RR 3

RR 3

ரௌத்திரமாய் ரகசியமாய்-3

ருத்ரனது கார் வேகமாய் நகரின் மையப்பகுதியை தாண்டிச் சென்று கொண்டிருக்க, அதே வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாய் பின் மற்ற காரும் தொடர்ந்தது.

அமர், “ருத்ரா, இன்னும் அவங்க எங்களை துரத்திட்டு தான் இருக்காங்க. நாம இங்க வந்த தகவல் கண்டிப்பா போயிருக்கும்..” ரிவர் வியூ வழியாக பார்வையை பதித்தபடி பதற்றமாக கூறினான்.

“லெட் தெம் கம்..” என்றான். அவன் முகம் இறுகியிருந்தது. முகத்தில் வேறு‌ எந்த உணர்ச்சியும் இல்லை.

நடமாற்றமற்ற ஒதுக்கு புறமொன்றில் காரை நிறுத்த திட்டமிட்டான் ருத்ரன். ருத்ரனின் கட்டளைக்கேற்ப அமர் காரின் வேகத்தை குறைத்தான். பின்னால் வந்த இரு கார்களும் சிறு இடைவெளி விட்டு வேகத்தை குறைக்க அவர்களுக்கு புரிந்து விட்டது. ருத்ரன்‌ துரத்தப்படவில்லை ருத்ரனால் நாங்கள் இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறோம் என.

இது இப்படித் தான்‌ இருக்க வேண்டுமென நிமிடத்துக்குள் முடிவெடுத்து ஒரு திட்டமிம் வகுக்கப்பட்டது. இவர்களுக்கும் தெரியும் ருத்ரன் ஒன்றும் பயந்து ஓடுபவனல்ல. இந்நேரம் க்ளியர் மாஸ்டர் ப்ளேன் செய்திருப்பான். இங்கிருந்து நம்மால் இப்படியே திரும்புவது கடினம். அதற்கு தகுந்தாற்‌போல இவர்களும் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். எதிராளிகள் பலமாக யோசித்தனர்.

அனிச்சையாய் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவினான் ருத்ரன்‌. அதை கண்டு திகைத்த அமர்,

“ருத்ரா நோ.. நாம ரெண்டு பேர். அவங்க ரெண்டு கார் குறைஞ்சது ஆறு பேராவது இருப்பாங்க.. வீ கான்ட் ஹேன்டில் தி சிச்சுவேசேன்.” என்றான் பரபரப்பாக.

அவனது இந்த‌ பேச்சில் எரிச்சலடைந்தான் ருத்ரன்.

“இந்த மாதிரி‌ சிச்சுவேசன் ஹேன்டில் பண்ண முடியாதுன்னா இந்த இடத்தில் இருக்க தகுதியில்லைனு அர்த்தம். டூ வாட் ஐ சே..” யாரும் மறுத்து பேச முடியாத குரல் அது.

அமைதியானான் அமர். வேறு‌ வழியில்லை. ருத்ரனை மட்டும் தனியே முன்னேற விட முடியாது. அது ஆபத்து. எதிராளிகள் இருவர் மட்டும் தனியாக இருக்கும் நேரம் தாக்க வந்துள்ளனர். உயிர் தப்ப வேண்டுமானால் போராடியாக வேண்டும். அவனும் தனது இடுப்பிலிருந்து துப்பாக்கியை உருவ, ருத்ரன் அவனை தடுத்தான்.

“அமர் நீ இப்போ எதுவும் பண்ணாத.. நம்ம ஆட்கள் வந்துட்டே இருக்காங்க. அது‌ வரை நான் ஹேண்டில் பண்றேன். நீ காரை நிறுத்தாம ஓட்டுறதுல கவனமாக இரு..” என்று அவனது துப்பாக்கியையும் கையில் வாங்கிக் கொண்டான்.

எதிர் தரப்பும் சுதாரித்துக் கொண்டது. அவர்கள் இரண்டு பேர் நாங்கள் எட்டு பேர். அமர் எதிர்பார்த்ததை விடவும் இருவர் அதிகமாக இருந்ததனர். எப்படியாவது வீழ்த்தி விடலாம் என எண்ணி ஆளுக்கொரு துப்பாக்கியுடன் காரை விட்டும் பாய்ந்தார்கள்.

“அட்டாக் தெம்” என்ற கட்டளையை தொடர்ந்து தோட்டாக்கள் அமர், ருத்ரனின் காரை குறி பார்க்கத் துவங்கியது‌.

சரமாரியாக விழுந்த தோட்டாக்கள் அவர்களது காரை துவம்சம் செய்ய ஆரம்பித்தது‌. புல்லட் ப்ரூஃப் கண்ணாடி தான் இருந்தாலும் எவ்வளவு நேரம் சமாளிக்க முடியும்‌ என்பது கூற‌ முடியாது. மறு நொடியே தொடர்ச்சியாக குண்டு மழை பொழிய, காரின்‌ பின்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது.

அமரும் ருத்ரனும்‌ சீட்டுக்கடியில் பதுங்கினர்.
சூல்நிலையின் தீவிரம் புரிந்தது அவனுக்கு. பதற்றமடைந்தால் காரியம் கெட்டு விடும். யாரையாவது சுட வேண்டுமென்றால் எட்டிப் பார்க்க வேண்டும். கார் கதவை லேசாக திறந்து
குறி பார்த்தான். ஒரே ஒரு தோட்டா தான். அந்தப் பக்கம் இருந்த ஒருவன் காலி.

ருத்ரனின் பார்வையின் தீவிரம் கூடியது. வெளியே எட்டிப் பார்த்தபடி,
“இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க? ப்ளடி இடியட்ஸ். அமர், கோல் தெம்..” என்று வெடித்தான்.

இன்னும் ஏழு பேர் தான். எப்படியாவது சமாளித்தாக‌ வேண்டும். அடுத்த தாக்குதல் தொடர்ந்தது. ருத்ரனின் தோட்டாவில் இன்னொருவன் வீழ்ந்தான். ஆனாலும் இவர்களை கடந்து செல்வது கடினம்.

பின்னாலிருந்து இவர்களை தாக்கும் வாய்ப்பும் அதிகம். அடுத்த தாக்குதல் ஆரம்பமானது. அது அமர்தீப்பை பொறுமையாக இருக்க விடவில்லை.. ருத்ரன் கையிலிருந்த துப்பாக்கிகளில் ஒன்றை‌ பறித்து‌ எடுத்து. கதவை திறந்த வேகத்திலேயே ஒருவனை சுட்டு வீழ்த்தினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் சரசரவென வழுக்கி வந்த இரண்டு கார்கள் வரிசையாய் வந்து நிற்க, அதிலிருந்து துப்பாக்கியோடு இறங்கியவர்கள் மீதமிருந்த ஐந்து பேரையும் சுட்டு வீழ்த்தினர். மறு கணமே ருத்ரன், அமர்தீப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

***

“இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலில் எட்டு பேர் சுட்டுக்கொலை.” என்ற செய்தி வாசிப்பாளரின் குரலில், “உண்மையா?” என்பது போல் கணவனை திரும்பி பார்த்தார் சுமித்ரா.

நெடிய பெரு மூச்சொன்றை இழுத்து விட்டு, “நேத்து ஈவ்னிங் ரெண்டு கும்பலுக்கு ஷுட் அவுட் நடந்திருக்கு. எட்டு பேர் ஸ்பாட் அவுட். அந்த ஸ்பாட்டை க்ளியர் பண்ணிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு..” என்றார் விஸ்வநாதன்.

கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியை வெளிக்காட்டி “என்னங்க சொல்றீங்க.. எட்டுப் பேரை சுட்டு கொன்னுட்டாங்களா? யாருங்க இப்படி ஈவிரக்கமில்லாம கொலை பண்ணியிருக்காங்க? வினவினார்.

“சாதாரண ரோட் சைட் ரௌடிகளா இருந்தா ஈஸியா பிடிச்சிடலாம். இவங்க அப்படி இல்லை. இது கேங்க் வார்..பெரிய நெட்வொர்க் இது. அப்படிப்பட்ட ரெண்டு குரூப்ஸ்க்குள்ள நடந்த மோதலில் தான் இது நடந்திருக்கு.

இவங்க‌ளுக்கு பணபலமும் ஆள் பலமும் நிறையவே இருக்கு. கொலை செய்யுறதெல்லாம் இவங்களுக்கு பெரிய விஷயமே இல்லை. சந்தேகம்னு வந்துட்டா கூட இருந்தவன்னு எல்லாம் பார்க்க‌ மாட்டாங்க. ஆளையே காலி செஞ்சிடுவாங்க.

எந்த இடத்தில் எப்படி இருப்பாங்கனு கூட தெரியாது. ஆனா இதுல முக்கிய‌ இடத்தில் இருப்பவங்க எல்லாம் சமூகத்தில் பெரிய புள்ளிகள். யாருன்னு தெரிந்தாலும் அவங்களுக்கு எதிரா ஒரு சின்ன ஆதாரம் கூட இருக்காது. இவங்களை நெருங்குறது‌ ரொம்ப கஷ்டம். மேலிடத்திலிருந்து அழுத்தம் எங்களுக்கு தான் கொடுத்துட்டே இருக்காங்க. ஹூம் பார்க்கலாம்..” என்று நீளமாக விளக்கி விட்டு தனது பனிக்குச் செல்ல ஆயத்தமாக சுமித்ராவுக்கு தான் பாதி புரியவேயில்லை.

“ஆனாலும் பாவம்ல யாரா இருந்தாலும் உயிர் தானே..” என்று மென்மை உள்ளம் கொண்ட அவர்களுக்காக உண்மையாக வருந்தினாள் சுமித்ரா.

“ஆமா செத்தவங்க எல்லாரும் பெரிய மகான்கள் தானே. இந்த மாதிரி வாழ்ந்தா சாவும் இப்படி கொடூரமா தான் இருக்கும். இவனுங்க இருந்தாலும் நமக்கு தொல்லை செத்தாலும் நமக்கு தான் தொல்லை..” அலுத்துக் கொள்ள, அப்பொழுது தான் தூக்க கலக்கத்துடன் கண்களை கசக்கியடி எழுந்து வந்த தாமிரா தாய்க்கும் தந்தைக்கும் ‘குட்மோர்னிங்’ கூறிக்கொண்டு தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

தாமிராவின் தந்தை விஸ்வநாத் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. முன்தினம் நடந்த கொலைகளின் விசாரணை அவரின் தலைமையில் கீழே தான் நடந்து கொண்டிருக்கிறது.

காலையில் எழுந்ததும் தந்தையை தான் முதலில் தேடுவாள்‌. அவர் வெளியே கிளம்ப ஆயத்தமாகும் போது தாமிரா இப்படித் தான் அவரைக் கட்டிக் கொள்வாள். சிறு வயது முதலே அவளது பழக்கம் இத்தனை வயதாகியும் மாறவேயில்லை. குடும்பம் தான் அவளது முழு உலகமே‌.

தூக்கம் கலையாமல் அவரது தோளில் சாய்து கண்களை திறவாமலே, “என்னப்பா காலையிலே‌ கேங்க்ஸ்,துப்பாக்கி, கொலைனு பேச்சு? புது கேஸா?” என்று கேட்டாள்.

“நேத்து ரெண்டு க்ரூப்புக்கிடையில நடந்த சண்டையில…” இடை நிறுத்தியவர் தொடர்ந்து “ப்ச் எது எப்படியோ அவனுங்க முடிவு கொடூரமா தான் இருக்கும் கேட்க கூட நாதியில்லாம ரோட்ல அநாதை பிணமா தான் கிடப்பாங்க. சரி அதை விடு” என்றவர் அவளை தன்‌ முன்னே நிறுத்தி நிமிர்ந்து அவள் தோள்களையும் பற்றி,

“டாக்டர் தாமிரா விஸ்வநாத். நீ தான் இந்த அப்பாவோட என்னோட கர்வம், பெருமை எல்லாமே.. வேர்ல்ட் பெஸ்ட் டோட்டர்னா என் தாமிரா தான்..பார்த்தியா சுமி என் டாக்டர் பொண்ணை..” என தன் மகளை பெருமை பொங்க பார்த்தபடி மனைவியிடம் கூற மகளின் கோலம் கண்டு சுமித்ரா கொஞ்சம் கடுப்பானார்‌.

“ஆமாங்க நீங்க தான் இவளை தலையில் வச்சிட்டு ஆடனும். எழுந்து வர்ற நேரத்தை பார்த்தீங்களா? என்ன பெரிய டாக்டரா இருந்தாலும் இன்னொரு இடத்தில் வாழ வேண்டிய பொண்ணு வீட்டில் ஒரு வேலை பார்க்குறாளா? போ முதல்ல பிரஷ் பண்ணிட்டு வா..” சாதாரண தாயாய் மகளை அதட்ட,

“அப்பா…” என்று சிணுங்கினாள் தாமிரா.

“சரி விடு மா. உன் அம்மாவை பத்தி தான் தெரியும்ல..” என்றவர் சோபாவில் அமர்ந்து பக்கத்தில் அவளையும் அமர்த்தி,

“ட்ரெயினிங் எந்த ஹாஸ்பிடல்?” எனக் கேட்டார்.

“கண்டி (Kandy) ஜெனரல் ஹாஸ்பிடல் ப்பா”

“சிந்துவுக்கும் அங்கே தானே?”

“ஆமாப்பா நான் சிந்து மொத்தம் பதினைந்து பேர் கண்டி ஹாஸ்பிடல்”

“அப்போ ரகு?”

“அவன் இங்கயே தான்பா கிடைச்சிருக்கு. இது தெரிஞ்சதும் ரொம்ப அப்செட் ஆகிட்டான். அவனை தான் ரொம்ப மிஸ் பண்ணுவோம்.” என்றாள் கவலையாக.

அவருக்கும் தெரியும் இவர்களது நட்பின் ஆழம். மிளகு முக வாட்டத்தை கண்டு,

“ஜஸ்ட் ஒன் இயர்‌ தானே மா. அப்போ உனக்கும் சிந்துவுக்கும் அங்கே தங்குறதுக்கான எல்லா அரேஞ்ச்மன்ட்டும் பண்ணிட்றேன்.” என்று விட்டு அவர் அலுவலை பார்க்க கிளம்பிச் சென்றார்.

தாமிரா முன் தினம் நடந்த எதையும் வீட்டினரிடம் கூறியிருக்கவில்லை. அது தெரிந்தால் அதற்கும் திட்டு விழும் என்று கூறாமல் விட்டு விட்டாள். அவளுக்கு இது மறக்க முடியாத பிறந்த நாளானது. இரவு குடும்பத்தினருடன் டின்னருக்கு வெளியே செல்ல தருண் அழைத்த போது மறுத்து விட்டாள்.

தந்தை கிளம்பியதும் சோபாவின் மேலேறி அமர்ந்து கொண்டே டீவியை பார்க்க ஆரம்பிக்க, அவளது அலைப்பேசிக்கு ஓர் குறுந்தகவல் வர அதை எடுத்துப் பார்த்தாள். ரகு தான் அனுப்பியிருந்தான்.

முன்தின நிகழ்வில் தாமிராவை விட அதிகம் பயந்து போனது ரகு தான். ஓர் நொடி தாமதித்திருந்தால் கூட அந்த கார் வந்த வேகத்தில் அவள் மீது மோதியிருந்தால் தாமிராவை உயிருடன் பார்த்திருக்க முடியாது அந்த காட்சியே அவன் கண் முன் வந்து இம்சை செய்தது.

அந்த சம்பவத்திற்கு பிறகு சிந்துவும் ரகுவும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவளை முழுமையாக பரிசோதித்து பார்த்து விட்டு எந்த பிரச்சினையுமில்லை என்றே பிறகே அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

அவளை பாதுகாப்பாக வீட்டில் விட்டுச் சென்ற பின்னும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அவள் எப்படி இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் காலை எழுந்ததுமே அனுப்பிய குறுந்தகவல் தான் இது.

‘குட் மோர்னிங் ஏஞ்சல்.. ஆர் யூ ஓகே?’ அதை பார்த்ததும் அவள் முகத்தில் தாமாதகவே புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அதே புன்னகையுடன் அவளும் பதிலை தட்டி விட்டாள்.

அவள் டீவியில் மூழ்கியிருந்த நேரம், வேகமாக தெறித்து ஓடி வந்து அவள் கால்களுக்கிடையில் புகுந்து கொண்டது பஞ்சுப் பொதி போல் புசுபுசுவென வளர்ந்திருந்த அவளது பூனைக்குட்டி.

அது அப்படி பாய்ந்து ஓடி வந்ததும் என்னமோ ஏதோ எனப் பதறியவள், அதை கைகளில் அள்ளிக் கொண்டு, “ஹேய் ப்ருஸ் லீ செல்லம் ஏன் இப்படி ஓடி வந்த? என்னாச்சுடா?” அவள்‌ தலையே தடவியபடி அவள் செல்லப் பூனையிடம் வினவிக் கொண்டிருக்க,

அதன் பின்னாலே ஒரு கையில் நீண்ட குச்சொன்றையும் மறு கையில் அவளது நாய் குட்டியையும் தூக்கிப் பிடித்தபடி ஓடி வந்தாள்.

வந்ததும் தாமிராவின் கையிலிருந்த பூனைக்குட்டியை பார்த்து, “அக்கா உன் ப்ரூஸ் லீ என் டோங்க் லீக்கு ரொம்ப தொல்லை கொடுக்குறான்.. அப்புறம் இவன்‌ ஏதும் அவனை கடிச்சு வச்சிட்டான்னு எங்கிட்ட கம்ப்ளயீன்ட் பண்ணாத.” கத்தினாள்.

‘ஐயோ இன்னைக்கு என்ன பஞ்சாயத்தை எடுத்துட்டு வந்திருக்கானோ.’ என்று எண்ணியபடி,

“அப்படி என்ன செஞ்சான் சொல்லு” என்ன நடந்ததென அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்டாள்.

ப்ரூஸ் லீயை ஒரு தரம் முறைத்தவள், “டோங் லீக்கு தட்டில வச்சிருந்த சாப்பாட்டை கீழே கொட்டி விட்டான். சரி ஏதோ தெரியாம நடந்திருக்கும் என்‌ செல்லத்துக்கு பசிக்கும்னு வச்சா உன் திமிரு பிடிச்ச ப்ரூஸ் லீ மறுபடியும் அதையே பண்ணுது. கோவம் வருமா வராதா சொல்லு?” தாமிராவிடம் கேட்க, இம்முறை தன் பூனையை அவள் முறைத்தாள்.

தொடர்ந்து, ” உன்னோட இந்த திமிரு பிடிச்ச பூனையை அடக்கி வை. இல்லை என் டோங் லீயின் நோக்கு வர்மக்கலையை யூஸ் பண்ணி உன் பூனையை லூசா அலைய விடுவேன் பாரு..” விழிகளை உருட்டி மிரட்ட கடுப்பானாள் தாமிரா.

“உன் நாய் மட்டும் பண்ணாத வேலையா? என் செல்வத்தை எவ்வளவு டிஸ்டர்ப் பண்ணியிருக்கு அப்போ எல்லாம் நானும் பொறுத்து போனா என் ப்ரூஸ் லீயை லூசுன்னு சொல்றியா? உன்னோட சுமார் மூஞ்சி டோங் லீயை விட என் ப்ரூஸ் லீ எவ்வளவு அழகுனு பாரு..” அவளும் பதிலுக்கு ஏதேதோ கூறித் திட்ட, சமையலறையில் இருந்த சுமித்ராவுக்கு தான் தலை வலி‌த்தது.

சமையல் கரண்டியுடனே ஹாலிற்கு வந்து,
“இப்போ உங்க சண்டையை நிறுத்த போறீங்களா இல்லையா? இப்போ நிறுத்தல உங்க ரெண்டு எலியையும் வீட்டுக்குள்ள வச்சுக்க மாட்டேன்..” என்றதும் அதற்கு ஒரு சத்தம் வரவில்லை.

தாயின் இந்த ஒரு அதட்டலில் அடங்கி விட்டனர். அம்மாவின் ஆயுதம் அது தான். ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு எதிரெதிரே செல்ல ப்ருஸ் லீயும் டோங் லீயும் முறைக்கத் தவறவில்லை.

***

அந்த விஸ்தாரமான அறையின் நடுவில் போடப்பட்ட ஆளுயர நாற்காலியொன்றில் தலையை சாய்த்தபடி காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் ருத்ரதேவ்.

அவன்‌ முகமெங்கும் சிந்தனையின் ரேகைகள் படர்ந்திருந்தன. சாதாரணமாகவே இறுகியிருக்கும் அவன் முகம் இரும்புக் குண்டலமாய்‌ மாறியிருந்தது.

இந்நேரம் செத்திருக்க வேண்டியவன் எப்படியோ சமாளித்து விட்டான்.முன்தின தாக்குதல் அவனை மேலும் யோசிக்க வைத்தது. இப்படி ஒரு தாக்குதல் நடந்தால் தோற்றதாக அர்த்தமா?இல்லை தோல்வியை ஏற்க மாட்டான் இவன்.

வந்த ஒருவனும் உயிருடன் இல்லையே‌. அவர்களுக்கு தான் யாரென்று காட்ட வேண்டும். கூடிய விரைவில் இதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள். இங்கு யாரும் யாருக்கும் தயவு காட்ட முடியாது. ஒன்றுக்கு பல மடங்கு பதிலடி கொடுத்தாக வேண்டும்.

எழ முடியாதளவுக்கு கொடுக்க வேண்டும். அடுத்த கட்டத்திற்கான திட்டத்தையும் வகுக்க ஆரம்பித்து விட்டான்.

‘விடக் கூடாது.. இதை இப்படியே விடக்கூடாது. அவர்களது அடுத்த தாக்குதலுக்கு முன் இவர்கள் முந்திக் கொள்ள வேண்டும். வலிக்க வலிக்க அடிக்க வேண்டும். உடல் விறைத்து இறுகியது.

“டாமிட்.. என்னிடமிருந்து தப்ப முடியாது. விட மாட்டேன்” கங்கனம் கட்டியடி நாற்காலியின் பிடியில் கையை ஓங்கி அறைந்து கொண்டு எழுந்தான்.

அதே நேரம் அறைக் கதவை தட்டி விட்டு உள் நுழைந்தான் அமர்.

ருத்ரன், “வாட்ஸ் த மேட்டர்” கடுகடுத்த முகத்துடன்.

“அடுத்த அசைன்ட்மென்ட் கண்டிக்கு போகனும்..” என்றான்.

அமரின் முகத்தை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தான்.

“ஓகே கெட் ரெடி..” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.

அவ்வளவுதான் அதற்கு‌ மேல் அவனிடம் பேச முடியாது. அவனுடன் இருந்த இத்தனை வருடங்களில் ருத்ரனது ஒவ்வொரு அசைவையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறான்‌. ‘சரி’ என்ற தலையசைப்போடு வெளியேறியவன் கண்டி பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினான்.

இவர்களது கண்டி பிரதேசத்தை நோக்கிய பயணம் யாருக்கு எப்படி அமையப் போகிறதோ?

error: Content is protected !!