Sarojini Devi’s Nilavai kondu vaa- Full novel

Sarojini Devi’s Nilavai kondu vaa- Full novel

நிலவைக் கொண்டு வா – 1

 

உச்சிப்புளி அருகே உள்ள சுந்தரமுடையான் சுகமான, சுகாதாரமான சுவாசத்திற்கும் பசுமைக்கும் பஞ்சமில்லா அழகிய கிராமம்.

 

கடற்கரையை ஒட்டிய பசுமையான தென்னந்தோப்புகளும், அவரவர் ஆசைகளுக்கும், மெனக்கெடல்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான தோப்புகளும், மரங்களும் நிறைந்த அருமையான இடம்.

 

நண்பகலில் வீசும் கடற்காற்றுக்கும், பசுமை படர்ந்த மரக்கிளைகளில் வீற்றிருக்கும் இலைகளின் ஆனந்த தலை அசைப்பால் உண்டாகும் தென்றல் காற்றுக்கும், தினந்தோறும் ஒரு ஊடலுடன் கூடிய கூடல் நடந்தாலும், அங்கு வாழும் மக்களுக்கு அதை உணர, ரசிக்க ரசனை இருக்கிறதோ, இல்லையோ, நேரமில்லை.

 

ஆனால், அதை உணர, ரசிக்க ஒரு கூட்டம் அத்திசை நோக்கிய பயணத்தை அவ்வப்போது மேற்கொள்கிறது. வார இறுதியில், அரசு விடுமுறை நாட்களில் அங்கு செல்பவர்களின் மனம் ஆசுவாசப்படுவதோடு, மீண்டும் அங்கு செல்லத் தூண்டும் வகையில் பொழுதுகள் இனிமையாகக் கழியும்.

 

சுமார் ஐநூறு குடும்பங்களைக் கொண்ட அக்கிராமத்தில், அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடுகள் இருந்தாலும் அவரவர் வசதிக்கேற்ப, சுற்றிலும் பனை மட்டையால் வேயப்பட்ட வேலிகளுக்குள், வீட்டைச் சுற்றிலும் மா, தென்னை, முருங்கை, சப்போட்டா, கொய்யா, மாதுளை, நெல்லி, எலுமிச்சை, நார்த்தை, கறிவேப்பில்லை, வேம்பு இவற்றுடன் மல்லி, முல்லை, கனகாம்பரம் மற்றும் இதர வண்ண மலர்கள், அழகு செடிகள் இல்லாத வீடுகள் சொற்பமே.

 

பூர்விகமாக அங்கு குடியிருப்பவர்களைத் தவிர, இளைப்பாறல்களுக்காகவும், விடுமுறையை வித்தியாசமாக விரட்ட நினைப்பவர்களுக்காகவும் பல வகையான தோப்புகள் கைகொடுக்கும்.

 

இருபத்தைந்து விழுக்காடு வெளியூர் மக்கள்,  செடிகள், மரங்கள் வளர்க்க எண்ணுபவர்கள் அங்குள்ள நர்சரிகளில் வந்து தமது எண்ணத்திற்கு ஏற்ப மரக்கன்றுகளை வாங்கிச் செல்பவர்களாக இருப்பதால் எப்பொழுதும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருக்கும்.

 

அங்கிருந்து மூன்று மைல் தொலைவில் அழகான கடற்கரைஅங்கு வாழ்பவர்களின் பிரதான உணவாக கடல் மீன்கள், (குளத்து மீன்களும் கிடைக்கும்) நண்டு, கணவாய், இறால் மற்றும் கருவாடு விரும்பி உண்ணப்படுகிறது.

 

ஊரின் மையத்தில் இருக்கும் பழமையான வீடும், சற்றேரக்குறைய ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வீட்டைச் சுற்றிலும் பல விதமான செடிகள், மரங்கள், வண்ண மலர் தோட்டம் என காண்போரை சற்று கவனிக்க செய்யும் விதமாக சுற்றுச் சுவருடன் கூடியது, மேலும், அலங்காரமான இரும்பு கேட்டுடன் கூடிய வாயில்

 

மூன்று தலை முறையாக மாவு மற்றும் ரைஸ் மில்லும், அடுத்த தலை முறையின் முயற்சியாக செங்கல் சூளை, மரங்கள், செடிகள் மற்றும் பல வண்ண மலர்களின் செடிகளை உற்பத்தி செய்து விற்பது, அதாவது நர்சரி , விற்பனைக்காக மலர்த்தோட்டங்கள் என இருந்த தொழில்களின் வரிசையில் இந்த தலைமுறையின் தலையீடாக இறால் வளர்ப்பும் இணைந்து , இடை விடாத உழைப்பால் உயர்ந்த குடும்பம் அவர்களது.

 
குடும்பத்தலைவர் ஹரிகிருஷ்ணன், அவரின் மனைவி துர்கா.

தற்போது இவை அனைத்தையும் எழுபதை நெருங்கும் ஹரிகிருஷ்ணனும் அவரின் இளைய மகன் ரகுநந்தனும் இணைந்து அக்கிராம மக்களின் ஒத்துழைப்போடு திறம்பட நடத்தி வருகின்றனர்

 

விக்ரமன், அவருடைய மூத்த மகன், தற்போது ஆஸ்திரேலியாவில் பணி நிமித்தம் தங்கி இருக்கிறான்உடன் அவன் மனைவி ஊர்வசி, குழந்தைகள் அனன்யா மற்றும் நவீன் வசித்து வருகின்றார்கள்.

 

அடுத்தவன் ஆதித்யன், புரூனேயில் பணி புரிந்து வருகிறான்அவனது மனைவி நர்மதா, இரண்டாவது பிள்ளைப்பேற்றிற்காக சுந்தரமுடையானில் இருக்கிறாள்.

 

மகன்கள் மூவரும் தனது தந்தையின் அயரா உழைப்பினைக் கண்டு வளர்ந்தவர்கள்தமது குடும்ப தொழிலில் அதிக அக்கறையும், ஈடுபாடும் இருந்தாலும், தனது தந்தையின் வழிகாட்டுதலால் வெளியூர்களில் சென்று பணி செய்யும் அளவிற்கு திறமையை வளர்த்துக்கொண்டவர்கள்.

 

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் பணி புரிந்து வந்த ரகுநந்தன், தனது தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்ட நலக்குறைபாடு காரணமாக தனது மென்பொருள் நிறுவன பணியை விட்டு விட்டு, தந்தையோடு தமது குடும்பத் தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டான்.

 

 

ரகுநந்தனுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல மற்ற இருவரும்ஒப்பந்த அடிப்படையில் இருவருக்கும் சில ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய நிலை. ஒப்பந்த காலத்திற்கு முன்பு , பணியிலிருந்து விலகும் பட்சத்தில் அபராதமாக கட்டணம் செலுத்துவதை தவிர்க்க எண்ணி அவர்களின் தந்தை, ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஊருக்கு வந்துகொள்ளலாம் என கூறிவிட்டார்.  

 

துர்காவிற்கு, பெண் குழந்தைகள் இல்லையெனும் ஏக்கம் எப்பொழுதும் உண்டுதற்போது குழந்தைப்பேற்றிற்காக வந்துள்ள தனது இரண்டாவது மருமகளை கவனிப்பதிலும், தனது இரண்டாவது மகனின் மகளான தன்யஸ்ரீ சீராட்டுவதிலும் சற்றே திருப்தி அடைந்து வருகிறார்.

 

அப்பத்தா….” என்ற தனது பேத்தியின் அழைப்பில் என்னவென கேட்டார் கண்களாலேயே …..

 

அம்மா…. மொபைலை தர மாட்டிங்கறாங்க…. நீங்க தாங்க….”

 

இவ்வளவு நேரமா கூப்பிட்டேன், காதுல வாங்காம இருந்த..”

 

இல்ல அப்பத்தா…. காதுல விழல…..” என்றாள், உடலை சற்றே வளைத்தபடி

 

அடி பட்டு…. கைல போன் இருந்தா…. இந்த அப்பத்தா கூப்பிடறது காதுல விழ மாட்டிங்குதுஎன்னத்தா சொல்ல….”,  ‘அந்த காலத்து புள்ளைங்க எல்லாம்  இப்படியா வளந்துச்சுங்கஎன மனதில் எண்ணியபடி ,

என் போன்ல ஒண்ணுமில்லைனு சொல்லுவ….”

 

பரவா இல்ல…… தாங்க…”

 

சரி மொதல்ல சாப்டுவியாம், அப்புறம்…. அப்பத்தா போன் தரேன்….”

 

இல்ல சாப்பாடு வேணாம்……நான் அம்மாகிட்ட போறேன்…..” என்றபடி நகர முயன்றவளை..

 

சாப்பிடற நேரமாச்சுன்னு உங்க அம்மா போனை உங்கிட்ட இருந்து வாங்கிருப்பா…. போதும் இன்னிக்கு போனை பார்த்தது…… வா சாப்பிடு….”

 

பசிக்கல வேணாம்…..” என்றவாறு நர்மதாவின் அறையை ஒட்டி நடக்க ஆரம்பித்தாள், தன்யா

 

எதிரில் வந்த நர்மதா இருவரின் பேச்சுக்களை கேட்டவாரே அங்கு வர ….

 

வா பாப்பு…. அம்மாக்கு பசிக்குதுநீயும் வந்து அம்மாவோட சாப்டுவியாம்…. தன்யா குட்டி நல்ல புள்ள தான…. “

 

சாப்டா, உங்க போனை தருவீங்களா….”

 

இவ்வளவு நேரம் கேண்டி கிராஷ் விளையாடிட்டு இப்ப தான போனை தந்த…”

 

அப்ப சாப்பாடு வேணாம்

 

அடம் பண்ணாத பாப்பாஇவ்வளவு நேரம் போனை யூஸ் பண்ணா…. கண்ணு வலிக்கும், அப்புறம் தலை வலிக்கும், அதான் அம்மா வேணான்னு சொல்றேன்.. நாளைக்கு காலைல தருவேனாம்வாஇப்போ சாப்பிடு..”

 

அப்ப…. ஊட்டி விடுங்க…” என நான்கு வயது தன்யா ஸ்ரீ கூற , அதற்குள் தட்டுடன் வந்த துர்கா

 

அம்மா சாப்பிடட்டும்…. அப்பத்தா ஊட்டி விடுறேன்வா….” என அழைக்க, அடுத்த நாள் ஒப்பந்தம் கையெழுத்திடாமல் சரி செய்யப்பட்டதால் இசைந்தாள்.

 

இருவரும் உண்டு விட்டு அறைக்கு சென்ற  பிறகு வந்த கணவருக்கான தேவைகளை கவனித்து அவரும் உறங்கச் சென்ற பின் இளைய மகனுக்காக காத்திருந்தார்

 

ரகுநந்தன், ஆறடி உயரம், மாநிறம், மிகவும் அடர்ந்த கேசம், புன்னகையை தன்னுடனே தேக்கி வைத்துக்கொண்ட உதடுகள், கூரான நாசி, கடற்கரையை ஒட்டிய தோழர்களுடன் சிறு வயது முதல் கடலில் நீச்சலடித்துப் பழகியதால் உண்டானகிண்என்று இருக்கும் வலிமையான தசைகள், ‘ வீ வடிவ குறுகிய இடை, அகன்ற தோள்கள்பள பளப்பான கண்கள்

 

சிறு வயது முதல் மிகவும் பொறுமையுடனும், புத்திசாலித்தனத்துடனும் வளர்ந்த தனது மகனின் இன்றைய நிலையை எண்ணியபடி இருந்த தாயின் கவனத்தை திருப்பும் வகையில் காம்பௌண்டைத் தாண்டி உள்ளே வந்தது BMW .

 

ஏன்பா.. இன்னிக்கு ரொம்ப லேட்டாகிருச்சு… “

 

மதுர வரை வேலம்மா …. அதான்… “

 

அப்பாட்ட சொல்லலயா…”

இல்லம்மாநம்ம ஆடிட்டரு…. வெளியூர் போறாராம்…. வர ஒரு மாசமாகும்னு சொன்னதால…. கிளம்பிட்டேன்

போன்லயாவது சொல்லிருக்கலாம்ல…”

இன்னிக்கு டவர் ப்ரோப்ளேமாவே இருந்ததும்மாமொதல்ல ட்ரை பண்ணேன்…… அப்புறம் வேலைல மறந்துட்டேன்…”

 

தாயிடம் பேசியவாறு கை, கால், முகம் அலம்பிவிட்டு உணவருந்த வந்தான்.

 

அம்மா… , சாப்பிட்டீங்களா…”

 

இல்ல, இனிமே தான்யாசாப்டணும்…” என்றவாறு மகனுக்கு உணவை எடுத்து வந்தார்.

 

தட்டெடுத்துட்டு வாங்கம்மா…. சேர்ந்து சாப்பிடலாம்….” என்று கூறியபடி அடுக்களாயினுள் கழுவி வைக்கப்பட்ட தட்டை நந்தனே எடுத்து வந்து தாய்க்கும் உணவை எடுத்து தந்தபடி உண்ண அமர்ந்தான்.

 

ஏன்மா…. எதுக்கு இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கீங்கஉடம்பை கவனிங்கம்மா….”

 

சரிய்யா….”

 

இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறியபடி உண்டு முடித்தனர்.  

 

நந்தன் கடைக்குட்டி, அம்மா செல்லம் சிறு வயது முதலே.. மற்ற இருவரும் தாயுடன் நந்தன் அளவிற்கு ஒட்டமாட்டார்கள். நந்தன், தாய், தந்தை இருவரிடமும் அதிக ஒட்டுதலுடன் இருப்பான்.  

 

அந்த அன்பால் அவர்களின் ஆசைகளுக்கெல்லாம் சரி, சரி என்று போனதும் தவறோ என்பது போல கடந்த இரண்டு ஆண்டு கால அவனது வாழ்வு அமைந்து, துர்காவிற்கு தூக்கம் என்பதே இல்லாமல் போனது

 

உண்டபின் சிறிது நேரம் டிவியில் நியூஸ் கேட்டுவிட்டு படுக்கைக்கு செல்லும் பழக்கத்தால் ஹாலில் டிவியை ஆன் செய்து அமர்ந்தான்.

 

அதன் பிறகான இதர வேலைகளை முடித்துவிட்டு வந்த தாயின் களைப்பான தோற்றம் மகனுக்கு வருத்தத்தை தந்தது.

 

ஏம்மாஇனி நீங்க சாப்பிட்டுட்டு  …. எனக்கு சாப்பிட… மேடை மேல எடுத்து வச்சுட்டு போயி படுக்கம்மா…… நான் போட்டு சாப்டுக்குவேன்…”

 

என்னப்பா….. இவ்வளவு நாளா செய்யறது தான…. புதுசா என்ன பண்ணேன்…”

 

நீங்க ரொம்ப டையர்டாஇருக்கீங்கஅதான் சொல்றேன்நான் சொல்லி நீங்க கேக்கமாட்டீங்க…” என்றவாறு டிவியை அணைத்து விட்டு , அவனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

 

நந்தா…” தாயின் அழைப்பு அவனின் நடையை நிறுத்தியது.

 

என்னம்மா….”

 

நாளைக்கு வதனா வரா…. அத சொல்ல தான் கூப்பிட்டேன்என்றவாறு மகனின் முகத்தில் ஏதேனும் , அவனின் உணர்வுகளின் உச்சத்தினை காண எண்ணியவருக்கு ஏமாற்றமே….

 

என்னம்மா திடீர்னு…”

 

திடீர்னு ஒண்ணுமில்ல, ஏற்கனவே சொன்னது தான….”

 

வதனி இங்க வர ஒத்துக்கிட்டாளா ……?”

 

அதனால தான், இன்னிக்கு உங்கத்தை உங்கப்பாவுக்கு பேசினா…” 

 

நீங்க வதனிகிட்ட பேசுனீங்களாம்மா..”

 

இல்ல தம்பிஏன் கேட்குற…”

 

இல்லஅத்தை, மாமாவோட வற்புறுத்தலுக்காக , அவ இங்க வர சரின்னு சொன்னாளோணு கேட்டிருக்க வேண்டியதுதானம்மா

 

அவளோட ட்ரைனிங் முடிஞ்சு ஆறு மாசமாச்சு. இதுவே லேட்டு தானப்பா…”

 

தானா கனியாதத…. தடி கொண்டு கனிய வைக்க கூடாதுன்னு நீங்க தானம்மா சொல்லுவீங்க…. அதான் கேட்டேன்…”

 

யாரும் அவளை வற்புறுத்தல…. வற்புறுத்துனாவருத்தப்படற ஆளும் இல்ல அவ…. அவளாவே…. நான் சொன்ன நாளுக்கு மேல ஆறு மாசமாச்சுன்னு சொல்லிஇங்க கூட்டிட்டு வந்து விட யாரும் வாரீங்களா…. இல்ல நானா போயிக்கணுமான்னு  கேட்டதாஉங்கத்தை சொன்னா…” என சிரித்தபடி கூறினார்.

 

சரிம்மா…. வரட்டும்…. பாத்துக்கலாம்

 

இன்னிக்கு மாதிரி வெளியூர் எதுவும் போயிற வேணாம்தம்பி.. அவங்க வரும்போது இன்னிக்கு மாதிரி லேட்டா வந்தா நல்லாருக்காதுல்ல …. அதுக்கு தான் சொன்னேன்..”

 

எங்கயும் போகலம்மாபோதுமா.?” என்றவாறு நகர்ந்தான்..

 

வதனியின் வரவுச் செய்தியை கேட்ட பின் ரகுநந்தன் தனது இயல்பை தொலைத்து, உறக்கம் மறந்து விழித்திருந்தான்….. விடியலை நோக்கி..

 

அவனது வாழ்க்கை எனும் வானில் நிலவாகிய அவளை கொண்டு வர எவ்வளவு திண்டாட்டம் என்பதை காண அவள் வரும் வரை காத்திருப்போம்.

 

நிலவைக் கொண்டு வா – 2

 

வடபழனியில் உள்ள ‘3D ஆர்க்கிடெக்ட் நிறுவனம்’ மாலை வேளையிலும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. ரெசிடென்சியல், ரிசார்ட்ஸ், மாடர்ன், ஏன்சியண்ட் ஆர்க்கிடெக்ட் மற்றும் இண்டீரியர், புளோர் ப்ளான், ரியல் எஸ்டேட் அட்வைசரி, நியூ பில்ட்ஸ், சோலார் பவர் ஜெனரேசன் என கட்டிடங்களின் அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் மட்டுமே.

 

நான்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் அனைத்து தர மக்களுக்கும் ஏற்றவாறு கட்டிடங்கள், குறித்த காலத்தில், தரமான பொருட்களைக் கொண்டு கட்டித்தரப்படுவதால், அலுவலகத்திற்கு வந்து போவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு போகிறதே தவிர குறைந்தபாடில்லை.

 

இரண்டாவது மாடியில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் சிஸ்டம் முன் அமர்ந்து, தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் மிகத் தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கும் அழகுப் புயல் ‘காதம்பரி’.  

காண்பவரை ஒரு கனம் நின்று ரசிக்கத் தூண்டும் ஐந்தரை அடி உயர மெழுகுச் சிலை.  வள, வள பேச்சில்லா, சுறு சுறுப்பான பெண்.

 

தன் திறமை, அழகு பற்றிய எந்த கர்வமும் இல்லாத, அலட்டல் இல்லாத…, எதையும் அலட்சியப் படுத்தாத புத்திசாலிப் பெண். 

 

சிதம்பரம், கமலாவின் ஒரே செல்ல மகள்.  பொது நலத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சிதம்பரத்திற்கு, தனது மகளின் பொறுப்பான செயல்களை எண்ணிப் பெருமிதம்.

 

“கேட்(KAT), உன் வர்க் முடிஞ்சா, என் கேபின் வரை வர முடியுமா…?”, என அலுவலகத் தோழி மஞ்சு கேட்க

 

“டென் மினிட்ஸ்ல வரேன்…” என்றவாறு, தனது பணியை விரைந்து செய்தாள்.

 

“இன்னிக்கு மும்பை டிசைனர்ஸ் அவார்டு போட்டிக்கு அனுப்ப லாஸ்ட் டேட் மஞ்சு… அதான்…. முடிக்க போறேன்…. மெயில் செண்ட் பண்ணிட்டு வந்துறேன்”

 

“நானெல்லாம் இங்க குடுக்கற வேல செய்யவே திண்டாடிட்டு இருக்கேன்….. ஆனா உன்ன மாதிரி இங்க நிறைய பேரு டக்குனு வேலய முடிக்கிறீங்க…. காம்படீசனுல்ல எல்லாம் கலந்துகிறீங்க….. என்னவோபா….. நீங்க படிச்ச அதே தான் நாங்களும் படிச்சோம்….. ம்.ம்ம்..”

 

“வரேன்…. மஞ்சு… புலம்பாதே……” , என்றாள் சிரித்தவாறு

 

அலுவலகத்தின் வாயிலாக பங்கேற்க கூடிய, அனைத்து தனது துறை சார்ந்த போட்டிகளில் கட்டாயமாக காதம்பரி கலந்து கொண்டு பரிசும் வென்றிருக்கிறாள்.

 

கடந்த ஆண்டு, சென்னையில் உள்ள பிரபலமான பொறியியல் கல்லூரியின் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களில் ஆர்க்கிடெக்ட் துறை மாணவியான காதம்பரியும் ஒருத்தி.

 

வேலைக்கு சேர்ந்த மூன்றே மாதங்களில், இண்டீரியர் பிரிவில் பதவி உயர்வின் மூலம் முக்கிய பொறுப்பில் இருக்கும் காதம்பரியையும், அவளின் திறமையையும் பற்றி அறியாதவர்கள் அவ்வலுவலகத்தில் யாரும் இல்லை.

 

“என்ன மஞ்சு…… என்ன பிரச்சனை…?”

 

“இந்த டிசைன்ல கொஞ்சம் மாடிஃபை பண்ண…. மவுஸ் யூஸ் பண்ணா…… மேல உள்ள டிசைனும் அஃபைக்ட் ஆகுது…… எனக்குத் தெரியாம…. எதோ ஒரு டூல் ஆக்டிவேட் ஆகி இருக்கு…. ஆனா என்னால் அதை கண்டு பிடிச்சு ரெக்டிஃபை பண்ண முடியல….. கேட்….”

 

“சரி….. நான் பாக்குறேன்”

 

அடுத்த ஐந்தாவது நிமிடம்…. “பாரு மஞ்சு…. இப்போ… ஓகே… வானு….”

 

“எப்டிபா…. உடனே முடிச்சிட்டே…..”

 

உடனே அதற்குரிய விளக்கங்களை கூறி விட்டு….. அங்கிருந்து அகன்றாள்.

 

தனது திறமைக்கு தீனி போடும் சவாலான சில கட்டிடங்களின் உள்கட்ட, வெளிப்புற வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தை ஆர்வம் மற்றும் இடைவிடாத உழைப்பால் குறுகிய காலத்தில் பெற்றிருந்தாள்.

 

தியாகராய நகரில், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில், மகளின் வரவிற்காக அவளின் தாய் கமலா வாயிலைக் கவனித்தவாறே தனது பணிகளைச் செய்த வண்ணமிருந்தார்.

 

வீட்டிற்கு ஒரே மகளாக இருந்தாலும், இருவரின் கண்டிப்பான வளர்ப்பாலும், ஊக்கத்தாலும் சிறு வயது முதலே விழிப்புணர்வோடும், தன்னம்பிக்கையுடனும் வளர்ந்திருந்தாள்.

 

இருபத்து மூன்று வயதான தனது மகளை, நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுத்து விட்டால், தனது பிறவியின் நோக்கத்தை அடைந்த திருப்தி கிடைக்கும் என்று எண்ணும் சராசரித் தமிழகத் தாய் கமலா.

 

அந்த நோக்கத்தை அடைய, உரிய முயற்சியாக சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் பல மேட்ரிமோனியில் பதிந்து நல்ல வரனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

 

மகளின் அமைதி, அறிவு, அழகு, பொறுமை இவற்றிற்கு ஏற்ற வரனை கண்டுபிடிப்பது இலகுவான காரியமாக எண்ணியவருக்கு, களத்திற்குள் இறங்கிய பின் தான் புரிந்தது அது எளிதல்ல என்று.

 

சற்று முன்பே பதிந்திருந்தால் வரன் தகைந்திருக்குமோ என்று எண்ணும் அளவிற்கு வரன் பார்ப்பதில் உண்டான அனுபவம் அவரை சற்றே நிதானிக்கச் செய்கிறது.

 

மகளின் திருமணம் சார்ந்த பணிகளை கவனிக்கும் முன்பு கணவரிடம் கூறிய போது,

 

“இப்ப என்ன அவசரம்..?”

 

“இன்னும் நாலு வருசத்துல ரிட்டையர்ட் ஆகிருவீங்க…. அதுக்குல்ல முடிச்சா….. நல்லதுனு நினைக்கிறேங்க…”

 

“சரி….. இப்போ…. நானென்ன செய்ய…..”

 

“தரகர் யாருக்கிட்டயாவது….. சொல்லி வைங்க…. அப்றம்… பார்ப்போம்….”

 

தரகர்களின் வாயிலாக வந்த ஜாதகங்களைக் கண்ட கமலா……

 

“ஏங்க…… ஜாதகங்கள் வந்தாலும்…. பத்துல…. ரெண்டு பொருந்தறதே…… கஸ்டமா இருக்கு… அதனால… மாட்ரிமோனிலயும் பதிஞ்சிருவோம்”

 

“ஆபீஸ் கிளம்பும்போது மறக்காம அந்த டீடைல்ஸ் பைல் குடுத்து விடு….. சாயந்திரம் வரும்போது… பதிஞ்சுறேன்”

 

இவ்வாறு இருவரும் நல்ல வரனை நோக்கி காத்திருக்க, இதை அறியாத காதம்பரி வழக்கம்போல அலுவலகம் சென்று வந்தாள்.

 

தனது மகளின் ஆக்டிவா சத்தம் கேட்டு, விரைவாக காபியை தயாரித்தவர் மகள் வீட்டிற்குள் நுழையும் போது அவளை எதிர்கொண்டு காபியை கையில் கொடுத்தவாறு,

 

“என்னடாம்மா….. இன்னிக்கு கொஞ்சம் லேட்டா….?”

 

“ட்ராஃபிக்….. வழக்கம் போலம்மா…”

 

“உங்களுக்கு பொழுது எப்டி போச்சு…”

 

“வீட்டு வேல செய்ய ஆரம்பிச்சா….. நேரம் போறதே… தெரியாது”

 

“மதியம் …. சாப்டீங்களா…?”

 

“ம்…. மூணு மணிக்கு”

 

“இன்னிக்கு சீக்கிரமா சாப்டீங்க போல…” என சிரித்தபடி, குடித்து முடித்த காபி டம்ளரை சிங்கில் போட்டவள், அவளின் அறைக்குள் சென்று சிறு குளியல் போட்டு அம்மாவிடம் வந்தாள்.

 

“என்னம்மா…. செய்றீங்க..?”

 

“கிரைண்டர் போட போறேன்..”

 

“சரி… நான் போடுறேன்…. கொஞ்ச நேரம்… அப்டி உக்காருங்க..”

 

“நீ இப்பதான ஆபீஸ்ல இருந்து வந்த….. இரு… அம்மா பாத்துக்கறேன்”

 

“நான் ரைஸ் போடுறேன்…. அது வரை இருங்க…” என்றபடி அதற்கான பணிகளை மேற்கொண்டாள்.

 

மகளிடம் பேசியவாறு, கமலா உலர்ந்த துணிகளை மடித்தார்.

 

காதம்பரி அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிலும் தனது தாய்க்கு உதவியாக எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பாள்.  அலுவலகத்தில் பணி செய்து விட்டு வரும் மகளிடம், எந்த பணியையும் கொடுக்காத நிலையிலும், அவளாக முன்வந்து தாயிற்கு உதவி செய்வாள்.

 

“அம்மா… என் காலேஜ் மேட் ப்ரவீணாவுக்கு டெல்லில ஜாப் கிடச்சிருக்கு…. அதுக்கு ட்ரீட் கமிங் சண்டே தராளாம்… போயிட்டு வரவாம்மா..?”

 

“சரிம்மா…..”

 

“உங்க அப்பத்தா இன்னிக்கு போன் பண்ணாங்க….”

 

“எதுக்குமா?” பேத்தியின் ஜாதக விசயமாக கேட்கவே அவர் பேசியது… ஆனால் அதை விடுத்து…

 

“கோவில் விசேசத்துக்கு இந்த வருசமாவது வர சொன்னாங்க”

 

“எப்பவாம்மா…?”

 

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை….., உனக்கு உங்க கம்பெனில லீவு கெடைக்குமா?”

 

“எத்தனை நாளுக்குமா?”

 

“செவ்வாய் கிழமை நைட் கிளம்புனா…. அங்கிட்டு நாளு நாளாவது இருக்கணும்…. இல்லனா… உங்க அப்பத்தா…. அதுக்கு எதாவது சொல்லுவாங்க”

 

“ஜாப்ல ஜாயிண்ட் பண்ணதில்ல இருந்து இது வரை நான் லீவே போடல… அதனால… லீவுனு நான் போயி கேட்டா கண்டிப்பா கெடைக்கும்மா… அப்பாவுக்கு லீவு இருக்காணு கேளுங்க…. இருந்தா எங்க ஆபீஸ்ல லீவு சொல்றேன்மா..”

 

“உங்க அப்பாக்கு எப்பவும் எதாவது சாக்கு சொல்லுவாறு….. இந்த முறை சொல்லி பாப்போம்….. கிடச்சா போயிட்டு வருவோம்”

 

நாம ரெண்டு பேரும் என்னோட லெவந்த் லீவுல ஊருக்கு போனதும்மா…”என்றவாறு அரைத்த அரிசி மாவை அள்ளிவிட்டு உழுந்தை போட்ட மகளிடம்,

 

“சரி நீ போயி ரெஸ்ட் எடு…. அம்மா பாத்துக்குறேன்”

 

“அவ்வளவு தான்மா… அப்பா வர மாதிரி வண்டி சத்தம் கேட்குது… நீங்க அப்பாவை கவனிங்கம்மா….”

 

“அவரு வரட்டும்…. பரவாயில்ல… நான் பாக்குறேன்”

 

“மொதல்ல அப்பாவைக் கவனிங்கம்மா…”

 

வீட்டிற்குள் வந்த சிதம்பரம், இருவருடைய சத்தம் வரும் திசையை நோக்கியவாறு, “காதம்பரி, அப்பாக்கு குடிக்க தண்ணீ கொண்டு வாடா…..”

 

உடனே அம்மாவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு வேகமாக செம்பில் நீருடன் வந்தாள்.

 

“இந்தாங்கப்பா….” என நீரை கொடுத்தாள்.

 

வாங்கிய நீரை அருந்திவிட்டு, சற்று நேரம் மகளுடன் பேசியபடி இருந்தார்.  அங்கு வந்த கமலா, அவரது தாய் கோவிலுக்கு வருமாறு கூறியதைக் கூறினார்.

 

சற்று நேரம் யோசித்துவிட்டு, “சரி போவோம்…. ஆனா நம்ம காதம்பரிக்கு…” என மகளை நோக்க

 

“எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா….” என்றவாறு தனது தாயிடம் கூறியதை தந்தையிடமும் கூறினாள்.

 

ஒருவாராக அடுத்த வாரத்தில் ஊருக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டு காதம்பரி தனது அறைக்கும், சிதம்பரம் அவர்களது அறையை நோக்கியும் சென்று விட்டனர்.

 

காதம்பரி, தனது மொபைலில் சிறிது நேரம் செலவழித்து விட்டு, பிறகு லேப்பை ஆன் செய்து அதில் அடுத்த வாரம் ஊரில் இல்லாத போது தனது ஷெட்யூல் வேலைகள் என்னென்ன? அதை ஊருக்குச் செல்லும்முன்பு முடிக்க வேண்டிய பணிகளை அட்டணை செய்து அதன்படி வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

 

ஹாலில் இருந்த கமலாவின் போன் ஒலியில், அங்கு வந்து அதை எடுத்து பேச ஆரம்பித்தார்.

 

“சொல்லுங்க தரகரே..”

 

“உங்க பொண்ணூக்கு பொருந்தற மாதிரி ஏழு ஜாதகம் கைல இருக்கு”

 

“ம் அப்டியா…. நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு மேல் வாங்க” என்றவாறு போனை வைத்து விட்டு, அங்கிருந்தபடி மகளின் அறையை நோக்கியவாறு, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த கணவரிடம் விசயத்தினை கூறினார்.

 

அடுத்து வந்த நாட்களில் கோவில் விசேசத்திற்கு தங்களது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானகிரி செல்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

 

தந்தை மற்றும் மகள் இருவரும் அவரவர் அலுவலகப் பணிகளில் நேரத்தினை செலவிட்டனர்.

 

கமலா மகளுக்கு வந்த ஏழு ஜாதகத்தினை எடுத்துக் கொண்டு பொருத்தம் பார்க்கவும், பொருத்தமான ஜாதகங்களின் மாப்பிள்ளை மற்றும் குடும்பம் பற்றிய விசயங்களைக் கவனிப்பதிலும், விசாரிப்பிலும், ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.

 

சிதம்பரம் தனது வருகையை முன் கூட்டியே தனது தாய் மனோகரியிடம் தெரிவிக்க, அங்கு அவர் தனது குலதெய்வத்திடம், பேத்திக்கு விரைவில் மணக்கோலம் அமைய வேண்டுதலை வைத்துவிட்டு.., தனது மகனின் குடும்ப வரவை எண்ணி ஆவலோடு காத்திருந்தார்.

வேண்டுதல் நிறைவேறுமா?…….

நிலவைக் கொண்டு வா – 3

 

மேகத்தில் ஈரம் போல், கண்ணுக்குள் நீர் ஏனம்மா?

பூமிக்குள் வைரம் போல், நெஞ்சத்தில் நீ தானம்மா

சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே

சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே

இது காதல் ராகமே, புரியாத மோகமே……..

 

வதனியின் நினைவால் உறங்காதிருந்தவன், கடந்த முறை இங்கிருந்து செல்லும்போது அவளின் ஈரம் படர்ந்த கண்களிலிருந்து, கண்ணீர் கீழே விழாமல் இருக்க, தனக்குள் மூச்சை ஆழ்ந்து இழுத்து சரி செய்ததை நினைவு கூர்ந்தபடி விடியலில் படுக்கையை விட்டு எழுந்தான்.

 

‘ஊரிலிருந்து அவள் இங்கு வர எப்படியும் மதியமாகி விடும்’ என எண்ணியவாறு கிளம்பினான்.

 

நர்சரி மற்றும் இறால் பண்ணை வரை சென்று வருவதாகத் தந்தையிடம் கூறிவிட்டு புறப்பட்டான்.

 

படுக்கையில் கண் விழித்தபடி, பகலவனின் வருகைக்காக காத்திருப்பது பரீட்சைக்கு படிக்க அல்ல. தன் வயதொத்த வானரங்களின் (‘இப்டி தான் அம்மாச்சி சொல்லுவாங்க’) வரவிற்காக எழுந்திருந்தாள்.  

 

தனது தாயிற்கு தெரியாமல் அறையை விட்டு வெளி வந்தவள், பல் தேய்த்து, முகம் கழுவி அவளின் அன்றைய காலையை தனது விருப்பம்போல் விரட்ட தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வீட்டின் காம்பவுண்ட் கேட் அருகே அமர்ந்து தனது வேலையினை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

‘எந்த மனுசரும் நா வெளில போற வர என்னய பாத்ரக்கூடாது…. பாத்தாலும்…. அவங்க கண்ணுக்கு நான் தெரியக்கூடாது….’ 

 

பரீட்சைக்கோ, பள்ளி நாட்களிலோ அதிகாலைப் பொழுதில் எழாதவள், இன்றைய அவர்களது முக்கிய பணியான தோப்பில் உள்ள மாங்காய்களை மரத்தில் இருந்து கல்லால் அடித்து விழ வைக்க உண்டிகோல் செய்து கொண்டிருந்தாள்.

 

மரம் ஏறுதல் கூடாது என வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட, அதற்கான மாற்று ஏற்பாடு தான் அவள் கைவசம் இருப்பது.

 

‘என்ன, இன்னும் யாரையும் காணோம், இவங்க வந்து நம்மள கூட்டிட்டு போறதுக்குள்ள, வீட்டுல இருக்கிற டான்ஸ் (Dons) எல்லாம் கோழி குஞ்சை கூடைக்குள்ள அடைக்கிற மாதிரி வீட்டுக்குள்ள போட்டு என்னய அடைக்கப்போறாங்க… கடவுளே…. பின் கட்டுல வேல சீக்கிரமா முடிஞ்சிறக்கூடாது….’

 

பால் கறக்க டிப்போவில் இருந்து வந்துவிடுவார்கள் என்பதால் முதலில் மனோகரி நான்கு மணிக்கு எழுந்து வெளி கேட்டை திறந்து விடுவார், அதன் பின், வீட்டில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்து தத்தமது பணிகளைச் செய்ய ஆரம்பித்துவிடுவர் என்பதால் அவளின் அத்தை துர்காவும் எழுந்து அவர்கள் செய்ய வேண்டியதை பிரித்து கொடுப்பார்.   

 

ஒய் வடிவ கவட்டை கம்பில் பெல்ட்டை வைத்து இறுக்கமாக கட்டி முடித்தாள், வதனா. 

 

‘அப்பாடி, உண்டிகோலு ரெடி’

 

“கவகதகனா கவகதகனா….. கநா கங் கக     கவ கந் கது கட் கடோ கம்… கநீ கவா……. கநே கர கமா கச் கசு”

 

‘அப்பாடி… வந்துட்டாய்ங்க…’

 

“கவ கரே கன்…”

 

வதனா….. வதனா….. நாங்க வந்துட்டோம்… நீ வா நேரமாச்சு என்று அழைப்பு வந்தவுடன்… அவளது அடுத்த கட்ட தேவைகளுக்குரிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு விரைந்தாள்.

 

வீட்டில் தனது பெயரை அழைக்கும் சத்தம் கேட்டு அவளின் அம்மாச்சி மற்றும் அத்தை வந்தால், இன்றைய நாள் அவர்களின் நாளாகிப் போகும் என்பதால் அலார்டாக இருக்கும் வதனியின் ஏற்பாடு இது.

 

ஒரு நபர் நுழையக்கூடிய அளவில் உள்ள பெரிய கேட்டுடன் இணைந்திருக்கும் சிறு கேட்டைத் சத்தம் வராமல் திறந்து வெளியே சென்று, மீண்டும் சத்தம் வராமல் பழையபடி வைத்துவிட்டு தனது சகாக்களுடன் சென்றாள்.

 

சற்று தூரம் சென்றபின், “என்ன…. இன்னிக்கு ஃப்ர்ஸ்ட் எங்க போலாம்?” என வதனி கேட்க

 

“ரோட்டோரமா இருக்கிற புளிய மரத்துல உதிந்திருக்ற புளியம்பழத்த பொறக்குவோம்…”

 

“நீங்க பொறக்கி வீட்டுக்கு எடுத்துட்டு போவீங்க….. அத வச்சு நானென்ன செய்ய?”, என்றாள் வதனா.

 

“இல்ல பனங்காட்டு பக்கம் போயி நொங்கு பொறக்குவோம்..”

 

“தோப்புல போயி மாங்கா அடிப்போம்”

 

‘ஆளாளுக்கு ஒண்ணு சொல்ராய்ங்க’ என யோசித்த வதனா, “பனங்காடு மொதல்ல போவோம்”, என்றாள்.

 

அறுவர் கொண்ட குழு, நுங்கு எடுக்க பனங்காட்டை நோக்கி பயணித்தது.

 

வதனா எனும் சந்திரவதனி, கோடை விடுமுறைக்காக தனது அம்மாச்சி வீட்டிற்கு வந்திருக்கிறாள்.  வருடமொரு முறை அங்கு வந்து சென்றாலும், அந்த ஊரின் லேஅவுட் அவளுக்கு அத்துபடி. மேலும், அங்கு எவ்வாறு தனது பொழுதை இனிமையாகக் கழிக்கலாம் என்பதை அறிந்தவள். 

 

அவளது தாய் கீதாஞ்சலி, வாலில்லாத தனது மகளால் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்க எண்ணி தனியாக எங்கும் அனுப்பமாட்டார்.  அதே போல், அவளது அத்தை துர்காவும் இவளின் அடாவடிகளை அறிந்ததால் மிகவும் கண்டிப்போடு இருப்பார்.

 

சந்தன நிறம், திருத்தமான வட்ட முகத்தில், வில் போன்ற அடர்த்தியான புருவங்கள், மை எழுதியது போன்ற இமைகளுக்குள் துறு, துறு கண்கள், சிவந்த நிறத்தில் செப்பு உதடு, எடுப்பான நாசி.  

 

தோற்றம் மற்றும் ஆடைகளை வைத்தே, வெளியூரிலிருந்து அவள் வந்திருப்பதை உணர்ந்து கொள்வர், அக்கிராம மக்கள். 

 

அணில் கடிக்கும்பொழுது மரத்திலிருந்து கீழே தவறி விழுந்திருக்கும், நுங்குள்ள கோந்தைகளை ஆளுக்கொரு பக்கமாகச் சென்று எடுத்து வந்து ஓரிடத்தில் வைத்தனர்.

 

“போதும்பா…. எல்லாரும் வாங்க..”

 

“இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வந்து உக்காருவோம்”

 

“ஏய், ரம்யா….., நீ இங்கயே உக்காரு…”

 

“நான் மட்டுமா?”

 

“நாங்க இன்னொரு ரவுண்டு போயிட்டு வந்தவுடனே ஆரம்பிக்கலாம்…”

 

“அது வரை நானென்ன செய்ய?”

 

“சின்ன அருவாவ வச்சு.. கண்ணுக்கு மேல லைட்டா எல்லா கோந்தையையும் சீவி வையி….”, என்றவாறு சென்றுவிட்டனர்.

 

கையில் ஒன்றிரண்டு கோந்தைகளுடன் அவர்கள் வர , அனைவரும் சேர்ந்து கண் தெரிந்த இடத்தில் கை பெருவிரலால் நுங்கை லாவகமாக திறந்து, பேசியபடி குடித்தனர்.

 

அதிகாலையில் எழுந்து ஒன்றும் குடிக்காமல், சாப்பிடாமல் வந்ததில் அனைவருக்கும் நல்ல பசி.  காலை உணவாக நுங்கை சாப்பிட்டதாக பேர் செய்து விட்டு, அங்கிருந்து தோப்பை நோக்கி நடந்தனர்.

 

உண்டிகோல் சரியாகக் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து அதன் பின் அதை பயன்படுத்திய போது முதலில் இலக்கை எட்டாத கல் பிறகு சற்றே கை கொடுக்க ஆரம்பித்தது.

 

அவரவர் கையில் இருந்த உண்டிகோலால் அவரவர்க்கு வேண்டியதை அடித்து கீழே விழுந்தவற்றை எடுத்தனர்.  அப்போது, விழுந்ததை எடுக்கக் குனிந்த ரம்யா…ஆ…… என்று கத்த….

 

“ஏய், நிப்பாட்டுங்க..”, என்றபடி அவள் நின்ற இடத்தை நோக்கிச் சென்றவர்கள்…..

 

“எங்க அடிபட்ட இடத்தை காமி…”

 

“பாத்து போயி எடுக்கமாட்டியா…. ரம்யா?” ‘இவளுக்கு கொஞ்சம் மூளை கம்மி யா…’ 

 

“இல்ல, நான் அங்க போனதுக்கப்புறம்….. யாரோ உண்டில அடிச்சிருக்காங்க”

 

“நல்லா அழுத்தி தேயி”

 

“சரி, நானே தேய்க்கிறேன்”

 

“சரி, போதும் இன்னிக்கு, வாங்க தோப்ப விட்டு வெளியில போவோம்”

 

கையில் இருந்ததை எடுத்துக் கொண்டு, சிலர் மா, கொய்யாவைக் கடித்தபடி பேசிக்கொண்டே வந்தபோது… வதனாவைத் தேடியபடி எதிர்புறமாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான் ரகு.

 

அதைக் கவனித்த வதனா, “எங்க வீட்ல அதுக்குள்ள தேடறதுக்கு ஆள் அனுப்பிட்டாங்க”

 

“யாரு வந்தா”

 

“எங்க ரகு மச்சா…”

 

“யாரையும் காணோம்”

 

“அந்த பக்கமா தேடி போறாங்க…… யாராவது என்னைய பாத்துட்டு போயி சொல்றதுக்குள்ள நானே வீட்டுக்கு போறேன்”

 

“அப்ப எப்ப வருவ”

 

“வருவேன்…. எல்லாரும் அசந்த நேரம் பாத்து…..” என்றவள் சிரித்தபடி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

‘ரகு…. கொகு…. அதுக்குள்ள… தேடி வந்துட்டாக…’

 

இரண்டு தெரு தாண்டியவுடன், அருகே ஒரு சைக்கிள் வந்து நிற்க,

 

‘பாட ஆரம்பிச்சிருமே’

 

“டெய்லி வேற வேற இடத்துக்கு ஏன் போற”

 

‘ஒரே இடத்துக்கு போனா….. அப்பவே என்ன கண்டுபிடிச்சுருப்பியே… (மரியாத தெரியாத புள்ள இல்ல நானு……. வெளியில ரொம்ப மரியாதையா நடத்துவேன்…. மனசுக்குல்ல கொஞ்சம் அப்டி…. இப்டி தான்….)’

 

“அவங்க எங்கங்கல்லாம் போனாங்களோ….. அங்க… கூட போனேன்”

 

“வண்டில ஏறு”

 

‘உத்தரவு ….’ “ஏறிட்டேன்”

 

“வதனி…. இவ்வளவு தூரமால்லாம் வராதே”

 

‘கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கோ?’ “சரி, மச்சான்”

 

“உனக்கு தான் விளையாட ப்ரவீண் இருக்கான்ல, அவங்கூட விளையாடு,  இதுங்க கூடல்லாம் சேராதே…”

 

‘அவன் வயசென்ன, ஏன் வயசென்ன?… நானென்ன சின்ன புள்ளயா…… இப்போ உன்ன ஏங்கூட விளையாட கூப்டா வருவியா…. உனக்கு ஒரு நியாயம்…. எனக்குனா அநியாயம்………’   

 

“அவன் ட்டாய்ஸ் வச்சு விளையாடுவான், அதெல்லாம் சின்ன புள்ளைங்களுக்குனு அம்மா சொல்லிருக்காங்க…”

 

‘இந்த அத்த… வேற…’ , “இப்பொ போயி என்ன விளையாண்ட…?”

 

“நொங்கு பொறக்குனோம்.”

 

“நுங்கு வேணும்னு கேட்டா…… ஒரு காட்டு நுங்க வீட்ல கொண்டு வர ஆளு இருக்கு….. அதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா?”

 

‘விடாது கருப்பு’…… “அதுல டேஸ்ட் நல்லா இல்ல…”

 

“சாக்கு சொல்லாத….”

 

“மச்சான், சைக்கிள் நான் ஓட்டவா?…. நீங்க பிடிங்க…”

 

‘கேடி பேச்ச மாத்துற……’    “வெயில் ஏறிருச்சு, சாயந்திரமா முடிஞ்சா பாக்கலாம்….”

 

‘அதானே…. நான் சின்ன புள்ளயா இருந்தப்போ இவனுக்கு ட்டாய் மாதிரி வச்சிருந்துட்டு…… வளந்ததும் சைக்கிள் ஓட்ட கூட ஹெல்ப் பண்ண மாட்டிங்குது இந்த நெட்ட கொக்கு….’ 

 

“இப்பொ கொஞ்ச நேரம் ஓட்டுரேனே….”

 

“ஒண்ணு வேணா…. காலைல எழுந்ததுல இருந்து, அப்பத்தா உன்ன தேடிட்டு இருந்தாங்க….. அதான் உன்ன தேடி வந்தேன்”

 

 ‘போல்டு லேடி தான் நம்மள விளையாட விடாம பண்ணதா?’, என எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தாள், பத்து வயது நிரம்பிய வதனி.

 

  அவனது அப்பத்தா வதனியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சிறு வயதில் அவனுக்குக் கொடுத்த போது, ஆர்வமாக, அதட்ட, கண்டிக்க என பெரிய மனித தோரணையை அவளிடம் காட்டிவன்தான் நந்தன்.

 

தற்போது கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை முடித்து விடுமுறைக்கு வந்திருப்பவனுக்கு, தோழர்களுடன் விளையாட, வெளியே செல்ல வதனியை தடையாக உணர்ந்ததால், அவளைத் திட்டுவான்.

 

எதற்கும் அசறுபவளல்ல.  அவள் வயதையொட்டியவர்களுடன் இணைந்து விளையாட காம்பவுண்டிற்குள் அழைத்து வந்ததை வீட்டின் பெரியவர்கள் விரும்பவில்லை.  அதனால், அவள் அவர்களுடன் சென்று விளையாடி வருவாள்.

 

நர்சரி சென்றுவிட்டு, இறால் பண்ணையில் உள்ள வேலைகளை முடித்த போது மணி இரண்டு.   மீதமுள்ளவற்றை நாளை வந்து கவனிக்கலாம் என எண்ணிய ரகுநந்தன் வீட்டிற்கு கிளம்பினான்.

 

அதற்குள் அவன் தாயிடமிருந்து போன் வந்தது.

 

“என்னம்மா..”

 

“காலையில கூட ஒண்ணும் சாப்பிடல…. ஏன்பா ரொம்ப வேலையா…. இன்னும் வராம இருக்கியே?”

 

“கிளம்பிட்டேன்மா….” என்றவாறு அவனது BMW வை ஸ்டார்ட் செய்தான்.

 

நிலவைக் கொண்டு வா – 4

 

நானும் ஓர் தென்றல் தான் 

ஊரெல்லாம் சோலை தான்

எங்குமே ஓடுவேன், நதியிலே நீந்துவேன்

மலர்களை ஏந்துவேன், எண்ணம் போல் வாழ்வேன்

தந்தன தான தன தந்தன தானனா

இளமை காலம் மிக இனிமையானது

உலகம் யாவும் மிக புதுமையானது

அதிகாலையில் மானகிரி வந்த சிதம்பரம் குடும்பத்தினரின் வருகை, மனோகரிக்கு மட்டுமல்லாமல் மற்ற உறவுக்கார நல் உள்ளங்களுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகான மகிழ்வான சந்திப்பாக அமைந்தது.  

 

உறவினர்கள் நலம் விசாரிக்க வந்தபடி இருந்ததால், அந்த வீட்டிற்குள் கலகலப்பும், குதூகலமும் இயல்பாக வந்திருந்தது.

 

காதம்பரியின் ஒன்பதாம் வகுப்பு விடுமுறைக்குப் பின் இப்பொழுது தான் குடும்பமாக அவர்களால் ஊருக்கு வர இயன்றது. இடையில் சிதம்பரம் மட்டும் வந்து செல்வார்.  அவருக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைக்கும்போது, காதம்பரிக்கு பள்ளிக்கல்வி, பிறகு கல்லூரிக் கல்வி என வர இயலாத சூழல்.

 

பயணம் செய்த அலுப்பு நீங்க குளித்து, காலை உணவிற்கு பிறகு ஓய்வு எடுத்தனர்.

 

கமலம் வழக்கம்போல மாமியாருடன் ஊர்க்கதைகளை பேசியபடி மதிய சமையலுக்கான பணிகளுக்கு உதவி செய்தார்.

 

“ஏம்மா, அன்னிக்கு ஜாதகமெல்லாம் வந்ததா சொன்னியே!”

 

“அத்த, அங்க வந்ததுல ரெண்டு பொருந்திச்சு….. போட்டோல எல்லாம் பசங்க நல்லா இருக்குது (மரியாதை), குடும்பத்தை விசாரிக்க சொல்லியிருக்கேன் அத்த, அவங்களுக்கும் நம்ம பொண்ண புடிக்கணும், அவங்க என்ன எதிர் பாக்குறாங்கனு பாத்துட்டு மேற்கொண்டு பேசுவோம்……….”

 

“நானும் இங்க சொல்லி வச்சுருந்தேன் கமலா….”

 

“எதுவும் வந்துருக்கா அத்த…?”

 

“ஆமாம்மா…….. ரெண்டு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்திருந்தாங்க….. பொருத்தம் பார்த்துட்டேன்…… புதுக்கோட்டை  எட்டு பொருத்தம், உச்சிபுளி ஒன்பது பொருத்தம் இருக்கு……..” 

 

“வீடெல்லாம் விசாரிச்சீங்களா…”

 

“புதுக்கோட்டை அந்நியம், உச்சிபுளி சொந்தம் தான்……. நமக்கு தெரிஞ்ச குடும்பந்தான்”

 

“மாப்ள போட்டோ இருக்கா அத்த…”

 

“இருக்குமா….. வந்து எடுத்து தாரேன்…. இரு…..”

 

“படிப்பு, வேல எல்லாம் விசாரிச்சிகளாத்த…?”

 

“படிப்பெல்லாம் இருக்கு, சென்னைல தான் பையனுக்கு வேல…. வெளிநாட்டுக்கு எல்லாம் போயி வராணாம்”

 

“குடும்பம் எப்டித்த…?”

 

“மூணு பசங்க…. கடைசி பையனுக்கு தான் பாக்குறாங்க…. ராஜமனோகரினு எங்க மதினி அங்க கீழக்காட்டு பக்கமா கல்யாணம் பண்ணிக் கொடுத்தது…. மதினிக்கு ரெண்டு பொண்ணு, ஒரு ஆணு…. அதுல இது மகன் புள்ள பேரன் தான்… ”

 

“மகளுகளுக்கு பொண்ணுலாம் இல்லயா…?”

“ரெண்டு மகளுக்கும் பொண்ணு இருக்கு…… ஏழெட்டு வருசம் சின்னதுகளாம்……. பெரிய பையனுகளுக்கு நாலு வருஷம் வித்தியாசத்துல பண்ணிட்டு, இந்த பையனுக்கு மட்டும் ரொம்ப வயசு வித்யாசத்துல பண்ண வேணாம்னு, வெளில பாக்குறதா சொன்னாங்க…”

 

“அப்ப இங்க வந்ததோட அப்டியே மாப்ள வீட போயி பாத்துட்டு வந்துரலாம்ல அத்த”

 

“மொதல்ல அவங்களுக்கு பொண்ணு பிடிச்சிருந்தா, மேற்கொண்டு பாக்கலாம். இன்னிக்கு மதினிக்கிட்ட பேசுறேன்”

 

மதிய உணவிற்கு பின், மாப்பிள்ளை வீட்டினரை அழைத்துப்  பேசினார் மனோகரி. பெண் பார்க்கும் நிகழ்வை திருவாடானை, ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என இரு குடும்பத்தாரும் முடிவு செய்தனர்.

 

“காதம்பரி….. இங்க வாடா…”

 

“என்னப்பத்தா….?”

 

“உனக்கு சீக்கிரம் கல்யாணத்த வச்சுரலாம்னு….. நினைக்கிறோம்… இதுல உனக்கு எதுவும் அபிப்ராயம் இருக்காடா”

 

“பெரியவங்க இஷ்டம் அப்பத்தா…. ஆனா…..”

 

“உனக்கு ஜாதகம் பாத்துருக்கோம்…. மாப்ள வீட்ல உன்ன கோவில்ல வச்சு பாக்க ப்ரியபடறாங்க…. அதனால…. நாளை மறுநாள் திருவாடானை போறோம்”

 

“எனக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே….. அப்பத்தா…..”

 

“வயசு தான் இருவத்தி மூணு ஆரம்பிச்சுருச்சே…… உன் வயசுல…. எனக்கு எல்லாப் புள்ளைங்களும் பொறந்துட்டாங்க….”

 

“அதுக்காக என்னய சீக்கிரமா வீட்டை விட்டு விரட்ட பாக்குறீங்க…..”

 

“அப்டியில்ல தாயீ…… நாங்க நல்லா இருக்கும்போதே உனக்கு கல்யாணம் பண்ணிட்டா நல்லதுன்னு நினைச்சோம்”

 

“சரி நீங்க எல்லோரும் முடிவு பண்ணிட்டீங்க….. உங்க இஷ்டம் போல செய்ங்க….”

 

மகன்,  மருமகள் மற்றும் பேத்தியிடம் மாப்பிள்ளையின் போட்டோவை பார்க்க கொடுத்தார்.

சிதம்பரம் மற்றும் கமலாவிற்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது.  காதம்பரி பார்த்தவுடன் அவர்களிடமே போட்டோவைக் கொடுத்துவிட்டு அகன்றாள்.

 

நேரம் கிடைத்தபோது, மாப்பிள்ளையின் ஃபேஸ்புக் ஐடி (ஹோரஸ்கோப்ல இருந்து சுட்டது) மூலம் மாப்பிள்ளையின் கல்வி, தற்போதைய வேலை போன்ற விவரங்களை கண்டு அறிந்தாள்.  அதில் சில போட்டோக்கள் மாப்பிள்ளை யுஎஸ்ஸில் இருந்து நண்பர்களுடன் எடுத்து, ரீசண்டாக அப்லோட் செய்து இருந்ததை பார்த்தாள்.

 

அப்பாவிடம் சென்று “ அப்பா , யாரெல்லாம் பொண்ணு பாக்க வருவாங்க…?”

 

“பையனோட அம்மா, அப்பா, அப்பத்தா, அத்தை குடும்பம், மாமா குடும்பம்…… ஏன்மா?”

 

“இல்லப்பா…. சும்மா கேட்டேன்”

 

“மாப்புள்ள ஆன்சைட் விசயமா யுஎஸ்ல இருக்கார்.  இன்னும் ஒரு மாசத்துல சென்னை வந்துருவார்மா…” மகளின் விடை அறிய விரும்பும் வினா இதுவாகத்தான் இருக்கும் என்பது அந்த தந்தையின் கணிப்பு.

 

அடுத்த நாள் குலதெய்வ கோவில் விழாவில் கலந்து கொண்டனர்.

 

மறுநாள், காதம்பரிக்கு சற்றே நெர்வசாக உணர்ந்தாள்.  முதல் முறையாக பெண் பார்க்கும் படலம். அதிலும் மாப்பிள்ளை இல்லாமல்….. ஒரு மணி நேர பயணத்தில் மாலை ஐந்து மணிக்கு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

 

பூமிக்கு வந்த சூரியன் ஈசனை நீலரெத்தினங்களால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம், திருவாடானை (ஆதிரெத்தினேஸ்வரம் – பழைய பெயர்)  

 

சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் வர, அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அனைவரும் அமர்ந்து பேசினர்.

 

 ‘ஆதிரெத்தினேஸ்வரம்’

 

* இயற்கை (இறை)….

கொண்ட முயற்சியால்

பகலவனை உருவாக்கி…….

பற்பல சூட்சமங்களை …..

தந்ததால் வந்தது ஒளி!!!

* வளங்களை, 

தாவரங்களை,

உயிரினங்களை,

ஒப்பற்ற அறிவுடன்

சீரான வேகத்தில் இயங்(க்)குவதில்

உருவாக்கும் வித்தையிலே…

வித்தகன் இந்த பகலவன்!

* கா்மத்தினை  கடனாக்கி….

கடமை மறந்து

கர்வம் வந்த வேளை…

இழந்த ஒளி…

இயலாமையைச் சொல்ல..

* சரிந்த தன் நிலை உணர்ந்த ஞாயிறு…!

* சர்வமும் இயற்கையெனும் இறை – என 

இடர்களைய….. இயற்கையை

இரந்த ரவி!

* உருவான இடம் நாடி….

அகம்பாவம் அடியோடு அகல 

தன்  நிலை மீள

அண்டிய ஆதித்யன்!!

* பார் முழுதும் 

பம்பரமாய் சுற்றி 

பலா் போற்ற!!!

வாழ்ந்த ஒளியான வாழ்வை 

மீட்டெடுக்க.. உவகை கொண்ட

கதிரவன்!!!

* வற்றாத வாழ்வு வாழ வழி கேட்க…

 

* இயற்கையெனும் பேராற்றல் (இறைவன்)……

இரந்த உள்ளம், உவகை கொள்ள…

* வடகிழக்கு மூலையிலே

வற்றாத நீரில் மூழ்கியெழுந்து

மகிழ்வுடனே…

தினந்தோறும்

நீலரெத்தினக்கல்

கொண்டு இயற்கையெனும் 

ஈசனை பூசை செய்ய உத்தமமாம்..

என உரைக்க…

* கா்ம சிரத்தையுடன்…..

கர்வமில்லாமல் !

கர்மம் செய்ய….

கற்றுத் தந்த ஈசனின்

ஆற்றலால்

மீண்ட சூரியன்!

* ஆதித்யன் 

 

பூமியில் ரெத்தினக்கல் கொண்டு 

இறைவனுக்கு 

பகலவன் பூசை செய்த தலமே!!!

ஈசன் வாழ்ந்த தலமே…

ஆதிரெத்தினேஸ்வரர்

ஆலயம்!!!

* திருவாடானை !!!

(இது ஆலயத்தின் தல வரலாறு)

 

இரு குடும்ப உறுப்பினர்களும் அமர்ந்து நிதானமாக பேசி அடுத்த மாதத்தில் வரும் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

 

“சுந்தரமுடையான்ல கல்யாணத்தை வச்சிட்டு, அப்றம் உங்க தோதுப்படி சென்னைல ரிசப்ஷன் வச்சுக்கலாம்”

 

“ஒரு மாசத்துல மகால் எதுவும் கிடைக்காது, ஹால் எதாவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்”

 

“சென்னைல எங்க சைட்ல நூத்தம்பது பேரு வருவாங்க, உங்க சொந்த பந்தம், ஆபீஸ்ல இருந்து எவ்வளவுனு பாத்துட்டு ஹால் பாருங்க”

 

“மாப்ள வந்தவுடனே சொல்லுங்க, நேரில வந்து பாக்குறேன்”, என்றார் சிதம்பரம்.

 

“இன்னிக்கு பேசிட்டு சொல்றேன்”

 

“வேற எதுவும் எதிர்பார்ப்பு இருக்குனா சொல்லுங்க…”

 

“மத்த ரெண்டு பசங்களுக்கும் அவங்கவங்க வசதிக்கு ஏத்தமாதிறி செஞ்சாங்க…. அதுபோல உங்க பொண்ணுக்கு நீங்க நினச்சத செய்யுங்க….

 

பசங்களுக்கு தொழில் ஊருல இருந்தாலும், கொஞ்ச காலத்துக்கு அவங்க ஆசைப்படி வேல பாக்கட்டும்…. அப்றம் தொழில வந்து கவனிச்சிக்கட்டும்னு சொல்லிட்டேன்”

 

“சீறு சாமானெல்லாம் எங்க கொண்டு வரது”

 

“சென்னைல உள்ள சின்னவனோட பிளாட்ல வச்சா போதும், ஊருக்கு எடுத்துட்டு வர வேணாம்”

 

“பொண்ணு வேல பாத்துட்டு இருக்கு, அத கண்டினியூ பண்ணணும்னு ஆச படுது”

 

“அது அவங்கவங்க ப்ரியம்……. சரி, அப்போ வேற எதுவும் விசயம் இருந்தா போன்ல தகவல் சொல்லுங்க…. நீங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னடியே ஊருக்கு வந்திருங்க”

என்று இரு குடும்பத்தாறும் திருமண நாளை முடிவு செய்து விட்டு கிளம்பினார்கள்.

 

ராஜமனோகரியின் குடும்பத்தில் காதம்பரி கோவிலில் நடந்து கொண்ட விதத்திலும், அனைவரிடமும் மிகுந்த மரியாதையுடனும், கேட்டவற்றிற்கு அமைதியாக பதிலளித்த விதத்திலும் அவளை அனைவருக்கும் பிடித்து இருந்தது.

 

ஆனாலும், உரியவனுக்கு முந்தைய தினம் அனுப்பிய போட்டோ மற்றும் ஹோராஸ்கோப்பின் காதம்பரி பற்றிய இதர தகவல்கள், இது வரை ‘வீ ட்ரான்ஸ்ஃபரில்’ அவனால் டவுன்லோடு செய்யப்படாமல் இருந்தது.

 

ராஜம் தனது வயதை காரணமாக்கி பேரனை திருமணத்திற்கு சம்மதிக்கச் செய்து இருந்தார்.  ஆனாலும் தினசரி இரவில் அனைவரிடமும் பேசுபவன், கடந்த இரு தினங்களாக தொடர்பு கொள்ளவில்லை.

 

கோவிலிலிருந்து திரும்பிய அனைவரும் பத்திரிக்கை, திருமண வைபவ விழா ஏற்பாடு, விருந்து போன்றவற்றிகான வேலைகளை பார்க்க, மேற்பார்வையிட என பிரித்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

 

அன்று இரவு போனில் தொடர்பு கொண்ட மகனிடம் விசயத்தினை பகிர்ந்து கொண்டனர். இன்னும் இருபது நாட்களுக்குள் வேலையை முடித்து திரும்ப வேண்டிய நிலையில் வேலைப்பளு அதிகமானதால் பார்க்கவில்லை என்றான்.

 

பிறகு போட்டோ மற்றும் மணப்பெண் பற்றிய மற்ற தகவல்களையும் பார்த்துவிட்டு பெரியவர்களது விருப்பம் என கூறிவிட்டான்.  

 

அதன்பின் மகனின் வருகையை சம்மந்திக்கு தெரியப்படுத்தினார் ஹரி.

 

சிவகங்கையில் இருந்து திரும்பிய சிதம்பரத்தின் குடும்பத்தில் மனநிறைவு.  தன் ஒரே மகளுக்கு நல்ல ஒரு குடும்பத்தில் வாழ்க்கை அமைய போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் திருமண வேலைகளை பார்க்க ஆரம்பித்து இருந்தனர்.  

 

அதற்கு முன்பு, சிதம்பரம் தனது திருப்திக்காக, குணத்தில், பழக்க வழக்கம் மற்றும் தனிப்பட்ட விசயங்களில் மருமகனாக வர இருப்பவரைப் பற்றி டிடெக்டிவ் மூலம் அறிந்து கொண்டார்.

 

காதம்பரிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை, ஆயினும் மறுக்கும் வகையில் குறை இல்லை.  ஆகையினால், அவள் அவளது அலுவலக வேலைகளிலும், கமலாவிற்கு உதவி செய்வதிலுமாக அவளுடைய நாட்களும் சென்று கொண்டிருந்தது.  

 

அலுவலகத்தில் இருந்து திரும்பிய காதம்பரி,

 

“அம்மா…… எங்க ஆபீஸ் சார்பா மும்பைல நடக்குற ஃபங்சனுக்கு என்ன போக சொல்றாங்கம்மா…”, என மிகுந்த தயக்கத்தோடு கூற

 

“அதெல்லாம் இனி உன்ன எங்கயும் வெளிய அனுப்ப முடியாது……”, என்று கமலா முடித்துவிட்டார்.

 

நிலவைக் கொண்டு வா – 5

 

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

தாயிடம் பேசிய வதனி, ஊருக்கு செல்வதை எண்ணி மகிழ்ந்திருந்தாலும், உள்ளுக்குள் தன் எதிர்காலத்தை நினைத்து நல்ல முடிவுக்கு வர முடியாமல் இருந்தாள்.

 

சார்ட்டர்டு அக்கவுண்ட் படிப்பின் அங்கமான, ட்ரைனீயாக ஆடிட்டர் வசம் பணியாற்றி சான்றிதழ் பெற,  கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தாள்.

 

பிறகு ஃபைனல் எக்சாம் வரை அங்கு தங்கியிருந்து படித்தாள். எல்லாம் முடிந்தபின், தன் தாயாரை அழைத்துப் பேசியிருந்தாள்.

 

வேண்டிய திங்க்ஸ் அனைத்தும் பேக் செய்யப்பட்டு இருந்தது.  அன்று விடுதி வார்டனிடம் டின்னர் முடிந்தபின் பேச எண்ணியிருந்தாள்.

 

அப்போது அவளை போனில் அழைத்த ஆடிட்டர், 

 

“ஹலோ சந்திரா, நான் ஆடிட்டர் பேசறேன்மா”

 

“சொல்லுங்க சார்”

 

“நீ இன்னும் திருச்சில தானமா இருக்க?”

‘நீங்க விட்டாலும், என்ன …. திருச்சி விடமாட்டிங்குதே’

 

“ஆமா சார்” ‘இப்பொ இத எதுக்கு இவரு ஆஸ்கிங்கு…… என்ன கன்னி வெடியா…… அணுகுண்டானு தெரியலயே,….ம்ம்ம்ம்ம் எதுனாலும் சமாளிப்போம்ல’

 

“நான் ரெண்டு நாள் கான்ஃபரன்ஸ் விசயமா சென்னை போக வேண்டி இருக்குமா, ஆடிட்டர் கதிர் டூ டேஸ் பாத்துக்கறதா சொல்லியிருந்தாருமா….. அன்எக்ஸ்பெக்டடா இப்போ அவங்க வீட்ல இருந்து ஃபாதர்க்கு முடியலனு கால் வந்தது……, சோ கிளம்ப சொல்லிட்டேன்…… நீங்க ஒரு டூ டேஸ் பாத்துக்கிட்டா நல்லாயிருக்கும்…….. உங்களால முடியுமாம்மா…..?”

 

“சரி சார்” ‘உங்களுக்கெல்லாம் நா ஊருக்கு போறத யாரு யா சொன்னது…… பிளான் பண்ணி பண்றீங்களே, இப்டி…….. 

 

வேற மாட்டேனு சொல்லவும் முடியாதே………….’

 

“அப்பொ காலைல ஆஃபீஸ் வந்துருமா…… எதாவது டவுட்டுனா கால் பண்ணுமா……. வைக்குறேன்”

 

‘இந்த ரெண்டு நாள் உங்க ஆஃபீஸுக்கு லீவு விடக்கூடாதா……’

 

“ஓகே சார்”, என போனை வைத்தவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

 

‘இப்பொ கீத் டார்லிங்ட ஓபன் பண்ணா …………… அவ்ளோதான்……. சரி ….. விடிஞ்சதுக்கு அப்றமா சொல்லிக்குவோம்…..

 

இந்த கீத்……….. அத்தை, மாமாக்கிட்டயும் பேசிருப்பாங்க……

 

அந்த சிடுமூஞ்சிக்கு…. நாம ஊருக்கு வரது தெரிஞ்சிருக்குமா?

 

தெரிஞ்சா மட்டும் என்ன பண்ணும்?

 

போனவுடனே ….. வானு வாயால கூட வரவேற்க தெரியாத ஒரு மனுசன்….. தலய மேலருந்து கீழ அசச்சா…. வா வாம்….. இவன்ங்களும் இவங்க லாங்குவேஜும்’ , என பலவாறு எண்ணியபடி படுக்கச் சென்றாள்.  

 

நல்ல உறக்கம் இல்லை.  இருந்தாலும் விடியல் வரை படுக்கையில் புரண்டபடி இருந்தாள்.

 

அவளின் தந்தை, கருணாகரன் திருவாரூரில் உள்ள சென்ட்ரல் யுனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடுவில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  

 

தாய், கீதாஞ்சலி தஞ்சாவூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் இருக்கிறார்.

 

இவள் அழைத்துப் பேசியதால், மகளை தனியாக அனுப்ப விரும்பாத தம்பதியர் இருவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு அவளுடன் வந்து ஒரு வாரம் தங்கி இருந்துவிட்டு வருவதாக பிளான்.

 

காலையில் எழுந்தவுடன் முதலில் தாயிடம் பேசினாள்.  அவர்கள் சற்று நேரத்தில் திருச்சி வந்து விடுவதாகவும், கிளம்பி இருக்குமாறும் கூறிவிட்டு வைத்து விட்டார்.

 

அவர்கள் இருவரும் திருவாரூரில் இருந்து கிளம்பி வரும்போது திருச்சியில் அவளை பிக் அப் செய்து கொள்வதாக ஏற்பாடு.

 

விடுதிக்கு வந்தவர்களிடம் விசயத்தைக் கூற,

 

முடிவில், அவர்கள் இருவரும் கொஞ்சம் லக்கேஜ்ஜுடன் தற்போது ஊருக்கு செல்வதாகவும், ரெண்டு நாட்களில் அவளை வருமாறும் கூறிவிட்டு கிளம்பினார்கள்.

 

போகும்போது வழக்கம்போல் அவள் தாய், “வதனி தம்பிக்கு போன்ல பேசிறு” என்றவாறு கிளம்பினார்.

 

‘ஆமா…. தும்பி கிட்ட பேசிட்டாலும்…….’

 

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் கூறுவது தான், ஆனால் இன்று ஏனோ அலட்சியப்படுத்த அவளால் இயலவில்லை.

 

மொபைலை எடுத்து வெகு நேர யோசனைக்குப் பின் வாட்ஸ்ஆப்பில்…. சிடுமூஞ்சி என தன்னால் சேமிக்கப்பட்டு இருந்த எண்ணை எடுத்தபோது …… 

 

அந்த எண்ணை அவளுக்கு அவன் கொடுத்த தினம் மனதில் ஓடியது.

 

அப்பொழுது சென்னை, இண்டியன் மாரிடைம் யுடிவரிசிட்டியில் கருணாகரன் பணியாற்றிய நேரம்.  அவளால் சிடுமூஞ்சி என அழைக்கப்படுபவனும், இவர்களது குடும்பமும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் மூன்றாவது மாடியில், எதிரெதிர் பிளாட்டுகளில் வசித்து வந்த சமயம்.

 

சிடுமூஞ்சி, பெங்களூரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, சென்னையில் புதியதாக மென்பொருள் நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி திறம்பட நடத்தி வந்தான்.

 

அப்போது இவள் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்ட்டண்ட்டில் படித்து கொண்டிருந்த சமயம். 

 

பெற்றோருடன், அவனது தம்பியும் (‘அவன் இருந்தால் இருவருக்குமிடையே நடக்கும் wwf மாட்ச்சிற்கு கண்டிப்பா அம்பையர் வேணும்’), புதுக்கோட்டையில் நடக்க இருந்த தந்தை வழி உறவு திருமணத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்.  வதனிக்கு விடுப்பு எடுக்க முடியாத சூழல்.

 

அப்போது சிடுமூஞ்சியிடம் அவளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்று விட்டனர்.

 

மாலையில் வீடு திரும்பிய வதனி, காஃபீ மேக்கரில் இருந்து காஃபீயை எடுத்து குடித்து விட்டு கேசுவல் உடையில் அப்பார்ட்மெண்ட் வாண்டுகளுடன் வஞ்சனை இல்லாமல் விளையாடி…. களைத்து…… அவள் பிளாட்டிற்கு வந்தாள்.

 

இரண்டு பிளாட் தள்ளி குடியிருக்கும் கீர்த்தனா, அவளிடம் சில நாட்களாக வைத்துள்ள கோரிக்கை, சிடுமூஞ்சியின் காண்டாக்ட் நம்பர் அல்லது வாட்ஸ் அப் நம்பர் வேண்டுமென்பதே அது.

 

‘எதனால் இந்த கீர்த்தனாவிற்கு அவனை பிடித்ததோ…. அவனும் அவன் ரூல்ஸ்ஸும்……

 

அங்க ஏன் நிக்கிற….. இப்டி ஏன் ட்ரெஸ் பண்ணிருக்க….. இப்டி ஏன் கத்தி சிரிக்கிற….. எப்பொ பாரு விளையாட்டு அதுவும் சின்ன வாண்டுகளோட….. என….

 

ஒரு லிஸ்டே வச்சு ஒவ்வொரு முறை பார்க்கும் போதெல்லாம் எதாவது குறை சொன்னால்….. யாருக்குத்தான் பிடிக்கும்……. 

 

ஆனா இதெல்லாம் தெரியாம வாண்டடா வந்து ஒரு ஆளு அவங்கிட்ட மாட்ட போகுது….. கீர்த்து….. நீ நினச்சது உன் வாழ்க்கைல நடந்தா….. நடாம விட்ட நாத்தா மாறிருவே’

 

வதனிக்கும், சிடுமூஞ்சிக்கும் எப்போதும் ஆகாது.  ஆகையால், அவன் இருக்கும் இடத்தில் கூட அமரமாட்டாள்.

 

அப்படிப்பட்ட பெண்ணிடம் அவனது காண்டாக்ட் நம்பரைக் கேட்டாள், பாவம் வதனியும் என்ன செய்வாள்.

 

“வதனி, இன்னிக்காவது காண்டாக்ட் நம்பர் வாங்கித்தா…..” 

 

‘இன்னிக்கு வசமா மாட்டிட்டியே வதனி…..’

 

“கீர்த்தி அக்கா, நீங்க பேசாம எங்க கீத்திட்ட கேட்ருக்கலாம்ல….” 

 

‘எனக்கு வேற என்ன விளையாட சொன்னாலும் விளையாடுவேன், எவ்வளவு படிக்கணும்னாலும் படிப்பேன்….. இதல்லாம் ஒரு வேலயா?  …..ச்சே’

 

“அடிப்பாவி…………. வேற வினையே வேணாம்…….”

 

“உங்க அம்மா எப்பொ வருவாங்க..?” 

 

‘ம்ம்ம்ம் ….. அவுங்க இங்க வரும்போது வருவாங்க’

 

“நாளை மறுநாள்…. ஏன் கேக்குறீங்க?”

 

“அதுக்குல்ல அவங்க நம்பர எனக்கு வாங்கித் தர…..” 

 

“எங்க அம்மா நம்பராக்கா?”

 

“ஏய்…. என்ன நக்கலா?  என் மிஸ்டர் நம்பரு தான்….. வேற யாரு நம்பரும் எனக்கு இப்போ வேணாம்”

 

‘பெரிய ப்ரைம் மினிஸ்டரு இவரு’

 

“ஹாண்ட்சம் நம்பர வாங்குற…நாளைக்கு தர…. என்ன சரியா….?”

 

‘அப்டியா இருக்கான்………….. உர்ராங்கோட்டான் கனக்கா இருக்கான்…… அவன போயி என்னமோ சொல்லுது இது…..’

 

“எப்டி வாங்க முடியும்?” 

 

‘கடைல இருக்குற பொருளுனா கேளு……எம் பாக்கெட் மணில வாங்கி தரேன்…… இந்த வளந்து கெட்டவனோட நம்பர கேட்டா….. நான் என்ன பண்ணுவேன்……’

 

“நீ உனக்குன்னு கேளு”

 

“எனக்கு தேவையில்லயே!”

 

‘அவன் நம்பரு எனக்கெதுக்கு……. நாக்கு வளிக்கவா?’

 

“உனக்கு தேவையில்ல…… ஆனா உனக்கு கான்டாக்ட் பண்ண அவங்க நம்பர் வேணும்னு கேளு….. அத எனக்கு தந்திரு” 

 

‘அவன கான்டாக்ட் பண்ணறதுக்கு நான் கண்ணம்மா பேட்டைக்கே போயிருவேன்’

 

“ட்ரை பண்றேன்”

 

எல்லா இறைவனையும் வேண்டியபடி அவனின் வருகைக்காக காத்திருந்தாள்.

 

அவன் வந்து வழக்கம்போல் பிளாட்டைத் திறந்தபின், அவனுடைய கையில் கொண்டு வந்ததை டேபிளின் மீது வைத்துவிட்டு, ரெஃப்ரெஷ் செய்து கொள்ள சென்றான்.

 

எதிர் பிளாட்டில் இருந்தபடி கவனித்த வதனி, வெளியே வந்து சிடுமூஞ்சி பிளாட்டை வாசலில் நின்றபடி எட்டிப்பார்த்துவிட்டு அவனில்லாததை உறுதி செய்தவள் வீட்டினுல் சென்றாள்.

 

அவனது மொபைல் டேப்ளின் மீது இருந்தது.  மொபைலை எடுத்து ஆன் செய்தால்…. பாஸ்வர்டு கேட்டது….. ச்சே… என்றவாறு அவளின் பிளாட்டிற்கு வந்துவிட்டாள்.

 

சற்று நேரத்தில் அங்கு வந்தவன்….. 

 

“நைட் டின்னர் என்ன சாப்டலாம்?”

 

“எதுனாலும் ஓகே எனக்கு”

 

“குக் பண்ணுவியா?”

 

“ம்…..”, என்றாள் தலையாட்டியவாறு

 

“வதனி, வாயத் திறக்க மாட்டியா?  வாயத் திறந்து பேசு”

 

“குக் பண்ணுவேன்”, சன்னமான குரலில் அவள் கூற

 

“அபார்ட்மெண்டே அதிர்ற மாதிரி மத்தவங்க கூட பேசுற….. எங்கிட்ட பேச என்ன பயமா உனக்கு….”

 

இல்ல என்பது போல தலையசைத்தாள்….

 

“இன்னிக்கு நான் இட்லி, தோசை மாதிரி எதாவது போயி வாங்கிட்டு வரேன்…… நாளைக்கு மார்னிங் எதாவது செய்வோம்”

 

“மாவு இருக்கு, அம்மா தோசை ஊத்திக்க சொன்னாங்க, சாம்பார் இருக்கு”

 

“உனக்கு கஷ்டமில்லனா தோசை ஊத்து….”

 

“ம்…. என தலையை ஆட்டியபடி கிச்சனுக்குள் சென்று, சற்று நேரத்தில் இரு ப்ளேட்களில் தோசையுடன் வந்தவள், ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள், இருவரும் டைனிங்கில் எதிரெதிரே அமர்ந்து அமைதியாக உண்டார்கள்.

 

“தனியா தூங்கிருவ தான…”

 

“ம்….” , என்றாள்

 

“சரி கதவ லாக் பண்ணிக்க….”, என்றவாறு அவன் கிளம்ப,

 

“தயக்கத்துடன்……. உங்க காண்டாக்ட் நம்பர்….” , அவள் கேட்டது அவளுக்கே கேட்கவில்லை.

 

அவனுக்கு கேட்டதனால் நின்றவன்………… என்ன காண்டாக்ட் நம்பரா ? என்பது போல் அவளைப் பார்த்தபடி …..

 

“தனியா தூங்கிருவன்னு சொன்ன….?”

 

“ஆமா……….எனக்கில்ல…… ”, என கோபமாக சற்று சத்தமாக கூறிவிட்டு…… நாக்கை கடித்தவள்…ஸ்…. என்றபடி ‘எல்லாம் இந்த கீர்த்தி…. குரத்தியால வந்தது…’, தலையை குனிந்து நின்றாள்.

 

அருகில் வந்தவன், குனிந்த தலையை அவளது தாடையை பிடித்து நிமிர்த்தினான்.

 

அவளது கண்களோடு கண்களை கலக்கவிட்டபடி, “ம்…. சொல்லு..யாருக்கு…..?” என்றவுடன்….. கீர்த்தி விசயத்தை சொல்லிவிட்டாள்.

 

வதனியை அறியாதவன் அல்ல.  சிறு வயது முதலே, அறியாமல் தவறு செய்துவிட்டாலும், அதை ஒத்துக்கொள்ளும் நேர்மையை அவளிடம் கண்டிருக்கிறான்.  இன்றும் அதை உணர்ந்தான்.

 

கேட்டவன் மிக நிதானமாக, “அப்பொ என் நம்பர் உங்கிட்ட இருந்திருந்தா….. யாரு கேட்டாலும் குடுத்துருவ…… ஏன்? எதுக்குனு கேக்கமாட்ட….”

 

“உங்க கூட பேசத்தான கேப்பாங்க….”

 

“பேசனும்னு கேட்டா…. குடுப்பியா?”

 

“வேற என்ன செய்ய?….அவங்க ரொம்ப நச்சரிச்சாங்க”

 

முகத்தில் கோவம் தாண்டவமாட…….

 

மூச்சை ஆழ்ந்து இழுத்து தன்னை சரி செய்தவன் ,

 

“சரி ….. டோர் லாக் பண்ணிட்டு …. தூங்கு…..” என்று தலையை அழுந்த இரு கைகளால் கோதியவாறு……. அவள் டோர் லாக் செய்யும் வரை வயிட் செய்துவிட்டு அவன் ப்ளாட்டை நோக்கிச் சென்று விட்டான்.

 

‘இவனுக்கு என்னமா கோவம் வருது.. பயபுள்ள பொங்குற அளவுக்கு இப்போ இங்க என்ன நடந்தது?………….. கடசில நம்பரத் தராம போயிட்டானே……’ என எண்ணியவாறு உறங்க சென்றாள்.

 

நிலவைக் கொண்டு வா – 6

 

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

 

காதம்பரியின் குடும்பத்தினர் சுந்தரமுடையான் சென்று, வீடறிதல் முறைக்காகவும், தன் மகள் வந்து வாழக்கூடிய வீட்டின் நிலை அறிய வேண்டி அக்கம், பக்கம் வந்து விசாரித்தல் போன்ற வழக்கத்தினை செய்தனர்.

மகனின் எதிர்கால வாழ்வு சிறக்க ஏற்ற மருமகளாக பெண் இருப்பாளா?, அவர்களின் பழக்க வழக்கம், மகனின் வளர்ந்த விதத்திற்கு ஒத்திசைவானதாக இருக்குமா என்பதை அறிய ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினரும் சென்னையில் வந்து காதம்பரியின் வீட்டை பார்த்துச் சென்றனர்.

இருகுடும்பத்திலும் நிறைவாக உணர்ந்ததால், திருமண வேலைகளில் பெரியவர்கள் ஈடுபட்டிருக்க, மணமுடிக்க இருப்பவர்கள் அவரவர் அலுவலக வேலைகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தில், அதில் கவனமாக இருந்தனர்.

 

மாலை நான்கு மணி, மும்பை ‘ஓம் பில்டர்ஸ்’ பத்து மாடிக்கட்டிடத்தின், ஆறாவது தளத்தில் இந்தியாவின் பல நகரங்களிலும் இயங்கி வரும் முன்னணி பில்டர்ஸ் தனது அலுவலகத்தின் சார்பாக அனுப்பிய டிசைனர்ஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

2BHK, 3BHK ரெசிடென்சியல் கட்டிடங்களின் இருபது சதவீத அதிகம் பயன்படக்கூடிய வகையிலான கட்டிட வடிவமைப்புக்கு இடையிலான போட்டி.

இருபது சதவீத எக்ஸ்ட்ரா இடம் இருக்குமாறு டிசைன் செய்த பல நிறுவனங்களின் டிசைனில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து டிசைன்களில் உள்ள ஐயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு (வடிவமைத்த) உரிய டிசைனர்ஸ் விளக்கங்கள் கூறிக்கொண்டிருந்தனர். அதில் காதம்பரியும் இடம்பெற்றிருந்தாள்.

அதிக செலவில்லாமலும், வித்தியாசமாகவும், காண்பவரை கவரும் விதமாகவும், வழக்கத்தைவிட இருபது சதவீதம் அதிகமான இடம் பயன்பாட்டுக்கு ஏதுவாக இருந்த காதம்பரியின் 2BHK வடிவமைப்பு முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.

‘டீ’ இடைவேளையில் தன் தந்தையுடன் தொடர்பு கொண்டு பேசினாள்.

“கதம்பு, என்னடா….. ஈவ்னிங் செஷன் எப்டி போச்சு”

“நிறைய டவுட்ஸ் கேட்டாங்க….. இது கன்சியுமப்லா எப்டி இருக்கும்னு க்ளியர் பண்ண சொன்னாங்க”

“அப்றமா ….. ஃபைனலா என்னாச்சுடா?”

“என்னோட 2BHK டிசைன், இன்னிக்கு தேவைக்கு பில்டர்ஸ், கஸ்டமர் ரெண்டு பேருக்கும் ஆப்டா வரும்னு செலக்ட் பண்ணிட்டாங்கப்பா”

“அப்டியாமா ….. ரொம்ப சந்தோஷம்”

“இன்னிக்கு அடுத்ததா இண்டீரியர்ஸ் ஜென்ரல் கான்ஃப்ரன்ஸ் இருக்குபா”

“சரிடா….. அட்டெண்ட் பண்ணிட்டு நைட் கால் பண்ணு”, சரிப்பா என்றுவிட்டு கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்குள் சென்றாள் காதம்பரி.

 

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த கணவரிடம், கமலா

“சம்பந்தியம்மா போன் பண்ணாங்க……மாப்பிள்ளை இன்னிக்கு மார்னிங் சென்னை வந்துட்டாராம்….. இன்னிக்கு இங்க ஆபீஸ்ல வேலயாம்”

“எப்பொ ஊருக்கு கிளம்பராராம்?”

“நாளைக்கு நைட்டு”

“அப்பொ காலைல போயி, அவங்க பிளாட்லயே பாத்துட்டு வாரேன்”

“சரி காதம்பரிட்ட பேசினீங்களா?”

“இப்பொ அவளுக்கு கான்ஃப்ரன்ஸ்……. முடிஞ்சதும் பேசுவா”

“நாளைக்கு எப்பொ வருவா?”

“ஏழு மணிக்கு ஃப்ளைட்…… அப்டியே ஆபீஸ்ல இருந்து போயி பிக்கப் பண்ணிட்டு வந்துரேன்”

 

அதன் பிறகு பேசிய மகளிடம், நிறைய அறிவுரைகளை வழங்கி அன்றைய தினம் எவ்வாறு போனது என்பது பற்றியும் விசாரித்து விட்டு, அடுத்த நாள் அங்கிருந்து கிளம்பும் முன்பு தன்னிடம் பேசுமாறும் கூறிவிட்டு வைத்தார், கமலா.  

சிதம்பரம் முன்பே பேசியதால், அடுத்தநாள் அவளை ஏர்போர்டில் வந்து பிக் அப் செய்து கொள்வதாக கூறிவிட்டு வைத்தார்.

 

காலையில் எழுந்து தினசரி வேலைகளை முடித்த பின்பு மருமகனாக வர இருக்கும் ரகுநந்தனுக்கு போன் செய்துவிட்டு நேரில் காண சென்றார், சிதம்பரம்.

“வாங்க சார்”

“இருக்கட்டும் தம்பி, நல்லாயிருக்கீங்களா?”

“இருக்கேன்…….. என்ன சாப்டுறீங்க…டீ இல்ல காஃபீயா?”

“ஒன்னு வேணாம், வரும்போது தான் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வந்தேன், நீங்க உக்காருங்க…. உங்கள நேரில பாக்கறதுக்காக வந்தேன்…. வேற விசயம் ஒன்னுமில்ல”

“சரி, பால் இருக்கு….. இண்ஸ்டண்ட் காஃபீ கலந்து எடுத்துட்டு வரேன்…”

“இல்லபா இடையில எதுவும் குடிக்க மாட்டேன், ஜாப்லாம் எப்படி போகுது?”

“லாஸ்ட் த்ரீ இயர்ஸ்ஸா சாஃப்ட்வர் கம்பெனிய ரன் பண்ணீட்டு இருக்கேன்…. நல்லா போகுது….. அது விசயமா தான் அப்பப்போ வெளிநாடு போற மாதிரி இருக்கும்”

“பொண்ணு போட்டோல பாத்திருப்பீங்கனு நினைக்கிறேன்….. உங்களுக்கு பிடிச்சிருக்கா…?”

“பார்த்தேன்….. பெரியவங்க பாத்து செய்யறது ஒன்னும் பிரச்சனை இல்ல சார் எனக்கு”

“மாமானு சொல்லுங்க தம்பி……”

“ம்… சாரி…. புதுசா பாக்றதால அப்டி சொன்னேன்…. போக போக சரியாகிரும்…. சா.. ம்…..  மாமா” 

“நல்லா இருக்கணும்பா….., இன்னிக்கு ஊருக்கு போறீங்களா?”

“ஆமா மாமா, அங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வந்துட்டாங்க…. மாப்ள இன்னும் வராம இருந்தா நல்லா இருக்காது….. அப்டினு அப்பா சொன்னாங்க…. இன்னும் பத்து நாள் தான இருக்கு”

“அதுவும் சரி தான் தம்பி….. அப்போ நான் கிளம்புறேன்….”

“சரி மாமா” என்றவாறு சிதம்பரம் விடைபெற்றுச் சென்றவுடன், ரகு ஆஃபீஸை நோக்கி பயணித்தான்.

 

அன்று மாலை அலுவலகத்திலிருந்து நேரடியாக காதம்பரியை ரிசீவ் பண்ணுவதற்கு ஏர்போர்ட் சென்றார் சிதம்பரம்.

மணி ஏழரை ஆகியும் இன்னும் காதம்பரி வராததால் அவளின் வருகைக்காக காத்திருந்தார். அவள் வரும் ஃப்ளைட் இரண்டு மணி நேரம் லேட் என அனோன்ஸ்மெண்ட் வந்திருந்தது.  

ஆனால் இதை அறியாத கமலா, காதம்பரி வந்துட்டாளா என அரை மணி நேரத்திற்கு முன்பு கால் செய்திருந்தார்.

அனோன்ஸ்மெண்ட் வந்தவுடன் மனைவிக்கு போன் செய்து விசயத்தை சொல்லிவிட்டு, சற்றே மனமறியா சஞ்சலத்துடன், மகளை தனியாக அனுப்பியது தவறோ என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தார்.

 

தாய் மும்பை செல்ல வேண்டாம் என்று சொல்வது சரியென்றாலும், அலுவலகத்தில் தன்னை அனுப்ப எண்ணுவதிலும் தவறில்லை என்பது புரிந்தாலும், இப்படி ஒரு இக்கட்டான சூழலை எதிர்பார்க்கவில்லை, காதம்பரி.

சற்றே ஆறப்போட்டாள், பிறகு தான் போயாக வேண்டிய கட்டாயத்தினையும் எடுத்துக் கூறினாள்.

“எங்க ஆஃபீஸ் சார்பா நான் அனுப்ன டிசைன் செலக்ட் ஆகி இருக்குமா”

“அதுக்கு….. பத்து நாள்ல கல்யாணத்தை வச்சிட்டு உன்ன அனுப்ப முடியுமா?”

“அம்மா…… இது யாரும் இப்டி எதிர்பாக்கல…. ஆனா…. செலக்ட் ஆன அஞ்சு டிசைன்ல என்னோடதும் ஒன்னு……. இந்த டிசைன் ரிலேட்டடா குவஷின் பண்ணுவாங்கம்மா…. அப்பொ டிசைன் பண்ணவங்களாலதான ஆன்சர் பண்ணமுடியும்…..

அந்த வெரிஃபிகேஷன் அன் டெஸ்டிங் செஷன்ல….. நிறைய பில்டர்ஸ் கலந்துப்பாங்க….  அப்பொ எல்லா வகையிலயும் எந்த டிசைன் ஆப்டா இருக்கோ அதுக்கு பெஸ்ட் டிசைனர் அவார்டு கிடைக்கும், 

அதுக்கப்பறம் எங்க கம்பெனியோட ப்ளேஸ் இன்னும் முன்னாடி வரும், எங்களுக்கு இன்னும் நிறைய ஆர்டர்ஸ் வரும், சம்பளம் கூடும், இப்டி இன்னும்….. எனக்கும், எங்க கம்பெனிக்கும் நிறைய பெனிஃபிட்ஸ் கிடைக்கும்…”

“அது யாருக்கு இப்பொ வேணும்”

“அம்மா…. அப்டி போகலனா நஷ்ட ஈடு எங்க கம்பெனிக்கு கொடுக்கணும்….. அப்றம் வேற எங்கயும் என்ன ப்ளேஸ் ஆக விடமாட்டாங்க”

“நீ வேலைக்கு போகணும்னு ஒன்னு இல்ல அங்க”

“அதுக்காகவா நான் படிச்சேன்”

“சொன்னா புரிஞ்சுக்கோ காதம்பரி”

“வேலய விட்டு நிக்கறதா இருந்தா… த்ரீ மந்த்ஸ் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணனும்…. அப்டிதான அக்ரீமெண்ட் சைன் பண்ணி அங்க ஜாப் போனேன்…. இல்லனா நஷ்ட ஈடா எத்ன இலட்சம் கேட்டாலும் கொடுங்க……”

“அப்பாவை விட்டு பேச சொல்றேன்”

“அவங்க தெளிவா அக்ரீமெண்ட் போட்டு தான் வேலைக்கு சேர்த்திருக்காங்கம்மா…”

 

சிதம்பரம் மிகவும் யோசித்து, பிறகு மகளிடம் 

“கண்டிப்பா வேலைக்கு போகணுமாம்மா”

“ஆமாப்பா….”

“இல்ல அவங்களுக்கு பெனால்டியா…. எவ்வளவு கேப்பாங்கனு தெரியுமாமா?”

“அவங்களுக்கு இந்த ப்ரொஜெக்ட் செலெக்ட் ஆனா எவ்வளவு வருமானம் வருமோ அவ்வளவு எதிர்பார்ப்பாங்கப்பா…”

“அப்டியா…உங்க MD ட்ட பேசி பாக்கவாம்மா…”

“வேணாம்பா…..”

“முன்னாடியே தெரிஞ்சிருந்தா…. கல்யாணத்தை கொஞ்சம் லேட்டா ஃபிக்ஸ் பண்ணீருக்கலாம்….. இப்பொ பத்திரிக்கை அடிச்சு எல்லா சொந்த பந்தங்களுக்கும் கொடுத்து முடிச்சாச்சு…. இன்னும் கல்யாண வேலைலாம் பாக்கி இருக்கு….. இல்லனா நானு உங்கூட வந்துருவேன்…. யோசிப்போம்…..”

 

மகளிடம் சொல்லாமல், அவளின் MD வசம் சிதம்பரம் பேசினார்.  அதற்கு அவர், அவளுக்கு நல்ல ஆபர்சூனிட்டி அவர்களின் நிறுவனம் மூலம் கிடைத்திருப்பதாகவும், இந்த விழா, கான்ஃபரன்ஸ் மற்றும் டெஸ்டிங்க் செஷன் அனைத்திலும்  மொத்தம் ஐந்து நபர்கள் தங்களின் நிறுவனம் சார்பாக கலந்து கொள்வதாகவும், அதனால் பயப்படாமல் அனுப்பி வைக்குமாறும் கூறினார்.

ஒரு மனதாக மனைவியிடமும் விசயத்தினைக் கூறி சம்மதிக்க வைத்திருந்தார்.

 

சரியாக இரவு ஒன்பது மணிக்கு வந்த காதம்பரியை நேரில் பார்த்த பிறகே நிம்மதியாக உணர்ந்தார், சிதம்பரம். வீட்டிற்கு வர இரவு பத்தரை ஆகிவிட்டது.

“ஏன்மா ரொம்ப டல்லா இருக்க”

“ஒன்னுல்லப்பா” , அதற்கு மேல் பேசாமல் உடன் வந்த மகளை கவனிக்க இயலாத அளவிற்கு ட்ராஃபிக்.

  

வீட்டிற்கு வந்த பிறகும் இருவரது கேள்விகளுக்கும், ஒற்றை பதிலை கொடுத்தவள், அமைதியாக உண்டு விட்டு படுக்கச் சென்றுவிட்டாள்.  

நேரமானதால் மகளிடம் அதிகமாக எதுவும் பேச்சு கொடுக்காமல் கமலாவும், சிதம்பரமும் திருமண வேலைகளைப் பற்றி பேசியபடி உறங்கச் சென்றனர்.

 

அடுத்த நாள் வழக்கம்போல எழுந்து வேலைகளை கவனித்த கமலத்திற்கு ஏழு மணியாகியும் எழாத மகளை எண்ணியவாறு, அவளின் அறைக்குச் சென்றார்.

“காதம்பரி………………. என்னம்மா இன்னும் எழாம இருக்க….?”

“ம்…. ம்ம் ….”

“காதம்பரி……”

“ம்……ம்…..”

“என்னடா செய்யுது”, என பதறியபடி மகளின் படுக்கை அருகே வந்தவர், மகளின் கை தொட்டார்….. கை சில்லென்று இருந்தது……

பதறியவர்.. கன்னங்களில் தட்டி….. மகளை அழைத்தார்.

ம்…. என்பதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை.  ஆனால், அவள் மூடிய இமைகளுக்குள் இருந்து கண்ணீர் வந்தபடி இருந்தது.

 

கமலத்தின் சத்தம் கேட்டு பதறியபடி வந்த சிதம்பரம், மகளின் நிலை புரியாமல், உடனே அம்புலன்ஸிற்கு போன் செய்தார்.  சற்று நேரத்தில் பிரபல மருத்துவமனையின் எமெர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்யப்பட்டாள் காதம்பரி.

மருத்துவர்கள் அவர்கள் இருவரிடமும் சில முக்கியமான விசயங்களைக் கேட்டறிந்துவிட்டு, அவளின் சிகிச்சைகளைக் கவனிக்கச் சென்று விட்டனர்.

மகளுக்கு என்ன செய்கிறது என்பதை டாக்டர்கள் கூறுவார்கள் என இருவரும் காத்திருந்து அன்று மாலையானது.  அதுவரை அவர்களிடம் எதுவும் கூறாததால் அவர்களே டாக்டரிடம் சென்று கேட்டார்கள்.

அனைத்து டெஸ்ட்களும் எடுத்திருப்பதாகவும், சற்று பொறுமையுடன் கோ-ஆபரேட் செய்யுமாறும் கூறிச் சென்றார்கள்.

அதன்பின், சிதம்பரம் தனது தாயை போனில் அழைத்து மகளுக்கு சற்று உடல் நலக்குறைவாக இருப்பதால் சென்னை கிளம்பி வருமாறு கூறினார்.

நிலவைக் கொண்டு வா – 7

 

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்

காலையில் எழுந்த வதனி, அவளால் இயன்ற பிரேக்ஃபாஸ்ட், க்கர்டு ரைஸ் வித் பொட்டடோ என சிடுமூஞ்சிக்கும் சேர்த்து செய்து விட்டு காலேஜ் கிளம்பினாள்.

எட்டு மணிக்கு அவர்களின் பிளாட்டுக்கு வந்தவன், கிச்சனில் நிற்கும் வதனியை ஆச்சர்யம் கலந்த பார்வையோடு,

 

“வதனி……. என்ன செஞ்சுட்டு இருக்க

 

ஹூம்…… சட்டியும், பானையும் செய்யுறேன்  

 

“மார்னிங்கு…. உப்புமா……………, மதியம் தயிர் சாதத்துக்கு உருளைக் கிழங்கு செஞ்சுருக்கேன்

 

“எனக்குமா சேர்த்து செஞ்ச….

 

‘எனக்கு மட்டும் செஞ்சா….. வந்தவுடனே கீத் என்னைய செஞ்சுரும்’ 

 

ஆமா….”, என மெலிந்த குரலில் பதில் வந்தது.

 

“உனக்கு நேரமாகுது……… நீ கிளம்பு…….. நான் கிளம்பும் போது இங்க வந்து சாப்டுட்டு….. எனக்கு லன்ஞ் எடுத்துக்கறேன்…..”

 

“கீ…….”

 

“நான் ஒன்னு வச்சிருக்கேன்…… நீ கிளம்பு நான் பாத்துக்கறேன்”

 

‘என்னது உன் கிட்டயும் கீ யா?…… காந்தி செத்துட்டாராங்கிற மாதிரி…… இன்னும் அப்டேட் ஆகாம…. பச்ச மண்ணா இருக்கியே வதனி………!’

 

CA வில் இண்டர்மீடியட் கோர்ஸினை முடிக்க இருக்கும் நிலையில், அடுத்து ட்ரைனிங் சார்பாக ஆடிட்டரிடம் சென்று இரண்டரை ஆண்டுகள் ட்ரைனியாக பணியாற்ற ஆடிட்டர் ஒருவரை வலை வீசி தேடிக்கொண்டிருக்கிறாள்.

 

சென்னையில் அமைந்தால் நன்றாக இருக்கும் என தேடியவளுக்கு அங்கு அனைவரும் எங்கேஜாக இருப்பதால், திருச்சி செல்வதாக முடிவானது.  

 

போனில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தவளை, நேரில் வந்து செல்லுமாறு ஆடிட்டர் கூறியிருந்தார்.  

 

IPCC பரீட்சை முடிந்தவுடன் திருச்சி சென்று வரலாம் என அவளின் தாய் கீதாஞ்சலி கூறியிருந்தார்.

 

மாலை வீடு திரும்ப மிகுந்த யோசனையுடன் இருந்தவள் ‘எல்லாம் இந்த கீர்த்திக்கானால வந்தது…..’ என எண்ணியவாறு, மிகவும் தாமதமாக வீடு திரும்பினாள்.  

 

அங்கு ஒரு அதிர்ச்சி அவளுக்காக காத்திருந்தது.

 

இவர்களின் பிளாட்டில் சிடுமூஞ்சி சிரத்தையோடு கிச்சனில் ஏதோ செய்து கொண்டிருந்தான்.

 

‘அதுக்குள்ள எப்டி வந்தான்?’

 

“வா….. வதனி…….”

 

‘எங்க வீட்டுக்குள்ள வந்து என்னயே வா….னு….. கேட்டா….. நான் உனக்கு விருந்தாளியாயிருவேனா….. நான் இந்த வீட்டுக்காரியாக்கும்!’

 

“ம்….. என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துட்டிங்க?”

 

“காலைல…… நீ நிறைய வேல பாத்துட்டு காலேஜ் போன…… ஈவ்னிங் நான் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தேன்….. கிளம்பி வந்துட்டேன்…… 

வந்து பாத்தா உன்ன காணோம்….. சரி நமக்கு தெரிஞ்சத செய்வோம்னு கிச்சன்ல போயி பாத்தா அங்க ஒன்னும் இல்ல….. ‘ம்……. வாங்கி வைக்கணும்’ சரினு இங்க வந்துட்டேன்”

இங்கிதத்தோடு பேசியபடியே அவனின் பிளாட்டிற்கு சென்றவன் அரை மணி நேரம் கழித்தே வந்தான்.

 

வதனி அதற்குள் அவளை ரெஃப்ரெஷ் செய்து காஃபீ குடித்துவிட்டு, அவன் வாங்கி வந்திருந்த ஸ்நாக்ஸுடன் ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து உண்டபடி டிவி பார்த்தாள்.

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த அவளின் விளையாட்டு தோழமைகள் இருவர், அவளின் எதிரில் இருந்த ஸ்நாக்சை எடுத்து உண்டபடி,

 

“வதன், ஏன் இன்னிக்கு ரொம்ப லேட்…?”

 

“வாங்கடா….. கொஞ்சம் நோட்ஸ் எடுக்கவேண்டி இருந்தது….. அதாண்டா….”

 

“நோட்ஸ் வேணும்னா…. புக் ஸ்டால்ல வாங்காம, எங்க போயி எடுப்ப…..?”, இது நரேன்

 

“லைப்ரரிலதான்டா”

 

“ஷாப்ல வாங்கிரு…. எங்களுக்கு போரடிக்குது…..”, இது கவின்

 

“சரி…. வேற என்ன பண்ணுனீங்க… இன்னிக்கு?”

 

“கிரிக்கெட் விளையாடலாம்னு இருந்தோம்….. 

நீ, நம்ம மீனு, மதன் வரல…. மூனு பேரு இல்லனால….. வேற விளையாட்டு விளையாடலாம்னு யோசிச்சு,….. கள்ளன்…. போலீஸ் விளையாண்டோம்…..”

 

“அப்றமென்ன….”

 

“இருந்தாலும்….. நீ வந்தா…. புதுபுது கேம் சொல்ற…. இன்னும் ஜாலியா இருக்கும்”

 

“நாளைக்கு சீக்கிரமா வந்துரேண்டா…….”

 

“இப்பொ தான் உங்க மம்மி ஊருக்கு போயிட்டாங்கல்ல….. அப்ப எல்லாரையும் இங்க கூட்டிட்டு வரவா?”

 

“இல்லடா….. எதித்த வீட்ல ஒரு ஹிட்லர் இருக்காரு….. அதனால…. நாளைக்கு பாப்போம்….”

 

“யாருக்கும் பயப்படக்கூடாதுனு….. எங்கட்ட சொல்லுவ”

 

“இது பயமில்லடா….. அப்றம் ஊருல இருந்து வந்த எங்கம்மாட்ட போட்டுக்குடுத்துட்டா…. எங்கம்மா என்ன உங்களோட சேர விடமாட்டங்க”

 

“நாங்க குட் ஃப்ரெண்ட்ஸ் தான உனக்கு”

 

“ஆமாடா…. ஆனா அந்த ஹிட்லர் பேட் பாய்…… அதான்….”

 

“அப்டி சொல்றியா?”, என்று அவளுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த அவளின் சிடுமூஞ்சி,

 

ஆஃபீஸ் விசயமாக வெளியே சென்று, ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு செல்ல எண்ணி அங்கு வர……, இரு வாண்டுகளுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து…….

 

“என்ன அங்க…?”

 

‘மூக்குல வேர்த்துரும்போல”

 

“இல்ல சும்மா…. என்னை பாக்க வந்தாங்க…..”

 

“டேய் பார்த்தாச்சுல்ல….. போங்க…. போயி ஹோம்வர்க் செய்யுங்க…”, என்றவுடன் இருவரும், வதனி முகம் பார்த்து, 

 

இவந்தான் அந்த ஹிட்லரா என்பது போல பார்க்க…. அவளும்… ஆம் என்பது போல் கண்களை மூடி திறக்க இருவரும் வேகமாக அங்கிருந்து அகன்றனர்.

 

“உன் வயசென்ன…. அவங்க வயசென்ன….. அவங்க கூட எதுக்கு சின்னபுள்ள மாதிரி இன்னும் திரியற”

 

‘ஏங்கூட சேரவங்களோட தான…. நான் விளையாட முடியும்’

 

“நான் எங்கயும் போகறதில்லயே!”

 

“இன்னிக்கு மட்டும் போகல….. அத சொல்றியா?”

 

 என்ன சொல்ல என்பது போல பார்த்தவள், ஆம் என்று ஒத்துக்கொண்டால் அதற்கும் அரைமணி நேரம் எதாவது மண்டகபடி நிச்சயம் என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தாள்.

 

ஆனால் மனம் சொன்னது…… ‘எல்லாத்தையும் பயபுள்ள கண்டுபிடிச்சுருது….. பேசாம இது டிடெக்டிவாகிருந்திருக்கலாம்’

 

“சரி பாத்து இருந்துக்கோ,  நான் ஒன் அவர்ல வந்துருவேன்….”

‘அட இடத்த காலி பண்ணுப்பா….. காத்து வரட்டும்’

 

அப்பாடி என்று மூச்சுவிட்டு டோர் லாக் செய்துவிட்டு, கிச்சனில் அவன் என்னென்ன செய்திருக்கிறான் என காண வேண்டி அங்கு சென்ற போது,  அவளது போன் அழைத்தது.

 

ஹாலுக்கு வந்தவள், நியூ நம்பர் என வருவதை பார்த்து, ‘யாரது’ என எண்ணியவாறு “ஹெலோ” என்க….

 

“நான் ஹிட்லர் பேசுறேன்…. உங்கப்பாவோட வண்டி சாவிய எடுத்துட்டு கீழ வா”

 

“ம்….” சற்று நேரத்தில் அது யாரென்பது புரிந்துவிட…

‘தொலஞ்சேன்…. இன்னிக்கு…. ஒட்டுக்கேட்ருக்கான் யுவர் ஆனர்….. இவன.., ஊர விட்டு நாடு கடத்தணும்’

 

 “இதோ வரேன்” என்றவாறு அடுத்த ஐந்தாவது நிமிடம்…. சாவியுடன் அவன் முன் நின்றாள்.

 

சற்று கோபம் இருந்தாலும், அதை அவளிடம் காட்டாமல், “அங்க பாரு” என்றான் கை நீட்டி…. 

 

‘இவன் ஒரு அக்கப்போறு….. அங்கபாரு….., அண்டர் வேருன்னு….’ 

 

சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவனது டூவீலரை நோக்கி, அங்கு….. போலியோ வந்தது போல அவனது யமஹா நின்றிருந்தது.

 

அதைக் கண்டவுடன் யாருடைய வேலை அது என்பது அவளுக்கு புரிந்தாலும், அறியாதவள் போல அவள் கையில் இருந்த சாவியை அவனிடம் நீட்டினாள்.

 

‘இதெல்லாம் சாதாரணமப்பா…!’

 

அவனும் அதைப் பெற்றுக்கொண்டு, பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு வந்தவன் அவளிடம் இரு பார்சலை தந்து உண்ணுமாறு கூறிவிட்டு, அவன் பிளாட்டில் சென்று கையில் இருந்த ஃபைலை வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வந்தான்.

 

‘வதனி, இன்னைக்கு நீ யாரு மூஞ்சில முழிச்சனு தெரியலயே…. எங்க ஆரம்பிச்சு என்னைக்கு? எங்க? இவன் முடிக்க…..? இப்பவே கண்ண கட்டுதே…. ’

 

அமைதியாக இருவரும் உண்டு முடித்தபின், வதனி கிச்சனுக்குள் இருந்தபடியே இல்லாத வேலையை இருக்குமாறு செய்ததாக பாவனை செய்தபடி இருக்க அங்கு வந்தவன்,

 

“இந்த பேட் பாய் நம்பர யாரு கிட்டயும் கொடுத்துராத… வதனி……. கார்த்தி கேட்டா…. ஆர்த்தி கேட்டானு யாருகிட்டயும் கொடுத்து……. அவங்ககிட்ட இருந்து எனக்கு கால் வந்தா…. கால் உனக்கு தான் வரும்….. ஏன்னா… அன்னோன் நம்பர்லாம் கால் ஃபார்வெர்டுல உன் நம்பர் தான் குடுக்கப்போறேன்….”, என்றான் சிரித்தபடி…

 

“எங்க இருந்தாலும் இந்த நம்பர நான் யூஸ் பண்ணுவேன்.  உனக்கு எதாவது பேசனும்னா, கேக்கனும்னா தாராளமா பேசலாம், வாட்ஸ்அப் பண்ணலாம்”, என சிரித்தபடி அங்கிருந்து அவன் பிளாட்டிற்கு சென்றுவிட்டான்.

 

‘க்லொஸ் அப்’ விளம்பரத்துக்கு போப்பா ரொம்ப நல்லா சிரிக்கிற

 

அது வரை அவனை ஒரு பொருட்டாக எண்ணாதவள், இரு தினங்களாக வழக்கத்திற்கு மாறாக அவன் தன்னிடம் அமைதி காப்பதை உணர்ந்திருந்தாள்.

 

எப்பொழுதும் கண்டிப்பும், கறாராக இருப்பவன் சற்று லிபரலாக தன்னிடம் இருப்பதை யோசித்தாள்.  மிக சிறு வயதில் அவளிடம் சிரித்து பேசியிருக்கிறான். ஆனால், இங்கு வந்த கடந்த இரு ஆண்டுகளில் இன்று தான் முதன் முதலாக சிரிக்கிறான்.

 

பல அழகிகள் அவனை வயது வித்தியாசமின்றி அணுக முயற்சிப்பதை நேராக கண்டிருக்கிறாள்.  இவள் சிறு பெண் என நினைத்து இவளை தூதிற்காக அனுப்பிய பல பெண்களை தன் மனக்கண் முன் கொண்டு வந்தாள்.

 

‘மச்சமுள்ள இந்த மன்னார, மடக்க போற ஃபிகரு யாருனு தெரில…’ என எண்ணியபடி அவன் மொபைல் எண்ணை சிடுமூஞ்சி என ஷேவ் செய்தாள்.  

 

‘இன்னிக்கு ஒரு நாளு நம்மள பாத்து சிரிச்சதுக்கு அவ்வளவு பெரிய ரிவார்டெல்லாம் கொடுக்க முடியாது….. ரொம்ப நாளு நம்மகிட்ட சிடுசிடுன்னு பேசுனதால சிடுமூஞ்சி தான் கரெக்ட்…’, என்ற மனவோட்டத்துடன் அவனது எண்ணை சேமித்த கணத்தை நினைத்தவாறு, ஹாஸ்டலில் இருந்து கிளம்பி ஆடிட்டர் அலுவலகம் வந்தவளுக்கு சற்று அதிகமான வேலை.  ஆகையால், அவனுக்கு அழைக்க, குறுஞ்செய்தி அனுப்ப மறந்திருந்தாள்.

 

மதிய உணவின் முன் அமர்ந்தவளுக்கு சிடுமூஞ்சியின் நினைவு வர, கால் செய்யும் துணிவு இல்லாததால், ‘எதிர்பாரா வேலை காரணமாக என்னால் வர இயலவில்லை, அம்மா அப்பா மட்டும் வருகிறார்கள் இன்று’ என ஆங்கிலத்தில் குறுஞ்செய்தியை அவனுக்கு அனுப்பிவிட்டு உண்ணலானாள்.

 

அலுவலக நேரத்தில் சைலண்ட் மோடில் வைத்திருப்பது வதனியின் வழக்கம்.  அது ட்ரைனிங்கிற்கு வருமுன்பே டூ, டோண்ட் என இரண்டிலும், பத்து, பத்து,  ஆத்திசூடி போல ஆடிட்சூடி கொடுத்தபின்பே அலுவலகத்தில் அனுமதித்திருந்தனர்.

 

உண்டு முடித்தபின் போனை எதேச்சையாக எடுத்தவள், வந்திருந்த குறுஞ்செய்திகளைப் படித்தாள்.

 

படித்தவள்…. என்ன பதில் அனுப்ப என யோசித்தவாறு அவளின் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

நிலவைக் கொண்டு வா – 8

 

கனவு காணும் வாழ்க்கையாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று 

தரையைத் தேடும் ஓடங்கள்

 

சிவகங்கையில் இருந்து கிளம்பிய மனோகரிக்கு, தனது மகனின் குரலில் இருந்த செய்தி சற்று கிலியை உண்டாக்கினாலும் யாரிடமும் இது பற்றி தெரிவிக்காமல், காலையில் சென்னை வந்து மகனுக்கு அழைத்தார்.

மகனின் தோற்றமே அவருக்கு பல செய்திகளைச் சொன்னது.  ஆனால் பேசாமல் மருத்துவமனைக்கு வந்து கமலத்திடம் விசயங்களை கேட்டறிந்தார்.  எதையும் மறைக்காமல் மனோகரிடம் கூறிவிட்டு, அப்படியே அங்கு வேதனையோடு அவரின் அருகில் அமர்ந்தவர், அவரின் மடியில் முகம் புதைத்து சத்தம் வராமல் கதறினார்.

“அத்த…. நாங்க யாருக்கும் எந்த கெடுதலும் நினச்சதில்லயே….. என் பொண்ணு ரெண்டு நாளா கண்ணே தொறக்கலயே……. எதுக்கு அவ இப்டி கஷ்டபடுறா…. எனக்கு பயமா இருக்குத்த……….”, என்றவாறு கதறியவரை தேற்ற வழி தெரியாமல், விழிநிறைந்த நீருடன்….. இறைவா…. என்ன சோதனை….. என அமர்ந்திருந்தார்.

மகனிடம், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என விசாரித்தார்.  

“பிளட் டெஸ்ட்ல இருந்து, ஃபுல் பாடி ஸ்கேன் வர செஞ்சுட்டாங்கம்மா…… எல்லாமே நார்மலா இருக்காம்…… அதுல எந்த பிரச்சனையும் இல்ல….. அப்டினு சொல்றாங்க……

“வேற என்னதான் நடந்தது?

“எங்களுக்கும் தெரியலயேம்மா….

“அவ அன்னைக்கு எங்க கூட பேசவே இல்ல…. சாப்டவுடனே படுக்க போயிட்டா….. நாங்களும் அவளுக்கு அசதினு விட்டுடோமா…. ஆனா ஃபிலைட்ல ஏற முன்னே எப்பவும் போல தான் பேசுனா…, என தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து கதறினார்.

“காலைல எப்பவும் சீக்கிரமா எழறவ எழுந்துக்கலனு அவ அம்மா தான் எழுப்ப போனா….. அப்பவே…. பேச்சில்ல….. கண்ணு கூட திறக்கல….. ஆனா கண்ணுல இருந்து தண்ணியா வந்துதுமா…… அப்போ இருந்து ஐசியு ல தான் இருக்கா…..

“தைரியமா இருய்யா….. எல்லாம் சரியாகிரும்

இரண்டு நாட்களாக பசி என்ற உணர்வில்லாமல் இருவரும் இருக்க, மனோகரி இருவரிடமும்…. “புள்ளய பாக்க தெம்பு வேணும், காபித் தண்ணீயாவது குடிங்க…இப்டி உக்காந்து இருக்காதிங்க

“பசிக்கல , என இருவரும் கூற….. சிதம்பரத்தின் போன் அழைத்தது.  எடுத்துப்பார்த்தார், சற்றே பதற்றமடைந்தவர்…… தன் தாயிடம் வந்து…..

“அம்மா….. மாப்பிள்ள வீட்ல பேசுறாங்கம்மா…..

“இங்க தா நான் பேசுறேன்……”, என வாங்கியவர் 

“அலொ…. நான் மனோகரி பேசுறேன்….

“சின்னம்மா…. நான் துர்கா பேசுறேன்….. மதினி போனு ஸுட்சாப்பா இருக்கு…. அதேன்… அண்ணனுக்கு கூப்டேன்…. நீங்க எப்பொ வந்தீங்க

“நான் இன்னிக்கு காலைல தான் வந்தேன் தாயி

செங்கல்பட்டுலயும், காஞ்சிபுரத்துலயும் பத்திரிக்கை குடுக்காம இருந்துது, அதான் நானும், அவரும் பத்திரிக்கை குடுத்துட்டு உங்கள எல்லாத்தையும் ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு போன் பண்ணேன், சின்னம்மா

“வேற யாரும் கூட வந்துருக்காகலா

“இல்ல சின்னம்மா…. ஏன் கேக்குறீங்க?

“சிதம்பரத்திட்ட போன குடுக்குறேன், அவன் சொல்ற இடத்துக்கு வந்துட்டு போங்க தாயி”, என்றவாறு மகனிடம் கொடுக்க, அவரும் மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு பிரபல கடையில் அனைவரும் இருப்பதால் அங்கு வந்து சந்திக்குமாறு கூறிவிட்டு போனை வைத்தார்.

 

“அம்மா…. இப்போ என்ன செய்யம்மா?

கமலா இங்க இருக்கட்டும்….. நம்ம ரெண்டு பேரும் போயி பாத்துட்டு வருவோம்

“அவங்க என்ன நினைப்பாங்கம்மா…..

“நீ அவ ஊருக்கு போயிட்டு வந்தத எதுவும் சொல்லாத…… நான் பேசுறேன்…. பாப்போம்

 

இருவரின் தோற்றத்தினை கண்டவுடன்…… அருகில் வந்த இருவரும் 

“கமலாவுக்கென்ன …..?, என ஹரிகிருஷ்ணன் பதற, அதே நேரம்,

“மதினிக்கென்ன….?”, என துர்கா பதற……

 

மனோகரி சற்று தயங்கத்துடன்….. காதம்பரியை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதையும், கடந்த ஒன்றரை நாளில் நடந்த அனைத்தையும் கூறிவிட்டார்.

இருவரும் மிகவும் அதிர்ந்து

“எந்த ஹாஸ்பிடல்

மருத்துவமனையின் பெயரைச் சொன்னவுடன் இருவரும் அவளை காண வேண்டும் எனக்கூற….. இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவர்களைச் சந்தித்து பேசினர்.  ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மறக்காமல் அழைக்குமாறு கூறிவிட்டு மாலையில் சென்னையில் உள்ள அவர்களது பிளாட்டிற்கு சென்றனர்.

ஹரிகிருஷ்ணன் தனது தாய் ராஜமனோகரியை அழைத்து சுருக்கமாக விபரம் சொன்னார்.

சற்று நிதானமாக கேட்ட ராஜம்….., அன்று இரவு தான் கிளம்பி சென்னை வருவதாகவும், அவர்கள் இருவரையும் அன்று இரவு கிளம்பி ஊருக்கு வருமாறும் கூறிவிட்டு வைத்துவிட்டார்.

சரியாக இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே திருமணத்திற்கு உள்ள நிலையில்….. சற்று நேரம் யோசித்தபடி இருந்தவர்…… வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி பகிராமல், பேரன்களிடம் சென்னை செல்ல வண்டி ஏற்பாடு செய்ய சொல்லி…. வண்டி வந்ததும், தனது துணைக்கு மகள் கீதாஞ்சலியை உடன் அழைத்தபடி கிளம்பிவிட்டார்.

வீட்டில் திருமணத்திற்கான வேலைகள் எந்த சுணக்கமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.  நெருங்கிய சொந்தங்கள் சிலர் வந்திருந்ததால் வீடு பரபரப்புடன் இருந்தது.

 

சென்னை சென்ற ராஜம், நேராக மருத்துவமனைக்கு சென்று, அங்கு மனோகரியை கண்டு கண் கலங்கினார்.  பிறகு வெண்டிலேசனில் இருந்த காதம்பரியை சென்று பார்த்தார். அன்று மாலை வரை அங்கிருந்தவர், மனோகரியை அழைத்து பேசினார்.  பிறகு மருத்துவர்களை சந்தித்து தனது சந்தேகங்களைக் கேட்டவர், எந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளும் மருத்துவர்களிடமிருந்து வராததால்…… அங்கிருந்து கிளம்பி விட்டார் மற்றவர்களிடமும் விடைபெற்று.

அவர்களின் பிளாட்டில் வந்து சற்று நேரம் இருந்துவிட்டு, இரவு உணவுக்குப்பின் ஊருக்கு கிளம்பிவிட்டார்.

 

அடுத்த நாள் காலையில் ஊருக்கு வந்தவர், பத்து மணி வாக்கில் சனவேலி எனும் ஊரில் உள்ள ஜோதிடரை காணச் சென்றார்.

மாலை வீடு திரும்பியவர், முதலில் தனது ப்ரியத்திற்குரிய பேரனான ரகுநந்தனை அவரின் அறைக்கு வருமாறு கூறினார்.

“அப்பத்தா…. என்ன கூப்டீங்களா?

“ஆமாயா…….

என்ன விசயம் அப்பத்தா?

“இப்போ கல்யாணம் வேணா…… இன்னு ரெண்டு வருஷம் போகட்டும்னு நீ சொன்னத இந்த கிழவி கேக்கல…… என்னோட வற்புறுத்தலால…. சரினு சொன்ன…. ஆனா இந்த ஆத்தா உனக்கு என்ன செஞ்சாலும்…. அது உன் நல்லதுக்கு தானு உனக்கு புரியுதுலயா

என்னப்பத்தா…. இன்னிக்கு ஏதேதோ பேசிட்டு…

கல்யாணத்துக்கு இன்னும் அஞ்சு நாளு தான்யா இருக்கு

“ஆமா அப்பத்தா….. அதுக்கென்ன? 

“பொண்ணு நாம முன்ன பார்த்தது இல்ல….. இனி தான் உனக்கு பாக்க போறேன்….. பாத்துட்டு சொல்றேன்….. ஆனா பொண்ணு மட்டும் மாறிருச்சுயா….. குறிச்ச தேதில… குறிச்ச நேரத்துல உன் கல்யாணம் நடக்கும்யா….. இந்த ஆத்தாவ மன்னிச்சிருயா….., என கண் கலங்கியபடி கையை எடுத்து பேரனை நோக்கி கும்பிட்டார்….

அவரின் செயலால் பதறியவன்….. “எனக்கு நீங்க யாரப் பாத்திங்கனாலும் சரி அப்பத்தா…… ஆனா அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சிருக்குதானு மட்டும் விசாரிச்சிருங்கப்பத்தா….. என்றவன்

“மன்னிக்கற அளவுக்கு நீங்க எனக்கு கெடுதலா நினைப்பீங்க…. சின்ன வயசுல இருந்து எங்களுக்கு பாத்து… பாத்து செய்வீங்க….. அதுனால, எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு அப்பத்தா, என்றவன் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான்.

பேரனின் நம்பிக்கையை காப்பாற்ற…… யோசித்தார்.  அதன் பிறகு அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை அவர்.

 

அடுத்த நாள் , தனது மகன், மருமகளை அழைத்துப் பேசினார்.

இரு மகள்களையும் அவரவர் கணவர்களுடன் தனித்தனியே அழைத்துப் பேசினார்.

அதோடு அவரின் அறைக்குள் சென்றவர், இரவில் மூத்த பேரனை அழைத்து

“விக்ரமா…….. நாளைக்கு நீயும் உன் பொண்டாட்டியும் திருச்சி போகணும்….

“சரி அப்பத்தா

“அங்க நம்ம சந்திராவ கூப்டுட்டு….. உடனே கிளம்பி வரணும்..

“வேற….. எதுவும் சொல்லணுமா அப்பத்தா?

இல்லயா…..

“என்னப்பத்தா…. உடம்புக்கு முடியலயா?

“நல்லா இருக்கேன்யா….. எனக்கென்ன?

“பாத்தா உடம்பு முடியாத மாதிரி இருக்கீங்க

“இல்ல….. ஒன்னுமில்ல….. நீ ஊர்வசிகிட்ட இப்பவே சொல்லிரு…. மறந்துராத……”, என அவனை அனுப்பிவிட்டார்.

 

கீதாஞ்சலி காலையில் தனது மகளுக்கு கால் செய்து பேசினார்.

“என்னம்மா…… அண்ண மகன் கல்யாணத்துக்கு போன உனக்கு ஏன் ஞாபகமெல்லாம் இருக்கா ஆச்சரியமா இருக்கு

“நாளைக்கு கிளம்பி இங்க வந்துரியா….

“ஏன்….. ஏன்….. அதெல்லாம் முடியாது….. நாள மறுநாளே வந்துக்கறேன்

“அம்மாச்சிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல….. அதான்…. நாளைக்கு கிளம்பற மாதிரி பாத்துக்கோ

“ஏன்மா…. என்ன செய்யுது?

“நீ நேரில வந்து பாத்துக்கோ

அதற்கு மேல் பேசாமல், அவளிடம் மதியம் அவளை பிக் அப் பண்ண  விக்ரமன் வருவதாக கூறி வைத்துவிட்டார்.

 

மறுநாள் திருச்சி சென்று அழைத்து வரும் போது, முதலில் ராஜத்தை பற்றி விசாரித்தாள். பயப்படும்படி எதுவும் இல்லையென விக்ரமன் கூறியபின், வழியெல்லாம் ஊர்வசியுடன் பேசி சிரித்தபடி வீடு வந்து சேர்ந்தாள் வதனி.

இரவு வீட்டிற்கு வந்தவளை, கீதா குளித்துவிட்டு வந்து உணவு உண்ணுமாறு கூறினார்.  வீட்டில் கல்யாண வேலைகள் ஒருபுறம் நடக்க, வீட்டின் முக்கிய தலைகள் யாரையும் ஏன் காணவில்லை என யோசித்தபடி….. 

குளித்து, உண்டு முடித்தபின் “அம்மாச்சி உன்ன பாக்க கூப்பிடுறாங்க என கீதா கூற….. 

‘என்ன…. எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு…… விக்ரம் மச்சான், ஆதி மச்சான் கல்யாணத்துல இருந்த…. ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுதே…. என யோசித்தபடி ராஜமனோகரியை சந்திக்கச் சென்றாள், வதனி.

 

“அம்மாச்சி……

உள்ள வா சந்திரா……

உள்ளே யாருடன் பேசிக்கொண்டிருக்கிறார்…. என எண்ணியவாறு வந்தவளுக்கு, உள்ளே இருந்தவனை பார்த்ததும்…… ‘அட…. மாப்பிள்ள மன்னாரு நீரு இங்கதான் இருக்குறீரா! என நினைத்தபடி,

“அம்மாச்சி உங்களுக்கு முடியலனு அம்மா சொன்னாங்க….. என்ன செய்யுது , எனக் கேட்டவாறு உள்ளே வந்தாள்.

“என்ன செய்யுது….. நல்லா தான் இருக்கேன்…., அந்த குரலே சொன்னது நான் நன்றாக இல்லையென….

“ஹாஸ்பிடல் போனீங்களா?

“போவோம்……. சரி அத விடு…… பயணமெல்லாம்…. நல்லா இருந்ததா?

அட….. லேடி கிங்கு…. பேச்ச மாத்துது….!

“அதுக்கென்ன…. நல்லா இருந்தது…..

“படிப்பெல்லாம் எப்டி தாயி போகுது

“அதுவா…… இப்போ ட்ரைனிங் பீரியட்…. அப்றம் ஃபைனல் எக்ஷாம்…. அப்டினு இன்னும் ரெண்டு, ரெண்டரை வருஷம் இருக்கு அம்மாச்சி

அது வரை அமைதியாக இருவரின் சம்பாசனைகளை கேட்டுக்கொண்டிருந்தவன், எழுந்தான்.

“நான் கிளம்பவா…..

“சரியா….. நீ கிளம்பு…. அப்றம் ஆத்தா கூப்டுறேன்

அவன் செல்லும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர், சந்திரவதனியிடம் திரும்பினார்.

“இந்த அம்மாச்சிக்கு ஒரு ஆச……. அத நான் உங்கிட்ட கேட்டா நிறைவேத்துவியா?

உங்களுக்கு இந்த வயசுல என்ன ஆச அம்மாச்சி…. சொல்லுங்க….. முடிஞ்சா கண்டிப்பா நிறைவேத்துவேன்

நீ மனசு வச்சா நடக்கும்…. உன்னால மட்டும் தான் முடியும்

“சரி, மனசு வைக்கிறேன்…. சொல்லுங்க

“நிசமா…. சொன்ன பின்ன முடியாதுனு சொல்லக்கூடாது?”

“நிஜமாத்தான்…. அம்மாச்சி….

கண்டிப்பா…..

“கண்டிப்பா செய்யுறேன்

“ஏன் பேரன்…… ரகுவ கல்யாணம் பண்ணிக்கிறியா?

எதிர்பாரா இந்தக் கேள்வியால்…….. அமர்ந்திருந்தவள்…. எழுந்து நின்றாள்….. 

‘நம்ம காதுல…. எதோ…. ப்ராப்ளமா…. இல்ல அடச்சிருக்கோ….. இவ்வளவு நேரம் நல்லா தான் கேட்டுது……. என எண்ணியவாறு….. 

நிலவைக் கொண்டு வா – 9

 

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

 ரகுநந்தன்காதம்பரிக்கு பேசியிருந்த திருமணம், காதம்பரியின் சுகவீனத்தால்….. பத்திரிக்கையில் குறித்திருந்த நேரத்தில், குறித்த இடத்தில் ரகுநந்தனுக்கும் – சந்திரவதனிக்கும் இடையே  நடந்து முடிந்தது.  எதிர்பாரா நிகழ்வாதலால் , இயல்புக்கு வர இருவராலும் இயலவில்லை.

வதனிக்கு, வாழ்க்கைத் துணையாக வந்தவனை அவளின் வாழ்க்கைக்குள் கொண்டு வர, வருடங்கள் தேவைப்படும் என்பதை யாரும் அறியவில்லை.

ராஜமனோகரிக்கு திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது குறித்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், அவர்களது எதிர்காலம் குறித்த பயம், அவருக்கு இருந்தது உண்மை.

ரகு எதையும் அனுசரித்து சென்றுவிடுவான்.  ஆனால், வதனி அப்படியல்ல. சற்று பிடிவாதம் உண்டு. 

நெருங்கிய உறவினர்களைத் தவிர மற்றவர்களுக்கு விசயம் தெரியாது.  அதனால் குழப்பம் எதுவும் நிகழவில்லை.

கருணாகரன் – கீதஞ்சலிக்கு மகளுடைய விருப்பம் முக்கியம் என்றிருந்தனர்.  

சென்னையில் இருக்கும் வரை, வதனிக்கு ரகுவிடம் ஒட்டுதல் இருந்ததில்லை.  ரகு ஹாலில் இருந்தால் அவள் ரூமில் இருப்பாள். 

அவனுடைய பிளாட்டில் இருக்கும் போது இலகுவான மனநிலையில் இருப்பவள், இவர்களது பிளாட்டிற்கு அவன் வருவதைக் கண்டதும், அங்கிருந்து நகர்ந்து ரூமில் ஐக்கியமாகி விடுவாள். 

தனது தாயார் ராஜம் இது பற்றி கேட்டதும், இருவருமே “வதனிக்கு பிடிக்கணும்மா….. அவளுக்கு பிடிக்கலனா நீங்க எங்கள தப்ப நினைக்க கூடாது… அவளா சம்மதிச்சா எங்களுக்கும் சம்மதம்….. ரகுகிட்டயும் கேட்டுக்கங்க…. என்பது தான்.

ஆனால் அவள் சம்மதம் தெரிவித்தது இருவருக்கும் ஆச்சரியமே.

 

ஹரிகிருஷ்ணன், துர்கா தம்பதியினருக்கு ராஜத்தின் திடீர் முடிவு எதிர்பாராதது, என்றாலும் முழு சம்மதமே.

 

நாயகன் ரகுநந்தன், கல்லூரி படிப்பு, அதனைத் தொடர்ந்து பங்களூருவில் வேலை என இருந்து விட்டு, சென்னையில் சுயமாக மென்பொருள் நிறுவனம் தொடங்கும் வரை எந்த சிந்தனையும் இல்லாமல், வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன்.

கல்லூரியில் படிக்கும் போதும், கிராமத்திலும், அவன் சென்ற எல்லா இடங்களிலும், அவனுடன் பேச,  பழக, வாழ என பெண்கள் பலர் அவரவர் விருப்பத்தை பல வகைகளில் தெரிவித்தாலும், அதை கண்டுகொள்ளாமல் கடந்துவிடுபவன்.

அவனின் கனவான, சுயமாக மென்பொருள் நிறுவனம் தொடங்கி, திறம்பட  நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்னை வந்தவனுக்கு, உன் கனவுகளில் எனக்கும் இடம் கொடு என வந்து நின்றவளை, அவன் நெருங்க நினைக்க, நிஜத்தில் தூரம் போனாள் பெண்.

 

மாலை வேளை,  வேண்டிய திங்க்ஸுடன் பங்களூருவில் இருந்து நேராக அப்பார்ட்மெண்ட் வந்தவன், நின்றிருந்த வாட்ஸ்மேனிடம் மூன்றாவது மாடியில் இருக்கும் அவனது பிளாட்டில் அவனது பொருட்களை வைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தான்

அப்போது, சந்தன நிற ஃபேப்ரிக் பாட்டம், காலர் நெக்.. டார்க் ப்ளூ…. ¾ ஸ்லீவ்….. எம்ப்ராய்டரி வொர்க் செய்த சல்வார், ஃபேப்ரிக் நாஸ்னீன் துப்பட்டாவில் , ஒற்றைப் பின்னலுடன், மாசு மரு இல்லாத சந்தன நிற, அவனைத் திரும்ப பார்க்கத் தூண்டிய தேவதை……, 

இவனை கண்டுகொள்ளாமல் சிறுவர் பட்டாளத்துடன்…. சிரித்தபடியே கைகளில் நீளமான நோட்டுக்களுடன் சென்றிருந்தாள்.  அவளின் முகம் அறிமுகமானவளைப் போல தோன்ற சற்று யோசித்தவன், நினைவில் வராததால் அவனின் பொருட்களுடன் லிஃப்டில் ஏறினான்.

வீட்டைத்திறந்து அவன் கொண்டு வந்திருந்த அனைத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தபோது,

“வா நந்தா…, என்றபடி கீதாஞ்சலி எதிர் பிளாட்டில் இருந்து வந்தார்.

“வாங்கத்த…..

“சரி….. அங்க வரியா…. உனக்கு காஃபீ தரேன்… இல்ல இங்கயே… ப்ரவீண்ட குடுத்து விடவா..?

“…தோ…. வரேன் த்த… நீங்க போங்க…..

அவர்களின் பிளாட்டிற்கு வந்தவனை பயங்கரமாக கவனித்துக் கொண்டிருந்தார் கீதாஞ்சலி

“மாமா இன்னும் வரலயாத்த…..

“அவரு ரெஃப்ரெஷெர் கோர்ஸ் போயிருக்காருப்பா…….. காலையில மதினி போன் பண்ணாங்க.. நீ இன்னிக்கு இங்க வந்துருவனு….

“ஆமாத்த….. இடம்லாம் பாத்து எல்லா வேலையும் முடிச்சு ரெடியா இருக்கு….. இண்டர்வியூ முடிச்சு ஸ்டாஃப் எல்லாம் ட்ரைனிங்ல இருக்காங்க….. நெக்ஸ்ட் வீக்ல இருந்து இங்க ரன் ஆக ஆரம்பிச்சுரும்

அம்மா….. என்னோட… கவர் ஃபைல காணோம்மா….., என்றவாறு அருகிலுள்ள ரூமிலிருந்து வெளியே வந்தவளை கண்டவன் அதிர்ந்தான்…

“வதனி…. இது நம்ம நந்தா……. பாத்து…. ரொம்ப நாளாச்சு…. எனக்கே உன்ன அடையாளம் தெரிலப்பா… அவளுக்கு எங்க  தெரியப் போகுது…

வதனியா…… அதுக்குள்ள இவ்வளவு பெரிய பொண்ணாயிட்டாளா…… ரகு மச்சான்… ரகு மச்சான்னு நம்ம பின்னாடி தெரிஞ்ச வாண்டா…. இது…… என் வயச கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே சோதிச்சிட்டாளே….

வாங்க…., என்றவள் அதற்கு மேல் அங்கு நிற்காமல் ரூமிற்குள் சென்றுவிட்டாள்.

 

அதன் பின் அவளது வயதையும், கல்வியையும் யோசித்து எட்ட நின்று பார்ப்பதுடன் சரி….. அவள் மேலுள்ள அவனது வருத்தம்…… அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் அவளுண்டு, அவள் வேலையுண்டு என்றிருப்பது மட்டுமே.

அவள் அவனை நிராகரிக்கவில்லை….., நினைவிலேயே கொள்ளவில்லை என்பதால் மட்டுமே அவளின்பால் அதிகமாக ஈர்க்கப்படுவதை உணர்ந்தவன், வேலையில் அவனை மறக்குமாறு பார்த்துக் கொண்டான்.

ஆனால் அந்த அபார்மெண்ட் வாண்டுகளுடன் நேரம் காலம் தெரியாமல் அவள் நேரம் செலவழிப்பதை பார்க்கும் போது, சற்றே பொறாமை தோன்றும்.  ஆனால், சில நேரம் அவனை மீறி சத்தம் போடுவான். கண்டு கொள்ளாமல் செல்பவளைப் பார்த்து, ‘இவ எதுக்கும் அசரவே மாட்டாள் , என எண்ணிக்கொள்வான்.

‘எவளுக்கோ நம்பர் வேணும்னு நிக்கிறா….. இவள…. ஒண்ணும் செய்ய முடியாது….. என அந்த இரு தினமும் அவளுடன் இருந்த நேரத்தினை பொக்கிஷமாக எண்ணியவனை….. எண்ணாதவள்.

அவ கோர்ஸ் முடிஞ்ச பின்னாடி வீட்ல சொல்லுவோம் என எண்ணியவனுக்கு, தனது வயோதிகத்தினை காரணம் காட்டி திருமணத்திற்கு சம்மதம் கேட்ட அவனுடைய அப்பத்தா ராஜத்திடம் சொல்லலாம் என எண்ணினான்.  

அதே நேரத்தில், அவனின் மற்றுமொரு அத்தையான தீபாஞ்சலியின் மகளும் வதனியும் ஆறு மாத வித்தியாசத்தில் பிறந்தவர்கள்.  இருவரில் யாரை எடுத்தாலும் மற்றவருக்கு மனவருத்தம் உண்டாகும் என ராஜம் தனது மகனிடம் சொல்லும் போது ரகு உடன் இருந்ததால் அதற்கு மேல் அவன் அதை சொல்ல எண்ணவில்லை.

மேலும் வதனிக்கும் அவன் மேல் விருப்பம் இருப்பது போல தோன்றவில்லை , இருவருக்கும் எட்டு வயது வித்தியாசம் என பல காரணங்களால் வீட்டில் கூறும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறிவிட்டான்.

எதிர்பாரா வதனியுடனான அவனது திருமணம், அவனுக்கு கனவு போல இருந்தது.  அவளின் சம்மதம் எப்படி கிடைத்தது என்பதும் அவனின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

மலராத மொட்டினை, மனமெனும் செடியில் இருந்து பறிக்க எண்ணி….., பறித்தாலும் மீண்டும் வளரும் என விட்டு விட்டவன்.  மரணம் வரை மறக்க முடியாதவள் அவள் என்பதால் மறக்க நினைத்ததை மறந்துவிட்டான்.

ஆனால், அந்த மொட்டு மலர்ந்து மணம் வீசுமா….. எனத் தெரியாத போதும்,  நீரூற்றி வளர்க்க, அவன் மனம் தீர்மானித்து விட்டது.

 

திருமணம் முடிந்து, குல தெய்வ வழிபாடு, பின்பு விருந்து என அடுத்தடுத்த நிகழ்வுகளில் நேரம் போக, மணமக்களைச் சுற்றி கூட்டம் இருந்த வண்ணம் இருந்தது.  பெரியவர்கள் அனைவரும் அசீர்வாதம் செய்து திருநீறு பூசியதில் மாலையாகி விட்டது.

ராஜம் மணமக்களை தனது அறைக்குள் வருமாறு அழைக்க,

“ரகு…… உனக்குன்னு வதனி வந்துட்டா….. இனி ரெண்டு பேரும் ஒருத்தவங்கள மத்தவங்க புரிஞ்சுக்கங்க…… திடீர்னு முடிவானதால அவ மனசு மாறுற வர நீ பொறுமையா இருக்கணும்

“சந்திரா…. நீ இன்னும் சின்ன புள்ள இல்ல….. அதுனால பாத்து பக்குவமா நடந்துக்க….

“ரகு…. மூனா நாளு நல்லாருக்கு, அன்னைக்கு அவளுக்கு மாங்கல்யத்த…. செயின்ல மாத்தி போடுறோம்….. அவளுக்கு லீவு இல்ல….. அதனால அவ திருச்சி போயிருவா….. அவளுக்கு படிப்பு முடியற வர அங்கதான் இருக்கணும்…. அதனால…. உங்க தோது பாத்து….. நீ எங்க இருக்கலாம்னு முடிவு பண்ணு….

இன்னிக்குல இருந்து ரகு ரூமுக்குள்ள தங்கிக்கோ, அவன்  ரூம்ல உன்னோட பொருளெல்லாம் வைக்கச் சொல்லிட்டேன்…. சந்திரா

சரியென்றவுடன் ஓய்வெடுக்குமாறு கூறி இருவரையும் அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார். அவளுடன் அறை வரை வந்தவன், 

“நீ ரெஸ்ட் எடு….. நான் வரேன்…, என்றுவிட்டு வெளியில் சென்று விட்டான்.

 

வதனியின் மீதான நந்தனின் ஆர்வமான பார்வையை கண்ட ராஜத்திற்கு சந்தோஷம்.  ஆனால், ஒரு சந்தேகம் அவருக்கு……. இது புதிதாக வந்த ஆர்வமல்ல…. என்பது.  அதையும் பேரனை அழைத்து நேரடியாகவே கேட்டார். முதலில் மறுத்தவன் பிறகு ஒத்துக்கொண்டான்.

 

தீபாவளி, பொங்கல் என விஷேசங்களுக்கு மட்டும் இங்கு வந்து செல்வாள் வதனி.  ரகு வழக்கம்போல இருந்தாலும் இரண்டரை ஆண்டுகள் போனதே தவிர வதனியிடம் மாற்றங்களைக் காண முடியவில்லை.

ரகு,  வதனியின் ஒட்டாத வாழ்வு நம்மால் தான் என எண்ணியதால் வந்த குற்ற உணர்வினால் ராஜம் மரணத்தை தழுவினார்.

தாயின் மரணம், ஹரிகிருஷ்ணனுக்கு இதய நோயைத் தந்தது.  அவரால் வழக்கம்போல செயல்பட இயலவில்லை.

ரகு, அது வரை சென்னையில் இருந்தவன், தந்தையின் உடல் நலம் கருதி ஊருக்கு வந்துவிட்டான்.  அவனின் நம்பிக்கைக்கு உரியவர்களை வர்க்கிங் பார்ட்னராக நியமித்து விட்டு அவன் சுந்தரமுடையான் வந்து ஓராண்டாகி விட்டது.

 

இரண்டரை ஆண்டு கழித்து இங்கு வந்து இனி தங்குவதாகச் சொன்ன மனைவியைக் காண ஆவலாக வந்தவனை வரவேற்றது அவனது மாமியாரும், மாமனாரும் மட்டுமே.

அதன் பிறகே, அவளிடமிருந்து வந்தது குறுஞ்செய்தி.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுத்த எண்ணிற்கு இன்று தான் முதன் முதலாக மெசேஜ் செய்திருக்கிறாள், அவனின் மனைவி.

மதிய உணவை உண்டு விட்டு அறைக்குள் சென்றவன்….

 

“எப்போ வரேனு சொல்லு….. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”, என மெசேஜ் செய்துவிட்டு…… நீண்ட நேரம்…. போனை பார்த்துக் கொண்டிருந்தவன்….. அவளிடமிருந்து ரிப்ளை வராததால்…..

“நீ தனியா வந்திருவனு தெரியும்….. இருந்தாலும் இனி அப்டிவிடறதா உத்தேசமில்லை”, என அனுப்பினான்.

நிலவைக் கொண்டு வா – 10

 

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனேஅனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

மாலை வேளையில் கிளம்பிய மகனைப் பார்த்திருந்த துர்கா,

“டீ குடிச்சுட்டு போப்பா

“சரிம்மா…. என்றவாறு ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான்.

அருகில், நிர்மலா தனது மகளுக்கு பாலை ஆற்றியபடி….

“என்ன நந்தா…… முகமெல்லாம் ப்ரைட்டா இருக்கு……

“அது எப்பவும் போல தான் இருக்கு, உன் கண்ணுல தான் எதோ ப்ரொப்ளம்”, என்றான் சிரித்தபடி, 

இருவருக்கும் ஒரே வயது, தூரத்து சொந்தம், சிறு வயது முதலே பழக்கம் என்பதால், அண்ணனின் மனைவியான பின்பும் ஒருமையில் இருவரும் பேசிக்கொள்வர்.

“எங்கிட்ட சொல்லு நான் உன் அண்ணங்கிட்ட கூட சொல்ல மாட்டேன்

“யாரு…. நீ……. வீட்டுக்குள்ள எத்தன எறும்பு வந்துட்டு போச்சுன்னு கூட அவங்கிட்ட சொல்லுவனு தெரியும் எனக்கு….

அது வரை அங்கு டாய்சுடன் விளையாடிய தன்யா அவனிடம் வந்து,

“ரகுப்பா….. என்னோட வீடியோ கேம அம்மா ஒழிச்சு வச்சுட்டங்க, வாங்கி தாங்க…. இப்பொ”, என்றபடி மடியில் அமர்ந்தாள்.

“ஏய்…. பச்ச புள்ளயோட விளையாட்டு சாமான எடுத்து…… ஏன் ஒழிச்சு வைக்கிற….. அவளுக்கும்……. பொழுது போகணும்ல….”, என்றான் மகளுக்கு ஆதரவாக….

“உன் பொண்ணுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத…… சரி பேச்ச மாத்தாம… என்ன விசயம்னு சொல்லு……

“ஒண்ணுமில்ல.. எப்பவும் போல தான் இருக்கேன்….., என்றான் அவனின் தாயார் குடித்த டீயை குடித்தபடி…..

“உன் மாமியார், மாமனார பார்த்தவுடனே…… ப்ரைட்டாகிட்டியோ

“சரி அப்டியே வச்சுக்கோ….., என்றவன் 

இன்னும் சற்று நேரமிருந்தால் அவ்வளவு தான்….. கிண்டி கிழங்கெடுப்பாள்….. என எண்ணியவனாய்

“அம்மா நா டவுன் வர போயிட்டு வரேன்…., என்றபடி மடியில் இருந்த அண்ணன் மகளை இறக்கி விட்டான்.

“எனக்கு வேற வீடியோ கேம் வாங்கிட்டு வாங்க ரகுப்பா….

“சரிடா தங்கம்….”, என்றபடி கிளம்பினான்.

 

வந்திருந்த குறுஞ்செய்தியை பார்த்தவள் மனதில் இன்ப படபடப்பு.

“ஃப்ரீ ஆனவுடன்… மெசேஜ் பண்ணு….. கால் பண்றேன்….”, என அனுப்பியிருந்தான்.

 

அலுவலகத்திலிருந்து ஹாஸ்டல் வந்தவள், குளித்து இரவு உணவை முடித்துவிட்டு….. அவளவனின் போனுக்காக… காத்திருந்தாள்.

ரகுவின் மெசேஜ் பார்த்தவுடன், இரவு எட்டு மணிக்கு மேல் ஃப்ரீ என டெக்ஸ்ட் செய்திருந்தாள் அவனுக்கு.

‘என்ன பேசுவான்…… எதுவும் கேட்பானா…. இல்ல….. ஒன்னும் பிரிய மாட்டீங்குது… சைலண்டா இருந்தவன்…. திடீர்னு….. வயலண்டா அர நாள்ல மாறுனா….. சின்ன என் இதயம் தாங்குமா?…. படபடப்பா…. மனசெல்லாம் என்னவோ மாதிரி இருக்கே…… இத்தன நாளு நல்லா தான் இருந்தேன்……. 

இன்னிக்கு எனக்கு என்னாச்சு… மண்ட  காயுது…… ஐயா.. ராசா….. சீக்கிரமா கால் பண்ணி…… என்ன விசயமா பேச போறேனு சொல்லிரு முதல்ல…… இல்ல நானு காலி…….’

கால் வந்தவுடன்… சிடுமூஞ்சி காலிங் என திரையில் தோன்றியதை பார்த்தவள்,  ‘ஐய…. மொதல்ல அவனுக்கு பேரு போனுல மாத்தணும்’ என எண்ணியபடி அட்டெண்ட் செய்தாள்.

“ஆஃபீஸ்ல இருந்து வந்தாச்சா…?”

“ம்… வந்துட்டேன்…”

“என் நம்பர் வச்சுட்டே…. இத்தன நாளு… ஒரு டெக்ஸ்ட் கூட பண்ணலல்ல….”

“அதான்…. இன்னிக்கு பண்ணேன்ல”

“ரொம்ப சீக்கிரமா பண்ணிட்ட…, சரி அத விடு, இன்னும் உனக்கு எத்தன நாள் அங்க வேல இருக்கும்……”

“நாளைக்கு முடியும்….. நாள மறுநாள் நான் வாரேன்…..”

“நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கு….. இப்பொ….. சாப்டுட்டு தூங்கு….. நான் வெளியில இருக்கேன்…… முடிஞ்சா வீட்டுக்கு போயிட்டு வாட்ஸ் அப்ல… டெக்ஸ்ட் பண்றேன்….. பை….”, என வைத்துவிட்டான்.

‘நான் ரொம்ப லேட்டா டெக்ஸ்ட் பண்ணத கேக்கவா கால் பண்ண…… போடா…ங்க… என்னோட நம்பரு நீ வச்சிருந்தல்ல… அப்ப நீ இவ்வளவு நாள்ல டெக்ஸ்ட் பண்ணிருக்கலாம்ல…… எனக்கு…..’

என நினைத்தவாறு….. பதினைந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாட்ஸ் அப்பில் விழித்து, மீண்டும் புலம்பி என அவளது நினைவு முழுவதும் அவனானான்.

 

சரியாக பத்தரை மணிக்கு அவன் அனுப்பியிருந்ததை பார்த்தவளுக்கு……. ஆச்சர்யம்……

இவர்களின் தலை பொங்கலுக்கு, பிங்க் கலர் காட்டன் சில்க் புடவை, க்ரீன் ப்ளவுஸ் அணிந்து, வீட்டு முற்றத்தில் பொங்கல் பானையில் அரிசி போடும் போது எடுத்த அவளின் புகைப்படம்… அத்தனை அழகாக அவளுக்கே தெரியாமல் அதை எடுத்திருந்தான். அதன் கீழ்……………

எனது வாழ்வின் வசந்தமான பேபி டாலை வரவேற்கிறேன் என அனுப்பியிருந்தான்.

‘பேபி டால்’ என்பது அவனின் மிகச் சிறு வயது அழைப்பு. அவனுக்கு அவளைக்காணும்போது டால் போல இருப்பதால் அப்படி அழைப்பதாக அவன் அத்தையிடம் சொல்லியிருக்கிறான்.

‘அத்த, நம்ம வதனிய பார்த்தா பொம்ம மாதிரி இருக்கால்ல…..’ , அதற்கு அவன் தாய் துர்கா, குழந்தைய பொம்மைனு எல்லாம் சொல்லக்கூடாது எனக்கூற அதை அப்பொழுது ‘பேபி டால்’ என மாற்றிக்கூற ஆரம்பித்தான்…… பிறகு அவள் சற்று வளர்ந்ததும்…. அப்படி அழைத்ததை விட்டுவிட்டான்.

ரகு : “ஹாய் ஏஞ்சல்”

வதனி : “என்ன?”

ரகு : “சாப்டாச்சா…”

வதனி : “ம்…. நீங்க”

ரகு : “ஆச்சு…. ம்ம்…. என்ன புடிச்சு தான கல்யாணம் பண்ண….”

வதனி : “ம்…”

ரகு : “ம்ம தவிர வேற வார்த்த பேசற ஐடியா இல்லயா?”

வதனி : ‘கடவுளே என்ன சொல்ல…… “சொல்லுங்க”

ரகு : “நீ தான் சொல்லணும்”

வதனி : “என்ன சொல்ல?”

ரகு : “அப்பத்தா கம்பெல் பண்ணாங்களா?”

வதனி : “இல்ல”

ரகு : “நீ சரினு சொன்னது…. எனக்கு இன்னும் நம்ப முடியல”

வதனி : “ஏன்?”

ரகு : “நீயே யோசி”

வதனி : “நீங்களே சொல்லிருங்க….”

ரகு : “கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, அதற்கு அப்புறமும் சரி….. என்னைய நீ கண்டுக்கவே இல்லல…. அதான்…”

வதனி : “மாமா பையன்னு மட்டும் யோசிச்ச எங்கிட்ட… அல்ரெடி மாரேஜ் வேற பொண்ணோட ஃபிக்ஸ் ஆகியிருந்த உங்கள கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா….. நான் என்ன செய்வேன்?”

ரகு : “அதுக்காக…….. ரெண்டரை வருஷமா?”

வதனி : “இனி இவர் தான் உன் ஹஸ்பெண்ட்னு சொன்னவுடனே, ஏத்துக்கற மாதிரி லைஃப் ஸ்டைல்ல…. இப்போ நாம யாரும் வாழல…. அதுக்கு தான் அம்மாச்சிகிட்ட டைம் கேட்டேன்…. ஆனா அது இவ்வளவு நாளாகும்னு அப்ப எனக்கு தெரியாது…..”

ரகு : “அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?”

வதனி : “ஊருக்கு வந்து, மாமாகிட்ட பேசிட்டு அப்றமா முடிவு பண்ணலாம்னு நினச்சேன்”

ரகு : “அப்பவும் நான் உங்கண்ணுக்கு தெரியல?”

வதனி : “ஐயோ, அப்டில்ல…. பெரியவங்க கிட்ட கேட்டுட்டு தான் எதுவும் செய்யணும்….. நீயா எதுவும் டிசைட் பண்ணக்கூடாதுன்னு அம்மாதான் சொன்னாங்க…. அதனாலதான்….”

ரகு : “சரி வேற என்ன சொன்னாங்க?”

வதனி : “அவங்க நிறய சொல்லிட்டே இருப்பாங்க…. நீங்க வேற எத கேக்குறீங்க…?”

ரகு : “உனக்குன்னு யோசனை எதுவும் இல்லயா?”

வதனி : “இருக்கு… ”

ரகு : “அத சொல்லு”

வதனி : “CA முடிச்சிட்டு…. ஜென்ரல் ப்ராக்டிஸ், டேக்ஸ் கம்ப்ளையன்ஸ், அட்வைஸ் அன் ப்ளானிங்க்னு…… ஐடியா இருக்குது….. ”

ரகு : “குட்… இத தான் கேட்டேன்….”

“வேற….”

வதனி : “அவ்வளவு தான்”

ரகு : “சரி… ஒரு செல்ஃபி அனுப்பு”

வதனி : ‘இது என்னடா சோதனை’ என யோசித்தவள்

ஹாஃப் ஸ்லீவ் லைட் சாண்டல் பேஷ் யெல்லோவ் பிங்க் ஃப்ளார் டிசைன் நைட்டியில் தலை முடியை தூக்கி போட்ட கொண்டையுடன், உறக்கம் வரவா எனக் கேட்டு விழியின் வாசலில் நிற்க, தனது ஹாஃப் சைஸ் செல்ஃபியை எடுத்து அனுப்பினாள்.

ரகு : “தூக்கம் வந்துருச்சா? சரி நீ போயி தூங்கு…”

வதனி : ‘இத எங்கிட்ட கேட்ருந்தா….. நானே சொல்லியிருப்பேனே……. அதுக்கு எதுக்குடா செல்ஃபி’ “சரி”

ரகு : “குட் நைட்”

வதனி : ‘குட் நைட்”

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது

என்ற பாடலின் வீடியோவை அவளுக்கு அனுப்பிவிட்டு உறங்க முயற்சி செய்தான்……… ரகுநந்தன்.

அவனனுப்பிய வீடியோவை கண்ணில் உறக்கத்துடன் பார்த்தவளின்….., கண்களை விட்டு தூரம் போனது உறக்கம்.

 

சரியாக உறங்காததால் உண்டான அயர்வு உடலில் தெரிந்தாலும், அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள் வதனி.

 

ரகுநந்தன், காலையில் இறால் பண்ணை, நர்சரி பிறகு மில் என அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு, தனது தந்தையிடம் வந்தவன்,

“அப்பா அரியலூர்ல வேல இருக்கு, அத முடிச்சுட்டு அப்டியே வரும்போது வதனிய கூட்டிட்டு வந்துறேன்…..”

“சரிப்பா… புது கம்பெனி எப்டி போகுது?”

“சிக்ஸ் மந்த்ஸ்ல ஒன்னும் தெரியாதுப்பா….. ஒன் இயர் ஆனா தாம்பா சொல்லா முடியும்…..”

“ரொம்ப அலைய வேணாம்…. இங்க நான் பாத்துக்கறேன்…. நீ அங்க வேலய முடிச்சுட்டு மெதுவா வா…. ஒன்னும் அவசரமில்ல….. பாத்து போயிட்டு வா…… அங்க போயிட்டு போன் பண்ணு”

 

தனது தாயிடமும், வதனியின் பெற்றோரிடமும் கூறிவிட்டு மதிய உணவிற்குப் பின் வீட்டிலிருந்து கிளம்பினான்.

மதுரையில் இருந்த வேலையை முடித்துவிட்டு, திருச்சி வரும்போது…… நேரம் இரவைத் தொட்டிருந்தது. 

ஆறரை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வதனி கிளம்புவதற்குள் அவளின் அலுவலகம் வந்திருந்தான்.  அங்கு வந்தவன் அவளின் வருகைக்காக அவனது BMW வில் காத்திருந்தான்.

அவளின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் செய்தான்.

“வயிட்டிங் அட் யுவர் ஆஃபீஸ் என்ட்ரென்ஸ்”

பணிகளை முடித்துக்கொண்டு கிளம்பியவள் தனது பொருட்களுடன் வெளிவரும்போது சைலண்ட் மோடில் இருந்த மொபைலை நார்மல் மோடுக்கு மாற்றினாள்.

தன்னவனிடமிருந்து வந்த மெசேஜை ஆவலாக ஒபன் செய்தாள்….. 

ஒரு கனம் நின்றவள்….. வாட்டர்கேனில் இருந்த நீரை எடுத்து குடித்தாள்….., ‘இன்ப அதிர்ச்சினு தெரியுமா? அந்த சின்ன இதயத்துக்கு…. சர்ப்பிரைஸ்னு சொல்லி…. என்ன சாகடிச்சிருவான் போலயே……’ தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.

பர்பிள் நிற சந்தேரி எம்பிராய்டரி போட்ட சல்வாரில், அவனது BMWவை நோக்கி வந்து கொண்டிருந்த, தன்னவளை ஆசைதீர ஆவலோடு பார்த்திருந்தான்……

நிலவைக் கொண்டு வா – 11

 

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆடைகொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ
இமைகளும் உதடுகள் ஆகுமோ
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அவனருகில் வந்து அமர்ந்தவளை, அவனுடைய அக்மார்க் சிரிப்புடன், பொக்கே கொடுத்து வரவேற்றான்.

“வெல்கம் மை ஏஞ்சல்…!”

‘என்னா சிரிப்பு….. கண்டிப்பா பேரு மாத்தணும் இன்னிக்கு…… CMஐ மறக்காம PMனு மாத்திருவோம்…. (சாரி…. உங்களுக்கெல்லாம் புரியாதில்ல….. சிடுமூஞ்சிய….. புன்னகை மன்னன்னு மாத்த போறேன்……)’

“தாங்க்யூ”, என்றவளிடம்

“என்ன குடிக்கிற, ஹாட் ட்ரிங்க்ஸ் ஆர் ஜுஸ்”

“ஜூஸ்….”, என்றவுடன்…… சற்று ரிலாக்சாக அமர்ந்து குடிக்க ஏதுவான இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தபின், அவளின் ஹாஸ்டல் இருக்கும் வழியில் வண்டி சென்றது.

“எங்க போறீங்க?”

“உன் ஹாஸ்டலுக்குத்தான்……. போயி வகேட் பண்ணிட்டு வா…..”

“இன்னிக்கு நைட் ஊருக்கு ரிடர்னா….?”

“இல்ல….”

“வகேட் பண்ணிட்டா…….. அப்ப நான் எங்க தங்குறது…? நைட்ல…..”

“அப்பவும் உன்னப்பத்தி மட்டும் யோசிக்ற…..”, என்றான் சிரித்தபடி

அதற்குள் அவளது ஹாஸ்டல் வந்திருந்தது.  ‘இவனுக்கு நம்ம ஹாஸ்டல் இதுன்னு நாம சொல்லலயே? கீத் சொல்லிருக்குமோ?’

அவளுடன் அவனும் வர….. சற்று தயங்கியவள், 

“நீங்க விசிட்டர்ஸ் ரூம்ல வயிட் பண்ணுங்க…. நான் வார்டண்ட சொல்லிட்டு….. ஃபிஃப்டீன் மினிட்ல வரேன்”

விசிட்டர் அறையில் இருந்த சேரில் ரகுவை அமரச் செய்துவிட்டு, அவளின் அறைக்குச் சென்றாள்.

பத்து நிமிடத்தில் அவளை ரெஃப்ரெஷ் செய்துகொண்டு, அவளின் இரு நாட்களுக்கு மட்டும் தேவையான லக்கேஜுடன் வார்டன் அறைக்கு சென்றாள்.

“வார்டன்…. இன்னிக்கு மார்னிங் உங்கட்ட, நாளைக்கு வகேட் பண்றதா சொன்னேன்…. ஆனா வீட்ல இருந்து இப்பவே வந்துட்டதால, நான் இப்போ வகேட் பண்ணிக்கிறேன்….”

“வீட்ல இருந்து யாரு வந்திருக்கா….?”, என இயல்பாகக் கேட்டபடி, அவளுடன் விசிட்டர் ரூமை நோக்கி வார்டனும் வந்தார்.

“என் ஹஸ்பன்ட்”

“என்ன…… ? உனக்கு மேரேஜ் ஆகிருச்சா…..”, அதில் டன் கணக்கில் ஆச்சரியம் இருந்தது.

“ஆகிருச்சு……”

“எங்கட்டல்லாம் சொல்லவே இல்ல”, என்றபடி வந்தவரிடம் ரகுநந்தனை கணவனென்று அறிமுகம் செய்தாள்.

அவனும் மரியாதை நிமித்தமாக ஓரிரு வார்த்தைகள் வார்டனிடம் பேசிவிட்டு, வதனியுடன் கிளம்பிவிட்டான்.

 

ரெஃப்ரெஷ் செய்து பளிச்சென்று இருக்கும் தனது மனைவியின் முகத்தில் புதிதாக குடிவந்திருந்த குழப்பத்தைக் கண்டவன்…….

“ஏஞ்சலுக்கு என்ன குழப்பம்?”

“ம்….. ஒன்னுல்ல!”

“அப்ப நிறைய இருக்கு போலயே!……, என்னாச்சு வதனி?”

“இப்ப நாம எங்க போறோம்….?”

“வீட்டுக்கு”

“வேற வழியில போறீங்க?”

“ஆமா உன்ன கடத்திட்டு போறேன்”

“உண்மைய சொல்லுங்க”

“சிறுகனூர்ல ஒரு வீடு வாங்கிருக்கோம்….. அங்கதான் இப்போ போறோம்”

 

திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் சிறுகனுர் நோக்கி பயணித்தவர்கள், வீட்டை அடையும் போது எட்டு மணி. அவளை அழைத்துக் கொண்டு வீட்டைத் திறந்தபடியே யாருக்கோ கால் செய்திருந்தான்.

ஐந்து நிமிடத்தில் அங்கு வந்த ஆண், பெண் இருவரையும் சங்கர், செண்பகம் என வதனியிடம் அறிமுகம் செய்தான். அவர்களின் பராமரிப்பில் வீடு இருப்பதாகவும், சமையல் வேலைகளை செண்பகம் கவனிப்பதாகவும் கூறினான்.

நைட்டுக்கு எதாவது சிம்பிளா செய்திரு செண்பகம், என்றுவிட்டு அங்கிருந்த ரூமிற்குள் நுழைந்தான்.

ஹாலில் அமர்ந்த வதனி, ‘என்னடா நடக்குது இங்க’, என யோசித்தபடி போனில் மூழ்கி இருந்தாள். ஆனால், மனம் போனில் இல்லை.

அரைமணி நேரத்தில் செண்பகம் அவளின் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பிவிட்டாள்.  உடன் சங்கரும் கிளம்பினான்.

 

ஹாலில் போனுடன் இருந்தவளை பார்த்த ரகு,

“பசிச்சா சாப்டுறியா….?”

“இல்ல பசியில்ல…..”

“ஜூஸ் குடிச்சு டூ அவர்ஸ் ஆகுது….. இன்னுமா பசிக்கல….”

பேசியவாறு வெளி கேட்டை பூட்டிவிட்டு வந்தவன், அவளருகில் அமர்ந்தான்.

“என்னடா….. என்ன யோசனை?”

தலை கவிழ்ந்திருந்தவளை நோக்கிக் கேட்க, ஒன்றுமில்லை என்ற அவளது தலையசைப்பைக் கண்டவன்….

“வதனா….. என்ன பாரு….”

என்னவென நிமிர்ந்தவளை நோக்கி

“நான் உன் ஹஸ்பண்ட், அதனால் எங்கூட வந்ததுல எந்த உறுத்தலும் உனக்கு வேணாம், அது தவிர….. உங்க அம்மா, அப்பா, எங்க அம்மா, அப்பா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்….. எதுனாலும் எங்கிட்ட சொன்னாதான தெரியும்…. ஏன் இப்டி அப்செட்டா இருக்க….”

கண்களில் குழப்பத்துடன் நிமிர்ந்தவளை, நானிருக்கிறேன் என்ன விசயமானாலும் என்னிடம் சொல்லு எனும் செய்தி அவனது விழிகளில் இருக்க கண்டவள்…. எப்படி சொல்ல எனத் தயங்க…..

“என் கூட வந்தது உனக்கு பிடிக்கலயா…?”

அவசரமாக இல்லை என மறுத்தவள்,

“எங்க வார்டன்… யாரு உன்ன பிக் அப் பண்ண வந்திருக்கானு கேட்டதுக்கு, ஹஸ்பண்ட்னு சொன்னேன். உனக்கு மேரேஜ் ஆகிருச்சானு ஆச்சரியத்தோட உங்கள வந்து நேரில பாத்து பேசிட்டு போனாங்க… அத பத்தி தான் யோசிச்சேன்…..”

“சரி யோசிச்சு என்ன முடிவுக்கு வந்திருக்க…”

“இல்ல…. என் ஃப்ரெண்ட்ஸ் யாருக்கும் எனக்கு மேரேஜ் ஆனது தெரியாது…. இது வர யாருக்கிட்டயும் நான் சொல்லல…..அத பத்தி இவ்வளவு நாள் யோசிக்கல…. 

இன்னிக்கு வார்டன் கேட்ட மாதிரி இன்னும் நிறய பேரு கேப்பாங்கள்ள…. மேரேஜ் அனெக்ஸ்பெக்டட நடந்ததால தான சொல்லல அப்டினு யோசிச்சேன்…. உடனே, அன்னிக்கு அம்மாச்சி கூட பேசுனது எல்லாம் ஞாபகத்துல வந்துச்சு……. அதான்…”

கலங்கிய கண்களுடன் பேசியவளைக் கண்டவன், அவளிடம் டவலைக் கொடுத்து கண்களை துடைக்கச் சொன்னான்……

“சரி….மிச்சத்த அப்றம் வந்து யோசிப்போம்…. எனக்கு செம பசி…..  இப்ப வந்து சாப்டுவியாம்…..”, என்றவனிடம் சரி எனத் தலையாட்டியவள் அவனுடன் எழுந்தாள்.

 

இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு எழ, நார்மல் மோடுக்கு வந்த வதனி, இரவு உடையை அணிந்து விட்டு படுக்க ஆயத்தமானாள்.

அவளிடம் ஒரு கண்ணும், டிவியில் ஒரு கண்ணுமாக ரகு பார்த்திருந்தான்.

“வதனி…. உனக்கு தூக்கம் வந்தா ….. அந்த ரூம்ல போயி தூங்கு”

“நீங்க தூங்கலயா?”

“இன்னும் கொஞ்சம் நேரமாகும்”

“குட் நைட்”, என்றவள் ரூமை நோக்கி சென்றாள்.

குட் நைட் என்றவாறு அவளையே பார்த்திருந்தான்.

 

வெகுநேரம் கழித்து உறங்கச் சென்றவன், வளர்ந்தாலும் வதனி இன்னும் சிறு பிள்ளைதான் என எண்ணியவாறு, அவளுடன் படுத்து உறங்க முற்பட்டான்.

 

வழக்கம்போல எழுந்து பயிற்சிகளை முடித்துவிட்டு, செண்பகம் கொடுத்த டீயுடன் அன்றைய தினசரியில் மூழ்கியிருந்தவனை

“குட் மார்னிங்க்”, என்ற குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

“குட் மார்னிங்” என்றவன் “நல்லா தூங்குனியா.. வதனி?”

“செம தூக்கம்…. படுத்ததுதான் தெரியும்…”

“இன்னிக்கு, இங்க நம்ம ஆஃபீஸ் போயிட்டு நான் ஈவ்னிங் தான் வருவேன்…. அது வரை…. ரெஸ்ட் எடு….”

“இங்க ஆஃபீஸா?”

“ம்…… சிக்ஸ் மந்த் ஆகுது….”

“எனக்கு இங்க போரடிக்கும்…. நானும் உங்களோட வரவா….”

“வித் ப்ளஷர்…. அப்ப லேட் பண்ணாம சீக்கிரமா கிளம்பு”

 

பத்து மணிக்கு அலுவலகம் சென்று, அவளை அவனது அறையில் அமரச்செய்து விட்டு, கையில் கம்பெனி சார்ந்த கணக்குகளை அவளிடம் கொடுத்துச் சென்றவன், மதிய உணவின் போது அவளுடன் வந்து உணவருந்தி விட்டு போனான், பிறகு மாலை நான்கு மணிக்கு வந்து கிளம்பலாம் என்றான்.

கணக்கு வழக்குகளை ஒரு மணி நேரம் பார்த்தவள் பிறகு பொழுது போகாமல் நேரத்தை நெட்டித்தள்ளினாள். பிறகு தாயுடனும், மாமியாருடனும் போனில் பேசினாள்.

இருவருமே, அவளைக் கிண்டல் செய்திருந்தனர்.  அவன் வேலனு வந்துட்டா அப்டிதான்னு உனக்கு தெரியாம, இப்டி போயி மாட்டிகிட்டியா என அவளைக் கலாய்த்திருந்தனர்.

‘இதுக்கு தான் வேணாம்னு….. தல சொல்லிருக்கு…. அது தெரியாம….வாண்டடா வந்து வம்புல மாட்டி கம்பா போனது…. வதனி தான், ஆனாலும் எடுத்துச் சொல்லிருந்துருக்கலாம் இந்த PM’ என எண்ணியபடி வீட்டிற்கு வந்தாள்.

“எங்கயாவது வெளில போவமா……?”

“இல்ல வேணாம்….. வீட்லயே இருப்போம்..”, என்றவள் கையில் போனுடன் அமர்ந்துவிட்டாள்.

 

ரகு, வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில், கடந்த முறை எடுத்து வந்து நட்டிருந்த மரம், வண்ணமலர் செடிகள் இருக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டான்.

மூன்று மாதத்திற்கான வளர்ச்சியைக் கண்டவன் அதை ரசித்திருந்தான். அரை மணி நேரமாக ஆளைக்காணாத ரகுவைத் தேடி அங்கு வந்த வதனி,

“என்ன பண்ணுறீங்க….”

“லாஸ்ட் டைம் கொண்டு வந்து வச்சது…. இதெல்லாம்…. எப்டியிருக்குனு பாக்க வந்தேன்…..”

அவளும் அங்கு வந்து பார்த்தவள், “இங்க நல்ல தண்ணினால எல்லாம் ஓரளவு வளந்திருக்கு…. ”

“ம்….. அதுவும் ஒரு ரீசன் தான்…”, என்றவன் “இரு…. போயி என் மொபைலை எடுத்துட்டு வரேன்…..”

“அப்டியே என்னோடதையும் எடுத்துட்டு வரீங்களா?”

“ம்..”, என்றபடி வீட்டிற்குள் சென்றிருந்தான்.

வித்தியாசமான பல செடிகள், கொடிகள் என அவ்விடம் அருமையாக காட்சி அளித்தது. அதை பார்த்தவாறு நின்றிருந்தவள், வீட்டிற்குள்ளிருந்து திரும்பி வந்தவனை, அவனது பார்வையை கவனிக்கவில்லை.

“ம்ஹூம்….. ம்ஹூம்…”, என்ற அவனது சப்தத்தில், 

என்ன என்பது போல் பார்க்க, கையில் அவளது மொபைலுடன் நின்றிருந்தவன்,

என்னதிது என அவளது மொபைலை காண்பித்து கேட்க, புரியாமல்…… ‘என்ன கேக்குறான்….. ஒன்னும் புரியலயே என யோசித்தபடி….’, அவனை பார்த்தாள்.

மொபைலை அவளிடம் தந்துவிட்டு, அவனது மொபைலில் யாருக்கோ கால் செய்தான்….

‘நாம ஒன்னும் பண்ணலயே…… யாருக்கு போன் பண்றான் இவன் ….’, என யோசிக்க, 

அதே நேரம் அவளது போனில் அழைப்பு வந்தது….. பார்த்தவள்…. ஒரு நிமிடம்…. ஒன்றுமே பேச முயற்சிக்காமல்….. திரு திருவென விழித்தபடி….. அவனை பார்க்க…..

“நான் உனக்கு சிடுமூஞ்சியா….?”

“ம்….. அது முன்னாடி ஸ்டோர் பண்ணது….. இப்ப இல்ல”, என மிகக் குறைந்த டெசிபலில் அவள் கூற…..

“அப்ப சிடுமூஞ்சி….. இப்ப….?”

“ம்.. ஹூம்….”, என்றபடி தலை குனிந்தபடி அங்கிருந்து வீட்டிற்குள் சென்றாள்.

 சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் வந்தவன், அவளைக் ஹாலில் காணாமல்….. கிச்சன் சென்று பார்த்தான்….. அங்குமில்லை….. ரூமில் படுத்திருந்தவளை பார்த்தவன், 

“வதனி…”

“ம்…..”

“ஏன் இப்போ வந்து படுத்திருக்க…..”

“சும்மா தான்…..”

அவளருகில் வந்தவன் அவளைத் தன் இருகைகளில் தூக்கினான்.  திமிறியபடி இறங்க முயற்சித்தவளை விடாமல், கைகளில் ஏந்தியபடி ஹாலுக்கு வந்தவன் அவளுடன் சோபாவில் அமர்ந்தான்.

அவனது மடியில் கண்களை இறுக மூடியிருந்தவளை புன்னகையோடு பார்த்தவன்…… “வதனி….” என மெதுவாக அழைத்தான்.

நிலவைக் கொண்டு வா – 12

 

கண் மீதுல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
மனசுல பூங்காத்து
நீ பார்க்கும் திசையில் வீசும் போது
நமக்குனு ஒரு தேசம்
அதில் இருவரும் சேர்ந்து ஒன்னா வாழ்வோம்
கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட

 “வதனி….” எனும் ரகுநந்தனின் அழைப்பில், அவன் மடியில் இருந்து எழுந்தவளை விடாமல், அமர வைத்து இருகைகளுக்குள் அவள் இருக்குமாறு அணைத்திருந்தான்.

அவனழைப்பில் இளகிய நெஞ்சம் பதில் பேச நினைக்க, அவன் அணைப்பு அவளின் இந்திரியங்களுடன் இன்னிசை மீட்ட, வெட்கத்துடன் “ம்” என்றாள்.

 “சிடுமூஞ்சினு என்ன நீ போன்ல சேவ் பண்ணி வச்சிருக்கறத பாத்து, நான் தான் கோவபடணும், இல்ல பேசனும்….  

ஆனா நீ எங்கூட பேசாம…. ரூம்ல போயி படுத்தா என்ன அர்த்தம்….. ம்….” , என அவளின் காதருகே வந்து, அவன் பேச

அவள் காதுமடலைத் தீண்டிய, அவனுடைய மீசையின் குறுகுறுப்பில் சிலிர்த்தவள், செல்லம் கொஞ்சும் குரலில், “அத மாத்திட்டேன்…. அப்பவே”, என்றாள்.

“அட சொல்லவே இல்ல….. என்னனு மாத்திருக்கா…..”

“PMனு மாத்திட்டேன்”

“பாசக்கார மச்சானா?”

“இல்ல…..” ‘அட அப்டி கூட வச்சுக்கலாம்ல…’

“ரகுநந்தன்ற பேரு உனக்கு பிடிக்கலயா?”

“பிடிக்குமே!”, என இலகு குரலில் கூறியவள், அவன் மடியிலிருந்து எழ முற்பட….

“உக்காரு வதனா…..”, ஏக்கமான மெல்லிய குரலில் அவளை இறுக அணைத்தபடி அவன் கூற

“உங்கள பாக்க முடியல…. அதான்…”

“அவ்வளவு மோசமாவா இருக்கேன்….”, என கிண்டல் குரலில் சிரித்தபடி அவளைச் சீண்ட……

“போங்க…..”

“இப்பதான் பக்கத்துலயே வர ஆரம்பிச்சுருக்கேன்….. உடனே….. போங்குற…..”

“அத்தான்……ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க……”

“பொண்டாட்டிய கிண்டல் பண்ணாம வேற யாரப் பண்றது..?”

“நான் அழுதுருவேன்…..”, என வடிவேல் பாணியில் அவள் கூற, அவன் சிரித்தபடியே…..

“இப்பொ தான் ஃபர்ஸ்ட் டைம் அத்தான்னு சொல்ற”, என்றவன் அவளது ஒரு புற கன்னத்தில், அழுந்த தன் முதல் இதழ் பதித்தலை செவ்வனே செய்திருந்தான், அவள் கன்னச் சிவப்புடன்….. தவித்திருந்தாள்.

மச்சான் என அழைத்து வந்தவள், திருமணத்திற்கு பிறகு அவனிடம் இலகுவாக பேசாமல் சற்று விலகியே இருந்தாள்.  அதனால் அவனை அழைத்தது இல்லை. இன்றுதான், அவளுக்கு அதற்கான வாய்ப்பை கொடுத்திருந்தான்.

“சரி விசயத்துக்கு வரேன்….. கமிங் சாட்டர்டே…. திருச்சி கஜலக்ஷ்மி ஹோட்டல், தங்கம் கிராண்ட் ஹால்ல உன்னோட ஃப்ரண்ட்ஸ், கொலீக்ஸ், சென்னை, திருச்சி ப்ரான்ஞ் நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃப் எல்லாருக்கும், ஒரு பார்ட்டி ஆஃப்டர்னூன் லன்ச்சோட அரேன்ஞ் பண்ணிருக்கேன்….. உன் சைட்ல எத்ன பேரு வருவாங்கனு பாத்து சொல்றியா?”

“ம்…”, என்றாள்

“உனக்கு ட்ரெஸ் எதாவது வாங்கணும்னா இன்னிக்கு போயி வாங்கிட்டு வந்திரலாமா?”

“இல்ல…. நாளைக்கு போவோம்….., உங்களுக்கு நாளைக்கு வேல எதுவும் இருக்கா?”

“இல்ல….. , இன்னிக்கு எல்லாம் முடிச்சிட்டேன்…., பார்ட்டிக்கு எத்ன பேரு வருவாங்கனு சொன்னா, நம்ம ஸ்டாஃபே எல்லாம் பாத்துப்பாங்க…..

என் மொபைல்ல… பார்ட்டி கார்ட் டிசைன் பண்ணிருக்கேன்….. உனக்கு அனுப்பி விடுறேன்….. யாருக்கெல்லாம் நீ சொல்லணுமோ….. சொல்லு…. அனுப்பறதுனாலும் அனுப்பு”, என்றவாறு, ஒரு கையால் அவளை அணைத்தபடி, மறுகையால் அவளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கார்டை செண்ட் செய்தான்.

“அத்தான்….. நான் இப்டி இருந்தா எப்டி ஃப்ரண்ட்ஸ்கு இன்வைட் பண்ணுவேன்…”

அவளின் வசதிக்காக அவன் மடியிலிருந்த அவளை, அவனருகில் அமர வைத்தவன், அவன் வசதிக்காக அருகில் அமர்ந்திருந்தவளின் தோளை ஒரு கையால் அணைத்தவாறு,  “கேரி ஆன்…..”, என்றபடி மறுகையில் இருந்த அவனது மொபைலில் மூழ்கினான்.

 

வதனி, அவளின் பள்ளி, கல்லூரி பருவ நெருங்கிய தோழமைகள் மற்றும் ஹாஸ்டலில் இருக்கும்போது நல்ல பழக்கமானவர்கள் என எண்பது நபர்களை இன்வைட் செய்து விட்டு, ரகுவிடம் கூறினாள்.

ரகுவின் இரு அலுவலகங்கள் சார்பில் நானூறு நபர்களை அழைத்திருந்தான்.

 

அடுத்த நாள் அவளுக்கு தேவையானவற்றை எடுத்தவன், அவனுக்கும் வேண்டியதை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, மதிய உணவிற்குபின் மூவிக்கு செல்லலாம எனக் கேட்டான்.  

அவளின் முகம் சொன்ன செய்தியை, அவள் கூறும் முன் உணர்ந்தவன்,  வீட்டிற்கு அவளுடன் திரும்பிவிட்டான். 

 

ஃபுல் ஸ்லீவ் ஜோத்புரி ட்ரெடிஷனல் ஷூட்டில் ரகுநந்தனும், டொமட்டோ ரெட் நிற ஷிஃபான் ப்ராஸ்ஸோ டிசைனர் சாரியில் சந்திரவதனியும் பார்ட்டியில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்தனர்.

அவளின் மலர்ந்த முகமே, அந்நிகழ்ச்சி பற்றிய அவளின் நிறைவைச் சொன்னது, அவனுக்கு.

 

அடுத்த நாள் ஊருக்கு செல்லலாம் என ரகு கூறியதை நினைத்தவளுக்கு, அதற்குள் நான்கு நாட்கள் போனதே தெரியவில்லை என எண்ணினாள் .  

சிறுகனூரில் ரகுவுடன் தங்கியிருந்ததை அவள் மிகவும் ரசித்திருந்தாள்.  அங்கு குடியிருக்கும் ஆவல் மனதில் தோன்றியது. ஆனால், ரகுவிடம் இது சம்பந்தமாக மூச்சு விடவில்லை.

 

மாலையில் இருவருக்கும் டீ போட கிச்சனுக்குள் சென்றவள், அன்றைய தினத்திற்கு தேவையான காய்கறி, உணவுப்பொருட்கள் தவிர அதிகமாக இருப்பதை செண்பகத்திடம் எடுத்துக் கொள்ளுமாறு கூற எண்ணியவளாய், செண்பகத்திற்கு கால் செய்தாள்.  ரிங்க் போனது….

அந்த நேரம் அங்கு வந்த ரகு,

“மை ஏஞ்சல்…… என்ன பண்ணுது…..”

“டீ போடுறேன்….” என ரகுவிடம் சொன்னவள், “ஹலோ செண்பா, வீட்டுக்கு வரியா கொஞ்சம்…..?”, என போனில் பேசியவாறு, அங்கிருந்த எக்சஸ் திங்க்ஸ்ஸை ஒரு பேக்கில் எடுத்து வைத்தாள்.

செண்பகம் வந்தவுடன் ஹாலுக்கு சென்ற ரகு, மனைவியை பார்த்தவாறு அவள் கொடுத்த டீயைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“நைட்டுக்கு மாவு இருக்காம்மா… எதுவும் செய்யனுமா?”

“ம்…. மாவு இருக்கு…. நான் சட்னி வச்சிக்குறேன்….”

“நாளைக்கு எத்ன மணிக்கு ஊருக்கு போறீங்க?”

“காலைல கிளம்பிருவோம் செண்பா…..”

“காலைல சாப்ட எதுவும் வந்து செஞ்சு தரவாம்மா….”

“இல்ல இயர்லியரா கிளம்பறதால போற வழில பாத்துக்குறோம்…”

“அப்ப நான் கிளம்பவாம்மா….?”

“சரி நீ கிளம்பு…., இந்த காயெல்லாம் எடுத்துட்டு போயிறு, இட்லி மாவு மிச்சமிருக்கு பாத்திரத்துல… அதயும் எடுத்துக்கோ”

வதனி கொடுத்ததை வாங்கிய செண்பகம் அவள் கொடுத்தை வாங்கியபடி அங்கிருந்து கிளம்பினாள்.

சிறுகனூர் வந்த மறுநாள் முதல், இருவருக்கும் தானே சமையல் செய்து கொள்வதாகக் கூறியதோடு, அவளே அதை இன்று வரை செய்தாள்.

மளிகை பொருட்கள் வாங்குவது, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை பெருக்குவது போன்ற வேலைகளை மட்டும் செண்பகத்திடம் ஒப்படைத்து இருந்தாள்.

 

கிச்சன் வேலைகளை முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தவளின் அருகில் வந்தமர்ந்த ரகு,

“திங்க்ஸ் எல்லாம் வேணும்கிறத எடுத்து வச்சிரு….”

“எடுத்து வச்சுட்டேன்”

“காலைல இயர்லியரா கிளம்பினா பதினோரு மணிக்கெல்லாம் அங்க போயிரலாம்… சீக்கிரம் எழுந்திருவியா?”

“என் மாமியார் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, அவங்க தங்கம்…. ஆனா உங்க மாமியாரு வர்ஸ்ட்…. லேட்டானா…. முதல்ல என்கொயரி, அப்றமா….. பயங்கர அட்வைஸ்…… அப்டினு நான் கஷ்டபடுறதுக்கு…. சீக்கிரமா கிளம்பி……. காருல தூங்கிட்டே வந்துக்குவேன்”, என்றாள் முகத்தை சோகமாக வைத்தபடி.

சிரித்தவன், “ஏன் சொல்ல மாட்ட…. அவ்ளோ தானா…. இல்ல…. இன்னும் எங்க மாமியார் பத்தி….. எதுவும் இருக்கா….?”

“அப்பப்போ கருத்து சொல்லுவோம், அத கருத்தா… நோட் பண்ணிக்கனும்…. அத விட்டுட்டு….. இப்டி மொத்தமா கேட்டா…. சொல்ல முடியாது….”, என சிரித்தபடி அவள் கூற….

அவனுக்கும் அவளின் பேச்சு சிரிப்பை உண்டு செய்ய, வாய் விட்டு சிரித்தான்.

“சரியான கேடி டி நீ….”

“அப்டினா….”

“ம்…. அப்டிதான் கண்டுபிடி…..”

“ஆராய்ச்சில்லாம் எனக்கு அலர்ஜினு தான், நான் ஆர்ட்ஸ் எடுத்து படிச்சேன்….. சமூகம் என்ன கண்டு புடிங்குது…. நான் என்ன செய்வேன்…?”

“இப்டி பேசுனா ….. உன்ன விட்ருவோம்னு நினச்சியா…. அதெல்லாம் விடமாட்டோம்…. கண்டு பிடிக்கிற……”

“கரண்டினா புடிப்பேன்….. இந்த கண்டு பிடிக்கறதெல்லாம் எனக்கு தெரியாது”

“உன்ன இப்போ விடணும்னா…. PM னா என்னனு சொல்லு…. விட்டுறேன்”

“புன்னகை மன்னனத்தான்….. PMனு சொன்னேன்” , என்றாள் புன்னகைத்தபடி….

 “நீ ஏன் நேம ஸ்டோர் பண்ண மாட்டிங்கற…..”

“நேம் ஸ்டோர் பண்ணுவேன்…..ஆனா ரொம்ப க்ளோசானவங்க, இரிட்டேட் பண்றவங்க, இவங்களுக்கு மட்டும் நிக் நேம் வச்சு அத ஸ்டோர் பண்ணி வச்சுக்குவேன்”

“அப்ப நான் இரிட்டேட் லிஸ்ட்ல தான இருந்திருப்பேன்”

“ம்…ம்… அது முன்னாடி”, என்றாள்

“ஏண்டி…. அப்டி என்ன பண்ணுனேன்… உன்ன?”

“சொன்னா நீங்க என்ன பத்தி என்ன நினப்பீங்க…?… அதனால விட்ருவோம்”

“சும்மா சொல்லு….”

“வால் தாண்டி குதிச்சத பாத்துட்டு….. என்ன ரொம்ப சத்தம் போட்டீங்க ஒருநாள், அப்றம் சின்ன பசங்களோட நான் விளையாடும் போது அவங்க முன்னாடியே…. அவங்க கூட விளையாடற வயசா உனக்குனு, சத்தம் போட்டீங்க… அப்ப முகத்த…. சிடுசிடுன்னு வச்சிட்டு பேசுனதால தான் உங்களுக்கு அப்டி நிக் நேம் வைக்க வேண்டியதா போச்சு….”, என்றாள் சீரியசாக….

“இப்ப தான் பொறுப்பாகிட்டியே!”

“உங்கள கல்யாணம் பண்ணதில்ல இருந்து, கீத் எனக்கு செம ட்ரைனிங் குடுத்துட்டே இருக்காங்கள்ள….. அதான்…. ரொம்ப மாறிட்டு வரேன்…..”, என்றாள்

“அங்க வீட்ல தன்யா இருக்கா…. தெரியுமா…?”

“ம்…. அம்மா அன்னிக்கு பேசும்போது சொன்னாங்க….”

“வேற என்ன சொன்னாங்க?”

“பொறுப்பா நடக்கணும், பெரியவங்கள அனுசரிச்சு போகனும்னு…. இப்டி இன்னும் நிறைய சொன்னாங்க……, எதுக்கு கேக்குறீங்க”

“இல்ல…. நான் ஒன்னு கேப்பேன்…. மறைக்காம…. உண்மைய சொல்லணும்…. சொல்லுவியா…?”

“எத பத்தி….?”

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அப்பத்தா உங்கிட்ட என்ன கேட்டாங்கனு சொல்லு?” 

சற்று முகம் மாறியவள்,

“கண்டிப்பா சொல்லணுமா?”

“ஆமா”, என ரகு கூற, தயங்கியபடி சொல்ல ஆரம்பித்தாள் வதனி.

 

ராஜத்தின் கேள்வியால், எழுந்து நின்று யோசித்தவாறு…. நிதானித்தவள், எதிரில் அமர்ந்திருந்த ராஜத்தின் எதிர்பார்ப்பு மிகுந்த பார்வையைக் கண்டாள்,

“அம்மாச்சி ரெண்டு நாள்ல கல்யாணம்….. உடம்புக்கு ஏதும் உங்களுக்கு பிரச்சனையா?”, என்னன்னவோ பேசுறீங்க”, என அவரின் அருகில் சென்று தொட்டுப் பார்த்தாள்.

“நீ பேச்ச மாத்தாத….”

“நான் பேச்ச மாத்தல….. நான் கேக்குறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க முதல்ல… அப்புறம் நான் சொல்றேன்…. அந்த பொண்ணு என்னாச்சு……”

ராஜம், சென்னை சென்று காதம்பரியை மருத்துவமனையில் நேரில் கண்டது, மருத்துவர்களிடம் விசாரித்தது என எல்லாவற்றையும் கூறினார்.

“அப்பொ கல்யாணத்த நிறுத்த வேண்டியது தான…”, என்றவளின் வாயை வந்து அவசரமாக மூடிய, ராஜம்….

“நிறுத்திரலாம்…. நீ மாட்டனு சொல்லிட்டா…”, என்றார்.

நிலவைக் கொண்டு வா – 13

லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ

அடை மழையோ அனல் வெயிலோ

ரெண்டும் சேர்ந்த கண்ணோ

தொட்டவுடன் ஓடுறியே….. தொட்டவுடன் ஓடுறியே…..

ஏ… தொட்டாச்சிணுங்கி பெண்தானோ… 

தொட்டாச்சிணுங்கி பெண்தானோ

அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி

 

 

“என்ன அம்மாச்சி இது பிடிவாதம்”

“இது பிடிவாதம் இல்ல…. பிச்ச….. என்ன பாக்குற….”

“இல்ல அந்த பொண்ண புடிச்சு, கல்யாணம் வர வந்துட்டு, பொண்ணு மாறுனா….. அத எப்டி மச்சானால ஏத்துக்க முடியும்…?”

“ரகுட்ட, பொண்ணுக்கு முடியலனு சொல்லல….. ஆனா பொண்ணு அவ இல்ல… வேற பொண்ணு பாத்து….. அதே தேதில கல்யாணம்னு சொல்லிட்டேன்….”

“அதுக்கு அவங்க ஒன்னும் சொல்லலயா?”

“நீங்க பாத்து எது பண்ணாலும் என்னோட நல்லதுக்காகத்தான் இருக்கும்னு சொல்லிட்டான், எம்மேல அவ்வளவு நம்பிக்கை…..”, என்றார் சேலைத் தலைப்பில் கண்களைத் துடைத்தபடி…

‘அநியாயத்துக்கு நீ நல்லவனா இருக்கறதால, ஐ.நாவுக்கு அடுத்த செக்ரெட்டரி நீ தான்….’

“அவங்களுக்கு என்னக் கண்டாலே பிடிக்காது, சிடு சிடுன்னு பேசுவாங்க…..”

“அது உன் மேல இருக்கிற அக்கறையில…. எதாவது சொல்லிருப்பான்…. சிரிச்சுட்டே உன் கிட்ட சொன்னா என்னாகும்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும்…..”, அந்த இக்கட்டான நிலையிலும் அவர் இதழில் சிரிப்பு மின்னல் போல வந்து, மறைந்திருந்தது.

“அப்ப எந்த பொண்ணுனாலும் சரினு சொல்லிட்டா, வேற பொண்ணு பாத்திருக்கலாம்ல…..?”

“வெளியில போயி பொண்ணு கேக்க முடியாத நில இப்ப……, கேட்டா… பாத்த பொண்ணுக்கு என்னாச்சுனு கேள்வி வரும்…..

ஏன்னா…. ரெண்டாயிரத்து ஐநூரு பத்திரிக்கை அடிச்சு, சாதி ஜனம் எல்லாருக்கும் குடுத்தாச்சு…..

“கேள்வினு வந்தா என்ன? சொல்லிட்டு போக உண்மைய…..”

“அந்த புள்ள முடியாம இருக்கு இப்ப….., ஆனா அந்த ஆண்டவன் நினச்சா உடம்பு நல்லாகி, வேற வாழ்க்கையக் கூட வீட்ல அமச்சுக் குடுத்துருவாக….

நாம அவசரப்பட்டு வெளியில ஏதாவது சொல்லப்போக….. அது பின்னாடி தப்பா போயிரும்…. பொண்ணு பத்தி தப்பா இருந்தாலும், புறம் பேசக்கூடாது…. தாயி…..

பையனுக்கும் பிரச்சனைதான்…… எல்லார்கிட்டயும் போயி நாம எடுத்துச் சொல்ல முடியாது….. நரம்பில்லா நாக்கு, கண்டத விட்டுட்டு காணாததெல்லாம் கற்பனை பண்ணி பேசும்……. இவன் ராசி தான் பொண்ணுக்கு அப்டி ஆகிருச்சுனு கூட பேசுவாங்க… ”

“அம்மாச்சி, எனக்கும் அவங்களுக்கும் ஏஜ் டிஃபரன்ஸே அதிகமா இருக்கே?…. இப்பல்லாம் ஒரே ஏஜ்ல…. இல்லனா…. ஒன் ஆர் டூ இயர்ஸ் டிஃபரன்ஸ்ல தான மேரேஜ் பண்றாங்க”

“எட்டு வருஷமெல்லாம் பெரிய வித்யாசமில்ல சந்திரா, எனக்கும் உங்க தாத்தாவுக்கும் பதினஞ்சு வருஷ வித்தியாசம்…. ம்ம்…. என்ன கெட்டு போயிட்டோம்…

இன்னொன்னு, பொண்ணுங்களுக்கு ஒரு குழந்த பிறந்துட்டாலே….. வயச மீறி தெரிவோம்… அத…. புள்ள பெத்து கிழவி ஆகிட்டானு கிராமங்கள்ள கூட சொல்றதுண்டு…… ஆனா அம்பது வயசிலயும் ஆம்பளைங்க நல்லா தான் இருப்பாங்க… வயசு தெரியாது…

பதினெட்டு வயசு பொண்ணுக்கு இருக்குற புரிதல், முதிர்ச்சி இருவத்தியாறு வயசுக்கு மேல தான் பசங்களுக்கு வரும், அதனால வயச பெரிய விசயமா எடுக்கக் கூடாது.

என் பேரன் உன்ன நல்லா வச்சுக்குவான்… பொறுப்பா பாத்துக்குவான்….. நான் கேக்கனும்னு நினச்சத கேட்டுட்டேன். 

அவன நீ கல்யாணம் செய்துக்கிட்டா, உன் படிப்பு எல்லாம் எதுவும் கெடாது, நீ படிச்சு முடிச்சிட்டு மெதுவா வா….. சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்….. சரினு சொல்றதும், மறுக்கறதும்… உன் இஷ்டம் தான்…..”

“எனக்கு கோர்ஸ் முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்….”

“ரகுவும் ரெண்டு வருஷம் போகட்டும்னு தான் கல்யாணத்துக்கு பாக்குமுன்ன எங்கிட்ட சொன்னான்….

நான் தான் எனக்கு வயசாகுது, இந்த ஆத்தா சாகுறதுக்குள்ள உன் கல்யாணத்த பாக்கனும்னு….. அவன நச்சரிச்சேன்….. அப்புறம் வெளிநாடு போகுறதுக்கு முன்ன இங்க வந்தவன்…. பாக்குறதுனா பாருங்கனு சொல்லிட்டு போனான்….”, என பழையதை நினைத்தபடி பேசினார்.

“நாளைக்கு சொல்லவா அம்மாச்சி?”

“ம்…. இன்னிக்கு நல்லா யோசி……. நாளைக்கு காலைல, உங்க அப்பா, அம்மா, உன் மாமா, அத்த, ரகு எல்லாரையும் வச்சிட்டு நான் கேக்கும்போது உன் விருப்பத்த சொல்லு….. போ…. போயி படுத்து தூங்கு….”

‘வந்த தூக்கத்த….. இந்த அம்மாச்சி…. வார்த்தையாலயே விரட்டிட்டு …. போயி படுத்து தூங்காம்…. கிழவிக்கு…. இது கொஞ்சம் ஓவரா தெரியல…’, என நினைத்தவாறு அங்கிருந்து கிளம்பினாள்.

 

நடந்தது என்ன? பாணியில் ரகுநந்தனிடம் அன்றைய நிகழ்வுகளைப் பகிர்ந்தவள், அவன் முகம் பார்த்திருந்தாள்.

முந்தைய தினம் வரை எந்த முடிவுக்கும் வராதிருந்த வதனி, அன்றைய தினம் வந்து கூறிய சம்மதம், அவன் மட்டும் அறியாதது அல்ல, அங்கிருந்த யாரும் அறியாதது என்பதை அறிந்தவன்,  அப்பத்தாவின் சாதூர்யத்தை எண்ணி ஆச்சரியப்பட்டுப் போனான்.

அன்று தோன்றாத பல எண்ணங்களும், நினைவுகளும் வதனியின் பகிர்வால் தோன்றுவதை எண்ணியபடி அமர்ந்திருந்தான்.

 

பூமி அதன் சுழற்சி வேகத்தில் ஓடி வந்ததால், சூரியன் மறைந்திருக்க, தற்காலிக ஒளி மறைந்து, பிரபஞ்சத்தின் நிரந்தர இருள் இரவைப் பிரசவித்திருந்தது.

 

இரவு உணவிற்குபின், லேப்பில் வேலை செய்திருந்தவன் அதை ஷட்டவுன் செய்து விட்டு, ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் டிவி பார்த்திருந்தான்.

அதற்குள், இரவு வேலைகளை முடித்துக் கொண்டு… குளித்து விட்டு, ரெட் ஃப்ளோரல் டைப் பிங்க் நிற காட்டன் மேக்ஸியில் ஹாலுக்கு வந்த வதனி ஹாலில் இருந்த அவள் சார்ஜரை எடுக்க வர,

“ஏஞ்சலுக்கு தூக்கம் வந்துருச்சா?”

“இல்ல….. தூக்கம் வரல…… ஆனா படுக்கப் போறேன்….”, என்றபடி ஹாலில் இருந்த அவளின் சார்ஜரை எடுத்தபடி அறைக்குள் செல்ல,

 டிவி, ஹாலில் உள்ள லைட் எல்லாம் அணைத்துவிட்டு….. அவளின் பின்னே அறைக்குச் சென்றவன்….. அவளது பேகில் சார்ஜரை வைத்துக் கொண்டிருந்தவளின் பின்னிருந்தபடி அவளை அணைத்தான்.  

சார்ஜரை உரிய இடத்தில் அவள் வைக்கும் வரை அணைத்தவாறு காத்திருந்தவன், அவளின் கழுத்தில் இதழ் பதித்தான்.  பெண்ணவள், எதிர்பாரா தன்னவனின் தாக்குதலால் உடல் சிலிர்த்தாள்.

“ஏஞ்சல், இந்த அத்தானைக் கண்டுக்கவே மாட்டிங்கற….”

“கண்டுக்கலயா….? பொய்ய பொருந்தச் சொல்லணும்”

“நான் ஏன் பொய் சொல்ல போறேன்….? உண்மையத்தான் சொன்னேன்”

“சரி சொல்லுங்க….. என்ன கண்டுக்க மாட்டீங்கறேன்?”

“அன்பா ஒரு அணைப்பு, ஆசையா ஒரு பார்வை, மோகமா ஒரு முத்தம்…. ம்ஹூம்…. எதுவும் இல்ல…. பாலைவனம் மாதிரி வறண்டு போயிருக்கேன் டீ”

“இது தான் உங்க டிக்சனரில கண்டுக்கறதா?”

“ஆமா”

“அதெல்லாம் என்னால முடியாது…..”

“ஏன் முடியாது? என்ன பிடிக்கலயா….. உனக்கு?”

“பிடிக்காம யாரும் கல்யாணம் பண்ணிக்குவாங்களா?

“எப்ப இருந்துடி என்ன உனக்கு பிடிக்கும்”

“ம்….”, யோசிப்பது போல பாவனை செய்தவள், “உங்கள பாத்துக்க சொல்லி என்னை விட்டுட்டு கல்யாணத்துக்கு போனாங்கல்ல அம்மா, அப்ப இருந்து…. 

கீர்த்தி அக்கா, இன்னும் நிறய பேரு உங்க பின்னாடி திரிஞ்சும், நீங்க கண்டுக்கலயா அதான் கொஞ்சம் பிடிச்சிருந்தது”, என சிரித்தபடி பேசியவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் விட்டவன், அவளை அவனுக்குள் இருக்குமாறு அணைத்தவாறு படுக்க,

இந்திய ரயில் நிலையங்களில் புகைவண்டி கடக்கும் போது நடைதளத்தில் உண்டாகும் அதிர்வு, அவளின் மனதில்.

“அப்ப ஏண்டி எங்கிட்ட பேசவே மாட்ட”

“ஆரம்பத்துல…. சிடுசிடுன்னு பேசறதால உங்கள பாத்தவுடனே ரூமுக்குள்ள போயிருவேன்….., பயமெல்லாம் போனதுக்கப்புறம் உங்கள ஃபிளாட்லயே காணோம்..  

அம்மாட்ட கேட்டேன்…. நீங்க ஃபாரின் போயிட்டதா சொன்னாங்க, அப்றம் எங்கிட்டு வந்து உங்ககூட பேச….”

“அதான் என் மொபைல் நம்பர் தந்தேனடி”

“கூச்சமா இருந்தது அதான்….. பேசல…..”

“எங்கிட்ட எதுக்கு கூச்சம்?”

“தெரியல, ஆனா உங்ககிட்ட மட்டும் தான் அப்டி இருக்கு இன்னும்…. எதுக்குனு கேட்டா என்ன சொல்ல நான்? 

அப்பறம் உங்களுக்கு கல்யாணம்னு அம்மா சொன்னாங்க… அப்போ நீங்க யாரையும் மனசுல யோசிக்காததால தான் அவங்கள மேரேஜ் பண்ணுறீங்கனு நினச்சுகிட்டேன்…”

“அப்பத்தா ஃபோர்ஸ் பண்ணாங்க…. சரி பாருங்கனு சொல்லிட்டு ஃபாரின் போயிட்டேன், ஆனா அதுக்குள்ள எத்தன ஜாதகங்கிற?” 

“ம்ம்…. நீங்க நம்ம கல்யாணத்துக்கப்புறமா பேசுவீங்கனு நினச்சேன், அப்புறம் அந்த அக்காவை மறக்க முடியாம பேச மாட்டீங்கறீங்களோன்னு, நானும் பேசல”

“படிக்கற பொண்ண டைவர்ட் பண்ண வேணாம்னும் யோசிச்சேன் முதல்ல… படிப்பு முடிஞ்சு ஆறு மாசமா எந்த ரியாக்சனும் உங்கிட்ட இல்ல.  

உன்னால இன்னும் என்னை ஏத்துக்க முடியாம கஷ்டப்படுறியோன்னு டிஸ்டர்ப் பண்ணல….

அந்த பொண்ண போட்டோல ஒரு தடவ பாத்திருக்கேன், அவ்வளவு தான்”

“அம்மா, கல்யாணத்துக்கப்புறம் அடிக்கடி சொல்லுவாங்க…. தம்பிகிட்ட பேசுனு…. நான் ரொம்ப நாளா தயங்கிட்டே இருந்தேன்….. இந்த தடவ தான் டெக்ஸ்ட் பண்ணிட்டேன்”

என்றவாறு பழங்கதை பேசியபடி இருவரும் உறக்கத்தை தழுவியிருந்தனர்.

 

அதிகாலையில் எழுந்த ரகு, அருகில் உறங்கும் வதனியைக் கண்டான்.

எழுப்ப மனமின்றி, குளித்து, வேண்டிய அனைத்தையும் அவனுடைய BMW வில் எடுத்து வைத்துவிட்டு வந்த பிறகு மனைவியை எழுப்பினான்.

“ஏஞ்சல்….. எந்திரிக்கிறியா?”

“ம்…ம்ம்ம்….”, என்றவள் எழுவதாகத் தெரியவில்லை.

“எங்கத்தை போன் பண்றாங்க டீ”, என சத்தமாகக் கூற

“யாரு இந்த நேரத்துல போன் பண்றது? என கண்ணைத் திறந்து கேட்டாள்.

அவன் சிரிப்பு கண்ணில் பட, தான் எழ அவன் அவ்வாறு சொல்லியிருக்கிறான் என எண்ணியவளாய், ஃபுல் கம்ஸ் ஃபோர்மல் நேவி புளூ காட்டன் ஃபிட் ஷர்ட், ரெகுலர் ஃபிட் லைட்புளூ டெனிம் ஜீன்ஸ்ஸில் கிளம்பி நின்றிருந்தவனை பார்த்தவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள்.

அவளின் பார்வையைக் கண்டவன்,

“காலைலயே அப்டி பார்க்காதடி”

“கண்டுக்கவே மாட்டீங்கறனு நைட் முழுக்க எங்கிட்ட புலம்பிட்டு, இப்பொ இப்டி சொன்னா…… என்ன அர்த்தம்?”

“ம்….. இன்னும் நல்லா பாருன்னு அர்த்தமாம்”

“நேரமாகுது…. நீங்க ஹாலுக்கு போங்க… நான் கிளம்பி வாரேன்”

“நீ பிரஸ் பண்ணி, ஃபேஸ் வாஷ் மட்டும் பண்ணிட்டு வரியா?”

“நீங்க மட்டும் குளிச்சுட்டீங்க…., நானும் குளிச்சிட்டு தான் வருவேன்” 

“நீ வண்டில தூங்கதான போற”

“ம்… குளிச்சா தூங்கக் கூடாதுன்னா இருக்கு” , என்றவள் குளியலறைக்குள் செல்ல,

சிரித்தபடி, அவள் கிளம்புவதற்குள் வீட்டின் ஜன்னல், கதவுகளைச் சரி பார்த்து பூட்டினான்.

பதினைந்து நிமிடத்தில், மெரூன் மற்றும் பெய்ஜ் எம்பிராய்டரி காட்டன் ஜாக்குவாடு குர்தியில் கிளம்பி வந்தவளைக் கண்டவன், அவள் இதழில் சிறு கதை எழுதிய பின், அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

நிலவைக் கொண்டு வா – 14 (PRE-FINAL)

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் அவள்தானா
ஹே என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

 

சரியாக பத்து மணியளவில் காம்பவுண்டுக்குள் நுழைந்து ஓய்வுக்கு தயாரான BMW வில் இருந்து இறங்கி வரும் மகனையும், மருமகளையும் ஆசையாக பார்த்திருந்தார், துர்கா.

இருவரின் முகத்தில் இருந்த வசீகரம், அவர்களுக்கிடையே வந்திருந்த வசியத்தை வார்த்தைகள் இல்லாமல் வழிமொழிந்திட போதுமானதாக இருந்தது, அந்த தாயிக்கு.  

இருவரும் இணைந்து புன்னகையுடன் வீடு நோக்கி நடந்து வரும் காட்சியினால், துர்காவின் மனது காற்றினை வெளித்தள்ளிய குடத்தில் நிரம்பி வழியும் நீர் போல மகிழ்ச்சியினால் நிறைந்து இருந்தது, 

“கும்புடுறேன் அத்தை”, என்றவாறு இரு கைகளைக் கூப்பினாள், வதனி 

“மகராசியா இருத்தா”, என்றவாறு 

“எத்தன மணிக்கு அங்க இருந்து கிளம்புனீங்க?”

“அஞ்சரைக்கு கிளம்பினோம்த்த”

“காலைல ஒன்னும் பசியாறிருக்க மாட்டீங்க….. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க”

“இல்லமா, காரைக்குடில வந்து சாப்டுட்டு தான் வரோம்”

“இளனீனா குடிக்கிறீங்களா?”

இருவரும் மறுக்க, சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு துர்கா சென்றார். 

 

அதன் பிறகு அங்கு வந்த நிர்மலா

“வாங்க…. வாங்க…. இப்ப தான் வந்தீங்களா?

“ஆமாக்கா

“என்ன வதனி, எக்ஸாமெல்லாம் நல்லா பண்ணுனியா?

நல்லா பண்ணிருக்கேன்கா

“அடுத்து என்ன செய்யப்போற….. ?…. உன் வீட்டுக்காரரு என்ன சொல்றாரு?”, என நந்தனைப் பார்த்தபடி கேட்க

“ஆடிட்டிங் ப்ராக்டிஸ் பண்ணனும்கா, அவங்க ஒன்னும் சொல்லல, வதனிக்கு அவள் கேள்வியின் நோக்கம் புரியாமல் விழிக்க

“இல்ல, கொழுந்தனாரு…. அவரு பொண்டாட்டிய வெளில வேலைக்கெல்லாம் அனுப்பமாட்டேன்னு சொல்லுவாறே….. அதான் கேட்டேன்

வதனி அவளது கணவனை நோக்கி, “அப்படியா? என கண்களால் கேட்க…… அவன் “இல்லை என கண்களாலேயே மறுக்க…… அதைப் பார்த்த நிர்மலா,

“நயன மொழி பேசுறதுக்கு ரெண்டு பேரும் கிளாஸ்ஸெல்லாம் நாலு நாளா போயிட்டு வந்திருக்கீங்க போல, என கிண்டல் செய்தாள்.

 

“நயன மொழியும் பேசல, நயன்தாரா மொழியும் பேசல……. 

நீ எங்கண்ணன்கிட்ட பேசுற மொழிய விடவா, நாங்க ரெண்டு பேரும் பேசிட்டோம்…..

நீ பேசுற மௌன மொழிக்கே எங்கண்ணன் ஆடி போறான்…. இன்னும் என்னென்ன மொழியெல்லாமோ பேசி அவன சர்க்கஸ்லாம் பண்ண வைக்கிற…… 

என்னிக்காவது நான் உங்கிட்ட அது பத்தி கேட்டிருக்கேனா…….?”, என்றான் சிரித்தபடி

“ஓரகத்திக பேசுற இடத்துல உனக்கு என்ன வேல, அத்த கூப்பிடுறாக, போ நீ அங்க, என நந்தனை நிர்மலா விரட்ட, அவன் சிரித்தபடியே வதனியை பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

“என்ன வதனி, இனி இங்கதானா?

“அத்தான் என்ன சொல்றாங்கனு தெரியல….. அவங்க சொல்ற மாதிரிதான் இனி செய்யணும்கா…..

“என்னடி நாலு நாள்ள இப்டியாகிட்டா…..?, அத்தான் , பொத்தான்னு விட்டுறாத….. 

இப்பவே….. என்ன செய்யணும்னு நல்லா யோசிச்சு முடிவெடு…. பட்டிக்காட்டுல உக்காந்துக்கிட்டு, ஆடிட்டரான நீ…..  என்ன செய்ய போற?

யோசிக்கிறேன்கா…. உங்களுக்கு டெலிவரி டேட் எப்போ குடுத்துருக்காங்க….

“அடுத்த மாசம்

“தன்யா எங்கக்கா?

“ஊருக்கு போறதுக்கு முன்னாடி நந்தா ஒரு வீடியோ கேம் வாங்கிக் குடுத்துச்சு….. அத வச்சு தான் விளையாடிட்டு இருக்கா ரூம்ல”, என்றபடி பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரவர் வேலைகளை கவனிக்கச் சென்றனர்.

 

ரகு, மதிய உணவிற்குப்பின் வழக்கமான அவனது பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டான்.

மாலையில், தனது தாயுடன் பேசிக்கொண்டிருந்த வதனியை போனில் அழைத்த ரகு, இன்று இறால் பண்ணையில் அறுவடை என்பதால், வீட்டிற்கு வர இரவு வெகு நேரமாகும் என்றும், அதுவரை தனக்காக காத்திருக்காமல்… உண்டு விட்டு உறங்குமாறும் கூறி போனை வைத்துவிட்டான்.

 

நேரம் போகாமல் சென்னையில் MBA படித்துக்கொண்டிருக்கும், தனது தம்பி ப்ரவீணுக்கு அழைத்தாள், வதனி.

“வாத்து, சொல்லு……. இப்ப என்ன திடீர்னு இந்த தம்பி மேல ரொம்ப பாசம்

டேய், ஒரு அக்கா போன்ல பேசுனா, நல்லா இருக்கியானு முதல்ல கேளு….. அப்ப நீ ஒரு நல்ல தம்பி…. அத விட்டுட்டு எடுத்த உடனே வாத்து, ஊத்துன்னு… என்ன டென்சன் பண்ணிக்கிட்டு

“சரி சரி…. ரொம்ப கோவபடாத.. இங்க வரைக்கும் அணல் அடிக்குது….. இப்ப எங்க இருக்க…..?

“ம்…. சுந்தரமுடையான்ல இருக்கேன்….

“என்ன சொல்ற? அதிர்ச்சினாலே எனக்கு அலர்ஜி…. இருந்தாலும் என்னால நம்ப முடியல!

தீபாவளி, பொங்கலுக்கு தான எல்லாத்தையும் ஒரு கை பாக்கணும்னு போவ….. அப்புறம் மிஞ்சுனதெல்லாம் பாக் பண்ணி எடுத்துட்டு வந்து ஹாஸ்டல்ல கொட்டிக்குவ…..

இப்ப என்ன விசேசம்…. எனக்கு தெரியாம…. யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லலயே!”, என யோசித்தபடி கேட்டான்.

“டேய்! அடங்குடா….. என் புருசன் வீட்டுக்கு நான் வந்திருக்கேன்….. ஓவரா பேசுற…. 

இங்க வருவல்ல…. அப்ப இருக்கு….. உன் வாயில டீக்கு பதிலா…….  கழனித்தண்ணிய கழுவி ஊத்துறேன் பாரு

அதான் தெரியுமே நீ செஞ்சாலும் செய்வ…. எனக்கு நம்பிக்கை இருக்கு…. 

இருந்தாலும்…. சின்ன வயசுல நீ கூப்ட உடன டவுசரக் கூட ஒழுங்கா போடாம வேர்க்க விருவிருக்க வந்து நிப்பேனே……

அந்த சோட்டா பையன் ப்ரவீணுனு நினைச்சிட்டு இருக்கீயா…

ப்ரவீன்… தி க்ரேட் மா…. 

வாலண்டியரா வந்து மாட்ட நான் என்ன ரகு மச்சானு நினச்சியா?

அப்றம் என்னமோ சொன்னியே!…… ஆஹான்… புருசன் வீடா? இத்தன நாளு எங்கிட்ட சிடுமூஞ்சினு சொல்லுவ…. திடீர்னு என்னென்னமோ சொல்ற? 

என்ன நடக்குது அங்க? 

மச்சான இனி யாராலயும் காப்பாத்த முடியாது போலயே….. குறி வச்சி கட்டம் கட்டிட்ட போல

கட்டமும் கட்டல, கட்டடமும் கட்டல…. போரடிக்குதே கொஞ்ச நேரம் தம்பிகூட பேசலாம்னு கூப்டா ரொம்ப பேசுற

போரடிச்சா தான் நீயெல்லாம் எங்கூட பேசுவ….. ஆனா நாங்க அப்டியில்ல வாத்து….. உன் நினைப்பு வந்தாலே நேருல பார்க்க வந்திருவேன்

“ரொம்ப பாச பயிர வளர்க்காதா…… ஆடு மேஞ்சுற போகுது!

“எல்லாம் உனக்கு இன்னும் விளையாட்டுதான்

“சரிடா ப்ரவீணு… வைக்கவா?

“இனியாவது பொறுப்பா இருக்கா”, அவனின் அக்கா என்றழைப்பில் வெயிலுக்கு உருகும் வெண்ணையைப் போல மனம் மாறியவள்

“சரி தம்பி”, என்றவாறு தனது தம்பியின் அக்கா என்ற அரிய அழைப்பு மனதில் செய்த மகிழ்வை ரசித்தபடி போனை வைத்தாள் .

 

இரவு சரியாக பதினோரு மணி ஏழு நிமிடத்திற்கு வந்த ரகுநந்தனின் வரவைச் சொன்ன அவனது BMW சத்தத்தில், அதுவரை அவனுக்காக உண்ணாமல், உறங்காமல் காத்திருந்த பெண்ணவள் அவளது அறையிலிருந்து ஓடி வந்தாள் வாயிலுக்கு,

“ஏய்… என்ன இன்னும் நீ தூங்கலயா?

“கை, கால் அலம்பிட்டு சாப்பிட வாங்க

“எடுத்து வச்சுட்டு போயி படுக்க வேண்டியது தான…..

சத்தமில்லாமல் அடுக்களைக்குள் செல்லும் மனைவியைக் கண்டு, சத்தமில்லாமல் பின்னே வந்தவன் அவளது இடக்கையை பிடித்து நிறுத்தினான்.

திரும்பியவள், கணவனையும் அவளது கையை அவன் விடாமல் பற்றி இருப்பதையும் மாறி மாறி பார்த்தவாறு

“எடுத்து வைக்க தெரியாம தான் இருந்துட்டேன், அடுத்த தடவை எடுத்து வைக்கிறேன், இப்போ என் கைய விட்டுட்டு கை கால் அலம்புங்க போங்க

உத்தரவு மகாராணி, என்று சிரித்தவாறு போனவன் விரைவில் உண்ண வந்து அமர்ந்தான்.

அவனுக்கு உணவை தந்தவள், தட்டில் உணவுடன் வந்து அவனருகில் அமர்ந்தாள்.

“நீ இன்னும் சாப்டலயா?

பேசாமல் உணவில் கவனம் செலுத்தியவளை, அதற்குமேல் பேசி துன்புறுத்தாமல் உண்டு எழுந்தான்.

 

அடுக்களையை சீராக்கியவள், வாயிற்கதவுகளை சரி பார்த்து பூட்டிவிட்டு அவனது அறைக்குள் சென்றாள்.

இதுவரை, அவனுடைய அறையுடன் இணைந்து இருக்கும் (அவளது)அறையில் உறங்குபவள், இன்று அவனுடைய அறையில் இருக்கும் படுக்கையில் படுத்துவிட்டாள்.

 

டிவியில் சிறிது நேரம் நியூஸ் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவனின் கண்களில், இரவு நேர விளக்கின் வெளிச்சத்தில் அவனுடைய படுக்கையில் படுத்திருக்கும் வதனியைக் கண்டான்.

“ஏஞ்சல்!

“பேபி டால்!

“பொண்டாட்டி!

எதற்கும் சத்தம் வராமல் இருக்கவே, அதற்குள்ளாகவா உறங்கி விட்டாள், இப்போது தானே அறைக்குள் வந்தாள் என யோசித்தபடி வந்து படுத்தான்.

சுவரைப் பார்த்தபடி படுத்திருக்கும் மனைவியின் வதனத்தை காண எழுந்த ஆசையினால், தன் பக்கமாக திருப்ப முயல,

உறங்குவது போல பாவனையில் இருப்பவளைக் கண்டு கொண்டான்.

சட்டென, அவளை அள்ளி எடுத்து, தன் மல்லார்ந்த அகன்ற மேனியை அவளுக்கு படுக்கையாக்கினான்.  

பெண்ணவள் திமிர, தன் கைகளால் அவளின் தோள்பகுதியையும், அவன் கால்களால் அவனிடமிருந்து நழுவிய அவள் கால்களையும் சிறை செய்திருந்தான்.

“ஏஞ்சலுக்கு அத்தாங்கிட்ட என்ன கோவம்?

“கோபமெல்லாம் இல்ல…..

“அப்ப ஏன் சாப்டாம இருந்த இவ்ளோ நேரம்?

“உங்களோட சாப்பிடத்தான்

“இனி இப்டி லேட்டானா எனக்காக வயிட் பண்ணாத

“வயிட் பண்றது என் இஷ்டம், அதுல உங்களுக்கு என்ன கஷ்டம் மிஸ்டர்.ரகு

“புருஷன பேர் சொல்லிக் கூப்பிடுற

“கூப்டறதுக்கு தான பேரு வச்சிருக்காங்க

“என் மாமியாருட்ட போயி சொல்லப் போறேன்

“சொல்லுங்க…. எனக்கு ஒன்னும் பயமில்ல

பயங்கர வீராங்கனையா ஆகிட்டு வர போல

ஆமா, எங்கயாவது அடியாளு வேணும்னா என்னைய அனுப்பி காலி பண்ணிறாத ரகு

“என்னடி இப்டியெல்லாம் பேசுற… இன்னிக்கு

“நான் இன்னும் பேசுவேன்…. என்ன விட்டா நான் பெட்ல படுத்துப்பேன், என்னை கைதிய விட மோசமா கட்டி வச்சிருக்கீங்க, விடுங்க….

“நீ திமிர்னதால அப்டி பண்ணேன், என்றபடி அவளை விடுவித்திருந்தான். ஆனால் படுக்கைக்கு வர எண்ணாதவளாய்,

அவளின் முகத்தைத் தாங்கிய இரு கைகளையும் அவனின் திரண்ட மார்பில் ஊன்றியவாறு இருந்தவளின் அழகிய வதனத்தை கண்டிருந்தவனிடம்

“என்ன பார்வை?

“பார்க்கறக்கெல்லாம் ரீசன் சொல்லணுமா?

“இருட்டுல மின்னுற கண்ணு தெரியுது, ஆனா என்னைப் பற்றி என்ன நினச்சு, எப்படி பார்க்குறீங்கனு பாக்க முடியல, அதான் கேட்டேன்

தூக்கம் வரலயா?

“வந்துது….. ஆனா இங்க படுத்து பழக்கமில்லல…. அதான் படுத்தா தூக்கம் வர மாட்டிங்குது

தாலாட்டவா….. தூங்குறியா?

“வேணாம்

“என் ஏஞ்சலுக்கு வேற என்ன வேணும்?

“ஒன்னும் வேணாம்

“வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தமாம், உனக்கு தெரியுமா?

“இத எந்த அரவேக்காடு சொல்லிச்சாம்?

“ஏண்டி…. புருசன அரவேக்காடுனல்லாமா சொல்லுவ

எதையும் எங்கிட்ட ஸ்ட்ரைட்டா சொல்லுங்க…. இல்லனா இப்டி தான் டேமேஜ் ஆகிருவீங்க

“உன்னை இப்ப இந்த அரவேக்காடு என்ன பண்ணுதுன்னு பாரு, என்றபடி அவளை மேலிழுத்து இதழைச் சுவைத்திருந்தான். எதிர்பாரா தாக்குதலால் பெண் துவண்டிருந்தாள்.

நிலவைக் கொண்டு வா – 15

 

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன் 

 

அடுத்து வந்த இரு நாட்களில், கருணாகரனும் – கீதாஞ்சலியும் திருவாரூர் கிளம்பிவிட்டனர்.  போகும் போது கருணாகரன் தனது மகளிடம்

“வதனி, இனி பொறுப்பா இருந்துக்குவனு எனக்கு நம்பிக்கை இருக்கு, டெய்லி அப்பா கால் பண்றேன்,  கிளம்பவாடா?

சரிப்பா,  அவளை அறியாமலேயே, பார்வையை மறைக்கும் அளவு கண்களில் கண்ணீருடன் விடை கொடுத்தாள்.

அவளது தோளில் தட்டியவர் மனதிலும், மகள், வேரொருவரின் மனைவியாகி விட்டபின், அதற்கு மேல் உரிமை கொண்டாட இயலாமல் எதோ ஒன்று தடுத்தது.

இதைப் பார்த்திருந்த ரகுவின் விடையறியா வினாவிற்கு பதில் கிடைத்தது.  ஆனாலும் அவள் சொல்லிக் கேட்க விரும்பியவன்,

“வதனா, லாஸ்ட் டைம் ஊருக்கு போகும்போது ஏன் அழுத?

“ம்… வீட்டுல நீ இருந்தா இருக்கற கலகலப்பு… நீ போனவுடனே… உங்கூடவே போயிருதுனு அத்த சொன்னாங்க…

“அதுக்காகவா அழுத?

“இல்ல, அத்த பெத்த அரவேக்காடு நம்ம எப்ப கண்டுக்கறது, நாம எப்ப வந்து இங்க வாழுறதுனு நினச்சனா!  என் கண்ணுல தூசி விழுந்திருச்சு, என்று சிரித்தபடி அவள் நகர

அவளின் தனக்கான தேடலை உணர்ந்தவன், ‘நிறய நாள வேஸ்ட் பண்ணிட்டோம் போலயே!’, என எண்ணியபடி அவனது பணிகளைக் கவனிக்கச் சென்றான்.

 

அடுத்து வந்த நாட்களில், தோப்பிற்கு சென்றனர்.

இருபத்து ஐந்து ஏக்கர் நிலபரப்பில் இல்லாத மரமே அங்கு இல்லை எனும் அளவிற்கு வளர்ந்து நின்ற மரங்களுக்கிடையே புதிதாக நவீன முறையில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு ஒன்று இருந்தது.

தென்னங்கீற்றிலிருந்து பெருக்குமாறு, தட்டி, பனை மரத்தின் இள ஓலையிலிருந்து பாய், விசிறி, பெட்டி, முறம் போன்ற பொருட்களை அங்கு உற்பத்தி செய்வதற்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு வேலை செய்தபடி இருந்தனர். 

கயிறு திரித்தல், பனை மட்டைகளை அளவாக வெட்டி விற்பனைக்கு என பல தரப்பட்ட வேலைகள் நடந்தபடி இருந்ததைக் கண்டவள்,

“இதெல்லாம் எப்பவுமே நடக்குதா?

“அப்பத்தா இருக்கற வர நடந்தது…. இடையில் கொஞ்சம் விட்டுட்டோம், திரும்ப ஆரம்பிச்சு ஒரு வருசமா நடக்குது

“இந்த வீடு இப்பதான் கட்டுனதா?

“ஆமா….

“இங்க எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?

“நான் அதிகமா இங்கதான் இருப்பேன்

 “அதுக்கு எதுக்கு ரெண்டு ஃப்ளோர்?

“க்ரௌண்ட் ஃப்ளோர்ல, இங்க செய்ற, முடையற, திரிக்கிற பொருளெல்லாம் வச்சுக்குவாங்க, அப்புறம் வேலைக்கு வரவங்க மதியம் சாப்டிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பாங்க

ஃபர்ஸ்ட் ஃப்ளோர் நம்ம வீட்டுல இருந்து வரவங்க பயன்படுத்துவாங்க….. செகண்ட் ஃப்ளோர் நான் மட்டும் யூஸ் பண்றேன்

“தனியா வந்து இங்க என்ன பண்ணுவீங்க?

கணக்கெல்லாம் இங்க வச்சு பார்ப்பேன்,  போரடிக்கிற நேரம் வேடிக்கை பார்ப்பேன், பாட்டு கேப்பேன்…. என்ன கண்டுக்கறதுக்கு தான் யாருமில்லாம இருந்தேனே”, பேச்சை மாற்ற எண்ணியவள்

“சரி வாங்க, மேல போயி பார்ப்போம்

“வா…., என அழைத்துச் சென்றான்.

மிகவும் அழகாக இருந்தது.  மூன்று புறத்திலும், தரையிலிருந்து மூன்று அடி உயர சுவர்களில்  பில்லர்களுக்கிடையே வைக்கப்பட்ட கிரில் கம்பிகளும், கம்பிகளுக்கு ட்ரான்ஸ்பரண்டான கண்ணாடி, இடையே ஜன்னல்கள், அழகான திரைச்சீலை என ரசனைக்குரியதாக அந்த ஃப்ளோர் இருந்தது.

அங்கிருந்து ஒரு புறம் பார்த்தால், தூரத்தில் நீலமாக பரந்து, விரிந்திருந்த கடல், மற்ற இருபுறமும் பரந்த மணல் வெளியில் அங்கங்கு சிறு சிறு தோப்புகளென அருமையாக இருந்தது.  

ஜன்னலைத் திறந்தால், தேகம் தீண்டிச் சென்றது தென்றல்.

‘பயங்கர ரசனக்காரவனாடா ரகு நீ

எதுவும் பேசாமல் ரசித்து பார்த்திருந்தவளை கண்டவனுக்கு, அவளின் ரசனையை, அவளின் விழிகளில் உண்டான மாற்றங்களை அவனும் ரசித்திருந்தான்.

“வதனி, இந்த பௌர்ணமிக்கு இங்க வந்து ஸ்டே பண்ணுவமா?

“நைட் தோப்புக்குள்ள பயமா இருக்காதா?

“என்ன பயம்? நான் இருக்கேன்ல

‘அதாண்டா பயம், இன்னும் மனசுல ஒரு ஓரமா ஒட்டிட்டு இருக்கு….!, ஏன்னு இந்த க்ரீன் சாண்டுக்கு இன்னும் தெரியல…!

சரியென்றவள், அங்கிருந்த மற்ற இடங்களையும் பார்வையிட்டாள். ஒரு அறையில் ஃபைல்களும், சிஸ்டமும் இருக்க கண்டாள்.

‘கணக்கு பண்ற இடம்போல…! ச்சேய்…. தப்பா சொல்லக்கூடாது…… கணக்கு பாக்குற இடம்

கிச்சன், பெட்ரூம் என சகல வசதிகளுடன் இருந்தது அந்த தோப்பு வீடு.

 

நர்சரிக்கு சென்றாள் ஒரு நாள். அங்கு பசுமைக்குடில், நிழல் வலைக்குடில், பனி புகையறை போன்ற பல முறைகளைப் பயன்படுத்தி வண்ணமலர்கள் அதிகளவில் உற்பத்தி, அதிக மகசூல் பெறும் உத்தி, பதியன் முறை செடி வளர்த்தல் என அவளுக்கு ஆர்வமாக பொழுது போனது.

 

அறுவடைக்குப் பின் இருக்கும் வேலைகள், இறால் பண்ணையில் நடப்பதையும் சென்று பார்த்தாள்.

 

எல்லா இடங்களுக்கும் அவளை அழைத்துச் சென்றவன் இறுதியாக அவளிடம்,

“வதனி, இங்க நடக்கற நம்ம பிஸினெஸ் கணக்குகளெல்லாம் மதுர ஆடிட்டர் ஒருத்தவர் தான் பார்த்துக்கறார்.

நீ விருப்பப்பட்டா அவர்கிட்ட இருந்து ஒவ்வொரு அக்கவுண்டா வாங்கி உங்கிட்ட தரேன்…. அப்புறம் சென்னை, அரியலூர் ஐடி எல்லாத்தையும் நீயே பாத்துக்கலாம். என்ன சொல்ற…

“இப்போ அரியலூர் மட்டும் பாக்குறேன்…. அப்றம்…. வருசத்துக்கு ஒண்ணா அவர்கிட்ட இருந்து மாத்திக்குவோம்….

அவளிஷ்டம் என்றுவிட்டான்.

 

பௌர்ணமியும் வந்தது.  அவர்களின் வாழ்க்கையை தோப்பு வீட்டில் ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்து இருந்தான் ரகு.  அவளும் அதை ஆமோத்திருந்தாள்.

கணக்குகள் பார்க்க என பகலில் அவள் தோப்பிற்கு சென்று வந்த வண்ணம் இருந்ததால், இரு தினங்கள் அங்கிருக்க விருப்பம் தெரிவித்த தம்பதியினரை எதுவும் கேள்விகள் கேட்காமல் வீட்டிலிருந்த பெரியவர்கள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர்.

மூன்று வேளைக்கும் உணவு கொடுத்து விடுவதாக துர்கா தெரிவித்தார். மறுக்காமல் ஒப்புக்கொண்டனர் இருவரும்.

 

காலை பதினோரு மணிக்கு தோப்பு வீட்டிற்கு சென்றனர்.  வதனி அரியலூர் ஐடி கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை தொந்திரவு செய்யாமல், கடல் இருக்கும் புறத்தில் தொங்கிய மூங்கில் ஊஞ்சலில் அமர்ந்து ஹெட் போனில் பாட்டுக் கேட்டவாறு கண்களை மூடி இசையை, அது உண்டாக்கும் உணர்வுகளை தனக்குள் ரசித்திருந்தான்.

வெகு நேரம் தன்னை தொந்திரவு செய்யாமல் இருக்கும் கணவனை வியந்தபடி அங்கு வந்தவள், அவன் மடியிலிருந்த அவன் கைகளை மெதுவாக விலக்கி அமர்ந்தாள்.

அவன் வலப்புற காதிலிருந்த ஹெட் போனை எடுத்து அவளது காதில் மாட்டியவாறு அவனுடைய பரந்த மார்பில் சாய்ந்திருந்தாள். இருகைகளால் அவளை அவன் அணைத்திருக்க

சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் குரலில், யுவன் சங்கர் ராஜா இசையில், உணர்வுகளை, உடலின் ஒவ்வொரு அணுவையும் மயங்கச் செய்திருந்த அந்த வரிகளை அனுபவித்து பாடிக் கொண்டிருக்கும் குரல்கள்

ஏனோ இரவோடு ஒளியாய்கூடும்
உறவொன்று  கேட்கிறேன்
வரை மீறும் இவளின் ஆசை
நிறைவேறப்  பார்க்கிறேன்.
நதி சேரும் கடலின்மீது
மழை நீராய்  சேருவேன் 

என்ற பாடலை இருவரும் இணைந்து  ரசித்திருந்தனர்.

பாடல் முழுவதையும் கேட்ட பெண்ணவள், தனது உணர்வுகளை இதழ் மூலம் அவனிதழ்களுக்கு கடத்தினாள். கடத்தலில் காணாமல் போன இருவரையும் கண்டு பிடித்தது, வீட்டிலிருந்து வந்த போன் கால்.

இரவு நேர பௌர்ணமி நிலா மேலெழும்ப, அதன் நிழல் கருமை படர்ந்திருந்த கடலில் விழுந்தது. காண்பவர் கண்களுக்கு, மஞ்சள் நிலவு இரண்டாகக் காட்சி அளித்தது.

அவனுடைய நிலா அவன் கைகளுக்குள் இருக்க, எதிரில் தெரியும் இரு நிலவைப் பார்த்தவாறு அர்த்தமில்லா பல விசயம் அவன் பேச, அர்த்தம் புரியாமலேயே கேட்டிருந்தாள். 

அவன் கரங்கள் பேசிய கதைகள் பெண்ணவளின் தேகம் உணர்ந்த வேளை, 

முடிவறியா முதல் அனுபவம் முற்றிலும் அவளறியாததால்,  அவன் பயணிக்கும் வேகத்திற்கு ஒத்துழைத்து, மனம் நெகிழ காத்திருந்தாள்.

அவளின் தேகத்திற்கு ஆடையானவன், முத்த ஊர்வலத்தை நடத்த, இருவருக்கும் பருவப் பசி கிளர்ந்தெழ, பசி போக்க… ஒருவரையொருவர் யாசிக்க… மனமொத்து இருவரும் விருந்து பரிமாறி, களித்து, கனிந்து, களைத்திருந்தனர்.

இதழ் விரித்து மலரக் காத்திருந்த மலருக்குள், தேனருந்த வந்த வண்டினை இதழ்களால் சிறை செய்திருந்தது, மலர்.

காமக்கடலில் மூழ்கி இருவரும் முத்தெடுத்த வேளையில், அவனது வாழ்விற்குள் வர யோசித்த…. நிலவைக் கொண்டு வர உண்டான மனக்கிலேசமெல்லாம் பனிபோல மறைய, அவளின் பருத்த முலைகளுக்கிடையே முகம் புதைத்திருந்தான்.

சந்திரவதனியின் உலகமாகியிருந்தான் ரகுநந்தன்.  அத்தான் என்ற அவளின் அழைப்பைக் கேட்டால் அத்தனையும் மறந்து அவள் பின்னால் என்னவென நிற்கும் ரகு அனைவருக்கும் புதிரானவன், புதிதானவன். வதனிபித்தன்.

நமது ரசனைக்குரியவன்….. அவனை பிறர் ரசிக்க விரும்பா அவனுடைய ராட்சசி வதனி. அறியா விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள், ரகுவிற்கும், ஆடிட்டிங்கிற்கும் அரசியாகியிருந்தாள்.

நிறைவான வாழ்வால் இருவரும், எல்லா வளங்களையும் பெற்று திறம்பட வாழ்ந்திருந்தனர்.

வாழ்த்தி விடைபெறுவோம்!!!

error: Content is protected !!