உயிர் – 14
அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது, சியோரா வீட்டில் எல்லாரையும் கிளப்பிக் கொண்டு சஜினா வீடு நோக்கி சென்றார்.. ஆனாலும் அவருக்கு கொஞ்சம் யோசனையாகவே இருந்தது… அவன் சரி சொல்லுவானா என்று ஆனாலும் ஒரு நம்பிக்கை நான் சொன்னால் தட்டமாட்டான் என்று.. அதே தான் சத்ரியா மனதிலும் ஓடியது, மையூரி மட்டும் ஒண்ணும் புரியாமல் முழித்துக் கொண்டு அவர்கள் கூடவே வந்தாள்…
அவளிடம் என் மகனுக்கு பொண்ணுபாக்க போறோம் சீக்கிரம் கிளம்பு என்றே கூறினார்… அவளுக்கு யோசனை அவர் மகன் வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றதாக சொன்னாங்க இப்போ அவர் இல்லாம பொண்ணு பார்க்க போறாங்க எப்படி என்று யோசித்துக் கொண்டு அவர்கள் கூடவே வந்தாள்…
RK வீட்டின் முன் வண்டியை நிறுத்தின சியோரா, அவன் மனைவியுடன் கம்பீரமாக வீட்டின் உள் கால் எடுத்து வைத்தார்… அவரின் வருகை எல்லாரையும் ஆச்சரிய படுத்தியது, சஜினா ஓடி வந்து அவர்களை வரவேற்றாள்..
“ வாங்க அங்கிள், வாங்க ஆன்ட்டி, வாங்க அக்கா ” என்று அவர்களை வரவேற்று, அவர்களை அமரவைத்து உள்ளே பார்த்து “ ராமு அங்கிள்க்குகுடிக்க ஜூஸ் கொண்டு வாங்க ” என்று அவருக்கு கட்டளை இட்டு அவர்கள் அருகில் அமர்ந்துக் கொண்டாள்…
அவளை பார்த்து “ அம்மா எங்கம்மா ” என்று கேட்டார் சியோரா..
“ அம்மா உள்ள ரூம்ல இருக்காங்க அங்கிள்.. அப்பா போனதுக்கு அப்புறம் அம்மா ரொம்ப வெளில வரல “ என்று கவலையாக கூறினாள்…
“ இப்போ ஒரு நல்ல விஷயம் பேச வந்திருகோம் அம்மாவை வர சொல்லுமா “ என்று கூறினார் சியோரா…
அவர் கூறவும் யோசனையாக அவள் அம்மாவை அழைக்க சென்றாள்.. அவர் வரவும் அவரிடம் சிறிது பேசி தாங்கள் வந்த விசயத்தை கூறினார் சியோரா…
சியோரா கூறிய விசயத்தை கேட்டதும் இருவருக்குமே ஆச்சரியம்… அவர் வர்மாக்கு இவர்கள் மகள் சஜினாவை பெண் கேட்டிருந்தார் சியோரா… அதிலும் வர்மாவும் தன் மகன் என்று கூறி தான் பெண் கேட்டார் சியோரா…
அவர்களுக்கு சந்தோசம் தாள முடியவில்லை.. சியோரா வீட்டில் சம்மந்தம் வைப்பது என்றால் எளிதான காரியமா.. எவ்வளவு தான் வசதியாக இருந்தாலும் நல்ல குணவதியான பெண்களை தான் அவர் மருமகளாக ஏற்பார். அந்த விசயத்தில் சஜினா அதிர்ஷ்டசாலியே…, அந்த இடத்திலையே அவளுக்கு வர்மா தான் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.. இன்னும் 1 மாதத்தில் திருமணம் வைத்துக் கொள்வோம் என்றும் நாள் பார்த்துக் கூறினார் சியோரா. அதே போல் அந்த முகூர்த்ததிலையே கௌசிக்–ஷதாஷி, மையூரி – வர்ஷிக் வரவேற்பும் வைப்பதாக பேசிக் கொண்டனர்… அதே போல் அவர்கள் கம்பெனியை சஜினாவே பார்த்துக் கொள்ளட்டும் என்றும் சியோரா எப்பொழுதும் அவர்களுக்கு துணை இருப்பார் என்றும் கூறிக் கொண்டு வெளியில் வந்தார்…
அதன் பிறகு அழைத்து வர்மாவுக்கு கூறினார். அதற்கு அவன் “ சார் கௌதமுக்கு முடிந்த பிறகு நான் பண்ணுறேன். நீங்க சொல்லுற பொண்ணையே கட்டுறேன் இப்போ அவனுக்கு பாருங்க ” என்று கூறினான்.
“ டேய் அவனுக்கு பிறகு பார்போம் இப்போ நீ முதலில் முடி.. என் சொல் கேட்டால் பேசாமல் இரு.. அவள் போன் நம்பர் அனுப்புறேன் ரெண்டும் பேரும் பேசி புரிந்துக் கொள்ளுங்கள் “ என்று கூறி அவனுக்கு அவள் நம்பர் கூறி அழைப்பை துண்டித்தார் சியோரா…
சத்ரியனுக்கு இன்னும் சித்தர்கூறியதே மனதில் ஓடியது… சித்தர் இருக்கும் இடம் காரை நிறுத்திய சத்ரியன் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தார், எங்கும் சின்ன சின்ன கைகள் நின்றிருந்தது. அந்த இடத்தின் நடுவில் மிக உயரமாக ஒரு கையும் அதன் கீழே கையில் அருவாள் வைத்திருந்த ஒரு கருப்பன் சாமி கம்பீரமாக நின்றிருந்தார், அவர் அருகில் ஒரு சித்தர் கையில் உடுக்கு அடித்து கொண்டு இருந்தார்.. இவர் அருகில் வரவும் கண்ணை திறந்த அவர் சத்ரியனை பார்த்து
“ எங்கு ஓடினாலும் உங்களை காப்பாற்ற முடியாது…
உன் முன்னோர் செய்த பாவம் உன்னையும் உன் வாரிசையும் தொடர்ந்து விரட்டும்
இன்னும் விரட்டும், நீ ஓடு, ஓடிக் கொண்டே இருப்பாய்.
ஆனால் இன்றோ உனக்கு ஒரு ஆறுதல் உங்களால் அழிந்தவள் தெய்வமாக மாறிகாட்சி அளிப்பாள்..
நீ காப்பாற்ற நினைக்கும் அவளுக்கு அழிவு நிச்சயமே…?? அவளைகாப்பாற்றமுடியுமோ? முடியும்.. ஆனாலும்…” என்று இழுத்து மீதி கூறாமல் வேகமாகடுன்ட்டுடூன்டுன்டுன்என்று உடுக்கை அடிக்க ஆரம்பித்தார்….
அவர் உடுக்கை அடித்து நிறுத்தி இரண்டு முறை தலையை அங்கும் இங்கும் ஆட்டிக் கொண்டு “ ம்ம்ம்ம்…. சரி… அவளை முடித்தால் காப்பாற்று… ம்ம்ம்.. சரி. ” என்று அவருக்குள்ளே கூறி மீண்டும் வேகமாக் .. டுன்ட்டுடுடூன்டுன்டுன்என்று உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார்….
பின் உடுக்கை அடிப்பதை நிறுத்தி விட்டு அவரை நோக்கி “ உங்கள்பேத்திக்கு நீங்க நினைக்குற மாதிரி கோட்டையால்ஆபத்து இல்லை..ஆனால் அவளின் 2௦ வது வயதில் உயிர் கண்டம் இருக்கு.. உங்க ஊருக்கு அவள் வராமல் இருந்தாலே போதும் அவள் பிழைத்துக் கொள்வாள்., இந்த ஊரில் தான் அவளுக்கு கண்டம் இருக்கு… நீங்க கூறிய கோட்டை இப்பொழுது சாமியாகி விட்டாள் அவளால் இனி யாருக்கும் ஆபத்து இல்லை.ஆனால் அந்த2௦வயதில் கோட்டை சிலையை விட்டு வர வாய்ப்பு இருக்கு… ஆனால் கவனம் உங்கள் பேத்தி 2௦ வயசுக்கு பிறகு இங்கு வரட்டும்…அதனால் தான் கூறுகிறேன் உன் பேத்தியை இங்க வரவிடாதே அவளின் 2௦ வது வயது வரை.. மிக கவனம்.. ஆனால்” என்று இழுத்து சொல்ல வந்ததை விட்டு “சுவர் இடிந்தது என்று கவலை படாதே அது நல்லதே… நாளை நடப்பது நல்லதாகவே இருக்கும்“ என்று கூறி அனுப்பினார்…
அவர் சத்ரியனிடம் இவ்வளவு மட்டுமே கூறினார்.. ஆனால் அவர் உடுக்கை அடிக்கும் பொழுது கூறியதை எல்லாம் கேட்டு சத்ரியன் இந்த கடவுள் அவளை காப்பாற்றுவார் என்று எண்ணிக் கிளம்பினார்…
இதை எல்லாம் யோசித்த சத்ரியனுக்கு இப்பொழுது மைத்ரேயியை காப்பது மட்டுமே அவர் கடமையாக இருந்தது… உடனே அவளுக்கு அழைத்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு அழைப்பை துண்டித்தார்..
சத்ரியன் போவதையே பார்த்துக் கொண்டு இருந்த சித்தர் “ பாவம் ஒரு கரையில் பழி ஒரு கரையில் “ என்று கூறிக் கொண்டு டுன்ட்டுடுடூன்டுன்டுன் என்றுஉடுக்கையை அடித்தார்..
அடித்துக் கொண்டே அதிர்ந்த அவர் தலையை மீண்டும் ஒருமுறை சிலித்துக் கொண்டு “அவள் அழிந்து மீண்டும் வருவாளா “ என்று கூறி… உடுக்கைஅடிக்க ஆரம்பித்தார்…
கூடவே“ இறைவன் எழுத்தை யார் அறிவாரோ “ என்று சத்தமாக் கூறி அவர்மீண்டும் உடுக்கை அடிக்க ஆரம்பித்தார்….
இங்கு கௌதம்க்கு மனம் முழுவதும் அவளே நிறைந்து இருந்தாள், அவள் இங்கு இருக்க வரை அவள் நினைப்பு அவனுக்கு கொஞ்சமும் வரவில்லை, அவள் போனதும் எங்கும் அவனை அவள் துரத்திக் கொண்டே இருந்தாள், இல்லை அவளின் “ மாமா “ என்ற அழைப்பு துரத்திக் கொண்டே இருந்தது…
அப்படியாக அவள் நினைவுகளை சுமந்துக் கொண்டே கோட்டை வேலையும், கோட்டைத்தாய் கோவில் வேலையும் முடித்துவிட்டான்… அவன் எக்காரணம் கொண்டும் அந்த கோட்டைக்குள் செல்லவே இல்லை. இதை கோட்டைத்தாய் ஒரு இயலாத பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள்.. காரணம் அது அவர்கள் கோட்டை.. ஆனால் இப்பொழுது அதை அனுபவிப்பவர் யாரோ??அவள் நினைத்தால் வெளியில் வரலாம் தான் ஆனால் இப்பொழுது அவள் கடவுளாக இருக்கும் தருணம் அப்படி அவளால் எண்ணமுடியவில்லை…
அமைதியாக அவன் செயல்களை பார்த்துக் கொண்டு இருந்தாள், கோட்டையின் உள் செய்ய வேண்டியதை வர்ஷிக் எப்படி சொன்னானோ அப்படியே அவன் அழைத்து வந்தவர்களிடம் கொடுத்து விட்டான்.. அதே போல் எல்லாம் மாற்றி அவனிடம் கடைசியில் போட்டோ எடுத்து காமித்தனர். அவனுக்கும் அது திருப்தியாக இருக்கவும் சரி என்று விட்டான்..
கோவில் வேலைகள் எல்லாம் அவனே பொறுமையாக செய்து 15 நாளில் முடித்துவிட்டு இதோ அவன் படைகளுடன் மும்பை கிளம்பி விட்டான்.. கடைசியில் அந்த மணியை கவனிக்காமலே சென்றுவிட்டான்….
இந்த முறை அவனை தடுக்க கோட்டைத்தாயால் முடியவில்லை.. அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள்…
அவன் மணியை கவனிக்காமல் சென்றது தான்மிக பெரிய தவறு, அவள் உயிரை எடுக்க இவனே வழி வகுத்துக் கொடுத்து விட்டானோ?? அவன் கிளம்பி சென்ற பிறகு தான் அந்த மரமே மீண்டும் அசைந்தது…
கோட்டையை அந்த சிலையில் குடியேற்றி வைத்து விட்டு தேவி கிளம்பி விட்டாள். அதை கண்ட மரம் தனது கிளைகளை எல்லாம் சுருட்டிக் கொண்டு அப்படியே நின்றது… ஆனால் அவன் கிளம்பவும் அதன் சந்தோசத்தை கிளைகளை அசைத்து வெளிப்படுத்தியது.. அதன் சந்தோசத்தை யோசனையோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் கோட்டை…
பின் என்ன நினைத்தாளோ ஒரு சோக புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.. அவளுக்கே தெரிந்திருக்குமோ என்னவோ அவளை மனதார வேண்டுவோரை அவள் அழிக்க மாட்டாள், அழிக்க விடமாட்டாள்… ஆனால் காலத்தின் கோலத்தை அந்த நேரம் அந்த தாயே கணிக்க தவறிவிட்டாள் என்றே நான் எண்ணுகிறேன்….நாளைக்கே அவளுக்கு எதிராக இயற்கை அன்னை மாறிவிட்டாள் என்றால்???
அங்கு மைத்ரேயிக்கு அவளின் ஜிக்கி கூட மிக மிக அருமையாக சென்றது, அடிக்கடி வரும் அவளின் மாமா நினைவை அவளின் மொபைலில் வைத்திருக்கும் அவன் முகம் பார்த்து ஆறுதல் அடைவாள்…
அப்படி தான் அன்று ஒரு நாள் இரவு தூக்கத்தில் “ மாமா என்னை விட்டு எங்கையும் போகாதிங்க?? நான் செத்தாலும் உங்க கூடவே சாகணும் மாமா என்னை விட்டு போகாதிங்க.. மாமா” என்று ஒருநாள் அலறலுடன் இவள் எழவும் கூடவே ஜிக்கியும் “ என்ன ஆச்சு மைக் யாரு மாமா என்ன ஆச்சு “ என்று பதட்டத்துடன் கேட்கவும்
மைத்ரேயி அழுதாளே தவிர ஒன்றும் கூறவில்லை ஜிக்கி தான் வற்புறுத்தி கேட்கவும் அவளின் மாமா பற்றி கூறி அவனின் போட்டோ காட்டினாள்..
அதை வாங்கி பார்த்த ஜிக்கியின் கண்களில் ஒரு நிமிடம் பழி வெறி வந்து போனதோ..??? என்று அறியா வண்ணம் பார்வையை மாற்றிக் கொண்டு அவளை நோக்கி “ உன் மாமா உனக்கு கண்டிப்பாக கிடைப்பாங்க மைக். நீ கவலை படாத… அவங்க எந்த ஊரு ஜிக்கி..இப்போ எங்க இருக்காங்க” என்று கேட்டாள் ஜிக்கி…
ஜிக்கி கேட்டதும் “ மாமா எங்க ஊரு கோட்டைநல்லூர்ல இருக்காங்க.. அவங்க ஊர் மும்பைன்னு தான் சொன்னாங்க நான் மெதுவா அவங்க கிட்ட எல்லாம் கேட்கலாம்னு இருந்தேன்.அதுக்குள்ள தாத்தா இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.. அங்க தான் எங்க கோட்டையையும், எங்க கோவிலையும் சரி பண்ண வந்தாங்க.. அவங்க ரொம்ப பெரிய ஆளுங்க.. அவங்க கூடவே 6 பேர் வந்தாங்க” என்று சிறுபிள்ளையாய் கவலையுடன் கண்ணீர் முகத்துடன் கூறினாள்மைக்..
அவள் கூறியதை எல்லாம் மனதில் குறித்துக் கொண்டஜிக்கிஅவளின் கவலையான கண்ணீர் முகத்தை பார்த்து “சரி.. சரி.. அழாத மைக். உன் மாமா எங்க இருந்தாலும் உனக்கு கண்டிப்பாக கிடைப்பாங்க.. அவங்க இங்க இருந்தா உன் கண் முன்னால கண்டிப்பா வருவாங்க”என்று கூறினாள்..
கூடவே“ ஜிக்கி நான் எப்படி இருக்கேன்.. என் மாமாக்கு எதுக்கு என்னை பிடிக்கலை “ என்று சோகமாக முகத்தை வைத்து கேட்கவும், அவளை பார்த்த ஜிக்கி..
“ உனக்கு என்ன மைக் ”என்று கூறி அவளை பார்த்தாள் ஜிக்கி “ குழந்தைமுகம், குண்டு அழகான கன்னம், கவர்ந்து இழுக்கும் குட்டி கண்கள், சிறிய உதடு என்று பார்க்கவே பார்பி டால் மாதிரி தெரிந்தாள் மைக்.. கூடவே இவள் கோட்டை பற்றி கூறியதும் ஜிக்கிக்கு இவள் முகத்தை பார்க்கும் பொழுது பிரின்ஸ்செஸ் கதையில் வரும் பார்பி தான் நியாபகத்தில் வந்தால் அப்படி தான் மைக் இவள் கண்களுக்கும் தெரிவாள்…
ஆனால் என்ன இங்கு ஹாஸ்டலில் இருக்கும் பொழுது மட்டும் ஏனோ தானோ என்று அசல் பட்டிக்காடு போலவே இருப்பாள், காலேஜ் போகும் பொழுது மட்டுமே சுடிதார் போட்டு செல்வாள், அதிலும் இவள் காலில் கிடக்கும் கொலுசு, இவள் நடக்கும் பொழுது வரும் சத்தம் அப்படியே மோகினி நடந்து வரும்பொழுது உள்ள சத்தம் போலவே இருக்கும், முதலில் இவளை நிறைய பேர் கேலி செய்யவும், யாரையும் கண்டுக் கொள்ளாமலே இருப்பாள், ஜிக்கி தான் இவளுக்கு பதிலாக அவர்களிடம் சண்டை போடுவாள். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மைக்கை மாற்றி வருகிறாள் ஜிக்கி…
மைக்கை பார்த்து “ மைக் நீ ரொம்ப குயூட்டா இருக்க.. ஆனால் ஒண்ணு உன் டிரெஸ்ஸிங் சென்ஸ் மட்டும் கொஞ்சம் மொக்கையா இருக்கு, அப்படியே உன் கொலுசும் மாத்தி உன் மாமா முன்னாடி நின்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும், நாளைக்கு ஷாப்பிங் போய் உனக்கு தேவையான எல்லாம் வாங்கலாம் இப்போ கவலை படாம இரு ” என்று கூறிஅவளை தன் மடியில் படுக்க வைத்து ஆறுதலாக தலையை தட்டி விட்டுக் கொண்டு கெளதம் போட்டோவையே வெகுநேரம் வெகு வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள்ஜிக்கி…
இதற்கிடையில் வர்ஷிக் அவன் மனைவியிடம் போன் மூலமாய் அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாய் குடியேறி வந்தான்…. அவன் ஒரு நாள் போன் பேசவில்லை என்றாலும் அவள் அவனை தேட ஆரம்பித்தாள்.. அவன் வேலை விஷயமாக எகிப்த் சென்று திரும்பி வர நாள்கள் அதிகமாகி கொண்டே வந்தது…
கௌசிக் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் ஷதாஷியை தேடினான்… அவன் இன்னும் வாழ்கையை ஆரம்பிக்கவில்லை.. ஆனாலும் எல்லாத்துக்கும் அவளை தேடினான்.. அவனுக்கு அவள் எப்பொழுதும் தேவை என்று உணர்த்திக் கொண்டே இருந்தான்….
அவன் அப்பா ஆசைகிணங்க அவன் அந்த வேலையை விட்டு விட்டு இப்பொழுது சியோராவுடன் ஆபீஸ் வருகிறான்… கூடவே இனி சஜினா ஆபிஸ் கவனிப்பதும் அவர்கள் வேலையே. அது தான் சியோரா அவனை அவர் கூடவே அழைத்துக் கொண்டார்…
அதே நேரம் கௌதமும் வந்து சேர்ந்தான்.. வந்ததும் அவன் அப்பாவிடம் அங்கு நடந்ததை எல்லாம் கூறினான்… அவன் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்ட சியோரா “ டேய் கெளதம் விடுடா. எல்லாம் பாத்துக்கலாம், இப்போ அந்த பொண்ணு அங்க இல்ல தான… அவா அங்க வர நேரம் இங்க நாம அழைச்சுட்டு வந்துருவோம்.. நான் நம்ம டிடெக்டிவ் கிட்ட சொல்லி இருக்கேன். அவள் அந்த ஊருல காலெடுத்து வைத்ததும், நாம அழைச்சுட்டு வந்து விடுவோம்” என்று கூறினார்…
அவர் சொல்வதும் அவனுக்கு சரி என்று படவே அதன் பிறகு அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்… அதன் பிறகு அவர்களுக்கு எதை பற்றி யோசிக்கவும் நேரம் இருக்கவில்லை…ஆனால் அடிக்கடி அவளின் “ மாமா ” என்ற வார்த்தை அவன் மனதில் வந்து மோதியது.. RK ஆபிஸ் இவர்களுடன் இணைப்பதில் அவர்களுக்கு நேரம் சரியாகவே இருந்தது…
வர்ஷிக் வேலை முடிந்து அவனும் இங்கு வந்து விட்டான்… அவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் பிடிவாதம் உண்டு அது தான் வந்ததும் மையூரியை அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கி சென்றான்… சத்ரியா அவளை விடவே இல்லை.. ஆனால் வர்ஷிக் அவரிடம் எது எல்லாமோ பேசி அடிக்கடி வருகிறோம் என்று கூறி கிளம்பி விட்டான்…
இன்னும்5 நாளில் வர்மா திருமணம், கௌசிக், மையூரி வரவேற்பு என்ற நிலையில், அவர்களை வேலைகள் மூழ்கடித்துக் கொண்டு இருந்தது..
அதே நேரம் கோட்டைநல்லூர் ஊரில் இருந்து 2 குடும்பம் ஊரை காலி செய்துக் கொண்டு கிளம்பினார்கள் பக்கத்துக்கு ஊருக்கு… இந்த ஒரு மாதமாக வீட்டில் இருக்க முடியவில்லை எங்களால் இனி இந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று கிளம்பிவிட்டனர்… அதிலும் இன்னும் ஒருவாரத்தில் வந்து நிலத்தை கோவில் பெயருக்கே எழுதி கொடுத்து விடுவோம் என்று கிளம்பினார்கள்.. இச்செயலை ஒருவிதமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்கோட்டை.. அவள் நினைத்தால் அவர்களை தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அதை அவள் செய்ய எண்ணவில்லை…. எண்ணவில்லை என்பதை விட அவளுக்கு பிடிக்கவில்லை..
ஆனால் சத்ரியனால் இதை பார்க்கமுடியவில்லை… சுவர் இடிந்து விழுந்தது நல்லதுக்கு என்றே எண்ணினார். ஆனால் கோட்டை கட்டிஇந்த ஊரை பாதுகாத்து வந்தாள் கோட்டைத்தாய்.. ஆனால் அவள் கட்டிய சுவர் இடிந்து விழுந்ததில் ஊரில் இருந்த மக்கள் வெளியேறியதை அவரால் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை..
மீண்டும் அந்த மதில் கட்டினால் போன மக்கள் திரும்பி வருவார்களா என்று தெரியவில்லை, ஆனால் அந்த சித்தர் சுவர் இடிந்தது நல்லதுக்கே என்று கூறினார்… இப்படி மக்கள் வெளியில் செல்வது நல்லதா?கெட்டதா? என்று யோசித்துக் கொண்டு இருக்கும் நேரம் போன் அழைக்கவே எடுத்தார் சத்ரியன்…
அதில் கோவில் பணி முடிந்ததும் கோட்டைத்தாய்க்கு விழா எடுக்க எண்ணி நாள் குறித்து தர கூறி இருந்தார்.. இன்னும் 2 மாதத்தில் நல்ல நாள் இருப்பதாக கூறினார் அந்த ஜோசியர்…
அதை உடனே மைத்ரேயிக்கு அழைத்து கூறினார் சத்ரியன்.. அவளுக்கு சந்தோசம் கூடவே அவளும் வருவேன் என்று அடம் பண்ணவே அவளை கண்டிப்பாக வர கூடாது என்று கூறி விட்டார்.. அப்படியும் அவள் வந்தால் “ தான் எங்கோ சென்று விடுவேன் “ என்று மிரட்டி கூறியதால் அழுகையோடு “ சரி ” என்று உடனே கோபத்துடன் அழைப்பை நிறுத்தி விட்டாள்..
அதன் பிறகு சத்ரியன் எவ்ளோ அழைத்தும் போன் எடுக்கவே இல்லை… சரி நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி மேலும் அவளை அழைக்கவே இல்லை சத்ரியன்..அந்த நேரம் அவளுக்கு அவளின் அக்கா நினைவு வந்தது… அவள் நினைவு இவளுக்கு கண்ணீரை வரவைத்தது.. இவளின் கண்ணீரை பார்த்து ஜிக்கி தான் அவளை சமாதான படுத்திஇருந்தாள்….
மைத்ரேயிக்குஎல்லாமுமாக இருந்தாள் ஜிக்கி… மைத்ரேயி துக்கம், சிரிப்பு எல்லாமே அவளின் ஜிக்கி தான்…
இன்று விடுமுறை நாள் ஷாப்பிங் செல்லலாம் என்று ஜிக்கியும், மைத்ரேயியும் கிளம்பிக் கொண்டு சென்றனர்… அதே நேரம் கெளதம் வீட்டில் எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வந்தான்…
ஜிக்கியும், மைத்ரேயியும் சென்ற அதே காம்ப்ளெக்ஸ் சென்றான். அங்கு மைத்ரேயிக்கு உள்ளுணர்வு ஏதோ உணர்த்தியது கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டுக் கொண்டே வந்தாள். ஜிக்கி என்ன என்று கேட்டதற்கு “ ஒன்றும் இல்லை ஜிக்கி ” என்றுகூறி அவளுடன் நடந்து சென்றாள்…
மைத்ரேயியும், ஜிக்கியும் முன்னால் நடக்க அவர்களுக்கு பின்னே கெளதம் எல்லாரும் நடந்து வந்தனர்.. எதேச்சையாக திரும்பிய ஜிக்கி கௌதமை பார்த்துவிட்டாள்.. பார்த்து ” மைக் ” என்று அழைத்தாள்.. ஆனால் அவளின் மைக்கோ அவளின் மாமா நினைவில் எங்கோ பறந்துக் கொண்டு இருந்தாள் ஜிக்கி அழைத்ததை அவள் கவனிக்கவே இல்லை…
அவளின் மைக் எந்த ரியாக்க்ஷனும் காட்டவில்லை என்றதும், அவள் முகம் நோக்கி திரும்பினாள் ஜிக்கி… மைக் இருப்பதை பார்த்து விட்டு மைக் என்று அவளின் கையை தொட்டு உலுக்கிய ஜிக்கி அவளின் பின்னே கையை காட்டினாள்.. அந்தோ பரிதாபம் யாரும் அங்கு இல்லை..
திரும்பி பார்த்த மைக் அவளை பார்த்து “என்ன ஜிக்கி” என்று கேட்கவும்,
அவர்களை காணவில்லை என்றதும், சமாளித்துக் கொண்டு “வா நாம அந்த பக்கம் செல்வோம் ” என்று கெளதம் சென்ற பக்கமே அழைத்து சென்றாள் ஜிக்கி…
உயிர் எடுப்பாள்….
கோட்டைநல்லூரை விட்டு எல்லாரும் கிளப்பி விடுவார்களா?? கௌதமை மைத்ரேயி பார்ப்பாளா? அதற்குள் ஜிக்கி ஏதாவது செய்வாளா?? சித்தர் கூறியது நடக்குமா?? இயற்கை அன்னை என்ன எண்ணியிருக்கிறாள்?? இப்படி பல கேள்விகளுடன் உங்களுடன் நானும்…