Reader’s special ud_நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் எபிலாக்-2

ஆத்மியின் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்த அனைவரும் திட்டமிட, அதை தடுத்தாள் ஆத்மி.

தனக்கு வளைகாப்பு வேண்டாம் என்று உரைத்துவிட்டாள், அவளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று விழி பிதுங்கி நிற்கையில் அந்த உன்னத பணியை தேவ்விடம் தள்ளிவிட்டனர் உறவுகள்.

அன்றைய இரவின் தனிமையில் தன்னவளின் கால்களை மென்மையாக பிடித்துவிட, அவனது யோசனையான முகத்தை பார்த்தவளும்.

“ஏன் மூஞ்சியை இப்படி வெச்சிருக்கீங்க, சகிக்கலை”என்றாள் குறும்பாக.

மில்லி மீட்டர் சிரிப்பை உதிர்த்தவன், “இன்னும் நீ நமக்குள்ள நடந்ததை மறக்கலைத்தானே”என்றான் வேதனையோடு.

“என்ன நடந்தது?”என்றாள் அவள் யோசனையாக.

அவன் அமைதியாகவே இருக்க,”இன்னும் நீ அதை மறக்கலையா? நான் மறந்துட்டேன், சும்மா அதையே கேட்டுட்டு இருந்தன்னு வையு கொன்னுடுவேன்”என்று அவள் போலியாக மிரட்ட.

 

“அப்றம் ஏன் வேண்டாம்னு சொல்ற?”என்றான் அவன் புரியாது.

“டேய், உன்னை…அவங்க தான் புரியாம பேசுறாங்க,நீயுமா?”என்றாள் கடுப்போடு.

“என்ன…?எனக்கு நிஜமாவே புரியல”என்றான்.

“அட என் மட்ட மாங்கா புருஷா, வளைகாப்பு போட்டா நான் எங்க வீட்டுக்கு போய்டுவேன், என்ன போகட்டுமா?”என்றாள் கோபத்தோடு.

“வாட்…?அதுலாம் முடியாது” என்று அவன் கத்த.

“என்ன வாட்டு? நாட்டுனு? அது தான் ரூல்ஸூ”என்றாள் அவள் கேலியாக.

“இல்ல… இல்ல நான் உன்ன அனுப்பமாட்டேன், எவன் எழுதினான் இந்த மாதிரி கேவலமான ரூல்ஸை?”என்றான் அவன் அழுத்தமாக.

“ஆஹான், நீங்க என்ன அனுப்பமாட்டேன்னு சொல்றது, நாலாம் போக மாட்டேன், உன்னை இம்சிக்காம என்னால இருக்க முடியாது, இந்த ரூல்ஸா? தெரியலை எதோ ஒரு கேனை பையன் எழுதியிருப்பான்.

சிறிது இடைவெளி விட்டவள்,”இதுவே வேற புருஷனாகவும், வேறு மாமியாராகவும் இருந்திருந்தால் ஒரு பெண் மாசமானது முதல் குழந்தை பிறக்கும் வரை தாய்வீடு தான் பார்க்கணும்னு சண்டைக்கு நின்னிருப்பாங்க, என் புருஷன் தங்கமாச்சே”என்றாள்.

“ஆமாம், என் பிள்ளை, என் முதல் வாரிசுக்கு செய்யாம நான் யாருக்கு செய்ய போறேன்”என்றான் புன்னகையோடு.

“இந்த மாதிரி நினைக்கிற நிறைய ஆண்கள் இருந்தாலும், வீட்டுக்கு பயந்து யாரும் எதுவும் செய்யறதில்லை,நமக்கு எதுக்கு வம்புன்னு இருந்திடுறாங்க”என்றாள் ஆதங்கத்தோடு.

“கூல் பேபி டால், ஏன் இவ்ளோ கோபப்படுற?”என்றான்.

“கோபம் இல்லப்பா ஆதங்கம், பெண் வேண்டும், பெண்ணின் மூலம் வாரிசு வேண்டும்! ஆனால் செலவுகள் இவர்கள் செய்யமாட்டார்கள், ஆனால் பெயர் மட்டும் இவன் எனது பேரப்பிள்ளை என்று வைத்துக்கொள்வது, அத்துனை செலவுகளையும் முகம் சுளிக்காது செய்தாலும், என் பிள்ளை என் தந்தையின் உரித்தான வாரிசு ஆகிவிடுமா, அவன் மகள் வயிற்று பேரன் என்பதோடு முடிந்துவிடும் அல்லவா? என் தந்தையை காட்டிலும் என் மாமியார் வீட்டிற்கு தானே அவன் மேல் அதிக உரிமை உண்டு, எல்லாம் வேண்டும் , செலவை மட்டும் பார்க்க மாட்டார்களாம் “என்றாள் ஆதங்கத்தோடு.

( இது போல் நிறைய குடும்பங்களில் நடக்கிறது மக்களே, ஒரு சில தாய்மார்களின் குமுறல் இது, என்னால் முடிந்த அளவு அதற்கு உணர்வு கொடுத்திருக்கிறேன்…)

“புரியுது மில்கி மா,நான் வேணும்னா உங்க அப்பா தமிழ் வாத்திக்கும் நம்ம பிள்ளை மேல சம உரிமை இருக்கு எழுதி கொடுத்துறேன்”என்றான் கேலியாக.

“அடிங்க… என்ன எங்க அப்பாவை வாத்திங்கிற, கொழுப்பா?”என்று அவள் அதட்ட.

“வாத்தியை வாத்தினு தானே சொல்லணும் பேபி டால், உன் மனசு சங்கடப்படும்னு தான் நான் இவ்ளோ டிசண்ட்டா கூப்பிடுறேன்”என்றானே பார்க்கணும்.

“அடப்பாவி, அப்போ எங்க அப்பாவை நீ என்னலாம் சொல்லுவ”என்று அவனை அடிக்க ஓடினாள்.

“வேணாம் டி, பாப்பா பாவம், ஒழுங்கா என்ன விட்டிடு”என்று அவன் கெஞ்ச.

“ஓஹோ, உன் பாப்பா பாவம், உனக்கு உன் பாப்பா முக்கியம் நான் முக்கியமில்லை,அப்படித்தானே, போ, நான் போறேன்”என்று அவள் கோபித்துக்கொள்ள.

“அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டவன், உனக்குள்ள இருக்க பாப்பாவே எனக்கு அவ்ளோ முக்கியம்னா, நீ எனக்கு எவ்ளோ முக்கியம்னு இன்னுமா உனக்கு புரியல”என்று இடைவெளிவிட்டவன்”புரியுற மாதிரி சொல்றேன்,என் குழந்தை இதயம் போல, நீ அதன் துடிப்பு போல”என்றான்.

“இதை நான் எங்கையோ படிச்சிருக்கேனே”என்று அவள் யோசிக்க.

“அடியேய், மாமன் எதையாவது சொன்னா ரசி டி, இப்படி மாமாவை கைமா பண்ணாதே, எங்க படிச்சா என்ன… நமக்கு எப்போ எப்போலாம் தேவைப்படுதோ அப்போ யூஸ் பண்ணிக்கலாம், ஓகே”என்று அவன் சம்மதம் கேட்க.

தன் சம்மதத்தை அவனது இதழில் தன் இதழால் வழங்கினாள்.

***********

மறுநாள் ஆத்மியின் தந்தை தன் மகளின் வேண்டுகோளுக்கிணங்க தன் மனைவியுடன் காபி ஷாப் வந்தார்.

ஏற்கனவே வந்துவிட்டிருந்த, சாரதா அண்ட் கோ பேமிலி அங்கே அமர்ந்திருக்க இவர்களை முதலில் பார்த்த சாரதா.

“வாங்க அண்ணா, வாங்க அண்ணி”என்றார் புன்னகையுடன்.

அவரின் வரவேற்ப்பை சின்ன தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்டவர்கள்.

எதிர் எதிர் திசைகளில் குஷன் சோபாவில் சாரதா, அறிவழகன் அந்த பக்கமும் தேவ் மற்றும் ஆத்மி இந்த பக்கம் அமர்ந்திருக்க. ஆத்மியின் பக்கத்திலும் அறிவழகனின்  பக்கத்திலும் இடம் காலியாக இருக்க.ஆத்மி தன் தாயை தன் பக்கத்தில் இருந்திக்கொண்டாள்.

தயாளன் அறிவழகனின் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டார்.

பேமிலி ரூம் புக் செய்திருந்ததால் முதலில் அனைவருக்கும் காப்பி ஆர்டர் செய்தவர்கள், அது வந்ததும் யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறிவிட.

இப்பொழுது அங்கு அமைதி மட்டுமே, யார் எப்படி ஆரம்பிக்க என்று நினைக்க.அகிலாவே துவங்கினார்.

“வந்து பொண்ணுக்கு வளைகாப்பு பண்ணனுமில்லையா? எப்போ பண்ணனும்னு சொல்றீங்களோ அப்போவே பண்ணிடலாம்”என்றார் மெதுவாக.

ஆத்மி வந்ததுமே யாரும் பேசவேண்டாம் தேவ் தான் பேச வேண்டும் என்று கூறியிருந்ததால், அனைவரும் தேவ்வை பார்க்க, அவனோ ஆத்மியை பார்க்க, அவள் அவனின் காலில் நங்கென்று ஒரு மிதி மிதிக்க.

வலியில் பல்லை கடித்தவன்,”ஆண்டி, இந்த மாசமே வெச்சுக்கலாம்,செலவெல்லாம் என்னோடது, நீங்க உங்க சைட் எல்லாருக்கும் சொல்லிடுங்க அது மட்டும் போதும் மத்ததெல்லாம் நான் பாத்துக்கிறேன்”என்று முடிக்க.

தயாளனும், அகிலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அகிலாவே தொடர்ந்தார் “இல்ல தம்… மாப்பிள்ளை பிறந்த வீட்டுக்காரங்க பண்றது தான் முறை,அது தான் வழக்கம், எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க அவளுக்கு பண்ணினதை இவளுக்கும் பண்ணனுமில்லையா”என்று அவர் உரைக்க.

“இல்லை ஆண்டி அதுக்கெல்லாம் அவசியமில்லை, என் பிள்ளைக்கு நான் செய்யணும்”என்றான்.

இப்பொழுது தயாளன் தான்”நாங்க ஒன்னும் அவ்ளோ வக்கில்லாதவங்க இல்ல, உங்களுக்குத்தான் முறை எதுவும் தெரியாது, உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுவீங்க, நாங்க எல்லாம் சரியா பண்ணனும், நாங்க நல்லாவே செய்வோம்”என்றார் கோபமாக.

தேவ் ஆத்மியை பாவமாக பார்க்க அவளோ’நீயாச்சு, உன் மாமனார் ஆச்சு என்ற ரீதியில் காபியை ரசித்து குடித்துக்கொண்டிருக்க இவன் தான் முழித்தான்.

“உங்களாலே முடியாதுன்னு நான் சொல்லலை, என் பிள்ளைக்கு நான் செய்யணும்னு ஆசை படுறேன்னு சொல்றேன் இதுல என்ன தப்பிருக்கு”என்று அவன் கேட்க.

“தப்பு, சரினு இல்ல, இவளுக்கு கல்யாணம் ஆனதே எங்க சொந்தத்துக்கு நிறைய பேருக்கு தெரில,வளைகாப்பை கிராண்டா பண்ணனும், அப்போ தான் அவங்களும் கொஞ்சம் பேசுறதை நிப்பாட்டுவாங்க”என்றார் அவர்.

“நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தான் சொல்றேன், எவ்ளோ செலவானலும் நான் பார்த்துக்கொள்கிறேன்”என்று அவன் கூறி முடிக்க.

கத்த துவங்கினார் தயாளன்”நீங்க எப்போ எப்படி இருப்பீங்கனே தெரியாது, நாளைக்கே உங்களுக்கு கோபம் வந்தா நீங்க சொன்னதெல்லாம் சொல்லி காமிச்சு என் பிள்ளையை நோகடிக்கவா”என்று அவர் முடிக்க.

“அப்பா…” என்று கத்திவிட்டாள் ஆத்மி.தேவ் அவளை சமாதானம் செய்ய அவளோ”என்ன பேசுறீங்க, ஒரு மாப்பிள்ளை கிட்ட பேசுற மாதிரியா பேசுறீங்க, அவர் நிறைய தப்பு பண்ணினார் தான் இல்லைங்கல, இந்த ரெண்டு வருசமும் என்னை இவர் எப்படி பார்த்துக்கிறார் தெரியுமா? இருபத்தி நான்கு வருடங்களில் நீங்க பாத்துக்கிட்டதை விட சிறப்பா என்னை ரெண்டே வருசத்துல பாத்துக்கிட்டாரு… பழசையே பேசி ஏன்பா அவரை துன்பப்படுத்தீறீங்க, உங்க கிட்ட சொல்லித்தான் கூப்பிட்டேன் எனக்கு என் புருஷன் மற்றும் அவங்க குடும்ப கவுரவம் தான் முதல்லன்னு, ஏன்ப்பா இப்படி பேசுறீங்க”என்றாள் வேதனையுடன் 

அனைவரும் அவளை அதிர்ந்து நோக்க, தேவ் தான் அவளை தாங்கிக்கொண்டான். தண்ணீர் கொடுத்தான். “ஏன் இவ்ளோ கோபம், மாமா தானே கேட்டாங்க, அவங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு? அவர் கேட்டதுல என்ன தப்பிருக்கு”என்று அவளை சமாதானம் செய்ய.

கோபத்தில் தான் அன்று விட்ட வார்த்தையினால் தன் மகளின் வாழ்வே தடம் புரண்டதும் என்பதும் அன்று வந்த தேவ் பழி வாங்க வந்தவன் என்பதும் இப்பொழுது இங்கிருப்பவன் தன் மகளின் கணவன் என்பதும் அவருக்கு உரைத்தது.

முக்கியமாக தன் மகளை அவன் தாங்கியதும், தன்னை உயர்த்தி பேசியதிலும் உருகி நின்றார் அவர்.

தன்னவளை வெளியே அழைத்து சென்றவன், அவளை சிறிது தூரம் நடக்க வைத்தவன், அவள் நார்மல் ஆனதும் பல அன்பு கட்டளைகளை இட்டு உள்ளே அழைத்து வந்தான்.

மறுபடியும் உள்ளே வந்தவர்கள், ஆத்மியை மட்டும் அமரவைத்தவன், தயாளனிடம் சென்றவன் “உங்க கூட பேசணும், வாங்க “என்றழைக்க.

அதில் கடுப்பான ஆத்மி “என்ன உங்க எங்கன்னு, அவரு என் அப்பா புரியுதா? ஒழுங்கா மாமான்னு கூப்பிடுங்க”என்று மிரட்ட சிரித்துவிட்டான் தேவ், தயாளனுக்கு கூட சிரிப்பு வந்தது மறைத்துக்கொண்டார்.

“ஓகே மேடம், தமிழ் வாத்தியார் மாமா சார், வாங்க போகலாம்”என்று அவன் ஆத்மியை காட்டி கூப்பிட சிரித்துவிட்டனர் அனைவரும் தயாளனை தவிர.

அவர் வராமல் இருக்கவே, “அட வாங்க மாமா”என்று அவரது கையை பற்றி இழுத்துபோனவன் யாரின் கண்ணிற்கும் படாதா இடத்திற்கு சென்றுவிட்டனர்.

பதினந்து நிமிடத்திற்கு பிறகு இருவரும் சிரித்த முகமாக வர அனைவருக்கும் ஆச்சர்யம், “மாப்பிள்ளை சொன்ன எல்லாத்துக்கும் எனக்கு ஓகே”என்று தயாளன் தேவ்வை நோக்க.

“உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே மாம்ஸே”என்று அவன் பதில் மொழிக்கூற.

எப்படி என்று ஆத்மி கேட்க”அப்படித்தான்”என்றனர் இருவரும் கோரசாக.

*************

வண்ண விளக்குகளும், பல நிற வண்ணத்து பூக்களும் மேடையை அலங்கரிக்க பேபி ஷவர் என்று பூக்களால் மேடையில் ஆங்கிலத்தில் அழகாய் எழுதியிருக்க அதன் கீழே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பூக்களால் ஆத்மிகா தேவ் என்ற பெயர் அழகாய் எழுதியிருக்க அந்த பக்கம் ஆண் பிள்ளையை குறிக்கும் விதமாக ப்ளு கலர் பலூன்களும் இந்த பக்கம் பெண் பிள்ளைக்காக பிங்க் நிற பலூன்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வெள்ளை வேட்டி சட்டையில் கையில் கைப்பேசியில் அடுத்தடுத்து கட்டளைகளை இட்டவண்ணம் இருந்தவன், “தேவ்”என்ற சாரதாவின் அழைப்பில் திரும்பினான்.

அவரின் கையில் இருந்த தட்டில் இட்லிகளும் சாம்பாரும் இருக்க அதை கண்டவன் புன்னகையோடு அவரை பார்க்க. அவரோ “என் பிள்ளை சாப்பிடாம இருக்கான்”என்று அவர் கூறியதில் சிரித்துவிட்டவன் சற்றே முன்னே சென்று டைனிங் ரூமில் சேரில் அமர்ந்து “ஆ”காட்டினான். 

அவனுக்கு சாரதா ஊட்டிவிட, அதை கண்ட அறிவழகனின் கண்ணிலும் கண்ணீர் பார்த்துக்கொண்டுத்தானே இருக்கிறார் மகனை தன் மனைவி தாங்குவதை, தேவிற்கும் அப்படியே தான் இழந்த வாழக்கையை வாழ்வதில் அத்தனை இன்பமாக இருந்தது, ஒவ்வொரு நிமிடமும் அழகாய் கழிந்தது, அறிவழகனோடு அவன் இன்னும் நன்றாக பேசவில்லை, ஆனால் தவிர்க்கவுமில்லை, தன் வீட்டிற்கு வந்த நண்பனிடம் இவர் என் தந்தை என்று அவன் அறிமுகப்படுத்தியதில் திக்குமுக்காடிப்போனாய் மனிதர்.

இப்படியாக இவர்கள் வாழ்வு அருமையாக சென்றது, உண்டு முடித்ததும் தண்ணீரை அவன் தேட, அதை அவன் முன் வைத்தார் அறிவழகன். ஒரு சின்ன சிரிப்போட அதை எடுத்து பருகியவன் சென்று விட்டான்.

வளைகாப்பை துவங்க நல்ல நேரம் வந்ததும் விழாவை துவங்கலாம் என்று சில பெருசுங்க சொல்ல ,ஆத்மியை அழைத்துவந்தனர் சில தோழிகள்.

மஞ்சள் புடவையில் பெப்ஸி ப்ளு பார்டரில் அங்கங்கே ஸ்டோன் வேலைப்பாடு செய்யப்பட்டுருந்த சேலையை மடிப்புகள் அழகாக தெரிய கட்டியிருந்தவள், அழகான வைர நெக்லஸ்,ஹாரத்தோடு மேட்சான ஜிமிக்கியுடனும், மெல்லிய நெற்றிச்சுட்டியுடனும் ஒற்றை வைர வலையலோடு, தேவதைக்கே டப் கொடுக்கும் பேரழகோடு வந்தவளை கண்களால் இவன் கபளீகரம் செய்ய அவளோ இவனை கண்டுக்காது செல்ல, அவளின் கோபம் எதற்கு என்று அறிந்தவன் சிரித்துவிட்டு சென்றுவிட்டான்.

அவளை அமரவைத்தவர்கள் இவனையும் அழைத்து பக்கத்தில் அமரவைத்தனர்.அவள் இவனை முறைக்க,இவன் இளித்து வைக்க , சம்பிரதாயம் துவங்கியது.நலங்கு வைத்து, ஆலம் சுற்றி, சந்தனம் வைத்து வளையல் அணிவித்து, என்று வெகு விமர்சையாகவும் கோலகலமாகவும் நடந்து முடிந்தது வளைகாப்பு.

எல்லாம் முடிந்து ஆத்மியின் பெற்றோர்  கிளம்ப அவன்” போகவேண்டாம்” என்று தடுக்க.

 அதை மறுத்தவர்களாக”வேண்டாம் மாப்பிள்ளை, பேரு காலம் இங்க என்று ஆகிடுச்சு,குழந்தை பிறக்குறதுக்கு பத்து நாளைக்கு முன்ன வந்து தங்கிகொள்கிறோம்”எற்று முடித்து சென்றுவிட்டனர்.

அன்றைய இரவில் அனைத்து ஹெவி அலங்காரங்களையும்,சேலையையும் கலைந்து ரெப்ரஸ் ஆகி வெல்வெட் பிங்க் கலர் நைட் ரோப்பை அணிந்திருந்தாள் ஆத்மி.

இவன் உள்ளே நுழைந்ததும் அவள் முகத்தை திருப்பிக்கொள்ள “கோவக்கார கிளியே”என்று இவன் பாட ஆரம்பிக்க பக்கத்திலிருந்த தலையணையை அவன் மீது எரிய.

“ஏன் இவ்ளோ கோபம்”என்று அவன் சிரிக்க.

“ஏன் உங்களுக்கு தெரியாதாக்கும்”என்றாள் இவள் கோபமாக.

“பேபிமா நீ எப்படி கேட்டாலும் உங்கப்பாவை எப்படி கவுத்தேன்னு சொல்லமாட்டேன்” என்றான் பின் “இன்னைக்கு காலையிலிருந்து உன்னை பார்க்கலைதான் உன்னை பார்த்தால் நான் சும்மா இருக்கமாட்டேன், அப்றம் நீதான் சண்டைக்கு நிப்ப, மண்டபத்தில் அத்தனை பேர் முன்னாடியே உன்னை எப்படி பார்த்தேன் தெரியுமா”என்று அவன் நிறுத்த.

அவளது முகம் இரத்தமென சிவக்க அதை அவள் மறைக்க நினைத்து, அந்த பக்கம் திரும்ப அதை ரசித்தவனாக.

“நீ இருந்த அழகுல நான் மட்டும் உன்னை தனியா பாத்திருந்தேன்… அப்றம் நடக்குற சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை… அப்றம் சேலை கசங்கிப்போச்சுனு கத்துவ”என்றான் ரசனையாக.

அவள் அவனை அடிக்க அதை அழகாய் பெற்றுக்கொண்டான்.

ஹே, யாரை கேட்டு சேலையை மாத்தின, மாமா வர்றதுக்கு முன்னாடி, நான் வந்து ஹெல்ப் பண்ணியிருப்பேன்ல”என்று அவன் குறும்பாக கூற.

“ஒன்னும் தேவையில்லை, பேசாம படுங்க”என்று அவனிற்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள் ஆத்மி. வெடிசிரிப்பு சிரித்தவன் அவளை அணைத்து படுத்துக்கொண்டான்.

**************

பிரசவ வார்டில் ஆத்மி பழங்கள் சாப்பிட்டு கொண்டிருக்க, தேவ்வோ, பச்ச தண்ணிர் கூட குடிக்காமல் அமர்ந்திருந்தான்.

காலையிலிருந்து ஆயிரம் தடவை , “பிரசவம் வலிக்குமா டாக்டர்?”இவன் பண்ணிய அக்கப்போரில் கடுப்பானவர்கள், “தயவு செய்து நீங்க கிளம்புங்க சார்”என்று கெஞ்சியிருந்தனர்.

தேவ் ஆத்மியை பார்க்க அவளோ தான் தன் பழம் என்று அதனுடன் ஜாலியாக இருக்க,’ கொஞ்சமாவது பயம் இருக்கா பாரேன்… கூலா ஆப்பில் சாப்பிடுறா’என்று இவன் புலம்பி அவளை முறைக்க.

அதை பார்த்த ஆத்மியோ “என்ன…முறைப்பு, அடுத்து பாப்பா பிறக்குற வரை  எதுவும் சாப்பிட கூடாதாம் அதான் இப்போவே சாப்பிடுறேன்”என்றாள் அவள் அப்பாவியாக.

இவன் பயத்தில் ரெண்டு நாளாக தூங்கவுமில்லை, ஆத்மியை இங்கு சேர்த்து ரெண்டு நாள் ஆகிறது,அன்றைய நாளின் இரவில் வலியில் துடித்தவளை சாரதா எவ்வளவு சொல்லியும் கேட்காது மருத்துவமனையில் சேர்த்திருந்தான் தேவ், இது போலியான வலி என்று அவர்கள் கூறிவிட… பரவாயில்லை ஆத்மி இங்கையே இருக்கட்டும் என்று சேர்த்துவிட்டான்.

ரெண்டு நாளாக மகப்பேறு பற்றி நிறைய படித்து தெரிந்துக்கொண்டவனுக்கு பயம் உச்சக்கட்டத்தில் வந்தது அதன் தாக்கம் இப்பொழுது அவனின் நிலைமை.

தேவிற்கு ஆத்மி தைரியம் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

அன்றைய நாளின் மாலை வேலையில் இவளுக்கு உண்மையான வலி வந்துவிட, தேவ்வின் கைகளை பிடித்தவாறு “அம்மா” என்று அலறியவளின் விழி நீரை காட்டிலும் தேவ்வின் விழிநீர் அதிகமாய் வர. அவன்தான் மிகவும் பயந்து போனான்.அறை மணி நேர போராட்டத்தின் பயனாக,அவர்களது மகவு இப்பூமியை வந்தடைய.

வீல் என்று கத்தி தன் வருகையை தன் பெற்றோருக்கு உணர்த்திய பிஞ்சோ”நான் வத்துட்டேன்”என்று அழகாய் அழுகை ராகம் பாடியது.

பிள்ளையை ஒரு செகெண்ட் காட்டியவர்கள் எடுத்துசென்றுவிட்டனர், பிள்ளையை நல்லபடியாக பெற்றெடுத்தோம் என்ற நம்பிக்கை கிடைக்கப்பெற்றவளாக,தன் கண்களை மூடினால் ஆத்மி.

அவளின் கைகளை விளக்காது அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தவன்.நர்ஸ் அவனது பிள்ளையை கையில் கொடுக்க வர, தன் பிள்ளையை பிஞ்சு முகத்தை கண்களிலும், இதயத்திலும் சேமித்தவன், “வெளியே கொடுத்திடுங்க சிஸ்டர்”என்று கூறிவிட்டு தன் மனையாளிடம் அமர்ந்துக்கொண்டான்.

அரைமணி கழித்து கண்விழித்தவளோ, அவனை கண்டு புன்னகைக்க,

“தாங்க் யூ மில்கி”என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க.

“தாங்க் யூ லாம் வேண்டாம், அப்பாவை என்ன பண்ணுனீக?” என்று கேட்க.

சிரித்தவனோ, “கட்டிப்பிடிச்சு, கண்ணத்தில் உம்மா கொடுத்தேன்”என்க.

“எதேய்…”என்று இவள் அதிர.

“உண்மைத்தான் ஆத்மி, இப்படி ஒரு தேவதையை எனக்கு கொடுத்ததுக்கு நன்றி மாமா, நீங்க மட்டும் இல்லனா என் தேவதை வந்திருப்பாளானு ஒரு பெரிய ஐஸ் வச்சேன், பின் உன்னை நான் சந்தித்த நிகழ்வையும் என் காதலையும் மானே தேனே போட்டு பில்டப் பண்ணி சொல்லி மாமாவை கவுத்துட்டேன்”என்று இவன் கண்ணடிக்க.

“அடப்பாவி”என்றாள் ஆத்மி.அவன் இளித்து வைக்க.

“நம்ம பொண்ணு எங்க?”என்றாள் கேள்வியாக.

“வெளிய இருப்பான்னு நினைக்குறேன்”என்றான் தேவ்.

“நினைக்குறீங்களா? அப்போ பாப்பாவை நீங்க வைக்கலையா?”என்றாள்.

“நீ கண்ணு முழிச்சு பேசுனதுக்கு அப்றம்தான் பாப்பாவை ரெண்டு பேரும் சேர்ந்து தூக்கணும்னு நினைச்சேன்”என்று அவன் கூற அவனது அன்பில் நெகிழ்ந்தவளாக அவளது கண்கள் கண்ணீரை சிந்த.

அதை மென்மையாக துடைத்தவன், “வலிக்குதா கண்ணம்மா”என்று வினவிட அவள் இடம்வலமாக தலை ஆட்ட.

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்,இரு இரு பாப்பாவை  வாங்கிட்டு வரேன், அவளை வைத்துவிட்டு சொல்றேன்”என்று வெளியில் சென்றவன் அவர்களிடம் ஆத்மி விழித்துவிட்டதை சொல்லி இப்பொழுது வரவேண்டாம், சிறிது நேரம் கழித்து வாங்க என்று கூறியவன், குழந்தையுடன் உள்ளே வந்தவன்.

அதை ஆத்மியிடம் காட்ட படுத்தவாறே முத்தம் வைத்தவள், “உங்கள மாறியே இருக்கா”என்று கூற.

“அஹான், என் பொண்ணு என்ன மாறித்தான் இருப்பா, உன்ன மாதிரி ஒரு பாப்பா வேணும்னா சொல்லு ஏற்பாடு பண்றேன்”என்று அவன் கண் அடிக்க.

“எழுந்து வரமுடியாதுன்னு லொள்ளு பண்றீகளா, பிச்சுடுவேன்”என்று மிரட்டி, பின் “என்ன சொல்லணும்”என்று நியாபகப்படுத்த.

“நெஞ்செம்மெல்லாம் உனை வைத்து,

வஞ்சத்தால் உனை வதைத்து

வன்கொடுமை செய்தவனையும் மன்னித்து.

எனக்காய் ஒரு உயிரை சுமந்து பெற்றெடுத்தவளே.

என் கண்ணம்மா…

என் காதல் கண்ணம்மா நீயம்மா…

“அட அட அட “என்று சபாஷ் போட்டால் ஆத்மி.

இந்த காதல் கிறுக்கன் தன் காதலியை மென்மேலும் காதல் செய்ய வாழ்த்தி விடைப்பெறுவோம்…

இல்லறம் நல்லறம்❤️

_முற்றும்_