Sontham – 4

Sontham – 4

அத்தியாயம் – 4

ஜெனிதாவைத் தேடிக்கொண்டு அவளின் பள்ளி வாசலுக்கே  வந்த குணசேகரன் முதலில் பார்த்தது ராஜேந்திரனைத்தான். தன்னுடைய மகளின் அருகில் நின்றிருந்த புதிய நபரைப் பார்த்தவரின் விழிகள் இரண்டும் யோசனையில் சுருங்கியது.

அவர் அருகில் வருவதைக் கவனித்த எஸ்தர் மனதில், ‘ஐயோ அப்பாவிடம் இன்னும் இவரைப்பற்றி நான் ஒண்ணுமே சொல்லல. என்ன சொல்ல போறாரோ தெரியலையே’ என்றவளின் மனதில் பயம் பிறந்தது.

ராஜேந்திரனின் கரங்களைப் பிடித்துகொண்டவளின் பார்வை தந்தையின் மீதே நிலைத்து நின்றது.

அவளின் பயம் உணர்ந்து, ‘என்மேல் இவ்வளவு பயம் இருக்குது இல்ல. அப்புறம் ஏன் நீ என்னிடம் உண்மையைச் சொல்லாமல் இருந்தாய்?’ என்றவரின் பார்வை அவளிடம் கேள்வி கேட்டது.

அவளின் கைகள் சில்லிட்டு போவதை உணர்ந்தவனோ அவளின் கையில் அழுத்தம் கொடுத்து, “எஸ்தர் எதுக்கு இப்போ பயப்படற” என்றவன் அதட்டிட அவளின் நடுக்கம் அதிகமானது.

“உனக்கு அவரைப்பற்றி தெரியாது இந்தர்” மெல்லிய குரலில் சொன்னது தனத்தின் காதிலும் விழுந்தது.

“ம்ம் இவள் சொல்றதும் உண்மைதான்” என்று தனமும் சொல்ல இருவரின் முகத்தையும் பார்த்த ஜெனிதாவோ, “ஆனால் எனக்கு அவரைப்பற்றி நல்ல தெரியுமே..” என்றவள் குறும்புடன் சிரித்தாள்.

அவளின் குழந்தை மனம் உணர்ந்து பளிச்சென்று சிரித்தவனோ, “என் அம்முவிற்கு அவரைபற்றி என்ன தெரியும்?” என்று அவளைப்போலவே பேசினான்..

 “என்ன நீங்க என்னை மாதிரியே பேசறீங்க..?” என்று ஆச்சரியத்துடன் விழிவிரிய கேட்டவளின் கன்னத்தைக் கிள்ளியவன், “உன் அக்கா எஸ்தர் மாதிரி கூட பேசுவேனே” என்றான் குறும்புடன்.

“அப்படியா? எஸ்தர் எங்கே பேசுங்க பார்க்கலாம்” மணிபுறாபோல தலையைச்சரித்து அவனைப் பார்க்க, “என்னங்க உங்களுக்கு அப்பாவைப் பற்றி தெரியாதுங்க” அவன் எஸ்தரைப் போலவே குரல் மாற்றி பேச, “ஐ இது எஸ்தர் அக்கா வாய்ஸ் தான் சூப்பர்” என்று குதுகலத்துடன் கூறியவள் அவனின் கன்னத்தில் இதழ்படிக்க அவனும் ஜெனியின் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவள்  ராஜேந்திரனை, ‘அங்கிள்’ என்று அழைக்க அவளின் அழைப்பை மாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. ஏன் என்றால் குழந்தைகளுடன் சொல்லும் பொழுது ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசித்து பேச வேண்டும் என்பதால் அவளிடம் இப்பொழுது எதுவுமே சொல்லாமல் இருந்தனர் ராஜேந்திரனும், எஸ்தரும்!

 அவன் தன்னைப் போல பேசுவதை விழி விரிய நோக்கிய எஸ்தர், “ஐயோ இது என்னோட வாய்ஸ்” என்றவளின் உள்ளம் துள்ளிட அவளைப் பார்த்து தலையிலடித்துக் கொண்டாள் தனம்.

“ஏய் எஸ்தர் அப்பா நம்ம பக்கத்துல வருவது உனக்கு கண்ணு தெரியுதா இல்லையா?” என்று கடுப்புடன் கேட்டதும் மற்றது பின்னுக்கு செல்ல தந்தையை நினைத்து மனதிற்குள் கலங்கினாள்.

அவரின் பார்வை தன்னுடைய மகளைத் துளைத்து எடுக்க, “இந்தர் எனக்கு ரொம்ப பயமாக இருக்கு இந்தர்” என்றவள் பயத்துடன் ராஜேந்திரனை விட்டு நகர்ந்து நின்றாள்.

அவர்களைக் குழப்பத்துடன் நோக்கிய ஜெனியோ, ‘ஆமா இவங்க யாருன்னே தெரியல. எஸ்தர் அக்கா கூட பேசிட்டு இருக்காங்க யாராக இருக்கும்..?’ என்று தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அவளால் ராஜேந்திரனை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போக, “எஸ்தர் அக்கா இவங்க யாரு?” என்று கேட்டாள்

அவளின் கேள்வியில் எஸ்தருக்கு உதறலெடுக்க, ‘எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிற பாரு. ஐயோ அப்பாகிட்ட நம்மல மாட்டிவிடாமல் இருக்க மாட்டாள் போலவே’ என்றவள் குணசேகரனை பயத்துடன் பார்த்தனர்.

நிதானமாக அவர்களின் அருகே வந்தவரின் பார்வையில் பயந்து போன தனமோ, ‘இன்னைக்கு நல்ல மாட்டிகிட்டு முழிக்க போறோம்..’ என்று முடிவே செய்துவிட்டாள்.

“என்னோட செல்லமில்ல கொஞ்சநேரம் சும்மா இருடி” என்றாள் எஸ்தர் கொஞ்சலாக கூறவே, “நான் ஏன் அமைதியா இருக்கனும்” என்று எதிர் கேள்வி கேட்டவளைப் பார்த்து ராஜேந்திரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

தாங்கள் நிற்கும் இடத்தையும் சூழ்நிலையும் உணர்ந்து அவன் அமைதியாக இருக்க, “சும்மாவே அப்பாவைப் பார்த்தால் கைகால் எல்லாம் உதறலெடுக்கும். இப்போ இவள் பண்ணியிருக்கும் வேலைக்கு உயிர் போய் உயிர் வருது” என்றவளின் காலில் விழுகாத குறையாக ஜெனியிடம் கெஞ்சினாள் தனம்.

“உயிர் போய் உயிர் வருமா அது எப்படி? உயிர் போனால் வராது இல்ல” என்று ஜெனிதா இந்த நேரத்தில் கிண்டலாகக் கேட்டாள்.

தனம், “ஐயோ இவளை சமாளிக்கவே முடியலையே விநாயகா” என்று புலம்பிவிட்டு, “கொஞ்சநேரம் அமைதியாக இரும்மா” என்று கையெடுத்து கும்பிடாத முறையாக அவள் கெஞ்சுவதைப் பர்த்தவநோ சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான்.

“அவளை எதுக்கு சும்மா இருக்க சொல்ற தனம்?” என்று கேட்டவனை முறைத்த எஸ்தரோ, ‘அப்பாவிடம் மாட்டிவிடாமல் விடமாட்டார் போலவே’ என்று நினைத்தவள் அவனைக் கொலைவெறியுடன் பார்த்தாள். 

அவளின் பார்வையைக் கண்டுகொண்ட ராஜேந்திரன், “ஏய் என்னடி உங்க அப்பா முன்னாடியே என்னை வெச்ச கண்ணு வாங்கமல் பார்க்கிற” என்றவன் கண்ணடித்த வண்ணம் அவளை வம்பிற்கு இழுத்தான்.

இருவரையும் பார்த்த ஜெனியோ, “ஆமா இங்கே என்ன நடக்குது”  புரியாமல் கேட்க தனத்திற்கு சிரிப்பு வந்துவிட வாய்விட்டுச் சிரித்தாள். குழந்தையை கையில் வைத்துகொண்டு ரகசியம் பேச நினைக்கும் இவர்கள் நிலை கண்டு அவள் சிரிக்காமல் இருந்தால் தான் அதிசயம்.

“ஏண்டி நீயும் சிரித்து என்னோட கடுப்பை கிளப்பிவிடற” என்ற எஸ்தரோ தனத்தை கொலைவெறியுடன் முறைக்க  தோழிகள் இருவரின் சண்டையைப் பார்த்த ஜெனிதா கைகள் இரண்டையும் தட்டிச் சிரித்தாள்.

“நீங்க இருவரும் சேர்ந்து அவளுக்கு புரிய வைப்பதற்குள் உன்னோட அப்பாவுக்கு நீங்க எதுவும் சொல்லாமலே எல்லாம் தெளிவாக புரிந்துவிட்டும்” என்றவள் நக்கலுடன் கூறியதுமே, “இந்த ஐடியா நல்ல இருக்கு இல்ல எஸ்தர்” அவன் பங்கிற்கு வம்பு இழுத்தான்.

இவர்கள் மூவரும் பேசுவதைக் கேட்டு பொறுமை இழந்த ஜெனிதா ராஜேந்திரனைப் பார்த்து, “எஸ்தர் அக்கா இவரு கூடத்தான் நீங்க தினமும் போனில் பேசினீங்களா” என்றவள் உண்மையைப் போட்டு உடைக்க குணசேகரனின் பார்வை மகளைத் தழுவியது.

அதற்கு ஏற்றார்போல,  “என் பட்டு சரியாக கண்டுபிடித்துவிட்டாயே” அவனும் உண்மையை போட்டு உடைத்தான்.

“ஐயோ இதுக்குமேல் என்ன சொல்ல இருக்கு” என்ற தனம் தலையில் கைவைத்து தரையில் அமர்ந்துவிட அவர்கள் நால்வரும் பேசுவதைக் கவனித்தவண்ணம் அருகில் வர, “ஐயோ அப்பா வருகிறாரே” என்ற எஸ்தர் ஒருபக்கம் புலம்பிட அவளின் கைகளை தன்னுடைய கைகளில் கோர்த்துக்கொண்டான் ராஜேந்திரன்.

“உங்களுக்கு எஸ்தர் அக்காவை ரொம்ப பிடிக்குமா?” என்ற ஜெனியின் கன்னத்தை வருடியவன், “எனக்கு எஸ்தரை ரொம்பவே பிடிக்கும். அவளைவிட உன்னை ரொம்பவே பிடிக்கும் கண்ணம்மா..” என்றவன் சொல்ல வாய்மீது விரல்வைத்து யோசித்தாள் ஜெனிதாவின் முகம் பார்த்தபடி ராஜேந்திரன் நின்றிருந்தான்.

அவள் தீவிரமாக யோசிப்பது தனத்தின் வயிற்றில் புளியைக் கரைக்க, ‘இவ எதுக்கு இப்போ பிளான் பண்றன்னு தெரியலையே’ என்று மனதிற்குள் புலம்பிட, “அப்போ அப்பாகிட்ட நான் பேசறேன்” என்றவள் சொல்ல, “என்னது நீ பேச போறீயா” என்று அதிர்ச்சியில் ஆழ்ந்தாள் தனம்.

அதற்குள் குலசேகரன் அருகில் வந்துவிட நிமிர்ந்து அவரின் பார்வை எதிர்கொண்டான். அவனின் நேர்கொண்ட பார்வையில் இருந்தே அவனின் குணத்தை கணித்துவிட்டார் குணசேகரன். ஒருவரின் பார்வையை வைத்தே மனதை எடைபோடும் அளவிற்கு அனுபவசாலி.

‘ஐயோ அப்பா இவரை எப்படி இவ சமாளிக்க போற?’ என்ற கேள்வியுடன் அங்கே நடப்பதை தனம் மட்டும் வேடிக்கை பார்க்க எஸ்தர் இன்னும் பயம் நீங்காமல் நின்றிருந்தாள்.

“என்னை கொஞ்சம் கீழே இறக்கி விடுங்க அங்கிள்” என்றவள் தலைசாய்த்து கொஞ்சும் குரலில் கேட்டதும் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் ஜெனியை கீழே இறக்கிவிட்டான்.

 அவன் இறக்கிவிட்டதும் வேகமாக ஓடிசென்ற ஜெனியோ, “என்னை தேடிட்டு இவ்வளவு தூரம் வந்துட்டீங்களா?” புன்னகை முகம் மாறாமல் கேட்டதும் மற்றது எல்லாம் பின்னுக்கு தள்ளபட்டது.

“ஆமாண்டா கண்ணா” என்றவர் முகத்தை வருடியவர், “நீங்க வர ஏன் லேட் ஆச்சு?” என்று கேட்டுவிட்டு மற்ற மூவரையும் பார்த்தார்.

 “எஸ்தர் அக்கா தினமும் யார்கூட பேசறாங்க என்று நீங்க புலம்பீட்டே இருந்தீங்க இல்ல. அவங்க யார்ன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்றவள் குழந்தைக்கே உரிய குதுகலத்துடன் சொல்ல, “இவ ஒருத்தி போதும் நம்மளை சிக்கலில் மாட்ட வைக்க” வாய்விட்டு முனகிய தனத்தை முறைக்க மட்டுமே முடிந்தது எஸ்தரால்.

‘இந்த குட்டிக்கு பயமே இல்ல’ என்று  நினைத்தபடியே ராஜேந்திரன் ஜெனியைப் பார்க்க  அவளின் தலையை வருடிய குலசேகரன், “யாரது செல்லம்” என்றார்.

அவரின் பார்வையைக் கவனித்த ராஜேந்திரனோ, ‘எல்லாருக்கும் வரும் கோபம்தானே இருக்கும் வரும் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?’ என்று நினைத்தவன் எஸ்தரின் முகம் பார்க்க அவளோ பதட்டம் குறையாமல் குலசேகரனையும், ஜெனியையும் பார்த்தாள்.

அவளின் பயமறிந்த இந்தரோ, ‘நான்தானே காதலித்தேன் அப்புறம் நான்தான் அவரிடம் பேசணும்’ என்ற முடிவுடன் நின்றிருந்தான்.  

“அப்பா அங்கே நிற்கிறார் இல்ல அந்த அங்கிள் தான்” என்று ராஜேந்திரனை நோக்கி கைகட்டிய ஜெனியோ, “எஸ்தர் அக்காவிடம் தினமும் நைட் பேசுவாங்கப்பா. அவருக்கு நம்ம எஸ்தர் அக்காவை ரொம்ப பிடிச்சு இருக்காம். அப்பா கொஞ்சம் குனிங்க” என்று என்றவள் சொல்ல இருவரையும் கவனித்த எஸ்தரோ, “நல்ல போட்டுகொடுக்கிற” என்றவளைத் திரும்பி தனத்தைப் பார்த்தாள்

அவளின் பார்வை தன்னை யாசிப்பதைக் கண்டுகொண்டவளோ, “என்னிடம் எந்த ஹெல்பும் எதிர்பார்க்காதே எஸ்தர். இனிமேல் எல்லாம் விதிவிட்ட வழி” நம்பிக்கை இல்லாமல் சொல்ல எஸ்தரோ ராஜேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவள் சொல்வது மாதிரி எதுவும் நடக்காதுன்னு நீ ஏன் நினைக்கிற.. எல்லாம் நல்லதாகவே நடக்கும் பயப்படாமல் இரு” என்றவன் மற்ற இருவரின் மீது பார்வையைச் செலுத்தினான்.

அவளின் நோக்கிக்குனிந்த குணசேகரனிடம், “எனக்கு இவ்வளவுதான் தெரியும் மீதியை நீங்களே விசாரணை பண்ணி தெரிஞ்சிகோங்க அப்பா. ஆனால் அக்காவுக்கு அவரை ரொம்பவே பிடிச்சிருக்கு மற்றது எல்லாம் நீங்க பேசிக்கோங்க அப்பா நான் ரூமிற்கு போறேன்” என்று அவள் சொல்லிவிட்டு தனத்தை திரும்பிப் பார்த்தாள்.

குணசேகரன் அவளைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த, ‘என்னை பற்றி என்ன போட்டுகொடுத்தாளோ தெரியலையே..” என்று புலம்பிய தனமோ, “அப்பா எனக்கு வேலை முடிஞ்சிது நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என்றவள் ஜெனியின் பக்கம் திரும்பிப் பார்க்க குறும்புடன் கண்ணடித்தாள் சின்னவள்.

“எஸ்தர் அக்கா நான் தனாக்கா கூட போறேன்” என்றவள் தனத்தின் கைவிரல்களைப் பிடித்துக்கொள்ள நடந்தவளின் வேகத்தைப் பார்த்த ராஜேந்திரன், “என்ன எஸ்தர் தனம் இந்த ஓட்டம் ஓடுகிறா” என்றவன் அவளின் காதைக் கடிக்க அவனின் கையை கிள்ளி வைத்தாள் எஸ்தர்.

அவன் கோபத்துடன் அவளை முறைக்க, “அப்பா உங்களையே பார்க்கிறார்” எச்சரிக்க அவனும் அமைதியானான்.

தனம் சென்ற திசையைப் பார்த்த குணசேகரனோ, ‘இவ்வளவு பயம் மனசுல’ என்று நினைத்தவர் தன் மகளின் அருகே நின்றவனைக் கேள்வியான நோக்கினார். அவரின் பார்வையில் எஸ்தரின் உள்ளங்கை ஜில்லென்று ஆகிவிட மகளின் பயத்தை அவளின் விழிகளின் மூலம் கண்டுகொண்டார்.

“தம்பி உங்க பெயர்” என்றவரின் பார்வையை எதிர்கொண்டவன், “ராஜேந்திரன்” என்றான் கம்பீரமாக.

‘அப்பா அவரோட விசாரணையை ஆரம்பித்துவிட்டார்’ என்று உணர்ந்தவள் இருவரையும் மாறி மாறி பார்க்க, “ம்ம் என்ன வேலை பார்க்கிறீங்க” என்றவனிடம் கேள்வி கேட்டுகொண்டே மகளைப் பார்த்தார்.

அவள் தவிப்புடன் நின்றிருப்பது புரிய, “எஸ்தர் நீயும் தனத்துடன் அவங்க வீட்டுக்கு போ” மகளை அங்கிருந்து அனுப்ப நினைக்க, “ஹப்பாடி என்னை கேள்வி கேட்காமல் விட்டதே போதும்” என்றவள் பெரும்மூச்சுவிட்டு தனம் சென்ற நோக்கி நடந்தாள்.

‘அவர் எப்படியும் தங்களின் திருமணத்திற்கு சம்மதிப்பார்’ என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகமாகவே இருந்தது.

கொஞ்சதூரம் சென்று நின்ற தனமோ, “ஜெனிமா அப்பா கிட்ட இருந்து தப்பித்துவிட்டோம் வா நம்ம எஸ்கேப் ஆகிருவோம்” ஜெனியின் பேக்கை வாங்கி தோளில் மாட்டிக்கொண்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள் தனம்.

அவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்த ஜெனிதாவோ, “பாவம் எஸ்தர் அக்கா” என்றாள்.

“ஆமாண்டி இப்போ வந்து சொல்லு அவள் ரொம்ப பாவம்னு. அப்பாவிடம் மாட்டி விட்டுவிட்டு எஸ்கேப் ஆகும் பொழுது அவள் பாவமென்று தெரியலையோ?” ஜெனியிடம் சண்டைக்கு வந்தாள் தனம்.

“இளங்கன்று பயமறியாது இதை நீங்க படித்தது இல்லையா?” என்று கேள்விகேட்டு தனத்தை மடக்கிய ஜெனிதா, “நான் இன்னைக்கு அவரிடம் சொல்லாமல் இருந்திருந்தால் அப்பா இருவரையும் தப்பாக நினைத்திருப்பார் இல்ல. செய்யும் செயல் தவறு உணர்ந்தாலும் நல்லதுக்காக செய்யும்பொழுது யோசிக்கக்கூடாது அக்கா” தனத்திற்கு  கிளாஸ் எடுத்தாள் சின்னவள்.

அவள் பேசுவதைக் கேட்டபடியே அங்கே வந்த எஸ்தர், ‘குழந்தை உள்ளம் யாருக்கும் தீங்கு நினைக்காது பெரியவர்கள் சொல்வது இதைத்தானா?’ என்று நினைத்துக்கொண்டே மெல்ல நடந்தாள்.

“ம்ம் மேடம் நீங்க செம பிரில்லியண்ட் தான் போங்க” என்றவள்  வாய்விட்டுச் சிரிக்க அவளுடன் இணைத்து சிரித்தவளின் அருகில் செல்ல தன்னருகே நிழலாட கண்ட ஜெனிதா திரும்பிப் பார்த்து, “அக்கா” என்றவள் பாசத்துடன் அழைத்தாள்..

அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்த எஸ்தரோ அவளின் கன்னங்களை வருடியபடியே, “ரொம்ப தேங்க்ஸ் ஜெனிமா நீ சொல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னைக்கும் அப்பாவிடம் பொய்த்தான் சொல்லியிருப்பேன். எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் உனக்கு என்றும் நல்லதே நடக்கும் செல்லம்” என்றவளின் நெற்றியில் முத்தமிட்டாள் எஸ்தர்.

ஜெனிதாவும் எஸ்தரின் கன்னத்தில் முத்தமிட இருவரின் பாசம் கண்டு, ‘இவங்க இருவரும் இன்று போல என்றும் சந்தோஷமாக இருக்கணும்.. எஸ்தரோட கனவு ஒரு நாள் நிஜமாகணும்’ என்றவள் கண்கலங்கிய கண்களுடன் இறைவனிடம் பிராத்தனை செய்தாள் தனம். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி மூவரும் தனத்தின் வீட்டிற்கு சென்றனர்.

மனிதனின் மனம் போடும் கணக்கிற்கும், இறைவனின் தலையில் எழுதிய எழுத்திற்கும் ஆயிரம் வேறுபாடு இருப்பதை அறியாமல் இருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!