Sirpiyin kanavugal – 3

அத்தியாயம் – 3

அன்று மாலை தோட்டத்தில் அமர்ந்து பேசும்போது தான் சித்தார்த், “தருண், தியா இருவரிடமும் ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், நான் அடுத்த மாசம் இலங்கை போக போறேன்” என்றவனை இருவரும் திகைப்புடன் பார்த்தனர்.

அவனின் அந்த பேச்சில் திவ்யாவிற்கு சட்டென்று கோபம் வந்துவிட, “என்ன அண்ணா பேசுறீங்க? அங்கே போய் என்ன பண்ண போறீங்க நீங்க எங்கயும் போக வேண்டாம் இங்கே எங்களோட இருங்க” என்று அதட்டிய தங்கையின் கோபத்தைக் கண்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

“நான் அங்கே போவதில் உனக்கு என்னடா பிரச்சனை” அவன் சாதாரணமாக கேட்க, “இதையே நான் உங்களிடம் கேட்டா” தமையனிடம் சண்டைக்கு அடித்தளம் போட்டுவிட்டு கணவனின் பக்கம் திரும்பி,

“மாமா இங்க பாருங்க அண்ணா என்ன கேட்கிறேன்னு?” என்று தருணை பேச்சிற்கு இழுக்க, “நல்லா கேட்டிங்க மச்சான். இவளை என்னிடம் விட்டுட்டு நீங்க அங்கே போயிட்டா நாளைக்கு என் பசங்களுக்கு எல்லாம் யார் தாய் மாமன் சீர் செய்வது?” தருண் விளையாட்டாக கூறிய போதும் அவனின் பேச்சிலும் அவனை அங்கிருந்து அனுப்ப மனமில்லை என்ற விஷயம் மட்டும் மறைந்திருந்தது.

“இல்ல தருண் புரிஞ்சிக்கோ நான் இங்கிருந்த அம்மா நினைவு வந்துட்டே இருக்கும், அதன் இலங்கை போன ஐ எம் ஃபீல் பெட்டர்” தன்னிலை விளக்கம் கொடுக்க திவ்யா எதுவும் பேசாமல் எழுந்து செல்ல, “ஐயோ கோவிச்சிட்டு போறாளே” என்று புலம்பிவிட்டு சித்தார்த் பக்கம் திரும்பினான்.

மாலை நேரம் மறையும் சூரியனின் பிரகாசத்தில் அவனின் முகம் செந்நிறமாக காட்சியளிக்க, “இப்போ அங்கே போய் என்ன மச்சான் பண்ண போறீங்க” என்று கேட்டதற்கு அவன் மௌனத்தை பதிலாக கொடுக்க இனி பேசி பயனில்லை என்று எழுந்து வீட்டிற்குள் சென்று மறைய வானத்தில் மிதந்து செல்லும் மேக கூட்டத்தின் பக்கம் தன் பார்வையை திருப்பிவிட்டான்.

சில்லென்ற காற்று அவனின் உடலை தழுவிச்செல்ல, “நான் உங்களை காதலிக்கிறேன் சித்து, நம் திருமண விடயம் பற்றி அம்மா, அப்பாவிடம் கதைத்துவிட்டேன். அவர்களுக்கும் இதில் பரிபூரண சம்மதமே..”என்று கன்னத்தில் ரோஜா பூக்கள் எட்டிப்பார்க்க எதிர்ப்பார்ப்பை தேக்கிய விழியுடன் தன் முன்னே நின்றவளின் நினைவு இன்றும் அவனின் மனதில் நறுமணம் வீசியது.

அன்று அவளின் காதலுக்கு ஒரு பதில் சொல்லாமல் வந்துவிட்ட போதும், ‘என் மனைவி அவள் தான்’ என்ற முடிவுடன்தான் இந்திய மண்ணில் கால்பதித்தான். அதன்பிறகு வெகுநாள் அவளின் நினைவில் இருந்த போதும் தாயின் இறப்புதான் அவளின் பிரிவை அவனுக்கு தெளிவாக உணர்த்தியது.

தாயின் இடத்திற்கு தங்கை வந்தபோதும் மனம் ஏனோ அவளை தேடும் தேடலுக்கு விடை இல்லாமல் தவிப்பதை உணர்ந்து, ‘இனிமேல் இந்தியா வேண்டாம், இலங்கையில் சென்று தங்கிவிட வேண்டும்’ என்ற எண்ணமே அவனின் நிலையானது.

அங்கே செல்லும் உண்மையான காரணத்தை இவர்களிடம் சொல்ல விரும்பாதபோதும் இங்கிருந்து செல்லும் முடிவில் தெளிவாக இருந்தான் சித்தார்த். திவ்யாவைத் தேடி சென்ற தருண் சமையலறையில் நின்ற மனைவியின் பின்னோடு சென்று கட்டியணைத்துக் கொண்டான்.

“என்னடா இங்கே வந்துட்ட” என்று அவளின் முகத்தை நிமிர்த்த அவளின் கண்கள் கலங்கியிருப்பது கண்டு, “தர்ஷி என்னடா இதுக்கு எல்லாம் கலங்கிப்போன எப்படி?” என்று அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.

அவனின் மார்பில் தொத்தாக சாய்ந்துகொண்டு,  “அண்ணா பாருங்க என்னை புரிஞ்சிக்காமல் பேசறாங்க” குழந்தை போல சிணுங்கிய மனையாளின் உள்ளம் உணர்ந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவனின் முத்தத்தில் அவளின் மனம் ஆறுதல் அடைந்தபோதும், “ச்சீ நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என்று அவன் முத்தமிட்ட கன்னத்தை துடைத்தாள்.

“என்னோட எச்சில் பட்ட இடத்தை துடிக்கிற நீ” அவன் மறு கன்னத்தில் முத்தமிட சிறிதுநேரம் அவளோடு சிரித்தபடியே விளையாடி அவளை நடப்பிற்கு அழைத்து வந்தான்.

“இப்போ என்னங்க பண்றது” அவள் சோர்ந்த முகத்துடன் கவலையாக கேட்க, “நம்ம இலங்கை போலாமா” என்று குறும்புடன் கண்சிமிட்டிய கணவனை அவள் திகைப்புடன் ஏறிட்டாள்.

அவளின் பார்வையில் கேள்வி இருப்பதை உணர்ந்து, “நான் உண்மையாகத்தான் சொல்றேன், வா நம்ம உங்க அண்ணாவுடன் இலங்கை போலாம்” என்றான் சீரியஸான முகபாவனையுடன்.

“மாமா, உங்க அண்ணா அவங்க குடும்பம்” என்றாள் அவள் குழப்பத்துடன்

“அருண் அண்ணா குடும்பத்தை கணக்கில் எடுக்காதே அப்பாவிடம் பேசி பார்க்கிறேன் அவர் வந்த வரட்டும் இல்லாட்டி நம்ம இருவரும் உங்க அண்ணாவுடன் கிளம்பலாம்” அவன் தெளிவாக ஒரு முடிவெடுத்துவிட்டு தன் கையில் செல்லுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

அவள் மூவருக்கும் டீ வைத்துவிட்டு திரும்ப தந்தையுடன் பேசியபடி நின்றிருந்தான் தருண். அவனின் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து செல்வதையை சிந்தனையுடன் பார்த்தபடி அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

திவ்யா அமைதியாக சித்தார்த்திற்கு டீயை எடுத்துச் செல்ல அங்கே சிந்தனையுடன் அமர்ந்திருந்தவனின் முகத்தில் வேதனையின் அப்பியிருக்க, “அண்ணா நீங்க இலங்கை போறேன்னு சொல்றீங்க அங்கே ஏற்கனவே போயிருக்கீங்களா?” என்று கேட்டான்.

தன் அருகே யாரோ அமரும் ஆராவாரம் கேட்டு நிமிர்ந்தவன் அவளின் கேள்வியில், “நான் கார்டியலசிஸ்ட் இலங்கையில் கொழும்புவில் பண்ணேன். அப்போ ஒரு பொண்ணை விரும்பினேன் அவளை பார்க்க போகணும்” அவன் கிண்டலாக கூறியவனை கொலைவெறியுடன் பார்த்தாள் திவ்யா.

அப்போதுதான் சித்துவின் பேச்சின் பின்னோடு இருந்த ஏதோவொரு விஷயம் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அவனின் முக பாவனைகளை அவள் உன்னிப்பாக கவனிக்க அவனின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு தேடல் இருப்பதை உணர்ந்தாள்.

‘அண்ணா சொல்வது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் அவளின் மனதில் விஸ்பரூபம் எடுத்து நின்றது. ஒரு நொடியில் தன் எண்ணம் சரியானதாக இருந்தால் என்று சிந்திக்க, ‘அண்ணா என்னைக்கும் பொய் சொல்ல மாட்டான்’ என்ற எண்ணத்தில் அவனைகே கேள்வியாக நோக்கினாள்.

“நானே இங்கே செம கோபத்தில் கேட்கிறேன், நீ கிண்டலா பதில் சொல்ற” என்ற கோபத்தில் அவனுக்கு ஊற்றிய டீயில் சக்கரை கப்பை தலைகீழாக கொட்டிய தங்கையைப் பார்த்து சற்று மிரண்டுதான் போனான்.

“தியா என்னடா இது” அலறியவனைக் கண்டு கொள்ளாமல் பாசயம் ஆகும் அளவுக்கு நன்றாக கலக்கிவிட்டு அவனிடம் நீட்டினாள். அவன் அவளையும் டீயையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ‘கொலைவெறியில் இருக்கிறா போல’ என்று நினைத்துக்கொண்டே அவளை பரிதாமாக பார்த்தான்.

“அண்ணா” என்று மிரட்டிய தங்கையின் கையிலிருந்த கப்பை வாங்கியவனோ, ‘குட்டி ராட்சசி கண்ணு முன்னாடி சக்கரையைக் கொட்டிட்டு கலக்கி கொடுக்கிறாளே’ என்ற கொஞ்சம் குடித்தவனுக்கு திவட்டியது. உப்பு கொஞ்சம் அதிகமானால் சாப்பிட முடியாது.

அதே மாதிரி டீயில் சக்கரை கொஞ்சம் அதிகம் ஆனாலும் திவட்டிவிடும். இனிப்பும், கசப்பும் கலந்தது தான் வாழ்க்கை இரண்டில் ஒன்றுதான் வேண்டுமென்றால் வாழ விருப்பமின்றி போய்விடும்.

அவனோ பரிதாபமான முகத்துடன் , “நான் பாயிஷன் சாப்பட விரும்பல என்னை விட்டுவிட்டு குட்டிம்மா” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, “அதெல்லாம் முடியாது நீங்க குடிக்கணும்” அவள் சொல்லிகொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான் தருண்.

தனக்கு ஒரு சேரை இழுத்துபோட்டு அமர்ந்த தருண், “தர்ஷி மாமா பீர் அடிப்பேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சிது” என்றான் இயல்புடன்.

ஏற்கனவே தங்கை கொடுத்த பாயசத்தை குடிக்க போராடிக் கொண்டிருந்தவனுக்கு இவனின் கேள்வியில் புரையேறிவிட்டது.

‘இவனே வாயைக் கொடுத்து வழிய வந்து மாட்டிக்கிறானே, இன்னைக்கு மாப்பிள்ளை நிலை?” சித்தார்த் சிந்தனையில் தருண் அடிவாங்கும் காட்சியைப் பார்த்துவிட்டு தங்கையின் முகத்தைக் கேள்வியாக நோக்கினான்.

அவளோ அமைதியாக இருப்பதே சித்தார்த்திற்கு பீதியை அளிக்க திவ்யாவின் முகத்தை தருணின் கையில் டீயைக் கொடுத்துவிட்டு, “நீங்க குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடந்ததா அப்பா ஒரு முறை சொன்னாரு” என்றாள் சிரிக்காமல்.

அதை திவ்யா சொன்ன பாணியில் சித்தார்த் ஒரு நிமிடம் உண்மையா என்ற சந்தேகத்துடன் தருணைப் பார்க்க, “அடிப்பாவி” என்று டீயைக் குடிக்க குடிக்க கூறியவனுக்கு புரையேறியது.

அப்போதுதான் இவனுக்கு உண்மை புரிய, ‘இவ சரியான கேடியா இருப்பா போலவே’ என்று மனதிற்குள் நினைத்து சித்து தன்னை சுதாரித்து நிமிரும்போது திவ்யாவின் பார்வை அவனின் மீது கேள்வியாக படிந்தது.

இருவரின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளைக் கவனிக்காத தருண், “அடிப்பாவி பீர் எப்படி இருக்குன்னு கூட எனக்கு தெரியாது, நான் எப்போ குடிச்சிட்டு ரோட்டில் கிடந்ததை உங்க அப்பா பார்த்தாரு” என்று அதிர்ந்தவனை கண்டு அண்ணனும் தங்கையும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“அடப்பாவிகளா நான் பொய் சொல்றேன்னு கூட உங்க இருவருக்கும் தெரிந்துவிட்டதா?” என்று தலையில் அடித்துகொண்டவன் சித்துவிடம், “அப்பா நம்மளோட இலங்கை வரேன்னு சொல்லிட்டாரு” அவன் பங்கிற்கு ஒரு குண்டைத் தூக்கிபோட அதிர்ந்து நிமிர்ந்தான் சித்தார்த்.

‘இவங்க இருவரும் அங்கே எதுக்கு வராங்க’ என்ற சிந்தனையுடன் தருணைக் கேள்வியாக நோக்கியவன், “நீங்க என்ன சொல்றீங்க” புரியாத பாவனையுடன் கேட்டான்.

“நாங்களும் உங்களோட இலங்கை வரோம் என்று சொன்னேன்” என்றான் தருண் அசராமல்.

அப்போதும் அவன் புரியாத பார்வை பார்க்க, ‘அண்ணா என்னிடமே உண்மையை மறைக்கிற இல்ல இரு உன்னைக் கவனிச்சிக்கிறேன்’ மனதில் நினைத்தவளோ வேண்டுமென்றே, “வாவ் சூப்பர். ஹப்பாடா நான் எங்க அண்ணாவுடன் இலங்கை போறேனே” என்று குதுகலமாக கூறிய தங்கையை அவன் அதிர்ந்து நோக்கினான்.

திவ்யா என்றுமே ஒரு சிறு விசயத்தையும் நுணுக்கமாக எடைபோடும் பெண் என்ற உண்மை அறிந்தும் அவளிடம் தன் மனதை மறைத்தவனுக்கு காதலியை நினைத்து ஒருப்பக்கம் கலக்கமாகவே இருந்தது. அவளிடம் தனக்கு ஒரு தங்கை இருக்கிறது என்று சொன்னால் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பாளே என்ற சிந்தனையுடன் உழன்றது அவனின் மனம்.

“என்ன மச்சான் நாடுவிட்டு நாடு போன நாங்க வரமாட்டோம் என்ற நினைப்பா? சீக்கிரம் இங்கிருந்து கிளம்பும் ஏற்பாட்டைக் கவனிங்க நாங்க எங்க ஹனிமூனை இலங்கையில் கொண்டாடிக்கிறோம்” என்ற தருணின் குரல் அவனை நடப்பிற்கு அழைத்து வந்தது.

“ம்ம் சரி” என்ற பிறகு மனையாளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினான் தருண். அதன்பிறகு நால்வரும் இந்தியாவில் இருந்து இலங்கை குடிபெயர்ந்து செல்வது என்று முடிவாகிவிட முதல்கட்ட வேலையாக தங்களின் சொத்துகளை வித்துவிட்டனர்.

அதில் குறிப்பிட்ட ஒரு வீட்டை மட்டும் அருண் பொறுப்பில் விட்டுவிட்டு நால்வரும் இலங்கை சென்றுவிட்டனர். அடுத்த ஒரு மாதத்தில் இந்திய குடியுரிமையை இலங்கைக்கு மாற்றிக்கொண்டு கொழும்பில் சென்று இறங்கியது சித்துவின் குடும்பம்.

அங்கே செல்லும் முன்பே சித்தார்த் அங்கே சில சொத்துகளை வாங்கி ரிஜிஸ்டர் பண்ணியிருக்க திவ்யா மட்டும், “நாங்க மூவரும் தங்க தனியாக ஒரு வீடு வேண்டும்” என்றாள்.

திவ்யா எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க நினைக்கும் பெண் என்ற போதும் அவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்று புரியாமல், “எதுக்கும்மா நம்ம மூவருக்கும் தனி வீடு” என்றார் சேதுராமன்.

அவள் அப்போதுதான் ஆண்கள் மூவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்துவிட்டு, “மாமா அண்ணாவுக்கு கல்யாணம் ஆச்சு என்றால் நம்ம தங்க ஒரு வீடு வேண்டாமா” என்று குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தாள்.

அவளின் வழியில் நாம் யோசிக்கவில்லையே என்று ஆண்கள் இருவரும் தங்களுக்குள் நினைக்க, “திவ்யா எனக்கு இப்போ எல்லாம் கல்யாணம் வேணாம்மா” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டு அவன் அறைக்குள் சென்று மறைந்தான்.

அவனின் அந்த பேச்சில் திவ்யாவின் சந்தேகம் ஒரு வழியாக உறுதியாகிவிட, ‘அந்த பெண் யாராக இருக்கு’ அவள் சிந்திக்கும் போதே வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

ஆண்கள் இருவரும் வந்த பெண் யாரென்ற கேள்வியுடன் வாசலை நோக்கிட, “இந்த பொல்லாத பெடியன் வந்துவிட்டாரா?” கோபத்துடன் சுடிதாரின் சால்வையைத் தூக்கிப்போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அந்தநேரம் அறைக்குள் சென்றவன் வெளியே வர, “நீ உள்ளே போ” என்று பார்வையால் அவனை மிரட்டி படுக்கை அறைக்குள் தள்ளி கதவை தாளிட்டுவிட்டு திரும்பினாள் திவ்யா.

“ஐயோ வந்திருக்கிற நந்தினி எந்த உண்மையும் உளறாமல் இருக்கணுமே” என்றவன் வாய்விட்டு புலம்பிட அவளின் குரலில் வீடே அதிர்ந்தது.

“மாமி எங்கே இருக்கீங்க உங்க வருங்கால மருமகள் வந்திருக்கேன் வாசலுக்கு வந்து வரவேற்காமல் அப்படி என்ன பண்றீங்க” புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த நந்தினியை பார்த்து மூவரும் திகைத்து நின்றனர்.

நடுஹாலில் நின்ற மூவரையும் பார்த்தும், “அந்தாள் அந்த அமுக்க கள்ளன் எங்கே? என்னை என்ன லூசு என்று நினைத்தாரோ? காதலிக்கிறேன் என்று கதைத்ததும் ஆள் படிப்பை முடிச்சிட்டு இந்தியா பிளைட் பிடிச்சு போயிட்டார்” கோபத்தில் படபடவென்று கடுகைபோல பொரிந்து தள்ளிவிட்டாள்.

“அம்மா நீ யாரும்மா” என்று சேதுராமன் சிந்தனையுடன் கேட்க, “நீங்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தாலும் கொஞ்சம் எங்களின் தமிழைக் கதைத்து பழகுங்க மாமா..” அவள் போட்ட அதட்டலில்,

“நாங்க இனிமேல் கதைத்து பழகிறோம், ஆமா நீங்க யாரைத் தேடி வந்தீர்கள்” மரியாதையுடன் கதைத்த தியாவின் பேச்சில் கவரப்பட்டு, “நான் அந்த சித்தார்த்தை பார்க்க வந்தேன், ஆமா மாமி எங்கே சத்தத்தைக் காணவில்லை” என்ற கேள்வியுடன் சமையலறை நோக்கிச் சென்றது.

படுக்கையின் கதவைத் திறந்த திவ்யா அறைக்குள் இருந்த தமையனின் நிலைக் கண்டு வாய்விட்டு சிரிக்க அதுவரை திகைப்புடன் நின்ற தருண் அறைக்குள் எட்டிப்பார்த்தான்.

அங்கே கைகளில் முகத்தைப் புதைத்து அமர்ந்திருந்த சித்தார்த், “இன்னைக்கு தியாகிட்ட நல்ல மாட்டப்போறேன், இத்தனை நாள் ஏன் சொல்லல என்று ஆயிரம் கேள்வி கேட்பாளே” அவன் தனியாக புலம்பினான்.

“நீ சொல்லாமல் தெரிந்துவிட்டது அண்ணா நீ வெளியே வந்து பேசு” வம்பிற்கு இழுக்கும் தங்கையின் குரல்கேட்டு நிமிர்ந்தவன்,“நந்தினி” கண்டிப்புடன் வந்தது சித்தார்த் குரல்.

அடுத்த சிலநொடியில் ஓடிவந்த நந்தினி, “அவர் எங்கே” என்ற கேட்க தருண் அறைக்குள் கைகாட்டினான். மறுநொடியே உள்ளே நுழைந்த நந்தினி, “ராஸ்கல் காதலிக்கிறேன் என்று கதைத்தது பிடிக்கவில்லை என்றால் என்னிடம் இது பற்றி மறுபடியும் கதைக்காமல் எதுக்கு நீ இந்தியா போகிறீர்” என்று அவனை தலையணையில் வெளுத்துவிட்டு திரும்பியவளின் கரம்பிடித்து நிறுத்தினான்.

அவள் அவனைக் கேள்வியாக நோக்கிட, “அம்மா இறந்துட்டாங்க நந்து” என்று அவளின் இடையைக் கட்டிக்கொண்டு குழந்தைபோல கதறியபோது அவளின் மனம் இளகியது.

அவர்களுக்கு தனிமையைக் கொடுத்து மூவரும் நகர்ந்திட, “சித்து அம்மா உன்னோடுதான் இருப்பாங்க” என்று அவனுக்கு ஆறுதல் சொன்ன போதுமே அவளின் கண்கள் கலங்கியது.

அவனை சமாதானம் செய்து அவள் வெளியே வரும்போது மற்ற மூவரும் சிரிப்புடன் சோபாவில் அமர்ந்திருக்க, “ஏதுமறிய பெண் மனத்தைக் களவாடிய கள்ளன்” என்று அவனை சரம்வாரியாக திட்டிவிட்டு அவள் சென்றுவிட அறைக்குள் நுழைந்தனர் தருணும், தியாவும்!

இனியும் தப்பிக்க முடியாது என்ற காரணத்தினால், “நான் காதலிக்கும் பெண், என்னோட அம்மாவிற்கு பிறகு என்னை புரிந்து வைப்பது இருவர். ஒன்று நந்தினி, மற்றொன்று திவ்யா” என்றான்.

அதன்பிறகு நந்தினியின் வீட்டில் பேசி சித்துவிற்கும் – நந்தினிக்கும் திருமணம் முடிந்தது. மீண்டும் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பிட முதலில் நந்தினிக்கு ஆண் குழந்தை பிறக்க சித்தார்த் தந்தையின் நினைவில், “கார்முகிலன்” என்று பெயர் வைத்தான்.

அவனிடம் காரணம் கேட்ட தருணிடம், “என்னோட அம்மா கடைசி நிமிடம் வரை என்னோட இருந்தாங்க அப்பாவுடன் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கல” என்றான்.

அடுத்து தியாவிற்கு பெண் குழந்தை பிறக்க அவள் தாயின் நினைவில் “மேகவர்ஷினி” என்று பெயர் வைக்க கேள்வி கேட்ட நந்தினியிடம், “அப்பாதான் என்னை வளர்த்தார். அம்மா பாசம் அறியாமல் வளர்ந்துட்டேன். இந்த பெயர் வைப்பதால் என் அம்மா கூடவே இருக்கிற மாதிரி இருக்கும்” என்றாள்.

காலங்கள் உருண்டோடிட சிறியவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகினர்.