sontham – 31

Starr_080219-2952_Jasminum_polyanthum

sontham – 31

அத்தியாயம் – 31

மதுவை தேனியில் சந்தித்த அன்று ஒரு குழந்தையின் கடத்தலை தடுக்க முடிந்தது. அடுத்து கௌதம் காப்பாற்ற நினைத்த அனைவரையும் அவனால் பாதிப்படையாமல் காப்பாற்ற முடிந்தது. சில நேரங்களில் அவனுக்கு முன்னாடி அந்த இடத்திற்கு சென்று மது அவர்களைக் காப்பாற்றி இருக்கிறாள்.

எங்க இருவரையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைத்தது அந்த புகைமண்டலம் மட்டுமே. ஆனால் மதியின் இறப்பின்போது அதனால் எதுவும் செய்ய முடியாமல் போனது ஏன்?   

அந்த சிந்தனையோடு விழிமூடி யோசித்த கௌதமிற்கு அன்று நடுராத்திரி வெளியே சென்றுவிட்டு வந்த மது தன்னிடம் பேசியது நினைவுவரவே, ‘மதுவின் உடலுக்கும், இந்த புகை மூட்டதிற்கும் நடுவே ஏதோ இருக்கிறதே?’ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

அதே நேரத்தில் அடிக்கடி வீட்டில் அடிக்கும் ஜாதிமல்லி வாசனைக்கு பின்னோடு இருக்கும் மர்மம் என்னவென்று புரியாமல் விழிமூடி யோசித்தபடி அமர்ந்திருந்தான். திடீரென்று யாரோ தன்னை உற்று பார்ப்பதை போல உணர்ந்த கௌதம் கண்விழித்து பார்க்க அங்கே யாருமில்லை.

மீண்டும் விழி மூடவே, “கௌதம்” என்ற அழைப்பைக்கேட்டு பட்டென்று விழி திறந்தான். அவனின் முன்னே எட்டு வயது மதிக்கத்தக்க குட்டிப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

அவள் பாவாடை சட்டையோடு அவனையே இமைக்காமல் பார்க்க, ‘இந்த நேரத்தில் இந்த குட்டிப்பாப்பா இங்கே எப்படி வந்தா?’ என்ற சந்தேகத்துடன், “யார் பாப்பா நீ” என்று சிரித்தபடியே கேட்டான்

“என்னை மறந்துட்டியா கௌதம். நான் வேணும்னா அங்கே இருக்கும் டேபிளுக்கு பின்னாடி ஓடிப்போய் ஒளிஞ்சிகிறேன் நீ என்னை கண்டுபிடிக்கிறீயா? அன்னைக்கு நீ பாடிய பாட்டை இன்னைக்கும் பாடுவியா?” என்று தலையைச் சரித்து குழந்தைத்தனம் மாறாமல் கேட்டது.

சற்றுமுன் தனம் பார்க்கில் நிகழ்ந்ததை சொன்னது நினைவு வரவே, “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது இது இந்த தேவதையின் குரலோ?” என்றவன் வரிகளை முணுமுணுக்க குழந்தையின் முகம் மலர்வதைக் கண்டான்.

“ஜெனிக்கா” என்ற அழைப்புடன் அவளை தொட நினைக்கும்போது காற்றில் அவனின் கரங்கள் அலைந்தது. அவனின் கண்களில் அப்பட்டமான வலி தெரிந்தது.

“பரவல்ல இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட கௌதம்” என்றாள் ஜெனிதா உதட்டில் சிரிப்புடன்.

“உனக்கு என்ன நடந்துச்சு அக்கா” என்று கண்கள் கலங்கிட கேட்டான்.

“அதை சொல்ல நான் இப்போ வரல. அதே மாதிரி நீயும் என்னை அக்கான்னு கூப்பிடாதே. நான் பூமியில் இருந்திருந்தா உன்னைவிட பெரியவள்தான். நான் அன்னைக்கே இருந்துவிட்டதால் உன் கண்ணுக்கு குழந்தையாக தெரியறேன். அதனால் நீ என்னை ஜெனின்னு கூப்பிடு” என்றது.

அவன் சரியென்று தலையசைக்கவே, “அன்னைக்கு பியானோ வாசிக்கிற அறைக்கு வந்து உண்மையை கண்டுபிடிக்கிறேன்னு சொல்லிவிட்டு வந்த இல்ல. இப்போ உண்மையைக் கண்டுபிடிச்சிட்டியா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள் ஜெனி.

அவளின் உயரத்திற்கு ஏற்றார்போல் தரையில் மண்டியிட்டு அமர்ந்த கௌதம், “ம்ம் கண்டுபிடிச்சிட்டேன்” என்றான்.

“இப்போ மது ஒரு கேஸில் சிக்கி இருப்பதாக சொன்னீயே அந்த உண்மையைக் கண்டுபிடிச்சியா?” என்றாள்.

“ம்ம் கண்டுபிடிச்சிட்டேன். மது அவனை எதுவும் பண்ணல ஜெனி. அவ ஆட்டோவில் ஏறி போனது குடிபோதையில் அவன் எழுந்து நிற்கும்போது அவன் பின்னாடி வந்த லாரி அவனை மோதி அதே இடத்தில் இறந்துட்டான்” என்று நடந்ததை நேரில் பார்த்தது போல கூறினான் கௌதம்.

“நீ நினைக்கிற மாதிரி நான் மது உடலுக்குள் வந்து போவதில்லை கௌதம். ஆனால் அவ நீ திட்டுவன்னு அன்னைக்கு பயந்துட்டே வீட்டுக்குள் வந்தாளா.. அதன் உன்னோடு விளையாடிப் பார்க்க நினைச்சு அவளுக்குள் புகுந்து அப்படி சொல்லிட்டுப் போனேன். ரொம்ப பயந்துட்டியா?” என்று சிரிப்புடன் அவள் கேட்க கௌதம் மறுப்பாக தலையசைத்தான்.

“ஏய் நீ பொய்தானே சொல்ற?” என்று அவள் நம்பாமல் கேட்கவே ஒப்புதலாக தலையசைத்தான். அவள் குழந்தையாக சிரிப்பதை கண்டவனும் சிரிக்க, “சரி நீ போய் தூங்கு கௌதம்” என்று சொல்லிவிட்டு காற்றோடு கலந்து மறைந்தது ஜெனியின் உருவம்!

சிலநொடிகள் என்றபோதும் தன் கண்முன்னே வந்து சென்ற ஜெனியின் உருவம் அவனுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருந்தது. சற்றுமுன் யுகேந்திரன் சொன்னதற்கு எதிர்மாறாக அவள் இறந்து பல வருடமானத்தை நினைத்து உள்ளம் வலித்தது.

சின்னத்தில் மனதோடு மறைந்த அவளின் பளிங்கு முகம் அவன் மனதில் ஏழவே குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் கௌதம். அறை தூக்கத்துடன் படிக்கையில் கௌதமை தேடிய மது பட்டென்று விழி திறந்து பார்த்தாள்.

கௌதம் கண்ணில் வலியுடன் விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதை கண்டு அவனின் அருகே சென்று, “என்னங்க தூங்காமல் என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.

அவளிடம் உண்மையைச் சொல்ல மனமில்லாமல், “ஒண்ணுமில்ல மது” என்றவன் எழுந்து சென்று கட்டிலில் படுத்தான். அவனை பார்த்தபடி அவனின் அருகே படுத்த மது விழி மூடி விட்ட இடத்திலிருந்து தூக்கத்தை தொடர அவளை அணைத்தபடி விடியும் வரையில் விழிதிறந்தான் கௌதம்.

அதன்பிறகு வந்த நாட்களில் மருத்துவமனையில் இருந்த வருண் குணமடையவே அவனை மதியை கெடுத்து கொன்ற காரணத்திற்காக கௌதம் அவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினான். கௌதம் தரப்பில் அனைத்து அறிக்கைகளும் சரியாக சமர்பிக்கப்பட்டது.

கேஸ் விசாரணையில் வருண் தன் தவறை ஒப்புகொள்ளவே இந்திய தண்டனை சட்ட பிரிவு 300 கொலை,  375 மற்றும் 376 வன்கொடுமை மற்றும் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதற்காகவும், 304 (A) கவனமின்னையால் மரணத்தை  விளைவிக்கின்ற அல்லது ஏற்படுத்துகின்ற குற்றம் செய்ததற்காகவும் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

மதியின் கேஸை விபத்து குறித்தான விசாரணை அறிக்கையின் பேரில் கேஸை திறம்பட எடுத்து விசாரித்து உண்மையை வெளி கொண்டு வந்த கௌதமை பாராடியது நீதி மன்றம்.

மற்றொரு புறம் மது கொலை செய்ததாக சொன்ன டிப்பார்ட்மெண்ட்டின் முன்னாடி தகுந்த ஆதாரங்களை சமர்பித்து மதுவின் மீது விழுந்த கொலை பழியை நீக்கினான்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் ரேக்கைகட்டிகொண்டு பறக்க அசோக் – காயத்ரி திருமணம் பெரியவர்களால் நிச்சயக்கப்பட அவர்கள் இருவரும் நேரில் வந்து கல்யாணப் பத்திரிகை கொடுத்து சென்றனர்.

அன்று மாலை வீடு திரும்பிய கௌதம், “மது” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான். அவளோ மாலை நன்றாக குளித்துவிட்டு பிங்க் நிற சேலை அணிந்து அளவான ஒப்பனையோடு தயாராகி கண்ணாடி முன்னாடி நின்றிருந்தாள்.

அவளின் பின்னோடு வந்து அணைத்த கௌதம், “என்ன மேடம் கல்யாணத்திற்கு கிளம்பிட்டீங்க போல” என்றபடி மயக்கத்துடன் அவளின் கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடித்தான் கௌதம்.

“ம்ம் காயூ போன் பண்ணி ஒரே தொல்லை. நான் கல்யாணம் முடியும் வரை அவளோடு இருக்கணுமாம். அதனால் முக்கியமான திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு அவங்க வீட்டுக்கு வர சொல்லிட்டா” என்று மயக்கத்தோடு அவனின் தோள் சாய்ந்தபடியே கூறினாள்.

சட்டென்று நிமிர்ந்து கண்ணாடியில் அவளின் முகம் பார்த்தவன், “ஒரு வாரமா அதெல்லாம் முடியாது. இப்போதான் எல்லா பிரச்சனையும் முடிந்து உன்னோடு செலவழிக்க டைம் கிடைச்சிருக்குன்னு சந்தோசமாக வந்தால் நீ இப்படி சொன்னால் என்ன அர்த்தம்” என்று முகத்தை பாவமாக வைத்துகொண்டு கேட்டான்.

அவனின் செயல் சின்னக்குழந்தை தாயை வெளியே செல்ல அனுமதிக்காமல் அடம்பிடிப்பது போல இருக்கவே, “என்னங்க சின்னப்புள்ள போல அடம்பிடிக்கிறீங்க? நீங்க எல்லாம் தேனியின் அசிஸ்டெண்ட் கமிஷனர்” என்று தலையில் மாட்டியிருந்த தொப்பியை கலட்டி டேபிளில் வைத்தாள்.

“என் பொண்டாட்டிகிட்ட நான் அடம்பிடிப்பேன். என்னை தடுக்க யார் இருக்கா?” என்ற கேள்வியோடு அவளை தூக்கி கட்டிலில் போட்டு அவளின் மீது படர்ந்தான் கௌதம்.

“ஐயோ நகருங்க கௌதம். அத்தை, மாமா எல்லாம் இப்போ வரேன்னு சொல்லி இருக்காங்க. இந்த நேரத்தில் இப்படி பண்றீங்க?” என்று அவனை விலக்குவதில் குறியாக இருந்தாள் மது.

சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்த கௌதம், “அதெல்லாம் முடியாது” என்றவன் அவளின் மார்பில் முகம் புதைய மதுவின் விழிகள் மயக்கத்தில் மூடிக்கொண்டது.

கௌதம் நெற்றி, கண், மூக்கு என்று படிப்படியாக இறங்கி வந்து அவளின் இதழ்களில் இளைப்பாறினான். அவனின் இதழ்கள் செய்த லீலையில் மயங்கி கிறங்கிய மது மயக்கத்தில் விழிமூடிட அவளின் தேகத்தில் தன் தேடலைத் துவங்கினான் கௌதம். வளையோசையும், கொலுசின் ஓசையும் இன்னிசை வாசித்தது

அவன் தேவையைத் தீர்த்துக்கொண்டு திருப்தியுடன், “தேங்க்ஸ் செல்லம்” என்று அவளின் முகத்தில் எண்ணற்ற முத்தங்களை வாரி இறைத்துவிட்டு விலகிய கௌதமின் மார்பில் தலைசாய்த்து மெளனமாக இருந்தாள் மது.

சிறிதுநேரம் சென்றபிறகு அவனிடமிருந்து விலகிய மது குளித்து உடைமாற்றிவிட்டு மீண்டும் வெளியே வரும்போது வாசலில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

“ம்ம் போய் கதவைத் திற மது” என்று கௌதம் குறும்புடன் கண்சிமிட்டினான்.

“சாயங்கால நேரத்தில் வீட்டை சாத்தி வைத்திருந்தால் மத்தவங்க என்ன நினைப்பாங்க” என்று அவள் தலையில் அடித்துக்கொண்டு செல்லவே கலகலவென்று சிரித்தான்.

“சாயங்காலம் வருவதே உன்மடியில் இளைப்பாறத்தான் மது” என்றவனின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் மது.

அவன் கோபத்துடன் அவளை முறைக்க, “நீ ஒழுங்கா எழுந்துபோய் குளிச்சிட்டு வெளியே வாங்க. அத்தை, மாமா முன்னாடி என் மானத்தை வாங்காதீங்க” என்று இடையில் கையூன்றி அவனை மிரட்டிவிட்டு வாசலை நோக்கி சென்றவளை அவசரமாக இழுத்தணைத்து இதழில் இதழ் பதித்தான் கௌதம்.

அவனின் அதிரடி செயலில் அவள் மயங்கி கிறங்கிய போதும் வாசலில் அடித்த காலிங்பெல் சத்தம் அவளை என்னவோ செய்தது. சட்டென்று அவளிடமிருந்து விலகிய கௌதம், “மேடம் மிரட்டினால் அடிபணிஞ்சு போவேன். ஆனால் கை நீட்டினால் இப்படிதான் வித விதமாக தண்டனை கொடுப்பேன். தலையில் நறுக்கென்று கொட்டினால் இந்த பணிஸ்மெண்ட்” என்று அவளுக்கு பாடம் எடுத்துவிட்டு குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

மது திகைப்புடன் அங்கேயே சிலையாகி நின்றிருக்க விடாது அடித்த காலின்பேல் அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவே வேகமாக சென்று கதவைத் திறந்தாள் மது.

வீட்டின் வாசலில் நின்றிருந்த யுகேந்திரன், “என்னம்மா இன்னும் கிளம்பாமல் இருக்கிற” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.

அவரின் பின்னோடு வந்த தனம், “எல்லாம் உங்க மகனோட வேலையாக இருக்கும்” என்றார்.மதுவின் முகம் வெக்கத்தில் சிவப்பது கண்டு தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர் கணவனும், மனைவியும்!

அதற்குள் கௌதம் தயாராகி வரவே அவனோடு கைகோர்த்து இணைந்து நடந்தாள் மது. இதுநாள்வரை கௌதமிற்கு மறுவீட்டு விருந்து செய்யாத குறையை தீர்க்க நினைத்து இருவரையும் வீட்டிற்கு வரும்படி முறைப்படி அழைத்திருந்தனர் தாமோதரனும், தமயந்தியும்!

“அம்மா நாங்க இருவரும் போயிட்டு வரோம்” என்று பைக்கில் ஏறிய மகனையும், மருமகளையும் வாசலில் வந்து வழியனுப்பி வைத்தனர் தனமும், யுகேந்திரனும்!

கௌதம் மதுவின் வீட்டின் அருகே செல்லும்போது ராஜலட்சுமி வாசலில் நின்று பூ வாங்குவதை கண்ட கௌதம், “வீட்டுக்குள் அவ்வளவு பெரிய தோட்டம் இருந்தும் உங்க பாட்டி பூக்காரனிடம் பூ வாங்குவதை பாரு மது” என்றான் கேலியாக.

“பாட்டிக்கு இது புதுபழக்கம் ஒன்னும் கிடையாது கௌதம். அவங்க வழக்கமா சாதிமல்லி பூ சீசனில் இப்படிதான் பூக்காரனிடம் சண்டை போடுவாங்க” என்று சிரித்தபடியே காரணத்தைக் கூறினாள்.

பைக் கண்ணாடி வழியாக மதுவின் புன்னகையை ரசித்தபடியே, “என்ன இப்படி சொல்ற” என்றான்.

“இந்த பழக்கம் இன்று நேற்று இல்ல கௌதம். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே பாட்டி இப்படிதான் இருக்காங்க. ஜாதிமல்லி பூ அதிகமாவும் வாங்க மாட்டாங்க. வெறும் பத்து பூ அதுவும் மொட்டாக வேணும்னு பூ விற்பவனிடம் சண்டை போடுவாங்க. வீட்டில் செடி வைக்கலாம்னு சொன்னா வேண்டான்னு சத்தியாக்கிரகமே பண்ணுவாங்க” என்று அவள் சிரித்தபடியே சொல்ல கௌதமின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது.

ஜாதிமல்லி பூவின் வாசனை மதுவின் அருகே இருப்பதும், சில  நேரங்களில் தன் வீட்டில் வீசுவதும் அவனுக்கு திடீரென்று நினைவு வந்தது. அவன் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்திட மது வண்டியிலிருந்து இறங்கினாள்.

அவர்கள் இருவரையும் கவனிக்காத பாட்டி, “நேற்று உன்னிடம் என்ன சொன்னேன் மலராத மொட்டு பத்தே பத்து பூதானே கேட்டேன். நீ என்ன இந்நேரத்திற்கு வந்து விரிஞ்ச பூவைக் கொடுக்கிற?” என்று அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

“என்னம்மா மாலை நேரமானா பூ மலர்ந்திரும்னு உங்களுக்கு தெரியாதா?” என்று அவனும் அவரிடம் சண்டைக்கு நின்றான்.

“அது எனக்கு தெரியும். அந்த பத்து பூவுக்கு நூறு ரூபாய் கொடுக்கக்கூட நான் தயார் தான். ஆனால் எனக்கு ஜாதிமல்லி பூ மொட்டாகத் தான் வேணும். அதுவும் பத்தே பத்து பூ மட்டும்தான். அதனால் ஒழுங்கா நான் கேட்ட மாதிரி பூ கொண்டுவந்து கொடுக்கிற” என்ற பாட்டி பூக்களில் மலராமல் இருந்த பொடி அரும்புகளை எடுத்துகொண்டு அவனிடம் பணத்தைக் கொடுத்தார்.

“இவ்வளவு பணம் எதுக்கும்மா. உழைக்கிற காசே உடம்பில் ஒட்டல. இதில் நீங்கவேற ஒன்னுத்துக்கும் ஆகாதப் பொடி அரும்பை எடுத்துட்டு நூறு ரூபாய் கொடுக்கிறீங்க” என்று பூ விற்பவன் சில்லறை தேடினான்.

“அதெல்லாம் எனக்கு நீ கொடுக்க வேண்டாம். உன் வீட்டில் சின்ன குழந்தை இருந்தா அதுக்கு பிடிச்சதை வாங்கிக்கொண்டு போய் கொடு” என்று மீதி பணத்தை வாங்காமல் திரும்பினார்.

அவர் பூ விற்பவனிடம் ரகளை செய்வதை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்த மது, “பாட்டி” என்றதும் குரல்கேட்டு திரும்பியவர் இருவரையும் முகமலர வீட்டுக்குள் வரவேற்றார்.

 “ஜாதிமல்லி செடி வீட்டில் வைக்கலாம்னு சொன்னால் கேட்கிறீங்களா?” அவரிடம் கோபத்துடன் சண்டைக்குப் போனாள் மது.

“அதெல்லாம் வேண்டாம். இந்த பூ காசுக்கு மட்டும்தான் வாங்குவேன்” அவர் வழக்கமான பதிலை சொல்லவே கடுப்பான மது அவரைக் கடந்து வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

இருவரின் வாக்குவாதத்தைக் கேட்டு சிரித்தபடி, “ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது பாட்டி” என்றபடி அவருடன் இணைந்து நடந்தான் கௌதம்.

அவர் புன்னகையே பதிலாக கொடுக்கவே, “இப்படி சிரித்தால் என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

அதற்குள் மதுவும், கௌதமும் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டு, “வாங்க மாப்பிள்ளை. வாம்மா மது” அவர்களை புன்னகையோடு வரவேற்றனர் தாமோதரன், தமயந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!