சீமை சீயான் – 3
ஏலேய்! எசக்கி நில்லு டா.
நில்லு டாங்கிறே….
ஏலேய்! எடுபட்ட பயலே…….
வெகு பொறுமையாகத் திரும்பியவன்,”கூப்டியா அப்பத்தா”.வலது காதினை தேய்த்துக் கொண்டே தனது முன் மூச்சு வாங்கி நிற்கும் மூதாட்டியை பார்த்து அவன் நிதானமாகக் கேட்க .
அவனைக் கொலைவெறியோடு பார்த்தவர்.”ஏன்டா நீ தெக்காலப் போகும் போதே,உன் பின்னாடி நாயாட்டம் கத்திக்கிட்டு ஓடியாரேன்,ராசா கணக்கா மெதப்புல போற”.
நீ கூப்ட்டும் நான் போவேன்னா காதுல கேட்கல அப்பத்தா,சரி எதுக்குக் கூப்ட.
கோபம் மறந்தவராக,அது நேத்து நம்பப் பொன்னுரங்கம் வீட்டுல எதோ விவகாரம் ஆயிபோச்சாமே,வண்டி வண்டியா ஆளுங்க கட்டையோட வந்தங்களாமே,மோவாயில் கைவைத்து,கண்களை உருட்டி புறணி பேசும் அந்த மூதாட்டியை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் எசக்கி முத்து, இதற்குத் தானே அவன் கண்டும் காணாதது போல் வந்தது.
வண்டி வண்டியா…. கட்டையோட, நீ பார்த்த.
நம்ப மாரியம்மா தான் சொன்னா அப்பு ,அதுவும் உன் கூட்டாளி வேம்புவா நான் தான் கட்டிக்கப் போறேன்னு சொல்லுச்சாமே,இதை முன்னயே பண்ணி இருந்தா,அந்த புள்ளையும் நல்ல பொழச்சு இருக்கும் என்று பெருமூச்சு விட.
“ஆமா நல்ல பொழைக்க விடுவீங்களே,இங்க பாரு அப்பத்தா,போனாப்போகுதுனு சின்னம்மா சோறு போட்டு பார்த்துக்குது,அதுக்கு ஒத்தாசையா ஏதவாது சோலி இருந்தா பாரு,அத விட்டுட்டு ஊர் வம்பு பேசிகிட்டு இருந்த. அவரை எச்சரித்துவிட்டு ஓர் அடி வைக்க . ஓங்கி ஒலித்தது மூதாட்டியின் குரல்.
அடேய்! என்ன தைரியம் இருந்தா அவளுக்கு வேல பார்க்க சொல்லுவ,என் மகன கைக்குள்ள போட்டுக்கிட்டு ஆடுறா அவளுக்கு நான் வேல பார்க்கணுமா.
“ஏன் மருமகளுக்கு வேல பார்த்தா என்னானு கேட்குறேன்”. பதிலுக்கு அவனும் எகுறினான்.
“நாளைக்கி உனக்குன்னு வருவாள அந்தப் பிச்சி சிறுக்கி,அவகிட்ட உங்க ஆத்தாக்காரி எப்புடி இருக்கானு பாக்குறேன்,அப்போ ஐயா என்ன செய்விர்னு,தாடையை நொடித்துக் கொண்டு சென்றார்”.
என்னது பிச்சியா!ஏய்! அப்பத்தா நில்லு….அட நில்லுங்குறேன், அவர் கையை பிடித்து தடுத்தவன் .யாரு சொன்னா உனக்கு,அவளை நான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு .
ஊரே சொல்லுது, அவர் அசால்ட்டாகக் கூற
என்னது ஊரு சொல்லுதா சொன்னவனைக் காட்டு,அவனைக் காட்டு காட்டுனு காட்டுறேன், சண்டாள பாவிங்கள என்ன பாதாளத்துல தள்ளி கொள்ளப் பாக்குறானுகளா”.பிச்சியுடன் திருமணம் என்றதில் அதிர்ந்தவன் படப் படவெனப் பொரிந்து தள்ளிவிட்டான்.
இவன் துள்ளி கொண்டு வர, பவ்வியமாக விலகி சென்ற மூதாட்டியை பார்த்து.அந்தப் பயம் இனி பேசுவ என்ற திரும்பியவன் முன் உக்கிரமாக நின்று கொண்டு இருந்தாள் பிச்சி.
மூதாட்டியின் பவ்வியம் எதனால் என்று அறிந்த முத்து நொந்து போனான்,பின்பு ஒன்றும் நடவாத வாரு அவளைச் சுற்றிக் கொண்டு செல்ல பார்க்க.
யோவ்! நில்லு யாரை பார்த்துப் பாதாளமுன்னு சொல்லுற,சொடக்கிட்டு அழைத்துக் கேள்வி கேட்டவளின் கையைக் கோபமாகப் பிடித்தவன்.
என்னடி கையு நீளுது,உடைச்சு புடுவேன் பாத்துக்கோ,ஆமா நீ பாதாளம் தான்,என்னடி பண்ணுவ.
கண்ணில் நீர் நிரம்ப அவனிடம் இருந்து கைகளை உருவி கொண்டு திரும்பியும் பார்க்காமல் சென்றுவிட்டாள் பிச்சி,மனதில் அத்தனை வலி.
அவளது கண்ணீரை புரியாமல் பார்த்தவன் யோசனையுடன் நடந்து சென்றான், தன்னிடம் சரிக்கு சரி சண்டை ஈடுபவள் இன்று கண்ணீர் வடித்தது ஏனோ? என்ற கேள்விக்கு விடை இல்லாமல் குழம்பி போனான்.
————————————————————————————
வேம்பு நேற்று நடந்ததை பற்றித் தான் எண்ணி கொண்டு இருந்தாள். தனது வீட்டின் முன் வந்து நின்ற ஜனத்தைப் பார்த்து பயந்து போய் அவரது தங்கை குடும்பத்தை அழைத்து விட்டார் பொன்னுரங்கம்.
என்ன பொன்னுரங்கம் என்ன முடிவு எடுத்திருக்க என்ன சொல்லுறா உன் பொண்ணு,எங்க சொந்தத்துல யாரை கை காட்டுனாலும் சரிதான்,என்று ஒரு பெரியவர் பேச.அவர் பேசுவதைக் கேட்டபடியே வந்தனர் சீயானும்,முனியாண்டியும்.
அனைவரையும் பார்த்து வாங்க என்று கை கூப்பிய இருவரும்.திண்ணையில் அமர்ந்து, இப்போ பேசு என்றவாறு முனியாண்டி கை அசைத்தார்.இந்த வருகையை சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பதை அவர்கள் அதிர்ச்சியே சொன்னது.
ஒண்ணுமில்ல முனியாண்டி நம்ம பாப்பாவா அப்புடியே விட்டுற முடியுமா,வயசும் ரொம்பக் கம்மி அதான் எங்க சாதி சனத்துலையே ஒருத்தர……… சீயான் பார்த்த பார்வையில் அவரது வாய் தானாக மூடிக்கொண்டது.
ஒருதடவை உங்களுக்கு பொண்ணு கொடுத்ததே தப்பு,இதுல எங்கனம் அதே தப்ப செய்ய.உருத்து விழித்தபடி சீயான் கேட்க பதில் அளிக்கத் தைரியமற்று அனைவரும் தலை குனிந்தனர்.
என்ன வேலா உங்க விட்டு ஆளுங்களுக்கு எங்க குடும்பத்தைப் பார்த்த எப்டி தெரியுதாம்.அங்கு நின்ற ஒருவனைப் பார்த்து சீயான் குரலை உயர்த்த.
ஐயோ! அண்ணே எனக்கு இந்த விவகாரம் தெரியாது,அப்பா தான் தம்பி வீட்டுல பஞ்சாயத்துனு சொன்னாரு அதான் கூட வந்தேன்,இவுங்க பொண்ணு கேட்க வாரங்கனு ஆத்தா மேல சாத்தியமா தெரியாது அண்ணே.சீயானை பற்றி நன்கு அறிந்தவன் கால்களில் விழாத குறையாக அலறி விட்டான்.
அவனை விடுத்து அனைவரையும் பார்த்தவன்உங்க பையன் எப்புடி செத்தான்னு எனக்கு தெரியும்,எல்லாம் தெரிஞ்சும் நான் ஏன் சும்மா இருக்கேனா என் வருங்காலப் பொண்டாட்டிக்காகத் தான்.
அழகாகச் சொல்லிவிட்டான் தனது விருப்பத்தை இதை விட யாராலும் உறவை சொல்ல முடியாது. அதனை முனியாண்டியும் ஆதரிப்பது போல மௌனமாக இருந்தார்.
இத்தனை நேரம் துள்ளிய அந்தப் பெரியவர் வாய் அடைத்து நின்றார்,முனியாண்டி குடும்பத்துக்கும், பொன்னுரங்கம் குடும்பத்துக்கும் இருக்கும் விரிசலை வைத்து தான் அவர் வேம்புவை பெண் கேட்டு தனது தம்பி மகனுக்குத் திருமணம் செய்தது,இப்போதும் அதையே எண்ணி வர,இங்கு கதையே வேறாகி போனது.
இனி எவனுக்குத் துணிவு வரும் சீயானை மீறி பெண் கேட்க.பொன்னுரங்கம் முனியாண்டி காலை பற்ற, பதறி போனவர் மச்சான் என்ன பண்ணுறீங்க எந்திரிங்க முதல,ஏலேய் பாண்டி தூக்குலே.
மாமா எந்திரிங்க என்ன இது,அவனது அதட்டல் கூட ஆறுதலாக.
இதனை எல்லாம் வீட்டினுள் நின்று கேட்டுக் கொண்டு இருந்தாள் வேம்பு என்ன முயன்றும் மனதில் பரவும் நிம்மதியை அவளால் ஒதுக்க முடியவில்லை,எப்படி இது சாத்தியம் நான் தவறான பெண்ணோ,கட்டிய கணவன் இறந்து இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லையே,அதற்குள் மறுமணம் அதுவும் நான் வேண்டாம் என்று மறுத்த மாமனிடம் தான் இனி என் வாழ்க்கை.
இருவருக்குமே துரோகி ஆகிப்போனேன்,என்ன செய்யக் காலம் முழுமைக்கும் தொடரும் இந்தக் குற்ற உணர்ச்சி என்னையும் சரி மாமாவையும் சரி நிம்மதியாக வாழ விடாது,என்னால் அவர் பட்ட அசிங்கம் போதும், இந்த மறுமணத்தால் ஏற்படும் தலை குனிவையும் அவருக்குத் தர விருப்பம் அற்றவளாக அழுது கரைந்தாள்.
பின்பு தீர்க்கமான ஒரு முடிவுடன் சீயானை பார்க்க சென்றாள்,அங்கு அவனோ……
————————————————————————————————
பிச்சி வழியும் கண்ணீரை கோபத்துடன் துடைத்து கொண்டே அம்மியில் மதிய உணவுக்கு மசாலா அரைத்து கொண்டு இருந்தாள்,அவளது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உரல் அங்குமிங்கும் ஆட்டம் காட்டியது,ஓர கண்ணால் அவளை கவனித்து கொண்டு இருந்த அவளது தாய் .
ஏண்டி,யாரு மேல உள்ள கோபத்தை அதுகிட்ட காட்டுற,நீ உருட்டற உருட்டுல உன் காலுல தான் அடி படப் போகுது பாரு முட்டா சிறுக்கி.
முட்டாள் என்பதில் சிலிர்த்து எழுந்தவள்,ஆமா நான் முட்டா சிறுக்கி நீ சீனா அதிபரு, எதாவது பேசுன இருக்குற கோபத்துல அம்மியா தூக்கி தலைல போட்டுருவேன்,போம்மா அதாண்டா,அவரை காந்தியவள் மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தாள்.
அடியாத்தி ராட்சசி செஞ்சாலும் செய்வடி நீ,பிச்சி அப்பாரே இங்க வாங்க இந்தப் புள்ள என்ன கொள்ளப் பாக்குது.
சிரித்துக் கொண்டே வந்த பிச்சியின் தந்தை,என்னடி புள்ளைக்குச் சின்னம்மா வேணும் போல அதான் அப்டி சொல்லுது.
என்னது சின்னம்மாவா நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன உளறீங்க.
தந்தையின் பேச்சில் பிச்சி கோபம் மறைந்து சிரித்து விட்டாள்.எதுக்குடி சிரிக்கறவ.
அம்மா அப்பாக்கு இன்னொரு பொஞ்சாதி வேணுமா, அதுனால உன் மேல தாராளமா அம்மியா போட சொல்லுறாரு,அது எப்புடிப்பா ஒரே வார்த்தையில் அழகா சொல்லிப்புட்டீங்க..
அடி கழுத அப்பனுக்கும் மவளுக்கும் ஆக்கி போடுற திமிரு இப்புடியெல்லாம் பேச வைக்குது,பாவி மனுஷா ரவைக்கு வா……………. மேல பேச போனவர் வாய்யை பதறி போய் அடைத்தார் மருது.
புள்ளய வச்சுக்கிட்டு என்ன பேசு பேசுற,கண்ணில் கண்ணீர் பெறுக போயா அதாண்டா எண்ணெயை தொடாத சிறு பிள்ளை போல் முறுக்கிய அன்னையையும்,அவரை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்யும் தந்தையும் பார்த்த பிச்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சத்தம் செய்யாமல் ஏக்கத்துடன் நகர்ந்து சென்றவள் நினைவில் மீண்டும் மன்னவன் எண்ணமே .அலட்டி கொஞ்சம் அசந்து இருந்தா கொத்திகிட்டு போயிருப்பா வஞ்சனை இல்லாமல் வசை பாடிய படியே கடந்த காலத்திற்கு சென்றாள்.
முத்துவும் அதை தான் எண்ணி கொண்டு இருந்தான்.எண்ணியவன் முகத்தில் வெட்க புன்னகை.
ஒரு வருடத்திற்கு முன்பு அரசு மேல் நிலை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இளம் பெண்ணுக்கு தங்க வீடு எடுத்துத் தருமாறு பஞ்சாயத்தில் இருந்து உத்தரவு,அதன்படி மோனா என்ற பெண்ணிற்கு முத்துவின் வீட்டின் அருகில் ஒரு வீடு பிடித்துக் கொடுத்தனர்.
ஒரு நாள் ஊருக்கு உள் செல்லும் பேருந்தை அந்த ஆசிரியை தவற விட,அங்கு வந்த முத்து அவருக்கு உதவ,அன்றில் இருந்து டீச்சருக்கு முத்துவின் மீது ஒரு கண்.
அன்று “ஐய்த்த”.
“வா பிச்சி”.
எங்க உங்க மவன் சீயான் மாமா கூடியரா சொல்லுச்சு
அவன் மொட்டை மாடில அந்த டீச்சர் பொண்ணுகூட பேசிகிட்டு இருக்கான் போய்ப் பாரு.
அவளும் சரியென்று செல்ல அங்கு உள்ள ஓர் குட்டி அறையில் தனது காதலை சொல்லி கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.
“முத்து உங்கள எனக்கு ரொம்பப் புடுச்சு இருக்கு நல்ல பாத்துக்கிறிங்க,சிரிப்பா பேசுறீங்க, படிக்காட்டியும் நல்ல பழக்கவழக்கம் இருக்கு ,நீங்க ஓகேன அப்பாவை வந்து பேச சொல்லுறேன்”.
முத்துப் பதில் சொல்லும் முன்னே அங்கே பாய்ந்திருந்தால் பிச்சி.
அடிங்க என்ன தைரியமடி உனக்கு, ஊருல வேற யாரும் கிடைக்கலையா.
அவள் போட்ட சத்தத்தில் பயந்த அந்தப் பெண் முத்துவின் பின் மறைய,இன்னும் கோபம் வந்தது பிச்சிக்கு.
ஏய்! என்ன அங்கன பதுங்குற வெளில வாடி,முத்துவை நடுவில் வைத்துக் கொண்டு அந்தப் பெணின் முடியை பற்ற முயற்சித்துக் கொண்டு இருந்தாள் பிச்சி.
அந்தப் பெண்ணைக் காக்க எண்ணி,பிச்சியின் இடையில் கை கொடுத்து அனைத்து அவளது கைகளைப் பற்றி இருந்தான் முத்து,அதில் அவள் உறைந்து நிற்க.அவனோ டீச்சர் நீங்க ஓடிடுங்க இந்த அடங்காபிடாரி அடிச்சிர போற.
அவனது பேச்சில் துண்டை காணோம் துணியைக் காணோமென்று ஓடியது பெண்.அன்று ஓடியது தான் எங்குச் சென்றது என்று தெரியவில்லை.
அவன் அங்குப் பேசிக்கொண்டு இருக்கப் பிச்சி முத்துவை தான் காதலாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அதை உணராமல் அடியேய் ரவுடி பாவம் அந்தப் பொண்ணு என்ன அழகா கண்ணாலம் பண்ணிக்கக் கேட்டுச்சு கெடுத்துட்டியா வெள்ள போந்த கோழி மாதிரி இருந்தா போலியாக அவன் வருந்துவதை உண்மையென நம்பி அவனை உதறி தள்ளி விட்டு சென்று விட்டாள்,அன்றில் இருந்து அவனிடம் இன்னும் மல்லுக்கட்ட ஆரம்பித்து விட்டாள்.
நடந்ததை எண்ணியவன் ,ரவுடி பொம்பள எம்புட்டு தைரியம் இருந்தா அப்புடி பணியிருப்பா,பாவம் அந்த டீச்சர் எங்க போச்சோ என்ன பண்ணுச்சோ,போலியாக வருந்தியவன் சிரித்து கொண்டே உறங்கி போனான்.
இரவு நேரம் தோப்பு வீட்டில் கால்களை ஆட்டிக்கொண்டு ஒரு கையை இடது புறமாகத் தலையில் வைத்து கொண்டு ,வலது கையில் போனை வைத்து எதையோ படித்துக் கொண்டு இருந்தான் சீயான்,இரவில் அவனும் முத்துவும் இங்கு வந்து உறங்குவது வழமை,இன்று முத்துவை அவனது தாய் தன்னுடன் படுக்குமாறு சொல்லவும்,சீயான் மட்டும் வந்துவிட்டான்.விதியின் கணக்கே தனித் தான் போலும்.
யாரோ வரும் அரவம் கேட்கவும் தலை நிமிர்ந்து பார்க்க, அங்கு வேம்புவை கண்டவன் பதறாமல் மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தான்.
அவனது அலட்சியம் வலிக்கத் தான் செய்தது இருந்தாலும்….மாமா ..
ம்….. என்ற வார்த்தை மட்டுமே.
மாமா …. நான் உங்ககிட்ட பேசணும்.
பேசு …
நான் ….எனக்கு…..நீங்க….வேணாம்… திக்கி திணற.
வேகமாக எழுந்து அமர்ந்தவன் எனக்கும் தான் நீ வேண்டாம் என்ன பண்ண எங்க ஆத்தாக்காக உனைய சகுச்சுக வேண்டியதா இருக்கு.
அவனது பேச்சில் கண்ணீர் பெறுக,அதான் வேண்டாமுன்னு சொல்லுறேன் அப்புடி எதுக்கு ஒரு வாழ்க்கை வாழனும்,தப்பு பண்ணதுக்குக் கடவுள் எனக்குத் தண்டனை கொடுத்துட்டாரு அதனால.
அதுனால அவளைக் கூர்மையாகப் பார்த்து கேட்டவன் கண்களைப் பார்க்க இயலாது வேறு புறம் பார்த்துக் கொண்டே நான் போறேன்.
தாராளமா போயிட்டு வா,அதுக்கு முன்னாடி என்றவன் யோசிக்காது அவளை ஒரே தூக்காகத் தூக்கினான்.அதில் பயம் கொண்டு அலறியவள் மாமா என்ன பண்ணுறீங்க இறக்கி விடுங்க மாமா.
மாமா கத்தியவரே அவனது தோள்களில் அடித்தவளை பொருட்படுத்தாது அந்த ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் கதவை சாத்தினான்.
அங்கு உள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளைக் கட்டிலில் விட்டு,ஒரு சிறு டப்பாவை எடுத்து வாய்க்குள் சரித்துக் கொண்டு,அவளோடு கட்டிலில் சரிந்தான்.
என்ன நடந்தது என்று உணரும் முன்னே எல்லாம் நடந்து முடிந்தது,கருக்கலில் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அள்ளி சென்றான் முத்து.
மயக்கத்திலும் சீயான் புன்னகைக்கக் காண்டன முத்து,திமிரு புடுச்சவனே நீ எல்லாம் நல்ல வருவடா எல்லாத்தையும் முடுச்சிட்டியே மாப்ஸ்.
சீறுவான்…………….