்த கேசஸ் பத்தி கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன் குடுக்கணும்” என்று சொல்லிவிட்டு, “நிலா! நீ போய் அட்டண்ட் பண்ணுடாம்மா!” என்றார் உரிமையுடன்.

நிலாவின் விதிதான் சத்யபாமா வடிவில் அவளை அங்கே அனுப்பியதோ?

நிலா அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பகுதிக்கு வர, அரை மயக்க நிலையில் ஸ்ரக்சரில் ஒரு பெண் படுக்கவைக்கப்பட்டிருந்தாள்.

“ஹெட் இஞ்சுரி கேஸ்ப்பா!

நீங்க பார்த்து சொன்னால் சீ.ட்டி இல்லன்னா எம்.ஆர்.ஐக்கு அனுப்பலாம்” என அங்கு பணியிலிருந்த மருத்துவர் பரிந்துரைக்க, அந்த பெண்ணுடைய முதல்கட்ட மருத்துவ அறிக்கையைப் படித்துவிட்டு பின் நிலா அவளை ஆராய, அவளது உடலில் ஆங்காங்கே சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கத் தலையின் ஒரு பகுதியில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அந்த காயத்தை ஆராய்ந்தாள்.

பின்பு, டார்ச் மூலம் அந்த பெண்ணின் கண்களின் அசைவை கவனித்து, பின் சில பரிசோதனைச் செய்துவிட்டு, நிலா சில மருத்துகளைப் பரிந்துரைக்க, அவை ட்ரிப்ஸ் மூலம் அந்த பெண்ணுக்குச் செலுத்தப்பட்டன.

உடனிருந்த அந்த மருத்துவரிடம், “எம்.ஆர்.ஐ இஸ் பெட்டர் டாக்டர். அனுப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு அதை அந்த அறிக்கையிலும் எழுதிக் கையெழுத்திட்டுவிட்டு அங்கே நின்றாள் நிலா.

 

வேறு வழியில்லை. ஸ்கேன் முடிந்து அந்த அறிக்கைகள் வந்து அந்த பெண் அடுத்தகட்ட மருத்துவத்திற்குச் செல்லும் வரை; சில சமயங்களில் அதன் பிறகும் கூட நிலா அவளைத் தொடரத்தான் வேண்டும்.

அவசர நிலையில், பல நோயாளிகள் வரிசைகட்டி காத்திருக்க, ஒரு மணி நேரத்திற்கு பிறகே அந்த பெண்ணை ஸ்கேனிங் செய்ய அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், அவள் கொஞ்சம் சுய நினைவு பெறவும், அவளைப் பற்றிய தகவல்களை நிலா விசாரிக்க எண்ணி, “உங்க பேர் என்ன?” என்று கேட்க, “ம்! நிலமங்கை! பிரபாவுக்கு மட்டும் நான் நிலா!” என்றாள் அவள் தெளிவில்லாத குரலில். தன்னுடைய பெயரையே அவள் கொண்டிருக்கவும், அவள் பால் ஒரு தனிப்பட்ட அக்கறை தோன்றிவிட்டது நிலாவுக்கு.

அதன் பின் மேலும் அவளைப் பற்றி அறிய, நிலா அவளிடம் பேச்சுக்கொடுக்க, “என் ஹஸ்பண்ட் பேர் பிரபா! அவரை கொஞ்சநாளா காணும்!  உங்களால அவங்களை எப்படியாவது கண்டுபிக்கமுடியுமா?” எனக்கேட்டாள் நிலமங்கை தனக்குக் கிடைத்திருக்கும் ஒரே பற்றுக்கோலாக அவளைப் பற்றிக்கொண்டு!

அவளுடைய குரல் நிலாவை எதோ செய்யவும், அவள் பேசுவது தலையும் புரியாமல் வாலும் புரியாமல் போனாலும், மறுத்து ஏதும் பேச மனமின்றி, அந்த நேரத்தில் அந்த பெண்ணிற்கு தன்னால் கொடுக்கமுடிந்த சிறிய நம்பிக்கையை, வார்த்தைகளாகக் கோர்த்து,  “ம். கண்டிப்பா கண்டுபிடிக்கலாம்! நீங்க நார்மல் ஆனதும் அவரை பார்க்கலாம், அதுக்கு முன்னால உங்களை பத்தின டீடைல்ஸை சொல்லுங்க?” எனக்கேட்டாள் நிலா மிக தன்மையான குரலில்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

முதல் முறை முகிலன் நிலவழகி தங்கி இருந்த வீட்டிற்கு வந்த அன்று, ‘எங்க ஊர் மதுரை. அப்பா பேங்க் எம்பிளாயீ’ எனத் தொடங்கி, ‘திரும்ப வரும்போது, அந்த கார் ஒரு ட்ராக் மேல மோதிடுச்சு’ என முடிய நிலா அவனிடம் சொன்னவற்றை, வார்த்தைகள் ஒன்று கூட மாறாமல் அப்படியே நிலாவிடம் சொல்லி முடித்தாள் நிலமங்கை.

பின் அவளுடைய பெற்றோருடைய முகவரியை, கைப்பேசி என்னுடன் அவள் சொல்ல, நிலா அதனைத் தனது கைப்பேசியில் பதியவைத்துக்கொண்டாள்.

“என்னோட நிலைமையை சொல்லி, எங்க அப்பா அம்மாவை இங்க வரச்சொல்ல முடியமா? ஒரு வேளை இங்க வந்தாலும் வருவாங்க!” என நிலமங்கை நிலாவிடம் கோரிக்கை விடுக்க, அதற்குப் பணிந்தாள் நிலா இறக்கத்துடன்.

 

உடனே அந்த பெண் ஸ்கேனிங் செய்ய அழைத்துச்செல்லப்பட, அதன்பின் அதன் அறிக்கைகளைப் பார்த்து வருந்தினாள் நிலா.

அவளுடைய மண்டை ஓட்டின் எலும்பில் விரிசல் ஏற்பட்டிருக்க, மூளை தசைகள் கொஞ்சம் விரிவடைந்திருப்பது புலப்பட்டது.

உடனே கொஞ்சம் சிக்கலான அறுவைசிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகி இருந்தது.

அதை அறிந்த அடுத்த நொடி, நிலமங்கையின் வீட்டிற்கு கைப்பேசியில் அழைத்து, நிலா விவரத்தைச் சொல்ல, அவர்களிடமிருந்து நல்லவிதமான பதில் ஏதும் அவளுக்குக் கிடைக்கவில்லை. மனம் நொந்துபோனாள் நிலா.

“உங்களுக்கு ஸ்கல் போன்ல சின்ன விரசல் ஏற்பட்டிருக்கு; ரத்த கசிவும் இருக்கு. ப்ரைன் யூசுவல் சைஸ விட கொஞ்சம் என்லார்ஜ் ஆகியிருக்கு;

இதுக்கு ஓரு சர்ஜரி தேவை படுது.

ஸ்கல்-லின் ஒரு பார்ட்டை எடுத்துட்டு, சேஃபா அதை உங்க வயித்துப் பகுதில வெச்சு தெச்சிடுவோம்.

பிறகு மூலையில ரத்த கசிவை சரி செய்ய ட்ரீட்மெண்ட் பண்ணுவோம்.

இரண்டு மூணு மாசத்துல ப்ரைன் நார்மல் ஸ்டேஜ்கு வந்திடும்;

தென் மறுபடியும் சர்ஜரி செய்து, அந்த ஸ்கல் போனை அதே இடத்தில் வச்சு பொருத்திடுவோம்! கொஞ்சம் பெரிய ஆப்பரேஷன்தான்.

பட் பயப்பட வேண்டியதில்லை.

நான் அன் அஃபிஷியலா உங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசி பார்த்துட்டேன்.

பட் நோ யூஸ்.

நீங்க சம்மதிச்சா சொந்தக் காரங்கள ஐடென்டிபை பண்ண முடியலன்னு சொல்லி, பெர்மிஷன் வாங்கி சர்ஜரி செய்திடலாம்.

“இங்கேயே ஆப்பரேஷன் பண்ணிக்கறேன். பிரச்சினை இல்லை! பட்?” தயக்கம், பயம், எதிர்பார்ப்பு, ஏக்கம் எனக் கலந்து, நடுக்கத்துடன் ஒலித்த குரலில், “உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே?” என வேகமாகத் தெறித்தது நிலமங்கையின் கேள்வி. நீண்டநாட்கள் வாழவேண்டும் என்ற ஆசையை அவளுடைய குரல் தாங்கி இருந்தது. நிலா மூத்த மருத்துவரின் முகத்தைப் பார்க்க, ‘பேசு!’ என்பது போல அவளை ஊக்கப்படுத்தினார் அவர்.

“நத்நிங் டு ஒரி மிசர்ஸ் நிலமங்கை! உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராது! அதுக்கு நான் உத்தரவாதம்!

உண்மையிலேயே நீங்க ரொம்ப லக்கி தெரியுமா? பிரைன் ரைட் சைடுல பட்டிருக்கும் இந்த அடி, லெப்ட்ல பட்டிருந்தால், பெரலைஸ்ட் ஆகியிருப்பீங்க. கடவுள் உங்க பக்கம்தான் இருக்காரு; பயப்படாதீங்க!” என்றாள் நிலா நம்பிக்கையுடன், அந்த நம்பிக்கையை அவளுக்குள்ளும் செலுத்தியவாறு.

அந்த நம்பிக்கை அவளது செவிவழி புகுந்து, மூளையை அடைந்து அவளது கண்களில் வழிந்து, திரும்பவும் நிலாவிடமே வந்து சேர்ந்த்து. ‘இவள் இந்த நிலையை எளிதில் கடந்துவருவாள்!’ என எண்ணிக்கொண்டாள் நிலா.

***

நேரம் கடத்தப்படாமல், அறுவை சிகிச்சைக்கு அவளை தயார்ப்படுத்தும் வேலைகள் தொடங்கின. சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவளுடைய கூந்தல் நீக்கப்பட்டு, அதன்பின் மயக்கவியல் மருத்துவர் வந்து அவளைப் பரிசோதனை செய்தார்.

என்னதான் துணிவுடன் இருக்க முயன்றாலும், அச்சம் எழத்தான் செய்தது நிலமங்கைக்கு. அவளைப் பரிசோதிக்க அங்கே வந்த நிலாவுடைய கையை பிடித்துக்கொண்டவள், அங்கே ஓரமாக இருந்த அவளது லேப்டாப் பாக்கை காண்பித்து, “இதுல எங்க வீட்டு பத்திரம், சாவி எல்லாம் இருக்கு; எனக்கு எதாவது ஆகிட்டா இதையெல்லாம் பிரபாகிட்ட…” என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளைத் தடுத்த நிலா, “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க!” என அவள் சொல்ல,

கண்களில் கண்ணீர் கோர்க்க, “என்னக்கு என்னோட அம்மா, அப்பா, கூட பிறந்தவ எல்லாருமே இருக்காங்க! எனக்கு என் பிரபா கூட ரொம்பநாள் வாழணும்னு நிறைய ஆசை! ஆனா அவர் எங்க இருக்காருன்னே தெரியல! நான் இப்ப அனாதையா இருக்கேன்!” என அவள் வருந்த, “நீங்க கவலைப்படாதீங்க நிலா! உங்க அம்மா அப்பாவை நேரில் போய் பார்த்து, அவங்களை இங்கே அழைச்சிட்டு வரேன்!

நீங்கக் கண் விழிக்கும்போது, அவங்க உங்க கண் முன்னால் நிப்பாங்க; அதுக்கு நான் காரண்டீ!” என ஆதரவுடன் சொன்னாள் நிலா.

அந்த வார்த்தைகளை நிரப்பிக்கொண்டு அறுவைசிகிச்சைக்குச் சென்றாள் நிலமங்கை.

டாக்டர் சத்யபாமாவின் பணி நேரம் முடிந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது. அவர் வீட்டிற்குச் செல்ல முனைய, நிலமங்கைக்கு அந்த அறுவை சிகிச்சையைச் செய்ய யாருக்கும் துணிவில்லை.

அந்த நிலையில் ஒரு உயிரை விட்டுச்செல்ல அவருக்கும் மனமில்லை. அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் சத்யபாமா.

சில மணி நேரங்கள் தொடர்ந்த அவரது பணியை வழக்கம் போல வெற்றிகரமாக முடிக்கவும் செய்தார்!

நிலாவும் உடன் இருந்து அவருக்கு உதவி செய்தாள். தலையிலிருந்து எடுக்கப்பட்ட அந்த எலும்பு பகுதியை வயிற்றில் வைத்து, அதைத் தைத்து கடைசி தையலைப் போடும்பொழுது, உண்மையிலேயே மெய் சிலிர்த்தது நிலாவுக்கு.

ரத்தக்கறை படிந்த கையுறையுடன் கட்டைவிரலை நிமிர்த்திக் காண்பித்தார் சத்தியபாமா.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

அறுவைசிகிச்சை அறைக்குள் அணியும் தொப்பி, அங்கி, முகத்தை மூடிய முகமூடி என அனைத்தையும் அணிந்து, அவரது கண்கள் மட்டுமே தெரிந்தது. அதில் அளவுகடந்த பெருமிதம் நிரம்பி வழிந்தது.

‘எந்தவித சுய லாபம் எதிர்ப்பார்க்காம; வியாபாரமா இல்லாம, ஒரு உயிரை காக்கும் கடமையா நினைச்சு சக்ஸஸ்ஃபுல்லா நாம செய்துமுடிக்கும் ஓவொரு ஆப்ரேஷனும் நம்மள கொண்டுபோய் கடவுளுக்கு பக்கத்துல நிறுத்தும்!’ அவர் எப்பொழுதும் உள்ளத்திலிருந்து சொல்லும் வார்த்தைகள், அந்த நொடி நிலாவின் செவிகளில் ஒலிப்பதுபோல் தோன்றியது.

நிறைவாக உணர்ந்தாள் நிலா.

***

சத்யபாமா வீட்டிற்குக் கிளம்பிவிட, மற்ற நோயாளிகளைக் கவனிக்கத் தொடங்கினாள் நிலா.

விடியற்காலை ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டாள் நிலமங்கை.

பணி நேரம் முடிந்ததும், வென்டிலேட்டரில் மயக்கநிலையிலிருந்தவளை வந்து பார்த்துவிட்டு, அவள் நல்ல உடல்நிலையுடன்தான் இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து தனது ஸ்கூட்டியில் கிளம்பி நிலமங்கையின் வீட்டை நோக்கிச் சென்றாள் நிலா, அவளிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற.

ஆனால் அவளைப் பெற்றவர்கள், கொஞ்சமும் இறங்கிவராமல் போகவே, அந்த தோல்வியுடன் வீட்டிற்குப் போக விரும்பாமல், அந்த பெண் கண்விழிக்கும்போது, அங்கே அவளுக்கு அறிமுகமான தான் ஒருத்தியாவது உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவமனைக்கே திரும்பினாள் நிலா.

சூறைக் காற்றுடன், இரவு முழுதும் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பலமணி நேரமாக மின்சாரம் தடைப் பட்டிருந்தது.

மின்தூக்கியைப் பயன்படுத்த இயலாமல், ஐந்தாவது தளம் வரை நடந்தே படிகளைத் தாண்டியவள், நரம்பியல் மருத்துவத்திற்கான சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவை அடைந்தாள் நிலா .

நிலமங்கையை வைத்திருந்த வென்டிலேட்டரை நெருங்க நெருங்க, அவளது வயிற்றில் பய அமிலங்கள் சுரந்தன.

அருகிலிருந்த மற்ற வென்டிலேட்டர்கள் எல்லாம் அதன் ‘பேக் அப்’ உதவியுடன் இயங்கிக் கொண்டிருக்க, நிலமங்கையைப் படுக்கவைக்கப்பட்டிருந்த வெண்டிலேட்டர் மட்டும் தனது கடமை தவறி மொத்தமாகச் செயல் இழந்துபோய் மரணித்திருந்தது, அதிலிருந்தவளையும் கொன்று?!

சுக்கல் சுக்கலாக உடைந்துபோனாள் நிலா!

அதற்குள் விவரம் அறிந்து அங்கே ஓடிவந்தார், பணிக்கு வந்திருந்த சத்யபாமா, இன்னும் சில மருத்துவர்கள் மற்றும் சில நிர்வாக அலுவலர்கள் பின் தொடர.

நிலாவை அங்கே கண்டு அதிர்ந்தவர், அந்த வென்டிலேட்டரை நெருங்கி, அதன் உண்மை நிலையை உணர்ந்துகொண்டார்.

அதிர்ச்சியிருந்து தன்னை மீட்டுக்கொண்ட நிலா, “மேம்! திஸ் இஸ் அன் ஃபேர்! இது இங்க இருக்கறவங்க அலட்சியத்தால் நடந்த கொடூரம்!” எனக் கோபத்துடன் கத்தவும், அவளை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த செவிலியர் அறைக்குள் சென்றவர், “நிலா! இப்ப நீ எதுவும் பேசாதடா!

இந்த ஒரு வெண்டிலேட்டர் மட்டும்தான் பெயில் ஆகியிருக்கு. ஆனா ட்ரீட்மெண்ட் பலனில்லாம இன்னும் நாலு டெத் நடந்திருக்கு. இதை எப்படியோ தப்பா புரிஞ்சிட்டு, அவங்க சொந்தக்காரங்க எல்லாரும் சண்டைக்கு கிளம்பிட்டாங்க!

நிலைமை கை மீறி போய்ட்டு இருக்கு!

நீ பேசாம வீட்டுக்கு போ! பிரச்சினை வராமல் நான் பார்த்துக்கறேன்!” என்றார் அவர் நிலாவிடம் விளக்கமாக.

“மேம்! எப்படி இந்த மாதிரி பேசறீங்க! நீங்கதானே அந்த பொண்ணுக்கு சர்ஜரி பண்ணீங்க?

அவ சாகவேண்டியவளே இல்லயே! உங்களுக்கே அது தெரியும் இல்ல!

அந்த வெண்டிலேட்டர் மெயின்டெனன்ஸ் சரியில்லாததாலதான அவ செத்துப்போனா?

அதைத் தினமும் சரியா செக் பண்ணல!

என்னால தாங்க முடியல! அவளோட சாவுக்கு நியாயம் கிடைக்கணும் மேம்!

நாம இதை மூடி மறைக்க கூடாது!” கதறினாள் நிலா!

இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வு பெரும் நிலையில் இருக்கிறார் சத்யபாமா! இந்த பிரச்சினையில், அவர்களுடைய நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டால், அது அவர்க்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

அடுத்த ‘டீன்’ பதவிக்கு அவர் தேர்வுசெய்யப்படும் நிலையில் இருக்கிறார்.

மேலும் அவருடைய திறமையை முன்னிறுத்தி, பல தனியார் மருத்துவமனைகள் அவருக்குச் சிவப்புக்கம்பளம் விரித்துக் காத்திருக்கின்றன. பணத்திற்காக இல்லை என்றாலும் கூட, அவர் கொண்ட தொழில் பக்தி அவரை இதிலிருந்து வெளியேற விடாது.

அவர் இந்த விஷயத்தில் நிலா சொல்வதுபோல் நடந்தால், அவருடைய கடந்த காலத்தில் அவர் பெற்ற நற்பெயரும், நிகழ்கால நிம்மதியும், எதிர்கால நம்பிக்கையும் சின்னாபின்னமாகிப்போகும்.

அரசியல் சுழலில் சிக்கி அவர் அவமானங்களைச் சந்திக்க நேரும்.

அவர் உயிராக நேசிக்கும் மருத்துவ பணியையே செய்யமுடியாமல் போனாலும் போகும்.

கிட்டத்தட்ட நிலாவின் நிலைமையும் அதேதான்.

அவருடைய நிலைமையை விளக்கியவர், “நான் இதுபோல நிறைய பார்த்துட்டேன்.

நிலா! ப்ளீஸ்டாம்மா! புரிஞ்சிக்கோ!

நான் உன் நன்மைக்காகவும் தான் சொல்றேன்!

கொஞ்ச நாள் லீவ் போட்டுட்டு வீட்டுல இரு!

இந்த பிரச்சினைகளை மறந்துட்டு மறுபடியும் ஜாயின் பண்ணு!” என அவளிடம் கெஞ்சலுடன் மன்றாடினார் அந்த கம்பீரமான பெண்மணி!

“சாத்தியமா என்னால முடியாது! என் மனசாட்சியே என்னை கொன்னுடும்!” சொல்லிக்கொண்டே கதறிய நிலாவைத் தேற்றும் வகை அறியாது திகைத்தவன், அவளை இழுத்து, அவளது முகத்தை தன மார்பினில் அழுத்தி, ஆதரவாக அவளை அணைத்துக்கொண்டான் முகிலன்!

அவளுடைய கண்ணீர் அவனுடைய இதயத்தை நனைத்தது!

நிலா-முகிலன் 10

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

“அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ!” என மனநல மருத்துவரான அகிலா சொன்னதும், சத்தமாகச் சிரித்த முகிலன், “என்ன ஆன்ட்டி! யோகா பண்ணு; மெடிடேஷன் பண்ணுன்னு சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணுன்னு சொல்றீங்க!?” என கேட்கவும்,

 

“இல்லப்பா முகிலா! கல்யாணமும் யோகா மாதிரி, மெடிடேஷன் மாதிரி அமைதியும் ஆரோக்கியமும் கொடுக்கும் விஷயமாதான இருக்கணும்?

 

அப்படி பார்க்கும்போது, உன்னால இந்த பொண்ணுக்கு நிம்மதி கிடைக்கும்னு மனசார நம்பறேன்.

 

அதுவும் டாக்டர்ஸ் ப்ரஃபஷன்ல இருக்கும் பலருக்கு ஒரு நிறைவான குடும்ப வழக்கை அமையறதில்ல!

 

உங்க ஸ்ரீதர் அங்கிள் எனக்கு கொடுக்கற சப்போர்ட்டாலதான் நான் இங்க உட்கார்ந்திருக்கேன்.

 

அந்த மாதிரி சப்போர்ட் கிடைக்காமத்தான் பலபேர் எனக்கு எதிரே உட்கார்ந்து இருக்காங்க, ட்ரீட்மெண்ட் எடுக்க!” எனச் சொன்னவர்,

 

“நிலா ரொம்ப ஷார்ப் அண்ட் இன்டெலிஜெண்ட்! இவ பெரிய நியூரோ சர்ஜனா வரணும்! அவ கையால பல உயிர்களை காப்பாத்தணும்! அதுக்கு நீ அவளுக்கு துணையா இரு போதும்!” என அவனிடம் சொன்னவர், நிலாவை நோக்கி, “டாக்டர்ஸ் கூட சாதாரண ஹியூமன் பீயிங்தான்! ஆனாலும் இப்படி உணர்ச்சிவசப்பட்டால் சாதிக்க முடியாது நிலா! என்ன புரிஞ்சிதா?

 

உன் மனசுல இருக்கறத எல்லாம் முகிலன் கிட்ட சொல்லு! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளவு சீக்கிரம் உன் கோர்ஸை முடிச்சிட்டு, உன்னோட சர்வீசை ஸ்ரார்ட் பண்ணு, அலாங் வித் யுவர் மேரிட் லைஃப்!” என்றவர், “ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ப்ரைட் அண்ட் ஜாய்ஃபுல் பியூச்சர்!” என இருவருக்குமாக சொல்லி முடித்தார் அகிலா!

 

அதன் பிறகு அவர்கள் வீடு வந்து சேரவே, இரவு வெகுநேரம் ஆகிப்போனது.

மேற்கொண்டு அவளுடன் ஏதும் பேச இயலவில்லை முகிலனுக்கு. அவள் மனதில் இருப்பதை அறிந்துகொள்ளாமல், அவளை விட்டுவிட்டு, அங்கிருந்து போகவே மனம் வரவில்லை அவனுக்கு! அவளுடைய வெட்கச் சிரிப்பு வேறு சேர்ந்துகொண்டு, அவனை ஒரு வழி செய்துகொண்டிருந்தது.

***

அடுத்த நாள் அதிகாலையிலேயே, அவளை எழுப்பி, அவசரமாகக் கிளம்பச்சொன்னவன், நிலாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள, அவனுடைய நண்பனுக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டிற்கு வந்திருந்தான்.

 

விடுமுறை சமயங்களில் வந்து தங்குவதற்கென ஏற்படுத்தப்பட்டிருந்த அந்த வீட்டில், பணியாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.

 

அங்கே இருந்த நீச்சல் குளத்தின் அருகில் வந்து, தண்ணீரில் கால்கள் நனையும்படி முகிலன் உட்காரவும், தயங்காமல், அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் நிலா!

 

அதனால் தோன்றிய முறுவலுடன், அவளுடைய கண்களை ஊடுருவி, “அகிலா ஆன்ட்டி சொன்ன மாதிரி, நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு நீ நம்பினா, என்கிட்டே எல்லாத்தையும் சொல்லு பேபி! ஐ ஆம் டோட்டலி அட் யுவர் சர்வீஸ்!” என நெகிழ்ச்சியாக அவன் சொல்லவும், அவனுடைய அந்தப் பார்வை, மின்சாரத்தை நொடிப்பொழுதில் விழிவழி அவளது சிந்தைக்குள் பாய்ச்ச, அவனுடைய காதலை அதில் உணர்ந்தவள், அவனுடைய வார்த்தைகளில் நெகிழ்ந்தவளாக, அவனிடம் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் நிலா!

***

நொடிகள் நிமிடங்களில் கரைந்து கொண்டிருக்க, தனது அழுகையிலிருந்து மீண்டு வந்த நிலா, அவனுடைய இதயத்துடிப்பை உணர்ந்து, நிமிர்ந்து முகிலனின் முகத்தைப் பார்க்க,

 

அவன் சட்டைப் பையில் வைத்திருந்த பொத்தான், சிவந்திருந்த அவள் கன்னத்தில் பதிந்து தடத்தை ஏற்படுத்தி இருக்கவும், அவன் அதை அழுந்தத் துடைக்க, அவனுடைய கரங்களில் கட்டுண்டிருப்பதை உணர்ந்து, அதிலிருந்து விடுபட முயன்றவளை நிதானமாக விடுவித்தவன், “தென்! மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ஏன் விட்டுட்டு வந்த? இப்படி உன்னையே டேமேஜ் பண்ணிக்கறதவிட போராடி பார்த்திருக்கலாமே?” எனக் கேட்டான் அவன்.

“ப்ச்! அவ்வளவு பெரிய சீனியர் டாக்டர்; எங்களுக்கெல்லாம் ரோல் மாடல்; அவங்க ‘ப்ளீஸ்!’ போட்டு கெஞ்சிக் கேட்கும் போது எனக்கு  என்ன செய்யறதுன்னே புரியல!

 

அங்க நடந்தது ஒண்ணும் ரகசியமெல்லாம் இல்ல! எங்க டிப்பார்ட்மென்ட்ல எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான்.

 

ஆனால் யாருமே அதை பெருசா எடுத்துக்கல! அப்படி இருந்தும் கூட, நிலமங்கையோட பாடிய டிஸ்போஸ் பண்றதுக்கு முன்னால, என்னை அங்கிருந்து டிஸ்போஸ் பண்ண, சத்யா மேடம்மை நல்லா யூஸ் பண்ணிகிட்டாங்க! அதுதான் உண்மை!

 

வேற வழி இல்லாம, நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தேன்.

 

அப்பாவை காண்டாக்ட் பண்ண முடியல. அம்மாவால இதையெல்லாம் ஈசியா எடுத்துக்க முடியாது; பயந்துருவாங்க; ஸோ அவங்ககிட்டயும் சொல்லல!

 

எனக்கு யார்கிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்றதுன்னு தெரியல. ரொம்ப கன்ப்யூசிங்கா இருந்தது.

 

கண்ணை மூடினாலே அந்த பெண்ணோட முகம் வந்து என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது.

 

ப்ராப்பர்டி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருந்ததால அவளோட லேப்டாப் பேக்கை யாருக்கும் தெரியாம நான் வீட்டுக்கு வரும்போதே எடுத்துட்டு வந்துட்டேன்.

 

அதை பத்தி தெரியாததால நிலமங்கையோட பேரண்ஸ் கூட அதை க்ளைம் பண்ணல போலிருக்கு.

 

பேக்கை ஓப்பன் பண்ணி பார்த்தால்,  அவங்க லாப்டாப் ஆக்சிடண்ட்ல டேமேஜ் ஆகியிருத்தது. பட் டாகுமென்ட்ஸ் சேஃபாதான் இருந்தது.

 

அந்த பொண்ணு சொன்ன மாதிரி டாக்குமெண்ட், கீ எல்லாத்தையும் பிரபாவை கண்டுபிடிச்சு  அவர்கிட்ட ஒப்படைச்சா என்னன்னு திடீர்னு எனக்கு ஒரு தாட் வந்துது. அதுதான் நடந்த பாவத்துக்கு உடந்தையா இருக்கறதுக்கு நான் செய்யும் ப்ராயச்சித்தம்னு தோணிச்சு.

சென்னைல எனக்கு யாரையும் தெரியாது.  ஸோ இந்த ஆட்ரஸ் பார்த்துட்டு இங்கேயே வந்துட்டேன்.

 

அப்பா அம்மாவை பொருத்த வரையில் நான் மதுரைலதான் இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்திருப்பாங்க.

 

அப்பத்தான் தூக்கம் வராம இந்த மாத்திரையெல்லாம் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்!

 

பிறகு நிலமங்கை வேலை செய்த கம்பனில போய் விசாரிச்சேன். லீவ்ல போயிருந்ததால அவங்க இறந்துபோன தகவல்கூட அங்க யாருக்கும் தெரியல.

 

அவங்க சோழிங்கநல்லூர்ல ஒரு பி.ஜில தங்கியிந்ததா சொன்னாங்க. அங்க போய் பார்த்தால் அவங்களோட டிரஸ்ஸஸ் தவிற அங்க வேற எதுவும் இல்ல. டாக்குமென்ட்ஸ்ல பார்த்தால் ‘ஆர்.பிரபஞ்சன்’ங்கற பேரைத் தவிர பிரபாவை பத்தின டீட்டைல்ஸ் எதுவும் அதுல இல்ல.

 

அவரை கண்டுபிடிக்க முடியாம போனால், மெடிக்கல் பிரபஷனையே விட்டுடனும் அட் த ஸேம் டைம், கல்யாணம் பண்ணிக்காம லைப் புல்லா இப்படியே இருந்துடனும்; அதுதான் என் தப்புக்கு நான் செய்யும் பிராயச்சித்தம்னு நினைச்சேன்.

 

ஆனால் போனமாசம் உங்கள இங்க பார்த்ததும் என்னோட அந்த எண்ணமெல்லாம் தூள் தூளா நொறுங்கிப் போச்சு!” என முகம் சிவக்கச் சொன்னவள்,

 

“எதிர்பாராத நேரத்துல, எதிர் பார்க்காத இடத்துல உங்களை பார்க்கவும் எல்லாத்துலயும் தோத்துப் போன ஒரு பீல் வந்துடுச்சு.

 

எது நடக்கவே நடக்காதுனு நான் நினைச்சேனோ அது நடக்கவும், அப்படியே ஷாக் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு!

 

நான் உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணி, ஒரு வேளை நீங்க அதை அக்செப்ட் பண்ணிட்டாலும், அதை நான் செத்துப்போன ஒரு பொண்ணுங்கு செய்யும் ஒரு அநியாயமா நினைச்சேன்.

பல ஆசைகளோட இருந்த ஒருத்தி அநியாயமா செத்துப்போன உணர்வு கூட இல்லாம சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்கு நான் தயாராவது ரொம்ப பெரிய பாவம்னு தோணிச்சு!

 

ஆனால் உங்களை நேர்ல அதுவும் சிங்கிளா பார்த்த பிறகு, எவ்வளவு பெரிய விஷயத்தை இழப்க்கப்போறோம்னு நினைச்சு வெறுத்துப்போயிட்டேன்!

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

எங்க என் மனசு மாறிப்போயிடுமோன்னு ஒரு பயம் வேற வந்தது.

 

மாத்திரை போட்டும் துக்கம் வராமல் போனதால,  பக்க விளைவுகளைப் பத்தி நல்லாவே தெரிஞ்சிருந்தும் அதோட டோஸேஜ் அதிகமா எடுத்துக்க ஆரம்பிச்சேன் .

 

அப்படியும் மனசு அமைதி இல்லாமல் போக, சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணேன்!” என்று முடித்தாள் நிலா.

 

அதில் கலவரமடைந்தவன் “இது என்ன புதுக்கதை?  சூசைட் பண்ணிக்கத் தூண்டற அளவுக்கு நான்  என்னம்மா செஞ்சேன் உன்னை!? அதுவரைக்கும் நாம நேருக்குநேர் பார்த்தது கூட இல்லையே!” எனக்கேட்டான் முகிலன் யோசனையாக.

 

“நான்னு சொல்லுங்க! நாமன்னு என்னை ஏன் சேர்த்துக்கறீங்க?” என எகத்தாளமாகக் கிண்டலுடன் நொடிந்துகொண்டவள், “நான் உங்களை முசூரிலேயே பார்த்திருக்கேன் கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கு முன்னால! தெரியுமா?” எனக்கேட்டாள் நிலா நாணம் பூத்த புன்னகையுடன்.

***

 

நிலா பள்ளிப்படிப்பு முடித்து, டேராடூன் மருத்துவக்கல்லூரியில் அடி எடுத்து வைத்திருந்த சமயம், பதின்ம வயதின் கடைசி படிகளில் நின்றுகொண்டு, அந்த வயதிற்கே உரியக் குறும்புகளோடும், எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளோடும் வாழ்க்கையை சொட்டு சொட்டாக ருசிக்கத்தொடங்கியிருந்த சமயம், ஒரு சனிக்கிழமை விடுமுறையை அனுபவிக்கவென நண்பர்கள் கூட்டத்துடன் பனிமலைகளின் மகாராணி என்று அழைக்கப்படும் முசூரி வந்திருந்தாள்.

 

மதியம் வரை ஊரை சுற்றியவர்கள் உணவருந்த அங்கே இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் உணவகத்திற்குள் நுழைய, அங்கே உட்கார்ந்து அந்த இடத்தையே அதிரச்செய்து கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.

 

பொம்மை கடையைப் பார்த்த குழந்தை போல அந்த கூட்டத்தில் தனித்துவமாகத் தெரிந்த ஒருவனிடம் நிலாவினுடைய பார்வை சென்று நிலைத்து, பொம்மை கடையைப் பார்த்த குழந்தை போல வேறு எங்கும் நகரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்க, நண்பர்களில் கிண்டலுக்கு பயந்து பார்வையைத் திருப்பியவள் அதிர்ந்தாள். காரணம் ஆண் பெண் பேதமின்றி, அவளுடைய தோழர்கள் அனைவரின் பார்வை மொத்தமும் அவனையே மொய்த்துக்கொண்டிருந்தது.

 

‘அடப்பாவிகளா’ என மனதில் எண்ணிக்கொண்டு, கையை தட்டி அனைவரையும் உணர்வுக்குக் கொண்டுவந்தவள்,”வந்த வேலையை பார்க்கலாமா?” என ஹிந்தியில் கேட்க, அனைவரும் உணவு மேசையை நோக்கி நகர்ந்தனர்.

 

ஆனாலும் அந்த புதியவனை நோக்கிய அனைவருடைய கண்களும் அவனிடமே நிலைத்திருந்தன. அவனுக்கும் கூட பலர் அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தே இருக்கலாம். அதையெல்லாம் அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வெகு இயல்பாக இருந்தான். அவனுடைய நடவடிக்கையில் ஒரு அலட்சிய பாவம் இருந்தது. அதுவே அவனை மேலும் கம்பீரமாக காட்டியது.

 

இரண்டு பெண்களையும் சேர்த்து அவனுடன் பத்து பன்னிரண்டு பேர் இருக்கலாம். அந்த அனைவருமே நல்ல ஆளுமையுடன் மிடுக்குடனே இருந்தாலும், ஏனோ அந்த ஒருவன் மட்டும் நிலாவின் விழிகளுக்குள் புகுந்து, அவள் மனதில் கல்வெட்டாய் பதிந்துபோனான்.

 

அன்று மாலை அங்கே அமைந்திருக்கும் மார்க்கெட் பகுதியான ‘மால் ரோட்’ எனும் இடத்தில் அவர்களை மறுபடியும் பார்க்க நேரவும், நிலாவின் கண்கள் அவனைத் தேட, ஒரு கடைக்குள்ளிருந்து வெளிப்பட்டான் அவன்.

 

அவனுடைய நண்பன் ஒருவன் (ஜெய்) அவனது காதுகளில் ஏதோ சொல்லவும், அவனது வழக்கமான அலட்சியத்துடன் தோளைக் குலுக்கியவாறு அவன் செல்ல, அவளுடைய மனதும் அவன் பின்னாலேயே சென்றது. அவன் தன்னை பற்றித்தான் ஏதோ சொல்லியிருப்பானோ என்ற எண்ணம் தோன்றி, அவளை வெட்கம் கொள்ளச் செய்தது.

 

இப்படி ஸ்வாரஸ்யத்துடன் ‘சைட்’ அடிக்கும் பழக்கமெல்லாம் இயல்பிலேயே அவளுக்குப் பிடிக்காத காரணத்தால், ‘இனி இப்படி நடந்துகொள்ளவே கூடாது’ என எண்ணிக்கொண்டாள் நிலா! ஆனால் அவளுடைய பேச்சை அவளாலேயே கேட்கமுடியாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை. காரணம் அடுத்து வந்த வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து அவனைப் பார்க்கும்படியே நேர்ந்தது.

 

கெம்ப்ட்டி நீர்வீழ்ச்சி, ஜாரி பாணி நீர்வீழ்ச்சி, கன் ஹில், ஜ்வாலா தேவி கோவில், என ஒவ்வொரு விடுமுறையின் போதும் முசூரியையே அவளுடைய நண்பர்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என அவளுக்குக் கோபம்கூட வந்தது. அந்த வசியக்காரன்தான் காரணமோ எனக்கூட எண்ணிக்கொண்டாள்.

 

ஒவ்வொரு முறையும் அவள்தான் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே தவிர அவன் ஏறிட்டும் அவளைப் பார்க்கவில்லை. அவளைத்தான் என்றில்லை, அவளுடன் இருந்த எந்த ஒரு அழகியையும் அவன் ஒரு பொருட்டாக மதித்து, பார்வையைத் திருப்பக்கூட இல்லை, அவனுடைய நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விதிவிலக்காக.

 

அதுவே அவனிடம் அவளைச் சரணடையச் செய்ய போதுமானதாக இருந்தது. அவனைப் பற்றிய நினைவுகள் நாளுக்குநாள் அவள் மனதில் அதிகமாக நிறைந்துகொண்டே போனது.

 

ஒருவாறாக இரண்டு மாதங்கள் கிடந்திருந்த நிலையில், டேராடூனில் இருந்து முசூரி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ‘பட்டா பால்ஸ்’ என்னும் நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறிய பாலத்தை நோக்கி அவன் சென்றுகொண்டிருக்க, “ஹேய் முகில்! முகில்! வெயிட் பண்ணுடா நானும் வரேன்!” என அழைத்தவாறே அவனை பின் தொடர்ந்து சென்றான் அவனுடைய நண்பன் ஜெய்!

 

அப்பொழுதுதான் அவன் பெயர் முகில் என்றும் அவன் ஒரு தமிழன் என்றும் உணர்ந்துகொண்டாள் நிலா!

 

“முகில்! அதுதான் உங்க பேரா?’ என அவள் மனதிற்குள்ளே கேட்டுக்கொள்ள, “ஹேய்! சுனோ! உஸ்கா நாம் முகில் ஹேனா! ஓ ஏக் மதராஸீபீ ஹூன்!” எனக் குதூகலமாக மற்றவரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அவளுடைய தோழி ஒருத்தி. “பாவிகளா அடங்கவே மாட்டீங்களாடீ நீங்க?! டோன்ட் சே மதராசி! ஜஸ்ட் சே தமிழன்! தீவானே!” என அவர்களைப் பார்த்து மென்மையாகக் கடிந்துகொண்டாள் நிலா!

 

அதுதான் அவள் முகிலனைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பின் அவள் பல முறை முசூரியை நோக்கிப் படை எடுத்த போதும், அவளுடைய பார்வையில் சிக்கவே இல்லை அவன்.

 

தொடர்ந்த நாட்களில், அதுவரை இருந்ததைக் காட்டிலும் அவனுடைய நினைவு அதிகம் தாக்கியது அவளை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

அவனைப் போன்று ஒருவனைத்தான் மணக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றி, நாளடைவில் மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் இல்லையென்றால் அப்படியே காலத்தைக் கடந்துவிட வேண்டும் எனத் தீவிரமாக எண்ணத்தொடங்கிவிட்டாள் அவள் அவன் மீது ஏற்பட்டிருந்த ஈர்ப்பினால்.

 

அதன் பின் படிப்பு, படிப்பு என அதிலேயே தன்னை புதைத்துக்கொள்ள, அவனைப் பற்றிய எண்ணங்கள் மூளையின் ஏதோ ஒரு மூலைக்குள் சென்று மறைந்து ஒளிந்துகொண்டன.

 

அவள் ஹௌஸ் சர்ஜனாக இருக்கும் சமயம், அவளுடைய வீட்டில் திருமண பேச்சைத் தொடங்கவும், எங்கோ போய் பதுங்கி இருந்த அவனது நினைவு, சுதந்திரமாக வெளியில் வந்து அவளைத் துரத்தவும், திருமணத்திலிருந்து தப்பிக்க, மேற்படிப்பைக் கரணம் காட்டினாள் நிலா!

 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கே சென்றாலும் அவனைத் தேடியவண்ணம் இருக்கும் அவளுடைய விழிகள்.

 

சமூக வலைத்தளங்களில் கூட அவன் கிடைக்காமல் போக, நாட்கள் வேறு அதி வேகமாக ஓடிக்கொண்டே இருக்கவும், அவனை இனி சந்திக்கவே இயலாது என்ற முடிவிற்கு வந்திருந்தாள் நிலா!

 

சரியாக அந்த சமயம் பார்த்து இந்த பிரச்சினைகள் ஏற்படவும், கிறுக்குத்தனமாக ஏதேதோ முடிவுகளை அவள் எடுத்திருக்க, அடுத்த நாளே அவர்களுடைய குடியிருப்பின் பூங்காவில், மாமாவின் பேத்தியுடன் விளையாடியவாறு அவளுக்குக் காட்சிகொடுத்து அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் முகிலன்.

 

சொல்லிக்கொண்டே போனவளைப் பேச்சற்று பார்த்துக்கொண்டிருந்தவன்,  “முசூரில எனக்கு வெறும் நாலு மாச ட்ரைனிங் மட்டும்தான். அதுக்கு பிறகு, ஹைதராபாத் போயிட்டேன். அந்த பீரியட்லதான் என்னை நீ பார்த்திருப்ப! நிறைய்ய்ய்ய்ய  மிஸ் பண்ணிட்டோம் இல்ல?” என  அலுத்துக்கொண்டான் முகிலன்.

 

“ப்ச்! எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்ல! நான் அப்பவே உங்களைப் பார்த்திருந்தால், இவ்வளவு படிப்பெல்லாம் படிச்சிருக்க மாட்டேன் தெரியுமா?” என்ற நிலா, “பெட்டர் லேட் தேன் நெவெர்! இப்பவாவது இது நடந்ததே! உங்களைப் பொறுத்தவரைக்கும் இப்ப நடந்ததுதானே ஃபர்ஸ்ட் மீட்டிங்?” என்றவள்,

 

“நம் விழியின் பின்பகுதியில் அமைந்திருக்கும் ‘ஆப்டிகல் நெர்வ்’ எனப்படும் மெல்லிய நரம்பின் மூலம் நமது காட்சிகள் நொடி நேரத்திற்குள் நம் மூளைப்பகுதிக்குள் சென்று அங்கே அமைந்திருக்கும் நினைவு மண்டலங்களை சென்றடையும். அதில் ‘அமிக்டாலா’ எனும் பகுதியில்தான் பயம், மகிழ்ச்சி, காதல், துக்கம், அவமானம் சம்பந்தப்பட்ட காலத்தால் அழிக்கமுடியாத சில நினைவுகள் ஆழமாக பதிந்துபோகும்! அதுவே கண்டதும் உண்டாகும் காதலுக்கும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கவும் காரணமாக இருக்கலாம்” என அறிவியல் விளக்கம் கொடுத்தாள் நிலா முகம் மலர.

 

“பார்றா!  டாக்டர் புள்ள என்னம்மா பேசுது!” என கிண்டலுடன் அதிசயித்து, “இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன?

 

ஒரு மாசம் முன்னால நீ இதை சொல்லி இருந்தால் கூட நான் நம்பி இருக்க மாட்டேன்!

 

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா! லூசா நீன்னு கிண்டல் கூட பண்ணியிருப்பேன்! ஆனால் இதை நான் ப்ராக்டிகலா எஸ்ப்பீரியன்ஸ் பண்ணதால சொல்றேன் அழகி! ஐ ஆம் ஸ்பீச் லெஸ்!

காரணம் எதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும்; இப்ப இந்த மொமன்ட் எனக்கு இதை உன்கிட்ட சொல்லணும்னு தோணுது பேபி! தட் இஸ்… ஐ லவ் யூ ஃபிரம் த பாட்டம் ஆஃப் மை ஹார்ட்!” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய வலது கையை பற்றி, அவளது விரல்களில் மென்மையாக இதழ் பதித்தவன், பின் அவளுடைய கன்னங்கள் இரண்டிலும் கவிதை படித்தான் முகிலன்.

***

 

தைமாத முழு நிலவு, மென்மையாக ஒளிவீசிச் சிரித்துக்கொண்டிருக்க, காலை முதல் லேசான மழை பொழிந்து, நிலமங்கை குளிர்ந்திருந்தாள் இன்பமாய்!

 

அந்த சூழ்நிலையை அனுபவித்தபடி, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில், அவள் தற்கொலை செய்துகொள்ள ஏறி நின்ற சுவரில் கைகளை ஊன்றியவாறு, அன்று கவனிக்காமல் போன அழகிய நிலவையும், இருளில் நிழலெனத் தெரிந்த தூரத்துக் குன்றுகளின் எழிலையும் பார்த்து மயங்கியபடி நின்றுகொண்டிருந்தாள் நிலா!

 

அப்பொழுது அவளுடைய பார்வை எதார்த்தமாக அந்த சுவரின் கீழே அமைந்திருந்த சன் ஷேடின் மேல் பதிய, அங்கே வைக்கப்பட்டிருந்த ஏ.சி அவுட் டோர் யூனிட்டின் அருகில் விழுந்து சிதறிக் கிடந்த ஒரு கைப்பேசி அவளது கண்களில் பட்டது.

 

அதை நன்றாக உற்றுப்பார்க்கவும், சில நாட்களாக, ‘எங்கே தொலைத்தோம்?’ என அவள் தேடிக்கொண்டிருந்த அவளுடைய கைப்பேசிதான் அது என்பது அவளுக்குப் புரிந்தது.

 

அவள் தற்கொலைக்கு முயன்ற அன்று, முகிலன் அவளை இழுத்து கீழே தள்ளும்பொழுது, அது அங்கே விழுந்திருக்கவேண்டும். அப்பொழுது இருந்த நிலையில் அவள் அதை மறந்தே போனாள்.

 

அதை நினைக்கும் பொழுது முகிலன் அவளைக் காப்பாற்றிய அந்த நிகழ்வு, அவளது நினைவில் வந்து அவளது உடல் சிலிர்த்தது.

 

கும்பகோணத்தில் இருக்கும் முகிலனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பூர்வீக வீட்டில் முந்தைய நாள்தான் நிலா-முகிலனின் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்துமுடிந்திருந்தது.

 

இரு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வந்திருந்து அவர்களை வாழ்த்திச் சென்றனர்.

 

நிலா அவளது மேற்படிப்பை விட்ட இடத்திலிருந்து தொடர ஏதுவாக மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

 

மேலும், முகிலனுக்கு ரகசிய பணிகள் இல்லாத நேரங்களில், நிலாவின் படிப்பு முடியும்வரை அவளுடன் மதுரையிலேயே இருக்க வசதியாக திட்டமிட வேண்டி இருந்ததால், இந்த அவகாசம் அவனுக்கும் தேவைப்பட்டது.

 

ஜீ.கே மாமா, மாமி, ஜெயந்தி, கதிர் இவர்களுடன் ஜெய்யும் அவனது மனைவியும் வேறு சேர்ந்துகொண்டு அவர்களைச் செய்த கேலியில், முகிலனே ஓய்ந்துபோனான் என்றால் நிலாவின் நிலைமையை என்னவென்று சொல்ல?

 

அனைத்தையும் நினைக்க நினைக்க அப்பொழுதும் கூட சிரிப்பு வந்தது அவளுக்கு! அவளது அந்த நினைவைக் கலைத்தது, காற்றில் கலந்து வந்த அந்த பாடல்!

 

எட்டாத உயரத்தில்

நிலவை வைத்தவன் யாரு?

கையேடு சிக்காமல்

காற்றை வைத்தவன் யாரு?

 

இதை எண்ணி எண்ணி

இயற்கையை வியக்கிறேன்!

 

பெண்ணே! பெண்ணே!

பூங்காற்றை அறியாமல்

பூவை திறக்க வேண்டும்!

பூ கூட அறியாமல்

தேனை ருசிக்க வேண்டும்!

 

அட உலகை ரசிக்க

வேண்டும் நான்

உன் போன்ற பெண்ணோடு!

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை!

இந்த பூலோகத்தில்

யாரும் பார்க்கும் முன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்!

 

கைப்பேசியில் ஒலித்த அந்த பாடலுடன் இணைந்து அதன் கடைசி வரிகளைப் பாடிக்கொண்டே அவளை நெருங்கி வந்து, அவளது கூந்தலின் வாசம் பிடித்தவாறே நின்றான் முகிலன்.

 

அவனை எதிர்பார்த்தே காத்திருந்தாலும் அவன் முகம் பார்க்க நாணி, தலை குனிந்தவளை தன் புறம்  திருப்பி, அவளுடைய விழிகளைப் பார்க்க, அதில் போதையின் மயக்கம் இல்லை! அவன் மீதான காதலின் மயக்கம் மட்டுமே ஒளிர்ந்தது!

 

ஆனால் அவனது கண்களைச் சந்தித்தவள்தான் அதில் தெரிந்த விஷம பாவனையில் மிரண்டு போனாள். ‘ஏதோ வில்லத்தனம் செய்ய பிளான் பண்றார் போலவே!’ என எண்ணி அவள் பின்வாங்க, நொடியும் தாமதிக்காமல் அவளை அப்படியே தூக்கி, அந்த சுவரின் மேல் உட்கார வைத்தான் முகிலன்!

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-6207494321572171"
     data-ad-slot="8910475405"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

 

அதில் மேலும் மிரண்டவள், ‘வீல்’ என்ற அலறலுடன் இரு கைகளாலும் அவனது சட்டையின் காலரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் நிலா.

 

“ஏய் அழகி! கண்ணைத் திறந்து கொஞ்சம் திரும்பி கீழ பாருடி!” என சிரித்துக்கொண்டே விஷமாக அவன் சொல்லவும், மேலும் பதறியவள், “இல்ல! என்ன இறக்கி விடுங்க ப்ளீஸ்!” என்று சொல்லிக்கொண்டே, மெதுவாக கைகளைச் சட்டையிருந்து அவனது கழுத்திற்கு அவள் இடமாற்றம் செய்ய, “இவ்ளோ பயப்படுவியா நீ? அன்னைக்கு இந்த வால் மேலதான ஏறி நின்ன!” என அவன் நக்கலாகக் கேட்க,

 

“அன்னைக்கு எனக்கு வாழனும் என்கிற ஆசையே இல்ல! ஆனா இன்னைக்கு அது ரொம்பவே இருக்கு! விளையாடம இறக்கி விடுங்க!” என நிலா நடுங்கும் குரலில், கோபம் கலந்து சொல்ல அவளை இறக்கி விட்டவன், “இதே மாதிரி ஒரு த்ரில்லான லைஃபுக்கு நீ ரெடியா அழகி!” எனத் தீவிரமாகக் கேட்டான் முகிலன்.

அவன் கேள்வியை உணர்ந்து மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி தனது சம்மதத்தை பகிர்ந்தாள் நிலா.

 

அவனது வேலையைப் பற்றியும், அதில் இருக்கும் ஆபத்துகள் பற்றியும், அதில் அவனது அதீதமான விருப்பத்தைப் பற்றியும் அவளிடம் ஏற்கனவே விளக்கமாகச் சொல்லியிருந்தான் அவன்.

 

அதை அவள் உள்வாங்கிக்கொள்ள அவளுக்கு சில நாட்கள் தேவைப் பட்டது. அதன் பிறகுதான் அந்த திருமண நிச்சயதார்த்தமே ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இதற்கிடையில் பிரபஞ்சனைக் கண்டுபிடிக்க அவன் எடுத்த முயற்சியில், சீனாவிலிருந்து முகிலன் மீட்டுவந்த அவனுடைய சக உளவுத்துறை அதிகாரி பி.ஆர்.ரத்தினம், அதாவது பிரபஞ்சன் ராஜரத்தினம்தான் அவர் என்பது தெரிய வந்தது.

 

அவருடைய பெயரை சுருக்கமாக மட்டுமே அவன் கேள்விப்பட்டிருந்ததால், பிரபஞ்சனை அவருடன் இணைத்து பார்க்கவில்லை முகிலன்.

 

நிலமங்கையின் மரணத்தை மிகுந்த வலியுடன் அவருக்குத் தெரியப்படுத்தி, அந்த வீட்டையும்  நிலாவைக் கொண்டே அவரிடம் ஒப்படைத்து, அவளுடைய எண்ணத்தையும் நிறைவேற்றி, மேலும் அவர் மூலமாக நிலமங்கையின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, அவளுடைய குற்ற உணர்ச்சியையும் களைந்தான் முகிலன், டாக்டர் சத்யபாமாவை அதில் சம்பந்தப்படுத்தாமலேயே.

***

 

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவளை, “இதுவரைக்கும் பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டோம்; உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் சொல்லு அழகி!” என அவன் ஆவலாக கேட்க,

 

அதிகாலை வான் பிடிக்கும்!

வான் மீதில் முகில் பிடிக்கும்!

முகில் மறைக்கும் மதி பிடிக்கும்!

முழு மதியின் ஒளி பிடிக்கும்!

 

செண்பகப்பூ மரத்தடியில், மென் தென்றல் தான்  பிடிக்கும்!

தென்றல் கலந்து தரும் செண்பகத்தின் மணம் பிடிக்கும்!

மின்வெட்டு காரிருளில் பறக்கும் மின்மினி பிடிக்கும்!

மின்வெட்டைத் தோற்கடிக்கும் மின்மினியில் ஒளி பிடிக்கும்!

 

குயில் இசைக்கும் பண் பிடிக்கும்!

மொழிதனிலே தம்ழ் பிடிக்கும்!

 

கார்த்திகையில் மழை பிடிக்கும்!

மழை பொழியும் கார்முகிலை காதலிக்க தினம் பிடிக்கும்!

மழை மட்டும் என்றில்லை மாலை வெயில் இதம் பிடிக்கும்!

சித்திரையின் வெயில் கூட சிக்கனமாய் தான் பிடிக்கும்!

 

‘ஏண்டா இவ கிட்ட இப்படிக் கேட்டோம்’ என நொந்து, இடையே அவன் பேச வந்ததையும் கொஞ்சம் கூட கவனிக்காமல் அது பிடிக்கும் இது பிடிக்கும் என நிறுத்தாமல் அடுக்கிக்கொண்டே போனவளை,

 

“ஏய்! எதார்த்தமா என்ன பிடிக்கும்னு கேட்டா;  சொல்ல வறத கூட கவனிக்காம, பேசிட்டே இருக்க! மத்தவங்க சொல்ல வறதையும் கொஞ்சம் கவனிக்னிக்கனும்!” என கொஞ்சம் அதட்டலாக அவன் சொல்விட, அதில் மிரண்டு போய், “என்… என்ன?  கவனிக்கல… சாரி!” என அவள் தடுமாற,

 

“இது சாம்பிள் மா! இதுக்கே இப்படி பயப்படற, போலிஸ்காரன் பொண்டாட்டி இப்படியா இருப்ப?

 

பதிலுக்கு, மேனர்ஸ் இல்ல! அது இல்ல? இது இல்லன்னு எகிற வேணாம்! அதவிட்டுட்டு!

 

இதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகல!” என அடக்கப்பட்ட சிரிப்புடன், முகிலன் தீவிரமாக சொல்லவும், அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்தவள்,

 

பதிலுக்கு, “லவ் பண்ற பொண்ண… அதுவும் கட்டிக்க போற பொண்ண, தனியா இருக்கும் போது இப்படி மிரட்ரீங்க;

 

உங்களுக்கு மேனர்ஸ் இல்ல! சோஷியல் ரெஸ்பான்சிபிட்டி இல்ல! கவிதை சொன்னா பாராட்டற அளவுக்கு ரசனை இல்ல” என அவள் கடகடவென பொரியவும்,

 

“ஆஹான்! அழகி நீ பார்ம்க்கு வந்துட்ட போ! நவ் ஒன்லி யூ ஆர் பர்ஃபக்ட்லி ஓகே ஃபார் மீ பேபி! லவ் யூ!” என்றவாறு பேசிப்பேசியே சிவந்துபோன நிலாவினுடைய உதடுகளுக்கு ஓய்வு கொடுக்க அவற்றைச் சிறை செய்தான் முகிலன் அவனது இதழ்களால் மென்மையாக சில்லென்ற காதலுடன்.

 

அதுவரை முகில்களுக்குள் மறைந்திருந்த முழு நிலவு, மீண்டு வந்து அங்கே பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டிருந்தது நாணத்துடன்!

 

error: Content is protected !!