sippayinmanaivi5

தெற்கு திசை காட்டி

கணியன் வஞ்சிகாடு துறைமுகத்திலிருந்து வடக்கில் இருக்கும் யுவனசாலை மற்றும் ரோமசாலை நோக்கி மேற்கு கடலில் கரையோரமாக அம்பியில் பயணம் செய்து கொண்டிருந்தான். யுவனர்களும் ரோமர்களும் தங்கி வாணிபம் செய்ய ஏற்படுத்திய குடியேற்றங்கள் தான் யுவனசாலை மற்றும் ரோமசாலை. போரில் வெற்றி பெற்று கூடல் நகரில் விருந்து தரவிருக்கும் உக்ரகாரியின் பிரதிநிதியாக கணியன் தன் முதல் அழைப்பை யுவனசாலையிலிருந்து தொடங்கவிருக்கிறான்.

மேற்கு கடலில் நீர் சற்று அமைதியானது, கிழக்கு கடலில் அடிக்கடி சுழல்காற்று, பேரலை போன்று கடல் வாணிபத்திற்கு இடையூறு அதிகம் ஆனால் மேற்குக்கடலில் பெரிய இடையூறுகளை சந்தித்ததில்லை. அமைதியான சிற்றலைகளில் மிதந்துகொண்டே மேற்கு கடலில் இணையும் மங்கூர் மலைதொடரின் அடிவாரத்தில் இருக்கும் யுவனசாலை துறையில் குதிரையின் முகம் கொண்ட கணியனின் அம்பி கரையொதுங்கியது. கணியனின் மொழிபெயர்ப்பாளர் மதிமாறன் அவனோடு எப்பொழுதும் இருப்பான். மதிமாறன் மொழிபெயர்ப்பாளர் மட்டுமில்லை கணியனின் மெய்க்காப்பாளன். மதிமாறனின் வீரமும் அறிவு கூர்மையும் தான் பல இக்கட்டான சமயங்களில் கணியனின் நிதானத்தின் காரணம்.

யுவனசாலையில் பெரிய மாளிகைகள் வீதியெங்கும் இருந்தது, அதில் யுவனர்கள் நாகர் சிற்றரசர்கள் போல் சிறப்புடன் இருந்தனர் சில வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்ட ஊர் இவை. சட்டென்று வேறு ஒரு உலகிற்கு சென்றது போலிருக்கும், அடிமைகள் மற்றும் சிங்கங்கள் , புலிகள் பல கூண்டில் அடைக்க பட்டிருந்தது, மேலாடை இன்றி இருக்கும் அடிமை பெண்கள் தலைமுடி புழுதியேறி இருந்தனர். உடல் மெலிந்த ஆண்கள். இந்த அடிமைகள் எல்லாம் யவனர்கள் மற்றும் ரோமர்கள் வேறுநாட்டில் போர் செய்து அதன் மூலம் போர் குற்றவாளிகளாக வந்தவர்கள்.  ஆனால் அந்த வியப்பு கணியனுக்கு இல்லை, பல நாடுகள் பல மனிதர்களை கண்டவனுக்கு இது பெரிய அதிசயம் இல்லை. நாகர் மட்டுமல்லாது உலகையே தன் இருப்பிடமாக பார்க்கும் கணியனுக்கு எல்லா மனிதர்களையும் ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை உண்டு.  யுவனசாலையின் முடிவில் பெரிய மாளிகை ஒன்று அதன் மேல் ஒரு கொடி, அந்த கொடியில் நான்கு தூண்களை கொண்ட கோவில் அதன் இரு பக்கமும் தங்க நிறத்தால் ஆன இலைகளுடன் இருக்கும் தண்டு. அந்த கோடியில் இருக்கும் கோவில் போன்றே அந்த மாளிகையும் இருந்தது. நாகர்களின் கோட்டைகளும் அந்த யுவன மாளிகைகளும் எள்ளளவும் ஒற்றுமை இல்லை. முக்கோண கூம்பு கொண்ட அந்த மாளிகை முழுவதும் ஒரே நிறத்தில் இருந்தது, சுண்ணாம்புக்கற்கள் நிறத்தில். அந்த மாளிகையின் வாசலில் கணியனின் பல்லக்கு நின்றது.

‘பெருமைமிக்க யுவன பேரரசர் சொடேரின் பேரில் உங்களை வரவேற்கிறார் அசிலி’ .அசிலியின் மொழிபெயர்ப்பாளர்  பெர்காமோன் வரவேற்றான்.அசிலி யுவனசாலையின் தலைவன். அசிலின் கட்டளையின் கீழேதான் யுவன வணிகர்கள் நடந்தாக வேண்டும். யுவனர்களின் பாதுகாப்பிற்கு நாகர் நாட்டில் அசிலியே பொறுப்பு.

‘யுவனசாலை வந்ததில் பெரும் மகிழ்ச்சி’ கணியன் கூறிய பின்னர் மதிமாறன் மொழிபெயர்த்தான். பல திங்கள்கள் யுவனசாலையில் கழித்து அங்கு அனுபவிக்காத சுகங்கள் இல்லை எனினும் அசிலியை பார்க்கும் போதெல்லாம் இதை சொல்ல மறப்பதில்லை. சில அமைதியான மௌன புன்னகை நிமிடங்கள் கழிந்தது.

‘கூடல் நகரை தாண்டி யுவன வணிகர்கள் ஆளுமை இல்லாமல் இருக்கிறது, அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா ?’ அசிலின் பார்வைக்கு பின்னர் பெர்காமோன் சொன்னான் .

‘அங்கே தருமர்கள் மட்டும் சின்னர்கள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் மேலும் வகன துறைமுகங்கள் பெரிதும் பயனின்றி இருப்பதனால் ஐநுறுவர் மற்றும் இதர வணிகர்கள் பூம்புகார் துறையிலும் முத்தூரு துறையிலும் ஏற்றுமதி இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் சில ஏற்பாடுகள் செய்யலாம் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்’ மதிமாறன் சொன்னான் அதற்கு கணியன் தலையசைத்தான்.

‘நடக்கவிருக்கும் கூடல் நகர் விருந்தில் இதைப்பற்றி பேசுவோம். பெருங்கலூர் சிற்றரசுக்கு உட்பட்ட கலப்பட்டினம் துறைமுகம் நாகரின் உள்நாட்டு துறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது அங்கே ஏதேனும் செய்யலாமா என்று சிந்திப்போம் அதற்கு மலையமான் ஒற்றுக்கொள்ளவேண்டும்’  கணியன் சொன்னான் அதை மணிமாறன் மொழிபெயர்த்தான்.

‘யுவனசாலை அமைத்து மேற்கில் எங்களுக்கு பெரும் வாய்ப்பை அமைத்து கொடுத்தீர்கள், கிழக்கிலும் யுவனசாலைகள் அமைக்க வேண்டும்’ அசிலி சார்பில் பெர்காமோன் சொன்னான். கணியன் புன்னகையை பதிலாக அளித்தான். அதை புரிந்து கொண்டது போல் அசிலியும் புன்னகை செய்து கணியனை கட்டியணைத்தான். மாளிகைளின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு அழைத்து சென்றான்.
பெண்களின் நடனம் ஆரம்பித்தது பன்றி இறைச்சியும் மாட்டிறைச்சியும் முடிக்க இயலா சிறு குன்றுபோல் நிரம்பி இருந்தது அதனோடு தேறலும் பானைகளில் பீப்பாய்களில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று இரவு பல்லக்கு ரோமர்களின் சாலை நோக்கி சென்றது.

****
ரோமசாலை

ரோமசாலையும் கிட்டத்தட்ட யுவனசாலை போன்றே இருந்தது ஒரே வேற்றுமை கொடி, ரோமரின் கொடி சிறகு விரித்த கழுகு அதன் இருப்பக்கமும் தங்க நிறத்தாலான இலையுடன் இருக்கும் தண்டு. யுவன கதர் ஆடைகளை அணிதிருந்தனர் ரோமர்கள். மேற்கு கடலின் அக்கறை நாடுகளாகிய யுவனநாடும் ரோமநாடும்  தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டாலும். வாணிபம் பொறுத்தமட்டில் எந்த நேரடி சண்டையும் இல்லை அதுமட்டுமல்லாமல் அவர்கள் நாட்டில் நடக்கும் எந்த போறும் இங்கு எதிரொலிப்பதில்லை. இவர்கள் நண்பர்களும் இல்லை எதிரியும் இல்லை ஆனால் யுவனர்கலின் பேரரசன் சொடேர் தொடர் படையெடுப்பில் ஈடுபட்டிருக்கிறான்.  யுவனர்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நிலம் வழியாக நிறைய நாடுகளை கைப்பற்றிவிட்டான் இவ்வாராகவே தொடருமானால் சீக்கிரமே சொடேர் சோனா மலை தொடரின் அப்பாலிருக்கும்  சல்வ நாட்டையும் பீஜே நாட்டையும் கைப்பற்றிவிடுவான். அப்பொழுது சோனா மலை தொடரின் இந்த பக்கம் இருக்கும் நாடுகளையும் விடப்போவதில்லை ஆகவே அசிலியிடம் சௌவலய, வகன மற்றும் நாகரின் ஆட்சி பொறுப்பு வரும் வாய்ப்பிருப்பதினால் அசிலியின் போக்கு சில சமயங்களில் நாகருக்கும் ரோமருக்கும் பெரிய குழப்பத்தை உண்டாக்கும்.

‘பெருமைமிக்க ரோமர் பேரரசர் கயத்சு பேரில் உங்களை வரவேற்கிறார் சுலா’. சுலாவின் மொழிபெயர்ப்பாளர் பேம்பே வரவேற்றான். சுலாயும் கணியனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். சுலாவின் பொறுப்புணர்ச்சியும் எதிர்காலத்தை கணிக்கும் திறனும் கணியனை வெகுவாக கவர்ந்தது, கணியன் ரோமநாட்டுக்கு சென்றபோதும் அவனை மகிழ்ச்சியாக வரவேற்றது மட்டுமல்லாமல் சிறந்த வணிகர்களை அறிமுகப்படுத்தி கடல் பயணங்களின் நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்தான். அதன் மூலமே ரோமசாலை ஆரம்பமானது என்றும் கூறலாம்.

கணியனும் சுலாயும் வெகுநேரம் வணிகம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர் அதன் பிறகு சுலா ஒரு பொருளை ரகிசியமாக கணியனிடம் காண்பித்தான்.

இது என்ன சிறிய மீன் சிலை?

இது சின்னர்கள் கண்டுபிடித்தது. இதை நீரில் வைத்தால் எப்பொழுதும் தெற்கு நோக்கி காட்டும்.

ஆஹா இது என்ன விந்தை

ஆம் அரியவகை கல்லை கொண்டு செய்தது இது, சின்னர்களிடம் மட்டும் தான் இருக்கிறது.

அந்த தெற்கு திசை காட்டியை மணிமாறன் மேலும் கீழும் பார்த்து கொண்டிருந்தான். எப்பேர்ப்பட்ட அறிவார்ந்தவனும் புது விஷயத்தை பார்க்கும் பொழுது சிறு குழப்பத்திற்கு ஆளாவதுண்டு. அதன் அமைப்பை எப்படியாவது புரிந்துகொள்ள இயல்வதுண்டு ஆனால் சில விஷயங்கள் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. விந்தையும் குழப்பமும்மாக அந்த விருந்தை முடித்தான் மணிமாறன்.

‘மணிமாறா இது மிக பெரிய விஷயம், இதன் மூலம் எத்தனையோ பலன் கிடைக்கும்’ கணியன் சொன்னான்.

‘புரிகிறது தலைவரே, கடலில் திசைகள் தெரிந்தவர்கள் வெகு குறைவு அவர்களின் பற்றாக்குறையும் விலையும் மிக அதிகம். சின்னர்களின் கடல் வாணிபத்தின் வேகம் இப்பொழுது புரிகிறது’ மணிமாறன் சொன்னான்.

‘இல்லை இதை கடலில் திசைகள் காட்ட இன்னும் சின்னர்கள் பயன்படுத்தவில்லை, சின்னர்களின் இலக்கு கடல் வழியல்ல நிலம், சின்னர்கள் சோனா மலைகளுக்கு அப்பால் இருக்கும் நாடுகளை தண்டி தங்கள் பட்டு மற்றும் பானங்களை விற்க சாலைகள் அமைக்கிறார்கள்’ கணியன் சொன்னான்.

‘பிறகு எதற்காக இந்த தென் திசை காட்டும் மீன்’

‘அவர்கள் கட்டுமானங்களுக்கு தான் பயன்படுத்துகிறார்கள்’ கணியன் மேலும் தொடர்தான்.

‘ரோமநாட்டுக்கு அப்பால் சில நாடுகள் இருக்கின்றது அதை பெரும்பாலானோர் கண்டதில்லை கண்ட சிலர் அங்கே நாகரை போலவே பல வளங்கள் இருக்கின்றதாம், அங்கு செல்ல இதை பயன்படுத்துவோம்’ கணியன் சொன்னான்.

‘நிதி தலைவா நீர் சென்றுவிட்டால் நாகரை யார் காப்பது’ மதிமாறன் கேட்டான். புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்தான் கணியன்.

‘நாளை பிரம்பி செல்கிறோம் அல்லவா?’ கணியன் சொன்னான்.

‘ஆம்’

‘இரு ரோம குதிரைகளில் நாம் இருவர் மட்டும் செல்வோம்’

‘ஏன் இந்த மாற்றம்’

‘செல்லும் வழியில் சொல்கிறேன்’ கணியன் சொல்லிவிட்டு ரோமரின் தேறலில் திளைத்திருந்தான் கணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!