Sirpiyin Kanavukal – 9

அத்தியாயம் – 9

இந்த இடைபட்ட நாட்கள் கேம்பஸ் விடுமுறை என்பதால் இவர்களின் திருமண விடயம் தெரியாமல் இருந்தனர் மேகாவும், முகிலும்!

அன்று விடுப்பு நாள் என்பதாலோ எல்லோரும் வீட்டின் இருந்தனர். சித்தார்த், தருண் இருவரும் தங்களின் தொழில் பற்றிய விடயங்களை கதைத்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் நந்தினி, திவ்யா இருவரும் சமையல் வேலையை கவனித்தனர்.

மேகா மட்டும் யன்னலின் அருகே அமர்ந்து தீவிரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தன் அறையிலிருந்து வெளியே வந்த முகிலன் நேராக மேகாவிடம் சென்றான்.

“மேகா என்ன செய்து கொண்டு இருக்கிறீர்” என்ற கேள்வியுடன் அவளின் அருகே ஒரு கதிரையை போட்டுகொண்டு அவன் அமர நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவளோ புன்னகையுடன் மீண்டும் எழுத தொடங்கினாள்.

அவள் பதில் சொல்லாமல் மீண்டும் எழுதுவது கண்டு, “நீர் உங்கன்ர வேலையை கவனியும். நான் எந்த இடையூறும் செய்யல்லே” அவனின் முகம் வாடிவிட எழுந்து நடந்தான்.

அதற்குள் அவனின் கைபற்றிய மேகாவை அவன் கேள்வியாக நோக்கிட, “என்ன அவசரம் இருங்கோ முகிலன். நானே என்னவெண்டு காட்டுகிறன்” என்றவள் புன்னகை முகம் மாறாமல் சொல்ல மீண்டும் அவளருகே அமர்ந்தான்.

“இந்தாங்கோ பார்த்து எப்படி இருக்கின்றதென்று சொல்லுங்கோவன்” என்று அவனிடம் அந்த நோட்டைக் கொடுத்தாள். அதில் மழைமேகங்கள் சூழ்ந்த வானிலிருந்து பொழியும் முதல் துளி சிற்பிக்குள் விழுந்து முத்தாக மாறியது.

வானில் இருந்து விழும் முதல்துளி

சிற்பிக்குள் விழும் மழைத்துளி

முத்தாக மாறியது..

நூற்றாண்டு கடந்த முத்தை

ஈன்ற சிற்பிக்குள்ளும்

உண்டல்லோ ஆயிரம் கனவுகள்..

நிறம் மாறி போனால் என்ன?

நிழல் மாறி போனால் என்ன?

நிஜமான நேசம் மாறி போனால்

காதல் என்ற வார்த்தைக்கு

அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ?

விடை இல்லா கேள்விகளுக்கு

விடை சொல்ல வந்ததோ

சிற்பிகள் தன் கனவுகளின் வழியே..” என்ற கவிதையை வடிவாக எழுதியவளை பட்டென்று நிமிர்ந்து பார்த்தான் முகிலன்.

“மேகா தமிழில் வடிவா கவிதை எழுதறயேள்..” அவன் பாராட்டிநான்.

“நான் எங்க எழுதினனான்..  சும்மா கிறுக்கினேன்” என்று அவள் குறும்புடன் பேச அவனின் பார்வை அவளின் மீது அழுத்தமாக பதிந்தது.

அவள் கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு பார்வை ‘என்ன’ என்று கேட்க, ‘ஒண்டு அல்ல..’ என்றான் முகிலன் குறும்புடன் கண்ணடித்து

அன்று காலை பொழுது விடிந்ததும் வீட்டினர் எல்லோரும் அமர்ந்து கதைக்கும்போது அதை கண்டுகொள்ளாமல் அவர்கள் இருவரும் மட்டும் தனியே அமர்ந்து பேசுவதைக் கண்டு திகைப்புடன் வாசலைப் பார்த்தனர்.

என்றும் இல்லாமல் இடியின் சத்தம் காதை பிளக்க, கண்ணை கூச வைக்கும் மின்னலுடன், ஊரே தண்ணீரில் மிதப்பது போன்றொரு மழை.

“கீரியும், பாம்பும் ஓரிடத்தில் நின்று கதைப்பதைக் கண்டு வானத்திற்கே பொறுக்கல்லே. வானமே இரண்டாக பிளக்கும் அளவிற்கு அடித்து ஊற்றுகிறது மழை” என்றாள் திவ்யா புன்னகையுடன்.

“இதென்ன அதிசயம். இப்போது எல்லாம் இரண்டும் சண்டை போடுவதல்லே அல்லோ. எந்தநேரமும் கதைத்துக்கொண்டு தங்களுக்குள் ஏதோ ஒண்டை முணுமுணுத்தவண்ணம் இருக்கிறவாவம்” என்றார் சித்தார்த் புன்னகையுடன்.

அந்த மழையில் வீட்டின் முன்னே பைக் வந்து நிற்கும் சத்தம்கேட்டு பெரியவர்கள் வாசலை பார்க்க அங்கே வந்தவர்களைக் கண்டு நால்வரும் திகைப்பும் அதிர்ச்சியுமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

வீட்டின் உள்ளே அமைதி நிலவுவது கண்டு அவன் வாசலை நோக்கிட எழிலனும், மேகாவும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

“மேகா அங்கே பாரும் யார் வந்திருக்கிற எண்டு” என்றவன் வாசலை நோக்கி விரைய அப்போதுதான் மழைநிலாவை பார்த்தவளோ, “என்ன மழை பெய்யும் நேரத்தில் நிலா நம்மின்ர வீடு வரை வந்திருக்கிறம்” என்ற கேலியுடன் வீட்டின் உள்ளே அழைத்து வந்தனர்.

“ஒரு முக்கியமான விடயம் கதைத்துவிட்டு போக வந்தோம்” என்றான் எழிலன் மழை நிலாவை பார்வையால் வருடியபடி.

அதற்குள் பெரியவர்கள் தங்களை சாமளித்துகொண்டு, “வாங்கோ” என்றழைக்க, “அப்பா இவன் என்ர உயிர் நண்பன் எழிலரசன். இவள் மேகாவின் உயிர் தோழி மழைநிலா” என்றதும்,

“உங்க இருவராலும் தானோ இந்த எலியும், பூனையும் கொஞ்சநாள் சண்டைபோடாமல் இருக்கிறவா” என்றார் நந்தினி வேண்டுமென்றே வம்பிழுக்க, “மாமி” என்றாள் இளையவள்.

“ஏன் மேகா அத்தையை மிரட்டுகிறாய். அவர் சொன்னது உண்மை விடயம் அல்லோ” என்ற தந்தையை அவள் முறைக்க சித்தார்த், திவ்யா இருவரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

சித்தார்த் – திவ்யாவின் பார்வை தங்களைவிட்டு கணநேரம் அசையவில்லை என்ற  உண்மையை உணர்ந்து தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக்கொள்ள அவர்களை அமர வைத்தனர்.

“என்ன திடீரெண்டு வந்திருக்கிறீர்” என்று இருவரும் ஒரே குரலில் கேட்க, “எங்க இருவருக்கும் திருமணம் முடிவாகி இருக்கிறது..” என்றதும் பெரியவர்கள் இருவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

இவர்களின் திருமண விடயம் அறிந்ததும் சந்தோஷத்தில் பூரித்து போயினர் இவர்களின் நண்பனும், நண்பியும்.

நண்பனை அணைத்துகொண்ட முகிலன், “என்னட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் கல்யாணம் வரைக்கும் போயிருக்கிறீர். நீர் எல்லாம் ஒரு நண்பனா?” என்று செல்லமாக அவனோடு கோபித்துக் கொண்டான்.

அவன் தன்னிடம் விளையாட்டிற்கு கதைக்கிறான் என்றுணர்ந்து, “நான் சொல்ல நினைத்தனான். ஆனால் அதற்கு உண்டான நேரம் என்னிடம் காணல்லே” என்றவனை புன்னகையுடன் நோக்கினான்.

“இதற்கெல்லாம் விளக்கம் கொடுகோணுமா” என்று கேட்க மேகாவிடம் வசமாக மாட்டிகொண்டாள் நிலா.

“நான் உன்ர நண்பி என்று சொல்றவள் என்னிடம் எப்படி இந்த விடயத்தை மறைக்கலாம்” என்று அவளுடன் சண்டைக்கு நின்றவளை சமாதானம் செய்யும் வழி அறியாமல் திகைத்து நின்றாள் நிலா.

அவளிடம் எல்லா விசயத்தையும் வெளிப்படையாக கதைத்தும் அவளின்ர கோபம் குறையாமல் இருந்தது.

“மேகா என்னை கொஞ்சம் நிமிர்ந்து பாரும். நான் வேண்டுமென்றே மறைக்கல்லே.. திடீரென்று வந்தவள் பொண்ணு பார்த்து தேதியை குறிச்சிட்டு போயிட்டவள்.. இதில் என் மீது பிழை காண என்ன இருக்கு” அவளின் தாடையைப் பிடித்து அவள் கொஞ்சலோடு கேட்க மேகாவின் கோபம் கொஞ்சம் தணிந்தது.

“நல்ல விடயத்தை கதைக்க வருகிறவர், இப்படி மழையில் நனைத்து வருவீறா” என்று கண்டித்துவிட்டு திவ்யா எழுந்து செல்ல, சித்தார்த் பார்வை தங்கையைப் பின் தொடர்ந்தது.

“நீங்க எல்லோரும் குடும்பத்துடன் கல்யாணத்திற்கு வாரும். நானும்,இவளும் உங்களன்ற எதிர்பார்த்து காத்திருப்பம்” என்றுரைக்க அதற்குள் நந்தினி காபியுடன் வர சிறிதுநேரம் அவர்களுடன் கதைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் முகிலனும் மேகாவும் அங்கிருந்து நகர, “இது எப்படி சித்தார்த் சாத்தியாமானது. என்னால் நிஜமென்று நம்ப முடியல. இந்த நிமிஷம் வரை. இத்தனை வருடங்களுக்கு பிறகும் இவர்கள் இருவரும் பிறந்தது மட்டும் இல்லாமல் சேர்வது என்பது எழுபட்ட விதியின் செயலா” என்றார் தருண் அதிர்ச்சியுடன்.

“இவங்க இணையனும் என்பது விதியின் செயலாக இருக்கலாம். எதையும் என்னால் தெளிவாக சொல்ல முடியல” என்றவர் எழுந்து சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து முகிலனும், மேகாவும் இருவரையும் பகடி பேசியே ஒரு வழி செய்தனர்.  அந்த வருடத்துடன் எழிலனுக்கு கேம்பஸ் முடிந்துவிட திருமண வேலையில் இரண்டு குடும்பமும் பம்பரமாக சுழன்றனர். மல்லிகாவிற்கு மகளின்ர கல்யாணம் கைகூடி வந்ததில் பரம ஆனந்தம்.

ரமணன் – சுரேஷ் இருவரும் திருமண வேலைகளைப் பார்த்து பார்த்து கவனிக்க யாருக்கோ வந்த விருந்து என்பது போல சரளா எந்த வேலையிலும் ஈடுபாடு இன்றி இருப்பதைக் கண்டு கவலையுற்றான் எழிலன்.

திருமண நாளன்று காலை மண்டபத்திற்கு நேரடியாக வந்து இறங்கியது முகிலன் மேகாவின் குடும்பம். அவர்களை அழைத்து வந்து முதல் வரிசையில் அமர வைத்தனர். முகிலன் எழிலனையும், மேகா மழைநிலாவை தேடிச்சென்றுவிட பெரியவர்கள் தங்களுக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர்.

சிறிதுநேரத்தில் மாப்பிள்ளை கோலத்தில் வந்து அமர்ந்த எழிலனின் தோற்றம் கண்டு, “அப்பா” என்று முணுமுணுத்தது திவ்யாவின் உதடுகள். தருண் மனைவியின் கைகளைபிடித்து சமாதானம் செய்ய அவளின் கண்கள் லேசாக கலங்கியது.

அதேநேரத்தில் மணப்பெண் கோலத்தில் முகிலனின் அருகே வந்து அமர்ந்த நிலாவைப் பார்த்து, “என்ர அம்மா” என்றார் சித்தார்த். கணவனின் குரல்கேட்டு நந்தினியின் மனம் தவியாய் தவித்தது.

அவர்கள் இறந்து இத்தனை வருடம் சென்றபின்னரும் இவர்களின் ஆழ்மனதில் அந்த தேடல் இருப்பதை அனைவராலும் உணர முடிந்தது.

இதெல்லாம் அறியாத எழிலனும், மழைநிலாவும் தங்களின் உலகத்திற்குள் மூழ்கினர். எழிலன் வேண்டும் என்றே பார்வையால் நிலாவை சீண்டிட அவளோ வேகத்துடன் தலைகவிழ்ந்து மீண்டும் நிமிர்ந்து அவனின் முகம் நோக்குவதுமாக இருந்தாள்.

சுரேஷ் கூட்டத்தில் வந்தவர்களை அழைப்பது கண்டு, “இவர் எப்படி இங்கே” என்று கேள்வியாக புருவம் சுருக்கிய திவ்யாவின் பார்வை சென்ற திசையை நோக்கி பார்வை செலுத்திய சித்தார்த் அதிர்ந்தான்.

அங்கே வயதான தோற்றத்தில் இருந்த கீதாவைக் கண்டதும், “கீதாம்மா” என்ற அழைப்புடன் கதிரையை விட்டு எழுந்தவன் வேகமாக அவரை நோக்கிச் சென்றான்.

அவரின் அருகே சென்று, “கீதாம்மா” என்று சித்தார்த் அழைக்க அவரோ அவனை புரியாத பார்வை பார்க்க, “நான் சித்தார்த்” என்றார் தன்னை தானே அறிமுகம் செய்தபடி.

“நீங்க யாரெண்டு எனக்கு அடையாளம் அறியல்லே” என்றார் கீதா.

“நான் மேகாவின்ர வளர்ப்பு மகன்” என்றவர் தன்னை அறிமுகம் செய்ய, “எனக்கு உன்னை அடையாளமே தெரியல்லே கண்ணா.. எங்கே உன்ர மனைவி..” என்று அவரை கேட்டார்.

அப்போது திவ்யா அவரின் அருகே  வர, “இந்த பிள்ளை” என்று சுரேஷ் கேள்வியுடன் அவர்களின் அருகே சென்றார்.

“நீங்க முகிலன்ர மகள் திவ்ய தர்ஷினி தானே” என்று சுரேஷ் அடையாளம் கண்டு கேட்க, “ம்ம்” என்றாள் திவ்யா.

“நான் உங்க அப்பாவின் பி.ஏ. சுரேஷ்” என்று சொல்ல, “அங்கிள்” என்ற அழைப்புடன் அவரின் கரம்பிடித்தாள் திவ்யா பாசத்துடன்.

அதற்குள் அவர்கள் தங்களுக்குள் கதைத்த பொழுது தான் கீதாவுக்கும், சுரேஷ்க்கும் சில விடங்கள் தெளிவாக, “இவங்க இருவரையும் கண்டு பதட்டத்துடன் இருந்தோம். இப்பொழுது உங்களைக் கண்ட  பின்னர் மனம் நிம்மதியாய் இருக்கிறது” என்றார் சித்தார்த் புன்னகையுடன்’

“விதியை யாராலும் மாற்ற ஏலாது கண்ணா. அவங்க இணைவது விதியின்ற செயல். இதில் தலையிட நமக்கு உரிமையல்லோ” என்றார் கீதா புன்னகையுடன்.

அப்போதும் சித்தார்த், திவ்யாவின் பயம் விலகாமல் இருக்க அவர்களின் திருமணம் விமர்சியாக நடப்பதைக் கண்டு உள்ளத்தில் கலக்கம் கொண்டனர்.

எழிலனின் கரங்களில் தாலியைக் கொடுக்க அவனோ அவளின் விழிகளை காதலோடு சந்திக்க அவளோ வேகத்துடன் விழியால் சம்மதம் உரைக்க அவளின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி மனைவியாக ஏற்றுகொண்டான்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த தம்பதிகளை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே வரவேற்றார் சரளா. அவளை பூஜை அறையில் சென்று விளகேற்ற சொன்னார். இரண்டு வீட்டாரின் முன்னிலையில் இருவருக்கும் பாலும், பழம் கொடுக்கும் சடங்கு முடிந்தது.

“இருவரும் களைச்சுப் போயிருப்பீங்கோ. அவங்க அறைக்கு சென்று ஆறுதலாய்(ஒய்வு) எடுங்கோ. மற்றதை பிறகு கதைக்கலாம்” என்றார் ரமணன்.

இருவரையும் தனித்தனி அறையில் இருக்க சொல்ல அவர்களும் அமைதியாக  சரியென்று தலையசைத்தனர். நேரம் கடந்து செல்ல மாலை சடங்குக்கு உண்டான வேலைகளை கவனிக்க தொடங்கினர்.

மல்லிகா ஒரு தாயாக இருந்து, “மாப்பிள்ளை என்ன கதைத்தாலும் பொறுமையாய் போம்மா” என்றார் அவர் தவிப்புடன்.

அவளும் மறுபேச்சு இன்றி தாயின் மடியில் தலையை வைத்து படுத்துக்கொள்ள அவளின் கூந்தலை வருடிவிட்டார் மல்லிகா. அப்போது அறைக்கு வந்த சரளா,

“ம்ம்.. போதும் உன்ர கொஞ்சல். கெதியா மகளை அறைக்கு அனுப்பிவிட்டு வாரும்” அவர் நகர்ந்ததும், “அம்மா விடுங்கோவன். நாங்கோ எதுக்கு இருக்கிறம். நாங்க இவளை அனுப்பிவிட்டு வாறம்” என்று அந்த பொறுப்பை வழிய வந்து ஏற்றுகொண்டனர் மயூரியும், மேகாவும்.

அவர் புன்னகையுடன் மகளைவிட்டு விலகிச்செல்ல, “என்னடி அமுக்க கள்ளி. திருமணம் முடிச்சாச்சு. இன்னும் என்ன அந்த கன்னத்தில் வெக்கத்தை காணோமே” என்று அவளை வம்பிற்கு இழுக்க எழிலனின் நினைவில் அவளின் முகம் சிவந்துபோனது.

“அடியேய் மையூ இவளின்ர முகத்தை பாருங்கோவன். லைட் ரெட் கலரில் சிவக்குதடி. ஐயோ இதுதான் வெக்கமோ” என்று இருவரும் கன்னத்தில் கைவைத்து வியக்க, “வம்பு இழுக்காமல் இருங்கோ” என்றாள் சின்ன அதட்டலுடன் மழைநிலா.

சிறிதுநேரத்தில் அவளை கூட்டிக்கொண்டு போய் எழிலனின் அறையில் தள்ளிவிட்டுவிட்டு வந்தனர்.

அந்த அறைக்குள் நுழைந்ததும் என்றும் இல்லாத படபடப்பில் அவளின் இதயம் வேகமாக துடிக்க மெல்ல விழியை அந்த அறையை சுற்றி பார்த்தாள். எழிலன் யன்னலின் அருகே நின்று இவளையே இமைக்காமல் நோக்கினான்.

அந்த பார்வை அவளின் வயிற்றில் பட்டாம்பூச்சியைப் பறக்கவிட வேகத்துடன் தலைகவிழ்ந்து அவனை நோக்கி அடிமேல் அடியெடுத்து வைத்து சென்றாள்.

அவளின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவன், “நிலா என்னை நிமிர்ந்து பாரும்” என்றான் மெல்லிய குரலில்.

அவள் மறுப்பாக தலையசைக்க ஒரு விரல்கொண்டு அவளின் முகத்தை நிமிர்த்திய எழிலனின் பார்வை அவளின் பார்வையுடன் கலந்துவிட, “என்னிடம் என்ன வெக்கமாம்”அவனின் கண்கள் சிரிக்க அவளோ விழிவிரிய அவனை நோக்கினாள் வியப்புடன்.

அவனின் விழிகள் உயிரோட்டமான கண்கள் அவளின் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, “எழிலன் உன்ர விழி என்னிடம் கதைக்கிறதே” என்றாள் புன்னகையுடன்.

“என்ர விழி கதைப்பதை நீர் அப்புறம் பொறுமையாக கவனியும். இப்போ அங்கே பாரும்” என்று யன்னலின் வழியாக ஒரு அழகான காட்சியை அவளுக்கு கட்டினான்.

கார்மேகங்கள் மழைபொழிய தயாராக இருக்க சிலுசிலுவென்ற காற்று உடலை தழுவிசெல்ல வானம் இருண்டுவிட்ட நிலையில் காட்சிதர முழு பௌர்ணமி நிலவு சுடர்விட்டது. கார்மேகமும், பௌர்ணமி நிலவும் சளைக்காமல் போட்டி போடும் காட்சியை விருப்பத்துடன் ரசித்தனர்

இரண்டு மலைகளின் நடுவில் முகட்டில் பௌர்ணமி நிலவு சுடர்விடும் காட்சியுடன் எங்கோ வண்டுகள் ரீங்காரமிடும் சத்தம் மட்டும் மெல்ல கேட்டது.

“இஞ்சாருங்கோ நிஜமாவே எனக்கு இந்த காட்சி பிடித்தம், உங்கன்ர பக்கத்தில் நின்று ரசிக்கும் வேளையில் மனம்  எங்கோ செல்கின்றது” என்றாள் கன்னங்கள் இரண்டும் சிவக்க.

மெல்ல அவளை தன் கைவளைக்குள் கொண்டு வந்தவன், “என்ர பொம்மாவுக்கு மனசு எங்கோ போகிறதாம்” அவன் அவளின் தோளில் முகம் வைத்து அந்த காட்சியை ரசித்தபடி கேட்டான்.

அந்தக்கணம் அவளின் கன்னங்களில் நாணபூக்கள் எட்டிப்பார்க்க, “நம்ம இணைய இன்னும் நாள் கிழமை எல்லாம் அதிகம் இருக்கிறதாம். இனிமேல் எதையும் குழப்பிக்கொள்ளாமல் வாவன் வந்து தூங்கும். இந்த ஒருவாரத்தில் மாமியின் வீட்டில் இருந்து உன்ர பொருள் எல்லாம் இங்கே சிப்ட் செய்துவிட்டு அப்புறம் கேம்பஸ் போக சரியாக இருக்கும்” என்றான்

அவள் மறுக்காமல் அமைதியாக இருக்க, “பொம்மா”

“ம்ம்” என்றாள்.

“எனக்கு கேம்பஸ் முடிந்தது. நான் அப்பாவுடன் பிசினஸ் செய்ய போறன். நீ படிப்பு முடிக்கின்ற வரையில் நமக்குள்ள எதுவும் வேண்டாம்..” என்றதே அவளுக்கு நிம்மதியளிக்க அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

மறுநாள் மேகாவின் வீட்டிற்கு சென்று விருந்தை முடித்து கிளம்பும்போது அணைத்து பொருட்களையும் எடுத்து வைக்கும் பொழுது அந்த கடிதம் அவளின் கையில் கிடைக்க அதிலிருந்த தேதியை கவனித்தாள்.

பல வருடங்களுக்கு முன்னே வந்த கடிதமென்று புரிய அவள் பிரித்து படித்தாள். அதைப் படிக்க படிக்க அவளின் முகம் மாறிவிட உள்ளம் எங்கும் வலி பரவியபோதும், உதடுகள் புன்னகை அரும்புயது..

“நிலா” என்ற எழிலனின் அழைப்பைக் கேட்டு, “இதோ வாறான்” என்ற நிலா அவனோடு புகுந்தவீடு நோக்கி பயணமாக வாசலில் நின்ற கீதா அவளுக்கு இரண்டு ரோஜா செடிகளைக் கொடுத்து, “உனக்கு பிடித்தம் அல்லோ. இதை அங்கே கொண்டு செல்லும்” என்றார்.

அவள் வீட்டிற்குள் நுழைந்தும் செடியை நட்டுவைக்க இடம் தேடி வீட்டின் முற்றத்தில், “இது நிலாவிற்கு பிடித்த மஞ்சள் ரோசாபூ.  இது இஞ்சாருங்கோப்பா பிடித்த சிவப்பு ரோசாபூ” என்று செடியை நட்டு வைத்துவிட்டு வந்து கை கழுவிவிட்டு உள்ளே திரும்பும் பொழுது தான் சரளாவை கவனித்தாள்.

அவளோ மஞ்சள் நிற ரோஜா செடியை வேரோடு பிடிங்கிவிட உள்ளம் கனத்தபோதும் அமைதியாக வீட்டின் உள்ளே சென்று மறைய சரளா திருப்தியுடன் அங்கிருந்த நகர்ந்தார்.

பின் வாசலின் தூணின் மீது சாய்த்து நின்ற எழிலனோ, “இது என்ர அம்மா செய்கின்ற செயல்லோ. அவளுக்கு பிடித்தம் எண்டு வைத்த செடியை வேரோடு பிடுங்குவது நல்லதல்லே..”  கண்டிப்புடன் கூறிவிட்டு அவன் சென்று மஞ்சள் நிற ரோஜாவை நட்டு வைத்துவிட்டு கை கழுவுவதை யன்னலின் வழியாக கண்டாள் நிலா.

 

 

 

error: Content is protected !!