ரௌத்திரமாய் ரகசியமாய்-5
உடலுக்கு ஸ்வெட்டரும் தலைக்கு மப்ளருமாக காட்சியளித்தனர் ஊர் ஜனங்கள். அந்த வீட்டை சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென மலைகள். வீட்டை சுற்றிலும் விரவியிருக்கும் பச்சை புல்வெளி. சுற்று மதில் அமைக்கப்பட்ட பாதுகாப்பான வீடு அது.
ஏற்கனவே இருண்டிருந்த வானம், கார் வீட்டை அடைவதற்குள் மழை வலுத்துக் கொண்டது. காற்றும் பலமாக வீசியடித்தது. காரின் மேற்கூரையில் மழை துளிகளின் சடசட சப்தம். கையில் விரித்து வைத்த குடையுடன் காரை நோக்கி ஓடி வந்தாள் மேரி.
அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவர்கள் மேரியின் ‘மேடம்’ என்ற அழைப்பில் சுயம் வர காரை விட்டும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.
பழனி அவர்களது லக்கேஜ் ஒவ்வொன்றையும் இறக்கி வீட்டினுள் வைத்தான். இருவரையும் பார்த்தான்.வந்த முதல் நாளே நடந்த சம்பவம் அவர்களுள் அச்சத்தை விதைத்திருக்கும் என்று உணர்ந்தான். மெதுவாக தாமிராவின் முன்னே வந்தான் பழனி.
“டாக்டர் மேடம்.! இங்க நடந்ததை பார்த்து பயப்படாதீங்க மேடம். நீங்க இங்க தைரியமா இருக்கலாம்.” என்றவன் தொடர்ந்து,
அங்கே நின்றிருந்த மேரியை காண்பித்து, “மேடம் இது மேரி. பக்கத்து எஸ்டேட் பொண்ணு தான். வீட்டு வேலையெல்லாம் இவ பாத்துக்குவா.. ” என்று கூற, தோழிகள் இருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலையடுத்து அங்கிருந்து கிளம்பினான்.
இரண்டு படுக்கை அறைகள், அளவான வரவேற்பறை, வரவேற்பறையோடு கூடிய குட்டி சமையலறை மற்றும் நவீன குளியலறை வசதியோடு இருவர் தங்குவதற்கான சகல வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
அழகான சுற்றுப்புறத்தை ரசிக்கும் மனநிலையில் இருவரும் இல்லை. தங்கள் அறைகளுக்குள் சென்று பொருட்களை அடுக்கி வைத்து, குளித்து விட்டு வர மதிய உணவு தயாரக இருந்தது.
அந்நேரம் சிந்துவின் கைப்பேசி சிணுங்கியது. விஸ்வநாத் தான் அழைத்திருந்தார். அங்கு நடந்த சம்பவத்தை அறிந்திருந்த விஸ்வநாத் தாமிராவுக்கு அவளது செல்போன் அணைத்து வைக்கப்படிருக்கவே சிந்துவுக்கு அழைத்தார்.
“அப்பா.. எனக்கு இங்க இருக்க பயமா இருக்குப்பா. நான் அங்கேயே வந்துட்றேன்பா. ஐ காண்ட் ஸ்டே ஹியர்.” என்று கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறினாள் தாமிரா.
“தாமிரா மை ப்ரின்சஸ்..! லிசன்.. எல்லா இடத்திலேயும் ஒரு பிரச்சினை இருக்கத் தான் செய்யும். அதுக்காக எல்லாம் பயந்து ஓட முடியுமா? அப்படி பயந்தா இந்த உலகத்துல வாழ முடியாது. ”
“அப்பா..! ஐ காண்ட் ஸ்டே ஹியர் எனிமோர். வந்ததும் துப்பாக்கி, கொலை, ரத்தம் மனித தன்மையே இல்லாத இடத்தில் வந்து மாட்டிக்கிட்டோமோன்னு பயமா இருக்குப்பா…” அவள் உடல் அழுகையில் குழுங்கியது.
” யாரையும் பார்த்து பயப்படாதே. தாமிரா..!யூ ஷுட் ஃபேஸ் தி வேல்ட் .” அவர் குரலில் ஓர் அழுத்தம் தெரிந்தது.
“எத்தனை உயிர் பா..ஹீ இஸ் சோ குரூயல்..”கண்ணீர் மாத்திரம் நிற்கவில்லை.
“தாமிரா.. பயப்படாதே அப்பா இருக்கேன்ல. ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரித்திங்.” ஒரு சில வார்த்தைகளின் பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தந்தையுடன் பேசியதன் பின் மனம் சிறிது அமைதியானது போல் உணர்ந்தாள். அப்போதிருந்த பயம், பதற்றத்தை புறந்தள்ளி விட்டு இருவரும் தத்தமது வேலைகளில் ஈடுபட துவங்கினர்.
மூன்று மாதங்களுக்கு பிறகு..
இந்த மூன்று மாதங்களில் இருவருக்கும் கண்டி நன்கு பழக்கமான ஊராக மாறியிருந்தது. ஆனாலும் அந்த குளிர்கால நிலை தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. மற்றபடி எப்போதும் மலைகள் சூழ இயற்கையோடு பிண்ணிப்பிணைந்த கண்டி அவர்களுக்கு ரொம்பவுமே பிடித்துப் போயிருந்தது.
காலையிலேயே எழுவது என்பது இருவருக்கும் பெரும் சவால் தான். இருவரும் காலை எட்டு மணிக்கே ஹாஸ்பிடல் சென்று விட மேரி வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு இவர்களுக்காக காத்திருப்பாள். மாலை இருவரும் வந்த பிறகு அவளது வீட்டுக்கு கிளம்பி விடுவாள் மேரி.
அன்று இருவருக்குமே விடுமுறை. இப்படி இருவரும் வீட்டில் இருக்கும் நாட்களில் சிந்துவே சமைப்பாள். தாமிராவுக்கு சமையல் வராது. வேலைகளை முடித்து விட்டு மாலையில் படத்திற்கு போகலாம் என்ற முடிவில் இருவருமாக ஒவ்வொரு வேலையையும் அவசரமாக செய்து கொண்டிருந்தார்கள்.
உடைகளை மடித்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் தாமிரா. அக்ஷராவிடமிருந்து வீடியோ கால் வர அதை ஏற்றதுமே அந்தப்பக்கம் ப்ரூஸ் லீயின் குற்றப்பத்திரிகை வாசிக்கத் தொடங்கினாள்.
“அக்கா.. உன் ப்ரூஸ் லீ இங்க ரொம்ப ஆட்டம் போடுறான். என்னால் சமாளிக்க முடியலை..”
“என்னாச்சு? எங்கே என் ப்ரூஸ் லீ? காட்டு பார்க்கலாம். நான் சொன்னா அவன் கேட்பான்.”
“அது தான் அனுப்பிட்டேன். இனி நீயாச்சு உன் ப்ரூஸ் லீயாச்சு. ரெண்டும் கொஞ்சி குலாவுங்க.”
“என்ன சொல்ற அக்ஷி? எங்க? எப்படி? யாருக்கிட்ட?” என தாமிரா பதற,
“அதெல்லாம் யாருக்கிட்ட கொடுக்கனுமோ அவங்க கிட்ட கொடுத்தாச்சு.” இவள் பதிலையும் எதிர்பாராது ‘கட்’ செய்து விட்டாள் அக்ஷரா.
மீண்டும் தங்கைக்கு அழைப்பெடுக்க முனைந்த வேளை வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
‘மேரி வந்து இருப்பாளோ?’ என்ற யோசனையுடன் கதவை திறந்தாள். ஆனந்த அதிர்ச்சி தான். ரகு வந்திருந்தான்.
ஒரு கையில் அவளுக்கு பிடித்த ஆர்க்கிட் மலர்க்கொத்தும், மறு கையில் தாமிராவின் ப்ரூஸ் லீயும் அடைக்கலமாகியிருந்தது. அவன் என்றும் போல அவனது வசீகர புன்னகையுடன் நின்றிருந்தான்.
“ரகூ…” அவள் முகம் முழுவதும் புன்னகையால் நிறைந்திருந்தது.
அதே நேரம் தாமிராவைக் கண்டதும் அவளது செல்லப் பூனை ரகுவின் கையிலிருந்து குதித்து இறங்கி அவள் மீது பாய ஆசையாக அள்ளிக் கொண்டாள்.
அதை அவள் முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்துக் கொஞ்சும் அழகில், என்றும் போல் ரகு ப்ளாட்டாகி விட்டான். அவன் பார்வை அவளையே மொய்த்துக் கொண்டிருந்தது. இமை மூடாமல் அவளையே பார்த்திருந்தான் அவன்.
தாமிராவின் ரகு என்ற அழைப்பில், சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் சிந்து.
“வாங்க மிஸ்டர் ரகுராம். உங்க ஏஞ்சலுக்கு மட்டும் எல்லாம் வாங்கிட்டு வாங்க..” வந்ததும் அவனை வம்பிழுக்க,
“தீணிபண்டாரமே..! இந்தா இது உனக்கு…” என்று பார்சல் ஒன்றை அவள் கையில் திணித்தான்.
“ஐ.. மை பாதாம் அல்வா..” அப்படியே சோபாவில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
ஒரு பக்கம் தாமிரா அவள் பூனையிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். சிந்துவோ பாதாம் அல்வாவை உள்ளே தள்ளுவதில் மும்முரமாக இருந்தாள்.
“அடப்பாவிங்களா.. ஒரு ஃப்ரண்ட் உங்களை பாரக்குறதுக்கா மூனு மணிநேரம் ட்ராவல் பண்ணி வந்து இருக்கான். உள்ள வா.. உட்காருனு கூட ஒரு வார்த்தை இல்லை.” சிந்துவின் தலையில் ஒரு கொட்டு வைத்தவன்,
“தீணி பண்டாரம். எப்படி திண்ணுது பாரு. இவ்வளவு தூரம் வந்து இருக்கானே ஒரு காஃபி அதெல்லாம் இல்லை.” பொய்யாய் முறைத்தான்.
“ஏன்? நான் மட்டும் தான் எல்லாம் செய்யணுமோ? உன் ஏஞ்சல் கிட்ட கேட்க வேண்டியது தானே.” அவள் பாட்டுக்கு பாதாம் அல்வாவை உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள்.
தன் செல்லப் பூனையை தரையில் இறக்கி விட்டாள். “சாரி ரகு.. ப்ரூஸ் லீயை பார்த்ததும் கொஞ்சம் எக்சைட் ஆகிட்டேன். வா உட்காரு.” என்று சோபாவை காட்ட அதே சிரித்த முகத்துடன் அமர்ந்தான் ரகு. அவளுக்கென வாங்கி வந்த மலர் கொத்தையும் அவளுக்கு நீட்ட எப்போதும் போலவே புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.
மூவரும் அவர்களது மருத்துவ பயிற்சி அனுபவங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இடையில் சிந்துவுக்கு பசியில் வயிறு நாட்டியமாடத் துவங்க,
“ரகு வா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். பசிக்குது.” என்று அவள் எழுந்தாள்.
“இன்னைக்கு சிந்து சமையல் ரகு. சூப்பரா இருக்கும்” கண்களை உருட்டி கேலியாக சிரிக்க,
“ஐயோ ஆளை விடு மா. நான் உயிரோடு ஊரு போய் சேரணும். ” கையை தலைக்கு மேல் உயர்த்தி காட்டி கும்பிடு போட, அவனை முறைத்த சிந்து அவன் கைச் சந்தில் இரண்டு பலமான அடியை வைத்தாள்.
கல்லூரி கால கலகலப்பு அவர்களை தொற்றிக் கொள்ள மகிழ்ச்சியாய் கழிந்தன அந்த நிமிடங்கள்.
***
நள்ளிரவு தாண்டிய நேரம் அது. அந்த இடத்தை சுற்றிலும் கண்ணுக்கெட்டிய வரை நீண்ட கண்டெயினர் பெட்டிகள். ஆங்காங்கே பத்து பதினைந்து பேர் போல மும்முரமாக வேலைகளை செய்தபடி அலைந்து கொண்டிருந்தனர்.
அவர்களை தன் பார்வை வட்டத்துக்குள் அடக்கியபடி பார்வையிட்டுக் கொண்டிருந்தான் பரத். அவன் பக்கத்திலேயே திலீப்பும் நின்றிருந்தான்.
மரத்தாலான ஓர் பெட்டியை பரத்தின் முன் கொண்டு வந்து வைத்தான் ஒருவன். பரத்தின் கட்டளையின் பேரில் அந்த பெட்டி திறக்கப்பட அவன் பக்கத்திலேயே நின்றிருந்த இன்னொருவன் அதனுள் இருந்து ஓர் பாக்கெட்டினை எடுத்து முகர்ந்தான்.
“பக்கா..! ஐட்டம் பாஸ்.” என்றதும் பரத்தின் தவையசைப்பில் அந்த பெட்டி இருந்த இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. அத்தனையும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதைப் பொருட்கள்.
“திலீப்..”
“யெஸ் பாஸ்.” பரத்தின் அருகில் வந்தான்.
“எல்லா சரக்கையும் இப்பவே டிஸ்ட்ரிபியூட் பண்ணிடு. அப்புறம் எங்கெல்லாம் செட்டில்மென்ட் செய்யனுமோ..” என்று பொருள் பொதிந்த பார்வையுடன் திலீப்பின் மீது நிலைத்திருந்தது.
“ஓகே பாஸ். ஐ காட் இட்..” புரிந்து கொண்டான் திலீப்.
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல பாய்ந்து வந்த காரொன்று சரேலன வழுக்கி வந்து அந்த இடத்தில் நிற்க, அதை தொடர்ந்து அதே வேகத்தில் வந்து நின்றது இன்னும் இரண்டு கார்கள்.
அவர்களது இடத்திற்குள் வந்து நிற்பதென்றால் வேறு யாராக இருக்க முடியும்? ருத்ரதேவை தவிர அவனுக்கு குடைச்சல் தர யாரால் முடியும்? கார்கள் வந்து நின்ற வேக்திலேயே புரிந்தது பரத்திற்கு இது ருத்ரன் தான் என்று. எதற்கு வந்திருப்பான் என்பதும் தெரியும். பரத்தின் பற்கள் நறநறுத்தன.
காரை விட்டு இறங்கினான் ருத்ரன். அவன் பின்னாலேயே அமர் மற்றும் அவனது பாதுகாவலர்கள். தணல் போல செக்கச் சிவந்த முகத்துடன் பரத்தின் எதிரில் வந்து நின்றான்.
“இப்போ ஏன் இங்க வந்திருக்க?” சீறினான் பரத்.
“உனக்கே தெரிந்திருக்கும் பரத்.” ருத்ரனுக்கு முன்னால் அமரிடமிருந்து உறுமலாய் வந்தது.
அமரை முறைத்தான் பரத். “நான் உன்னை கேட்கலை.” என்றான் கடித்த பற்களுக்கிடையில். பதிலுக்கு அமரும் முறைக்கத் தவறவில்லை.
அந்த இடத்தை சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். “பரத்.. யூ ஆர் க்ராஸிங்க் யுவர் லிமிட்ஸ்.” சீற்றத்துடன் பரத்தை முறைத்தான் ருத்ரன்.
“நான் இப்படி தான். உன்னால என்ன பண்ண முடியும் மேன்?” எள்ளல் தெறித்தது பரத்தின் குரலில்.
அவனை வெறித்து நோக்கினான் ருத்ரன். “இதை இத்தோட நிறுத்திக்கோ பரத். நீ ருல்ஸையும் மீறி போய்க்கிட்டு இருக்க. இது உனக்கு நல்லதில்லை. இல்லை என்னோட அடி ரொம்ப பலமா இருக்கும். யூ நோ அபௌட் மீ வெல்.” இழுத்து வைத்த பொறுமையுடன் அவனிடமிருந்து பதில் வந்தது.
அவனது பேச்சில் கடுப்பானான் பரத். அவனை நெருங்கினான்.
“ஐ காண்ட். நீ மட்டும் என்ன ரொம்ப நல்ல தொழிலா பண்ற? என்ன பண்ணுவ? சண்டை போடனுமா? கம் ஆன். நீயா? நானா? பார்த்துடலாம் வா.” கண்கள் சிவக்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிக்கொண்டே போனான்.
ருத்ரனின் பொறுமை காற்றில் பறந்தது. அவனை தொட்டுப் பேசுவது அவனுக்குப் பிடிக்காது. நெஞ்சை நிமிர்த்தி முறைத்தான். அவனது ஒவ்வொரு தள்ளலிலும் உள்ளுக்குள் அசுரன் ஆட்டம் காட்டத் துவங்கினான்.
பார்வையை மெல்ல உயர்த்தினான். இத்தனை நேரமும் பார்த்த ருத்ரனல்ல இவன். ஓர் அசுரன். ஓர் அரக்கன். ஓர் ராட்சசன்.
“யூ ப்ளடி..” ஆவேசமாக கத்தினான்.
அவன் நெஞ்சில் கை வைத்த பரத்தின் கையை அழுத்தி பிடித்தான். எலும்பு நொறுங்கி விடும் போல வலித்தது. அவனது மறு கை ருத்ரனது முகத்தை குறி பார்த்தது. மறு நொடி அந்தக் கையையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து தன் நெற்றியால் அவன் நெற்றியை பலமாக தாக்கினான். இரண்டடி பின்னால் தடுமாறி நின்றான் பரத்.
பரத்தின் பாதுகாவலர்கள் கூட்டம் ருத்ரனை நோக்கி வேகமாய் ஓர் எட்டு வைக்க, கை நீட்டி தடுத்தான் பரத்.
“கோ பேக்.ஐ கேன் ஹேண்டில் திஸ்.” கர்ஜித்தான் பரத்.
பரத்தின் நெற்றி விண் விண்னென்று வலித்தது. தகிக்கும் தனல் பார்வையுடன் நின்றிருந்தான் ருத்ரன்.
பரத் முன்னேறினான். அவனது ஒவ்வொரு தாக்குதலையும் இலகுவாக முறியடித்தான் ருத்ரன். இறுதியில் பரத் தரையில் சரிந்து விழுந்து விட்டான்.
அவன் உள்ளுக்குள் இருந்த மிருகம் பயங்கரமாக உறுமியது. அவன் பார்வை அமரின் பக்கம் திரும்பியது.
“ஒன்னு விடாம அத்தனையும் கொளுத்திடு.” ஆணையிட்டான் அவன்.
அடுத்த நொடி பரத்தின் ஆட்களின் கைகளில் துப்பாக்கிகள் முளைத்தன. அதே வேகத்தில் ருத்ரனின் ஆட்களின் கைகளிலும் துப்பாக்கிகள். எதிரெதிராக அனைவரையும் குறிபார்த்து காத்திருந்தது.
ருத்ரனது தனல் பார்வையில் துப்பாக்கிகள் இறக்கப்பட்டன. பரத்தும் தடுத்து விட்டான் ஆனால் அவன் ரத்தத்தை கொதிக்கச் செய்தது. வேறு வழியில்லை அமைதி காத்தான்.
ருத்ரனின் முகம் மாறியது. உடல் இறுக்கம் தளர்ந்தது. அவ்விடத்தை விட்டும் புறப்பட்டான். அங்கிருந்த அத்தனை கண்டெய்னர்களும் நெருப்புக்கு இறையாகிப் போனது.
.
***
இரவு நேரம் அது.ஸ்வெட்டருக்குள் உடலை முழுதாக புதைத்திருந்தாள். கழுத்தை சுற்றி ஒரு துப்பட்டாவையும் அணிந்து கைகளிரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு ரகுவுடன் நடந்து கொண்டிருந்தாள் தாமிரா.
சிந்து, ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு வீட்டினருடன் ஏதோ முக்கியமாக கதைத்தபடி அவர்களுக்கு இரண்டு மூன்றடி முன்னால் சென்றாள்.
“படம் சூப்பரா இருந்துச்சுல்ல?” என தற்போது பார்த்து வந்த படத்தை பற்றியே வளவளத்துக் கொண்டே வந்தாள் அவள். ரகுவின் மனநிலையோ வேறு மாதிரியாக இருந்தது.
மூன்று மாதங்கள் வரை அவளை நேரில் பார்க்காமல் உண்மையில் பித்துப் பிடித்தவனாய் இருந்தான் ரகு. அவள் ஊரை விட்டு வருமுன் தன் காதலை சொல்ல பல முறை முயன்றும் முடியாமல் தவித்தான்.
தன் காதலை சொல்லி விடும் எண்ணம் வரும் போதெல்லாம் நட்பை காரணம் காட்டி தன்னை நிராகரித்து விடுவாளோ? பயமும் தலை தூக்கவே மௌனியாகிப் போவான்.
இப்போது கூட அவளிடம் தன் காதலை கூறிட துடிக்கிறது அவன் மனம். ஆனாலும் ஏதோவொன்று அவனை தடுத்தது.
லேயர் செய்யப்பட்ட அலையலையான கேசம். உருளும் திராட்சை கருவிழிகள். தடித்த ரோஜாவின் இதழ் போன்ற அவள் உதடுகள். நிலவினை போன்றதொரு ஒளி முகம். தேவதை மண்ணில் குதித்த மாதிரியான தாமிரா.
அவள் கண்களை அகல விரித்து உருட்டி பேச அவனால் பார்வையை விலக்க முடியவில்லை. சாதாரணமாக இருந்தாலே ஓவியம் போல் காட்சியளிப்பாள் அவள். அடிக்கடி அவளை ஏஞ்சல் என்பதும் அதனால் தான்.
“ரகு கேப் புக் பண்ணிட்டியா?” நடந்து கொண்டே கேட்டாள்.
“ஆமா, உங்களை வீட்ல விட்டுட்டு அப்படியே நானும் கிளம்பிடுவேன்.” அவன் குரல் மெதுவாக ஒலித்தது.
காற்றில் அசைந்த அவளது கருங்கேசம் அவன் முகத்தில் வந்து மோதியது. கண்களை இறுக மூடித் திறந்தான் ரகு. ஆழமான மூச்சை இழுத்து விட்டான்.இப்பொழுதே தன் காதலை வெளிப்படுத்தி விடும் உத்வேகம். இதற்கு மேலும் காலம் தாழ்த்த முடியாது.
‘காதலை சொல்லி விடு. சொல்லி விடு.’ என காதல் கொண்ட அவன் மனம் கூக்குரலிட்டது. அதை இப்போதே செயற்படுத்தி விட நாடினான். வேறு எதை பற்றியும் அவன் யோசிக்கவில்லை அவன் காதலை கூறி விடத் துணிந்தான்.
அதே வேகத்தில், “தாமிரா.. ஐ லவ் யூ.” என்றான்.
‘வாட்’ அவள் நடை தடைப்பட்டது.
“ரகு என்ன சொன்ன?” காதில் சரியாத் தான் விழுந்ததா? கண்கள் அகல விரிந்தன. புரியாமல் விழித்தாள்.
அவள் கையை பற்றி நிறுத்தி, “யெஸ் தாமிரா. ஐ லவ் யூ.” என்றான் அழுத்தமாக. ‘பளார்’அடுத்த கனம் அவள் அவனை அமைந்திருந்தால்.
அவர்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த சிந்து அதிர்ந்து திரும்பினாள். தாமிராவின் மீதான ரகுவின் ஈடுபாடு அவளும் அறிந்திருந்தாள் தான். ரகுவின் எண்ணம் தெரிந்தால் தாமிரா கோபப்படுவாள் என்று தெரியும் ஆனால் இப்படி அடித்து விடுவாள் என்று எண்ணவில்லை.
அவன் இதை எதிர்ப்பர்த்திருந்தான். நட்பை சுவாசமாய் நினைப்பவள் அவள். இத்தனை நாட்கள் இதற்காகத் தான் பயந்தான்.
அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை. அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை.
அதே வேகத்துடன் திரும்பி நடந்தாள். அவள் அடித்தது கூட அவனுக்கு வலிக்கவில்லை. இப்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் போவது தான் அவனுக்கு வலித்தது. அவள் பின்னாலேயே ஓடினான்.
“தாமிரா. ப்ளீஸ் நில்லு. அட்லீஸ்ட் என்னை திட்டு. இப்படி ஒன்னும் பேசாம போகாத.” கத்திக் கொண்டே ஓட அவள் வேகம் குறையவில்லை
‘என்னவாயிற்று இவனுக்கு? திடீரென இப்படி உளறுகிறான்? இத்தனை நாட்கள் நண்பனை போல் நடித்தானா?’ அவள் மனம் அதை ஏற்க மறுத்தது.
ஓடிச்சென்று அவள் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தி, “ப்ளீஸ். என்னை புரிஞ்சுக்கோ தாமிரா. உன்னை ரொம்ப நேசிக்குறேன்.” அவன் விழிகள் அவளிடம் காதலை யாசித்தன.
“இதை எதிர்ப்பார்க்கலை ரகு. லீவ் மீ. ” பேச்சை கத்தரித்துக் கொண்டாள். கைகளை அவனிடமிருந்து உருவி எடுத்து திரும்பி வேகமாக நடந்தாள்.
இதில் யார் பக்கம் நிற்பதென தெரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தாள் சிந்து.
தவறு செய்து விட்டோமோ? என்ற எண்ணம் மேலிட தலையை தாங்கிப் பிடித்தபடி அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான் அவன்.
தாமிராவின் செல்போன் அழைத்தது. அக்ஷரா தான் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்கவில்லை. அவளுடன் பேசும் மனநிலையிலும் அவள் இல்லை. மீண்டும் மீண்டும் அழைப்பு வர கட் செய்து கொண்டே போனாள்.
எரிச்சலாக இருந்தது அவளுக்கு. இப்படியே கட் செய்து கொண்டே வேகமாக நடந்தவள், எதிரில் வந்தவர்களை கவனிக்கவில்லை. யார் மீதோ மோத, அன்று போல் இன்றும் செல்ஃபோன் கீழே விழுந்து நொறுங்கியது.
இம்முறை கண்ணீர் வரவில்லை. ஏற்கனவே சூடாகி இருந்தவள் கொதித்தாள். எதிரில் நின்றவன் கடந்து செல்ல முற்பட்டான்.
“ஏய்.. இடியட்..என் போனை உடைச்சிட்டு எங்கே போற?” என்று மலை போன்ற தேகத்தை உடையவனின் ஜாக்கெட்டின் பின்புறத்தை பற்றி இழுத்தாள்.
காற்றை போல் வேகமாக திரும்பியவனது கண்கள் தகித்தன. தன்னை தொடுமளவுக்கு தைரியம். நாடி நரம்பெல்லாம் புடைத்துக் கொண்டன. அவளுடைய கழுத்தை நெறித்து விடும் ஆத்திரம்.
இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி அவள் நெற்றியில் அழுத்தினான். அவன் கண்கள் சிவந்திருந்தன.
அவன் முகத்தை பார்க்கிறாள்.. அது அவன். அன்று பலரை துப்பாக்கியின் தோட்டாக்களுக்கு இறையாக்கியவன். அவன் ராட்சன். கொடிய மிருகம்.
அந்த பார்வையில் நடுநடுங்கி போனாள். அவள் விழிகள் அச்சத்தில் விரிந்திருந்தன. அவன் துப்பாக்கியை பார்த்ததும் அந்தக் குளிரையும் மீறி அவள் முகத்தில் வியர்வை முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்தன. அவள் இதயம் வெடித்து விடுவது போல அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
“உன்னை கொண்ணுடுவேன் ப்ளடி.” பற்களுக்கிடையில் வார்த்தை தெறித்தது.
பூவிலும் மென்மையான
இதயம் கொண்டவள் நீ…
இரும்பிலும் கடினமான
மனம் கொண்டவன் நான்…
நட்பை உயிராக
போற்றுபவள் நீ…
துப்பாக்கியை கையாக
பிரயோகிப்பவன் நான்…
காற்றில் தென்றல் நீ…
கடலின் சுனாமி நான்…
அன்பே உருவமானவள் நீ…
அகந்தையை கவசமாக்கினேன் நான்…
என்னை பார்த்தாலே
மிரண்டு போகிறாய்…
இருவேறு துருவங்களாக,
எதிர் விசை கொண்டவர்களாக,
நீயும் நானும்…
நமக்குள் காதல்
மொட்டு இதழ் விரிக்குமா?
வாழ்க்கையின் துணையாக
கைரேகை அழியும்படி
நாம் கை கோர்த்து செல்வோமா?
விதி நம் வாழ்வில்
என்ன விளையாட்டை செய்ய
காத்துக் கொண்டு இருக்கிறதோ?