RR 6

RR 6

ரௌத்திரமாய் ரகசியமாய்-6

அவள் கைகள் உடைந்த அலைப்பேசியை இறுக்கிப் பிடித்திருக்க, உடல் வெடவெடவென்று நடுங்கியது. அவன் மிரட்டல் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தாமிரா. முன்பக்கம் சரிந்து விழுந்த கேசம் அவள் முகத்தை முழுவதுமாக மறைத்திருந்தது. முன்பக்கமாக விழுந்திருந்த அவள் கூந்தல் திரை வழியே அவள் மிரண்ட பார்வை அவன் சிவந்த விழிகளை சந்தித்தது. அவனும் அவளை தான்‌ பார்க்கிறான்

இத்தோடு மூன்று முறை அவனது இந்த ஊடுருவும் பார்வையை சந்தித்து விட்டாள். அன்று அவளுக்கு விபத்து நேர்ந்த போது அந்த காரின் கதவு வழியே எட்டிப் பார்த்த அதே பார்வை. இங்கு வந்த முதல் நாள் சம்பவத்தின் போதும் அதே பார்வை. இன்று அதே மனிதனின் துப்பாக்கி முனையில் அதே பார்வை. துஷ்டப் பார்வை அது. அரக்கப் பார்வை. ராட்சசப் பார்வை. பசி வெறிபிடித்த மிருகத்தின் வேட்டையாடும் பார்வை.

துப்பாக்கி முனையில் நின்றிருந்த தோழியை தூரத்திலேயே கண்டு கொண்ட ரகுவும் சிந்துவும் பரபரப்பானார்கள். அடுத்த கணமே அந்த இடத்தை நோக்கி ஓடி வர இப்போது துப்பாக்கி ஏந்திய அந்த தெளிவான முகத்தை கண்டு கொண்டாள் சிந்து. அது அந்த ராட்சசன்.

“தாமிரா.” என‌ இருவரும் பதற்றத்துடன் அவளருகே நெருங்க, ரகுவுக்கோ தன் மனம் கவர்ந்தவள் ஒருவனின் துப்பாக்கி முனையில் நின்றிருப்பதை பார்த்ததும் கலகலப்பே உருவான ரகுவுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ தெரியாது.

அவனை அடித்து துவைத்திடும் எண்ணம் மேலிட, “ஏய்..” என்ற‌ உறுமலுடன் தாமிராவின் நெற்றியை அழுத்தியிருந்த துப்பாக்கியை தட்டி விட அது கீழே விழுந்தது. மறு நொடி அவன் சட்டை காலரை இழுத்து பிடித்தான் ரகு.

ரகுவின் இச்செயலில் சிந்துவுக்கும் தாமிராவுக்கும் பக்கென்றானது. அந்த மனிதனை பற்றி தான் வந்த முதல் நாளே அறிந்து கொண்டவர்களாயிற்றே.

அவ்வளவு தான் ரகுவின் முகத்தில் இடி போல ஓர் அடி விழ, அந்த ஓர் அடியிலேயே கீழே விழுந்தான். “ரகூ..” தோழிகள் இருவரும் ஒருசேர ஒலித்தது.

இத்தனைக்கும் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஆனால் அந்த கண்கள் இருக்கிறதே. அதிலும் அந்த பொல்லாத பார்வை. அந்தப் பார்வையே போதும் எதிரிலிருப்பவனை ஆயுதமின்றி குத்திக் கிழித்துப் போட்டு விடும்.

அவன் கண்களில் அத்தனை வெறி. இரத்தம் சீறிப் பாயும் வேகத்தில் நரம்புகள் எல்லாம் புடைத்து சிவந்து விட்டன. கீழே விழுந்தவனை உதைவதற்காக காலை ஓங்கி‌ உயர்த்தியவன் காலும் ஓர் நொடி தடைபட்டு நின்றது.

“ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்ற ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டே, அவனது ஓர் கரத்தை தன் இரண்டு கரங்களுள்ளும்‌ அடக்கியபடி, மண்டியிட்டமர அவள் இதழ்கள் துடித்தன. கண்களில் நில்லாமல் வழிந்தது கண்ணீர்.

அவள்‌ கலங்கிய விழிகளை ஓர்‌ நொடி வெறித்துப் பார்த்தான் ருத்ரன். என்ன தோன்றியதோ? அதற்கு மேல் அவன் அங்கு இருக்கவில்லை.

*****

காந்த பார்வை
தான் உனதோ?
ஊடுருவும் பார்வையில்
மனதில் கிலி
பிடிக்க வைக்கிறாய்…
முதல் அடியிலேயே
எதிரில் நிற்பவரை
மரண வாயிலில்
நிற்க வைக்கிறாய்…
மூன்று முறை
சந்திப்பிலேயே
நங்கூரமாய் பதிந்து
விட்டாய்…
குரங்கின் கையில்
பூமாலையாக
உன் துப்பாக்கி
முனையில்,
மருண்ட மானாய் நான்…
பார்வை சந்திப்பில்
மின்சாரம் பாய
செய்கிறாய்…
உன் பார்வை வீச்சில்
என்னை நான் தொலைப்பேனா?

******

கல்லில் செய்த சிலை போல் ஸ்டீயரிங் வீலை இறுக்கிப் பிடித்தபடி வெளியே சாலையை வெறித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். உஸ் புஸ்ஸென்று வெளியானது வேகமான மூச்சுக் காற்று. அவனை சூழ்ந்திருந்த காற்றில் வெப்பம் கூடிப் போயிருந்தது.

அவனது நிதானம் எங்கே தொலைந்தது? ஒரு சிறு பெண்ணிடம் கோபத்தை காட்டுமளவுக்கு பலவீனமானவனாய் மாறி விட்டோமா? ஆனாலும் அவளது அந்த மிரண்ட பார்வையை மீறி எதுவும் செய்ய இயலவில்லையே?

அதீத பயத்தை காட்டிய அவளது மருண்ட விழிகள். சிவந்திருந்த முகம். பயத்தில் துடித்த இதழ்கள். அன்றொரு நாள் அவள் பார்த்த அதே பார்வை. அவன் கரம்பற்றி உதிர்த்த ‘ப்ளீஸ்’ உடன் மிரண்ட அவள் விழிகளில் அவனுள் ஏதோ நழுவியது போல் தோன்றிற்று.. அதற்கு மேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை.

அது பலவீனம். முழு பலவீனமாக தன்னை உணர்ந்தான். அதை தன் மீதே கோபம் கொண்டு ஸ்டீயரிங் வீலை ஓங்கி அடித்தான். இதற்கெல்லாம் இடம் கொடுக்க கூடாது. அது இவர்களது வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத ஒன்று.

******

துஷ்டமிருகமாக
வேட்டையாடும் புலியாக
பலரும் பயந்து
நடுங்கும் அரக்கனாய்
திரிந்தவன் நான்…
பலரின் கண்ணீரை,
கூக்குரலை அலட்சிய
படுத்தியவன் தான்…
உணர்ச்சிகளுக்கு
பாசத்திற்கு அடிமை
ஆகாத ராட்சசன் தான்…
எனினும் பாவை
உன் கலங்கிய பார்வையில்
என்னை நானே
தொலைத்தேனே…
மைபோட்ட கண்ணாலே
என்னை தான்
கவர்ந்தாயே!
திசை மாறி போகாமல்
இருக்கவே நினைக்கிறேன்…

******

“இந்த மாதிரி இடத்துல உங்களை இப்படி விட்டுட்டு போக முடியாது. மரியாதையா இப்பவே எங்கூட வந்துடுங்க. அங்கிள் கிட்ட நான் பேசிக்குறென்.”. ரகு அவர்கள் இருவரிடம் சத்தமிட்டுக் கொண்டிருந்தது.

தாமிராவின் பார்வையோ ஜன்னலை தாண்டி சாலையை வெறித்துக் கொண்டிருந்தது.

“தாமிரா உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்.” அவன் குரல் அழுத்தமாய் ஒலித்தது. மெதுவாக திரும்பினாள். தவறியும் கூட ரகுவின் முகத்தை பார்க்கவில்லை.

“எந்த பிரச்சினை வந்தாலும் என்னால ஃபேஸ் பண்ண முடியும். அன்ட் அவனால எனக்கு எந்த பிரச்சினையும் வராது.” தாமிராவிடமிருந்து உறுதியான பதில் வந்தது. அறைக்குள் சென்று‌ கதவை அடித்து மூடினாள்.

ரகுவும் சிந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எப்பேதும் ஆர்ப்பாட்டமில்லாத சிறு ஓடை போல் இருப்பவள் ஒரு சில வேளைகளில் கரைபுரண்ட வெள்ளமாய் மாறி விடுவாள். ஆனால் அரிதிலும் அரிது. அப்போதெல்லாம் அவளிடம் யாரும் நெருங்கி விட முடியாது. அவள் பதில் இப்படித் தான் இருக்கும்.

அவனுக்கும் தெரியும் இப்போதைக்கு ரகுவுடன் தாமிரா பேசப் போவதில்லை. அவள் குணம் அறிந்தவன் தானே. அவன் கன்னத்தில் சிறிதாக இரத்தம் கசிந்திருந்தது‌. அவன் கிளம்ப ஆயத்தமானான்.

சிந்துவுக்கு தான் யார் பக்கம் பேசுவதென தெரியவில்லை. ரகுவின் அருகில் சென்று அவன் தோள் தொட்டு, “ரகு.. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும். நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.” என்றாள் மெதுவாக.

“நான் பண்ணது தப்பில்லையே சிந்து?” அவன் கண்கள் எதிர்ப்பார்ப்புடன் அவள் முகத்தில் நிலைத்திருந்தது.

ஒரு நெடிய பெரு மூச்சை இழுத்து விட்டாள். “தப்பில்லை. ஆனாலும் நீ கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். அவளை பத்தி தெரிந்திருந்தும் நீ இப்படி சட்டுன்னு கேட்டுட்ட அவளும் பட்டுனு அறைஞ்சிட்டா. இப்போதைக்கு அவ கன்வின்ஸ் ஆக‌ மாட்டா. நீ போ நான் பேசுறேன். ஆனா லவ் பண்ணுவான்னு மட்டும் எதிர்ப்பார்க்காத மச்சி..” என்று சிரித்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்து மூவருக்குமாக காபி தயாரிக்கலானாள்.

காதல் கூட தேவையில்லை. அவள் தன்னை பழையபடி நண்பனாக ஏற்றாலே போதும் என்றானது அவனுக்கு.

மூவருக்குமாக காபியை கப்களில் ஊற்றி எடுத்து வந்து ஒன்று ரகுவுக்கு கொடுத்து விட்டு, ஒன்றை அவளுக்கு எடுத்து வைத்தாள். மற்றொன்றை எடுத்துச் சென்று அவளறை கதவை சில நிமிடங்கள் தட்ட சடாரென்று கதவு திறக்கப்பட்டது. உடை மாற்றியிருந்தாள் தாமிரா.

கதவை திறந்ததும் சோஃபாவில் அமர்ந்து காபியை அருந்திக் கொண்டிருந்தவனின் பார்வை சிந்துவை தாண்டி தாமிராவை தேடியது. அவள் இவனை பார்க்கவில்லை. உர்ரென்ற முகத்துடன் காபியை வாங்கியவள் மீண்டும் ‘படார்’ கதவை அறைந்து சாத்தியிருந்தாள்.

ரகுவுக்கு உள்ளே வலித்தது. முகத்தை கூட பார்க்க‌ தகுதியற்றவனாய் தரம் தாழ்ந்து போனாதாய் உணர்ந்தான். அதன் பிறகு வெகு நேரம் அங்கிருக்கவில்லை.

ஏற்கனவே புக் செய்யப்பட்டிருந்த ‘கேப்’ வந்து விடவே சிந்துவிடம் கூறிவிட்டு கிளம்பினான்‌. தன்னை வழியனுப்பக் கூட வரவில்லையே. அவன் தன் அவசர புத்தியை எண்ணி நொந்தபடியே கிளம்பினான். அந்தப் பயணம் தாமிராவை அவனிடமிருந்து வெகு தூரமாக்கியதை போல் உணர்ந்தான்.

கார் கேட்டை கடந்து சென்றதும் கேட்டை லாக் செய்து விட்டு வாசல் கதவையும் தாழிட்டு விட்டு உள்ளே வர, ‘ஹா.. ஹா..’ சிரிப்பு சத்தம் கேட்டது. சோபாவில் சம்மனமிட்டு அமர்ந்து, ஸ்நாக்ஸை கொறித்தபடி டீவியில் ஓடிய காமெடியை பார்த்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் தாமிரா.

‘அடிப்பாவி..’ என்று வாயை பிளந்தவள், அவள் முன் சென்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள். இவள் முறைப்பை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் டீவியில் பார்வையை பதித்த வண்ணமே “உனக்கும் வேணுமா?” என ஸ்நாக்ஸ் ப்ளேட்டை நீட்டினாள்.

“அடிப்பாவி.. என்னமா சீன் போட்ட? இப்போ என்ன இப்படி டீவி முன்னாடி உட்கார்ந்து கெக்கெ பெக்கேன்னு சிரிப்பு வேண்டியிருக்கு?” முறைத்தாள் சிந்து.

“டீவி பார்க்குறது ஒரு குத்தமா பா?” இலகுவாக கேட்டாள். அப்போதும் அவள் டீவி பார்ப்பதிலேயே ஆர்வமாக இருந்தாள்.

சிந்துவுக்கு சுர்ரென்று ஏறியது. ரிமோட்டை கொண்டு டீவியை அணைத்து விட்டு, அவள் மடியிலிருந்த ஸ்நாக்ஸ் ப்ளேட்டையும் பறித்து எடுத்து மேசையின் மேல் வைத்தாள்.

‘ஏன்’ என்பது போல் கேள்வியாய் அவளை நோக்கினாள் தாமிரா.

“உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க‌? உனக்காக தான் அவன் அந்த மொட்டை ரௌடி கிட்ட அடி வாங்கினான். அவன் போறப்போ சரி வந்து ஒரு வார்த்தை பேசி அனுப்பியிருக்கலாம்ல. பாவம் ரொம்ப ஃபீல் பண்ணினான்.” என்றாள் கவலையுடன்.

“ஏன் நான் வந்து வழியனுப்பலைனா சார் போக மாட்டாரோ?” கிண்டலாக.

“என்ன இருந்தாலும் அவன் நம்ம ஃபிரெண்ட்..” என்றாள் அவசரமாக.

“நம்ம ஃப்ரெண்ட்டு..” அவள் உதடுகள் நக்கலாக வளைந்தன.

“அதுல என்ன தப்பிருக்கு தாமிரா. ரகு அவன் விருப்பத்தை சொல்லிருக்கான்‌. இல்லைனா இல்லை சொல்லிட்டு எப்பவும் போல ஃபிரெண்டா இருக்கலாமில்லையா? அதை விட்டிட்டு..” என தன் நண்பனுக்காக பரிந்து பேச முயல,

“ஷட் அப் சிந்து. இனி அவன் கூட எந்த உறவும் எனக்கு தேவையில்லை. இத்தனை நாள் இப்படி ஒரு எண்ணத்தோட தான் ஃபிரண்டா நடிச்சிருக்கான். இதுக்கு மேல ஃபிரண்டா இருக்க கூட தகுயில்லாதவன். இனிமேல் அவனை பத்தி பேசக்கூடாது அப்புறம் இங்க நடந்த எதுவும் அப்பாவுக்கு தெரியக் கூடாது. உன் ஃபிரண்ட் கிட்ட சொல்லிடு.” கோபமாக அதே சமயம் அழுத்தமாக கூறி விட்டு அறையை நோக்கி நடந்தாள்.

இனி அவ்வளவு தான். அவளாக மனம் மாறும் வரை இனி எவராலும் மாற்ற முடியாது. எப்போதும் மென்மையும் பொறுமையுமாய் விளங்கும் தாமிரா அவளுக்கு பிடிக்காத விஷயங்களை பிடிவாதமாக மறுத்து விடுவாள்.

“உஃப்” என்று இழுத்து மூச்சு விட்டவள் இரவு உணவை தயார் செய்ய சமையலறைக்குள் நுழைந்தாள்.

சாப்பாடு தயாரானது. பெரிதாக ஒன்றுமில்லை. நான்கைந்து காய் கறிகளை வெட்டிப் போட்டு சூப் செய்திருந்தாள். இருவருமாக அந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, தாமிராவின் கையில் திரை நொறுங்கிய செல்ஃபோன் இருந்தது. சாப்பிடாமல் அவள் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தாமிராவை பார்த்துக் கொண்டிருந்த சிந்து, “உன்னோட இந்த ஐ ஃபோன் தான் இந்த பிரச்சினைக்கெல்லாம் காரணம்.” என்று கூற சிந்துவை முறைத்தாள்.

“சும்மா மொறைக்காதடீ.. அன்னைக்கு அந்த மொட்டை ரௌடி கிட்ட நான் சிக்கினேன்‌. இன்னைக்கு உனக்கு ‘டர்’ ராகிருச்சு.” என்றவள் தொடர்ந்து அவளை பார்வையை கூர்மையாக்கி,

“ஆமா.. அந்த மொட்டை ரௌடி கேரக்டருக்கு பட்டுனு சுட்டதும் பொட்டுனு போயிருப்ப. ஆனா ஏன் சும்மா இருந்தான்? நீ போட்ட ஒரு ப்ளீஸ்ல விட்டுட்டு போயிட்டானே. எப்படி? ஒரு வேளை நல்ல ரௌடியா இருப்பானோ? அவனோட ராட்சச லுக்குக்கு பெரிய சம்பவம் ஒன்னு எதிர்ப்பார்த்தேன். ச்சு..” மேலே சீலிங்கில் பார்வையை பதித்த வண்ணம் நெற்றியை தட்டியபடி தீவிரமான யோசனையில் இருப்பது போல் பாவனை செய்தாள்.

தாமிராவுக்கும் அந்த குழப்பம் இருக்கத் தான் செய்தது. அவனது அந்தப் பார்வையை இப்போது நினைத்தால் கூட மயிர்கள் கூச்செறியும். ஆனாலும் அவனால் தனக்கு எந்த ஆபத்தும் நேராது என்பதை மாத்திரம் உறுதியாக நம்பினாள். அது எதனால் வந்த நம்பிக்கை என்றும் அவளுக்கும் புரியவில்லை. அவனே அசால்ட்டாக கொலைகளை செய்யும் ஒரு ரௌடி. அவனை நம்பலாமா? அவளும் குழம்பிப் போனாள்.

“ஆமா ஆமா.. ரொம்ப நல்ல ரௌடி. அந்த ராட்சசன் எங்களை உயிரோட விட்டதே பெரிய விஷயம். இதுக்கு மேல சம்பவம் வேணும்னா உன்னை தான் போட சொல்லனும். பேசாம சாப்பிடு.” அதட்டலாய் கூறி மீதமிருந்த சூப்பையும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.

******

நல்ல நண்பனாய்
தெரிந்தவன்,
தடம் மாறி போக…
போட்ட ரௌடியாய்
அறிந்தவன்,
நல்லவனாக இருப்பான்
என்று மனம்
நம்புகிறதே!
வாழ்க்கை பாதையின்
விசித்திரம் இது தானோ?

******

வெள்ளை கோட் அணிந்து ‘ஸ்டெதஸ்கோப்பை’ கழுத்தில் மாட்டியபடி ஆங்காகங்கே சில மருத்துவர்கள். எங்கும் மருந்து நெடி‌. அது கண்டி மருத்துவமனை. சிந்துவின் கையில் மடித்து போடப்பட்ட வெள்ளை கோட், கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு சீனியர் மருத்துவருடன் சீரியசாக பேசியடி நடந்து‌ கொண்டிருந்தாள்.

அந்த தளம் இரண்டாக பிரியும் இடம் வரவே அந்த சீனியர் மருத்துவர் வலது பக்கமாக செல்ல அவரிடம் விடைபெற்றுக் கொண்டு இடப்பக்கமாக திரும்பி நடந்தாள். அவள் திரும்பிய வேகத்தில் அவளது நெற்றி ‘நங்’ கென்று எதிலோ மோதியது. அவள் கவனிக்கவில்லை. ‘ஆ’ வென்று கத்தியவள், தன் உள்ளங்கையால் நெற்றியை அழுந்த தடவியபடி நிமிர்ந்தாள்.

அவள் மோதியது சுவரோ தூணோ இல்லை அது ஒரு மனிதனின் கைச்சந்து. அவனது பக்கவாட்டு தோற்றத்தை கண்டு மலைத்தாள். ஆறடிக்கும் மேல் வளர்ந்திருந்தான். வருடத்தில் முன்னூற்றி அறுப்த்தைந்து நாட்களும் ஜிம்மிலேயே பாய் போட்டு படுத்திருப்பான் போலும். மலை போன்ற பெருத்த தேகம். அவன் உயரத்தில்‌ இவள் பாதி உயரம் தான் இருப்பாள்.

ஒரு சில செக்கன்களுள் அவனை பார்வையிடடிருந்தாள். யாரோ ஒரு சிலருடன் தீவிரமான உரையாடலில் இருந்தவன் சட்டென்று இவள் பக்கம் திரும்பினான்.

‘ஆத்தாடி முறைக்கிறான்.’ கண்களை உருட்டி விழித்தாள். “சாரி..” என்றாள் மெல்லிய குரலில். அவளை ஏற இறங்க பார்த்தான் அவன். அவனது பார்வை கழுத்தில் தொங்கிய‌ ஸ்டெதஸ்கோப்பில் பட்டு நீங்கியது.

“அமர்..” அவனோடு வந்திருந்த ஒருவனின் அழைப்பில் திரும்பி வேகமாக நடந்தான்.

மலை போன்ற தேகத்தை உடையான் அந்த இடத்தை விட்டு நீங்கியதும் தான் அந்த இடமே வெளிச்சமாக தெரிந்தது அவளுக்கு. ‘ஒவ்வொரு எட்டும் ஒரு கிலோமட்டர் தூரத்துக்கு வைக்கிறானே? ப்பாஹ் பிரம்மாண்டமா இருக்கான். மிஸ்டர் பிரம்மாண்டம்..’ வேகமாக நடந்து செல்லும் அவனது வேக நடையையும்‌ தோற்றத்தையும் வியந்தபடி அவளும் நடந்தாள்.

******

“டாக்டர், இன்னைக்கு காலையில அட்மிட் செஞ்ச பொண்ணு டேப்லெட் சாப்பிட‌ மாட்டேன்னு ஒரே அடம். கன்ட்ரோல் பண்ண முடியலை.” என்று ஒரு நர்ஸ் தாமிராவிடம் கூறினாள்.

“பேபி.. இப்போ நீங்க சூப்பரா இருக்கீங்க.. நல்லா சாப்பிட்டீங்கனா நாளைக்கே வீட்டுக்கு போகலாம். உங்க ஃபிரண்ட்ஸ் கூட விளையாடலாம். ஓகே.” அந்த மூன்று வயதுக் குழந்தையின் தலையை தடவிக் கூற, அதுவும் தன் வெண்பற்கள் வெளித் தெரியும்படி தலையை ஆட்டிக் கொண்டே சிரித்து வைக்க, அதே புன்னகையுடன் அந்த நர்ஸின் பக்கம் திரும்பினாள்.

“ஏன்‌? என்னாச்சு? எந்த குழந்தை?” என்று கேட்டுக் கொண்டே நடக்க, அந்த நர்ஸும் தாமிராவின் கேள்விகளுக்கு பதிலளித்தபடி
கூடவே நடந்தாள்.

“இன்னைக்கு காலையில அட்மிட் செஞ்ச நாலு வயசு பொண்ணு டாக்டர். அவளை டீல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப அடம் பிடிக்குறா. ஏதாவது கேட்டா முறைக்குறா. கோவப்பட்றா.சாப்பிடலை. டேப்லெட்டும் போடலை.” என நீண்டதாக விளக்கிக்‌ கொண்டே போனாள் அந்த நர்ஸ்.

“எந்த பெட்?”

“டென்த் டாக்டர்.”

கையில் ஸ்ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருக்க, கட்டிலில் சம்மனமிட்டு அமர்ந்தபடி ‘உர்’ ரென்று‌ அமர்ந்திருந்தாள் அந்த குட்டிப் பெண். தோள் வரை வெட்டப்பட்டிருந்த சுருள் சுருளான கடும் சாக்லெட் நிற கேசம். உருளும் நீல நிற குட்டி விழிகள். அடர்ந்த இமைகள்.

”சப்பி சீக்ஸ், டிம்பிள் சின்,
ரோஸி லிப்ஸ், டீத் வித்தின்,
கர்லி ஹேர், வெர்ரி ஃபேர்,
ஐஸ் ஆர்‌ ப்ளூ, லவ்லீ டூ..” இந்த ரய்முக்கு பக்காவாக பொருந்தும் குழந்தை அவள். அப்படித் தான் தாமிராவுக்கும் தோன்றிற்று.
அவளது வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஃப்ராக் வேறு அவளை ஒரு குட்டி தேவதையாகவே காட்டியது.

அவள் அமர்ந்திருந்த தோரணை அப்படியே அகஷராவை நினைவூட்டியது அவளுக்கு. மலரந்திருந்த தாமிராவின் இதழ்கள் மேலும் விரிய அந்தக் குழந்தையின் அருகே சென்றாள்.

“பேபி..ஏன் டேப்லட் போட்டுக்க மாட்டேங்குறீங்க? மருந்து சாப்பிட்டா தானே சீக்கிரம் சரியாகும். சீக்கிரமே வீட்டுக்கு போய் ஜாலியா விளையாடலாம்.” குழந்தையின் தலையை மெதுவாக தடவிக் கொடுத்த படி எடுத்துக் கூற தாமிராவின் கைகளை பட்டென தட்டி விட்டது அந்த குழந்தை.

“நோ.. ஐ டோன்ட் நீட் எனிதிங். இந்த ஊசி கையில் குத்திக்கிட்டே. கேன் யூ ப்ளீஸ் ரிமூவ் திஸ்.?” கேள்வியாய் அவளை பார்த்தது. பிடிவாதமாக மருந்தையும் மறுத்தாள் அந்த குட்டிப் பெண்.

பேச்சில் எத்தனை தெளிவு? என்ன ஒரு கோபம்? என்ன ஒரு வேகம்? அந்த நாலு வயதுக் குழந்தையின் குரல் அவளை வியக்க வைத்தது. அதே சமயம் அந்த செல்லமான பிடிவாதம் அவளை ஈர்க்கவும் செய்தது.

“இப்படி தான் டாக்டர் எதை சொன்னாலும் பிடிவாதமாகவே பேசுது. ” என்று அலுத்துக் கொண்டாள்.

அந்த நர்ஸின் பேச்சையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கான மருந்துகளை கொண்டுவரச் செய்தாள்.

“ஓகே ஓகே. ரிமூவ் பண்ணிடலாம் பேபி. நீங்க சரியாகனும்ல. இந்த டேப்லட்ஸை சாப்பிடுங்க.. அப்போ தான் உங்களுக்கு இந்த மாதிரி வயிறு வலி, மயக்கம் எதுவுமே வராது. மை ஸ்வீட் லிட்டில் பிரின்சஸ்ல..” தாமிராவின் கனிவான பேச்சில் அந்தக் குழந்தை அவளை நிமிர்ந்து பார்த்தது.

“என் பப்பாவும் லிட்டில் பிரின்சஸ்னு தான் சொல்லுவாரு. பப்பாவை வர சொல்லுங்களேன். இந்த மாயா கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டேன் கேட்கவே இல்லை.” குழந்தையின் முகம் சுருங்கியது.

“மாயா யாரு உங்க அம்மாவா?” கேட்டாள் தாமிரா.

“இல்லை. அம்மாவோட‌ செகரட்டரி.” என்றது அந்த குழந்தை.

குழந்தையை கவனிக்க அம்மாவுக்கு நேரமில்லை போலும். பெற்ற குழந்தை ஹாஸ்பிடலில் படுத்திருக்க எப்படி ஒரு தாயால் இப்படி பொறுப்பின்றி இருக்க முடியும் என்றே தோன்றியது அவளுக்கு.

இப்படியே அந்தக் குழந்தை அவளுடன் சகஜமாக பேச ஆரம்பிக்க அந்தக் குழந்தையின் தெளிவான மழலை பேச்சு அவளை வெகுவாகக் கவர்ந்ததது.

அந்நேரம் தொடையை இறுக்கிப் பிடித்த ஜீன்ஸும் ஒரு ஷார்ட் ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்த மாடர்ன் பெண்ணொருத்தி தன் குதிக்கால் செருப்பு ‘டக்.. டக்’ கென்று தரையில் பதிய நடந்து அனன்யா இருந்த கட்டிலருகே வந்து நின்றாள். ‘அனன்யா’ அந்தக் குழந்தையின் பெயர்.

அவள் வந்ததும்‌ அந்தக் குழந்தை அந்த பெண் பக்கம் ஆவலாக திரும்பி “மாயா.. பப்பா வரேன்னு சொன்னாரா?” என்று கேட்க, ‘ஆம்’ என்ற ஒற்றை பதிலுடன் செல்போனுக்குள் புதைந்து கொண்டாள்.

என்ன பெண்ணிவள் அவளுக்கு முன்னால் டாக்டர் நான் இருக்கிறேன். குழந்தைக்கு எப்படியிருக்கிறது? என்ன பிரச்சினை? என்று கூட கேட்கத் தோன்றாமல் அவள்‌ பாட்டிற்கு இருக்கிறாள்.

‘அவ மூஞ்சும் மொகறையும்.’ என்றே நினைக்கத் தோன்றியது. இந்த இடத்தில் சிந்து இருந்தால் அந்த பெண்ணை வார்த்தையாலேயே நார் நாராக கிழித்திருப்பாள்.

அனன்யாவோ சில நிமிடங்களிலேயே தாமிராவுடன் நெருக்கமாகி விட்டாள். ஓயாமல் வளவளக்கும் அந்தக் குட்டிப் பெண்ணை ரொம்பவும் பிடித்துப் போனது.

“ஓகே அனு பேபி. நான் அப்புறம் வரேன். ” என்று குழந்தையின் சப்பி கன்னத்தில் ஓர் முத்தத்தை வைத்து விட்டு எழுந்து கொள்ள அதேநேரம், “பப்பாஆஆ..” ஆனந்த கூச்சலிட்டாள் அனன்யா.

அனன்யாவின் தந்தை வந்து விட்டார் போலும் என்று திரும்பியவளுக்கோ அதிர்ச்சி. சாதாரண அதிர்ச்சியல்ல பேரதிர்ச்சி. அந்த இடத்தையே அடைத்துக் கொண்டு நின்றிருந்தது ஆறடி வளர்ந்த ஒரு ஆஜானுபாகுவான உருவம்.அவன் தான். அந்த ராட்சசன். எப்போதும் கடுகடுத்த முகத்துடன் இருப்பவன் இன்று இதழில் புன்னகையுடன்.

இவள் அவனை காண நேர்ந்த சந்தர்ப்பங்களில் போதெல்லாம் கருப்பு நிற ஜாக்கெட்டுடன் தான் இருப்பான். அதுவே அவனை துஷ்டனாக காட்டும். அகன்ற நெற்றி. அவனது வழித்து வெட்டப்படிருந்த தலைமுடியின் விளைவால் நெற்றி மேலும் அகன்றிருந்தது. அடர்ந்த புருவங்கள். கத்தி போன்ற கூர்மையான கண்கள் ஆழ துளைத்தன. அடர்ந்த தாடி அளவாய் ட்ரிம் செய்யப்பட்டிருந்தது.

கறுப்பு நிற ஜீன்ஸ் மற்றும் அவனது முறுக்கேறிய கைந்தினை இறுக்கிப்படித்திருந்து வெள்ளை நிற டீ சர்ட். அழகன் தான். ஆனால் முரடன். அது தான் அவன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே.

அவள் அவனை அங்கு எதிர்ப்பார்க்கவிலை. ஏன் இனி இவனை பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்தாளே. தன்னை சாதாரணமாக காட்டிக் கொள்ள வெகு பிரயத்தனப்பட்டாள். மூச்சு முட்டுவதை போல் உணர்ந்தாள்.

இது விசிட்டிங் நேரமில்லை. எப்படி வந்தான்? ஆனாலும் உள்ளே வந்திருக்கிறானே? அவளால் எப்படி தடுக்க முடியும்? யார் யாரை எப்படியெல்லாம் மிரட்டினானோ?

அவனது ஷூ கால்கள் தரையில் பதிய தடதடவென நடந்து வர‌ உள்ள படபடத்தது தாமிராவுக்கு. அதற்குள் அனன்யா ருத்ரனின் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். “மை லிட்டில் பிரின்சஸ்.. மை ஏஞ்சல்.. ஹவ் ஆர் யூ மை பேபி..” என்று முத்தமிட்டு கொஞ்சினான்.

‘என் பப்பாவும் இப்படித் தான் பிரின்சஸ் என்று அழைப்பார் என்றதே. அது இவன்‌ தானா?’ அவளால் நம்பவே முடியவில்லை.

தாயோ ஒரு பொறுப்பற்ற ராட்சசி. தந்தையோ ஒரு கொலை வெறி பிடித்த ராட்சசன். அவர்களுக்கு அனன்யா போன்ற ஓர் தேவதை குழந்தையா? பாவம் இந்தக் குழந்தை என எண்ணாமல் இருக்க முடியவில்லை.

“நம்ம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே?” வந்ததும் மாயாவிடம் எரிந்து விழுந்தான். அவன் முகம் இறுகியிருந்தது.

“இல்லை. வர்றதுக்குள்ள மயங்கிட்டா. நம்ம ஹாஸ்பிடல் போக இன்னும் நேரமெடுக்கும்.” நிலைமையை விளக்க முற்பட்டாள் மாயா.

அங்கிருந்து மெல்ல நகர்ந்து செல்ல நினைத்தாள் தாமிரா. பொதுவாக திரும்பி நடக்க முனைய “டாக்டர்” என்ற அவனது ஆளுமையான குரலில் கால்கள் அப்படியே தடைப்பட்டன. அவன் பக்கம் திரும்பினாள். அவள் பார்வை மட்டம் அவன் மூக்குக்கு கீழ் தான் இருந்தது.

“அனுவுக்கு என்ன பிரச்சினை?.” மீண்டும் அதே குரல். அனன்யாவை தூக்கிக் கொண்டிருந்தான்.

“கே..கேஸ்ட்ரைட்டீஸ் தான். அதனால் தான் வயிறு வலி, மயக்கம் எல்லாம். வே..வேறொன்றுமில்லை. நாளைக்கே டிஸ்ஞா” தட்டுத் தடுமாறி அவன் கேள்விக்கு பதிலளித்து விட்டு திரும்ப ஒருவன் வந்தான்.

“பாஸ்.. குழந்தையை நம்ம ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறதுக்கான எல்லா அரேஞ்ச்மென்டும் பண்ணியாச்சு.” என்றான்.

சிறிது நேரம் தாமிராவையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையில் அவள் இதயம்‌ துடிக்கும் வேகத்தில் இதயம் வெளியே பாய்ந்து வந்து விடும் போல் இருந்தது. அப்படியே நின்றிருந்தாள். அந்தப் பார்வையை விட்டும் அவளால் நகர முடியவில்லை.

“நோ நீட்.. இங்கேயே இருக்கட்டும். மாயா டேக் கேர் ஆஃப் ஹேர். ” என்றான் கட்டளை குரலில். அவன் விழிகள் தாமிராவை தான் பார்த்துக் கொண்டிருந்தன.

மாயாவின் பெயரை சுட்டிக்காட்டி கூறினாலும் அது தனக்கான கட்டளையாய் தோன்ற அவள் தலையும் தானாகவே ஆடியது.

கடுகடுத்த அவன் முகம் அனன்யாவின் பக்கம் திரும்பும் போது அதில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. கட்டியணைத்து ஒரு முத்தம் வைத்து விட்டுக் கிளம்பினான். அவன் முகத்தில் கடுமை மீண்டது.

அடுத்த நொடியே ‘உஸ்‌ புஸ்’ என்று மூச்சை உள்ளிழுத்து விட்டாள். ஆக்சிஜன் பற்றாக்குறை போல் இருந்தது அவளுக்கு. கடவுளே! என்ன சோதனை இது? நெஞ்சின் மத்தியில் கை வைத்து ஓரிரு நிமிடங்கள் மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

****

சில்வண்டு குழந்தையின்
தந்தையாய்,
பொறுப்பில்லாத ஒரு தாயின்
கணவாய்,
கற்பனையிலும் நிகழாத
சம்பவமாய் தோன்ற,
நிஜத்தில் நிகழ்ந்தால்,
பேதை நான்
என் செய்வேனடா?
குட்டி தேவதையின்
மழலை சொல்லில்
மயங்கிய சில நொடிகளில்,
அவள் தந்தையாய்
உன்னை காண,
சிலையாக தான்
ஆகினேனடா…
வாழ்க்கை இன்னும்
எத்தனை விசித்திரங்களை
எனக்கு காட்ட
இருக்கிறதோ?
அறியேன், நான்!

****

error: Content is protected !!