நிலா-முகிலன்-2

முகிலன், அவனுடைய அப்பாவை முன் மாதிரியாகக் கொண்டே வளர்ந்தவன். அவருடைய கம்பீரமும், அதை அதீதமாகக் காட்டிய அவர் வகித்த பதவிகளும் சிறுக சிறுக அவன் சிந்தைக்குள் புகுந்து, உச்சபட்ச போதையை அவனுக்குள் ஏற்றி இருந்தது.

அதுவே அவனை வெறியுடன் ஐ.பி.எஸ் தேர்வில் முதன்மையாக வெற்றிபெற வைத்து, ‘ரா’ ஏஜன்சியில் முக்கிய பொறுப்பில் அமரவும் வைத்தது.

எப்பொழுதுமே சவாலான வேலைகளையே எதிர் நோக்கி காத்திருக்கும் அவனது துடிப்பான இளமைக்கு, அவனுடைய இந்த வேலை பெரும் தீனி அளித்தது என்றால் மிகையில்லை.

அவனுடைய இந்த முப்பது வயதிற்குள், பல சிக்கலான வேலைகளில் ஈடுபட்டு, அதை திறம்பட முடித்துக் கொடுத்திருக்கிறான் முகிலன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட, சீன ராணுவத்திடம் சிக்கி இருந்த அவனுடைய சக உளவாளி ஒருவனின் இருப்பிடம் பற்றிய தகவல்களை, அங்கேயே சென்று கண்டுபிடித்து, அவன் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தி, ஒரு வழியாக அவனைக் குற்றுயிரும் கொலை உயிருமாக மீட்டுவந்து, உயிர் பிழைக்க வைத்திருந்தான் அவன்.

12378

மேலிடத்திலிருந்து இதுபோன்ற குறிப்பிட்ட வேலைகளுக்கென்று அவனுக்கு அழைப்பு வரும்.

அது முடிந்த பிறகு, அடுத்த தேவை ஏற்படும்வரை பெயருக்கென்று எதாவது ஒரு பதவியில் குறிப்பிட்ட சில மாதங்கள் இருக்க நேரும்.

அப்படிப் பட்ட சமயங்களில், சென்னையைத் தேர்ந்தெடுத்து இங்கேயே வந்துவிடுவான் அவன். மொத்தத்தில் விக்கிரமாதித்த மகாராஜா போன்று, காடாறு மாதம்; நாடாறு மாதம் என்பதுதான் அவனது நிலை.

அவனுடைய வேலையைப் பற்றி, அவனுடைய அப்பா, அம்மாவைத் தவிர, இன்னும் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே தெரியும்.

சொன்னாலும் ஆபத்தில் போய் முடியலாம் என்பதினால் அதைப் பற்றி வேறு யாரிடமும் அவன் சொன்னதில்லை; சொல்ல வேண்டிய அவசியமும் அதுவரை அவனுக்கு ஏற்படவில்லை.

‘ராஜ் கேசல்’ என்ற பெயர் கொண்ட அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், மூன்றாவது தளத்தில் மாமாவின் மகன், மகள் இருவரும் அடுத்தடுத்தாற்போன்ற பிளாட்களை வாங்கி இருந்தனர்.

ஜீ.கே மாமா, சுசீ மாமி இருவரும் மகனுடன்  கூட்டுக்குடும்பமாக இருக்க, வெளிநாட்டில் இருக்கும் அவர்களுடைய மகளுக்குச் சொந்தமான இரட்டை படுக்கை அறை கொண்ட பிளாட்டை, அவன் எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப் படுத்த ஏதுவாக, நிரந்தரமாக வாடகைக்கு எடுத்திருக்கிறான் முகிலன்.

அவனுடைய அபாயகரமான பணியின் காரணமாக, திருமணம் என்னும் விஷயத்தையே முற்றுமாக தவிர்த்து வந்தவன், பெண்களுடனான பழக்கத்தை நட்பு எனுமே ஒரு எல்லை வரை மட்டுமே அனுமதித்தவன்,  நிலாவைப் பார்த்தது முதல் தன வசம் இழந்திருந்தான் அவன்.

சில தினங்களுக்கு முன், பனி மூட்டம் நிறைந்த மார்கழி காலையில், அவனது இரவுப்பணி முடிந்து, அவனது பைக்கை ஓட்டி வந்து, முகிலன் அந்த குடியிருப்பின் வாயிலை அடைந்த சமயம், மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட பசு மாடு ஒன்றை வழியை மறித்து நிற்க, ஒரு பெண் அதைப் பார்த்து மிரண்டு போய் நிறுப்பதைக் கண்டான் அவன்.

பின்புதான் புரிந்தது, அதை பார்த்து மிரண்டு போய் நிற்க வில்லை, அந்த மாட்டுடன் அவள் ஏதோ பேசிக்கொண்டிருகிறாள் என்பது.

மாடு அவனுக்கு நேராக அதன் உருவம் முற்றுமாகத் தெரியும்படி நிற்க, அந்த பெண் திரும்பி நின்றிருக்க, அவளது பின்புறத் தோற்றத்தை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.

அவள் கைப்பையை மாட்டியவாறு, எங்கோ வெளியில் செல்வதற்குத் தயாராகி வந்திருப்பாள் போலும்.

எளிமையாக ஒரு சல்வார் அணிந்திருந்தாள் நிலா! அதன் நிறமோ மற்றதோ அவனது கவனத்தில் பதியவில்லை.

அவள் தலையை ஆட்டி ஆட்டி சங்கீதமாக அந்த மாட்டிடம் பேசிக்கொண்டிருக்க, அதற்கேற்ப அவளது காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் இரண்டும், ஒரே  ஜதியில் ரசனையாக ஆடிக்கொண்டிருந்தன.

“ப்ச்! டெய்லி ஈவினிங்தான வருவ? இன்னைக்கு ஏன் இப்படி மார்னிங்கே வந்து என் கிட்ட வம்பு பண்ற; ம்!? பாரு என் கையில பழமெல்லாம் இல்ல!” என்று சொல்லிக்கொண்டே அவள் வலது கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டே, கைகளைத் தட்டுவது போல் செய்யவும், அவளுடைய கையில் உண்ணும் படியாக எதுவும் இல்லை என்பது புரியவும், அந்த மாடு தலையை ஆட்டி, ‘வட போச்சே’ என்ற ரீதியில் அவளைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆடி அசங்கியவாறு அங்கிருந்து சென்றது.

பிறகு திரும்பியவள், தலைக்கவசம் அணிந்தபடி பைக்குடன் நின்றிருந்த   முகிலனைக் கடந்து வீதியை நோக்கிச் சென்றாள் நிலா.

அந்த மாட்டிற்குச் சாப்பிட ஒன்றும் கொடுக்காமல் அனுப்பிய வருத்தம் அவளுடைய முகத்தில் தெரிந்தது. ஆனால் அடுத்த நொடியே அவளுடைய முகம் ஒளிர்ந்தது. அதைக் கண்ட முகிலனின் மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒரு சேர பறந்தன.

பயம், காதல் இந்த இரண்டையுமே இதுவரை கண்டிருக்காத அவனது மூளையின் ‘டெம்போரல் லோப்’ பகுதிக்குள் அமைந்திருக்கும் ‘அமிக்டாலா’ முதன்முதலாகக் காதல் என்ற உணர்வை அவனுக்குள் புகுத்தி இருந்தது. அப்படியே உறைந்துபோய் பைக்கிலிருந்து கால்களை ஊன்றியவாறு பார்வையால் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தான் கார்முகிலன்.

அப்பொழுது தள்ளு வண்டியில் ஒருவன் கீரை வகைகளை விற்றுக்கொண்டு வரவும், அவனை நோக்கிச் சென்ற நிலா, அவசரமாகச் சென்று சில கீரைக்கட்டுகளை வாங்கிக்கொண்டு, அந்த மாட்டை நோக்கிப் போனாள்.

முகிலனின் மனமும் காதலுடன் அவள் பின்னாலேயே சென்றது!

பிறகு அவள் அங்கிருந்தது சென்று விட, ‘வட போச்சே’ என்ற பரிதாப பார்வை பார்ப்பது இப்பொழுது முகிலனின் முறையாக ஆகிப்போனது.

அதன் பிறகு வந்த நாட்களில், அவள் ஜீ.கே மாமா குடும்பத்தில் மிகவும் நெருங்கிப் பழகுவது அவனுக்கு தெரிய வரவும், மாமியிடம் அவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜை டேமேஜ்’ ஆகாமல் காக்கும் பொருட்டு அவரிடம் கேட்கத்தயங்கி, மாமாவிடம் மறைமுகமாக அவளைப் பற்றி விசாரித்தான் முகிலன்.

“டாய்! நீ எதாவது தப்பு தாண்டா செஞ்சு மாட்டிட்டேன்னா, உங்கப்பனுக்கு என்னால பதில் சொல்ல முடியாது. உருப்படியா எதாவது வேலை இருந்தால் போய் பாரு!” என்று சொல்லிவிட்டார் அவர். அதற்குமேல் அவரிடமிருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியவில்லை அவனால்!

அன்றைய தினம் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தினூடே, சில தினங்களுக்கு முன்பாக நிலாவை முதன்முதலில் பார்த்த நிகழ்வைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான் முகிலன்.

‘பயம் என்ற ஒன்றையே அறியாதவனையே ஒருநொடி பயத்தில் மரணிக்கச் செய்துவிட்டாளே பாவி! சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட முற்றுமாக அவளை இழந்திருக்கக்கூடுமே!’ என எண்ணிக்கொண்டு, அவளுடைய இந்த செயலுக்குக் காரணத்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற தீவிர சிந்தனையில் தூக்கம் கூட வரவில்லை முகிலனுக்கு.

***

நிலா; மாமாவிடம், ‘காலை ஏழு மணிக்கு வாக்கிங் போகலாம்’ என்று சொன்ன காரணத்தினால், இதைச் சாக்காக வைத்து நிலாவுடன் சிறிது நேரம் செலவிடலாம் என்ற திட்டத்துடன், அவர்கள் இருவரையும் எதிர்நோக்கி, அவர்கள் வசிக்கும் குடியிருப்பின்  நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் பூங்காவிலேயே முகிலன் காத்திருக்க, அவனது எண்ணத்தைப் பொய்யாக்கியிருந்தனர் இருவரும்.

மணி ஏழரையை கடந்தும் அவர்கள் அங்கே வந்தபாடில்லை. அதில் பொறுமை இழந்தவனாக அவன் மாமாவை அழைக்க, “சொல்லுடா நல்லவனே!” என கேட்டுகொண்டே அவனுக்கு அருகில் வந்து நின்றார் மாமா.

அவரை அங்கே பார்த்ததும் அழைப்பைத் துண்டித்தவன், “எங்க மாமா உங்க அழகி?” என்று கேட்க, அவனது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் படித்தவராக, “டாய்! அப்படி சொல்லாதேன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” என்று அவர் மிரட்டும் தொனியில் கேட்கவும்,  ‘நான் என்ன என் அழகின்னா சொன்னேன்! உங்க அழகின்னுதானே சொன்னேன்!” என்றான் அவன் கிண்டலுடன்.

“எங்க, அப்படி சொல்லித்தான் பாரேன்! அப்பறம் தெரியும் சங்கதி!” என்று சொல்லிவிட்டு, இடி இடி என சிரித்தவர்; தொடர்ந்து,

“படவா! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது. உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குத்தானே?” என அவர் கேட்கவும், என்ன பதில் சொல்வது எனப் புரியாமல், அவனது முகத்தில் மெல்லிய வெட்கம் படர, சங்கோஜத்துடன் நெளிந்தான் முகிலன்.

“வழியறது! துடைச்சுக்கோ!” என்றார் மாமா நக்கலாக.

“ம்ம்! என்ன? என்ன?” என அவன் பதற, “டேய்! ஜொள்ளைத்தாண்டா சொன்னேன்!” என்றார் அவர் அவனை விடாமல்.

“ஐயோ! தெய்வமே என்னை விட்டுடுங்க மீ பாவம்?” என அவன் கெஞ்சவும், “அது!” எனக் கெத்தாகச் சொன்னவர், “உன் வேலையை என் கிட்டேயே காட்டினா, நான் சும்மா இருப்பேனா?” என சொல்லிவிட்டு, “ஒழிஞ்சு போ!” என முடித்தார் மாமா.

பின்பு அங்கேயே இருந்த ‘கேஃப்டீரியா’வில் போய் தனக்கு ஒரு காஃபியும் மாமாவுக்குச் சர்க்கரை போடாத பாலும் வாங்கி வந்தவன், அதை அவரிடம் கொடுத்துவிட்டு, காஃபியை ஒரு மிடறு அருந்தியவனாக, “யாரு மாமா அந்த நிலா! அவளை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டான் முகிலன், தீவிரமாக.

12380

அதற்கு எந்த ஒரு தயக்கமுமின்றி அவளைப் பற்றி அவனிடம் சொல்லத்தொடங்கினார் மாமா.

இரண்டு மாதங்களுக்கு முன் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் இதே  பூங்காவில்தான் நிலாவை முதன்முதலில் சந்தித்தார் மாமா.

அன்று மாமா ‘லோ சுகர்’ காரணமாக மூச்சுப் பேச்சின்றி அங்கே விழுந்துவிட, உடனே அவருக்கு முதல் உதவி செய்து அவரை கண் திறக்க வைத்தாள் நிலவழகி.

மாமா பதினைந்து வயதாக இருக்கும்போதே இறந்து போன அவருடைய அம்மாவே வந்து அன்று அவரை காப்பாற்றியதாகத் தோன்றியதாம் மாமாவிற்கு.

அதுவும் அவளுடைய பெயர் நிலவழகி என்பது தெரியவரவும், அவருடைய அம்மாவின் பெயர் சுந்தரி என்பதினால், அதே பொருள் கொண்டு அழகி என்றே நிலாவை அழைக்கத் தொடங்கினார் மாமா.

அன்றுமுதல்தான் அவளுடன் நட்பாகி இருந்தார் அவர்.

அதன் பின் அங்கே அவளுக்கு யாருடனும் அதிகம் பழக்கம் இல்லாத காரணத்தால், சமையல் குறிப்புகள் கேட்கவென ஒருமுறை மாமியைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வந்தவள், அதன் பிறகு, மாமி, மாமாவின் மகன், மருமகள் பேத்தி என அனைவருடனும் நெருங்கிவிட்டாள்.

அந்த குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் ஒரு வீட்டில் தனியாகத் தங்கி இருக்கிறாள் நிலா.

அவளுடைய தந்தை புது தில்லியில், மத்திய அரசுப்பணியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவளுடைய அம்மாவும் அங்கேயே பள்ளி ஆசிரியராக இருக்கிறார். ஒரு தம்பி வெளிநாட்டில் எம்.எஸ் படித்துக்கொண்டிருக்கிறான்.

அவளுடைய அப்பாவின் பணி ஓய்விற்குப் பிறகு இங்கேயே வந்து குடியேறிவிடும் எண்ணத்தில், அந்த வீட்டை அவர்கள் வாங்கியிருப்பதாகவும்; அவளுக்கு இங்கே ஒரு மென்பொருள் நிருவனத்தில் வேலை கிடைத்துவிட, அந்த வீட்டிலேயே அவள் குடியிருப்பதாகவும், நிலா கூறியதாக அவளைப் பற்றி முகிலனிடம் சொன்னார் மாமா. அதைத் தவிர அவளைப் பற்றிய தகவல்கள் எதுவும் அவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

பேசிக்கொண்டே மாமாவை ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து பின்பு வீட்டிற்கு அழைத்து வந்தான் முகிலன்.

நிலா அங்கேதான் இருப்பாள் என அவன் நினைத்திருக்க, அவள் காலை ஆறு மணிக்கே அங்கிருந்து சென்று விட்டாள் என்று சொன்னார் மாமி

இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. திக் என்று ஆனது முகிலனுக்கு.

தனித்து விட்டால் மறுபடியும் எக்குத்தப்பாக அவள் ஏதாவது செய்து வைப்பாளோ என்ற பயத்தில்தான் அவளை மாமா வீட்டில் அவன் தங்க வைத்ததே.

‘மாமியிடம் முன்னமே காரணத்தைச் சொல்லி இருக்க வேண்டுமோ?’ என தன் அதிபுத்திசாலித்தனத்தை எண்ணி நொந்து கொண்டவன், முயன்று முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல் அங்கிருந்து கிளம்பி நேரே நிலாவின் வீட்டை நோக்கிச் சென்றான் அவன்.

வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது.

மென்மையாக அவன் கதவைத் தட்டிப் பார்த்தும் எந்த பதிலும் இல்லை.

அந்த தளம் முழுவதிலும் பார்வையைச் சுழலவிட்டவன் அங்கே ஆள் அரவமே இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான்.

அங்கே ஒரு சில வீடுகள் மட்டுமே உபயோகத்தில் இருக்கப் பெரும்பான்மையானவை மக்கள் குடிவராமல் பூட்டப்பட்டே கிடந்தது. அது அவனுக்கு வசதியாகப் போனது.

பின்பு, அங்கே இருக்கும் கண்காணிப்பு கேமராவின் கடமையைத் தடை செய்ய, கைப்பேசியில் ஏதோ செய்தவன், பின்பு அவன் வீட்டுச் சாவியைக் கொண்டே ஓரிரு நிமிடங்களில் அந்த பூட்டைத் திறந்துவிட்டான் முகிலன்.

பல ரகசிய அறைகளையும், திறக்கவே முடியாத நவீன ரக  லாக்கர்களையுமே சர்வ சாதாரணமாகத் திறப்பவனுக்கு இந்த தானியங்கி பூட்டு ஒன்றும் பெரிய விஷயமேயில்லை.

‘மத்தவங்க வீட்டுக்குள்ள இப்படி திருடன் மாதிரி நுழையறியே வெக்கமா இல்ல?’ என அவனது மனசாட்சி அவனை நக்கலாக கேள்வி கேட்க,

‘என்னோட மாமனார் வீடுதான இது. உரிமையா திறந்துட்டு உள்ள போறேன். யார் என்னைக் கேள்வி கேப்பாங்க? என அதற்கு  தானே கெத்தாக ஒரு  பதிலையும் சொல்லிக்கொண்டு, கவனமாக வலது காலை எடுத்து வைத்து  வீட்டின் உள்ளே சென்றான் முகிலன்.

எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டு மின் விளக்குகள் கூட ஒளிராமல் இருள் சூழ்ந்திருந்தது அந்த வீடு.

அங்கே இருந்த ஒற்றை சோஃபாவில் உடலைக் குறுக்கி உட்கார்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.

அங்கே இருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்க்க,கள்ளம் கபடமற்ற சிறு குழந்தையைப் போன்று அவனுக்குத் தோன்றினாள் அவள்.

12381

மெல்லிய குரலில் “நெஜமாவே குட்டி பேபி மாதிரிதாண்டி இருக்க நீ” எனக் கொஞ்சலுடன் சொல்லியவாறு அவளை கைகளில் ஏந்தியவன், அருகிலிருந்த பெரிய சோஃபாவில் அவளை வசதியாகப் படுக்க வைத்தான்.

அதுவரையிலும் சிறு அசைவு கூட தெரியவில்லை அவளிடம்.

அது அவனது மனதில் கிலியைக் கிளப்ப, அவளைக் கூர்ந்து கவனித்தவன் அவள் நல்ல உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டான். ‘ஒரே நாளில் என்னைச் சரியான பயந்தான்கொள்ளி ஆகிட்டடீ நீ! குட்டி பிசாசே!’ என மனதிற்குள்ளேயே அவளைத் திட்டித் தீர்த்தான் முகிலன்.

மணியை பார்க்க, அது ஒன்பதைக் கடந்திருந்தது.

அவள் எதுவும் சாப்பிடாமல் உறங்கிக் கொண்டிருப்பது வேறு அவனுக்கு மனதை வருத்தியது.

சமையற்கட்டிற்குள் சென்று பார்க்க,  சமையல் செய்வதற்குத் தேவையான எல்லா பொருட்களும் இருந்தது. அந்த இடத்தை  நேர்த்தியாகவும் அழகாகவும் வைத்திருந்தாள் நிலா. மனதிற்குள்ளே அவளை மெச்சியவாறு, குளிர் சாதன பெட்டியைத் திறந்து பார்க்க, இட்லி மாவும் தயாராக இருந்தது.

சில நிமிடங்களில் இட்லியும், சட்டினியும் தயார் செய்து முடித்தவன், மறுபடியும் அவளை வந்து பார்க்க, சிறு அசைவு கூட இல்லாமல், அவன் விட்டுச்சென்ற அதே நிலையிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.

‘இவளிடம் நிச்சயமாக ஏதோ சரியில்லை!’ என அவனது உளவாளி புத்தி அவனுக்கு எச்சரிக்கை செய்ய, ‘எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்!’ என அவனுடைய மனம் தெளிந்தது.

“ஏய்! நிலா! ஏய்! அழகி! எழுந்திறுடீ!” என சத்தமாக அழைத்தும், பட்! பட்! என அவளது கன்னங்களில் தட்டி அவளை எழுப்ப முயன்றும் அவளிடம் துளியும் அசைவில்லாமல் போகவே,

பொறுமை இழந்தவனாக, சமையல் அறை குழாயிலிருந்து, ஒரு குவளையில் தண்ணீரைப் பிடித்து வந்து, அதை மொத்தமாக அவள் முகத்தில் கவிழ்த்தான் அவன்.

மார்கழி மாத குளிரில், அந்த தண்ணீர் உரை நிலை அளவில் குளிர்ந்து போய் இருக்கவும், அலறி அடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்து, மிரள மிரள விழித்தாள் நிலா.

அவளுடைய முகத்திற்கு நேராகக் குனிந்து, “ஹாய்!” என்று சொல்லி அவன் புன்னகை செய்ய,

அவளது உறக்கம் கலையாமல், “வந்துடீங்களா பேபி?!” என்றவாறு அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “நீங்க எங்க வராமலேயே போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன் தெரியுமா?” என உளறலாகச் சொன்னாள் நிலா.

‘என்ன சொல்றா இவ?’ என அரண்டு போன முகிலன் அவளைப் பார்த்துக் கேட்டான், “ஆர் யூ ஓகே பெய்பி!”

error: Content is protected !!